Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    88026
    Posts
  2. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    33035
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/02/22 in Posts

  1. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  2. ஏப்பிரல் முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது... லங்கா ஸ்ரீ, தமிழ் நியூஸ், ஜே. வி.பி நியூஸ், தமிழ் பேஜ், ரமோ நியூஸ், தமிழ் வின், முகநூல், வாட்ஸப் குழுமம், ருவிற்றர், யூ ரியூப், கிளப் ஹவுஸ், டெய்லி மிரர் நிருபர், இந்திய தூதரகம்... என்று, பலரையும்.. நேற்று அலற விட்டுள்ளது. 🤣 எமக்குத் தெரியாமல் வேறு... தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்தப் பதிவை பார்த்து, அரசிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் என்று, நம்புகின்றோம். 🙂 ஆக... இதனால், ஏப்பிரல் முதலாம் திகதியை... நாம் எல்லோரும்... சிரித்து கொண்டாடி உள்ளது, மகிழ்ச்சியை தருகின்றது. 😁 என்றாலும்... இதன் மூலம், சிரமத்தை சந்தித்த யாழ். உறவுகளிடம் நண்பர்கள் என்ற முறையில், மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். 🙏 இந்த செய்தியை பார்த்து, ஊரில் இருந்து... தொலை பேசி எடுத்து... விசாரித்த உறவுகளுக்காக மிகவும் வருந்துகின்றேன். 🥲 இந்தச் செய்தியை... ஊர்ஜிதப் படுத்தாமல், தமது செய்தி போல், வெட்டி ஒட்டிய... மற்றைய இணையத் தளங்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களுடன், ஹாப்பி... "ஏப்பிரல் ஃபூல்" வாழ்த்துக்கள். 🤣 இந்தத் திரியை... கலகலப்பாக கொண்டு சென்ற, யாழ்.கள உறவுகளுக்கு... சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏
  3. பவுன்சை உருவின கோவம் மனசுக்க முட்டிக்கிட்டு கிடந்தாலும் வெளில..கொட்ட முடியாத சூழலில்.... வந்த கோவத்தை அமுக்கிக்கிட்டு (வேற வழி) கிளம்பி.. எயார்போட் டியூட்டிபிறில.. என்ன இலாபமாக் கிடக்குன்னு பார்க்கப் போனால்.. அங்க எங்க.. எல்லாப் பொருட்களுக்கும்.. கோவிட் கால வருமான இழப்பையும் விலையா வைச்சு.. விக்கிறாங்கள். ஏற்கனவே பஜெட் எகிறிட்டுது.. நமக்கு உது சரிப்பட்டு வராதுன்னுட்டு.. பிளைட்டைப் பிடிக்கப் போனால்.. அங்க.. றீம் லைனர் தான் இருக்கும் என்று பார்த்தால்.. போயிங் 777 விட்டிருந்தாங்கள். அது பார்க்கப் பழசாவே இருந்திச்சு. அதிலையே பாதி மனசு.. சோர்ந்திட்டுது. சரி இதாவது கிடைச்சுதேன்னு மனசை அரையும் குறையுமா தேற்றிக்கிட்டு. பிளைட்டுக்க ஏறினால்.. பிளைட்டுக்க.. எல்லாரும் மாஸ்கோட இருக்காங்க. அதிலும் சிலது டபிள் மாஸ்க் வேற போட்டிருக்குது. ஆனாலும் சிலது மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குது.. சிலது மாஸ்கை எடுத்திட்டு மூக்கைச் சிந்துது.. இப்படி பல வித மனிசர்களையும் தாண்டி ஒருமாதிரி நம்ம இருக்கையில் போய் இருந்தாச்சு. யன்னல் சீட் தான். அது புக் பண்ணும் போதே தெரிவு செய்ததால.. அதில பிரச்சனை இருக்கல்ல. எனி என்ன..செய்யலாமுன்னிட்டு.. போனை சார்சரில அடிச்சிட்டு.. பாட்டைப் போட்டு கேப்பம் என்றிட்டு.. எயார்பொட் டை எடுத்து காதுக்க செருக்கிட்டு.. நிம்மதியா இருப்பமுன்னா.. கிளம்பின பிளேனுக்க இருந்து தண்ணி ஒழுகி.. தலையை முழுக்காட்டிவிட்டிச்சு. இதென்னடா கோதாரி.. பிளேனுக்கையும் தண்ணி ஒழுகுமான்னு நினைச்சிட்டு.. பழைய டப்பாவை.. கோவிட் காலத்தில பூசி மொழுகிட்டு விட்டிருக்கிறான் அரபிக்காரனுன்னு திட்டிக்கிட்டே.. அலேட் பட்டினை அமுக்கி.. விமானப் பணியாளை (மனையாள் அல்ல) அழைச்சால்.. நல்ல.. அரபிக்காரியா வருவாள் என்று பார்த்தால்... ஒரு சைனாக்காரி தான் வந்தாள். அரபிக் காரனெல்லாம்.. யூரோப் பக்கம்.. பிளேன் விட்டு நல்லா சம்பாதிச்சாலும்.. அரபிக்காரிகளை விமானப் பணிப்பெண்களாக வைச்சிருக்கிறது குறைவு.! மற்ற நாட்டுக்காரிகளை தான் வைச்சிருக்காங்கள். வந்தது சைனோவோ என்னவோ வந்த விசருக்கு.. இதென்ன.. பிளைட்டுக்க தண்ணி ஒழுகுது.. என்ன நடக்குது என்று அவளோட பாய.. அவளோ கொஞ்சம் பதறித்தான் போயிட்டாள். ஓடிப்போய் தன்ர கெட் டை கூட்டிக்கொண்டு வந்து.. விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள். நான் அதுக்கு.. என் வாழ்க்கையில் இப்படி முன்னம் எப்பவும் நடக்கவேயில்லையே.. இதென்ன பழைய பிளைட்டா என்று தொடர்ந்து கேள்வி கேட்டு.. அவளுக்கு தொந்தரவு கொடுக்க.. இன்னொருத்தி.. புதிய போர்வை.. தலையணை எல்லாம் கொண்டு வந்து தந்து.. தண்ணியையும் துடைச்சுவிட்டு.. நம்மளை குசிப்படுத்தி.. சமாதானப் படுத்தினாள். சரி சரி.. போங்கடி.. நடிச்சது காணுமுன்னு.. மனசுக்க தோனினாலும்... கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமேன்னு விட்டால்.. அதுக்குப் பிறகு நம்ம மேல கவனிப்போ.. தனி தான். ஒரு மாதிரி.. ஒழுகிற பிளைட்டை சமாளிச்சு அரபுதேசம் ஒன்றில் இடைத்தங்கலுக்கு இறங்கினால்.. மனசுக்க.. பழைய நினைப்பில்.. ஒரே எதிர்ப்பார்ப்பு. அங்க டியுரிபிறில.. அரபிக் சொக்கலேட்டும்.. ஊரில உள்ள சில பேருக்கு.. தண்ணியும் (பச்சத்தண்ணி இல்லை.. பிறவுன் தண்ணி) வாங்கிட்டுப் போவம் என்று.. மனசு பல திட்டங்களைப் போட்டிச்சு. ஆனாலும்.. பிளேன் இறங்கின கையோட.. அதை தூரத்தில நிப்பாட்டிட்டாங்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் பிளைட்டுக்க வைச்சிருந்திட்டு... பேரூந்துகளில் ஏத்திக் கொண்டு போய்... ஒரு வழிப் பாதையில விட்டாங்கள். அங்க இறங்கினால்.. அம்புக் கோடுகள் காட்டிற வழியில மட்டும் தான் போகலாம் என்டாங்கள். அரபுக்காரன் தேசத்தில எனி உதுக்கு சண்டை பிடிக்கேலுமோ.. இல்லைத்தானே.. அவன் சொன்னதை வாயை மூக்கை பொத்திக்கிட்டு கேட்டுட்டு நடந்தால்.. அது நேராக் கொண்டு போய் அடுத்த பிளைட் எடுக்கிற இடத்தில விட்டிச்சு. டியுரிபிறி எல்லாம் அடைச்சு காத்துக்கூட போக முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கு. அட கறுமமே.. இங்க டியுபிரில ஏதாவது வாக்கிட்டுப் போவம் என்று தானே இந்த ரான்சிட் போட்டது.. அதுவும் பாழாப் போச்சா.. என்றிட்டு.. குறைஞ்சது.. மாஸ்கை மாத்திட்டு.. மூஞ்சியைக் கழுவிட்டு.. நம்பர் 1 க்காவது போயிட்டுப் போவம் என்று போனால்.. அங்கையும்.. கியூ. கியூவை தாண்டி.. எப்படி போனது பயணம்.. தொடரும்..
