Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்14Points2957Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்11Points46791Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3061Posts -
nunavilan
கருத்துக்கள உறவுகள்7Points53011Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/27/24 in all areas
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
6 points6 points
- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
இப்ப அர்ச்சனா எண்ட பொறுத்த காய்ட்ட மாட்டுப்பட்டு இருக்கினம்...😂 70 வருசமாய் அவிச்ச பருப்புகள் இனி அவியாது எண்டு நினைக்கிறன்.😁6 points- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
சொல்வது முழுக்க உருட்டும் பிரட்டும். இத்திணைக்களத்தில் வேலை செய்யும் உறவினருடன் பேசிய போது திட்டத்தை தற்காலிகமாக அமல் படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிதரன் தான் முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.6 points- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி அங்கே போனதும், குழந்தைபிள்ளைபோல் எதிர்கட்சி சிங்களவன் கதிரையில் குந்தபோயி அவங்களோட புடுங்குபட்டதும், தேவையற்ற முறையில் தலைவரையும் போராளிகளையும் இழுத்து பேசியும் சிங்களவனுக்கு பேட்டிகள் கொடுத்தும் எந்த திட்டங்களும் ஆரம்பிக்காமலே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதும், இவருக்கெல்லாம் எதுக்கு அரசியல், வாக்குப்போட்ட மக்களின் கோபத்தை சம்பாதிக்கபோகிறார், இவரெல்லாம் பாராளுமன்றத்துக்கு போனதே தவறு என்று பதிவிட்டதுண்டு, விசனப்பட்டதுண்டு. ஆனால் வெள்ளநிலவரத்தில் வீடுவீடாக சென்று பார்வையிட்டதும், தெருவில் நின்று போராடிய வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து குறை கேட்டதும் அவர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்ததும், இப்போது மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவா அவர்களை கொழும்புவரை அழைத்து சென்று நீதி கேட்டதும் மெச்சத்தக்க விஷயங்கள். அப்படியே முன்னாள் போராளிகள் நிலவரம் பற்றியும் கவனம் எடுங்கள் மாறிவரும் உங்கள் போக்கு மிகவும் சிறப்பாக அமையும். அப்படியே எது பேசினாலும் பத்துவினாடி யோசித்துவிட்டு பேசுங்கள், அர்த்தமற்ற ஆக்ரோசங்கள், ஆக்கபூர்வமாக அமையாது கோமாளிதனமாக மாறிவிடும். தவறு செய்யும்போது தவறென்று சுட்டிக்காட்டுவதும், சரியாக செயல்படும்போது பாராட்டுவதும், மீண்டும் தவறு செய்யும்போது மறுபடியும் திட்டுவதுமே உண்மையான விமர்சனம், இல்லாமல் ஒரு பக்கம் மட்டுமே சார்ந்த கருத்துக்கள் என்றால் அது விமர்சனம் அல்ல காழ்ப்புணர்ச்சி என்றாகிவிடும். மருத்துவ தொண்டர் பணியாளர்கள் விடையத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் மகிழ்ச்சியானதே. பெரும்பாலும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வறுமை, குடும்ப சுமை, வயிற்று பசி என்பவற்றுடன் எவ்வளவு தூரம் போராடுவார்களென்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு ஒளியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உண்மையாகவே இவரால் ஏற்படுத்தி கொடுக்க முடியுமென்றால் அது என்ன நடக்க போகிறதென்று பார்க்காமலே ஏகப்பட்ட விசனங்கள் தெரிவிப்பது முறையல்ல. அது உதவும் உறவுகளுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையிலுள்ள தகராறு, நாம் எதுக்கு முண்டியடிக்கணும்? புலம்பெயர் உறவுகளிடம் காசுவாங்கி பொதுமக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடுகளும், கார்,அயல்நாட்டு பயணங்கள் உயர்தர பைக்குகள் என்று கொடிகட்டி பறக்கும் யூடியூபர்களுடன் ஒப்பிடும்போது அர்ச்சுனா அப்படியொன்றும் பெரிய தப்பான காரியங்களில் இறங்குவதாய் தெரியவில்லை. மக்களிடம் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் பணியாற்றவில்லையென்றே முன்பிருந்த தமிழரசியல்வாதிகளை திட்டி தீர்த்து வீட்டுக்கு துரத்தினோம், இப்போ மக்கள் பிரச்சனைகளில் கரிசனம் காண்பிப்பவர்களையும் திட்டினால், குழப்பம் அவர்களிடமில்லை, நம்மிடம்தான்.3 points- இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
