Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் மார்க்கம் நகர சபை நிர்வாகத்திற்குள் வரும் முக்கிய வீதிக்கு "வன்னி வீதி" என்ற பெயர் சூட்டப்படுகின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vanni-street-Markham-city-150.jpg

தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.

  

மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர்கள் தொடர்ச்சியான சிறந்த சேவையின் பலனாக தமிழ் மக்கள் மட்டுமல்ல வேற்று இன மக்களும் அவரைப் பாராட்டுகின்றார்கள். அத்துடன் மார்க்கம் மாநகரசபையின் நகரபிதா திரு ஸ்கெப்பட்டி அவர்களின் நட்புக்கும் மரியாதைக்கும் உரியவராகவும் திரு லோகன் கணபதி இருப்பதும் தமி;ழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

மேற்படி விடயம் தொடர்பாக மார்க்கம் நகரசபை விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்படி வன்னி வீதி என்று பெயர் சூட்டப்படும் இந்த வீதியில்தான் மிகவிரைவில் மார்க்கம் நகரசபையின் மிகப்பெரிய சனசமூக நிலையம் மற்றும் நூலகம் பூங்கா போன்றவை அமைந்துள்ள பொழுது போக்கு வளாகம் அமையவுள்ளது என்பதும். மேற்படி வன்னி வீதியானது காலகிரமத்தில் மார்க்கம் நகரத்தில் மட்டுமல்ல கனடா முழுவதிலும் புகழ்பெற்ற ஒரு வீதியாகத் திகழ்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக் களமாக விளங்கிய அந்த வீர மிகு பிரதேசத்தை மேற்குலக நாடுகளுக்கு பறைசாற்றும் ஒரு சாதனமாக அமையும் என்று மார்க்கம் நகரில் வாழும் முன்னாள் யாழ்ப்பாண கல்லூரியொன்றின் அதிபர் கூறியுள்ளார்.

 

On behalf of the Mayor and the members of Council, it is my pleasure to invite everyone to the official unveiling of the Sign for historic Vanni Street in the City of Markham on Saturday, May 11, 2013 10:00 AM at the site located on 14th Ave, between Middlefield Rd and Markham Rd.

 

Vanni is the name given to the mainland area of the Northern Province of Sri Lanka. It covers the entirety of Mannar, Mullaitivu and Vavuniya Districts, and most of Kilinochchi District, and has an area of approximately 7,650 square kilometres (2,950 sq mi). Vanni is one of the most fertile regions in Sri Lanka, known for its biodiversity, water resources, extensive natural forests comprising the largest conservation area. The economy is mainly driven by Agriculture. It is popularly known as the garden basket of Sri Lanka, providing paddy and produce for the entire island. Historically, it was the Capital of Jaffna Kingdom. The name is believed to be derived from Vanniar � chiefs who ruled Jaffna.

 

vanni-street-367-001=seithy.jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82350&category=TamilNews&language=tamil

நல்லதொரு விடயம். நான் அடிக்கடி செல்லும் வீதிகளில் ஒன்று. அதிகமாக தமிழ் மக்கள் வாழும் இடம் இது.

 

இதற்கு கிட்ட இருக்கும் ஒரு வீதியின் பெயர் 'நியூ டெல்கி'

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். நான் அடிக்கடி செல்லும் வீதிகளில் ஒன்று. அதிகமாக தமிழ் மக்கள் வாழும் இடம் இது.

 

இதற்கு கிட்ட இருக்கும் ஒரு வீதியின் பெயர் 'நியூ டெல்கி'

 

தமிழனுக்கு எங்கே ஒரு சிறு நன்மைதானும் நிகழ்கின்றதோ அங்கே முந்திரிக்கொட்டை போல் இந்தியா முன்னே வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 கேட்கவே.. சந்தோசமாக உள்ளது.
"வன்னி வீதி" என்று பெயர் சூட்ட உழைத்த, கனேடிய‌ தமிழ் மக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

"வன்னி வீதி" என்று பெயர் சூட்ட உழைத்த, கனேடிய‌ தமிழ் மக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும். 

