Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்20Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3054Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38756Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/31/24 in all areas
-
2024/2025 புது வருடம்!
5 points2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்கிறோம் போய் வா! ஆண்டே 2024. 2025தே வருக! வருக! புலரும் புது ஆண்டே வந்து- நீ உயிர் கொல்லி நோய்களை நீக்கு உலகத்தின் சண்டைகள் போக்கு ஊழல்கள் இலஞ்சத்தை கொழுத்து ஊர்களெல்லாம் அன்பை நிலை நிறுத்து. செயற்கை உணவுகளை பொசுக்கு தேசத்தில் உணவில்லா நிலைதன்னை ஓட்டு ஏழைகள் என்ற சொல்லை எடுத்தெறி இருள் சூழ்ந்த இனங்களுக்கு ஒளி கொடு மதச் சண்டை இனச் சண்டை அகற்று மனிதரெல்லாம் ஒன்றென நீ உயர்த்து இயற்கையவள் அழிவிலிருந்து காப்பாற்று எல்லோர்க்கும் உலகமென்பதை உணர்த்து. அன்பு இதயங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்புடன்-பசுவூர்க்கோபி.5 points
-
வருடச் செய்முறை
4 pointsவருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக்கவும் பொங்கல் பொங்கவும் வேண்டும் ஆடிப் பிறப்பன்று கொழுக்கட்டை ஆவணிச் சதுர்த்தியில் மோதகம் மீண்டும் விளக்கீட்டில் கொழுக்கட்டை நவராத்திரிக்கு அவல் கடலை நல்ல நாவல் பழம் அம்மாவின் திதி அப்பாவின் திதி என்றால் பதின்மூன்று கறிகள் வைக்கவும் அவ்வளவும் மரக்கறிகளே இன்னும் சிலதும் இருக்கின்றது உடனே நினைவில் வருகுதில்லை உதாரணமாக முழுப் பலாப்பழங்கள் ஒரு ஐந்து இவை மொத்தமும் 2024ம் ஆண்டில் நான் ஒருவன் உண்டு முடித்த கணக்கு வெளியில் உண்டதையும் சேர்த்தால் அசைவம் இன்னும் அதிகமே சைவம் ஒரு சம்பிரதாயத்திற்கே நாளையிலிருந்து இதே கணக்கு மீண்டும் தொடங்குகின்றது கள நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!4 points
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். "கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் இனி தூக்குப் போட்டு சாவுங்க.4 points
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
ஊருக்கு போனபோது....கனடாவில் பிறந்த பெறாமக்களும் வந்தாளவை..யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க கூகிளில்தேட ..ஒரே பவுத்த விகாரைதான் வருகுது..முதலாவது மாதகல் சங்கமித்தை வந்த இடத்துக்கு போனால் ..ஆமிதான் கூட நிக்குது..பெரூகு ஒரு பிக்கு முத்தம் கூட்டுகிறார்...அடுத்து சுன்னாகம் பனங்காணிக்கை பாத்தி போட்டமாதிரி 6-7 கும்பம் இருந்தது..மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்..ஒரு புக்கு முகம்கழுவி சுவாமி கும்பிடுகிறார்.. .. இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்தில் 3 லட்சம் ஆமி வேணும்தானே...ஒரு நப்பாசையிலை ஒர்ரு ஆமியைகேட்டன் ஒரு செல்பி எடுப்பமோவென்று...தூக்கினானெ துவக்கை ..கிட்ட வராதை போவென்று...அதுக்குபின்னர் பெட்டையள் நோ கூகிள் சேச்..3 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
3 points- செந்தமிழாய் எங்கும் இசை-பா.உதயன்
2 pointsஉலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து வந்து மெட்டோடு பாட்டிசைக்கும் வயல்கள் எங்கும் பச்சையாக புல் முளைக்கும் மழைகள் வந்து துளிகளாக நனைந்திருக்கும் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலமரம் ஆடி நிற்கும் அங்கு வந்து மெல்ல மெல்ல குயில்கள் கூவும் செந்தமிழாய் எங்கும் இசை எட்டுத் திசை ஒலிக்கும் எம் தமிழே எழுந்து வர எத்தனையோ மணி ஒலிக்கும் எங்குமே கவிதை மொழி எம் தமிழில் உயிர்க்கும் வண்ணமான வாழ்வு தனை தமிழ் எங்கும் சொல்லும் ஆற்றம் கரை ஓரம் அன்னை சக்தி வாழும் கோவில் மணி ஏழு கடலும் ஒலிக்கிறது எங்கும் அமைதி கொள்கிறது எங்கிருந்ததோ பெண் ஒருத்தி ஏழு சுரம் இசைக்கின்றாள் இனி ஒரு குறை இல்லை என்றே இருள் விலகப் பாடுகிறாள். பா.உதயன்🌺2 points- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
இந்தியா ஈழத்தமிழரின் அரசியலை மட்டுமல்ல அவர்களின் பொருளாதாரத்தையும் அமிக்கிற வேலையைத்தான் செய்திருக்கிறது.இனியும் செய்யும்.தமிழக சினிமாவல் நாயக விம்பம் கட்டமைக்கப்படுவது உடைக்கப்படவேண்டும். எந்த ஒரு பெரிய சினிமா வந்தாலும் அதை வெளியிடுகிற உரிமையை திமுகவின் ரேட் ஜெயண்ட் வெருட்டி பறித்து விடுகிறது. அவர்கள் இலாபத்தை எடுத்துக்கொண்டு நட்டத்தொகையைக் காட்டுவார்கள். கூவததை சுத்தமாக்குவதற்கு முதலிட்ட பணத்தை முதலை இருப்பதலால் சுத்தமாக்க முடியவில்லை என்று முதலிட்ட முதலை விழுங்கிய பெரும் முதலை கருணாநிதியின் குமடும்பம்தான் தமிழ்நாட்'டையும் தமிழ்த்திரையுலகையும் ஆட்சி செய்கிறது. ஆனானப்பட்ட கமலகாசனே தன்படம் ஓடவேண்டும் என்பதற்காக திமுகவிடம் சரணடைந்தவர்தானே. முதலில் நடிகர்களுக்கு சம்பளததை கண்மூடித்தனமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது ஒரு தொழில் அவர்களுக்கு நியாமாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்.மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ஒரு அடிப்படைச்சம்பளமே இல்லை. ஆனால் இந்த நடிகர்களுக்கு ஏன் இந்தத் தொகை கொடுக்க வேணடும். அவர்களுக்குப் பெரிய தொகையைப் பேசி அவர்களை ஒப்பந்த் செய்து விட்டு அவர்களுக்காக கதையை எழுத வெளிக்கிட்டால் தரமான கதைம்சம் உள்ள படங்கள் எப்படி வெளிவரும்.தரமானரசனை உள்ள ரசிகர்கள் எப்படி உருவாகுவார்கள்.