தலையங்கத்தைப் பார்த்தால் இனிமேல் நேரடி மோதல் போலக்கிடக்கு.3 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள்.3 points- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
நான் ஊரில் இருக்கிறன்.. கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேணும்.. பூனைக்கு யார் மணிகட்டுவாங்கள் எண்டு இவ்வளவு நாளும் சனம் இருந்திச்சு.. நாங்கள் மட்டும் இல்லை எங்கட ஊரே இப்போதைக்கு அர்ச்சுனாவுக்குத்தான் வோட் போடுவம் வேறு இன்னும் புதிதாக யாரும் வரும் வரைக்கும்.. ஒருபோதும் பழைய தமிழ்கட்சிகளுக்கு இனி வோட் போட போவதில்லை.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ளமுடியாது.. நாங்கள் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் போகும்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லி மாளாது..அரச உத்தியோகத்துக்கு எடுபட்டாலே நிரந்தரம், இனி நான் நினைச்சதுதான், என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்கு வேலை போகாது எண்ட திமிர் இருந்தது.. அதால நாங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் கேள்வி கேட்டாலும் எடுபடாது.. செவிடன் காதில் ஊதின சங்குதான்.. ஆனா இப்ப ஒருத்தன் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் அதிகாரத்தில் இருந்து கொண்டு கேக்கும்பொழுது வரும் சந்தோசம் இருக்கே.. அர்ச்சனா என்ன விசர்க்கூத்து ஆடினாலும் பார்சிறி போன்ற நரியன்களை எதிர்த்து கேள்வி கேட்டு அவங்களின் முகத்திரையை கிளிப்பதும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் திருடர்களை கேள்வி கேட்பதும் அந்த கேள்விகள் ஊடகங்களில் பேசுபொருள் ஆகி வருவதும் மக்களை சென்றடைவதும் மிகப்பெரிய ஒரு மாற்றம்.. தமிழ் தேசிய தமிழ் எம்பிக்களும் தங்களைவிட்டால் தமிழ் மக்கள் ஓட் போட வேறு கட்சிகள் இல்லை என்ற நிலைமையும் இல்லாமல் போவதும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.. இவற்றுக்கு அர்ச்சுனா ஒரு முதல்க்கல்லாக இருக்கட்டும்..3 points- நத்தார் பரிசு
2 pointsநத்தார் பரிசு யேர்மனிய மொழி பேசும் நாடுகளில் "கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 மாலை ஆரம்பமாகின்றது. பெரும்பாலான குடும்பங்களில் "பரிசு வழங்குதல்" மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு நித்திரைக்குப் போன ஒரு பெண்மணி நடு இரவில் விழித்துக் கொண்டார். யேர்மனி ரோசன்ஹைம் (Rosenheim) நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்து இரவு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணிக்கு (47) நடு இரவில் விழிப்பு ஏறப்பட்டது. வீட்டின் கதவை உதைத்து, உடைத்து யாரோ உள்நுளையும் அரவமும் கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்த பெண்மணி பின் கதவால் வீதிக்கு ஓடி வந்து பொலீஸுக்கு அழைப்பை எடுத்து விடயத்தைச் சொன்னார். பொலிஸார் வரும்வரை அந்தப் பெண் தனது வீட்டின் முன் தெருவிலேயே குளிருக்கு நடுங்கியபடி காத்திருந்தார், அவரது கூற்றுப்படி, குற்றவாளி இன்னும் கட்டிடத்தினுள் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்ட பொலிஸார், வீட்டுக்குள்ளே தேடுதலை மேற் கொண்டார்கள். அங்கே அமைதியாக ஆழ்ந்த நித்திரையில் ஒரு இளைஞன் (19) படுத்திருந்தான். பொலிஸார் அந்த இளைஞனை எழுப்பிய போது, “இந்த நேரத்தில் என் வீட்டில் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான். அவனைப் பொலிஸார் பரிசோதித்த போது அவன் நன்றாகக் குடித்திருக்கின்றான் என்பது தெரிய வந்தது. ஆக, அவன் ரோசன்ஹைம் நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் நன்றாகக் குடித்து