Leaderboard
-
யாயினி
கருத்துக்கள உறவுகள்9Points10282Posts -
பெருமாள்
கருத்துக்கள உறவுகள்9Points15820Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்5Points3027Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்5Points1579Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/21/24 in all areas
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
அவனது பெயர் ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில் Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான். யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான். ‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லை’ என்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான். சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான். ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத் தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இன்று நடந்த இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது. யேர்மனியில் இந்த வாரம்தான் நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.4 points
-
என் எழுத்து - சுப.சோமசுந்தரம்
3 pointsஎன் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எழுத்து எப்படியிருக்கும் என்று கேட்க, "இப்படிதான் இருக்கும்" என்று நண்பர் Y அவருக்கு அனுப்பிவிட்டு எனக்கும் அனுப்பி வைத்தார். அது 'எனது நாத்திகம்' என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் தொடக்கம் : ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அரதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)3 points
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனிக்கென்று ஒரு குணமுண்டு , அகதியென்று வந்து அமைதியாக அந்தநாட்டு மக்களை எந்த தொந்தரவும் பண்ணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக வாழ்கிறவர்களை நிரந்தர வதிவிட அனுமதி வழங்காமல் ஓட ஓட குடும்பம் குடும்பமாக நாட்டைவிட்டு விரட்டுவார்கள், ஆளுக்கு பத்து பிள்ளை பெத்துக்கொண்டு, அகதி காசில் வண்டியோட்டிக்கொண்டு, அல்லாவின் பெயரால் குண்டு,கத்தி குத்து, லொறி கார் ஏத்தி நசுக்கு, சரமாரி துப்பாக்கிசூடு என்று ஜேர்மன்காரனுக்கே ஆப்படிக்குறவர்களுக்கு நிரந்தர அனுமதியை கொத்து கொத்தாக அள்ளி வழங்குவார்கள். இது ஜேர்மனி பெற்ற வரமா இல்லை வேண்டி பெற்ற சாபமா ஜேர்மனிக்கே வெளிச்சம்.3 points
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சிறியரிடம் நோர்வே தூதுவர் தூது போய், அவர் சொல்வதை சிறியர், “என்னவாம்” என்று முழுச அதை மொழிபெயர்கக சாணக்கியன் கூட போகவேண்டிவரும். 😂2 points
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
2 pointsசுமத்திரன் விசுவாசிகளுக்கு நாலு இங்கிலுசில் அடித்து விட்டால் காணும் எதிராளி படுத்திடுவான் என்ற நினைப்பு . out of box மைன்ட் என்றால் கொஞ்சம் பழைய கதை தான்! ஒரு பெருந்தனக்காரர் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் காரின் ஒரு டயர், டியூப் வெடித்து விட்டது. அதனை கழற்றி காரின் டிக்கியில் இருக்கும் உபரி சக்கரத்தை எடுத்து பஞ்சரான டயரை கழற்றிக்கீழே வைத்துவிட்டு வேறு ஒரு டயரை பொருத்தும் சமயம் அங்கிருந்து நான்கு பொருத்தும் நட்டுக்கள் கால் இடறி ஒரு பெரிய சாக்கடைக்குள் விழுந்து விட்டது. எடுக்க இயலாத ஆழம் கூட! இவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைபிசைந்து கொண்டிருந்த நேரம், அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் இருந்து ஆசாமி நான் ஒரு உங்களுக்கு உதவட்டுமா?