Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன்.

இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து போயிருந்தனர். ஆனால் புலிகள் நவாலி. சண்டிலிப்பாய் அளவெட்டி மூளாய் அராலி மற்றும் வடலியடைப்பு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அது இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்பையும் கொடுத்தது. கெரில்லாக்களிற்கு பொதுவாக காடுகளும் மலைகளுமே பதுங்கும் பாதுகாப்பரணாக விளங்குவது வழைமை. ஆனால் இவையிரண்டுமே இல்லாத யாழ்ப்பாணக்குடாநாட்டில் புலிகளிற்கு பாதுகாப்பாக விழங்கியது யாழ்ப்பாணத்தின் ஒழுங்கையமைப்புக்கள்தான்.. இந்திய இராணுவம் தங்கள் படை நடவடிக்கைக்கு ஏதுவாக இலங்கையரசின் சுற்றுலாத் துறையினரால் 80 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தைதே வைத்துக்கொண்டு தாக்குதல்களை வழிநடத்தினார்கள். அதில் யாழ் குடாவின் ஒழுங்கைகள் எதுவுமே வரையப்பட்டிருக்கவில்லை.

புலிகள் ஒழுங்கைகளால் வந்து தாக்கியது அவர்களிற்கு பெரும் தலையிடியை கொடுத்தது. மருதனாமடம் சந்தியிலிருந்து முன்னேறி உடுவில் அரிசி ஆலையில் முகாம் அமைத்திருந்த சர்மா புலிகளின் நடமாட்டத்தை அறிய ஜேர் பரமேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி ஒருவரின் கீழ் ஒரு பட்டாலியன் இராணுவத்தை தயார்ப்படுத்தி ஊர்பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து புலிகளை தேடித்தாக்கியழிக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதன்படி பரமேஸ்வரனும் சண்டிலிப்பாய் பகுதியில் பெருமளவில் நின்றிருந்த புலிகளை தாக்குவதற்காக உடுவில் சண்டிலிப்பாய் டச்சுவீதி ஊடாக நகர்வை மேற்கொண்டார். அவரது வரைபத்தில் டச்சுவீதியில் மானிப்பாயிலிருந்து குறுக்காக கந்தரோடை செல்லும் இரண்டு சிறிய வீதிகள் இல்லை அவரது படைகள் சண்டிலிப்பாயை அண்மித்ததும் கந்தரோடையிலிருந்தும் மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலிருந்தும் புலிகள் இடையே புகுந்து தாக்கியதில் பரமேஸவரன் உட்பட நாற்பதிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் இறந்து போனார்கள்.புலிகளின் முதலாவது ஊடறுப்பு தாக்குலாகவும்இதை எடுக்கலாம்.

இதனால் கோபமடைந்த சர்மா பொதுமக்களை கேடயங்களாக்கியபடி முன்னேற்றத்தை தொடர்ந்தார். அதன்படி முன்னேறி முக்கிய இடங்களை அடைந்ததும் பிடித்து வந்தவர்களை ஓடச்சொல்லிவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்கள். பெரும்பாலனவர்கள் இறந்து போக சிலர் மட்டும் தப்பியோடிய சம்பவங்கள் ஏராளம்.அது மட்டுமில்லாமல் புலிகளின் இலக்கு என்றோ அல்லது புலிகள் தாக்குதல்கள் நடத்தாமலேயே பல இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்தார்கள் அதில் சில.

21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.

10.10.1987 பிரம்படி (கொக்குவில்)படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.

10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.

26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.

27.10.87 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.

19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள்.சுமார் 65 பொதுமக்கள்

மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான முஸ்லீம்கள்

இப்படி பல படுகொலைகளை நடாத்தி முடித்திருந்தனர்.

மேலே நான் குறிப்பிட்டவையனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தபட்டவைகளே .

