Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8975
    Posts
  2. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13720
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    88869
    Posts
  4. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11543
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/15/21 in all areas

  1. இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 
 நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது. *** எனது உணவு காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு 
அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது 10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் + கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர் மதிய உணவு
 ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்
 4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் + கோப்பி அல்லது தேனீர் இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம் இரவுச் சாப்பாடு மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள் உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். 
 சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும். விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀
  2. அலைகளுக்கு கீழ கேமிரா வைத்தால்.?
  3. பாகம் - 02 கேள்வி : இனி புலிகளின் எதிர்காலம் என்ன? கருணா : புலிகள் இனிமே மீள எழ முடியாது. காடுகளில் மறைந்திருக்கும் சிறு கெரில்லாக் குழுக்கள் சில சிறிய தாக்குதல்களை நடத்த முயலலாம். ஆனால், ஒரு அமைப்பாக மீண்டும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணித்து புறந்தள்ளி விட்டார்கள். கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் நடந்தது இதுதான். யாழ்ப்பாண மக்களே புலிகளை முதலில் நிராகரித்தவர்கள். அவர்கள் இனிமேல் ஒருபோது புலிகளுடன் இணையப்போவதில்லை. புலிகளிடம் ஆட்கள் இல்லை. புலிகளுக்கான ஆட்பலம் கிழக்கிலிருந்து இதுவரை கிடைத்துவந்தது. 8500 கிழக்கு மாகாணப் போராளிகள் வன்னிக் களமுனைகளில் பலியாகியுள்ளனர். புலிகளின் பொருளாதார மையம் யாழ்ப்பாணத்திலேயே இருக்கிறது. ஆனால், தற்போது ஆட்பலத்தையும், பொருளாதாரப் பலத்தையும் புலிகள் ஒருங்கே இழந்திருக்கின்றனர். வன்னி மக்களும் புலிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் வன்னி மக்கள் நிச்சயம் புலிகளை எதிர்ப்பார்கள் என்பது திண்ணம். புலிகளை முடிக்க ராணுவத்திற்கு சிறிது காலமே போதுமானது. கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வெறும் ஒன்றரை ஆண்டுகளே ஆகின்றன. சில சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் அமைதி நிலவுகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும். கேள்வி : புலம்பெயர் தமிழர் தொடர்பான உங்களின் கருத்தென்ன ? கருணா : இங்கிருக்கும் உண்மையான நிலவரம் தொடர்பாக அவர்களுக்கு எதுவுமே தெரியாது. புலிகளின் பொய்யான பிரச்சாரத்தினால் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால், தெற்கில் உள்ள தமிழர்கள் புலம்பெயர் தமிழர் போன்று தவறாக வழிநடத்தப்படவில்லை. புலம்பெயர் தமிழரைப் பொறுத்தவரை பிரபாகரனைக் காப்பற்றினாலே போதுமானது, தமிழர்கள் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் பிரபாகரனே காரணம். அவர் ஒரு தலைவர் கிடையாது. ஒரு சரியான தலைவர் தனது மக்களை ஒருபோதும் பகடைக்காய்களாகப் பாவிக்கப்போவதில்லை. போர் தொடங்குமுன்னமே பொதுமக்களை அவர் வன்னியிலிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும். மக்களை விடுவிப்பதை விடுத்து, மக்களின் பின்னால் தன்னை பிரபாகரன் ஒளித்துக்கொண்டார். தங்களைத் தப்பிச் செல்லவிட்டிருந்தால் தமிழர்கள் அவருக்கு நன்றியாக இருந்திருப்பார்கள். புலம்பெயர் தமிழர் ஒருபோதுமே இலங்கைக்கு மீண்டும் வரப்போவதில்லை. இலங்கையில் யுத்தமும், அழிவும் இடம்பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழமுடியும். அதற்காக வன்னி மக்கள் பாரிய விலையினைக் கொடுக்கவேண்டியிருக்கிறது. லண்டனில் ஒருலட்சம் மக்கள் திரண்டதாகக் கூறுவது முழுப்பொய்யாகும், எனக்குத் தெரிந்ததன்படி 20,000 இற்கும் குறைவானவர்களே அங்கே கூடியிருந்தார்கள். கேள்வி : புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை தொடர்பாக பல்வேறான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனவே, இதுபற்றிய உங்கள் கணிப்பென்ன? கருணா : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் மூன்று லட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருக்கிறார்கள் என்பது முழுப் பொய்யாகும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெறும் 180,000 மக்களே முன்னர் இருந்தனர். போர் தொடங்கும்போது குறைந்தது 90,000 பொதுமக்கள் போர்க்களத்தை விட்டு தப்பி வந்துவிட்டனர். மீதியாயிருந்த 90,000 பொதுமக்களில் 65,000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டினை மீறி அரச பக்கம் வந்துவிட்டனர். எனது கணிப்பின்படி 30,000 இற்கும் குறைவான மக்களே யுத்த சூனியப் பிரதேசத்தில் அகப்பட்டிருக்கிறார்கள். கேள்வி : தற்போது ஒரு யுத்த நிறுத்தம் அவசியமானது என்று நினைக்கிறீர்களா? கருணா : தற்போது நிச்சயமாகத் தேவையில்லை. பிரபாகரன் ஒருபோதுமே இதயசுத்தியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வரப்போவதில்லை. கேள்வி : பிரபாகரன் தற்போது எங்கே இருக்கலாம் என்று யூகிக்கிறீர்கள்? கருணா : அவர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இல்லையென்று நினைக்கிறேன். சிலவேளை அவர் காட்டிற்குள் தப்பி ஓடியிருக்கலாம். அவர் இன்னொரு வெளிநாட்டிற்கு இதுவரையில் தப்பியோடவில்லை. அவரால் ஒருபோதுமே இந்தியாவுக்குள் நுழைய முடியாது. வேண்டுமானால் இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டிற்குத் தப்பிப் போகலாம், ஆனால் நெடுநாள் அங்கும் ஒளிந்திருக்க முடியாது. சிலவேளை நோர்வேயில் அடைக்கலம் தேடலாம். ஆனால், அவர் கட்டாயம் இறந்தேயாக வேண்டும். அவரது இரண்டாம் நிலைத் தளபதிகள் பலர் இறந்துவிட்டனர். பாணு, சொர்ணம் போன்றவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பாணுவும் பொட்டு அம்மானுமே முஸ்லீம்களை யாழில் இருந்து 24 மணித்தியாலத்தில் வெளியேற்றியவர்கள். நான் எவ்வளவோ மறுத்தும், அவர்கள் அதைக் கேட்கவில்லை. கேள்வி : குறைந்தது உங்கள் குழுவினரால் 400 தமிழ் இளைஞர்கள் தெற்கில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன, இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? கருணா : இவ்வாறான எண்ணிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், மணோ கணேசனாலுமே முன்வைக்கப்படும் முழுப் பொய்கள் ஆகும். இவற்றுள் பெரும்பாலனவை பொய்யான தகவல்களாகும். நான் இதுபற்றி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசி தெளிவுபடுத்தியிருக்கிறேன். கேள்வி : உங்கள் அமைப்பிற்கும் இக்கடத்தல்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது பற்றி ? கருணா : இது மிகவும் தவறான செய்தி. பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரே கப்பம் கோரித் தமிழ் இளைஞர்களைக் கடத்துகிறார்கள். அவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிள்ளையான் குழுவின் அநீதிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எமது ஜனாதிபதி பொலீஸாருக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறார். கேள்வி : தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டுவந்ததன் மூலம் இனப்பிரச்சினையினை ஆரம்பித்துவைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் நீங்கள் தற்போது இணைந்திருக்கிறீர்கள். தற்போது அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கருணா : பல அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தினைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றோ மக்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பான சிறந்த தெளிவு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது தெற்கில் வன்முறைகள் பரவின. ஆனால், இன்று புலிகளால் தெற்கில் எத்தனை தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும்கூட சிங்கள மக்கள் தமிழர்கள் மேல் கைவைப்பதில்லை. புலிகள் கிழக்கு மாகாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரைக் கொன்றபோதும், ஒரு தமிழ் மாணவனாவது தெற்கில் துன்புறுத்தப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் மிகச் சிறந்த சிங்கள வைத்தியர் ஒருவரைப் புலிகள் கொன்றனர். ஆனால், ஒரு தமிழ் வைத்தியரும் சிங்களவரால் துன்புறுத்தப்படவில்லை. மக்கள் இப்போது தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் இனவாதிகள் அல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியல்ல. கடந்த காலங்களில் வடக்கில் எத்தனை வாக்குகளை எமது கட்சி பெற்றுக்கொண்டது? போரின் நடுவிலும் கூட, சந்திரிக்காவுக்கு அமோக ஆதரவினை கிழக்கு மாகாண மக்கள் வழங்கியிருந்தனர். கேள்வி : இந்தியாவுடனான உங்களின் உறவு எப்படியானது? கருணா : மிக நன்றாக உள்ளது. நான் அண்மையில்க் கூட இந்திய உயர்ஸ்த்தானிகரைச் சந்தித்தேன். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்ய அவர் விருப்பம் தெரிவித்தார். கேள்வி : தமிழ்நாட்டுடனான உங்களின் உறவு எப்படியிருக்கிறது ? கருணா : பெரிதாக இல்லை. ஆனால், அங்கிருக்கும் பல ஊடகவியலாளர்களோடு தொடர்பில் இருக்கிறேன். கேள்வி : இந்தியாவில் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டீர்களா? கருணா : ஆம், இந்திய ராணுவம் எங்களுக்குப் பயிற்சியளித்தது. கேள்வி : இறுதியாக தனிப்பட்ட கேள்வியொன்று, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கருணா : ஆம், மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது மனைவி எனது வேலைகளில் தலையிடுவதில்லை. நான் புலிகளுடன் இருந்தபோதும் சரி, விலகிய பின்னரும் சரி அவர் எனது நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். நான் தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்கிறேன். முற்றும்
