Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்12Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points19125Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20018Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்8Points16477Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/27/24 in all areas
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.7 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
4 points4 points
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
உங்களுக்கில்லாததா. முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.3 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
3 points- பிஞ்சுக் காதல்…
3 pointsபிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)3 points- அதிர்ஷ்ட லாபச் சீட்டு
2 pointsசிறிமா ஆட்சி காலத்தில் புதிய கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது எண்கணிதம் தூய கணிதம். பிரயோக கணிதம். உயர் கணிதம் . . ..என்று எல்லா வற்றையும் அகற்றி விட்டு கணிதம். என்று மட்டுமே ஒரு பாடம் வந்தது நடைமுறையில் இதில் நிகழ்தகவு என்ற ஒரு பகுதி உண்டு” ... அதாவது மூன்று பந்துகளில். இரண்டு இரணடாக. எத்தனை முறைகள் எடுக்கலாம் ?? இந்த முறையை லொத்தரில் பயன்படுத்தலாம் செலவு மிக அதிகம் 1. இருந்து 49 இலக்களில். 6 இலக்களை தெரிவு செய்யும் லொத்தர். ஜேர்மனியில் புதன்கிழமை சனிக்கிழமை உண்டு” முதலாவது பல இலட்சம்கள். வரும் பல தடவைகள் வெற்றி கிடையாது விடில் பில்லியன் வரும் ஆனால் நிகழ் தகவுப்படி 49*48*47*46*45*44 என்ற. பெருக்குத்தொகையை 1*2*3*4*5*6 என்னும் பெருக்குத் தொகையால் வகுக்க. வரும் தடவைகள் நிரல்களை லொத்தர். வெட்டினால். நிச்சயம் ஆறு இலக்கம். வரும் ஆனால் செலவு பரிசு தொகையை விட. அதிகம் 🤣🤣🤣 குறிப்பு,. முயன்று பாருங்கள் 😂2 points- அதிர்ஷ்ட லாபச் சீட்டு
2 pointsசீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁 வேடிக்கையாக சொன்னாலும் உண்மை அது தான். இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை . நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள் வரவேண்டும்.2 points- என் இந்தியப் பயணம்
2 points🤣.... தனியார் நிறுவனங்களிலேயே வேலை செய்யும் எங்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பது தான் பென்சன்..... சோசல் வரும், இன்னும் 10 அல்லது 12 வருடங்கள் இருக்குது. அது வரும் போது சேடமும் இழுத்துக் கொண்டு இருக்குமோ தெரியவில்லை....😀 சமீபத்தில் ஜெயமோகன் காசி போய் வந்து ஒரு பயணக் கட்டுரை எழுதியிருந்தார். அதை வாசித்த பின் தான் அப்படி ஒரு எண்ணம் வந்தது. அதே வாரம் தமிழில் மொழி மாற்றப்பட்ட ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். கதையே ஒரு குடும்பம் காசிக்கு போவதைப் பற்றியது. அழகான படம். பின்னர், வே.நி. சூர்யாவின் காசி பற்றிய கவிதை ஒன்று. எல்லாமே காசி, காசி என்று ஏன் சொல்லுதோ தெரியவில்லை.............🤣 *********** தொலைவிலிருந்து பார்த்தல் (வே.