Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்19Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்14Points3057Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்11Points1487Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8907Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/01/24 in all areas
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்." என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். Kaathilai puu. Com13 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
7 pointsஇந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?7 points
-
"பால் கடல் கடைதல்"
5 points"பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும் தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை. சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?" என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக" "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து" அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட் பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள். இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும். சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]5 points
-
சாண் ஏற பப்பா சறுக்கும் - T. கோபிசங்கர்
சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “ வெற்றிக்கு விளையாடவாறியா” எண்டு கேக்க அவன் சொன்னான் “ ஓம் ஆனால் குறட்ஸ்க்குத்தான் விளையாடலாம்” எண்டு. வாங்கி குறட்ஸின்டை தரம் பாத்து , சாண் விளையாடக் கூப்பிட்டுக் கொண்டு போனன். முதல் கட்டுக் கட்டினவன்டை மாபிளைஅடிச்சிட்டு சாண் கட்ட அது வெளீல போட்டுது. பிறகு அவன் கட்ட ரெண்டு மாபிளும் முட்டிக்கொண்டு நிக்க பெரு விரலில எச்சிலைத் துப்பி சுட்டு விரலோட சேத்து பிசுக்க மற்ற மாபிள் அசையாமல் நிக்க பிதுக்கினது தள்ளிப் போய் விழ ஒரு மாதிரி அவனை வெண்டு போய் கடைசீல main குறூப்போட சேந்தன். கண்ணாடி மாபிளில உள்ளுக்க மூண்டு நிறங்களில பூப் போல design ல தான் முதலில மாபிள் வந்தது அதில பாத்து விருப்பமான கலரைத் தேடித் தேடி வாங்கிறது. பிறகு அதில ஐஞ்சு கலர் உள்ள மாபிளும் வந்திச்சுது. பிறகு ஒரே கலரில உள்ளுக்க bubbles இருக்கிற மாதிரி வந்திச்சுது. ஆறாம் வகுப்பில ஒருத்தன் தனி வெள்ளைக் கலரில வெளீல கலர்க் கோடு அடிச்ச மாபிள் கொண்டர , அதுக்கு கிக்கிரி போளை எண்டு பேர் வைச்சம். போளை எண்டு பேர் ஏன் வந்தது எண்டு தெரியாது , ஊரில போளையடி எண்டு தான் சொல்லிறது. காற்சட்டையின்ட ஒரு பொக்கற்றுக்க நியூசும் மற்றப் பக்கம் குறட்ஸ்ஸுமாய்த்தான் பள்ளிக்கூடம் போறது. இது அநேமா சோட்ஸ் போட்டவன்டை விளையாட்டாத் தான் இருந்தது. ஊருக்குள்ள விளையாடிற மாதிரி குழி வெட்டிக் குழிக்குள்ள உருட்டி விட்டிட்டு விழுந்ததை எடுக்கிற விளையாட்டு பள்ளிக்கூடத்தில விளையாடிறேல்லை. இந்தக் குழி விளையாட்டுத்தான் இப்பத்தை “ bowling“ விளையாட்டுக்கு முன்னோடியோ தெரியல்லை. பள்ளிக்கூடத்தில புளியமரத்தடீல பப்பா கீறீட்டு யார் முதல் விடிறதெண்ட சண்டை முடிவுக்கு வர ஒவ்வொருத்தரா கட்டத் தொடங்கினாங்கள். விளையாட்டு Expert காரர் விழுந்திருக்கிற புளியமிலையைத் தள்ளிவிட்டிட்டு பப்பா கீறின இடம் மண் எப்பிடி இறுக்கமா எண்டு பாத்து, மேடு பள்ளம் பாத்து, காத்துப் பாத்திட்டு பெருவிரலாலேம் சுண்டு விரலாலேம் பிடிச்ச மாபிளை விரலின்டை கீழ்ப்பக்கமா சுருட்டி விட கோட்டைத்தாண்டிப் போன மாபிள் திரும்பி வந்து பக்கத்தில நிண்டதை தட்டிப் போட்டு கோட்டோட நிண்டிச்சுது. நான் கட்டினது side கோடுக்கு வெளீல போய் கடலுக்க போச்சுது. சரி எண்டு திருப்பிக்கட்டினது கோட்டுக்கு கிட்டப் போனாலும் கடைசி தான் எண்டாங்கள். முதல் round ல ஒருத்தன் அடிச்சது ரெண்டு மாபிளில படக் குட்டி எண்டு சொல்ல பரவாயில்லை அடிச்ச மாபிளையும் கட்டில விடுறன் எண்டு சொல்லீட்டு திருப்பி அடிச்சவனுக்குப் படாமப் போக கடைசீல என்டை turn வந்திச்சுது. கை நீட்டுத் தானே எட்டி அடி எண்டு ஒராள் சொல்ல, இல்லை நீ சுருட்டி spin பண்ணுவாதானே அப்பிடி அடி எண்டு இன்னொருத்தன் சொல்ல , இங்க பார் நேரா அடி, இது தான் கோடு எண்டு கீறி ஒண்டில்லாட்டி மற்றதிலயாவது படும் எண்டு சொல்லி அங்கால நிண்டு காட்டின விரலுக்கு உருட்டி விட்ட மாபிள் ஒண்டிலேம் அடி படாமலே போச்சுது. ரெண்டு ரவுண்டில எல்லா மாபிளும் குறைய , கணக்குக்கு நாலு வேணும் எண்டு போட்டு , இனி அடிச்சு வெல்லேலாது எண்டு போட்டு , வேறொருத்தன் அடிச்ச மாபிளை கால் விரலுக்க அமத்தி வைச்சு நைசா எடுத்துப் பொக்கற்றுக்க கவனமா வைச்சன் நாளைக்கு விளையாட எண்டு . ரெண்டு நேரப் பள்ளிக்கூடக் காலத்தில வீட்டை போகாம நிக்கிறாக்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டு set ஆகும். கிரிக்கட் எப்பவுமே இருந்தாலும் மற்றவிளையாட்டும் மாறி மாறி வரும். கொஞ்ச நாள் பறக்கும் தட்டு எண்டு விளையாடினம் , பிறகு கிளிபூர், இல்லாட்டி போளையடி எண்டு ஏதாவது இருக்கும். என்ன மாபிளில spin பண்ணினவன் சிலர் கிரிக்கட்டிலேம் spin bowler ஆக, வழமை போல நாங்கள் கொஞ்சப் பேர் வெளீல நிண்டு பந்து பொறுக்கிக் குடுத்தம் மாபிளைப் போல. ஒரு நாள் விளையாடிக்கொண்டு நிண்ட ஒருத்தனை கூடப் படிச்ச prefects எண்ட உளவுப்படை காட்டிக் குடுக்க , அடி வாங்க முதலே அவன் எல்லார்டை பேரையும் சொல்ல, முழுப்பேரையும் office க்கு கொண்டு போய் வைச்சு சாத்தீட்டூ மாபிள்களையும் பறிச்சு வைச்சார் துரைச்சாமி சேர். பூசை குடுத்திட்டுப் Primary school காரரை மட்டும் நிப்பாட்டி “எங்கால மாபிள் எண்டு” கேட்டிட்டு , “அம்மா/ அப்பாவைக் கூட்டிக் கொண்டா” எண்டு சொல்லி அனுப்பினார். “உதுகும் சூது மாதிரித்தான் சும்மா விளையாடாமல் போட்டி எண்டு விளையாடினால் விட்ட மாபிளைப் பிடிக்க வீட்டை களவெடுக்கிறதில தொடங்கி , மற்றவனை ஏமாத்தி மாபிளைப் புடுங்கிறதெண்டு எல்லாக் கெட்ட பழக்கமும் வரும் எண்டு சொல்லித் துரைச்சாமியரும் சொல்ல “ , வந்த அம்மாவும் இவன் குளப்படி தான் எண்டு என்னை இன்னும் போட்டுக் குடுக்க எனக்கெண்டே ஒரு பிரம்பு வாங்கி வைச்சுது அந்தாள். அதுக்குப் பிறகு காலமை பள்ளிக்கூடத்தில துரைச்சாமியரும் பின்னேரம் வீட்டை வரேக்க அம்மாவும் பொக்கற்றையும் bagஐயும் check பண்ணித் தான் உள்ள விட்டிச்சினம். காச்சட்டை போட்ட பள்ளிக்கூட காலம் எப்பவுமே ஏதாவது ஒண்டு பொக்கற்றுக்க இருக்கும்; ஒண்டு சாப்பிட இல்லாட்டி விளையாட. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்4 points
-
"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை]
3 points"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும் துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம். துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும் யாரும் அவரை இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது, வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில், நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும் பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ தலையிடாமல் நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று. அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது. ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம் வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர, இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான். அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works: Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM. Rajaratna, Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards3 points
-
முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில்
