Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87990
    Posts
  2. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5896
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20014
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/25/24 in Posts

  1. உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம் போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள். இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. பேசாமல்... வேலைக்குப் போய், உழைத்து சாப்பிடட்டும். 😂
  3. அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.
  4. 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச் சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும். தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ" என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
  5. சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு
  6. இந்த அரசு நிலைத்தால், அது நடக்கக்கூடியதல்ல. ஒவ்வொருவன் உண்ணும் உணவுக்கும் கஸ்ரப்பட்டே உண்ணவேண்டும். ஆதலால் இந்த அரசை நிலைக்க விடமாட்டார்கள், சும்மா இருந்து வயிறு வளர்த்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள். விசேடமாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, உழைப்பே முக்கியமாக கருதப்படும். இந்தியாவின் நிலையை சீனா முழுமையாக எடுக்கும். இந்த அரசில் இவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியதாயினும் அவசரம் எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிடும். நாட்டை சுரண்டியதுகள் சும்மா இராதுகள். இனவாதம், ஊழல் கருவிலேயே ஊறி விருட்ஷமாய் நிக்கிறது. அதை அதன் பாட்டில் போய் மெதுமெதுவாகவே களைய வேண்டும். எனக்கென்னவோ நேர்மையான தேர்தலை நடத்த, மாற்றங்களை ஏற்படுத்த போய் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விடுவாரோ என தோன்றுகிறது. சிறியர் விசுக்கிற விசையை பாத்தா ஒருவரும் தாங்க மாட்டார்கள். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பி ஓட முடியாதே. அரசியல் வாதிகளின் பெஞ்சன் எல்லாம் இனி குறைக்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவையை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு வரையறை செய்தால்; நாடு முன்னேறும், மக்களின் நிலை புரியும் இவர்களுக்கு. மக்களின் பணத்தில் இவர்கள் சொகுசு வாழ்க்கை, மக்கள் அடிமை வாழ்வு. ஐயோ! களத்தில் கலவரம் வெடிக்கப்போகுது, நான் ஓட்டம்.
  7. // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.// இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்
  8. புரட்சிகர மாற்றங்கள் என்றாலும் ஒரே இரவில் மாற்றுவது பாரிய எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, கொஞ்சம் நெகிழ்வாக இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இராணுவ ஆட்சிகூட ஏற்படலாம்!
  9. இறையாண்மையென்று கூறிச் சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழித்ததோடு முழு இலங்கை மக்களதும் இறையாண்மையைப் பறிகொடுத்துப் பரிதவிக்கிறது. (சிறிலங்காத் தேசியவாதிகள் படிக்காது கடந்து செல்லப் பணிவுடன் வேண்டுகிறேன்) இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதோ. இவரது வெற்றிச் செய்திதொடர்பான திரியில் ஏலவே பகிர்ந்தவைதான். இவர் நினைத்தாலும் நிலைமை அவளவு இலகுவானதல்ல என்பதே மெய்நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. பேராசிரியர் அபயக்கோன் ஒரு நல்ல தெரிவு. உங்கள் காலத்துக்கு பிறகு இவர் கனடா சென்று, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துவிட்டு, நாங்கள் படித்து முடிக்கும் காலத்தில் மீண்டும் பேராதனை பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளராக வந்தார். எல்லோருடனும் நன்றாக பழகுவார், எனது ஊர் நண்பன் இவர் கனடா Vancouver நகரில் இருக்கும் பொது இவருடன் நல்ல பழக்கம், அதன் காரணமாக அப்பொழுது இவருடன் சில தடவைகள் தனிப்பட்டும் உரையாட முடிந்தது. எல்லோராலும் விரும்பப்படும் ஒருவர், முக்கியமாக தமிழ் மாணவர்களால் விரும்பப்பட்ட ஒருவர்
  11. இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள். கள நிலைமை தெரியாமல்... ஏவல் பேய்களாக.. வேறு ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்காக. இனத்தை விற்று காசு பார்க்கும் கோஸ்டிகள். பலாலி இராணுவ படைத்தளத்தில்... நடந்த விருது வழங்கும் நிகழ்வின் போது, பிக்குகள் அமரும் கதிரைக்கு வெள்ளைத்துணி போர்க்கப்படவில்லை என்பதற்காக... மறவன்புலவு சச்சி, தனது வேட்டியை அவிட்டு போர்க்கக் கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்குது, வெட்கம் கெட்டது.
