Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8907
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/28/24 in all areas

  1. "குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..!" ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.... அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்...... "உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று..... பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்..... இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப் பார்த்தார்...... அதில் இப்படி எழுதியிருந்தது: "மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்" என்று...... இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.... " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.... தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் நம்மாளும் எடிசன்களை உருவாக்க முடியும்..... குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைங்க.. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா? செப்டம்பர் 11 தாக்குதல் , நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை, கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் , தமிழகத்தில் இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா? இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால் ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  3. புலம்பெயர் தமிழர்கள் என்பது வியாபாரிகளால் ஆனது அல்ல. ஆனால் கூட்டமைப்பு விசேடமாக தமிழரசுக் கட்சி தமது சொந்த சுயநல தேவைகளுக்காக புலம்பெயர் தமிழர்களில் மிக மிக சிறிய வீதம் உள்ள வியாபாரிகளை பணக்காரர்களைத்தான் நாடுகிறது. எனவே மாற்றமடைய வேண்டியது கூட்டமைப்பே தவிர புலம்பெயர் தமிழர்கள் அல்ல.
  4. இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......! 😂
  5. இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.
  6. எனது விருப்பமும் அதுதான். எனக்கு பல இன நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உந்த சிங்கள இனத்தில்தான் “ஹாய்” என்று சொல்லுவதற்குக்கூட ஒருவருமில்லை. இனியும் எவரையும் சேர்ப்பேன் என்றும் நினைக்கவில்லை. இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை. கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தேசிய அரசியலை முழுமையாக நீர்த்துப்போகச் செய்ய தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி அவர்களை நீதிமன்றுக்கு ஏறச் செய்தாயிற்று. தாயகத் தமிழரை புலம்பெயர் தமிழரிடம் இருந்து பிரிக்கும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன. நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். 👇🏾
  7. யார் செய்வது? இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….
  8. நான் எழுதும் மூலை எதுவென்று நீங்கள் தேடவேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். இலங்கையில் தமிழர்களுக்கென்று தனியான மொழியும், கலாசாரமும், தேசமும் இருக்கின்றது என்று முற்றிலுமாக நம்பும் மூலையது. சுதந்திரத்திலிருந்து தனிச்சிங்களச் சட்டம், பல்கலைக்கழக அனுமதி, பிரஜாவுரிமை, குடியேற்றங்கள், காலத்திற்குக் காலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இன வன்முறைகள் என்கிற பெயரிலான‌ இனக்கொலைகள், 1972,1977,1981,1983 - ‍ 2009 என்று இன்றுவரை நிகழ்த்தப்படும், இலங்கையின் சிங்கள பெளத்த இனவாதிகளால் ஒற்றையாட்சியின் கீழ் நடத்தப்படும் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கும் மூலையில் நான் இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் இருக்கும் மூலையைச் சொல்லிவிடுங்கள். அரசியல் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும்போது நான் அதனைத் தட்டிக்கழிக்கவோ அல்லது அதனை ஏற்றுக்கொள்ள முடியாமலோ விதண்டாவாதம் செய்யவேண்டிய தேவையென்ன இருக்கிறது? இங்கு எது அரசியல் விமர்சனம்? அறையினுள் இருக்கும் வெள்ளை யானை எது? தமிழரசுக் கட்சியின் தந்திரமான தலைமையா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதமா? தமிழரசுக் கட்சியை அவமதிக்கவேண்டும், அவர்களையே இன்றுள்ள தமிழ்த் தேசியம் எனும் அருவருக்கத்தக்க கொள்கைக்கான பிதாமகர்களாகக் காட்டவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் எழுதிய நீங்கள், உங்கள் எழுத்துக்களின் இடையே இழையோடிப்போயிருக்கும் சிங்கள இடதுசாரிப் பேரினவாதத்தின், சிங்கள இனவாதத்தின் பிதாமகத் தம்பதிகளை உங்களையறியாமலேயே வாழ்த்துவதும், பாராட்டுவதும் உங்களின் முயற்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நீங்கள் எழுதும் எல்லா விமர்சனத்திற்கும் "சிங்களவர் திறமோ?" என்று நான் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய இந்த விமர்சனத்திற்குள்ளேயே சிங்களவர்களை வாழ்த்துகிறீர்கள், அதனால்த்தான் கேட்கிறேன். அடுத்தது, சிங்களவர் திறமோ என்று நான் கேட்பதன் மூலம், தமிழரசுக் கட்சியைப் பற்றி நீங்கள் எழுதும் அவதூறுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது? நீங்களோ, மீனிளங்கோவோ அல்லது சண்முகமோ அல்லது ஈழநாட்டின் யாரோ இரு எழுத்தாளரோ எழுதினால் அது உணமையென்று ஆகிவிட வேண்டுமா? தமிழரசுக் கட்சிகுறித்தும், தமிழரின் உரிமைப் போராட்டத்தில் அதன் செயற்பாடுகள் குறித்தும் தமிழினத்திற்குள் ஒரு புரிதல் இருக்கின்றது. அந்தப் புரிதல் சிங்கள அடக்குமுறையின் கீழ் அவர்கள் பட்ட இடையறாத அழிவுகளிலிருந்து தமக்கான அரசியல்த் தலைமையாக அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்ட தலைமை அது. அந்தத் தலைமையின் செயல் தவறானதென்றால் அன்றே அது தமிழர்களால் தூக்கியெறியப்பட்டிருக்கும். உங்கள் போன்றவர்கள் அன்று நிச்சயமாக இருந்திருப்பார்கள். சிங்கள அரசுகளின் செயற்பாடுகளை நிச்சயம் வர‌வேற்றிருப்பார்கள். ஆனால், மக்களால் ஏறெடுத்தும் பார்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஏதோவொரு கட்டுரையில், ஏதோவிரு இடத்தில் "சிங்கள அரசியல்த் தலைமை தனது சுயநலத்திற்காக தமிழரசுக் கட்சியைப் பாவித்தது" என்று மிகுந்த சிரமப்பட்டுக் காட்டவேண்டிய தேவையென்ன? இதன்மூலம் ஒருவிடயம் புலனாகிறதே கவனித்தீர்களா? அதாவது உங்களது தமிழரசுக் கட்சிக்கெதிரான, தமிழ்த்தேசியத்திற்கெதிரான விமர்சனங்களில் நீங்கள் தேவைகருதி விதைக்கும் ஓரிரு "சிங்களவர் மீதான விமர்சனம்" என்பது உங்களை நடுநிலையாளன் என்று காட்டுவதற்காக மட்டும்தான் என்பது. நீங்கள் அதைக்கூடச் செய்திருக்கத் தேவையில்லை. விமர்சிப்பது தமிழரசுக்கட்சியையும், அது ஆரம்பித்த தமிழ்த் தேசியத்தையும் தானென்னும் போது, சிங்களவரை விமர்சிக்கவேண்டிய தேவை ஏன் உங்களுக்கு? அவர்களை விடுங்கள், நேராகவே எம்மை விமர்சியுங்கள். ஏனென்றால், உங்களின் சிங்கள விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அது உங்களின் நோக்கமும் அல்ல என்பதும் எமக்கு நன்கு தெரியும்.
