Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1569
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19123
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7051
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/01/24 in Posts

  1. எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
  2. அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.
  3. நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு நாடகம் ஆடினார், ஆளுனர் தன் எசமானுக்காக, யுடியூப்பர் தன் வருவாய்க்கான நாடகம் ஆடினர். நாடகமோ, நாட்டியமோ, வீதி திறப்புக்கு சிறிதோ, பெரிதோ ஆவன செய்த அனைவருக்கும் பாராட்டுகள். புலம்பெயர் தேசத்தில் இருந்து எதுவும் செய்யாமல் பல்லு குத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  4. "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" "விளையாட ஒரு துணை வந்தது விழுந்தால் கைகொடுக்க கை வந்தது விவேகம் படைத்த தம்பி பிறந்தான் விழிப்பு அடைந்து பொய்களை எறிந்தேன்!" "யாழ்மத்திய கல்லூரி என்னை வரவேற்றது யானை முகத்தானின் உண்மை அறிந்தேன் யாகத்தீயில் சமயம்சாதி போட்டு எரித்தேன் யார் என்பதின் விளக்கம் அறிந்தேன்!" "அறிவிற்கு பத்தொன்பதில் பேராதனை சென்றேன் அயராது படித்து பொறியியல் கற்றேன் அறுபது ஆயிரம் கனவு கண்டேன் அடையாளம் மறுக்கும் அரசை வெறுத்தேன்!" "ஆக்கம் கொண்ட சமூகம் வேண்டும் ஆசை அடக்கம் இரண்டும் வேண்டும் ஆதிரனாக என்றும் வாழ வேண்டும் ஆராய்ந்து எடுக்கும் திறன் வேண்டும்!" "இறுமாப்பு என்னுடன் பிறந்த ஒன்று இதயங்கள் என்றும் உண்மை ஒளி இகழ்ச்சி புகழ்ச்சி கடந்து வாழபவன் இன்பம் துன்பம் சமமாக மதிப்பவன்!" "ஈரம் இல்லா உலகமும் பார்த்தேன் ஈவிரக்கம் அற்ற அரசையும் கண்டேன் ஈன்றவளும் இல்லை இணைந்தவளும் இல்லை ஈசனைக் கேள்விகேட்க நெஞ்சம் துடிக்குதே!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தேன் உண்மையைக் காண பகுத்தறிவு கொண்டேன் உண்பது நாழி உடுப்பவை இரண்டே உணர்ந்து நடந்தால் மனிதம் வாழுமே!" "ஊரை விட்டு ஊரு போனேன் ஊசி முனையில் உயிரைப் பிடித்தேன் ஊதிக் கெடுக்கும் கொடியவர் முன்னே ஊமையாய் இருந்து கடந்து சென்றேன்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினேன் எண்ணங்கள் வளர்த்து அறிவைக் கூட்டினேன் எச்சில் இலை நக்குவான் அல்ல எரிவனம் கண்டு அஞ்சுபவனும் அல்ல!" "ஏற்றம் இறக்கம் என்னை வாட்டவில்லை, ஏழை பணக்காரன் என்னிடம் இல்லை ஏசி எவரையும் திட்டுவதும் இல்லை ஏமாற்று பேர்வழியை நம்புவதும் இல்லை!" "ஐயம் அற்ற வாலிப பருவத்தில் ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தேன் ஐதிகம் மதம் சடங்குகள் அறியேன் ஐயன் என்னை வாழ விடுங்கள்!" "ஒருவராய் இருவராய் பலராய் திரிந்தேன் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தேன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒதுங்கிப் போனால் இருப்பதும் போகும்!" "ஓடும் உலகில் நானும் ஓடினேன் ஓதி எவரையும் கெடுக்க மாட்டேன் ஓசைநயம் கொண்ட வாழ்க்கை வாழு ஓரமாய் பதுங்கும் வாழ்வைத் துற!" "ஒளவையார் உரைத்த அறிவுரை ஆகினும் ஒளதடமாய் ஏற்றத்தை மட்டும் எடுப்பேன் ஔவியம் என்னும் அழுக்காறு இல்லை ஔரப்பிரகம் என்னும் ஆட்டுமந்தை நானல்ல!" "எளிமை வாழ்வு தூய்மை தர எதிலும் பற்றற்ற தனிமை வர எனக்குள் நானே எதையும் அலச என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "பச்சிளம் குழந்தையாய் தவழ்ந்து வளர பருவ வாலிபனாய் முரடாய் நடக்க படிப்பு கொஞ்சம் திமிராய் மாற பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "நானாய் வாழ அமைதி தேடினேன் நாலும் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் நாயாய் அலைகிறான் என்று கூறினர்!” "உறங்கி கிடைக்கா நெஞ்சு ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் உருவம் மாற்றும் வயது ஒருபக்கம் உறவை நினைக்கும் மனது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது என்னவளை நினைக்க அழுகை வருகுது எழுதுகோல் எடுத்து ஆத்திரம் தீர்க்கிறேன் எழுச்சி கொண்ட தேசம் தேடுகிறேன்!" "பேச்சு மூச்சு நிற்க முன்பு பேயென என்னை விரட்ட முன்பு பேரப் பிள்ளைகள் சூழ்ந்து நிற்க பேரானந்தம் தரும் மரணம் தழுவட்டும்!” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. தான் கேட்டு வீதி திறக்கப் பட்டதாக சுமந்திரனே உரிமை கோரவில்லை இன்னும். ஆனாலும், "சுமந்திரன் லவ்வர்ஸ்"😎 இப்பவே உறுத்தலில் கதையெழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த வீதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் கஜேந்திரன் பற்றைக்குள் பாய் போட்டு படுத்து போராடியிருந்தால், இப்போது வீதி திறக்கப் படும் போது அந்தப் படங்களையெல்லாம் போட்டு புலவர் போன்றோர் இங்கே பிரச்சாரம் தொடங்கியிருப்பர் இப்போது! இப்பவோ #தொண்டையில முள்ளு😂
  6. " ஆடு தானாக வந்து மாலைக்குள் தலையைக் குடுக்குது " ........! 😂
  7. கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் சேரின் கடுமையான முயற்சியின் பின்னர் திறக்கப்பட்ட வீதியை மெச்சுவதை விடுத்துக் கொச்சைப்படுத்தலாமா? சுமந்திரன் சேர் அநுர ஆட்சியில் அமைச்சரானால் இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவார்!