இவை இப்படி நடந்துகொண்டிருக்கமற்றப்பபக்கம் எங்கடை சனத்தின்ரை கூத்துக்கள்; தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் கடைகள் எதுவும் திறக்காமல் பொதுமக்களிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது புலிகள் முதலில் சங்கக்கடைகளை உடைத்து உணவை எடுக்கவிட்டிருந்தனர். மானிப்பாய் சங்கக் கடையையு உடைத்து சாமாகளை அள்ளிக்ககொண்டு போனவர்வகள் அங்கை அடிக்கி வைச்சிருந்த வெறும் சாக்குகளையும் அள்ளிக்கொண்டு போனார்கள். கடைசியாய் வந்த இருவர் பொருள் ஏதும் இல்லாததால் ஒருத்தர் தராசை கழட்ட மற்றவன் படிக்கல்லை தூக்கிக் கொண்டுஓடினான். படிக்கல்லை தந்திட்டுபோடா எண்டு தராசை கழட்டினவர் கலைக்க படிக்கல்லு பாரம் தாங்காமல் அவன் போட்டிட்டு ஓடிப்போயிட்டான். தாராசோடை படிக்கல்லுகளும் கிடைச்ச சந்தோசத்திலை அவர் நடந்து போனார்.

அதே மாதிரி மானிப்பாயிலை பிரபல றோஸ் பிறாண்ட் ரொபி புளுட்டோ கொம்பனி இருந்தது அங்கை தார் பரல்கள் மாதிரி பெரிய பரல்களிலை சீனிப்பாணி அடுக்கி வைச்சிருந்தவங்கள் சனங்கள் பரல்களை உருட்டிக்கொண்டு போனார்கள். கட்டாயம் அவைக்கு சீனி வருத்தம் வந்திருக்கும்.. மிச்ச பரல்களை இந்தியனாமி காவலரணிலை பாதுகாப்பிற்கு அடுக்கி வைச்சிருந்தாங்கள். அதே மாதிரி சண்டிலிப்பாயிலை வடிசாராய நிலையம் ஒண்டு இருந்தது பனங்கள்ளை காச்சி வடிச்சு சாராயம் தயாரிப்பினம். பாதி பதப்படுத்தப் பட்ட கள்ளை தண்ணீர் ராங்குகள் மாதிரி உயரத்திலை கட்டியிருந்த பல ராங்குகளிலை சேமிச்சு வைச்சிருந்தவை.

இந்தியனாமி அடிச்ச செல் ஒண்டு அங்கையிருந்த ராங்கிலை பட்டு அது உடைஞ்சு புளிச்ச கள்ளு ஒழுகிக் கொண்டிருந்தது அதை பலபேர் ஓடிப்போய் வாளி குடம் எண்டு அம்பிட்டதிலை ஏந்திக் கொண்டு ஓட எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம். அப்பிடி குடிச்ச சிலர் கோமாவாகி அங்கையே விழுந்து கிடக்க பிறகு அங்கை வந்த இந்தியனாமி போட்டுத் தள்ளிட்டு போயிட்டான்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணை பகிர்விற்க்கு..

:o:o:o:o:o:o

Edited by சுபேஸ்

புளிச்ச கள்ளு குடிச்ச ஆக்களிலை நீங்கள் இல்லைத் தானே :D :D :D :D .

Edited by komagan

"எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம்.""

:lol::lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளிச்ச கள்ளு குடிச்ச ஆக்களிலை நீங்கள் இல்லைத் தானே :D :D :D :D .

நாங்கள் புளிச்ச கள்ளெல்லாம் குடிக்கமாட்டம் சுடச்சுட பனையிலை ஏறி முட்டியை கழட்டி குடிச்சாக்களாக்கும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புளிச்ச கள்ளெல்லாம் குடிக்கமாட்டம் சுடச்சுட பனையிலை ஏறி முட்டியை கழட்டி குடிச்சாக்களாக்கும். :lol: :lol:

அழகான அந்த வசாவிளான் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும். :lol::icon_idea:

இப்ப தெரியுது 1987 ல் சிலோன் ஆமி விரைவாகத் தெல்லிப்பளை வரை வந்த இரகசியம் :lol: :lol:

இந்தியாவுடனான யுத்தம் தவிர்க்கமுடியாததாக இருந்தாதா?

அதே போல் ராஜீவ் கொலையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

எமது எதிர்காலம் குறித்தே இரண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான யுத்தம் தவிர்க்கமுடியாததாக இருந்தாதா?

அதே போல் ராஜீவ் கொலையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

எமது எதிர்காலம் குறித்தே இரண்டும்.

அர்ஜீன் நடந்தவைகள் உங்களிற்கு தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.

இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே

அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.

1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.

2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை

3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;

4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.

6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.

அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது

7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு

படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.

இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இறந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நீங்கள் பிரபாகரானாக வேண்டாம் ஒரு போராளியாக அங்கு நின்றிருந்தால் என் செய்திருப்பீர்கள் என்பதனை கூறுங்கள் அர்ஜீன். உங்கள் பதிலிற்கு பின்னர் இந்தியாவுடனான போரில் பின்னர் வெற்றியாக அமைந்த காரணங்களை எழுதுகிறேன் நன்றி

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவுகளை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இட்டு தமிழ் மணத்தில் இணைத்தீர்கள் என்றால் பல இந்தியத் தமிழர்களும் வாசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், உண்மைகள் அறிந்த பல பேர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள்!

அவர்கள் ஒன்றில் எழுத விரும்புவதில்லை! அல்லது உண்மைகளைத் திரித்து அல்லது தவிர்த்து அல்லது மறைத்தே எழுதுகின்றார்கள்! நீங்கள் எந்த வித ஒளிவு மறைவுமின்றி, தொடர்ந்து உண்மைகளையே எழுதுங்கள்! எவ்வளவு வலியை அவை எமக்குத் தந்த போதும் , அவை கட்டாயம் வெளிப் படுத்தப் பட வேண்டும்!

இந்தியா எமக்கு ஒரு தீர்வைத் தரும் என்று அல்லது தர இருந்தது என்று ஒரு மாயை பலரிடம் இருந்தது! இன்னும் இருக்கின்றது!

உங்கள் பதிவுகள், இதற்கொரு பதிலைத் திட்ட வட்டமாக அளிக்குமென நம்புகின்றேன்!

தொடர்ந்து எழுதுங்கள்! நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுடனான யுத்தம் தவிர்க்கமுடியாததாக இருந்தாதா?

அதே போல் ராஜீவ் கொலையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

எமது எதிர்காலம் குறித்தே இரண்டும்.

ஆமாம் நண்பர் அர்ஜுன். அது தவிர்க்கமுடியாதது.

யுத்தத்தை திணித்ததே பார்சி நேரு குடும்பம் தான்.

இந்தியாவின் எழுபது விகிதமான ஏற்றுமதிகள் இன்றும் கொழும்பு ஊடாக தான் வெளியேறுகிறது. அமெரிக்காவின் கைக்குள் போகாமல் இருபதற்காக ஸ்ரீ லங்காவில் ஆயுத குழுக்களை உருவாக்கி அதன் ஸ்திரத்தன்மையை குலைப்பதே பார்சி கொங்கிரசின் திட்டம்.

ஆனால் புலிகள் தமிழ் ஈழத்தில் பிடிவாதமாக இருப்பதை கண்டு அவர்களை அழிக்க மற்றும் பல குழுக்களை உருவாக்கினார்கள்.

பின் ராஜீவ் காந்தியும் கடைசி சந்திப்பில் பிரபாகரனை அடுத்த முறை சந்திக்கும் போது உயிருடன் இருக்க மாட்டார் என்று பஞ் டயலாக் பேசி மண்டையை போட்டார்.

அர்ஜுன், உங்களுக்கு இரு கேள்விகள்.

இம்மாம் பெரிய்ய்ய வல்லரசு இந்தியாவால் தம்மாதுண்டு ஸ்ரீ லங்காவில் இந்திய முறைப்படி தமிழருக்கு ஒரு மாகாண ஆட்சியை கூடவா பெற்றுதரமுடியாது? பார்சி காங்கிரஸ் அரசு ஏன் ஆயிரத்தெட்டு தமிழ் ஆயுத குழுக்களை உருவாக்கியது?

இந்திய பொருளாதாரம் ஊழல் குடும்ப அரசியல் வாதி பார்சி ராஜீவ் காந்தியின் இறப்பின் பின் முன்னேற்றம் அடைய தொடங்கியது.

இற்றைவரைக்கும்......... சிறிலங்கா இராணுவத்தின் மேலுள்ள கோபத்தைவிட இந்திய இராணுவம் மேலுள்ள கோபந்தான் அதிகம்! அதை நினைத்தாலே ......... நெஞ்சு கொதிக்கும்!!!

கழுத்தறுத்த காட்டேறிகள்!!! அவர்கள் செய்த அட்டூழியங்களை என்றைக்கும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது!

நன்றி சாத்ஸ் அண்ணை!

மிகச் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவுகளை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இட்டு தமிழ் மணத்தில் இணைத்தீர்கள் என்றால் பல இந்தியத் தமிழர்களும் வாசிப்பார்கள்.

