Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்24Points8975Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்6Points7136Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20348Posts -
பகிடி
கருத்துக்கள உறவுகள்4Points597Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/16/24 in all areas
-
மரணம்
5 points2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.5 points
-
மரணம்
5 pointsஅவனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க, அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம் ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன். அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன்.5 points
-
மரணம்
4 pointsமண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது. அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன். 16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள். அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான். அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன். முற்றும்.4 points
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி, அறிமுகமில்லாத வேற்று மனிதர்களை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவோ குழந்தைகளை தொடவோ தூக்கி கொஞ்சவோ , மாமாக்கு ஒரு அவ்வா கொடுங்கோ என்று கேண தனமா உறவு கொண்டாட அனுமதிக்கவோ தனியாக எங்கும் அனுப்பி வைக்கவோ அனுமதிப்பது சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு சமம். ஒருசில மேலைநாடுகளில் குறிப்ப்பிட்ட வயதுக்கு பின்னர் பெற்ற தந்தையே தன்னோட மகளுக்கு உடை மாற்றுவது சட்டப்படி குற்றம், ஆரம்பத்தில் என்னடா இது கேவலமான சட்டம் என்று தோன்றியது, பின்னர் பெற்ற மகள் மீதே கை வைத்த கேவலமான ஒரு சில மனிதர்களை பார்த்த பின்பு சட்டம் பற்றி கேவலமா சிந்திச்சது நான்தான் என்று பின்பு தோன்றியது. அஞ்சலிகள் அந்த பிஞ்சுக்கு.4 points
-
மரணம்
3 pointsநான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.3 points
-
மரணம்
3 points2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.3 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர் தயாரித்த தீர்வுப் பொதி பற்றி அறியலாமா?2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
@Justin @Kandiah57 எனது பார்வையில், கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது. 2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே உள்ளனர். அவ்வாறாக சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன் அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும்.2 points
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.2 points
-
மரணம்
2 pointsஒரு ஏழெட்டு நாட்கள் இருக்கலாம். அவந்து சகோதரன் தொலைபேசியில் அழைத்தான்."நான் இன்றைக்கு வேலைக்கு வரவில்லை, அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு வருகிற வாரம் கொண்டு செல்லவிருக்கிறோம், அம்மாவாலும், அப்பாவாலும் அதனைத் தனியே செய்ய முடியாது. ஆகவேதான் நான் லீவெடுத்து அதனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நாளைக்கு நிச்சயம் வருவேன், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். "ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமாக எடு. நாளைக்கும் நீ வரவேண்டும் என்றில்லை, பார்த்துச் செய்" என்று கூறினேன். நன்றியென்று குறுந்தகவல் வந்தது. மறுநாள் அவன் வரவில்லை, நானும் அவனை அழைத்துத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. பணி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கைத்தொலைபேசிக்குக் குருந்தகவல் ஒன்று வந்திருந்தது. அது