Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/29/24 in all areas

  1. மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம் தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் - இவ்வளவே நான். எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழக அரசையும் இங்கு எனது விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, நான் எதிரணியில் அமர்ந்து கொண்டு அல்ல; அவர்கள் பக்கம் நின்று கொண்டே ! எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் தாலி கட்டாததால் இடதுசாரிக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும் கூட அவ்வப்போது விமர்சிக்கும் பேறு பெற்றவன் நான். மற்றவர்களை நான் ஆட்டத்திற்கே சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் திராவிடக் கட்சிகள் தற்போது தி.க வும், ஓரளவு திமுகவும் ஆக இரண்டு மட்டுமே என்பது என் கருத்து. அது என்ன ஓரளவு ? இன்றைய காலகட்டத்தில் 'ஓரளவு' ஊழல் இல்லாமல் ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற கேடு கெட்ட நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டதன் விளைவே திமுக வை இன்னும் திராவிடக் கட்சிகள் பட்டியலில் வைத்திருப்பது. சமீபத்தில் பரபரப்பாகி இருந்த சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் ஆரம்பிக்கிறேனே ! அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாகத்தான் நான் பார்க்கிறேன். கோரிக்கைகள் ஏற்கப்பட்டன - ஒன்றைத் தவிர. மறுக்கப்பட்டது என்னவென்றால் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியவாறு - சட்டத்திற்கு உட்பட்டு - சங்கம் அமைக்கும் உரிமை. நிர்வாகம் விரும்புவது போல் சங்கம் வைத்துக் கொள்ளலாமாம். அத்தகைய ஒன்றைத் தொழிற்சங்கம் (Trade Union) என்று சொல்வதில்லை. ஒரு தொழிலாளர் அமைப்பு (Workers club) எனலாம்; அதிகபட்சம் தொழிலாளர் நல அமைப்பு (Workers Welfare club) எனலாம். அதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குள் மட்டுமல்ல, நிர்வாகிகளுடனும் டென்னிஸ், கோல்ஃப் முதலியவை விளையாடலாம். தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது. தொழிலாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் சங்கம் நடத்தக் கூடாது என்ற போர்வையில் அவர்களது உரிமையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது நிர்வாகம். வெளிப்படையாகச் சொல்வதானால், இடதுசாரித் தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்பதுதான் சாம்சங்கின் நிபந்தனை. முதல்வர் அவர்களே, நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ! இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய (தொழிற்)சங்கங்கள் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லையா - திமுக தொழிற்சங்கம் உட்பட ? சங்க அங்கீகாரத்தை வழங்குவது மாநில அரசு தொழிலாளர் நலத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும் கடமையும்தானே ? சங்கத்தைப் பதிவு செய்யும் மனுவை தொழிலாளர் நலத்துறை முதலில் கிடப்பில் போட்ட காரணமென்ன ? பின்னர் சாம்சங் நிர்வாகம் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும், CITU நீதிமன்றம் செல்லவும், பின்னர் அதைக் காரணம் காட்டி சங்கப் பதிவை அரசு மறுப்பதும் என்ன நாடகம் ? இதன் மூலம் அரசு அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லையா ? நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது மட்டும்தானே அரசின் வேலை ? தனது அமைச்சர்களை அனுப்பி அரசே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது அறநெறிதானா ? இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கலாம். எப்போது நடந்தாலும் தவறு தவறுதானே ? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அறிவுரை. நீங்கள் அரசா அல்லது சாம்சங் நிர்வாகமா ? இத்தனைக்கும் மேலாக தொழிலாளர்கள் வீடு வரை சென்று காவல்துறையின் மிரட்டல், கைது நடவடிக்கை எனும் அடாவடித்தனங்கள் வேறு. TESMA வின் கீழ் ஜெயலலிதா அரசின் காவல்துறை போராடிய அரசு ஊழியர்களை விரட்டி விரட்டிப் பழி வாங்கியதெல்லாம் நினைவுக்கு வருகின்றதே ! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக நடந்த போராட்டத்தில் அதிமுக அரசு நடந்து கொண்டதற்கும் சாம்சங் விவகாரத்தில் நீங்கள் நடந்து கொள்வதற்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அமைதி வழியில் போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்கள். அது மட்டும்தான் வேறுபாடா ? போராட்டம் தொடர்ந்தால் சாம்சங் சென்னையில் தனது தொழிற்சாலையை மூடிச் சென்று விடுவார்களே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால், கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசுவதுதானே சரியாக இருக்கும் ? சாம்சங் நிர்வாகத்துடன் நின்று கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது சரியாக இருக்குமா ? "சம்பளம் இப்போது பிரச்சினை இல்லை; எங்கள் உரிமையை மீட்டெடுப்பதே பிரச்சினை" என்று இக்காலத்தில் கூட தொழிலாளர் வர்க்கம் நிற்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த வரலாற்றின் நாயகர்களை நீங்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த வரலாற்றில் நீங்கள் ஒரு கரும்புள்ளி ஆவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இறுதியில் ஒரு வழியாக சமரசத் தீர்வு எட்டப்பட்டபோது அதில் தங்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்றெல்லாம் வெளிவந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என விழைகிறோம். சமரசம் ஏற்பட்டதற்கு நீங்கள் CITU விற்கும் நன்றி தெரிவித்ததை வரவேற்கிறோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை மே 2022 ல் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் இது தொடர்பாகத் தொடர்ந்த ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசினைக் கேள்வி கேட்ட பிறகு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக நவம்பர் 2023 ல் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அது என்ன, அரை மனது குறை மனதுடன் அப்படி ஒரு நடவடிக்கை ? அதிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முந்தைய அதிமுக அரசில் காவல் (ஏவல்?) துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டத்தில். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்களும் உங்கள் கட்சியினரும் இது தொடர்பில் எழுப்பிய கண்டனக் குரலெல்லாம் வெறும் அரசியல் ஆதாய ஆரவாரம்தானா ? ஆளுங்கட்சியான பிறகு காவல்துறையுடனும் அரசு நிர்வாக அமைப்புகளுடனும் சமரசம் செய்து கொண்டு போவது எழுதாமல் வரையறுக்கப்பட்ட விதிமுறையோ ? குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளிய விவகாரத்தில் வெறுமனே துறை சார்ந்த நடவடிக்கை என்பது கண் துடைப்பன்றி வேறென்ன ? கலைந்து ஓடியவர்களையும் தேடித்தேடிக் குறி பார்த்துச் சுட்டது முன்னரே திட்டமிடல் அன்றி ஒரு தற்செயல் நிகழ்வா ? ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை என்று எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு இருக்குமானால், அவர்கள் மீண்டும் மீண்டும் கொலைபாதகக் குற்றங்களை அரங்கேற்ற மாட்டார்களா ? போராடிய மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் விரட்டி விரட்டி ஆற்றில் மூழ்கடித்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் விரட்டி விரட்டிச் சுட்டதும் என்றுமே முற்றுப்பெறாத தொடர்கதைகளா ? இவற்றில் மேலும் ஒரு கோணம் இருக்கிறது. மாஞ்சோலையானாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆனாலும், சாம்சங் ஆனாலும் ஒரு ஜனநாயக அரசும் அதன் இயந்திரங்களும் முதலாளி வர்க்கத்துக்கு பணி செய்யவே உருவானவையோ ! பொள்ளாச்சி பாலியல் படுபாதகத்தில், "அண்ணா, அடிக்காதீங்கண்ணா ! நீங்கள் சொன்னதைக் கேட்கிறேன்" என்ற அபலைக் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் குரல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் செவிகளில் இருந்து இன்று மறைந்து விட்டதோ என்று எங்களை எண்ண வைக்கிறது. எங்கள் செவிகளில் இடி முழக்கமாய் இன்றும் கேட்கிறது முதல்வரே ! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே என்பது நீங்கள் அறியாததா ? அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமை; அதிமுகவில் பொள்ளாச்சி பிரமுகரின் மகன் முக்கிய குற்றவாளியாக செய்திகளில் அடிபட்ட விவகாரத்திலேயே விரைவான நீதி கிடைக்கவில்லை. அப்படியானால் ஒரு திமுக பிரமுகரின் பெயர் அடிபட்டிருந்தால் இந்த வழக்கு எந்தத் திசையில் சென்றிருக்கும் ? மீண்டும் வலியுறுத்துகிறேன் - இக்கேள்வியைக் கேட்கும் நான் ஒரு திமுக ஆதரவாளன் முதல்வர் அவர்களே ! பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதைப் பற்றியே பேசாமல் காலம் தள்ளுவது சரிதானா ? சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம். முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பில், "தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டியதில்லை. மற்றவர்கள் நிறைவேற்றினார்களா ?" என்று அடாவடியாய்ப் பேசியபோது அமைதி காத்தீர்களே ! அரசு ஊழியர்கள் போராடிக் கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க மட்டும், "நான் கொடுக்காமல் உங்களுக்கு யார் கொடுப்பார்கள் ? சிறிது கால அவகாசம் கொடுங்கள்" என்று உணர்வுடன் பேசி வாய்தா வாங்கி விட்டீர்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நீங்களும் உங்கள் அரசும் இருக்கிறீர்களா ? போராடிய அரசு ஊழியர்கள் கையறு நிலையில் ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்து மனு கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சீமானைக் கூட விட்டு வைக்காத இழிநிலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஓய்வூதியத்தின் இன்றியமையாமையை விளக்கும் எனது ஒரு கட்டுரையின் இணைப்பு : https://yarl.com/forum3/topic/270878- ஓய்வூதியம்-சுப-சோமசுந்தரம்/ இங்கு அக்கட்டுரையின் இணைப்பு உங்களுக்காக மட்டுமல்ல. "இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ஒரு கேடா ?" என்று கேட்கும் அதிமேதாவிகளுக்கும் சேர்த்துதான். மக்கள் நலத்திட்டப் பணிகள் முதலிய எத்தனையோ நிறைகள் உங்கள் அரசில் உண்டு. இருப்பினும் இது குறைகளைச் சுட்டும் களமாய்க் கொண்டதால், பல காலமாய் நெஞ்சில் கனக்கும் ஒரு பெருங்குறையினைச் சுட்டி இக்கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் அமைதியாக சுமார் இரண்டரை வருட காலம் நடந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனச் சொல்வது மிகையாகாது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமாரன் மற்றும் அவருடன் தோளொடு தோள் நின்ற பாதிரியார் மை.பா. ஜேசுராஜ், தோழர் புஷ்பராயன் ஆகியோர் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் - குறிப்பாக மீனவ மக்களின் - உறுதிமிக்க போராட்ட உணர்வுக்குச் சான்று பகர்வது. எந்தக் குறிப்பிட்ட கட்சி அரசியல் சார்புமின்றி சமீப காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அப்போராட்டத்திற்கு இணையாக டெல்லியில் சுமார் ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தையும், சென்னை மெரினா கடற்கரையில் சில நாட்கள் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் குறிப்பிடலாம். பின்னவை இரண்டும் வெற்றியில் முடிய, கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இக்காலகட்டத்தில் தனது நோக்கத்தில் இன்னும் வெற்றி பெறவில்லைதான். வெல்வதுதான் போராட்டம் என்றில்லை; தோற்பதும் போராட்டம்தான். மேலும் நோக்கத்திற்கு மட்டுமே வெற்றி தோல்வி உண்டு; போராட்டத்திற்கு அவ்வாறில்லை. போராட்டமே மானிடத்தின் வெற்றிதான். எந்த ஒரு அரசியல் கட்சியாலும் நடத்த முடியாத போராட்டம் அது. முதல்வர் அவர்களே ! கூடங்குளம் அணு