Jump to content

Leaderboard

  1. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      2405


  2. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      30747


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      80017


  4. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      1601


Popular Content

Showing content with the highest reputation on 10/24/24 in all areas

  1. கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார். இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன. 1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல. அக்கினிக் கரங்கள் நாவண்ணன் இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு. ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன். ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது. அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும். என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம். அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன். ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன. காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன. நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின. மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன். உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன். அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு. பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின. இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர். இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது. அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே! அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு. நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன். கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......! இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன். அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி! பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு! திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!
    5 points
  2. நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??
    5 points
  3. யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார். என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏
    4 points
  4. இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.
    3 points
  5. தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை. அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார். தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா. சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும்.
    3 points
  6. வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
    2 points
  7. கொஞ்சம் சிக்கலான நிலை ட்ரம்பினுடையது. ட்ரம்பும் அவரது சிவப்புக் கட்சியும் தீவிர இஸ்ரேல் ஆதரவாளர்கள். ட்ரம்பின் மருமகனும், மகளும் (திருமணத்தின் பின்) யூத மதத்தவர்கள். ஆனால், ட்ரம்பின் வெள்ளையின மேலாண்மைப் பேச்சுக்கள் சில சமயங்களில் யூதர்களையும் தாக்கியிருக்கிறது. "ஹிற்லர் சில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார்" என்று ட்ரம்ப் தன் உள்வட்டத்தில் கூறியது போன வாரம் ஒரு கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. இது தான் ட்ரம்பின் நிலை. ஆனால்,சில குடியேறி அமெரிக்கர்களும், முஸ்லிம் அமெரிக்கர்களும் "பைடனும் கமலாவும் இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவில்லை" என்ற கோபத்தில் ட்ரம்பை நோக்கிப் பழிவாங்கல் வாக்களிப்பாக செயல்படவும் முயல்கிறார்கள். ஆனால், ட்ரம்ப் வந்தால் நெரன்யாஹு அவிழ்த்து விட்ட வேட்டை நாய் போல ஆகி விடுவர் என்பதை உதாசீனம் செய்து விடுகிறார்கள்😂.
    2 points
  8. கமலாவுக்கு வாக்களிக்க பல காரணங்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு தீர்வு, இறையாண்மை தருவார் என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாக இல்லை. ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்க ஈழவழி வந்த தமிழர்கள், ட்ரம்ப் நோக்கிக் கவரப் பட்டிருப்பதை அவதானிக்கிறேன். குடியேறிகள் மீதான வெறுப்பு (நாம தான் உள்ள வந்திட்டமே, பூட்டு கேற்றை மென்ராலிரி😂!), வரி கட்ட வெறுப்பு, கறுப்பின மக்கள் மீது வெறுப்பு, தற்போது புதிதாக இஸ்ரேல்/யூதர் மீது காண்டு எனப் பல காரணங்கள்.
    2 points
  9. வவுனியாவில் இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக வழமையாக குடியரசுகட்சி பலமாக உள்ள ரெக்ராஸ், புளோறிடா, அலபாமா, மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் ரம்ப்ஃ செல்வாக்கு பாரியளவில் சரிந்து கமலா ஹரிஸுக்கான ஆதரவு அலை வீசிவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
    2 points
  10. இன்று ஒரு தகவல் (104). 🌺🌿.. மீண்டும் ஈஷாவுக்கு நேர்மையான தீர்ப்பை வழங்கி இயங்க விட்ட உச்சநீதிமன்றம்.🙏 ஆம் இந்தத் தீர்ப்புக்காகத்தான் சில தகவல்களை தரக் காத்திருந்தேன்.😊 என்னைப் பொறுத்தவரை மிகக் கேவலமான விடயம் என்னவென்றால்...... பொய் வதந்திகளுக்கு விடை கூறிக் கொண்டிருப்பதுதான். ஆனாலும் பல நல்ல விடயங்களை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம் என்ற மகிழ்ச்சி.🥰 அடிக்கடி ஒரே பிரச்சனையை மீண்டும் மீண்டும் எழுப்பி ஈஷாவின் சந்நியாசிகள் இருவரை நீதிமன்றுக்கு இழுத்து, பொலிசார் மூலம் அடாவடித்தனமான நடவடிக்கை எடுத்த சென்னை உயர் நீதிமன்றை கண்டித்து, தடை விதித்து இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ( நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது) மாண்புமிகு சந்திர சூட் ( Chandrachud) அவர்கள் 18/10/2024 அன்று வழக்கை முடித்து வைத்து சிறப்பான தீர்ப்பை ஈஷாவுக்கு வழங்கினர்.👏 எனது நெருங்கிய நண்பர் கோயமுத்தூரில் இருந்து ஒரு தகவலைத் தந்தார்..... ஏன் ஈஷாவை தொடர்ந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு. அவர் ஒரு உயரிய அரச நிர்வாகத்தில் இருப்பவர். நேரே வாருங்கள் அருந்தா உண்மைகளை நானே கூட்டிச் சென்று காட்டுகிறேன் என்றார்.....! அவர் தந்த தகவல் உங்களுக்காக👇 ஒற்றை மனிதன் (சற்குரு)ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் கதற விட்டுட்டு இருக்காரு'னா அதுக்கு இதுதான் காரணம். 😁☝️ 🍁ஈஷா யோக மையம் சுற்றி மிஷனரியின் மதமாற்ற பருப்பு வேகவில்லை. (முன்னர் அந்த ஏரியாவே மதமாற்றம் செய்யப் பட்டது. சற்குரு வந்த பின் முற்றாக நின்று விட்டது.) 🍁சத்குருவின் உதவியினால் ஈஷா யோக மையம் சுற்றி உள்ள கிராமங்களுக்கு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு,தொழில் வாய்ப்பு, விவசாய வாய்ப்பு, இலவச கல்வி,இலவச மருத்துவம் கிடைப்பதனால் மிஷனரியின் பண பலம் தூள் தூளாகி விட்டது. 🍁ஈஷா யோக மையம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காலை ஆறு மணிக்கு வேலைக்கு வருகிறார்கள்,மாலை எட்டு மணிக்கு வேலையை முடித்து செல்கிறார்கள். போதைக்கு அடிமையாகாமல் தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள். 🍁அந்த இளைஞர்கள் அனைவருக்கும் நல்வழிப்பாதை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு குடும்ப உறவுகளை பேணிப்பாதுகாக்க வகுப்புகள் நடத்தப்படுகிறது. 🍁அவர்களுக்கு இலவச மருத்துவம், கல்வி,யோகா என அனைத்தும் கிடைப்பதால் பல கிராமங்களில் வியாபாரம் இல்லாமல் டாஸ்க்மார்க் கடைகள் மூடப்பட்டு விட்டது. (அரசியல் வியாதிகளுக்கு எரியுமா எரியாதா) 🍁கிராமங்களில் காளை மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றை கசாப்பு கடைக்கு விற்காமல் அவற்றை தியானலிங்கம் டு ஆதியோகி மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் சிறு வருமானம் பெறுகிறார்கள். 🍁 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மணி நேர ஒய்வை அளித்து அந்த காளை மாட்டுக்கு சிரமம் இல்லாத வகையில் என்ஃபீல்ட் நிறுவனத்துடன் பேசி சுலபமாக இயங்கும் வண்டிகளை வடிவமைத்துள்ளது ஈஷா யோக மையம் 🍁அந்த காளைகளுக்கான உணவு,உறைவிடம்,மருத்துவம் எல்லாமே இலவசம். 🍁அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மின் மயானங்கள் அமைத்து உதவி புரிகின்றனர். இதவிட தமிழ் நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட சுடுகாடுகளை கோயில்கள் போல் பராமரித்து வருகிறனர். 🍁இயற்கை விவசாயம் ,பயிர்ச்செய்கைக்கு மக்களை ஊக்குவித்து பயிற்சி வகுப்புகள் அளிக்கிறார்கள். 🍁மரம் வளர்ப்பு திட்டங்களை,ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறார்கள். 🍁மண் வளம் காக்கும் திட்டத்தை ( Save soil ) நாடளாவிய ரீதியில் அல்ல உலகலாவிய ரீதியில் கொண்டு சென்று பல உலகத் தலைவர்களினாதரவைப் பெற்று ,அந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய எழுதலாம்... இப்போதைக்கு இது போதும்.....😁 இப்போ உங்களுக்கு புரியுதா?? அந்த எகனாமிக் காரிடாரை உடைக்க முடியாததால் இப்படி பொட்டைதனமாக திருட்டு வழக்கு போட்டு பார்க்கிறது கேவலமான அரசியல்.👍 சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நன்றி - Saravanaprasad Balasubramanian ஜி🍁 மேலும் சில தெளிவூட்டல்கள்.....👇 சந்நியாசம் என்பது இந்து , கிறீஸ்தவம், பெளத்தத்தில் பின்பற்றப்படுவது இயல்பே, யாவரும் அறிந்ததே......!❤️ ஆனால் ஈஷாவில்.....👇 வயது வராதவர்கள் சந்நியாசத்தில் சேர்க்கப்படுவதில்லை. வயது வந்தவர்கள் சந்நியாசத்தை விரும்புகிறார் என்பதற்காகவும் சேர்க்கப் படுவதில்லை.👎 4,5 வருட training இன் பின் அவர்களால் அந்த நிலைக்கு முடியும் என்ற பின்பே வீட்டாரின் அனுமதியுடன் , சந்நியாசத்துக்கு அனுமதி வழங்குகிறார்கள். சந்நியாசத்துக்கு தகுதியில்லாத வர்களுக்கு வீட்டாரிடம் அனுப்பி திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள்.👏 ஈஷாவில் உள்ள சந்நியாசிகள் அநேகர் உயர் கல்வியாளர்கள்.👍 அங்கு நூற்றுக் கணக்கான திருமணங்களை சற்குருவே நடாத்தி வைத்துள்ளார்.🙏 இந்த நடைமுறைகள் ஈஷாவுடன் தொடர்புடைய சகலருக்கும் தெரியும்.. 😊 ஆனாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, பொய்யான அவப்பெயரை ஏற்படுத்தி எப்படியாவது கிளப்பி விடுவோம் என நொந்து போன எதிராளிகள் ஒரு போதும் வெற்றி அடையப் போவது இல்லை.👎 ஏனென்றால் ஈஷாவின் எந்தவொரு செயல்பாடுகளும் எப்பொழுதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்பதில் சற்குரு மிக அவதானமாக உள்ளார். திரித்து பேசும் மீடியாக்களை என்ன வென்று சொல்வது.....!😊☝️ நல்ல நேர்மையான தகவல்களைத் தரும் என் இந்திய உறவுகளுக்கு நன்றி 🙏 காய்கும் மரத்துக்கு கல்லெறி என்பார்கள். ஆனால் இங்கு நாகைச்சுவை என்னவென்றால் காய்க்கவே விடாமல் கல்லெறியலாம் என நினைக்கிறார்கள்😁 சற்குருவுக்கு இது புதிதல்ல..... ❤️ தொடர்ந்தும் வந்திகளுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை, நல்ல விடயங்கள் நல்ல சிந்தனைகளுடன் தொடர்ந்து பயணிப்போம் உறவுகளே.... !🙏 வழக்கின் உண்மை தன்மை அறிய... https://www.youtube.com/watch?v=H9I5w06Q7sk ...
