Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/02/24 in all areas

  1. புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை. தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான் பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள். அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும். கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும். ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல , அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும். இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர் பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம் மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள், இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன். இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும். கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான், எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம். இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின் பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது? நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை, அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.
  2. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  3. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
  4. இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.
  5. இலங்கையில் நீதி நிலைத்து இருந்தால்; இவர் எப்பவோ கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பார். வடக்கும் கிழக்கும் இணைந்து அமைதியாய் இருந்திருக்கும், நாங்களும் இங்கே சமத்துவம் அடைந்திருப்போம், சர்வதேசத்தை நாடிப்போக வேண்டிய தேவை வந்திருக்காது என்பதை உணரத் தெரியாத மனிதர். "எங்கே கல்லெறி பட்டாலும், காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடித்திரியுமாம்." பழமொழியைச் சொன்னேன் நான்.
  6. ராஜீவ் தன்பாவங்களுக்கு தண்டனை பெற்றார் என்ற உங்கள் கூற்று உண்மையானால் இளமைக்காலம் முழுவதையும் இழந்து இறுதியில் தாயை பார்ககாமலே மரணித்த சாந்தனுக்கும் இது பொருந்துமா? ராஜீவுக்காவது உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. ராஜீவ் கொலை போன்றவை புலிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க உதவுகின்றது என்பது உங்களுக்கு மகிழ்சசியை கொடுத்தாலும் பரந்த உலகின் முன்னால் இதில் எந்த பெருமையும் இல்லை. இவ்வாறான வெறும் சென்றி மென்ற் உசுபேற்றல்கள் தமிழரின் எதிர்காலத்திற்கு கிஞ்சித்தும் பிரயோசனப்படப் போவதில்லை.
  7. ‘மயிலும் ‘ இருக்கிறது, பாம்பும் வந்து விட்டது. அடுத்து வர இருப்பது முருகனா?
  8. https://eelam.tv/watch/BGOsRJOfaNVYNeh 15வது திமிடத்திலிருந்து பாருங்கள்…. @விளங்க நினைப்பவன்
  9. காந்தியின் பிரமச்சரியப் பரிசோதனைகளை அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன். அத்தோடு அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது.
  10. “சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ் 29 FEB, 2024 | 09:24 PM சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்களது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பாயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ராபர்ட் பயஸ், சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/177629
  11. சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் நாளை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய்மண்ணுக்கு எடுத்துவரப்படவுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல், மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன. பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன. பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன. https://www.virakesari.lk/article/177766
  12. @Kapithan உங்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் வெகு தூரம். உங்களைப் போல் இணையத்திலும் பத்திரிகைகளிலும் வாசித்து அறியவில்லை… போராட்டத்திலே பயணித்தவர்கள் போராட்டத்தை சுவாசித்தவர்கள் , நேசித்தவர்கள் என்று பலர் இன்றும் உயிருடன் உள்ளனர். நன்றி வணக்கம்.
  13. அப்ப கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் எல்லாம் என்ன கோபால்?
  14. ஆனால் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யபட்ட தமிழ் தலைவர்கள் இந்தியா சொற்படி தான் நடப்பவர்கள். இலங்கை மத்தியமாகாணத்து தமிழர்களும் அவர்கள் தலைவர்களும் இந்தியாவை தீவிரமாக நம்புபவர்கள்.
  15. எழுதின கதையை முடிச்சுப்போட்டு கிளம்பத்தான் இருக்கு......! 😂
  16. மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.