விட்டு தனது வீடு எது என்று தெரியாமல் இங்கே வந்திருக்கின்றான் என்பதைப் பொலிஸார் புரிந்து கொண்டனர். “இது உனது வீடு இல்லை” என அவனை அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ‘செல்’லில் படுக்க வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற நினைப்புடன் அவன் மீண்டும் நித்திரையாகி இருப்பான். விடிந்த பின்தான் அவனுக்குத் தெரியவந்திருக்கும், ஒரு அந்நியன் வீட்டின் கதவை உடைத்து அத்துமீறி உள் நுளைந்ததற்காக ஒரு வழக்கு தனக்காகக் காத்திருக்கின்றது என்பது. அது அவனுக்கு மறக்க முடியாத கிறிஸ்மஸ் பரிசாகவும் இருக்கும்.2 points- இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
ஒருவரியில் வரவேண்டிய செய்தி வீரகேசரி படிப்பவர் எண்ணிக்கை குறைவு செய்தியைநீட்டிப்பதில் அவர்களின் வறுமை தெரிகிறது . ஒத்தை வரி செய்திகள் என்ற திரியை திறக்கலாமா என்ற யோசனை உள்ளது காலையில் எழுந்ததும் நான்கு தளம்களுக்கு விசிட் பண்ணி இப்படி நேரத்தை விழுங்கும் செய்திகளை படிச்சு நொந்து போவதை தவிர்க்கலாம் .2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சிரிப்போம் சிறப்போம் என்று வந்தால் சினக்கிறீங்களே? வாய் விட்டுச் சிரியுங்கள் நோய் விட்டுப் போகும். இதில் எனக்குச் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றுதான் இவ்வளவு காலமும் நம்பி ஆறுதலடைந்திருந்தேன்.2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
* சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன். * பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும், எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன். * சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது. * சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது. * அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது. * எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது. * பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது. * வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் பாவம் செய்தால் சித்திரகுப்தனால் எண்ணேய் சட்டியில் வைத்து வறுக்கப்படுவீர்கள் அம்மா சத்தியம் செய்து பொய் சொன்னால், அம்மா இறந்து விடுவார் சரஸ்வதி பூசை செய்தால் படிப்பு நல்லா வரும் சோதனைக்கு முன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி கொளுத்தினால் சோதனை பாஸ் செய்யலாம் வலம்புரிச் சங்கை காதில் வைத்து கேட்டால் அதன் மூச்சு சத்தம் எப்பவும் கேட்கும் இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஓம்.இதில் வாழ்க்கை துணைவியின் பங்கு மிக மிக முக்கியம். அத்துடன் அந்தப் பெண்... சாதுரியமான, புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லையேல்... குடும்பமே நரகம்தான். இரண்டிற்கும்... நம் சமூகத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன.2 points- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதையும் நம்பலாம் தான்.ஆனால் நான் இப்ப சின்ன வயதில் இல்லை.😂2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர்
இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சந்திரசேகர் Published By: Digital Desk 7 27 Dec, 2024 | 02:16 PM இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலையளிக்கிறது. நாங்கள் எதிர்காலம் தொடர்பில் திட்டமிடல்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறான திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை உண்டு பண்ணலாம். சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இம்முறை கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அத்தோடு,கிடைக்கவுள்ள பாரிய நிதி மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/2022832 points- பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்!