    2 points
  11. இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா By சஞ்சீவி ராஜா - பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கையில் தன் நதிக்கரைத் தோழன், திரு. சொவாழையைக் கண்டு, அவர் முன் போய் நின்றார். போருக்கு முன்பு, மொரிசோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஒரு கையில் மூங்கில் பிரம்பும், முதுகில் தகர டப்பாவுடனும் விடியற்காலையில் மீன்பிடிக்கக் கிளம்பிவிடுவார். அவர் அர்காண்தாய்க்கு ரயிலேறி கொலொம்பில் இறங்கி, நடந்தே, மறந்த் என்ற தீவை அடைவார். அந்தக் கனவு இடத்தை அடைந்தவுடன், அவர் மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவார், இருட்டாகும்வரை மீன் பிடித்துக்கொண்டிருப்பார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மொரிசோ, திரு. சொவாழையைச் சந்திப்பார், சொவாழ் குட்டையான, தடித்த, வேடிக்கையான மனிதர். அவர் “நோத்ர் தாம் லொரத்” என்ற தெருவில் வாழ்ந்துவந்தார். அவரும் மீன் பிடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்கள் இருவரும், அடிக்கடி, அரை நாள் பொழுதை, பக்கத்து பக்கத்தில், கையில் தூண்டிலுடன், கால்களை ஆற்றின் மேல் தொங்கவிட்டுக் கழிப்பர். இவ்வாறு, அவர்கள் இருவரும் அவர்களின் நட்பை வளர்த்திருந்தனர். ஒன்றாகக் கழித்த பொழுதுகளில், சில சமயங்களில், அவர்கள் பேசிக் கொண்டதே இல்லை. ஆனால், சில சமயங்களில் அரட்டையடித்தே நேரத்தைக் கழிப்பர். அவர்கள் இருவரும் தங்களைப்பற்றி வார்த்தைகளால் பகிர்ந்துகொள்ளாமலே ஒருவர் மற்றவரை நன்கு புரிந்துவைத்திருந்தனர், அவர்களின் ரசனைகளும், உணர்வுகளும் நன்றாக ஒத்துப்போயின. ஒரு வசந்தகாலத்தின் காலையில், பத்து மணியளவில், இளஞ்சூரியன் அமைதியான ஆற்றின் மேல் ஏறி, மூடுபனியை நீரோடையோடு நகர்த்தி, உற்சாகமான இரண்டு மீனவர்களின் முதுகில், பருவகாலத்தின் கதகதப்பைப் படரச்செய்தது, மொரிசோ சில சமயங்களில் தன் நண்பனிடம், “அட! எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று கூறுகையில், சொவாழும், “உண்மைதான், இதைவிட இதமானதொன்று எனக்குத் தெரியாது” என்பார். இதுவே அவர்களின் புரிதல் மற்றும் ஒத்த ரசனைகளுக்கான சான்று. இலையுதிர் காலத்தின், அந்திப்பொழுதில், அணையும் சூரியன் ஆகாயத்தை இரத்தக்கறையாக்கி, செந்நிற மேக பிம்பங்களை நீரின் மேல் வீசி, நதி முழுவதையும் அடர் சிவப்பாக்கி, கீழ் வானத்தைப் பற்றவைத்து, இரு நண்பர்களையும் நெருப்பாகச் சிவக்கச்செய்து, ஏற்கனவே சிவந்திருந்த மரங்களுக்குப் பொன்முலாம் பூசிக்கொண்டிருந்த வேளையில், குளிர்கால சிலிர்ப்பின் அசைவுடன், திரு. சொவாழ் புன்னகையோடு மொரிசோவைப் பார்த்து, “அட! என்ன ஒரு ரம்மியமான காட்சி!” என்றார், அதற்கு மொரிசோவும் ஆச்சரியதொனியில், தன் மிதவையிலிருந்து கண்களை அகற்றாமல், “மரங்கள் நிறைந்த அகன்ற பாதைகளைவிடச் சிறப்பாக இருக்கிறதல்லவா?” என்றார். மொரிசோவும் சொவாழும் தங்களைப் பார்த்துக்கொண்டவுடன், உற்சாகமாகக் கைகுலுக்கிக்கொண்டனர், முற்றிலும் கடினமான சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொண்டதில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். திரு. சொவாழ், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, “என்னவெல்லாமோ நடக்கிறது !” என்று முணுமுணுத்தார். மொரிசோவும் மிகுந்த வருத்தத்துடன், “எல்லாம் நேரம் ! இன்றுதான் ஆண்டின் முதல் அழகான நாள் போல் இருக்கிறது.” என்று புலம்பினார். உண்மையில், வானம் முழுவதும் நீலமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருந்தது. அவர்கள் நினைவுகளோடும், சோகத்தோடும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தார்கள். மொரிசோ மீண்டும், “ம்ம்ம், மீன் பிடித்தல்? என்ன அழகான நினைவுகள்!” என்றார். திரு.சொவாழ் அவரிடம், “நாம் மீண்டும் எப்போது அங்கு செல்வோம்?” என்று கேட்டார். அவர்கள் இருவரும் சிறிய மதுக்கூடத்திற்குள் நுழைந்து ஒரு அப்சிந்தை குடித்தனர், பின் அவர்கள் மீண்டும் ஒன்றாக நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள். மொரிசோ திடீரென்று நடப்பதை நிறுத்தி: “இன்னொன்று குடிக்கலாமா?” என்றார். அதற்கு திரு.சொவாழும், “உங்கள் விருப்பம்” என்று இசைந்தார். அவர்கள் இன்னொரு மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். அவர்களின் காலி வயிற்றை மதுபானம் நிரப்பியதால், இருவரும் மிகவும் மயங்கிய நிலையிலிருந்தனர். மிதமான வானிலை நிலவியது. மெல்லிய தென்றல் அவர்களின் முகத்தை வருடியது. வெதுவெதுப்பான காற்று திரு. சொவாழையை முழு போதையில் ஆழ்த்தியது, அவர் சட்டென்று, “நாம் அங்கு சென்றால் என்ன ?” – எங்கே? – மீன்பிடிக்கத்தான். – ஆனால் எந்த இடத்திற்கு? – பிரெஞ்சு புறக்காவல் படையின் முகாம் கொலொம்பிற்கு பக்கத்தில் தான் உள்ளது. எனக்கு கர்னல் தியுமுலீனை தெரியும்; நாம் எளிதில் தாண்டிச் செல்ல அனுமதி கிடைத்துவிடும். மொரிசோ ஆர்வத்தில் பதறினார், “கண்டிப்பாக வருகிறேன்,” பின் அவர்கள் இருவரும் தங்களுடைய பொருட்களை எடுத்துவரப் புறப்பட்டார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இருவரும் ஒன்றாக நெடுஞ்சாலையில் நடந்து, கர்னல் இருந்த இடத்தை வந்தடைந்தனர். அவர், அவர்களின் கோரிக்கையைக் கேட்டுச் சிரித்து, அவர்களின் நப்பாசைக்கு அனுமதி அளித்த பின், அனுமதிச் சீட்டோடு இருவரும் நடக்க ஆரம்பித்தனர். விரைவிலேயே அவர்கள் முகாமைத் தாண்டி, கைவிடப்பட்ட கொலொம்பை கடந்து, சேன் நதியை நோக்கி இறங்கும் திராட்சைத் தோட்டத்தின் விளிம்பை அடைந்தபோது, மணி பதினொன்று இருக்கும். அதன் எதிரே, அர்கெண்ட்டெயில் என்ற கிராமம், மயானம் போல் காட்சியளித்தது. ஒரிஜெமோன் மற்றும் சண்ணுவாஸின் உயர்ந்த தோற்றம் நாட்டையே ஆக்கிரமிப்பதுபோல் இருந்தது. நாந்தேர் வரை நீண்டிருந்த பெரும் சமவெளி, ஒன்றுமில்லா செர்ரி மரங்களாலும், காய்ந்த பூமியாலும் மொட்டையாகவும், வெறுமையாகவும் இருந்தது. திரு.சொவாழ், தன் விரலால் மலை உச்சியைக் காட்டி, “பிரஷியர்கள் அதன் மேல் தான் இருக்கிறார்கள்” என்று முணுமுணுத்தார். அந்த பாலைவன ஊரின் முன் ஒரு விதமான கவலை இரண்டு நண்பர்களையும் முடக்கியது. “பிரஷியர்கள்!”, அவர்களை அங்குப் பார்த்ததுகூட இல்லை, ஆனால் இந்தக் கண்ணுக்குத் தெரியாத, அதீத பலம் கொண்டவர்கள், ஒரு மாத காலமாக, பாரிஸைச் சுற்றி, பிரான்சின் அழிவிலும், கொள்ளையிலும், கொலையிலும், பசியிலும் உணரப்பட்டார்கள். மேலும், இந்தக் கண்ணுக்குத் தெரியாத, வெற்றி வீரர்கள் மேல், வெறுப்போடு சேர்ந்து ஒரு குருட்டுப்பயமும் பற்றிக்கொண்டது. மொரிசோ திக்கியவாறு, “ஒருவேளை! நாம் அவர்களைச் சந்தித்துவிட்டால் ?” சொவாழ் எல்லா சோகத்தையும் மீறி, பாரிசிய கேலியோடு, “சந்தித்தால்! நாம் அவர்களுக்கு வறுத்த மீன்களைக் கொடுக்கலாம்” என்று பதிலளித்தார். ஆனால் அவர்கள், அடிவானத்தின் அமைதியால் பயமுறுத்தப்பட்டு, ஊருக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்கினார்கள். ஒருவழியாக, சொவாழ், “போகலாம் வாருங்கள், ஆனால் நாம் கவனமாக இருக்கவேண்டும்” என்றார். பின், அவர்கள் திராட்சைத் தோட்டத்தில் இறங்கி, தரையோடு ஊர்ந்து, இலைகளால் தங்களை மறைத்து, திறந்த கண்களுடனும், தீட்டிய காதுகளுடனும் தொடர்ந்தார்கள். அவர்கள் நதிக்கரையை அடைய இன்னும் ஒரு துண்டு நிலத்தைக் கடக்கவேண்டியிருந்த நிலையில் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள், அவர்கள் கரையை அடைந்தவுடன், நாணல்களால் தங்களை மறைத்துக்கொண்டார்கள். மொரிசோ தன் காதுகளை நிலத்தில் வைத்து, தங்களைச் சுற்றி யாராவது நடமாடிக் கொண்டிருக்கிறார்களா என்று சோதித்தார் . அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நம்பிக்கை வந்தவுடன் மீன் பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எதிரில், கைவிடப்பட்டிருந்த மறெந்த் என்ற தீவு அவர்களை மறைத்திருந்தது. அங்கிருந்த சிறிய உணவு விடுதியும் மூடப்பட்டு, பார்ப்பதற்கு, பல வருடங்கள் திறக்கப்படாமல் இருந்தது போல் தோன்றியது. சொவாழ் முதல் இரையை எடுத்தார், மொரிசோ இரண்டாவதைப் பிடித்தார், ஒவ்வொரு முறையும் அவர்கள் தூண்டிலைத் தூக்குகையில், அதன் முனையில் ஒரு முட்டாள் கெண்டை மீன் மாட்டித் துடித்தது,“உண்மையிலேயே அது ஒரு அற்புதமான மீன் வேட்டை.” அவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை நேர்த்தியாக, இறுக்கமாகப் பின்னப்பட்ட வலையில் இடும்பொழுது, அவை, அவர்களின் பாதங்களை நனைத்தது. அது அவர்களுக்கு ஒரு உண்மையான சந்தோஷத்தைக் கொடுத்தது, அந்த மகிழ்ச்சியை நீங்கள் நீண்ட காலமாக இழந்து மீண்டும் அனுபவிக்கும்போதுதான் தெரியும். கதிரவன், தன் வெப்பத்தை அவர்களின் தோள்களுக்கிடையில் பாய்ச்சிக்கொண்டிருந்தான்; அவர்களால் வேறு எதையும் கேட்கவும், யோசிக்கவும் முடியவில்லை; அவர்கள் உலகத்தைப் பொருட்படுத்தாமல், ஆழ்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, திடீரென நிலத்துக்கடியிலிருந்து வந்ததுபோல் தோன்றிய பெரும் சத்தம் பூமியை உலுக்கியது. பீரங்கி மீண்டும் வெடித்தது. மொரிசோ, தன் தலையை இடப்பக்கம் திருப்பி, கரையைத் தாண்டிப் பார்த்தபோது, சற்று முன் வெடித்த வெடியின் புகை ஒரு வெள்ளை கொக்கைப் போல், வலேரின் மலையின் பெரிய புறவடிவத்திற்குமுன் இருந்தது. மீண்டும் உடனடியாக, இரண்டாவது புகை மண்டலம் கோட்டையின் உச்சியிலிருந்து கிளம்பியது; சிலநொடிகளுக்குப் பிறகு திரும்ப படாரென குண்டு வெடித்தது. மற்ற குண்டுகளும் தொடர்ந்து வெடித்தபோது, அந்த மலை நொடிக்கு நொடி இரைத்த மரண மூச்சு, மெதுவாக, அமைதியாய் இருந்த வானத்தில் எழுந்து, மலைக்குமேல் புகைமேகத்தை உருவாக்கியது. திரு.சொவாழ் தன் தோள்களை உயர்த்தி, “மீண்டும் தொடங்கிவிட்டது” என்று கூறினார். மொரிசோ, தன் மிதவையின் இறகுகள் மூழ்குவதைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின், அங்கு சண்டைபோடும் வெறிபிடித்தவர்களுக்கு எதிராக ஒரு சாதுவான மனிதனின் கோபத்துடன், “தங்களையே இப்படிச் சாகடித்துக்கொள்ளும் இவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்” என்று புலம்பினார். திரு.சொவாழ், “இவர்கள் மிருகங்களைவிட மோசமானவர்கள்” என்றார். ஒரு சிறிய மீனைப் பிடித்திருந்த மொரிசோ, “அரசாங்கங்கள் இருக்கும் வரைக்கும் இப்படிதான் இருக்கும்” என்றார் . திரு.சொவாழ் அவரை, “குடியரசு போரை அறிவித்திருக்காது…” என்று தடுத்தார். மொரிசோ அவரைக் குறுக்கிட்டு, “அரசர்களால் நாட்டிற்கு வெளியில்தான் போர், ஆனால் குடியரசில் நாட்டிற்குள்ளேயே போர்” என்றார். பொறுமையாக அவர்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். அரசியலின் பெரிய முடிச்சுகளை ஒரு சாதாரண மனிதனின் அறிவார்ந்த, வரையறுக்கப்பட்ட சரியான காரணங்களைக்கொண்டு அவிழ்த்தனர், தாங்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்கப்போவதில்லை என்ற கருத்தில் ஒன்றுபட்டனர். வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது, குண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் வீடுகளைச் சிதைத்து, வாழ்க்கையை நசுக்கி, உயிர்களை அழித்து, பல கனவுகளுக்கும், காத்திருக்கும் சந்தோஷங்களுக்கும், எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, மனைவிகள், மகள்கள் மற்றும் அன்னைமார்களின் இதயங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும் முடிவற்ற துயரத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. “இவ்வளவு தான் வாழ்க்கை” என்றார் திரு.