Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3055
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/15/24 in all areas

  1. இந்த வானவில் கூட்டத்தின் தொல்லை வர வர அதிகரித்துக் கொண்டே போகுது. வீகன் போல இதுவும் தூண்டப்படுதலே அதிகம். இயற்கைக்கு மாறான வானவில் கூட்டத்தின் செயற்பாடு மீது பாப்பரசரின் விசனம் மட்டும் போதாது. வானவில் கூட்டத்தினரின் இருப்பு.. பெருக்கத்தை.. கிறிஸ்தவ மிசனரிகளில்.. முற்றாக தடை செய்ய வேண்டும். இனங்காணப்படும் வானவில் குற்றவாளிகளை மிசனரிகளில் இருந்து விரட்டி விடுவது நல்லது.
  2. ஒரு பிள்ளையை ஒருபாலினத் தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் போது - அந்த பிள்ளை எதிர்பாலினத்தின் தன்மை தெரியாமல் வளர்வதும், குறிப்பாக விபரம் அறியும் பராயத்தில் (formation years). ஒரு பாலினத்தினர் பற்றி வெளிப்படுத்தக்கூடாது, அறிவிக்க கூடாது என்றதும் ஒரே விளைவு, அனால் பிள்ளைக்கு தாக்கம் கூட. பிள்ளைக்கு இயற்கையாக உருவாக கூடிய பாலினத்தன்மை வேண்டும் என்றே வடிவமைக்க (shape) வேண்டும் என்றே சூழல் (ஒருபாலின பெற்றோர்) உருவாக்கப்படுகிறது. அதுவும், வேறு நேர்பாலினத்தவர் பிள்ளைக்கு ( தத்தெடுத்து வளர்க்கும் போது) சூழல் (ஒரு பாலின தத்தெடுக்கும் பெற்றோர்), பிள்ளை அதன் பாலினத் தேர்வை சா ர்பாக (ஒருபாலினப்பக்கம்) தீர்மானிக வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் கூட. ஏனெனில் சூழல் பாலினத்தேர்வை தீர்மனைப்பதில் பங்கு வகிக்கிறது. இதை எவராவது மறுக்கட்டும் பாப்போம், ஹார்வர்ட் பேராசிரியரையும் உள்ளடக்கி. (எந்த விதமாக (surrogacy .. ) பிள்ளையை அடைந்தாலும், அது அடிப்படை இயற்கை முறையில் தானே கருத்தரிக்கிறது) (வெகுஅருமையாகவே ஒருபாலின பெண் கருவை சுமந்து பெறுவதற்கு ஆயத்தம், ஆண் தம்பதிகள் என்றால் முடியாது) பிள்ளையும் ஒருபாலினத்தை தேர்ந்து எடுத்தால், அதுக்கு சந்ததி கொடுக்கிறது யார்? சந்ததி முடிந்து போவதற்கே வாய்ப்புகள் கூட. வாதத்துக்கு, ஒருபாலினம் மிகுதியாக வளர்ந்த்து விட்டது என்றால், அதன் விளைவு முழு மனிதனும் அழிவு, அல்லர் சமநிலை நேர் பாலினத்தவர் பக்கம் திரும்பும் வரை அழிவு. ஒரு பாலினகவர் தம்பதி, சோடி எதுவாகவும் வாழட்டும். அனால், அது திருமணம் இல்லை. அது திருமணம் என்றால், ஒரே நேரத்தில் நேர்பாலினத்தவர் ஒரே நேரத்தில் பல துணைகளை கொண்டு இருப்பதும் திருமணம் என்று வரும். மற்றது, இந்த ஒருபாலினத்தவர், பாலின தாவும் தன்மை கூட. ஒரு பாலினகவர் பிள்ளை தத்தெடுக்க, வளர்க்க அனுமதிப்பது கூடாது. ஒருபாலின வேட்கையாளரை ஏற்றுக்கொள்வது வேறு. அதை திருமணம் , சந்ததி விருத்தி, கூர்ப்புடன் குழப்புவது வேறு. இது பயம் அல்ல, சொல்லி இருப்பது எல்லாமே காரண, காரியம் உள்ளது.