3 pointsஇவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்3 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 pointsஅப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..3 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 pointsதவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்.. தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்..3 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 pointsஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கொள்ளைக் கும்பல் மட்டும்தான் நாட்டை தமிழர்களுக்குத் தலைவராக இருக்கணும். மாற்றம் என்று யாரும் வரக் கூடாது.புதிசா யார் வந்தாலும் அவர்கள் விடும் சிறுதவறுகளையும் ஊதிப் பெரிதாக்குவாக்குவார்கள். அதேவேளை எற்கெனவே இருக்கும் கள்ளக் கூட்டங்கள் செய்யும் பெரிய சகூக வீரோத இனவிரோத செயல்களைக் கண்டும் காணமல் இருப்பார்கள்.இது தமிழக அரசியலில் மட்டுமல்ல எமது அரசியலிலும் அப்படித்தான் சம்பந்தரையும்> சுமத்திரனையும் தூக்கிப்பிடிப்பார்கள் அதே வகையறாக்கள்தான் திமுக>அதிமுக>பாஜக வெடகங்கெட்ட கம்மினியூஸ்ட்டுகள்ஈ பாமக விடுதலைசை;சிறுத்தைகள் .மதிமுக .கஎல்லோரையும் தூக்கிச் சுமாங்கிரஸ் எல்லோரையும் தூக்கிச் சுமப்பார்கள். காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் அந்த அந்த மாநிலத்தின் நன்மைகளை நோக்கமாகக் கொண்டிருக்க தமிழக காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் தமிழகத்தை வெறும் பிரதிநிதிகளைப் பெறுவதற்காக மட்டும் பாவிக்கின்றன.3 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 pointsநா.த.கைவையோ, திராவிடக் கட்சிகளையோ பகைக்கத் தேவையில்லை . தலையில் தூக்கி வைக்கவும் தேவையில்லை. (இரு தரப்பும் பாசாங்கில் ஒன்று தான்). இந்த தேவையில்லாத திராவிட தமிழர் ஆணியை யாழ் களம் உட்பட சமூக வலை ஊடகங்களில் தூக்கி வந்து உரையாடலில் புதிய சாக்கடை நிலையை உருவாக்கியது யார் என்று தேடிப் பார்த்தீர்களானால் அது நா.த.க தீவிர விசிறிகள் தான். அதை எப்போவாவது நீங்கள் கண்டித்தீர்களா?3 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 pointsஅப்புறம் சீமானுக்கு ஏன் இத்தனை புடுங்கல்?? தமிழ் நாட்டில் பிறக்காமல் அங்கு வாழாமல் எதுக்காக இத்தனை வன்மம் நாம் தமிழர் மேல். என்ன தான் நீங்கள் கிடந்து குலைந்தாலும் நாம் தமிழர் இனி தமிழகத்தில் அலட்சியம் செய்துவிட முடியாதவர்கள் தான்.3 points
-
மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!3 points
-
தோற்ற வழு
2 points(குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.2 points
-
உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்? அதிகமாக சேர்ப்பதால் என்ன பிரச்னை?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டோஃபர் டேமன் பதவி, தி கான்வர்சேஷன் 45 நிமிடங்களுக்கு முன்னர் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய படை வீரர்களுக்கு சம்பளமாக உப்பு தான் வழங்கப்பட்டது. உணவில் தேவையற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி, தேவையான நுண்ணுயிரிகளை வளர அனுமதித்து பதப்படுத்தியாக உப்பு இருக்கிறது. பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த குறிப்பிடத்தக்க திறன் காரணமாகத்தான் ஊறுகாய் முதல் சீஸ் வரை பல உணவுகளில் உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இன்று, உப்பு நம் உணவெங்கும் நிறைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான உப்பு வழிவகுக்கிறது. வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மெனியர் நோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் போன்றவற்றை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது. ஒரு காலத்தில் தங்கத்தின் எடைக்கு மதிப்புள்ளதாகக் கருதப்பட்ட ஒரு பொருள், எப்படி நோய்களுக்கான காரணியாக மாறியது? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் குடலியல் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ற முறையில், உப்பு எப்படி நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் சோடியத்தின் பங்கு அதிகம். ஏனெனில், சோடியம் ரத்த நாளங்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எளிமையான சொல்ல வேண்டும் என்றால், ரத்தத்தில் சோடியம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தண்ணீரை அது ரத்த நாளங்களுக்குள் ஈர்க்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தில் உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பலர் உணராமல் இருக்கலாம். உப்பு, குடல் நுண்ணுயிரியை மாற்றியமைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் மற்றும் நார்ச்சத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் முக்கிய வளர்சிதை மாற்றங்களை உப்பு குறைக்கிறது. இந்த வளர்சிதை மாற்றங்கள் ரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைத்து, அவற்றைத் தளர்வாக வைத்திருக்கின்றன. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை? ஹாலோஃபில்ஸ் என்று அழைக்கப்படும் உப்பில் செழித்து வளரும் சில நுண்ணுயிரிகளைத் தவிர, அதிகளவு உப்பு கிட்டத்தட்ட தேவையான எல்லா நுண்ணுயிரிகளையும் நச்சுத்தன்மையடையச் செய்யும். அதனால்தான் உணவைப் பாதுகாக்கவும், தேவையற்ற பாக்டீரியாவைத் தடுக்கவும் மக்கள் நீண்ட காலமாக உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நவீன உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. உலகளவில் சராசரியாக உட்கொள்ளப்படும் உப்பின் அளவான 4,310 மில்லிகிராம் சோடியம், குடலில் உள்ள உப்பின் அளவை ஆரோக்கியமான அளவை விட உயர்த்தலாம். உடல் பருமன் சோடியம் ரத்த அழுத்தத்தைத் தவிர மற்ற உடல்நல பிரச்னைகளுடனும் தொடர்புடையது. அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் மலத்தில் அதிகளவு சோடியம் ஆகியவை வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை ஆகும். இதில், ரத்த சர்க்கரை, கல்லீரல் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும். தினமும் அதிகப்படியாக எடுக்கும் ஒவ்வொரு கிராம் சோடியமும், உடல் பருமன் ஏற்படுவதற்கான அபாயத்தை 15 சதவிகிதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை 500 கலோரிக்கும் அதிகமாக உட்கொண்டவர்களை, குறைவான சோடியம் கொண்ட உணவுகளை உண்பவர்களுடன் ஒப்பிடும்போது 1 கிலோ எடை அதிகமாக இருப்பதாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் கூடுதலாக 1.2 கிராம் சோடியத்தை உட்கொண்டனர். கலோரிகள் அதிகரிக்காவிட்டாலும் உப்பை மட்டும் அதிகமாக சேர்ப்பது ஏன் உடல் எடையை அதிகரிக்கிறது? ஏனெனில், சோடியம் ஓர் உணவின் மீதான ஆர்வத்தை (craving) அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நுண்ணுயிர் வளர்சிதை மாற்றங்கள் எடை இழப்பு மருந்துகளான விகோவி (Wegovy) மற்றும் ஓஸெம்பிக் (Ozempic), குடல் ஹார்மோன் GLP-1 இன் இயற்கையான வெளியீட்டைத் தூண்டுகிறது. GLP-1 மூலம், ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிர், பசி, ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஆற்றலை எரிக்க அல்லது கொழுப்பாக சேமித்து வைப்பதற்கான உடலின் முடிவை கட்டுப்படுத்த முடியும். அதிகப்படியான உப்பு இந்த விளைவுகளில் தலையிடலாம். வளர்சிதை மாற்ற நோய்களில், குடலில் இருந்து பெறப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகளின் அதிகரிப்பு மற்றும் பிரக்டோஸ் எனப்படும் சர்க்கரை ஆகியவை கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும். உப்பை குறைக்கும் நாடுகள் பல நாடுகள் உப்பை குறைக்கும் முயற்சிகளை செயல்படுத்தி வரும் நிலையில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் சோடியம் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா உணவில் உப்பைக் குறைப்பதில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதேநேரத்தில், உணவு பாக்கெட்டுகளில் உப்பு குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உப்பு வரி போன்ற நடவடிக்கைகளால், பல ஐரோப்பிய நாடுகள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் குறைவான இறப்புகள் போன்ற பலன்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளன. நாடுகளுக்கிடையேயான துரித உணவுப் பொருட்களுக்கான ஊட்டச்சத்து தரவுகளின் ஒப்பீடு கணிசமான மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மெக்டொனால்ட் ‘சிக்கன் நக்கெட்ஸ்’, கோகோ-கோலா போன்றவற்றில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு அதிகப்படியான உப்பு மற்ற நாடுகளில் இதே உணவுகளில் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உப்பு தொழில் இந்த விஷயத்தில் பங்கு வகிக்கிறது. உப்பு நிறைந்த உணவுகள் அங்கு நன்றாக விற்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த உணவில் உப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க வேளாண் துறை வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பை