Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்19Points19667Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points88812Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33807Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3125Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/11/24 in all areas
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.9 points
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சிங்களத்தின் காலை பிடி என வகுப்பு எடுப்பவர்களை ...நாம் என்ன செய்ய முடியும் ...சிங்கள பொலிசார் உத்தமர்கள் என சொல்ல முடியாது ...மீண்டும் சொல்கின்றேன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முக்கிய் காரணம் சிங்கள் பொலிசார் இது இன்றைய இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அன்றைய இளசுகளுக்கு நன்றாகவே தெரியும்... சிங்களத்தின் காலை பிடி என்பதை எவனும் ஏற்று கொள்ளமாட்டான் ....ஆனால் டமிழன் அமைதியாக வாழ் நினைப்பவன் ..அவனுக்கு பல சமுகங்களுடன் வாழ்ந்து முன்னுக்கு வந்த அனுபவம் உண்டு..பல தடவைகள் கை நீட்டியுள்ளான் சிங்களத்துடன் ...மீண்டும் நீட்டுகிறான் ...பார்ப்போம் அடுத்த ஐந்து வருடம் என்ன நடக்கின்றது என.......எது எப்படியோ 75 வருட அனுபவம் பாடங்கள் இனி வரும் சந்த்ததிக்கும் கிடைக்குமல்லோ....4 points
-
நாகேஷ் எனும் நடிகமலை
3 pointsகமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது3 points
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
அருட்தந்தை சொன்னது 99% சரி. ஆனால் எம்மை போலவே அவரும் இல்லாத மேய்ப்பனை தேடுகிறார் போலும், அதனால் எவரையும் கைகாட்டி இவருக்கு போடுங்கள் என சொல்ல முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்பிபி பற்றிய அபாய சங்கையாவது ஊதுகிறார்🙏. ———————— யாழில் நான் ஒரு மானசீக வாக்கெடுப்பு நடத்த போகிறேன். அன்று, நீங்கள் ஊரில் வாக்காளராக இருந்தால் எந்த கட்சிக்கு போடுவீர்கள் என. @தமிழ் சிறி அண்ணை ஆக்களை சேர்க்கவும்🙏3 points
-
நாகேஷ் எனும் நடிகமலை
3 pointsநாகேஷ் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பிச்சு வாங்குவார்.இன்றிருக்கும் நடன நடிகர்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.3 points
-
யாழ் களத்தில் புதுவரவு
2 pointsயாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!2 points
-
மண்டியிடும் மன்னர்கள்
2 pointsமண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேதமில்லை எல்லோரும் மீண்டும் போய் விட்டனர் வந்த வழியே ஓங்கி வளர்ந்து உள்ளே ஆழ வேர் விட்டு நித்தியம் என்று நின்ற மரங்களே பொத்தென்று விழ இங்கே மன்னர்கள் மட்டும் நிலைக்கவா போகின்றார்கள் மூப்பும் நோயும் பிணியும் பிரிவும் காலத்தில் வர அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும் காலம் விடவில்லை பதினொரு மன்னர்களையும் மாமன்னன் அலெக்சாண்டரே கடைசியில் மண்டியிட்டாராம் இந்த தெருவில் இப்போது நான் ஒரு மன்னன்.2 points
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?2 points
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
2 points
- சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அழகிகளுடன் ‘ஹில்மா’ பண்ணிட்டு எதுக்காக கழுதையில் ஏறினார் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.2 points- 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
இங்கே கவனிக்க வேண்டியது, பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால், அவர் பின்னால் அவன் போய்விடுவான். சிங்களவன் அடித்தான் பொதுமகன் வடக்கு/கிழக்குக்கு ஓடி வந்துவிட்டான். கொஞ்சக் காலம் கழித்துத் தயங்கித் தயங்கி மீண்டும் போனான். திரும்பவும் சிங்களவன் அடித்தான். ஓடிவந்தான். பொதுமகனுக்கு இந்தப் பரமபதம் விளையாட்டு நன்றாகப் பழகிவிட்டது. அரசியல் கட்சியில் முக்கியமானவர்களில் இருவர் தோற்றுப் போயினர். தங்கள் இருப்பைத் தக்க வைக்க ‘தமிழ் ஈழம்’ தான் தீர்வு என்றார்கள். ஆயுதம் இளைஞர் கைகளுக்குப் போனது. அப்பொழுதும் பொதுமகன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகனும் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான் என்றவுடன் பொதுமகனும் தனிநாடுதான் தீர்வு என்றான். அதுவும் வரலாறு காணாத இழப்பைத் தந்துவிட, ‘உலகநாடுகள் சும்மாவிடாது’ எனச் சொல்லிக் கொண்டு திரிந்தான். உலக நாடுகளுடன் தாங்கள் கதைக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்டதற்கு இணங்கி அவர்களைத் தெரிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்க பொதுமகன் போய்விட்டான். இப்பொழுது போதைப் பொருட்கள், வாள் வீச்சுகள் நடுவில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த பொதுமகனிடம், சிங்களவனே நேரில் வந்து, “உனக்கென்ன பிரச்சினை இருக்கிறது? நான் தீர்த்து வைக்கிறேன். மறந்தும் தனிநாடோ சுயாட்சியோ கேட்டு விடாதே. வெளிநாடு போனவனின் பணம் தேவைப்படுகிறது. கொண்டுவரச் சொல்லு இந்த நாடு சொர்க்கபுரி ஆகிவிடும்” என்கிறான். இப்பொழுதெல்லாம் பொதுமகனுக்கு தனிநாடு என்ற கனவு வருவதில்லை. சுயாட்சி என்றால் என்ன என்பதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பேசாமல் சிங்களவனுக்குப் பின்னால் போய் நிற்கிறான். பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால் அவர் பின்னால் அவன் போய்விடுவான்.2 points- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எவ்வாறு நடக்கும்? வாக்களிப்பது எப்படி? முழு விவரம்