  4. 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில் படிக்கமட்டும் வருகிறான் சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன். மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20 சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி சுலக்சனது மதில் வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது, இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள் உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு" என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும் தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன். "அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் "அன்ரி நீ ங்க வேலையை பாருங்கோ நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான், காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான். கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும் "ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை" "நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு " "அப்போ நேற்று இரவு படிக்க வந்தது " "மச்சான் நானில்லாத நேரத்தில் எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு " "மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் " "டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் " என்று விட்டு அம்மா என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார் எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார். "எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே " என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம் பிரதர் wilheim ஆ எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தான். "மச்சான் மைதிலியை கண்டனியோ " அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன் "வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் " என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல் தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன் அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம் நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம் தோன்றி தோன்றி மறைந்தது. எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான் "என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை " "மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்" என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான், இந்த சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது. 2020 , இலங்கை கிழக்கு மாகாணம் "தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார், "தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது பாடசாலை இஷ்டத்திற்கு முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன் இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது, இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன், இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான் "சேர்" "தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க" இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன் கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள் " என்று முடித்தான். "அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?" "அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் " "சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது " "தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க "என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும் அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான "பாவத்தின் சம்பளம் மரணம்" (முற்றும் )
  5. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
  6. இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு (2) உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமும் அடைந்தது (2) பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே வானில் நின்று மானிடரைக் காணும் தெய்வமே வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே (2) நீதியும் நேர்மையுமாய் வழி நடத்துமே நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே இயேசுவின் திருநாம கீதம்
  7. மாஸ்க்கை இடம்மாறி போட்டதால் கும்பமேளாவில் 3,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. 😎
  8. மூச்சு எப்படி விட வேண்டும் என்று தெரியாது. எனக்கு ஆஸ்மா இருந்தபடியால் ஓடும்போது அதிமாக சத்தத்துடன் மூச்சு வாங்கும். 😀 இதயம் கூடுதலாக அடிப்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். இருந்தாலும் அளவுக்கு மீறி இதயம் துடித்தால் ஓடவோ நடக்கவோ வேண்டாம். இப்போது குறைந்த விலையில் இதயத் துடிப்பை அறியும் கைக்கடிகாரங்கள் உள்ளன. துல்லியமாக அளக்க வேண்டுமானால் நெஞ்சில் கட்டிக் கொள்ளும் பட்டி 40யூரோவிலிருந்து கிடைக்கும். வயதைப் பொறுத்து ஒருவரது அதிகப்படியான இதயத் துடிப்பு வேறுபடும். பெண்களுக்கு BPM = 226 - வயது ஆண்களுக்கு BPM = 220 - வயது (உதாரணமாக உங்களுக்கு 40 வயதென்று வைத்துக் கொண்டால் : 220 - 40 = 180 BPM) மன்னிக்கவும் உடையார். அப்படியானால் தயங்காமல் ஓடுங்கள்.
