Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    88820
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    33368
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3125
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39344
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/14/24 in all areas

  1. பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் என் எழுத்து கூட அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.
  2. வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்
  3. தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம் ....
  4. யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... யாழ்.கள வாசகர்களாகிய நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த.... @வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி, @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️ இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏
  5. "சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? *தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.! *மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..? *தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை... *மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..? *தலைவர்* : ஆம்.. *மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர். ( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...) மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.. சிரிக்க மட்டும் ...
  6. இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்
  7. சனம் இவங்களில இருந்த கடுப்பை அவங்களுக்கு வாக்களிச்சு தீர்த்துப்போட்டுது! நம்மட தோஸ்து ஒன்று அவங்கட பொக்கற் மீற்றிங்கில போய்ச் சொன்னது சரியாப் போச்சே! நீங்கள் வாக்கு கேட்க தேவையில்லை, வேட்பாளரை அறிமுகப்படுத்துங்கோ என்று சொன்னவராம்!!
  8. இந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்.. தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு... நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது… அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்.. நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢
  9. லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு.. சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்.. எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..
  10. வரும் 20ம் திகதியின் பின் தற்போதுள்ள சேர்வரின் பாவனைக் கால எல்லை முடிவடைகின்றது. நாளை / நாளை மறுதினம் சேர்வர் வேலைகளைப் பார்க்கலாம் என்றிருந்தேன். தேர்தல் முடிவுகள் வரும் வரை மாற்றத்தினை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடுகின்றேன். புதிய திகதி பின்னர் அறித் தருகின்றேன்.
  11. இப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி குதிரைகளுக்கு பணம்கட்டியும் மாடுகளுக்கு கொம்பு சீவியும் விட்டதன் பெறுபேறு எனக்கொள்ளலாம்.
  12. General Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து) . யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.
  13. கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!
  14. யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன்.
  15. @ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய் வாக்குப் போடுங்கோ. அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.
  16. தமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை. எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.
  17. எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின் உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...ஒரு அவதானம் ..ஊரில் போனபோது ..ஒவ்வொரு வீட்டிற்கும் போனேன்...அங்கு கண்டது அதிசயம் ...அவர்களிடம் எந்தவித எதிபார்ப்போ...ஆச்சரியமோ தென்படவில்லை..நீயும் நானும் சமந்தான் என்பதுபோல் இருந்தது..அதனை நான் வரவேற்கின்றேன்.. இங்குதான் திருப்புமுனை..அதாவ்து எம்முடைய கழிசடை அரசியல்வாதிகள் நேர்மையாக நடந்திருந்தால் ..இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது
  18. கொஞ்சநேரமாவது ஹப்பியா இருக்கட்டுமன் அவர்😂
  19. இது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை! நண்பனின் பதிவு .. அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂
  20. சைக்கிளுக்கு காற்று போச்சு பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.
  21. உண்மை புத்தன்...வெறுப்பு அரசியல்தான் இந்த முடிவே தவிர ..உணர்வு மங்கவில்லை..என் நேரடி அனுபவம்... இந்த களத்தி பரும் பலவகையாக சொல்லலாம்... உண்மை அதுவல்ல
  22. தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு!
  23. இதில் அதிசயம் எதுவும் இல்லை. 2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂. இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்!
  24. தீதும் நன்றும் பிறர் தர வாரா.. தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்… தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢 நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏
  25. என‌து நில‌மை இப்போது😁...................🙈🙉🙊
  26. இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும். ஏனெனில்: தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.
  27. FB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!
  28. தபால் வாக்குகளில் மொட்டு கட்சி, 4% வரை எடுக்கிறது. ஜனாதிதேர்தலில் இது 2% ஆம். அதே போல் என் பி பி இப்போதைக்கு வந்த முடிவுகளில் 79%.
  29. முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன். அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா... கள்ளா..." என கோசம் போட்டார்கள். 😂 அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது. 🤣
  30. நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.
  31. அகற்றப்பட்டுள்ளன என்று வந்திருக்கவேண்டும்! எனக்கு ரிப்போர்ட்டர் வேலை தந்திருந்தால் இப்படி நீட்டி முழக்கி எழுதியிருப்பேன்😉👇🏿 இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் அகற்றப்பட்டு நேற்று காலை முதல் பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
  32. அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?
  33. தாத்தா... ஸ்ரேடியத்துக்கு வந்து, என்னத்தை படம் எடுக்கிறார் என்று பாருங்கோ... 😂
  34. இது இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில், பையன் சார். 1987, 88, 89ம் ஆண்டுகளில்............. சில இயக்கங்கள் பொடியன்கள், இளைஞர்களை பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். என்னையும் ஒரு நாள் பிடித்தார்கள். பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்தேன் என்றபடியால் என்னை கூட்டிக் கொண்டு போகவில்லை.