  3. மாண்புமிகு ஶ்ரீலங்கா ஜனாதிபதி அனந்தி சசிதரன் நிச்சயம் சிறந்த தீர்வை கொண்டுவருவார் என ற நம்பிக்கையுடன் வாக்களிப்போம்.
  4. ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......! ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 92 வது நிமிடத்தில் விழுந்தது........! 😂
  5. யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் திகதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் திகதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 திதிகளிலும் நடைடபெறவுள்ளன. மேலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 ஆம் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதி ஆட்டம் ஜூலை 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://uthayam.lk/2024/06/14/யூரோ-கிண்ண-கால்பந்துப்-ப/
  6. ரெக்கோடிங்கில் இப்போது தான் பார்த்தேன். நான் நினைத்தேன் டென்மார்க் அணியை அழைத்து கொண்டு சென்று நீங்கள் இப்போது யேர்மனியில் நிற்பீர்கள் என்று.
  7. இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால் காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.
  8. 🤣........... அமெரிக்காவால் வழங்கப்படும் H1-B விசாவிற்கு இது சரியாக பொருந்துகின்றது. இது அமெரிக்காவால் சில வேலைகளுக்காக அதில் சிறப்பு தேர்ச்சி உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வேலை விசா. மூன்று வருடங்கங்களுக்கு வழங்கப்படும், பின்னர் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு நீட்டிக் கொள்ளலாம். எந்த வேலைக்காக வழங்கப்பட்டதோ அந்த வேலையை மட்டுமே செய்யலாம் என்பது இதில் உள்ள நிபந்தனை. ஆனால் எங்கேயாவது, எதையாவது படித்து விட்டு இந்த விசாவில் வந்த மிக அதிகமானோர் கணினி துறையில் வேலை செய்தனர். அமெரிக்க அரசும் இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. பின்னர் ட்ரம்ப் அதிபரானார்.......... படிப்பிற்கும், தேர்ச்சிக்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களின் விசாக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. ஆகப் பகிடி என்னவென்றால், இந்தியா போய் திரும்பி வந்து கொண்டிருந்த சிலரை அதிகாரிகள் இங்கு விமான நிலையத்தில் வைத்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் கேட்கும் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டது தான்........🤣.
  9. "தந்தை எனும் தாய்" [இன்று 15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல்] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன். 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது. "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்! சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை? எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள்!!" தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன். “நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத் தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“ ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை. படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு: "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;" கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே! "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ்" என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை?? என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல: “என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும் கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்? நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்! இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்; தான் அது! இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற நான், தந்தை எனும் தாய்; என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்! தந்தை எனும் தாய்; ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "கல்விதான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து"👍; இதைதான் எமது ஈழத்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்
  11. குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு. 2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது. 3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன். 4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர். 5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து. இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு. ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. RAVI MANY · மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது. வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,"ஏய்... நான் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு,மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது. அந்த ஊழியர், "உண்மை தான்... நீ காட்டு ராஜா தான்...ஆனால், இங்க குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார். இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!!
  13. 99 உலக கோப்பை செமியில் தெ.ஆ வின் டொனால்டும், குலூஸ்னரும் தோத்த அதே பாணியில் இன்று நேபாளம். கைக்கெட்டியது…. இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு. இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣
  14. ஜனாதிபதி பொது வேட்பாளரை முழுமூச்சுடன் எதிர்ப்பேன் என்றவர் களத்தில் குதிக்கலாம்.... ஆனந்திக்கு அச்சுறுத்தல்கள், தூதுகள், வசைகள் வரலாம்..... நீ, நான் போட்டிகள் எழலாம்.....எது வேண்டுமானாலும் நேரலாம், இதெல்லாம் நமக்கு புதிதல்ல. பொது வேட்பாளர் வென்றால்; தாம் காட்டிக்கொடுத்து தரகு பணம்பெறுவது ஊரை பேய்க்காட்டி உலா வருவது தடைப்படுமே என்கிற ஏக்கத்தில், ஏதோ தமிழருக்கு சிங்களமே ஜனாதிபதியாகவேண்டுமென்று கொக்கரிக்கிறார். இவ்வளவுகாலமும் யார் ஜனாதிபதியாக இருந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழர் ஏதிலிகளானார்கள் என்று தெரியவில்லை, ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர் போல் கதையளக்கிறார் ஒருவர். அவரை முதலில் உண்மையை உணர செய்யுங்கள், தற்போதைய முடிவுக்கு தமிழர் வரக் காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தி, ஜதார்த்ததை ஏற்றுகொள்ளச்செய்யுங்கள். கற்பனையில் வாழும் ஒருவரை நிஜத்துக்கு கொண்டு வாருங்கள். ஏற்கெனவே தான்தான் ஜனாதிபதி எனும் நப்பாசையை வெளியிட்டவர் அவர். மூர்க்கமாக தமிழரை அழிக்க கங்கணம் கட்டும் சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி தமிழருக்கு என்னத்தை வாங்கித்தரப்போறார்?