சொவாழ். மொரிசோ சிரித்துக்கொண்டே “இவ்வளவு தான் மரணம் என்று சொல்லுங்கள்” என்றார். அவர்களுக்குப் பின் யாரோ வரும் சத்தம் கேட்டுத், திடுக்கிட்டுத் திரும்புகையில், அவர்களின் தோள்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, தாடியுடன் நான்கு பெரிய உருவம் கொண்ட ஆட்கள், விநியோக ஊழியர்களைப் போன்ற உடையும், தட்டையான தொப்பியும் அணிந்து, துப்பாக்கி முனையைத் தங்களின் தாடையை நோக்கி வைத்திருந்தவர்களைக் கண்டார்கள். இரு நண்பர்களின் கையிலிருந்த தூண்டில்கள் நழுவி நதியில் விழுந்தது. சில வினாடிகளிலேயே, இருவரையும் பிடித்துக்கட்டி, ஒரு படகில் வீசி, நதியைக் கடந்தனர். கைவிடப்பட்டதாக நினைத்த விடுதிக்குப் பின் இருபது ஜெர்மானியப் படைவீரர்கள் இருந்தார்கள். அங்கு, ஒரு நாற்காலியில் வித்தியாசமான கூந்தல் கொண்டிருந்த அரக்கனைப்போன்ற ஒருவர் அமர்ந்து, ஒரு பெரிய பீங்கான் புகைக்குழாயில் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் இரு நண்பர்களிடமும், சிறந்த பிரெஞ்சு மொழியில், “கனவான்களே, நன்றாக மீன் பிடித்தீர்களா?” என்று கேட்டார். ஒரு படைவீரன் மீன்கள் நிறைந்திருந்த வலைப்பையை பத்திரமாகக் கொண்டுவந்து, அதிகாரியின் காலடியில் வைத்தான். அதிகாரி சிரித்தபடியே, “அட! பரவாயில்லையே ! மீன்பிடி ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், இதன் பின்னால் வேறேதோ இருப்பதுபோல் தோன்றுகிறதே. நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டால், நீங்கள் சிரமப்படத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் என்னை நோட்டமிட வந்த உளவாளிகள், உங்களைக் கொண்டுசென்று, குண்டுகளுக்கு இரையாக்கிவிடுவேன். உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த, மீன் பிடிப்பதுபோல் நடித்துள்ளீர்கள். உங்கள் துரதிர்ஷ்டம், என் கைகளில் சிக்கிக்கொண்டீர்கள், என்ன செய்வது, அதுதான் போர். நீங்கள் புறக்காவலைத் தாண்டி வந்துள்ளீர்கள், அதைத்தாண்ட உங்களிடம் கண்டிப்பாக அடையாள வார்த்தை இருக்கும், அதை என்னிடம் சொல்லிவிட்டால் நான் உங்களை மன்னித்துவிடுகிறேன்.” என்றார், பதட்டத்துடன் இரு நண்பர்களும், இரத்தப்பசையற்று, கைகள் லேசாக நடுங்கிய நிலையில் எதுவும் பேசாமலிருந்தனர். அதிகாரி மீண்டும், “இது யாருக்கும் தெரியப்போவதில்லை, நீங்கள் பத்திரமாகத் திரும்பிச்செல்லலாம். இது ரகசியமாகவே இருக்கும். ஆனால், நீங்கள் மறுத்தால் மரணம்தான். சீக்கிரம் முடிவெடுங்கள்.” என்று அவர்களிடம் கூறினார். அவர்களோ அசைவின்றி வாயைத் திறக்காமல் அப்படியே இருந்தனர். பிரஷியன், மிகவும் அமைதியாக, நதியை நோக்கி கையை நீட்டி, “இன்னும் ஐந்து நிமிடங்களில் இந்த நீரின் அடியில் இருப்பீர்கள் என்பது நினைவிருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் தான்! உங்களுக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்கள் தானே?” என்று மீண்டும் கூறினார். வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்தது. இரு மீனவர்களும் அமைதியாக நின்றுகொண்டேயிருந்தார்கள். அந்த ஜெர்மானியன் தனது மொழியில் உத்தரவுகளைப் பிறப்பித்தான். பிறகு, அவன் கைதிகளின் அருகில் இல்லாதவாறு, தனது நாற்காலியை வேறு இடத்திற்கு மாற்றினான்; ஒரு டஜன் படைவீரர்கள், இருபது அடிகள் முன்னகர்ந்து, துப்பாக்கியைக் காலுக்கருகில் வைத்தனர். அதிகாரி மீண்டும், “உங்களுக்குக் கடைசியாக ஒரு நிமிடம் தருகிறேன், அதற்குமேல் இரண்டு வினாடிகூட தாண்டமாட்டீர்கள்.” என்றார். பின் அவர் திடீரென்று எழுந்து, அந்த இரண்டு பிரெஞ்சுக்காரர்களின் அருகில் சென்று, மோரிசோவை கையால் பிடித்து, தூரமாக இழுத்துக்கொண்டுபோய், தாழ்ந்த குரலில், “சீக்கிரம், அந்த அடையாளச்சொற்களை சொல்கிறாயா? இல்லையா? உனது கூட்டாளிக்கு ஒன்றும் தெரியப்போவது இல்லை, நானும் உங்களை மன்னித்துவிடுவேன்.” என்றார். மொரிசோ ஒன்றும் சொல்லவில்லை. பிரஷிய அதிகாரி திரு. சொவாழையும் இழுத்துக்கொண்டுபோய், அதே கேள்வியைக் கேட்டார். திரு.சொவாழும் எதுவும் சொல்லவில்லை. பின், அவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் வந்து சேர்ந்தனர். பொறுமையிழந்த அதிகாரி, தன் கட்டளையைப் பிறப்பித்தார். படைவீரர்கள் அவர்களது துப்பாக்கியை உயர்த்தினார்கள். அப்போது, மொரிசோவின் பார்வை, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி, புல்வெளியின் மேலிருந்த பையில் நிறைந்திருந்த இரை மீன்கள் மேல் விழுந்தது. சூரியக்கதிர்கள், தத்தளித்துக்கொண்டிருந்த மீன்களை இன்னும் மின்னச்செய்தது. தளர்வு அவரை ஆட்கொண்டது, அவர் எவ்வளவு முயன்றும், கண்ணீர் அவர் கண்களை நிறைத்தது. அவர் திக்கியவாறு, “விடைபெறுகிறேன் திரு. சொவாழ்” என்றார். திரு. சொவாழும், “நானும் விடைபெறுகிறேன்” என்றார். எதிர்கொள்ளமுடியாத பயத்தால் தலை முதல் கால் வரை நடுங்கிய இருவரும் கைகுலுக்கிக்கொண்டார்கள். அதிகாரி, “சுடுங்கள்” என்று கத்தினார். பன்னிரண்டு குண்டுகளும் ஒன்றாய் வெடித்தன. திரு.சொவாழ், தன் மூக்கு தரையில் படும்படி விழுந்தார். உயரமான மொரிசோவோ, ஊசலாடி, சுழன்று, தன் நண்பனைத் தாண்டி, முகம் வானத்தைப் பார்த்தபடி விழுந்தவுடன், அவரின் சட்டையைப் பிய்த்துக்கொண்டு நெஞ்சிலிருந்து ரத்தம் வெளியேறியது. ஜெர்மானியன் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தான். வீரர்கள் விரைந்து சென்று, கற்கள் மற்றும் கயிற்றோடு திரும்பிவந்து, இரண்டு பிணத்தின் கால்களையும் கல்லோடு சேர்த்துக் கட்டி, தூக்கிச்சென்றனர். வலேரின் மலை ஓயாமல் உறுமிக்கொண்டிருந்த நிலையில், இப்போது அது புகையால் புதைக்கப்பட்டிருந்தது. இரண்டு வீரர்கள் மொரிசோவின் தலை மற்றும் கால்களைத் தூக்கினர், அதேபோல் சொவாழையும் தூக்கினர். இரண்டு உடல்களையும் ஒரு கனம் வேகமாக ஊசலாட்டித் தூக்கியெறிந்தபோது, முதலில் கற்கள் கால்களைச் செங்குத்தாக மூழ்கச் செய்து, நதியில் சிற்றலைகளை உண்டாக்கியது. சிறிய அலைகள் கரையைத் தொடும்போது நீர் தெறித்து, நுரை தள்ளி, சுழன்று, சலனமற்றுப் போனது. கொஞ்சம் இரத்தமும் மிதந்து கொண்டிருந்தது. அதிகாரி, பொறுமையாக, மென்மையான குரலில், “இப்போது மீன்கள் சாப்பிடும் நேரம்” என்று சொல்லி, கைவிடப்பட்ட விடுதியை நோக்கி நடக்கையில், அவரின் பார்வை புற்களில் கிடந்த, இரை மீன்கள் நிறைந்த வலைப்பையின் மேல் விழுந்தது. அவர் அவற்றை எடுத்து, ஆராய்ந்து, பின் சிரிப்புடன், “வில்லியம்” என்று ஜெர்மானிய மொழியில் கத்தினார். வெள்ளை உடையணிந்த படைவீரன் ஒருவன் ஓடிவந்தான். அந்த பிரஷிய அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட இரு நண்பர்கள் பிடித்த மீன்களை அவனிடம் தூக்கிப்போட்டு, “மீன்களை உடனடியாக வறுத்துக்கொண்டுவா, இவற்றிற்கு உயிர் இருக்கும்போதே சாப்பிட்டால், மிகுந்த சுவையுடன் இருக்கும்” என்றார். பின் அவர் மீண்டும் புகைக்க ஆரம்பித்தார் https://kanali.in/irandu-nanbargal/
    2 points
  12. அன்று இரவு எவருக்குமே தூக்கம் வரவில்லை. இந்தியப் பிரதமரும், சிதிலங்கா ஜனாதிபதியும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்..... வீம்பு காட்டிய சிறிலங்கா இந்தியாவுக்கு பணிந்தது. அரசியலில் கிழட்டு நரி என்று பெயர் பெற்ற ஜே. ஆரின் தந்திரம் எதுவும் இந்தியாவிடம் பலிக்கவில்லை. கடைசியில் ‘தமிழருக்கு பாதுகாப்பளிக்க’ இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் காலடி வைத்துவிட்டது கொழும்புக்கும், பலாலிக்குமாக இரவிரவாக விமானங்கள் பறந்து கொண்டே இருந்தன. என் சிந்தனையில், "எம். ஜி.ஆர் வாளோடு கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்த கதை, சேது அணை நிரவும் அண்ணாவின் பேச்சு எல்லாம் வந்தன, அவையெல்லாம் நனவாகிவிட்டது போன்ற ஒரு நம்பிக்கை பங்களாதேஷுக்கு விடு தலை பெற்றுத்தந்தது போன்ற பாணியில் ஈழத் தமிழருக்கு இந்தியா விடுதலை பெற்றுத் தரப் போகிறது என்ற மகிழ்ச்சி. நல்ல காலம்! என் கணவரின் ஆலோசனையை ஏற்று நான் கொழும்புக்குச் சென்றிருந்தால் ..! இந்தக் காட்சிகளை எல்லாம் கண்டிருக்க முடியுமா..... ? இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெள்ளையரின் இராணுவங்களையும் அவர்களோடு வந்த காப்பிலிகளை (நீக்ரோ)யும் பற்றி எனது பாட்டி இப்பொழுதும் கதை கதையாய் சொல்லும் போது, அவர்கள் எல்லாம் அந்த யுத்த காலத்தின் சாட்சிகள் என்று ஆர்வத்தோடு பார்ப்போம். எங்களது பேர மக்களின் காலத்தில் இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் பெருமையோடு சொல்வதற்குரிய கண்கண்ட சாட்சிகள் நாங்கள் தானே ...! இந்திய இராணுவம் இங்கு வந்ததும் இலங்கை இராணு வத்தின் கொட்டம் அடங்கி விட்டது இதில் இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால் 'புலிக் கொடி 'யை தங்களின் வாகனங்களில் கட்டிக்கொண்டு இந்திய இராணுவம் திரிந்தமைதான். இந்தக் காட்சிகள்யாவும் சிறீலங்கா படையினருக்கு புண்ணிலே புளியைப் பிழிந்து விட்டது போன்று மன எரிவைக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உண்மை. எங்கும் 'இந்திய அமைதிப்படையின் மயமாக இருந்தது. நாங்கள் போய் வந்திராத மூலைமுடுக்குகள் - சந்து பொந்துகளில் எல்லாம் அமைதிப்படை வீரர்கள் நுழைந்து வந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது உறவினர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு.. அவர்களோடு பேசும் போது உறவினருடன் பேசுவது போன்ற ஒரு கனிவு! கவச வாகனங்களிலும் ஜீப் வண்டிகளிலும் அவர்கள் வீதிகளில் செல்லும் போது பெரியவர்களும் சிறியவர்களும் ஏன் சிறுமிகள் கூட நட்போடு கையசைத்துச் சிரிப்பார்கள். அவர்கள் கூட அப்படியே. ஒரு நாள் சுதுமலைக்கு ஜீப் வண்டிகள் - கவச வாகனங்கள் சங்கிலிச் சக்கரங்கள் கொண்ட டாங்கிகள் அணி வகுத்துச் சென்று, திரும்பும் வரையில் வழிநெடுக மக்கள் நின்று கையசைத்து ஆர்ப்பரித்தார்கள். அவர்களும் அப்படியே! அன்று மிஸிஸ் சிவபாதமும் பிள்ளைகளும் அவர்கள் வெளிவாசலுக்கே வந்து நின்று, கையசைத்து மகிழ்ந்த காட்சி..... இன்னும் என் கண்களுக்குள் நிற்கின்றது. அமைதிப்படையின் வரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் கலகலப்பாகி விட்டது. நாங்கள்கூட, மீண்டும் கே.கே.எஸ். இற்கு திரும்புவதென்று தீர்மானித்துவிட்டோம். மீண்டும் அதே வீட்டில் சென்று குடியமர்ந்தோம். அந்தப் பரந்த காணியும் - காணி நிறைந்த மாஞ்சோலையும்- நன்னீர்க் கிணறும் எம்மை வரவேற்று புது வாழ்வு கொடுத்தன. சிறீலங்கா இராணுவம் வருகிறது என்ற செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே காத தூரம் ஓடி ஒளியும் நானும் பிள்ளைகளும் அமைதிப்படை வீரர்களோடு நட்புரிமையோடு பழகினோம். அவர்களது புரியாத மொழியை புரிந்துகொள்ள - புரியவைக்க மேற்கொள்ளும் அபிநயங்களும் அவர்களுக்கு எப்படிக் கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளாத நிலையில், அலுப்புற்றுத் தமிழில் அவர்களை நாங்கள் திட்ட, அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்கும் சம்பவங்களும் எம்மிடையே நிகழும் நகைச்சுவை நாடகங்களாகும். யாழ்ப்பாணத்தில் என்ன, சுன்னாகத்தில் என்ன, கே.கே.எஸ் இல் என்ன கடை வீதிகளில் எல்லாம் அமைதிப் படையினர் ... ! இவர்கள் கடைகளில் நுழைந்தால் கடைக்காரர்களும், இவர்களும் ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளில் பேரம் பேசுவதிலேயே மணித்தியாலங்கள் கழியும். எம்மைப் போன்றவர்களை வரவேற்று, வியாபாரம் செய்வதற்கு எமது கடைக்காரர்களால் முடியாதிருக்கும். வீதி ரோந்து வரும்போது இருவர் இருவராக வருவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் பீடி பற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது அந்தச் செய்கை கூட விசித்திரமாகத்தான் தோன்றியது. எங்கள் வீட்டைத்தாண்டி வீதியால் போகும் எல்லா அமைதிப்படை வீரர்களுக்கும் எங்கள் மா மரங்களின் மேல் ஒரு கண். சிலவேளை எங்கள் அனுமதியுடனும் பல வேளைகளில் அனுமதி இல்லாமல் உரிமையுடனும் மாங்காய்களைப் பறித்து உண்பதுண்டு. அவர்களது அந்தச் செய்கை எமக்கு ஆத்திரம் ஊட்டுவதற்குப் பதிலாக அவர்கள் மீது ஒருவித இரக்க உணர்வையே தோற்றுவிக்கும். எங்களுக்காக தங்கள் தாய் நாட்டையும், மனைவி, மக்கள், உறவுகளையும் துறந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து இங்கு வந்திருக்கும் அவர்களுக்குக் கொடுப்பதில் நாம் என்ன குறைந்தா விடுவோம் என்று நினைப்பதுண்டு. இன்னும் ஒருபடி மேலாக அவர்கள் எங்கள் வீடுகளில் இப்படி நடந்துகொள்வது பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வது கூட உண்டு. அவர்களில் ஒருவன் அடிக்கடி அவ் வீதியால் வருபவன். அவன் அடிக்கடி வருவதால் அவன் முகம் பரிச்சயமாகி விட்டது. ஏன்......? எங்களுக்குள் ஒருவித நட்புக் கூட உதயமாகி விட்டது. அவன் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவனாம். ஏதோ ஒரு சர்மா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனுக்கு குஜராத்தி தாய் மொழியாய் இருந்தும் கூட, நன்கு தமிழில் பேசினான். ஆனால். தூய தமிழ் நாட்டு உச்சரிப்பல்ல.