Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்21Points88812Posts -
MEERA
கருத்துக்கள உறவுகள்19Points5418Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்13Points46969Posts -
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்12Points12788Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/16/24 in all areas
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.7 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣6 points
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.5 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!! என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு.5 points
-
மூடிய என் முகம்
3 pointsமூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.3 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan, @kayshan அன்பான யாழ்.கள உறவுகளே... மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... ஆம் அல்லது இல்லை என வாக்களித்தால் போதுமானது. வழமை போல் இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.3 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது. சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள். இனி…. உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள். சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா இலக்கங்கள் 11,17,22 11 ) 24 போட்டியாளர்கள் காண்டீபன் வெற்றி பெறமாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 17) 23 போட்டியாளர்கள் சிவாஜிலிங்கம். அவர்கள் வெற்றி பெறமாட்டார் என்று கணித்திருக்கிறார்கள் 22) 25 போட்டியாளர்கள் கருணா வெற்றி பெறமாட்டார் என கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 29 புள்ளிகள் 2)கந்தையா 57 - 24 புள்ளிகள் 3)தமிழ்சிறி -24 புள்ளிகள் 4)வீரப்பையன் - 24புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 24 புள்ளிகள் 6)நிலாமதி - 24 புள்ளிகள் 7)Alvayan - 23 புள்ளிகள் 😎 வாதவூரான் - 23 புள்ளிகள் 9) வாலி - 23 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 21 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 12)வில்லவன் - 21 புள்ளிகள் 13)நிழலி - 21 புள்ளிகள் 14)ரசோதரன் - 21 புள்ளிகள் 15)கிருபன் - 19 புள்ளிகள் 16)goshan_che - 19 புள்ளிகள் 17)நுணாவிலான் - 19 புள்ளிகள் 18)வாத்தியார் - 18 புள்ளிகள் 19)சசிவர்ணம் - 18 புள்ளிகள் 20)புலவர் - 17 புள்ளிகள் 21)சுவி - 16 புள்ளிகள் 22) புத்தன் - 15 புள்ளிகள் 23) அகத்தியன் - 13 புள்ளிகள் 24) குமாரசாமி - 13 புள்ளிகள் 25) வசி - 8 புள்ளிகள் 26) தமிழன்பன் - 5 புள்ளிகள் இதுவரை 4, 7, 11, 17, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 48)3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsமிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.2 points
-
மூடிய என் முகம்
2 pointsபொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் , எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது " பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் " எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள். முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில் தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.2 points
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இதை பற்றி தான் எனது சிறு வயது பாடசாலை தோழனுடன் கதைச்சிட்டு இருந்தேன் எங்கட அரசியல் வாதிகளை படு மட்டம் தட்டி கதைச்சான் 2009க்கு பிறக்கு இவர்கள் செய்த குளறு படிகள் சொகுசு வாழ்க்கைக்கு மக்களுக்கு செய்த துரோகத்துக்கு தான் யாழ்ப்பாண மக்கள் இவைக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கினம் என்று இப்பத்த இளையதலைமுறை பிள்ளைகள் முற்றிலும் மாறி விட்டினம் அண்ணா.................. அனுரா சொன்னதை எல்லாம் செய்தால் அனுரா இனி வரும் தேர்தலில் பிரச்சாரத்துக்கு யாழ்ப்பாணம் வராமலே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிறக்கு எத்தனையோ துரோகங்களை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சிலர் கருத்தை முன் வைத்தால் எம்மவர்களே வெளிப்படையா எழுதுகினம் எங்கடையல் செய்யாத துரோகத்தையா கடந்த காலங்களில் அனுரா செய்து விட்டார் என்று அவர்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான் இல்லாத தலைவரை இருக்கிறார் என்று கடசி நேரம் போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச பணங்கள் இதோ துவாரகா வருகிறா அருணா நேரில் சென்று தனது தங்கையுடன் சாப்பிட்டது என்று எவளவு அவதூறுகள் 2009களில் எம்மை எம்மவர்கள் ஏமாற்றின மாதிரி வேற்று இனத்தவன் ஏமாற்ற வில்லை அண்ணா🙏..................................2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும் நன்றிகள்.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇது தவறான கட்டுரை. எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம்.2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும் அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள் முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள். தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும் இருத்தி / அடிமையாக்கி உள்ளார். விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச் சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது. கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா? இங்கு நவம்பர் 11 just a Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.2 points