  4. கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா... அதன் நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்... பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து.. 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும், தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த.... 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால்... இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க... இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன்... இன்று மாலை, இந்திய போர் கப்பலான... "விக்ரமாதித்யா", 4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு... கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே நாளில்.... ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை... இலங்கையின்.. இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள்... மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை.... உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள். விரைவில்.. மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... https:// Suya Aakkam .COM
  5. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  6. மின்னல் வெட்டினால், இடிமுழங்கோணுமே எண்டு நினைச்சன் - இந்தா முழங்கீட்டு🤣. கண்டது சந்தோசம் நாதம்ஸ்.
  7. இப்பிடியாவது எங்கடத் தாகயத்தைப் பிடிச்ச சனி குறையட்டும்!
  8. "கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும் யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  9. எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்குமே! மக்கள் படும் பாடு சொல்லிலடங்காது. விடிவை நினைக்கவே பயமாக இருகிறது எழுந்தவுடன் அம்மா பசிக்குது என அழும் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து அழத்தான் முடிகிறது-என அன்றாடம் உழைக்கின்ற தாய் தந்தைகள். விலைவாசி என்னும் மலையை மக்கள் தலையில் வைத்து தூக்கி நடவென சொல்லுகிறது அரசு. பட்டினியாலும்- மின் வெட்டாலும் சமநிலை படுத்தப்படிருக்கும் ஒரேநாடு ஒரேகொள்கை கோனுயர குடியுயரும்-என வாக்களித்த.. யுத்தம் தெரியாத சகோதர இன மக்களும் கோனையுயர்த்திவிட்டு அவர்கள்போடும் பொருளாதார-பசி பட்டினிகுண்டுகளுக்கு பலியாகும் நிலையில் இன்றோ வீதியில். எனியாவது அரசு போர்வெற்றியை விடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புமா? அல்லது கைமாறிக் கொடுக்குமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். -பசுவூர்க்கோபி.
  10. முதலில் கதிகலங்கவைத்த செய்தியினூடாக யாழ்களத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த பதிவாளராகிவிட்ட தமிழ்சிறியவர்களுக்குப் பாராட்டு. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக ஜம்பவான்களெனத் தமக்குத் தாமே நாமம் சூட்டியவர்களின் வண்டவாளமும் வாய்வீச்சும் தண்டவாளத்தில் ஏறித் தடாலடியாகக் கடலுள் வீழ்ந்த நிலை ஒன்று. அதேவேளை ஊடகங்கள் தனது பணியைத் தனது மக்களது நலன்கருதி செயற்பட்டால் எவளவு மாற்றங்களை கொண்டுவர முடியும் என்பது இரண்டு. யாழ்க்களமானது அனைத்துலகிலும் எப்படி அவதானிக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாகவும் அமைந்துள்ளது மூன்று. இதனை நாம் பத்தோடு பதினொன்றாகக் கடந்துபோக முடியாதென்பதையும் மனம்கொள்ளல் நன்று. கருத்துகளிலே பகிரும் விடயங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்றில்லையானபோதும், இனமாக ஒரு பொதுமைப்பண்பியலைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துவதாவே தோன்றுகிறது. எனவே இனநலன் சார்ந்து பதியப்படும் பதிவுகள் உற்றுநோக்கி உறவுகளை வளர்த்தெடுக்கும் புள்ளிகளாக அமைய வேண்டுமென்பதே எனது பார்வையாகும். மொழியால் ஒன்றித்து, மதங்களோடு ஒத்திசைவாக அணுகி எமது அவலத்தைக் களைந்து தமிழீழத்தை மீட்டெடுகச் சிந்திக்கும் பொறுப்புணர்வோடு, யாழ் களத்தின் நோக்கத்தை மெய்நிலையாக்கிட இந்தச் செய்தித்திரியும் சுட்டுகிறது. அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. சைனா கட்டின கொழும்பு போட் சிற்றி ய சொன்னன் இவர் இவருக்கு தெரிந்த ஏதோ ஒன்றை நினைச்சிருக்கார் இதற்கு கம்பனி பொறுப்பேற்காது 🤣 அப்ப பாருங்களன் முசுப்பாத்திய
  12. கால்கடுக்க.. பொறுமை சோதிக்க கியூவில் நின்று வாஸ் றூமை அடைந்து மாஸ்கை கழட்டினால்.. மாஸ்கை இங்கே குப்பையில் போட வேண்டாம்.. என்று எழுதி அதை போட தனியான ஒரு பாதை அமைச்சு.. அதில ஒரு தொட்டி வைச்சு.. அதில.. கொண்டு போய் போடச் சொல்லிக் கிடக்கு. இதுகளை எல்லாம் சமாளிச்சு.. ஒரு மாதிரி பிரஸப் பண்ணிக் கொண்டு.. பிளைட்டில தந்த சான்விச்சை மிச்சம் பிடிச்சு.. கொண்டு வந்ததால.. அதையும் சாப்பிட்டிட்டு.. பிளைட்டில தந்த தண்ணிப் போத்தலையும்.. மிச்சம் பிடிச்சு கொண்டு வந்ததால.. அதையும் குடிச்சிட்டு (நாம யாரு.. சுழியன்கள் எல்லோ).. அடுத்த பிளைட்டுக்குள்ள ஏறினால்.. அதுக்க ஆடு மாடுகளை ஏத்திற மாதிரி ஏத்துறாங்கள் ஏத்துறாங்கள்.. ஏறி முடியாத அளவுக்கு ஏத்திறாங்கள். கடைசியில நின்று போகாத குறைக்கு.. சனம். அதுக்குள்ள பெரிய பெரிய கான்ட் லக்கேஜ்ஜோட.. இலங்கைக்குப் போக.. என்று வரும்.. மத்திய கிழக்குப் பணியாளர்கள். அதுகளையும் சொல்லிக் குற்றமில்லை.. ஊருக்கு கொண்டு போகக் கூடிய மக்ஸிமத்தை கொண்டு போவம் என்ற துடிப்பு. ஆனாலும்.. சக பயணிகளை.. ரெம்ப அசெளகரியப்படுத்திட்டாய்ங்க. இதுகளை எல்லாம் தாண்டி.. அந்த ஏயார் பஸ் விமானம்.. 30 நிமிடம் முந்தியே.. கட்டுநாயக்காவை அடைந்துவிட்டது. கட்டுநாயக்கா பார்க்க அப்படியே தான் இருக்குது. என்ன மூலைக்கு மூலை புத்தர் தரிசனம் கொடுப்பது அதிகரித்திருந்தது. கட்டுநாயக்காவுக்க இறங்கிட்டு.. புத்தரை அந்நியராப் பார்க்க ஏலுமோ.. நம்ம புத்தர் தானே.. என்ற தோறணையில்.. அவரைத் தாண்டி.. இமிகிரேசனுக்கு போனால்.. என்ன ஒரு பவ்வியம் பணியாளர்கள் இடத்தில். கொஞ்ச வெளிநாட்டவர்கள் தான் கியூவில். பாஸ்போட் செக் எல்லாம் ஒரு 10 நிமிடத்துக்குள் முடிஞ்சு போச்சு. அந்தளவுக்கு வெளிநாட்டவருக்கான கவுண்டர்கள்.. பிறியாக கிடந்துது. செக் முடிஞ்சு.. விசாவையும் குத்திக்கிட்டு வெளில வந்தால்.. இன்னொரு சந்துக்கு போக வேண்டும். அங்க தான்... அங்க என்னாச்சுன்னு பின்னர் தொடரும்...