உலைப் போராளிகளின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியும் தங்களால் தரப்பட்டதே. அவ்வளவு காலமும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த போராட்டத்தில் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளாய் இருக்கவே பெருமளவில் வாய்ப்பு உள்ளது என்பதில் போராட்டக் களத்திற்கு வராதவர்களே உடன்படுவர். நமது சட்டம், காவல் துறைகளின் கடந்த கால வரலாறு அப்படி. எடுத்துக்காட்டாக, 2003 ல் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் போராட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் அருகில் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த பேராசிரியர்கள் சிலர் மீது போடப்பட்ட வழக்கு அந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை அறுத்ததாம்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்ட பின்பும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் அடித்து விரட்டிய பின்பும் வாகனங்களுக்குக் காவலர்களே தீ வைத்தோ, அவற்றை உடைத்தோ தங்களின் மோசமான நடவடிக்கைகளுக்குக் காரணங்களை உருவாக்கியது வெட்ட வெளிச்சமானது. எனவே வாக்குறுதி தந்தது போல் அணு உலைப் போராட்டத்தில் அத்தனை வழக்குகளையும் இவ்வளவு தாமதமானாலும் இப்போதாவது வாபஸ் பெறுவதே அறநெறியின் பாற்படும். வழக்கின் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். உதாரணமாக, வழக்கினால் எத்தனையோ இளைஞர்களும் ஏனையோரும் வெளிநாடுகளுக்குக் கூட வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இது தொடர்பில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் அவர்கள் உங்களை நேரில் சந்தித்தும் கடிதங்கள் எழுதியும் நீங்கள் காலம் கடத்துவது ஏன் ? அவரைப்போல் சமூகப் போராளிகளை உங்கள் கட்சி உருவாக்கியது உண்டா ? இவ்வளவு அடக்குமுறையிலும், அடுத்து மணவாளக்குறிச்சி மணல் ஆலைப் போராட்டத்தின் நியாயங்களைப் பேசும் தோழர் சுப. உதயகுமாரன் எங்களைப் போன்ற 'நகர்ப்புற நக்சல்களுக்கு' ('Urban Naxals') தமிழ் நிலத்தின் சேகுவேராவாகத் தெரிகிறாரே ! உங்களுக்குத் தெரிவதில்லையா ? அல்லது அப்படித் தெரிவதால்தான் ஒன்றியமானாலும் மாநிலமானாலும் முதலாளித்துவ அரசுகள் அவரைப் போன்றவர்களைப் பழிவாங்குகின்றனவா ? திராவிட இயக்க அரசியல் (சமூக நீதிக்கான) போராட்ட அரசியல்தானே ! ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசினைக் குறைந்தபட்சம் தமிழ் நிலத்தில் காலூன்ற முடியாமல் செய்ய இப்போது எங்களிடம் இருக்கும் ஒரே மக்கள் ஆதரவுள்ள ஆயுதம் திமுக என்பது எங்களுக்குத் தெரிவது சரி. ஆனால் அது உங்களுக்கும் தெரிவதுதான் எங்களுக்கான அவலம். இருப்பினும் கையறு நிலையில், வந்தது வரட்டும் என்று பெரும்பான்மை மக்கள் பாசிசவாதிகளை நாடினால் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாய்த் தமிழ் நிலத்திற்கே என்று எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோர் தள்ளப்படுகிறோம். உங்களுக்கு ஆதரவையும் தந்து விட்டு உங்களிடம் மக்கள் பெறாத, பெறவேண்டிய நியாயங்களுக்காக நாங்களும் ஒரு 'நெஞ்சுக்கு நீதி' எழுதலாம் எனத் தோன்றுகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களே ! https://www.facebook.com/share/p/19QFqCFNNw/
  2. பிரபா, மபொசி இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான மபொசி எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தார். அவரது பத்திரிகையான செங்கோல் இதழில் “ஈழத்தமிழரும் நானும்” என்ற தொடரில் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்து அவர் எழுதியுள்ளார். அந்த தொடர் பின்பு நூலாக வெளிவந்து இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 1992 ல் வெளிவந்த செங்கோல் இதழில் மபோசி எழுதிய பத்திரிகை முன்பக்கத்தை இங்கு இணைத்துள்ளேன். தமிழ் தேசியவாதி என்று சீமானால் சிலாகிக்கப்படும் மபொசி இதை எழுதிய நேரத்தில் திமுக உட்பட திராவிட இயக்கங்களின் தொண்டர்கள் பொடா சட்டதின் கீழ் பாரிய நெருக்குவரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல திராவிட இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் திடல் புலனாய்வுப்பிரிவின் முழுமையான கண்காணிப்பில் இருந்தது. மபொசியின் கருத்தில் நான் தலையிடவில்லை. அவரின் கருத்தை தனது பத்திரிகையில் வெளியிடும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால், தமது சுயநல அரசியலுக்காக வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த அமைப்புக்கள் எதிரிகளாகவும், உண்மையிலே ஈழத்தமிழருக்கு எதிரிகளாக இருந்தவர்கள் நல்லவர்கள் போலவும் காட்டப்படுகிறார்கள் என்பதை கீழ் இணைக்கப்பட்ட பத்திரிகையில் பார்தது அறிந்து கொள்ளுங்கள்.
  3. "புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்...
  4. சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????
  5. உண்மையில் வேதனை தரும் விடயம் என்னவென்றால் இவ்வளவு இளக்காரங்கள் தூற்றுதல்கள் மற்றும் அவமானப்படுத்துதல்களையும் தாண்டி தாயக மக்களையும் மண்ணையும் நேசிக்கும் புலம்பெயர் தமிழர்கள். போற்றுதற்குரியது.
  6. இருப்பதே இரண்டு பேர், இவர்களுக்கு பதினாறு சமையல் காரர் எதற்கு? ஹோட்டல் ஏதும் நடத்துகிறாரா தெரியவில்லை? இவரிடமே இத்தனை சமையல் காரர் கேட்க்கிறார் என்றால், இவரது ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பேரை நியமித்திருப்பார்? நாட்டை எப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பது இப்போது புரியுது. அதைவிட இலக்கத்தகடுகள் இல்லாமல், உரிமை பெறாமல் பாவனையில் இருந்த பல வாகனங்கள் அங்கங்கு கைவிடப்பட்டுள்ளன. இதை யாரும் கணக்கெடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. சாதாரண மக்கள் பசியினால் களவெடுத்தால் நீதிமன்றத்துக்கு கொண்டு போகிறார்கள், பாராளுமன்றம் கள்ளர்களால் நிறைந்திருந்திருக்கிறது. இதற்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசியலாளர் என்று தம்மை வேறு அழைக்கிறார்கள். திருட்டுகூட்டம்.