  35. மழையும் பெய்யுது, நித்திரை வருகிறது. அட்வான்சா @ரசோதரன் அண்ணையின் பல்கலைத் தோழருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லி வைப்பம்! புதிய ஜனாதிபதியும் அரசும் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலட்டும்!!
  36. மாத்தளை மாவட்டம் - மாத்தளை தேர்தல் தொகுதி முடிவுகள்! போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 37,287 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 11,014 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,341 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,773 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 773 வாக்குகள் யார் எவரை கைவிட்டாலும், 'குடி'மகன்கள் தமக்கு உதவியவர்களை கைவிடுவது இல்லை 😀
  37. தாம் போடும் ஆட்டதுக்கு ஆடாத, மனநிலை பிறலாமல் சுயமாக சிந்திக்கும் சுமத்திரனை வெறுத்து ஒதுக்க தமிழ் இன வெறியர்கள் போட்ட திட்டத்தால் கிடைத்த பரிசு இது என்று தலைப்பு வந்திருக்க வேண்டும்
  38. விசுகர்... இவர்களுக்காக தரித்து நின்ற பஸ்ஸை... ஏண்டாப்பில் தவற விட்டு விட்டார்கள். இனி கைகாட்டி பிரயோசனம் இல்லை. அடுத்த ஐந்து வருடத்துக்குள்.... இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப, ஆரோக்கியமான புது முகங்களை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.
  39. அதாகப்பட்டது முதலில் வீட்டில் மாற்றம் வேண்டும் .....அப்போதுதான் எழுத்திலும் மாற்றம் உண்டாகும் . ......! 😁 நான் வீட்டில் என்றுதான் சொல்கின்றேன் . ......வீட்டினுள் என்று சொல்லவில்லை . ......! 😴
  40. ஆசை… தோசை…. அப்பளம்…. வடை. 😂
  41. கொழும்பான்... மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் வேலை செய்வதாக முன்பு சொன்னவர். நீங்கள் நுணாவிலானையும், வாதவூரானையும் இலங்கையில் வசிக்கின்றார்கள் என்று சொல்வீர்கள் போலுள்ளது. சரியான வில்லங்கம் பிடித்த ஆளப்பா. 🤣
  42. அருணலு மக்கள் முன்னணி என்ற கட்சி தண்ணீர் பைப் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்கிறது. இவ்வணியின் செயலாளர் பெயர் - கிறிசான். கட்சி அலுவலகம் வெல்லம்பிட்டியாவில் இருக்கிறது நுவரெலியா மாவட்டத்தில் இக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது
  43. வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..? ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
  44. ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
  45. எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது உடலும் மனமும் நிம்மதியை தேடும் இடம் தான் வீடு ...இருக்கும் இடம் பிடித்து போய் விடடால் பிறந்த இடம் அந்நியமாகி விடும். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
  46. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1978 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது தொடர்பான விடயங்கள் பற்றிக் கூறுகின்றது. இலங்கையில், நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம் முறைப்படியே நடைபெறுகின்றன. தொடக்கத்தில் இலங்கையில் இது ஒரு மூடிய கட்சிப் பட்டியல் முறையாகவே அறிமுகப்படுத்தபட்டது எனினும், பின்னர் தேர்தல்கள் எதுவும் நடைபெற முன்னரே உடனடியாக இது ஒரு திறந்த கட்சிப் பட்டியல் முறையாக மாற்றப்பட்டது. தேர்தல் மாவட்டங்கள் [தொகு] இலங்கையில் தேர்தல்கள் தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைப் பெறுகின்றன. நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 20 தேர்தல் மாவட்டங்கள் நாட்டின் நிர்வாக மாவட்ட எல்லைகளையே தங்கள் எல்லைகளாகவும் கொண்டுள்ளன. ஏனைய இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களையும், வன்னித் தேர்தல் மாவட்டம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களையும் தம்முள் அடக்கியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உள்ளூராட்சிச் சபைகளினதும் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒரே அலகாகக் கொள்ளப்படுகின்றது. வேட்பாளர்கள் இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேச்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றார்கள். இலங்கையில் அங்கீகாரம் பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் தாங்கள் நியமிக்கும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களுடன் தங்கள் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு குழுவின் பட்டியலிலும், அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட மூன்று மேலதிக வேட்பாளர்கள் அடங்கியிருக்கவேண்டும். வாக்களிப்பு முறைமை இலங்கையில் வாக்களிப்பு திறந்த கட்சிப் பட்டியல் முறையில் நடைபெறுவதால், கட்சியிலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் ஒழுங்குவரிசையைக் கட்சிகள் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு வாக்காளரும், தாங்கள் விரும்பிய கட்சி அல்லது குழுவுக்கும், அக் கட்சி அல்லது குழுவினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் குறைந்தது மூன்று பேருக்கும் வாக்களிக்க முடியும். இவ்வாறு தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களினதும் ஒழுங்கு வரிசை தீர்மானிக்கப்படுகின்றது. கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல் முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார். உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும். அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும் குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக் குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் ஈவு, ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற் சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும். உறுப்பினர் தெரிவு ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு கட்சி அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அக்கட்சி அல்லது குழுவில் கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன. தேர்தல் மாவட்டம்-X உறுப்பினர் தொகை - 7 அளிக்கப்பட்ட வாக்குகள் - 288,705 கட்சி பெற்ற வாக்குகள் வீதம் கட்சி-A 111747 38.71% கட்சி-B 76563 26,52% கட்சி-C 55533 19.24% கட்சி-D 42121 14.59% சுயேச்சை-1 1611 0.56% சுயேச்சை-2 1130 0.39% மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி A கூடிய வாக்குகள் பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்கு வழங்கப்படும். இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன. அவ்விரு குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும். 288,705 - 1,611 - 1,130 = 285,964 வாக்குகள் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 7, ஒரு உறுப்பினர் ஏற்கனவே கட்சி A இற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 6. எனவே: ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் = 285,964 / 6 = 47,661 கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க: கட்சி - ஈவு மிச்சம் கட்சி-A 111,747 / 47,661 2 16,425 கட்சி-B 76,563 / 47,661 1 28,902 கட்சி-C 55,533 / 47,661 1 7,872 கட்சி-D 42,121 / 47,661 0 42,121 இப்பொழுது கட்சி நிலைவரம்: கட்சி போனஸ் சுற்று மொத்தம் 1 2 கட்சி-A 1 2 - 3 கட்சி-B 0 1 - 1 கட்சி-C 0 0 - 1 கட்சி-D 0 0 - 0 மொத்தம் 5 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 2 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொரு கட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-D ஆகக்கூடிய மிச்சமாக 42,121 வாக்குகளையும், கட்சி-B அடுத்ததாக 28,902 வாக்குகளையும் கொண்டுள்ளன. இதனால் கட்சி-D க்கும், கட்சி-B க்கும் தலா ஒரு உறுப்பினர் கிடைக்கும். முடிவில் கட்சி நிலைவரம்: கட்சி போனஸ் சுற்று மொத்தம் 1 2 கட்சி-A 1 2 0 3 கட்சி-B 0 1 1 2 கட்சி-C 0 1 0 1 கட்சி-D 0 0 1 1 https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_விகிதாசாரப்_பிரதிநிதித்துவத்_தேர்தல்_முறை
  47. மரவள்ளிக்கிழங்கு ஆபிரிக்காவில் முக்கிய உணவு என நினைக்கின்றேன். இருந்தாலும் ஆசிய நாடுகளிலும் இதன் மகத்துவம் அளப்பெரியது. எமது ஊர்களில் ஏழைகளின் முக்கிய உணவாக மரவள்ளிக்கிழங்கு இருக்கும். கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கு இணையாக மரவள்ளிக்கிழங்கிலிருந்தும் தயாரிப்பார்கள். இணைப்பிற்கு நன்றி சுவியர் 👍
  48. இவர்கள் உலகளாவிய மக்களா , அல்லது us இல் இருப்பவர்களா? ஏனெனில், அந்த இன வகைப்படுத்தல் US இல் பாவிக்கப்படுவது. ஆம் அதில் இருப்பது US இல் என்று. "This is the first study to look at dementia risk in a large population representing the diversity of the United States" "The study population included more than 274,000 northern California members of Kaiser Permanente, the nation’s largest private integrated healthcare system with more than 10 million members." உலகளாவிய அடிப்படையில் இது வேறுபடலாம் ஏனெனில், us இல் இருக்கும் கறுப்பு, மற்றும் பூர்வீக குடிகளுக்கு சமீப வரலாறு சுமை, பொதி அகற்றப்படவில்லை.
  49. செவ்வியன் ! இன்னும் அரிச்சுவடியிலேயே நிற்காமல் வேறுபகுதியிலும் உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். புத்தகங்கள் தேடி வாசிப்பதில் புலமை உள்ளவர் என எண்ணுகிறேன். நீங்கள் படித்து சுவைத்தவை கூட இங்கு பகிரலாம் யாவரும் பயன் பெறுவார்.என்பது எனது கோரிக்கை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.