இணைத்துள்ளேன் கந்தப்பு

சாத்திரியார், உண்மைகள் அறிந்த பல பேர் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள்!

அவர்கள் ஒன்றில் எழுத விரும்புவதில்லை! அல்லது உண்மைகளைத் திரித்து அல்லது தவிர்த்து அல்லது மறைத்தே எழுதுகின்றார்கள்! நீங்கள் எந்த வித ஒளிவு மறைவுமின்றி, தொடர்ந்து உண்மைகளையே எழுதுங்கள்! எவ்வளவு வலியை அவை எமக்குத் தந்த போதும் , அவை கட்டாயம் வெளிப் படுத்தப் பட வேண்டும்!

இந்தியா எமக்கு ஒரு தீர்வைத் தரும் என்று அல்லது தர இருந்தது என்று ஒரு மாயை பலரிடம் இருந்தது! இன்னும் இருக்கின்றது!

உங்கள் பதிவுகள், இதற்கொரு பதிலைத் திட்ட வட்டமாக அளிக்குமென நம்புகின்றேன்!

தொடர்ந்து எழுதுங்கள்! நன்றிகள்!!!

உண்மைதான் புங்கையூரான். பல விடையங்கள் தெரிந்தவர்கள் எழுதுவதில்லை . அவர்களால் கோர்வையாக எழுததத் தெரியாவிட்டால் அவர்களின் விபரங்களை சேர்த்து நான் எழுதும் முயற்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அதற்காக பலரையும் தொடர்பு கொண்டபொழுது அதற்கும் தயங்கினார்கள். எனவே அதனை கைவிட்டுவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இற்றைவரைக்கும்......... சிறிலங்கா இராணுவத்தின் மேலுள்ள கோபத்தைவிட இந்திய இராணுவம் மேலுள்ள கோபந்தான் அதிகம்! அதை நினைத்தாலே ......... நெஞ்சு கொதிக்கும்!!!

கழுத்தறுத்த காட்டேறிகள்!!! அவர்கள் செய்த அட்டூழியங்களை என்றைக்கும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது!

நன்றி சாத்ஸ் அண்ணை!

இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றீர்கள் கவிதை..

இந்திய இராணுவம் பல அட்டூழியங்களைச் செய்தது உண்மைதான். எனினும் அதனை விடக் கோரமான செயல்களை இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இறுதி யுத்தக் காலத்திலும் செய்தது..

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நன்றி பகிர்வுக்கு

இற்றைவரைக்கும்......... சிறிலங்கா இராணுவத்தின் மேலுள்ள கோபத்தைவிட இந்திய இராணுவம் மேலுள்ள கோபந்தான் அதிகம்! அதை நினைத்தாலே ......... நெஞ்சு கொதிக்கும்!!!

கழுத்தறுத்த காட்டேறிகள்!!! அவர்கள் செய்த அட்டூழியங்களை என்றைக்கும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது!

நன்றி சாத்ஸ் அண்ணை!

புலிகளின் வெற்றி அங்கேதான் வருகின்றது ,இந்தியா அப்பிடி நடக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தார்கள் ,இந்தியா அப்பிடி நடக்கும் என்றும் அவர்களுக்கு தெரியும்.ஒன்றுமே செய்யாமல் இந்தியா அடிக்கவில்லை ,இந்தியன் ஆமியை கொன்று போஸ் கொடுத்தது முழு பத்திரிகையிலும் வந்தது ,அப்பிடி போஸ் கொடுத்த ஒருவர் இன்னமும் நிரந்தரபிரஜாஉரிமை கிடைக்காமல் கனடாவில் இருக்கின்றார் .கொக்குவில் இந்துகல்லூரியில் அப்போ அகதிகளாக இருந்தவர்களை கேட்டால் உண்மை சொல்வார்கள் .முன்றாம் மாடியில் எவரையும் போக அனுமதிக்காமல் தாங்கள் இருந்துகொண்டு பொது மக்கள் எவ்வளோ கேஞ்சிக்கேட்டும் செவி மடியாமல் இந்தியன் ஆமிமேல் தாக்குதல் நடாத்தினார்கள் ,இதற்கு ஆயிரம் சாட்சி இருக்கு .