இப்படிச் சொல்லிற்று, "வணக்கம் அன்பர்களே, துரதிஸ்ட்டவசமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நாங்கள் எங்கள் சகோதரன் ஜோஷை இழந்துவிட்டோம். அவனின் மனைவியும், எங்கள் குடும்பமும் அவனைச் சூழ்ந்திருக்க, அவன் அமைதியாக எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். தயவு கூர்ந்து உங்களின் வேலைத்தள அணிகளில் இருக்கும், எனது சகோதரன் குறித்து அக்கறைப்படும் எல்லோருக்கும் இதனைத் தெரியப்படுத்துவீர்களா? உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றி. உங்களுடன் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்" என்று அது சொல்லியது. மனதில் இடி இறங்கியது போன்ற உணர்வு. கண்கள் கலங்கிவிட்டேன். முதன்முறையாக ஒரு வெள்ளைக்காரனுக்காக மனம் அழுதது. அவன் எனக்குச் சொந்தமில்லை, எனது இனமில்லை, எனது நெருங்கிய நண்பர் வட்டத்திலும் அவன் இல்லை. ஆனாலும் மனம் அழுதது. இது எப்படிச் சாத்தியம்? ஏன் அவனுக்கு? இதுதான் எனது மனதில் எழுந்த கேள்விகள். அவனைச் சென்று பார்க்கமுடியாத வருத்தமும் சேர்ந்து அழுத்த முழுவதுமாக மனமுடைந்து போனேன்.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன் 1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர் 2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார் 5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர் 6) மேற்குக்கு விசுவாசமானவர் 7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை 8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும் 9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭) 11) தி மு க அனுதாபி2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
யாப்பின் படி நடக்காது பிழை செய்துவிட்டு இப்பொழுது பிடி பட்ட பின்பு ஐயோ தமிழ் மானம் காற்றில் பறக்குதே, பிழை பிடித்தவர்கள், வழக்குப் போட்டவர்கள் துரோகிகள், சகுனிகள் என்று புலம்பி என்ன பிரியோசனம்? "செய் வினை திருந்தத் செய்2 points
-
மரணம்
2 pointsரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத் தான் இருக்கும்..! தொடருங்கள்…!2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த. ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம்.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
2 points
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நம்பும்படியாக இல்லையே. இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால் அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது: காசு வாங்கிக் கொண்டு அரச வேலை எடுத்துக் கொடுத்தல் பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்). வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார். இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.1 point- மரணம்
1 pointஉங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.1 point- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இதுக்குத் தான் போதை ஒரு சாட்டு என்றேன்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதைப் பற்றி பல இடங்களில் விவாதித்திருப்பதால் மீள உரைத்தல் அலுப்புத்தரலாம்: ஆனால் இந்தப் பின் கதவால் வந்தார்கள் என்ற கருத்துக் கூட ஒரு மென்மையான சதிக்கதையே தவிர ஆதாரங்கள் கொண்ட கருத்துக்கள் , சந்தேகங்கள் அல்ல. என்னைப் பொறுத்த வரை, காழ்ப்புணர்வு தான் இவற்றின் மிக ஆழமான வேர். "போரை, ஆயுத வழியை அரசியலுக்கு வரமுதலே ஆதரிக்கவில்லை" என்று சுமந்திரன் சொல்வதை அந்த வழியில் தான் தமக்கு பிழைப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்போர் அச்சத்துடன் பார்ப்பதும் இன்னொரு காரணம். ஆனால், முதலில் தேசியப் பட்டியலில் வந்தவர் அதன் பின்னர் இரு தேர்தல்களில் அதே தீவிர தேசியம் சாராத கொள்கையைச் சொல்லியும் வென்றார் அல்லவா? எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான். இத்தகைய தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் காழ்ப்பிலும், வெறுப்பிலும் உழல்வோர், பூடகமாக சுமந்திரன் வாழ்க்கை முடிவு பற்றியெல்லாம் எழுதி தங்கள் இருண்ட ஆன்மாவைத் தான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointநுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி அக்கா.1 point- மரணம்