 

 

 கேட்கவே.. சந்தோசமாக உள்ளது.
"வன்னி வீதி" என்று பெயர் சூட்ட உழைத்த, கனேடிய‌ தமிழ் மக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.  

 

உண்மைதான்

ஆனால் ஒரு  நெருடல்

வன்னியை  நாம்  எப்படி வைத்துள்ளோம்???

வன்னிவீதியைக்கொண்டு வர உழைத்தது போல்  

வன்னியின் விதியையும் கையில் எடுத்துச்செயற்பட்டிருந்தால்

இன்று வன்னி  கையேந்தி  நிற்குமா???

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி வீதிக்காகப் போராடி வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டுக்கள்

 

தேசீயத்தை மூட்டை கட்டிக்கொண்டு புலம்பெயரந்தவர்கள். அந்த மூட்டைக்குள் கடவுள் கோயில் சாதி பிரதேசம் பழக்கவழக்கம் எல்லாம் இருக்கின்றது. மேலும் திருப்திப்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. கூடவே இப்போது வன்னிக்குள் நுழையும் உணர்ச்சியை தர ஒரு வீதியும். சுயநலமாக தத்தம் மனதை திருப்திப்படுத்த, சுய இன்பம் காண எப்படி எல்லாம் சிந்திக்கமுடியுமோ அப்படியேதான் விழைவுகள் அமைகின்றது. தேசத்தை பெயர்த்துவந்த திருபத்தியை பெற நினைப்பவனுக்கு தேசம் எக்கேடு கெட்டால் என்ன ! சிங்களவன் வன்னிக்கு நெருப்புவைத்தான். அதில் புலம்பெயர்ந்தவன் தனது திருப்திக்கு புடுங்குவது வரை லாபம் என நினைக்கின்றானே தவிர நெருப்பை அணைக்க மறுக்கின்றான்.

 

அடயாளம் தேடுங்கள் ! ஆத்ம திருப்திப்படுங்கள் ! இரண்டும் பேரால் உருக்குலைந்த வன்னியை மீள புனரமைப்பதற்கு பாடுபடுவதில் உள்ளதே தவிர கனடாவில் ஒரு வீதிக்கு வன்னி வீதி என்று பெயர்வைப்பதில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

"வன்னி வீதி" என்று பெயர் சூட்ட உழைத்த, கனேடிய‌ தமிழ் மக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும். 

 

 

உண்மைதான்

ஆனால் ஒரு  நெருடல்

வன்னியை  நாம்  எப்படி வைத்துள்ளோம்???

வன்னிவீதியைக்கொண்டு வர உழைத்தது போல்  

வன்னியின் விதியையும் கையில் எடுத்துச்செயற்பட்டிருந்தால்

இன்று வன்னி  கையேந்தி  நிற்குமா???

 

அதற்கு புலம்பெயர் சமூகத்தின் மீது... முழுப் பழியையும், போட முடியாது விசுகு.

அங்கு, என்ன செய்வதாக இருந்தாலும், சிங்கள இராணுவ‌ ஆக்கிரமைப்பயும், அரசையும் மீறிச் செய்வது கடினமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். நான் அடிக்கடி செல்லும் வீதிகளில் ஒன்று. அதிகமாக தமிழ் மக்கள் வாழும் இடம் இது.

 

இதற்கு கிட்ட இருக்கும் ஒரு வீதியின் பெயர் 'நியூ டெல்கி'

அட,  ஈழத்தில்தான் பிராந்திய நலன் என்ற தலையீடு செய்யும் இந்தியா கனடாவிலும் விட்டு வைக்கவில்லையா ?   :D

அதற்கு புலம்பெயர் சமூகத்தின் மீது... முழுப் பழியையும், போட முடியாது விசுகு.