தன்னார்வமாக படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. சால்ட் இன்ஸ்டிடியூட் 2019 இல் கலைக்கப்பட்டது. சில உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உணவில் உப்பைக் குறைக்க ஒப்புக்கொண்டன. சமச்சீர் உணவுகள் உப்பை அதிகமாக உட்கொள்வதை எப்படி குறைப்பது? இதை மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும்: உப்பு நிறைந்த இறைச்சிகள் (துரித உணவு போன்றவை), உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் (சிப்ஸ் போன்றவை), மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் (சோடாக்கள் மற்றும் ரொட்டி போன்றவை) ஆகியவற்றை குறைக்க வேண்டும். தற்போது, அமெரிக்க உணவில் உள்ள உப்பில் 70% வரை பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து உட்கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, குறைந்த சோடியம் மற்றும் சர்க்கரை, அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அதாவது பதப்படுத்தப்படாத தாவர உணவுகளான பீன்ஸ், கொட்டை வகைகள், விதைகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த உணவுகள், பொதுவாக சோடியம் அதிகமாக இருக்கும் போது, அதிக அளவு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியமான மாற்றாக இருக்கும். இறுதியாக, உணவில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் சமநிலையை கருத்தில் கொள்ளுங்கள். சோடியம் ரத்த நாளங்களில் திரவத்தை வைத்திருக்க உதவுகிறது, பொட்டாசியம் செல்களில் திரவத்தை வைக்க உதவுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை சீரான விகிதத்தில் சிறந்த முறையில் உட்கொள்ளப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cxxz5dz460jo2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஉங்கள் கருத்தோடு பலவற்றில் ஒத்துப்போகும் நான்.... சீமான் விடயத்தில் (பர்னிச்சர் உடைக்கும்போது) நான் நாம் தமிழர் கட்சியில் கணக்கில் எடுக்கும் சிலவற்றை சில நல்லவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று உங்கள் முன் வைக்கிறேன். 1- தமிழ் மொழி சார்ந்த அவர்களது முன் மொழிவுகள் மற்றும் அடுத்த சந்ததிக்கு கடத்தல் (இதில் சீமான் கூட கருத்தில் இல்லை). ஆனால் விதை போடப்பட்டு விட்டது. 2- பெருவாரியான அடுத்த தலைமுறை (படித்த) இளைஞர்களின் கூட்டு 3- சம பங்கு பெறும் பெண்கள் 4- பணம் மற்றும் வசதிகள் செய்து ஓட்டு வாங்காமை கூட்டத்திற்கு ஆட்கள் சேராமை 5- விழாக்கள் மற்றும் பேரணிகளில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு,. 6- முடிந்தவரை தமிழர்கள் சார்ந்த சிந்தனை உடையோர்களுடன் பகை தவிர்ப்பு. (திருமால் வளவன், வைகோ, ராமதாஸ் அன்புமணி, விஜயகாந்த்....…) நன்றி2 points
-
அள்ளு கொள்ளை
2 pointsஅள்ளு கொள்ளை ----------------------------- பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் செய்வதற்கு இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று பந்தடிப்பது, மற்றயது கயங்குண்டு விளையாடுவது. போலை அல்லது மார்பிள் என்று சொல்வதை எங்களூர் பக்கம் கயங்குண்டு என்று சொல்வார்கள். பந்தடிப்பதற்கு ஆட்கள் சேர முன், கயங்குண்டு விளையாடுவோம். பெரும்பாலும் கோஸ் என்று ஒரு விளையாட்டு. அன்று நான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த இரண்டு விளையாட்டுகளுக்காகவும் அர்ப்பணித்திருந்தேன். பள்ளிக்கூடத்திற்கும் ஒரு பந்தும், கொஞ்ச கயங்குண்டுகளும் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விஞ்ஞான கூடம் கட்டியிருந்தனர். அது ஒரு மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் பக்கமாக இருந்தது. அதற்கும் பழைய கட்டிடங்களுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. சின்ன இடைவேளை அல்லது பந்தடி இல்லாத நாட்களில் அங்கு கயங்குண்டு விளையாடுவோம். வேறு வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடுவோம். பெரிய பெட்டி நிறைய கயங்குண்டுகள் சேர்ந்தது. விற்றல், வாங்கல் என்று வியாபாரமும் நன்றாகவே நடந்தது. ஒரு தடவை ஒருவர் அரிதான கயங்குண்டு என்று குட்டி குட்டி கயங்குண்டுகளை எங்களை ஏமாற்றி அதிக விலைக்கு விற்றும் விட்டார். 'சதுரங்க வேட்டை' படத்தில் வருவது போல. பின்னர் தான் தெரிந்தது, அந்த குட்டிக் குண்டுகள் பல கடைகளில், வேறு ஊர்களில், சாதாரணமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன என்று. ஊரில் பண்டிகை நாட்கள், தைப்பொங்கல், சித்திரை வருடம் மற்றும் தீபாவளி வருகிறது என்றவுடன் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே லாஸ் வேகாஸ் வகை விளையாட்டுகளும் ஆரம்பிக்கும். சுத்தமான சூது. முதன் முதலில் லாஸ் வேகாஸ் போன பொழுது, தமிழர்களின் பாரம்பரியத்தை அமெரிக்கர்கள் இன்று பெரும் பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்களே என்று தோன்றியது. இந்த விளையாட்டிற்கு பல வீடுகளில் தடை இருந்தது. அந்த தமிழ் பழமொழி தான், சூதும் வாதும் வேதனை செய்யும், அதற்கு பிரதான காரணம். இந்த விளையாட்டுகளை விளையாடுவது தெரிந்தால், முதுகுத் தோல் நிச்சயமாக உரிக்கப்படும். ஒரு சில வீடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அந்த சில வீடுகளில் இரவில் படுக்கப் போகும் முன் எல்லா உருப்படிகளும் இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொள்வார்கள். எண்ணிக்கையில் ஒன்று இரண்டு குறைந்தாலும், ஒரு பரபரப்பும் இருக்காது. மூன்று நான்கு நாட்கள் வீட்டுப் பக்கம் போகாமல் இருந்ததும் உண்டு. இந்த விளையாட்டுகளில் எப்போதும் ஒரு விடயம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முடிவில் வெல்வது ஒரு ஆளாக மட்டுமே இருந்தது. ஒரே ஆள் இல்லை, ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே கயங்குண்டுகளையோ அல்லது மொத்த காசையோ நாள் முடிவில் வென்று கொண்டிருந்தார். விளையாட்டு கடும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த வழியால் போகும் யாரோ ஒருவர் 'அள்ளு கொள்ளை' என்று பலமாகச் சத்தம் போடுவார். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, தோற்றுக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நடுவில் பாய்ந்து, வென்று கொண்டிருப்பவரிடம் பறித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். பின்னர், நாங்களே ஒன்று கூடி சட்டம் ஒழுங்கை எப்படி நிலைநாட்டுவது என்று முடிவெடுத்து, அதை நடைமுறைப்படுத்தினோம். எல்லோருக்கும் ஆயுதம் வைத்திருக்க அனுமதி கொடுத்தோம். அமெரிக்காவின் மக்கள் எல்லோரும் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை போலவே. கம்பு தடிகள் தான் ஆயுதங்கள். நடுவில் எவராவது பாய்ந்தால், எல்லோரும் கேட்டுக் கேள்விகள் இல்லாமல் பாய்ந்தவரை அடிக்கலாம் என்று ஒரு சட்ட திருத்தமும் கொண்டு வந்தோம். ஆனாலும் அப்பப்ப அள்ளு கொள்ளை நடந்து கொண்டேயிருந்தது.2 points
-
முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில்
2 pointsஇந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும் முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு விடடார்கள் ). விளையாட்டு வேடிக்கை கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது ஒரு இனிய கனாக்காலம்.2 points
-
முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில்
2 pointsசிறுவர்களாக இருந்த அந்தக் காலத்தில், பள்ளிக்கூடத்திற்கு போடும் வெள்ளைச் சேர்ட்டில் மை அடிப்போம், ஏப்ரல் ஒன்றில். பெரிது பெரிதாகவும், சிறிதாகவும் பொய்களை, புழுகுகளை அவிழ்த்து விடுவோம். இப்ப இந்த நாள் அப்படி ஒரு தனியான விஷேமான நாள் இல்லை. எல்லா நாட்களும் ஒன்றே ஆகிவிட்டன.....2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsநான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே. ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது? நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன். தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம். 1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு) 2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை. பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது. ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே. ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.2 points
-
மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது?