கூட அண்ணை! திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர். இலங்கை முழுவதுமான வேட்பாளர் விபரத்திற்கு கீழுள்ள வீரகேசரி இணைப்பைப் பாருங்கள். https://www.virakesari.lk/article/1961412 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தக் கணிப்பில், வாய்க்கு வந்தபடி, குத்து மதிப்பாகத் தான் பதில் எழுத முடிந்தது. ஊரில் உள்ளவர்களுடன் கதைக்கும் போது தாமும் குழம்பி, எம்மையும் குழப்பியடிக்கின்றனர். ஒரு பக்கம் சிங்கள தேசியக் கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக செல்வது தமக்கு ஒரு இழுக்கு என நம்புகின்றனர். அதே நேரம், தமிழ் கட்சிகளின் மீது கடும் வெறுப்பும் கொண்டுள்ளனர். இவற்றை விட, தமக்கு தெரிந்தவர் போட்டியிடுகின்றார் என்று அந்தப் பக்கமும் இல்லாமல். இந்தப் பக்கமும் இல்லாமல் தெரிந்தவருக்கு வாக்களிக்க போவதாக சொல்கின்றனர். என் நண்பன், லண்டனில் இருக்கின்றான். அரசியல் பிரக்ஞை உள்ளவன். ஆனால் தனக்கு தெரிந்த ஒருவர் / உறவுக்காரர் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பதற்காக அங்கு போய் அவருக்கு உதவி செய்கின்றான். தம் உறவுகள் எல்லாம் அவருக்குத் தானாம் வாக்கு போடுவினமாம். ஏனென்றா...ல் ஒரே சாதியாம். விரைவில் எம் மக்கள் மத்தியிலும் சாதிக் கட்சிகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. தமிழ் தேசிய உணர்வை சாதி உணர்வு மேவிச் செல்ல இடம் கொடுக்கும் வண்ணம் நிகழ்வுகள் மாற்றப்படலாம் எதிர்காலத்தில்.2 points- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
பின்கதை என்னவாக இருந்தாலும், குழந்தையையும், தாயையும் தாக்கியது மிகவும் தவறான செயல். பிள்ளை நலமாக இருக்கிறதாமா?2 points- சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தேசிய கூத்தமைப்பும் நட்டு கழண்ட அரசாங்கமும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை. சர்.... நானும் இருக்கேன் என்று சவுண்டு விட்டு காட்றாப்ல2 points- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
உங்கள் கருத்து மீது முரண்பாடில்லை சகோ. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் விதைக்கப்படணும் அவை எல்லோருக்கும் பொதுமானதாக பக்கச்சார்பற்றதாக இருக்கணும். நாம் கண்ட கனவு தேசம் என நமக்கு மறுக்கப்பட்டாலும் எவருக்குமே நீதிக்கான அநீதிக்கெதிரான எமது பார்வை ஒன்றே மாறாதது. மாறக்கூடாதது. அல்லவா? அத்திவாரம் தவறானால்??2 points- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நீங்கள் எங்கேயோ போய்டியள் ..புலம்பெயர்ந்த காரணத்தால் உங்கள் சிந்தனை ,கருத்து எல்லாம் உச்சத்தில் இருக்கு நீங்கள் வாழும் நாட்டில் எப்படி பொலிசும் மக்களும் செய்ல படுகின்றனரோ அது போல சிறிலங்கனும்ஸ் செயல் பட வேணும் என நினைக்கிறீயள்..... இந்த சிறிலங்கன் பொலீஸ் 1977 லில் யாழ் நகரில் என்ன செய்தார்களோ அதையே இன்றும் செய்கிறார்கள்...இவர்களுக்கு பொலிஸ் பயிற்சி கல்லூரிகளில் இதெல்லாம் சொல்லி கொடுப்பார்களோ தெரியவில்லை... எது எப்படியோ இன்று தொழில்நுடபம் வளர்ந்த்துள்ளது யாவற்றையும் படம் பிடித்து யாவரும் அறிய முடியும்...2 points- சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
குட் மோர்ணிங் சேர்.2 points- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
நன்றி மறந்த எங்கட தெரு நாய்களுக்கு வாக்கு போடுவதை விட ஒருமுறை அநுரவிக்கு போட்டு பார்க்கலாமே . தமிழ் கட்சிகளால் இதுவரை என்ன செய்ய முடிந்தது . சாராயக்கடை அனுமதி கொள்ளை அடித்தல் .... இதுக்கு ஏன் இந்தமுறை அந்த உதவாகரைகளுக்கு போடாமல் ஒரு மாற்றத்தினை செய்து பார்க்கலாமே .2 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றிபெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன்2 points- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எம் இனத்தவனை, எம் தலைவனை அடையாளப்படுத்துபவர்களைத்தான் நாம் ஆதரிக்க முடியும். வழிகாட்டியாக இருந்த எம் தலைவனை அடையாளபடுத்தாதவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.2 points- பதியம்
