Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    27
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3054
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19122
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/12/24 in Posts

  1. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @nirmalan அன்பான யாழ்.கள உறவுகளே... மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து வாக்களிக்கப் போகும் கட்சிக்கு முன்னே உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி வாக்களிக்க முடியும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂
  2. மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேதமில்லை எல்லோரும் மீண்டும் போய் விட்டனர் வந்த வழியே ஓங்கி வளர்ந்து உள்ளே ஆழ வேர் விட்டு நித்தியம் என்று நின்ற மரங்களே பொத்தென்று விழ இங்கே மன்னர்கள் மட்டும் நிலைக்கவா போகின்றார்கள் மூப்பும் நோயும் பிணியும் பிரிவும் காலத்தில் வர அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும் காலம் விடவில்லை பதினொரு மன்னர்களையும் மாமன்னன் அலெக்சாண்டரே கடைசியில் மண்டியிட்டாராம் இந்த தெருவில் இப்போது நான் ஒரு மன்னன்.
  3. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1
  4. James Webb Space Telescope Discoveries · Rejoindre Science & Space · · One of the best image of the Andromeda galaxy
  5. இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  6. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் 'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல புல்லை வெட்டுங்கோ...........' உள்ளிருந்து வந்தது எப்பவும் அன்பாக அதட்டும் ஒரே குரல் கற்பனை கலைந்தது.
  7. இதுவே ஒரு சாதாரன ரோசம் மானம் சோத்தில் உப்பு போட்ட மனிதர்களுக்கு நடந்து இருந்தால் தனக்கு தானே தூக்கு போட்டு செத்திருப்பான் .
  8. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை 02) சசிகலா ரவிராஜ் ஆம் 03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - ஆம் 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம் 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - ஆம் 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம் 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம் 18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம் 19) துரைராசா ரவிகரன் - இல்லை 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறிநேசன் - இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - - ஆம் 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 14 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தேசிய மக்கள் சக்தி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 02 52) தேசிய மக்கள் சக்தி ===> 10 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 02 57) இலங்கை பொதுஜன முன்னணி 48 59) தேசிய மக்கள் சக்தி ===>130 60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06 தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை )
  9. எனக்கு செய்தி பார்த்து தான் கூட்டம் பற்றி தெரியும் அண்ணை! மேலுள்ள காணொளியில் ஒருத்தர் கேக்கிறார், சரியாக விளங்கவில்லை. போனமுறை தும்புபறக்க ஒருத்தர் கேட்டவர், இப்ப அவர் உயிரோடை இல்லை. ஐயையோ சத்தியமாக எனக்குத் தெரியாதண்ணை. எஸ்கேப்....
  10. சுமந்திரன் இணுவிலில் நடத்திய பிரச்சார கூட்டத்திற்கு ஐந்து பேர் மட்டுமே போயிருக்கின்றார்களாம்.😂 பங்கு பற்றியோர் விபரம். 1) பந்தல் ஓனர். 2) லைட் ஓனர். 3) கதிரை ஓனர். 4) ஒலிபெருக்கி ஓனர். 5) சுமந்திரனின் வாகன சாரதி. சுத்துமாத்து சுமந்திரன்.... கம்பத்தின் உச்சியில் நின்று "குறளி வித்தை" காட்டினாலும், காசு வாங்க... கீழே இறங்கித்தான் வர வேணும். 🤣
