Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    14676
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7054
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15745
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    4043
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/27/24 in Posts

  1. ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது, இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை??
  2. ரவா தோசைக்கும் முட்டை லாப்பாவுக்கும் ஏற்ற சிறந்த சைட் டிஷ் ........செய்து உண்டு மகிழுங்கள்.......! 😂
  3. எப்படி எழுதுவது😂? கிழக்கு திமோர் காரனும், குறிப்பிட்ட ஏனையோரும் தமக்குள் இருந்த தவறுகளை, கோணல்களைப் பேசினார்கள், திருத்த முயன்றார்கள். குறைந்த பட்சம், யாருடன் சார வேண்டுமென்ற தெளிவுடனாவது இருந்தார்கள். இதைப் போல இன்று கூட தமிழர்களிடையே துரோகிப் பட்டம் வாங்காமல் யாரும் செய்ய இயலுமா? இங்கே கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், வேற இடங்களில் பச்சைப் புள்ளி பெற கொமெடி எழுதிக் கொண்டிருப்பவரிடம் நீங்கள் இதைக் கேட்கிறீர்கள்?
  4. ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.
  5. அன்ரன் பாலசிங்கம் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம் ....இதில் என்ன தவறுகள் உண்டு”?? எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள். மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான் அதுவும் குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா?? முடியாது இல்லையா?? அன்ரன் பாலசிங்கம். நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை
  6. வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்
  7. நன்றி தம்பி பல முகங்களை தரிசிக்க இத்திரி உதவியதில் நல்லதே.
  8. கட்டும் கட்டங்களை நல்ல வசதியுடன் நவீனமான முறையில் கட்டுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் போய் இருக்க வேண்டி வரலாம் 🤣🤣🤣 யார் கண்டார்கள்.
  9. ஏனைய இயக்கங்கள், இந்திய அரசு, சிறிலங்கா அரசு என்பன (இவர்கள் எனைய இயங்கங்களை பயன்படுத்தி வி.புலிகளை அழிக்க முற்பட்டது ஏனைய இயக்கங்கள் கையை கட்டி வாயை மூடி நிற்க புலிகள் சுட்டார்களா? அவர்கள் தான் எம்மை அடக்குபவர்கள் என்பதை மூளையில் இருந்து கிளறி எடுக்க முடியுமா?😁
  10. அவர் கன்றுக்குட்டியை பார்த்து கன்றுக்குட்டி என்று தான் சொல்லுபவர் ஆகவே அப்படி கேட்க மாட்டார்.. இன்னொரு உறவு படுகொலைகளை நியாயபடுத்த கதை கதையாக எழுதி 😭
  11. அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும் கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது. போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.
  12. உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
  13. நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை 27 FEB, 2024 | 04:54 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார். நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும். சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து முன்னைய உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். 11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். கடந்த 32 ரி20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் சாதனை படைத்து ஹீரோவானார். ஆரம்ப வீரர் மாலன் க்ருஜர் 48 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அப் போட்டியில் நமிபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ரி20 அதிவேக சதங்கள் (முதல் 5 வீரர்கள்) லொஃப்டி ஈட்டன் (நமிபியா) - 33 பந்துகளில் குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகளில் டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா), ரோஹித் ஷர்மா (இந்தியா), இலங்கை வம்சாவளி சுதேஷ் விக்ரமசேகர (செக் குடியரசு) - மூவரும் 35 பந்துகளில் சதம். https://www.virakesari.lk/article/177436
  14. பல சரியான தகவல்களை தருகின்ற மீராவுக்கே இங்கே சறுக்கிவிட்டது.
  15. யாருக்கா ?அது யாருக்கா? அது மக்களுக்கா மக்களுக்காக அமைச்சு பதவியே போ போ ஜனநாயகமே வா வா சேவை எனும் தூது வந்தது அது அமைச்சு பதவி என்ற வடிவில் வந்தது
  16. தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!
