Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19129
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46788
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/25/24 in all areas

  1. "தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest" வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது ......... . அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது.......... பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில் மோதியும் அந்த பறவைகள் அழிய தொடங்கின ............. எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழியக் காரணம் ஆனது...... . அதே போல்த் தான், எமக்கு கிடைக்காத வசதிகள் எல்லாவற்றையும் மற்றும் பாதுகாப்பையும் எண்ணி நம் பிள்ளைகளை கட்டுப்படுத்தி, கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்...... பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாடத் தெரியாது. அதே போல்த் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது...... பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள். நல்லது கெட்டதை தானாக காற்றுக் கொள்ளட்டும்.. நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன் /அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்....... நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும் எப்படி நமக்கும், நம்மை போல் பலருக்கும் கற்றுக் கொடுத்து போல........ . இதைத் தான் தகுதியானவை நிலைத்து வாழ்தல் / survival of the fittest என்று சொல்லுகிறோம். அதை நோக்கித் தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. பெரிய‌வ‌ரே என‌து பெய‌ர்( வீர‌ப் பையன்26 ) வீர‌ப்பா பைய‌ன் கிடையாது லொல்😁...........................
  3. வடையை…. 800 ரூபாய்க்கும், கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கும் விற்று டொலரை சேமிக்கலாம் என்றால் வெள்ளைக்காரன் வீடியோ எடுத்து நாறடிக்கின்றான். 😂
  4. இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது. சில காட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார். அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடியல அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு டேஸ்ட் ? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….” அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரலை. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் அர்த்தம் ஓராயிரம். கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிடும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு. எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன். “மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.” நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்” “வெளில சாப்பிட்டுட்டேன்”. “ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”. “வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.” எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது. சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்படி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது. கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே. இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாறுமே..!!!!! “உணவே மருந்து இதயத்திற்கும்” படித்ததில் பிடித்து பகிர்கிறேன்.
  5. சுவிசுக்கு..கொண்டுபோய் திரும்பி வந்தபின்னர்...உடுப்புத்தோய்க்கிற கல்லாகப் பாவிக்கினம்..😃
  6. மிகவும் வேண்டிய ஆக்கம். பிள்ளைகள், அவவர்களின் தேவைகளை கூட கேட்டு, அது ஒப்பீட்டளவில் கடினமாயின், பெற்றோர் எடுக்கும் முயற்சியை அறிந்தே, கால தாமதித்து போன்றவை அனுபவித்தே பெறவேண்டும். அத்துடன், எந்த தேவை ஆயினும், சிறிய பொருளாயினும் அளவு. இங்கே, புலம் பெயர்த்தவர்களில் நோனாக்கள் பலர் - பிள்ளைகளை போட்டிக்கு அனுப்புவதில்லை, காரணம், தோல்வி வந்துவிடும் என்ற மனப்போக்கால். முயன்று தோற்பது அனுபவம், அனால், வெல்லத்தான் முற்றுமுழுதாக, முழுமனதாக, முயல வேண்டும். நான் அறிந்து, 2 குடும்பம், பிள்ளைகளை ஒரு போதும் தேசிய / அரச போக்குவரத்து சேவையை பாவிக்க பழ்க்கவில்லை. அவர்கள், முதல்தரம் பாவித்த அரசு போக்குவரத்தில் ஏதோ ஒரு முறுகல் அசம்பாவிதம் நடந்து விட்டது, அவர்களுக்கு மிகவும் பயம் தொற்றி, அரச போக்குவரத்தை பாவிக்கும் நம்பிக்கை (confidence) போய்விட்டது. பின், சிலகாலம் அவர்களின் பெற்றோர், உறவினர் அரசு போக்குவரத்தை பாவிப்பதற்கு அவர்களை பழக்கி எடுத்தார்கள். ஒரு முறை கோயிலில், ஒரு தாய் தனது பிள்ளை நிலத்தில் இருப்பதை பார்த்து ஏசினார் (கோயிலுக்கு வந்தால் எப்போதும் இருந்து விட்டு போகவேண்டும் என்றது கூட தெரியாதவர்கள்). (பின்பு அறிந்து கொன்டேன், அவர்கள் வடக்கில், வெளிநாடு வரு முன் அவர்களின் நிலை மிக வசதி குறைந்ததாக இருந்தது என்று). இப்படி, பல தக்கென பிழைக்கும் வாழக்கைக்கு வழிசொல்லும் அனுபவங்களை தடுக்கும் பெற்றோரை கண்டுவிட்டேன்.