அங்கு, என்ன செய்வதாக இருந்தாலும், சிங்கள இராணுவ‌ ஆக்கிரமைப்பயும், அரசையும் மீறிச் செய்வது கடினமாக இருக்கும்.

எனது கருத்தும் அதுவே  

மகிழ்ச்சியான செய்தி !
 
"வன்னி வீதி" என்று பெயர் சூட்ட உழைத்த, கனேடிய‌ தமிழ் மக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.  
  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு புலம்பெயர் சமூகத்தின் மீது... முழுப் பழியையும், போட முடியாது விசுகு.

அங்கு, என்ன செய்வதாக இருந்தாலும், சிங்கள இராணுவ‌ ஆக்கிரமைப்பயும், அரசையும் மீறிச் செய்வது கடினமாக இருக்கும்.

 

 

இப்படிச்சொல்லி  நாம் தப்பித்துவிடக்கூடாது சிறி

அதுவும் உண்டு

ஆனால் முடியும்

மனமிருந்தால் முடியும்

"மிக விரைவில் மார்க்கம் நகரில் ஒரு வீதிக்கு வன்னி வீதி என பெயர் சூட்டப்பப்படவுள்ளது .இதற்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி (குறிப்பாக லோகன் கணபதி ).

இந்த வீதிக்கு மிக அருகில் 66.5 million டொலர் செலவில் 120,000 sq ft இல் ஒரு கொம்மிநியுற்றி சென்டரும் கட்டவுள்ளார்கள் .

எனக்கு நடை தூரம் என்பது மிக நல்லசெய்தி ".

இது முன்னர் நான் இணைத்தது.

நாளை சனி இந்த வீதி திறக்கபடவுள்ளது .நியு டெல்கி வீதியும் கராச்சி வீதியும் திறந்து ஐந்துவருடங்களுக்கு மேலாகிவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்

 

 லோகன் கணபதி...
புலியா, புளட்டா... அர்ஜுன்.   :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வரலாற்றில் வன்னி பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பிரதேசம். பண்டார வன்னியன் காலத்திற்கு முன்பிருந்தே அது தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு நிலப்பரப்பு. அது இந்த நூற்றாண்டிலும் தமிழர்களின் வரலாற்றில் அழியாத பல தடங்களைப் பதித்துள்ள இவ்வேளையில் தமிழீழத்தின் நிலப்பரப்பு ஒன்றுக்கான பெயர் வெளிநாடு ஒன்றில் வீதிக்கு வைக்கப்படுவது உண்மையில்.. தமிழீழத்திற்கு வன்னிக்கு சிறப்பு மட்டுமல்ல.. தமிழ் மக்களுக்கும் தமிழ் உச்சரிப்பில் அது அமைவது தமிழிற்கும்.. தனிச் சிறப்பாகும்..!

 

பொதுவாக நாடுகளின் தலைநகரங்கள் அல்லது சிறப்பு நகரங்களின் பெயர்கள்.. தமது நாட்டுக்காக உழைத்தவர்களில் தமக்கு வேண்டியவர்களின் பெயர்களைத் தான் மேற்கு நாடுகளில் வீதிகளுக்கு வைப்பார்கள். ஆனால் வன்னி இது எதிலும் அடங்காமல்.. தமிழர் வரலாற்றோடு அடங்கி அங்கு இடம்பெறுவது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு சிறப்பாகும்..!

 

பாடுபட்ட உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கனேடிய அரசுக்கும் நன்றி. :icon_idea:

அதற்கு புலம்பெயர் சமூகத்தின் மீது... முழுப் பழியையும், போட முடியாது விசுகு.

அங்கு, என்ன செய்வதாக இருந்தாலும், சிங்கள இராணுவ‌ ஆக்கிரமைப்பயும், அரசையும் மீறிச் செய்வது கடினமாக இருக்கும்.