நி. சூர்யா) ----------------------------------------------------------------- கல்லூரி படிக்கையில் அவன் காசிக்கு ஓடிப்போனான் இனி திரும்பிவரக்கூடாது என படித்துறைகள் தகித்தன கங்கை நீர் ஊசியாகத் துளைத்தது ஊருக்குத் திரும்பும்போது முதியவரொருவர் தன் நண்பரிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான் விரக்தியான குரலில் பேச்சுக்கிடையே காசியைச் சுற்றிப்பார்க்க வந்தவரை காசி சுற்றிப்பார்த்துவிட்டது என அவர் உரைத்தது இன்னும் உக்கிரமான மெளனத்தினுள் அவனை வீசியெறிந்தது மறுநாள் ஊரில் வாரணாசித் தெருக்களைக் கண்டான் மாலைநேரப் படிக்கட்டுகளில் அமர்ந்து மணிகர்ணிகாவின் படித்துறையில் விறகுகளோடு விறகாகத் தன் சடலம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.2 points- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆனால் தாம் பெரியாரின் வழிவந்த பகுத்தறிவு கொள்கையை கைக்கொள்கின்றவர்கள் என்பர்!2 points- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsசின்னத்தை புடுங்கிறம் சீமானை விழுத்திறம் எண்டு கிளம்பியவர்கள் கடைசியிலை மைக் சின்னத்தை கொடுத்து தங்களுக்கு தாங்களே ஆப்பை செருகிக்கொண்டு நடக்க முடியாமல் அல்லல் படுகினம் .சமூக வலைத்தளம் முழுதும் வெறித்தனமான பரப்புரை ஆனால் இதே வெறித்தனம் ஒட்டு கிடைப்பதில் இருந்தால் நல்லது. இந்திய சனத்துக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அந்த தேர்தல் நேரத்தை ஒரு திருவிழா போலத்தான் கொண்டாடுவார்கள் அந்த தேர்தல் காலம் முழுதும் குவாட்டரும் பிரியாணியும் கொண்டாட்டமுமாய் யார் பணம் கூட கொடுத்தார்களோ யார் அவர்கள் ஆட்களோ அல்லது அவர்கள் ஆட்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிரார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு தேர்தல் திருவிழா முடிந்து மயக்கம் தெளிய நிகழ்காலம் கொடுமையானது என்று புரிந்து கொண்டவுடன் மறுபடியும் சீமானுடன் சேர்ந்து கத்துவார்கள் இந்த யதார்த்தம் சீமான் புரிந்து கொள்ளும்வரை இன்னும் பல தேர்தல்கள் காத்திருக்கவேண்டி வரும் மூன்று சீட் உறுதி என்கிறார்கள் ஆனால் அதுவும் கஷ்ட்டம் காரணம் தேர்தல் முடிந்தவுடன் சூட்டோடு சூடாக வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெறுவதில்லை எல்லாம் ஆற விட்டு என்ன தொடங்குவார்கள் அதற்கு இடையில் உலகில் மிகபெரிய ஜனநாயக நாடு என்று பீத்தி கொண்டு காப் ரேட்டுக்களின் சொல்லுக்கு அடிமையாக சில பல பேரங்களுக்கு ஒப்புகொண்டால்தான் வெற்றி . மேல் உள்ளதெல்லாம் சீமானுக்கு ஒத்துவராத ஒன்று ஆகவே வெற்றி என்பது கேள்வி குறி அதையும் தாண்டி மூன்று அல்லது ஒரு சீட் கிடைக்குமாக இருந்தால் சீமான் நிஜ அரசியல்வதியாகி விட்டார் என்று அர்த்தம் அதன்பின் கதை மாறும் ஆமை படம் போட்டவர்கள் கூட சிங்கத்தின் மீது சீமான் வருவது போல் படம் போட்டாலும் ஆச்சரிய பட தேவையில்லை .2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.2 points- கருத்து படங்கள்
2 points2 points- சிரிக்கலாம் வாங்க
2 points2 points- கருத்து படங்கள்
2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)1 point- அது இப்போது எஃகு நதி
1 pointசெய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடிந்தது அது இப்போது எஃகு நதி ஒரு தேசியக் கவிஞனின் பெயர் பொறித்த பாலம் தண்ணீருள் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச் செய்ய முடியுமென்றால் இப் பூவுலகில் பாலங்கள் பாதுகாப்பானவையா என்ன? தியா - காண்டீபன்1 point- தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை நாளை மக்களிடம் கையளிக்கப்படும்!
தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (மார்ச் 27) திறந்து வைக்கப்படவுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள் மற்றும் ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டது , அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் பி. விமலசேன தெரிவித்துள்ளார். இதற்காக ஜேர்மன் அரசாங்கம் இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள். (ரூ. 357 கோடி) வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்மாணிப்பிற்காக எண்ணூறு பேர்ச்சஸ் பெறப்பட்டதுடன் பின்னர் மேலும் இரண்டு காணிகள் கிடைத்ததால் வைத்தியசாலையின் தற்போதைய அளவு ஆயிரம் பேர்ச்களை அண்மித்துள்ளது. வைத்தியசாலை திறக்கப்பட்டதன் பின்னர் கராப்பிட்டிய புறநகர் அபிவிருத்தியை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹெல்முட் கோல் 2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது, தென் மாகாணத்தில், சுனாமியில். காலி மஹாமோதர வைத்தியசாலையில் ஏற்பட்ட சேதத்தைப் பார்த்து நன்கொடையாக வழங்கிய 300 கோடி ரூபாயில் இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்த புதிய வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதனை நிர்மாணிக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறியதால் அப்பகுதியே பின்னர் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியதுடன் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் இடமாக மாறியது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் தலையீட்டினால் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்காக ஜேர்மனியிடம் இருந்து இருபத்தைந்து மில்லியன் யூரோக்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டன. புதிய மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு, மஹ்மோதரா மகப்பேறு மருத்துவமனை அந்த இடத்திலிருந்து அகற்றப்படும். https://thinakkural.lk/article/2970221 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 pointபாடல்: குட்டி பட்டாஸ் பாடியவர்கள்: சந்தோஸ் தயாநிதி, ரக்சிதா சுரேஸ் இசை: சந்தோஸ் தயாநிதி வரிகள்: ராஜா1 point- அது இப்போது எஃகு நதி
1 pointகவிதைகள் நன்று வாழ்த்துக்கள் 140000 பேர் வேலைவாய்ப்பை இழப்பார்களா.?? இந்த பாலத்தில் தினமும் 30000 பேர் தான் பயணம் செய்வார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன் அப்படி இருக்கும் போது எப்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்படும்??1 point- அதிர்ஷ்ட லாபச் சீட்டு
1 point🤣.... நிகழ்தகவு என்ற சொல்லை கணக்குப் பாடத்திலேயே முதலில் அறிந்து கொண்டோம்....👍1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointமும்பையும் விட்ட பாடில்லை............அவையும் பட்டைய கிலப்பினம்................1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள். சும்மா இருந்த சீமானை தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஉந்த பாண்டிய ஏன் மும்பை அணி திருப்ப மும்பைக்கு அழைத்தார்கள் தெரிய வில்லை தலைவரே குஜராத் அணிய ஜபிஎல்ல இரண்டு முறை பினலுக்கு அழைத்து சென்றவர் ஆனால் அது மற்ற பல திறமையான வீரர்களால்..............மும்பை இந்தியன் அணி கப்டன் பதவியை ரோகித் சர்மாவிடம் பாண்டியாக்கு கொடுத்தது தவறு...............மும்பை இரண்டு வருடத்துக்கு முதல் கடசி இடத்துக்கு வந்தது போல் இந்த முறையும் வரக் கூடும் 277 பெரிய ஸ்கோர்..........உந்த ரன்ஸ் அடிச்சு வெல்ல முடியாது............ ஜபிஎல் வரலாற்றில் இது தான் அதிகபடியான ஸ்கோர் என்று நினைக்கிறேன்..............1 point- அது இப்போது எஃகு நதி
1 pointஇங்கு எதுவும் நிரந்தரமானவையல்ல .......... ஆனால் நாங்கள் ஓடிக்கொண்டிருப்பது நிரந்தரத்துக்காக......! 😁 கவிதைக்கு நன்றி தியா......!1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 point- 'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
நாங்கள் கிடுகுவேலி ஓட்டைக்குள்ளால பார்க்கிறத பப்ளிக்கா காட்டினா எங்கள் கலாசாரம் என்னாவது? 🤨1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