  13. அந்தப் படமும்.... அடுத்து வந்த, சாத்தானின் நீண்ட கருத்தும்... செய்தியின் நம்பகத் தன்மையை... மேலும் உறுதியாக்கி, இணையத் தளங்களையே... நம்ப வைக்க வைத்து விட்டது. 😂
  14. செய்தி பரவ அவர் தேடியெடுத்து இணைத்த படம் நண்பர் ஒருத்தர்க்கு ஏப்ரல் முட்டாள் தின செய்தி என்று சொல்ல நம்ப முடியாது போட்டோ இணைத்துள்ளார்கள் என்கிறார் அப்படியா நாம ஒருக்கா தான் சொல்லுவம் இனி உன் நம்பிக்கை என்று சொல்லி விட்டு அமைதியாகினேன் .
  15. ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்.... இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார். தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்.... சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது. கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார். வாழ்த்துக்கள்.... 👌
  16. சிறி, நீங்கள் இப்ப பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள் , இன்னும் இது youtube இல் ஓடிக்கொண்டு இருக்கு
  17. நீங்கள் சாத்ஸ் சாத்ஸ் எண்டு சொல்ல நான் எங்கையோ போய் நிக்கிறன்....🤣
  18. காட்டில் இருந்து நாட்டு நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் புலி.......! 😂
  19. பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் துலங்கி நிற்பது. எனவே தமிழ்ச் சமூகத்தில் அதன் சிறப்பிடத்தைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் இது தொடர்பில் உடனே நம் எண்ணத்திரையில் ஓடுவது சிலப்பதிகாரக் காட்சி - மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை. தன்னுடன் புலந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுத்த மடலில், "குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது" என்கிறாள். 'குரவர் பணி அன்றியும் - மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு எனக் கொள்வது பொருத்தம்) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தது மட்டுமல்லாது, குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக தாங்கள் ஊரை விட்டுச் செல்லும் அளவிற்கு என் பிழை யாது என்பது அறியேன் (என் பிழைப்பு அறியாது)' என்கிறாள் மாதவி. மாதவியின் மூலமாக இளங்கோவடிகள் குரவர் பணியைத் தலையாயதாய் வைத்தமை இங்கு போற்றி உணரத்தக்கது. ஊழல் மலிந்த சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாளர்கள் ஒளிர்வதை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் சமூகத்தைச் செப்பனிட வழிவகுக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதுபோலவே, முதியோர் இல்லங்களை நிரப்பும் காலகட்டத்தில் பெற்றோரைப் பேணும் பிள்ளைகளையும், அதற்கான தகைமையும் புரிதலும் உள்ள பெற்றோரையும் நாம் கடந்து செல்லுகையில் சற்று நிதானித்து அவர்களையும் பதிவிடுதல் சமூக நன்மைக்கு வழிகோலும் எனும் எண்ணவோட்டமே இக்கட்டுரை. உறவுமுறையில் எனக்குச் சற்று தூரத்து உறவாக இருப்பினும் மனதளவில் நெருக்கமானவர்கள் நம் கதைமாந்தர். திரு. தாயுமானசுந்தரம் - திருமதி. விஜயகோமதி (கோமதி என்று சுருங்கி, பின்னர் கோமா என்றே இளம்பிராயத்திலிருந்து அழைக்கப்பட்டார்) தம்பதியரின் திருநிறைச்செல்வன் நாராயணன் என்ற சங்கர். வைணவமும் சைவமும் தனது ஒரே பெயரில் வாய்க்கப் பெற்றவன். சங்கரநாராயணன் என்று வைத்திருக்கலாமே என்று நாம் கேட்பதற்கு அவனது பெற்றோர் இப்போது இல்லை. உறவு முறையில் அவன் எனக்கு மைத்துனன். அவனது சகதர்மிணி ஜெயகோமதி. நிஜத்தைக் கதையாய் வடிப்பவர்கள் கதைமாந்தர் பெயர்களை எழுதுவதில்லை. அடியேன் அவர்களது பெயர்களை எழுத முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர்கள் என்பதேயாம். தாய்-தந்தை, மகன்-மருமகள் என்று ஒரே வீட்டில் இரண்டு கச்சிதமான தம்பதியர் அமைந்தால் அவ்வீடு கோயிலன்றி வேறென்ன ? கதையின் திறப்புக் களத்திலேயே திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். நம்மைச் சுற்றிய உலகில் ஆங்காங்கே நாம் காணும் பொறுமையின் சிகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அவரிடம் மாணாக்கராய் இருந்திருக்க வேண்டும். அவரது இல்லத்தரசியார் திருமதி. விஜயகோமதி அன்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவர்களது அக்காவின் மகளைக் கட்டிய மருமகனுக்கு அண்ணன் (இப்போதே கண்ணைக் கட்டுகிறதா ?) என்றபோதிலும், நானும் என் மனைவியும் எப்போதோ அவர்கள் இல்லத்திற்குச் சென்ற போதெல்லாம் அவர்களது சொந்த மருமகன் - மகள் போல அங்கு நடத்தப்பட்டது இயக்குனர் விக்ரமன் பட சென்டிமென்ட் போல எவருக்கும் தோன்றலாம். மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்புக்கு இது சான்று பகர்வது. "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" எனும் பாரதியின் வரிகளுக்குச் சான்று வேண்டுமா? இதோ - நான்கைந்து பூனைகள் திருமதி. விஜயகோமதி அவர்களைச் சுற்றி வரும். "ஏய், இங்கே உட்காரு ! தோசை ஆறினதும் உனக்குத் தருவேன்" என்று சொன்னவுடன் அந்தப் பூனையும் அவர்கள் சுட்டிய இடத்தில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்ளும். எந்தப் பூனைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் ரசித்துச் சொல்லும்போது நம்மில் சிலருக்குச் சற்று அதிகப்படியாகத் தோன்றலாம். அவர்கள் வீட்டில் உள்ள அந்த ஒரே நாயை 'தம்பி' என்று அழைப்பதும், அந்த நாய் பூனைகளிடம் தன் இனத்துக்கே உரிய சேட்டைகளைச் செய்யாமல் சாந்தமாய் இருப்பதும் எங்கேயோ எப்போதோ வாசித்ததைப் போன்ற பிரமிப்பு. இவ்வளவிற்கும் செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பம் என்றில்லை. மனதளவில் அளப்பரிய செல்வம் வாய்த்த நடுத்தரவர்க்கம். "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்" என்ற பாரதியின் வரிகளையே "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் தானே எனும் உண்மை அறிதல் வேணும்" என்று மாற்றும் துணிவு திருமதி. விஜயகோமதி அவர்களைப் பார்த்த பின் எனக்கு ஏற்பட்டது. அறுபது வயதைத் தொட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து தலையில் அடிபட வேண்டும் என்பதில்லை. ஆனால் திருமதி. விஜயகோமதி அவர்களுக்கு நேர்ந்தது. உயிருடன் நினைவற்ற நிலைக்குச் சென்றார்கள். "கோமா" என்று வாஞ்சையுடன் உற்றார்- உறவினரால் அழைக்கப்பட்டவர்கள் 'கோமா' நிலைக்குச் சென்றது இந்த நிஜக்கதையில் ஒரு அவலச்சுவை. அவர்களது குடும்பத்தின் நல்ல நண்பரான மருத்துவர் உயர்திரு. மங்களா இரவீந்திரன் அவர்கள் தம் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சிறிது காலம் பேணி, அந்த நிலையிலேயே இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் திருமதி. விஜயகோமதி அவர்கள் குடும்பத்தாரிடம் (அந்த மூன்று பேர்தான்) ஒப்படைக்கப்பட்டார். எப்போதும் அவர்களின் சேவைக்கானவராய் மருத்துவ நண்பர் விளங்கினார். தெய்வாதீனமாக இந்நிலையிலிருந்து சிலர் தேறியுள்ளது கடலில் அவர்களுக்கான கட்டுமரம். மகன் சங்கர் பெரிய வருமானம் தரும் பணியில் இல்லாவிட்டாலும், சிறிய நிரந்தர வருமானமும் அலைச்சலும் உள்ள