என்று கேட்டான். இவன் என்ன உதவப் போகிறான்? என்று அலட்சியமாக நினைத்த முதலாளி இருந்தாலும் வேறு வழியில்லாமல் சரி சொல்லு? என்கிறார்.நன்றாக இருக்கும் மூன்று டயர்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டினை எடுத்து நான்காவது சக்கரத்துக்கு பொருத்திச் செல்லுங்கள். அருகில் இருக்கும் ஊர் வந்தவுடன் நான்கு புதிய நட்டுக்கள் வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள் என்றார். அதவாதுஒரு பிரச்சனையை வழக்கமான முறையில் சிந்தித்து மேலும் பிரச்னையை உருவாக்கி கொள்ளாமல் சமயத்துக்கு ஏற்ப சிந்தித்து இலகுவான வழிமுறைய கண்டு பிடித்தல் இன்னுமொரு உதராணம் . அது மிகவும் மிகப்பிரபலமான விமான நிலையம். அனைத்து வானூர்திகளும் சரியான நேரத்தில் புறப்படும் மற்றும் வந்து சேரும்.ஆக அங்கே பிரச்சினை என்ன வென்றால், பயணிகள் அனைவரும் விமானத்தில் இறங்கி தங்களுடைய சுமைகளை எடுக்க அதற்கான இடத்திற்க்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்களுடைய சுமைகள் வருவதற்க்கு அதிகம் நேரம் ஆகிறது. இதனால் பயனிகள் பொறுமை இழந்து விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடுகிறார்கள். இதற்கு தீர்வு கான விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு விதமான கலந்தாய்வு மூலம் சில புதிய முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக புதிய அதி நவீன இயந்திரம் வாங்குதல். அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல் …. ஆனாலும் பயணிகள் பிரச்சினை தீரவில்லை.மேலும் பல பயணிகளின் புகார்கள் அதிகரித்து கொண்டிருந்தது. இதற்கான தீர்வுதான் என்ன என்று சிந்தனை செய்யும்பொழுது அங்கே ஒரு மாற்று சிந்தனையாளரின் யோசனை என்னவெனில் பயணிகள் விமானத்தில் இறங்கி தங்களுடைய பயணச்சுமைகளை எடுக்கும் இடத்தின் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தவது (Zigzag way) புதிய பாதை அமைப்பது.இதனால் பயணிகள் தங்ளுடைய பயணச்சுமைகள் இருக்கும் இடத்திற்க்கு வருவதற்கு அதிக நேரமாகும் .இதற்குள் நாம் அவர்களுடைய பயணச்சுமைகளை அதற்கான இடத்திற்க்கு கொண்டு வந்து விடலாம் என்ற அந்த யோசனையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு பயணிகள் பிரச்சினையும் தீர்ந்தது. அதுசரி இந்த out of box மைன்ட்க்கும் உங்கள் விசர் சுமத்துரனுக்கும் என்ன சம்பந்தம் ? இதுவரை அப்படி எந்த அறிகுறியுமே காணவில்லையே கடந்த 14வருடங்களில் ?2 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அப்படி எதுவும் நடக்கவில்லையென்று எங்காவது நான் ஒருவரி சொல்லியிருக்கிறேனா காட்டுங்கள், நானும் அறிய ஆவலாக உள்ளேன். தனிப்பட்ட ரீதியில் புலிகளுக்கே தெரியாமல் நடந்த சுருட்டல் செய்தவர்களை நாம் அறிவோம் என்று சொன்னவர்களை , அது யாரென்று சொல்லுங்கள் அவர் வாழும் பிரதேச மக்கள் அறிந்து கொள்ளவும், அவரின் யோக்கியத்தை தெரிந்து கொள்ளவும் உதவும் என்ற ரீதியிலேயே கேட்டேன். நிதி அறவீடுகளிலிருந்து மாற்று இயக்க போராளிகள் வேட்டைவரை புலிகள் சில தவறிழைத்தார்கள் என்று பலதடவை சொல்லியிருக்கிறேன், இந்த பதிவிலும் சொல்லிருக்கேன், அதை முழுதாய் படித்தீர்களா? புலிகளின் சரியையும் தவறையும் பேசுவதால் வடக்கு கிழக்கில் பிறந்தேன் என்பதை ஆதாரப்படுத்தியிருக்கிறேன், நீங்கள் தவறுகளை மட்டும் தூக்கி பிடிப்பதால் நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்று ஆராயபோவதில்லை அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பதிவுகளை