  7. இலங்கை இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .
  8. MDH & EVERESTஎன்கிற இந்திய மிளகாய்த்தூள்,சரக்குத்தூள், மீன்கறி மசாலா,சாம்பார் மசாலா இப்படி பலதரப்பட்ட பொதிகளிலும் புற்று நோயை தூண்டக் கூடியதாக உள்ளதாக கூறி கொங்கொங் சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர். உங்கள் வீடுகளிலும் இந்த பெயர்கள் கொண்ட பொதிகள் இருந்தால் அவதானமாக செயற்படுங்கள். காணொளியைப் பாருங்கள் முடிவெடுங்கள்.
  9. அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது என்று வீரப்பா பையன் சொல்லுகிறார் அது சரி எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣
  10. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?
  11. அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக
  12. ஐயா! ஏதோ புது நியூஸ் சொல்லப்போறார் போல கிடக்கு....🧐 எதுக்கும் நாமள் ஜேர்மன் மல்லி செத்தல் மிளகாய் சீரகம் எண்டு சொல்லி விடை பெற வேண்டியது தான்....😂
  13. நாங்கள் கொழும்புக்கு போறம்....😂 நாலு கொத்துரொட்டி கடை திறக்கிறம்....😁 வெள்ளவத்தையிலை அஞ்சு...அஞ்சு வடே வடே கடை திறக்கிறம்...🤣 சிலோன்ரை ஒட்டுமொத்த கடனையும் அடைக்கிறம்.... 🙃 திரும்பி வாறம் ஜெயவே வா 😎
  14. இந்திய காங்கிரஸ் பழைகாலத்து தலைவராக இருந்த காமராசர் என்பவரை சீமான் புகழ்ந்து பேசியதை நான் யாழ்களத்தில் படித்து இருக்கின்றேன்.
  15. நீங்களும் விடுவதில்லை என்று தான் நிக்கிறியள்🤣
  16. இனி மிளகாய்த்தூள் சரக்குத் தூள் எல்லாம் பொருட்களை தனித்தனியாக வாங்கி வீட்டிலேயே செய்ய வேணும் போல கிடக்கு.......! 😴
  17. சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை Madawala News 5 days ago சம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம். சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது. இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது. வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன். இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் . இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள். இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார். ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன். "அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝 ஐ.எல்.எம் நாஸிம் (ஊடகவியலாளர்) https://www.madawalaenews.com/2024/04/i_262.html
  18. அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!
  19. நல்லதொரு கட்டுரையும் அறிவுரையும். நன்றி தில்லை.
  20. தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி………. 😂
  21. இவருடைய காங்கிரஸ் இணைவும் பேச்சுகளும் நாம் தமிழருக்கு பெரிய சிரமங்களை தரப் போகிறது 😭
  22. பொறுத்தார் பூமி ஆழ்வார். இது தமிழ்நாட்டில். இந்திய மற்றைய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
  23. சிங்களம் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் துரையப்பா புது வாழ்வை மறந்து விட்டார்.
  24. பிரெஞ்சு கலாச்சாரம் மிகவும் உன்னதமானது. வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் தெரிந்தவர் தெரியாதவர் எல்லோருக்கும் எல்லோராலும் சொல்லப்படுவது வழக்கம்.
  25. படித்தேன் பிடித்திருந்தது........தேங்ஸ் ........! 😁
  26. இந்த காவியம் பொய்தானா .........! 😁
  27. பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன் ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
  28. வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள்
  29. தமிழர் வேண்டாத தெய்வங்களும் இல்லை. வாங்காத அடிகளும் இல்லை.🙂
  30. எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.