  17. ரொக்கெட் எல்லாம் ரெடியாம், சுவி அண்ணா ஏறினவுடன் கிளம்பி விடுமாம்...😃
  18. மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலைக்கு பாரிய பாதிப்பு - இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை! 01 MAR, 2024 | 04:20 PM (சரண்யா பிரதாப்) அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட 205 மெகாவாட் மன்னார் காற்றாலை திட்டம், சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலை ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (‍பெப். 27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தினால் மன்னார் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற நேரடி, மறைமுக பாதிப்புகள் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 250 இனங்களைச் சேர்ந்த சுமார் 15 மில்லியன் இடம்பெயரும் பறவைகள் விரும்பும் முக்கிய இடமாக, மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையின் (CAF) தெற்கு பகுதியிலுள்ள இலங்கை விளங்குகிறது. குறிப்பாக, மன்னார், 150 இனங்களை உள்ளடக்கிய சுமார் ஒரு மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதி 26 வகையான அச்சுறுத்தலுக்கு உள்ளான பறவைகளுக்கு இனப்பெருக்க வாழ்விடங்களை வழங்குகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் CAF srilanka Waterbird Tracking Projectஇன் அறிவியல் சான்றுகளின்படி, புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான நுழைவு மற்றும் வெளியேறும் இடமாகவும் மன்னார் விளங்குகிறது. மன்னாரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (அடம்ஸ் பாலம் தேசிய பூங்கா, வங்காலை சரணாலயம் (ஒரு ரம்சா ஈரநிலம்) மற்றும் விடத்தல் தீவு இயற்கை காப்பகம்) மற்றும் இடம்பெயரும் உயிரினங்களின் மாநாடு (CMS) உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு மற்றும் ரம்சா மாநாடு (CBD) போன்ற சர்வதேச மாநாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் மன்னார் காற்றாலை மின் திட்டம் (கட்டம்) சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலை ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது யாலா தேசிய பூங்கா, சிங்கராஜா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற மன்னாரின் எல்லைகளுக்கு அப்பாலும் பாதிக்கப்படும். பசுமை ஆற்றல் எதிர்காலத்துக்கு முக்கியமானது. பசுமை ஆற்றல் திட்டங்களின் அபிவிருத்திக்கு இலங்கைக்கு சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார இழப்புகளைத் தணிக்க மூலோபாய சூழலியல் மதிப்பீடுகள் (SEA) தேவை. avistep போன்ற கருவிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்கும் அதேவேளை ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இது தொடர்பில் வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன கூறுகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் சுற்றாடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தி தொடர்பில் மதிப்பீடு செய்ய மூன்று சட்டங்கள் உள்ளன. அவை, தேசிய சுற்றாடல் சட்டம், கரையோர பாதுகாப்பு சட்டம், தாவர மற்றும் விலங்கியல் (திருத்தச்) சட்டம் ஆகியவையாகும். மன்னார் காற்றாலை திட்டம் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை இந்த திட்டம் பெறவேண்டும். கடந்த காலம் போல் அல்லாமல் சுற்றாடல் அதிகார சபை சுற்றுச்சூழலை மதிப்பிடும் நிறுவனம் கண்டிப்புடன் செயற்படுகிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை மதிப்பீடு செய்யவுள்ளது. இதற்கு எழுத்து மூலம், வாய்மூலம் கருத்துக்களை சமர்பிக்க முடியும். அக்கறையுள்ள பொதுமக்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து குறித்து கருத்து தெரிவிக்கலாம். அது மார்ச் 6ஆம் திகதி வரை பொதுக்கருத்துக்கு திறந்திருக்கும். கருத்துக்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு CEA dg@cea.lk என்ற மின் அஞ்சலுக்கு அனுப்ப முடியும் என்றார். மன்னார் காற்றாலை திட்டத்தின் சில முக்கிய குறைப்பாடுகள் * இலங்கை சட்டங்களை மீறி முழுமையடையாத குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. * வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வை