  9. ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில் நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney) கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள்.
  10. எதிர்காலத்தில் ஜே. ஆரும் அதுலத் முதலியும் நல்லவர்களாக யாழ் களத்தில் இட்டுக்கட்டப்படுவர் என்பதை அண்ணல் ஐலன்ட் அவர்கள் சூசகமாக அறிவிக்கிறார், மா மக்களே!
  11. இணைப்பிற்கு நன்றி. இதுகுறித்து நன்கு அலசப்பட்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எந்த மூலையிலிருந்து இதனை எழுதுகிறார்கள் என்பதைப்பொறுத்தே விமர்சனம் அமைகிறது. என்னைப்பொறுத்தவரை இவை தமிழரசுக்கட்சியை விமர்சிக்கவும், தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தவும் எழுதப்பட்டவை என்றே நினைக்கிறேன். இந்த விமர்சனங்களில் ஒரு சிறிய பகுதியேனும் ஆளும் சிங்கள இடதுசாரி இனவாதத்தின் மேல் வைக்கப்படவில்லை என்பது வியப்புத்தான். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனவாதத்தின் பிதாமகர்களை நல்லவர்களாகக் காட்டும் கைங்கரியமும் இங்கு எனக்குத் தெரிகிறது. பரவாயில்லை, செய்யுங்கள். தமிழரசுக் கட்சியின் நம்பகத்தனமையினையும், தமிழ்த்தேசியத்தை வளர்த்துவிட்ட அதன் செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சியுங்கள். ஈற்றில் சிங்களப் பேரினவாதம் என்று ஒன்றில்லை, எல்லாம் இலங்கை நாட்டு மக்களே என்று நிறுவுங்கள். சுபம் !
  12. முதலில் பெறத் தெரியவில்லை, பெறத் தெரியவில்லை என்று கூறுவதன் மூலம், சிங்களவர்கள் நல்லவர்கள், கேட்கிற மாதிரிக் கேட்டால்த் தருவார்கள், எமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, எம்மில்த்தான் பிழை என்று கூறுவதை நிறுத்துங்கள். ஏனென்றால், நீங்கள் எப்படிக் கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. இணக்க அரசியலால் உந்தப்பட்டு கருத்தெழுதும் உங்களிடமிருந்து இதனைத்தவிர‌ வேறு எதனைத்தான் எதிர்பார்க்க முடியும்? இதை எப்படிச் செய்வதாக உத்தேசம்? அரசுடன் இணைந்தா? இதுவரை அரசுடன் இணைந்த தமிழ் அரசியல்வாதிகளைக் காட்டிலும் பெரிதாக வேறு எதனைச் சாதித்து விடப்போகிறீர்கள்? இதற்கும் தமிழ் மக்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்பம், பொருளாதாரத்தில் தமிழ் மக்கள் சோபிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள் போல. எப்போதும்போலத் தமிழர்கள் இந்த விடயங்களில் நன்றாகவே செயற்படுகிறார்கள். காலத்திற்குக் காலம் கல்வியில், தொழிவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் வரலாம், ஆனால் நிரந்தரமாக வீழ்ந்ததில்லை. ஆனால், தமிழரின் பொருளாதாரமும், கல்வியும், வேலைவாய்ப்பும், தொழிநுட்பமும் அவர்களின் இருப்பைத் தக்கவைக்கப் போவதில்லை. ஏனென்றால், இவற்றிற்கும், அவர்களின் இருப்பிற்கும் தொடர்பில்லை. 1983 இலேயே தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கொழும்பிலும் பிற இடங்களிலும் எப்படி இருந்ததென்பதும், அவற்றினால்க்கூட‌ அவர்களை கறுப்பு யூலையில் இருந்து காப்பாற்ற முடியாமற்போனதென்பதையும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். யுத்த காலத்திலும் வடமாகாணமும், பிற்காலத்தில் கிழக்கு மாகாணமும் எப்படியிருந்தன‌ என்பது நாம் தெரியாதது அல்ல. இன்று புலம்பெயர் தமிழரிடையே இருக்கும் செல்வமும், அறிவும், தொழிநுட்பமும் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்கவைக்கப் போதுமானவையாகத் தெரியவில்லை. கோடீஸ்வரனனான சுபாஷ்கரன் கூட பிக்குகளின் காலில் வீழ்ந்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கிறது. அவரால்க் கூட இருப்பைத் தக்கவைக்க முடியாது. தமிழர் மீதான கலவரங்களில் சிங்களம் முதலில் இலக்குவைப்பது அவர்களது பொறுளாதாரத்தை. பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என்று தொடரும். இவை தமிழரின் இருப்பைத் தக்கவைக்கப் போதுமானவை அல்ல. வேண்டுமானால் தனி மனிதர்களாக, அடையாளத் துறப்பின் ஊடாக தமிழர்கள் சொந்த நலன்களைக் காத்துக்கொள்ளலாம். கதிர்காமரைப் போல, நீலனைப் போல. ஆனால், ஒரு இனமாக அவர்களால் முடியாது. தமது தொகுதிகளில் சில விடயங்களைச் செய்யலாம் என்பதற்காகவே அப்படி கூறினேன். ஆனால், எனது தெரிவு பாராளுமன்றப் பகிஷ்கரிப்புத்தான். இதன்மூலமே தமிழ் இனம் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் தனக்கான உரிமைகளைப் பெறவோ, நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவோ முடியாது என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றையாட்சியியையும் பாராளுமன்றத்தையும் முற்றாகப் பகிஷ்கரிப்பதனூடாக தமிழர்கள் இன்று நடக்கும் அரசிடமிருந்து தம்மை அந்நியப்படுத்தியவர்களாக காண்பிக்க வேண்டும். தொடர்ச்சியான மக்களின் நடவடிக்கைகளே ஈற்றில் சர்வதேசத்தின் கண்களை ஈர்க்கும். ஆனால், இன்றிருக்கும் இணக்க அரசியல் செய்யும் நபர்களும், சலுகைகளின் பின்னால் திரியும் அவர்களின் ஆதரவாளர்களும், உணர்விழந்த மக்களும் இதனைச் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான். இறுதியாக, உணர்ச்சியற்றவை என்று எதுவும் இல்லை. நாம் இனமாக காக்கப்பட வேண்டும் என்பதும், இருப்பிற்காகப் போராடவேண்டும் என்பதும் கூட ஒரு உணர்வுதான். உணர்வற்றவர்கள் ஜடங்கள் என்று அழைக்க‌ப்படுவர், நீங்கள் எப்பிடி?
