Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு

Featured Replies

தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு

(சிறுவன்)

ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன்

அம்மா சோச்சி ஆறிபோச்சேயென்

றோடிப்போன காலம் போச்சு

ஆனதென்ன ஆகாததென்னென்

றாராஞ்சு பார்க்க நேரமாச்சு.

(எல்லோரும்)

ஆடடா கண்ணா........

(சிறுவன்)

அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே

அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே

சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி

செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க

கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து

கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள

வேலை இன்றி வீடு வந்தார்  எங்கள் அப்பா

(எல்லோரும்)

வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா

வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா

(சிறுவன்)

சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால்

செய்யாட்டில் செய்ய வைப்போம் சத்தியமென்று

கோசத்தோடு வீறுநடை துணிவாய் போட்டு 

கொடிகளோடு கூட்டமாய் ஆர்ப்பாட்டம் போய்

குட்டக் குட்டக் குனியாமல் கொத்திதெழுந்து

குண்டர்கள் குண்டான் தடிக்கு அஞ்சாமல்

நெஞ்சை நிமிர்த்தி சிறை சென்றான் எங்களண்ணன்

(எல்லோரும்)

நெஞ்சை நிமிர்த்தி சிறை சென்றான் எங்களண்ணன்

வஞ்சகத்தால் எங்கள் அண்ணன் சிறை சென்றான்.

(சிறுவன்)

பெண்களோடு பெண்களாக பலர் சேர்ந்து 

படிக்க என்று ரூசன் போனாள் அக்கா பொண்ணு

பொழுது மாலையாகி பிள்ளைகள் திரும்பும் போது

பொல்லாத விஷமிகள் பலர் கூடி வம்பு பேசி

பாதுகாப்பு வாகனத்தில் பிடித்தேற்றி பெண்ணை

போன திசை தெரியாமல் போய் விட்டாள் எங்கள் அக்கா

எம்மை விட்டுபோய்விட்டாள் எங்கள் அக்கா

(எல்லோரும்)

எம்மை விட்டு பறந்தோடிப்போய்விட்டாள் எங்கள் அக்கா

எம்மை விட்டு பறந்தோடிப்போய்விட்டாள் எங்கள் அக்கா

(சிறுவன்)

பொழுதல்லாம் வீதி பார்த்தும் பெண்ணை காணேண்

பெடியனையும் சிறையில் பார்த்து காலம் ஆச்சு

அப்பாக்கோ வேலை போய் நாளுமாச்சு.

அஞ்சும் எட்டும் அரிசிக்களந்து அலுத்துப்போச்சு

ஆனால் உன்னைக்காண்டால் அதெல்லாம் மறந்து போச்சு

என்று எம்மை அணைத்தெடுக்க காத்திருப்பாள் அம்மா கண்ணு.

பட்டதோடா படுகல்லு நான் பெத்த பொன்காலில்

சுட்டதொ துணிஞ்சென்குஞ்சை சுடுவெய்யில் சொல்லுலென்று

சிறகு போர்த்தி சோறு தீத்த பார்த்திருப்பாள் எங்கள் அன்னை

(எல்லோரும்)

ஆனால் அம்மா நாங்கள் இன்று தூரம் போறோம்

வெகு நேரமாகும் வீடுவர நேரமாகும் தேடாதே

சுட்டெரிக்கும் இந்த சுடுவெய்யில் சுக நிலவு

முள்ளும் கல்லும் பூத்த பாதை நம் சோலை

தெள்ளுதமிழ் தேன் நாடும் யாழ்நாடும் தமீழம் இதில்

தேடித் துயர் துடைப்பது தெம் தேசத்தொண்டு

எனவே நாம் போய்:

அப்பாவுக்கு வேலை போன கதையே கேட்க போறோம்

காணாமல் போன அக்காவையங்கே தேடப் போறோம்.

சிறைக்கு சென்று அண்ணாவை பார்த்து சேதி கேட்போம்.

சிங்களத்திற்க்கு சிம்ம சொற்பனம் என்னாறாகி நிற்போம்

ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன்.......