பணியில் இருந்தான். கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்களின் சுமாரான ஓய்வூதியமும் உண்டு. மாமியாரை முழுநேரமும் வீட்டில் இருந்து கவனிக்க ஏதுவாக மருமகள் ஜெயகோமதி தான் பார்த்துக் கொண்டிருந்த சிறியதொரு வருமானம் தரும் வேலையை உதறினாள். கண்திறந்து சுற்றுமுற்றும் கவனிக்கும் அளவு திருமதி. விஜயகோமதி அவர்களின் உடல்நிலையில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. வேளாவேளைக்கு எந்தக் குறையும் இல்லாமல் திரவ உணவு மட்டுமே. கண்ணசைவும் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களுமே அவருக்கான மொழியாக மாறின. தனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் மகள் போலவே தன்னைப் பாவித்த மாமியாரைத் தன் மகளாகவே மருமகள் கவனித்தாள். வேலைக்குச் சென்ற தனக்குக் காலையில் எழுந்து சமையல் செய்து, தலை வாரிவிட்டுப் பேணிய மாமியாரைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து தலை வாரி, நெற்றியில் திலகமிட்டுப் பேணிப் பாதுகாத்தாள். மாமியாரே மகள் ஆகப்போவதாலோ என்னவோ, அவளுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அவர்களுக்கு வரும் சிறிய ஓய்வூதியத்தை எல்லாம் மீறி இயன்ற வசதிகளை எல்லாம் செய்து பேணினான் பெறற்கரிய பேறான பெற்ற மகன் சங்கர். படுக்கைப் புண்கள் (Bedsores) ஏற்படக் கூடாது என்பதற்காக நீர் அடைத்த மெத்தை (Water bed), கோடைக்காலத்திற்காக குளிர் மின்சாதனம் (air conditioner) என்று தான் பார்த்திராத விஷயங்களைக்கூட ஈன்று புறந்தந்த தன் தாய்க்காகச் செய்திருந்தான் அத்தனயன். அதுவும் தாய்க்குக் குளிர் அதிகமானால் அவளால் சொல்லக்கூட முடியாதே என்று எண்ணிப் பக்கத்து அறையில் குளிர் சாதனத்தை வைத்தான். ஊழிக்காலம் வரை தன் தாயை வாழவைக்கும் முனைப்பு அதில் தெரிந்தது. தாயின் கண் எதிரே சுவற்றில் பெரிய LED TV யை மாட்டியிருந்தான். அதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு முழுமையான நினைவு வந்து விடாதா என்ற ஏக்கம் போலும். வடிவேலு காமெடியைப் பார்க்கையில் தாயின் முகமலர்ச்சியைக் கண்டு அபரிமிதமான ஆனந்தம். இந்த நிலையில் இருப்பவரைக் கூட தன் உடல்மொழியால் மகிழ்விக்க முடியும் என்று அறிந்தால் வடிவேலுக்கே அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். மற்றபடி திருமதி. விஜயகோமதி அவர்களால் வளர்க்கப்பட்ட அக்கா மகளும் எனது தம்பியான மருமகனும் வார இறுதி நாட்களில் தவறாத ஒரு கடமையாக அவர்களைப் பார்க்கச் சென்று கவனித்ததால் அவ்விருவரும் அவர்கள் நினைவில் நின்றார்கள். திருமதி. விஜயகோமதி அவர்களின் இந்நிலைக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளில் கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் இரத்த சோகையினால் (anemia), திடீரென்று காலமானார்கள். அவர்கள் நோயுற்றிருந்தாலும் படுக்கையில் விழாததால், தந்தைக்குப் பணி செய்யும் வாய்ப்பு மகனுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மறைந்தது மனைவிக்கு புரிந்தது போல் தெரியவில்லை. அவ்வப்போது யாரையோ தேடும் கண் அசைவையும் முக பாவனையையும் வைத்து அவர் கணவரைத் தேடுகிறார் என்பது முழு உணர்வுடன் வாழும் நம் கற்பனை. வழக்கம் போல் தனக்கு நெற்றிப் பொட்டு வைக்காமல் அவள் மட்டும் வைத்திருக்கிறாள் என்று மருமகளை மிரட்சியுடன் பார்ப்பதாய் மகன்-மருமகளின் கற்பனை. எனவே விதவையான பின்பும் உலக வழக்கு ஒழித்து திருமதி. விஜயகோமதிக்கு நெற்றிக் குங்குமம் இட்டு, தலையில் தவறாது பூச்சூடி விட்டாள் மகள் ஒத்த மருமகள். மேலும் அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் கணவர் மறைந்திருக்க வாய்ப்பில்லையே ! சுமார் ஐந்தரை ஆண்டுகள் வேறு எவருக்கும் பெரும் போராட்டமாய் இருந்திருக்கும் வாழ்வை எந்தப் போராட்டமும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்து ஒரு அமைதியான இரவில் நிறைவு செய்தார் திருமதி. விஜயகோமதி. மகன், மருமகள் இருவரிடமும் போராட்டத்திற்கான எவ்விதச் சோர்வும் தெரியவில்லை. போராளிகள் சோர்வடைவது இல்லை. தோல்வி அடைவதும் இல்லை. சாதாரணமாக செல்வந்தர் வீட்டில் கூட இத்தனைக் காலம் படுக்கையில் கிடந்தவர் உடல் சுருங்கி, முகம் முற்றிலுமாக மாறிப் போகவே வாய்ப்பு உண்டு. ஆனால் இவரோ நல்ல நினைவுடன் வாழும் போது இருந்த தோற்றத்தை விட நல்ல ஆரோக்கியமான தோற்றப்பொலிவுடனேயே மரணித்தார். திரவ உணவாக இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ளவையே அளிக்கப்பட்டதால் இருக்கலாம். எல்லாப் புகழும் மகன், மருமகள் இருவருக்குமே. இந்த ஐந்தரை வருடங்களும் படுக்கையிலேயே வாழ்ந்ததற்குப் பதிலாக அப்போதே அவர்கள் மரணித்து இருந்தால் நல்ல சாவாக இருந்திருக்குமே என்பது நம்மில் பெரும்பான்மையான பாமரர்களின் பொதுப்புத்தி. திருமதி விஜயகோமதியின் அன்புசார் பெருவாழ்விற்கு அவரது மக்களால் இத்தனைக் காலம் சீராட்டப்பட்டது அவ்வாழ்க்கைக்கான மரியாதை. அவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. அம்மேதகு அன்னைக்கு இவர்கள் ஆற்றிய பாசப் பிணைப்புடனான தொண்டு இவர்களுக்கான பெரும்பேறு. தாயும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றிய உலகத்திற்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்த பாடத்தின் கால அளவு ஐந்தரை ஆண்டு. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னர் மைத்துனன் சங்கரின் நடவடிக்கைகளை வைத்துப் பொதுவாக நான் சொல்வதுண்டு, "அவன் எனக்கு வாய்த்த, வயதில் குறைந்த ஒன்றிரண்டு குருநாதர்களில் ஒருவன்" என்று. அத்தை என்று எனக்கு உறவு முறையாக அமைந்த திருமதி. விஜயகோமதி அவர்களுக்கான சேவைக்குப் பின், சங்கரும் அவனது துணைவியும் என் போன்றோருக்கு சிவ-பார்வதியாக, நாராயணன்-நாராயணியாகவே காட்சி தருகிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவன் மானிடத்தில்தானே இறையைத் தேட முடியும் ? எனவே எனது 'எஞ்சாமி' பட்டியலில் இனி இவர்களும் உண்டு.
  20. எல்லா இணையங்களும் செய்திகள் போடுகின்றன.....ஆனால் யாழில்தான் எந்தவிதமான செய்தியையும் கருத்தாளர்கள் விவாதித்து விவாதித்து களையை அகற்றிவிடுவதால் அந்தச்செய்தி நம்பகத்தன்மை அடைந்து விடுகிறது........! 😁
  21. இந்திய ராணுவம் இலங்கையில் தரை இறங்கியது! சரத் பொன்சேகா ராணுவ புரட்சி?.. - Sri Lanka Crisis | India 7:19இல் ... "இந்தியா தீடீரென தனது கமாண்டோ போஸ் எனப்படும் ..... அதிரடிப்படை ....... 180 பேரை அங்கு கொண்டு சென்று தரையிறக்கியுள்ளது" @தமிழ் சிறி நீங்கள் போட்டதில பாதியையும் நான் போட்டதில பாதியையும் கலந்து கைகால் மூக்கு வைத்து இஞ்ச நடக்குது 😂😂. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள்.🤦‍♂️ அடியா சக்கை! 🤣🤣🤣🤦‍♂️
  22. கொஞ்ச நேரத்துக்கு முன் கொழும்பில் வசிக்கும் அம்மாவுக்கு தொலைபேசினேன். நான்: "அம்மா .. முழு நாட்டுக்கும் ஊரடங்கு போட்டுள்ளார்கள்... கவனம் வெளியே போக வேண்டாம்" அம்மா: "ஓமடா.. கொழும்பில் இந்தியன் ஆமி வந்து நிற்குதாம்..அதுதான் ஊரடங்கு போட்டுள்ளார்கள்" என்னத்தைச் சொல்ல...