1 pointஇப்படியான. ஒருவருடன் கூடவே பயணித்திருக்கிறீர்கள் என்று வாழ்நாளில் சந்தோசப்படுங்கள். ஒரு விளையாட்டு வீரன் மிகவும் பரந்த மனப்பான்கும் எல்லோருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் வெற்றி தோல்விகளை தாங்கக் கூடியவனாகவும் இருப்பார்கள் என்பதை உங்கள் நண்பன் நிரூபித்துள்ளான். அதேநேரம் விளையாட்டு வீரர்கள் பலர் சிறிய வயதில் ஆங்காங்கே அடிபட்ட பழைய காயங்களால் இளமையிலோ முதுமையிலோ இப்படியாக சுகவீனமடைகிறார்கள். உங்களுடன் எங்களையும் சேர்த்து வேலைத் தளத்திலிருந்து கடைசி ஊர்வலம்வரை அழைத்து சென்றுவிட்டீர்கள். HATS OFF.1 point- மரணம்
1 pointநன்றி ரஞ்சித் அண்ணை. இயற்கையின் விடை காணமுடியாத கேள்விகளில் மனம் தொலைகிறது. உங்கள் பதிவும் ஒவ்வொருவருக்கும் பாடமாகிறது.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointயாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுனாவிலானுக்கு என் வாழ்த்துக்கள். வளமோடும் மகிழ்வோடும் வாழ்க1 point- மரணம்
1 pointபொறுமையாக உங்கள் மன ஒடடத்தை உடனுக்குடன் கள உறவுகளுடன் பகிர்ந்தமைக்கு நனறி. உங்கள் மனச்சுமை சற்று இறங்கியிருக்கும். வாசிக்கும் போது இறுதிக் கட்ட்த்தை நெருங்க கண்கள் அந்த ஒரு இதயத்துக்காக பனித்தன. palliative care இந்த சொல்லை சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன். பலியாக போகும் களமா என்று எண்ணத்தோன்றியது .மரணம் கொடிது ..எல்லோரும் சந்திக்க வேண்டிய ஒன்று. யார் தடுத்தாலும் அழுதுபுலம்பினாலும் வந்தே தீரும். இளம் வயது பாவம் .அவனைப்பற்றிய உங்கள் ஆரம்ப கால மன நிலையை மாற்றிய பதிவு. அவனுக்காக பிராத்தியுங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் நலனைப்பார்த்துக் கொள்ளுங்கள். கள உறவுகளின் அஞ்சலி அவரை சேரும்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும் இது சாதாரணமானது ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர் அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு மூன்று பேர் தேசிய மாகாநாட்டில் பங்கு பற்றி வாக்கு போட்டு தலைவர் பொருளாளர் செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள் Berlin Düsseldorf Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு இந்த கிராமங்களின். தலைவர்கள் தான் நாளடைவில் நகரம் மாநிலம் நாட்டு தலைவர்களாக பதவியேற்று இருக்கிறார்கள் அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான் பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள் தற்போதைய பிரதமர் கூட ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர் நாட்டின் பிரதமர் பதவி வகிக்கிறார் நான் அறிந்த வகையில் எவருமே திடீரென ஒடிவந்து மாநில அரசில் சரி மத்திய அரசில் சரி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை அது முடியாத காரியம் கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து அனுபவங்களை பெற்று மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள் 65 வயதுக்கு மேல் ஐனதிபதி பதவி தவிர மற்ற பதவிகளில் இருப்பது இல்லை தங்களாகவே வெளியோறி விடுவார்கள் தமிழரசு கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை??? யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர் யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? கைதடி யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம் அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் இவற்றை தவிர்ப்பது யார் ??? எனது அப்பா சொன்னார் இங்கே பார் படிக்கும் போது வேலைகளை பழக வேண்டும் அப்போ தான் எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை பார்க்க முடியும் உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும் அதாவது அழிவடையும் நாங்கள் ஒரு சிறு குடும்பம் இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி அழிந்து போகாமல் இருக்க என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது1 point- மரணம்
1 point- மரணம்
1 pointகதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.1 point- மரணம்
1 pointஅண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁1 point- மரணம்
1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பலஸ்தீனத்திற்காக பல ஆயுத குழுக்கள் உருவாகி அழிந்து போகின்றது..பேச்சுவார்த்தை என பல நிகழ்வுகள் நடை பெறுகிறது ...PLO போய் காலங்கள் கடந்தும் பலஸ்தீனம் என்ற கருத்தியல் இன்னும் நிற்கின்றது அது போல புலிகள் போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க்கும் ...தமிழ் தேசியம் குறும் தேசியம் என சிலர் புலம்பி கொண்டிருப்பார்கள் அது அவர்கள் சுதந்திரம் ...1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புத்திசாலி மட்டுமே சகுனியாகலாம் இல்லாவிட்டால் மங்குனி என்றுதான் அழைப்பார்கள். 🤣1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார்.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதற்கான காரணத்தை கோசான் குறிப்பிட்ட நினைவு: "மத்திய கிழக்கின் பாரிஸ்" என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட லெபனான், பலஸ்தீன அகதிகளை ஏற்றுக் கொண்டது. அங்கே வேரூன்றி வாழ்ந்த பலஸ்தீன வழி மக்கள், இஸ்ரேல்/மேற்கு எதிர்ப்பு வன்முறையை ஆதரித்து ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் உருவாக வழி வகுத்தார்கள். இன்று லெபனானின் அரச இராணுவம் கூட ஹிஸ்புல்லாவின் பகுதிக்குள் செல்ல முடியாதளவு லெபனான் சீரழிந்து கிடக்கிறது. இந்த நிலையைக் கண்டு பயந்து தான் எகிப்து, ஜோர்தான், அமீரகம் ஆகிய எல்லா அரபு நாடுகளும் பலஸ்தீன மக்களை செற்றிலாக அனுமதிப்பதில்லை!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 🤣1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது1 point- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
1 pointதற்போதைய அரசியல் நிலவரத்தையும் அதற்காக நடக்கும் நாடகங்களையும் அலசியுள்ளீர்கள் ......பார்ப்பம் என்ன நடக்குதென்று.......! 😁1 point- மரணம்
1 pointஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.1 point- மரணம்
0 pointsஇந்தப் பலியேடிவ் கெயர் பற்றியும் சொல்ல வேண்டும். வாழ்வு முடியும் தறுவாயில், இனிமேல் அவர்களை மீள அவர்களின் பழைய வாழ்விற்குக் கொண்டுவர முடியாது என்கிற நிலை வரும்போது, சிகிச்சைகள் இன்றி, அவர்களை அவர்கள் பாட்டில், வாழ்வு முடியும்வரைக்கும் மகிழ்வாக வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை. வெகுசில வைத்தியசாலைகளும், அநேகமான வயோதிபர் பராமரிக்கும் நிலையங்களும் இதற்கான வசதியைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையங்களுக்குச் செல்வோர் ஓரிரு வாரங்களில் இயற்கை எய்துவதுதான் வழமை. நீங்கள் உங்களின் இறுதிநாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லி, இறுதி யாத்திரிகைக்கு ஆயத்தப்படுத்த கால அவகாசம் கொடுக்கும், வாழ்வின் இறுதி நிலையின் கடைசிப்படி என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியில்த்தான் அவனும் இருந்தான்.