(1975 களில் சிறிமாவின் பாண் கியூ படுத்தாத பாடு படுத்தியிருந்தது. அப்போது வேலை இன்றி வீட்டில்தான் இருந்திருந்தேன். சந்தைக்கு அரிசிக்கு வாங்க போனால் 5 ரூபா தொடக்கம்  8 ரூபாவரை போகும். அதை தான் சிலேடையாக கவிதையில் சொல்லியிருந்தேன். கவிதை அரிவரி சிறார்கள் பள்ளியில் இருந்து வீடு வராமல் ஆர்பாட்ட ஊர்வலம் போவதாக வடிவமைக்கப்பட்டது

1975 முடிவுகளில் கிருளப்பனை போய் வாழ ஆரம்பித்திருந்தேன். 1976 ஆண்டு கிருளப்பொனையில் வேலையின்றி கழித்த காலங்களில் கிருளப்பொனை/ நுகேகொடை வாசிகசாலையிலிருந்து  மக்சிம் கார்கி அன்பவரால் எழுதபட்ட மதர் என்னும் ஒரு நாவலை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  இதுவரையில் ருசிய புரட்சியை பற்றி எதிர்கருத்துகளை மட்டும் தான் அறிந்திருந்தவன் நான். அதன் பின்னர்தான் எனக்கு  ரூசியாவில் இருந்த அடக்குமுறையை இலங்கையின் அடக்கு முறைகளுடன் தொடுக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. இயல்பாக முரடாக பேசி முரடாக நடந்து கொள்ளும் எனக்கு கார்கியின் மென்மையான வருணனையும் கதை அமைப்பும் என் நெஞ்சை தொட்டது. அது மாதிரி எதாவது பண்ண வேண்டும் போல் மனத்தில் பலநாட்கள் உறுத்தியது. ஆசை மட்டும்தான்; அறிவும், ஆற்றலும் வசதியும் இல்லை என்பது புரிந்தது. விரலுக்கேற்ற வீக்கமாக இதை எழுதி வைத்திருந்தேன். 

1977ல் வீடடு மாறினோம். அதன் பின்னர் பலதடவைகள் மாறினோம். பின்னர் நான் தனியாக சென்றேன். 1983ல் பலவற்றை இழந்தேன். எனது முதல் விடுதலை பாடலையும் இழந்தேன். இந்த மார்சில் மாணவர் புரட்சி வந்த போது என்னிடமிருந்த பழைய ஆவணங்களை திரும்ப ஒரு தடவை சல்லடை போட்டு தேடினேன். நான் தொலைத்துவிட்டேன் என்பது நிச்சயமானது.  நாளும் பொழுதும் வரிகளை திரும்பத் திரும்பத் இரை மீட்டு போட்டு முடித்தேன். தலைப்பு இன்றுதான் போட்டிருக்கிறேன். மறந்த சொற்களை மாற்றியும் இருக்கிறேன்

நாங்கள் அரிவரி படித்தகாலங்களில் காலில் செருப்பணிவது கிடையாது. KKS  ரோட்டின் தார் 1 மணிக்கு உருகத்தொடங்கும். நண்பர்களுடன் 1 1/2 மைல் நடந்து, விளையாடி விளையாடி வீடு வருவேன். அம்மா படலையை பல தடவைகள் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பா. இடம் கிடைத்தால் வந்து விட்டார்களா என்று நண்பர்கள் வீட்டை யும் ஒருதடவை  போய்ப் பார்த்தும் விடுவா. சுத்தி அடித்து வீடு வந்தால் கால் உளையும்.  இது நான் A/L படிக்கும் போது சைக்கிள் எடுத்தால் பள்ளியும் வீடும் என்றிருந்த காலத்திற்க்கு முற்றிலும் எதிரானது. அம்மாவின் மடியில் காலை வைத்துக்கொண்டிருந்து சாப்பிடுவேன்.)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன மொழிபெயர்ப்பு கவிதையா ???

  • கருத்துக்கள உறவுகள்

அருமை மல்லை அண்ணா..காலத்துக்கேற்ற கவிதை...செருப்பில்லாமல் பள்ளிபோய் படித்திருக்கியள்..நினைத்தால் கவலையாக இருக்கு மல்லை அண்ணா..எங்கட தாத்தாக்களும் உப்பிடித்தான அந்த நேரம் படித்திருப்பினம்..பாவம்.. :(

  • தொடங்கியவர்

இது என்ன மொழிபெயர்ப்பு கவிதையா ???

இல்லை.

ஒன்று நான் பழைய கவிதையை மீட்டெடுக்க முயன்றேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன். எனவே அன்றிலிருந்து மனதில் இருந்த அதே சொற்களைகைத்தான் பாவித்திருக்கிறேன்.