2 pointsமேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsசீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsமுதலாவது சந்திப்பு நான்கு முக்கியமான போராளித் தலைவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு சென்னையில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதியான Plush Hotel இல் சித்திரை 10 ஆம் திகதி (1985) நடைபெற்றது. புலிகள் இயக்கத்தில் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், பாலசிங்கம் ஆகியோர் பங்குபற்றினர். டெலோ அமைப்பின் சார்பில் சிறீ சபாரட்ணமும், மதியும் பங்குபற்றினர். ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, குலசேகரன், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் அமைப்புச் சார்பாக பாலகுமாரும் முகிலனும் பங்குபற்றினர். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் என்கிற ரீதியில் ரமேஷ் இக்கூட்டத்தை நடத்தியதுடன், விருந்தினர்களையும் வரவேற்றார். பிரபாகரன், பாலகுமார், சிறீ சபாரட்ணம் ஆகியோருக்கிடையில் ஏற்கனவே பரீட்சயம் இருந்தது. ஆனால், பிரபாகரனும், பத்மநாபாவும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்த் தடவை. வழமைபோலவே, சூழ்நிலையின் தீவிரத்தினைத் தணிக்கும் விதமாக நகைச்சுவையாக சில விடயங்களைப் பேசத் தொடங்கினார் பாலசிங்கம். ஆனால், கூட்டம் தீவிரமாகவே நடைபெற்றது. ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கும் முன்னர் இரு விடயங்கள் குறித்துப் பேச்சினை ஆரம்பித்தார் பிரபாகரன். முதலாவது, அக்கூட்டமைப்பின் பெயர். இரண்டாவது , போராளி அமைப்புக்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள். "நாங்கள் போராடுவதற்கு எதற்காக?" என்று பிரபாகரன் கேட்டார். "அது தமிழ் ஈழத்திற்காகவா அல்லது ஈழத்திற்காகவா? நாமும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழத்திற்காகவே போராடுகிறோம், ஆனால் உங்கள் அமைப்பின் பெயரில் ஈழம் என்றே இருக்கிறது. முதலில் எமது நோக்கம் குறித்த தெளிவு எமக்கு இருக்க வேண்டும். ஆகவே, ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் பெயர் மாற்றப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். பிரபாகரன் கூறியதில் ஒரு காரணம் இருந்தது. ஈழம் எனும் சொல் புராதன இலக்கியங்களில் முழு இலங்கை நாட்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சங்க கால இலக்கியங்களில் இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவரை ஈழத்து பூத்தந்தேவனார் என்று குறிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுவகைகளை ஈழத்து உணவு என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. ஆகவேதான், இலங்கையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை புலிகளும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழம் என்று அழைக்கின்றன. இவ்விரு போராளி அமைப்புக்களும் தமது போராட்ட இலட்சியத்தை தமிழ் ஈழம் என்றே அழைத்தும் வருகின்றன. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ அல்லது ஈரோஸ் அமைப்போ தமிழ் ஈழத்திற்கும், ஈழத்திற்குமான வேறுபாட்டினை நோக்கவில்லை. பாலகுமார் இதுகுறித்துப் பேசும்போது, "நாமும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் ஈழம் என்றே பாவித்து வருகிறோம், நாம் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்கிற கூட்டமைப்பினை உருவாக்கும்போது டெலோவும் அதனை ஏற்றுக்கொண்டது" என்று பதிலளித்தார். நிலைமையின் பதற்றத்தைத் தவிர்க்க எத்தனித்த பத்மநாபா, "நாம் பெயர் குறித்து சர்ச்சையில் ஈடுபடலாகாது. எமக்குள் ஒற்றுமையே முக்கியமானது. அவசியமென்றால், பெயர்மாற்றம் குறித்தும் சிந்திக்கலாம்" என்று கூறினார். பதிலுக்குப் பேசிய பாலகுமார், "ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைப் பொறுத்தவரை பெயர் மாற்றம் ஒரு பெரியவிடயமாக இல்லாதிருக்கலாம், ஆனால் நான் எனது அமைப்பில் உள்ளவர்களுடன் பேசித்தான் இதுகுறித்துக் கருத்துக் கூறமுடியும்" என்று கூறினார். பின்னர் போராளிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயர் குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்று கூறியதுடன், இச்சந்திப்பின் பெயரை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் சந்திப்பு" என்று அறிக்கையில் குறிப்பிடலாம் என்று இணங்கினர். இதன்மூலம், கூட்டமைப்பிற்குள் இணைந்தாலும், புலிகளின் தனித்துவத்தை பிரபாகரனால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் முதலாவது வாக்கியம் பின்வருமாறு அமைந்திருந்தது, "ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், புலிகள் இயக்கமும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்திருக்கிறோம்" . இக்கூட்டத்தில் பிரபாகரனால் எழுப்பப்பட்ட இரண்டாவது விடயம், ஒரு போராளி அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு போராளிகள் தாவுவது அவ்வமைப்புக்களுக்குள் முரண்பாட்டினை உருவாக்கி வருகிறது என்பது. "எனது அமைப்பிலிருந்து வெளியேறி, இன்னொரு அமைப்பிற்குச் சென்று, அங்கிருந்து எனது அமைப்பைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, எமது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்த எவர் முயன்றாலும், நிச்சயமாக நான் அவர்களைப் பிடிப்பேன். அவ்வாறே, உங்களின் அமைப்புக்களிலிருந்து எவர் வெளியேறி எனது அமைப்பில் இணைந்து, உங்களின் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்க முயன்றால் நீங்களும் அதைச் செய்யுங்கள். இவ்வாறான இயக்கத் தாவல்களை நாம் முறியடிக்க வேண்டும். ஒரு போராளி தனது அமைப்பிலிருந்து வெளியேற விரும்பினால், அவர் அதனைத் தாராளமாகச் செய்யலாம், ஆனால், அவர் இன்னொரு அமைப்பில் இணைய முடியாது. ஆகவே, நாம் இதுகுறித்து முடிவொன்றிற்கு வரவேண்டும். உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறி எனது அமைப்பில் சேர வருபவர்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, அதுபோலவே எனது அமைப்பிலிருந்து உங்களிடம் வருபவர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கூறினார். பிரபாகரனது கருத்தை பத்மநாபா ஏற்றுக்கொள்ள மறுத்தார். இவ்வாறான் நடவடிக்கைகள் போராளிகளின் சுதந்திரத்தைப் பாதித்து விடும் என்று அவர் கூறினார். அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று வாதிட்டார். பத்மநாபாவின் கருத்தினை சிறீ சபாரட்ணமும் பாலகுமாரும் ஆதரித்தார்கள். இதனால், இவ்விடயம் அப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டது. கூட்டத்தின் முக்கிய விடயம் குறித்து தலைவர்களிடையே இணக்காப்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை. பாலசிங்கம் இத்தீர்மானம் குறித்து தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், இணைந்த செயற்பாடுகளுக்கான திட்டத்தினை வரைதல், பொதுவான அரசியல் நோக்கத்தில் இணக்கப்பாடு : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கு முற்றான சுதந்திரத்தை ஏற்படுத்துவது. இலங்கை இராணுவத்திற்கெதிராக ஒவ்வொரு அமைப்பும் செய்யவேண்டிய பங்கினை ஏற்றுக்கொள்வது. அமைப்புக்களுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் மூலம் ஒன்றிணைந்த இராணுவ தாக்குதல்களை உருவாக்குவது. இந்தியா முன்னெடுத்துவரும் யுத்த நிறுத்த முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்தாலோசிக்க தலைவர்கள் அனைவரும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொள்வது. கூட்டத்தின் முடிவில் தலைவர்கள் அனைவரும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், குழுவாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பாலசிங்கத்தின் கூற்றுப்படி அக்கூட்டம் சுமூகமாகவும், வினைத்திறன் கொண்டதுமாக அமைந்திருந்தது. தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை, ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்து செயலாற்றுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பு சித்திரை 1984 இல் உருவாக்கப்பட்டதுடன், இக்கூட்டமைப்பில் மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இந்த நான்கு போராளி அமைப்புக்களினதும் ஒன்றிணைவின் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயுத ரீதியான போராட்டமென்பது மிக முக்கிய திருப்பமாக உருமாறியிருக்கிறது. இதன்மூலம் புரட்சிகரப் போராளிகள் ஒன்றிணைந்து தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த முடியும். இராணுவ அடக்குமுறைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வரும் தமிழ் மக்கள், எமது இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்வடைவார்கள் என்றும், இதனால் உற்சாகமடைந்து தமது விடுதலை பாதையில் முன்னோக்கிப் பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஆகிய நாம் பின்வரும் அரசியல் நோக்கங்களை வரிந்து கொண்டிருக்கிறோம், 1. சிங்கள அடக்குமுறை ஆட்சியிலிருந்து எமது தாய்நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் நாம் வென்றெடுப்போம். 