முழுசாக படித்த பின்னர் விமர்சனங்களையும், குழு ஆதரவு கருத்துக்களுக்கும் முனையுங்கள் அக்னியை அவர்களுக்கு தண்டனை வழங்க சொல்லியிருக்கிறேனா அல்லது தண்டனைக்குரியவர்களை பற்றி தெரிந்த அக்கினி தெரிந்த ஒருவரின் பெயரை வெளியில் ஏன் சொல்ல தயங்குகிறார் என்று கேட்டிருக்கிறேனா? இணையத்தில் சொன்னால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறார். அவ்வளவு பாதுகாப்பில் அக்கறையுள்ளவர் அப்போ எதற்கு அந்த பேச்சை ஆரம்பித்தார்? அரச அதிகாரத்திலிருந்த டக்ளசை , கருணாவை லட்சக்கணக்கானோர் இணையவெளியில் மணல் கடத்தல்காரன் , பொம்பள பொறுக்கி, பொதுமக்கள்/புலிகள் பணத்தை சுருட்டியவன் என்றெல்லாம் இன்றுவரை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள், உள்நாடு வெளிநாடு போய் வந்திருக்கிறார்கள் இதில் எத்தனைபேர் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர் கொண்டிருக்கிறார்கள்? எனக்கு விருப்பமில்லாத அணுகுமுறை என்றாலும் உங்கள் பாணியிலேயே முடிக்க விரும்புகிறேன், கருத்துக்களுக்கு கருத்து மட்டுமே எழுந்துங்கள், கோயிந்தன், கொம்பேறி மூக்கன் என்றெல்லாம் போனால். குத்துமதிப்பாக கருத்துக்களை படித்து பதிலளிக்கும் குப்புசாமி ரேஞ்சில் நீங்களிருப்பதாக உங்கள் பாணியில் நானும் அறிவிக்கலாம். நீங்கள் ஜஸ்டினாக இருப்பதில் ஆர்வமா இல்லை குத்துமதிப்பு குப்புசாமியாக இருப்பது விருப்பமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன். குப்புசாமி உங்கள் சாய்ஸ்.2 points
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
ஒடுக்கப்பட்ட இனங்களின் போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் வெற்றிமாறன். சிறந்த இயக்குனரில் ஒருவர் என்று மறுபடியும் நிரூபித்துருக்கிறார். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. கிஷோர் கே.கேயாக வாழ்ந்திருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை அருமை.2 points
-
திண்ணை
2 pointsஎன்னப்பா, டயட் கோக்கில ஐஸ் போட்டு அடியுங்கோ எண்டுபோட்டு, அடிச்சுப்போட்டு வந்து பார்த்தா, எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு போட்டு சோகமா இருக்கிறியள். நம்ம பாட்டு இதுதான், அது சரி கண பேர் என்னை சந்திச்ச விசயம் சொல்லி இருந்தினம். உண்மைதான்.2 points
-
திண்ணை
2 pointsதிண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.2 points
-
மறைமுக கரும்புலிகள் | Undercover Black Tigers
This album contains images of the Undercover Black Tigers of the Tamil Eelam Intelligence Department of the de facto Tamil Eelam quasi-state. Images were collected from unknown sources, not by myself. Note: Except for Undercover Black Tiger Captain Nivethan alias Thamizhinpan, none of the other UBTs' names are in the Tigers' official Maaveerar name list. Maaveerar heads were inserted into the final version of the Tiger's black Tiger-Stripe camouflage, which is what the Maaveerars images show. Not in accordance with the KIA time of the Maaveerars. When you use these pictures for historical study, please keep this in mind. E.g.: The Black Tigers did not wear a Tiger-stripe uniform before the beginning of the year 2001. They wore a full black uniform. Similarly, for the fighting formation insignia on the cap too (for further explanation of this, plz refer to my documents. Plz do not distort the history.)