இரண்டாவது 1977 ல் தன்னும் நான் வசனங்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. அப்போதைய எனது முயற்சி கார்கியின் பாணியை கொப்பி அடிப்பது என்பதுதான். கார்க்கி குழந்தைகளுக்கு கதை சொல்வது போல ஒரு பாதள உலக வன்முறைப் புரட்சியை சொல்லியிருக்கிறார்.

நன்றி சாத்திரியார் வருகைக்கு

அருமை மல்லை அண்ணா..காலத்துக்கேற்ற கவிதை...செருப்பில்லாமல் பள்ளிபோய் படித்திருக்கியள்..நினைத்தால் கவலையாக இருக்கு மல்லை அண்ணா..எங்கட தாத்தாக்களும் உப்பிடித்தான அந்த நேரம் படித்திருப்பினம்..பாவம்.. :(

நன்றி கருத்துக்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை அம்மம்மா சிறிமா காலத்தில பாணுக்கு வரிசையில் நிண்ட கதை எல்லாம் சொல்லுவா..அப்புறம் மாவில்லாமல் மரவள்ளிகிழங்கை எல்லாம் மாவாக்கி புட்டவித்தார்களாம் சனங்கள் அந்த நேரம்..

உண்மையா மல்லை அண்ணா..?

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, கவிதைக்கு நன்றிகள்!

எனக்குப் பின்வரும் வார்த்தைகள் நினைவிருக்கின்றன!

மரவள்ளிப் புரட்சி 

கொட்டையில்லாத பேரீச்சம் பழம் 

சிறிமாவோவின் சைட் பர்ன்ஸ் 

புத்திர கித்த தேரோ,

பொன்னான பொற்காலம்,

பூக்கும் வரைக்கும் இந்த,

மின்னார் புதுக்கனியை,

யாரும் புசிக்காதீர்!

(எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கவிதை)

அந்த நேரத்தில் நாட்டின் உயர்வான நிலையில் இருந்த தமிழ் பக்கங்கள் இன்னமும் வறுமையை முழுவதாக காணத்தொடங்கவில்லை. பாண் என்பது சிங்கள சாப்பாடும். தேயிலைத் தோட்டங்களை அழித்து மரவள்ளி செய்து சாப்பிட ஆரம்பித்து சிங்கள பக்கங்களில்தான் கடுமையாக இருந்தது. 

அந்த நாட்களில் மலையகத்தில் நடந்த ஒரு நிகழ்சி:

ஒரு தாயையும் தந்தையும் இழந்துவிட்ட எட்டு வயது பெண் பிள்ளை 4 வயது சிறுவனை வீட்டில் வைத்திருந்தாள். சமைக்க ஒன்றும் இல்லாததால் குடிசைக்கு அருகில் காணபட்ட சில குழைகளை பிடிங்கி வந்து அவித்து தம்பிக்கு தீத்தியிருக்கிறாள். இலைகளில் இருந்த நஞ்சால் அவள் சாப்பிடத்தொடங்குமுதலில் தம்பியார் இறந்துவிட்டான்.

புத்தத்தை மதிக்கும் சிங்கள நீதிபதி ஒருவரின் முன்னால் தம்பியாரை நஞ்சூட்டிக் கொன்றதாக குற்றம் சட்டப்பட்ட 8 வயது சிறுமி கொண்டுவந்து நிறுத்தபட்டாள்.

வழக்கை விசாரித்த நீதிபதி கோட்டில் அழுத்துவிட்டு "புத்தா நீ உண்மையானால் எனது கோட்டுக்கு இன்னொருதடவை இப்படி ஒரு வழக்கை கொண்டு வராதே" என்று கூறினார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மல்லை, கவிதைக்கு நன்றிகள்!

எனக்குப் பின்வரும் வார்த்தைகள் நினைவிருக்கின்றன!

மரவள்ளிப் புரட்சி 

கொட்டையில்லாத பேரீச்சம் பழம் 

சிறிமாவோவின் சைட் பர்ன்ஸ் 

புத்திர கித்த தேரோ,

பொன்னான பொற்காலம்,

பூக்கும் வரைக்கும் இந்த,

மின்னார் புதுக்கனியை,

யாரும் புசிக்காதீர்!

(எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கவிதை)

 வருகைக்கு நன்றி.