  11. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. சுறாக்கள் இரண்டு மீன் சமுதாயங்களது வாழிடங்களையும் ஒன்றாக்கின. இடையிலிருந்த தடைகளை அகற்றின. காலம் செல்லச்செல்ல சுறாக்களுக்கு இந்தச் சிறிய ஏரியை வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை எனத் தோன்றவே மீண்டும் தமது கடலுக்கே சென்றுவிடலாம் என அவை முடிவெடுத்தன. இப்போது ஏரி ஒரே ஏரி ஆகிவிட்டது. எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிய மீன்கள் ஏரியில் சுறாக்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆளத் தொடங்கின. பெரிய மீன்கள் அடிக்கடி சிறிய மீன்களின் இடத்திற்குள் நுழைந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய மீன்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய தடுப்பு வேலியை உருவாக்க முயன்றன. அது சிறிய மீன்களின் பிரதேசத்தை பெரிய மீன்களிடமிருந்து ஓரளவு பாதுகாத்தது. ஆனால் இந்த தடையை அடிக்கடி உடைத்து பெரிய மீன்கள் சுதந்திரமாக நீந்தி வந்து சிறிய மீன் சமூகத்தினரில் அதிகளவானோரை விழுங்கி வந்தது. சிறிய மீன்களுக்கோ வேறு வழிகள் இருக்கவில்லை. காலப்போக்கில் சிறிய மீன்கள் நியாயத்தை கோர ஆரம்பித்தன. தங்கள் பகுதியில் பயமின்றி வாழ்வதற்கான உரிமை மற்றும் சம உரிமை எனப் பேசத் தொடங்கின. பெரிய மீன்களுக்கு தமது கோரிக்கையை முன்வைத்தன. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பெரிய மீன்கள் எதிர்பாராத மற்றும் தைரியமான முன்மொழிவு ஒன்றைச் சொன்னது. "உங்கள் துயரை நாங்கள் உணர்கின்றோம். உங்களுக்கு நீதி வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பெரிய மீன்கள் கூறின. "இன்று முதல் நாம் அனைவரும் சமம். யாரும் மற்றவரை விட உயர்ந்தவர்கள் இல்லை இனிமேல் சிறிய மீன்களும் பெரிய மீனாகிய நம்மைப் போலவே உரிமைகளைப் பெறுவர். இனி நாம் இருவரும் சமமாக இருப்பதால் ஏரியில் தனித்தனி பிரதேசங்களோ தடுப்பு வேலிகளோ தேவையில்லை. நாங்கள் இனி ஒரு பெரிய இணக்கமான சமூகமாக வாழலாம்” எனக் கூறின. “முழு ஏரியிலும் இரு பகுதியினரும் சுற்றித் திரியலாம்" என்றெல்லாம் கூறின. முத்தாய்ப்பாக பெரிய மீன்கள் "இவ்வளவு நாளும் பசி வந்தால் நாங்கள் மட்டும்தான் உங்களைச் விழுங்கினோம். இனி உங்களுக்குப் பசித்தால் நீங்களும் எங்களை விழுங்கலாம். அந்த உரிமை இனி உங்களுக்கும் உள்ளது. ஆகவே இனி அனைவருக்கும் சம உரிமை." என கூறின. சிறிய மீன்கள் அப்பாவியாகவும் நம்பிக்கையுடனும் பெரிய மீன்கள் மாறிவிட்டன. அவர்கள் முன்னம்போல் இல்லை என ஏனைய சிறிய மீன்களிடம் கூறின. இறுதியாக நீதி கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் நம்பின. ஆம் கடைசியாக சம உரிமை கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் கருதின. புதிதாகக் கிடைத்த வாக்குறுதிகளுக்காக பெரிய மீன்களைத் தடுக்கும் இயற்கையான தடுப்புகளை சிறிய மீன்கள் அகற்றின. தடைகள் நீங்கியதும் பெரிய மற்றும் சிறிய மீன்கள் இரண்டும் சுதந்திரமாக ஏனையவர்களது பிரதேசங்களுக்குள்ளும் நீந்திச் சென்றன. ஆனால் யதார்த்தம் பயங்கரமாக இருந்தது. பெரிய மீன் எந்தத் தடையும் இன்றி சிறிய மீன்களின் வீட்டு வாசல்களில் வந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் தமக்குக் கிடைத்த சம உரிமைக்கு அமைய பெரிய மீன்களை விழுங்க முயன்றன. ஆனால் அவற்றின் சின்னஞ்சிறிய வாய்களால் பெரிய மீன்களை விழுங்கவே முடியவில்லை. சமத்துவம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்பதும் பெரிய மீன்கள் எதையும் மாற்றாமல் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியைச் செய்து அனைவருக்கும் சம உரிமை என்று பேசி தங்களை ஏமாற்றி விட்டதாக காலஞ்செல்லச் செல்ல சிறிய மீன்கள் புரிந்து கொண்டன. எனவே ஏரியின் வரலாறு முன்பு போலவே தொடர்ந்தது. ஆனால் இப்போது சிறிய மீன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.😢 https://www.facebook.com/share/p/128h6yV5HDH/
  12. ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும். உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன். இப்போதைக்கு மாம்பழம் 1 (கிருபன் ஜி)
  13. எவர் தான் அமெரிக்காவின் அதிபராக வந்தாலும், ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் சொல்லை ஏன் கேட்க வேண்டும்............... இது ஒரு அடிப்படைக் கேள்வி அல்லவா. புடினின் நோக்கம் என்று ஒன்று இருக்கின்றது. அதை அடையாமல் அவர் ஓயப் போவதில்லை. ஆகக் குறைந்தது தன்னுடைய நோக்கத்தை அடைந்து விட்டேன் என்று அவர் சொல்லிக் கொள்ளும் வரை இந்தச் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். உக்ரேனுக்கு இது தங்கள் மண்ணை காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம். இன்னும் நீண்ட தூரம் போகும், அமெரிக்கா என்ன தான் செய்தாலும், செய்யா விட்டாலும்..........