என்னதான் தேர்தலுக்காக நிமிர்வுகாட்டி வாக்குக்கொடுத்து, வாக்கு வேண்டிப் பதவியைப் பிடித்தாலும் யதார்த்தமென்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனைக் கடந்துபோக முடியாது. பெரும் வல்லரசுகள் முதல் எண்ணெய்வளம் உள்ள நாடுகளே தடுமாறிநிற்க, சுயபொருண்மியத் திரட்டுகளற்றுக் கடனிலும், சுற்றுலாத்துறையிலும் தங்குபொருளாதாரத்தில் நிற்கும் இலங்கைத்தீவை ஆள்வது அவளவு இலகுவல்ல. என்று இவர்கள் ஒரு தெளிவான அரசியல் கொள்கையை முன்வைத்து நகர்கிறார்களோ அன்றுதான் உண்மையான வளர்ச்சியைக் காணமுடியும். அதுவரை இப்படிக் கையேந்தியநிலையே தொடரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points- டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
Donald Trump ன் நகைச்சுவைக்கு அளவில்லை. ஆனாலும் காரணங்கள் இல்லாமல் இல்லை. உலகில் தனக்குத் தேவையான கனிம வளங்கள் தீர்ந்து போனாலோ அல்லது தனக்குத் தேவையான கனிம வளங்களை அடைய முடியாமல் போனாலோ அமெரிக்காவிற்கு இருக்கும் இறுதித் தெரிவுகளில் சிலவற்றில் கனேடிய வளங்களை தனது தேவைக்கு பலப் பிரயோகம் மூலம் அடைதல் என்பதும் ஒன்று. அந்தப் பலப் பிரயோகம் வட அமெரிக்கா மட்டுமல்ல தென்னமெரிக்க வரைக்கும் நீழும் என்பது ஏற்கனவே பலராலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்காகத்தான் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை எப்போதும் பலவீனமான நிலையில் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. Trump ன் மென் நகைச்சுவை அதைத்தான் சுட்டி நிற்கிறது. அதற்காக Trum ன் நகைச்சுவையைக் கேட்டவுடன் கிறீன்லன்ட் ரின் பாதுகாப்பை டென்மார்க் அதிகரிக்கிறது என்பது Trump ன் நகைச்சுவையைவிட சற்று அதிகமான நகைச்சுவை.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsமிகமிக கஸ்டமான ஒரு பணியை அதுவும் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து எழுதி முடிப்பது சாத்தியமான வேலை இல்லை. எப்படி செய்து முடித்தீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி கலந்த பாராட்டுக்கள்.2 points- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
🤣.................... சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு......... ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே............... அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்.............. பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்.........1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க ஒரு இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு.... அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
தமிழருக்குள் சண்டையை மூட்டி குளிர் காயும் நபர்கள் சார்ந்து மிக மிக கவனமாக இருங்கள்.1 point- இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
முன்பெல்லாம் ஊடகவியலாளர்களால் செய்திகள் தயாரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு வெளிவந்தன. தற்காலம் ஊதகவியலாளர்களால் செய்தியிடப்படுவதால் வந்த வினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
தமிழருக்குள் கொம்புசீவுவதில் வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும் ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும் பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று. பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள். குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு. அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம். இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை. முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள். எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இஞ்சை கனபேருக்கு மூளை மங்கிப்போட்டுது.. சின்ன வயசில நம்பினது என்னவெண்டு கூகிளில தேடிப்பார்த்து அடிக்கிற மாதிரிக் கிடக்கு! எல்லாரும் சாமியைக் கும்பிட்டதும், பேய் பிசாசுக்கும், முனிக்கும் பயந்ததும் இப்பவும் அதை உண்மைதான் எண்டு நினைக்கிறது ஒண்டும் புதினமில்லை! எனக்கு அண்ணன் பென்சில் குதிரைப்பீயில செய்யிறது எண்டு சொன்னதை கனகாலம் நம்பி, பென்சிலின் கூரைத் தொடுவதில்லை. மாறிக்கீறித் தொட்டாலும் கைகழுவவேண்டும் எண்டு அலாதிப்படுவன்! மற்றும்படி நானும் சின்னவயசில பெட்டையளின் பிரியத்துக்காக🥰 மயில் இறகை பொண்ட்ஸ் பவுடர் போட்டு அப்பியாசக் கொப்பிக்குள் வச்சனான்! குட்டிபோட்டுதா எண்டு நெருங்கிவந்து கேட்டவா இப்ப அவுஸில இருக்கிறா! பொன்வண்டை நெருப்புப்பெட்டிக்குள் வளத்தனான்! அது செத்துப் போச்சு!1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 point🤣.................. மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜. ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣. அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
எல்லாத் துறைக்கும் சரிவராது. நாங்கள் மட்டக்கிளப்பில் பார்த்தோம். மன்னாரில், அந்த பிரசவித்து, சில நாளில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இறப்பைப் கண்டோம் - அகிலும் தாதி நிலைமையின் அவசரத்தை, விபரீதத்தை உணரவில்லை என்பதே. இதை வெளியில் தெரிந்தவை. அப்போது ஏன் (மருத்துவ துறை), தாதி துறை என்று விழுந்து, விழுந்து படிக்கச் வேண்டும் முதலில், பின் அதை அடிப்படையாக வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். கனக்க வேண்டாம். நீங்கள் சொல்லுவது போல பயிற்சி எடுத்தார்களா? அனால், தொழில்முனில்லையாக பயிற்றுவிக்கப்படும் தாதி பயிற்சியில் அதில் உள்ள நுணுக்கங்களை அறியாது நீங்கள் சொல்வது. அதில் உண்மையில் அவர்கள் பகுதி நேரம் படிப்பு, பின் படித்தது எவ்வாறு யதார்த்த மருத்துவ நிலைமைகளில் பாவிக்கப்படுகிறது என்பதெல்லாம் பயிற்சி. எல்லாம் பரீட்சைக்கு உட்படும் - எழுத்து, வாய்மொழி என்று எல்லா முறையிலும். குறிப்பாக கட்டமைக்கப்பட்ட கற்கை நெறி வழியே அளிக்கப்படும் பயிற்சி. ஒரு nurse ஆக பணி புரிவதற்கு license தேவை. எந்த முறையில் படித்தாலும்.. உங்கள் தங்கை செய்த நீங்கள் சொல்லும் பயிற்சி - nurse ஆக register செய்வதத்தில் உரிய தகமை என்று எடுத்துக்கொள்ளப்பட்டதா? (10ம் வகுப்பில் வகுப்பில் இருந்து தாதி துறை பயிற்சி , இது எங்கு நடக்கிறது என்று சொல்ல முடியுமா, ஐரோப்பாவில்?) மனித உயிர்களை கையாளுவதை, வேறு தொழில்நுட்ப பயிற்சியுடன் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள் நான் இதை சொல்ல வேண்டும் என்று இல்லை.1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சிறித்தம்பி! ஒரு கேள்வி 😎 சின்ன வயதெண்டு எத்தினை வயது வரைக்கும் வரையறுக்கிறியள்? ஏனண்டால் கதைக்க கன கதையள் இருக்கு1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இது உண்மை எப்போதும் உண்மை நான் நேரில் பார்த்து உள்ளேன் ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக இருக்க வேண்டும் குடியைக்கூட. விட்டுட்டு ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சி.எஸ்.ஜெயராமன் குரலையும், பாலையாவின் நடிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....! அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........! 12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......! கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேளம் கொட்டி தாலி கட்டி ........ எம் . ஜி . ஆரின் அபாரமான நடிப்பாற்றல், படம்: புதுமைப் பித்தன் . ..........!1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அது தான் பயிற்சி ......மட்டுமல்ல படிப்பும்கூட. பத்தாவது வகுப்பு படித்து விட்டு தாதிகள்கள் வேலையில. நேரடியாக இணைந்து படிப்படியாக சொல்வதை கேட்டு கேட்டு படிக்கவும் பழகவும். முடியும் இப்படி வேலை செய்பவர்களை படிக்கதாவர்கள் ..என்று எப்படி கூற முடியும் ?? அவர்கள் பார்த்து கேட்டு படித்து உள்ளார்கள் இல்லையா ?? இவர்களுக்கும் ஒரு தொழில்நுட்ப கல்லுரியில். படித்து வேலையில். அமர்பவர்களுக்கும். என்ன வித்தியாசம் உண்டு?? பெரிய வித்தியாசம் இல்லை இல்லையா??? 1975,...1980 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்குமா ?? என்று தேடியபடியே இருந்தேன் அந்த நேரத்தில் என்னிடத்தில் செல்வம் செல்வாக்கு இல்லை,...ஒரு நாள் விளம்பரம் தாதி வேலைக்கு விண்ணப்பங்கள் கேட்டிருந்தார்கள் திருநெல்வேலியில் ஒரு புதிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் தொழில் அதிப்ர் சாமி அன் கோ. உடன் சிலர் சேர்ந்து திறந்தார்கள். எனது தங்கச்சிக்கு கட்டி விண்ணப்பிக்க சொன்னேன் .....தெரிவு செய்யப்பட்டாள். பத்தாவது வகுப்பு உடன் இரண்டு வருடங்களில் கொழும்பில் யூனியன் பிளேஸ். இரத்தினம். வைத்தியசாலையில் இணைத்து வேலை செய்தாள். சகல வேலைகளும். தாதிக்குரிய. சகல வேலைகளும். செய்வாள். இன்று கனடாவில் வன்குவார். நகரில் வயோதிபகள். தங்கும் நேசிங் கேம் இல். வேலை செய்கிறாள். அதுவும் ஒரு வைத்தியசாலை தான் என்பாள்.1 point- "தீர்ப்பு"