யாரோ  பண்டாரநாயக்காவின் ஆவி மாதிரி எழுதியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான எழுத்து நடையாக உள்ளது.கவிதைக்கு பாராட்டு என்று சொல்ல மாட்டேன்.இது கவிதை இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய போராட்டம்.தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது மல்லை !   ஸ்ரீமாவோ  அவர்களின் ஆட்சியில் என்.எம் பெரேராவின் மூளையில்  உதித்த திட்டம்.

போண்டாவுக்கு  உருளைக்குப் பதில் மரவள்ளியை போட்டு தேனீர் கடைகள் புரட்சி செய்த காலம்.

செத்தல் மிளகாய் அமோகமாய் பயிரிடப் பட்டு யாழில் உள்ள சிறு விவசாயிகளும் ஆஸ்டின் லொறிகளும் ,எ போட்டி காருமாய் வாங்கிய கார்காலம் !

நான் வெருண் காலில் இருந்து முதன் முதல்  பட்டா செருப்பு வாங்கி வீதியில் வெள்ளத்தைப் பார்த்தால் செருப்பை கையில தூக்கிக் கொண்டு நடந்த கால் காலம் !

தொடருங்கள் !

  • தொடங்கியவர்

வித்தியாசமான எழுத்து நடையாக உள்ளது.கவிதைக்கு பாராட்டு என்று சொல்ல மாட்டேன்.இது கவிதை இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய போராட்டம்.தொடர்ந்து எழுதுங்கள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரதி அக்கா.

வித்தியாசமான முயற்சி, வாழ்த்துக்கள்

வருக்கைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுப்பண்ணை

  • தொடங்கியவர்

நன்றாக இருக்கின்றது மல்லை !   ஸ்ரீமாவோ  அவர்களின் ஆட்சியில் என்.எம் பெரேராவின் மூளையில்  உதித்த திட்டம்.

போண்டாவுக்கு  உருளைக்குப் பதில் மரவள்ளியை போட்டு தேனீர் கடைகள் புரட்சி செய்த காலம்.

செத்தல் மிளகாய் அமோகமாய் பயிரிடப் பட்டு யாழில் உள்ள சிறு விவசாயிகளும் ஆஸ்டின் லொறிகளும் ,எ போட்டி காருமாய் வாங்கிய கார்காலம் !

நான் வெருண் காலில் இருந்து முதன் முதல்  பட்டா செருப்பு வாங்கி வீதியில் வெள்ளத்தைப் பார்த்தால் செருப்பை கையில தூக்கிக் கொண்டு நடந்த கால் காலம் !

தொடருங்கள் !

வீட்டுத்தோட்டம் என்ற சொல்லை நாம் கேள்விப்படத்தொடங்கியிருந்தோம். 

வெட்ட வெட்ட தளிர்க்கிற இயல்பு கொண்ட இனமாக இருந்தவர்கள்.

ஒரு நிலைக்குப்பிறகு யாருக்கும் எதுவும் முடியாது போகும். அந்த நிலைக்கு தள்ளத்தான் சிங்களம் முயல்கிறது.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

1975 களில் சிறிமாவின் பாண் கியூ படுத்தாத பாடு படுத்தியிருந்தது. அப்போது வேலை இன்றி வீட்டில்தான் இருந்திருந்தேன். சந்தைக்கு அரிசிக்கு வாங்க போனால் 5 ரூபா தொடக்கம்  8 ரூபாவரை போகும். அதை தான் சிலேடையாக கவிதையில் சொல்லியிருந்தேன். கவிதை அரிவரி சிறார்கள் பள்ளியில் இருந்து வீடு வராமல் ஆர்பாட்ட ஊர்வலம் போவதாக வடிவமைக்கப்பட்டது