இல்லாமை. * பறவைகள் தொடர்பான ஆய்வு முறை (Avifaunal) போன்றவற்றில் சிக்கல்கள். பறவை கண்காணிப்புகளின் நேரம் மற்றும் பருவம் போதுமானதாக இல்லை. முக்கியமாக இடம்பெயர்ந்த காலங்களை கவனிக்கவில்லை. * மோதல் இடர் மதிப்பீட்டு முறைமை வலுவானதாக இல்லை. *காலாவதியான முறைகள் மற்றும் மன்னாருக்கு கிடைக்கக்கூடிய மேம்பட்ட கண்காணிப்புத் தரவுகளின் பயன்பாடு இல்லாமை. *பறவைகளின் நடமாட்டம் பற்றிய சர்வதேச மரபுகள் மற்றும் அறிவியல் இலக்கியங்களின் அலட்சியம் *மன்னார் மக்களின் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புக்கள் குறித்து போதிய கவனம் செலுத்தாமை. *வெள்ளப் பாதிப்புகள் மற்றும் தணிப்பு பற்றி போதியளவு கருத்தில் கொள்ளப்படவில்லை. * திட்ட இருப்பிடத் தளங்கள் ஒன்றுடன் ஒன்று சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் இணைப்பைத் தடுக்கின்றன. *குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்துடன் ஆலோசனைகளை நடத்த தவறியது. *குறைந்த சூழலியல் தாக்கம் கொண்ட மாற்றுத் தளங்களின் போதிய அங்கீகாரம் இல்லாமை. போன்றவை காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சம்பத் எஸ்.செனவிரத்ன தெரிவிக்கையில், மத்திய ஆசியா வழியாக இலங்கைக்கு பில்லியன் கணக்கான பறவைகள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றன. உலகிலுள்ள பறவைகள் இடம்பெயரும் 8 பாதையூடாக, ஒவ்வொரு வருடமும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. இவ்வாறு தெற்கிற்கு இடம்பெயரும் பறவைகள் 6 மாதங்கள் தங்கிவிட்டு வடக்கிற்கு செல்லும். இவ்வாறு பறவைகள் இடம்பெயரும் பாதைகளில் இலங்கையும் ஒன்றாகும். தலைமன்னார், பேசாலை, வங்காலை, உடுமலை, விடத்தல் தீவு, மன்னார் நகர் ஆகிய பகுதிகளுக்கு பறவைகள் வருகை தருகின்றன. இவை அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான ஈரநிலங்கள் ஆகும். இவ்வாறு இடம்பெயரும் பறவைகள் 22,000 அடி உயரம் வரை பறக்கும். இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் 25,000 கிலோ மீற்றர் வரை தனது பயணத்தை மேற்கொள்கின்றன என்றார். மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையில் (CAF) தெற்குப் பகுதியான 30 நாடுகளில் இருந்து 250 இனங்களைச் சேர்ந்த 15 மில்லியன் பறவைகள் இடம்பெயர்ந்து இலங்கைக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றன. இவற்றில், 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பறவைகள் மன்னாரிக்கு வருகை தருகின்றன, இது ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக செயல்படுகிறது, மேலும் 26 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. மன்னார் வழித்தடத்தில் வரவிருக்கும் உத்தேச 50 காற்று விசையாழி மின் திட்டத்தால் அந்த பறவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும். உத்தேச 250 மெகாவாட் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் உயிர் பல்வகைமை விஞ்ஞானி மற்றும் பொதுக் கொள்கை வழக்கறிஞர் கலாநிதி ரொஹான் பெத்தியகொடை தெரிவிக்கையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முன்மொழிவுகள் மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படும். தாம் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான முன்மொழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிராகரிக்கப்பட்டால், அந்த திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177692
  19. HELL: தினமும் ஒரு சூரியனை விழுங்கும் 'பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - என்ன இது? நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம். நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
  20. எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.
  21. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய செய்திகள் பகுதியில் நானும் இந்தக் கடிதத்தை இணைத்திருந்தேன்..எனிவே..உரியவர்களுக்கு ஏதாவது விடிவு கிடைத்தால் மிக்க சந்தோசம்.🖐️
  22. உயிரை உருக்கிப் பேனாவில் ஊற்றி எழுதப்பட்ட கடிதம். வாசிப்பவரின் கண்ணீரில் கரைந்து போகும் கடிதம்.