  17. எந்த இனம் ,எந்த இனத்தின் மீது எப்படியான இனவாத கருத்து என எங்களுக்கு சொன்னா நாங்களும் கையை ,காலை வைத்து கருத்து எழுதி ,அறிவுரையும் எழுதி தொடர்ந்து இப்படியான் மோதல்கள் வராமல் தடுக்கலாமல்ல
  18. பனங்காட்டு நரி,ஈழத்து எம்.ஜி.ஆர் ,இராவணின் வாரிசு வாழ்க.... 😇
  19. ராஜீவ் காந்தி படுகொலை: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது என்ன..? ரா.அரவிந்தராஜ் பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு அரசியல் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக, கொலைச் சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணைக்குழுக்களும் விடுதலைப்புலிகளைத் தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன. ராஜீவ் காந்தி ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை. பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:- 2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சின்னச் சின்ன பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரபூர்வமான மிகப்பெரிய ஊடகச் சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டுவந்த புலிகள், முதன்முறையாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர். பிரபாகரன் அந்த ஊடகச் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. (குறிப்பு: சில கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் எனக் கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்: 1). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பது பற்றி..? பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப் பற்றி ஒரு கருத்தைக் கூற முடியாதவர்களாக இருக்கிறோம். 2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப்படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா? பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப் பற்றி நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன் 3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து? ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் `உணர்வுப்பூர்வமான, முக்கிய பிரச்னை’ (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார். தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்தக் கட்டத்தில் இது குறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை. https://www.vikatan.com/amp/story/government-and-politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination சாறி பாஸ்,......... 🤣
  20. 15 வருடங்கள் கழித்தும் திட்டமிட்டு நண்பர்கள் செய்கின்றனரே அதுதான் அழகு.... தமிழ் ,மக்களிடையே விடுதலை புலிகளும் ,அதன் தலைவரும் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்ற உன்னத கருத்தியலை இல்லாமல் பண்ணுவதற்காக பல உளவு துறைகளும் தனிநபர்களும் நன்றாக பணி புரிகின்றனர்...அது அவர்கள் சுதந்திரம்.... கரெக்டர் அஸசினேசன் ,இன்று தொடங்கிய விடயம் அல்ல....1983 களிலேயே தொடங்கி விட்டார்கள் ஒ ர்கெரில்லா தாக்குதலில் புலிகளின் முக்கிய போராளி .எதிரியின் தாக்குதலில் இறந்தாலும் ... கரெக்டர் அஸசினேட்டர்ஸ் வதந்தி பறப்புவார்கள் உள்ளக தாக்குதலில் அந்த போராளியை போட்டு தள்ளி போட்டார்கள் ... என்று இது தொடர் கதை அப்படி சொல்லாதையுங்கோ ... அவர்கள் சிறிலங்கா தேசியவாதிகள்..
  21. இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நிலமை. 100% பாலா அண்ணா கூறியது இது.
  22. புலிகள் தோற்றது சிங்களத்தின் வீரத்தினால் அல்ல தமிழரின் துரோகத்தால்.
  23. இவராவது பதவி விலகிறதாவது. அமைச்சர் பதவிக்காக கட்சி மாறும் இவர் பதவியும் விலக மாட்டார். பிரச்சனையும் தீர்க்க மாட்டார். பக்கா அரசியல்வாதி ஆகி விட்டார்.
  24. அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இருந்து வரும் சூட்கேஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது போலத்தான் தெரிகிறது
  25. விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும்.
  26. எமது ராஜ்ஜியம் இணைக்கப்பட்டது ....காங்கேசந்துறை துறைமுகம் வல்வெட்டி துறைமுகம் போன்ற துறைமுகங்களிலிருந்து எவ்வித கட்டுப்பாடுமின்றி தென்னிந்தியா துறைமுகத்துக்கு போய் வரக்கூடியதாக இருந்திருக்கு ...இன்று வரை அமெரிக்கா மற்றும் மேற்குலகு அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது பிராந்திய நலன் கருதி அன்று உருவாக்கிய சிலோன்.... ஆகிரமிப்புக்கு முன் தனி ராஜ்ஜியங்களாக இருந்தவை ...