1975 முடிவுகளில் கிருளப்பனை போய் வாழ ஆரம்பித்திருந்தேன். 1976 ஆண்டு கிருளப்பொனையில் வேலையின்றி கழித்த காலங்களில் கிருளப்பொனை/ நுகேகொடை வாசிகசாலையிலிருந்து  மக்சிம் கார்கி அன்பவரால் எழுதபட்ட மதர் என்னும் ஒரு நாவலை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  இதுவரையில் ருசிய புரட்சியை பற்றி எதிர்கருத்துகளை மட்டும் தான் அறிந்திருந்தவன் நான். அதன் பின்னர்தான் எனக்கு  ரூசியாவில் இருந்த அடக்குமுறையை இலங்கையின் அடக்கு முறைகளுடன் தொடுக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. இயல்பாக முரடாக பேசி முரடாக நடந்து கொள்ளும் எனக்கு கார்கியின் மென்மையான வருணனையும் கதை அமைப்பும் என் நெஞ்சை தொட்டது. அது மாதிரி எதாவது பண்ண வேண்டும் போல் மனத்தில் பலநாட்கள் உறுத்தியது. ஆசை மட்டும்தான்; அறிவும், ஆற்றலும் வசதியும் இல்லை என்பது புரிந்தது. விரலுக்கேற்ற வீக்கமாக இதை எழுதி வைத்திருந்தேன். 

1977ல் வீடடு மாறினோம். அதன் பின்னர் பலதடவைகள் மாறினோம். பின்னர் நான் தனியாக சென்றேன். 1983ல் பலவற்றை இழந்தேன். எனது முதல் விடுதலை பாடலையும் இழந்தேன். இந்த மார்சில் மாணவர் புரட்சி வந்த போது என்னிடமிருந்த பழைய ஆவணங்களை திரும்ப ஒரு தடவை சல்லடை போட்டு தேடினேன். நான் தொலைத்துவிட்டேன் என்பது நிச்சயமானது.  நாளும் பொழுதும் வரிகளை திரும்பத் திரும்பத் இரை மீட்டு போட்டு முடித்தேன். தலைப்பு இன்றுதான் போட்டிருக்கிறேன். மறந்த சொற்களை மாற்றியும் இருக்கிறேன்

நாங்கள் அரிவரி படித்தகாலங்களில் காலில் செருப்பணிவது கிடையாது. KKS  ரோட்டின் தார் 1 மணிக்கு உருகத்தொடங்கும். நண்பர்களுடன் 1 1/2 மைல் நடந்து, விளையாடி விளையாடி வீடு வருவேன். அம்மா படலையை பல தடவைகள் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பா. இடம் கிடைத்தால் வந்து விட்டார்களா என்று நண்பர்கள் வீட்டை யும் ஒருதடவை  போய்ப் பார்த்தும் விடுவா. சுத்தி அடித்து வீடு வந்தால் கால் உளையும்.  இது நான் A/L படிக்கும் போது சைக்கிள் எடுத்தால் பள்ளியும் வீடும் என்றிருந்த காலத்திற்க்கு முற்றிலும் எதிரானது. அம்மாவின் மடியில் காலை வைத்துக்கொண்டிருந்து சாப்பிடுவேன்.)

நன்றி  மல்லை
முதலில் இது சிறிய  எழுத்தாக இருந்ததால் வாசிக்காது கீழிருந்த கருத்துக்களில் சிலவற்றை வாசித்து அதன் மூலம் தள்ளப்பட்டு மேல் சென்று வாசித்தேன்.
உங்களது வலியை  உணர்கின்றேன்.
இன்றுவரை தமிழரது தாகம் அணையாமல் இருப்பதற்கு இது போன்ற வலிகளை  ஒவ்வொரு தமிழனும் சுமப்பதும்  அதை மறவாதிருப்பதும் அதை அணையாது வைத்திருப்பதுமே காரணம்
அது தொடரும்
தொடரணும்.
என் மகனுக்கும்
எனது பேரனுக்கும் அவை பாய்ச்சப்படும்

Edited by விசுகு

வணக்கம் மல்லை ................நல்ல ஒரு தலைப்பின் கவிதையை கொண்டுவந்துள்ளீர்கள் .   நல்லது முழுமையாக பார்த்து கருத்துக்களை கூறமுடியாமல் நேரப்பிரச்சனை வாட்டுகிறது .

புங்கை அண்ணாவின் வரிகளை பாடலாக பிரசவிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்  ,,,,,,,,,,அருமையான வரிகள் தமிழக மாணவர் போராட்டம் பற்றியது .....................புங்கை அண்ணா விரும்பினால் சிறிது துண்டை இங்கே இணைக்க இருக்கிறேன் .இன்னும் சில நாட்களில் புங்கை அண்ணாவின் வரிகளுடன் ஒரு பாடல் இங்கே உலாவரும் .ஏன் இதை இங்கே எழுதுகிறேன் என்றால் உங்கள் வரிகளிலும் ஒரு பாடலை வழங்கி இருந்தேன் ...அந்த நினைவிலேயே .நன்றி 

வருகைக்கு நன்றி விசு.