  15. சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை! வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் அ.அ.மாதவன் மற்றும் சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலா் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1388108
  16. வீரப்பையன் எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும் என்று சொல்வீர்கள் நாளை மழை வந்து விளையாட்டுத் தடைப்பட்டால் என்ன நிலைமை ? அவுசு தோத்தால் என்ன நிலைமை ? எனக்கென்னவோ சகுனம் நல்லாக படேல்லை 😧 ஏன் இப்பவே இங்கிலாந்து தோத்தால் .......எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும்
  17. 🤣..... இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க.... நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
  18. "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!" கவிதையிலே எழுதி இன்பம் கொள்ளலாம் ...இது பகற்கனவு . இன்னும் நில ஆக்கிரமிப்பு, புத்தரின் சிலைகளை நாட்டி விகாரைகள் உருவாக்கமும் புது புது குடியேற்றமும் .. .கிடைக்குமா ஒற்றுமை சமாதானம் ?
  19. நடக்குமா?
  20. இது பிழையான. கருத்து,....முடிவு ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக. ஒற்றுமையாக வரவேற்ப்போம்.
  21. முன்பெல்லாம் நம் நாடு உலகக் கிண்ணம் ஜெயிக்கவில்லையென்றால் ஏதாவது ஒரு ஆசிய நாடு ஜெயிக்க வேண்டும் என கேட்டு இருக்கேன் ஆனால் இப்போ நமக்கு கிடைக்காத எதுவும் பக்கத்து நாட்டு காரனுக்கு கிடைக்க கூடாதுனு நினைக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல. - Vijay Vj -
  22. சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரியின் இழப்பிலிருந்து தில்லை மீண்டுவர வேண்டுகிறேன்.
  23. 15 JUN, 2024 | 03:57 PM 'அரசாங்க பாடசாலைகளிலும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளிலும் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‌ மாநில கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கு பற்றினார். அந்த விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது, '' காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் .. என பள்ளி கல்வித்துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. இதனை தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் சந்தித்த மாணவிகள் பலரும் இதனைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். அந்த மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியிருந்தேன். இந்தத் திட்டம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. எனவே புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை நாம் 'அப்டேட்' செய்து கொள்வது அவசியம். நிதி நெருக்கடி இருந்தாலும், கல்வித்துறையில் பல திட்டங்களை தொடங்குகிறோம் என்றால்... அது மாணவர்களாகிய உங்களுக்காகத்தான். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை கேட்டுக் கொள்வது ஒன்றுதான்.. படியுங்கள்! படியுங்கள்! படித்துக் கொண்டே இருங்கள்! உங்கள் கண் முன்னால் 'ஃபுல்ஸ்டாப்' தெரியக்கூடாது. 'கமா' மட்டும்தான் தெரிய வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்கள். வென்று கொண்டே இருங்கள். பிரகாசித்துக் கொண்டே இருங்கள். தமிழகத்திற்கு பெருமை தேடி தாருங்கள். கல்விதான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. அதிலும் மோசடிகள் நடப்பதால் தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்த மோசடிக்கு ஒரு நாள் முடிவு கட்டுவோம். நீங்கள் அனைவரும் உலகை வெல்லும் ஆற்றலை பெற்று, பகுத்தறிவோடு செயல்பட ... முதல்வராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் வாழ்த்துகிறேன்.'' என்றார். https://www.virakesari.lk/article/186143
  24. Solar மூலம் நம்பவே முடியாத மாத வருமானம் | 40 KW System