மலையாளம் கலந்த தமிழ். அவன் வரும் போதெல்லாம் என்னுடன் - பிள்ளைகளுடன் - பாட்டியுடன் சிறிது நேரம் ஏதாவது பேசிவிட்டு, கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டோ அல்லது, மாங்காய்கள் பறித்துக்கொண்டோ தான் செல்வான். ஒருமுறை அவனோடு வந்த இன்னொருவன் கிணற்றிலே தண்ணீர் அள்ளிச் சரித்துக் குடித்து விட்டு மீதித் தண்ணீரை, வாளியோடு சரித்து மீண்டும் கிணற்றினுள்ளேயே ஊற்றிய போது, அவன் செய்கை விசித்திரமாகவும் ஒரு வகையில் அருவருப்பாகவும் இருந்தது. அவனது அந்தச் செய்கையைச் சர்மாவிடம் சுட்டிக் காட்டினேன். அவன் ஏதோவொரு மொழியில் அவனுடன் பேசினான். அவன் ஏதோ ஒரு பதில் சொன்னான். இவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் ஏதோ சொன்னான் ....! அவனும் சிரித்தான்.... பிறகு சர்மா அவனது செய்கைக்கான விளக்கம் சொன்னான். "இந்தக் கிணற்றுத் தண்ணீர் கற்கண்டு போல அருமையாக இருக்கிறதாம். இவனுடைய ஊரில் தண்ணீரே கிடைக்காதாம். தண்ணீருக்கே பல கிலோமீற்றர் போக வேண்டுமாம். அதனால், இந்த நல்ல தண்ணீரை வெளியே கொட்ட மனமில்லாமல் மீண்டும் கிணற்றுக்குள்ளேயே கொட்டியிருக்கிறான். அதுதான் நான் சொன்னேன் .... நம்ம ஊர்போல இல்லை யாழ்ப்பாணம். நீ இனி இப் படிச்செய்யாதே! தண்ணீர் எவ்வளவு எடுக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு நல்லது. புதுத் தண்ணீர் ஊறும். நீ வெளியே எடுத்த தண்ணீரை மீண்டும் கிணற்றுக்குள் கொட்டுகிறது, இங்கு அசிங்கமான செயல் என்று விளக்கம் சொன்னேன்" என்று சிரித்தபடியே கூறினான். இன்னுமொரு விடயத்தையும் கூறினான். உண்மையிலேயே, யாழ்ப்பாணத்து மக்களையும் அவர்கள் வசிக்கின்ற வீடு வாசல்களையும் பார்க்கும் போது தங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதாம்......! சாதாரண ஏழை கூட வசதியான வீடுகளில், பரந்த காணிகளில் வாழுகின்றதைப் பார்க்கும் போது இது ஒரு செல்வந்த நாடாகவே தனக்குப் படுகின்றது. இப்படிப்பட்ட - பெரிய வசதியான வீடுகளை இந்தியாவில் ஒரு கிராமத்தில் கூட ஒன்று சேர்ந்தாற்போல காண முடியாது அங்கே எல்லாம் பெரிய மாளிகை - பக்கத்தில் சேரிக் குடிசைகள். ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கும் என்று தன் மனதிலே பட்டதைக் கூறினான் .....! நாளடைவில் அவன் மட்டில் எமக்கிருந்த பயம் அறவே நீங்கிவிட்டது. எதையும் துணிந்து கேட்கலாம் என்ற அளவிற்கு நட்பு வளர்ந்து விட்டது இந்திய அமைதிப்படை வந்த நாள் முதல், எங்கள் வைத்தியசாலையில் உள்ள விசயம் தெரிந்தவர்கள் சிலர் பேசிக்கொண்டவை என் காதுகளில் விழுந்தன அது பற்றி 'என்றாவது ஒரு நாள் அவனிடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும்' என நான் நினைத்தேன் "இந்தியா, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, தமிழர்கள் மீதுள்ள அன்பினாலோ, தமிழர் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கரிசனையினாலோ அல்ல. தமிழர் போராட்டங்களை அடக்கு வதற்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, சிறீலங்கா அரசின் அனுமதியுடன் - இந்தியாவின் எதிரி நாடுகளில் ஏதாவது ஒன்று இலங்கைக்குள் காலடியெடுத்து வைத்துவிட்டால் அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடும் என்பதற்காகத் தான். உதாரணமாக, பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது அமெரிக்காவோ இஸ்ரேலோ ஏதாவது ஒன்று இங்கு தளம் அமைத்து விட்டால் அது இந்தியாவிற்கு ஆபத்தாகி விடும் என்பதனால் அந்த நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான், தமிழர்களுக்கு உதவி செய்வதாக வலிந்து வந்து உள் நுழைந்துள்ளார்கள் ..... ! " என்ற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு என்பதை அவன் வாயினால் அறிய விரும்பினேன். அதைக் கேட்டும் விட்டேன். நான் சொன்னதைக் கேட்டு, அவன் இதழ்களில் ஒரு வித சிரிப்பு மலர்ந்தது. “யாழ்ப்பாணத்து ஆளுங்கள் ரொம்ப படிச்சவங்க. இப்படியெல்லாம் சிந்திக்கிறதிலை தப்பில்லை. ஆனால், இந்தியாவில இருந்து நாம புறப்பட முந்தி நம்ம ஆளுங்களுக்கெல்லாம் சொல்லப்பட்டது இது தான்... சிறீலங்காவில தமிழர்களை சிங்களவங்க கொலை பண்றாங்க - தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறாங்க. அவங்களை காப்பாற்றுகிறத்துக்காக தான் நம்ம அமைதிப்படை போகுது, அப்பிடின்னு சொல்லி அனுப்பி இருக்காங்க....!" என்றான். நான் அந்த நாளில் கேள்விப்பட்ட எம். ஜி. ஆர், அண் ணாத்துரை ஆகியோரின் விடயங்கள் மீண்டும் நனவாகி விட்ட உணர்வு எனக்குள் ! அந்த அமைதிப்படைச் சிப்பாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் சத்திய வசனங்களாகக் கொண்டேன். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அவனுடைய சொந்த மாநிலம் குஜராத். அது சத்தியத்தின் படி, சத்தியத்துக்காக வாழ்ந்து காட்டி, 'சத்திய சோதனை ' தந்த மகாத்மா பிறந்த மாநிலம். ஆகையால், அந்த மண்ணில் இருந்து வந்த இந்த சர்மாவின் வசனங்கள் கூட சத்தியமாகவே இருக்கும் என்று நம்பினேன். இன்னுமொரு நாள் அவனிடம் கேட்டேன். "ஏனப்பா எங்கடை கடைகளில் எல்லாம் உங்கடை ஆட்கள் தானே மொய்த்துக் கொண்டிருக்கிறாங்க ... ! எங்கடை ஆட்கள் இந்தியாச் சாமான்கள், சாறிகள் வாங்க உங்கடை நாட்டுக்குப் போகினம். நீங்கள் என்னடா எண்டால் எங்கட நாட்டில சாமான் சாமானாக வாங்கிக் குவிக்கிறீங்க ..." அதற்குக் கூட அவன் சிரித்துக் கொண்டு தான் பதில் சொன்னான்." நெசம் தாங்க. நம்ம நாட்டில ஓண் புறொ டெக்ஷன்ஸ்' எல்லாம் இந்தியத் தயாரிப்புகள் தான். ஆனா உங்கட நாட்டில எல்லாமே ஃபாறின் புறொடெக்ஷன்ஸ். நம்ம நாட்டில ஃபாறின் சாமானுக எல்லாம் வாங்க முடியாது • Buy Indian Be Indian' என்கிறதுதான் நம்ம பாலிசி. ஆமா, கண்ணில படக்கூடிய இடம் பூரா, ஏன் வண்டிகளில் கூட 'Buy Indian Be Indian' அதாவது, 'இந்திய உற்பத்திகளை வாங்கி இந்தியனாகவே வாழு' அப்படின்னு எழுதி வைச்சிருக்கிறாங்க....... என்று கூறி, அவன் மேலும் ஒரு வசனத்தையும் சேர்த்துக் கூறினான். "நம்ம பாலிசி Buy Indian Be Indian என்கிற மாதிரி. உங்க பாலிசி 'Belive Indian', அமாங்க இந்தியாவை -இன்டியன்சை இன்டியா உங்களுக்காக எடுக்கிற நல்ல முயற்சிகளை இலங்கைத் தமிழ் ஆளுங்க நம் பணும்.'Belive Indian' 'என்றான். " அந்த நம்பிக்கையைத் தானேயப்பா இது வரையில் நாங்க உங்க மேலே வைச்சுக் கொண்டிருக்கிறம்." என்று கூறியதற்கு அவனது பதில், 'அச்சா" என்று ஒலித்தது.
    2 points
  13. கே.கே. எஸ் இல் இனி இருக்கமுடியாது என்ற நிலைமை ஆகியிட்டது. துறைமுகத்தில் இருந்து தங்களது அரண்களை இராணுவம் விஸ்தரித்துக் கொண்டே வந்தது. அல்லாமலும் பலாலியில் இருந்து கே. கே. எஸ் வரையும் இராணுவம் ரோந்து போகும் வேளையிலே வீதிக்கரையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புறப்பட்டு வெகு தூரம் ஓடுவதும் அவர்கள் போன பின்னர் மீண்டும் வந்து வீடுகளில் இருப்பதுவும் நாளாந்த நிகழ்வாகி விட்டது. அவர்கள் வரும் வீதிகளில் போராளிகளின் கண்ணி வெடித் தாக்குதல் ஒன்றிரண்டு இடம்பெற்றால் இராணு வம் தனது ரோந்து அணியை மூன்றாகப் பிரித்து ஒரு பிரிவு வீதியால் வரவும், மற்றைய இரண்டு பிரிவுகளும் வீதிக்கரையின் இரண்டு பக்கங்களில் உள்ள வளவுகளின் ஊடாக வேலியை வெட்டியும், மதில்களை உடைத்தும் வரத்தொடங்குவர். சில வேளைகளில் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி வளைத்துக் காவல் நிற்கவும் தொடங்குவர். சில சமயம், இராணுவம் வருகிறது என்று நாம் அறிந்து வீடுகளைப் விட்டுப் புறப்படும் முன்னரே அவர்கள் அண்மித்து விடுவதால், வெளியேறப் பயந்து கதவுகளை அடித்துப் பூட்டிவிட்டுச் சாவித்துவாரங்களூடாகவும் - சன்னல் இடைவெளிகளூடாகவும் இதயம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான ஒருநாளில் எங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டு இராணுவம் நிற்கின்ற பொழுது எனது பாட் டிக்கு அடக்க முடியாத தும்மல் தொடங்கவே நாங்கள் பட்டபாடு இருக்கிறதே...! பாட்டியின் முகத்தைத் தலையணைக்குள்ளே அழுத்தி தும்மச் செய்து ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டோம். இன்னுமொருமுறை இராணுவம் அண்மித்து வந்து விட்டது என்பதை அறிந்ததும் எப்படியோ ஓடிவிட்டோம். அவர்கள் சென்றதன் பின்னர், மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதையும் றேடியோ', 'ரீ.வி' முதலான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டிருப்பதையும் கண்டோம். இந்த நிலையில் பிள்ளைகளையும் பாட்டியையும் வீட்டிலே விட்டு, நான் யாழ்ப்பாணம் வேலைக்கு வருவதும்... தங்குவதும் அந்த நாட்களில் அமைதியிழந்து ..... என் கட மையில் ஈடுபட முடியாமல் அந்தரிப்பதும் வழக்கமாகி விட்டது. "இந்தப் பிரச்சினைகள் எதற்கு......? ஓரளவு அமைதி ஏற்படும் வரையாவது என்னோடு கொழும்புக்கு வந்து இரு, பிள்ளைகளின் படிப்பும் கெடாது!" என்று எனது கணவர் எழுதும் கடிதங்களில் எல்லாம் வற்புறுத்தி கொண்டே வருகின்றார். அனைத்து விடயங்களிலும் என் கணவரோடு ஒத்துப்போகும் என்னால் இந்த விடயத்தில் மட்டும் ஒத்துப்போக முடியவில்லை. இருபத்திரண்டு வருட சேவைக் காலத்தில் பதினைந்து வருடங்கள் யாழ்ப்பாணம் தவிர்ந்த மலையகம், சிங்கள மாவட்டங்களிலும் வேலை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் அங்கு போய் வாழ்வதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.ஆனால், இப்பொழுது இந்த மண்ணி நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டமிருக்கிறதே...! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த மண்ணைவிட்டு வெளியேறுவது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலைதான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் செயன்முறைப் பயிற்சி பெறும் போதனா வைத்திய சாலை. நான் இங்கு கடமை செய்யத் தொடங்கி இந்த ஏழு வருடங்களுக்குள்ளும் எத்தனை வைத்திய மாணவர்கள் டொக்ரராகப் பட்டம் பெற்று வெளியேறிவிட்டார்கள்! அப்படி வெளியேறியவர்கள் எல்லாம் இன்று எங்கே..? இரத்த ஆறு பெருகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டியவர்கள் எங்கே ..? பட்டம் பெற்று முடித்ததும்.. இங்கு பணிபுரியப் பயந்து. இங்கு பெற்ற பட்டத்தைக் கொண்டு வெளிநாடு களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சிலர் வெளிநாடுகளுக்கே தப்பிப் பறந்து போய்விட்ட சம்பவங்களை கேள்விப்படும்போது வெட்கமாக இருக்கின்றது ! வேறு சிவர் இங்கு எம்.பி.பி. எஸ். பட்டம் பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சென்று தமது கல்விக்கும் தகைமைக்கும் பொருத்தாத கூலிகளாக வேலை செய்வதாகக் கேள்விப்படும் போது எத்துணை வேதனையாக இருக்கின்றது! "இந்த மண்ணிலே வாழ்வோம். இந்த மண்ணின் மக்களுக்கே பணிபுரிவோம்." என்ற வைராக்கியத்துடன் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் வைத்தியர்களுடன் பணிபுரிவதில் கிடைக்கும் நிறைவு இருக்கிறதே......! அதற்கு ஈடாக எதையுமே கூறிவிட முடியாது. எனது சேவை வாழ்வின் ஆரம்ப காலங்களின் பெரும்பகுதியைப் பிற இடங்களில் கழித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தக் காலத்தில் இங்கு பணியாற்றக் கிடைத்த பேறு சாதாரணமானதா.....? இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள், இந்த ஆபத்தான வேளைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியர்கள்- தாதியர்-சிற்றூழியர்களைத் தெய்வத்திற்கு அடுத்தபடியாக நன்றியுடன் நோக்கும் பார்வை இருக்கின்றதே...... ! அது ஒன்றே போதும் ....! நாம் வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்வதற்கு. இத்தகைய ஒரு சூழலில், இக்கட்டான நிலையில் ஏனையவர்களைப் போல உயிருக்கு அஞ்சி ஓடுவதை என் மனம் ஒப்பவில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது......? நிச்சயமாக நான் படித்த புத்தகங்கள் கற்பித்த பாடங்கள் இது என்று தான் நினைக்கின்றேன். "நிற்க அதற்குத் தக!'' என்ற வள்ளுவம் எனக்கு வழிகாட்டி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றது, எனவே தான்,எனது கணவரது கோரிக்கையை என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால், அவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொழும்பிலிருந்து வந்து போய் கொண்டிருக்கின்றார். ஆனால், ஒரு விடயத்திற்கு நான் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள்! திருமணம் ஆகாமலே என்னுடன் வீட்டில் தங்கியிருக்கும் இருபத்தியெட்டு வயதான தம்பி. இவர்களையும் வைத்துக்கொண்டு கே.கே.எஸ்.