  27. ஆம் உங்களை விட ... நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால் ஏன் தமிழ் ஈழம் கேட்க வேண்டும் ??? தேவையற்றது பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன் எழை பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன், ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம்
  28. சிங்களவன் மட்டும் ஆயிர கணக்கான ராணுவத்தை இழந்தும், காயப்பட்டும், சிங்கள பொதுமக்கள் கொல்லப்பட்டும், அரசியல் தலைவர்களை இழந்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும் பெற்ற இந்த வெற்றி எதேர்க்கென்று கேட்க மாடடார்களா? நீங்கள் கேட்க்கிறமாதிரி அவர்கள் கேட்க மாடடார்களா? அம்மணி , மாநில அரசு மாகாண அரசு என்றெல்லாம் எழுத வேண்டாம். அதையெல்லாம் மறந்து விடுங்கள். அதையெல்லாம் கடந்து பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைக்கு வந்தாயிற்று. நாங்கள் இங்கு இலங்கையில் இருந்து எழுதுகிறோம். விளங்கினால் சரிதான்.
  29. கிழக்கு தீமோர் இந்தோனேசியா என்ற நாட்டினால் ஆக்கிரமிக்க பட்ட நாடு ....அதற்கு முதல் போர்த்துக்கல் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு அதாவது இந்தோனேசியாவை ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்யும் பொழுது போர்த்துக்கல் இதை ஆட்சிக்கு உட்படுத்தினர் ...இது முக்கியமாக காலணித்துவ நாடுகள் தங்களுக்கு வசதியாக சிறு தீவுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தங்களது மொழியையும்,மதத்தையும் அந்த மக்களுக்கு திணித்து விட்டு சென்றது வரலாறு..இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,கோவா..சீக்கிம்.....சீனாவுக்கு அருகில் தாய்வான் ..கொன்கொங்.... ..இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்கு தீமோர்.அவ்வாறு செய்தமைக்கு காரணம் அவர்களின் தூர நோக்கு அதாவது ஜனநாயாக பண்புகள் உலகம் பூராவும் பரவ வேண்டும் அத்துடன் முதலாளித்துவ் சிந்தனைகள், வலதுசாரிகள் உலகம் பூராவும் இருக்க வேணும் என்ற கொள்கையின் அடிப்படையில்... அந்த நோக்கில் கிழக்கு தீமோர் பூர்வீக குடிகளை போத்துகீச மொழி பேசுபவர்களாக‌வும்,மற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி வைத்திருந்தனர்...போத்துகீச பொருளாதரம் வீழ்ச்சியடைந்த வுடன் சுதந்திரம் அந்த தீவுக்கு கொடுத்தனர் போத்துகீசர்....இதை சகிக்க முடியாத இந்தோனேசியா ஆக்கிரமிப்பு செய்தது.... இதை தாங்கி கொள்ளாத மேற்குலகமும் அவர்களின் கூட்டாளி அவுஸ்ரேலியாவும் அந்த நாட்டு மக்களை தம்வசமாக்க ஆயுத போராட்டத்திற்கு ஊக்கமளித்து பல உதவிகளை செய்து சுதந்திரம் வழங்கி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர்... ஆசியாவில் இரண்டாவ்து கிறைஸ்தவ மதம் பின்பற்றும் நாடாக அது உள்ளது ..கிறிஸ்தவ மதத்தினர் பெருமான்மையினராக் இருந்து ஆட்சி செய்யும் நாடுகள் இரண்டே உண்டு ஒன்று பிலிப்பைன்ஸ்,மற்றது கிழக்கு தீமோர் .... இந்தோனேசியா சர்வதேசிய அளவில் செல்வாக்கு பெற்ற பிராந்திய வல்லரசாக் இருந்திருந்தால் கிழக்கு தீமோரர் மக்களுக்கும் எமது நிலை தான் ஏற்ப்பட்டிருக்கும்... தற்பொழுது பப்புவாநீயுகினியில் இதே போன்ற நிலையை உருவாக்க தீயா வேலை செய்கின்றனர் .... ஆயுத போராட்ட வெற்றி தோல்வி பிராந்திய நலன் கருதியே தீர்மாணிக்கப்படுகிறது .... தென்சுடான் ,எரித்த்ரியா யாவும் இதன் பின்னனியே ... கோவா,சீக்கிம் போன்ற நாடுகளை தன் வசப்படுத்திய இந்தியாவுக்கு தன்னுடைய ஜம்மு கஷ்மீரின் எல்லைகளை பாதுகாக்க முடியாமல் போனது ...பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கவின் பலம் .... {ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்} அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற‌ வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்
  30. துவாரகா பேட்டி! பொய் என்ன? மெய் என்ன? /KUNA KAVIYALAHAN
  31. யாழ்ப்பாணத்தில் போலி கெளரவ கலாநிதி பட்டங்களை காசுக்கு விற்கும் திருபணியை ஒட்டுக்குழு மனிதர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து இருந்தார் இந்த மூன்றாம் தர கோமாளி மனிதர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக கல்வி அமைச்சினால் நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிபரை பதவி ஏற்க விடாமல் ஒரு வாரமாக தடுத்து வருகின்றார் கல்வி அமைச்சின் விதிகளின் படி யாழ் மத்திய கல்லூரிக்கு அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர் மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதிகளை மீறி தன் விசுவாசி ஒருவரை பதவிக்கு கொண்டு வர குழப்பங்களை செய்கின்றார் பெண் அதிபராக முடியாது என்று குழப்பங்களை தொடங்கியவர் இப்போது சாதி ரீதியாகவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் மறுபுறம் மகாஜனா கல்லூரி இடமாற்றங்களை தடுத்து யாழ்ப்பாண மாவட்ட இடமாற்ற முறைமைகளை முழுமையாக சீரழித்து வருகின்றார் அரச விதிமுறைகளுக்கு மாறாக பள்ளிக்கூடங்களுக்கு போகாத நபர்களை தொண்டராசிரியர்களாக நியமிக்க முயற்சித்து வருகின்றார் பாடசாலைகளுக்கான வள பங்கீட்டில் தலையிடுகின்றார்.இதன் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றார். மேற்படி கோமாளித்தனங்களால் முன்னணி பாடசாலையான வேம்படி பெண்கள் பாடசாலை முதல் கிராமிய பாடசாலைகள் வரை சீரழிந்து வருகின்றது இது போதாதென்று யாழ்ப்பாண பல்கலை கழக பேரவைக்கு தனது அல்லக்கைகளை நியமித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் அரசியல் அதிகாரமும் இராணுவ புலனாய்வு பிரிவும் தன்னோடு இருப்பதால் படிப்பறிவில்லாத இந்த மனிதர் தான் நினைத்தையெல்லாம் செய்ய முயற்ச்க்கின்றார் போலி பட்டங்களை வழங்கும் முகவரான ஒட்டுக்குழு இந்த மனிதருக்கு தான் செய்வது குற்றம் என்பது கூட தெரியவில்லை https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AvrFzon9eJtDLV6PJAKCvdtwYPDZejaNoCu1bkr9Dt4tRXBc47BpNEgBrMQCBfDpl&id=100057588638936
  32. கருத்தா,..... எங்க,..எங்க,...எங்க, .வடிவேலுவின் நகைச்சுவை நினைவிற்கு வருகிறது 😀 கந்தையருக்கு குசும்பு ஜாஸ்தி,...🤣 ஐயா சாமி,.. ஆளை விடுங்கோ,...🤣
  33. இலங்கையில் முடியும்...சம்பந்தப்பட்ட நாட்டில் இருந்து..ஒரு போன்கோல் வந்தவுடன்..சனாதிபதி பல்டியடிக்க ...அமைச்சரவையின் தலையில் விழும் ...அவை ஒரு கரணம் அடிக்க அது அதிகாரியின் தலையில் விழும்....அப்புறம் அந்த பேப்பரேகாணாமல் போகும் ..இதுதான் சொரிலங்கா..