தின்னவேலியில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை பொதுமக்கள் இழப்பில் அரசியல் செய்தார்கள் ,தமிழ் மக்களுக்கு எதிரியில் தாங்தோணா கோவம் வர அதுதான் காரணம் .உலக வரலாற்றில் என்ஹ்த நாட்டு ஆமியும் தனக்கு இழப்பு வரும் போது அகப்பட்டவனை சுடாமல் விட்டதில்லை.

முள்ளிவாய்காலில் கூட மூன்று லட்சம் மக்களை பலிகொடுத்து அரசியல் செய்ய நினைத்தது உலகுக்கு தெரியும்,புலம் பெயர்ந்த புலிகளும் அதற்கு உடந்தை .அதுதான் உலகம் கையை விரித்தது ,மக்களை விடச்சொல்லி புலியைத்தான் கேட்டதே ஒழிய இலங்கை அரசை தாக்குதல்களை நிறுத்தசொல்லி கேட்கவில்லை .

எனது அப்பாவும் இந்தியன் ஆமிதாக்குதலுக்கு பாதிக்கபாட்டவர் இப்பவும் அந்த கதை கதைத்தால் உடல் நடுங்கி திட்டிதீர்ப்பார்.அப்பா அப்போது தங்கியிருந்த டிப்போ முன்வீதியில் பலரை இந்தியன் ஆமி சுட்டுக்கொண்டது,அதில் பெற்றோரை இழந்து புலியில் இணைந்த உறவினர் இருக்கின்றார்.தாய் சூடுபட்டு தன்னுடன் வந்து அரைவழியில் வரமுடியாமல் மயங்க தான் நல்லூர் போய் அடுத்த நாள் திரும்பி வர உடலை காகம் கொத்திக்கொண்டிருந்ததாக சொன்னார் .

இந்தியன் ஆமி செய்தது முழு முழு அநியாயம் ,அதுவும் இந்தியன் ஆமி ஒரு காலமும் எங்களுக்கு இப்படி செய்யாது என நம்பியிருந்தவர்களுக்கு ,அதை செய்ய வைத்ததால் தான் இன்றுவரை புலிகள் தமிழர் மனதில் வாழ்கின்றார்கள் .இந்தியன் ஆமி நல்லது செய்யாவிட்டிருந்தால் புலிகள் இல்லாது போயிருப்பார்கள் .

நல்ல கதை வாசிக்க நன்றாக இருக்கின்றது.1

எழுதியவரை போலவே அடியும் முடியும் தெரியாத யாராவது வாசித்தால் நிச்சயம் பாராட்டவேண்டும்போல் இருக்கும். யாரோ ஒருவர் பச்சை குத்தியுள்ளார் அதுவே சாட்சி.

ஆனால் ஆறு அறிவு உள்ள ஈழதமிழனுக்கு இதை வாசிக்க கூட முடியாது.

என்ன செய்ய விட்டுகொடுப்பு அரசியல் மாற்றுகருத்து என்று புதிய காளான்கள் மழைகாலத்தில் முளைக்கின்றன. உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் ஊரில் மாரி காலத்தில் கோழிபீ காளான் என்று ஒன்று முளைக்கும் அது தவறி காலில் பட்டுவிட்டால் மணம் தாங்க முடியாது. அதை நாங்கள் தாங்கவில்லையா???????????????????????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வெற்றி அங்கேதான் வருகின்றது ,இந்தியா அப்பிடி நடக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தார்கள் ,இந்தியா அப்பிடி நடக்கும் என்றும் அவர்களுக்கு தெரியும்.ஒன்றுமே செய்யாமல் இந்தியா அடிக்கவில்லை ,இந்தியன் ஆமியை கொன்று போஸ் கொடுத்தது முழு பத்திரிகையிலும் வந்தது ,அப்பிடி போஸ் கொடுத்த ஒருவர் இன்னமும் நிரந்தரபிரஜாஉரிமை கிடைக்காமல் கனடாவில் இருக்கின்றார் .கொக்குவில் இந்துகல்லூரியில் அப்போ அகதிகளாக இருந்தவர்களை கேட்டால் உண்மை சொல்வார்கள் .முன்றாம் மாடியில் எவரையும் போக அனுமதிக்காமல் தாங்கள் இருந்துகொண்டு பொது மக்கள் எவ்வளோ கேஞ்சிக்கேட்டும் செவி மடியாமல் இந்தியன் ஆமிமேல் தாக்குதல் நடாத்தினார்கள் ,இதற்கு ஆயிரம் சாட்சி இருக்கு .