இதனைக் கேட்டவுடன், அவன் உயிருடன் இருக்கும்போது எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எழவே, "உனது அண்ணாவை நான் வந்து பார்க்க விரும்புகிறேன், எப்படிச் செய்யலாம்?" என்று கேட்டேன். "அவன் வீட்டில்த்தான் இருக்கிறான், நண்பர்கள் வந்து அங்கு, இங்கென்று அழைத்துச் செல்வார்கள். அவனது மனைவியும் அவன் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறாள்" என்று கூறிவிட்டு, "நீ அவனுடன் பேசு, நிச்சயம் பேசுவான். உனக்கு விருப்பமான நேரத்தைக் கேட்டு, போய் பார்த்துவா" என்று சொன்னான். "என்னை அவனுக்கு அடையாளம் தெரியும் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டேன். "உனது பெயரை அவன் மறந்திருக்கலாம், ஆனால் உன்னைக் காணும்போது உன்னைப்பற்றி அவன் பேசுவான், போனால் உனக்குத் தெரியும்" என்று அவன் கூறவே, எப்படியாவது பார்த்துவிட மனம் துடித்தது. வேலைத்தளத்தில் என்னுடன் பணிபுரியும் இன்னொரு நண்பனுடன் இதுபற்றிக் கேட்டேன். "நீ போவதென்றால் நானும் வருகிறேன்' நேரத்தைச் சொல்லு" என்று கூறினான். வீடு வந்ததும், "சனிக்கிழமை ஜோஷைப் பார்க்க செல்லவிருக்கிறேன், பாவம், இன்னும் கொஞ்ச நாள்த்தான் வாழப்போகிறான், நானும் அண்டியும் போகிறோம்" என்று கூறவும், "சனிக்கிழமை பிரியாவின்ர மகளின்ர சாமத்திய வீடு இருக்கெண்டெல்லோ சொல்லிக்கொண்டுவாறன்? அண்டைக்குப் போகப்போறன் எண்டுறியள்?" என்று முதலாவது தடை வீழ்ந்தது."எத்தனை மணிக்குச் சாமத்திய வீடு? மத்தியானத்துக்கிடையில வந்துருவன்" என்று கூறவும், "காலமை 8 மணிக்கு அங்க நிக்க வேணும்" என்று தடை இறுகியது. போச்சுடா, அவனைப் பார்க்க முடியாது என்று எண்ணிக்கொண்டு அண்டிக்கு (வேலைத்தள நண்பன்) தொலைபேசி எடுத்து, "மச்சான், சனிக்கிழமை சரிவராது போல கிடக்கு, வாற கிழமை போகலாமோ?" என்று கேட்கவும், "சரி, போகலாம்" என்று கூறினான். கடந்தவாரம் அவனது சகோதரனுடன் பேசும்போது அவன்பற்றி மீளவும் கேட்டேன். "இப்போது படுக்கையாகி இருக்கிறான். யாருடனும் பேசுவதில்லை. எனது பிள்ளைகள் அவனது கட்டிலின் அருகில் சென்று பெரியப்பா என்று காதில் பேசும்போது சிறிய புன்னகை மட்டும் பதிலாக வருகிறது. அவனை இந்த நிலையில் பார்க்கவே கஸ்ட்டமாக இருக்கிறது" என்று கூறினான். "அவனை இனியும் பார்க்க வரலாமா?" என்று கேட்டபோது, "நான் நினைக்கவில்லை, அவனால் எவருடனும் பேசவோ அல்லது எவரையும் பார்க்கும் உடல் நிலையோ இப்போது இல்லை. அம்மாவையும் அப்பாவையும் தவிர வேறு எவரும் அவனருகில் தற்போது இல்லை". என்று மிகவும் அமைதியாகக் கூறினான். அவனைப் பார்க்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வும், கூடவே வந்துசென்ற சாமத்திய வீட்டுத் தடையும் ஆத்திரத்தையும் ஆற்றாமையினையும் எனக்குத் தந்தது.0 points- மரணம்
0 pointsஅவன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிந்து சில மாதங்களாக அவன் பற்றி விசாரித்து வருகிறேன். அவனது சகோதரனுடனான எனது நாளாந்த பேச்சுக்களில் அவனும் நிச்சயம் இடம்பெறுவான். சிலவேளைகளில் நம்பிக்கையுடன் அவன் பேசும் போது, "கடவுளே அவன் தப்பிவிடவேண்டும்" என்று மனதிற்குள் நினைப்பதுண்டு. வேலைத்தளத்தில் பலருக்கு அவன் முன்மாதிரியாகத் தோன்றியவன். வாழ்வினை மகிழ்ச்சியாக வாழும் வெகுசிலரில் அவனும் ஒருவனாக இருந்திருக்கிறான். எவ்வளவுதான் நம்பிக்கைகள் இருந்தாலும், யதார்த்தம் என்று இருக்கிறதல்லவா? அதுதான் அவனது பேச்சுக்களில் அடிநாதமாக இருக்கும். ஒவ்வொருநாளும் எமது பேச்சுக்களின் முடிவில், "நாம் மனதளவில் தயாராகி வருகிறோம், அம்மாவையும் அப்பாவையும் நினைக்கும்போதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது" என்று கூறி முடிப்பான். அவனுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள். அவனது சகோதரனுடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்று அவன் அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவனது இழப்பு பலருக்கு பாரிய அதிர்ச்சியினையும் சோகத்தனையும் வழங்கவிருக்கிறது. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னராக இருக்கலாம். என்னிடம் வந்து, "அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு மாற்றவேண்டும் என்று வைத்தியர்கள் பேசுகிறார்கள். அவனுக்குக் கொடுக்கவேண்டிய மருந்தின் அளவை நான்கு மடங்காக்கியும் பார்த்தாயிற்று, ஆனால் புற்றுநோய் கேட்பதாக இல்லை. அது தன்பாட்டில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அவனால் இப்போது கொடுக்கும் மருந்தின் அளவைத் தாங்க முடியாது, ஆகவே சிறிது சிறிதாக அதனைக் குறைத்து அவனது இறுதி நாட்களில் அவன் விரும்பியபடி வாழ நாம் விடப்போகிறோம்" என்று கூறிவிட்டு, "இனிவரும் நாட்களில் நான் அடிக்கடி லீவு எடுக்கவேண்டி இருக்கும், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். மனமுடைந்து போய்விட்டேன். "என்ன கேட்கிறாய், நீ போகும்போது சொல்லிவிட்டுப் போ, முன் அனுமதி எதுவும் வேண்டாம், அண்ணாவையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள், தவறாமல் என்னையும் உனது வட்டத்திற்குள் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றேன்.0 points- மரணம்
0 pointsஒரு ஆறு அல்லது ஏழு மாதங்கள் இருக்கலாம். வழமை போல எனது பணித்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பணியாளர்களுடன் பேசுவது போல அன்று பேசிக்கொண்டு வந்தேன். அவனது இளைய சகோதரனைப் பார்த்துப் பேசலாம் என்று போனபோது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இயல்பாகவே குறும்புத்தனம் மிக்க அவனது சகோதரனின் முகம் வாடியிருந்தது. பணி ஆரம்பிக்கும் முன்னர் நடக்கும் கூட்டத்தில் அவனது முகத்தைக் கவனித்தேன், வழமையான புன்னகை இருக்கவில்லை. ஆகவேதான், "ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனத்திற்குப் பின்னர், மூச்சினை ஆளமாக இழுத்துக்கொண்டு பேசினான். "அண்ணாவுக்குச் சற்றுச் சுகமில்லை" என்று அவன் கூறவும், "அப்படியென்ன சுகமில்லை, மருந்தெடுத்தால்ப் போயிற்று" என்று நான் சர்வ சாதாரணமாகக் கூறினேன். "இல்லை, அவன் சில நாட்களாகவே அடிக்கடி கோபப்படுகிறான். எவருடனும் பேச விரும்புகிறான் இல்லை. நாங்கள் அவனை அப்படிப் பார்த்ததில்லை". என்று கூறினான். "சரி, வைத்தியரிடம் அழைத்துச் சென்றீர்களா?" என்று கேட்க, "ஆம், அழைத்துச் சென்றோம். அவனுக்கு மூளையில் கட்டியொன்று இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலும் அது புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது" என்று கூறிவிட்டு அமைதியானான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. எனக்கோ எதுவுமே சொல்லத் தெரியவில்லை. "இல்லை, அப்படியிருக்காது. உனது அண்ணனன் சிறந்த உடற்பயிற்சியாளன், திடகாத்திரமானவன், அவனுக்கு புற்றுநோய வரச் சந்தர்ப்பமில்லை" என்று அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஆனால், அவனுக்குத் தெரியும் நான் சொல்வது வெற்றுச் சமாதானம் தான் என்பது. நாட்கள் செல்லச் செல்ல அவனது உடல்நிலை மோசமாயிருக்க வேண்டும். அவனது சகோதரன் அடிக்கடி லீவு எடுக்கத் தொடங்கினான். "அண்ணாவை ஒவ்வொரு வைத்தியராகக் கூட்டிச் செல்கிறோம். அவனது உடல்நிலை மோசமாகிக்கொண்டு போகிறது. புற்றுநோயென்று உறுதிப்படுத்தி விட்டார்கள். சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் கட்டத்தை அவன் தாண்டி விட்டான். கீமோ (கதிர்வீச்சு ரீதியிலான சிகிச்சை) ஆரம்பித்திருக்கிறோம். உயிர் பிழைப்பதற்கான சாத்தியப்படு மிகவும் குறைவென்றாலும், எம்மாலான அனைத்தையும் அவனுக்காகச் செய்துகொண்டிருக்கிறோம்...."இப்படி ஏதாவது ஒரு மனம் நொருங்கிப்போகும் செய்தியும், சாத்தியமே அற்ற நம்பிக்கை தொக்கு நிற்கும் வசனங்களும் அவனிடமிருந்து அவ்வபோது வந்து போகும்.0 points - நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Important Information
By using this site, you agree to our Terms of Use.