  23. அப்ப… நீங்களும், கோசானும் ஒளிச்சு நிண்டு பார்த்திருக்கிறீர்கள்.😂
  24. மோகினிகளால்தான் முனிவர்களின் மெளனத்தைக் கலைக்க முடியும் என்று படித்துள்ளேன். இந்தத் தமிழ்சிறி கலைத்துவிட்டாரே!!🤔😆
  25. அண்ணையோ? ஐயா நீங்கள் சரோஜாதேவி, டி எம் எஸ் சோட இட்லி சாப்பிட்ட ஆள். நான் நயந்தாராவ டி வில பாக்கிற ஆள்🤣. கண்டது சந்தோசம் பாஞ்ச் ஐயா.
  26. வாங்கோ வாங்கோ நீண்ட விடுமுறை க்கு பின் வரவேற்கிறோம் .
  27. இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ! இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவலானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2022/1274466
  28. அண்ணை நாங்கள் தமிழர்கள். 2ம் திகதி காலை 6 மணிக்குத்தான் விசயத்தை விடுவம்.
  29. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் கவினா வோடு ஒரே பள்ளிக் கூ டத்தில் படிப்பவர்கள். கவினா ஒற்றைப் பெண் குழந்தையாதலால் இவர்களுடனே பள்ளிக்கு செல்வாள். மாணிக்கத்தின் மூத்தமகன் கிருபாகரன் இவளை விட மூன்று வயது கூடியவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். கவிதா கணக்கில் படு மக்கு . பாடம் சொல்லிக் கொடுக்க வேலப்பன் மூலம் கவினா வின் தாய் செய்தி சொல்லி அனுப்பி, அவனும் பாடம் சொல்லிக் கொடுக்க முன் வந்தான். அந்த வருடம் கவினா கணக்கு பாடத்தில் நல்ல புள்ளிகள் பெற்றாள் . ஆசிரியரின் பாராட்டும் பெற்றாள் .அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு முக்கியமான வருடம். தொடர்ந்தும் கணக்கில் முன்னேறினால் தான் உயர்தரம் விஞ்ஞானம் பிரிவில் படிக்க முடியும். தொடர்ந்தும் கிருபன் வந்து பாடம் எடுக்க ஒழுங்கு செய்தனர். அந்த சிறு பண உதவி அவனுக்கு பஸ் போக்குவரத்து போன்ற செலவுக்கு உதவியது . பத்தாம் வகுப்பு இறுதி பரீடசையும் வந்தது ...கவனமாக படிக்க வேண்டும் என இடைக்கிடை கிருபன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது தாயார் வந்து போவார்.சில சமயம் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறுவாள். பரீடசை முடித்து . நல்ல பெறுபேறு கிடைத்தது . கணித்துக்கு டி.. சித்தியும் மற்றும் 4சீ 3 எஸ் .எடுத்தாள் . அவர்கள் உயர்கல்விக்கு எங்கே சேர்ப்பது என் யோசித்து கொண்டு இருந்தார்கள். கவினா வுக்கு கிருபன் வீட்டுக்கு வராதது பெரும் ஏக்கமாக எதோ ஒன்றை இழந்தவள் போல இருந்தாதாள் . வழக்கம்போல அவ்வூர் கோவில் திருவிழா காலம் வரவே ..பெற்றோருடன் சென்றவள் ,கிருபனிடம் தான் அவனை விரும்புவதாக யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றைக் கொடுத் தாள். மறு நாள் பதிலாக அவன் உங்கள் வீட்டு நிலைமையும். எங்களுக்கும் சரிவராது . நாங்கள் நட் ப்பாகவே இருப்போம் என்றான். காலம் மெல்ல நகர்ந்து சென்றது கிருபன் கல்லூரி முடித்து ஒரு வேலை யில் சேர்ந்தான் . அதற்காக தினமும் பஸ் பயணம் செல்வதுண்டு . கவினா வும் உயர் கல்விக்காக பஸ் வண்டியில் செல்ல விரும்பி வீட்டில் கார் வசதி இருந்தாலும் சாக்கு போக்கு சொல்லி கிருபனை காண்பதற்காகவே பஸ் இல் பாடசாலைக்கு சென்று விடுவாள். ஆனாலும் கிருபன் இல்லாத வாழ்க்கையை கற்பனை பண்ண முடியவில்லை . அவன் நினைவாகவே இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு உன் பதில் என்ன? என்றாள்" .அவனும் இளைஞன் தானே ...இருவரும் காதலின் சங்கீதம் பாட ஆரம்பித்தனர். சில நாடகள் சென்றன கவினா வின் போக்கில் சில மாறுதலைக் கண்டு கண்டித்தார். தாயார் . அப்படி ஏதுமில்லை என்று சாதித்தாள் கணவனிடம் கூறிய போது பெண் பிள்ளைக்கு படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் . கலியாணத்தை கட்டி வைப்போம் என்கிறார். இதை மெதுவாக பேச்சு வாக்கில் சொன்னாள் தாயார் . அதற்கு அவள் "நான் சின்ன வயசிலே இருந்து அவனைத் தான் என் மனதில் நினைத்து இருக்கிறேன் எனவே வேறு எதற்கும் சம்மதிக்க மாடடேன்" என்றாள் . மகளின் பிடிவாதத்தை எண்ணியவாறு ...ஒரு நாள் கிருபனை தன்னை வந்து சந்திக்கும்படி வீட்டுக்கு அழைத்தார்கள் . அவனும் எதோ நடக்க போகிறது . என் எண்ணியவாறு அங்கு சென்றான். அவனைக் கண்டதும் கதிரையில் உடகாரும் என்றார். கேள்வி க்கணைகளாக தொடுத்தார் ... "உமக்கு என்ன வருமானம் இருக்கிறது? ".." என் பிள்ளையை எப்படி காப்பாற்று வீர்? .". என் பணத்தின் மீது ஆசை இருந்தால் ஏதாவது , பிச்சை போடுகிறேன் எடுத்து கொண்டு சென்று விடும் " .... உமக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை எப்படி கரை சேர்ப்பீர் ? . இதெல்லாம் சரிவராது ..உமது வேலையைப்பாரும் ..உமது பெற்றோருக்கு ஒரு நல்ல நிலையை அமைத்து கொடும். என்று அதட்டியவாறே மகள் கவிதாவை அழைத்தார். அவளும் பயத்துடன் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் அவன் மறுத்து விடடான். அவ்வளவு நேரமும் பொறுமையாக , எல்லாவற்றையும் பொறுமையாக கேடடான் . எந்த வித பிரச்சினை வந்தாலும் நான் உன்னைக் கைவிடேன் என்றவள் மெளனமானாள் . நீ யாருடா? என்பதுபோல் பார்த்தாள் . நா நுனி வரை உங்கள் மகள் தான் என்னை பின்னும் முன்னும் துரத்தி காதலித்தாள் . என்னோடு பார்க்கில் வந்து சந்திப்பாள் முதலில் உங்கள் மகளை எச்சரியுங்கள் என்று சொல்ல நினைத்து மெளனமானான் . சரி நீர் போகலாம்" என்றதும் திருப்பியும் பாராமல் வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவே கொழும்புக்கு ..நேர்முக தேர்வு இருப்பதாக சொல்லி , செல்ல ஆயத்த மானான். விடிந்ததும் தனக்கான ஆடைகளை யும் முக்கிய பொருட்களை யம் எடுத்துக் கொண்டு முதல் ரயில் வண்டியில் பயணமானான் . தன்னுடன் ப டித்த ஒரே ஒரு நண்பனை நம்பி, ...கொழும்பை அடைந்ததும் நண்பனைத் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு ...வந்து அவனது தந்தையின் அனுமதியுடன் ...அவர்களது தென்னந்தோப்பில் தொழிலாளி யாக சேர்ந்தான். இயந்திரத்தில் தேங்காய் மடடையை தும்பாக்கி கயிறு தயாரிப்பது ...கால் விரிப்பு ..