  8. 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள் 2 நாள்ல திறக்கபோறாங்கள் எண்டு தெரிஞ்சுதான் பயபுள்ள அறிக்கை விட்டிருக்காரு போல, இனிமே என்ன அச்சுவேலி வயாவிளான் வீதியை நான் சொல்லியே ஜனாதிபதி திறந்து வைத்தார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு ஆயுதமா பயன்படுத்தலாம்.
  9. ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி. ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன். சரியா நான் சொல்வது?
  10. உங்களுக்கு என்னப்பா காசை உழைச்சு செயார் மார்க்கெற்றில போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருந்து பந்தி பந்தியா எழுதிவியள்.. 😂நமக்கு உழைக்கபோனாதான் சோறு.. எப்படியாவது நேரம் ஒதுக்கி பதில் எழுதுறன்..
  11. இனி நான் கந்தையரை றோட்டில தெருவில கண்டால் இப்பிடித்தான் கண்டும் காணாத மாதிரி.....
  12. ம் ..... எப்படி பெருமையாய் இருந்த பெயரை இப்படி நாறடிச்சிட்டாங்களே, இனி கந்தையா என்ற பெயர் உள்ளவர்கள் வெளியில் சொல்லவே பயப்படுவார்கள். சும்மா பகிடிக்கு.
  13. புத்தன் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி.🙂
  14. கந்தையா57 க்கு பதிலாக சனம் கந்தப்பு என்று நினைக்கப்போகுது 😳
  15. மெய்யழகன்: வெப்பம் மிகுந்த நாளில் குளிரோடையில் கால்களை நனைத்த மாதிரி ஒரு அனுபவம். கோடை காலத்தில் தாகத்துடன் இருக்கும் போது எவராவது சில்லென குளிரும் lemon juice தரும் போது கிடைக்கும் அந்த பேரானந்தம். மனசையும் இடைக்கிடை கண்களையும் பனிக்க வைத்த படம். ஊருக்கு கன நாட்களின் பின் போன, பழகிய நண்பர்களை, உறவுகளை மீண்டும் கண்டு மெய்சிலிர்த்த அனுபவங்களை எமக்கு இப் படம் மீண்டும் அருட்டுகின்றது.. அதுவும் அந்த சைக்கிள்! அருமையான படம்!
  16. இறந்தவர்கள் எவரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை. ஆனபடியால் தரக்குறைவாக இருந்தாலும் நீங்கள் இன்றே வாங்கிப் பாவியுங்கள்.