நாங்கள் எங்களது இயலாமையை காலங்காலமாக சிங்களவர்கள் மீதும் ,சிங்கள அரசுகள் மீதும் குற்றம் சாட்டி பழகிவிட்டோம் .நாங்கள் அமைதியாக விளம்பரம் இல்லாமல் செய்வோமாக இருந்தால் தடைகள் ஒரு பொருட்டல்ல .பலஇடங்களில் செய்தும் இருக்கின்றோம் ,செய்துகொண்டும் இருக்கின்றோம் .

 

உங்களிடம் நிதி இருந்து செய்யமுடியவில்லை என்றால் ,என்னால் உதவமுடியும் .

 

 

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=121845&hl=

 

 

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை எப்படி நம்பிறது. அப்படியே கொண்டு போய் குத்தியரை தாஜா பண்ண கொடுத்திட்டு உங்கட லோக்கல் அரசியலை செய்துகிட்டு இருப்பீங்க. உங்களின் கருத்துக்களே உடன்பாடு காண முடியாத அளவிற்கு உள்ள போது.. செயற்திட்டங்கள் எப்படி நம்பிக்கைக்குரியவையாக மக்கள் நம்பும் படி இருக்க முடியும்...??!  உங்களிடம் தருவதை யு என் எச் சி ஆர் அல்லது வேறு சர்வதேச தொண்டு அமைப்புக்களிடம் கொடுக்கலாம். அதில் கொஞ்சமாவது மக்களிடம் போய் சேர வாய்ப்புள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

கனடாவில் வன்னி வீதி என பெயர் வர உழைத்த அனைவருக்கும் நன்றி.

 

உங்களை எப்படி நம்பிறது.

உங்களை நம்பச்சொல்லி நான் கருத்து எழுதவில்லை .நிதியை என்னிடம் தரும்படி 

கேட்கவுமில்லை .என்னால் உதவமுடியும் என்ருதான்சொல்லியுள்ளேன் .கருத்து எழுத 

முதல் வாசித்து ,என்ன எழுதுகிறோம் என்று உணர்ந்து எழுதுங்கள் .

உங்களின் கருத்துக்களே உடன்பாடு காண முடியாத அளவிற்கு உள்ள போது.. செயற்திட்டங்கள் எப்படி நம்பிக்கைக்குரியவையாக மக்கள் நம்பும் படி இருக்க முடியும்...?

 

நான் ஏன் உங்களுடன் உடன்பாடு காணவேண்டும் ?எவரும் புகலுவதறகாக நான் பொதுப் 

பணி செய்வது கிடையாது .உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்னை விமர்சிப்பதற்கு ?

  உங்களிடம் தருவதை யு என் எச் சி ஆர் அல்லது வேறு சர்வதேச தொண்டு அமைப்புக்களிடம் கொடுக்கலாம். அதில் கொஞ்சமாவது மக்களிடம் போய் சேர வாய்ப்புள்ளது.

 

உங்கள் கருத்தில் ,வக்கிரப்புத்தியும் ,காழ்புணர்ச்சியும் தான் தெரிகிறது .அதாவது உங்களால் செய்யமுடியாததை மற்றவர்கள் எப்படி செய்கின்றார்கள் என்று ?

 

 

நான் எழுதும் கருத்துகள் ,செயல்பாடுகள் எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் தரமுடியும் .

உங்களை எவ்வாறு நம்பமுடியும் .என்னுடைய செயற்திற னிற்கு ஆதாரமாக இந்த இணைப்பு உள்ளது .

 

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=114122&page=3

 

புலிகள் இருந்த போதும்,இப்போதும்  என்னுடைய செயற்பாடுகள் ஒரேமாதிரித்தான் .

புலிகள் இருந்த போது நான் மக்களுக்காக எதுகேட்டாலும் செய்து தந்தவர்கள் ,என்னுடைய 

பாதுகாப்பிலும் அக்கறையாக இருந்தவர்கள் 

தற்போது ,பலரும் புலிகள் இல்லாத நிலையில் தான் முன்னாள் போராளிகள் ,மாவீரர் குடும்பங்கள் பற்றி சிந்திக்கின்றார்கள் .நான் சந்தோசம் மாஸ்டரின் ,வேண்டுகோளின் படி( 1986-1990)

திருமலையில் 200 குடும்பங்களிட்கு உதவி செய்துள்ளேன் .