  7. உறவாடிக் கெடுக்கவேண்டும் அல்லது சேலையில் முள்விழுந்தால் சேலை கிழியாமல் எடுக்கவேணும் முள்ளை.. விஜய் திராவிடம் பேசி திராவிட விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்கவேண்டும்.. பின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக தமிழ்தேசியத்தை ஊட்டவேண்டும் அவர்களுக்கும்.. அவர் அதை செய்வார்.. ஏனெனில் விஜய் இயல்பில் ஒரு தமிழ்தேசியவாதி திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கியவர் அல்ல.. அது அவருக்கு ஒத்தும் வராது.. தேர்தலுக்காக அதை பேசுகிறார்.. பேசி ஆட்களை சேர்க்கட்டும் பின் தமிழ்தேசியத்தை ஊட்டட்டும்.. அதை செய்வார்.. அதை செய்யவைப்பதும் ஈசி.. ஏனெனில் விஜை பின்னால் இருந்து இயக்குபவர்களும் திராவிட சிந்தனையாளர்கள் அல்ல பூரா தமிழ்தேசியவாதிகள்.. வெல்லும் தமிழ்..💪
  8. படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல............... தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............
  9. இஸ்ரேலை அழிப்பதோ அல்லது இஸ்ரேலை தோற்கடிப்பதோ எந்த காலமும் சாத்தியமில்லாத காரியம். ஏனெனில் இஸ்ரேல் தோற்கும் என்றொரு கட்டம் வந்தால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் நேரடியாகவே இஸ்ரேலுக்காக களம் இறங்கும். வசதிபடைத்த அரபுநாடுகள் புத்திசாலிதனமாக இந்த போரை தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கிகொண்டன அவர்களுக்கு தெரியும் மேற்குலகின் சக்திபற்றி, அதனால் இவ்வளவு காலமாக அவர்கள் பாலைவன பூமியில் கட்டியெழுப்பிய தமது சொர்க்க வாழ்வை இந்த பிரச்சனைக்குள் மூக்கை நீட்டி இழக்க தயாரில்லை. ஈரான் என்ற கலவர பூமியின் பேச்சை கேட்டு இன்று காசாவிலும் லெபனானிலும் ஏமனிலும் சிரியாவிலும் வளர்ச்சி பல ஆண்டுகள் வாழ்க்கை பின்னோக்கி போயும் பல தலைமுறைகள் அங்கவீனமாகியும் , கட்டியெழுப்பப்பட்ட பூமி சுடுகாடாகியும் எந்த ஈரான் பேச்சைகேட்டு இஸ்ரேலுடன் போர் என்று முழங்கியதோ அத்தனை ஆயுத குழுக்களும் முக்கால் பங்கு அழிந்து எலும்பு கூடாகியும் வெடிகுண்டாலும் ஏவுகணைகளாலும் இன்னொரு பாலைவனம் உருவாக்கப்பட்டுவிட்டது. போராடி பார்த்தோம் முடியவில்லை, எம்மைவிட எம் எதிரி சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது எமக்கு இழைக்கப்பட்டது அநியாயமாக இருந்தாலும் வேறு வழி இல்லை போராட்ட பாதையை மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் எஞ்சியிருக்கும் சந்ததியையும் முழுவதுமாக அங்கவீனர்களாகவும் குண்டுகளுக்கும் பலி கொடுத்து அனைத்தையுமே பறிகொடுத்து அடையாளத்தையே இழக்கவேண்டும். நமது போராட்டமும் வாழ்வும் காசா போலவே அமைந்தது ஆனால் எம்மை மீறிய சக்தி எம்மை வென்றபோது எஞ்சியிருந்த போராளிகளும் மக்களூம் ஆயுதமோதல்தான் தீர்வென்று அணிவகுக்கவில்லை, எமது மக்களின் இருப்பை உறுதி செய்ய வேறு வழியின்றி வேறு பாதையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டோம். எப்படி இந்தியாவை நம்பி எமது போராட்டம் அம்மணமானதோ அதேபோல ஈரானை நம்பி காசா ,லெபனான், ஏமன் கதை முடிகிறது. ஈரான் பாலஸ்தீன லெபனான் மக்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற புனித எண்ணம் கொண்டிருந்தால், இஸ்ரேல் காசாவின்மீது போர் பிரகடனம் தொடுத்த அடுத்தவாரமே பெய்ரூட் வழியாக தெற்கு லெபனானுக்கு தமது படைகளை நகர்த்தி இஸ்ரேலுக்குள் நுழைந்து போர் தொடுத்து காசா மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தியிருக்கவேண்டும். இன்றுவரை அப்பப்போ சிலநூறு ஏவுகணைகளை இஸ்ரேல்நோக்கி ஏவிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டது, இரண்டுமுறை இஸ்ரேல்மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளும் பாலஸ்தீன மக்களுக்கானதல்ல, முதல்தடவை சிரியாவின் தனது ராணூவ தளபதிகளை இஸ்ரேல் கொன்றதுக்காக , இரண்டாவதாக நசருல்லாவை இஸ்ரேல் கொன்றதுக்காக, தமது ஏவலாளிகள் இறந்த கோபத்தில் வந்த கோபம் அது, ஏதிலியான பாலஸ்தீன மக்கள்மீது கொண்ட அக்கறை அல்ல.
  10. 👋................. மாற்று என்று வேறு ஒன்று தமிழ்நாட்டில் இல்லாததால் தான் இவர்களையே மீண்டும் மீண்டும் நம்ப வேண்டியிருக்கின்றது. அதிலும் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்தில் மிக்க நம்பிக்கையை கொடுத்தார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியவர்களை விட இவர் வித்தியாசமானவர் என்று எண்ண வைத்தார். ஆனால் இந்த அரசின் தொடர் நடவடிக்கைகள் இவரும் அவர்களில் ஒருவரே என்ற ஒரு அயர்வையே இன்று கொடுக்கின்றது.................😌.