  25. "உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும் உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும் உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!" "போகும் பாதையை தெளிவாக அறிந்து போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல் போவார் வருவார் சொற்களை கேட்காமல் போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!" "வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள் வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல் வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது வெளிச்சம் காட்டி உன்னைக் கூப்பிடாது!" "நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள் நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள் நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!" "சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும் சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும் சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!" "எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி எங்கு விடாமுயற்சியோ அங்கு வளர்ச்சி எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!" "திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால் தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும் திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [1] Don’t make excuses, make improvements 2] Don’t stop when you’re tired, stop when you’re done 3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people 4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise 5] Don’t get side-tracked by people who are not on track 6]Behind every successful person are a lot of unsuccessful years 7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it 8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs 9]Just because you are struggling does not mean you are failing 10] The hardest thing to open is a closed mind]
  26. கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அடக்குமுறை இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளிக்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சரிகா சட்டக் கல்லூரியின் கட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார். https://tamilwin.com/article/canadaian-tamil-woment-accuesed-sl-forces-1718417103
  27. தமிழர் தரப்பு பிரதிநிதியாக போட்டியிடுகின்றார். வெற்றியடைய மாட்டார் என்பது கடவுளுக்கே தெரியும்.
  28. புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?
  29. 🤝... நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது.
  30. மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர். முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியிருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒரு பராமரிப்பாளர் காயமடைந்தார். யானைப் பிறப்புக்களில் இரட்டைக் குட்டிகள் என்பது மிகவும் அரிது. அதிலும் ஒரு ஆண் மற்றும் பெண் என்பது அரிதிலும் அரிதானது சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட பூங்காவை பார்வையிட வருபவர்களுக்கு யானைக் குட்டிகளைப் பார்ப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால், அவர்களின் பாதணிகளை கழற்றி வைத்து விட்டு, கைகளை நன்றாகக் கழுவிவிட்டே உள்ளே வர வேண்டும். அங்கே ‘யானைக் குட்டிகளை தொட வேண்டாம்’ என்று பலகையில் எழுதப்பட்டிருக்கும். பிறந்து ஏழு நாட்களின் பின்னரே யானைக் குட்டிக்கு பெயர் வைக்கப்படும். இரண்டாவதாக பிறந்த பெண் யானைக்குட்டி 55 கிலோகிராம் எடை கொண்டது. ஆண் யானைக் குட்டி 60 கிலோகிராம் எடை கொண்டது. https://thinakkural.lk/article/303745 வித்தியாசம் 5கிலோகிராம் போல தெரியவில்லை!
  31. இர‌ண்டு ஓவ‌ரில் மூன்று விக்கேட் அவுட் அதோட‌ க‌ட‌சி ஓவ‌ரில 8ர‌ன்ஸ் தேவை ப‌ட்ட‌து 4 . 2 அடிக்க‌ . 2 ப‌ந்துக்கு . 2 ர‌ன் தேவைப் ப‌ட்ட‌து வ‌டிவாய் வெற்றி பெற்று இருக்க‌ வேண்டிய‌ நேபாள‌ம் தோத்த‌து க‌வ‌லை அளிக்குது அண்ணா நேபாள‌ம் இன்று தென் ஆபிரிக்காவை வென்று அடுத்த‌ விளையாட்டில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்று இருக்க‌னும் சூப்ப‌ர்8க்கு போய் இருப்பின‌ம்.................. நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏...................................