2 pointsஎன்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............2 points- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அவர் தற்போது யாழ் மூளாயில்தான் பணியாற்றுகிறார். 13:25 இல் இருந்து மருத்துவரின் பேட்டி இடம்பெறுகிறது வடபகுதியில் அநுரவின் வேட்பாளர்கள் யாரென்றே யாழில் உள்ள பலருக்கே தெரியவில்லை அதனை செய்த பெருமை யூடியூப் தளங்களுக்கே சேரும். அவர்களை பொறுத்தவரை அநுர என்ற பெயரே தெரிந்திருக்கிறது. அநுர வடக்கில் இருவரிகளில் தனது அரசியல் கொள்கையை வைத்துள்ளார் அது: அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால் அரசியல் கோஷங்கள் தானாக அடங்கிவிடும். என்பதே, யாழில் கருத்து தெரிவிக்கும் மக்களில் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது, யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம். அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த தமிழ்கட்சிகள்தான்.2 points- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் பெயர்கள் R.H. Upali Samarasinghe District Organizer S. Thilakanadan Veterinary A. Mailvaganam Jegadishwaran Teacher M.A. Pathima Hajistha Social Activist V.A. Don Priyankara Premarathne Student Scientist Mahaweli Authority Yogaraja Sivaruban Farmer J. Ragar Anton Kamalasragar Businessman A. Raizdin Principal Teacher Ramaiya Radha Krishnan Agricultural Insurance (Field Division Officer) திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை Arun Hemachandra District Organizer M.A. Mohammed Rafique Teacher P. Indika Priyadarshana Paranawithana Farmer A.G. Roshan Priyanjana Teacher Karunanayakage Shila Social Activist M. Niyaz Mohammed Sabraan Assistant Manager Yevugan Irajendran Businessman அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. L.P.G. Wasantha Piyathissa Full-Time Politician A.M.M. Muthumanike Rathwatte Retired Army Mohammed Sultan Saththar Teacher Abubakar Adambavah Teacher M. Meemana Sugath Ratnayake Teacher M.M. Priyantha Kumara Wijerathna Lawyer A. Muhaideen Rameesh Farmer S.M. Buhari Mohammed Rizad Teacher R. Morris Anton Retired Principal K.M. Tilak Kithsiri Regional Environment Officer2 points- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.1 point- 'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
(எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும். ஜனாதிபதி இதுவரை பொருளாதார இலக்கு தொடர்பில் தெரிவிக்கவில்லை. அதனால் பாரிய நிச்சியமற்ற நிலை இருந்துவருகிறது. தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு, தேங்காயின் விலை தேங்காய் மரத்தைவிட உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை தாமரைக்கோபுரம் போன்று உயர்ந்து செல்கிறது. முட்டை விலை அதிகரித்து செல்கிறது. இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியுமா? இந்த அரசாங்கம் நாணய நிதியத்துடன் எவ்வாறு கலந்துரையாடுகிறது? ஜனாதிபதி தேர்தலில் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கையை கொண்டுவந்தார்கள். அவற்றை செயற்படுத்த முடியுமா? வரி நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்தார். அவை கிடைக்கிறதா இல்லையா? என தெரிவிக்க வேண்டும். நாடு முன்னுக்கு செல்வதாக இருந்தால் நூற்றுக்கு 8வீத வருடாந்த பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? சிறிலங்கன் விமான சேவையை வைத்துக்கொள்வதா எனதெரிவிக்க வேண்டும். திசைகாட்டி முன்வைத்திருக்கும் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு அமைய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியில் வியத்மக வைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி போட்டாபயவை இல்லாமலாக்கினார்கள். இவர்களையும் இல்லாமலாக்க அவர்கள் தற்போது திசைகாட்டியில் போட்டியிடுகின்றனர். நாட்டுக்கு திறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும். நான் எப்போதும் பொருளாதாரத்தை திறந்து விட்டிருந்தேன். திசைகாட்டியில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாங்கள் அறிமுகப்படுத்திய பயணத்தில் செல்லுங்கள். இந்த பயணத்தில் இருந்து தூரமாக வேண்டாம். அவ்வாறு இடம்பெற்றால் இந்த பொருளாதாரத்தை கையாள முடியாது. மேலும் உதய செனவிரத்ன அறிக்கையை செயற்படுத்த, திசைகாட்டி அரச ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு? இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். திசைகாட்டியின் பொருளாதார சபையில் வேலை செய்ய முடியாது. அந்த சபையில் வணிகக் கல்வி தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். வியாபார முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களும் இருக்கிறார்களாம். என்றாலும் பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன தெரியும்.? இது அறியாதவர்கள் இருக்கின்ற அனுபவமில்லாத அரசாங்கமாகும். ஜனாதிபதி முதல் யாருக்கும் அனுபவமில்லை. அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? மறைந்திருக்கும் வேட்பாளரை கண்டுபிடித்து உறுப்பினராக்குமாறு தெரிவிக்கிறார்கள். அதனால் அனுபமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதா? அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா? பாராளுமன்றத்தை சிலிண்டருக்கு கொடுத்தால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும். அதனை நாங்கள் நடைமுறையில் காட்டி இருக்கிறோம். பொருளாதாரத்தை பாதுகாக்க சிலிண்டரில் போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். குப்பைகளை அகற்றுவதற்கு திசைகாட்டியை அபான்சுக்கு அனுப்புங்கள் என்றார். https://www.virakesari.lk/article/1984631 point- 'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
ரணில் வெளிநாட்டில் படித்தாரா இல்லையா ? இல்லை இதுதானே பதில்1 point- நாகேஷ் எனும் நடிகமலை
1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம்: தேசிய மக்கள் சக்தி 2 28) வன்னி: தேசிய மக்கள் சக்தி 2 29) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 2 30)திருமலை: தேசிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா: தேசிய மக்கள் சக்தி 3 33)அம்பாந்தோட்டை: தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு: தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 40) ஊர்காவற்றுறை: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி: தமிழரசு கட்சி 42) மன்னர்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு: தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா: தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு: தமிழரசு கட்சி 47) திருகோணமலை: தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் கூட்டணி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி: 2 52) தேசிய மக்கள் சக்தி: 7 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 4 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 154 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 41 point- 'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
இவர் இலங்கையில் மட்டும் தான் படித்து பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் ஒன்றை பின்னர் வழங்கியிருந்தது. ஆக்ஸ்ஃபோட்டில் கேட்டார்கள், கேம்பிரிட்ஜில் கேட்டார்கள்............ என்று 'கரகாட்டக்காரன்' கோவை சரளா போல அவரது ஆதரவாளார்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...........🫣.1 point- மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
1 point- 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
@goshan_che நன்றி தரமான செயல். நான் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றி தான் அதிகம் எழுதுவேன். அதில் பலதையும் நீங்கள் சரியாக தொட்டிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உடைக்க முடிந்த அளவுக்கு கூட புலம்பெயர் அமைப்புகளை உடைக்க முடியாத படி இருந்தன. உங்கள் பலருக்கும் இது 2009 க்கு பின்னர் என்று தான் தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிய 2002 லிலேயே இது மும்மரமாகக்கப்பட்டு விட்டது. இதனை செய்வதற்கு சிறீலங்கா அரசுக்கு புலம்பெயர் தேசங்களில் சிங்களவர்கள் தேவையே இல்லை என்ற அளவிற்கு எமது இனத்தவர் முழுவதுமாக முழுநேரமாக உழைத்தனர் என்பது தான் கிரகித்து கொள்ள முடியாத நிஜம். இதனாலேயே யாழ் களத்தில் இவர்கள் சார்ந்த எழுத்துருக்களை காணும் போதெல்லாம் என் என் கண்கள் சிவக்கும். நன்றி சகோ நேரத்திற்கும் ஆக்கத்திற்கும்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
IT யில் வேலை செய்யும்நிழலிக்கே கணக்கு தெரியாமல் போச்சே (75+156+1+1+8=241)1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள்,......ஆனால் 58. 59. கூட்டினாள் 231. வரும். இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர்கள் உடையது. குறிப்பு,....கணக்கு முக்கியம் சும்மா கடுப்பேற்றுவம். 🤣😂1 point- சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உங்களை மறக்க விடமாட்டீர்கள் போல......... இந்த மாதம் வந்தால் அப்படியே வெளியே வந்து நிற்கிறீர்களே......... ட்ரம்ப் அதிபராக வந்ததன் ஒரு அனுகூலம் உங்களிடமிருந்தும் மற்றும் இங்கிருக்கும் இன்னும் சில அமைப்புகளிடமும் இருந்து இங்கிருப்போர் தப்பியது................. சமஷ்டி எல்லாம் சரிப்பட்டு வராது, தனிநாடு மட்டுமே ஒரே ஒரு தீர்வு, இந்தா காங்கிரஸிற்கு போகின்றோம், அந்தா செனட்டுக்கு போகின்றோம், இதோ புதிய அரசியலமைப்பை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.......... இப்படியான கதைகள் அடுத்த நாலு வருடங்களுக்கு இங்கு அவ்வளவாக எடுபடாது.1 point- மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