  13. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! "புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு - அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!" --> நெய்தல் இறுவட்டிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன. இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்தவற்றைக் கொண்ட, புலிகளின் காலத்திய, மொத்தம் 221 இறுவட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன். இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் ஆயுதவழி ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காணவும் உதவும் என்று நம்புகிறேன். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன் *****
  14. இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது. இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api
  15. யுத்த குற்றவாளி ரசியாவில். இது தான் ரசிய முகம். எம்மவர் இந்த சிறீலங்கா அமெரிக்கா முறுகலை பாவிக்க வேண்டும்.
  16. கனடாவில் இருந்து வாங்கிக் கொண்டு போன காசுக்கே கணக்குக் காட்டவில்லை...இப்படி எத்தினை பில் இருக்குது...புதுசாக காசைக் கொடுத்து தலையிடி உண்டாக்க வேண்டாம் என்றுதான் சொல்லுறார்...அல்லது தன் தலைவரா வந்தாப்பிறகு தரச்சொல்லி சொல்லுறாரோ தெரியாது...எதுக்கும் பும்பெயர்ஸ் யோசிச்சு செய்யுங்கோ..
  17. நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத பலநாட்களை பலமுறை நாம் கடக்கின்றோம் சில நாட்கள் நம் வாழ்வில் - நாம் மறக்கவே முடியாமல் சிதளூரும் காயங்கள் போல் நித வருத்தம் தருவன 2009, சித்திரை 27 கடற்கரை மணலில் குளிரூட்டப்பட்ட திடலில் காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட விடுமுறையில் மூன்று மணி நேரம் கலைஞரின் நாடகம் அரங்கேறிய நாள் தியா காண்டீபன் கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/ https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26
  18. மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
  19. நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂
  20. தாத்தாவின் கனவு நொறுங்கினால் என்ன.......மீராவுக்கு இன்னும் கனவுகன்னிதான்......! 😂
  21. மிகத் தவறான கருத்து. மிகப் பெரும் வீரம் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு செய்து போராடிய ஓர் இனத்தை இவ்வாறு சிறுமைப் படுத்திவிடவேண்டாம். எந்த இனத்திலும் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாம் நாடு என்று சிந்திப்பவர்கள் மிகச்சிலராகவும் மதில் மேல் பூனைகளும் நான் என்று சுயநலமாக சிந்திப்பவர்கள் மிக மிக அதிகமாக இருப்பதும் சாதாரண நடைமுறை மற்றும் வரலாறு. தமிழர்களின் தலைவர்களை சாட இவ்வாறு அருவரி பாடங்களை தூக்கி வரவேண்டாம். அதற்காக தான் சிவப்பு.
  22. மும்பை அணி 6-வது தோல்வி: டெல்லியை கரை சேர்த்த இளம் புயல் பிரேசர் - மும்பை பிளேஆஃப் செல்லுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 27 ஏப்ரல் 2024 ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் “ ரன் திருவிழா” நடந்தது. மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த டெல்லி, அதைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி என இந்த ஆட்டத்திலும் 504 ரன்கள் குவிக்கப்பட்டன. ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து இரு நாட்கள் நடந்த ஆட்டத்திலும் 200க்கும் மேலாக இரு அணிகளும், 500க்கும் மேல் ஒரு ஆட்டத்திலும் தொடர்ந்து குவிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது.இதற்கு முன் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் சேர்த்ததுதான் டெல்லி அணியின் அதிகபட்சமாகும். வாண வேடிக்கையுடன் தொடக்கம் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. காயத்திலிருந்து வார்னர் இன்னும் முழுமையாக மீளாததையடுத்து, பிரேசர் மெக்ருக்குடன் இணைந்து அபிஷேக் போரெல் ஆட்டத்தைத் தொடங்கினார். உட் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலிருந்து பிரேசர் மெக்ருக் அதிரடியில் இறங்கினார். முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய பிரேசர் 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். முதல் ஓவரிலேயே டெல்லி அணி 19 ரன்ரேட்டில் பயணித்தது. பும்ரா வீசிய 2வது ஓவரில் நோபாலில் ஒரு சிக்ஸர், அடுத்து ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி என பிரேசர் 18 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் பும்ரா முதல் ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. 3வது ஓவரை துஷாரா வீசினார். முதல் பந்தில் அபிஷேக் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தைச் சந்தித்த பிரேசர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசிஅந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தனர். 2.4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை மின்னல் வேகத்தில் எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேசர் அதிரடியால் மிரண்ட பாண்டியா 3 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பிரேசர் காட்டடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் பாண்டியா விழிபிதுங்கி நின்றார். 4வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரையும் விட்டு வைக்காத பிரேசர் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி 15 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, அடுத்தபந்தில் பவுண்டரி விளாசினார். ஹர்திக் பாண்டியா வீசிய 5வது ஓவரை துவைத்து எடுத்த மெக்ருக் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது. பாண்டியா வீசிய 7-வது ஓவரிலும் மெக்ருக், அபிஷேக் இருவரு ம் ருத்ரதாண்டவம் ஆடினர். அபிஷேக் போரெல் ஒரு சிக்ஸர் பவுண்டரியும், மெக்ருக் ஒரு சிக்ஸரும் என 21 ரன்கள் விளாசினர். பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து மெக்ருக் ஆட்டமிழந்தார். அவர், 27 பந்துகளில் 84ரன்கள் குவித்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் கிடைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஷாய் ஹோப் அதிரடி அடுத்து களமிறங்கிய , அபிஷேக்குடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். முகமது நபி வீசிய 10-வது ஓவரில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட போரெல் 36 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 3வதுவிக்கெட்டுக்கு கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, ஹோப்புடன் சேர்ந்தார். முகமது நபி வீசிய 12-வது ஓவரில் ஹோப் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் துஷாரா வீசிய 13-வது ஓவரில் ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 12 ரன்கள் சேர்த்தார். உட் வீசிய 14-வது ஓவரை பதம் பார்த்த ஹோப் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3வது விக்கெட்டுக்கு ஹோப் -ரிஷப் பந்த் கூட்டணி 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். உட் வீசிய 17-வது ஓவரை துவைத்து எடுத்த ஸ்டெப்ஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 7வது முறையாக பும்ரா பந்தில் ரிஷப் அவுட் பும்ரா வீசிய 19-வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் பும்ரா வீசிய 46 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பந்த் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 7-வது முறையாக பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்துள்ளார். பும்ரா பந்துவீச்சில் இதுவரை ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். 