  17. செய்தி வடிவாக. வாசித்தீர்களா.?? அரசாங்கம் இலவசமாக வீடு கொடுக்கமாட்டாது கொழும்பில் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை வாடகைக்கு வீடு எடுத்து கொழும்பில் இருக்க கூடாதா?? அரச தனியார் உத்தியோகத்தர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் இல்லையா?? இவர்களுக்கு மட்டும் ஒசி வீடு தேவையா?? இது வரவேற்கப்படுகின்றன… நல்ல முடிவு
  18. வெறித்தனமாகப் பேசினால் நம்பி விடும் கூட்டம். நான் முகநூலில் பல வருடங்களுக்கு முன்னமே சீமான் போக்கு பிழை என்றும் அறிஞர் அண்ணாவை தெலுக்கர் என்று சொல்பது பிழை என்றும் சொன்னப்பொழுது கடிக்க வந்ததால் facebook கையே இழுத்து மூடி விட்டேன்
  19. 🙄........... நேற்று நியூஸ் 18 தொல்.திருமாவை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். மிகவும் கண்ணியமாக, நிதானமாக அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார், உரையாடியிருந்தார். விஜய்யின் பல பாசாங்குகளை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லியிருந்தார். சீமான் வழமை போலவே கூடி இருப்போர் கைதட்ட வேண்டும் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார். சீமானின் ரசிகர்கள் தவிர்த்து, பொதுவானவர்கள் இதைக் கேட்டு முகச்சுழிப்பு ஒன்றையே காட்டுவார்கள். இதையே தான் விஜய்யும் செய்தார். ஒரு சினிமா போல 'ப்ரோ, பாயாசாம் - பாசிசம், ............' என்று கைதட்டல்களுக்காக சாரம், பொருள் எதுவுமின்றி வெறுமனே ஒரு ஃபர்பாமன்ஸ் காட்டி விட்டு போய்விட்டார்............ இப்படியே போனால் இந்த இருவரும் - சீமான மற்றும் விஜய் - தேறப் போவதில்லை.
  20. தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் சிங்களச் சிறைக்கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த தாயகம் என்றும் நிறுவும் நோக்கத்திற்காக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு மட்டுமன்றி, அதனுடன் தொடர்புபட்ட் ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் வளங்களைப் பாவித்து வந்தார். ஆனால் ஜெயவர்த்தனவின் திட்டமான தமிழர் தாயகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பூரணமாக இராணுவமயப்படுத்துவதற்கு அவருக்கு பெருமளவு நிதியும், வளங்களும் தேவைப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினத்தின் மீதான இனவழிப்பு அரசின் நிதியிருப்பை வெகுவாகப் பாதித்திருந்தது. திறைசேரி முற்றாகக் காலியாகியிருந்தது. ஆகவே "தெற்கில் ஏற்பட்டுவரும் கலவர நிலையினை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் வாழும் நிலமற்ற சிங்கள மக்களை வட கிழக்குப் பகுதியான வெலி ஓயவில் குடியேற்ற நிதியுதவி" என்கிற போர்வையில் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது திட்டத்திற்கு உலக வங்கியிடம் கோரிக்கை ஒன்றும் ஜெயாரின் அரசால் முன்வைக்கப்பட்டது. ஜெயாரின் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்று குறித்து நான் அறிந்திருந்தேன். மகவலி அபிவிருத்தித் திட்டத்தில் "L" பிரிவில் பணப்பயிர்களான மரமுந்திரிகை மற்றும் சோயா ஆகிய‌வற்றைப் பயிரிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கவென்று இரு இஸ்ரேலிய விவசாய நிபுணர்களை அரசு அமர்த்தியது. அவர்களுள் ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். மற்றையவர் சோயா பயிற்ச்செய்கையில் இஸ்ரேலின் நெகேவ் பாலைவன பயிர்ச்செய்கைத் திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் 1984 ஆம் ஆண்டு கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலினால் இம்முயற்சி கைவிடப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி லலித் அதுலத் முதலி தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இணைந்த படைகளின் கட்டளை மையத்திற்கு வழங்கப்பட்ட கடமையினை அவர் பொறுப்பெடுத்தார். வைகாசி முதலாம் வாரத்தில் அவர் மாங்குளத்திற்குச் சென்றிருந்தார். வவுனியாவில் மலையகத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருந்த பகுதிகளுக்கு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத்தையும் லலித் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவரது பயணத்தை பதியும் அரச ஊடகவியலாளராக நானும் அவருடன் சென்றிருந்தேன். தமிழ் தொழிலதிபர்களால் அமைக்கப்பட்ட பல பண்ணைகளில் இரு பண்ணைகளான கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் நாம் சென்றோம். லலித்தின் விஜயத்தின் பின்னர் ஓரிரு மாதங்களிலேயே அங்கு குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அரசு அடித்து விரட்டியிருந்தது. ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தனவும் அவரது அணியினரும் எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர். ரவி ஜெயவர்த்தன ஆனி 21 இலிருந்து ஆடி 1 ஆம் திகதிவரை இஸ்ரேலிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இஸ்ரேலினால் பலஸ்த்தீனர்களின் தாயகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லையோரக் கிராமங்கள் அனைத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார். மேற்க்குக்கரையில் ஆயுதமயப்படுத்தப்பட்டிருக்கும் யூதக் குடியேற்றவாசிகளையும் அவர் சந்தித்தார். யூதக் குடியேற்றங்களை உருவாக்குவதில் இஸ்ரேலிய அரசுகள் கைக்கொண்ட நடைமுறையினை நன்கு அறிந்துகொண்டதுடன், பலஸ்த்தீன ஆயுத அமைப்புக்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள யூதக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார். சட்டர்டே ரிவியூவில் வந்த அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கு ரவி ஜயவர்த்தனவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர் பதவியா பகுதியில் மிக மும்முரமான சிங்களக் குடியேற்றங்கள ஏற்படுத்தப்படலாயின. பலஸ்த்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் செய்துவரும் அவசர அவசரமான யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பான பாணியில் இச்சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கொழும்பில் இடம்பெற்ற அரச மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த பதவியாவை அநுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரதேசத்தின் நிர்வாகம் இணைந்த பாதுகாப்புப் படைகள் கட்டளைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தமிழர்கள் இப்பகுதிக்குள் நுழைவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டது. இப்பிரதேசமும் வலி ஓய என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு புதிய பெயர் அல்ல. மணல் ஆறு எனும் தமிழ்ப் பெயரின் நேரடிச் சிங்கள மொழிபெயர்ப்பே இந்தப் பெயர் ஆகும். மணல் என்பது சிங்களத்தில் வலி என்றும், ஆறு என்பது ஓய என்றும் அழைக்கப்படுவது தெரிந்ததே. மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த பகுதிகளுக்குள் ஐப்பசி 1984 இல் நுழைந்த சிங்கள அதிகாரிகளும், இராணுவத்தினரும் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறவேண்டும் என்று அச்சுருத்தினார்கள். பல தமிழ்க் குடியேற்றவாசிகள் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் குடிசைகள் எரியூட்டப்பட்டதுடன், பயிரிடப்பட்ட நிலங்களும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன. இவ்வாறே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு,ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பின்படி கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதுடன் அவை திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்துப் பத்திரிக்கையாளர்களுடன் சில நாட்களின் பின்னர் பேசிய லலித் அதுலத் முதலி, திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றிற்கான நிலம் ஒன்று நெடுங்காலமாகத் தேடப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான நிலம் இவ்விரு பண்ணைகளிலும் கிடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொடவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கைதிகளுக்கான முன்மாதிரியான திறந்தவெளிச் சிறைச்சாலைத் திட்டம் குறித்து லலித் கிலாகித்துப் பேசினார். சிறைச்சாலைகளில் நன்நடத்தையினை வெளிக்காட்டும் கைதிகளுக்கு அரச காணிகளில் குடியேறி தமது வாழ்க்கையினை தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கும் திட்டமே அதுவாகும். ஆனால் இத்திட்டத்திற்கான காணிகளைத் தொடர்ச்சியாக‌ சிறைச்சாலைகள் அமைச்சு கண்டுபிடிப்பதில் இருந்த சிக்கலினால் இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆகவே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் ஆதுமீறி ஆக்கிரமித்து நின்ற மலையகத் தமிழர்களை தம்மால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பண்ணைகளில் 150 சிங்களக் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் குடியேற்றப்போவதாக லலித் அதுலத் முதலி அறிவித்தார். பதவியா சிங்களக் குடியேற்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ கொமாண்டோ அணி ஆனால் திறந்த சிறைச்சாலை எனும் திட்டத்தினூடாக சிங்கள அரசு செய்ய நினைப்பது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியினை அரச ஆதரவில் சிங்களமயப்படுத்துவதுதான் என்பதை தமிழர்கள் மிகவும் தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். இக்காலப்பகுதியில் சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அமிர்தலிங்கம் அரசின் இந்தத் திட்டத்தினை கடுமையாகக் கண்டித்தார். பி பி சி இன் தமிழ்ச்சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில், "இந்த திறந்த சிறைச்சாலைத் திட்டம் தெற்கின் எங்கோ ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தால் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதிக்குள் அப்பட்டமான சிங்களக் குடியேற்றத்தினை திறந்தவெளிச் சிறைச்சாலை எனும் போர்வைக்குள் அரசு நடத்துகிறது" என்று கூறினார். மலையகத் தமிழர்களை அடக்குமுறையினைப் பாவித்து பலவந்தமாக கென்ட் - ‍ டொலர் பண்ணைகளில் இருந்து அரசும் இராணுவமும் அடித்துவிரட்டியதை தொண்டைமானும் கடுமையாகக் கண்டித்திருந்தார். தனது கண்டனத்தை அமைச்சரவையில் அவர் பதிவுசெய்தார். தமிழர் தாயகத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அப்பட்டமான சிங்களக் குடியேற்றம் தமிழர்களைப் பெரிதும் கோபப்பட வைத்திருந்தது. சென்னையில் இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், "இது ஒரு முற்றான ஆக்கிரமிப்பு" என்று கூறியிருந்தார். ஏனைய போராளி அமைப்புக்களும் இதுகுறித்த தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. ஆனால் பிரபாகரன் மெளனமாக இருந்தார். அவர் தனது போராளிகளை இதற்கான பதிலை வழங்குவதற்குத் தயார்ப்படுத்தியிருந்தார்.