  14. ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி. போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி. ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான். யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣. ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?
  15. கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
  16. விலங்குகளின் உலகத்தில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் . ..........! 😁
  17. சத்தியமா நான் நீங்கள் இதை எழுதும் வரை நீங்கள் ரெண்டாவது பக்கத்தில் உங்கள் தெரிவை எழுதியதை வாசிக்கவில்லை.. முந்த நாத்து இல்லா நேத்து எண்டு நினைக்கிறன் நான் இந்த திரியின் முதல் பக்கத்தை வாசித்ததாக ஞாபகம் ஆனால் அதில் நீங்கள் உங்கள் தெரிவை எழுதவில்லை.. அதற்குள் திரி மூன்று பக்கம் ஓடிவிட்டதால் கடைசிப்பக்கத்தை மட்டும் வாசித்தேன் ரெண்டாவது பக்கம் வாசிக்கவில்லை.. நீங்கள் இப்ப எழுதினாப்பிறகுதான் போய் பாத்தன்.. சாய்.. சான்சே இல்ல..அப்பிடியே ஒரு வரி விடாம நான் நினச்சமாரியே எழுதி இருக்கிறியள்.. எப்படி சிங் ஆகி இருக்கு நம்ப திங்கிங் எண்டு பாத்தியளே.. சேம் வேவ்…😁
  18. இங்கயே பாயப்போட்டு படுத்து புலனாய்வு வேலையள் நடக்குது🤣
  19. திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣. ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀. @நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣. ———- ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும். அது என்னெவென்றால்…. இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்… ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது… புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.
  20. இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் adminNovember 12, 2024 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார். https://globaltamilnews.net/2024/208189/
  21. புரிகின்றது நிழலி. அதுவும் சரிதான், கோஷான். 🤣................ எப்போதாவது அப்படியே எதிர்ப்புகள் அதிகமாகி சமாளிக்கவே முடியாமல் போனால்........... இங்கு கவிதை கவிதைகளாக, கதை கதைகளாக எழுதித் தள்ளி விடுவேன், நீங்கள் வாசித்தே ஆக வேண்டும் என்று பயம் காட்டுவதாக உள்ளேன்......😜.
  22. ஓம் ஸ்ரீலங்கா நாட்டுக்குரிய தலைவரை ஹீரோவாக காண்கின்ற தேசிய உணர்வு
  23. ஒரு வாக்கு.. பிள்ளையானுக்கு, விழுந்திருக்கின்றது.
  24. நான் நினைக்கிறேன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு கேவலமாய் அசிங்கபட்டு மக்களிடம் பேச்சு வாங்கி கேவலமான அரசியல் செய்து அடிவாங்காத குறையாக புலம்பெயர் தேசங்களில் திரத்தப்ட்ட அரசியல் வாதி சுத்துமாத்து சுமத்திரன் ஆகத்தான் இருக்கும் .