4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த்-ஸ்டெப்ஸ் கூட்டணி 55 ரன்கள் சேர்த்தனர். 6-வது விக்கெட்டுக்கு வந்த அக்ஸர் படேல், ஸ்டெப்ஸுடன் சேர்ந்தார். துஷாரா வீசிய கடைசி ஓவரில் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. 2.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் அதாவது 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 11.6 ஓவர்களில் 150 ரன்களையும், 16.1 ஓவர்களில் 200 ரன்களையும், 19.4 ஓவர்களில் 250 ரன்களையும் டெல்லி கேபிடல்ஸ் எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை தோல்விக்கு காரணம் என்ன? மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(8), இஷான் கிஷன்(20), சூர்யகுமார் யாதவ்(26) ஆகியோர் ரன்ரேட் நெருக்கடி, அழுத்தம் காரணமாக தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். ஆனால், நடுவரிசையில் கேப்டன் பாண்டியா(46) திலக் வர்மா(63) இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்தனர். இருவரும் 4வது வி்க்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதுதான் மும்பை அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அடுத்ததாக டிம் டேவிட்(37), திலக்வர்மா சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களைத் தவிர பெரிதாக ஏதும் அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே தொடக்க வரிசை பேட்டர்கள்தான். ரோஹித், இஷான் கிஷன், ஸ்கை ஆகிய 3 வீரர்கள் இன்று சொதப்பியதால், ஒட்டுமொத்த ரன்ரேட் நெருக்கடியும், அழுத்தமும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்தது. அதிலும் மிகப்பெரிய இலக்கைத் துரத்தும்போது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்கும் போது பதற்றத்தில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அப்படித்தான் பாண்டியா விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணியும் வெற்றிக்கான இலக்கை விடாமல் துரத்திய நிலையில் ராஸிக் சலாம் வீசிய 17வது ஓவர்தான் டெல்லி அணிக்கு திருப்புமுனையாக மாறியது. 24 பந்துகளில் மும்பை அணி வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசிக் சலாம் 17-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 7ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை ரன்ரேட் நெருக்கடியில் தள்ளினார். இந்த ஓவரில் மும்பை அணி கூடுதலாக 10 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி கை மாறியிருக்கும். 210 ரன்கள் வரை மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை ரன்ரேட் பதற்றத்தில் இழந்தது. டிம் டேவிட்(37), முகமது நபி(7), சாவ்லா(10), திலக் வர்மா ஆகியோர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆகியதுமே மும்பை இந்தியன்ஸ் தோல்வி உறுதியாகியது. அதிரடி நாயகன் மெக்ருக் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பிரேசர் மெக்ருக்கின் அதிரடியான பேட்டிங்கும், இளம் பந்துவீச்சாளர் ரஷிக் சலாமின் பந்துவீச்சும்தான். ஜேக் பிரேசரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி பவர்ப்ளே ஓவர் கடந்து 4 பந்துகளில் 100 ரன்களை எட்டிவிட்டது. 2.4 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது. மும்பை பந்துவீச்சை துவைத்து எடுத்த பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்துள்ள சிறந்த தொடக்க வீரராக பிரேசர் திகழ்கிறார். காயத்திலிருந்து வார்னரும் மீண்டுவந்து அணியில் சேர்ந்தால் டெல்லி அணி இன்னும் வலிமை பெறும். பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் வீரர் சலாம் அசத்தல் அதேபோல, பந்துவீச்சில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இளம் பந்துவீச்சாளர் அறிமுகமாகிய 2வது போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, நேகல் வதேரா, முகமது நபி விக்கெட்டுகளை சாய்த்து மும்பை அணியை தோல்விக் குழிக்குள் சலாம் தள்ளினார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மெக்ருக் தவிர்த்து, ஷாய் ஹோப் கேமியோ ஆடி 41 ரன்கள் சேர்த்தது, டிரிஸ்டென் ஸ்டப்ஸ் அதிரடியாக 48 ரன்கள் சேர்த்தது என இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர். இது தவிர கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்கள், அபிஷேக் போரெல் 36 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு உதவினர். என்ன சொல்கிறார் பாண்டியா? தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். நாங்களும் இலக்கை விரட்ட முயன்றோம். நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறவிட்டோம். டெல்லி வீரர் மெக்ருக் பேட்டிங் செய்த விதம் என்னை வியக்க வைத்தது. எந்தவிதமான பயமும் இன்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணி முன்னேற்றம் இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனால், நிகர ரன்ரேட்டில் இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணி மைனஸைக் கடக்காமல் 0.276 என்ற ரீதியில்தான் இருக்கிறது. தற்போது 10 புள்ளிகளுடன் 4 அணிகள் உள்ளன. கொல்கத்தா, சன்ரைசர்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் இருப்பதால் முதல் 4 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான்-லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின் முடிவும் புள்ளிப்பட்டியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும். காத்திருக்கும் திருப்பங்கள் டெல்லி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அதில் அனைத்திலும் வென்றால் 8 புள்ளிகள் பெற்று 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். இதில் ஒன்று தோற்றாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகள் பெரிய நெருக்கடி கொடுக்கும். ஏனென்றால், சன்ரைசர்ஸ், கொல்கத்தா, லக்னெள அணிகள் 8 ஆட்டங்களே ஆடியிருப்பதால், இன்னும் அந்த அணிக்கு 6 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள், டெல்லியை விட பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்விகள் என 6புள்ளிகளுடன் 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. அடுத்தடுத்த வெற்றியால் முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது. மும்பை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்களே இருப்பதால், அனைத்திலும் கட்டாய வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இதில் ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பல அணிகள் போட்டியிடும், அப்போது நிகர ரன்ரேட் சிக்கல் ஏற்படலாம். ஆதலால் வரும் ஆட்டங்களில் மும்பை அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும்வகையிலும் விளையாடுவது அவசியமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்று அந்த அணியின் அடுத்த இரு தோல்விகளில் முடிவு எழுதப்பட்டுவிடும். https://www.bbc.com/tamil/articles/c060nmm2ek1o LSG vs RR: ராஜஸ்தானை கரைசேர்த்த சஞ்சு சாம்சன், ஜூரெல் - குழம்பி நின்ற கே.