-
undercover black tigers (2).jpg
-
undercover black tigers (1).jpg
-
lt. col. chandran.jpg
-
captain pirem.jpg
-
Heroes who blow up the oil facilities in Kolonnawa and Orugodawatta, near Colombo (2).jpeg
-
Heroes who blow up the oil facilities in Kolonnawa and Orugodawatta, near Colombo (1).jpeg
-
Undercover Black Tiger (5).jpg
-
Undercover Black Tiger (4).jpg
-
Undercover Black Tiger (3).jpg
-
Undercover Black Tiger (2).jpg
-
Undercover Black Tiger (1).jpg
-
Undercover Black Tigers' Insignia & Badge | This image was generated by Nane Chozhan in the year 2021 which is used in all of these images, but not by myself
-
மறைமுகக் கரும்புலிகள் "தியாகசீலம்" பாண்டியன் | 2008ம் ஆண்டு பிற்பகுதியில் யாழ்-ல் வீரச்சாவடைந்தார்
-
Undercover Black Tiger.jpg
-
Undercover Black Tiger (13).jpeg
-
Undercover Black Tiger (12).jpeg
-
Undercover Black Tiger (11).jpeg
-
Undercover Black Tiger (10).jpeg
-
Undercover Black Tiger (9).jpeg
-
Undercover Black Tiger (8).jpeg
1 point -
-
உடல் எனும் இயந்திரம்.
1 pointஉடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.இல்லையேல் தனக்கும் கேடு அவரை நம்பி உடனிருந்து வாழ்பவர்களுக்கும் சிரமத்தை கொடுக்கும். தன் உடல் நிலையின் அலட்சியத்தால் சிரம படும் ஒருவரின் கதை . படித்து பாருங்கள். பாலகுமார் ஒரு ஐம்பது வயது ஆண்மகன் குடும்பம் அழகான இரு பெண் குழந்தைகள் என கனடாவுக்கு வந்து ஆரம்ப காலத்தில் மிக மிக கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்து தன் வாழ்வை ஓடிக் கொண்டிருந்தான் . குழந்தைகள் நாளும் பொழுதும் வளர்ந்து பாடசாலை முடித்து பல்கலை படிப்புக்கு அனுமதி பெற்று இருந்தாள் மூத்தவள். மற்றையவள் பாடசாலை இறுதி வருட மாணவியாக கற்றுக் கொண்டிருந்தாள் . மனைவியும் அவர்களின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வேலையில் இருந்தாள். தன் கடின முயற்சியில் தன்னிடம் இருந்த பொருட்களை விற்று (நகைகளை விற்று) முதலீடு செய்து நண்பரிடம் பணம் வாங்கியும் வங்கியில் லோன் பெற்று ஒரு தொழில் அதிபரானார் அவரிடம் இருபது பேர் வேலை செய்யும் அளவுக்கு நான்கு வருடங்களில் நிறுவனம் நல்ல நிலையில் வைத்திருந்தார் . மனைவியும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க கணவனுக்கு துணையாக இருந்தாள். இப்படி அமைதியாக காலம் சென்று கொண்டிருந்தது . கடந்த சில நாட்களாக தனக்கு காலில் ஒரு வித வலி ஏற்படுவதாக முறையிட்டுக் கொண்டு இருந்தான். வேலை கடுமையாக இருக்கும் ஓய்வெடுத்தால் சரியாகும் என எண்ணிக் கொண்டு இருந்தான். ஒரு தடவை ஒரு பேச்சு வார்த்தையின் போது மருத்துவர் சித்தப்பாவிடம் கால் வலி பற்றி முறையிட்டான். அவரும் முழு உடல் பரிசோதனை செய்யும் படி அறிவுறுத்தினார். அவர் கவனிக்காது வேலையும் வீடும் என இருந்து விட்டார். ஒரு வார தொடக்க நாளில் காலையில் துயில் எழுந்து கழிவறை சென்ற போது லேசான மயக்கம் போல உணர்ந்து நிதானிக்க முன் சரிந்து விழுந்தார் . மனைவி சத்தம் கேட்டு வந்து ஆம்புலன்ஸ் அழைத்து வைத்தியசாலைக்கு சென்று உரிய பரிசோதனைகள் செய்து இதய வழிப்பாதையில் இரத்த அடைபட்டு ஏற்பட்டு இருந்தது . உடல் பலவீனமாக இருந்தால் இரண்டு நாட்களில் சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடானது . அன்று இரவு மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படவே மறு நாள் அவசரமாக சத்திர சிகிச்சை செய்தார்கள் .