2. சுய நிர்ணய உரிமையின் அடிப்படியில் உருவாக்கப்படும் சுதந்திரமான தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்விற்கும் நாம் உடன்படப் போவதில்லை. 3. ஒருமித்த மக்கள் ஆயுதப் போராட்டத்தை எமது போராட்ட வடிவமாக வரிந்துகொள்ளுவோம். 4. எமது விடுதலைப் போராட்டத்தினை சோசலிசப் பாதையில் வழிநடத்துவதனூடாக, சோசலிச சமூகத்தை எமது தாயகத்தில் ஏற்படுத்துவோம். 5. உலக ஏகாதிபத்தியங்களில் இருந்தும், நவ காலணித்துவ அடக்குமுறைகளிலிருந்தும் எமது தாயகத்தை விடுவித்து, அணிசேராக் கொள்கையுடன் அதனை வழிநடத்துவோம். அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் இணைந்து செயற்படுவதென்றும், இலங்கை இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைந்து செயற்படுத்துவதென்றும் நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது மக்களிடமும், எமது மக்களின் விடுதலையினை ஆதரிக்கும் அன்பர்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் தந்துவரும் ஆதரவினையும் உதவியினையும் மேலும் தொடர்வதன்மூலம், எம்மால் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைவை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான். அறிக்கையின் இறுதியில் பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பாலகுமார் மற்றும் பத்மநாபா ஆகியோர் கையொப்பம் இட்டிருந்தனர். போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பு தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பித்த போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று அனைவருமே மிகுந்த உவகையடைந்து காணப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழான ஈழநாடு இதனை வரவேற்றிருந்தது. பல முக்கியமான தமிழர்களும், அமைப்புக்களும் போராளிகளுக்கிடையிலான ஒற்றுமையினை பாராட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் கருநாநிதி ஆகியோரும் இதனை வரவேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, போர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தமது தாக்குதல்களை போராளிகள் தீவிரப்படுத்தியிருந்தனர். பண்டிதரின் வீரச்சாவினையடுத்து புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக பதவியேற்றுக்கொண்ட கிட்டு, போராளிகளிடையே காணப்பட்ட புதிய உத்வேகத்தை இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு அமைப்பிற்குமென்று பகுதிகளை பொறுப்புக் கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் ஊடாக புலிகள் அமைப்பே இராணுவத் தாக்குதல்களில் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதை இராணுவமும், பொலீஸாரும் ஒரு நடைமுறையாகவே கடைப்பிடித்து வந்தனர். ஆனால், இப்பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போராளிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கின. இவ்வாறான தடுப்புத் தாக்குதல்களை கிட்டுவே முன்னின்று, ஒருங்கிணைத்து நடத்தினார்.2 points- வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல
2 pointsநீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது தியா - காண்டீபன்2 points- கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம். நன்றி2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsஅமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை.......! 👍 (அமாவாசை) பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி , சஷ்டி , ஸப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பூரணை அல்லது அமாவாசை .......! 👍2 points- கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....2 points- கருத்து படங்கள்
2 points2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsபோராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகள் 1984 ஆம் ஆண்டு ஈழ்த் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டபோது புலிகள் அதில் இணைய ஆர்வம் காட்டவில்லை. மேலும், இவ்வமைப்பினை உருவாக்கிய தலைவர்களுக்கும் புலிகளை இணைத்துக்கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை. டெலோ அமைப்பினரோடு ஏற்பட்டிருந்த முரண்பாடு ஒன்றின் காரணமாகவே புலிகள் இக்கூட்டமைப்பில் இணைவதைத் தவிர்த்து வந்தனர். இதைவிடவும், இக்கூட்டமைப்பில் புலிகளும் இணைந்துகொண்டால் அவர்களின் ஆதிக்கமே அமைப்பில் காணப்படும் என்று இம்மூன்று தலைவர்களும் அஞ்சினர். புலிகள் - டெலோ ஆரம்ப முரண்பாடு 1984 ஆம் ஆடியில் சிறி சபாரட்ணம் வெளியிட்ட அறிக்கையொன்றில் புலிகள் இயக்கத்திற்கும், டெலோவிற்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கையீனம் குறித்தும், முரண்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் தன்னைப் படுகொலை செய்ய புலிகள் முயல்வதாக சபாரட்ணம் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது அமைப்பினுள் இருந்த சில அதிருப்தியாளர்களால் இரு முறை தன்மீதான படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இம்முயற்சிகளை புலிகள் வெளியில் இருந்து ஆதரித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 1982 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறிசபாரட்ணம் டெலோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் . அவர் தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட காலத்திலிருந்தே டெலோ அமைப்பிற்குள் உள்வீட்டு முரண்பாடுகள் தோன்றி வளர்ந்து வந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இம்முரண்பாடுகள் உச்சத்திற்குச் சென்றிருந்தன. சிறி சபாரட்னம் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லையென்றும், இராணுவச் செயற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், ரோ அமைப்பின் தாளத்திற்கு ஏற்பவே ஆடுவதாகவும், போராளிகளின் நலன் குறித்து அவர் அக்கறை கொள்வதில்லையென்றும் அமைப்பிற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், பயிற்சி முகாம்களில் காணப்படும் குறைபாடுகளை சில போராளிகள் சுட்டிக் காட்டியபோது, அவற்றினை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, அப்போராளிகளைக சிறி சபாரட்ணம் கடுமையாகத் தண்டித்ததாகவும் பல குற்றச்சட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. சிறீ சபாரட்ணம் மேலும் கூறுகையில், 1984 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் கதி அமைப்பிற்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் தன்னைக் கடத்திச் சென்று கொன்றுவிடத் திட்டம் தீட்டியதாகவும், ஆனால் அதுகுறித்து தான் முன்னமே அறிந்துகொண்டதனால் தனது வதிவிடத்தை அன்றிரவு மாற்றிக்கொண்டு தப்பித்ததாகவும் தெரிவித்தார். இக்கடத்தலைச் செய்வதற்காக தனது அமைப்பிற்குள் இருந்த அதிருப்தியாளர்கள் புலிகளிடமிருந்து ஒரு ரிவோல்வரையும், ஒரு போத்தல் குளோரோபோமையும் வாங்கியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இச்சம்பவம் நடைபெற்று 4 நாட்களுக்குப் பின்னரும் அதே குழுவினர் தன்னைக் கொல்ல எத்தனித்தபோது, தான் சாதுரியமாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துவிட்டதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னைக் கொல்ல முயன்றவர்களை தனக்கு விசுவாசமான போராளிகள் கைதுசெய்து அடைத்து வைத்திருந்த்தாகவும், ஆனால் புலிகளின் அணியொன்று அவர்களை அடைத்துவைத்த டெலோ போராளிகள் மீது ஆனி 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தி அவர்களை விடுதலை செய்துவிட்டதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பிரபாகரன் முற்றாக மறுத்திருந்தார். புலிகள் - புளொட் முரண்பாடு 1984 ஆம் ஆண்டு கார்த்திகையில் குறும்பசிட்டி பகுதியில் ஆறு புலிகளின் போராளிகளை புளொட் அமைப்பினர் கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர். இதனையடுத்து புலிகளுக்கும் புளொட் அமைப்பினருக்கும் இடையே பூசல்கள் உருவாக ஆரம்பித்திருந்தன. குறும்பசிட்டிப் படுகொலைகளை ஈ.பி.ஆர்.எல்.அப் அமைப்பினரின் ஈழச் செய்தி எனும் பத்திரிக்கை விலாவாரியாக விபரித்திருந்தது. இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினருக்கும் புலிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் - புளொட் முரண்பாடு ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் புலிகளைக் கொண்டுவர ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு விரும்பியது. ஆனால் ஈரோஸின் பாலகுமாரோ புளொட் அமைப்பை எப்படியாவது கூட்டமைப்பிற்குள் இழுத்துவரப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், புளொட் கூட்டமைப்பிற்குள் வருவதை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் எதிர்த்தனர். மட்டக்களப்புச் சிறையுடைப்பின் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரும் புளொட் அமைப்பினரும் முரண்பட்டுப் போயிருந்தனர். சிறையுடைப்பினைத் திட்டமிட்டு செயற்படுத்தியது புளொட் அமைப்பினரே என்று உமா மகேஸ்வரன் உரிமை கோரியிருந்தார். சிறையுடைப்பில் மாணிக்கதாசனின் பங்கினை வெகுவாக உயர்த்திப் பேசிய உமா, டக்கிளஸ் தேவாநந்தாவின் பங்களிப்பினை வேண்டுமென்றே மறைத்துப் பேசிவந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் இப்பிணக்கினை மறந்து, முன்னோக்கிச் செல்ல விரும்பினார். ஆனால், இரண்டாம் நிலைத் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ரமேஷ் போன்றவர்கள் புளொட் அமைப்பினர் கூட்டமைப்பிற்குள் வருவதை எதிர்த்தே வந்தனர். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினையடுத்து புளொட் அமைப்பினரை ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர தான் எடுத்து வந்த முயற்சிகளை ஈரோஸின் பாலகுமார் கைவிட்டார். கோடாம்பாக்கம், வேளாளர் வீதியில் அமைந்திருந்த இக்கூட்டமைப்பின் அலுவலகத்தில் பாலகுமார் இருந்தவேளை அவரைச் சந்திக்க உமா மகேஸ்வரன் வந்திருந்தார்.அவரை சிநேகபூர்வமாக வரவேற்ற பாலகுமார், தமது கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் அமைப்பும் இணைந்துகொள்ள வேண்டும் என்கிற வேண்டுகோளினை உமாவிடம் முன்வைத்தார். இதனால் மிகுந்த கோபமடைந்த உமா, "இந்த கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் ஈறோஸ் அமைப்பின் இலட்சினைப் போன்ற இலட்சினை அகற்றப்படும்வரை நான் இணைந்துகொள்ள மாட்டேன்" என்று கூறினார். 1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பார்த்தசாரதியுடனும், ரஜீவுடனும் பேசியதன் பின்னர், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முடிவெடுத்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் பேசிய பார்த்தசாரதி, தமிழ் அமைப்புக்கள் தமக்குள் ஒருமித்த அணியொன்றினை உருவாக்குவதன் மூலம், இலங்கை குறித்து மாறி வரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழருக்குச் சார்பான நிலையினைத் தோற்றுவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சந்திப்பொன்றிற்கு இணங்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர், புலிகளையும் புளொட் அமைப்பையும் அழைப்பதென்றும் முடிவெடுத்தனர். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரான ரமேஷுக்கு, யாழ் பல்லைக் கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரானஇராஜநாயகத்தினூடாக பிரபாகரன் அனுப்பிய செய்தியில், இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் தான் ஒருங்கிணைந்து செயற்படத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அக்கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். சென்னை, கோடாம்பாக்கம் ரயில்வே நிலையம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கோடாம்பாக்கம் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களிடம் பார்த்தசாரதியும், ரஜீவும் தன்னுடன் பேசிய இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையான "அயல்நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவது" எனும் விடயம் குறித்து விளங்கப்படுத்தினார் அமிர்தலிங்கம். மேலும், ரஜீவ் காந்தி, ஜெயவர்த்தன மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஜெயவர்த்தனவுடன் பேச வேண்டும் என்று ரஜீவ் கேட்டுள்ளதாகவும் அமிர்தலிங்கம் மேலும் கூறினார். "எமது குரல் உரக்க ஒலிக்க வேண்டுமானால், நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடந்த 12 மாதங்களாக இயங்கி வருகிறது. ஆகவே, அதனுடன் இணைந்து, அதனை மேலும் பலப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய விரும்புகிறோம்" என்று அமிர்தலிங்கம் கூறினார். மேலும், அங்கு பேசிய அமிர், புலிகளையும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் கொண்டுவர ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த ரமேஷ், பிரபாகரனிடம் இருந்து தனக்குக் கிடைத்த செய்தியை அங்கு வெளிப்படுத்தியதுடன், "அவர் எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்புகிறார், ஆனால் இணைந்துகொள்ளத் தயங்குகிறார்" என்று கூறினார். அதன் பின்னர், பிரபாகரனையும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர முயலுமாறு பத்மநாபாவையும், ரமேஷையும் கேட்டுக்கொண்டதுடன், இன்னொரு நாளைக்கு இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாரத்தசாரதியுடனான பாலசிங்கத்தின் சந்திப்பிற்குப் பிறகு புலிகள் அமைப்பிற்குள்ளும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து செயற்படலாம் என்கிற பேச்சுக்கள் இடம்பெற ஆரம்பித்திருந்தன. ஆகவேதான், இராணுவ ரீதியில் இக்கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற பிரபாகரனும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தியாவால் முன்னெடுக்கப்படவிருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பினைப் பலப்படுத்த இணைந்த முன்னணியொன்று தேவை என்கிற கருத்தினை புலிகள் இயக்கத்திற்குள் பாலசிங்கமே முதலில் முன்வைத்திருந்தார். பிரபாகரனோ யுத்த நிறுத்தத்தினை நிராகரித்து வந்ததுடன், ஜெயவர்த்தனவை நம்பமுடியாது என்கிற நிலைப்பாட்டிலும் இருந்தார். போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் அன்று நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து பாலசிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார், "வெகு விரைவில் யுத்த நிறுத்தம் ஒன்றினையும், அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் இந்தியா ஆரம்பிக்கும் என்பதை நாம் அனுமானித்தோம் . இழப்பதற்கு எதுவுமே இல்லாததனால், யுத்த நிறுத்தம் ஒன்றினை ஜெயவர்த்தன வரவேற்பார் என்று நாம் கணக்கிட்டோம். முதலாவதாக, தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இடையறாது தாக்குதல்களை எதிர்நோக்கி வந்த அவரது இராணுவத்தினருக்கு யுத்த நிறுத்தம் என்பது தேவையான ஓய்வினைக் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கலாம்". "இரண்டாவது விடயம், பேச்சுக்களின்போது விடாப்பிடியான நிலையினைக் கடைப்பிடித்து, தமிழரின் அபிலாஷைகளை முழுவதுமாக உதாசீனம் செய்வதென்பது ஜெயாரைப் பொறுத்தவரையில் கடிணமாக இருக்காது. ஆகவே, ரஜீவ் காந்தியின் சமாதானத் திட்டம் ஜெயாரின் சதிகளுக்குத் துணைபோய், தமிழரின் நலன்களுக்கு கேடாக அமையப்போகிறது. இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கைக்கும், தமிழரின் அபிலாஷைகளுக்கும் இடையே பாரிய விரிசல் ஒன்று ஏற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது". எவருடனும் இணைந்துகொள்ளாது தனியாகவே செயற்படுவதென்று தான் எடுத்த முடிவினால், மாறிவரும் சூழ்நிலைகளில் புலிகள் அமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாக்கப்படும் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். சிறி சபாரட்ணத்தை தமது யோசனைக்கு ஏற்ப செயற்பட வைப்பதன் மூலமும், தமது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஊடாகவும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் கூட்டமைப்பினை இந்தியா முற்றுமுழுதாக தனது செல்வாக்கினுள் கொண்டுவந்துவிடும் என்பதை பிரபாகரன் உணர்ந்துகொண்டார். இந்தியா முன்னெடுத்திருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கெதிராக தான் எடுக்கும் எந்த முயற்சியும் தோற்கடிக்கப்படும் என்பதையும் பிரபாகரன் கண்டுகொண்டார். ஆகவே, அவர் முன்னால் இருந்த ஒரே தெரிவு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் இணைந்துகொள்வதன் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதுதான். 1985 ஆம் ஆண்டு பங்குனி இரண்டாம் வாரத்தில் இராஜநாயகத்தின் ஊடாக ரமேஷுக்கு கூட்டமைப்பில் தானும் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவிப்பதாக செய்தியனுப்பினார் பிரபாகரன். பங்குனி 23 ஆம் திகதி கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பொன்றினை ரமேஷ் ஒழுங்குசெய்தார். இச்சந்திப்பில் கலந்துகொள்ள பாலசிங்கத்தையும், இராஜநாயகத்தையும் பிரபாகரன் அனுப்பி வைத்தார். இச்சந்திப்பில், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்ளும் பிரபாகரனின் விருப்பத்தை பாலசிங்கம் அறிவித்தார். மேலும், இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்தும், அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்தப்போகும் பாதகமான தாக்கங்கள் குறித்தும் பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களை அங்கே பகிர்ந்துகொண்டார். இந்தியா செய்ய நினைக்கும் யுத்த நிறுத்தம், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்குப் பாதகமானது என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளின் போது விடாப்பிடியான நிலைப்பாட்டினை எடுப்பதன் மூலம், பேச்சுக்களை இழுத்தடித்து, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் தனது இராணுவத்திற்கு ஓய்வினையும், மீள் ஒருங்கிணைவிற்கான கால அவகாசத்தையும் வழங்க ஜெயவர்த்தன முயல்வார் என்றும் அவர் மேலும் கூறினார். "எமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எமக்கிருக்கும் ஒரே கவசம் எமக்கிடையிலான ஒற்றுமைதான். எமக்கிடையே பொதுவான அரசியல், இராணுவ செயற்திட்டம் ஒன்று இருப்பது அவசியம்" என்றும் அவர் கூறினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் புலிகளையும் இணைத்துக்கொள்வதில் தமது விருப்பத்தினைத் தெரிவித்த அதன் தலைவர்கள், வெகு விரைவில் அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய விரும்புவதாகக் கூறினர். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், பிரபாகரனின் பாதுகாப்புக் குறித்து தாம் கவனம் கொள்வதால், முதலாவது கூட்டத்தினை ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார். "இக்கூட்டம் ஒரு ஐந்து நட்சத்திர நிகழ்வாகும், ஆகவே ஐந்து நட்சத்திர விடுதியில் இதனை நடத்துவதே சாலப் பொறுத்தம்" என்று தனது வழமையான நகைச்சுவை உணர்வுடன் கூறினார் பாலசிங்கம். பாலசிங்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய கூட்டமைப்பின் செயலாளரான ரமேஷ், "ஜெயாரின் ஐந்து நட்சத்திர ஜனநாயகத்திற்கு பேச்சுவார்த்தைகளில் முகங்கொடுக்கப்போகும் நாங்கள் அவரது பாணியிலேயே இக்கூட்டத்தையும் நடத்தலாம்" என்று என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.2 points- எனது அறிமுகம்
1 point- தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
வாசித்ததும் எப்படி தமிழ் சிறியால் இப்படி நகைச்சுவையாக யோசிக்க முடிந்தது என ஆச்சரியப்பட்டேன். யார் கண்டது, உண்மையியே இந்த இரு பனை மரங்களையும் ஆரும் வெட்டினாலும் வெட்டுவர் இனி..1 point- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
👍........ இங்கு அமெரிக்காவில் இப்பொழுது சில காலமாக கொலஸ்ட்ராலுக்கும், மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை என்ற ரீதியில் ஆராய்சிக் கட்டுரைகள் வரத் தொடங்கிவிட்டன. மாச்சத்தை தவிர்க்கும் சிலர், புரதத்தையும் அத்துடன் அதிக கொழுப்பையும் அதன் காரணமாக சேர்த்து எடுக்க ஆரம்பித்துள்ளனர். முக்கியமாக முட்டை. ஒரு நாளிலேயே பல முட்டைகளை உள்ளெடுக்கின்றனர். சில வருடங்கள் போக வேண்டும் இதன் விளைவுகள் தெரிய வர. நீரிழிவு/சலரோகம் எங்களின் பரம்பரை சொத்து போல. ஒவ்வொரு வீட்டையும் இது எட்டிப் பார்க்கின்றது. மிகவும் கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களுடன் இருப்பவர்கள் கூட, பரம்பரை முகூர்த்தங்கள் காரணமாக, இதிலிருந்து முற்றாக வெளியே வர முடிவதில்லை. கரணம் தப்பினால் இன்சூலின் என்ற நிலை. எல்லோரும் சொல்வது போல, எல்லோருக்கும் தெரிந்தது போல, நிம்மதி/நித்திரை/உடற்பயிற்சி/விளையாட்டு அவசியம். ஆனால், பொதுவாக, மிகவும் பிந்தியே இவை உணரப்படுகின்றன. நீங்கள் முன்னரேயே சுதாகரித்து விட்டீர்கள்..........👍1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமானின் மனைவியின் அப்பா காளிமுத்து தானே. பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என று சட்ட சபையில் சபாநாயகராக இருந்து தீர்மானம் நிறைவேற்றி அதில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய காளிமுத்து தானே! தான் தலைவன் என்று கொண்டாடும் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றிய காளிமுத்துவை துரோகி என்று சீமான் கூறாதது ஏன்? ஊழல்பற்றி வாய்கிழிய பேசிய சீமான் ஊழல்ராணி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்ட சசிகலாவை அரசியலில் ஆதரித்தது ஏன்? அரசியலுக்கு அப்பால் குடும்ப உறவு இருந்தால் ஊழலை கண்டுக்க மாட்டாரா அண்ணன்? 😂 இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய காளிமுத்து துரோகி என்று அண்ணன. கூறமாட்டார். ஆனால் 1982 ல் பிரபாகரனை இலங்கையிடம் கையளிக்க கூடாது என்று தீவிரமாக போராடி பிரபாகரனை காப்பாற்றிய திராவிட இயக்கதினர் அண்ணன் பார்வையில் துரோகிகள்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇரண்டாவது சந்திப்பு கள நிலவரத்தைச் சற்றும் புரிந்திராத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், அவர்களால் வழிநடத்தப்பட்ட ரஜீவும் ஜெயவர்த்தனவுடனான உறவுப்பாலத்தைக் கட்டும் முயற்சியில் மூழ்கியதுடன், யுத்த நிறுத்தம் குறித்த அதீத நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக இறங்கியிருந்தனர். இந்தியர்களின் இந்த மனநிலை போராளித் தலைவர்கள் இரண்டாவது முறை சந்திப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியிருந்தது. முதலாவது சந்திப்பு நடந்து சரியாக ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. பிரபாகரன் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. புலிகள் சார்பாக பாலசிங்கமும் இராஜநாயகமும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பாலசிங்கம், கூட்டமைப்பின் பெயர் குறித்து பிரபாகரன் சிக்கல் எதனையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்று தன்னிடம் கூறி அனுப்பியதாக அறிவித்தார். மேலும், பதம்நாபா அன்று கூறிய ஒற்றுமையே இன்று அவசியம், கூட்டமைப்பின் பெயர் அல்ல என்பதை பிரபாகரனும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஆகவே, போராளிகளின் கூட்டமைப்பை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் முன்னணி" என்று அழைக்கப்படுவது பொருத்தமானது என்று பாலசிங்கம் பிரேரித்தபோது, ஏனைய தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். பெயரில் விட்டுக் கொடுப்பொன்றினைச் செய்ததன் ஊடாக போராளிகளுக்கிடையில் ஒற்றுமையினை உருவாக்கியதுடன், புலிகளின் தனித்துவத்தையும் பிரபாகரன் உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும், புலிகளின் மேலாதிக்கமும் இக்கூட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இக்கூட்டமைப்பு வெளியார் பார்வைக்கு அழகனாதாகத் தோன்றினாலும், தொடர்ச்சியான சச்சரவுகளைக் கொண்ட, ஒருவரில் ஒருவர் சந்தேகம் கொண்ட, ஒருவரை ஒருவர் தடக்கி வீழ்த்த தருணம் பார்த்திருக்கும் இவர்களை இந்திய புலநாய்வுத்துறை மிக இலகுவாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும் என்று பிரபாகரன் நம்பினார். குறிப்பாக, சிறீ சபாரட்ணத்தின் மீது ரோ கொண்டிருந்த செல்வாக்கின் அளவை உணர்ந்துகொண்ட பிரபாகரன், போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பின் மூலம் அச்செல்வாக்கினை குறைக்கலாம் என்று எதிர்பார்த்தார். பிரபாகரன் எதிர்பார்த்தது போலவே போராளித்தலைவர்களை திம்பு பேச்சுவார்த்தை நோக்கி இந்தியா தள்ளிச் சென்றது. இப்பேச்சுக்களை டெயிலி நியூஸ் சார்பாகப் பதிவு செய்ய நானும் திம்பு சென்றிருந்தேன். அங்கிருந்த வேளை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை செவ்வி காணும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 10 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து தமிழ்நாட்டுத் தலைவர்களையும், கொழும்பின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளையும் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் அப்போது இந்தியா வகுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு போராளிகளைப் பலவந்தப்படுத்தும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்திற்கு, ஏராளன், இன்னும் உங்கள் காணொளியினை பார்க்கவில்லை ஆனாலும் சூரிய மின் தகடு பொருத்துதல் தொடர்பான சில சொந்த அனுபவங்களை பகிற்கிறேன். தற்போது உள்ள ஒரு தகடு கிட்டதட்ட 390W வலுவை கொண்டது, எனது வீட்டில் பொருத்தும் காலத்தில் 190W ஆக இருந்ததாக நினைவுள்ளது. 11 தகடுகள் 2.1KW மின் வலுவினை கொண்டதாக பொருத்தப்பட்டது ஆரம்பத்தில் நாளொன்றிற்கு 12KW சக்தியினை பிறப்பித்தது, இலங்கை போன்று பூமத்திய ரேகையில் அவுஸ்ரேலியா இல்லை, அதனால் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வலுப்பிறப்பிக்கும் சக்தி வேறுபடும். நாளொன்றிற்கு உங்கள் சூரிய மின் த்கடுகள் அதனை விட சராசரியாக 4 மடங்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என கூறுகிறார்கள் ஆனால் நடைமுறையில் அது சற்று கூடுதலாக இருக்கும். ஆண்டொன்றிற்கு 0.5% -0.8% அதன் மின் உற்பத்திதிறன் குறைவடைவதாக கூறுகிறார்கள். inverter 10 ஆண்டு காப்புறுதியும் சூரிய மின் தகடு 15 ஆண்டு காப்புறுதியும் வழங்குகிறார்கள், எனது inverter காலாவதியாகிவிட்டது ஆனாலும் தொடர்ந்து இயங்கிறது, உறவினர் ஒருவரது inverter சில வருடங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறினார். இரண்டாம் தர மிந்தகடுகள் 15 ஆண்டுகளின் பின்னர் 80% இயங்குதிறனுடன் காணப்படும் அது அடுத்த 10 வருடங்கள் வரை இயங்கும் ஆனால் உத்தரவாதம் இல்லை. அதனால் இரண்டாந்தர மின் தகடு இலாபமா என்பதனை பார்த்து வாங்கலாம் ஆனால் அது உத்தரவாதம் இல்லை. எனது சூரிய மின் தகட்டினை இன்வேட்டர் செயலிழக்கும் வரை (10 வருட உத்தரவாதம், தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது) அதனது செயற்பாட்டு காலமான 25 வருடங்கள் வரை உபயோகிக்க