1 point"தீர்ப்பு" இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது. லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வாலிபன் அன்பழகன். அவளது மழலை பேச்சும், வெண்ணிற வானில் கருநிற நிலவாய் எட்டு திசையும் அசைந்து கவரும் அவளது மையிட்ட கண்களும், பட்டம்பூச்சியின் சிறகுகள் போல கண்ணிமைகள் படபடத்து அவனை அழைக்க, அவனது நெஞ்சம் தன்னை அவளிடம் பறிகொடுத்தது ஒன்றும் புதுமை இல்லை. அமைதியான அவனின் இதயத்தில் இதமான தேவதையாக அவள் குடியேறினாள். பல மாதங்களாக, அவர்களின் காதல் இன எல்லைகளைத் தாண்டி, வளமாக வளர்ந்து வந்தது. ஆனால், சூரியன் மேற்கில் மறைவது போல, நீண்ட நிழல்களை வீசுவது போல, அவர்களின் வாழ்க்கையின் மீது இருண்ட நிழலைப் போடும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் ஆழமான இன வெறியை கக்கும் பதட்டங்களைத் தூண்டியது. திடீரென்று, அவர்களின் காதல் கதை அரசியல் முரண்பாடு மற்றும் சமூக அமைதியின்மையின் சூறாவளியில் சிக்கியது. உண்மையில் பக்க சார்பு அற்று தீர்வைத் தருவது - தீர்ப்பு! பொதுவாக ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை தீர்க்கும் வகையில் அதனை ஆராய்ந்து - முடிவு காணும் வகையில் அமையும் நீதியான வழிமுறை - தீர்ப்பு!! என்றாலும் "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்ற 1983 இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனாவின் தீர்ப்பு அதற்கு முரணாக ஏற்கனவே எரியும் நிலக்கரியில், இரும்பு காலணிகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை இடுக்கிகளால் பிடித்து, சிவப்பு-சூடான காலணிகளை தமிழருக்கு முன்னால் வைக்கப்பட்டது போல அது மாறி விட்டது. உயர் வல்லமையான ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு இப்படி இருக்கும் பட்சத்தில், மற்ற அரச இயந்திரங்களின் செயல்கள், தீர்ப்புக்கள் எப்படி இருந்து இருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை. ஒரு காலத்தில் துடிப்பான நகரம் இப்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது. சிங்களக் கலாச்சாரத்தில் வேரூன்றிய லோசனியின் குடும்பம், அன்பழகனுடனான தங்கள் மகளின் உறவைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள். அன்பழகனின் குடும்பமும் அதே போல தங்கள் மகனின் பாதுகாப்புக்கு பயந்து, லோசனியிடமிருந்து தூர விலக்குமாறு வற்புறுத்தினார்கள். கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், எந்த குழப்பமும் தங்கள் காதலை வரையறுக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. " பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. இப்படித்தான் அவர்களின் அன்பு இருந்தது. அங்கு நாம் மனிதர், நாம் இலங்கையர் என்ற ஒரு எண்ணமே ஓங்கி இருந்தது. ஆனால் இனங்களுக்கு இடையான பிரிவுகள் ஆழமாக வளர, கஷ்டங்களும் அதிகரித்தன. நண்பர்கள் எதிரிகளாகவும், சந்தைகள் போர்க் களங்களாகவும் மாறத் தொடங்கின. இதனால் அவர்களின் காதல் கூட இலக்காக மாறியது. இந்த சுழலில் சிக்கிய, லோசனியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்று, ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டாலும், அது அவர்களின் கையில் இருந்து விலகுவதை உணராமலும் இருக்கவில்லை. எனினும் தங்கள் காதல் பிளவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டார்கள், அங்கே தங்கள் குழந்தைகள் ஒரு ஐக்கிய நாட்டில் வளரும் என்று நம்பினார்கள். எது என்னவாகியினும் ஒரு இனவாத அரசியல் தலைவரின் தலைமையில் பொய் வதந்திகளால் உந்தப்பட்டு, அதனால் கோபத்தாலும் தப்பெண்ணத்தாலும் ஒரு கும்பல் அன்பழகனின் குடும்பத்தாரின் வீட்டைத் தாக்கிய ஒரு மோசமான நிகழ்வு ஒருநாள் வந்தது. அவர்களின் வீட்டைச் சூழ்ந்த தீப்பிழம்புகள் அவர்களின் கனவுகளை எரித்த நெருப்பாகியது. அன்பழகன் தன் உயிருடன், ஆனால் எரிகாயங்களுடன் தப்பித்துக்கொண்டான், லோசனி உடைந்து போனாள், அன்பழகனின் மீதான காதலுக்கும் அவள் குடும்பத்தின் மீதான பொறுப்புக்கும் இடையே அவளது இதயம் துண்டு துண்டாக கிழிந்தது. 