  25. தற்போதைய நிலவரப்படி... 75 ஆண்டுகள் பாரம்பரியமான தமிழரசு கட்சி, இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள... நேற்று முளைத்த டாக்டர் அர்ச்சுனாவின் கட்சியிடமும், சிங்கள இனவாத கட்சி என பெயர் எடுத்த அனுரவின் கட்சியிடமும் முக்கி, முனகிக் கொண்டுள்ளது. 😂 தமிழரசு கட்சியை, இந்த நிலைமைக்கு... கொண்டு வந்து விட்ட சம்பந்தன், சுமந்திரன் கொம்பனிக்கு கோடானு கோடி நன்றிகள். 🤣
  26. நான் இலங்கையன் அல்ல. இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌
  27. தமிழ்சிறி உங்களுக்கு இந்த வேலை சரிவாராது. 🤣 ஏனெனில் ஜேர்மனியில் உள்ளவர்கள் முழுவதும் பங்கு பற்றவில்லை யாழ்ப்பாணத்தில். நான் சிறுவனாக இருந்த காலத்தில் போகும் பொழுது எல்லாம் ஒருவரை காண்பேன். வைரமாளிகை என்ற பெரிய எழுத்தில் போட்ட. ஐக்காட்டுடன். லொத்தர் சீட்டுகள். விற்ப்பார். உயர்ந்த மனிதன் அவர போனால் கிடையாது பொழுதுபாடடால் கிடையாது,......இப்படி நிறைய சொல்லி லொத்தரும். விற்பனை செய்வார் அதேவேளை நகைகடைக்கும். விளம்பரம் உங்களுக்கு அவரை தெரியுமா??? சுவியாருக்கு தெரியலாம். 🤣🙏 சும்மா எழுதினேன் தொடர்ந்தும் பலரையும் இணைக்க வாழ்த்துக்கள் 🙏
  28. மகனும் சளைத்தவரல்ல : தினம் தினம் உன் முகம்
  29. பலம்,பலம் தமிழர்களின் பலம் பொன்னம்பலம் 🦾
  30. வாக்களிக்க முன் எவருக்கும் முடிவு தெரியாது புலவர். வாக்களித்த பின்பே முடிவை காட்டும். ஆனால்... மேலே ஈழப்பிரியன் எழுதிய கருத்து, வாசகர்களை ஒரு பக்கம் சாய வைக்கலாம் இதனை தற்காலிகமாக மறைத்து வைத்திருப்பது நல்லது என நினைக்கின்றேன்.
  31. கேந்திர இலக்கு மாறவில்லை. அணுகுமுறையே மாறி உள்ளது. கிட்டத்தட்ட இதையே trump இன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சொன்னது. மேட்ற்கு படைகளை இடையில் விட்டு , நிரந்தர மேற்கு இரணிவ அணிகளை தனது எல்லைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அலைபாதத்திற்கு புட்டின் உண்மையில் வழுக்கை மூளையா? டிரம்ப், அவரின் தனித்த அல்லது நிர்வாக அணுகுமுறையாக இருக்கும். புட்டின் / ருசியா அரச நிறுவன அணுகுமுறையாக இருக்கும். ரசிய, டிரம்ப் / எலன் மஸ்க் பேசியதை மறுத்துள்ளது, மறு வளமாக இது உண்மையில் நடந்து இருந்தாலும் அல்லது டிரம்ப் நூல் விட்டு பார்த்து இருந்தாலும். அனால், அமெரிக்கா அரசின் பிரதான இலக்கு சீனா, வேறு களங்கள், பிரச்சனைகள் கவனத்தை சிதறடிக்க கூடாது என்பதில் அமெரிக்கா அரசு கவனமாக இருக்கிறது, எனவே சண்டை தணித்தலை தந்திரோபாய இலக்காக இருப்பதில் ஒன்றும் புதினம் இல்லை. அனால், ருசியா இலக்கோ இதற்கு முற்றிலும் எதிரானது.
  32. கக்கீமுக்கு ..நீதிஅமைச்சு...ரிசாத்துக்கு..கப்பல் வியாபார அமைச்சு... சுமந்திரனுக்கு பிரதமர் பதவி..சிரியருக்கு கால்நடை மாட்டுப்பண்ணை,டக்கியருக்குமீன்பிடி மண் அள்ளுதல்...கிசிபுல்லாவுக்கு முசுலிம் விவகாரம்..நசீருக்கு கிழக்கு காணிவிவகாரம் ரெடி....யாழ் கபிதனாரை தேசியப் பட்டியலில் நியமித்து...கனடிய தமிழ் விவகார அமைசராக்கலம்...😆
  33. நல்லொதொரு கவிதை. இப்பொழுது எல்லாம் எனக்கும் இந்த முதுமையை எப்படி கழிக்கபோகின்றோம் என்பது பற்றி ஒரே யோசனையாகவுள்ளது. நேற்று முன்தினம், அருமையான ஒரு ஞாயிறுக்கிழமை மாலை வேளையில் கொழும்பின் புறநகரிர் பகுதியில் எனது வீட்டிலிருந்து நடந்து ஒவ்வொரு வாரமும் அந்த கிறிஸ்தவ ஆரதனைக்கு செல்வேன். மாலை 5 ௬, மணியளவில் இப்பொழுதது நவம்பர் மாதம் என்பதால் மாலை நேரம் மிகவும் ரம்மியமான இருக்கும். சந்தடியற்ற தெரு, பற‌வைகள், அணில்கள் சத்தம், சூரிய அஸ்தமனம் என்பன மனதுக்கு இதமானவைகள். அந்த ஆங்கில ஆரதனையின் முடிவில் ஒரு வ்யது 84 வ்யதுடைய ஒருவர் காலம் சென்ற தனது மனைவியை பற்றி ஆங்கிலத்தில் ஒரு கவிதை அருமையாக வடித்திருந்தார். முடிந்த‌வுடன் அவரை பாராட்டிவிட்டு அவருடைய அழைப்பின் பேரில், ஆலயத்திற்கு அடுத்து இருந்த அவரது வீட்டிட்கு சென்றேன். தனிமையாக வாழ்கின்றார். வீடு நிறய ப‌ழைய படங்கள், மனைவி, பிள்ளைகளுடன் எடுத‌த படங்கள். காலையிலேயே எழுந்து தோட்டவேலைகள் செய்கின்றார். வீடு நிறைய செடிகள் காய் கறிகளுடன் கய்த்து தொங்குகின்றது. மனம் முழுவதும் கடந்தகால நினைவுகளை அசை போட்டபடி வாழ்கின்றார். அருமையான அனுபவம்.
