இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/07/24 in all areas
-
பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?7 points
-
என்ன சொல்கிறீர்கள்? நெடுக்கரின் குடியேறி எதிர்ப்பு மனநிலை அவர் குடியேறியாக இருந்த போதே அவரது எழுத்தில் வெளிவந்திருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர் மீதான காண்டு போலி விஞ்ஞானக் கட்டுரையை இணைத்து வாதிடும் அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இறந்தது பெண், கொன்றது ஆண் என்பதால் கொன்றவரை விட்டு விட்டு, எல்லாரையும் கை காட்டியிருக்கிறார்! இது பழைய நெடுக்கர் தான்! புதிதாக ஒன்றுமில்லை😎. நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பயண ஏற்பாடான செங்கன் (Schengen) நடைமுறையில் இருக்கிறது. எனவே, செங்கனில் இல்லாத பிரிட்டனின் பிரஜைகள் நடந்து தான் போக வேணும்! "போலந்துக் காரன் சட்டரீதியாக பிரிட்டனுக்குள் வரவும் கூடாது - எனவே ஐ.ஓவில் இருந்து நாம் அவுட், ஆனால் பிரிட்டன் பிரஜைகளை ஐரோப்பிய நாடுகளில் திறந்த வீட்டினுள் செல்லப் பிராணி செல்வது போல அனுமதிக்கவும் வேண்டும்!" இரண்டையும் எப்படி எதிர்பார்க்க முடியும்😎?4 points
-
தமிழர்களுக்குள் நடந்த கொலையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பெண். கொலையாளி தமிழர். கொலையாளி மீது கோபம் வரவில்லை. ஆனால், நோர்வே இமிக்கிறேசனை திட்டுகின்றீர்கள். பாகிஸ்தானியரை, சோமாலியரை கிழக்கு. ஐரோப்பியரை, உக்கிரேனரை கேய், லெஸ்பியனை எல்லாம் இதற்குள் இழுத்து அவர்கள் தான் இதற்கு காரணம் போல்…….. என்ன டிசைனப்பா நீங்கள்.3 points
-
ஏராளன் குறிப்பிட்டதைப் போன்று இணைப்பினைக் கொப்பி செய்து இங்கு ஒட்டினால் போதுமானது. ஏன் உங்களுக்குப் பிழைக்கின்றது எனத் தெரியவில்லை. படங்களின் முகவரியினையே இணைக்க வேண்டும். சரியாக மின்னஞ்சல் முகவரி கடவுச் சொல் கொண்டு கணினி அல்லது கைத்தொலைபேசியில் இணைந்து கொள்வதில் பிரச்சனையிருக்க சந்தர்பம் இல்லை. நீங்கள் உங்கள் விபரங்களைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பதிவினை இணைத்து 12 மணித்தியாலங்கள் வரை மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். அதன் பின் மாற்ற வேண்டிய தேவையிருப்பின் மட்டுறுத்துனர் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.2 points
-
சகோ யுரியூப் இணைப்பை கொப்பி பண்ணி பேஸ்ற் செய்தால் வேலை முடிஞ்சிடும்.2 points
-
2 points
-
2 points
-
1840 இல் நியூசிலாந்து பழங்குடி இனத்தலைவர்களுக்கும் பிரித்தானியாவிற்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டினை பிரித்தானியா கடைப்பிடிக்கவில்லை என தற்போதுவரை பிரச்சினை அங்குள்ளது என கருதுகிறேன், அதிகாரத்தினை கைபற்றுவதற்கான ஒப்பந்தத்தினை உருவாக்கி பின்னர் அதனை குப்பையில் போட்டுவிட்டார்கள் எனும் கருத்து நிலவுகிறது. அழகான நாடு, பழகுவதற்கு இனிமையான மனிதர்கள் கொண்ட அமைதியான நாடு, தனது இராணுவத்தினை மிக சிறியளவில் பேணும் நாடு, தனது பணத்தினை தேவையற்ற யுத்த செலவிற்காக செலவிட விரும்பாத நாடு. கடந்தகாலத்தில் இஸ்லாமியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு தாக்குதலுக்கெதிராக (அவுஸ்ரேலியர் மேற்கொண்ட தாக்குதல்) உறுதியான முடிவினை எடுத்து மேற்குநாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த நாடு, துணிச்சலாக பொருளாதார முடிவு எடுக்கும் ஒரு சிறியநாடு.2 points
-
கிழக்கில் அண்மைக்காலமாக ஏராளமான மாடுகள் கொல்லப்படுகின்றன. அதையும் இந்த ஆளுநர் கவனிப்பாராக...2 points
-
இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவரின் இசை எம்மை மெய்மறக்க வைக்கும். அவரின் இசைக்கு நாம் எம்மை அறியமல் அடிமையாவோம். திறமைசலியான அவருக்கு கர்வம் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், சபை நாகரீகம் தெரியாத எதிரில் இருப்பவருக்கு அடிப்படை மரியாதையை கொடுக்க முடியாத அளவுக்கான அவரது கீழ்தரமான வார்ததை பிரயோகங்கள் அவரின் மனிதன் என்ற வகையிலான மதிப்பை குறைக்கவே செய்யும். மிக சிறந்த இசையமைப்பாளர். மிக கீழ்தரமான மனிதர்.2 points
-
எனக்கு தெரிந்த இளையராஜா தீவிர இரசிகர்கள் தமிழ் கொஞ்சம் தான் கதைக்க வருபவர்கள் கூட இருக்கின்றனர்.இளையராஜாவுக்கு கர்வம் என்று சிலர் சொல்கிறார்களே என்றேன். யார் உனக்கு சொன்னார்கள் சரி அந்த இசைமேதைக்கு கர்வம் அதனாலே உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லு என்றார்கள்.2 points
-
மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா? பிரதீப்ராஜ் அன்புள்ள பிரதீப், அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள். இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும், நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும். அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும். (சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்) இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை. அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால். இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார். ‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’ நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது. இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு, சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள். ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும். சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்? அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள். இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்) அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம். இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன். அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான். எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு. அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு. ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை. அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை. சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என. அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன். இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை. நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு. இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள். எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை. இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது. இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு. அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும் நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும். நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர். இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே. பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது. நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா? நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால் என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா? அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும். அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு கையிலுள்ளது. ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார். உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று. மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே. ஜெ https://www.jeyamohan.in/194617/1 point
-
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் adminJanuary 7, 2024 தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். அவ்வாறிருக்க, வழக்கு விசாரணையின்போது கொழும்பு மேல்நீதிமன்றம் இவருக்கு ‘15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, இரன்டாண்டுகால சிறைதண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும்‘ என்கின்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்துள்ளது. எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து, அரசியல் கைதியான சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், “என்னைப் பொறுத்தமட்டில் 14வருடங்களாக பட்ட துன்ப துயரங்களுக்குப் பின்னரும் ஒரு மரணதண்டனைக் கைதியாக மீண்டும் சிறைக்குச் செல்வதை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல். எனவே, ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளையும், பெற்றோரையும் பிரிந்து14 ஆண்டுகாலம் சிறையில் வாடி விடுதலையான பின்பும் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு ஆளாகியுள்ள எனக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி எனது இயல்பு வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த கருணை மனு தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்போது, ஜனாதிபதிக்கு அருகிலிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், “அந்தப் பெண்மணியை எப்போதோ நான் மன்னித்துவிட்டேன். ஆகையால், இந்த விடயம் சம்மந்தமாக நான், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் ” என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார். https://globaltamilnews.net/2024/199463/1 point