கண்ணீர் விட்டு அழுகிறது, ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம் பழைய "ரெக்னிக்" எல்லோ...1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அதிசயக்குதிரை
1 pointவிளம்பரம் அலையாகிய கேசம் பரந்த நெற்றி வில் புருவம் வேல் விழிகள் கொவ்வைச் செவ்வாய் எண்சாண் உயரம் உடுக்கிடை அகன்ற மார்பு வயதிரு பத்தைந்து இவளது அம்மாவுக்கு மணமகன் தேவை1 point- தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்1 point- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
ரி 20 போட்டிகள் உயிர் இல்லாத ஆடுகளங்களில் வைக்காதது யார் தவறு? பராசக்தி சிவாஜிகணேசன் பாணியில் வாசிக்கவும்😁. தற்போது முந்தய ☝️ கருத்தினை வாசித்துப்பாருங்கள் புரியும் (நான் அந்த கருத்தில் கூட சிரிப்புக்குறி இட்டிருந்தேன் கவனிக்கவில்லையா?😁) இந்திய அணி செத்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடுவார்கள் என்பதனைத்தான் கூறியிருந்தேன், ஆனால் அந்த ஆடுகளமும் கடினமான பந்து தரையில் பட்டு வேகம் குறைந்து வரும் (பசை போல் ஒட்டும்) ஆடுகளம் என இந்தியணி வீரர் அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் (நான் அந்த போட்டியினை பார்க்கவில்லை, நான் தவறாக கூறிவிட்டேன்). இந்தியணி அவுஸில் சிறபாக செயற்படும் என நம்புகிறேன் (விரும்புகிறேன்), முதல் 3 போட்டிகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, அண்மையில் அவுஸ்ரேலியா ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள், அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கலை தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது, இது வரை காலமும் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய வோனரின் ஓய்வினை நிரப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தியணி தற்போது எந்த அணியினை பார்த்தாலும் கல்லைக்கண்ட நாய் மாதிரி பயப்படுகிறார்கள் (நியுசிலாந்தின் அடி அப்படி) இவர்கள் 4-1 என தோற்றுவிடுவார்களோ எனும் பயமாக இருக்கிறது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
அரசியல் தெளிவூட்டல் இல்லை என்றும் பொருள் கொள்ளலாமல்லவா?1 point- கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
இலங்கையில் உள்ள தமிழர் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயரால் கருத்திடுபவர் சைவரே. வேறு மதத்தினரால் சைவத்தின் பெயரால் கருத்திட முடியாது, அது ஏற்புடையதுமல்ல. ஆகவே நீங்கள் தாராளமாக சச்சியரிடம் கேளுங்கள். அவரே, இப்போது சைவசமய அலுவல்களை கவனித்து கண்டிக்கிறார், கருத்து வெளியிடுகிறார். நீங்கள், இங்கு சன்னதம் ஆட நிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. மேலாடை இன்றி என்று பண்பாக கூறியிருக்கலாம். இங்கு கருத்தெழுதும் பலரும் பலவித விளக்கம் தந்துள்ளார்கள், அதில் உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் தேடியறியுங்கள். அவர்கள் சொல்லும் பதில் தவறென்றால் உங்களுக்கு பதில் தெரியுமென்று அர்த்தம். இதெல்லாம் சீண்டல்!1 point- பதியம்
1 point- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நியாயமான கேள்வி. ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை. அரசு இயந்திரம் சிங்களவரான (?), பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு. ம்ம்ம்.. 83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி. சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் : சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார் தெரிவிப்பு யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொனானம்பலம், செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோர் பொலிஸாருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக பார்வையிட்டு அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பின்னர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது. பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனினிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சென்று வந்து மிலேச்சத்தனமான விதத்தில் தாக்கியுள்ளதுடன் கடும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்றவேளை தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து மிலேச்சதனமாக தாக்கியுள்ளனர் என அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அவர் எம்மிடம் தெரிவித்தார். ஆனால் அடிபட்ட பிரதேசத்தில் உள்ள நிலைமைகளை பார்க்கின்ற போது சி.சி.ரி.வி. ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் நாங்கள் அறிய முடிகின்றது. இந்த சம்பவமானது எமக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கிற்கு உள்ளே பொலிஸார் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றவர்கள் காடையர்களாக செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. உண்மையிலேயே இது பொதுப்பிரச்சினை. தெற்கிலே விதிமுறைகளை மீறி செயற்படுகின்ற பொலிஸார் தண்டனைக்காக வடக்கு பகுதிக்கு இடமாற்றப்படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. வடகிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்ற நிலையில் அவர்கள் எப்படி பிழையாக நடந்துகொண்டாலும் அதனை மூடிமறைக்கின்ற வகையில் மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் பொலிஸாரை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் தெளிவாக காண்பிக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/1982921 point- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
1 pointஓயாத நிழல் யுத்தங்கள்-4 ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கியூப ஏவுகணைப் பிணக்கு நிகழ்ந்து இந்த மாதம் 61 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த முக்கிய நிகழ்வின் பின்னணியைப் பார்க்கலாம். வெளியே தெரியாத பேராபத்து பனிப்போரின் சுவாரசியமான கதைகள் சம்பவங்களுக்குப் பின்னணியில், ஒரு இருண்ட ஆபத்து எப்போதும் மறைந்திருந்தது. அணுவாயுதப் போர் தான் அந்த ஆபத்து. பனிப்போர் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து, பரிசோதித்து வந்தன. இதனோடு இணைந்து, இந்த அணுவாயுதங்களைக் காவிச் செல்லும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளும் தொடர்ந்து நவீன மயப்படுத்தி வந்தன. உலகின் முதல் அணுவாயுதம், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் பசுபிக்கிற்கு எடுத்துச் செல்லப் பட்டு, அங்கே மீள ஒன்றிணைக்கப் பட்டு, பி 29 என்ற விசேட விமானத்தில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளில், ஏவுகணைகள் மூலம் அணுவாயுதங்களை இலக்குகள் நோக்கி அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் உருவாக்கி விட்டன. கையிருப்பில் இருக்கும் அணுவாயுதங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஏவுகணைத் தொழில் நுட்பம் அணுவாயுதப் போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உருவாகி விட்டது. சோவியத் ஒன்றியம் கியூபாவில் நிறுத்தி வைத்த SS-4 வகை ஏவுகணை, மொஸ்கோ இராணுவ அணிவகுப்பின் போது. Medium-Range Ballistic Missile (MRBM) ஆன இதன் வீச்சு குறைந்தது 600 மைல்கள். அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வீச்சினுள் அடங்கியிருந்தன. பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். சோவியத் ஒன்றியம் அணுவாயுதங்களை அமெரிக்கா நோக்கி ஏவுவதற்கு R-16 ரக ஏவுகணைகளை வைத்திருந்தது. திரவ எரிபொருள் மூலம் இயங்கிய இந்த ஏவுகணைகளை உடனே ஏவி விட முடியாதபடி பல மணி நேரத் தயாரிப்பு தேவையாக இருந்தது. இதற்கு எதிராக, அமெரிக்கா வைத்திருந்த அணுவாயுத தாங்கி ஏவுகணைகளில் Minuteman என்ற வகை திட எரிபொருள் மூலம் இயங்கிய உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, சில நிமிடங்களில் இந்த ஏவுகணையை தயாராக்கி ஏவி விடக் கூடியதாக இருந்தது. இது ஒரு பாரிய பலச்சம நிலைப் பிரச்சினையாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிந்தது. ஏனெனில், அணுவாயுதப் போரில் யார் முதலில் தாக்கி, எதிர் தரப்பின் துலங்கலைப் பூச்சியமாக்குகிறார் என்பதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. 1960 களில், இந்த விடயத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியிருந்தமையை சோவியத் ஒன்றியம் அறிந்தே இருந்தது - ஆனால், வெளிப்படையாக தங்களிடம் அதிக ஏவுகணைகள் இருப்பதாக ஒரு பிரச்சாரத்தை செய்து “Missile gap” என்றொன்று இருப்பதை அமெரிக்க நேட்டோ தரப்பை ரஷ்யர்கள் நம்ப வைத்திருந்தனர். இத்தகைய அனுகூலங்களோடு, நேட்டோ தரப்பிற்கு தங்கள் உறுப்பு நாடுகளில் அணுவாயுதம் தரித்த ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. மிக முக்கியமாக, சோவியத் அச்சுறுத்தலில் இருந்து தப்ப நேட்டோவில் இணைந்த துருக்கி, நேட்டோவின் ஏவுகணைகளை தன் நாட்டில் நிறுத்தி வைக்கவும் அனுமதித்திருந்தது. டசின் கணக்கான ஜுபிரர் (Jupiter) ஏவுகணைகள் அமெரிக்க விமானப் படையின் கட்டுப் பாட்டில் துருக்கியினுள் வைக்கப் பட்டிருந்தன. இதற்கு நிகராக, அமெரிக்காவிற்கு அருகில் மிக நெருங்கி தனது படைகளை நிறுத்தவோ, ஏவுகணைகளை வைத்திருக்கவோ சோவியத் ஒன்றியத்திற்கு வசதிகள் இருக்கவில்லை - ஆனால் 1959 இல் இந்த நிலை மாறியது! அமெரிக்கா உருவாக்கிய கியூபா கியூபா, அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருக்கும் ஒரு தீவுக் கூட்டம். இன்று 11 மில்லியனுக்கும் அதிக மக்கள் கொண்ட, கரீபியன் தீவுகளில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடு கியூபா. 