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர கூறியிருந்தார். ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமானது அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. "ஒரு அரசியட் கட்சியாக, சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். "இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.2 points
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
கிழக்கு மீண்டும் தன்னை யார் என நிரூபித்து காட்டி இருக்கின்றது. மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஒரு விடயம் சொல்ல வேண்டும். இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும் @கிருபன்@நிழலி க்கு தெரியுமோ தெரியாது….. அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை). இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.2 points
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார் அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும். ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்2 points
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
15 NOV, 2024 | 04:31 PM (சி.சிவகுமாரன்) மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம். https://www.virakesari.lk/article/1988791 point
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதுவரை இருந்த தமிழ் அரசியல்வாதிகளை அனுப்பச்சொன்னேன். வீட்டுக்கு அனுப்பி போட்டு - மயூரன் போன்ற இளையவர் கையில் லகானை கொடுக்க ஏன் முடியவில்லை? இளையவர்கள் மீது ரிஸ்க் எடுக்காத எந்த சமூகமும் உருப்படாது.1 point
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
1 pointபிறகு என்ன கோதாரிக்கு நீங்கள் வாழவேணும்? சும்மா உலகத்துக்கு பாரமாய் இருந்து கொண்டு......🤣1 point
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
1 pointஏன் இப்ப நீங்கள் 4B யில்தானே இருக்கிறீர்கள் . .......! 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) இனி திருமணம் செய்யும் எண்ணம் இருக்காது . .....! பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பாக்குவெட்டி தயாராய் இருக்கும் . .....! பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) இனி இருந்தென்ன விட்டென்ன ..........! பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) இருப்பதே போதும்...... இன்னும் வேணுமா .........! 😁 😁1 point
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இக்கரைக்கு அக்கரை பச்சையுங்கோ .....கலியாணம் கட்டி வாழ்ந்த அனுபவம் வேணும் கண்டியளோ சும்மா டயலோக் விட வேண்டாம் என சிங்கள தோழர்களிடம் சொல்லி வையுங்கோ .😅. இதை தானே பல தமிழ் தோழர்களும் சொல்லிகொண்டு திரியினம் 70 வருடங்களுக்கு மேல...😅1 point
-
மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது..
நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர். அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽1 point
-
தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை- சிவாஜிலிங்கம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர். நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/14087571 point
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுள் பெரும்பான்மையினர் முதற்தடவையாக பாராளுமன்றம் வருபவர்கள். இவர்களுள் சிலர் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அரசியல்க் கைதிகளின் விடுதலை தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். தமிழர்களின் இரு முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் கூட்டங்களை அவர் நடத்தினார். வவுனியா கூட்டத்தில் பேசும்போது தமிழ் அரசியல்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கும் நோக்கம் தனக்கில்லை என்று பொருள்பட அவர் பேசினார். "பிரதம நீதியரசர் முன்வைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்" என்று அங்கு அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல் வவுனியா கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அநுர, முன்னைய அரசாங்கங்களினாலும், அரச அதிகாரிகளினாலும் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழருக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க தான் ஆவன செய்வதாகக் கூறியிருந்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிங்கள மொழி உரையில் தமிழர்களிடமிருந்து அடாத்தாக அரசுகளால் பிடுங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க விரும்புவதாகவும், தமிழ் மக்கள் பல தசாப்த்தங்களாக முகங்கொடுத்து வருகின்ற அரச அடக்குமுறைகளைத் தணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்."