  32. நான் ஆதரிக்கவில்லை அதேசமயம். என்னால் அதை தடுக்கவும். முடியாது
  33. ஒரு நிமிட தடுமாற்றம், வாழ்வு முடிந்துவிட்டது. வைத்தியருக்கும் ஆசை, பாசம், எதிர்பார்ப்பு இருக்குந்தானே, அவர் ஒன்றும் ஞானி இல்லையே. யாராவது அவருக்கு உடனிருந்திருந்தா அதை கடந்து நாம் சொல்வதுபோல் சாதனை படைத்திருப்பார். என்ன செய்வது? விதி எத்தனையோ வடிவங்களில் வரும், அந்த நேரம் மதி மயங்கி இயலா நிலைக்கு போய், இதுதான் சரியான முடிவென காட்டும். அவரை இழந்து வாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களில் யாருக்காவது அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் உடனடியாக உளவள உதவியை நாடவும். ஒரு பழமொழி உண்டு. "ஊருக்கு புத்தி சொல்லுற பல்லிதான் கூழுக்குள்ள விழுந்து சாகிறதென்று." அவர் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார், ஆனா இறுதி நேரம் தப்பிக்க நினைத்திருப்பார், முயற்சித்திருப்பார் இயலாமல் போயிருக்கும். அவ்வளவுதான் அவருக்கு வாழ கொடுக்கப்பட்ட காலம். அன்றெழுதியதை திருப்பி எழுதமாட்டார் அவரை படைத்தவர். பின்னொரு நாளில் இந்த மாதிரியெல்லாம் எழுதிய சாத்தானா இப்படி இறந்தார், இவருகிருந்த அறிவு எங்கே போயிற்று? என்று எழுத வேண்டியும் வரலாம்! யாரறிவா?
  34. இன்றைக்கு உலக இரத்ததான தினம் என்று எங்கேயோ ஒரு செய்தி இருந்தது.......மேர்வின் டி சில்வா நல்ல அப்டேட்டாகத் தான் இருக்கின்றார்.........
  35. போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.
  36. ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.
  37. ரணில் ஜனாதிபதியாக வந்த மாதிரி முதல்வர் பதவியை எடுத்து போட்டு இப்ப ஐயோ கொல்றாங்கப்பா என்று கத்தினால் என்ன மாதிரி சட்டப் பிரச்சினையைக் கிளப்பினால் அது உங்களுக்குத்தான் ஆபத்து விட்டுப்பிடியுங்கோ!!!
  38. கோதுமை ரவா உப்புமா.......! 👍
  39. 30வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த ஐக்கிய அமெரிக்கா அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இந்தப் போட்டி கைவிடப்பட்டதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைகின்றது. அதேவேளை பாகிஸ்தான் அணி சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்துள்ளது! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! 30வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 48 2 ரசோதரன் 48 3 கோஷான் சே 48 4 ஈழப்பிரியன் 46 5 சுவி 46 6 நந்தன் 46 7 தமிழ் சிறி 42 8 ஏராளன் 42 9 கிருபன் 42 10 கந்தப்பு 42 11 வாத்தியார் 42 12 எப்போதும் தமிழன் 42 13 நீர்வேலியான் 42 14 வீரப் பையன்26 40 15 நிலாமதி 40 16 குமாரசாமி 40 17 தியா 40 18 வாதவூரான் 40 19 அஹஸ்தியன் 40 20 கல்யாணி 40 21 புலவர் 38 22 P.S.பிரபா 38 23 நுணாவிலான் 38
  40. நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது. உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான். ஒரு மாதிரிக்கு, 1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார். எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? 2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது. விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!