1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக, அரசின் தீர்ப்பாக கொண்டுவந்து ஆரம்பித்த அரசியல் நாடகம், இன்று பல அரசியல் தீர்ப்புக்களை கடந்தும், உண்மையான இலங்கை மக்களுக்கு முடிவு இன்றி , தீர்ப்பு இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சிரிப்பால் எதிரொலித்த தெருக்கள் இப்போது வலி மற்றும் அநீதியின் அழுகையால் எதிரொலிக்கின்றன. பிரிவினைகள் மிகவும் ஆழமாக வளர்கின்றன, மிக அழகான பிணைப்புகள் கூட இன்று உடைகின்றன. அதில் லோசனி, அன்பழகனின் காதல் படகு, காகித படகாக மாறும் நிலைக்கு புறசூழல்கள் அதிகரிக்கக் தொடங்கின. அழிவின் மத்தியில், லோசனியும் அன்பழகனும் ஒரு சந்தியில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு காலத்தில் அவர்களின் பலமாக இருந்த காதல் இப்போது ஒரு இனம் சார்ந்த மாயையில் அகப்படுவதை கண்டனர். கனத்த இதயத்துடன், தங்களைச் சுற்றியுள்ள உலகம் இன்று மிகவும் மாறிவிட்டது என்பதை உணர்ந்தார்கள், பல இனவாத உயர் தலைமைகளால் தீர்ப்பு வழங்கி, இன்று உடைந்த ஐக்கியத்தை, அவர்களின் அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்னும் உண்மையை அறிந்து, அவர்கள் பிரிந்து செல்வதற்கான வேதனையான முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் காதல் பலவீனமடைந்ததால் அல்ல, மாறாக வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சக்திகள் வலுவாக பல பல அரசியல் உயர் தலைவர்களின் தீர்ப்புக்களால் வளர்ந்ததால்! அவர்கள் ஒருவரையொருவர் கடைசியாகப் பார்த்தபோது, இன்றைய வெறுப்பு அரசியலின் மீது காதல் வெற்றி பெறும் எதிர்காலம் விரைவில் வரும் என இருவரும் கிசுகிசுத்தனர். லோசனியும் அன்பழகனும் தங்கள் காதலின் நினைவுகளையும், கடந்த கால பாடங்களையும் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். தீர்ப்பின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட காலத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதில் அன்பின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தனர். காலப்போக்கில், ஒரு புதிய தலைமுறை தோன்றும், தங்கள் தேசத்தின் கதையை மீண்டும் எழுதும், பிளவுகளை சரிசெய்யும் , கடந்த காலத்தின் கடுமையான தீர்ப்புகளால் காதல் இனி ஒருபோதும் கெட்டுவிடாது என்பதை உறுதிப்படுத்தும் என்பதில் இருவரும் இன்னும் மனம் தளரவில்லை, உறுதியாக இருக்கின்றனர். "நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு" இதில்தான் - லோசனியும் அன்பழகனும் தெற்கிலும் வடக்கிலும் இப்பொழுது இருந்தாலும் - இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். அதனால் அதற்கான சாதாரண மக்கள் மட்டத்தில் அதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கிவிட்டார்கள். சொல்லின் நடை தெரிந்து ஒருவர் சொல்லவேண்டும் என்று திருக்குறள் தனது பாடல் 712 இல் ஒரு தீர்ப்பு கூறுகிறது "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்" சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் என்று வள்ளுவர் தீர்ப்பு கூறுகிறார். ஆனால், அவையை பொறுப்படுத்தாமல், கூறிய ஜனாதிபதியின் கூற்றுதான் கொந்தளிப்புக்கும் வன்முறைக்கும் முக்கிய காரணம் ஆயிற்று! வள்ளுவரின் தீர்ப்பை உணர்ந்து இருந்தால் இன்று இலங்கை ஒரு சிங்கப்பூர்! லோசனி- அன்பழகன் ஒரு குடும்பம்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்? (இனமொன்றின் குரல்) ----------------------------------------------------------------- இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள் ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும் அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும் ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் . அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும். உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும். அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும் குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் . இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும் யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை . ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/1 point- புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