மொஸ்க்கோவில் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டபோது ஒருநாள் மெளனம் காத்த புட்டின், அவர்கள் உக்ரேனுக்குள் தப்பிச் செல்ல எத்தனித்ததால், அவர்களை உக்ரேனே பின்னால் இருந்து இயக்கியதாகக் கூறினார். ஆனால், புட்டினின் நண்பரான பெலாருஸ் ஜனாதிபதி அந்த நால்வரும் தமது எல்லையைக் கடக்க முனைந்தபோதுதான் தாம் அவர்களை மடக்கியதாகக் கூறுகிறார். கேள்வி என்னவென்றால், இங்கு யார் சொல்வது உண்மை? புட்டினா அல்லது அவரது நண்பரா? இது போதாது என்று, இந்த நால்வரும் ரஸ்ஸியாவிற்குள் வேலை தேடி வந்த தஜிக்கிஸ்த்தான் நாட்டுப் பிரஜைகள் என்று ரஸ்ஸியர்கள் சொல்கிறார்கள். ஐஸிஸ் அமைப்பு இந்த நால்வரும் தாக்குதலில் ஈடுபடுமுன்னர், அல்லாவின் மீது சத்தியம் செய்தபோது எடுத்த ஒளிப்படங்களையும், தாக்குதலின்போது எடுத்த ஒளிப்படங்களையும் தனது பிரச்சார காணொளியில் பதிவேற்றியிருக்கிறது.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇந்த முறை பெரும் மாற்றம் வரும் பெருமாள் அண்ணா சகோதரி காளியம்மாள் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு அதே போல் வீரப்பன் மகளும் வெல்ல வாய்ப்பு இருக்கு ஏவிம் மிசினில் தேர்தல் ஆனையம் என்ற பெயரில் இயங்கும் மோடியின் ஆனையம் குளறு படிகள் செய்யாம தேர்தல் முடிவை தேர்தல் ஆனையம் நேர்மையா அறிவித்தால் நான் மகிழ்ச்சி🙏..........................1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointhttps://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.htmlசெய்திகள்சென்னை சின்னங்கள், வாக்கு பதிவு இயந்திரத்துக்கு தடை, இடைத்தேர்தல் ஒழிப்பு- சீமான் அதிரடி தேர்தல் வாக்குறுதி By Mathivanan Maran Published: Wednesday, March 27, 2024, 15:46 [IST] சென்னை: லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தேர்தல்களில் சின்னங்கள் பயன்படுத்தும் முறையை ஒழிப்போம்; வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்துவோம்; இடைத் தேர்தல் முறையையும் ஒழிப்போம் என்பது உள்ளிட்ட அதிரடியான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான 84 பக்க தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். மொத்தம் 32 தலைப்புகளில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதுக்குத்தான் நாம் தமிழர்கிட்ட மோதினாங்களா! 22 தொகுதியில் போட்டியிட ஆளே இல்ல! கதறும் கரும்பு விவசாயி இந்த தேர்தல் அறிக்கையின் தொடக்கத்தில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்கிற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதேபோல மாநில உரிமைகளை திமுகவும் அதிமுகவும் அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தேசிய இனங்களின் நலன்கள், உரிமைகள் அடிப்படையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை. இத்தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 1.- மக்களால் மட்டுமே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 2.- ராஜ்யசபா எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் தரக் கூடாது 3.- ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் 4.- மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசனத்தின் 356- வது பிரிவு நீக்கம் 5.- 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு லோக்சபா தொகுதி என மறுசீரமைப்பு செய்ய வேண்டும் 6.- சின்னங்கள் இல்லாமல் எண்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்த வேண்டும் 7.- வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதித்து வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் 8.- இடைத் தேர்தல் முறையையே ஒழிக்க வேண்டும் 9.- ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 10.- ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 11.- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை; சிறை கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை 12.- மற்றொரு அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை 13.- மாநில உயர்நீதிமன்றங்களில் மண்ணின் மைந்தர்களே நீதிபதிகள் 14.- காஷ்மீருக்கான 370-வது பிரிவு சிறப்புரிமை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்க வேண்டும் 15.- கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து 16.- வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்க எதிர்ப்பு 17.- சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி, பொதுசிவில் சட்டங்களுக்கு எதிர்ப்பு 18.- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.html1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointXதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.நாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை என்னால் படங்களை இணக்க முடியவில்லை.1 point- உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது!