அந்தக் காலத்தில் படங்கள் சிறந்த கதை அமைப்பு பொழுதுபோக்கு அம்சகோடு சிறந்த பாடல்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ரஜனிக்கு விஜைக்கு என்று கதைகள் குறிப்பிபிட்டவகையில் ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி மக்கள் இரசிப்பார்கள்.முன்பு இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெறாத கே பாலசந்தரின் படங்கள் அதுவும் கறுப்பு வெள்ளைப் படங்கள் இலங்கையில் நல்ல வசூலைப்ப்பெற்றது வரலாறு. ஆனால் இப்போது இலங்கை ரசிகர்கள் தமிழ்நாட்டை விட மோசமான ரசனைகளுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.2 points- வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவர் உண்டோ சொல் என் தோழா கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம் உண்டாவதில்லை என் தோழா அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா --சி.ஏ.லட்சுமணதாஸ்2 points- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
பெண்களின் கருப்பைகள் ஆண்களுக்கு சொந்தமில்லை! குழந்தை பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்களின் சுதந்திரமாக இருக்கவேண்டும். தலிபான்கள் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாகவே பார்க்கின்றார்கள். பெண்களின் கல்வியை, மருத்துவம் உட்பட, முற்றாக அழித்து ஒரு காட்டுமிராண்டி சமூகத்தைக் கட்டமைக்கின்றார்கள்.2 points- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
வணக்கம் ஐயா! நான் எழுதிய அந்த கருத்து ஒரு ஏளனத்திற்காக எழுதியது. உண்மையும் அதுதானே? கிணற்றில் மாற்றானை தண்ணீர் அள்ள அனுமதிக்காத நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு ஏது இரணைமடு தண்ணீர்? நிற்க.... நான் ஊரில் இருந்த காலங்களில் சனி ஞாயிறு நாட்கள் நண்பர்கள்/பெரியவர்களுடன் சேர்ந்து சிரமதான பணியாக குளங்களை தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.பொது கிணறுகளை துப்பரவு செய்தல் என பல பணிகள் தொடரும்... அந்த சிரமதான பணிகள் எல்லாம் இன்றில்லை. எனவே அவர்களை திட்டுவதில் நகைப்பாக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. புதிதாக வந்திருக்கும் அர்ச்சனாவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என்பதை மறக்கக்கூடாது. பின் கதவு அரசியலால் வந்தவரல்ல. ஒவ்வொருவனுக்கும் கால அவகாசம் கொடுப்பது உலக நியதி.2 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points- கிரிக்கெட் 2024: ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை - ரசிகர்கள் மனதை விட்டு நீங்கா தருணங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2024-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் புதிய சாம்பியன், அணிகளின் மறக்க முடியாத வெற்றிகள், அதிர்ச்சி தரும் தோல்விகள், புதிய எழுச்சி அணிகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு என பல சுவாரஸ்யமான சம்பவங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தேறின. அந்த வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்தேறிய பல முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்? சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி? இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024ம் ஆண்டு கரிபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் முதலாவதாக அனைவரின் மனதிலும் நீடித்திருப்பது டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2007-ஆம் ஆண்டு தோனி கேப்டன்ஷியில் இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்தது. 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆமதாபாத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 2024ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. விராட் கோலியின் பேட்டிங், சூர்யகுமார் யாதவின் கேட்ச், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர், பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சு என பைனல் ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?29 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வெஸ்ட் இண்டீஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2024, ஜனவரி 25 முதல் 28ம் தேதிவரை பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்களின் மின்னல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 8 ரன்னில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை 2வது இன்னிங்ஸில் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்டில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி மண்ணைக் கவ்வ வைத்தது டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்து சென்றது. ஜெய்ஸ்வால் எழுச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் மீதான தீராக் காதலால் மும்பைக்கு வந்து மைதானத்திற்கு வெளியே பானிபூரி விற்பனை செய்து கிரிக்கெட் கற்றவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் டி20 தொடர் முதல் இந்திய கிரிக்கெட்டுக்குள் அறிமுகமான ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரு டெஸ்ட்களிலும் இரட்டை சதம் அடித்து உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் 214 ரன்களும் சேர்த்தார். ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு தேடிக் கிடைத்த முத்தாக அமைந்தார். 