  31. இந்த இரண்டு வருட போர் காலத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் ரஷ்யாவையும் அது கைப்பற்றிய இடங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை என்றால்.......? அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣
  32. பையா, ரிவியூவில் பந்து outside the leg stump இல் பிட்ச் ஆனதால்தான் அவுட் கொடுக்கப்படவில்லை! CSK தோற்றது நல்ல சந்தோஷம். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் CSK play - off இற்கு போகவே கூடாது. இந்த தல ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை!!😡
  33. அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂 முடிந்தால் x சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣
  34. பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.
  35. கண்ணு பட போகுது சுத்தி போடுங்க அண்ணா .
  36. வாழ்த்துக்கள் ஈழப்பிரியன். மொத்தம் எத்தனை பேரப்பிள்ளைகள். ....ஒரு பத்து வருமா?? 🤣🤣
  37. நீங்கள் விரும்பிய நான்கும் நடக்கும். ஆனி 4ம் திகதிவரை பொறுத்திருங்கள் தோழரே.
  38. பேரப்பிள்ளைகளோடு கொண்டாடடம் தான். இது வாழ்க்கையில் மிகப் பெரும் பேறு...நான்குடனும்..நன்றாக சந்தோசமாய் இருங்கள்... வாழ்த்துக்கள்..
  39. தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.? 1) 8% - 12% மேல் 2) மூன்றாவது பெரிய கட்சி 3) சின்னத்தை தக்க வைத்தல் 4) 1 கோடி வாக்குகள் - இலக்கு நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம் வேறு அல்லவா.? இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.
  40. இணைப்புக்கு நன்றி ஜி. சீனியர் கனகசுந்தரம் பிற்காலத்தில் செல்வநாயகம் அன்று ரயிலில் கூறியது எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் என்பதை உணர்ந்திருக்க கூடும். நிச்சயம் 83 இல் ஓடும் போது அஜித் கனகசுந்தரம் அறிந்திருப்பார். இன்றும் இதே போல் “இலங்கையர்” என்ற அடையாளம் முந்தள்ளுப்படுவதையும், நாட்டில் தமிழ் இளையோர் பலர் அதன் பால் இழுவுண்டு போவதையும் காணும் போது - நாமும் செல்வநாயகம் போல “Young man (men and women) – Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” என கேட்டு நகர்வதை விட வேறு எதுவும் செய்யவியாலாது. வரலாறு மீள் திரும்பி கொண்டே இருக்கிறது….கனக சுந்தரங்களின் விரல்களை கொண்டு அவர்களின் கண்களையே குத்து போக்கை இந்த தடவையாவது சேனநாயக்கள் கைவிடுவார்களா? எனக்கு நம்பிக்கை இல்லை.
  41. நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.
  42. @Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂
  43. காணியின் சந்தை மதிப்பின் 100% கட்ட வேண்டும். சந்தை மதிப்பும் நீங்கள் வேண்டிய காணியின் வரி மதிப்பீட்டு விலையும் ஒன்றல்ல. பொதுவாக வரி மதிப்பீட்டு விலை நிர்ணயம் கொள்வனவு விலையைவிட குறைவாகவே இருக்கு. நீங்கள் உங்கள் முதுசம் வேறொருவர் கைக்குள் போகக்கூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் அதை உங்களுக்கு உறவு என்கிற வகையில் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் (உ+ம்) வட மாகாண சபையின் காணி மதிப்பீடே காணியின் ஊண்மையான (வரி) மதிப்பாகும். அதற்குத்தான் நீங்கள் முத்திரை வரி கட்டுவீர்கள். நீங்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டபின்னர் (அதைப் பெற ஏறக்குறைய 1 வருடமாகும்) காணியை உங்கள் பெயருக்கு மாற்றினால் Dual citizenship இரட்டைக் குடிவைத்திருப்பவர்களுக்கு 4% மட்டுமே . கொசுறு; இரட்டைக் குடியுரிமை $2 000 US Dollars. (பிரதான விண்ணப்பதாரிக்கு, மேலதிக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு $500(Each person) ஒருவரது விண்ணப்பக் கட்டணம் 40 Canadian dollars. மேலதிக செலவு ஏறக்குறைய $ 500-600 (ஒருவருக்கு ) உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.