  11. பாவம் இதை நம்பி இங்கே உள்ள அழகிய கன்னிகளை இழக்கிறார்கள். 😂. அங்கேயாவது கிடைக்குமென்றால். ... அதுவும் சந்தேகம் இவர்களுக்கு இங்கே ஒன்றல்ல நான்கு வாய்ப்புகள் உண்டு” அவர்களின் சமயம் சொல்லி விட்டது எந்தவொரு அரசாங்கமே சட்டமே எதுவும் செய்ய முடியாது எங்களுக்கும் சமயம் இருக்கிறது பாருங்கள் ஒன்றே ஒன்று கண்ணே. கண்ணு. என்று இருக்கும்படி சொல்லி விட்டது 😂🤣. வாழவே பிடிக்கவில்லை குறிப்பு,....நம்ம விசுகு முதல் கருத்து பதிவார். 🙏
  12. 1) சமாதானப் பேச்சுவார்த்தையில் இவையெல்லாம் கருத்தில் எடுத்து ஒரு முடிவுக்கு வருவார்கள். அது தவிர, மேற்கின் கருவூலத்தில் இனிக் கை வைக்க இடமில்லை என்பதால் இரஸ்யாவின் வட்டிப் பணத்தில் கை வைக்கிறார்கள். அப்படியானால் இந்த யுத்தத்தை எத்தனை காலத்திற்குக் கொண்டு நடாத்த முடியும் என்று ஒரு கேள்வி எழுகிறதல்லவா? 2) யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்கிற உக்ரேனின் அவசரத்தை இது காட்டுகிறது. மேற்குலகில் ரஸ்யா நம்பிக்கை வைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் யுத்தத்தின் பங்காளிகள். சீனாவை உக்ரேன் நம்பாது . சீனாவும் யுத்தத்தின் பங்காளராக உக்ரேன் கருதுகிறது. எனவே இருவருக்கும் பொதுவான ஒரு மேடையை உக்ரேன் தேடுகிறது. அதற்கு இந்தியா பொருத்தமான தெரிவுதான். ஆனால் இந்தியாவிற்கு அந்தத் தகுதியும் திறமையும் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே எனது முடிவு. உலகில் பலவீனமான ஆனால் ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு நாடாக இந்தியாவைக் கருதினாலும் பேச்சுவார்த்தையை நடாத்தி வெற்றிகரமாக முடிக்கக் கூடிய வல்லமை இந்தியாவிற்கு இருக்கிறதா என்றால் அது இல்லை என்பதே உண்மை. தன்னைச் சுற்றியுள்ள மிகச் சிறிய நாடுகளையே வெல்ல முடியாத வெளியுறவுக் கொள்கையையும் இராசதந்திரக் கட்டமைப்பையும் கொண்டிருக்கும் ஒரு நாடு, உலக ஒழுங்கையே மாற்றியமைக்கும் ஒரு யுத்தத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாழும்?
  13. ஒரு கிராமத்தில் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் ஏறிப் பார்க்கிறார் அங்கு ஒரே ஒருவரைத் தவிர யாரும் இல்ல....... அவர்கூட ஒரு மாடுகள் மேய்ப்பவர் . ........ ஆயினும் தான் வாங்கிய ஊதியத்தின் பொருட்டு 1 1/2 மணிநேரம் பேசிவிட்டு இறங்கி வந்து அவரிடம் கேட்கிறார் ஐயா உங்களுக்கு நன்றி . ......நீங்கள் மட்டும்தான் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டிருக்கிறீர்கள் . ......எப்படி இருந்தது என்று . ......அதற்கு அந்த இடையர் கூறினார் ......சாமி நான் ஒருஇடையன் என்னிடம் நூறு பசுக்கள் இருக்கின்றன .....மாலையில் அவை பட்டிக்கு வரும்போது நிறைய உணவுகள் போடுவேன் . ....ஆனால் எதிர்பாராமல் வேளைக்கே ஒரு பசு மட்டும் வந்தால் அதுக்கு மட்டும் அளவான உணவைக் கொடுத்து விட்டு மிகுதியை ஒதுக்கி வைத்து விடுவேன் . ......! ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஊர் நிலவரத்தை நீங்கள் எப்படி சொன்னாலும் விளங்கப் போவதில்லை . ......இன்னும் ஒரு ஐந்து வருடம் போகட்டும் , அப்போது கொஞ்சம் புரியும் . ...... அதுவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும் . ......! உங்கள் வீட்டில் நாய் இருந்தால் அது எப்படியும் வீதியால் செல்லும் ஆட்களையோ அல்லது நாயையோ பார்த்துக் குரைக்கும் ........அப்போது அவரிடம் கேளுங்கள் ஏன் எங்களின் ஜிம்மி அவையளைப் பார்த்து குரைக்குது என்று கேளுங்கள் . ......அவரும் தயங்காமல் சொல்லுவார் அவையள் எங்கட வளவுக்க வராமல் விரட்டுது என்பார் ......... இது போன்றதுதான் எங்கள் ஊர் நிலைமையும் என்று சொல்லலாம் . ......பின்னாளில் அவர் விளங்கிக் கொள்ளட்டும் .........! 😂