நாம் வடக்கில் காணிகளை வழங்கினால் தெற்குக் கொந்தளிக்கிறது, அவ்வாறே தெற்கிற்கு வழங்கினால் வடக்கு கொந்தளிக்கிறது" என்று அவர் பேசினார். வடக்குக் கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொனிப்படவே அவரது கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனது கருத்திற்கான ஆதாரங்களை அங்கு முன்வைப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் இனக்கொலை நடந்தேறி பதினைந்து வருடங்களை கடந்த நிலையிலும் இன்றுவரை வடக்குக் கிழக்கில் பெருமளவு பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தே வைத்திருக்கின்றன. இதே காலப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி மேலும் பல பிரதேசங்களை தொல்லியல்த் திணைக்களமும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. வடக்குத் தமிழரின் நிலங்கள் முன்னைய அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் நாம் அவற்றினை விடுவிக்க ஆவன செய்வோம் என்று அவர் வவுனியா உரையில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியில் விஞ்ஞாபனத்தில் "நிலப் பகிர்ந்தளிப்பில் காணப்படும் பாகுபாடுகள் தனியார்மயப்படுத்துவதனால் உருவாக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டிருந்தது. ஆக, காணிகள் தனியார்மயப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே அதுகுறித்த அரசியல்ப் பிரச்சினை உருவாகிறது என்று அது நியாயப்படுத்தியிருந்தது. ஆகவே இக்காணிப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க தற்காலிக நீதித்துறை அமைப்பொன்றினை உருவாக்கி, இப்பிரச்சினைக்கான நீதியானதும், விரைவானதுமான தீர்வுகளை வழங்க தான் விரும்புவதாக அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவித்திருந்தது. இன்றைய நாள்வரை தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.1 point
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. 2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். 3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.1 point
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
வாட்ஸப்பில் இருந்து.. சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம். Purujoththaman Thangamayl Copied from FB1 point
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
1 pointஇப்படியாவது…. உலக சனத்தொகை கொஞ்சம் கட்டுப்பட்டு இருக்கட்டும்.1 point
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இனியாவது இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளை ஒன்றிணைய உதவட்டும். சிந்திக்கட்டும். உதாரணத்திற்கு என் இனத்தை நான் சார்ந்தவனே நெறிப்படுத்த வேண்டும்.1 point
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
வணக்கம் வளவன்! நான் விரும்பும் கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். அது ஒரு புறமிருக்க... யாழ்களம் ஒரு பொதுவான களம் என நான் மட்டும் கருதியிருந்தேன். ஆனால் நான் யாழ்களத்தில் இணைந்த காலம் தொட்டு படித்தவர்கள் படிக்காதவதர்கள் என்றொரு வட்டம் இருக்கின்றது என கண்டு கொண்டேன். இதை எத்தனை பேர் உணர்ந்தார்களோ தெரியவில்லை. நான் மட்டும் உணர்ந்துள்ளேன். இதன் காரணமாகவே நான் யாழில் இணைந்த காலங்களில் எனது சுயவிபரத்தில் தொழில் கோப்பை கழுவுதல் என குறிப்பிட்டிருந்தேன். இது எனது சுய பாதுகாப்பிற்காக மட்டுமே. ஊரில் யாழ்ப்பாணத்தவரிடம் அல்லது தமிழரிடம் இருக்கும் படிச்ச கிறவுட் மேட்டுக்குடி அட்டகாச அஜாரகங்கள்/குணங்களை எங்கு கண்டாலும் அடியோடு நறுக்க என்றுமே பின்னிற்க மாட்டேன். நன்றி உங்கள் பதில் கருத்திற்கு...1 point
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
கிழக்கில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் மட்டுமே துரோகிப்பட்டம் கொடுத்தார்கள். தற்போது வடக்கில் எத்தனை ஆயிரம்,.....? 🤨1 point
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இது நல்ல தெரிவு.1 point
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம் அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ எவரும் கேட்கப்போவதில்லை தானே.1 point
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1 point
- மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும். - ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை. - தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள். - மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை - மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை. - தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ம்.... இவ்வளவுகாலமும், நாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூவி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போகேக்க மானங் காத்த தமிழர். இப்போ மக்கள் ஏமாற்றமடைந்து தமது வெறுப்பை காட்டியதால், தமிழ் இந வெறியர். தமிழ் கட்சிகள் எல்லார் மீதுமே மக்கள் தமது வெறுப்பை காட்டியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, ஏன் சுமந்திரனை மட்டும் வெறுத்து ஒதுக்கினார்கள் என்று