1902 இல் கியூபா உருவான போது, அங்கே சோசலிசம், கம்யூனிசம் இருக்கவில்லை. உண்மையில், ஸ்பெயினின் காலனி ஆட்சியிலிருந்து கியூபா விடுதலை பெற, காலனி எதிர்ப்பாளராக அன்று திகழ்ந்த அமெரிக்கா உதவி புரிந்தது. இதனால், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைக்கவும், அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கியூபாவில் முன்னுரிமை கிடைத்தது. கரும்புச் செய்கையும், அதிலிருந்து கிடைக்கும் சீனியும் தான் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்கள். 1950 களில் fபுல்ஜென்சியோ பரிஸ்ராவின் தலைமையில், கியூபா ஊழலும், அடக்கு முறைகளும் மலிந்த தேசமாக அமெரிக்காவின் ஆதரவுடன் திகழ்ந்த காலத்தில் தான் fபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்ற முயற்சி புரட்சியாக துளிர் விட்டது. ஒரு கட்டத்தில், பரிஸ்ராவின் ஊழலை அமெரிக்காவினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஆதரவு நீங்கி விட, பரிஸ்ராவின் ஆட்சி வீழ்ந்து காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர் - இது நிகழ்ந்தது 1959 இல். கம்யூனிச கியூபா ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ உடனடியாக கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றவில்லை. அமெரிக்கா வழமை போல தன் நலன்களைப் பேண இடம் இருந்தது. ஒரு கட்டத்தில், நியூ யோர்க் நகருக்கு காஸ்ட்றோ விஜயம் செய்து பலமான மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலை கூட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மத்திய அமெரிக்காவில் செயல்படுத்தியது போல, கியூபாவின் ஆட்சியை முற்றிலும் தம் சார்பாக மாற்றும் முயற்சிகளை எடுத்து, 1961 இல் ஒரு இரகசிய இராணுவ நடவடிக்கையைக் கூட எடுத்திருந்தது. இதனை அவதானித்த சோவியத் ஒன்றியம், காஸ்ட்ரோவை தன் பக்கம் அணைத்துக் கொண்டது. 1962 இல், காஸ்ட்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக (அதுவும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டாக) பகிரங்கமாக அறிவித்தார். ஒரு படி மேலே சென்று, கியூபாவில் இருந்த அமெரிக்க கம்பனிகளை அரசுடமையாக்கிய அறிவிப்பும் வெளிவந்தது. அமெரிக்கா பதிலுக்கு, கியூபாவின் சீனி உட்பட்ட ஏற்றுமதிகளைத் தடை செய்து, கியூப பொருளாதாரம் வீழ்ச்சியடைய வைத்தது. ஜோன் கெனடியும் நிகிரா குருசேவும் இந்த வேளையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இளையவர் கெனடி இருந்தார். சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி. இந்த அனுபவ அசம நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் குருசேவ் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி வைக்கும் திட்டத்தை முடுக்கி விட்டார். வெளிப்படையாக கெனடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய குருசேவ், ஜேர்மனியின் பெர்லின் நகர் முழுவதையும் சோவியத் தரப்பிடம் விட்டு விடும் படி அழுத்தம் கொடுத்தார். அமெரிக்காவின் இராணுவ தலைமையோ, பெர்லினில் இருந்து ஒரு அங்குலம் கூட நேட்டோ அணி பின்வாங்கக் கூடாது என்று கெனடிக்கு ஆலோசனை கொடுத்திருந்தது. கெனடியும் இதை விட்டுக் கொடுக்காமல் இருந்த நிலையில், ஒரு அழுத்தமாகத் தான், கியூபாவிற்கு சோவியத் ஏவுகணைகள் நகர்த்தப் பட்டன. கடத்தி வரப்பட்ட சோவியத் ஏவுகணைகள் கியூபாவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே இருந்த கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தியே சோவியத் ஏவுகணைகள் பாகங்களாக கியூபாவினுள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1962 செப்ரெம்பர் வரை அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரியவரவில்லை. ஆனால், சோவியத் சாதாரண ஆயுதங்களை கியூபாவிற்கு வழங்கி வருகிறது என்பதை அமெரிக்கா அறிந்தே இருந்தது. கியூபாவின் மீது கண்காணிப்புப் பறப்புகளை மேற்கொண்ட U-2 உளவு விமானத்தின் படங்கள் தான், ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் கியூபாவில் கட்டப் படுவதை முதலில் வெளிக்கொண்டு வந்தன. கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவு தளமும், வாகனங்களும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட உளவுப் படம். பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். இதே வேளை, அமெரிக்கா இரகசியமாக அல்லாது, நேரடியாகவே கியூபா மீது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்த திட்டத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருக்கவில்லை. கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பதை அறிந்து கொண்ட ஒக்ரோபர் 14 முதல், அடுத்த இரு வாரங்கள் வாஷிங்ரனும், கிரெம்ளினும் இந்தப் பிணக்கைச் சமாளித்த விதம் பல பாடங்களுக்கு வழி வகுத்தது