2024-ஆம் ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி, அது ஆஸ்திரேலியப் பயணம் வரை நீடித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் முதல் டெஸ்டில் 150 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?26 டிசம்பர் 2024 வி. ராமசுப்பிரமணியன்: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட இவர் யார்? நியமனத்திற்கு எதிர்ப்பு ஏன்?26 டிசம்பர் 2024 ஐபிஎல் - கேகேஆர் சாம்பியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2024ம் ஆண்டு சீசனின் சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உருவெடுத்தது. ஒருபுறம் புதிய சாம்பியன் உதயமானாலும், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பைனலை விட உச்சக்கட்ட பரபரப்பு தந்தது. முதல் பாதியில் சொதப்பிய ஆர்சிபி அணி பிற்பாதியில் சிறப்பாகச் செயல்பட்டு அனைத்து அணிகளுக்கும் சவாலாக மாறியது. சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவிடாமல் தடுத்த ஆர்சிபியின் ஆட்டம் இரு அணி ரசிகர்களையும் சமூக வலைத்தளத்தில் மோதவிட்ட ஆட்டமாக மாறியது. ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போன்று சிஎஸ்கை அணியை தோற்கடித்ததை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் மும்பை அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்கள் ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஹர்திக்கை கடுமையாக விமர்சித்து ரசிகர்கள் வசைபாடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்சிபி அணிக்கு முதல் சாம்பியன் பட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆடவர் ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணி சாம்பியனாவது இலவு காத்த கிளியாக தொடர்கிறது. ஆனால், மகளிர் ஐபிஎல் டி20 தொடரில் முதல் முறையாக ஆர்சிபி மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 8 ரன்களில் வென்று ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?29 டிசம்பர் 2024 டி20 உலகக்கோப்பை - அதிர்ச்சிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஸ்ஏ அணி டி20 உலகக் கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய முடிவுகள் பல போட்டிகளில் நடந்தன. அதில் முக்கியமானது முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியதுதான். அதிலும் வலிமையான பந்துவீச்சு, பேட்டிங்கை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் முதல் முறையாக தொடரில் பங்கேற்ற அமெரிக்க(யுஎஸ்ஏ) அணியிடம் தோற்றதுதான். சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி 5 ரன்களில் பாகிஸ்தானை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது. இ்ந்த உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியின் பேட்டிங், பந்துவீச்சு ஆகியவை, அணியின் எழுச்சி, பெற்ற திடீர் வெற்றிகள் மறக்க முடியாததாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக தகுதி பெற்றதை அந்த நாடே கொண்டாடியது. ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் பொது வெளியில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஆப்கானிஸ்தான் மோதும் ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்ததை சாம்பியன் பட்டம் வென்றதைப் போல அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய அணியில் மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் அணியின் கேப்டன்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் வரத் தொடங்கி, புது ரத்தம் பாய்ச்சப்பட்டு அணி தயார் செய்யப்பட்டது. ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?30 டிசம்பர் 2024 விளாதிமிர் புதின்: 25 ஆண்டுக்கால ஆட்சியில் ரஷ்யாவை எப்படி கவனித்துக் கொண்டார்?30 டிசம்பர் 2024 இலங்கை மகளிர் அணி ஆசிய சாம்பியன் மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடந்தது. இதில் தம்புலா நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 5 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 305 ரன்கள் சேர்த்து அந்த அணி புதிய ஆசிய சாம்பியனாக உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து மகளிர்அணி நியூசிலாந்து புதிய உலக சாம்பியன் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், உள்நாட்டு அரசியல் குழப்பத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் தகுதி பெற்றன. துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து மகளிர் அணியினர் வென்றனர். 2000-ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையை நியூசிலாந்து வென்றபின் பெரிதாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்து வந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்ல இருமுறை நியூசிலாந்து மகளிர் அணிக்கு வாய்ப்புக் கிடைத்தும் அதை தவறவிட்டிருந்தது. ஆனால் இந்த முறை நியூசிலாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியனானது. ஜிம்மி கார்டர் காலமானார்: வெள்ளை மாளிகையில் தடம் பதித்த வேர்க்கடலை விவசாயி30 டிசம்பர் 2024 சிரியா: நெடுங்காலம் கழித்து சொந்த ஊருக்கு சென்ற பிபிசி செய்தியாளர் பார்த்தது என்ன?30 டிசம்பர் 2024 'குட் பை' சொன்ன நட்சத்திரங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திர அஸ்வின் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் பல நட்சத்திர வீரர்கள் ஓய்வு அறிவித்தனர். சிலர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், சிலர் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்குமே முழுக்குப் போட்டனர். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை நடந்து வரும் நிலையில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி ஸ்டைலில் திடீரென அறிவித்தார். டி20 உலகக் கோப்பை முடிந்தபின் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா அறிவித்தனர். ஷிகர் தவண், சித்தார்த் கவுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்தனர். சர்வதேச அளவில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நீல் வேக்னர், பாகிஸ்தானின் இமாத் வாசிம், முகமது அமீர், இங்கிலாந்தின் டேவிட் மலான்,மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஷேனன் கேப்ரியல், மொயின் அலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தார். வங்கதேச வீரர்கள் மகமதுல்லா, சகிப் அல் ஹசன் இருவரும் டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தனர். மோசமான தோல்வி இந்தியாவுக்கு பயணம் செய்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி மோசமான தோல்வியை பதிவு செய்தது. நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று, அதுவும் ஒயிட்வாஷ் செய்து சாதித்தது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிட்ச்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, படேல் ஆகியோரின் துல்லியமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்டர்கள் ஏமாற்றம் கண்டனர். சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றபடி, ஆடுகளத்தை இந்திய அணிக்காக அமைத்த நிலையில், அதே ஆடுகளத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்துச் சென்றது நியூசிலாந்து அணி. தமிழ் சினிமா 2024: கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்களால் கோலிவுட்டின் அடையாளம் மாறியுள்ளதா?30 டிசம்பர் 2024 தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?30 டிசம்பர் 2024 ஐசிசியில் மீண்டும் இந்தியர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐ.சி.சி சேர்மன் ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன் ஐசிசி தலைவராக இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, என் ஸ்ரீனிவாசன், ஷசாங் மனோகர், சரத் பவார் ஆகியோர் பதவி வகித்துள்ள நிலையில் தற்போது ஜெய் ஷா அந்த பதவியில் இருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz9g2z4v321o1 point- எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை.
1 pointநன்றி நொச்சி, இதில் உள்ள வேதனை என்னவென்றால் அன்று தலைவர் கூறிய வார்த்தைகள் இன்றும் அதேயளவு முக்கியத்துடனும், யதார்த்தனுடனும் இருக்கின்றது என்பதுதான். ஆனால் நாம் மாறிவிட்டோம். எமது இருப்பும், தாயகத்தின் இருப்பும் சிறுகச் சிறுக அரிக்கப்பட, சிங்கள இனவாதிகளை எமது தாயக மண்ணிலேயே தலையில் சுமந்து கொண்டாடி ஆர்ப்பரிக்கும் இழிவான இனமாக நாம் மாறியிருக்கிறோம். எம்மீது நடத்தப்பட்ட, இன்றும் தொடர்கின்ற திட்டமிட்ட இனவழிப்பினை பார்க்கமறுத்து, அதனை இல்லையென்று நிராகரித்து, அதனைச் செய்த, செய்ய உறுதுணையாக இருந்த மார்க்ஸிய வேடம்போட்டு ஆட்சியில் இருக்கின்ற இனவாதிகளை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கவும், தலைமையாக ஏற்கவும் நாம் விரும்புகின்றோம். பாணும், மோட்டார்சைக்கிளுக்கு பெற்றொலும் வாங்க வரிசைகளில் நிற்பதைக் காட்டிலும் இனவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று நாம் எண்ணித் துணிந்துவிட்டோம். ஏனென்றால் எமதினம் இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துப் போராடியது ஒரு இறாத்தல் பாணிற்கும், ஒரு லீட்டர் பெற்றோலிற்கும்தான் என்பது எம்மில் பலரின் கருத்தாக இருக்கிறது. எமது தாயகத்தில் தமிழுடன் சேர்ந்து தமிழினமும் மெல்லச் செத்துக்கொண்டிருக்கிறது. அன்புடன் ரஞ்சித் யாழ்ப்பாணக் குடாநாட்டினை விட்டு புலிகள் வன்னிக்குப் பின்வாங்கிய காலத்தில் (1995 ரிவிரெச / சூரியகதிர் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குப் பின்னர்) தலைவரினால் ஆற்றப்பட்ட உரை இது. இதன் முக்கியத்துவத்தினை எவருமே கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இணைத்த இவ்வுரையினை இதுவரையில் பார்த்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே. எமதினம் எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான்.1 point- வருடச் செய்முறை
1 point👍.............. நீங்கள் சொல்வது நன்றாக இருக்குமே............... இங்கு களத்தில் யாராவது சிலராவது ஏதாவது வித்தியாசமாக பார்த்திருப்பார்கள் அல்லது செய்திருப்பார்கள்.1 point- வருடச் செய்முறை
1 pointமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றேன், அக்கா............ முப்பது வருட குடும்ப வாழ்க்கையில் சுடுதண்ணீர், பிளேன் டீ, இப்பொழுது பால் டீ வரை வந்துவிட்டேன். இப்படியே மெதுவாக முன்னேறாமல், ஒரேயடியாக திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணியை அடுத்ததாக செய்து விடுவமோ என்றும் ஒரு யோசனை வருகின்றது................. ஆனால் வீட்டில் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் மூச்சு நின்றாலும் நின்றுவிடும்........... ஊரில் கிரவுண்டுக்கு என்றே நேர்ந்து விட்டது போல.......... இங்கேயும் அப்படித்தான்............🤣.1 point- மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!