  23. இந்த ஆளுக்கு. சின்ன சின்ன விசயங்கள் கூட விளங்குவதில்லை அதாவது இலங்கையை இலங்கை நீதிமன்றம் எப்படி விசாரணை செய்ய முடியும் ??? இலங்கை தான் குற்றவாளி ஆகவே சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்பதில் என்ன பிழையை கண்டுபிடித்தவர். ??
  24. எதற்கும் நீங்கள் எல்லோரும் கவனமாய் இருக்கவும்.......உணவுப்பொருட்கள் அவசியம்.....சேமித்து வைக்கவும்.....! 😁
  25. இது உங்களது அமைப்பின் எத்தனையாவது அறிக்கை? ,,,,அறிக்கை மேல் அறிக்கை விட்டு எமது மக்களின் வாழ்க்கையை சீரழிக்குமுங்கள் அமைப்பு மீது நாங்கள் தான் நட்வடிக்கை எடுக்க வேண்டும்
  26. வணக்கம் நல்வரவு
  27. இதே போன்ற நிலையை தாயகத்திலும் ஒரு புண்ணியவான் உருவாக்கினால் நாமும் நிம்மதியாக் உறங்கலாம் தாயக மக்கள் அதை விட நிம்மதியாக உறங்கலாம்...
  28. சின்ன சாந்தனின் ஈழத்திற்கான செயற்பாடு அளப்பரியது
  29. கலிபோர்னியா வெப்பமான பிரதேசம் அல்லவா. அங்கும் குளிரா… கலி முத்திப் போச்சு. 😁
  30. கலிபோர்னியாவில் இருக்கிற யாழ் உறவுகள் அவதானமாக இருங்கோ .இங்கு டொரோண்டோவில் தலைகீழாக ஒரு நாளைக்கு+ 13 மறு நாள் -3 இனி ஒரு வாரத்துக்கு + 8 +9 +11 +7 +7 ...+5
  31. வணக்கம் ரசோ..(தமிழ் பெயர் மாதிரி இல்லையே ) கவி வரிகளோடு வந்திருக்கிறீர்கள் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
  32. எனது வீடு நியூயோர்க்.இப்போது சன்பிரான்ஸ்சிஸ்கோ கலிபோர்ணியாவில் மகளின் வீட்டில். 2023 வருடம் பிறக்கும் போது இப்போது பனி கொட்டும் இடத்தில் நின்று ரொம்பவும் அவதிப்பட்டோம். அன்றைய பிரயாணம் பற்றி 25 ஆவது அகவையில் எழுதியது.
  33. புலிகளை மக்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதும், ரஜீவ் தனது பாவங்களுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் தான் அந்தச் செய்தி.
  34. நன்றி suvy. விடுமுறை நாட்கள் வேறு ஆகத்தான் இருக்கும், நீங்கள் நினைப்பது போலவே. இது என்னுடைய அனுபவம் என்று மட்டும் இல்லை. இங்கு சுற்றி இருக்கும் எல்லோரையும் பார்த்த பின்னர் மனதில் தோன்றியது.
  35. விடுமுறை நாட்களிலுமா .....அவை வித்தியாசமாக இருந்திருக்குமே......! 😁 உங்களின் முதற் படைப்பு சூப்பர்......!
  36. புல்லாவின் மீள்வருகையுடன் அங்கு கூதல் விட்டுப்போச்சு..
  37. ஏஞ்சாமி...உது உங்க ஊரா..அப்ப பாதுகாப்பு முக்கியமுங்கோ...சாப்பாட்டு சாமானுகளை வாங்கி அடுக்கி வையுங்கோ.....எனக்கு ஒரு சின்ன ஆசை உந்த் 12 அடி சுனோவில் நின்று ஒரு செல்பி எடுத்துப் போடுங்கோ...