கவிதையில் ஒரு குடும்பத்தை வரைந்திருந்தேன். அது கவிதையின் காலப்பகுதியான  1975,1976, 1977 போன்ற ஆண்டுகளுக்குரியது. வன்னிமக்களின் பாட்டுக்கு பிறகு அது உண்மையில் பூச்சியம்.

கவிதையில் காணப்படும் சில குறைபாடுகளான, அரிசியை ஆக  8 ருபா என்பதும், சீர் உடை சட்டமாக இருக்கும் இடத்தில் பள்ளி போய்வருவதை யதார்த்தமற்ற முறையில் காட்டியிருப்பதும் பலராலும் இலகுவில் பற்றிக்கொள்ளகூடியவை. 

 அதனால் ஏன் அப்படி குறைத்து காட்டப்படும் கவிதை ஒன்றை நான் எழுதினேன் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு விளக்கம் எழுதும் போது எனது தனிப்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்திருந்தேன். கவிதையில் காணப்படும் யதார்தம் குறைந்த பகுதிகளுக்கு விளக்கம் தேடுவோருக்காகமட்டும்தான் அதை சேர்த்தேன். உண்மையில் அதை நான் பிரதானமாக கொள்ளாததினால் தான் அதை பதிந்த பின்னர் சின்ன எழுத்தாக மாற்றி விட்டேன்.  ஆனலும் அது பலரின் தங்கள் அனுபவங்களையும் தொட்டத்தினால் அவ்ர்களுக்கு அந்த பக்கமும் ஆர்வமாக இருந்து தங்கள் கருத்துகளில் அதையும் சேர்த்துள்ளார்கள். 

உண்மையில் மாணவர் எழுச்சி நாட்களில், அந்த தலைப்புகளின் கீழ்த்தான் பதிய விரும்பினேன். காலம் கடந்துவிட்டது. எனவே கவிதை பகுதியில் பதிந்தேன்.

இன்றைய வன்னி குடும்பத்தை கவிதைகளில் வடிப்பது பொருள் அற்றது. அது  ஒவ்வொன்றும் தனித் தனியாக ஆவணப்படுத்தப்பட்டு அரசிடமிருந்து நீதி பெறப்பட வேண்டியது. 

  • தொடங்கியவர்

வணக்கம் மல்லை ................நல்ல ஒரு தலைப்பின் கவிதையை கொண்டுவந்துள்ளீர்கள் .   நல்லது முழுமையாக பார்த்து கருத்துக்களை கூறமுடியாமல் நேரப்பிரச்சனை வாட்டுகிறது .

புங்கை அண்ணாவின் வரிகளை பாடலாக பிரசவிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்  ,,,,,,,,,,அருமையான வரிகள் தமிழக மாணவர் போராட்டம் பற்றியது .....................புங்கை அண்ணா விரும்பினால் சிறிது துண்டை இங்கே இணைக்க இருக்கிறேன் .இன்னும் சில நாட்களில் புங்கை அண்ணாவின் வரிகளுடன் ஒரு பாடல் இங்கே உலாவரும் .ஏன் இதை இங்கே எழுதுகிறேன் என்றால் உங்கள் வரிகளிலும் ஒரு பாடலை வழங்கி இருந்தேன் ...அந்த நினைவிலேயே .நன்றி 

வருகைக்கு நன்றி தமிழ் சூரியன். கருத்துக்கும் நன்றி.

உங்கள் இசையமைப்பின் தரத்தை எனது பழைய பாடலில் (உண்மையில் அதுதான் புதியது) நீங்கள் கட்டியிருந்த விதம் அவ்வளவு எளிதில் மறந்து போகத்தக்கதா?

உங்கள் மாணவர் பாடலின் பதிவை காத்திருக்கும் ரசிகன்

-மல்லை

  • கருத்துக்கள உறவுகள்
சிறிமா காலத்தில் அதிகாலை 4 மணிக்கு பாணுக்கு வரிசையில் நின்றதாக கேள்விப்பட்டுள்ளேன்.ஏனெனில் குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பாண் முடிந்து விடுமாம்.யாழ் விவசாயிகள் மிளகாய் போன்றவற்றை பயிர் செய்து விற்றதால் (உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தமை) பலர் பணக்காரர் ஆனார்களாம்.இதுவும் பின்னர் ஜே.ஆருக்கு எரிச்சலை உண்டாக்கி விட்டதாம்.அப்போது தான் தாராள பொருளாதார கொள்கை என்பதை கொண்டு வந்து வடபகுதி உற்பத்திக்கு மண் விழுத்தினார்களாம்.
 