  12. ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம், தாயகத்திலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை தவிர புலம்பெயர்தேசங்களிலிம் தமிழர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதாலவ்து தாயகத்தில் எங்களது அரசியல்வாதிகளது தகிடிதித்தங்களால் வெறுப்படைந்தோர் குறிப்பாக இளையோர் அனுரவுக்கு வாக்களித்தல் என்ன எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களது உறவுகள் கூறும் அபிப்பிராயங்களுக்கு தாயகத்தில் வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் உதாரணமாக படிப்பிப்பாட்டைவிட்டு வெளிநாட்டுக்குக் கழுவப் போனவர்கள் எங்களுக்குப் புத்தி சொல்லக்கூடாது எனும் சிந்தனை எல்லா அரசியல் தலைவர்களிலிருந்து அடிமட்ட வாக்காளன் வரைக்கும் இருக்குது என அறிய வருகிறது. அனேகமாக இனிமேல் தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்
  13. சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று மதுபான அனுமதி பத்திரங்களில்... ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்கெனவே இருந்த மதுபான நிலையத்துக்கு அருகில் புதிய மதுபான நிலையைம் 700 மீற்றர் இடை வெளியில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் தானே... அதுமட்டும் நடக்கிறதை பார்த்துக் கொண்டு இருப்போம்.
  14. 2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு கடந்து போயிருக்கின்றனர்? இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்). இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!
  15. கூட்டத்திற்கு வராத 20 உறுப்பினர்களுக்கு வாக்கு இருந்திருக்காது. அப்ப வந்த 23 பேரில் 19 பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்? "இருவர் மட்டும் எடுத்த முடிவு என்று மேலே நீங்கள் பரப்பியது " புரளி என்று புரிகிறதா? நான் சிலுவை தான் சுமக்கிறேன், உங்கள் போன்ற தகவல்களின் தரக்கட்டுப் பாடு அறியாத "தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு😎" எதிராகத் தான் சிலுவையேயொழிய, எந்த அரசியவாதிக்காகவும் அல்ல! அப்படி உலகம் சொல்லி நான் காணவில்லை. உங்கள் உலகம் எது? ஆதவன், அக்கினிக்குஞ்சு, தமிழ்வின், முகநூல்?
  16. தலைவர் யார்? மாவையா சிறிதரனா? காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு வேட்பாளர் பக்கம் நின்ற மாவை சொல்வதை நம்புகிறீர்கள். ஆனால் ஒரு முடிவெடுத்து அதன் படி நின்ற சும்மையும், சாணக்கியனையும் சந்தேகிக்கிறீர்கள்😂! அந்த முடிவெடுத்த கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்த்திருந்தால், வாக்கெடுப்பு நடந்திருக்கும். அதன் படி தான் முடிவும் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாமல் தான் எல்லோரும் ரொய்லெற் ஊடகங்களை நம்பிக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்! "காப்பாற்றி விட்டார்கள்" என்பது மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாமல் தமிழ் வின் அவித்த பொங்கலை "அப்படியே சாப்பிட்டவர்களின்" நம்பிக்கை😂. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது, இனி மீண்டும் முதலில இருந்தா😅?