  38. இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட செயலில் செய்பவரும் இத்தனை நூறு தாயக மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களை மேலைத்தேச முறைப்படி வேலை செய்ய பழக்குபவரும் மக்களின் தெரிவாக இருந்தால் மகிழ்ச்சி தானே அண்ணா.
  39. உண்மையில், இணையத் தளங்களில் தரவுகளின் தரக்கட்டுப்பாட்டைப் பேண வழிகள், முன்மாதிரிகள் இருக்கின்றன. அப்படிப் பேணினால், வருமானம் குறையும் என்ற காரணம் தான், கூகிள் போன்ற தளங்கள் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். ஒரு உதாரணம்: விஞ்ஞானத் துறையில், தரவு மூலங்களாக விளங்கும் விஞ்ஞான சஞ்சிகைகளை (scientific journals) தரப்படுத்தியிருக்கிறார்கள். Impact factor, acceptance rate போன்ற குறிகாட்டிகள் மூலம் ஒரு விஞ்ஞானச் சஞ்சிகையின் நம்பகத் தன்மையை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக் கூடிய நிலை இருக்கிறது. இதே போல கூகிள் தகவல் மூலங்களை தரப்படுத்தலாம், பெரிய கடினமான பணியல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்தில், தற்காலிகமாக கோவிட்டைப் பற்றிய தேடல் விளவுகளை கூகிள் போன்ற தளங்கள் தரப்படுத்தியது நிகழ்ந்தது. தேடற்பொறியின் algorithm ஏனைய விடயங்களில் இத்தகைய தரப்படுத்தலை செய்தால், பெரும் இலாபமீட்ட முடியாது என்பதால் ஏனைய விடயங்களில் உதாசீனமாக இருக்கிறார்கள். உதாரணமாக மேலே, நாசிப் படைகளில் ஆரியரல்லாத மக்களும் இருந்தனர் என்பது எவ்வளவு பாரதூரமானதெனப் பாருங்கள். இதை விட சிறு சிறு விடயங்கள் கூட கூகிள் போன்ற தளங்களில் தரவுப் பிழைகளாக இருக்கின்றன. என்னுடைய நண்பர்கள் பலர், படித்து பெரிய வேலைகளில் இருப்போர், நாசிகள் "6 மில்லியன் யூதர்களை மட்டும் தான் கொன்றனர்" என இன்னும் நம்புகின்றனர் அப்பாவிகளாக. ஓரினச் சேர்க்கையாளர்கள், நாசி எதிர்ப்பு கிறிஸ்தவர்கள், விசேட தேவையுடைய ஜேர்மனியர்கள், றோமாக்கள் என மேலதிக 4 மில்லியன் பேரையும் நாசிகள் கொன்றார்கள் என்பது பலருக்குத் தெரியாது.
  40. ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார்.
  41. சும் ஐயும் அவரது அடாவடித்தனங்களையும் அவரது அல்லக்கை & செம்புகளையும் தவிர்த்து விமர்சிக்கலாம்.