சத்திர சிகிச்சை முடிந்து சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கி வீடு சென்றார். ஓரளவு உடல்நிலை தேறி வரும் நாட்களில் அவரது மனநிலை , தன் நிறுவனம், வேலை ஆட்கள், புது ஆடர்கள் என்ற சிந்தனையில் இருந்தார். மேலும் ஒரு வாரம் சென்றது. மறுநாள் காலை காப்பி கப்பை கையில் எடுத்தவர் தடுமாறி போட்டுவிட்டார் கை நடுங்க தொடங்கிவிட்டது .மீண்டும் என்ன சோதனையா வாழ்க்கை என்று எண்ணி வைத்தியசாலையில் அனுமதித்த போது அவருக்கு "ஸ்ட்ரோக் " ஏற்பட்டு வலது கையும் காலும் தாக்கப்பட்டு மூளை செயலிழப்பு ஏற்பட்டது . அவரது நிலை எதிர்பாராமல் முடங்க வேண்டி ஏற்பட்டது . இளம் வயது தானே என அலட்சியம் இருந்து விட்டால் விளைவுகள் பாரதூரமாக விடும். இனி அவர்கள் எதிர்காலம் ....? இந்த இயந்திர உலகம் நம்மை இயந்திரமய வாழ்க்கை வாழ வைக்கிறது. நின்று நிதானித்து நம்மையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இளம் வயது தானே என அலட்சியப்படுத்தினால் கவலைப்பட வேண்டும். இதை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ளுங்கள்1 point
-
குட்டி மிராஜ் வகுப்பு பயிற்சி வண்டி
கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு). ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம். கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது. இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை, → லெப் கேணல் நிசாந்தன், → லெப் கேணல் எழிற்கண்ணன். → லெப் கேணல் பழனி, → லெப் கேணல் தன்ராஜ், ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர் -- Facebook1 point
-
தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
Clean Sri Lanka....எனபது ..கடந்தகால ஆட்ட்சியினரையும்...நிகழ்கால ..ஊழல்களையும் கொண்டுவருவதற்கான முயற்சி...இதில்போய் இசுலாமியனையும் ,தமிழனயும் சேர்ப்பானா...காசுக்கு விலை போகக் கூடியசன் ..இந்த இரண்டுவகையும் என்பது என்.பி.பி ..அறியாததல்ல1 point
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
கடந்த சனிக்கிழமை நியூயோர்க் பகுதியில் அனாமதேயமான முறையில் ட்ரோண் பறந்தது என்று தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.இங்கு இதைப் பற்றி யாரும் பேசியதாக இல்லை அதனால் பேசாமல் போய்ட்டேன்.கனடாவில் சில பணி இடங்களில் அவசர தேவைகளுக்கு முடிந்தவரை கையில் பணம் வைத்திருக்குமாறும் சொல்லி இருக்கிறார்கள்.1 point
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிக்காமல் தலைக்கு மேல் வெள்ளம் போனபின் நள்ளிரவில் அறிவித்தால் உலகில் எவராலும் இந்த Guarntee, warranty எல்லாம் கொடுக்க முடியாது. அதற்கு நேரமும் கிடைத்திருக்காது. ( கடைசி ஆறு மாதங்களில் இணைத்தலைமை நாடுகள் அதை பல முறை வலியுறுத்தின. அப்போது அதை செய்திருந்தால் கோட்டாவால் அதை செய்திருக்க முடியாது. சரணடைந்தது நோர்வேயிடம் அல்ல. மிக மோசமான கோட்டாவின் படையிடம். சரண்டைந்தவர்களை கொல்லும் மகா பாதகத்தை செய்தவர் அவரே. ஆனால் அதற்கும் தமிழரின் உரிமை போர் தோல்வியடைந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே நோர்வே தமிழருக்கு துன்பம் விளைவித்தனர் என்ற உங்கள் கூற்று தவறானது. யாரையோ காப்பாற்ற மீண்டும் மீண்டும் தமிழருக்குள் மட்டும் பேசப்படும் பொய் அது.1 point