உத்தேசித்துள்ளேன், காரணம் சுற்று சூழல் ஆர்வத்தினால் அல்ல அதனை மாற்றீடு செய்வதால் இலாபம் ஏற்படாமல் மேலதிக பணவிரயம், ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை மாற்றீடு செய்கிறார்கள் அதன் இயங்குநிலையிலேயே. அவஸ்ரேலியாவிலிருந்து வரும் இரண்டாம் தர சூரிய மின் தகடுகளின் அதிக பட்ச உபயோகிக்கப்பட்ட காலம் 17 வருடங்கள், ஆனால் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் அந்த காலத்தினை விட குறைவாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது. இங்கு விக்ரோரியா மானிலத்தில் மட்டும் சூரிய மின் தகடு மீழ் சுத்திகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் தனியார் பணம் பெற்று பழைய மின் தகடுகளை எடுத்து செல்வார்கள், இலங்கையில் அவ்வாறான பிரச்சினை வராது என கருதுகிறேன். இங்கு ஒரு அலகு மின்சாரம் 0.42 சதத்திற்கு வழங்குகிறார்கள், நாளொன்ற்றிற்கு சேவைக்கட்டணமாக 0.98 சதம் பெறிகிறார்கள் உங்களது மேலதிக சூரிய மின்சாரம், மின்சார சபை மின்சாரத்திற்கு செல்லும் அதற்கு மின் அலகொன்றிற்கு 0.05 சதம் வழங்குகிறார்கள். மின்சாரம் தடைப்பட்டால் சூரிய மின் தகட்டின் மூலம் வரும் மின்சாரம் உடனடியாக நின்றுவிடும், காரணம் அது திருத்த வேலைகளில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சூரிய மின் தகட்டுடன் பற்றரி பொருத்தினால் மின் தடைப்பட்டாலும் மின்சார வழங்கலை தொடர்ந்து பெறலாம் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும். புதிய சூரிய மின் தகடும் இன்வேட்டரும் பொருத்தும் செலவை இங்குள்ள மின் கட்டணத்தினடிப்படயில் அந்த செலவினை இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு வழங்கிவிடும் இந்த சூரிய மின் தகடுகள், பற்றரி இணைப்பு (10 வருட உத்தரவாதம் 80% செயற்திறன்) இலாபம் இல்லை, இந்த தரவு அவுஸ்ரேலிய மின்சார கட்டணத்தினடிப்படையில் (சிலர் மின்சார கார் வைத்திருப்பவர்கள் இலாபகரமானது என கூறுகிறார்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாது). இலங்கை மின் கட்டணத்திற்கு இந்த மின் தகடு பொருத்துவது இலாபமா என்பதனை நீங்கள் கணிக்க வேண்டும். உங்கள் வீட்டில் நீங்கள் மின் திருத்த வேலையில் ஈடுபடும்போது பிரதான ஆழியின் இணைப்பை துண்டிப்பதுடன் சூரிய மின் தகட்டின் பிரதான ஆழியின் (சுவிட்ச்) இணைப்பையும் துண்டிக்கவேண்டும்.1 point- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
தமிழினப் படுகொலையில் ஹிந்தியாவின் கூட்டுப்பங்களிப்பை ரசித்து உருசித்த சிங்களம்.. இப்போ தம் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவுடன்.. அதில் இருந்து தம்மை தற்காக்க ஹிந்தியாவை காட்டிக்கொடுக்கின்றனர். எவருக்காக எல்லாம் ஹிந்தியா தமிழினத்தை அழித்ததோ.. அவர்களால்.. ஹிந்தியா நிச்சயம் ஏமாற்றப்பட்டு.. சீனா அதன் அருகில் நிறுத்தப்படும் கால வெகு விரைவில் உருவாகும். இது இந்திராவுக்குப் பின்னான ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய ராஜதந்திரத் தோல்வி ஆகும்.1 point- Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
நன்றி பிரபா...! மூனி மூனி மிகவும் பிடித்த இடம்..! வியட்னாமியர்களும், சீனர்களும் ஒரு சீசனுக்கு சீனத் தொப்பிகளுடன் நின்று றால் பிடிப்பதைக் கண்டுள்ளேன்..! எவ்வளவு இனங்கள் இணக்கமாக வாழும் நாடு என்று அவுஸ்திரேலியா நினைத்துப் பெருமைப்படுவது உண்டு! இந்தத் தீவைப் பற்றி உங்கள் மூலம் தான் அறிந்தேன்! ஒரு முறை போகத்தான் என்னும் ஆவலை, உங்கள் எழுத்துக்களும் படங்களும் ஏற்படுத்தி விட்டன! எனக்கும் தனிமை பிடிக்கும்!1 point- மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது?
1 pointஇணைப்பிற்கு நன்றி நுணாவிலான். காணொளியை முழுமையாக கேட்டேன் பார்த்தேன்.எனக்கு தெரிந்த உண்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்.1 point- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
போகிற போக்கில் எல்லோரு மிக இலகுவாக சிங்கள பெளத்த இனவாதியும், இனக்கொலையாளியுமான கோத்தபாயவின் பங்கினை இக்குண்டுவெடிப்பிலிருந்து மறைத்துவிடுட்டுச் செல்வது தெரிகிறது. இது எதைக் குறிக்கிறதென்றால், அவனுக்கு வெள்ளையடித்து, அவன் மீது குற்றமில்லை என்று அறிவித்து, மீண்டும் அவனைப் பதவியில் சிங்களவர்களைக் கொண்டே ஏற்றிவைக்க எடுக்கப்படும் நடவடிக்கை. 2009 இற்குப் பின்னரும் இந்தியா ராஜபக்ஷேக்களைப் பாதுகாத்துத்தான் வந்தது. 2019 கூட இந்தியாவின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட படுகொலையாக இருக்கலாம். ஆனால், அதுகூட கோத்தாவுக்காகத்தான் நடத்தப்பட்டது.1 point- "தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?"
"தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி, 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது. அது, அந்த ஒற்றுமை, வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார். “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60) பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே! பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே! {(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக. இதை ஏன் எம் இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்னும் உணரவில்லை. அன்று ஒரு கட்சியில் ஆரம்பித்து ஒரே ஒரு தமிழ் தலைவன் இருந்தான், இன்று எத்தனை காட்சிகள், எத்தனை தலைவர்கள் ? இது இன்னும் வேண்டுமா எமக்கு ?? "இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
எனக்கும் உங்களுக்கும் பிடிக்கும். போய் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமான் மக்களிடம் சென்றடைந்தது சகூக ஊடகங்கள் மூலமாகத்தான். அவை இல்லாவிட்டால் தமிழ்த்தேசியத்தை பேசும் சீமானை காட்டுவதற்கு தமழ்நாட்டில் எந்த ஒரு முதகெலும்புள்ள ஊடகங்களும் இல்லை.தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று கடந்த தேர்தல் மூலம் நிருபித்த நாம்தமிழர் கட்சியை கருத்திணிப்புகளில் அந்தப் பெரில் போடுவதற்கு எலும்புத்துண்டைப் பொறுக்கும் உடகங்களிடம் திராணியில்லை.தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்ந்து திமுக நுட்டணி>அதிமுக கூட்டணி>பாஜக கூட்டணி தவிர நாம்தமிழர் கட்சி ஆகிய 4 பிரதான கட்சிகள் போட்டிpடும் பொழுது கருத்துத்திணிப:புகளில் மற்றவர்கள் திமுக.ஆதிமுக பாஜக நுட்டணிகளை மட்டும் போட்டு விட்டு 4வதாக மற்றவர்கள் என்று போடுகிறார்கள். இந்த மற்றவர்கள் யார்?யார்?இந்த நிலமையில் நமக்குநாமே ஊடகம் என்று நாம்தமிழர் கட்சி சமூக ஊடகங்கபை; பன்படுத்துவதில் என்ன தவறு?1 point- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
குண்டு வெடித்த அடுத்த கணமே அது மேற்கு +இந்தியா வின் வேலை என்பதை சிறு குழந்தையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் மேற்கின் மாயையால் மூடப்பட்ட சிலருக்கு மட்டும் இது புரியாது. இதை மறைத்து முண்டு கொடுக்க வேண்டிய தேவை யாருக்கேனும் இருக்கலாம். 😁1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- தோற்கும் விளையாட்டு
1 pointதோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- ஆரோக்கிய நிகேதனம்
1 pointஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கின்றோம், இப்பத்தான் எங்களின் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று குறைபட்டுக்கொண்டே, டீயா, கோப்பியா என்று கேட்டனர். இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பில், டீ என்று சொல்லிவிட்டேன். நாங்கள் டீ காப்பி குடிப்பதில்லை, அவை உடம்பிற்கு நல்லதில்லை, ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு போட்டுக் கொடுப்போம் என்றபடியே அவர் உள்ளே போனார். ஸ்மால் சைஸ் உடுப்புக்குள் அதைவிட ஸ்மால் சைஸில் அவர் இருந்தார். திரும்பி வந்தார். பிளாக்கா, மில்க்கா என்று கேட்டார். இரண்டில் ஒன்று மீண்டும். மில்க் என்றேன். நாங்கள் ஸ்கிம் மில்க் மட்டும் தான், ஃபுல் மில்க்கில் கொலஸ்ட்ரோல். ஹார்ட்டை அட்டாக் பண்ணி விடும் என்றார். அவர் பெரிய படிப்பாளி, இலக்கண சுத்தமாகவே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பவும் வந்தார். எத்தனை ஸ்பூன் சுகர் என்று நின்றார். அவரையே பார்த்தேன், அவர் இரண்டு எண்கள் சொன்னால் அதில் ஒன்றைத் தெரிவு செய்வதற்காக. அவரும் அப்படியே நின்றார், அதனால் நான் மூன்று என்று ஒரு எண்ணை சொல்லிவைத்தேன். நோ நோ, மூன்று அதிகம், சுகர் தான் தி வேர்ஸ்ட் என்றார். அப்ப இரண்டு என்று நான் இழுக்க, அவர் இரண்டும் அதிகம், ஒன்று போடுகின்றேன் என்று மீண்டும் உள்ளே போய்விட்டார். ஒரு பெரிய குவளையில் ஸ்கிம் மில்க், ஒரு ஸ்பூன் சுகர், தேயிலைச்சாயம் கலந்து என் முன்னால் இருந்தது. கிளம்பும் போது, அடிக்கடி அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை ஒன்றையும் போட்டார். இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.1 point - கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.