  9. லங்கா இ நியூஸ் எனும் இணையவழி ஆங்கில ஊடகத்திற்கு கருணா 2009, சித்திரை 18 இல் வழங்கிய செவ்வி பாகம் - 01 கேள்வி : ஒருமுறை நீங்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறினீர்கள், இப்போது இல்லையென்கிறீர்கள், நாம் எதனை நம்புவது? கருணா : இது தவறான செய்தியாகும். நாம் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது எமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்தோம். ஆனால், நான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றபின்னர் எனது தோழர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டார்கள். இன்று ஆயுதங்களைக் கொண்டிருப்பது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். கேள்வி : எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தீர்கள்? கருணா: அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் புலிகளுக்கு எதிரானவர்களே. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு தெளிவான நோக்கம் கிடையாது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் சிறு சிறு கழகங்கள் போல செயற்படுகிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரிய கட்சியான சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். நான் சுதந்திரக் கட்சியில் இணைந்தபின்னர் எனது அமைப்பிலிருந்த 1000 உறுப்பினர்களை இலங்கை ராணுவத்தில் சேர்த்துவிட்டேன். அவர்களில் 300 பேர்வரையில் தற்போது தொப்பிகல காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 1500 பேர் ராணுவத்துடன் இணைவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்களுள் 1200 பேரை சேர்க்கும் முயற்சிகள் பூர்த்தியடைந்துவிட்டன. இதேபோல இன்னொரு பிரிவினர் இலங்கைப் பொலீஸ் சேவையில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த எனது அலுவலகங்கள் அனைத்துமே அப்பகுதிகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறான 80 அலுவலகங்கள் உள்ளன, இவற்றுக்கான பாதுகாப்பினை பொலீஸார் வழங்கிவருகின்றனர். சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை மட்டக்களப்பு நகரில் திறந்துவைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சில போராளிகளை மட்டுமே இன்று கொண்டிருக்கிறது. கேள்வி : உங்களின் அமைச்சரவை அந்தஸ்த்தினைக் கொண்டு மக்களுக்கு எவ்வகையான சேவைகளை வழங்கியுள்ளீர்கள்? கருணா : எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மீள் கட்டுமான அமைச்சினை நான் பெரிதும் மதிக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களை இணைக்க இந்த அமைச்சினைப் பாவிப்பேன். தேசிய ஒருமைப்பாட்டிற்கான முக்கிய தடைக்கல் மொழியாகும். தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியம். வெளிநாட்டு உதவிகள் மூலம் எனது அமைச்சு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக நான் தெரிவித்திருப்பதோடு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் கல்வியமைச்சிற்கு எனது ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன். ராணுவத்தினரை தமிழ் மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் மொழிப்பிரச்சினையால் அவர்களுக்கிடையேயான உறவு தடைப்படுகிறது. ஆகவே ராணுவ வீரர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்பிப்பதை நான் வழிமொழிகிறேன். புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகளுக்கான புணர்வாழ்வினை எனது அமைச்சினூடாக நான் செய்யவிருக்கிறேன். இவ்வாறான 6000 முன்னாள்ப் போராளிகள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். இதேபோல பலர் வடமாகாணத்திலும் இருக்கிறார்கள், அவர்களின் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். கேள்வி : நான்காவது ஈழப்போரில் புலிகளின் திருப்புமுனையான தோல்வியென்று எதனைக் கருதுகிறீர்கள்? கருணா : முதலாவது திருப்புமுனையான தோல்வி நான் புலிகளிடமிருந்து பிரிந்துசென்றபோது ஏற்பட்டது. பிரபாகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டாவது திருப்புமுனை, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வினை பிரபாகரன் ஏற்க மறுத்தது. ஒஸ்லோவில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு சம்மதிப்பதுபற்றி பாலசிங்கம் தயங்கியபோது, நான் அவரை தைரியப்படுத்தி அதனைச் சம்மதிக்க வைத்தேன். முதலில் கையெழுத்து இடுங்கள், பின்னர் பிரபாகரனுக்குத் தெரிவிக்கலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரபாகரன் அந்த ஒப்பந்தத்தினைக் கசக்கி எறிந்ததுடன், எங்களையும் துரோகிகள் என்று கடிந்துகொண்டார். மக்கள் போரற்ற சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றினையே விரும்பினார்கள். நான்காம் ஈழப்போரின் ஆரம்பித்திலேயே போரிடும் விருப்பினை புலிகள் இழந்துவிட்டிருந்தார்கள். அது ஒரு தேவையற்ற போராக அவர்கள் கருதினார்கள். மூன்றாவது முக்கிய திருப்புமுனை ராணுவம் கைக்கொண்ட புதிய போர் உத்திகளால் ஏற்பட்டது. அவர்கள் தமது ராணுவ நடவடிக்கைக்கு "ஜயசிக்குரு" என்று பெயர்கள் இட்டு அழைக்கவில்லை. சிறிது சிறிதாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிச் சென்றார்கள். கேள்வி : தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் அவர்களின் போராட்டம் எவ்வகையான வடிவத்தினை