  17. எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
  18. அருமையான பதில் ரஞ்சித். சுத்து மாத்து சுமந்திரனுக்கு மட்டுமல்ல இங்கு அரைகுறை அரசியல் அறிவுடன் நுனிப்புல் மேய்கின்ற அதி மேதாவிகளுக்கும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எப்பவும் இருட்டுக்குள் யானையை பார்த்துவிட்டு வந்து அவித்து இறக்குகின்ற ஆட்கள் தானே.. 😂
  19. இவரால் எந்த மாற்ற்த்தினையும் இலங்கையில் ஏற்படுத்த முடியாது, இதுவும் ஒரு இனவாத சிங்களத்தின் தம்மை தக்கவைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி, கோட்டபாய அரசினை ஆட்சிக்கு கொண்ட வந்த போது அவர்களுக்கு இஸ்லாமியர்களால் அவர்களது இருப்பிற்கு பாதிப்பு இருப்பதாக எண்ணினார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவது தமக்கான இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படையிலே இருந்தார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கொண்டு வந்த கோட்டபாய இலங்கையினை இன்னமும் ஒரு படி கீழிறக்கி விட்டுள்ளார். தற்போது இவர், இவருக்கு பொருளாதார, அரசியல், சமூக, வெளிவிவகாரம் என பல முனைகளில் பிரச்சினை உள்ளது, இவரும் ரணில் போல ஒரு ஆட்சியினையே வழங்க முடியும் அதிக பட்சமாக அதற்கு மேல் இவரால் எதுவும் செய்ய முடியாது குறிப்பாக ஊழலை ஒழிக்க முடியாது, நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பூகோள அரசியல் ரீதியாகவும் இலங்கை ஒரு இருண்ட கால கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த தீவிர இடது சாரி பிரச்சாரங்களை மேடை பேச்சோடு வைத்தால் ஓரளவிற்கு சிறிது காலம் தாக்கு பிடிக்கக்கூடும். இதுவும் ஒரு மண்குதிர்தான்.
  20. உண்மைதான், ஆனால் சீனா அவளவுதூரம் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்குமா?சிலவேளை ரணிலுக்குக் கொடுத்ததுபோல் இந்தியா கொடுக்கலாம். இந்திய அமெரிக்க உளவு அமைப்புகளைக் கடந்து நடக்குமா? அநுராவின் பொருண்மிய இலக்குகள் கடினமானவையாகவே இருக்கும். சிலவேளை குறுகியகால மரவள்ளி, மிளகாய், நெல், சிறுதோட்டப் பயிர்களை நோக்கி மக்களை நகர்த்தக்கூடும்.
  21. துருக்கிகளின் அடுத்த தலைமுறையின் ஒரு பகுதி நன்றாக கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். மற்றைய பகுதி முஸ்லீம்களுக்கே உரிய வியாபாரம், சிறு தொழிற்சாலைகள் என்று நிறுவி... பணம் கொழிக்கும் தொழிலை செய்கின்றார்கள். ஆனால்...அவர்களின் அடிப்படை முஸ்லீம் வாதம் என்றுமே மாற மாட்டாது. என்றாலும்... சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற மோட்டு முஸ்லீம்களை விட அவர்கள் திறம். (ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்ததால்.. ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.) சிரியன் மாதிரி... கண்டவுடன் கத்தியை தூக்கும் பழக்கம் துருக்கிகளிடம் இல்லை. அப்படி செய்தால்.. ஜேர்மன் சட்டம் என்ன செய்யும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால்... என்னைப் பொறுத்தவுரை எந்த இடத்திலும் .... ஒரு முஸ்லீம் தனியே இருந்தால், நல்லவன் போல் இருப்பான். இன்னொரு முஸ்லீம் அங்கு வந்து சேர்ந்தால் முதல் நின்றவனும் தனது மதத்தைப் பற்றி நியாயம் பிளக்க வெளிக்கிட்டுடுவான்கள். பிறகு அவங்களை கையிலேயும் பிடிக்க ஏலாது. 😂
  22. நீங்கள் இலங்கையின் எப்பகுதிக்கு சென்றீர்கள்? ஒரு வருடத்துக்கு முன்பே கருத்து கணிப்புகள் அனுரவுக்கு சாதகமாக இருந்துள்ளன. நாமே யாழ் களத்தில் ஜே விபியினால் தமிழருக்கு செய்யப்பட்ட அநியாங்கள் பற்றியும் பேசியுள்ளோம். நான் தேர்தலுக்கு இரு நாட் கள் முன்பே சிறிலங்காவில் நிற்கிறேன். நான் பேசிய பலரில் பலரும் ( தமிழர், சிங்களவர் உட்பட) அனுர தான் வருவார் என தெரிவித்தார்கள். தமிழ் யூ ரியூபர்களுக்கு தெரிந்தளவு சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் தெரியவில்லை போல???😂
  23. கந்தையிரின் மறு பெயரே குழப்பம் தானே.😆
  24. 🤣..... ரசோதர என்று என் பெயரை மாற்றிவிடப் போகின்றார்கள்....