என்ன கொடுமையடாப்பா இது ? மீன் குழம்பு,அடிச்ச ஆட்டிறைச்சி ,நண்டு கறி இப்படி சுத்த அசைவ பிரியர்கள் வாழ்ந்த பூமி ....இங்கு பிராந்திய வல்லரசு தனது உணவு பழக்கங்களை சுற்றுலா என்ற வகையில் திணித்து எம் மண்ணின் அசைவ தன்மையை இல்லாமல் பண்ணுவதில் குறியாக இருக்கின்றது ...அத்துடன் தனது பொருளாதர வளர்ச்சிக்காக எமது பொருளாதாரத்தை கொள்ளையடிக்க முயல்கின்றனர் ஜெ.வி.பி யின் இந்திய எதிர்ப்பு வாதம் புஸ்வானமாக போய்விட்டது போல தெரிகின்றது ....நவீன புத்தர் அணுராவின் இந்தியா விஜயத்தின் பின்பு ..பதவி இல்லாத பொழுது அமெரிக்காவையும் சண்டைக்கு இழுப்பேன் என முழங்கலாம் ....ஆனால் பதவிக்கு வந்து கதிரையில் அமர்ந்த பின்பு ...சரண்டர் பண்ணுவதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே...கொள்கை தான் உவையிளின்ட கத்தரிக்காய்/பூசனிக்காய் பிரியாணிக்கே ...நெவர்😅 ...கண்ணப்ப நாயனார் பரம்பரை கண்டியளோ ...வாழையிலையில் சோறும் ஆட்டிறைச்சி கறியும் கட்டி கொண்டு போய் சாப்பிடுவான்...கொழுபு பயணத்துக்கே அப்படி செய்தவன்1 point- நானும் சைக்கிளும் (சிறுகதை)
1 pointநானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு... சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு. அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது.... இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும். அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான். கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது... கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல.... கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு. எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்... அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்.. அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன் https://www.facebook.com/groups/1617989741545239/posts/9529459303731537/ All reacti1 point- 2025 புதுவருட வாழ்த்து
1 point- 2024/2025 புது வருடம்!
1 pointநம்பிக்கைதானே வாழ்க்கை. நல்லதே நடக்கும் என்று, புது வருடத்தை வரவேற்போம்.1 point- 2024/2025 புது வருடம்!