எதிர்காலத்தில் எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? கருணா : போருக்குப் பின்னரான காலத்தில், மாகாணசபை அடிப்படையிலான தீர்வே சாத்தியமானது. ஆனால், பொலீஸ் அதிகாரம் போன்ற தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதை தமிழர்கள் மறந்துவிடவேண்டும். அப்படி தமிழர்கள் கோருமிடத்து இரு சமூகங்களுக்கிடையே மீண்டும் சந்தேகங்களும், சிக்கல்களும் உருவாகும். இப்போது தமிழர்களுக்குத் தேவையானது சுதந்திரமான நடமாட்டமும், அபிவிருத்தியும் மட்டும் தான். அபிவிருத்தியை நாம் ஆரம்பித்துவிட்டோம். பிணக்குகளையும், சிக்கல்களையும் தீர்க்க காலம் எடுக்கும். உதாரணத்திற்கு, புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலங்களில் காலூன்றியபோது தமிழர்களுக்கு அங்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஒரு தமிழரும் துன்புறுத்தப்படவில்லை. 1983 ஆம் ஆண்டு ராணுவம் மீதான தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளையடுத்தே கொழும்பிலிருந்து தமிழர்கள் மட்டக்களப்பிற்கு வந்திறங்கினார்கள். இவ்வாறு வந்திறங்கிய தமிழர்களைப் பாவித்து புலிகள் இனவாதத்தினைப் பரப்பினார்கள். அதன் பின்னர் நான் உட்பட 15 பேர் புலிகளுடன் இணைந்தோம். இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் சிங்களவகர்ளுக்கெதிரான இனவாதத்தினை புலிகள் பரப்பினார்கள். இதனாலேயே இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல் ஏற்பட்டது. ஆனால், இதனைச் சரிசெய்யும் முயற்சியில் நாம் இறங்கியிருக்கிறோம்.
  10. Starring: Roja Ramani, Kamal Haasan, Nagesh, Prameela, Srikanth, Sachu Director: Jos A.N. Fernando Music: G. Devarajan Year: 1974 வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்
  11. வேல் மாறல் மஹாமந்திரம்
  12. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மணலில்நடந்துஇருளைகடந்து யாரப்பேஉன் கருணைமழை
  13. இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் சிறுவர் கடத்தல்கள் தொடர்பான அலன் ரொக்கின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, அவைபற்றி விசாரிக்கப்போவதாக உறுதியளித்திருந்தபோதும், அரசின் ஏனைய தலைவர்களும் பெளத்த குருமார் மற்றும் சாதாரண சிங்களவர்கள் அலன் ரொக்கின் விமர்சனம் குறித்த கடுமையான கண்டனங்களை முன்வைத்திருந்தனர். அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறும்பொழுது அலன் ரொக் ராஜதந்திரியொருவரின் எல்லைகளை மீறிச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். "சர்வதேச சமூகத்தின் மதிப்பிற்குரிய அதிகாரியொருவர் ஒரு அரசாங்கத்தின்மீது இவ்வாறான கடுமையான கண்டனங்களை வெளிப்படையாக முன்வைப்பது நாகரீகமற்றது" என்று அவர் கூறினார். "அவர் சொல்வது உண்மையாக இருந்தாலும், அதனை அரசாங்கத்திடம் நாசுக்காகக் கூறியிருக்கவேண்டும், இப்படிப் பகிரங்கமாக அரசை விமர்சிப்பது தவறு" என்றும் அவர் கூறினார். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதான பத்திரிக்கையான் டெயிலி நியூஸ் தனது ஆசிரியர் தலையங்கத்தில், " ஒரு இறைமை நாட்டின்மீது அலன் ரொக் போன்றவர்கள் முன்வைக்கும் விமர்சனம் அந்நாட்டின் தேசிய நலன்களுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது" என்று தொனிப்பட எழுதியிருந்தது. கருணா குழுவினருடன் தமக்கு எதுவிதமான தொடர்புகளும் இருக்கவில்லையென்று மறுதலித்த இலங்கை ராணுவம் அலன் ரொக்கின் விமர்சனம் மக்களையும், சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்துவதாகவும், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மீது பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்த வல்லன என்றும் சாடியிருந்தது. http://www.lankaweb.com/news/items/wp-content/uploads/2013/06/Articlepdf3.jpg அலன் ரொக்கின் மீதான கடுமையான விமர்சனங்களை பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் "தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம்" எனும் அமைப்பு வெளியிட்டிருந்தது. தனது இணையவழி விமர்சனத்தில் "யார் இந்த அலன் ரொக்?" என்று தலைப்பிட்ட கண்டனத்தை முன்வைத்த இலங்கை ராணுவம் கனடாவின் முன்னாள் அமைச்சரான இவர் புலம்பெயர் தமிழரின் பணத்திற்கு வேலை செய்வதாகவும், கனடாவில் புலிகள் தடைசெய்யப்படுவதை இவர் தடுத்துவருவதாகவும் கடுமையாகச் சாடியிருந்தது. மேலும் கனடாவில் வாழும் தமிழர்களின் உதவியுடனும், பணபலத்துடனும் புலிகளின் அனுதாபிகளின் உதவியினூடாகவும் அலன் ரொக் ஐ நா வில் ஒரு பதவியைப் பெற்றுக்கொண்டார் என்றும் அது மேலும் விமர்சித்திருந்தது. http://www.dailynews.lk/sites/default/files/styles/node-detail/public/news/2017/02/12/Screen%20Shot%202017-02-12%20at%2011.26.10%20AM.png?itok=CQUs48T1 ஆரம்பத்தில் யுனிசெப் அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த கருணா, பின்னர் அலன் ரொக்கின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அலன் ரொக்கும் ஐ நா வும் உண்மைக்குப் புறம்பான, மிகவும் தவறான, கற்பனைத்தனமான குற்றச்சாட்டுக்களை தேச விரோதிகளின் தூண்டுதலை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்திருப்பதாகக் அவர் கூறினார். அரசாங்கத்தின் இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ கூறுகையில், அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை, தனது குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்கள் எதனையும் முன்வைக்காது அலன் ரொக் பேசுவது நகைப்பிற்குரியது என்று அவர் கூறினார். 