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
இந்த வார ஆரம்பத்தில் சிரிய நகரொன்றில் பகிரங்க மரணதண்டனை ஒன்றுக்காக மக்கள் முண்டியடித்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த மரணதண்டனை அன்று வழங்கப்படவில்லை. எதுவென்றாலும் நீதிமன்றின் ஊடாக, சட்ட்பபடியே செய்வோம் என்று சொல்லிவிட்டனர் புதிதாக வந்தவர்கள். நல்ல ஒரு ஆரம்பமும், அறிகுறியும்........................ என்னுடைய நல்லெண்ணம் காற்றின் ஊடாக கடல்களையும் கண்டங்களையும் தாண்டிப் போய், சிரியாவை அடைந்து, அந்த மக்கள் இன்றிலிருந்தாவது நிம்மதியுடன் வாழ, மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்த எல்லா கடவுள்களும் அருளட்டும்.......................1 point
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.1 point
-
பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?
1 pointஅமென்யா தற்கொலையில் முடிவு காட் போடப்படும் .1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
கட்டபொம்மனும் எட்டப்பனும் மாதிரி மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் ஜெயராஜ் உம்.1 point- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள் சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .1 point- புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ‘அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்’ என்று செய்தி வந்து, அவர் நலம்பெற யாழில் பலர் வேண்டிக் கொண்டார்கள். பிரார்த்தனை பலித்திருக்கிறது.1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்த சாமியியடம் நையாண்டி பதில் மட்டும்தான் வரும், நீங்கள் ஏதிர்பார்க்கும் எந்த நல்ல தரமான பதில் கிடைக்காது😎1 point- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
அந்தம்மாவை நிலத்தில குந்தியிருக்க விடமாட்டார்கள் போல இருக்கே ........ அவவும் ஏதோ கின்னஸ் சாதனை செய்யும் நோக்கத்தில் அங்கன சுத்திக் கொண்டிருக்கிறா ......... புருஷன்காரன் குடுத்து வைச்சவன் ..........! 😂1 point- என் எழுத்து - சுப.சோமசுந்தரம்
1 point- திண்ணை
1 pointசரி சரி அலுவலை வடிவா முடிச்சுக்கொண்டு கெதியா வாங்கோ. வந்து ரெண்டு சுஜ ஆக்கம் போட்டால்தான் சரி வரும். நிர்வாகத்துக்கும் குளிர் விட்டுப்போச்சு😂1 point- ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம் அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்1 point- திண்ணை
1 pointகணக்க விசயம், இருக்கு, நியாயம் பிளக்க. ஒரு அலுவலா பிசி. முடிச்சிட்டு வாறன். 👍! வன்னியர், கவ் ஆர் யூ? 😜 உடான் சுவாமியார் ஆசீயோட, நித்தியானந்தா சுவாமிகள் ஆசீரமத்தில நீண்ட நிஸ்டையில் இருந்தேன். கனவில் வர சிஸ்சைகள் விட்டிருக்காகினமே 🤔1 point- மலரும் நினைவுகள் ..