இல் தொடர்ந்து எப்படி இருப்பது ...... ? என்றைக்காவது ஒரு நாள் அவர்களது சுற்றிவளைப்புக்குள் இவர்கள் அகப்பட்டுக்கொண்டால் நிலைமை என்ன ஆவது......? ….. இப்படியெல்லாம் நான் பயந்து கொண்டிருந்த போது தான் ஒருநாள், அந்தப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. அன்று நாம் எதிர்பாராத வேளையில், இராணுவம் ரோந்து வந்தது. ' அமெரிக்கன் மிஷன்' பாடசாலைக்கு அண்மையில் கண்ணிவெடி ஒன்றின் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளின் பிளிறல்கள்.....! நாம் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம். இதற்கிடையில் பலாலி இராணுவ முகாமுக்குச் செய்தி கிடைத்து, ஹெலிக்கொப்ரர் ஒன்று வேட்டுகளைக் கக்கிய வண்ணம் எமக்கு மேலே பறக்கத் தொடங்கியது. எங்களோடு இன்னுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் ஒரு கையிலே இரண்டு வயது குழந்தை வேறு மறு கையிலே ஒரு சிறிய துணிப்பை. வயிற்றுச் சுமையோடு கைச்சுமையையும் சுமந்து, ஓடி வர முடியாமல் அவள் ஒரு இடத்தில் இடறி விழுந்து விட்டாள். எங்களோடு ஓடி வர முடியாமல் பாட்டி வீட்டிலேயே தங்கி விட்டார். வயதான அவரை, இராணுவம் ஒன்றும் செய்யாது என்ற அசட்டுத் துணிவில் விட்டு வந்துவிட்டோம். கீழே விழுந்த அவளையும் பிள்ளையையும் தூக்கி அழைத்துச் செல்வதற்குள் பெரும் பாடாகி மேலே சுட்டபடி பறந்து கொண்டிருக்கும் ஹெலி…. கீழே நாங்கள். என்னையும் அவளையும் விட்டு ஓடமுடியாத பிள்ளைகள். என் தம்பி கூட அன்றைய தினம் எங்களோடு இல்லை. எங்கேயோ போயிருந்தான். சுமார் ஒரு மணி நேரம் நாம் பட்டபாடும் பெற்ற அனுபவமும் போதும் என்றாகிவிட்டது. எனவேதான், இனியும் அங்கு தொடர்ந்து இருப்பது மடமை. அங்கிருந்து புறப்படுவது என்று முடிவெடுத்தோம்! நல்ல காலமாக உடுவிலில். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். அங்கே எல்லாம் இராணுவம் வரும் என்ற அச்சம் எதுவுமில்லை. மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் மகளுக்கும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மகனுக்கும் படிக்க இடங்கள் கிடைத்து விட்டன. கே. கே. எஸ். இல் இருந்து யாழ்ப்பாணம் வேலைக்குப் போவதிலும் இப்பொழுது உடுவிலில் இருந்து வேலைக்குப் போவது.... எட்டு மைல்கள் குறைவாக இருந்தது. இன்னும் இலகுவாயிருந்தது ! நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிசயம் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நிகழ்ந்தது. "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தை நாங்கள் நேரடியாகவே செய்யப் போகின்றோம்" என்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தியா, இலங்கைக் கடல் எல்லை வரை வந்து திரும்பிய சம்பவம் நடைபெற்றது. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. கடல்வழியை இலங்கைக் கடற்படை மறித்து, "இந்தியாவில் உள்ளவர்களுக்கே கொண்டு சென்று விநியோகியுங்கள்!" என்று திருப்பி அனுப்பிய செயலும், பொறுமையோடு இந்தியப் படகுகள் திரும்பிச் சென்றதும் எனக்கு வியப்பைக் கொடுத்தன. இந்தியா எத்துணை பெரிய நாடு! பெரும் வல்லரசான சீனாவையே விரட்டி அடித்த வலிமையுள்ள நாடு. கேவலம்! சிறீலங்கா சுண்டெலி அளவில் இருந்து கொண்டு அவர்களோடு வீராப்புப் பேசியிருக்கிறதே...! இந்தச் சுண்டெலிக்கு அஞ்சியது போல் இந்தியாவும் பேசாது, திரும்பிப் போயிருக்கிறதே! இதில் சிறீலங்கா தன் பலமறியாது நடந்து கொண்ட அறியாமையை நினைத்துச் சிரிப்பதா......? அல்லது மௌனமாகச் சென்ற இந்தியாவின் பெருந்தன்மையை எண்ணி வியப்பதா? என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், ‘பெருக்கத்தில் வேண்டும் பணிவு’ என்பதற்கு உதாரணமாக இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. "இந்தியா, இது விடயத்தில் இனியும் மௌனமாக இராது. பதில் நடவடிக்கை எடுத்தே தீரும்!" என்று நிச்சயமாக நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை! அன்று பகல் ஓய்வு நாள் என்பதால் வேலைக்கும் போகவில்லை. சமையல் எல்லாம் முடிந்த பின்னர், சற்றுத் தொலைவில் மருதனாமடம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இடம் பெயர்ந்து வந்திருக்கும் கே. கே. எஸ் ஐச் சேர்ந்த குடும்பம் ஒன்றைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த மிஸிஸ் சிவபாதம், ஒரு கிறீஸ்தவப் பெண், படித்த பெண். அவளுக்கு இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும். பெண் உடுவில் மகளிர் கல்லூரியில் ஜீ. சீ. ஈ. படித்துக் கொண்டிருந்தாள். மூத்த பையனும், கடைசிப் பையனும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் மட்டக்களப்பில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் வேலை. வீட்டுக்கார அன்ரியின் தாயாரும் அவர்களுடனேயே இருந்தார். படித்த பண்பான குடும்பம். பழகுவதற்கு இனியவர்கள். கே. கே. எஸ் நண்பர்களை சந்திக்கப்போன நாங்கள் அந்தக் குடும்பத்தினருடனும் நட்பை வளர்த்துக் கொண்டோம். அன்றும் கூட அந்த அன்ரியுடன்தான், சிறீலங்கா கடற்படை இந்தியாவுடன் வாலாட்டியதைச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன் என்னை விட மிஸிஸ் சிவபாதம் இந்தியாவின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தபடியால் இதைப்பற்றிப் பேசுவதே சுவையாக இருந்தது. திடீரென்று என் தம்பி அங்கு விரைந்து வருவதைக் கண்டேன். வந்தவன் உற்சாகத்துடன் கூறினான். " அக்கா இப்ப லேற்ரஸ்ற் நியூஸ் என்ன தெரியுமா? இந்தியா - யுத்த விமானங்களின் காவலுடன் உணவுச் சாமான் ஏற்றிய விமானங்களையும் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைச்சிருக்காம். தம்பி அந்தச் செய்தியைச் சொல்லி வாயை மூட வில்லை. எங்கள் ஆச்சரியத்தை நாம் வெளிப்படுத்தக் கூடவில்லை. அதற்குள் வானமே இடிந்து விழுவது போன்ற பேரொலி. சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்த்தோம். அங்கே ..! அந்தக் காட்சியை எப்படி வர்ணிப்பேன் வானத்தில் நான்கு விமானங்கள் சேர்க்கஸ் விளையாட்டுக் காட்டிக் கொண்டு இந்தியாவின் யுத்த விமானங்கள் தாம் அவை என்பதைப் பின்னர் அறிந்தோம். செங்குத்தாக மேலே எழுவதும் அதே பாணியில் கீழே குத்தென வருவதும் பக்கமாகப் புரள்வதுமாக அவை வான வேடிக்கை நிகழ்த்தி நகர்ந்து கொண்டிருக்க அமைதியாக மூன்று விமானங்கள், சீரான வேகத்தில் எங்கள் தலைகள் மீது மிதந்து சென்றன! எம்மைத் தாண்டிச் சற்றுத் தொலைவில் சென்றதும். வான தூதர் செட்டைகள் விரித்து இறங்குவதுபோல் அந்தக் கப்பல்களிலிருந்து பரசூட்களில் பொதிகள் பூமியை நோக்கி மிதந்தபடி வந்தன. பைபிளிலே 'கானான் நாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவன் 'மன்னா" எனும் அப்பத்தை வானில் நின்று பொழிந்ததாகச் சொல்லப்படுகின்றதே! அந்தக் காட்சி கூட இப்படித் தான் நிகழ்திருக்குமோ…? எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. "இந்தா..இந்தியா வந்திற்றான். இனிக்கவலை இல்லை என்று மிஸிஸ் சிவபாதம் சந்தோஷத்தால் கத்தினார். எனக்கு வார்த்தைகளே பிறக்கவில்லை கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்தன. மிஸிஸ் சிவபாதத்தின் பிள்ளைகள் ஆர்ப்பரித்துக் கைதட்டித் துள்ளிக் குதித்தனர். "இந்தச் சத்தமொன்றே போதும், பலாலி முகாமில் இருக்கிற ஆமிக்காரனுக்கு வயிற்றைக் கலக்கி காற்சட்டையோடு போயிருக்கும்.'' என்றான் அவரது மூத்த பையன். அதைக் கேட்டு நாமெல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம் அவை இந்திய விமானங்கள் என்பதை அறியாத பலர், சிறீலங்காவின் குண்டு வீச்சு விமானங்கள் என்று அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் ஓடியவர்களும், நிலத்திலே குப்புற விழுந்து படுத்துக் கொண்டவர்களுமாக அல்லோல கல்லோலப் பட்டனர். அனைவருக்கும் உண்மை தெரிந்ததன் பின்னர் ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கின்றதே ... அப்பப்பா ! அதை விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ..!
    2 points
  14. அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது. வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய் அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம் கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம். இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார். செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார், இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார். ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார். லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார். தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர். https://thinakkural.lk/article/311114
    1 point
  15. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வாங்கிய பின் அவர்கள் கல்யாணத்தை கட்டிய பின் சத்திய சோதனை சங்கடம் இல்லை உங்களுக்கு இதைவிட உலகில் உங்களைத் தவிர எவருக்குமே தெரியாத உங்களின் ரகசியங்களும் பலவும் உண்டு சிலருக்கு அவர்களின் எல்லாமே ரகசியங்கள் 'பொத்தர்' என்று பெயர் வைக்கலாம் அவர்களுக்கு வெகு சிலருக்கு அவர்களின் எதுவுமே ரகசியம் இல்லை திறந்த புத்தகம் என்பார்கள் சிலரிடம் நாலைந்து புத்தகங்கள் உண்டு ஒன்றை அப்படியே திறந்து வைத்து விட்டு மூன்றை முழுக்க மூடி வைத்திருப்பார்கள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மரண வீடுகளுக்கு போக வேண்டியிருக்கின்றது அங்கே கடைசியில் புகையாக கூண்டினூடு வெளியேற எத்தனை ரகசியங்கள் எவருக்குமே தெரியாமல் எரிந்து போகின்றதோ என்று தோன்றுகின்றது.
    1 point
  16. கல்லறை இரகசியங்கள் என்று கூறுவார்கள்! உங்கள் கவிதையைப் பார்த்த பின்னர், புகை போக்கி இரகசியங்கள் என அழைக்கலாம் என்று இருக்கிறேன்! கவிதை அழகு…!
    1 point
  17. பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .
    1 point
  18. அனுபவம் எனக்குப் புதிதல்ல ஒன்றுக்கு மூன்று எனது கோட்பாடும் இது தான் பெண்கள் கல்வியில் என்றும் கவனமாக முன்னேறி வர வேண்டும் அதன் பின்னர் அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் மிக அவதானம் இப்போதெல்லாம் பெண்கள் தங்களை ஆண்களுடன் ஒப்பீடு செய்வதை விரும்புவதில்லை ஆண் பெண் எல்லாம் ஒன்றே என்ற பதில் தான் கிடைக்கின்றது
    1 point
  19. கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில். கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது வித்தியாசமாக இருந்தது.
    1 point
  20. உண்மை. அது அவரது படைப்பு. பார்ப்பவர்கள் விமர்சனத்தை வைக்கட்டும்.
    1 point
  21. புத்தகம் 60 பக்கங்கள். மொத்தமாகப் போட்டால் நல்லது என்று தோன்றியது. அதையும் பிரித்துப் பிரித்துப் போடுவதால் வாசிக்க இலகுவாக இருக்குமென்று நம்பினேன். ஈழப்பிரியன் நேரம் இருக்கும் போது அவ்வப்போது வாசியுங்கள்.
    1 point
  22. பனைமரம்" திரைப்படத்தின் இயக்குனர் புதியவன் ராசையா செய்தியாளர் சந்திப்பு
    1 point
  23. அஸ்வின் ஏற்க‌ன‌வே தெரிவு செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் 2019ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இன்று தான் ரெஸ் ம‌ச்சில் இந்தியா அணிக்காக‌ விளையாடுகிறார் ம‌ட்டையாலும் அடிப்பார் ப‌ந்தும் ந‌ல்லா போடுவார் இவ‌ரின் சுழ‌ல் ப‌ந்தில் நியுசிலாந் வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவுட் ஆகினார்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் 300க்கு மேல் அடிக்கும் நிலை இருந்த‌து வீர‌ர்கள் சீக்கிரம் அவுட் ஆக‌ 259க்குள் ச‌க‌ல‌ வீர‌ர்களும் அவுட் ப‌ல‌ வாட்டி யோசிச்சு இருக்கிறேன் . வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரிட‌ம் திற‌மை இருந்தும் அணியில் சேர்க்காம‌ இருக்கின‌ம் என்று................ அஸ்வினுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஓய்வை அறிவித்து விட்டு இள‌ம் வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வ‌ழி விடுவ‌து சிற‌ப்பு ஹா ஹா இதுக்கை ஏன் உதாவாநிதிய‌ இழுக்கிறீங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடிய‌ ஊழ‌ல் செய்த‌ ஊழ‌ல் ராஜாவை ப‌ற்றி க‌தைப்ப‌தில் பெருமை இல்லை குருவே...................😁
    1 point
  24. உதயநிதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய பின் தான் இப்படியான அற்புதங்கள் எல்லாம் நடக்குது என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள்................😜. முதல் டெஸ்ட் மாட்சை தோற்ற இழுக்கில், இனி இரண்டு டெஸ்ட் மாட்சுகளிலும் சுழல் பந்து வீச்சு மட்டும் தான் போல........
    1 point
  25. இது என்ன… புது புரளியாய் இருக்கு. 😁 கமலாவுக்கு… இந்த விசயம் தெரியுமா. 🤣 உரும்பிராயை… பூர்வீகமாக கொண்ட கமலா, நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும்.