  14. இந்தியர்களின் தற்கால நடவடிக்கைகள் அருவெருக்கதக்கதாகவும் அந்நாட்டு அரசுகள் மக்களை வெறுப்பேத்துவதுமாகவும் உள்ளது சந்தேகமேயில்லை. நீண்ட காலத்தின் முன்னர் இதற்கெல்லாம் முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் யாரென்று கடைசியில் சொல்லிவிடுகிறேன்: பொதுவெளியில் ஒண்ணுக்கடிப்பார்கள். ஹொலண்டிலிருந்து எல்லைவழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கஞ்சா கடத்துவார்கள். பொது தொலைபேசி பூத்துக்களில் நாணயத்தில் நூலைகட்டி உள்ளேவிட்டு விட்டு பல மணிநேரம் ஊருக்கு பேசுவார்கள். சிகரெட் மெஷினுகளுக்கு உள்ளே கள்ள காசு குத்தியை போட்டு பெட்டிபெட்டியாக எடுப்பார்கள். ஆட்டை திருடி அதனை டெலிபோன் பூத்துக்களில் வைத்து உரித்து பொலிசில் மாட்டுப்பட்டு அது பொது செய்தியாகி பெருமை தேடி தருவார்கள். வேலை செய்யும் பாமில் ஆட்டுடன் உடலுறவு கொண்டு அகில உலகமும் பெருமைபட அமர்க்கள படுத்துவார்கள். பிரான்சில் போதைபொருள் கடத்தலில் கொடிகட்டி பறந்து அதை சுந்தரலிங்கம் எனும் தமிழ் பொலிஸ் அதிகாரியை வரவழைத்தே அந்நாட்டு அரசு அடக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் பெரிய உணவகங்கள் ஹோட்டல்களிலிருந்து மது போத்தல்கள், பியர் கேசுகள், உரிச்ச முழு ஆடுகள் ,ஐஸ்ஸினால் இறுக்கப்பட்ட இறால் பெட்டிகளை குப்பை போடும் இடத்திற்கு கடத்தி சென்று பின்பு வீட்டுக்கு கடத்துவார்கள். சீட்டு பிடிக்கிறேன் என்று சொல்லி சொந்த இனம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை ஆட்டையை போட்டுக்கொண்டு அமெரிக்காவரை ஓடுவார்கள். வெள்ளைக்காரன் உடல் வேர்வை சிந்தி பயிரிட்ட வெங்காயம் உருளைகிழங்கை சாக்கை கொண்டுபோய் இரவிரவாய் மூட்டையில் அள்ளிக்கொண்டு ஓடுவார்கள். பல பெயர்களில் பதிந்து சமூக உதவிபணம் எடுத்து வாழ்வு தந்த அந்நாட்டு வரி செலுத்தும் மக்களின் பணத்தை இரக்கமின்றி சுவை பார்ப்பார்கள். கோவில் விழாக்கள், வாகன தரிப்பிடங்கள், திரையரங்குகளில் கோடாலி கொத்து துப்பாக்கி சூடு கத்தி சொருவல் என்று அந்நாடு மக்களே நடுங்கும்படி நடந்து கொள்வார்கள். இன்னும் இருக்கு ரொம்ப நீளமாக எழுதவேண்டிவரும் , எழுதிக்கொண்டுபோனால் எனக்கும் போரடிக்கும் யாராவது இதை படித்தால் அவர்களுக்கும் போரடிக்கும் . அவர்கள் யாரென்றால் சாட்சாத் ஈழதமிழர்களாகிய நாங்களேதான். இந்தியர்கள் இப்போது யோக்கியமில்லை, நாங்கள் அக்காலத்தில் யோக்கியமில்லை. ஆக இந்த சேற்றில் கல்லெறிந்தால் அது என்மீதும் தெறிக்க வாய்ப்பிருக்கு.
  15. தமிழ் கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு வரக்காரணம் என்னவென்று கூற முடியுமா? நீங்களும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறுகிறீர்கள், உங்கள் செயலற்ற தன்மை விடுவெளியை ஏற்படுத்திற்று, அந்த விடுவெளிக்குள் அவர்கள் புகுந்துள்ளார்கள். இதற்கு யார் காரணம்? எத்தனை ஆண்டுகள் அவகாசம் தந்து உங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து காத்திருந்தார்கள்? உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை.
  16. வீழ்த்த முடியாத கட்சி இல்லை சரி. ஆனால், வரும் தேர்தலில் வீழ்த்தக்கூடிய கட்சி இல்லை என நினைக்கின்றேன். அதேசமயம் @குமாரசாமி கூறியது போல் விஜய் கட்சி மூலம் எவ்வளவு தூரம் அரசியல் சாக்கடையில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் எதிர்வு கூறுவதற்கு கடினமானது.
  17. ஓம் கபடமான நோக்கம். இதுவரை அவ்வாறு குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்டு எழுதியதில்லை. எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு வைத்தால் மட்டுமே உள் நோக்கத்துக்கு தேவையானபோது சுலபமாக பயன்படுத்த முடியும். நானும் நீங்களும் நிச்சயமாக அந்த சாக்கில் இருப்போம். சந்தேகமே வேண்டாம்.
  18. அது ச‌ரி குருநாதா உங்க‌ட‌ க‌ன‌வு க‌ன்னி விஜேன்ட‌ அர‌சிய‌ல் வ‌ருகைய‌ ப‌ற்றி ஊட‌க‌ம் முன்ன‌ள் சில‌த‌ சொல்லி இருந்தா அந்த‌ காணொளி பார்த்திங்க‌ளா ஹா ஹா நான் பார்க்க‌ முத‌ல் நீங்க‌ள் பார்த்து இருப்பீங்க‌ள் என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது லொள்😁👍................................
  19. பயங்காவாதி நத்தனியாகு பங்கருக்குள்ளாலை வெளியில் வந்து விட்டாரோ இல்லை அங்கை தானோ? மேற்கு ஊடகமே 5 பேர் இறந்ததாக கூறும் போது 100 விமானங்கள் எங்கை குண்டுகளை போட்டவைஎன தெரியவில்லை. இஸ்ரேல் காரர் பலஸ்தீன அகதி முகாம்களுக்கு மேல் குண்டுகளை போடத்தான் லாயக்கு போல .
  20. தமிழ்ரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் மற்றும் பார் சிறீதரன் உள்ளடங்கலாக 3 ஆசனங்களை வெல்லும். டக்ளஸ் அங்கிளும் வெல்லுவார். எஞ்சிய இரு இடங்களை கஜே மற்றும் அநுர தரப்பு வெல்லலாம். தவம் அழுகின மாம்பழங்களை வெல்லலாம்!😂
  21. துணை முதல்வர் அவர்களே என்றும் வரணும்.