  21. நீங்கள் அவரை நோக்கி "தொப்பி பிரட்டி" என்று இஸ்லாமியரைக் குறிக்கும் வசைச் சொல் பாவிப்பதைக் கண்டிருக்கிறேன். "இங்கே நிற்கும் மூவரையும் உற்றுக் கவனித்தால் ஒரு ஒற்றுமை தெரியும் பாருங்கள்" என்று ஒரு இடத்தில் dog whistle விட்டிருந்ததையும் கவனித்திருந்தேன்😂! உங்கள் அளவுக்கு ஏழாம் அறிவு எனக்கு இல்லை! ஆனால், எப்படி அறிந்தீர்கள், எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள்? ஒரு பேச்சுக்கு உங்கள் ஊகம் உண்மையாக இருந்தால் கூட, கருத்துகளுக்குப் பதில் எழுதாமல் அவர் சார்ந்த மதக் குழுவைக் குறி வைத்து வசவுகளை எறிவதும் விதி மீறல் அல்லவா?
  22. இது நிகழ சாத்தியமில்லை என நினைக்கிறேன். நாசா ரொக்கற் விட்ட விபரத்தையே "யூ ரியூபர் வந்து சொன்னால் தான் நம்புவேன்" என்று இருக்கும் தமிழ் புலம்பெயர் விசிறிகள் இருக்கும் போது எப்படி இந்த வியாபாரம் படுக்கும்? (நாசா உதாரணம், ஏனெனில் நாசா பல ஆண்டுகளாகவே தன் செயல்பாடுகளை தனியாக இணையத் தளம் வைத்து பொது மக்களுக்கு மிகவும் சிறப்பாக பிரபலப் படுத்தி வருகிறது. அதை அறியாமல் யூ ரீயுபர்களின் பொய்களை நம்பி "அமெரிக்கா சந்திரனில் இறங்கவில்லை" என்று நம்புவோர் எம்மிடையே இருக்கிறார்கள்)
  23. இங்கே "கூட்டங்கள், குழுக்கள்" தான் அவதாராக யாழில் இருக்கிறார்களா? இது நான் அறியாத விடயம்😎. நான் நினைத்தேன், தனி நபர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், எனவே அந்த தனி நபர் நோக்கி நீங்கள் செய்வது போன்ற வசவுகளை வீசும் போது அது தனி நபர் தாக்குதலாக இருக்கிறதென. இன்னொரு கேள்வி, ஐலண்ட் எந்தக் "கூட்டம்" என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?
  24. எனக்குத்தெரியும் நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவனில்லை என்று. நானிருக்கும் இடத்தில் அப்படியொரு நிதி சேகரிப்பு நடைபெறவும் இல்லை. அதனால் அதை கூறிவிட்டு கடந்து சென்றுவிடுவேன். அதற்காக ஒருவர் எதற்கெடுத்தாலும் போராட்டத்த்தையும் தலைவரையும் கொச்சைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்??
  25. செவ்வாய் [29/10/2024] தரணியில் வந்த என் பேரப்பிள்ளைக்கு, மனமார வாழ்த்துக்கள்!! வியாழன் இரவு, 31 /10 / 2024 என் கையில் வீடு வந்து தழுவினார். இதை விட, வேறு என்ன பிறந்த நாள் 01/11/2024 பரிசு, தேவை எனக்கு ? "மழலையின் மொழி கேட்டு" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் குழவியை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "குழவி தளர்நடை கண்டு குதூகலித்து நான் மகிழ்ந்தேன் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் குரத்தி வள்ளியை மறந்தேன்!" "தரணியில் ஓர்நிலவு கண்டேன் மழலையில் பலநிலவு கண்டேன் தரணியில் குழந்தை ஆடுகையில் மயிலும் மலைத்து நிற்கக்கண்டேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. நானும் இதையே எண்ணினேன்.அரசுடன் ஏதொ ஒரு விதத்தில் தொடர்பு வைத்திருக்கிறாரோ? சுமந்திரனை மந்திரியாக்காமல் விடமாட்டீர்கள் போல. அதிலிருந்து அவரும் கட்சியும் மீண்டெளட்டும். கந்தையா அங்கயனும் டக்கிளசும் மிகவும் குடைச்சல் கொடுத்ததாகவும் பல பத்திரங்களில் கையெழுத்திட மறுத்ததாகவும் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது. இவரது பதவியேற்பு காணொளியில் வேறு ஒரு ஜனாதிபதி கேட்டிருந்தால் இந்தப் பதவியை ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்லும் போதே எவ்வளவு புண்பட்டிருப்பார் என்று தெரிகிறது.
  27. இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர் அலுப்புக் குடுத்தது அங்கயனும் டக்கியும்
  28. சும்மா இருந்து வாக்கு சேர்க்கிறவர்களுக்கு, தாங்களும் செயல் வீரர் என்று காட்ட இதுகளை எதிர்பார்த்திருப்பார்கள், சம்பவ இடத்துக்கு அழைப்பில்லாமலேயே வலியப்போய் படம் எடுத்து தங்கள் சாதனை என்று சொல்வார்கள். செய்கிறவர்களோ தங்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்கள் எனும் எதிர்பார்ப்பிலேயே அதிரடியாக தக்க சமயத்தில் இவற்றை செய்கிறார்கள். இதைத்தான் வடக்கின் வசந்தமும் செய்கிறார், வலியப்போய் கூட்டத்தில இருப்பார், படத்துக்கு எட்டி முகம் காட்டுவார், கருத்து சொல்லுவார். அவர் சட்டம் ஒன்றும் படிக்கவில்லை, இனத்தை விற்று பதவி பெறுகிறார். இவர் படித்தவர் என்று சொல்கிறார் கட்சியை உடைத்து, தேசியத்தை விற்று பதவியில் தொடர்ந்து இருக்க பாடுபடுகிறார். தனது பதவியாசையை மற்றவர்மேல் திணிப்பார்.