    1 point
  26. இது இந்திய அளவிலான செம்மொழி தகுதிதான். இப்படியே ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளுக்கு செம்மொழி தகுதி கொடுக்குமட்டும் காவிக் கூட்டம் ஓயாது. இதைக் கேட்கும் போது கலைஞர் கருணாநிதி என்ற மேன்மகன் தான் நினைவில் வந்தார். காமராசரை பெருந்தலைவர் என்று அழைப்பதைப் பொறுக்கமுடியாமல் உள்ளூராட்சி ஒன்றியங்களின் தலைவர்களை பெருந்தலைவர் என்று அழைக்கும் நடைமுறையினைக் கொண்டுவந்தார். உண்மையான செம்மொழிகளுடன் சில்லறைகளைச் சேர்ப்பதன் மூலம் அந்த தகுதியை நீர்த்துப்போகச்செய்தல் தான் மூலகாரணம். காவிக் கும்பல் இந்தியா என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கட்டும். ஆனால் உலகளாவிய செம்மொழி தகுதி தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம், இலத்தீன், அரபு ஆகிய 7 மொழிகளுக்கு மட்டுமே உண்டு.
    1 point
  27. அவ‌ர்க‌ளுக்கு எத்த‌னையோ வாய்ப்பு கிடைச்சும் கோட்ட‌ விட்ட‌வை ப‌ல‌ வாட்டி பின‌லுக்கு வ‌ந்து தேப்ப‌து வேத‌னை யாழ்க‌ள‌ போட்டியில் இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வார்க‌ள் என்று க‌ணித்து புள்ளிய‌ இழ‌ந்த‌ நான் இனி இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வ‌து க‌ஸ்ர‌ம்.....................இப்போது திற‌மையான‌ அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் அணியில் கிடையாது இவ‌ர்க‌ள் பின‌லில் இர‌ண்டு முறை அவுஸ்ரேலியாவிட‌ம் தோத்த‌வை ஒரு முறை இங்லாந்திட‌ம் தோத்த‌வை.............................
    1 point
  28. அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை சொத்துக்களை வாங்குவதன்மூலம் பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறார்கள். வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை வாங்குவதோ தம் பெயருக்கு மாற்றுவதோ முடியாது ஆனால் குத்தகையின் அடிப்படையில் 99 வருஷங்கள் பெற முடியும். வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீட்டு நிறுவனங்களில் 50%மான பங்குகளை கொண்டிருந்தால் அப்பார்ட்மெண்ட் ஹோட்டல் போன்ற சொத்துக்களை வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த சிங்களவர் முஸ்லீம் வாக்குகளுக்காக பொங்குகிறார் என்று நினைக்கிறேன், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள் சகலவிதமான இலங்கை அரச அனுமதியுடனேயே சட்டரீதியாக உள் நுழைகிறார்கள் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாதலங்களை அண்டிய பகுதிகளில் அப்பாட்மெண்ட், ஹோட்டல்களை வாங்கி தமது பிரஜைகளுக்கு மட்டுமானதாக படிப்படியாக ஆக்குகிறார்கள். இலங்கை மட்டுமல்ல மேற்கத்தையநாடுகள் அனைத்திலுமே பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள், அவர்களுக்கு இலங்கையில் சொத்து வாங்குவது தேத்தண்ணி குடிக்குற காசு. இதை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலன்றி வேறு எந்த அரசாங்கத்தினால் எந்த வழியில் தடுக்க முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். விரிவான தகவல்கள் இங்கே: https://www.lankapropertyweb.com/features/property-buying-for-foreigners.php?__cf_chl_tk=MmJCunvYVOIovCM289Vxd4I8sRSt2VJV8ow6yet1vb4-1729761863-1.0.1.1-v2leVM.RZqcpHHjiGHMYm_tJT9Si.yD2lJBGH.TUgK4 இலங்கையில் இஸ்ரேலியர்களின் பரம்பல் எவ்வாறுள்ளது என்பது பற்றி சந்துரு காட்சிபடுத்தியுள்ளார்
    1 point
  29. 1 point
  30. பதிவுகள் அனைத்துமே அரிய தகவல்கள் நன்றிகள் பல 🙏
    1 point
  31. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெனைன் மச்சின் பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ் 24 அக்டோபர் 2024, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது. தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் நிதி வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சுற்றியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மறதி, மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட வலியை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கேம்பிரிட்ஜ் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸ் இந்த அறிவிப்பு தனது புதிய திட்டத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறார். மனநலப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம் ஐந்தில் நான்கு பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்னைகள் எனச் சிலவற்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சைகளை வழங்க உதவும், அளவில் சிறிய கருவிகளை பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸின் குழு ஆய்வு செய்து வருகிறது. "சிகிச்சையே அளிக்க இயலாத, அல்லது மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூளைக்குள் பொருத்தும் சிப் போன்ற சாதனங்கள் மூலம் (Brain Implants) ஒரு புதிய சிகிச்சையை வழங்க முடியும்" என்று பேராசிரியர் மேல்லியராஸ் விளக்குகிறார். "அத்தகைய நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நாம் இங்கே குறிப்பிடுவது, மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்கள், நடுக்குவாதம் (Parkinson), மறதி, மன அழுத்தம், அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD) பற்றியது. மேலும் இது முடக்கு வாதம் (Rheumatoid Arthritis), முதல் நிலை நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 diabetes) சிகிச்சை அளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார். மேலும், இதுவொரு பயனுள்ள ஆய்வு என்றும் இதில் ஈடுபடுவது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் அவர் குறுப்பிட்டார். நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றம் பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வகையில் இந்த சிகிச்சை அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜார்ஜ் உடலில் பொருத்தப்படும் இந்தச் சாதனங்கள் சிறிய மின்சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் நம் உடலில் நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் நமது உடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு மின் சமிக்கை மூலம் செய்திகளைக் கடத்துகின்றன. அவை, நம்முடைய நடை, பேசுதிறன், உணவு உட்கொள்ளுதல் மற்றும் சுவாசிக்கும் முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த நியூரான்கள் வேலை செய்யும் முறையை மாற்றுவதன் மூலம் வலியைக் குறைக்கவோ, மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தூண்டவோ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். "மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடுக்கத்தைக் குறைக்க முடியும் என்று நமக்கு ஏற்கெனவே தெரியும்," என்று கூறும் பேராசிரியர் மேல்லியராஸ், "ஆனால், இந்த வகையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரிட்டன் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க வேண்டும்," என்கிறார். சவால்கள் என்ன? பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மருத்துவர் சௌகுன் டோங் இந்தக் கருவியின் அளவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. "இந்த சாதனத்தில் இருந்து வெளிவரும் மின்முனைகள் ஒரு நியூரானைவிட பெரியதாக இருக்கக்கூடாது. இந்த அளவானது மனித முடியின் விட்டத்தைவிட ஐந்து மடங்கு சிறியது," என்று மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர் மேல்லியராஸ். "ஆனால், இந்தக் கருவி மிகச் சிறியதாக இருந்தால் அது உடலுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். மருத்துவர்கள் இதை நோயாளிகளின் உடலில் பொருத்துவதில் சிரமங்களை உணரலாம். இரண்டு பிரச்னைகளுக்கும் சமமாகத் தீர்வு காணும் வகையில் இது அமைய வேண்டும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும், உள்ளீட்டு சாதனம் அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும், குறைந்த செலவுடன் இருப்பதையும், நோயாளிகளுக்கு முடிந்த வரை பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும். உந்துதல் சமிக்ஞைகளை உருவாக்கும் கருவி பட மூலாதாரம்,UNIVERSITY OF CAMBRIDGE படக்குறிப்பு, நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் உள்ளீட்டு சாதனம் மருத்துவ உள்ளீட்டு சாதனங்களை (Medical implants) பொருத்துதல் இந்தப் பொறியாளர்களுக்குப் புதிதல்ல. மருத்துவர் சௌகுன் டோங் பலவீனமான நரம்புகளைச் சேதப்படுத்தாமல் அவற்றைச் சுற்றிக் கொள்ளும் சாதனத்தை உருவாக்கி வருகிறார். கண்ணாடிக் குமிழில், சிறிய ரிப்பன் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொருளை ஆராய்ச்சி செய்து வருகிறார் டோங். இது தங்கத்தால் கோடிடப்பட்ட பாலிமரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் செலுத்தும்போது, இது தன்னிச்சையாகச் சுருண்டு கொள்கிறது. இந்தக் கருவிகள், சிக்கலான அறுவை சிகிச்சையின்போது நரம்புகளில் இருந்து வரும் உந்துதல் சமிக்ஞைகளைக் கண்காணிக்கவும், அந்த நரம்பைத் தூண்டவும் உதவும். பட மூலாதாரம்,MARTIN GILES/BBC படக்குறிப்பு, பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சக்தி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சாரம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மனச் சோர்வு, இருதுருவ மன நோய் ( bipolar disorder) ஆகியவற்றுக்குரிய சிகிச்சையான எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT) பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்த அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், அந்த நோய்களுக்கான ஒரே ஒருமுறை வழங்கும் சிகிச்சையாக அது நன்மை அளிக்கும் என நம்புகிறார் மேல்லியராஸ். உடலில் பொருத்தப்படும் சாதனங்கள் மூளையைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிந்து தேவைப்படும்போது மென்மையான முறையில் சரிசெய்யலாம் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள், கடுமையான மனச் சோர்வுக்கு சிகிச்சையளிக்க மூளையில் உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தன. ஏ.ஆர்.ஐ.ஏ(ARIA) என்ற அரசு ஆதரவு நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் உடன்பாட்டிற்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்யவுள்ளது. இந்தக் காலகட்டத்திற்குள், புதிய சிகிச்சை முறை குறித்த ஆய்வுகளில் அவர்கள் நெடுந்தூரம் வந்துவிட முடியும் என்று பேராசிரியர் மேல்லியராஸ் நம்பிக்கையுடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dyzen3w52o
    1 point
  32. தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); எனில் தமிழகம் என்று நேரேயே அமைத்து விட வேண்டியதது தானே ஏனிந்த சுத்து மாத்து சாரே //தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே..// ஐயா , தமிழ் சமூகத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறீக போல இருக்கு .. சனாதனம் , ரிஷி , நீட் எல்லாமே தமிழ் சமூகத்திற்கு எதிரான கேவலமான விடயங்கள் என்று தமிழ் மக்கள் சொன்னார்களா .. என்னா சாரே , கண்மூடித் தனமா இருக்கே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே
    1 point
  33. சங்க இலக்கியங்களில் தங்களின் புலமை வியக்க வைக்கிறது. நீங்கள் வெளிக்கொணர்பவை அநேகமாக, பேசாப் பொருட்கள். எனவே வியப்பூட்டும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.
    1 point
  34. ஜீவசமாதி ஆகும் ஜக்கி வாசுதேவ்! ஜக்கி மனுஷனே கிடையாது! உமாபதி கலகல பேச்சு! 🙂 தேறுமா தேறாதா என பாப்பாங்க . தேறல என்ன அங்கேயே எரிச்சிடுவாங்க😎
    1 point
  35. 🙏............ மிக்க நன்றி உங்களின் நேரத்திற்கும், முயற்சிக்கும்.