எல்.ராகுல் பட மூலாதாரம்,SPORTZPICS 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக ஐபிஎல் டி20 தொடரில் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி அடித்தாலே அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறி வந்தது. தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக கொல்கத்தாவின் 261 ரன்களை சேஸிங் செய்த பஞ்சாப், எதுதான் பாதுகாப்பான ஸ்கோர் என்று அணிகளை யோசிக்க வைத்துள்ளது. அப்படியிருக்கும்போது, 197 ரன்கள் ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் சற்று கடினமானதுதான். இருப்பினும் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அணிகளின் முன் 197 ரன்கள் இலக்கு இலகுவாகத்தான் தெரியும். அதுபோலத்தான் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் இருந்தது. லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ப்ளே ஆஃப் வாய்ப்பு பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் 0.694 என்ற அளவில்தான் இருக்கிறது, இன்னும் ஒரு புள்ளி அளவைத் தொடவில்லை. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கையில் இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகிவிடும். இ்ப்போது 16 புள்ளிகள் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்றதுதான் என்றாலும், நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகிறது. அதேநேரம், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் 0.059 என்ற பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் தோற்றால்கூட நிகர ரன்ரேட் லக்னெளவுக்கு மைனசில் சென்றுவிடும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் நேற்றைய வெற்றியால் அந்த அணியும் 10 புள்ளிகளுடன் லக்னெள அணிக்கு குடைச்சலாக வரத் தொடங்கியுள்ளது. டாப் 4 அணிகளில் லக்னெள இடம் பெற அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்வது அவசியம். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் சஞ்சு சாம்ஸன்தான். துருவ் ஜூரெலை வைத்துக்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 121 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை அடைந்து அணியை வெற்றிபெற வைத்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஒரு கேப்டன் செய்ய வேண்டிய பணியை சிறப்பாகச் செய்து ஒரு கேப்டனாகவும், சிறந்த பேட்டராகவும் சாம்ஸன் நிரூபித்துள்ளார். சிறப்பாக பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து (4சிக்ஸர், 7பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த சில போட்டிகளில் ஜூரெலின் அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்களை கடக்கவில்லை. ஆனால், ஜூரெலுக்கு தேவையான நம்பிக்கையளித்து, அவரை பேட் செய்ய வைத்த பெருமை சாம்ஸனுக்கே சேரும். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 'சரியான திசையில் செல்கிறோம்' பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “புதிய பந்தில் பேட் செய்வதைவிட, பழைய பந்தில் பேட் செய்தபோது, விக்கெட் நன்கு ஒத்துழைத்தது. இந்த வெற்றி அணியின் ஒற்றுமைக்குக் கிடைத்தது. டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாகப் பந்து வீசினோம். ஒவ்வொரு ஓவரையும் திட்டமிட்டு, நீண்ட ஆலோசனை செய்து பந்து வீசினோம். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் லக்னெள பக்கம் சென்றது. ஜூரெல் தற்காலிகமாக ஃபார்மின்றி இருந்தார், உண்மையில் டி20 கிரிக்கெட்டில் 5வது பேட்டராக வருவது கடினமான பணி. துருவ் திறமை மீது நம்பிக்கை இருந்தது, கடினமாக பேட்டிங் பயிற்சி எடுத்தார். நாங்கள் அணியாகவே சிறப்பாகச் செயல்பட்டோம், அதேபோல அதிர்ஷ்டமும் இருக்கிறது. தவறுகளைக் குறைத்துக்கொண்டதாலேயே வெற்றி எங்களுக்கு வசமானது. தவறுகள் நடப்பது இயல்பு அதை ஒவ்வொரு போட்டியிலும் குறைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. சரியான திசையில் பயணிக்கிறோம் என்று நினைக்கிறேன். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை,” எனத் தெரிவித்தார். இக்கட்டில் சிக்கிய ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய சிக்கலில் தோல்வியை நோக்கிச் சென்றது. 8.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கணினியின் கணிப்பும், லக்னெள அணி வெல்வதற்குத்தான் 86 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணித்தது. கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜூரெல் ஜோடி ஆகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க லக்னெள கேப்டன் கே.எல்.ராகுல் 7 பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 197 ரன்களை எந்தவிதமன சிரமும் இன்றி ஒரு ஓவர் மீதமிருக்கையில் ராஜஸ்தான் சேஸிங் செய்தது. பட்லர், ஜெய்ஸ்வால் அடித்தளம் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர்கள் ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடிதான். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் கொண்டு சென்றனர். பவர்ப்ளே முடிய இரு பந்துகள் இருந்தநிலையில், யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பட்லர் ஃபுல் டாஸ் பந்தைத் தவறவிட க்ளீன் போல்டாகி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை ஸ்டாய்னிஷ் வீச, ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பிஸ்னோயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது வீரராகக் களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்கள் சேர்த்த நிலையில் 41வயது லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அணியை மீட்ட நாயகர்கள் நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், துருவ் ஜூரெல் ஜோடி இணைந்தனர். சாம்ஸன் இந்த சீசனில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஜூரெல் தனது 6 போட்டிகளில் கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் 10 ரன்களைக் கூட கடக்கவில்லை. இதனால், ஜூரெல் எவ்வாறு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கப் போகிறார் என்று எண்ணப்பட்டது. இருவரும் மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 8 பந்துகளில் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து மெதுவாகத் தொடங்கினர். அதன்பின் மிஸ்ரா ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸரும், யாஷ் தாக்கூர் ஓவரில் சாம்ஸன் 3 பவுண்டரிகளும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். மோசின் கான் வீசிய 14வது ஓவரில் இந்த ஜோடியை பிரிக்க லக்னெள அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த ஓவரில் ஜூரெல் அடித்த இரு ஷாட்களிலும் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை யாஷ் தாக்கூர் நழுவவிட்டார். யாஷ் தாக்கூர் கேட்சை நழுவவிடவில்லை, வெற்றியை நழுவவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இந்த வாய்பைப் பயன்படுத்திய ஜூரெல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கேப்டனுக்குரிய பொறுப்புடனும், ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடியாக ஆடிய சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்பதாவது ஓவரில் சேர்ந்த ஜோடியை லக்னெள பந்துவீச்சாளர்களால் ஆட்டத்தின் கடைசிவரை பிரிக்க முடியவில்லை. 