மெத்தை போன்ற பொருட்களை தயாரிப்பது என்று, எல்லாத தொழில்களையும் கற்று தனது நேர்மையாலும் கடும் உழைப்பினாலும் நண்பனின் தந்தைக்கு அடுத்த முதலாளியாக இருந்தான். நண்பனுக்கு வெளி நாட்டு ஆசை வரவே ..தந்தை படிக்க லண்டனுக்கு அனுப்பி விடடார் . நண்பனின் குடும்பத்தில் அவனும் ஒருவனாக வாழ்ந்தான். நண்பனின் தங்கை திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார் . அக்காலத்தில் அவனுக்கு கீழே நாற்பது பேர் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகாரியானான். முதலாளிக்கு அடுத்த படியாக அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வேலையைப்பிரித்து கொடுப்பது போன்ற ஒரு சின்ன முதலாளியாக வலம் வந்தான். அவனது நேர்மை ஓயாத உழைப்பு நாணயம் வேலையாட்களிடம் பண்பாக வேலை வாங்குவது, என்பவை அவருக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணங்கள் . அவர்க ளின் பொருட்களை தொகையாக வாங்கி விற்கும் வாடிக்கையாளர்களை இவனுக்கும் நண்பராக் கினான். ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் நாங்களே ஒரு உற்பத்தி பொருட்களை விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என அறிவுரை கேடடான் . அதற்கும் அவர் எனக்கும் வயதாகிறது . ஒரே ஒரு மகனும் லண்ட னில் படிக்குபோது நட் ப்பான பிள்ளையைக் கட்டி விடடான் . ஒரு தொகைப்பணம் தருகிறேன் நீரே அதை முதலீட்டு உம்மிடம் காசு உள்ள போது திருப்பி தாரும் என்று சொன்னார். கிருபனின் நாணயம், விடாமுயற்சி தொழில் பற்று, நுட்பம் .வேலையாட்கள் இடம் பழகும் விதம் என்பன அவனை மேலுயர்த்தியது. இரண்டு பெரிய ஸ்டோர் களுக்கு அதிபதியானான். வெளிநாடடவர் சுற்றுலாவில் வரும் போது இவனின் பொருட்களை விரும்பி வாங்கவும் , தென்னையின் ஒவ்வொரு பகுதியும் செதுக்க பட்டு வடிவமைத்து விற்பனை .பொருளாயின. தனது தாய் தந்தையின் வீடடை ஒரு அழகான வீடாக்கினான். ..தங்கைகளுக்கு திருமணம் என எல்லாக் கடமையும் முடித்து ..சற்று தன்னை எண்ணி பார்த்தான் . வயதும் 35 ஐ தாண்டி ண்டி விட்ட்து. கவினா குடும்பத்தின் பணத்திமிர்த்தனம் கண் முன்னே வந்தது . தான் பாவிக்கும் வாகனத்தை விட அழகான இன்னொரு காரை வாங்கி கொண்டு , தன் கிராமத்து நோக்கி பயணமானான் . மீண்டும் கொழும்புக்கு தன் தாய் தந்தையை தன்னோடு தலைநகருக்கு கூட்டி வர நினைத்து சென்றான். நீண்ட பயணத்தில் கவினா அவர்களது வீட்டில் தனக்கு நடத்த அவமரியாதையை எண்ணினான். உனது நிலையை உயர்த்தியப்பின், உன் கடமைகள் முடிந்த பின் , பெண் தருகிறோம் என்றாவது ஒரு நம்பிக்கையை தரவில்லை . எவ்வ ளவு இழிவாக பேசி னர்கள். காலம் உருண்டோடியது . கவினா வும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாக கேள்விபட்டுருந்தான். கணவன் ஒரு புடவைக்கடை,உரிமையாளராக இருந்தான். மார்கழி மாதத்து இளம் மழைத்துளிகள் ஆரம்பித்த ஒரு நாளில் வந்திறங்கினான் ஊருக்கு . தாய் தந்தையரை அழைத்து கொண்டு ஒரு வாரத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டுக்கு கூ ட்டிச் சென்று குடிபுக நினைத்து அழைத்து வர எல்லா ஏ ற்பாடுகளுடனும் வந்து இருந்தான். பயண களைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவனை ,தயார் தேநீருடன் உறக்கம் கலைத்தாள். அவர் தமது ஊர் கோவிலில் அவனுக்காக நேர்த்தி வை த்தாகவும் அதை அவனைக் கொண்டு செலுத்துவதாக வேண்டி இருந்த்தாவும் கூறி கோவிலுக்கு சென்றார்கள் . அருகே கிராமத்து சிறுவர்கள் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்க்க வென்று கூடடமாய் வந்தார்கள். மதிய வேளை க்கு அண்மித்த நேரம் சூரியன் தன் கொடும் கதிர்களால் அனல் வீசிக் கொண்ட பொழுதில் அவ்வழியே தாயுடன் கவினா இரண்டவது குழந்தைக்கு தடுப்பூசி போடச் சென்று வந்து கொண்டிருந்தாள். தூரத்தே , இவனைக் கண்டதும் மலைத்து நின்றாள். அவன் இவளைக் கண்டதும் வந்து நலம் விசாரித்தான். தாயார் முன்னையை பொலிவிழந்து வயதானவராய் தோன்றினார். கொடிய வெய்யிலாக இருக்கிறது. வீடு வரை கொண்டுவந்துவிட கேட்டும் மறுத்து விடடாள். அவள் கண்கள் நீர்கோர்த்து கொண்டது. இன்னும் கொஞ்சக் காலம் இவனுக்காக காத்திருக்கலாமோ ..? என எண்ணியவாறு நடக்க தொடங்கனாள் . கடந்த காலம் அவளுக்கு திரைப் படம் பார்ப்பதுபோல் மனதில் தோன்றியது . கவினாவின் பெற்றோர்களின் வசதி வாய்ப்பு காரணமாக , வந்த தற்பெருமை , அவன் கேடட ஏளனபேச்சு அதனால் வந்த மன வைராக்கியம் தன்னை இவ்வ்ளவு தூரம் உயர வைத்திருக்கிறதே என் எண்ணிக் கொண்டே வீடு நோக்கி விரைந்தனர். அவ்னது பெற்றோர்களும் மகனின் வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் தமது மகனின் கனவு இல்லத்தை நோக்கி பயணமானார்கள். மனித வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும். சந்தர்ப்பங்கள் தான் ஒருவனை திசை திரும்புகின்றன. அந்த திசைகள் பல சமயங்களில் உயர்ச்சியையும் ஒரு சில சமயங்களில் வீழ்ச்சியையும் தருவதுண்டு. மனதில் உளி என விழும் வார்த்தைகள் தான் இலட்சியம் எனும் சிலையை செதுக்கும் கற்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பிருந்தால் என்றும் எதையும் சாதிக்கலாம்
  30. விண்ணும் பேஜும் இரண்டும் போட்டு ரிவெர்ஸ் பண்ணியவைகள் .
  31. உங்களை காண்பதும் சந்தோசம் சசி. தாமும் இதர பக்தர்களும் சோதனைக்கு ஆளானதை கண்டுதான் மகனே உடான்ஸ் சாமியார் இப்பூவுலகில் மீள அவதரிக்கும் முடிவை எடுக்கும் படி ஆகிற்று. இப்போதெல்லாம் home student, international student fee எண்டு ஒரு சின்ன நாட்டை வாங்கும் விலையில் பட்டங்கள் விலை போகையில் யாழில் அண்ணைமார் மனமுவந்து இலவசமாக தரும் பட்டங்களை மறுத்தல் ஆகாது மகனே🤣. இன்னொரு படத்தில் கருணால் சொல்லுவார் “****துறையில் உள்பாவாடை காணாமல் போனாலும் என்னை பிடிச்சு உள்ள போடுறார் இந்த ஏட்டையா” என்று. சேம் ஸ்டோரி🤣. வேறு ஒண்டும் இல்லை, முன்னர் எண்டா ஜஸ்டீனோட, துல்பென்னோட, கோசானோட தனகலாம். அவையள் இல்லை எண்டால் வாய் நம நமக்கும் தானே, அப்ப அடுத்த வட்டத்தில் இருக்கும் அப்பாவியள பிடிச்சு கடிச்சு துப்புறது🤣. நீங்களும் போனால் - சமையல் குறிப்பு எழுதுறவை கதி அதோ கதிதான்🤣.