  41. இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது. மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு. தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  42. நன்றி, உங்கள் அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் துமிலனுக்கும் தெரியப்படுத்துகிறேன்🙏
  43. 'புகைப்படக்கருவி’ வரலாறு.. கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்.. புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் …. ‘Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர் “ John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் .. கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் ! ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்.. சரி விஷயத்திற்கு வருவோம் ! புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?... ”Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் 965’ல் ஈராக் ‘ல் ,பஸ்ரா ( Basra ) என்ற இடத்தில் பிறந்தார் .. ஒஹ் இவர்தான் புகைப்பட கருவியை கண்டுபிடித்தாரா ? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது .. ஆனால் அதுதான் இல்லை !!… இவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் … Ibn al-Haytham ( Alhazen) Father of optics Ibn al – Haytham Born: July 1, 965 AD, Basra, Iraq Died: March 6, 1040, Cairo, Egypt இவர் ஒரு இஸ்லாமியர்,விஞ்ஞானி,கணிதமேதை,மருத்துவர். இவரின் அதீத ஆராய்ச்சியால் மனநலம் பாதிக்கப்பட்டார் ! இவரை சில காலம் வெளியில் விடமால் ஒரு அறையில் அடைத்துவிட்டனர் !! அப்பொழுதுதான் இவர் ‘சூரிய வெளிச்சம் எந்த தடங்கலுமின்றி நேர் கோட்டில் பயணிக்கிறது’ என்றும் ‘சூரிய வெளிச்சம் ஒரு பொருளின் மீது படுவதால்தான் நம் கண்கள் அதை பார்க்க முடிகிறது’ என்றும் கண்டுபிடித்தார் !! அதை வைத்து பல ஆராய்சிகள் செய்து ஒரு நூலை எழுதினார் .. அந்நூலின் பெயர் ” Book Of Optics “… A drawing from ‘ The Book Of Optics’ முதன் முதலில் ‘Camera Obscura’ எவ்வாறு என்பதை தெளிவாக விளக்கி கூறியவர் இவரே ! ஆம் … இவரது இருண்ட அறையில் இருக்கும் சிறிய ஓட்டையில் பாயும் சூரிய வெளிச்சம் சுவரில் ஏதோ மங்கலாக தெரிய , ஒரு குவியை அந்த ஓட்டையில் பொருத்தினார்.. ஆஹா ! என்ன அதிசயம் அவர் வீட்டின் எதிரே உள்ள வீட்டின் உருவம் தலைகீழாக இவர் அறையின் சுவரில் தெரிந்தது !! இதை விளக்கி நாலு பேரிடம் சொன்னார். இது உலகத்தின் முதல் ‘Pinhole Camera’ method ஆகும்.. அதை நூலாகவும் எழுதினார் !! Ibn Hal – Haytham is the father of optics, first scientist & he only describe clearly about camera obscura இவர் மறைவுக்கு பின்னர் (Book Of Optics )அந்நூலை கொண்டு Portuguese , French விஞ்ஞானிகள் குவி ,கண்ணாடி சம்பந்தமான ( Concave & Convex ) பல ஆராய்ச்சி செய்துவந்தனர் !! பயன் அடைத்தனர் !! இவர் புகைப்பட கருவி கண்டு பிடிக்கவில்லை என்றாலும் இவரது நூல் இல்லை என்றால் இன்று lens மற்றும் glass கிடையாது !! Lens இல்லாத காமெராவும் கிடையாது .. ஆக புகைப்பட கருவி கண்டுபிடிக்க வித்திட்டவரும் இவரே !!! Camera Obscura Method இவரது மறைவுக்கு பின்னர் பல மொழிகளில் இவரது ‘Book Of Optics‘ என்ற நூல் மொழிபெயர்க்கபட்டது.. அதை வைத்து பல ஆராய்சிகள் , பல வருடங்கள் உருண்டோடின !! இவர் விளக்கிய ‘Camera Obscura’ வை பலரும் சோதனை செய்தனர் !! அதை வைத்து சுவரில் தெரியும் உருவத்தை கொண்டு ஓவியம் தீட்டினர் !! 