  34. சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****
  35. எனக்கு இந்த திரியில் எழுதிய கருத்துக்களையும் வேறு திரிகளில் எமது சமூகம் பற்றிய இன்றைய நிலையைப் பற்றி எழுதப்பட்ட, எழுதும் கருத்துகளைப் பார்க்கையில் ஒரு விஷயம் மட்டுமே தோன்றுகிறது. புலிகள், அவர்களது நடவடிக்கைகள், தோல்விகள் யாவற்றையும் Jail free card போல அவரவர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். இது மட்டுமே எனக்கு விளங்குகிறது.
  36. வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக முயலும் போது வழி தவறி உயர்சாதியைச் சார்ந்த கொடுமோன் போட்டி என்பவரின் தரவாட்டுக்கு (உயர் சாதியினர் வீடு) வந்து விடுகிறார். கொடுமோன் போட்டி பாணனை பாடச் சொல்கிறார். அவனது இசையில் மயங்கியவர், பாணனை தன்னுடைய வீட்டிலேயே தங்கச் சொல்கிறார். தயங்கினாலும் பிறகு பாணன் சம்மதிக்கிறார். அந்த வீட்டில் போட்டியைத் தவிர ஒரு சமையல்காரர் மட்டுமே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பாணன் அந்த வீட்டில் தங்கும் போது பல அமானுஷ்யமான நிகழ்வுகளைப் பார்க்கிறார். சமையல்காரன், பாணனிடம் போட்டியை நம்பாதே என்கிறான். அதனால் மனம் குழம்பிப் போகிறான் பாணன். பகடை விளையாட அழைக்கிறான் போட்டி. அதில், தோற்றதால் தனக்கு அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். ஒரு சிலந்தியைப் போல வலையில் சிக்கிக் கொள்ளும் பாணன் அந்த வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான். என்ன நடந்தது? என்பது கிளைமாக்ஸ். இந்த எளிய கதையை வைத்துக் கொண்டு, மூன்றே மூன்று கதாபாத்திரங்களின் மூலம் ஒரு முழு நீள சினிமாவில் நம்மைக் கட்டிப் போடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன். மொத்தக் கதையும் பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளே மட்டுமே நடக்கிறது. ஆனால், நேர்த்தியான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு சினிமா அனுபவத்தை தருகிறார். படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மற்ற வண்ணங்கள் தேவையில்லை என்ற முடிவு எடுத்ததிலேயே வெற்றி பெறுகிறார் ராகுல். கதையின் ஊடாக நமக்கு காட்டப்படும் 17ம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்குமுறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவுக்கே உரித்தான தொன்மங்களையும் மாந்திரீக நடைமுறைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் வசனங்கள் நறுக்கென்று வெளிப்படுகின்றன. ஒரு ‘ஹாரர்’ படத்தில் நுட்பமான கலை அம்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், இயக்குனர். படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டி பாத்திரத்தில் அனாயசமாக நடித்திருக்கிறார் மம்மூட்டி. அவரின் நடையும், கூர்ந்த பார்வையும், அச்சத்தை தரும் அவரது எகத்தாள சிரிப்பும் நம்மை பயத்தில் உறைய வைக்கின்றன. எப்பேர்பட்ட நடிகன் மம்மூட்டி என்பதை முதல் ஷாட்டிலேயே காட்டி விடுகிறார். அந்த வீடு முழுக்க எதிரொலிக்கும் அவரது அமானுஷ்யமான அந்தச் சிரிப்பு திரையரங்கு முழுவதும் நிசப்தத்தை தருகிறது. போட்டி என்ற அவரது தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இவரை விட்டால், வேறு யாரையும் அந்த கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகிறார். பாணனாக