7 பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி பந்துவீசியும், சாம்ஸனின் பேட் முன், ஜாலங்கள் தோற்றன, ஜூரெல் பேட்டிங் முன் எந்த உத்தியும் எடுபடவில்லை. குழப்பத்தில் கே.எல்.ராகுல் பட மூலாதாரம்,SPORTZPICS டிரன்ட் போல்ட் தனது முதல் ஓவரில் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நேற்றைய ஆட்டத்திலும் தவறவிடவில்லை. முதல் இரு பந்துகளில் டீ காக் இரு பவுண்டரிகள் அடித்தநிலையில் 3வது பந்தில் குயின்டன் டீகாக்கை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் போல்ட். அடுத்து வந்த ஸ்டாய்னிஷ் ரன் ஏதும் சேர்க்காமல் சந்தீப் சர்மாவின் அருமையான இன்ஸ்விங்கில் க்ளீன் போல்டாகினார். 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது. மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கே.எல்.ராகுலுடன், தீபக் ஹூடா சேர்ந்தார். தீபக் ஹூடாவும் இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார். ஆனால், நேற்றை ஆட்டத்தில் ராகுலுடன், சேர்ந்து அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு லக்னெள 46 ரன்கள் சேர்த்தது. ஆவேஷ் கான் வீசிய 8வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி ராகுல் 21 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்களில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடைந்தார். நிதானமாக பேட் செய்த தீபக் ஹூடா 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் தனது கேரம்பால் பந்துவீச்சால் பிரித்தார். தீபக் ஹூடா 50 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 62 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து வந்த ஆபத்தான பேட்டர் பூரன் 11 ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,SPORTZPICS பதோனி 18 ரன்களுடனும், குர்னல் பாண்டியா 15 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தாத லக்னெள அணி கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும். இந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுல் விக்கெட் கீப்பிங்கின்போது சற்று குழப்பத்துடனே காணப்பட்டார். ஒரு கேட்சையும் கோட்டைவிட்ட ராகுல், கேப்டன்சியை சரியாகச் செய்யவில்லை என்றே தெரிகிறது. சாம்ஸன், ஜூரெல் பாட்னர்ஷிப்பை உடைக்க எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் குழப்பமான முடிவுகளை எடுத்தார். உதாரணமாக சிறந்த லெக் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு வழங்கப்பட்டது, 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய மோசின் கான், யாஷ் தாக்கூருக்கு 4 ஓவர்களும் முழுதாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஸ்டாய்னிஷ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு ஒவரை வீசி 3 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், ஸ்டாய்னிஷ்க்கு ஏன் தொடர்ந்து பந்துவீச ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை. பட மூலாதாரம்,SPORTZPICS பந்துவீச்சாளர்களை ஏமாற்றிய ஆடுகளம் லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கொண்டதாலும், விக்கெட்டில் அதிகமான விரிசல்கள் இருந்ததாலும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவே லக்னெள விக்கெட் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரிதான். ஆனால், லக்னெள அணி பேட் செய்தபோது, ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சஹல் இருவருமே பந்துவீச சிரமப்பட்டனர். பந்துவீச்சு எடுக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அதேபோல லக்னெள சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் ஒத்துழைக்கவில்லை. குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், அமித் மஸ்ரா ஆகிய 3 பேரும் பந்துவீசியும் எடுபடவில்லை. 3 பேரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசிய 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர். இதில் குர்னல் பாண்டியா மட்டும்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். மிஸ்ரா, பிஸ்னோய் பந்துவீச்சு எடுபடவில்லை. https://www.bbc.com/tamil/articles/cll41v3e559o
  23. இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள். தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன் கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார். தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள். தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள். சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு. திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம்.
  24. எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  25. பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.
  26. கொசுறு @தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார். அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன். மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.
  27. ஐய்னே, இது புதிய தகவல். மிக்க நன்றி ஆனால், அங்கே சமணம் இருந்தது தொடர்பாக நானறிந்ததில்லை. நீங்கள்? அவர்கள் அங்கிருந்திருந்தால் இதுவும் நீங்கள் கூறியது போன்று ஒரு பொருளாக இருக்கலாம்.
  28. @நன்னிச் சோழன் @kandiah Thillaivinayagalingam வேறு ஒரு விடயத்தை பற்றி தேடும் போது இந்த சாவகர் என்பதற்கு இன்னொரு அர்த்தம் கிடைத்தது. பண்டைய தமிழ் நம்பிக்கைகளில் ஒன்றான சமணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றுக்கு பெயர் சாவகம்/உலகாயதம். இதன்வழி ஒழுகியோரும் சாவகர் என அழைக்கப்பட்டுள்ளனராம். இது இறை நம்பிக்கை மறுப்பு, ஆசார மறுப்பு, பகுத்தறிவுவாதம் என கிட்டதட்ட இன்றைய பகுத்தறிவு/சுயமரியாதை/பெரியார் கொள்கைகளை சிலதை ஒத்து இருந்துள்ளது போல் தெரிகிறது. சிலசமயம் இவர்கள் கூடி வாழ்ந்த இடமே சாவகர்-சேரி ஆமியும் இருக்கலாம். https://ta.m.wikipedia.org/wiki/உலகாயதம் இந்த இணைப்பு - சாவக நம்பிக்கையின் சாரம் என கீழ் கண்டவாறு உள்ளது. வானுலகு, மோட்சம், நரகம், மறு உலகில் உயிர், வினைக் கோட்பாடு என்பன ஒன்றும் இல்லை. நால்வகை வருணப்பாகுபாடு, அவர்களுக்குரிய தொழில்கள், நியதிகள் என்பன ஒருவித உண்மை விளைவினையும் பயனையும் உண்டாக்கா. ஆண்மைத்திறமும் அறிவாற்றலும் இல்லாதவர்களின் பிழைப்பின்பொருட்டுத்தான் வேதங்கள், வேள்விகள், முத்தீ வளர்த்தல் உடம்பில் நீறுபூசுதல் என்பன உண்டாகி உள்ளன....உயிர் உள்ளவரைக்கும் மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும். கடன்பட்டாவது நெய்யுணவு கொள்ளட்டும். ஒருமுறை உடம்பு சாம்பாலான பின்னர், மீண்டும் அது எப்படி எப்பொழுது இங்குத் திரும்பும்? சடங்குகள் எல்லாம் பிராமணர்களின் பிழைப்புக்காக உண்டாக்கப்பட்டவை. @கிருபன் @பாலபத்ர ஓணாண்டி உங்கள் பார்வைக்கும்.