  42. அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் எனது இரண்டாவது சரிதை சமஷ்ட்டிக் கட்சியின் ஸ்த்தாபகரும், தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினுடையது. அவரது நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக இதனை எழுதிவந்தேன். இலங்கைத் தமிழரின் மிக முக்கியமான அரசியல்த் தலைவராகவிருந்த செல்வாவின் நூறாவது பிறந்தநாள் நினைவினை அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் அனுட்டிக்க அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி முயலவில்லை என்பது வேதனை. நான் எழுதிவந்த இத்தொடரில் தமிழர்களின் அவலங்களான அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளமை, தமிழ் மொழியினை திட்டமிட்டு புறக்கணித்தமை ஆகியவை தொடர்பாகவும் எழுதி வந்தேன். அத்துடன், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற ஜனநாயக வழிப் போராட்டங்கள் பற்றியும், அவை சிங்களத் தலைவர்களாலும், சிங்களக் குண்டர்களாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டன என்பது குறித்தும் விலாவாரியாகத் தேடி எழுதிவந்தேன். மேலும் தந்தை செல்வாவின் விட்டுக்கொடுக்கா மனோநிலைபற்றியும், இரு சிங்களப் பிரதமர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பற்றியும், அவ்வுடன்படிக்கைககளின் தோல்விபற்றியும், சிங்கள அரசுகளுடனான அவரது ஒத்துப்போதல்கள் பற்றியும் எழுதினேன். 1957 இலிருந்து 1968 வரையான 11 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுகளுடன் ஒத்துப்போதல் எனும் தந்தை செல்வாவின் பரீட்சாத்த நடவடிக்கையின் தோல்வி அவரை மிகக் கடுமையான அதிருப்திக்கும், விரக்திக்கும் உள்ளாகியதுடன், தமிழர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழம் எனும் தனியான நாட்டினை இலங்கையிலிருந்து பிரித்தெடுப்பதற்கான நடவடிக்கையின் முதற்படியான 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்யுமளவிற்கு தள்ளிச் சென்றது.
  43. சிறு பிள்ளையாக பிரபாகரன் தொண்டைமான் பற்றி நான் முன்னர் பதியாத இன்னொரு முக்கியமான விடயம் அடுத்த வருடம் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. பலாலி வினாமப்படைத் தளத்தில் வந்திறங்கிய விமானங்களிலிருந்து இறக்கப்பட்ட டிரக் வண்டிகளில் இந்திய ராணுவத்தினர் வந்திறங்கினர். பலாலி யாழ்ப்பாண வீதியில் அவர்கள் பவணி வந்தபோது பலத்த ஆரவாரத்துடனான வரவேற்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பிரபாகரனை இந்திய அரசு தில்லியில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்திருக்கிறது என்கிற செய்தி பரவியபோது இந்திய ராணுவத்தை வரவேற்ற தமிழ் மக்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் இந்திய ராணுவத்தின்மீது தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தலைப்பட்டனர். இந்திய ராணுவ வாகனங்களை வீதிகளில் வழிமறித்தனர்.தமது தலைவர் மீளவும் பாதுகாப்பாக தம்மிடம் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பிரபாகரன் மீது தமிழர்கள் வைத்திருந்த பாசத்தினையும், நம்பிக்கையினையும் கொழும்பிலிருந்தே அவதானித்துக்கொண்டிருந்த தொண்டைமான் அதிசயித்துப் போனார். "பிரபாகரன் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். பிரபாகரன் தொடர்பாக தொண்டைமான் அதுவரை வைத்திருந்த கண்ணோட்டத்தில் இது மிகப்பெரிய வேறுபாட்டினைக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன். அதுவரை பிரபாகரனை ஒரு ராணுவ வல்லுனனாக, ஒரு சிறந்த ராணுவத் திட்டமிடலாளனாகவே அவர் எண்ணியிருந்தார். ஜெயவர்த்தனாவின் அரசையும் ராணுவத்தையும் ராணுவப் பலத்தின் மூலம் முடக்கி சமாதான மேசைக்குக் கொண்டுவருவதில் பிரபாகரன் முயலும் அதேவேளை, ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றே அவர் நம்பியிருந்தார். பிரபாகரன் தொடர்பாக நீங்கள் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறக் காரணம் என்ன என்று அவரிடம் வினவினேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், "மக்கள் அவருடன் இருக்கிறார்கள்". 1989 ஆம் ஆண்டிலிருந்து பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வரத் தொடங்கினார். தனது சரிதையினை விரிவாக்க அவர் என்னை இரண்டாவது முறை அழைத்தபோது பிரபாகரனுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவினை தனது வாழ்வின் மிக முக்கிய விடயமாகக் குறிப்பிடவேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.