சொல்லில், செயலில் பொறுமையும் நிதானமும் மரியாதையும் வேண்டும் அர்ச்சுனாவுக்கு. அப்போ கள்வரை மிக இலகுவாக கையாளலாம். இல்லையேல்; அர்ச்சுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி பொறுமையிழக்கச்செய்து தப்பித்து விடுவார்கள் ஊழல்வாதிகள்.1 point- டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
Greenland-ல் புதைந்திருக்கும் மர்மம் - வாங்கத் துடிக்கும் Trump - Decode | Vikatan1 point- முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
இந்தப் பொம்மையை முன்னால் வைத்துக்கொண்டே ஈழத்தில் சோனியா தனது நரவேட்டையினை ஆடி முடித்தார். தான் செய்வது என்னவென்று தெரிந்தும் சோனியாவின் தாளத்திற்கு ஆடி ஆடியே தமிழினக்கொலையிற்கான அனுமதியை, கட்டளையினை இந்தியாவின் பிரதமர் எனும் சோனியாவினால் வழங்கப்பட்ட பிச்சையைப் பாவித்து இவர் நிறைவேற்றி வந்தார். 80 களில் தனது சொந்த இனமான சீக்கியர்களைப் படுகொலை செய்த அதே இந்திரா காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலையின் சூத்திரதாரியான ரஜீவின் மனைவிக்கு சேவகம் ஆற்றியதன் மூலம் இரு தேசிய இனங்களின் இனக்கொலையில் நேரடியான பங்களிப்பை இந்த நிதித்துறை வித்துவான் வழங்கிச் சென்றிருக்கிறார். இந்தக் காணொளியில் சோனியா கைகாட்டும் இடத்தில் நிற்கவும், அமரவும் துடிக்கும் நன்றியுள்ள நாயான மன்மோகனைப் பாருங்கள். மன்மோகனை அட்டைப் பிரதமராக வைத்துக்கொண்டு அமைச்சரவையினைத் தானே முடிவெடுத்த சோனியா1 point- நடனங்கள்.
1 point- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
1 pointஇதுவரை இருந்த முதல்வர்களிலேயே ஸ்டாலின் தான் மிகவும் கையாலாகாதவர் என்ற பட்டத்துடன் இவரின் பெயர் நிலைக்கப் போகின்றது................. ரவுடிகளுடனும், சமூகவிரோதிகளுடனும் கூட்டும் தொடர்பும் வைத்திருப்பதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் திமுகவில் எந்த மாற்றமும் இல்லை....... 😡..... அன்றும், இன்றும், என்றும் இப்படியே....... இங்கு தான் ஜெயலலிதா அம்மையார் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது............. வழக்கும் இல்லை, ஒரு ம**ம் இல்லை............... பிடிபட்ட அடுத்த மணிநேரத்திலேயே கதை முடிந்திருக்கும்...........1 point- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்1 point- கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
1 pointகற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண்டவர் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இது ஏற்புடைத்தே ! https://www.facebook.com/share/r/1Co9gLaXdp/1 point- கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
1 point🤣................. அடி பலமாகவே இருக்கின்றது. ஒற்றைக் காலில் நின்று சுழலும் போது இந்தப் பெண் காட்டும் உடற் சமநிலையும், கைகள் அசையும் வேகமும், அது இறுதியில் இறங்கும் இலாவகமும், இவர் உண்மையிலேயே 'பின்னி எடுப்பார்' என்றே தெரிகின்றது.............. கடந்த வாரம் என்று நினைக்கின்றேன். வட இந்தியாவில் பேரூந்தில் ஒருவர் ஒரு பெண்ணுடன் சேட்டைகள் செய்துள்ளார். அந்தப் பெண் ஒரு பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்.......... ஆசிரியர் பிளந்து கட்டிவிட்டார்....... ஒரே மூச்சில் 26 அடிகளோ என்னவோ..........🤣.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காட்டுக்குள்ளே திருவிழா .......அபிநயசரஸ்வதி சரோஜாதேவி .......! 😍1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
குறைந்தபட்ச இடைவெளி பேணப்படாமையால் வந்தநிலை இது!!1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....1 point- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.1 point - புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.