    1 point
  36. இங்க பயங்கரப் பிரச்சினை என்று. எல்.ரீ.ரீ.ஈ ஆஸ்பத் திரிக்குள்ள நின்று இந்தியன் ஆமியைத் தாக்கினதால, ஆமி உள்ள புகுந்து அவங்களைத் தாக்கினதிலை டொக்ரர்களும் நேர்ஸ்மாரும் கொல்லப் பட்டிட்டாங்களாம்." என்று அவன் சொன்னான். " மண்ணாங்கட்டி, இருபத்திநாலு மணித்தியாலமும் நானும் ஆஸ்பத்திரிக்குள்ள தான் இருந்தன். அப்படி ஒரு வரும் ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து தாக்கேல்ல ..... ஆனால், அவங்களுக்கு நாங்கள் போராளிகளை, இங்கே வைத்து வைத்தியம் செய்யிறோம் என்று சந்தேகம் .....! அது தான் இப்படிச் செய்திருக்கிறாங்கள். வாற வழியில உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. இந்தியன் ஆமியைச் சந்திக்க வில்லையே?" பக்கத்தில் நின்ற இன்னுமொருவரைச் சுட்டிக் காட்டிய படி 'நானும் இவரும்தான் கே.கே.எஸ்.இல் இருந்து வந்தனாங்கள். இவரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தங்கட சொந்தக்காரரின்பாடு என்னவோ என்று பார்க்க வந்தவர். நாங்கள் றோட்டால வர இல்லை ஆமிக்காரன் வந்த மாதிரி ஒழுங்கைக்குள்ளாலையும், வளவுகள், தோட்டங்களுக்குள்ளாலையும் தான் வந்தனாங்கள். எல்லா இடமும் ஒரே பிண நாத்தம். நல்ல காலம் நாங்கள் ஒரு இடத்தில தப்பினதே அருந்தப்பு......!" ..ஏன் ஆமி சுண்டிட்டானா..?" “இல்லை. ஒரு வீட்டுக் கோடிக்குள்ள ஒரு வயசு போன கிழவரின் பிணத்தைச் சுத்தி நாலைஞ்சு நாய்கள் திண்டு கொண்டு நிண்டுதுகள் .... அந்தப் பக்கம் ஆட்கள் யாருமே இல்லை! அதுகளுக்கெல்லாம் நல்ல பசி போல... நாய்கள் எங்களைக் கண்டிட்டு அந்த மனிசன்ர பிணத் தைத் தின்ற ருசியில எங்களுக்கு மேல பாயத் தொடங்கிற்றுதுகள். நல்ல காலம்! வேலிக் கம்பை முறிச்சு அந்த நாய்களை அடிச்சி விரட்ட நாங்கள் பட்ட பாடு?…”என்று சொல்லிக் கொண்டு போனவன் தன் பேச்சை நிறுத்தி, “அக்கா! உனக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினான். " என்னடா .....?" “அக்கா! அந்த உடுவில் அன்ரி மிஸிஸ் சிவபாதம் அவங்கள் எல்லாரும் குடும்பத்தோட சரி ..." “ஏனடா?" "காரணம் ஒண்டும் தெரியாது முத்தத்தில இருந்து அரிசி கழுவிக் கொண்டிருந்த அவவை, றோட்டில நின்ற ஆமிக்காரன் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். மனுசி போகவே, பின்னால பிள்ளைகள் மூன்று பேரும் போயிருக்குதுகள். அதுகளுக்குப் பின்னால அன்ரியிட தாய்க் கிழவியும் போயிருக்கிறா. அவ நல்ல படிச்சவ தானே......! இங்கிலிஷ் எல்லாம் நல்லாய் பேசுவாதானே. அப்படியிருந்தும் ஒன்றும் விசாரிக்க இல்லையாம்... மதிற் சுவரோட ஐந்து பேரையும் வரிசையா நிற்க வைச்சு அப்படியே ஓட்டோவில விட்டு மெஷின் கண்ணால சுட்டிருக்கிறாங்க. கிழவியும் மூத்த பெடியனும் அந்த இடத்திலேயே சரி ...... அவங்களுக்கு உதவி செய்ய யாருமே போக இல்லை. ஆமிக்காரன் போன பிறகு தான்.... மற்ற மூண்டுபேரும் தவண்டு தவண்டு ஒழுங்கைக்குள்ள போயிருக்குதுகள் ... இளைய மகனும் பிள்ளைகளும் பின்னால் தவழ்ந்து வருகுதுகள் தானே .......! என்ற நினைப்பில் அந்த அன்ரி முன்னுக்கே போயிற்றா. ஆனால், அந்தப் பிள்ளைகள் அவளைத் தொடர்ந்து போக முடியாமல் நடுவழியிலேயே இரத்தம் வெளியில் போய் செத்துட்டுதுகளாம். இவவுக்கும் ஒழுங்கைக்குள்ள வந்த உடனேயே அறிவு மயங்கிற்றுதாம் ...... அதனால். பிள்ளைகள் பற்றின தகவலை இவவைக் காப்பற்றின சனங்களுக்கு சொல்ல முடியாமல்ப் போயிற்றுது. அவ, சீரியசா இருந்து இப்ப ஆபத்து இல்லை என்று சொல்லினம். சங்கானை ஆஸ்பத்திரியில இருக்கிறாவாம்......" அந்த அன்ரியையும் பிள்ளைகளையும் நினைத்துக் கொண்டேன். இந்தியாவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தையும், 'உணவுப் பொட்டலம்' போட்ட அன்று அவவும் அந்தப் பிள்ளைகளும் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்த காட்சியையும், இந்தியப் படையினர் அவர்கள் வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம், அவர்கள் கைகாட்டி மகிழ்ந்து செய்த ஆரவாரங்களையும் நினைத்தேன். எல்லாம் போயிற்று. அண்டைக்குத் தீபாவளி நாளில் எங்கள நரகாசுரன்களாகவும் தங்கள கண்ண பிரான்களாகவும் நினைத்து இப்படிச் சங்காரஞ் செய்தாங்களே....... ! பெருமூச்சு ஒன்று தான் விட முடிந்தது. "தம்பி நீ கெதியில கவனமாய் வீட்டை போய் சேரு. அங்க பாட்டியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருப்பினம். இன்னும் ஒரு கிழமையால வா..! அதுக்குள்ள நான் லீவு கேட்டு ஆயத்தமாய் இருக்கிறன். நீ வந்த பிறகு உடனே லீவு போட்டிட்டு வாறன் அதுகளை கவலைப் படாமல் இருக்கச் சொல்லு. இப்ப எல்லாம் நோமலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கு. இனிப் பிரச்சினையில்ல. நீ போறது தான் கவனம். வந்தபோது நாய்களிட்ட மாட்டுப் பட்ட மாதிரி ஏதும் ஆபத்தில மாட்டப் போறாய்." "அது தான் அக்கா யோசனையாய் இருக்கு. வந்த வழியால போகவும் பயமாய் இருக்கு. வேற எந்த வழியால போறது ? என்று தீர்மானிக்கவும், முடியாமல் இருக்கு. ஏனென்றால் கம்பெஸ் பக்கமெல்லாம் சரியான பிரச்சினையாம். அங்க பிரம்படி ஒழுங்கையில் பொதுமக்களைச் சுட்டிட்டு, டாங்கிகளை ஆக்களுக்கு மேலால எல்லாம் ஏத்திக் கொண்டு போயிருக்கிறாங்கள். அந்தச் சில்லுகளுக்குக் கீழ நசுங்கி அப்பிடியே சனங்கள் சப்பளிஞ்சு போயிற்றாங்களாம்." எனக்கு கேட்கக் கேட்கத் தலையை என்னவோ செய்தது ! " சரிசரி...... நீ கவனமாய் போயிற்று வா!!" என்று சொல்லி அனுப்பி விட்டு கடமைக்காகத் திரும்புகின்றேன். என் கண்களுக்குச் சடலங்களை எரித்த சாம்பர்த் தடங்கள் வரிசையாகத் தெரிகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஏன் .....? கேணல் ப்றார், டொக்ரர் சிவபாதசுந்தரத்தைச் சுட்டதற்கான காரணத்தைச் சொன்னாரே !" " ஒரு டொக்ரர். வயதாளி. டொக்ரருக்கான சீருடையுடன் - கையில் 'ஸ்தெதஸ்கோப்புடன்' நின்றவரை அடையாளம் தெரியாமலா உங்கள் சிப்பாய் சுட்டான்? " என்று எங்கள் டொக்ரர்கள் கேட்டதற்கு ... கேணல் ப்றார் சொன்ன பதில்! “யுத்தத்தில் எதுவும் நடக்கலாம்." யுத்தமா......? இவர்கள் யாருக்கு எதிராக யுத்தம் செய்ய வந்தவர்கள்...... ! தமிழரைப் பாதுகாக்கத்தான் வந்தவர்கள் என்றார்களே! அப்படிச் சொல்லித்தான் உணவுப் பொட்டலமும் போட்டார்களே? திலீபனைக் காப்பாற்றினார்களா......? அவர்களது பொறுப்பில் இருந்த பதின்மூன்று போராளிகளைக் காப்பாற்றினார்களா ......? எங்களைக் காப்பாற்ற வந்தவர்கள், எங்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எம் மக்களை அல்லவா கொன்று குவித்து விட்டார்கள். அன்று முதல் நாம் இந்தியாவில் வைத்திருந்த விசுவாசத்தையும் கொன்றுவிட்டார்கள் ! அந்தச் சர்மா சொன்னானே 'Belive Indian' என்ற அந்த நம்பிக்கைக்கு இவர்கள் செய்த கைமாறு இதுதானா? இவர்கள் செய்யும் யுத்தம். தமிழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் போராளிகளை தமிழ் மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக இடம் பெறும் யுத்தம்......! மக்கள் அஞ்சி நடக்க வேண்டும்; போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பதனாற்தானே நாம் இத்தனை கொடுமைகளுக்கும் உள்ளாகிறோம் என்று உணர்ந்து விட்டு ஒதுங்க வேண்டும்! அவர்களை தமது துன்பங்களுக்குக் காரணமான போராளிகளைப் பொதுமக்கள் தாமாகவே காட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்காக இராணுவம் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டத்தைச் செய்வது தான் இராணுவத் தர்மமாம்! இராணுவம் கொலை செய்யலாம் கொள்ளையடிக்கலாம் கற்பழிக்கலாம் எதுவும் செய்யலாம். இதனையெல்லாம் இராணுவ தர்மம் அனுமதிக்குமாம். தர்மத்திற்குப் பேர் போன இந்தியா. ஜே. ஆரின் தார்மீக அரசின் ஆதரவோடு அந்தத் தார்மீகச் செயல்களையே செய்து கொண்டிருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இவர்களது எதிர்பார்ப்புக்கு முழுமையும் எதிராகவே திரும்பி உள்ளன என்பதை இவர்கள் அறியும் காலம் விரைவில் வரும்! ஒரு காலத்தில், " இந்தியாவே! நீ எப்பொழுது வரப் போகிறாய்?" என்று காங்கேசன்துறைக் கடற்கரையில் நின்று கூவி அழைக்க நினைத்த என் வாயால் இந்தியனே! நீ எங்கள் நாட்டைப் பிடித்த பீடை. எப்பொழுது எம்மை விட்டுத் தொலையப் போகிறாய்......? என்று உரத்துக்கூவ வேண்டும் போல் இருந்தது. 'வெள்ளையனே வேளியேறு! " என்று கோஷமிட்டுச் சுதந்திரப் போர் நடத்திய இந்தியனை இந்தியனே வெளியேறு!" என்று ஈழத் தமிழர் கோஷமிட்டுக் கலைக்க வேண்டிய காலமிது என்பதை என் மனம் உறுதியாக நம்பியது. சிறுவயதில் நான் கற்பனை செய்த எம் ஜி. ஆர். அண்ணாத்துரை, காந்தீயம்; இந்திய சுதந்திரப் போராட்டம்..... மிராஜ் விமானம். உணவுப் பொட்டலம் சர்மா...... எல்லாரும் என் மனதில் வந்து போகின்றார்கள். நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுத்து வேள்விகள் செய்வார்கள். இவர்கள் எமது தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியை பெற்றுத் தரவந்தவர்கள். அதற்காகத் தான் இவர்கள் எங்களையே பலிப் பொருளாக்கி அமைதி வேள்வி செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவின் கரங்களை, அணைக்கும் கரங்களாக நினைத்திருந்தேன்......! ஆனால், அக்கினிக் கரங்களாக அவை எம்மைச் சுட்டுக் கருக்கிவிட்டன ! நான் நடந்து கொண்டிருக்கின்றேன் .. எனது ஒவ்வொரு அடியும் வெறுப்போடு தரையில் பதிகின்றது...! எனது நம்பிக்கைகள் அவற்றுள் மிதிபட்டு நசிகின்றன.
    1 point
  37. பரிதாபகரமான நிலையில் உள்ள எத்தனையோ நோயாளிகளைத் தினமும் காண்கின்றோம். ஆனால், நம் ஊர்க்காரர் - நமக்கு அறிந்தவர்கள் என்று யாரும் வரும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்வும், அக்கறையும் சற்று அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட உணர்வு தான் திபோவின் மீது எனக்கு. திபோவுக்கு இந்தப் பரிதாபம் நிகழும் முன்னர், டொக்ரர் விஸ்வரஞ்சன் சிறீலங்கா படையினரால் கொல்லப்படுமுன்னர் இந்தியப் படை வந்திருக்கக் கூடாதா..? என்று எண்ணிக் கொள்வேன். இப்பொழுது எடுத்த நிலைப்பாட்டை இந்தியா எப்பொழுதோ எடுத்திருக்கலாமே எனக் கவலைப் பட்டேன். Belive Indian' என்ற சர்மாவின் வாசகங்கள் என் மனதில் தெம்பை ஊட்டி இருந்தன. இது பற்றி திபோவிடமும் அவன் மனைவியிடமும் சொல்லிக் கவலைப் பட்டிருக்கின்றேன். என்னுடன் வேலை செய்பவர்களுடனும் பேசியிருக்கின்றேன். என்னுடன் வேலை செய்பவர்களில் சிலர் என்னவோ எனது நம்பிக்கையை சரியென்று ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. அமைதிப்படை. இலங்கைக்கு வந்தது எதற்கு ....? சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் உண்மையான அமைதியை ஏற்படுத்தி, தமிழர்களை நிம்மதியாக - கௌரவமாக வாழ வைக்கவா? அல்லது தமிழ்ப் போராளிகளை அடக்கி நிராயுதபாணிகளாக்கி சிங்கள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அமைதியை நிலை நாட்டலாம் என்பதாலா...? இந்தச் சந்தேகம் நாளடைவில் கூடிக் கொண்டே வந்தது. "தன் எஜமானின் வீட்டிற்குள் திருட வருகிறவனை ஆவேசமாக குரைத்துக் கடித்துத் துரத்தப் போராடிக் கொண்டிருக்கும் விசுவாசமான நாயை, பக்கத்து வீட்டுக் காரன் தடவிக் கொடுத்து அதன் கழுத்தில் சங்கிலியை மாட்டி, வாய்க்கு ஒரு கடிவாளத்தையும் போட்டு திருட வருகிறவர் கையில் ஒப்படைக்கும் செயலைப் போன்றது அமைதிப் படையின் நடவடிக்கை." என்று உடனூழியர் ஒருவர் சொன்னது உண்மையாக இருக்குமோ ......? என்று கூட எண்ணத் தோன்றியது. தமிழ் மக்களைப் பட்டினிச் சாவில் நின்று மீட்கக் கப்பலில் வந்தும், ' ஒப்பரேசன் பூமாலை' என்று விமானம் மூலம் வந்து உணவுப் பொட்டலங்கள் போட்டும் உள் நுழைந்த இந்தியா இப்பொழுது 'அரசியல் நரியின் வலையில் சிக்கி தமிழர்களுக்கு எதிராக அதன் துப்பாக்கி முனைகளை நீட்டுவது போல இருந்தது. எது எப்படியோ * இலங்கையில் தனது காலைப் பதிப்பது ' என்ற நோக்கம் நிறைவேறிய பின் அது, நிரந்தரமாக ஊன்றப் படுவதற்கு சிறுபான்மை மக்களோடு நிற்பதை விட பெரும்பான்மையினரின் பக்கம் சேர்ந்து நிற்பதே நன்மை பயக்கும் என்று எண்ணியது போலும்! இந்தியா தமிழர் பக்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தவும், தமிழர் பாதுகாப்புக்கு வேண்டிய உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஐந்து அம்சக் கோரிக்கையை முன் வைத்து 'திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினான். சிறீலங்காவைப் பொறுத்த வரையில் அகிம்சை மதமாகிய பௌத்தத்தை தேசிய மதம் என்று கூறிக்கொண்டிருந்தாலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக இரத்தப் பலி கொள்வதையே அரசு தர்மமாகக் கொண்டிருக்கின்ற படியால் அவர்களுக்கு ஆயுதத்தால் பதில் சொன்னால் தான் விளங்கும். ஆனால், இந்தியா அப்படியல்லவே! இந்திய சுதந்திரப் போராட்டமே அகிம்சை வடிவம்தானே ! அப் போராட்டத்தின் மூல வேரான காந்தி அகிம்சையைத் தவிர வேறு எதுவுமே அறியாதவராயிற்றே! தனது ஆச்சிரமத்தில் தவறு செய்தவர்களைத் திருத்துவது முதல் நவகாளிக் கலவரம் வரை அவர் கையாண்ட ஆயுதம் அகிம்சை, உண்ணாவிரதம் தானே! 