-
இது குடியேறி எதிர்ப்பு மனநிலை அல்ல.. குடியேறி.. குடியேறிய நாட்டின் உயர் பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல்... தங்கள்.. தாய் நாட்டில் செய்த அதே கீழ்த்தரமான செயல்களை குடியேறிய நாட்டிலும் அரங்கேற்றும் செயல்களுக்கு எதிரான மனநிலை. செங்கனில் இல்லாத போதும்.. நோர்வே உட்பட ஐரோப்பிய பிரஜைகளை பிரிட்டன் தானியங்கி மூலம் உள்நுழைய அனுமதிக்கும் போது தாராளவாதம் பேசும் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்.. பிரிட்டன் மீது காட்டும் இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்.. செங்கனா..??????! ஓரினச் சேர்க்கை என்பது...இப்போ இயற்கை சார் விடயமாக அன்றி.. புகுத்தப்படும் விடயமா மாறி கனகாலமாயிட்டுது. நீங்கள் இன்னும் உங்கள் பழைய நிலைப்பாட்டில் நின்று தொங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும். அந்தளவு தான் தாங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்து செல்வதைத் தவிர.1 point
-
கருத்தை முதலில் ஒழுங்காக இணைக்கப்பட்ட செய்தியோடு சேர்த்து வாசிச்சு விளங்கப்பழகனும். அது யாழில் பலருக்கு இல்லை என்பது இங்கு தெளிவாகிறது. நோர்வே.. அமைதிப்பூங்காவாக இருந்த காலம் எப்பவோ மலையேறிட்டுது. அதேபோல் சுவீடனும். இதற்கு முதன்மைக் காரணம் எல்லைகள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு திறந்து விடப்பட்டமை. நோர்வே மக்களே சொல்லினம்.. முன்னர் ஒரு பொருளை வீதியில் போட்டால்.. அது அப்படியே இருக்கும். ஆனால்.. இப்போது கிழக்கு ஐரோப்பியர்கள் வந்த பின்.. போட்ட பொருள் தனக்குத்தான் என்று களவாடிச் சென்று விடுகிறார்கள் என்று. இது நோர்வேயில் மக்களிடம் கதைச்சறிந்த விடயம். அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும். தமிழ் கடையிலும்.. பாக்கி கடையிலும்.. சமான் வாங்கிறதும்.. சமைக்கிறதும்.. சாப்பிடுறதும்.. பேர்த்டே பார்ட்டி செய்யுறதும்.. ஏதோ வேலைக்கு போறதும்.. வாறதும் என்ற வாழ்க்கையில்.. இவை தெரிய வர வாய்ப்புக் குறைவு. மேலும்.. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்.. கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்.. நோர்வேயில் உள்ள தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்.. அதிகரித்துவரும்.. ஒருபாலினச் சேர்க்கைக்குள் இழுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருப்பதை.. பொதுவாக அவதானிக்கலாம். இதனை நோர்வே மட்டுமல்ல.. பிற மேற்குலக நாடுகளிலும் காணலாம். ஆனால்.. நோர்வேயில்.. இந்தக் கவலை முன்னரை விட இப்போ அதிகரித்திருப்பது தெரிகிறது. அந்த வகையில்.. தான்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. என்று சொல்லப்பட்டிருக்கே தவிர.. வேறு எதையும் புனையும் நோக்கம் இங்கில்லை. முதலில் கருத்தை செய்தியோடு சரிவர பொருந்தி படித்து விளங்கத் தெரிய வேண்டும். அதைவிடுத்து வெறுமனவே குற்றம் சாட்டிச் செல்வது பொருத்தமானதல்ல. மேலும் சிலர் அவர்கள் பார்வையை மாற்றத் தயாரில்லை. தாங்கள் நெடுக்ஸை நோக்கி உருவகித்து வைத்திருக்கும்.. விம்பத்திற்கு லைக் வெறுப்பு கருத்து எழுதிச் செல்கிறார்கள். அவர்களின் கருத்தை.. செயல்களைக் கண்டுகொள்வதே இல்லை.1 point
-
மக்கள், பாமரர் எனும் சொற்கள். December 28, 2023 தமிழ்ச்சூழலில் சில புனிதச் சொற்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மக்கள். அச்சொல்லுக்கு நிகராக காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இன்னொரு சொல் பாமரர். இங்கே கலை, கல்வி, அறிவு, தரம், மேன்மை என்று எதைச் சொன்னாலும் அதற்கு தானியங்கிப் பதிலாக வந்து நிற்பது ‘மக்கள்’ ‘பாமரர்’ என்னும் இரண்டு சொற்கள்தான். அவை முன்வைக்கப்பட்டுவிட்டால் அதன்பின் எதிர்ப்பேச்சே பேசக்கூடாது. பேசுபவர் மக்கள்விரோதி, சுரண்டல்காரர், ஆதிக்கவாதி என நூறு முத்திரைகளுக்கு ஆளாகிவிடுவார். எந்த துடிப்பான புதிய சிந்தனையாளனையும் அச்சொற்கள் பொதுவெளியில் பம்ம வைப்பதைப் பார்க்கிறோம். அச்சொற்களை பயன்படுத்தும் கும்பலுக்கு அவை வெறும் சொற்கள்தான் என்றும், அவர்களின் வாழ்க்கைக்கும் நம்பிக்கைகளுக்கும் அச்சொற்கள் அளிக்கும் பொருளுடன் தொடர்பே இல்லை என்றும் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அவை மந்திரவாதியின் கோல் போன்றவை. அச்சொற்கள் உருவான வரலாற்றை, அவை அடைந்த பொருள்மாற்றங்களை சற்றேனும் உணர்ந்துகொள்ளாமல் அவற்றை பயன்படுத்துபவர்களை எதிர்கொள்ள முடியாது. மக்கள் என்னும் சொல்லை முன்வைத்தவர்கள் தொடக்ககால ஜனநாயகவாதிகள். அதை புனிதப்படுத்தியவர்கள் இடதுசாரிகள். மக்கள் என்ற சொல்லை பாமரர் என்ற சொல்லுக்குச் சமானமானதாக இழுத்துச்சென்றவர்கள் தேர்தல்கள அரசியல்வாதிகள். * ஜனநாயகவாதிகள் மக்கள் என்னும் சொல்லை உருவாக்கி, முதன்மைப்படுத்திய செயல் என்பது உலகச் சிந்தனைச் சூழலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அதுவே நவீன ஜனநாயகத்தின் தொடக்கம். இன்றைய விழுமியங்கள் அனைத்தும் அங்கே தொடங்கியவைதான். இதை நாம் பதினேழு- பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். அன்று உலகமெங்கும் மன்னராட்சி நிலவியது. மன்னரின் அதிகாரமென்பது இனம், ஆசாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மரபு வழியாக நிறுவப்பட்டதாக இருந்தது. அரசருக்கு இணையாகவோ, அதைவிட மேலாகவோ மதத்தின் அதிகாரம் இருந்தது. அந்த அதிகாரம் நம்பிக்கைகளாலும், அந்நம்பிக்கைகளை உருவாக்கிய தொன்மங்களாலும் ஆனதாக இருந்தது. அந்த இரு அதிகாரங்களிலும் மக்களின் பங்களிப்பு ஏதுமில்லை. மக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே. உழைப்பவர்கள், வரிகொடுப்பவர்கள், சேவகம் செய்பவர்கள், ராணுவமாக போர்களில் ஈடுபட்டு கொல்பவர்கள், கொல்லப்படுபவர்கள். மன்னர், மதம் என்னும் இரு அதிகார மரபுகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை முன்வைத்தனர் ஜனநாயகத்துக்காகச் சிந்தனைசெய்த முன்னோடிகள். ஓர் அரசு நிலைகொள்வது மக்களின் நலனுக்காகவே இருக்கவேண்டும். ஒரு மதம் நிலைகொள்வது மக்களின் மீட்சிக்காகவே இருக்கவேண்டும். அதிகாரம் மக்களுக்கு எதிரானது என்றால் அது தேவையற்றது, அழிவுத்தன்மை கொண்டது, ஆகவே அழியவேண்டியது. மக்களுக்கு என்ன வகையான அரசு வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம் என்று அவர்கள் கூறினர். அந்தச் சிந்தனை மிகமிக மெலிதாக முளைத்து ,பல்வேறு சிந்தனையாளர்கள் வழியாக வளர்ந்து, பல்வேறு அரசியல்போராட்டங்கள் வழியாக உருத்திரண்டு வந்த ஒன்று. அதன் தொடக்கம் Magna Carta போன்று அரசரின் வரம்பில்லா அதிகாரத்திற்கு எதிராக உருவான தொடக்ககால அரசியல் எதிர்ப்புகள். அதன்பின் பிரபுக்களின் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகள், மதகுருக்களின் ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் உருவாயின. போர்களும் பஞ்சங்களும் அந்த எதிர்ப்புணர்வை வளர்த்தன. அந்த சிறு கிளர்ச்சிகள் நிகழ்ந்து அவற்றின் வழியாக மக்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். அரசர், மதகுரு ஆகியவர்கள் மேலிருந்த அடிமைத்தனமான பற்றில் இருந்து வெளியே வந்தனர். மெல்ல மெல்ல மக்களுக்கே அதிகாரம் என்னும் அந்த புதியசிந்தனை ஒரு பேரலையாக ஐரோப்பாவை ஆட்கொண்டது. பிரிட்டனில் ஜனநாயகத்திற்கான பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப்புரட்சி இரண்டும் அதன் முதன்மை விளைவுகள். அங்கிருந்து உலகம் முழுக்க ஜனநாயகம் என்னும் கருதுகோள் சென்று சேர்ந்தது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் இருந்தே மார்க்ஸிய சிந்தனை உருவானது. ருஷ்யப்புரட்சியாக உருத்திரண்டது. இடதுசாரி சிந்தனைகளாக உலகமெங்கும் பரவியது. தொடக்ககாலத்தில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுந்தபோது அதை எதிர்த்த தரப்பினர் மூன்று வகைப்பட்டவர்கள். இனம், குலம் ஆகியவற்றை முன்வைத்தவர்கள் ஒரு பிரிவினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள்வதற்கு அதற்கான குடிப்பிறப்பு மரபு இருந்தாகவேண்டும் என்று நம்பினர். ‘தூய குருதிமரபு’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. மத அதிகாரத்தை முன்வைத்தவர்கள் இரண்டாம் வகையினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள இறையருளும் அதற்கான தகுதியும் இருக்கவேண்டும் என்றனர். புனிதமான அதிகாரம் என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. மூன்றாம்தரப்பினர் சிறுபான்மையினர். அவர்கள் அறிவதிகாரத்தை முன்வைத்தனர்.