1 point- திங்களன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய கடற்படை கப்பல்கள்
ஆப்பு பின்பக்கமாக சொருகியிருந்தால் கொஞ்சம் கஸ்டமா தான் இருக்கும்....என்ன இருந்தாலும் நம்ம தோழர் சுழிச்சு வெட்டி ஓடுவார் என நினைக்கின்றேன்..அமெரிக்கா தென்னை ஆராச்சியில் உளவு பார்க்க ...இந்தியா கப்பலில் உளவு பார்க்கப்போயினம் போல......போனகிழமை அதானிக்கு ஆப்பு ,வெளியேற்றுவேன்,சகல திட்டங்களும் மீள்பரிசீலனை என்றார்கள் இந்த கிழமை அதாணிக்கு அப்பம் கொடுத்து வரவேற்கின்றனர்1 point- ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?1 point- 103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
சிங்கத்திற்கு பிறந்தபடியால் சிங்கபாகு என்று பெயர் வைத்ததில் ஒரு நியாயம் இருக்கின்றது............. ஆனால் சிங்கம் தூக்கிச் செல்ல முன்னேயே சிங்கவல்லிக்கு ஏன் சிங்கவல்லி என்று பெயர் வைத்தார்கள்........... அதானல் தான் சிங்கம் வந்து சிங்கவல்லியை தூக்கிக் கொண்டு போய், பின்னர் சிங்கபாகு பிறக்க வேண்டியதாகப் போய்விட்டதோ என்னவோ..................🤣. என்னுடைய முன்னோர்களிலும் சிங்கம் என்று வரும் பெயர்கள் இருக்கின்றன..............😜.1 point- நடனங்கள்.
1 point- திண்ணை
1 pointஒரு வருசம் காணாம போக வேணும் எண்டால், உடான்ஸ் சாமியார் பக்தன் ஆகீவிடுங்கள். போன வருசம் பார்ட்டி போக முன்னம் ஒரு ஜடியா கேட்டன்.... ஜடியாவை தந்து போட்டு, சோகப்பாட்டு போடுறார். இதுககுப் பிறகும் வராட்டா, ஜயரோட வந்து, திவசம் எண்டுவார் எண்டு தான்.... தலயக் காட்டுவம் எண்டு... 😎1 point- மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!
தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம். இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன். பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம். போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........1 point- அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
🤣............ அடுத்த மாதத்திலிருந்து எங்களின் தலைநகரில் முன்னுக்கு மடிப்புக் கலையாத, ஆனால் பின்பக்கம் தாறுமாறாகக் கிழிந்த சட்டைகளுடன் நிற்கப் போகின்றார்கள் இந்த இருவரும், இன்னும் சிலரும்............. ஒரு நாலு வருடங்கள் இவர்களின் கண்களில் படாமல் அப்படியே மேசைக்கு கீழேயே குனிந்து இருக்கவேண்டும்...............🤣.1 point- பல்கலைக் கழக மாணவர்கள்
1 pointHow you can help Donate AU$ 50 per month to Mahalirillam to support a life change by empowering a female child with the gift of education. TO DONATE PLEASE CLICK HERE -> Donation Via Bank Direct Debit "Fund for Mahalirillam” (ABN 47 467 887 194) Commonwealth Bank of Australia, Hay Market Branch, Sydney, NSW 2000. Account No: 06 2006 1103 3596 Via PayPal, using either a debit or credit card Support Mahalirillam by visiting and engaging with us on following social media https://www.facebook.com/pages/Mahalirillam/143589209051620 https://www.youtube.com/user/Mahalirillam/videos Please circulate our newsletter with your family & friends while engaging with them in spreading our vision, inspiring them to join our Mahalirillam family. If you have an enquiry or wish to provide you feedback Please click here -> https://mahalirillam.org/au/ contact-us/1 point- 103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
Update : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம்! 19 DEC, 2024 | 03:54 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பேருடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில், 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர். குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருக்கின்றனர். இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/2016581 point- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