கவலைக்குரிய விடயம், இயற்கை அழிவுக்குதான் இந்த வேட்டைகள்1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கடன் - அது வடிவேலு வாடகை சைக்கிள் எடுத்த கதைதான். சைக்கிளை விடும் போது வாடகை கட்டினால் போதும்🤣. உண்மையில் வெளியில் இருந்து நாம் குத்தி முறியும் அளவுக்கு இலங்கை அரசோ, மக்களோ கடனை பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. அவர்களின் ஒரே நோக்கு - அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் சீராக இருக்க வேண்டும். பெளத்த விகாரைகள் - இருப்பன இன்னும் புதுப்பிக்கப்படுகிறன. அனுராதபுரத்தில் அத்தனை விகாரைகளிலும் ஏதோ ஒரு மராமத்து பணி நடந்தபடியே இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சிங்கள பகுதிகளில் கூட கத்தோலிக்கர் இடங்களில் புத்தர் முளைத்துள்ளார். தமிழர் பகுதிகள் பற்றி சொல்லவா வேண்டும். புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுக்க கூடாது, புத்தரை பச்சை குத்த கூடாது, டி சேர்ட் அணிய கூடாது இந்த மொக்குதனங்களும் அப்படியே உள்ளன. மக்கள் நிலங்கள் இன்னும் கொஞ்சம் விடுவிக்கபட்டுள்ளன. ஆனால் சுதந்திரம்? அது எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. வேலை, வியாபாரம் செய்ய, படிக்க, ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அரசியல் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் உண்மையான ஒரு மக்கள் எழுச்சியை ஏற்படுத்த முனைந்தால் - ஆப்பு நிச்சயம். தமிழர் சிங்களவர் முஸ்லிம் எல்லாருக்கும் இதுவே நிலமை. தமிழரும்கும் முஸ்லீமுக்கும் இன ஒதுக்கல் ஒரு கூடிய பரிமாணம். அறகலவுக்கு சமைத்துக்கொடுத்தோர், மாலுப்பாண் வாங்கி தந்தோர், கோட்டாவின் நீச்சல்ன்குளத்தில் குளித்தோர் என சிலரிடம் பேசினேன். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பழி வாங்கப்பட்டுள்ளனர், அல்லது மிரட்டவாவது பட்டுள்ளனர். 🤣 நற்சான்றிதழ் இல்லை….மனதில் பட்டதை எழுதியுள்ளேன். நன்றி❤️ என்ன வா செய்ய…எனக்கும் ஆசதான்வா…ஆனா மூஞ்சிய காட்ட ஏலா சுட்டி செட் ஆக முடியலவா. ஆனா புது கடை பெயித்து நல்லா திண்டே தான். ராவுல பெயித்து, அந்த பிட்டுவத்தில் ஈந்து கொண்டு நெய்பரோட்டாவும், குலுக்கி சர்பத்தும் அடிச்சா….செல்லி வேல இல்ல வாப்போ…❤️ இது சும்மா…டிரெயிலர்தான்🤣1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இலங்கை தனது கடனை திரும்பி கொடுத்துவிட்டதோ என்ன ஒரு அக்கறை புல்லு அரிக்குது 🤣1 point- பிஞ்சுக் காதல்…
1 pointநீங்கள் கொடுத்து வைத்தவர்...வாழ்க உங்கள் காதல் வாழ்வு....வரவுக்கு நன்றி.. இதனை முன்னரே..சொல்லியிருந்தால்....காதல் தப்பிப் பிழைத்திருக்கும்..1 point- பிஞ்சுக் காதல்…
1 pointஆகா அல்வாயன் எனக்கும் பிஞ்சுக் காதல் பேரப் பிள்ளைகள் வரை. இன்னமும் காதலர்கள் தான்.1 point- கனத்தைப் பேய்க் கவிதை…..