கற்றவர்கள், அறிவுத்தகுதி கொண்டவர்களே அதிகாரத்தைக் கையாள வல்லமைகொண்டவர்கள் என்று அவர்கள் வாதிட்டனர். ‘அறிவின் அதிகாரம்’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது. ஜனநாயகம் என்று நாம் சொல்லும் இன்றைய அமைப்பிலேயே இந்த மூன்று எதிர்த்தரப்புகளுக்கும் இடம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இம்மூன்று சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுதான் ஜனநாயகம் உருவாகி வந்துள்ளது. பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைசொல்லவும் கட்டுப்படுத்தவும் பிரபுக்களின் அவை ஒன்று அமைந்தது. மன்னரின் வரம்பில்லா அதிகாரம் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதே ஒருவகை ஜனநாயக முன்நகர்வுதான். அதன்பின் பிரபுக்கள் அவைக்கு ஒரு படி குறைவானதாக மக்களவை உருவாகி வந்தது. காலப்போக்கில் மக்களவையின் அதிகாரம் அதிகரித்தபடியே வந்தது. அதுதான் ஜனநாயகம் வளர்ந்த விதம். ஆனால் இன்றும்கூட நமது பாராளுமன்ற மேல்சபை என்பது மேலே சொன்ன மக்களதிகாரத்திற்கு எதிரான மூன்று தரப்பினருக்கும் ஆட்சியதிகாரத்தில் இடமளிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம். முன்பு சட்டமன்றத்திலேயே மேல்சபைகள் இருந்தன. தேர்தலையே சந்திக்காமல் மேல்சபை வழியாகவே அமைச்சரானவர்கள், பிரதமரானவர்கள் நமக்கு எப்போதும் உண்டு. அரசியலமைப்புச் சட்ட விவாதங்களில் பி.ஆர்.அம்பேத்கர் இந்த வினாக்களை விரிவாக எதிர்கொண்டிருக்கிறார். மேல்சபை இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையை முதன்மை அதிகாரம் கொண்டதாக அவர் தலைமையிலான அரசியல் சாசனக்குழு அமைத்தது. லோக் சபா அல்லது மக்கள் அவை என்னும் சொல்லே முக்கியமான ஒன்று. மேலே சொன்ன மூன்று எதிர்தரப்பினருக்கும் தொடக்க கால ஜனநாயகவாதிகள் பதில் சொன்னபோதுதான் ‘மக்கள்’ என்னும் கருத்துருவை உறுதியாக நிலைநாட்டினர். plebeian என்ற சொல்லில் இருந்து public என்ற சொல் நோக்கிய நகர்வு என அதை சுருக்கமாகச் சொல்லலாம். பிளீபியன் என்ற சொல் பண்டைய கிரேக்கத்தில் அதிகாரத்தில் பங்கில்லாத சமூக உறுப்பினரைச் சொல்ல பயன்படுத்தப்பட்டது. பப்ளிக் என்ற சொல் அரசின்மேல் கூட்டாக அதிகாரம் கொண்ட மக்கள் திரளை சுட்ட பயன்படலாயிற்று. பிறப்பின் வழியான அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றை மிக எளிதில் ஜனநாயகவாதிகள் விவாதத்தில் தோற்கடித்தனர். அறிவின் அதிகாரம் என்னும் கருத்துரு அத்தனை எளிதாக வெல்லப்படத்தக்கது அல்ல. அத்தரப்பு இன்றும் வலுவானதே. இன்றும்கூட உலகமெங்கும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் இயல்பான விசையாக இருப்பது அறிவதிகாரமே. வெவ்வேறு வகைகளில் அந்த அறிவதிகாரம் செயல்படுகிறது. உதாரணமாக தொழில்நுட்ப நிபுணர்களின் அதிகாரம், உயர்நிர்வாகிகளின் அதிகாரம், வணிகக்குழுக்களின் அதிகாரம், ஊடகங்களின் அதிகாரம். இவை ஒன்றாகத் திரண்டு இன்றைய மக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன, பலசமயம் அவையே முன்னோங்கி நிற்கின்றன. அறிவதிகாரம் உருவாக்கிய கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போதும் எழுந்து வந்தன. படிப்பறிவே இல்லாத, பழங்குடி மனநிலைகள் கொண்ட, பிற்பட்ட நிலையில் தேங்கி நின்றிருக்கும் சாமானிய மக்களிடம் அரசதிகாரத்தை அளிக்கலாமா? நேரடியாகவே அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது, சாதிவெறி மிக்க இந்தியச் சமூகத்திடம் அதிகாரத்தை அளித்தால் இந்தியா என்றாவது சாதியை ஒழிக்கமுடியுமா? அதற்கான பதிலாகவே ‘மக்கள்’ என்னும் திரள் அடையாளம் முன்வைக்கப்பட்டது. அதாவது தனிமனிதர்களாக மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருக்கலாம். சிந்தனைத்திறன் அற்றவர்களாக இருக்கலாம். சுயநலமிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் இருக்கலாம். மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும், தேங்கிப்போன வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ‘மக்கள்’ என்னும் கூட்டான சக்தி எப்போதும் வாழவும் முன்னேறவும்தான் விரும்புகிறது என்றனர் ஜனநாயகவாதிகள். மக்கள் தான் சமூகம், அவர்கள்தான் வரலாறு. சமூகம் தன்னை முன்னேற்றிக்கொள்ளவே துடிக்கிறது.வரலாறு முன்னேறவே முயல்கிறது. ஆகவே மக்களுக்கு எது வேண்டும் என அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். அந்த உரிமை அவர்களுக்குண்டு என ஜனநாயகவாதிகள் வாதிட்டனர். மக்களிடம் அவர்களின் தேவை என்ன என்பது உள்ளது. அவர்கள் எங்கே செல்லவேண்டும் என்பது உள்ளது. அதற்கு வாய்ப்பளிப்பதே ஜனநாயகம் செய்யவேண்டியது. அது எப்படியானாலும் முன்னோக்கிய நகர்வாகவே அமையும் என்றனர். மக்களிடம் வரலாற்றின் இயங்குவிசை உள்ளுறையாக உள்ளது என்று ஹெகல் முதலிய இலட்சியவாதிகள் நம்பினர். மார்க்ஸ் அந்நம்பிக்கையை ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்டார். மக்களிடம் புனிதமான, மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை மிகுந்த நெகிழ்வுடன் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இலட்சியவாத எழுத்துக்கள் சித்தரித்தன. புரட்சியாளர்கள் அதை நம்பி உள்ளக்கிளர்ச்சி அடைந்தனர். ஆனால் மக்கள் என்றால் யார்? ஒருவர் கல்விகற்றார் என்றால், சிந்தனை செய்தார் என்றால் அவருக்கென ஒரு தனித்தன்மை உருவாகி வந்துவிடுகிறது. அவருடைய களங்கமின்மை இல்லாமலாகிவிடுகிறது. அப்படியென்றால் கல்வியும் சிந்தனையும் இல்லாத ஒருவரே மக்களின் சரியான பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் என்பது பாமரர்களின் ஒட்டுமொத்தம்தான் என்னும் எண்ணம் அவ்வாறாக உருவானது. விளைவாக படித்தவர்கள், சிந்தனைசெய்பவர்களிடம் இல்லாத பல உயர்பண்புகள் பாமரரிடம் இருக்கின்றன என இலக்கியங்கள் பேச ஆரம்பித்தன. அந்த உயர்பண்புகள் என்பவை மக்கள் என்னும் பொதுவான கருத்துருவின் பண்புநலன்கள்தான். அவைதான் கலாச்சாரம் என்பதன் அடிப்படை அலகுகள். கருணை, அறவுணர்வு, தோழமை என பல உயர்விழுமியங்களாக அவை சித்தரிக்கப்பட்டன. தொடக்ககால மனிதாபிமான இலக்கியத்தின் முக்கியமான பேசுபொருள் என்பது ‘பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகள்’ தான். பாமரரை புனிதப்படுத்தும் இந்த கண்ணோட்டத்தை ஜனநாயகத்தை முன்வைத்த அரசியலாளர் ஒருவகை தத்துவக் கொள்கையாகவே முன்வைக்கலாயினர். பின்னர் மார்க்ஸியர்கள் அதை மறுக்கமுடியாத கோட்பாடாக நம்பிப் பேசலாயினர். அது ஒரு பார்வை மட்டுமே என சொல்பவர்கள் மக்கள் விரோதிகள் ஆயினர்.அவர்கள் மேல் மேட்டிமைவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டது. மேட்டிமை முத்திரை ஒருதொடக்கம். அது கடைசியில் அழித்தொழிக்கப்படவேண்டிய சமூகவிரோதி என்ற எல்லைவரை சென்று சேரும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மார்க்ஸிய அரசுகளால் வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட, கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்று அறிஞர்கள் அத்தனைபேருக்கும் மேட்டிமைவாதி, மக்கள் விரோதி என்னும் முத்திரைகள்தான் குத்தப்பட்டன. முந்தைய மன்னர் மற்றும் பிரபுக்களின் ஆட்சியிலும், மதகுருக்களின் ஆட்சியிலும் பாமரர் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வெறும் மானுடக்குப்பைகளாக போர்க்களங்களில் கொன்று ஒழிக்கப்பட்டனர். பஞ்சங்களில் செத்துக்குவிந்தனர். அவர்களை வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் ஜனநாயகவாதிகளும் பின்னர் மார்க்ஸியர்களும்தான். வரலாறு சாமானியர்களுக்குரியது என்றும் சமூகம் என்றால் அவர்களே என்றும் நிறுவியவர்கள் ஜனநாயகவாதிகளும் மார்க்ஸியர்களும்தான். இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை வரிகட்டாதவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வந்தது மேலும் பல ஆண்டுகள் கழித்துத்தான்.இலக்கியத்தில் ஒரு பாமரன் கதைநாயகனாக ஆவது ஜனநாயக சிந்தனைகள் திரண்டு, அவற்றின் அடிப்படையில் நவீன இலக்கியம் உருவாகி வந்தபின்னர்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் ஒரு துப்புரவுத்தொழிலாளர் கதைநாயகன் என்பதை அறிந்து இடதுசாரிகளே திடுக்கிட்டதை, வியந்ததை அதை மொழியாக்கம் செய்த சுந்தர ராமசாமி பதிவுசெய்துள்ளார். அத்தகைய சூழலில் மக்கள் என்பது அனைத்துப் பாமரர்களையும் உள்ளடக்கியதுதான் என்னும் சிந்தனை மிகமிக முற்போக்கானது. ஒவ்வொரு பாமரனையும் கருத்தில்கொள்கையிலேயே ஓர் அரசு நலம்நாடும் அரசாக இருக்க முடியும் என்னும் எண்ணம் அரசியலில் ஒரு புரட்சி. பாமரனின் அதிகாரத்தை முன்வைத்த சிந்தனைகள் மிகமிக முற்போக்கானவை. மிகப்புரட்சிகரமானவை. ஜனநாயகத்தில் மிகமிக ஆற்றல்கொண்ட கலைச்சொல்லாக மக்கள் என்பது ஆனது இவ்வாறுதான். மக்கள் என்ற அச்சொல்லை அதன்பின் இடதுசாரிகள் ஒரு ஆயுதமாக ஆக்கிக்கொண்டார்கள். (மேலும்) https://www.jeyamohan.in/195297/1 point