  29. சரியாக சொன்னீர்கள் 👍🏼
  30. ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா? தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை. இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது. ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம். வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை.
  31. The government, facing the surge in popularity of the J. R. Jayewardene-led UNP opposition, was anxious to keep the TUF on its side. Sirimavo Bandaranaike announced her government’s decision to open a university campus in Jaffna, to appease the Tamils who wanted a Tamil university to be set up in Trincomalee. She announced that she would personally open the campus. It was a tactical political announcement. The youths saw through it. They said the government’s real objective was to kill the Tamil demand for a university in Trincomalee and to drive a wedge between northern and eastern Tamils. The University authorities acted in a hurry. They appointed Prof. K. Kailasapathy as the president of the Jaffna Campus and selected Parameswara College founded by Sir Ponnampalam Ramanathan as its premises. Srimavo Bandaranaike went on an official visit to Jaffna on 6 October 1974, to declare Jaffna University Campus open. Militant youths called upon the public to boycott the opening ceremony and all other functions organized by government supporters to welcome the prime minister. They organized a black flag demonstration. TUF members and its parliamentarians obeyed the decision taken by the militant youths. The decision making power of the Tamil people thus passed into the hands of the Tamil militants. Pirapaharan: Vol.1, Chap. 8 First Military Operation – Ilankai Tamil Sangam இந்தப் பொய்யிலேயே ஒருவரின் முகத்திரை கிழிந்துவிட்டது. தமிழர்கள் தமக்கென்று தமிழ்பேசும் ஒரு பல்கலைக்கழகத்தைக் கேட்டது திருகோணமலையில். ஆனால், வடக்குத் தமிழர்களையும் கிழக்குத் த்கமிழர்களையும் பிரித்தாள நினைத்த சிறிமா யாழ்ப்பாணத்திலேயே கட்டுவேன், நானே திறந்துவைப்பேன் என்று பிடிவாதமாக அதனைக் கட்டினார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினைக் கட்டும் சிறிமாவின் முடிவினை எதிர்த்து, அவர் யாழ்ப்பாணம் வரும்போது பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்திக்ல் ஈடுபட்டனர். இதுதான் நடந்தது. இணக்க அரசியலால் உந்தப்பட்டு, தமிழர்களின் நலன்களைக் காவுகொள்ள பொய்களையும் புரட்டுக்களையும் பரப்பும் இதுபோன்ற கருத்துக்களை நிர்வாகம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
  32. பாடல்: யார் வச்சது இசை: சந்தோஸ் நாரயணன்
  33. சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽 இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎 சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂
  34. இளையராஜா எண்பது வயதில், தானே எழுதி இசையமமைத்து பாடிய பாடல். வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி-ஈ கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள இறு சிறு உசிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி
  35. யுத்தநிறுத்தத்தினைத் தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம், தமிழரின் நிபந்தனைகளை உதாசீனம் செய்த சிங்கள அரசு யுத்த நிறுத்தம் 1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. தன்னிச்சையாக யுத்தநிறுத்தத்தை அறிவித்ததன் மூலம் லலித், தம்மை விட சாதுரியமாகச் செயற்பட்டிருப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்கிற அழுத்தத்தினால் வேறு வழியின்றி போராளிகளும் யுத்தநிறுத்தத்தினை அனுட்டிக்கவேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தமைக்காகவும், பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதற்காகவும் இந்தியாவை அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் பாராட்டியிருந்தன. பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் ஆனால், இந்தியாவின் இந்த அழுத்தம் குறித்து போராளித் தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். அரச படைகளுக்கெதிரான போராளிகளின் வெற்றிகரமான தாக்குதல் முன்னெடுப்புக்களும், மக்களின் ஏகோபித்த உற்சாகமும் இதன்மூலம் மழுங்கடிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். யுத்தநிறுத்தத்தினை போராளிகள் எதிர்ப்பார்கள் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களால் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த விஷமப் பிரச்சாரத்தையும் அவர் அறிந்துகொண்டார். "நாம் ஜெயவர்த்தனவுடன் பேசுவதைத் தவறென்று கூறியவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?" என்பதே கூட்டணியின் ஆதரவாளர்கள் முன்வைத்த விமர்சனமாக இருந்தது. அதேவேளை, அரசாங்கமும் கடுமையான பிரச்சாரம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. சிங்கள ஊடகங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பிரச்சாரத்தில் பயங்கரவாதிகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாலேயே யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியிருக்கிறார்கள் என்று அது சிங்கள மக்களிடையே கூறிவந்தது. மேலும், யுத்தநிறுத்தம் இராணுவத்தினருக்குப் பாதகமானது என்கிறை பிரமையினையும் அரசும் இராணுவமும் சிங்கள மக்களிடையே உருவாக்கி வந்தன. போராளிகளை அவமானப்படுத்த அரசு உருவாக்கிவரும் சூழ்நிலை பற்றிக் கலந்தாலோசிக்க ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களை அவசர சந்திப்பொன்றிற்கு அழைத்தார் பிரபாகரன். யுத்த நிறுத்தம் அமுலிற்கு வந்த ஒரு சில மணிநேரத்தின் பின்னர், ஆனி 18 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரு முக்கிய விடயங்கள் அங்கு ஆராயப்பட்டன. முதலாவது