உண்மை, நாம் நன்றி கெட்டவர்கள் தான். எங்களுக்காக போராடிய, சிறையில் அடைக்கப்பட்ட எத்தனையோ பல முகம் தெரியாத திராவிட இயக்க, திமுக தொண்டர்களை தெலுங்கன் என்றும் முதுகில் குதியவர்கள் என்றும் 2009 இல் facebook, youtube மூலம் மட்டுமே உலகை அறிந்துகொண்ட தலைமுறை திட்டியப்பொழுது நான் இல்லை என்று சொன்ன பொழுது என்னையும் தெலுங்கன் list ல் சேர்த்து விட்டார்கள் இந்த நன்றி கெட்ட கயவர்கள். பிறகு இல்லை நான் இந்த ஊர், இன்னார் சொந்தம் என்று சொன்ன பின் கிடைத்தது சாதி வெறியன் பட்டம். கடைசி வரைக்கும் நல்ல தமிழனாக உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் கிடைப்பது துரோகி, சாதி வெறியன், சிங்களவனுக்குப் பிறந்தவன் மற்றும் தெலுங்கன் பட்டமே.1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointமெளனம் சம்மதம்! மட்டும் இல்ல! பொருளும் கூட ! ஒரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார். அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார். அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் கேட்டார். அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார். இதனால் கோபமடைந்த மன்னர், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?” என்று கேட்டார். அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!” என்றார். உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்!” என்றான். அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்!” என்றார். மன்னர் வாயடைத்துப் போனார். ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது!1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointநல்ல நாள் பார்த்து வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடி போகலாம் என்று நாள் குறித்தான்! சொந்தங்கள், பந்தங்கள் , நட்புகள் எல்லாவற்றையும் குறித்த நாளில் வர சொல்லி இருந்தான்! அவன் கெட்ட நேரம் அவன் வீடு கட்டி இருந்த இடத்தில் நிலை நடுக்கம் வந்து வீடு தரைமட்டம் ஆனது! புது மனை வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் இடிந்த வீட்டிற்கு முன் அதிர்ச்சியில் சோகமாக நிற்க! அவனோ! வாங்கி வந்து இருந்த இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கொடுக்க! வந்து இருந்தவர்கள் ! அவனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா 25 வருட உழைப்பு இப்படி மண்ணாக போய் விட்டது! எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டு இருக்க என்று கேட்க! அதற்கு அவன் சொன்னான்! ஐயா வீடு குடி புகும் முன் இடிந்து போனது நல்லது தான்! ஒரு வேளை நாங்க குடும்பத்துடன் குடி வந்த பின் வீடு இடிந்து போய் இருந்தால்! எண்ணவாகி இருக்கும் ! அதான் என்றான் அமைதியாக!1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointமாப்பிள்ளை... எவ்வளவு சம்பாதிக்கிறாரு. தோராயமா பத்தாயிரம். மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு. சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣1 point- திண்ணை
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointநகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஎன் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! பிறந்தவுடன் தூக்கிய நேர்ஸ் இனைப் பார்த்து கண்ணடித்தது நேற்று நடந்தது போல் இருக்கின்றது. அதற்குள் 50 வருடம் ஓடிப்போய் விட்டது!1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது. சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.1 point- மலரும் நினைவுகள் ..
1 pointகாற்றில் திரும்பிய ஆன்டனாவை மீண்டும் திருப்பியவர் உங்களில் யார் யார் ரெல் மீ ..1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointமெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும் !! 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..! 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..! 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்! 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..! 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! . 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....." 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு.? மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை! 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே! 13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!! ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..! சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..! சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! படித்ததில் ரசித்தது...1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointயாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று கஸ்ரமான "பாஸ்வேட்" போட்டு வைத்தேன். இப்ப அதை... என்னாலேயே, கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு. 😂 🤣1 point - அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.