-
1 point
-
ஓம் நிங்கள் சொல்வது போல் அந்த தெனாவட்டு கதைக்கு முன் வருடத்துக்கு இரண்டு மூன்று நடித்தவர் அந்த தென வட்டு கதை சொல்லியபின் வருடத்துக்கு 5௦ படங்களுக்கு மேல் நடிக்கிறார் நான்தான் இந்த விசர் யூரியூப், இதர சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தபட்டு விட்டேன் 😀 என்ன இருந்தாலும் வடி வேலின் நகைசுவை போல் வராது . உருவாகும் மீம்ஸ் முக்கால்வாசி அவருடைய படம்கள் இல்லாமல் இல்லை .1 point
-
விசுகு, நான் கூறியது அவரின் தோல்வி பற்றியதல்ல. மக்களின் மனவோட்டம் அரசியல் தலைவர்களால் புரிந்து கொள்ளப்படாமை பற்றியதே. அரசியல்க்கட்சிகள் அல்லது அரசியல் இயக்கங்கள் உருவாக்கும் கொள்கைகளை மக்கள் ஒட்டு மொத்தமாக ஏற்று கொள்ளவேண்டிய கடப்பாடு மக்களுக்கு இல்லை. மக்கள் மனவோட்டத்தை அனுசரித்தே அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள் தீர்மானங்களை எடுக்கவேண்டும். மக்களின் மன நிலை நிச்சயமாக ஒட்டு மொத்தமான கும்பல் மனநிலையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கவும் மாட்டாது. ஆகவே அது மக்களின் பலவீனம் அல்ல. அரசியலை முன்னெடுத்த தலைமைகளின் பலவீனம் மட்டுமே.1 point
-
1 point
-
இது ஒரு பழைய இணைப்பு, வடிவேலு இதனால் நன்றாக அனுபவித்துவிட்டார், மனிசன் திருந்தி இப்ப மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார், நடிகனாக பலரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கின்றார் இன்றுவரை👍1 point
-
போதமும் காணாத போதம் – 13 தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்புவது சாதாரணமானது அல்ல. அடர்ந்து காட்டிற்குள் திசையறியாது சுற்றிச் சுற்றிச் உணவற்று மாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தாயம் கடலில் கலக்கும் நதியைப் போல, தடம் பிசகாமல் வீடு வருகிறான். எந்தச் சவாலுக்கும் ஈடுகொடுக்கும் உடல் வலிமை. எதற்கும் அஞ்சாத உளம். நிராயுதபாணியாக தப்பும் தன்னை, உங்கள் ஆயுதங்களாலும் தேடிக் கண்டுபிடியுங்கள் எனும் சவால். தாயம் புலிகளுக்கு பெரிய தலையிடியாக இருந்தான். பன்னிரெண்டு அடியளவில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு வேலி, கண்காணிப்புக்காய் நிற்கும் போராளிகளின் விழிப்பு. இவற்றையெல்லாம் உச்சிவிட்டு எப்படி தப்புகிறானோவென்று தெரியாத குழப்பம் இயக்கத்திற்கு வந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் குறிப்பிட்ட நாட்களிலேயே தாயம் வெளியேறிவிடுகிறான் என்று கண்டடைந்தனர். முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவென எந்தப் பயிற்சி முகாமிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிவதை எங்களாலும் நம்பமுடியாமலிருந்தது. ஒரு நாளிரவு இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவினர் வீட்டைச் சுற்றிவளைத்தனர். தாயம் தப்பித்தோட வாய்ப்பிருப்பதாக எண்ணியிருந்தார்கள். அவன் மாட்டிறைச்சி குழம்போடு இரண்டு றாத்தல் ரோஸ்ட் பாணைச் சாப்பிட்டு முடித்து அவர்களோடு போனான். ஊரிலுள்ளவர்கள் வியக்குமாறு தாயம் சாகசக்காரனாய் போராளிகளுக்கு நடுவில் நடந்தான். அமளிச் சத்தம் கேட்டு உறக்கமழிந்த தாயத்தின் தங்கச்சி சாதனா ஆயுதமேந்திய போராளிகளை விலக்கியபடி ஓடிப்போனாள். பொத்திய தனது கைக்குள்ளிருந்து இரண்டு தேமாப் பூக்களை தாயத்திடம் கொடுத்தாள். சாதனாவை முத்தமிட்டு “ அண்ணா, வெள்ளனவா வந்திடுவன். நீ குழப்படி செய்யாமல் அம்மாவோட இருக்கவேணும். போய் நித்திரை கொள்ளு” என்றான். வாகனம் புறப்பட்டது. சாதனா வீட்டின் முன்பாக நிற்கும் தேமா மரத்தடிக்கு லாம்போடு ஓடிச்சென்றாள். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த தெய்வ உருக்களின் முன்பு நின்று கண்ணீர் கசிந்து “கடவுளே அண்ணா, திரும்பி வந்திடவேணும். வந்தால் உனக்கு அவல் தருவேன்” என்றாள். வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவனை கிளிநொச்சியிலுள்ள முகாமொன்றில் தங்கவைத்தனர். அவனுடைய தப்பித்தல் அனுபவங்கள் குறித்து போராளியொருவர் விசாரணை செய்து அறிக்கை தயாரித்தார். தாயத்தின் சொந்தக்காரர்கள் யார் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது வரை விசாரணை ஆழம் பாய்ந்து முடிந்தது. அதன்பிறகு நிலக்கீழ் அறைக்குள் தாயம் இறக்கப்பட்டான். “பூமியின் தடங்கள் மறக்கும் வரைக்கும் உள்ளேயே இருப்பீர்கள்” என்பது உத்தரவு. “இங்கிருந்து தப்ப இயலாது” என்பது எள்ளலாக வீசியெறியப்பட்டது. தாயம் பூமியின் கீழே விழிபிதுங்கி அமர்ந்தான். மூச்சுத்திணறியது. இருட்குகையில் மோதுண்டு அழியும் காற்றுப் போல கைகளை விரித்து சுவர்களை அறிந்தான். எத்தனை நாட்கள் இருள் தோயவேண்டும். இப்படியொருவன் மூச்சுத்திணற வைக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்படவேண்டுமா? தாயம் உள்ளேயே சப்பாணிகட்டி அமர்ந்து கொண்டான். தன்னுடைய இறுக்கமான உள்ளாடையை கழட்டி எறிந்து நிர்வாணமானான். சாதனா கொடுத்த தேமா மலர்களை கைகளில் ஏந்தி இருளின் திரட்சியை அழிக்கும் வாசனையை முகர்ந்தான். வீட்டின் முன்பாக தங்கையோடு பூசை செய்து விளையாடும் பொழுதுகள் புலனில் உதித்தன. பூமியின் கீழே பாதைகள் இல்லை. ஆனாலும் தாயம் கண்ணீர் சிந்தவில்லை. அச்சப்படவில்லை. மெல்ல மெல்ல ஆசுவாசத்துக்கு திரும்பினான். போராளிகள் எதிர்பார்த்ததைப் போல கதறியழுது என்னை மீட்டுவிடுங்கள் என்ற இறைஞ்சுதல்கள் எதுவும் நிகழவேயில்லை. உள்ளேயே தாயக்கோட்டினைக் கீறி மண்ணை உருண்டைகளாக்கி தாயம் விளையாடத் தொடங்கினான். மூன்று நாட்கள் கழித்து பூமியின் மேல் இழுத்து வரப்பட்ட தாயம் ஒளியைக் கண்டு கூசினான். வெளிச்சம் பொல்லாத சாத்தானைப் போல அவனைத் தண்டித்தது. அவனது உடலில் எந்தச் சோர்வும் இருக்கவில்லை. சாதனா தருவித்த இரண்டு தேமா மலர்களும் வாடாமலிருந்தன. “எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்” என்கிற ஓலமான குரலைப் பொருட்படுத்த அங்கு எவருமில்லை. பொறுப்பாளர் கீரன் உணவளிக்குமாறு உத்தரவிட்டார். நெத்தலித் தீயலும், குத்தரிசிச் சோறும் கொடுத்தார்கள். ஒரு சட்டித் தீயலை தின்றுமுடித்து, சோற்றுப்பானையைக் காட்டி கொஞ்சமிருக்கு ஏதேனும் பழைய குழம்பு இருக்கிறதா என்று கேட்டான். பருப்புக் குழம்பை கொடுத்தார்கள். இதுவரைக்கும் தப்பித்த பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எப்படித் தப்பினான் என்பதை விசாரணை செய்ய குழுவொன்று தயாராகவிருந்தது. தாயம் சரியென்று தலையசைத்தான். முத்தையன்கட்டிலுள்ள முகாமில் அதனைச் செய்து காட்டினான். அடிக்கணக்காக உயர்ந்து நிற்கும் முட்கம்பி வேலியில் ஏறி, கீழே குதித்து ஓடுவதை ஒன்றும் விடாமல் செய்து காட்டினான். மீண்டும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து தாயத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தனர். “நான், ஏன் போகவேண்டும். எனக்கு வயிறு கொதிக்கிறது சாப்பாடு தாருங்கள்” குரல் உயர்த்தினான். “நீதானே பயிற்சி முகாமிலயிருந்து ஓடிப்போகிறாய். இப்ப நாங்களே உன்னை விடுகிறம். நீ போ” என்றனர். தாயத்தினால் இப்படியொரு பரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அண்ணே, என்னை நீங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி தந்தால் ஓடிப்போவன். இப்பிடி நீங்கள் போகச்சொல்லுறது எனக்கு அவமானம். இப்ப நான் போகமாட்டன்” “சரி, அப்ப நீ இஞ்சயே இரு. உனக்கு எப்ப போகவேணுமெண்டு இருக்கோ. அப்ப வெளிக்கிடு” தாயம் எதிர்பாராததை இயக்கம் வழங்கியது. அவனால் முகாமை விட்டு வெளியே போகமுடியவில்லை. அங்கிருக்கும் சில வேலைகளைச் செய்து வந்தான். பொறுப்பாளர் கீரனோடு வெளியே சென்று வரத்தொடங்கினான். தாயனைப் பார்த்த ஊரவர்கள் சிலர், “என்னடா இயக்கமாகிட்டுயோ” என்று கேட்டார்கள். எதுவும் பதிலளிக்காமல் தாயம் குமைந்தான். அரசியல் போராளிகளோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணமானான். இயக்கத்திற்கென இழுத்து வரப்பட்டவர்கள் குவிக்கப்பட்டிருக்கும் முகாமொன்றிற்கு சென்ற தாயம் திடுக்குற்று பொறுப்பாளர் கீரனிடம் “ அண்ணை, இப்பிடி பிடிச்சுக் கொண்டு போய், சண்டை செய்துதான் நாட்டை மீட்கவேணுமே” கேட்டான். இதுக்கு நான் பதில் சொன்னால் இயக்கத்துக்கு துரோகியாகிவிடுவன். என்னை நீ பூமிக்கு கீழ வைக்கப் பார்க்கிறாய்” என்றார் கீரன். “உங்களுக்கு இதில உடன்பாடு இல்லைத்தானே, பிறகு ஏன் செய்கிறீர்கள். கட்டாய ஆட்சேர்ப்பின் தீவினை குறித்து தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்” என்றான். “எல்லாம் கைமீறிப் போய்ட்டுது. உன்னைப் போல எத்தனயோ பிள்ளைகள் பயந்து நடுங்கியிருக்கிறாங்கள். அது தெரியாமல் யாரும் இல்லை” கீரன் சொன்னார். தாயம் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் நோக்கி செல்லும் அணியில் கலந்தான். ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடி முடித்து தாயம் கரையேறி ஈரந்துடையாமல் வீதிக்கு வந்தான். மாடுகளை சாய்த்தபடி எதிர்திசையில் வந்த பீதாம்பரம் “ எடேய் பெடியா, இயக்க வாழ்க்கை என்ன சொல்லுது” என்று கேட்டார். “இவ்வளவு நாளும் பயிற்சி அண்ணை, இனிமேல் தான் சண்டைக்கு போகவேணும்” என்றான். “அப்ப நீ இன்னும் ஒரு சண்டைக்கும் போகேல்லையோடா, அங்க போயும் சும்மா தான் இருக்கிறாய் என்ன” என்றார் பீதாம்பரம். ஊரியிலான வீதியைக் குறுக்கறுத்து திடுமென அசையாது நின்ற சாரைப்பாம்பில் வன்னி வெயில் ஊர்ந்தது. பீதாம்பரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விலகி நடந்து, வீதியோரத்தில் அடர்ந்திருந்த பற்றைகளில் நாயுண்ணிப் பழங்களை பிடுங்கி உண்டான். காலையிலேயே கழுத்து வெட்டி சாவல் குழம்போடு இருபது இடியப்பத்தை தீர்த்த பிறகும் வயிறு கொதித்தது. சாப்பாட்டு இடிஅமீன், இந்தப் பட்டப்பெயரைத் தாயத்துக்கு சூட்டியது மாஸ்டர் கனல் குன்றன். பயிற்சி முகாமில் வழங்கப்படும் அளவுச் சாப்பாடுகள் போதாதுவென தாயம் உண்ணா நோன்பிருந்தான். எருமை மாட்டிறைச்சி குழம்பில் மூவருக்கு வழங்கப்படும் அளவிலான துண்டங்களை இவனுக்கு வழங்குமாறு மாஸ்டர் உத்தரவளித்தார். தாயத்திற்கு வழங்கப்பட்ட விடுப்பு நாளையுடன் முடிவடைகிறது. குளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் புதிய ஆடைகளை அணிந்து, திருநீற்றை அள்ளி பூசினான். சாதனா தேமா மரத்திற்கு அவனை அழைத்துச் சென்று மந்திரங்கள் ஓதுமாறு சொன்னாள். தாயம் “கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “ என்று பாடினான். சாதனா திருநீறள்ளி பூசிவிட்டாள். சுடச்சுட வேர்க்கொம்பு போட்ட தண்ணியை ஆக்கி கொடுத்தாள் தாய். அவனுக்கு வயிறு கொதித்தது. “இடியப்பம் இருக்கே” என்று கேட்டான். “முடிஞ்சுது, சோறு வடிச்சிடுவன். கொஞ்சம் பொறு” என்றாள் தாய். வீட்டின் முன்பாகவிருந்த பூவரசமரத்தின் கீழே அமர்ந்திருந்து வேர்க்கொம்புத் தண்ணியை உறிஞ்சிக் குடித்தான். சாதனா அவனிடம் கேட்டாள். “அண்ணா, சண்டைக்கு போக உனக்குப் பயமா இல்லையோ” “பயமில்லையோ. சரியான பயமாய் இருக்கு” “பயப்பிடு. மாமாவைப் போல பயமில்லாமல் சண்டை செய்து சாகாத.” “சாதனா, நான் செத்துப்போனால் நீ எத்தனை நாள் அழுவாய்” “இப்பிடி பயந்தால் சாகமாட்டாய். எனக்கு அழுகிற வேலை இல்லை” “எடியே, எனக்கு பயமே இல்லை. நான் செத்துப்போடுவனெண்டு சும்மா வைச்சுக் கொள்ளன். எத்தனை நாள் அழுவாய்” “அண்ணா, நீ சாகவே மாட்டாய். பயப்பிடாதவன் சாவுக்குப் பிறகானதை பற்றி கதைக்க மாட்டான்” என்று சொல்லிச் சிரித்தாள். “சரி நீ செத்துப்போனால் நான் எத்தன நாளைக்கு அழ வேண்டும் சொல்” “நீ அழவே கூடாது சாதனா” “சரி, நான் தேமாவுக்கு பூசை செய்து, உன்ர பெயரை நூற்றி எட்டுத் தடவை சொல்லுறன். காணுமே” “நான் என்ன கடவுளே” “செத்தால் எல்லாரும் கடவுள் தான்” “சரி அலட்டாத. காணும்” என்றான். சாதனா தன்னுடைய கைக்குள்ளிருந்த இரண்டு தேமா மலர்களை அவனுக்கு கொடுத்து எப்பவுமே உன்னோட வைச்சிரு என்றாள். தாயம் அவளைக் கொஞ்சி தலையில் குட்டினான். ஒரு வருடத்திற்கு முன்பான மாலை வேளையொன்றில் தாயம் இயக்கத்தில் சேர்ந்தான். அவன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் “அம்மா, நான் இயக்கத்துக்கு போகிறேன். நீ கவலைப்படாமல் சாப்பிடு. சதனாவை, தேமா மரத்தை பார்த்துக் கொள். நான் போயிட்டு வாறன்” என்று எழுதப்பட்டிருந்தது. லட்சியத்தை நோக்கிய தாயத்தின் புறப்பாடு ஊரையே அதிர்ச்சியாக்கியது. “இவனையெல்லாம் படையில சேர்த்தால் மற்ற இயக்கப் பிள்ளையளுக்கு சோறும் மிஞ்சாது. சொதியும் மிஞ்சாது. இவன்ர வயிறு ஊரெழுக் கிணறு மாதிரி. அடிதெரியாமல் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் கொய்யாத்தோட்டம் பூசாரி. கோவில் அன்னதானங்களில் தாயம் உக்கிரம் காண்பான். அள்ளியெறிய ஏந்திக் கொள்ளும் பாதாளமாய் அவனது வயிறு திறந்துவிடும். எங்கிருந்து பொங்கிவரும் பசி இவனுள்ளே ஓடிநிரம்புகிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். “இவன் வயித்தில இருக்கேக்க, கடுமையான யுத்தம். ஆசைக்குத் தின்னக்கூட சோட்டைத்தீன் இல்லை. அரசாங்கம் ஒண்டையும் உள்ள விடேல்ல. என்ன கிடைச்சுதோ அதைத் திண்டு பசி போக்கினேன். முனுசு தோட்டத்தில விழுந்த குரும்பட்டியையும் எடுத்துக் காந்துவன்” என்றாள் தாயத்தின் தாயார். எனக்கும் தாயத்துக்கும் இடையே சிநேகிதம் உண்டாகிய தொடக்கத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அவனுக்கு ஒடியல் புட்டும், மீன் குழம்பும் பிடித்தமானது. பீங்கான் தட்டில் உணவைப் பரிமாறி அளிப்பேன். குழைத்து உண்ண வசதி இல்லையென, வாழை இலை கேட்பான். மான் இறைச்சியோடு கீரைப்புட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தட்டில் உணவைக் கண்டாலே பதற்றமுற்று குழைத்து உள்ளே தள்ளுகிறான். விக்கல் எடுத்தாளும் நீரருந்தேன் என்கிற சத்தியமாயிருக்கும். கறித்துண்டுகளை, எலும்புகளையும் அரைத்து விழுங்கினான். ஏனென்று தெரியாத கடலின் மூர்க்கம் போல உடல் முழுதும் வெக்கை கொள்கிறது. வழியும் உடலின் ஈரத்தில் ஒருவர் தாகம் தீருமளவு வியர்வை. அன்றுதான் தாயம் இயக்கத்தில் இணையவிருப்பதாக என்னிடம் சொன்னான். அப்போது நானும் நம்பவில்லை. ஆனால் இன்று தாயம் ஒரு விடுதலைப் போராளி. அதனை நம்பாமல் இருக்கமுடியவில்லை. தாயம் விடுப்பு முடிந்து வட போர்முனைக் களத்திற்கு புறப்பட்டான். கிளிநொச்சி வரைக்கும் அவனை உந்துருளியில் அழைத்துச் சென்று இயக்க வாகனத்தில் ஏற்றினேன். “சரி மச்சான், அடுத்தமுறை வந்தால் சந்திப்பம்” என்றான். “வராமல் எங்கையடா போகப்போறாய், உதில இருக்கிற முகமாலை தானே. விடுப்பு கிடைக்காட்டி ஓடி வா” என்றேன். தாயம் பதில் எதுவும் கதையாமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். வாகனம் முன்நகர்ந்தது. சில மாதங்களுக்கு பின்னர் தாயத்தின் வீரச்சாவு செய்தி வந்தடைந்தது. வீட்டின் தேமா மரத்திற்கு பூசை செய்து கொண்டிருந்த சாதனாவுக்கு தெரியவேண்டாமென அவளை வட்டக்கச்சிக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய வித்துடல் கிடைக்கவில்லை. வெறும் புகைப்படமாக மட்டுமே வந்தடைந்தான் “வீரவேங்கை நளன்.” எல்லாவிதமான நிகழ்வுகளும் முடிவடைந்து ஆறாவது நாள், சாதனாவை வீட்டுக்கு கூட்டி வந்தோம். ஓடிச்சென்று தேமா மரத்தின் கீழேயிருந்து மந்திரங்கள் ஓதி, பதிகம் பாடி அமைந்தாள். பூக்களை ஏந்தி வந்து வீட்டினுள்ளே புலிச்சீருடையில் புகைப்படமாய் இருக்கும் தாயத்தின் முன்பு படைத்து “ அண்ணா, நீ வெள்ளனவா ஓடி வா, பூசை செய்து விளையாட வேண்டும்” என்றாள். வீரச்சாவு அடைவதற்கு இரண்டு வாரம் முந்தி தாயம் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “அன்பின் மச்சான்! வாழ ஆசையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிர்ப்பந்தம், கெடுபிடி, போர், பேரழிவு இல்லாமல் இந்தப் பிறவியில் வாழ முடியாது என்றே தோன்றுகிறது. நீ அடிக்கடி சொல்வதைப் போல, இந்த வாழ்க்கையில் எத்தனை நாணயங்களை சுழற்றினாலும் பூவோ, தலையோ எமக்கில்லை. தாயம் வீரச்சாவு அடைந்தான் என்றால் அதில் பெருமை கொள்ளாதே. நான் வீரன் இல்லை. வாழ ஆசைப்படும் அற்பன். இந்தக் குருதியூற்றில் தேமா மலர்களோடு அமர்ந்திருந்து பதிகம் இசைக்க எண்ணும் சாதாரணப் பிறவி. என்னை நீ வீரனாக எழுதாதே. உன் கவிதைகளில் என்னைப் பாடாதே. இத்தனை பேர் உயிரைத் தியாகம் செய்யும் இக்களத்தில் நடுநடுங்கும் என்னை ஒரு சொல்லாலும் புகழாதே. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் ஒவ்வொரு நாளும் முன்னேறத் துடிக்கிறான். போராளிகள் களமாடுகிறார்கள். என்னுடைய துவக்கை இயக்குவதற்கு கூட துணிச்சல் இல்லாமல் ஒடுங்கியுள்ளேன். சாதனா என்னிடம் சொன்னதைப் போலவே பயந்தவன் சாவதில்லையென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கு வீரர்கள், கோழைகள், எதிரிகள், எல்லோரும் சாகிறார்கள். நான் வீரனுமில்லை எதிரியுமில்லை. செத்தால் எல்லாரும் கடவுள் என்ற சாதனாவுக்கு நான் கடவுளாக தெரியக்கூடாது. அண்ணனாகவே இருக்க விருப்பம். அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள். அம்மா தவித்துவிடுவாள். அதற்காக தாயகத்திற்காக தாயம் தன்னுயிரை ஈகம் செய்தானென்று மட்டும் அவளிடம் ஆறுதல் சொல்லாதே. தாய்மார்கள் அழட்டும். அவர்களின் கண்ணீராலேனும் மண்ணின் பாவங்கள் கரைந்து மூழ்கட்டும். சாதனாவுக்கு தேமா மரத்தில் பூசை செய்து விளையாட ஆளில்லை. எப்போதாவது நேரம் வாய்த்தால் அவளது பூசையில் பங்கெடு. ஆக்கினைகள் எல்லாமும் உதிரட்டும். பூக்கள் மலரட்டும். அவள் தந்தனுப்பிய இரண்டு தேமா மலர்களை என்னுடைய ஆயுத அங்கியில் வைத்திருக்கிறேன். இத்தனை ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு பூக்களோடு அமர்ந்திருக்கிறேன். எதிரியானவன் எப்போது வந்தாலும் தேமா மலர்களை நீட்டி, வணக்கம் சொல்வேன். அவனிடமிருக்கும் துவக்கு என்னிடமுமிருக்கிறது. அவனிடமும் மலர்கள் இருந்திருந்தால் என்னிடம் இயக்கம் துவக்கை தந்திருக்காது அல்லவா! இப்படிக்கு நளன் ( தாயம்) ராதா வான்காப்பு படையணி முகமாலை, வடபோர் முனை. https://akaramuthalvan.com/?p=15291 point
