இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர்,
அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை.
ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள்.
1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே?
இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன.
ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான்
ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது.
எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம்.
போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை,
முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை,
அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள்.
83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள்.
மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன்
பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன்,
நன்னி,
எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது.
இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.