'ஜாலியன் வாலா பார்க்'கில் கொலை வெறியாடிய அந்தப் பிரிட்டிஷ்காரனையே புறங்காட்டி ஓடவைத்தது இந்தியா கையாண்ட அகிம்சைப் போர் தானே ! அப்படியிருந்தும் இங்கு நடந்த தென்ன. பன்னிரண்டு நாட்கள் தண்ணீர் கூட அருந்தாது உதிரம் வற்றி, உடல் வற்றி, உணர்வுகள் வற்றி அந்த இளைஞன் குடல் சுருங்கி மாண்டானே ! இந்தியா அவனைச் சாகவிட்டதே! அவனது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அவனைச் சாகடித்தார்களே! அவர்கள் சாகடித்தது அவனையல்ல, இந்தியாவின் ஆத்மாவை தர்மத்தை…. என்று தான் நான் எண்ணத் தொடங்கினேன் சுமார் மூன்று மாதங்கள் நிலவிய அமைதி நிலையில் ஒரு தளம்பல் - பதற்றம் தொடங்குவதைக் காணக் கூடிய தாக இருந்தது. அடுத்த சில தினங்கனில் கடலிலே கைது செய்யப்பட்டனர் பதின்மூன்று போராளிகள். இந்திய அமைதிப்படையால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. சிறீலங்காப் படையின் பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுத்து அந்தப் போராளிகளைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதைத் தடுக்க முடியாது தவித்தது. இந்த நிலையில் அவர்கள் பதின்மூன்று பேரும் தமது உயிரினும் மேலான இலட்சியத்தைக் காத்துக்கொள்ள சயனைற் குப்பியைக் கடிக்கின்றார்கள். அவர்களது உயிர் பிரியுமுன்னரே, சிறீலங்கா இராணுவம் அத்துமீறி கண்ணாடிகளை உடைத் துக் கொண்டு உள்ளே சென்று துப்பாக்கி முனையின் கத்திகளால் குத்தியும் அடித்தும் கொலை செய்கின்றது. இந்திய அமைதிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் நடைபெற்ற அந்தக் கொடூரத்தைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. கொலையுண்ட போராளிகளில் ஒருவரான குமரப்பாவின் திருமணம் இந்தியப்படை வந்த பின்னர் தான் நடந்தது.சில இந்திய அதிகாரிகள் கூட அதில் கலந்து கொண்டார்கள். அந்த மணமகன் அவர்களது கட்டுப்பாட்டின் உள்ளேயே சிறீலங்கா சிப்பாய்களால் கொலை செய்யப்படுகின்றான். அந்தப் பதின்மூன்று தியாகிகளதும் பூதவுடல்கள் ஒன்றாக தீருவிலில் தீயுடன் சங்கமமாகின்றது மூன்று மாதங்களாக ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த உணர்வுகள் உறுதியுடன் நிமிர்கின்றன. உதிரம் புது வேகத்துடன் நரம்புகளில் ஓடத் தொடங்குகின்றது. அமைதிப்படை கொண்டு வந்த அமைதி அஸ்தமித்து விட்டது..... எங்கும் குழப்பம் அணைக்க வந்த கரங்கள் ..... நேசத்துடன் நீட்டி வந்த கரங்கள் நெருப்பு உமிழத் தொடங்குகின்றன. யாழ்ப்பாணம் மீண்டும் எரியத் தொடங்கி விட்டது ! இரத்தம் தோய்ந்த நிலையில் 'காயப்பட்டவர்களால் வைத்தியசாலை நிறையத்' தொடங்கி விட்டது. ஓய்ந்த துப்பாக்கிகளின் முழக்கங்கள் எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சிறீலங்காப் படையினரின் நடவடிக்கைகளின் போது இருந்ததைவிட நிலைமை மிகக் கொடூரமாக இருந்தது. தமது முகாம்களில் இருந்தபடியே சிறீலங்கா படையினர் எறிகணை வீசி எம்மவர்களைப் பலி கொண்டார்கள். ஆனால், அமைதிப்படையோ எமக்குள்ளே இருந்து கொண்டே எமது வீதிகளில், எமது இல்லங்களில் நட மாடிக் கொண்டே கொன்று குவித்துக் கொண்டிருந்தது. எமது வைத்தியசாலையின் தாதிகள் பயிற்சிக் கல்லூரிப் போதனாசிரியரான கதிர்காமதாசின் உடலைக் குண்டு சிதைத்த நிலையை, முதன் முதலில் கண்ட போது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை என்னால் தாங்க முடியாதிருந்தது கதிர்காமதாசுடன் அவர் சகோதரியும் கணவனும் கூடக் கொல்லப்பட்டு விட்டார்களாம்......! அடுத்தடுத்து..... கை கால் இழந்தவர்களாலும் உயிரற்ற உடல்களாலும் வைத்தியசாலை நிறையத் தொடங்கியது. வைத்திய சாலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் எந்த நேரமும் மக்கள் நிறையத் தொடங்கினர். காயமுற்றவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு அவர்களின் நிலைமையை அறிய மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதா, அவர்களைப் பார்க்க வருபவர்களைக் கட்டுப்படுத்துவதா- வைத்தியசாலை ஊழியர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக இருந்தது. இந்த நிலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் வீட்டுக்குச் செல்ல முடியாதிருந்தது. நான் கூட வீட்டுக்குப் போக முடியவில்லை. கடமை முடிய எங்கள் விடுதியிலேயே தங்கத் தொடங்கினேன்.கே. கே.எஸ் பக்கம் இராணுவ நடவடிக்கைகள் எதுவுமில்லை! சுன்னாகத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலேயே அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வீட்டுக்குப் போய் வருவதுகூட எனக்கு ஆபத்தாக அமையலாம். எனவே. நான் பாதுகாப்பாக இருப்பதுடன் இந்த வேளையில்தான் எனது சேவை வைத்தியசாலைக்குத் தேவை என்று உணர்ந்ததாலும் நான் வைத்தியசாலையில் தங்கி விட முடிவு செய்து கொண்டேன். பிரயாண வண்டிகள் கூட சீராகச் செயற்படவில்லை. சில ஊழியர்கள் தமது குடும்பங்களையே பாதுகாப்புக் கருதி வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். மக்களால் வைத்தியசாலை நிறைந்து வழிந்தது! ஊரடங்குச் சட்டம் வேறு பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது! மக்கள் அனைவரும் நல்லூரை நோக்கிச் செல்லும்படி அமைதிப்படை ஆணை பிறப்பித்திருந்தது! இதுவரையில் வைத்தியசாலையில் மரணித்தவர்களின் உடல்களை உடனுக்குடன் எடுத்துச் செல்ல வந்து கொண்டிருந்த உறவினர்கள் வருவது கூட இந்நிலையில் நின்று விட்டது. வைத்தியசாலையில் மரணித்தவர்களின் உடல்களால் அங்குள்ள சவச்சாலை நிறையத் தொடங்கியது. மின்சாரம் இல்லை. சவச்சாலையில் உடல்களை பாதுகாக்கக் கூடிய குளிர்சாதன அறைகள் இயங்கவில்லை. பிணங்கள் போட்டவை போட்டபடியே கிடந்து ஊதி - அழுகி - நாறத் தொடங்கின..! சவச்சாலை அருகே உள்ள கட்டிடத்தின் மறு பகுதியிலேயே இரத்த வங்கியும் இருந்தது தேவையான இரத்தம் எடுப்பதற்குக் கூடப் போக முடியாத நிலை, வயிற்றைக் குமட்டும் பிணவாடை. சவச்சாலையில் உள்ள பிணங்கள் அழுகி புழுக்கள் உற்பத்தியாகிவிட்டன. அவை அவ்வறையிலிருந்து கதவின் கீழ் இடை வெளிகளால் புறப்பட்டு, இரத்த வங்கியின் நடைபாதை வரை ஊர்ந்து வரத் தொடங்கி விட்டன. அவற்றை அகற்றுவதும், கிருமிநாசினி கொண்டு அவ்விடங்களை அடிக்கடி கழுவுவதுமாக இயங்க வேண்டியிருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு நிமிட மும் காலம் தள்ளிக் கொண்டு நாங்கள் உயிர்த் தொண்டு செய்து கொண்டிருந்தோம்...... நான் சந்தித்த கொடூரமான - பயங்கரமான நாள் ஒக்ரோபர் 21.... ! அன்றைய தினம் ... சூறாவளியின் வேகம் படிப்படியாக அதிகரித்து ஒரு சந்தர்ப்பத்தில் உச்ச நிலையை அடையுமல்லவா? அத்தகைய உச்ச நிலையின் நாள்தான் அன்றைய தினம். அமைதிப்படை புரிந்த பயங்கர வாதத்தின் உச்சக் கட்டமான நாள்…. ‘அன்று காலையே மிகவும் பதற்றமாக இருந்தது. கோட்டைப் பக்கமாகவிருந்து வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. நேரம் செல்லச் செல்ல வைத்திய சாலையின் சுவர்களிலும் யன்னல் கண்ணாடிகளிலும் குண்டுகள் வீழ்ந்து சிதறின ! இது வரையில் நடந்திராத விபரீதம் எதுவோ நடைபெறப்போகிறது என்ற அச்ச உணர்வு எம்மையெல்லாம் பற்றிக் கொண்டது. அந்தச் சன்ன மழைக் கூடாகவும் காயப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டேயிருந்தனர். நேரம் செல்லச் செல்ல இன்று அமைதிப்படை வைத்தியசாலைக்குள் நுழையலாம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. நோயாளர்களின் பெயர் விபரங்களைக் கூட கேட்டுப் பதிவுசெய்து கொள்ள முடியாத அளவுக்கு அவசரக் 'கேஸ்கள்.' ஒவ்வொருவருக்கும் வெறும் இலக்கங்களை மட்டும் கொடுத்து சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும், மருந்து கட்டும் பிரிவுக்குமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். ஸ்ரெச்சர்களும், சக்கர நாற்காலிகளும் வைத்தியசாலை வாசலுக்கும், சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் நோயாளர் விடுதிக்குமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டேயிருந்தன. நோயாளர் விடுதிகளெல்லாம் நிறைந்து வழிந்தன. படுக்கைகளில் இடமின்மையால் கட்டில்களின் கீழும், நடைபாதைகளிலும் நோயாளர்கள் படுக்கவிடப்பட்டனர். எந்தவொரு வைத்தியரோ, தாதியோ, ஊழியனோ ஓய்ந்திருக்கவில்லை. விடுதிகள் தோறும் இரத்தவாடை. வைத்தியசாலையின் பின்புறம் உள்ள சவச்சாலையிலோ பிண வாடை. இருபத்தைந்தாம் இலக்க விடுதிக்குள் ஒரு பையன்- அவன் கூட காலில் குண்டு தாக்கிக் காயமுற்று அனுமதிக்கப்பட்டிருந்தான். இன்னும் அவன் எழுந்து நடமாடத் தொடங்கவில்லை. அவன் தோற்றத்தில் எனது மகனைப் போல இருந்ததாலோ என்னவோ அவன்மீது எனக்கு இனம் தெரியாத ஒரு பற்று. பூட்டப்படாத அவன் சேட்டின் இடைவெளியில் கறுப்பாக 'நாடா' தெரிந்தது. கறுப்பு ....! எனது மனம் என்னவோ சொல்லிற்று. நான் போராளிகளைக் கண்டிருக்கிறேன். கறுப்பு நாடாவில் தான் சயனைற் குப்பிகளைக் கட்டியிருப்பார்கள். ஒரு வேளை இந்தச் சிறுவனும் போராளியாக இருப்பானோ....? என்று சந்தேகம் எழவே, அவனருகில் சென்று உரிமையோடு சழுத்திலிருந்த நாடாவை வெளியே இழுத்தேன்.அந்த நாடா - அதில் கோர்க்கப்பட்டிருந்த சிலுவையோடு வெளியே வந்தது. அப்பாடா... ! என்று எனக்குள் ஒரு நிம்மதி. என்றாலும் முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டுமென்ற முடிவுடன். "தம்பி ! நீ இந்த நாடாவைக் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டாம். வேண்டுமென்றால் சிலுவையை மட்டும் உன் சேட்டில் குத்திக் கொள்ளு." என்றேன். "ஏனக்கா......?" என்று அவன் வெகுளித்தனமாகக் கேட்டான். "இன்றைக்கு நிலைமை சரியில்லை, மோசமாய் இருக்கு. தற்செயலாக இந்தியன் ஆமி ஆஸ்பத்திரிக் குள்ளேயே வரக்கூடும். வாறவனுக்கு இது என்னவென்று நீ விளக்கம் கொடுக்கிறதுக்கு முன்னமே உன்னைப் போராளியென்று நினைத்துச் சுடக்கூடும். எதுக்கும் நீ முன்னேற்பாடாக, அந்தக் கறுத்த நாடாவைக் கழற்று" என்று கூறி நானே. அந்த நாடாவைப் பெற்றுக்கொண்டு வெளியே எறிந்து விட்டேன். அந்த வேளையில் திபோவின் மனைவி என்னிடம் வந்தாள். "மிஸி இந்தியன் ஆமி ஆஸ்பத்திரிக்குள்ளேயும் வரும் என்று கதைக்கிறாங்கள். எனக்கு என்ன செய்யிறது என்று தெரியவில்லை." அவளுக்கு என்ன ஆறுதலைச் சொல்லுவது என்று எனக்கும் புரியவில்லை. மீண்டும் அவளே கேட்டாள் ......! "ஷெல் அடிச்சால் என்ன மிஸி செய்யிறது? இந்த ஏலாத மனிசனையும் கொண்டு நான் எங்கே போறது….? "இஞ்சபார் தங்கச்சி, ஒருவர்க்கு ஒருவர் பாதுகாப்பு கொடுக்கக் கூடிய நிலையில் இப்ப யாரும் இல்லை! ஏதோ நாம் நம்மால முடிஞ்சதைச் செய்ய வேண்டியது தான். ஷெல் அடிச்சாலோ, பொம்மர் சுத்தினாலோ அநேகமாக எல்லோரும் 'எக்ஸ்றே' புளக்குக்குள்ள தான் போறது வழக்கம்." என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
    1 point
  38. தலையங்கம் சரியே . ....... அவர் 15000 காசுகளை கொண்டு வரும்போது வழியில் சுங்க அதிகாரிகள் வந்து வரியாக 5000 வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் ......... அவர் வெளியே வரும்பொழுது அவர் கையில் 10000 தான் இருந்தது . ........! 😂 ஏராளன் பாவம் சிறியர் . ........!
    1 point
  39. என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா... சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்
    1 point
  40. இரண்டு கலன் antifreeze கராஜுக்குள் கிடக்குது............. அதிலும் ஒன்று concentrated..............🤣.
    1 point
  41. உலகின் நீளமான புகையிரதம்
    1 point
  42. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம் 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 6 28) வன்னி தமிழரசு கட்சி 4 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 3 30)திருமலை தமிழரசு கட்சி 2 31)அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 2 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை இலங்கை பொதுஜன முன்னணி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 6 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 3 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) இலங்கை பொதுஜன முன்னணி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 9 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 27 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
    1 point
  43. இந்தப் புத்தகம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடசாலைக் குழுக்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அரவிந்தசாமி தான் அதன் காரணம் என்று இப்பொழுது தெரிகின்றது...............👍. பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஈலன் மஸ்க் இவர்கள் மூவரையும் பற்றிய ஒரு குழுமத்தில் வந்த ஒப்பீட்டில் ஒருவர் இந்தப் புத்தகத்தில் இருந்து சில குறிப்புகளை சொல்லியிருந்தார். இந்த விடயத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இனிமேல் உண்டாகப் போவதில்லை என்றாலும் ஒரு தடவை வாசிக்க வேண்டும் போலவே உள்ளது..............👍.
    1 point
  44. ஆறு மாதங்களுக்கு முன்னர் bbc யில் இந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை வந்ததும் இதை வாங்கிப் படித்தேன். தமிழில் இப்போது வந்திருகின்றது என்று அறிகின்றேன். நல்ல புத்தகம்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.