-
வணக்கம் வாத்தியார்........! சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூ மனமே-ஓ-ஓ உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய் பூ மனமே-ஓ-ஓ.......! --- சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ---1 point
-
ஆழ்ந்த அனுதாபங்கள்! இந்த சம்பவத்தை விபரிக்கும் செய்தி: https://www.newsinenglish.no/2024/01/03/more-murders-marred-holiday-weekend/ மேலே தமிழ் செய்தியில் சொல்லப் பட்டிருப்பது போல, காவல் துறையிடம் முறையிட்டு பாதுகாப்புக் கேட்குமளவுக்கு தெரிந்த நபரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. காவல் துறை தங்கள் கடமையைச் செய்யவில்லையென இப்போது தாமதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. (இது போன்ற செய்திகளை வாசிக்கும் அனேகருக்கு உடனே ஏற்படுவது "இத்தனை வருட உழைப்பும், வாழ்க்கையும் இழக்கப் பட்டு விட்டதே" என்ற சோக உணர்வாகத் தான் இருக்கும்! ஆனால், இமிக்ரேஷன் கஷ்டங்களும், கலாச்சாரக் காவலர் உணர்வும் தான் உடனே வெளிப்படுகிறதென்றால், என்ன வகை மன அமைப்பென்று விளங்கவில்லை!)1 point
-
கிரிக்கெட் கால்பந்து நானும் விளையாடுவேன், என்னுடன் வேலைபார்க்கும் வேறு இனத்தவரும் விளையாடுவார்கள், ஈழதமிழர்களும் விளையாடுவார்கள். ஆனால் இந்த மாட்டோடு சண்டை போடுவதை இலங்கை தமிழர்களிடம் திணிப்பதற்கு ஒடுக்கபட்ட ஏழ்மையான ஈழதமிழர்களை தேடிபிடித்து மாட்டோடு சண்டை போட வைக்க வேண்டும் 😟மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கைக்கு வந்து மாட்டோடு ஒருபோதும் சண்டைபோட போவது இல்லை. இந்திய தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம், இலங்கையின் சுற்றுலா அதிகார சபை, ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த பணியை செவ்வனே செய்வார்கள்.1 point
-
உங்களுக்கு ஒரு அறுப்பும் விளங்காது கூலிக்கு மாரடிக்கும். உங்களுடன் கருத்தாட விரும்பவில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எனக்கு எவரும் தலைவர் இல்லை1 point
-
எல்லாவற்றையும் கலக்கக்கூடாது. நூறு வீதம் பரிசுத்தம் என்பது முழுப்பொய்.1 point
-
முதலில் இப்படிக்கூக்குரல் போடுபவர்கள் செய்யவேண்டியது தாயகத்தில் உள்ள தமிழர் அரசியலைப் பேசுபவர்களைச் சந்தித்து நீங்கள் ஒரு கோரிக்கையின் பின்னால் ஒன்றுதிரளுங்கள் என்பதே. மற்றப்படி புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிகளின் முன்னாள்கள் மற்றும் புலிவால்களைக் குறைகூறுபவர்கள் இந்த இமாலயா அறிக்கையைத் தெளாஅரித்து சிங்களத்திடம் முன்மொழிய முன்னர் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு முன்னால் சொன்னார்களா? எந்த மக்களுக்காக ஒரு அறிக்கை கையளிப்பு அரசியலைச் செய்கிறார்களோ அந்த மக்களது கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்களா? இவர்களும், இவர்களால் விமர்சிக்கப்படும் ஏனையோரைப்போலவேதானே முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இப்பதானெ இவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சிங்களவன் சரியானபடி நல்ல ஆப்பாக இரக்குவான் அதோட துண்டைக்காணோம் துணியக்காணோம் எண்டு போய்விடுவினம். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் கோட்டுச்சூட்டுகளைப் பத்திரமா வைத்திருப்பினம் சனம் பழையதை மறந்ததும் "பூஜி மலைப் பிரகடனம் " எனச்சொல்லிக்கொண்டு மறுக்காலும் வருவினம். நல்லூருக்கு முன்னால வந்து நிண்டு சுரேன் ச்ரேந்திரன் முப்பது வருடத்துக்கு முன்னம் நான் நல்லூர் திருவிழாவில் கடைலையுடன் பெண்களுக்குக் கடலைபோட்டதை நினைச்சுச் சந்தோசப்பட்டதை மாதிரி இன்னுமொருவரும் ஒரு சீ ஆர் கொப்பியில பிரகடனம் என எழுதிக்கொண்டு நல்லூர் வாசலில் வந்து "நினைவிடை தோய்வார்" அ ப்பவும் யாராவது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவினம்.1 point
-
வாசித்தேன். இரண்டு தடவைகள் முதலில் இவர்கள் தீர்வை பெறட்டும். தீர்வு பெற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை தீர்வு பெற முடியாது என்று தான் சொல்லுகிறார்கள் தீர்வை பெற முடியுமென்றால். மற்றவர்களை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை‘ இப்படி கட்டுரைகள் எழுதி விட்டு திரும்ப திரும்ப வாசித்து பார். என்பதுதான் எங்களுக்குரிய. தீர்வா?? இப்படி எத்தனையோ பேர் முயற்சிகள் செய்தாதை பார்த்து விட்டோம் ஆனால் தீர்வுகள் தான் வரவில்லை அவர்கள் எல்லோரும் இறுதியில் சொன்ன வார்த்தை ஏமாத்திட்டீங்களே என்பது தான் அதை தான் நாங்கள் முதலில் சொல்லுகிறோம். இருந்து பாருங்கள் முடிவை யார் சொன்னார் உங்களுக்கு தீர்வு தருகிறோமென்று. ??? எவருமில்லை இவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய அனைவரும் தீர்வுகள் வழங்கப்படாது என்ற உறுதிப்பாட்டை உடையவர்கள் இந்த பேச்சுவார்த்தை எல்லாம் தமிழர்களின் ஒற்றுமைகளை உடைக்க பயன்படுத்துவது சிங்களவர்களின் திறமை1 point
-
இளையராஜா திறமையானவர் மற்றும் உளவியலாக சில இடையூறினை சந்திப்பவராக இருப்பார் எனகருதுகிறேன், இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதாக உணரவில்லை, ஆனால் அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால் தன்னிலை மீறுகிறார், ஒரு சமூக போரளியின் நியாயமான கோபம் இலக்கின்றி காட்டாறு போல போவதாக உணர்கிறேன். மற்றது கர்வம் என்பது ஒருவித பெருமிதம் என கருதுகிறேன் சிலர் அதனை சில்லறைதனமாக நடப்பதனை கர்வம் என தவறாக கருதுகிறார்களோ என தோன்றுகிறது. எனக்கு கர்வம் இல்லை என்ற கர்வம் உண்டு😁.1 point
-
1 point
-
இளையராஜா யுகம் தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் அவர் ரசிகன் நான்.எந்தவொரு பாடலையும் தவற விட்டது கிடையாது.இளையராயாவிற்கு இருக்கும் கர்வத்தை விட ஆயிரம் மடங்கு கர்வம் எனக்குண்டு. ஆயினும் மற்றவர்களை மதிக்காவிட்டாலும் மட்டம் தட்டும் உரிமை அவருக்கில்லை. ஆயிரம் இருந்தாலும் இசைக்கு ராஜா இளைய ராஜா தான். அதை யாரும் மேவ முடியாது.1 point
-
10 வயது கடந்துவிட்டால் ஓராம் வகுப்பில் சேர முடியாத வயோதிபர் 20 வயது கடந்துவிட்டால் குழந்தை பருவம் என்பதற்கு வயோதிபர் 30 வயசு கடந்துவிட்டால் மாணவ பருவத்திற்கு வயோதிபர் 40 வயசு கடந்துவிட்டால் பெண்/ஆண் தேடும் முதல் திருமண பருவத்திற்கு வயோதிபர் 50 வயசு கடந்துவிட்டால் உடல் உழைப்பு சார்ந்த வேலை தேடும் படலத்திற்கு வயோதிபர் 60 வயசுக்கப்புறம் முதிர்ந்த காலங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வந்த முதியவர். முதுமை என்பது வயசு மட்டுமல்ல பலதையும் பட்டறிவையும் பல தசாப்தங்களாய் பார்த்தவர்கள் என்றும் பொருள் படலாம்.1 point
-