  25. அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன் மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
  26. எனக்கு… கெட்ட கோவம், வரப் பண்ணாதேங்கோ… 😂 🤣
  27. இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன். ஆள்களாக. இருக்கிறது உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான் 🤣🤣
  28. இதுதான் நடக்கபோகுது ஏன் எனில் இவரை பார்த்து தேசிய கீதம் நிகழ்வுகளில் பிக்குகள் கூட எழுந்து நிற்கின்றனர் ஒன்றில் ஆளை போட்டு தள்ளி விடுவார்கள் இல்லை கோத்தா போல் ஓடவிடுவார்கள் .
  29. 2004 ம் ஆண்டு தேர்தலில் தானே பல கள்ள வாக்குகளை போட்டதாக சிறீதரன் வெளிப்படையாக கூறினார். அப்படி கள்ள வாக்கு போட்டதால் தான் 2004 ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடைத்ததாக கூறினார். அவ்வாறு வெளிப்படையாக அவர் தெரிவத்த விடயம் பற்றி யாரும் இங்கு உரையாடுவதில்லை. சிறீதரன் கூறுகிறார் அதை பற்றி பேசினால் அந்த காலத்தில் இருந்தவர்களை எல்லாம் பிழை சொல்ல வேண்டி வரும் என்று. அப்படியானால் அந்த காலத்தில் இவருடன் கிளிநொச்சியில் இருந்தவர்கள் பல கள்ள வாக்குகளை போட்டனர் என்ற உண்மையை கூறுகிறார்.
  30. அப்படிச் செய்ய மாட்டார்கள் நிழலி. Tamil guardian அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. அந்தப் பத்திரிகையைப் பிடித்தபடி பிரபாகரன் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது.
  31. தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி. நாங்கள் இன்னமும் தமிழர்களின் சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும். யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச் செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான். தமிழர் ஒருங்கிணைப்பானது விடுதலைப் புலிகளின் சகல நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம் ‘புலிகள் புராணம்’ பாடுவதைத் தவிர வேறு பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்
  32. அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று உள்ளார், அன்றிரவு ஆயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார். இவ் காணொலிகள் அனைத்து ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரேநாளில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவருடைய உடையலங்காரமும் ஒரே மாதிரிக்காக உள்ளது.
  33. எனக்கும் துருக்கிய மற்றும் குர்திஷ் நண்பர்கள் உண்டு. ஆனால் மதம் என்று பிடித்து விட்டால் எல்லோரும் வெறியர்களே.
  34. அண்ணை இந்தக் கதையை வாசித்தவுடன் நம்மட புலம்பெயர்ந்த உறவுகளோட இது பொருந்திப் போவதாக எண்ணினேன். அவர்களை ஆற்றுப்படுத்தும் என எண்ணிப் பகிர்ந்தேன்.
  35. நீங்கள் இவரின் கருத்துக்கு 100 வீதம் கருத்து எழுதுவீர்கள் என்பதும் என்ன கருத்து எழுதுவீர்கள் என்பதும் நீங்கள் கருத்து எழுத முன்பே எனக்கு தெரியும்.🤣
  36. இது அரசியல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.