 

 

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.

-         பிளேடோ

 

உங்களுக்கு பொருந்துமா என்று யோசியுங்கள் ?

 

எல்லோரையும் கிண்டல்செய்வதை தவிர என்ன சாதித்துள்ளீர் ?

Edited by Gari

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 லோகன் கணபதி...

புலியா, புளட்டா... அர்ஜுன்.   :lol:  :D

 

சிறீ அண்ணா ;

உங்களுக்கு வந்த சந்தேகம் பலருக்கும்  இருந்திருக்கும் போல...அதுதான் அர்ஜுன் இணைத்த போது தேடுவர் அற்று இருத்த தலைப்பு இப்ப பிச்சு கொண்டு ஓடுது..

எங்களுக்கு அரிசி வேணுமோ இல்லையோ என்பது முக்கியமல்ல ஆனால் அதை குற்றியது என்பதுதான் பிரதானம்..

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமக உடைத்தால் பொன் குடம் ..

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களிடம் நிதி இருந்து செய்யமுடியவில்லை என்றால் ,என்னால் உதவமுடியும் .

 

 

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=121845&hl=

 

 

இதன் அர்த்தம் என்ன..???! உங்கள் நிதியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.. நான் உதவுகிறேன் என்பதா..???!

 

விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை மக்களை நோக்கி வரும் உதவிகளை தடுப்பவர்கள் கிடையாது. அதனை ஊக்குவிப்பவர்கள். அந்த வகையில் நீங்கள் மட்டுமல்ல.. பலர் ஊக்குவிக்கப்பட்டீர்கள். குறிப்பாக சுனாமி அனர்த்தத்தின் பின் பலரின் உதவிகள் உள்வாங்கப்பட்டிருந்தன.

 

மேலும் விடுதலைப்புலிகளின் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் நோக்கி உதவுவதில் பிரச்சனை இருக்கவில்லை. காரணம்.. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற நம்பிக்கைக்குரிய அமைப்பு இயங்க முடிந்த காலம் அது. ஆனால் இன்று ஆளாளுக்கு உதவிறம் என்று கொண்டு வருகினம்.. ஒரு பக்கம் புலிகளின் பெயரைப் பாவிக்கினம்.. இன்னொரு பக்கம் டக்கிளஸை அமைச்சர் என்றும் அவரோடும்..நெருக்கம் காட்டினம்..! இவை மக்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய சூழலைத் தோற்றிவிக்கவில்லை.

 

இந்த இடத்தில் சர்வதேச தொண்டு அமைப்புக்கள் நாடுவது சிறப்பு என்பதே எனது நிலைப்பாடு. நான் அப்படி தான் இப்போ மாதந்தப் பங்களிப்பைச் செய்கிறேன். இதில் காழ்ப்புணர்ச்சிக்கு வர நாங்கள் ஒன்றும் போட்டிக்கு சமூக அமைப்புக்கள் நடத்தவில்லை. அல்லது இது செய்யுறன் அது செய்யுறன் என்று விளம்பரமும் பாராட்டும்.. தேடிக் கொண்டு திரியவில்லை. மக்களுக்குச் செய்ய வேண்டின் எங்கள் சொந்த உழைப்பில்.. நேரடியாக களத்தில் இறங்கிச் செய்யவும் தயாராகவே இருக்கிறோம். அடுத்தவரின் உதவியை நாடிக் கூனி நிற்கும் நிலையில் எங்கள் நிலைப்பாடுகள் இல்லை. அதற்காக மற்றவர்களிடம் உதவியைப் பெற்று மக்களுக்குச் செய்வதை தவறென்றோ தவிர்க்க வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக மக்கள் நம்பிக்கைக்குரிய வகையில் செயற்பட முனையுங்கள் என்றே தான் கூறுகின்றோம்.