தின்னவேலியில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை பொதுமக்கள் இழப்பில் அரசியல் செய்தார்கள் ,தமிழ் மக்களுக்கு எதிரியில் தாங்தோணா கோவம் வர அதுதான் காரணம் .உலக வரலாற்றில் என்ஹ்த நாட்டு ஆமியும் தனக்கு இழப்பு வரும் போது அகப்பட்டவனை சுடாமல் விட்டதில்லை.

முள்ளிவாய்காலில் கூட மூன்று லட்சம் மக்களை பலிகொடுத்து அரசியல் செய்ய நினைத்தது உலகுக்கு தெரியும்,புலம் பெயர்ந்த புலிகளும் அதற்கு உடந்தை .அதுதான் உலகம் கையை விரித்தது ,மக்களை விடச்சொல்லி புலியைத்தான் கேட்டதே ஒழிய இலங்கை அரசை தாக்குதல்களை நிறுத்தசொல்லி கேட்கவில்லை .

எனது அப்பாவும் இந்தியன் ஆமிதாக்குதலுக்கு பாதிக்கபாட்டவர் இப்பவும் அந்த கதை கதைத்தால் உடல் நடுங்கி திட்டிதீர்ப்பார்.அப்பா அப்போது தங்கியிருந்த டிப்போ முன்வீதியில் பலரை இந்தியன் ஆமி சுட்டுக்கொண்டது,அதில் பெற்றோரை இழந்து புலியில் இணைந்த உறவினர் இருக்கின்றார்.தாய் சூடுபட்டு தன்னுடன் வந்து அரைவழியில் வரமுடியாமல் மயங்க தான் நல்லூர் போய் அடுத்த நாள் திரும்பி வர உடலை காகம் கொத்திக்கொண்டிருந்ததாக சொன்னார் .

இந்தியன் ஆமி செய்தது முழு முழு அநியாயம் ,அதுவும் இந்தியன் ஆமி ஒரு காலமும் எங்களுக்கு இப்படி செய்யாது என நம்பியிருந்தவர்களுக்கு ,அதை செய்ய வைத்ததால் தான் இன்றுவரை புலிகள் தமிழர் மனதில் வாழ்கின்றார்கள் .இந்தியன் ஆமி நல்லது செய்யாவிட்டிருந்தால் புலிகள் இல்லாது போயிருப்பார்கள் .

அர்ஜீன் நடந்தவைகள் உங்களிற்கு தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.

இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே

அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.

1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.

2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை

3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;

4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.

6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.

அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது

7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு

படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.

இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இறந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நீங்கள் பிரபாகரானாக வேண்டாம் ஒரு போராளியாக அங்கு நின்றிருந்தால் என் செய்திருப்பீர்கள் என்பதனை கூறுங்கள் அர்ஜீன். உங்கள் பதிலிற்கு பின்னர் இந்தியாவுடனான போரில் பின்னர் வெற்றியாக அமைந்த காரணங்களை எழுதுகிறேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் நடந்தவைகள் உங்களிற்கு தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.

இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே

அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.

1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.

2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை

3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;

4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.

6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.

அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது

7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு

படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.

இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இறந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நீங்கள் பிரபாகரானாக வேண்டாம் ஒரு போராளியாக அங்கு நின்றிருந்தால் என் செய்திருப்பீர்கள் என்பதனை கூறுங்கள் அர்ஜீன். உங்கள் பதிலிற்கு பின்னர் இந்தியாவுடனான போரில் பின்னர் வெற்றியாக அமைந்த காரணங்களை எழுதுகிறேன் நன்றி

நீங்கள் நேரம் செலவழித்து இதை எழுதலாம்.............

வாசிப்பவர்கள் அறிவை பொறுத்தே விளங்குவது சாத்தியம்.

உலகம் உருண்டை என்று எனக்கு ஒரு எட்டு வயது இருக்கும்போது நண்பன் சொன்னான். நான் கோவிலில் போய் கும்பிட்டேன் அவனை பிடித்த பேய் விரைவாக விலக வேண்டும் என்று.

இது ஒரு முப்பது வருடமாக பிடித்துள்ள பேய் இலகுவாக போகாது .......... வேப்பிலையாலே அடிக்கிற மாதிரி அடிச்ச போகும். அதுக்கேற்ற மாதிரி கோவில் குளம் சந்திக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.