  37. நாங்கள் யார் ?🤣யாராவ்து நட்சத்திரங்களாக வந்து ஜோலிக்க தொடங்கிய பின்புதான் வால் பிடிப்போம்...அதுவரை ஆழந்த சிந்தனையில் ஆழ்மன தியானத்தில் இருப்போம்...🤣
  38. நான் ரெடி😂 இதுக்கு பார் சிறீதரனும் அவையளும் ஓமாமே! அவையள் பெரும்பாலும் யுனிலிங்குவல்காரர்😂
  39. நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே தாம் தான் பலியாடுகள் என -நிழலி
  40. ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான். இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை. ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம். ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்… என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள்.
  41. இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!
  42. கபிதன்…. @Eppothum Thamizhan ம், @nunaviIan னும் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.😂 உங்களிடம் அதற்கு பதில் இல்லை என்று தெரிந்தால்… அதற்கு ஏன், சால்ஜாப்பு காரணம் எல்லாம் சொல்லி உங்களை தாழ்த்திக் கொள்கின்றீர்கள். ப்ளீஸ்… இனிமேலாவது, மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால்… மாடு கட்டி இருக்கின்ற கயிறைப் பற்றி எழுதாதீர்கள். 🤣
  43. கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வழிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும்.. வந்து வணங்கி வழிபட்டு போனார்களே தவிர.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ் இணைந்த வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் பகுதி பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் பூட்டனார் கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது இனவாத.. அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் கொள்ளையடித்து தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழும்பி விட்டேன். விடியும் போது (21.09.2024) புதிய ஜனாதிபதியின் பொறுமையான வரவு பார்த்தேன். எனியாவது இந்த கனவு பலிக்குமென்ற மகிழ்வோடு.. மனம் நடக்கிறது. . அன்புடன் -பசுவூர்க்கோபி-
  44. கனடாவில், ஒன்ராரியோவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் மூன்று முஸ்லிம்களை கைது செய்துள்ளனர். அதில் இருவர் தந்தையும் மகனும். ஏன் கைது செய்தனர்? ஏனெனில், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ததன் ஒரு வருட நிறைவு ஒக்டோபர் 07 அன்று வருகின்றது. அன்றைய தினம், பொது மக்களை இலக்கு வைத்து மோசமான தாக்குதலை செய்ய இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். கனடாவிலும் நியியோர்க்கிலும் இந்த தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டி இருந்தனர். போர் எங்கோ நிகழ்ந்து கொண்டு இருக்க அதற்கு சம்பந்தமில்லாத, முஸ்லிம்களை அரவணைத்து கொண்டு அனைத்து உரிமைகளையும் வழங்கிக் கொண்டு இருக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக எவராவது முக நூல் பதிவு போட்டாலே அவரை விசாரணைக்குட்படுத்தும் கனடா மண்ணில் தான் இவர்கள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். நாம் சிங்களவர்களுடன் இலங்கை மண்ணில் போர் புரினும், அதற்கு வெளியே அவர்களை தாக்க ஒரு போதும் நினைத்தது இல்லை. அதே போன்று பஞ்சாபிகள் (ஒரு விமான குண்டு வெடிப்பை தவிர), உக்ரேனியர்கள் என்று எவரும் போர் நிகழும் பிரதேசங்களுக்கு அப்பால் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனப்படும் பயங்கரவாதிகள்? இங்கேயே இப்படி திட்டமிடுகின்றவர்கள், இஸ்ரேல் மே ஒரு வருட நிறைவில் தாக்குதல்களை மேற்கொள்ள கண்டிப்பாக திட்டமிட்டு இருப்பினம். முக்கியமாக ஹிஸ்புள்ளா கடும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பார்கள். வழக்கம் போல, இஸ்ரேல் இதனை சாதகமாக்கிக் கொண்டு தன் இனவழிப்பை லெபனானில் நிகழ்த்துகின்றது.
  45. எங்கே ஆளை காணவில்லையே என்று நினைத்தேன்! மிக நேர்த்தியான கருத்துக்கள். நன்றி. நீங்களும் கோஷானும் இல்லாமல் இங்க சில கொசுக்களின்ர தொல்லை தாங்க முடியவில்லை.
  46. நன்றி, தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல். 2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  47. இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.