இலங்கை பிரஜாவுரிமையும் இருக்கும் நாட்டு பிரஜாவுரிமையும் வைத்துக்கொண்டு, பல லட்சம் டாலர்களில் சிங்கள நகரங்களிலே சொகுசு பங்களாக்கள், வியாபாரங்கள், வாகனங்கள் வைத்துக்கொண்டு
இலங்கைக்கு எந்த சீசனில் பிளட் டிக்கெட் மலிவாக கிடைக்கும் என்று அடிக்கடி ஒன் லைலில் செக் பண்ணிக்கொண்டு,
சிங்கள அரசு அனுமதியை சிரித்தபடி பெற்று அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்து , ஐயா அம்மா யாழ்ப்பாண நண்டு, பருத்துறை வடை, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், தோலகட்டி நெல்லிரசம் வாங்கலியோ என்று மேற்குலத்திலேயே பகிரங்க விளம்பரம் செய்துகொண்டு
இன வரிசையில்தான் இலங்கையில் இரண்டாமிடம் ஆனால் இலங்கை திறைசேரிக்கு அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் இலங்கையின் முதலாவது இனமாக இருந்துகொண்டு
திருமணங்களும், சொகுசு பங்களாக்களும் பார்ட்டிகளும் ஒன்று கூடல்களுக்கும் , கோவில் திருவிழாக்களுக்கும் இலங்கையிலேயே அதிகமாக செலவிடும் இனமாக இருந்துகொண்டு
தமிழர்களிடம் வாக்கு வாங்கி சிங்கள அரசின் சொகுசு மகிழூந்து, தங்குமிடம்,ஒப்பந்தங்கள், வியாபாரத்திலிருந்து சாராய அனுமதிபத்திரம்வரை வாங்கி கொழுத்துக்கொண்டு
கடலுணவிலிருந்து லிருந்து விவசாய உற்பத்தி பொருட்கள் வரை சிங்கள தேசத்திலேயே சந்தை படுத்திக்கொண்டு
அதி சொகுசு பேரூந்துக்களில் இலங்கை முழுவதும் சுற்றுலா செய்துகொண்டு அதை ஆயிரக்கணக்கில் காணொலிகளாக இணையத்தில் தரவேற்றிக்கொண்டு
இலங்கை தமிழரும் பாலஸ்தீனமும் ஒன்று எங்களின் சுய நிர்ணய உரிமையை ஏன் அங்கீகரிக்கவில்லையென்று கேட்டால், உலக தலைமை நாடுகள் கண்டிப்பாக தரும் வரிசையில் நில்லுங்க வாங்கிக்கலாம்.