  32. ஒரே போஸ்டில் தமிழ் சிறி ஒபாமா ஆகிவிட்டார்
  33. தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!
  34. பேசாமல் ஏப்ரல் முதலாம் திகதியை இனி யாழ் கள கருத்தாளர்கள் தினமாக கொண்டாடலாம் 🤣.
  35. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  36. இப்படி, ஒரு ரெக்னிக்... இருக்கா? முடியல சாமீ... 🤣
  37. பழசு: பல் போனா சொல் போச்சு புதுசு: cell போனா சொல் போச்சு...!! பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்...!! பழசு: இளங்கன்று பயமறியாது புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது...!! பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும் புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்...!! பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது...!! பழசு: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு கட் பண்ணினா போச்சு...!! பழசு: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு புதுசு: செல்போன் ஒண்ணு சிம்மு ரெண்டு...!! பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே புதுசு: 4G இல்லாத போனை வாங்காதே...!! பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் புதுசு: போன எடுத்தவன் பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்...!! பழசு: பேராசை பெருநஷ்டம் புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்...!!
  38. வணக்கம் விசுகர்! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். முள்ளிவாய்க்கால் அவலத்தை மரியோபுல் நிகழ்வுடன் ஒப்பிடுவதன் மூலம் எனக்கிருக்கும் சந்தேகங்களை உங்களை கேட்கின்றேன். மரியோபுல்லுக்கு கிடைக்கும் ஆதரவை எப்படி எமக்கு சாதகமாக பயன்படுத்த முடுடியும்? அந்த மரியோபுல் சம்பவத்திற்கு யார் தீர்ப்பு கொடுப்பார்கள்? உக்ரேன் சம்பவத்தை எப்படி எமது ஈழ போராட்டத்துடன் ஒப்பிட முடியும்? ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவை மீறி எதுவுமே நடக்காது என்பது தற்போது அல்ல அப்போதே தெட்டத்தெளிவாக தெரிந்து விட்டது. சிங்களம் விரும்பினால் கூட இந்தியா ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும். அண்மைக்கால பார்வைகளின் படி சீனா கூட இந்தியாவை மீறி தமிழர் பிரதேசங்களில் அதிகமாக எதுவுமே செய்யப்போவதில்லை.சில வேளை இந்தியா சினம் கொண்டால் ஒட்டு மொத்த சிறிலங்காவையும் சீனா விட்டு போக வாய்ப்புள்ளது.அது அப்போதைய சிறிலாங்கா அரசாட்சியை பொறுத்தது.ஒப்பந்தங்கள் பல சீனாவுக்கு இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை மொழி கலாச்சாரம் சமயம் இனம் என்று பார்க்கையில் இந்தியாவின் இன்னொரு மாநிலம் இலங்கை. மேற்குலகும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சனையில் எதுவும் செய்து விடப்போவதில்லை. அப்படி செய்தாலும் இந்தியா பச்சைக்கொடி காட்டிய பின்னர்தான் ஏதும்.....அதுவும் இந்திய நலன் சார்ந்தே இருக்கும். நமது பாசையில் சொல்லப்போனால் இந்தியா சகல நாடுகளுக்கும் "இலங்கை என்ரை ஏரியா" என விளித்து சொல்லியிருக்கும் என்பது என் ஊகம். இதை விட ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம் என்று பார்த்தால் அதுவும் தலை சுத்துது. இந்தியா கூடுதலாக ரஷ்யா சார்பான நாடு. அதிலும் மோடி ரம்பின் கூட்டாளி.ரம்ப் யாரின் கூட்டாளி? யுத்தமும் அழிவுகளும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஒரு இடத்தில் மக்கள் அழியும் போது கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்னொரு இடத்தில் அதே போல் வரும் அழிவுகளை கண்டு கொதித்தெழும் மேற்குலகை கண்டிக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தமும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு கோணங்கள். அமைதியாக வாசித்தமைக்கு நன்றி விசுகர். உங்கள் பதில் கருத்து எனக்கு மிக முக்கியம்.
  39. தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
  40. அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க..
  41. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி.
  42. யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  43. ரஞ்ஜித், நீங்கள்... மரியபோலை, முள்ளிவாய்க்காலுடன்.. முடிச்சுப் போட்டதைத்தான் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாது உள்ளது. தலைப்பை மாற்றினால், அதுக்குப் பிறகு, குறுக்கீடு இருக்காது என நினைக்கின்றேன். உங்களின், புரிந்துணர்விற்கு... நன்றி!!!
  44. கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது.. ஏடி எம் வங்கிகள் முடங்கி உள்ளன.. கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் வேலை செய்யாததால் சாதாரண அன்றாடம் காச்சி ரஷ்ய மக்கள்தான் தம் வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்த முடியாமல் துன்பப்படுபவர்கள்.. ரஷ்ய பக்கத்து செய்திகளை பேஸ்புக்கும், ட்விட்டரும் சென்சார் செய்து வெளியிடுகின்றன.. யூடியுப் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கி உள்ளது.. ரஷ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்து விட்டது.. ஆக முதலாளித்துவம், உலகமயமாக்கல் என இந்த கம்பனிகள் பேசினாலும் இவை உலகமயான கம்பனிகளாக செயல்படவில்லை. ..அமெரிக்க கம்பனிகளாக தான் செயல்பட்டுள்ளன. வாடிக்கையாளர் சேவையே உயிர்மூச்சு என பேசி ஆசைகாட்டி வங்கி அட்டைகளை விற்ற மேற்குலக கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகித்து நம்பி வாங்கிய போருடன் சம்பந்தப்படாத சாதாரண அப்பாவி வாடிக்கையாளர்களை வங்கியில் பணம் எடுக்கவிடாமல் முடக்கியுள்ளது மேற்குலகு… ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இருக்கும் பிரச்சனையில் நீங்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்... நீங்கள் ரஷ்ய அரசியல்வாதிகளை அவர்களின் சொத்துக்களை தடை செய்யுங்கள் ஆனால் பாவம் அன்றாடங்காச்சி ரஷ்ய மக்கள் என்ன செய்தார்கள்..? நாளை உங்கள் நாடு (அது எதுவாக இருப்பினும்) அங்கு வசிக்கும் சாதாரண மக்களை கொல்லப்போகும் அதன் பொருளாதாரத்தை இந்த முதலாளித்துவ நாடுகளால் எந்த காரணத்தை காட்டியும் முடக்க முடியும் அதற்கு பெயர் ஜனநாயகம்.. முக்கியமான பிரச்சனைகளில் இப்படி இவை செயல்படுவது நியாயம் என ரஞ்சித் வகையறாக்களை போல சப்பை கட்டு கட்டலாம். ஆனால் நாளை இலங்கையில் ஒரு பிரச்சனை என சொல்லி உங்கள் உறவுகள் கிரடிட் கார்டை முடக்கி உங்கள் உறவுகளை பணம் எடுக்கவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு 90% ஆக சரிந்தால் எப்படி இருக்கும்..? சீனா பேஸ்புக்கையும், ட்விட்டரையும், யூடியூபையும்,...ஏன் கூகிளை கூட தன் நாட்டில் தடுத்தது எத்தனை தொலைநோக்கான விசயம் என இப்போது தெரிகிறது.. கருத்து சுதந்திரம் என அலறும் இந்த மேற்குலகும் அதன் நிறுவனங்களும் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கியது எவ்வகை சுதந்திரம் என தெரியவில்லை.. தப்பு நடக்கும் இடமெல்லாம் ஆஜராகி தட்டிகேட்கும் உத்தமர்கள் என்றால் நாளை எதாவது பிரச்சனை என்றால் அமெரிக்காவில் அல்லது ஜரோப்பாவில் ஆஸ்ற்றேலியாவில் கனடாவில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டை முடக்கும் தைரியம் இவர்களுக்கு உள்ளதா? அவர்களின் செய்திச்சேவைகளை முடக்குவார்களா..? பொருளாதாரத்தை முடக்குவார்களா? நிச்சயம் செய்யமாட்டார்கள். இதுதான் இவர்கள் பேசும் கருத்து சுதந்திரம்.. மேற்குலகுக்கு முட்டு குடுப்பவர்களின் எஜமானர்கள் பேசும் ஜனநாயகம்.. இங்கு யாழில் இவர்களை ஆதரிக்கும் ரஞ்சித் சசிவர்ணம் நீர்வேலியான் போன்றவர்கள் மாற்றுகருத்து எழுதும் எம்போன்றவர்களை இங்கு எதுவும் எழுதாதே வெளியபோ என்று மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்.. தமக்கு எதிரான கருத்துக்களை ஜீரணிக்க திராணி அற்றவர்கள்.. இதுதான் மேற்குலகை ஆதரிக்கும் வெள்ளைத்தோல் மோக அடிமைகள் பேசும் ஜனநாயகம்.. எஜமானார்கள் எவ்வழியோ அவர்கள் அடிமைகளும் அவ்வழியே..