எனலாம்! அமெரிக்காவின் பதில் என்ன? கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தரப்பும், உடனடியாக கியூபா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று ஒரு தீவிரமான தரப்பும் கெனடிக்கு ஆலோசனை வழங்கின. கெனடியோ, மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்: கியூபாவைச் சுற்றி கடல்வழிப் போக்குவரத்திற்கு ஒரு தடையை (quarantine) உருவாக்கி, மேலதிக ஏவுகணைப் பாகங்கள் வராமல் தடுப்பதே அந்த மூன்றாவது வழி. இந்தத் தடை மூலம், கியூபாவை நோக்கி வரும் சகல சோவியத் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை பரிசோதிக்க வேண்டும். சோவியத் ஒன்றியம், தான் அனுப்பிய சில கப்பல்களை பரிசோதிக்க அனுமதிக்காமலே பயணத்தை இடை நடுவில் கைவிட்டு திரும்புப் படி செய்தது. ஆனால், ஏற்கனவே கியூபா வந்து விட்ட ஏவுகணைகளை அகற்ற ரஷ்யர்கள் மறுத்தனர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் U-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப் பட்டது. இறுதியில், கியூபா மீதான அமெரிக்கத் தாக்குதல் தான் ஒரே தெரிவு என்ற நிலைக்கு அமெரிக்க தரப்பு வந்து விட்ட போது, குருசேவ் நிபந்தனையோடு கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்ற ஒப்புக் கொண்டார். கியூபா மீது தாக்குதல் தொடுக்கக் கூடாது, துருக்கியில் இருந்து நேட்டோவின் ஜுபிரர் ஏவுகணைகளை அகற்ற வேண்டும், ஆகியவையே குருசேவின் நிபந்தனைகளாக இருந்தன. முதல் நிபந்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தாக்குதல் நடத்தப் படாதென்ற உறுதி மொழி வழங்கப் பட்டது. இரண்டாவது நிபந்தனையை அமெரிக்கா இலகுவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் செய்வதானால், கியூபாவிற்கு சோவியத் வழங்கிய குண்டு வீச்சு விமானங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் பதில் நிபந்தனையை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொண்டது. ஒக்ரோபர் 27, 1962 இல் கியூப ஏவுகணைப் பிணக்கு முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கடல் போக்கு வரத்துத் தடை நவம்பரில் விலக்கப் பட்டது. சோவியத் ஏவுகணைகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் கியூபாவிலிருந்து அகற்றிய பின்னர், 1963 மத்தியில் நேட்டோ துருக்கியில் இருந்து தனது ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது. உலகம், தனது வழமையான பதற்றமற்ற பார்வையாளர் பணியைச் செய்ய ஆரம்பித்தது. பாடங்களும் விளைவுகளும் அணுவாயுதப் போர் விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்ற கியூப பிரச்சினையில், இரு தலைவர்களும் நடந்து கொண்ட முறை, வெளிக்காட்டிய பொறுப்புணர்வு என்பன அவதானிகளால் பாராட்டப் படுகின்றன. சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!". கியூபப் பிணக்கின் விளைவாக பல நல்ல மாற்றங்கள், அமெரிக்க சோவியத் தலைமைகளின் தொடர்பாடலில் ஏற்பட்டன. புதிதாக வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்குமிடையேயான நேரடி தொலைபேசி இணைப்பொன்றும் (hot line) இதன் பின்னர் உருவாக்கப் பட்டது. மட்டுப் படுத்தப் பட்ட அளவில், ஒருவரது அணுவாயுதப் பரிசோதனையை எதிரணி கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டன. கியூபாவிற்கு என்ன நிகழ்ந்தது? கியூபா தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் பொருளாதாரம் சிதைந்த, கறுப்புச் சந்தை மூலம் மக்கள் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு கம்யூனிச தேசமாகத் தொடர்கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடையினால் கியூபா இழந்த வருமானத்தை, சோவியத் ஒன்றியத்தின் உதவிகளால் முழுமையாக ஈடு கட்ட இயலவில்லை. 1990 வரை, கியூபாவிற்கு சோவியத் ஒன்றியம் பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது. 1991 இல், கொர்பச்சேவின் ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. மேற்கிடம் கடனும், உதவிகளும் பெற்று ரஷ்யர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைக்கு சோவியத் ஒன்றியம் இறங்கியது. இந்த உதவிகளுக்கு மேற்கு அணி விதித்த பல நிபந்தனைகளுக்கு சோவியத் குழு கட்டுப் பட வேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு நிபந்தனை, சோவியத்தின் ஆதரவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நஜிபுல்லா அரசு, கியூபாவின் காஸ்ட்ரோ அரசு ஆகியவற்றிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்பதாகும். மேற்கு எதிர்பார்த்ததை விட இலகுவாக இந்த நிபந்தனைகளை கொர்பச்சேவ் குழு ஏற்றுக் கொண்டது. இரு நாடுகளுக்குமான சில பில்லியன் ரூபிள்கள் உதவியை சோவியத் ஒன்றியம் நிறுத்திக் கொண்டது. அடுத்த 6 மாதங்களில் காபூலின் நஜிபுல்லா அரசு வீழ்ந்தது. கியூபா, இன்னும் தப்பியிருக்கிறது. - தொடரும்1 point - சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.