1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..! மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!1 point- என் இந்தியப் பயணம்
1 pointதொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி. மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான். அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம். கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை. கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார். அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம். அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை. இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15 படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார். படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை. சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம். பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை. வரும்1 point- ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது
1 pointஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது ச.சேகர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. திறந்த பொருளாதாரமுறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த போதிலும், 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரையான பொருளாதார நெருக்கடி தோன்றிய காலப்பகுதியில், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி ரூ. 204 என்பதிலிருந்து ரூ. 369 ஆக சடுதியாக வீழ்ச்சியடைந்தது. அதுபோலவே, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 2023 பெப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் ரூ. 364 இலிருந்து ரூ. 290 ஆக உயர்ந்திருந்தது. ரூபாயின் பெறுமதியின் ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளின் விளைவாக இந்நிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளமை என்பது பொருளாதார மீட்சியின் அடையாளமாக அமைந்துள்ளதாக பொதுவான கருத்துகள் காணப்படுகின்றன. அதில் ஓரளவு உண்மைத்தன்மையும் காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 1977 ஆம் ஆண்டின் பின்னர் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக் கணக்கில், ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவீனம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் போன்ற வியாபார மீதி அடங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவீனம் வழமைபோல அதிகமாக காணப்பட்டது. இதனால் வர்த்தக மீதியில் மீதியில் மறைப் பெறுமதி பதிவாகியிருந்தாலும், வெளிநாட்டு பண அனுப்புகைகள் மற்றும் சுற்றுலாத் துறை வருமானம் போன்றன உயர்வை பதிவு செய்திருந்தமையினால் நடைமுறைக் கணக்கில் நேர் பெறுமதி மீதியை எய்த முடிந்திருந்தது. நிதிக் கணக்கு என்பது எவ்விதமான முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் தவணைகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து கடன்கள், நட்பு நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் போன்றன கிடைத்திருந்தன. கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த கொடுக்கல் வாங்கல்களினூடாக நாட்டினுள் பணப்பாய்ச்சல் காணப்பட்டது. இவை பொருளாதார மீட்சிக்கான நேர்த்தியான அடையாளங்களாகும். மேலும் பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும், பண்டங்களின் விலை உயர்வாக காணப்படுகின்றமையாலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் நுகர்வில் வீழ்ச்சி பதிவாகியிருக்கலாம். இதனால் இறக்குமதி செலவு குறைவதில் பங்களிப்பு வழங்கியிருக்கும். சந்தையினுள் வரும் டொலர்களின் எண்ணிக்கை, வெளிச்செல்லும் டொலர்களை விட உயர்வாக இருந்தமையினால், சந்தையில் டொலர்களின் மிகை நிலை காணப்பட்டது. இதனால் சந்தையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக சந்தையில் மிகையாக காணப்படும் டொலரை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை உயர்த்தியிருந்தது. இவ்வாறு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அந்நியச் செலாவணி இருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இதில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு சந்தையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகும். இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைவதற்கான காரணம் இதுவாகும். எவ்வாறாயினும், உண்மை நிலை இதுவல்ல. தற்போதும் நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்றுமதியில் ஈடுபடுவோர் தமது