  22. எல்லோரும் நிறைய எழுதி விட்டார்கள் அவர்கள் எழுதாமல் விட்டவற்றை எழுதுகிறேன் 1, வேலைவாய்ப்பு இல்லை 2, எப்படி எத்தனை. வருடங்களாக பத்தாவது வகுப்பு படித்தாலும் சித்தி அடைய முடியவில்லை 🤣 3,..எனவே பகல் 7 மணிக்கு வாசிகசாலை மதிலில். ஏறி இருந்து பாடசாலைகளுக்கு போகும் பெண் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருப்பதுடன் கிண்டலும் பண்ணுவதுண்டு மதியம் வீட்டில் அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு கொஞ்சம் நித்திரை கொண்ட பின்னர் சரியாக பிற்பகல் 4 மணிக்கு அதே மதிலில். ஏறி இருந்து விடுவேன் [ இப்படி கடும் முயற்சிகள் செய்தமையால். தான் பாட்டி மாட்டிக்கொண்டார் ] 4,.....எங்களுக்கு நிறைய தோட்டங்கள் இருந்தது ஆனால் செய்ய விரும்பவில்லை ஏனெனில் அது ஒரு கூடாதா தொழில் ஜேர்மனியில் பல வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்தேன் பணம் பணம்,.......ஜேர்மன் பணத்தை எட்டால். பெருக்க தொடங்கிய நாங்கள் இன்று 360 ஆல். பெருக்கிக்கொள்கிறோம். 5,....இந்த நாட்டு கடவுச்சீட்டில் உலகத்தை சுற்றி வரலாம். 6. பல்கலைக்கழகம் வரை படிக்கலாம் 7,.வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகள் பின்னால் வருடக் கணக்கா அலைய வேண்டியதில்லை 8,..கூலி வேலை. செய்பவனுக்கும். ஒய்வு ஊதியம் உண்டு வயோதிப காலத்தில் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை ஏதாகினும் பிழையாக. எழுதி இருந்தால் மன்னியுங்கள் பாஞ்ச் அண்ணை 🙏
  23. சீனா வெள்ளநிவாரண நிதியாக 30 மில்லியன் நன் கொடையாக வழங்கியுள்ளது, ஐ எம் எப் கூட இதுவரை எந்த வித எதிர்மறையான கருத்துக்களை கூறவில்லை, ஆனால் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல 400 பில்லியன் ரூபாவினை (பாதீட்டிற்கு மேலாக என கருதுகிறேன்) புதிய அரசு செலவழித்துள்ளது என்பது உண்மையானால் அதற்கான நிதியத்தினை எங்கிருந்து பெற்றது எனும் கேள்வி எழுகிறது. இந்த செய்தி அந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டான கருத்திற்கு கூறப்பட்ட பதிலாக இருக்கலாம், ஆனால் உண்மையினை நீண்ட காலத்திற்கு மறைக்க இயலாது, அந்த செய்தி உண்மையாக இருக்குமா(400 பில்லியன் ரூபாவினை) என்பதில் கொஞ்சம் நம்பிக்கை குறைவாக உள்ளது ஏனெனில் ஐ எம் எப் இன் கணக்காய்விற்கு வராமல் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் ஐ எம் எப் இன் ஆதரவை இழக்க வேண்டிய நிலை உருவகும் அதன் மூலம் மேலதிக நிதி உதவி பெறுவதில் சிக்கல் நிலை உருவாகும் ஆனால் 2028 இல் தான் இலங்கை கடன் திருப்பி செலுத்தும் நிலையில் உள்ளதால் அதுவரை ஐ எம் எப் இன் உதவியில்லாமல் இலங்கையினால் சமாளிக்க முடியும் என கருதுகிறேன் (ஐ எம் எப் கடனுதவி 2 பில்லியன் மொத்தமாக என கருதுகிறேன்) ஆனால் கடன் வழங்கியவர்கள் கடுமையான நிபந்தனைகளை ஐ எம் எப் இல்லாவிடில் விதிக்கக்கூடும் என கருதுகிறேன். ஆனால் இந்த செய்தி உண்மையானால் இலங்கையிற்கு ஒரு மோசமான ஆட்சியின் மூலம் மோசமான எதிர்காலம் உருவாகலாம், அது இலங்கை தொடர்பான மோசமான விம்பத்தினை சர்வதேச நிதிச்சந்தையில் உருவாக்கிவிடும் அது ஒரு நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
  24. வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா ......! --- தாழையாம் பூ முடிச்சு ---
  25. இணைப்புக்கு நன்றி @சுப.சோமசுந்தரம் அவர்களே.
  26. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் முன்பெல்லாம் கட்சியின் தொண்டர்களே இதனை செய்வது வழக்கம். இதில் இரண்டு விடயங்கள் புரிகிறது. ஒன்று கட்சிக்கு தொண்டர்கள் இல்லை இன்னொன்று பணம் விளையாட தொடங்கி விட்டது. இரண்டும் எதிர்காலத்தில் பெரிய தாக்கங்களை கொண்டு வரும்.
  27. 18 வது கேள்வியும் யாழ்மாவட்ட தேர்தல் தொகுதிக்கானது
  28. தவெகவின் மாநாட்டில் இரண்டு ஈழத்துக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய பவதாஜினி நாகராஜன் ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் பாடல்களுக்கு இசையமைத்த கண்ணன் மாஸ்ரர் அவர்களின் பேத்தியார். அடுத்தவர் ஈழத்து எழுத்தாளரும் பாடலாசிரியருமான தன. ரஜீவன் அவர்கள். நேற்று அந்த அரங்கிலே ஒலிபரப்பி வெளியிடப்பட்ட தவெகத்தின் கழகப் பாடலை இவரே எழுதியிருந்தார். முதற் தடவையாக தமிழக அரசியல் மேடையில் பயன்படுத்தப்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் இவர்களே. #இணுவையூர்_மயூரன் (முக நூல்)
  29. 🤣ஆசை தோசை அப்பளம் வடை..! தேர்தல் வருகுது, இந்த நேரம் விடுமுறையாவது உரோமவாவது? இதுக்குத் தான் இரட்டைத் திரை கம்பியூட்டர் பாவிக்கிறது😎!
  30. அடேங்கப்பா! உங்கள் குழுவாதத்திற்கு என் பாராட்டுக்கள்.😄 உங்கள் கருத்திற்கு நன்றி செலுத்தியவர் யாழ் களத்தை கண்ணியமாகவும் கலங்காமலும் பார்த்துக்கொள்வார் என நான் நம்புகின்றேன்.🤣 நீங்கள் உங்கள் மனதை சிதறிடிக்காமல் நீண்ட விடுமுறையை கழிக்க என் வாள்த்துக்கள்.😎
  31. யாழ் களத்தில் 20 வருடத்திற்கு மேலாக அரசியல் ஆய்வுகள் செய்து Phd பெற்ற டொக்டர்கள் நிலை அனுரகுமார திசநாயக்கவுக்கு ஊது குழலாக இருப்பதில் முடிவடைந்துள்ளது 🤣
  32. நான் எனது சொந்த மண்ணில் இருந்து, என் பூர்வீக மண்ணில் இருந்து துரத்தப்பட்டேன். இதில் எங்கே ஐயா வருகிறது இனத்துவேசம்? இது அல்லவா நீங்கள் வந்த காரணம் - அப்படியாகின் வந்த காரணம் (பொருளாதாரம்?) எதுவோ அதை சொல்லுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் எமக்கு இலங்கை தீவில் நிகழ்ந்த, நிகழ்கிற அநீதியை மட்டும் சொல்லாமல் விட வேண்டாம். கதை போல சொல்லலாம்.