நன்றி மல்லை கவிதைக்கு. 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

இன்னமும் தண்ணீர் பிரச்சனையையும் தீர்த்து, தமிழரையும் தனியே விட்டால் திறந்த பொருளாதார கொள்கைகளை விழுத்தி மலிவாக செய்து விற்பார்கள். உரம், யந்திரம், எண்ணை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கும் போது அதில் போட்டி போடுவது என்பது முடியாததாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்கான முளை பதியம் போட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதையை ஆயுதப் போர் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் போர் முடிவடைந்த இன்றைய காலகட்டத்தில் படிக்கும்போது அன்றைய விருப்புக்கள் இன்றும் மாறாமல் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் இடையில் இழக்கப்பட்டவைகளின் விலைகள்தான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்வில் கண்ட வலி சொல்லும்  கவிதை  நன்றாக மனதைத் தைக்கிறது மல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாங்கள் 35 ஆண்டுகளா அல்ல இழக்கிறோம். இழப்போம் என்ற தீர்க்கதரிசனம் இராமடநானிடம் கூட இருந்தது. எனவே அது தடுக்கவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் நாம் பொதுசன வாக்குரிமையை டொனமூர் கொண்டுவந்த போது எதிர்த்தோம்,  இலவச கல்வி, இலவச மருத்துவம் கொண்டு வந்த போதும் கூட எதிர்த்தோம். இவை சிங்களம் மட்டும் சட்டங்கள் அல்ல. இருந்தாலும் இவை எல்லாம் தமிழரை இழக்க வைக்கவே பாவிக்கப்பட்டன.  இன்று தமிழினியை வெளியில் விடுவது கூட தமிழரை இழக்க வைக்கவே. 1958 இலிருந்து இனக்கலவரங்களில் இழந்தோம். 65% வீதமாக இருந்த தொழில் 2% மாக குறையும் போது இதானல் வந்த வருமான இழப்பு தமிழருக்கு பில்லியன் டலர்களுக்கு மேல்.

இழக்கவைக்க தமிழர்கள் தெரியபட்டது அவர்களிடம் அன்று இழக்க கூட இருந்ததினால். அன்று குறைய இருந்த முஸ்லீம்கள் இன்று தேடிக்கொண்டுவிட்டர்கள். அவர்கள்தான் இனி இழக்க வேண்டும். அவர்களும் இழப்பை தடுக்க வழி அறிந்தவர்கள் போல் தெரியவில்லை. ஒரு தடவை இவர்கள் தான் இழக்க வேண்டும் என்று சிங்களம் ஒரு சிறுபான்மை இனத்தை தெரிந்தால் அது G.G ,கக்கீம்  போன்றவர்களின் இணக்க அரசியலால் காப்பாற்றப்பட போவதில்லை. ஆயுதப் போராட மொன்றில் இறங்கினால், வெளிநாட்டு ஆதரவை வைத்து நம்மைவிட முஸ்லீம்களை அழிப்பது அரசுக்கு. இலகு. எனவே அவர்கள் தம்மைத்தாம் அழிக்க அரசுக்கு அர்ப்பணிப்பதைவிட வேறு வழி இல்லாதவர்கள். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

உங்கள் வாழ்வில் கண்ட வலி சொல்லும்  கவிதை  நன்றாக மனதைத் தைக்கிறது மல்லை.

வருகைக்கை நன்றி சுமே அக்கா.

என்ன சொல்ல. 65 வருடம் போராடுகிறோம். இன்னும் எத்தனை வருடங்கள் என்பது தர்சனத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல. 65 வருடம் போராடுகிறோம். இன்னும் எத்தனை வருடங்கள் என்பது தர்சனத்தில் இல்லை.

ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்நாடு என்னும் ஆசை இருந்திருந்தால் நாம் முள்ளிவாய்க்காலை கண்டிருக்கவே தேவை இருந்திருக்காது. சுயநலம் கொண்டவர் நாமெல்லாம் என்ன செய்வது????

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லை பகிர்வுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.