  34. மக்களே எமது கட்சியின் ஆதரவுகளைப் பார்த்து பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள். என்னை கைது செய்தாலும் நீங்கள் குழம்பாமல் சாரைசாரையாக வாக்களித்துக் கொண்டே இருங்கள்.
  35. வாக்கு சாவடியில் நின்று பிரச்சாரம் செய்தல் ஆகாது🤣.
  36. அப்ப @புலவர் உடன் மினிமம் 2 வாக்கு கரண்டி🤣 கள்ள ஐடி(கள்) வைத்திருப்போர் ஐடிக்கு ஒரு வாக்கு போடலாம். #குத்துங்க எசமான், குத்துங்க🤣
  37. 01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம் 02) சசிகலா ரவிராஜ் - இல்லை 03) விசுவலிங்கம் மணிவண்ணன்- இல்லை 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - இல்லை 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை 18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை 19) துரைராசா ரவிகரன் - ஆம் 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறினேசன் - ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - இல்லை 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === > 03 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்ட - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 11 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 01 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 00 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தமிழரசுக் கட்சி 45) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 03 52) தேசிய மக்கள் சக்தி ===> 09 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 01 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00 57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 13 58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 58 59) தேசிய மக்கள் சக்தி ===> 136 60) புதிய சனநாயக முன்னணி ===> 05
  38. ரணிலின் பட்டபடிப்பு தகவலுக்கு நன்றி. அவர் வெளிநாட்டில் படிக்கவில்லை என்பது ஓரளவு ஊகிக்க கூடியதே, ஏன் என்றால் 24 வயதிலோ என்னமோ எம்பி ஆகிவிட்டார். நீங்கள் ஒரு வாட்சப் செய்தியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அதில் அவர் பற்றி சொல்லப்பட்டவை டமால், டுமீல் ரகம்தான்🤣. ஆதரவாளர்கள் என்றால் அப்படித்தானே🤣. இப்போ நம்மட சிறிதரனின் கைப்பொடியளை எடுங்கோ, சாராய பிர்மிட் பணத்தை, இலண்டனில் எம்மூலம் முதலிட்டார் என்பதையா சொல்லுவர்கள், இல்லைதானே. அவர் அஞ்சா நெஞ்சன், அரசியல் ஆலமரம், ராஜதந்திர பப்பா மரம் எண்டுதானே எடுத்து விடுவினம்🤣. அது போல் ஒரு அரசியல் தாமாசுதான் இந்த ரணில் சம்பந்தமான பட்டியலும். அதில் ரணிலை அமரிக்கா ஜனாதிபதியாக கேட்டடார்கள் என்பதை தவிர மீதி எல்லாம் இருக்கு🤣.
  39. மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?
  40. த‌லைவ‌ரே இது தான் உண்மையான‌ ப‌ழைய கால‌த்து அன்பு🙏🥰.....................................
  41. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஈழபிரியன். எனது திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் நிகழ்தது. அதனால் எனக்கு பையன் பிறந்தால் அப்பெயரை சூட்டுவது என்ற முடிவில் இருந்தேன். அப்படியே பெயரும் வைத்தேன்.💐 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சிறீ.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஏராளன்💐🙏 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மணி.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வாதவூரான். 💐🙏
  42. ஆல் போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி, பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் செழித்து, பார் போற்ற வாழ மணமக்களை வாழ்த்துகிறேன். அறியத்தந்த பாஞ் அவர்களுக்கும் நன்றிகள் சேர்த்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.