1 pointபழமைக்கும் புதுமைக்கும் சற்று இடைவெளி விட்டு இருக்கலாம் . புது வருடம் நல்லதே நடக்கும் எனும் எதிர்பார்ப்புகளோடு பிறக்கிறது . நன்றி.1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
மொத்தமாக இந்திய சினிமாக்கள் எந்த வருடமும் இழந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று இழப்பு எல்லா இடமும் நடந்து கொண்டே இருக்கின்றன. 70ம் ஆண்டுகளில், 80ம் ஆண்டுகளில் மொழிவாரியாக 100 படங்கள் என்ற அளவில் வந்து கொண்டிருந்த போதும் பத்து படங்கள் தான் வென்றன, 90 படங்கள் தோற்றன. அப்பொழுதே தயாரிப்பாளர் துரை என்று நினைக்கின்றேன். பின்னர் ஒரு கோவில் தர்மம் வாங்கிக் கொண்டிருந்தார். மணிரத்தினத்தின் சகோதரர், ஜீ.வி, தற்கொலை செய்துகொண்டார். ஏவிஎம்மே இனிமேல் முடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். அட்சயபாத்திரம் போல இருந்த, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஆர்.பி. சௌத்திரியும் ஒதுங்கினார். இந்திய சினிமா உலகம் என்பது லாஸ் வேகாஸ் போன்றதே. லாஸ் வேகாஸில் இறுதியில் வென்றவர்கள் எவருமில்லை என்பார்கள். ஷாருக்கின் 'திவான்', 'பதான்' இரண்டும் வந்து தான் ஹிந்திப் படங்களிற்கு இன்னும் சந்தை இருக்கின்றது என்பது தெரியவந்தது. அதுவரை சில வருடங்களாக பாழும்கிணற்றில் விழுந்தது போலக் கிடந்தது ஹிந்தி திரையுலகம். 400 கோடிகள் செலவென்றால், 800 கோடிகள் வசூலாக வந்தால் தான் போட்ட முதல் கையில் வரும் என்ற நிலைதான் இன்று. 800 கோடிகள் மதிப்புள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் என்று தமிழில் எவரும் இல்லை. படம் வெளியாகி அடுத்த நாள், மூன்றாம் நாள், முதல் வாரம் என்று அறிக்கைகளில் வெற்றி கொண்டாடுவார்கள். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பின், தாங்கள் இழந்து விட்டோம் என்ற உண்மையை விநியோகஸ்தர்கள் வெளியே சொல்லிக் கொள்கின்றனர். தீராத கவர்ச்சி, கறுப்பு பணம் போன்றன சினிமாவை அழியாமல் கொண்டு செல்கின்றன. சரவணாஸ் 'லெஜெண்ட்' போல சிலர் வந்து சினிமாவை வாழவைப்பார்கள். லைக்கா போன்ற நிறுவனங்களும் வாழவைப்பார்கள். 'பொன்னியின் செல்வன்' வெளிவந்த போது, அதுவரை வெளியாகியிருந்த லைக்காவின் எந்தப் படங்களும் இலாபத்தை சம்பாதிக்கவில்லை என்று ஒரு செய்தியும் வந்திருந்தது. ஆனால், அவர்களின் பல படங்களை பெரும் வெற்றிப்படங்களாக அவை வெளியான காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமா என்பது திரையில் மட்டும் தான் நடிப்பு என்றில்லை, திரைக்கு வெளியேயும் சம்பந்தப்பட்டவர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நாயக பிம்பம் என்றும் தேவையாக இருக்கின்றது. ஒரு சின்ன விலங்கு உருளையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது போல சமூகமும், திரை உலகமும் ஓடிக் கொண்டிருக்கின்றது.1 point- ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
வாழ்த்துக்கள் மிக விரைவாக அழியட்டும் . முதலில் ஒழுங்கான கதையமைப்பு கிடையாது இன்னமும் நஞ்சு என்று எழுதிய போத்தலை காட்டினால் தான் விளங்கி கொள்ளும் ரசிக குஞ்சு மணிகள் இன்னை வரைக்கும் நீச்சல் குளத்தில் பாயும் போது வண்டியட விழுவது ஒரு பாய்ச்சல் என்று காட்டுவது ஒரு தமிழ் படத்தில் கூட முறையான நீச்சல் பாய்தல் கிடையாது இப்படி கேணத்தனமான காட்சிகளை வைத்து விட்டு படம் ஓடா விட்டாலும் ஓடுது அள்ளுது என்று மீடியாவில் அள்ளி விட்டு கடைசியில் ஒப்பாரி வைப்பது அவர்களின் வாடிக்கை . netflix போன்றவை ஆங்கில படங்களுக்கும் தமிழ் ஆக்கம் செய்து வெளியிடுகிறார்கள் . இன்னமும் விஜயையும் அசித்தையும் கிழட்டு ரசனியையும் நம்பினால் இதுதான் வழி .1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointஇந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..1 point- புது வருட சிரிப்புகள்.