  45. இது யுத்தமல்ல சிறித்தம்பி. ரஷ்யா தனது பிராந்திய நலனுக்காக / தன்னை பாதுகாக்க ஒரு இராணுவ நடவடிக்கையை செய்கின்றது. உக்ரேன் தனது ஐரோப்பிய யூனியன் பிரவேசத்தையும் நேட்டோ அங்கத்துவ விருப்பத்தையும் நீண்ட காலமாகவே தெரிவித்து வருகின்றது. ஆனாலும் இதன் பக்க விளைவுகளை அங்கெலா மேர்க்கல் நன்கு அறிந்து வைத்திருந்தார். இதை பிரான்ஸ்சும் நன்கு அறிந்து வைத்திருந்தது.இதனாலேயே உக்ரேனை சேர்ப்பதை தட்டிக்கழித்து வந்துள்ளனர்.. இதை பொறுக்காத அமெரிக்கா உக்ரேனை உசுப்பேற்றி இப்போது இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு விழுங்கவும் துப்பவும் முடியாத இக்கட்டான நிலை. காரணம் உலக பொலிஸ் அண்ணன் அமெரிக்காவின் பேச்சை தட்ட முடியாதல்லவா? அமெரிக்காவின் விருப்பம் ஐரோப்பா பலம் பெறக்கூடாது. ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுடன் பொருளாதார நடவடிக்கைகளில் கூட்டு வைத்தால் தன்னலத்துக்கு கேடு என்பது அமெரிக்காவுக்கு தெரியும். இதனாலேயே குட்டையை குழப்பி சுகம் காண்கின்றது.இது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும். பிராந்திய நலன் பற்றி அமெரிக்கா சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி சீனா சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி ஜப்பான் சிந்திக்கலாம். பிராந்திய நலன் பற்றி இந்தியா சிந்திக்கலாம். ஆனால் தன் பிராந்திய நலன் பற்றி ரஷ்யா சிந்தித்தால் எங்களுக்கு கண் எல்லாம் கரைய வெளிக்கிடும்.
  46. தலைப்பே உள்ளடக்கம் எப்படி அமையப் போகிறது என்று செப்பிவிட்டது. எம்மீதான இன அழிப்புப் போரில் நேரடிப் பங்களிப்பு செய்த உக்ரைன்.. எம் மக்கள் மீது எரிகுண்டு எனும்.. பொஸ்பரஸ் குண்டு வீசியவர்கள்..இன்று தங்கள் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதாகச் சொல்லி மேற்கு நாடுகளிடம் பல்வேறு இராணுவ உதவிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு ஊடகங்களும் உக்ரைனின் டொன்பாஸ் (DONBAS) ரஷ்சிய மொழி பேசும் மக்களின் இன அழிப்பை மறைத்தும் குறைத்தும் பேசி வருகின்றன. நாமும் அதற்கு இசைவது போல் பக்கச் சார்புக் கட்டுரைகள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பொருண்மிய தடையும்.. தொடர் குண்டு வீச்சும் நடத்தி மக்களை வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்த போது இதே மேற்குலக ஊடகங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்கள் விடுவிப்பு என்றும் புலிகள் மனிதக் கேடயமாக மக்களை பாவிப்பதாகவும் உச்சரித்தன. இன்று ரஷ்சியா அப்படிச் செய்வதாக உக்ரைன் சொல்லும் போது... ரஷ்சியா குண்டு வீசி மக்களை தன் பக்கம் இழுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இது மேற்குலகின் இரட்டை வேடத்தனத்திற்கு நல்ல உதாரணமும் கூட. அப்படியான மேற்குலக செய்தி ஆதிக்கங்களின் அடிப்படையில்.. எமது மக்களின் வலியை இழப்பை அழிவை தவறான ஒப்பிடலுக்குள் கொண்டு செல்வது எம் மக்களின் வலியை இழப்பை மலினப்படுத்தும்.. அவர்களின் நீதிக்கான குரலை ஓரங்கட்டுவதுமாகிவிடும். உக்ரைன் - ரஷ்சிய போரின் உள்..வெளி நோக்கம் வேறானது. எமக்கு தெரியாத பலதும் அதற்குள் உண்டு. ஆனால்.. எம் மக்கள் மீது எம் மண்மீதும் திணிக்கப்பட்ட போர் மற்றும் இனவழிப்பை தெளிவாகத் தெரிந்திருந்தும்.. அதனை புலிகளோடு சேர்த்து கேள்விக்குட்படுத்தியவர்கள்.. உக்ரைனுக்கு வெள்ளையடிப்பது ஏனோ..??! எம் மக்களைப் பொறுத்த வரை.. உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் தமிழின அழிப்பிலான பங்களிப்பு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் பங்களிப்பில் இருந்தும் சற்றும் குறைந்ததல்ல.
  47. மிகவும் தவறான, ஆபத்தான கருத்து. யாழ் இணையம் ஒரு கருத்துக்களம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எவரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். அவ்வாறு தம் கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று உத்தரவு விட உங்களால் முடியாது. யாழின் பிறந்த தினத்துக்காக சுய ஆக்கங்களை யாழ் வரவேற்பதே கருத்துக்களத்தை மேலும் விரிவுபடுத்தவே. கருத்துக்களத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்காமல் இந்த திரியை கொண்டு சொல்லுங்கள்.
  48. முள்ளிவாய்க்கால் சிங்கள அரசின் நேரடிப் பங்களிப்போடு.. அமெரிக்கா.. ரஷ்சியா.. ஹிந்தியா.. சீனா.. ஐநா.. உட்பட எல்லாரும் சேர்ந்து நடத்தியது. இனப்படுகொலை தொடர்பான.. எந்த ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடத்தினார்கள். அதுவும் உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக போராடாத மக்களை கொன்று குவித்தார்கள். சொந்த மண்ணில் சொந்த வாழும் உரிமையைக் கோரியது ஒன்றே அந்த மக்கள் செய்த குற்றம். அது பயங்கரவாதமாக்கப்பட்டது. ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம். ஆக.. தமக்கான எதிரி சீனா.. என்பதோடு இருக்க விரும்பும் மேற்குலகம்.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த நடத்தும் ஒரு யுத்தத்தில் ரஷ்சியா தன் இருப்பை தக்க வைக்கும் நடவடிக்கையும்.. தமது உயிர்வாழ்வுக்காக.. உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை தமிழர் என்பதற்காகவே கொன்று குவித்ததும் ஒன்றல்ல. முள்ளிவாய்க்கால்.. ஒரு கூட்டு இனப்படுகொலையின்.. ஆதாரமற்று நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையின் அடையாளம். ரஷ்சியாவால் மரியுப் போல் சிதைக்கப்பட்டது போல்.. உக்ரைனால்.. ரஷ்சியர்கள் வாழ்ந்த Donbas பிராந்தியம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு பெரிந்துரோக இனப்படுகொலைக்கு ஆளான நாமே.. மேற்குலகின் பிரச்சாரங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சிந்தனைக்குள் வைச்சுக் கொண்டு மரியுப் போலுக்காக குரல் எழும்பி.. Donbas பிராந்திய அழிவுகளை உக்ரைனின் அரச பயங்கரவாதத்தை மறைப்பது மிகக் கேவலமான செய்லாகும். உண்மையில் ரஷ்சியா பலவீனப்படுவது.. உலக யுத்த சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு.. அமெரிக்க சார்பு சக்திகளின் ஏகாதபத்தியத்துக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் உலகெங்கும் ஆதாரமற்ற படுகொலைகள் மூலம் இலக்காகும் அபாயமே அதிகம்.
  49. அரபிக்குத்து.....💃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.