2006, கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அலன் ரொக் இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு அனுப்பிய கடிதத்தில் தன்னால் விசாரித்துக் கண்டறியப்பட்ட ஆதாரங்களோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்ததுடன், கருணா குழுவினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக உடனடியாக பக்கச் சார்பற்ற உண்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அலன் ரொக்கின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அரசின் வெளிப்படையான எதிர்வினையென்பது நகைப்பிற்குரியது. ஏனென்றால், 2006 இன் ஆரம்பத்திலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில்க் கருணா குழுவினராலும், அரச ராணுவத்தாலும் கடத்தப்பட்டுவரும் சிறுவர்கள் தொடர்பாக பொலீஸாரிடமும், ராணுவத்திடமும் பலநூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இக்கடத்தல்கள்பற்றி அரசு நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும்கூட, அச்சிறுவர்களை விடுவிக்க எதுவிதமான முயற்சிகளையும் அது எடுத்திருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கருணா குழுவினரின் சிறுவர்கள் கடத்தல்கள் தொடர்பான தனது விரிவான அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதன்படி, "எமது சாட்சியங்களின் ஊடாக கருணா குழுவின் கடத்தல்களில் இலங்கை ராணுவமும் ஈடுபட்டுவருகிறதென்பதை நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று சாரப்பட கூறியிருந்தது. இதற்குப் பதிலளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கருணா குழுவுக்கும் எமக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி தொடர்பேதும் இருப்பதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறினால், அதற்கான சாட்சியங்களை எம்மிடம் தரவேண்டும், பின்னர் அதுபற்றி நாம் பரிசீலிக்கலாம்" என்று விசமத்தனமாக கூறியிருந்தார்.
  14. இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் 2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக மேலும் கூறினார். அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது. பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.
  15. கிழக்கில் இயங்கும் படைகள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் ராணுவம், கடற்படை, பொலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படை ஆகிய படைப்பிரிவுகள் தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 2006 இல் இப்பகுதிக்கு விஜயம் செய்த மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்ப்படி இந்தப் படைப்பிரிவுகளின் விபரங்கள் வருமாறு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பினை ராணுவமே பொறுப்பேற்றிருக்கிறது. இதனை தனது பாரிய முகாம்கள் மூலமாகவும், சிறிய முகாம்கள் மூலமாகவும் அது நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் மூன்று பிரதான பிரிகேட் தரப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கான பாதுகாப்பினை கேணல் வீரமன் தலைமையிலான 231 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கிற்கான பாதுகாப்பினை கேணல் நாபகொட தலைமையிலான 232 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு நகருக்கான பாதுகாப்பினை லெப்டினன்ட் கேணல் அநுர சுதசிங்ஹெ தலைமையிலான 233 ஆவது பிரிகேட்டும் பொறுப்பெடுத்திருக்கின்றன. இம்மூன்று பிரிகேட் படைப்பிரிவுகளும் பிரிகேடியர் தயா ரட்னாயக்க தலைமையில் வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிவின் தலைமையகத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2006 இன் பெரும்பகுதிவரை கிழக்கு மாகாண படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் நிசன்க விஜேசிங்ஹெ செயற்பட்டு வந்ததுடன், 2006 இன் இறுதிப்பகுதியில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய இந்த பிரிகேட் தலைமையகத்திற்குப் பொறுப்பேற்றார். திருகோணமலை மாவட்டத்தில் மேஜர் ஜெனரல் சமரசிங்ஹெ தலைமையில் 22 ஆவது பிரிவு பாதுகாப்பு வழங்கிவருகிறது. இதற்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்திருக்கும் பாரிய கடற்படைத்தளத்தினையொட்டி கடற்படையின் பெரும்பகுதியொன்றும் அங்கே நிலகொண்டுள்ளதாகவும், திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பிற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமிரதுங்கவே பொறுப்பாக இயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே முப்படைகளின் தளபதியாக இருப்பதோடு, பாதுகாப்பு அமைச்சினையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். மேலும் பாதுகாப்புச் செயலாளராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றிற்கு அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷெ பொறுப்பாகவிருக்கிறார். அத்துடன் பாதுகாப்புப் பிரதானிகளின் அதிகாரியாக எயர் வைஸ் மார்ஷல் டொனால்ட் பெரேராவும், ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக்காவும் இருக்கிறார்கள். http://s3.amazonaws.com/themorning-aruna/wp-content/uploads/2021/01/29050330/STF.jpg ஆடி 2006 இலிருந்து ராணுவத்தின் வடக்கு நோக்கிய முன்னேற்றத்திற்கு ஏதுவாக விசேட அதிரடிப்படை கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இக்காலப்பகுதியிலேயே மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பினை விசேட அதிரடிப்படை பொறுப்பெடுத்துக்கொண்டது. http://4.bp.blogspot.com/_otWn2PlEOdY/Rx67OZhOUxI/AAAAAAAACHA/Do0NuhPowbQ/s1600/TMVP..jpg கிழக்கின் மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தளபதி யாரென்பதில் இன்னும் சரியான தெளிவு எவருக்கும் இருக்கவில்லை. கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், உள்ளூர் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் கூற்றுப்படி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தலைவராக பிரதீபன் என்பவர் செயற்பட்டு வருவதாகவும், இவரது அலுவலகம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரைப்போன்றே இதே பகுதியில் மங்களன் எனப்படும் ஆயுததாரியும் செயற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அக்கரைப்பற்றில் சிந்துஜன் எனப்படும் ஆயுததாரி கருணா குழுவின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார். அதேபோல வெலீகந்தைப் பகுதியில் கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொண்டுவரப்படும் சிறுவர்களுக்குப் பொறுப்பாக பாரதி எனப்படுபவர் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
  16. கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் பல பெற்றோர்கள் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை தாம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அரசியல் அலுவலகத்தில் கண்டதாகக் கூறுகின்றனர். சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தாம் இதே அலுவலகத்தில் ஆயுதம் தரித்த சிறுவர்களைக் கண்டதாகக் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி இந்த அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகள் இந்த அலுவலகத்திற்கு சூழவுள்ள மூன்று பக்கங்களில் இருந்து பொலீஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். கருணாவின் இந்த நகர்ப்பகுதி அலுவலகத்திற்கான கட்டட வேலைகள் ஆரம்பமாகிய காலத்திலிருந்தே இக்கட்டடத்திற்கு கடுமையான பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதை சர்வதேச தொண்டுநிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறே அக்கரைப்பற்றில் கருணாவின் அரசியல் அலுவலகத்திற்கான பாதுகாப்பினை விசேட அதிரடிப்படையும், திருகோணமலை நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அலுவலகத்திற்கு இலங்கைக் கடற்படையும் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. துணைராணுவக் குழுவான கருணா குழுவினருக்கான அரசின் பாதுகாப்பு, புலிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவே என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் நம்புகின்றது. ஆனால், இந்த அலுவலகங்களுக்கு ராணுவத்தினரின் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டே இங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைக் கண்டபின்னரும் இக்கடத்தல்கள் தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாதென்று அரசு கூறுவது ஏற்றுக்கொள்ளக் கடிணமாக இருப்பதாக கண்காணிப்பகம் கூறுகிறது. இலங்கை அரசாங்கமும், கருணா குழுவும் தமக்கிடையே ஒத்துழைப்பு இருக்கிறதெனும் குற்றச்சாட்டினை மறுத்தே வருகின்றன. இதுபற்றி அரசின் ஊடகப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல கூறுகையில், " எங்களுக்கும் கருணா குழுவுக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் ஒத்துழைப்பினை நாம் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறோம்" என்று கூறினார். அவ்வாறே கருணாவும் இதுபற்றிக் கூறுகையில், " நாங்கள் ராணுவத்தோடு சேர்ந்து செயற்படவில்லை, அவர்களும் எம்மோடு சேர்ந்து செயற்படவில்லை" என்று கூறினார். மேலும், உங்களின் உறுப்பினர்களுக்கு சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறதே என்று கேட்டதற்கு, "எமது உறுப்பினர்களில் 30 பேர் ஆயுதங்களுடன் நடமாடியதற்காக ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால், கிழக்கு மாகாண மக்கள் கருணா குழுவும் ராணுவமும் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாள்தோறும் அவதானித்தே வருகின்றனர். மட்டக்களப்பில் இயங்கும் இரு சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகளைக் கேட்டபோது, "கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நாம் ராணுவத்தையே நாடுகிறோம், அவர்கள் மிக இலகுவாக கருணாவுடனான தொடர்புகளை எமக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள்" என்று கூறினர். தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதும், சிறுவர்கள் கடத்தப்பட்டு ராணுவப் பயிற்சியிலும் அதன்பின்னரான யுத்த நடவடிக்கைகளிலும் பாவிக்கப்படுவதைத் தடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இதனைச் செய்யும் கடமையிலிருந்து அரசாங்கம் தவறியிருக்கிறது என்றும் கண்காணிப்பகம் கூறுகிறது.