  29. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்!
  30. நீங்கள் சொன்னாலும் சொன்னீங்க. அநுர ரீ கடைல அவரோட அலுவலகத்தை மாத்திட்டார். 😂
  31. உழைகிற காசிற்கு மேலாக ( நாட்டின் வருமானம்) வட்டி கட்டும் நிலையில், புலம் பெயர்ந்தவர்களின் உதவி இல்லாவிட்டால், ஏழ்மை பட்டினி போசாக்கின்மை என ஒரு எதிர்கால தலைமுறையினையே இந்த இலங்கையின் பொருளாதாரத்தினால் பாதிக்கப்படும் நிலை. அதனால் புலம்பெயர்ந்தவர்களின் உதவி இலங்கைக்கு தேவையாக உள்ளது (உங்களது உதவி). இதனைதான் யாரோ ஒரு கவிஞர் "கண்ணே உன் விழியால் பிறர் அழுதால் கண்ணீரும் ஆனந்தம்" என்று பாடி இருக்கிறார் (சினிமா பாடல்) அதாவது பிறருக்காக அழுவது கூட நல்ல விடயமாம். இப்படிக்கு "நல்ல புலம்பெயர்ஸ் ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு"
  32. உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தில்லை. 💐 வாழ்க வளமுடன். 🙏 சுய சரிதை போல் எழுதிய கவிதை மிக அழகு. 👍🏽
  33. தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்தேசியம் போல. நாங்களும் இதை விடமாட்டோம்.
  34. தான் சமையற் கட்டுக்கு போகவேண்டி வரும் என நினைத்து குமுறுகிறார் போலுள்ளது. இவரது கணித அறிவை சஜித் ஒருதடவை பாராட்டியிருந்தார். ஜெனிவா கூட்டத்தொடரில், பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றிருந்தன, ஒரு சில நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஆதரித்தன என்று கூறி தம்மை சாதனையாளராக காட்டியபோது, சஜித் இவர்களின் கணிதவியல் அறிவை வியந்து புள்ளிவிபரத்தோடு உரையாற்றியிருந்தார்.
  35. 🤣............... யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.........😀. அநுர பெயில் அண்ணை, நான் பாஸ்............... அந்த வித்தியாசத்தை வைத்துத் தான் அவர் ஜனாதிபதியானவர்..............🤣. (பிறகு அவர் வேறு இடம் போய் பாஸாகியும் விட்டார்.........)
  36. இந்த கிராம சேவகர் நல்ல விடயங்களை செய்கின்றார்...பாராட்ட பட வேண்டிய நபர்...வீடுகளில் மக்கள் மரங்களை நட ஊக்கப்படுத்த வேண்டும் ஆனால் இது ஒர் கடினமான விடயம்....
  37. https://www.facebook.com/share/p/EXy8p3crXdkGhfqC/ விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இந்தப்பம் பிடிக்காது. அதனால்தான் தீயேட்ரில் படம் நன்றாக ஓடவில்லை. இந்தப்படத்திற்கு சி0ல விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
  38. அண்ணை அடிக்கடி கனடாவுக்கு போய் ஓட்டலில் சாப்பிட்டனான் என்று சொல்லியபோதே சந்தேகப்பட்டேன். 🤪
  39. அதாவது தமிழர்களுக்கு நடுவிலே வாழ்ந்து வியாபாரம் கல்வி வேலை வாய்ப்பு என்று மீண்டும் தமது இருத்தலை உறுதிபடுத்திக்கொண்டாலும் போர்க்கால நிலைகளில் அனைத்து இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் தவிர்க்க முடியாமலே உண்டு, ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பழசை கிளறி கிளறி தமிழர்களுடன் வன்மம் வளர்க்க சொல்லி தமது அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களாம். நாலாயிரம் ராஜநாகங்களுக்கு இடையிலும் மனிதன் வாழ்க்கை நடத்திட்டு போகலாம் நானூறு இஸ்லாமியர்களுடன் ஒன்று சேர்ந்து பிற இனம் வாழ்வதென்பது கையால விசுக்கி காட்டு தீயை அணைப்பதுபோலத்தான் சாத்தியமே இல்லாதது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றம்பற்றி புத்தளம் மட்டக்களப்பில்தான் கிளறி