மேட்டிமைவாதம் என்னும் சொல்… jeyamohanDecember 27, 2023 மேட்டிமைவாதமா? மேட்டிமைவாதம் என்னும் சொல்லை வேறுபல தமிழ்ச்சொற்களைப்போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, குத்துமதிப்பாக, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். ஒரு சொல் கிடைத்தால் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திப்பதில்லை, அதையே எங்கும் எதற்கும் பயன்படுத்தி சூழலை மலினப்படுத்துகிறோம். தமிழில் அச்சொல்லை elitism என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மொழியாக்கமாக ஆரம்பகால இடதுசாரிகள் பயன்படுத்தினர். அச்சொல்லின் தொடக்கப் பொருள் என்பது ‘தகுதி கொண்ட உயர்வட்டத்தினரின் இயல்பு’ என்பது. அதன் பழையகால நேர்ப்பொருள் ’உயர்குடிப் பிறந்த, உயர்பதவிகொண்ட, அதன் விளைவாகவே உயர்கல்வி கொண்டவர்களின் ரசனையும், வாழ்க்கைமுறையும்’ என்பது. அது மார்க்ஸியர்கள் எதிர்த்த கருத்துநிலை. ஆகவே அதை மேட்டிமைவாதம் என மொழியாக்கம் செய்தனர். ஆனால் கலைகளில், இலக்கியத்தில் எலைட்டிசம் என்னும் சொல் மேலும் மேலும் விரிவடைந்து நுட்பமான பல பொருட்களைக் கொண்டதாக ஆகியது. இலக்கியத் திறனாய்வில் அது பின்னர் அதுவரையிலான மிகச்சிறந்த மரபை ஓர் அளவுகோலாக முன்வைத்தலை குறித்தது. ஒரு சூழலில் இலக்கியத்திலும் கலைகளிலும் மிகச்சிறந்த தேர்ச்சிபெற்றவர்களின் உள்வட்டத்தைக் குறிக்க பயன்பட்டது. class எனும் சொல்லுக்குச் சமானமான சொல்லாக அது மாறியது. இலக்கியவிமர்சனத்தில், குறிப்பாக பிரிட்டிஷ் இலக்கிய விமர்சனத்தில், எலைட்டிசம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல. அது ஒரு ஆதாரமான கருத்துநிலை மட்டுமே . எந்தச்சூழலிலும் அது அடிப்படையானது, தவிர்க்கமுடியாதது. ஒரு சூழலில் எலைட்டிசம் இல்லாமலாவது என்பது மரபும் தரமும் இல்லாமல் ஆவதுதான். கபிலனும் கம்பனும் எழுதிய மொழி தமிழ் என ஒருவன் உணர்வது மேட்டிமைவாதம் அல்ல. இன்று எழுதும் கவிஞனிடம் அவன் அந்த தொடர்ச்சியையும் அதற்குரிய தரத்தையும் எதிர்பாப்பதும் மேட்டிமைவாதம் அல்ல. அப்படி ஓர் அளவுகோல் இல்லாத இலக்கிய – பண்பாட்டுச்சூழல் இருக்க முடியாது. எலைட்டிசம் என்பது எங்கே எதிர்மறைப் பண்பு கொண்டதாக ஆகிறது? ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிகர் என்பது அடிப்படை நெறி. அங்கே ஒரு வட்டத்திற்கு கூடுதல் உரிமைகள் உண்டு என்று பேசப்படுமென்றால் அங்கே எலைட்டிசம் எதிர்மறையான சொல். அதாவது, எங்கே உரிமைகள் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் எலைட்டிசம் எதிர்மறையானதே. மானுடர் அனைவரும் உரிமைகள் விஷயத்தில் சமமானவர்கள் , தகுதிகள் மற்றும் பொறுப்புகளில் அப்படி அல்ல. ஆனால் இன்றைய உலகம் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் எலைட்டிசத்தை முழுமையாக ஏற்கிறது. பணமிருந்தால் நீங்கள் விமானநிலையத்தில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. எலைட் கிளாஸ் என்றே அந்த அமைப்புக்குப் பெயர் இருக்கும். நீதிமன்றத்தில்கூட உங்களுக்கு தனி உபசரிப்புதான். செல்வத்தால், பதவியால், பிறப்புசார்ந்த பின்புலத்தால் உரிமைகளில் ஒருவர் முன்னுரிமை கோரினால் அந்த எலைட்டிசம் கண்டனத்திற்குரியது- ஆனால் அதை இங்கே நாம் இயல்பாக ஏற்க பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நமக்கு எந்த அரசியல்வாதி மீதும், எந்த செல்வந்தர் மீதும் புகார்களே கிடையாது. நம்முடைய குறி முழுக்க நம்மில் ஒருவர் அறிவுத்திறனாலோ சாதனையாலோ சற்று மேலானவர் என்று அறியப்பட்டால் அவரை தாக்கி அழிப்பதில்தான். ஓர் அறிவார்ந்த சூழலில், அறிவுத் தகுதியால் மேலிடத்தில் இருப்பவர்களின் தரப்பு ஒன்று எலைட்டிசம் என்னும் சொல்லால் குறிப்பிடப்பட்டதுண்டு. இன்று அச்சொல்லை பரவலாக பயன்படுத்துவதில்லை, வேறு அரசியல் சரிநிலை கொண்ட சொற்கள் வந்துவிட்டன. உதாரணமாக, பல அறிவுத்துறைகளில் peer circle என்னும் சொல் புழக்கத்திலுள்ளது. அதை மேட்டிமைவாதம் என்று மொழியாக்கம் செய்வதைப்போல அபத்தம் வேறில்லை. ஒரு துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களும் பிறரும் ஒன்றல்ல. பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களின் கருத்தும் பிறர் கருத்தும் சமானம் அல்ல. அறிவுத்துறைகளில் அதில் பயிற்சியற்றவர்களின் எக்கருத்துக்கும் எந்த மதிப்பும் இல்லை. அப்படி ஒரு நிலை உண்டு என்றால் அங்கே அறிவுச்செயல்பாடே இல்லை என்றே பொருள். சமூகவலைத்தளங்கள் உருவான பின் எவரும் எங்கும் எதைப்பற்றியும் கருத்துசொல்லலாம் என்னும் நிலை உள்ளது. அவர்கள் ஒரு துறையின் சாதனையாளரை ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் விமர்சனமும் ஏளனமும் வசையும் புரிகிறார்கள். ஆனால் அந்த பாமரரின் கருத்தை அந்த சாதனையாளர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றால் அவரை மேட்டிமைவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். கொஞ்சம் சிந்திப்பவர்களாவது இந்த மாபெரும் அசட்டுத்தனம் பற்றிய புரிதல் கொண்டிருக்கவேண்டும். இலக்கியத்தில் , சிந்தனையில் எலைட்டிசம் என்பது பலசமயம் மரபு, தரமதிப்பீடு என்னும் இரண்டு அடிப்படைகளை முன்வைப்பதாகவே அமைகிறது. இன்று ஒருவர் தமிழில் சிறுகதை எழுதினால் அவர் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் என நீளும் ஒரு மரபின் தொடர்ச்சியாக ஆகிறார். அந்த மரபு உருவாக்கிய அளவீடுகளை அவர் முன்னெடுக்கவேண்டும், கடக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை முன்வைப்பவர் ஒரு ’எலைட்’ தான். உலகம் முழுக்க சென்ற இருநூறாண்டுகளில் சிறுகதை என்னும் கலைவடிவம் பெற்ற வெற்றிகளை அறிந்த ஒருவர் சிறுகதை எழுதுபவரில் அந்த அளவீட்டை போட்டுப்பார்க்கிறார், எதிர்பார்க்கிறார். அவரும் ’எலைட்’ தான். அந்த எதிர்பார்ப்பு வழியாகவே இலக்கிய விமர்சனம் செயல்படுகிறது. அதன் வழியாகவே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி அல்ல என்று சொல்வோம் என்றால் எழுதப்படும் எல்லாமே இலக்கியம்தான் என ஆகும். அப்படி ஒரு பார்வை இருப்பதை சிறுகதை எழுதும் எவருமே ஏற்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் இருக்கும் படிநிலை என ஒன்றை அவர்களே மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். அதற்கு கீழே என அவர் நினைக்கும் ஒருவரிடம் அவரை ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என்று சொல்லிப்பாருங்கள் தெரியும், கொந்தளித்துவிடுவார். ரசனை என்பதே மதிப்பீடும் ஒப்பீடும் மட்டுமே. மேலான கலையை, இலக்கியத்தை அறிந்து அதை முன்வைத்துக்கொண்டே இருப்பவர் கலையையும் இலக்கியத்தையும் முன்னெடுக்கும் சக்தி. அது வ.வே.சு.ஐயரோ, பாரதியோ, புதுமைப்பித்தனோ, க.நா.சுவோ, சி.சு செல்லப்பாவோ, வேதசகாயகுமாரோ எவராயினும். அவ்வாறு அறிவார்ந்த தகுதிகொண்டவர்கள் ஒரு வட்டம். ஒவ்வொரு தலைமுறையிலும் அப்படி ஒரு வட்டம் உருவாகி வந்திருக்கும். ஒவ்வொரு துறையிலும் அப்படி ஒரு வட்டம் திரண்டிருக்கும். அதற்கு ஓர் அறிவார்ந்த ஆற்றல் இருக்கும். சாதியால், செல்வத்தால் உருவாகும் வட்டம் அல்ல அது. திறனால், சாதனையால் உருவாவது. அதை எதிர்க்கவேண்டுமென்றால் அதற்கு எதிரான இன்னொரு அறிவார்ந்த வட்டத்தை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி. அதற்கு மாறாக அந்த அறிவார்ந்த வட்டத்தையே ஒருவர் மேட்டிமைவாதம் என சொல்வாரென்றால் அவருக்கு அறிவியக்கமே அறிமுகமில்லை என்று பொருள். சிந்தனைக் களத்திலும் இன்னொருவகை எலைட்டிசம் உண்டு. ஒரு சிந்தனையாளன் தன் சூழலைப்பற்றிய விமர்சனத்தில் இருந்தே தொடங்குகிறான். தான் காணும் சமகாலச் சூழலில் அவன் கொள்ளும் முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு ஆகியவையே அவனை சிந்தனைசெய்ய வைக்கின்றன. சமூகவிமர்சனம் இல்லாமல் இலக்கியம் இல்லை. தத்துவம் இல்லை. சமூகப்பணியும் நிகழ்வதில்லை. முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு எனும் மூன்றும் ஒருவன் சமூகத்தில் இருந்து விலகி சற்றேனும் அன்னியமாகும்போதே உருவாகின்றன. ‘மக்களோடு மக்களாக’ இருப்பவனுக்கு அவை உருவாவதில்லை. அவனுக்கு எந்தச் சிக்கலும் தென்படுவதில்லை. எந்தக்குறைபாடும் சமூகக்குறைபாடாகத் தோன்றுவதுமில்லை. சிந்தனையாளன் சமூகத்தின் ஒரு பகுதியாக நின்றே சமூகத்தை அறிகிறான், சமூகத்தைவிட மேலெழுந்து நின்றே அதை விமர்சனம் செய்கிறான். ஆகவே எந்தச் சிந்தனையாளனுக்கும் ஒரு ’எலைட்’ தன்மை இருந்தே தீரும். அவன் சமூகத்தின் சராசரியின் ஒருபகுதியாக இருக்கமுடியாது. சமூகத்தின் பொதுச்சிந்தனைகள், பொது உணர்வுநிலைகளில் அவனும் கரைந்திருக்க முடியாது. அவன் ஒரு படி மேல்தான். அதனால்தான் அவனுக்கு அந்தப்பார்வை அமைகிறது .உரிமையால் அல்ல, அறிவால் உருவாவது அது. அந்த அறிவையே அவன் முன்வைக்கிறான். அந்த விமர்சனத்தால் சமூகச் சராசரியாகத் திகழ்பவர்கள் எரிச்சல் கொள்வார்கள், எதிர்ப்பார்கள். அது இயல்பு. ஆனால் அதற்காக ஓட்டுப்பிடிக்கும் அரசியல்வாதிகள் போல கலைஞன், சிந்தனையாளன், இலக்கியவாதி சமூகத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி ஒருவன் விமர்சனம் செய்யாமலிருந்தால் அவன் வெறும் பசப்புவாதி. அந்த விமர்சனத்தால் விமர்சனத்துக்குள்ளாகிறவர்கள் புண்படுவது இன்றுநேற்றல்ல, சாக்ரடீஸ் காலம் முதல் நிகழ்வது. கபிலர் காலம் முதல் நிகழ்வது. சாக்ரடீஸ் நஞ்சூட்டப்பட்டார். கபிலர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த விமர்சனத்தால் புண்படும் பாமரர்கள் தங்கள் பாமரத்தனத்தால் கண்டடைந்து பயன்படுத்தும் சொல்லாக இன்று ‘மேட்டிமைவாதம்’ எனும் சொல் ஆகியுள்ளது. அதாவது உரிமைகளில் மேட்டிமை பேசுபவர்களை இயல்பாக ஏற்கும் நமது பாமரர்கள் அறிவால் மேன்மை கொண்டிருப்பவர்களை ஏற்காமல் எகிறுகிறார்கள். இதுவே நம் சூழல். இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதி தன் மேல்நிலையை தானே உணர்ந்திருக்க வேண்டும். ஆம், இந்த இடத்தில் நான் ஒருபடி மேல்தான், ஆகவேதான் இதைச் சொல்கிறேன் என சொல்லும் நிமிர்வு அவனுக்குத் தேவை. அவனை மேட்டிமைவாதி என