  17. விசுகர் அவர்களே! இதையும் பார்த்தால் விருப்பம் இன்னும் அளவுகடந்து வருமே.. 🏃‍♀️🏃‍♂️
  18. இணையவன் யாழில் நீங்கள் இணையும் போது இருந்த வயதுப் பொடியன் என்ற நினைப்பில் ஓடுங்கோ. 😀 பயனுள்ள அனுபவம்.
  19. பலருக்கும் பயனுள்ள ஆக்கம் 36 வயது வரை உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுப் பின்னர் பொழுது போக்குக்காக பந்தடியில் ஈடுபட்டு வருகின்றேன் அதை விட 25 வருடங்கள் ஞாயிறுகளில் பந்தடியில் நடுவராகவும் ஓடிக்கொண்டிருந்தேன் இந்தக் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டுவிட்டது
  20. அருமையான தேவையான கட்டுரை அனுபவப்பதிவு சில வருடங்களுக்கு முன்பு இணையவனின் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு என் மக்களை உதை பந்தாட்ட பயிற்சிக்கு, போட்டிகளுக்கு கூட்டி செல்வது வழக்கம் அப்போ நான் மைதானத்தை சுற்றி நடப்பது வழமை. இணையவனை பல தடவை வாங்க என்று அழைப்பது உண்டு. ஆனால் அவர் ஒருமுறை கூட வரவில்லை. அப்போ புரிந்து கொண்டது இணையவனுக்கு இவற்றில் அலர்ஜி போலும் என்று. அதன் பின்னர் நானும் அந்த பக்கம் போவதில்லை இதை வாசித்ததும் மீண்டும் போகணும் என்ற விருப்பம் வருகுது. பார்க்கலாம்.
  21. நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.
  22. இறுகி இருப்பது போன்ற உணர்வு என்றால் ஸ்ட்ரெட்சிங் காணாது என்று நினைக்கிறேன்
  23. இதுவரை சொன்னது......! இதுதான் தினசரி நடப்பது .......! 😂
  24. நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.
  25. ஆனாலும் உங்க மனதில் ஆசை இருக்கு இல்லாவிட்டால் இந்த திரியை பின் தொடர விருப்ப பட்டு இருக்க மாட்டிர்கள் .சுவர் இல்லாவிட்டால் பிக்சர் இல்லையாம் .
  26. உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும் "காரகோரம் நெடுஞ்சாலை" (Karakoram Highway) பாகிஸ்தானிலிருந்து சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை. இந்த பெருஞ்சாலை பாகிஸ்தானில் உள்ள கில்கிட்டை (gilgit பண்டைக்கால பட்டுப்பாதையுடன் இணைக்கிறது. இதில் 806 கிலோமீட்டர் பாகிஸ்தான் எல்லைக்குள்ளும், மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது. இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பாதையை உருவாக்கும் பணியின்போது, நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது, இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர் உயரத்தில் செல்கிறது…. உலகத்தின் 26,000 அடி (8000 மீட்டர்) உயரத்தில் அமைந்திருக்கும் 5 மலைச் சிகரங்களை இந்தப்பாதையில் பயணிக்கும்போது பார்க்க முடியும். இப்போது கீழே உள்ள காணொளியினைப் பாருங்கள். அதன் பிரமிப்பினை உணர முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.