கிளறி வன்மம் வளர்த்தார்கள், இப்போ அவர்களுக்கு எல்லாமே சுமுகத்திற்கு வந்த பின்னரும், 90%க்கு மேற்பட்ட தமிழர்களுடன் அனைத்துவழியிலும் படிப்படியாக வளர்ச்சியின் உச்சம் தொடும் யாழைப்பார்த்து வயித்தெரிச்சலில் யாழ்ப்பாணத்திலும் வன்மம் ஆரம்பிக்கிறார்கள். வன்மம் வளர்க்க தமது தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதே கூட்டத்தில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து தமிழர்களுடன் எப்படி சகோதரத்துவத்துடன் வாழவேண்டுமென்று தமது இந்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்திருந்தால் நாமும் சேர்ந்து இவர்களுக்கு தலை தடவிவிட தயங்கவே போவதில்லை. என்னமோ தமிழர்பகுதிக்குள் இவர்கள் இனி ஒருகாலமும் உள் நுழையமுடியாதபடி நிலமை இப்போதும் இருக்கு என்பதுபோல் இவர்களுக்காக அனுதாபப்பட்டு அச்சச்சோ முஸ்லிம்களை வெளியேற்றினது தவறு என்று பூனைக்கு தலையை தடவிவிடுவதுபோல் தடவிவிட்டு பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் தலை தடவிவிடல் திலகங்களுக்காக ஆவது சரி சரி பழசை மறந்து சுமுகமா வாழ்வோம் என்று இஸ்லாமியர்கள் நினைக்கலாம் . ஒருபோது அதை செய்ய மாட்டார்கள். கிழக்கில் காத்தான்குடி உட்பட்ட சில பிரதேசங்களில் ஏறக்குறைய தனி இஸ்லாமியநாடுபோல் ஆக்கி வைத்திருப்பதையும் கல்முனை பிரதேசசபை விவகாரத்தில் இவர்கள் வளர்க்கும் தமிழர்களுக்கெதிரான விசமத்துக்கும் காரணம் இவர்கள்மீது தமிழர்கள் மேற்கொண்ட இன சுத்திகரிப்பா? 70% வீத தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் 30% வீத இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழலாம் , 70% இஸ்லாமியர்களுக்கு நடுவில் 30% தமிழர்கள் சுதந்திரமா செயற்பட முடியுமா? முடிந்தவரை 100% முஸ்லிம் பிரதேசமாக்கவே துடிப்பார்கள். இன சுத்திகரிப்பில் முன்னணியில் நிற்பவர்கள் யாரென்ற கேள்வியை இவர்களுக்காக பரிதாப படுகிறவர்களிடமே விட்டுவிடலாம்.
  40. கொழும்பில் இருந்து கொண்டு கொழுப்பெடுத்து கஸினோக்களுக்கு செல்லாமல் ........ கிராமத்தில் இருந்து கொண்டு கிரமமாக மக்களுக்கு சேவை செய்யவும் என்று சொல்கின்றார் . .....! 😁
  41. விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு. அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை. அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன். சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.
  42. ஓ............... அவரா......... 'வேற வழி தெரியல்ல, ஆத்தா.......' என்ற நிலைமை தான் என் நிலை இப்ப........... அதுவும் சரி தான், அண்ணை.........
  43. ஏற்கனவே சொன்னதுதான், சிங்களப் பேரினவாதத்தின் முகங்கள் மாறலாம் அதன் இதயம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அதற்கு வலதுசாரி, இடதுசாரி, பௌத்தம், கிறீஸ்தவம், அரசுசார்பு, அரசுசார்பற்ற என்ற பேதமில்லை எல்லாம் ஒன்றுதான். சிங்களம் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஒருபோதும் மறந்துவிடாது! அடுத்த சனாதிபதித் தேர்தலில் நாமல் 70% வாக்குகளை பெற்றாற்கூட வியக்க ஏதுமில்லை. அநுர ஆட்சியில் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாகத்தன்னும் ஏதும் நன்மைகள் கிடைத்தால் சரி. மற்றும்படி ஒற்றையாட்சியை கடந்து எதுவும் வரப்போவதில்லை. சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!