வெதும்புகிறார்கள்? அப்படியெனில் சுமந்திரனின் அடாவடிக்கு விழுந்த அடியென ஏற்றுக்கொள்கிறார்களா? தலையிருக்க வால் ஆடியதால் ஏற்பட்ட விளைவே இந்த படுதோல்வி. இந்த ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவ்வளவு கோபம் வந்தால், மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும். வினை விதைத்தவன் வினைதான் அறுக்க முடியும். போன தடவை மாவையர் தோற்றுவிட்டார், மக்கள் தலைவர் மேல் நம்பிக்கையிழந்து விட்டனர், ஆகவே மாவையர் பதவி விலகவேண்டுமென கோசம் போட்டவர் இன்று அதே தோணியில். என்ன ஒரு அதிரடி, எகத்தாளம், யாரையும் மதிப்பதில்லை, எதற்கும் கட்டுப்படுவதில்லை, யாரோடும் ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக ஆடி அடங்கிவிட்டார். இவரை அரவணைப்பதற்கு இப்போ யாரும் இல்லை பதவியில். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு போட சொல்லி மக்களை கோரினார், மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித்துக்கே இவரைவிட கூடுதலான வாக்களித்துள்ளனர். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் இவர் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை, அவர்களே விரும்பி வாக்களித்துள்ளனர். அல்லது அவருக்கு வாக்களிக்க கூறியதால் சுமந்திரனை மக்கள் நிராகரித்துள்ளனர். எது சரியாக இருக்கும்? மக்கள் தாங்களே முடிவெடுத்து சஜித்தை ஆதரித்திருந்தனர் ஜனாதிபதி தேர்தலில். பாராளுமன்றத்தேர்தலில் அனுராவை தேர்தெடுத்துள்ளனர். இதுதான் ஜதார்த்தம்!1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் பாராளுமன்றம் போக ஒதுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தால் வாய்ப்பிருக்கு! சிறிதரன் தனது ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை தலைமைதாங்கும் தருணம் இது. பொதுக்குழுவை தனது பக்கம் சாய வைக்காமல் சிறிதரன் அரசியலில் இருப்பது சுத்த வேஸ்ற்! ஆம். தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னர் பிள்ளையானை விசாரணைக்கு வரச்சொல்லி வந்த செய்தியால் சில ஆயிரம் வாக்குகள் மாறியிருக்கும்! தேசிய மக்கள் சக்தி உள்ளே இருக்கவேண்டியவர்களை உள்ளே தள்ளும் காலம் கனிந்துவிட்டது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்!1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 30 தேசிய மக்கள் சக்தி திருமலை தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 16 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் 12 போட்டியாளர்கள் தேசிய மக்கள் கட்சி 2 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 16 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ் தேசியன் - 14 புள்ளிகள் 3)சுவைபிரியன் -12 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 12 புள்ளிகள் 5)வீரப்பையன் - 12புள்ளிகள் 6)வில்லவன் - 12 புள்ளிகள் 7) வாலி - 12 புள்ளிகள் 😎 நிலாமதி - 12 புள்ளிகள் 9) கந்தையா 57 - 10 புள்ளிகள் 10)Alvayan - 10 புள்ளிகள் 11)புலவர் - 10 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 10 புள்ளிகள் 13) வாதவூரான் - 10 புள்ளிகள் 14)நிழலி - 10 புள்ளிகள் 15) கிருபன் - 8 புள்ளிகள் 16)goshan_che - 8 புள்ளிகள் 17) நுணாவிலான் - 8 புள்ளிகள் 18)புத்தன் - 6 புள்ளிகள் 19)ரசோதரன் - 6 புள்ளிகள் 20)சசிவர்ணம் - 6 புள்ளிகள் 21)வாத்தியார் - 4 புள்ளிகள் 22)சுவி - 4 புள்ளிகள் 23)அகத்தியன் - 4 புள்ளிகள் 24)குமாரசாமி - 4புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27,28,30,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 26)1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 27 தேசிய மக்கள் சக்தி யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 2 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் ஒருவரும் தேசிய மக்கள் கட்சி 3 இடங்களை பிடிக்கும் என சரியாக கணிகவில்லை. 1)பிரபா - 12 புள்ளிகள் 2)சுவைபிரியன் - 10 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ் தேசியன் - 10 புள்ளிகள் 4)வில்லவன் - 10 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 8 புள்ளிகள் 6) வீரப்பையன் - 8 புள்ளிகள் 7) goshan_che - 8 புள்ளிகள் 8 )நுணாவிலான் - 8 புள்ளிகள் 9)வாதவூரன் - 8 புள்ளிகள் 10) வாலி - 8 புள்ளிகள் 11)நிலாமதி - 8 புள்ளிகள் 12)கந்தையா 57 - 6 புள்ளிகள் 13)Alvayan - 6 புள்ளிகள் 14)புலவர் - 6 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 16)புத்தன் - 6 புள்ளிகள் 17)நிழலி - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27,28,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 22)1 point- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
கொஞ்சம் தெளியிற மாதிரி இருக்கு! கொளுத்தி விட்டிட்டு நல்லாய் எரியுமட்டும் காத்திருக்கிறார், ஆனால் அது அணைந்து விட்டது.1 point- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
மீரா… “லூசுப் பயல்” என்றது சுமந்திரனை. 😂 🤣1 point- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
கரடியே… காறித் துப்பிய தருணம். 😂 🤣1 point - மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.