டொலர் வருமானங்களை உடனடியாக ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் விதிமுறை காணப்படுகின்றது. நாடு பெற்றுக் கொண்ட சர்வதேச கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. எனவே, சந்தையில் ஏற்பட்டுள்ள டொலர் மிகை என்பது உண்மையான நிலைவரம் அல்ல. சந்தையிலிருந்து சில காரணிகள் பலவந்தமாக கட்டுப்படுத்தப்படுகின்றமை இந்த பெறுமதி வீழ்ச்சியில் பங்களிப்புச் செலுத்துகின்றது. இந்தக் காரணிகளும் தளர்த்தப்படும் போது, இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இலங்கையில் நுகர்வோர் பொருட்கள், இடைப்பாவனை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இல்லை. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்திருந்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களில் இதுவரையில் விலைக்குறைப்பு ஏற்படுத்தப்படவில்லை. பால்மா விலையில் மாத்திரம் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக, நாட்டில் பொது மக்களின் வாழ்க்கைச் செலவில் பிரதான தாக்கம் செலுத்தும் காரணியான எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் நிலவிய எரிபொருள் விலை உயர்வுகள் மற்றும் ஜனவரி மாதம் முதல் எரிபொருள்கள் மீது பெறுமதி சேர் வரி பிரயோகிக்கப்பட்டுள்ளமை போன்றன இத்தத் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியிருக்கலாம். நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதுடன் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்தால், அது இயற்கையானது. தற்போதைய நிலை மிகவும் தற்காலிகமானதாகும். எதிர்காலத்தில் இறக்குமதிகள் கட்டுப்பாடுகள் மேலும் தளர்க்கப்பட்டதும், பெற்ற கடன்களை மீளச் செலுத்த ஆரம்பித்ததும், இந்த நிலை மாறும். ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிக்கும். தற்போதைய பொருளாதார மீட்சி என்பது வெறும் மாயக் கதை, விரைவில் நாம் மீண்டும் பின்நோக்கி செல்வோம் என்றவாறான கருத்துகள் பகிரப்படுகின்றன. முறையாக பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படாவிடின், நாட்டின் பின்நோக்கிய நகர்வை தடுக்க முடியாது. நாட்டினுள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், அது சார்ந்த வருமதி அதிகரித்துள்ளது மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய கால அடிப்படையில் இந்த இரு துறைகளினூடாகவும் நாட்டினுள் அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்கும். ஆயினும், தேர்தல்கள் தொடர்பில் பேசப்படும் நிலையில், கடந்த காலங்களைப் போன்று, மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக நிவாரணம் வழங்குகின்றோம் எனும் போர்வையில், மீண்டும் நாட்டை பின்தள்ளும் தீர்மானங்களை அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் நன்று. https://www.tamilmirror.lk/வணிகம்/ஏன்-ரூபாயின்-மதிப்பு-உயர்கிறது/47-3350881 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- கனத்தைப் பேய்க் கவிதை…..
1 pointநோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர் 🤣 படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர் எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர். நிற்க.... அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம். சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄1 point- நடனங்கள்.
1 point1 point- கனத்தைப் பேய்க் கவிதை…..
1 pointசிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣1 point- கனத்தைப் பேய்க் கவிதை…..
1 point😀.... மெது மெதுவாகத்தான் நாங்கள் மாறுவோம் போல. நான் இங்கு இருக்கும் இடத்திற்கு அருகில் தான் நித்தியின் ஆச்சிரமம் ஒன்று இருந்தது. இப்பவும் இருக்கும் என்றே நினைக்கின்றேன். பலரும் போய்க் கொண்டிருந்தனர். முன்னர் ஒரு தடவை, அவரிடம் போனால் அவர் தமிழீழம் கிடைக்க உதவுவார் என்று யாரோ ஒருவர் எங்களில் பலரை ஒரு கூட்டமாக கூட்டிச் சென்றனர். நான் போகவில்லை. அன்று அங்கு நடந்ததை ஒரு கதையாகத்தான் எழுதவேண்டும். அங்கு போன சிலர் இன்றும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இத்தனைக்கும் போனவர்கள் பலர் பெரும் படிப்புகள் படித்தவர்கள்.1 point- என் இந்தியப் பயணம்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமானுக்கு இலவச பரப்புரையை கிந்திய அரசு வழங்கி உள்ளது.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமானின் புதிய சின்னம் ஓட்டோவா??1 point- இன்றைய ஸ்பெசல்
1 pointசன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N831 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….