1800 ஆம் ஆண்டு வாக்கில் தான் இதன் கண்டுபிடிப்பு வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம் …பலரும் இந்த Camera Obscura’வை கொண்டு ஆராய்ச்சி செய்ய …. குழப்பமும், கேள்வியும்தான் மிஞ்சியது !! ஆம்.. பதிவு செய்யும் முறை மற்றும் எதில் பதிவு செய்வது என்று பலரும் குழம்பிபோயிருன்தனர் !! சில விஞ்ஞானிகள் சோதனை கைவிட்டனர் … ஆம் 8 மணி நேரம் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தால் !!!! பதிவு செய்த பிறகு ஒரு சில நிமிடமே இருக்கும் , பிறகு மறைந்துவிடும் !!! Joseph Nicephore Niepce ”Joseph Nicephore Niepce ” என்ற ‘பிரெஞ்சு’ விஞ்ஞானி ஓவியம் வரைவதற்காக மட்டும் ‘Camera Obscura’ வை பயன்படுத்தி வந்தார்… மாறாக ஒருநாள், ஒரு ரசயானம் பூசிய உலோக தகடை கொண்டு அதில் வெளிச்சம் பாய வைத்தார்… அது 1826 ஆம் வருடம்..உலகத்தின் முதல் நிலையான ,மறையாத புகைப்படம் உருவானது ! Worlds First Photograph by Joseph Nicephore Niepce (1926) Mr.Louis Dagurre மேலும் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி ‘Louis Dagurre’ என்பவர் தனியாக சில சோதனைகள் செய்து சில சிறிய வெற்றிகளை கண்டார் … 1829 ஆம் வருடம் Joseph Nicephore Niepce மற்றும் Louis Dagurre இருவரும் கைகோர்த்து ஆராய்ச்சியில் இறங்கினர் !! வெற்றி கிட்டும் நேரத்தில் Joseph Nicephore Niepce அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோக ….. Louis Dagurre தனியே போராடி தங்கள் கண்டுபிடிப்பை உலகத்திற்கு காண்பிக்க பெரிதும் சிரமப்பட்டார் .. 1840 ‘தற்கு பிறகு Louis Dagurre வும் Joseph Nicephore Niepce யின் மகனும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் பல சோதனைகள் செய்து காண்பித்து உரிமம் பெற்றார்கள் !! அதற்க்கு ‘Dagurre Process’ என்று பெயரும் இட்டனர் .. இது வரை Camera Obscura வாக இருந்த கருவி Daguree Camera என்றழைக்கப்பட்டது !! பிரெஞ்சு அரசாங்கம் 1850 ‘ல் மக்கள் பயன்பாட்டிற்காக அனைவரும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது !! 1850 வாக்கில் நியூயார்க் ‘ல் மட்டும் 70 Daguree Photo Studio !!! 1841’ல் Negative to Positive process ‘ஐ Henry Fox Talbot என்ற ஆங்கிலேயரும் , 1889 ‘ல் ‘Cellulose Nitrate’ ரசாயனம் பூசப்பட்ட’ film Roll ‘ ஐ George Eastman ‘ம் கண்டுபிடித்தனர் !! Mr.Steve Sasson with Worlds First Digital Camera ( 1975 ) இவர்தான் Mr .Steve Sasson. இவர் Eastman Kodak நிறுவனத்தில் Engineer ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார் . இவர் கடின உழைப்பாலும், புதிய முயற்சியாலும் உலகுக்கு டிஜிட்டல் கேமரா’வை முதன் முதலில் அறிமுகம் செய்தார் . அவர் கையில் வைத்திருப்பதுதான் உலகின் முதல் டிஜிட்டல் கேமரா 1975 ஆண்டு வாக்கில் வெற்றிகரமாக கண்டுபிடித்து உலகிற்கு டிஜிட்டல் கேமரா ‘வை அறிமுகம் செய்து வைத்தார் . ஆக புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் இவர் , அவர் என்று தனி தனியே யாரையும் குறிப்பிட முடியாது … பல நூற்றாண்டுகளாக தவமாக இருந்து தங்களது அறிய கண்டுபிடிப்பை நமக்கு தந்துள்ளனர் … இவ்வாறு வரலாறு கொண்ட காமெராவை நாம் எப்படி போற்றவேண்டும் ….. நம் நிகழ்வுகளை நினைவுகளாகும் இந்த கருவி கடந்து வந்த பாதையை நாம் ஒவ்வொருமுறை உபயோகிக்கும்போதும் நினைக்க வேண்டும் …. https://shanmugarajaphotography.wordpress.com/2013/07/30/புகைப்படக்கருவி-வரலாறு/
  44. மிகப் பிரபலமான ஒரு வரிக்கதை இது. இங்கு களத்தில் முன்னரே இது வந்ததா என்று தெரியவில்லை. Cuando despertó, el dinosauro todavía estaba allí (When he awoke, the dinosaur was still there ) என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது. When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது. என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது. இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் it isn’t a short-story, it is actually a novel. https://www.sramakrishnan.com/ஒரு-வரிக்கதை/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.