  44. தமிழ் பெளத்தர்களின் எச்சங்களைத் தமதென்று உரிமைகோரி, தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த குடியேற்றங்களை முடுக்கிவிட்ட இனவாதிகள் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் அமைக்கப்பட்டுவரும் சிங்கள பெளத்த விகாரை ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை, அதன் அடிப்படையினைச் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவரது அரசின் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவிருந்தவரும் ஜெயாரினால் இனவாதம் கக்குவதற்காக களமிறக்கப்பட்டவருமான சிறில் மத்தியு, வடக்குக் கிழக்கை சிங்கள - பெளத்த தாயகமாக மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தார். சிங்கள பெளத்த வெறி தலைக்கேறிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, சிங்கள சாதிய அமைப்பில் இடைநிலை மற்றும் சிறில் மத்தியூவின் சாதியான கரவா வகுப்பிலிருந்து வரும் பல கல்விமான்கள் வடக்குக் கிழக்கில் பெளத்த எச்சங்கள் என்று தாம் கருதுபவற்றை மீள உருவாக்கி அவற்றைச் சுற்றி சிங்கள மக்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரலாயினர். இவ்வாறு அவர்களால் அடையாளம் காணப்பட்ட பலவிடங்களில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றைச் சூழவும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பெளத்த எச்சங்கள் தமிழ் பெளத்தர்களுக்குச் சொந்தமானவை என்றும், ஒருகாலத்தில் தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தனர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சரித்திரத் தகவல்கள் இருந்தபோதிலும், இந்தச் சிங்களக் கல்விமான்களால் இந்த உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வந்தது. வவுனியா வடக்கில் தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னமொன்றும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் காட்சி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் சோழர் காலம் வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெளத்த தமிழர்கள் உருவாக இது காரணமாக அமைந்திருந்தது. தமிழ் பெளத்தர்களின் பிரசன்னமும், ஆதிக்கமும் அநுராதபுர காலத்து மன்னராட்சியின் அவைகளிலும் கணிசனமான அளவு காணப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சோழ பெளத்தர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழ் பெளத்தர்களுக்கும் சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் இருக்கும் இராஜராஜ நூதணசாலையில் வைக்கப்பட்டிருக்கும் 14 ‍ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பெளத்த நூல்களும், ஓலைகளும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தமையினால், தமிழ் பெளத்தர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை சிங்கள‌ பெளத்தர்களின் நூல்கள் என்று உரிமை கோருவது பெளத்த இனவாதிகளுக்கு வசதியாகிப் போயிற்று. தமிழ் பெளத்தர்களால் சிங்கள மொழிக்கும் அதன் இலக்கணத் திருத்தத்திற்கும் ஆற்றப்பட்ட பணி மகத்தானது என்பதைப் பறைசாற்றச் சான்றுகளும் இருக்கின்றன.தமிழ் பெளத்தர்களால் எழுதப்பட்ட வீரசோலியம் எனும் நூலில் காணப்படும் பல இலக்கணத் திருத்தங்கள் சிங்கள இலக்கணப் பயன்படுத்தலில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர் தாயகத்தில் வளர்ந்துவந்த சைவ மதத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் காணப்பட்ட தமிழ் பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு சைவர்களின் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரலாயின. இதனையே மத்தியூவும் அவரது இனவாத நண்பர்களும் சிங்கள பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு, சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாதாரணச் சிங்கள மக்களிடையே பெரியளவில் பிரச்சாரம் செய்து வந்தனர். பெளத்த மதத்தினை விரும்பாத தமிழர்கள் புராதண பெளத்த விகாரைகளை அழித்து சைவக் கோயில்களை நிர்மாணித்து வருவதால், அக்கோயில்களை இடித்து, அங்கே மீளவும் பெளத்த விகாரைகளை அரச செலவில் நிர்மாணிப்பது என்பது அவசியமாகிறது என்று தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்து வந்தனர் மத்தியுவும் அவரது சகபாடிகளும். இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட புதிய விகாரைகளைச் சுற்றித் தவறாது சிங்கள மக்களை அவர்கள் குடியேற்றி வந்தனர். ரணிலின் நல்லிணக்க அரசாங்கத்தால் 500 மில்லியன் செலவில் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட‌ 1000 விகாரைகள் திட்டம் ‍ இன்றும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. சிறில் மத்தியூவின் பெளத்த சிங்களக் குடியேற்றங்களுக்கு சிங்கள ஊடகங்கள் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்ததுடன் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான பிணக்கிற்கு மத ரீதியிலான இன்னொரு களம் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனூடாக பெளத்த சைவ மோதல் ஒன்றிற்கான களமுனை திறக்கப்பட்டலாயிற்று. அரச மரத்தின் கிளை ஒன்றினை தமிழர் ஒருவர் தறிப்பதாகப் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிகழ்வொன்று, பெளத்த மதச் சின்னங்களை தமிழ்ப் பயங்கரவாதிகள் அவமதித்து வருகிறார்கள் என்கிற தொனியில் சிங்கள ஊடகங்களால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தது. தமிழர் தாயகத்தில் பெளத்த எச்சங்களைத் தேடும் சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகள் அரசியல் புதையல்களைத் தேடும் முயற்சியாக அன்று காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிங்கள இனவாதிகள், தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமான கிழக்கு மாகாணத்தில் புராதண சிங்கள பெளத்த நாகரீகம் காணப்பட்டதகாக் கூறி, அதனைத் தமது தாயகம் என்று உரிமை கோரி, அங்கு மீண்டும் பெளத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சைவத் தமிழர்கள் மீது அது செலுத்தப்போகும் தாக்கத்தினை சிங்கள அரசியல்வாதிகளோ, கல்விமான்களோ சற்றேனும் உணரமறுத்துவந்தமை பெரு வருத்தத்தினை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.