  33. பிகு விஜை செய்ய வேண்டியதில் மிக முக்கியமானது திமுகவை எந்தளவு அடிக்கிறாரோ அதை விட ஒரு படி மேலாக பிஜேபியை அடிக்க வேண்டும். நேற்று திமுகவை சாடிய அளவுக்கு பிஜேபியை சாடவில்லை. இது மாற வேண்டும். குறிப்பாக கொள்கை விடயங்களில் - போட்டு வெளுக்க வேண்டும். இல்லா விட்டால் இலகுவாக திமுககாரர் இவரை பிஜேபி பி டீம் என பிரச்சாரம் செய்து விடுவார்கள். சீமான் உண்மையிலே பி டீம் போல கொள்கை விளக்கம் கொடுத்தமையால் அவருக்கு அது சரியான பெயர்தான் - ஆனால் இதையே விஜைக்கு பாவிக்க இம்மியளவும் விஜை இடம் கொடுக்க கூடாது. அதற்கு ஒரே வழி பிஜேபியை மிதிப்பதுதான். குறிப்பாக கொள்கைகளை.
  34. உண்மையை அவரது வயதில் உள்ள ஒரு பிள்ளை விளங்க கூடியவாறு நீங்கள் சொல்லவேண்டும். இரண்டாவது நீங்கள் ஒரு அப்பியாசகொப்பியில் உங்கள் வாழ்க்கை வரலாறை எழுதி பத்திரமாக வைத்துவிடுங்கள். நான் எனது தந்தை, தாயிடம் கேட்டு அதை செய்து வைத்துளேன். எனது பிள்ளைக்கும் அது தெரியும். நானும் நான் கடந்து வந்த பாதையை எழுதி வைக்கிறேன். ஒரு நிரந்தர இடம் இல்லாத சமூகம் தனது பூர்வீகம் தொடர்பான அறிவு, பெற்ற பாடங்கள் என்பவற்றை வாய் மொழி மட்டுமல்ல எழுத்திலும் எழுதி வைத்துவிட்டு போகவேண்டும். எப்படி அன்று யூதர்கள் மற்றும் பூர்வீக குடிமக்கள் செய்தார்களோ அதுபோல் வரலாற்றை அடுத்ததைமுறைக்கு சொல்லுவது மிகவும் அவசியம். அது உங்கள் பணி, கடமை (moral obligation). நடந்த விடயங்கள் பற்றிய நியாங்கள், உண்மை, சரி/பிழையை அந்த வரும் கால சமூகம் தங்கள் வாழ்கிற கால நீரோட்டத்துக்கு ஏட்ப தீர்மானிக்கட்டும். நீங்கள் அது பற்றி அதிகம் யோசிக்கவேண்டியதில்லை.
  35. "2 k kids "யூ டியுப் ஆய்வாளர்களே அப்படி சொல்லும் பொழுது யாழ்கள ஆய்வாளர்கள் ஆய்வு எப்படியிருக்கும் அதுவும் 20 வருடத்திற்கு மேலாக யாழ் களத்தில் அரசியல் ஆய்வு செய்து Phd பெற்றவர்கள் அல்லோ😅
  36. இப்ப விளங்குகிறது, நன்றி. இந்தப்போட்டியில் 17 புள்ளிகள் கிடைக்கும் சரியாக ஆம் இல்லை என்பதனை தெரிவு செய்தால், இது ஒரு நியாயமான புள்ளியிடும் முறைதான், தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.
  37. கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.
  38. பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........! 😂
  39. என்னது 160 விமானங்கள் தாக்கி 4 பேர் தான் இறந்துள்ளார்களா?? இனி மேல் இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை நடத்தாது என நினைக்க தோன்றுகிறது. தவிச்ச முயல் அடிக்க தான் இஸ்ரேல் லாயக்கானது.😁
  40. ஒரு கோடி யூத‌ இன‌ ம‌க்க‌ளுக்காக‌ அமெரிக்கா ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆள் ஆகின‌ம் யூத‌ர்க‌ள் ஒன்றும் ம‌னித‌ புனித‌ர்க‌ள் கிடையாது..................யூத‌ர்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று ஒரு க‌தைய‌ அவுட்டு விடுகின‌ம்..................க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் இப்ப‌டி ப‌டு மோச‌மாய் ஒரு போதும் ந‌ட‌ந்து கொள்ள‌ மாட்டின‌ம் ச‌க‌ ம‌னிதர்க‌ளை நேசிக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் எப்ப‌டி தாத்தா அவ‌ர்க‌ளை க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று அழைக்க‌ முடியும் நான் போரை விரும்புவ‌ன் கிடையாது....................இஸ்ரேல் என்ர‌ நாடு உருவான‌தில் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணையா நின்ற‌ ப‌டியால் தான் யூத‌ர்க‌ள் இந்த‌ ஆட்ட‌ம் போடுகினம்.....................ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ப‌ல‌ நாடுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நெத்த‌னியாகு இன்னொரு ஹிட்ல‌ர் போல் தான் வாழ்கிறார் குறுகிய‌ கால‌த்தில் 40ஆயிர‌ம் அப்பாவி ப‌லஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று இந்த‌ நூற்றாண்டின் மிக‌ப் பெரும் கொடுர‌ன் என்ற‌ பெய‌ர் எடுத்த‌து நெத்த‌னியாகு தான்😉.............................
  41. இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள சொத்தில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார். டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க சொத்து எழுதி இருக்கிறார். இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம். இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அத்தோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/197093

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.