பாமரர் சொல்லும்போது அவன் கூசவேண்டியதில்லை. அது பாமரரின் புரியாமையின் விளைவான எரிச்சல் மட்டுமே என்று அவன் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நிமிர்வும் நம்பிக்கையும் இல்லை என்றால் அவன் காலப்போக்கில் சிந்தனையை இழப்பான். அவனுடைய விமர்சனம் மழுங்கும். அவன் இலக்கியத்தில் செயலற்றவனாக ஆவான். இன்னொன்றுமுண்டு, வாசகர்களாக அறிமுகமாகும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் நான் இதைச் சொல்கிறேன். ஓர் அறிவியக்கவாதி நினைத்தால்கூட பாமரர்களுடன் இணைந்து அவர்களில் ஒருவராக இருக்க முடியாது. நடிக்கலாம், நடிப்பு சலிப்பையே ஊட்டும். இங்கே ஒரு குடிகாரர் குடியின் பொருட்டு நாணமடைவதில்லை. ஒரு தீனிப்பைத்தியம் அதன்பொருட்டு கூச்சமடைவதில்லை. ஆனால் ஒரு புத்தகம் படிப்பவன் அதன்பொருட்டு கூச்சமடைந்து புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது என்றால் அது வெறுமே இந்த சூழலின் தேக்கநிலை மட்டுமல்ல. அந்த இலக்கிய வாசகனின் ஆளுமைக் குறைபாடும்கூடத்தான் . அவனுக்கு தன் செயல்பற்றி தனக்கே ஒன்றும் தெரியவில்லை. தன்மேலேயே நம்பிக்கை இல்லை. அறிவியக்கம் மீது நம்பிக்கை இல்லை. அப்படியென்றால் எளியோரை இகழவேண்டுமா, அன்னியப்படுத்திக்கொள்ள வேண்டுமா? இதை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பாமரர்களின் பாமரத்தனத்தைச் சுட்டிக்காட்டுவது என்பது அவர்களை மக்கள் என்றவகையில் இகழ்வதல்ல, அங்கே அந்த பாமரத்தனம்தான் இகழப்படுகிறது. பாமரத்தனம் சுட்டிக்காட்டப்படுவது என்பது மேட்டிமைத்தனத்தால் அல்ல, அதை வென்று அச்சமூகம் மேலே செல்லவேண்டும் என்னும் அறிவார்ந்த விழைவால்தான். அறியாமையையே அறிஞன் எதிர்கொள்ளவேண்டும். அறியாமையைக் கொண்டாடும் அறிஞன் இருக்கவியலாது. ஆகவே இடித்துரைத்தலும் கடிந்துரைத்தலும் இல்லாமல் சிந்தனையாளன் செயல்படவே இயலாது. எந்தச் சிந்தனையாளனும் மக்களை வெறுப்பதில்லை. சமூகத்தை வெறுப்பதில்லை. மக்கள்மேலும் சமூகம் மேலும் கொண்ட ஈடுபாட்டல்தான் அது மேம்படவேண்டும் என அவன் தன் வாழ்க்கையை அதற்காகச் செலவிடுகிறான். தன்னலமே உருவான மக்கள் நடுவே அவன் அனைத்தையும் அதன் பொருட்டு இழக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் மக்ககளில் ஒருவனாக உணர்ந்துதான் அவர்களை அறிகிறான். மக்களில் இருந்து மேலே நின்று விமர்சிக்கிறான். எந்த நல்ல எழுத்தாளனையும் கவனியுங்கள், அவன் எளிய சாமானிய மனிதர்களையே மிகுந்த உயிர்ப்புடன் எழுதியிருப்பான். அது பேரன்பால்தான். ஆனால் அவன் அவர்களைக் கூர்ந்து கவனித்திருப்பான். அந்த கவனம் நிகழ்வது அவன் அவர்களை கொஞ்சம் விலகிநின்று பார்ப்பதனால்தான். மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உண்மையில் மேட்டிமை நோக்கு கொண்டவர்கள், ஆனால் அறிவார்ந்த பாமரர்கள், அவர்களுக்கு அறிவுசார்ந்த மேல்நிலை கொண்டவர்களைக் காண்கையில் உருவாரும் எரிச்சலையே அப்படி வெளிப்படுத்துகிறார்கள். மெய்யாகவே அச்சொல்லை பயன்படுத்துபவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மேட்டிமைவாதம் என்னும் சொல்லை ஓர் அரசியல்சொல்லாக கையாள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தாங்கள் மக்களில் ஒருவரல்ல என்னும் தெளிவு எப்போதுமிருக்கும். மக்களுக்கு தலைமைதாங்குபவர்களாக, வழிகாட்டுபவர்களாக, மக்களின் மனசாட்சியாக மட்டுமே அவர்கள் தங்களை எண்ணியிருப்பார்கள். அந்த மேட்டிமையுணர்வால்தான் அவர்கள் போராடுகிறார்கள், தியாகம் செய்கிறார்கள். நம் சூழல் செல்வத்தின் மேட்டிமையை, அதிகாரத்தின் மேட்டிமையை இயல்பாக ஏற்றுக்கொள்வது. அதை அடைய ஒவ்வொருவரும் முட்டிமோதுவது. ஆனால் அறிவின் மேட்டிமையை அது ஏற்பதில்லை. அறிவின் மேட்டிமையை, கலையின் மேட்டிமையை அது குனிந்து நோக்குகிறது. இன்று ஒவ்வொரு அறிவுஜீவியும் கலைஞனும் அறிவின் மேட்டிமையை அந்த பாமரப்பெருஞ்சூழலுக்கு முன் ஆணித்தரமாக முன்வைத்தாக வேண்டும். https://www.jeyamohan.in/194622/1 point
-
போதமும் காணாத போதம் – 12 கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான். வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள். ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை. “கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார். “சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு” “அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்” சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன். அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார். “உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்” “எடியே வே*, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்” அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள். மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது. ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்யாண்டி” என்று ஏசினார். ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான். பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார். சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது. அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன் அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்” “எங்க” “இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்” “உங்கட குடும்பத்துக்கு என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்” “தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்” “நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது” “அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்” “அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?” “நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்” “எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்” “எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை” “இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன. “வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார். “ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்” என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள். கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது. முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ” “இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார். பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?” “அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள். சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான். “பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல” “நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான். இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும் ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார். கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர். வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர். “இருவரும் கணவன் மனைவியா” “ஓம்” “சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே” “எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்” “ஏன்” “துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன். https://akaramuthalvan.com/?p=14811 point
-
ஆட்டுபவர்கள் யாரென்று தெரியாமலா அருணா ஆடியவர்.. அருணா ஒன்றும் விரல் சூப்பும் பேபி அல்ல.. அவருக்கு யார் யார் தன்னை தொடர்புகொண்டார்கள் என்னவெல்லாம் சொல்லி தன்னை இப்படி சொல்லவைத்தார்கள் என்று எல்லாம் தெரியும்.. தலைவர் குடும்பத்துக்கு களங்கம் வரவிடக்குடாது என்று உளமார அவர் நினைத்தால் அவர் ஒரு அறிக்கையிலையே அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி இந்த ஆட்டுவிப்பவர்களின் கதையை முடிக்கலாம்.. பத்து நாள் வாயையும் சூ** யும் மூடி பொறுத்திருந்து இப்ப சேரமான் துள்ளுவதன் காரணம் அருணா அக்கா யாரையும் காட்டிகுடுக்க மாட்டா எண்டு கன்பார்ம் பண்ண வெயிட் பண்ணி உறுதியாக தெரிந்தபின் ஆடுது அந்த ஆடு..1 point
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html1 point
-
1 point
-
பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்.. என்றப்போ.. பாகிஸ்தானிய.. சோமாலிய.. கிழக்கு ஐரோப்பிய.. மற்றும் உக்ரைன் மாபியாக்களை இறக்கி வைச்சு குசலம் விசாரிச்சால் இப்படித்தான் ஆகும். நோர்வேயில் முன்னரும் தமிழ் குழுச் சண்டை இருந்தது. இது தனிப்பட்ட விவகாரமாக இருக்கலாம். அங்க இப்ப எங்கட ஆக்கள் மத்தியில்.. கேய்.. லெஸ்பியன் கூடிட்டுது. இப்படியான கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.0 points