வரும் அர்ஜூன் அசோகன் நடிப்பில் மம்மூட்டிக்கு சவால் விடுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவர் காட்டும் ஒடுக்கமான உடல் மொழி, தயங்கி தயங்கி பேசுவது, அமானுஷ்யங்களை காணும் போது, திடுக்கிட்டு குழம்புவது என்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வேட்டி மட்டுமே உடை. அவரின் கண்களில் காணும் மிரட்சியும், பயமும் நமக்கும் தொற்றிக் கொள்கின்றன. இன்னொரு பாத்திரமான சமையல்காரனாக சித்தார்த். மம்மூட்டியுடன் முரண்படும் போதும், அலட்சியமாக பாணனை நடத்தும் போதும் மிக நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் தூண் எனில், அது ஒளிப்பதிவு தான். படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு தேவையான ஒரு உணர்வு நிலையை இதுவே உருவாக்கி விடுகிறது. கருப்பு வெள்ளை என்பதால் பார்வையாளருக்கு சிதறல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மீது நமது கவனம் முழுமையாக குவிகிறது. குறிப்பாக அவர்களின் கண்களின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது. படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் கோணங்களும், ஒளியமைப்பும் புத்துணர்வைத் தருகின்றன. மிக மெதுவாக நகரும் காட்சிகளின் மூலம் அந்தந்த காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறார். படத்தின் இசையும், ஒலிக் கோர்ப்பும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. சிறு சிறு ஓசைகளை கூட துல்லியமாக பதிவு செய்திருப்பதன் மூலம் அமானுஷ்யத்தை உணர்த்துகிறார்கள். பாணன் பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கின்றன. ஹாரர் படம் என்பதற்காக திடுக்கிட வைக்கும் ஒலிகளோ, இசையோ இல்லாமல், இயல்பாக காட்சியோடு இணைந்திருக்கின்றன. படத்தின் கொண்டாடப்படப் வேண்டிய இன்னொரு அம்சம் கலை இயக்கமும், ஒப்பனையும். பழைய கால தரவாட்டு வீட்டை அதன் புழங்கு பொருள்களோடு, உருவாக்கி இருக்கிறார்கள். சின்னச் சின்ன பொருட்களில் கூட அவ்வளவு மெனக்கெடலை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘பாதாள அறைகளும், மாடங்களும், நெல் குதிர்களும், மதுப் பானைகளும் கலை இயக்கம் என்ற ஒன்று நிகழ்ந்தது போலவே இல்லை’ என்ற நேர்த்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தொகுப்பு காட்சியோடும், ஒலியோடும், இசையோடும் இணைந்து ஒரு ரிதத்தை உருவாக்கி இருக்கிறது. ‘திடுக் திடுக்’ என்று ‘ஜம்ப் கட்’களை செய்து செயற்கையான திகிலை உருவாக்காமல், மொத்த திரைக் கதையின் நீட்சியாக அமானுஷ்யத்தை ஒரு அனுபவமாக நமக்குள் செலுத்துகிறது எடிட்டிங். படத்தில் பத்து பேர் நடித்திருந்தாலும், மூன்றே மூன்று கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொன்மம் சார்ந்த கதையை வரலாற்று பின்புலத்தில் திகில் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல். நடிகர் மம்மூட்டிக்கு இது ஒரு வாழ்நாள் சாதனைப் படம். மாபெரும் அனுபவத்தை தரும் பிரமயுகம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. https://aramonline.in/16772/brahumayugam-cinema-review/
  37. எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
  38. சிங்கன் ...மாவோ வின் சிந்தனைகளை தமிழருக்கு மெல்ல மெல்ல டிச் பண்ணுகிறார் போல....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.