யுத்தநிறுத்தம், இரண்டாவது போராளிகளுக்கிடையே உருவாகி வந்த யுத்த நிறுத்தம் தொடர்பான அதிருப்தியும் அமைதியின்மையும். தன்னிச்சையான யுத்த நிறுத்தத்தினை லலித் அதுலத் முதலி அறிவித்ததன் மூலம் தம்மை ஓரங்கட்டியிருப்பதை அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் தாம் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளையும் தன்னிச்சையான அறிவிப்பின் மூலம் அரசு முற்றாக நிராகரித்திருப்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இந்திய வெளியுறவுத்துறைக்கு போராளிகள் முன்வைத்திருந்த யுத்த நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகள் ஊடகங்களுக்குக் கசிந்திருந்தன. அதன்படி, படிப்படியாக யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், மாவட்ட ரீதியில் உருவாக்கப்படும் கண்காணிப்பு கட்டமைப்புக்கள் ஊடாக அரசால் மேற்கொள்ளப்படும் யுத்த நிறுத்த மீறள்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மேலும் சில நிபந்தனைகள் போராளிகளால் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தன. ஈழத்தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் வருமாறு, அரசால் செய்யப்பட வேண்டியவை 1. ஊர்காவல்ப்படை, சிவிலியன் பாதுகாப்பு படை, தொண்டர் படை ஆகிய துணை ராணுவக் குழுக்கள் கலைக்கப்பட்டு, ஆயுதங்கள் களையப்பட வேண்டும். 2. குடியேற்றங்களைப் பொறுத்தவரை முன்பிருந்த நிலை மீளக் கொண்டுவரப்பட வேண்டும். யுத்த நிறுத்த காலத்தில் தமிழர் தாயகத்தில் சனத்தொகைப் பரம்பலை மாற்றக்கூடிய நேரடியான, மறைமுகமான எந்த நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடலாகாது. 3. இராணுவம் தமது முகாம்களுக்கு மீளச் செல்லவேண்டும். ரோந்துக்களோ, தேடியழிக்கும் நடவடிக்கைகளோ செய்யப்படலாகாது. 4. இராணுவம் புதிய முகாம்களை அமைக்க முடியாது. 5. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோரச் சோதனைச் சாவடிகள் அகற்றப்படுவதுடன், தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும். போராளிகளால் செய்யப்பட வேண்டியவை 1. துணை இராணுவக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டது. 2. ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது. 3. முகாம்களுக்குள் இருக்கும் இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது. வீதிகள், ரயில்த் தண்டவாளங்கள், பாலங்கள், கட்டிடங்கள் மீது கண்ணிவெடிகள் பொருத்தப்பட மாட்டது. 4. போராளிகளுக்கான புதிய முகாம்கள் அமைக்கப்பட மாட்டாது. 5. வீதிப்போக்குவரத்தைப் போராளிகள் தடைசெய்ய மாட்டார்கள். யுத்த நிறுத்த கணகாணிப்புக் குறித்துப் போராளிகள் முன்வைத்த ஆலோசனைகள், அரசாங்கம் செய்யவேண்டியவை 1. யுத்தநிறுத்த மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். யுத்த நிறுத்த மீறல்களை உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று விசாரிப்பதற்கென்று மாவட்ட ரீதியில் தமிழ்ப் பிரதிநிதிகளையும், அரச பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல் அவசியம். இவ்வமைப்பின் சுதந்திரமான நடமாட்டமும் உறுதிசெய்யப்பட வேண்டும். 2. சர்வதேச மன்னிப்புச்சபை அல்லது அதையொத்த சர்வதேச அமைப்பொன்று யுத்தநிறுத்த கண்காணிப்பாளர்களாக அமர்த்தப்படுவதுடன், அவகளை உள்ளடக்கிய அவதானிப்புக் குழு கைதிகளின் நலன்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். 3. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனையொத்த அவசரகாலச் சட்டங்கள் முழுமையாக நீக்கிக்கொள்ளப்பட வேண்டும். யுத்த நிறுத்தத்திற்கு முன்னரான காலத்தில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகக் கைதுகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும். 4. ஆனி 18 ஆம் திகதி வரை அரசால் கைதுசெய்யப்பட்டு, வழக்குகள் பதியப்படாது அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தமிழ் அரசியல்க் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலதிக நிபந்தனைகள் 1. வெளிநாடுகளிலிருந்து இராணுவப் பயிற்சியாளர்களையும், கூலிப்படையினரையும், ஆயுதங்களையும் தருவிப்பது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 2. இராணுவத்தினர் முகாம்களை விட்டு வெளியே வரும்போது ஆயுதங்கள் இன்றியே வரவேண்டும். 3. பொதுமக்கள் மீதான அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்க அமைப்பினர் மீதான தாக்குதல்கள் ஆகியன‌ நிறுத்தப்பட வேண்டும். 4. பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகள் , வியாபார நிலையங்கள், பொதுச் சொத்துக்கள், வர்த்தக நிறுவனங்களைத் தீயிட்டு அழிப்பது நிறுத்தப்பட வேண்டும். 5. தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுதல், கடத்திச் செல்லுதல் ஆகிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். 6. தமிழருக்குச் சொந்தமான வாகனங்களை கடத்திச் செல்லுதல், தீவைத்து எரித்தல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். 7. தமிழ் மக்களின் வீடுகள் கடைகள் போன்றவற்றைச் சூறையாடுதல், கப்பம் அறவிடுதல், வியாபாரிகள் மீதான துன்புறுத்தல்கள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். 8. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். 9. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கெதிரான தடைகள் நீக்கப்பட வேண்டும், குறிப்பாகப் பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நடமாட்டம் தடுக்கப்படலாகாது. 10. வெளிநாட்டு துணைப்படைகளான மொசாட், இங்கிலாந்தின் விசேட ஆகாய சேவைகள் படையணியின் பயிற்றுவிப்பாளர்களை நாட்டிற்குள் கொண்டுவருவது நிறுத்தப்பட வேண்டும்.
  36. சந்தர்ப்ப சூழ்நிலை வாய்க்காத வரைக்கும் எல்லாரும் யோக்கியன்.... வாய்த்துவிட்டால் எல்லாரும் அயோக்கியன்.
  37. ஏன் ராசா ஏன்?? வடையை காவிக்கொண்டு??☺️
  38. முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்: alua camp de mar நன்றி.
  39. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?
  40. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  41. குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.