 

ஆனால் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்.. நான் இவ்வளவு செய்தன்.. நீ என்ன புடுங்கினா.. என்று வினவுவது.. உங்களின் செயற்பாட்டின் மீது சந்தேகத்தை வலுப்படுத்துதே தவிர உதவும் மனப்பான்மையை உருவாக்கவில்லை.

 

அண்மையில் யாழில் நீங்கள் இன்னொரு கள உறவு திட்டமொன்றை கேட்ட போது.. அவருடன் நடந்து கொண்ட முறை உங்களின் செயற்பாட்டு நம்பகத்தன்மையை அங்கும்.. கேள்விக்குறியாக்கியது..??!

 

இவற்றைத் தவிர்த்துக் கொண்டு.. நம்பிக்கைக்குரிய வகையில்.. மக்களோடு உங்கள் அணுகுமுறைகளை மாற்றி அமைத்துக் கொள்வதே சிறப்பு.  இன்றேல் மக்கள் உங்களை தவிர்த்து நிற்க.. அல்லது வேறு வழிகளில் உதவவே முனைவர். அது உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரையும் உதவிகள்.. சென்றடைய உதவாது போகலாம்..! அந்த வகையில் சர்வதேச தொண்டு அமைப்புக்களை நாடுவது தவிர்க்க முடியாததாகும்..!

 

 நாடுகள் தமிழர் பகுதிகளுக்கு.. வழங்கும் உதவிகளை சிங்களவர்களுக்கு முஸ்லீம்களுக்கு வழங்கி அரசியல் செய்த சிங்கள அரசின் செயலை எதிர்த்து நாம் சர்வதேச நிறுவனங்களை நாடினோம். அப்புறம் எமக்கென்றான நிறுவனங்களை உருவாக்கினோம். அதே நிலையை இப்போ எம்மவர்களே தோற்றிவிப்பது வேதனைக்குரியது. சிங்களம் தனது மக்களுக்கு உதவிகளை திசை திருப்பியது போல.. நம்மவர்கள் தங்களின் தேவைக்கும் புகழிற்கும்.. விளம்பரத்திற்கும் மக்களின் உதவிகளை..தேவைகளைப் பயன்படுத்துவதும்.. ஏற்புடையதல்ல. இதனையே சுட்டிக்காட்டவே இங்கு விளைகிறோம்.

 

மக்களுக்கு உதவி செய்பவர்கள் மக்களின் உதவித்திட்டங்களோடு மக்கள் நம்பிக்கை வளர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். உதவி செய்கிறோம் என்ற போர்வையில் அரசியல் செய்ய வெளிக்கிடக் கூடாது. அதுவும் மாற்றுக்கருத்து அரசியல்.. இணக்க அரசியல் பேசக் கூடாது. இந்தத் தலைப்பில் நீங்கள் செய்வது என்ன..???????! அதாவது உங்களுக்குப் புரிகிறதா..??!

 

மேலும் இது தொடர்பில் தேவை ஏற்படின்.. இது சம்பந்தப்பட்ட வேறொரு தலைப்பில் விவாதிப்பது நன்று. :):icon_idea:

Edited by nedukkalapoovan

431903_368076849971189_244389656_n.jpg

 
 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பான ஸ்ட்ரீட் எண்டு எப்ப பேர் வைப்பினம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

408399_645075205509324_2026417904_n.jpg



375085_645032208846957_44751333_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

408399_645075205509324_2026417904_n.jpg

 

 

படத்தின்... வலதுபுறம் ஈழவேந்தன் நிற்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

395761_645033538846824_1073632304_n.jpg



941647_645075598842618_176895682_n.jpg



198995_645032348846943_955612162_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உழைத்த அனைவருக்கும் நன்றி..! நல்லதொரு பரப்புரையாகவும் அமைய வாய்ப்புள்ளது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.