1 pointகள உறவுகள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டில் உங்கள் அனைவர்க்கும் அமைதி, மகிழ்ச்சி மலரட்டும்.1 point- வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
@வாலி, பெண்ணழகிகளைப் பார்க்க 24 நிமிடத்தில் இருந்து பாருங்கள்🥰1 point- குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
இம்முறை நடக்கும் இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும் சுமந்திரன் செல்வாரா? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா? ப்ளீஸ் ரெல் மீ. 😂1 point- வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
எண்சாண் உடம்பிற்கும் தலையே பிரதானம் போல, செய்திகள், பதிவுகள் போன்ற அனைத்திற்கும் தலையங்கம் பிரதானமாக இருக்கிறது. வாசகர்களுக்கு ஓரிருவரித் தலையங்கமே முதலில் அதற்கான வரைவுகளை வாசிப்பதற்கு முன்னர் அதுபற்றிய எண்ண ஓட்டங்களை உருவாக்குகிறது. வாசித்தபின்பு அவர் எண்ண ஓட்டங்களுக்கு ஒவ்வாத நிலையில் வரைவுகள் இருந்தால் அது ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கலங்கடிக்கிறது. ஆகவே தலைப்புக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது. தலைப்பில் குறைபாடு கண்டால், அது அதன் வரைவையே நோண்டிப் பார்த்து குறைதேடும் முயற்சிக்கும் ஆதாரமாக அமைந்துவிடுகிறது.😳1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள். இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன் காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.1 point- தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி
தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும். அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும். அவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார். வன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது . அக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு கேணல் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார். அதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார் . பின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார். இப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும். தமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார். கேணல் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் கேணல் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர். கேணல் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும். மரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என கேணல் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான். தமிழீழ நிதிப்பொறுப்பாளர் கேணல் தமிழேந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம். இதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கேணல் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை . முதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு கேணல் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும். http://www.battinaatham.net/description.php?art=188931 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடி மரியாதையா எளிமையா சொல்லுங்கோ சாமியார், "ஆடையில்லா ஊரில், கோமணம் கட்டியவன் விசாரன் பைத்தியக்காரன்." அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும்.1 point- வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
அதுக்கெல்லாம் எக்ஸ்ட்றாவாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு🤪 ஒரு காலத்தில திரிஷா குளிக்கிற வீடியோ ஒன்று ஓடியது. பார்த்திருப்பாரோ?😍😜1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடவுள் இல்லை என்பவர்கள் எப்போதுமே கடவுளை அவமதிப்பதில்லை. கடவுள்கள் பக்தர்களாலேயே அவமதிக்கப்படுகிறார்கள்.1 point- வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
வெள்ளைக்காரங்கள் அதுக்கெண்டு அளவு கணக்குகள் வைச்சிருக்கிறாங்கள். 😎 நம்ம திரிஷா வடிவுதான். அதுக்காக உலக அழகுராணியாக எல்லாம் வரேலாது. அவவுக்கு கைகால், விரல் நீட்டு காணாது. ☹️1 point- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
ப்ரோ…. கைய குடு ப்ரோ….இந்த கருத்தை எழுதின கைக்கு @Nathamuni மோதிரம் போடுவார் நான் ஒரு முத்தம் கொடுத்துகிறேன். இப்ப வெளி நாட்டில் பறை அவையவை தானே அடிக்கிறம்… வெள்ளை அவையவை தானே கட்டுறம் செலவு படையலை அவையவைதானே தூக்கி போய் முன் சந்தியில் வைக்கிறம். அதே நிலை ஏனைய தொழிகளுக்கும் ஊரில் வர வேண்டும். வந்து கொண்டுள்ளது. வந்து விடும். பிகு ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம். ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.1 point- திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
எந்தப் பாதிப்பும் இந்தியாவிற்கு இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதியைத் தோண்டி எடுத்தால் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். 😁1 point- புது வருட சிரிப்புகள்.
1 point1 point- 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி குரோவர் பதவி, பிபிசி நியூஸ் டஹிடி தீவில், அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது. மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன? கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து? யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? அமெரிக்காவில் சூரிய கிரகணம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. முழு சூரிய கிரகணத்தின் ஊடாகப் பறக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அமைப்பு சூரியனின் (கொரோனா) பிரகாசமான வெளிப்புற விளிம்புக்கு இணையாக இருண்ட கோடுகளாகத் தெரியும். நிச்சயமாக, ஒரு விமானம், சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு குறுக்காகச் செல்வது இது முதல் முறை அல்ல. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. கடந்த 1925-ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். லாஸ் ஏஞ்சலஸ் கப்பலில் இருந்து தொலைநோக்கிகள் மற்றும் ஏழு விஞ்ஞானிகளுடன் வானூர்தி ஒன்று சூரிய கிரகணத்தை நெருக்கமாகப் பார்க்கும் நோக்குடன் பறந்தது. இந்த நிகழ்வு வரலாற்றில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்ட கிரகணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. நிலத்தில் இருந்து அமெரிக்க ஓவியர் ஹோவர்ட் ரஸ்ஸல் பட்லர் அந்தத் தருணத்தை, கலைஞர்களுக்கு ஓவியம் வரைய பயன்படுத்தும் ஈசல்(Easel) எனும் பொருளுடன் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் மூன்று குறிப்பிடத்தக்க கிரகணங்களை (1918, 1923, மற்றும் 1925) வரைந்து பின்னர் அவற்றை ஒன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சூரியனுடன் ஒன்றாக பிறந்த இரட்டையராக பார்க்கப்படும் இன்னொரு நட்சத்திரம் எங்கே?28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பாரிஸ் 2024 தொடக்கத்தில் டியோனிசியோ பட மூலாதாரம்,THOMAS JOLLY படக்குறிப்பு, பாரிஸ் 2024 தொடக்க விழாவில் நடந்த காட்சியை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதால் பல சர்ச்சைகள் கிளம்பின. கலையின் வரலாற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று. சில கிறிஸ்தவர்கள் மற்றும் பழமைவாதிகள் இந்த புகைப்படம் 'தி லாஸ்ட் சப்பர்'-ஐ சித்தரிக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு, மத நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துவதாகவும், புண்படுத்தும் படமாகவும் அதனை கருதினர். இந்தக் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டுக் குழு, இது லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்பை நினைவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், மாறாக 1635ஆம் ஆண்டு ஜான் வான் பிஜ்லெர்ட்டின் ஓவியமான "தி ஃபீஸ்ட் ஆஃப் தி காட்ஸ்" ("The Feast of the Gods") என்ற கிரேக்கக் கடவுளான டியோனிசஸை நினைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்தியது. சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 தெற்கு சூடானின் போக்குவரத்து மையம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வண்ணமயமான அச்சுகளுடன் கூடிய ஆடை தெற்கு சூடானில் பாரம்பரியமானது. பிப்ரவரியில் தெற்கு சூடானின் ரெங்க் பகுதியில் உள்ள போக்குவரத்து மையத்தில் நெரிசலான வரிசையில் சூடான் அகதிகள் உதவிக்காகக் காத்திருந்தார்கள். சூடானிய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தெற்கு சூடானில் கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. பலருக்கு அவசர உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டன. புலம்பெயர்ந்தோர் அணிந்துள்ள பிரகாசமான வண்ணத் துணிகள் அவர்களின் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் கஷ்டங்களுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை காட்டுகின்றன. இந்தப் புகைப்படம், புகழ்பெற்ற சூடானிய கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹுசைன் ஷெரிஃபின் படைப்புகளை நினைவூட்டுகிறது. அவரது ஓவியங்கள் அவற்றின் வடிவங்கள் மற்றும் செழுமையான அமைப்புகளுக்காக அறியப்பட்டவை. அவை காட்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான எல்லைகளை மங்க வைக்கும் கவிதை உணர்வை உருவாக்குகின்றன. இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 இந்தோனீசிய எரிமலை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இந்தோனீசிய எரிமலையான மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதாக அமைந்தது. எரிமலை அதன் சக்தி வாய்ந்த வெடிப்புகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வந்துள்ளது. சூடான எரிமலைப் பொருட்கள் மற்றும் சாம்பல், வானத்தில் தூக்கி எறியப்படுவதைக் காட்டும் சமீபத்திய புகைப்படம் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் மார்ட்டின் வரைந்த வியத்தகு மற்றும் தீவிரமான காட்சிகளைப் போலவே உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மார்ட்டின் தனது அபோகாலிப்டிக் ஓவியமான "தி டிஸ்ட்ரக்ஷன் ஆஃப் பாம்பீ அண்ட் ஹெர்குலேனியம்" எனும் ஓவியத்துக்காக கி.பி. 79இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பதைப் போலக் கற்பனை செய்தார். 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 டிரம்ப் மீதான தாக்குதல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். சில புகைப்படங்கள், குறிப்பிடத்தகுந்த நினைவுச் சின்னங்களாக மாறும் என்ற கணிப்பில் இயற்கையாகவே தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய தீவான ஐவோ ஜிமாவில் அமெரிக்க கொடி உயர்த்தப்பட்டது அல்லது 1968ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் வெற்றிக் களிப்பில் கைகளை உயர்த்தியது ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். அந்த இரண்டு படங்களையும் நினைவூட்டும் வகையில், ஜூலை மாதம், அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில், தனது வலது காதில் தோட்டா துளைத்ததைத் தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனது கரத்தை உயர்த்தியபடி தோன்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் இருந்த கொடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தருணமோ என்று பலரையும் வியக்க வைத்தது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 காஸாவில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023இன் பிற்பகுதியில் இருந்து, காஸாவில் பாலத்தீனர்களின் இடப்பெயர்வு பெரிய அளவில் உள்ளது. பிப்ரவரி 29 அன்று தெற்கு காஸாவில் நெரிசலான அகதிகளின் கூடாரங்களை அலங்கரிக்கும் விதமாக இரண்டு பாலத்தீன சிறுமிகள், ரமலான் பண்டிகைக்குத் தயாராகி, விளக்குகளை ஏற்றினர். அந்த விளக்குகளின் பிரகாசம், தொலைதூரத்தில் மறையும் சூரியனின் அமைதியற்ற இருளுக்கு எதிராக நின்றது. கோடையில் காஸாவின் 90% மக்கள் (சுமார் 20 லட்சம் மக்கள்) போரினால் இடம்பெயர்ந்தனர். சிறுமிகள் விளக்கு ஏற்றும் இந்தக் காட்சி ஜான் சிங்கர் சார்ஜென்ட்டின் புகழ்பெற்ற ஓவியமான "கார்னேஷன், லில்லி, லில்லி, ரோஸை"(Carnation, Lily, Lily, Rose) நினைவுபடுத்துகிறது. தென்மேற்கு பிரிட்டனில் அந்தி நேரத்தில் தென்படும் ஒரு நண்பரின் மகள்களை அந்த ஓவியம் சித்தரிக்கிறது. அவர் 1885ஆம் ஆண்டின் இலையுதிர்க் காலத்தில் பல மாதங்களாக அதை வரைந்தார், ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் வேளையில் அதன் ஒளியைச் சரியாகக் கவனித்து அதை வரைந்தார். அந்த ஓவியத்தில் விளக்குகளை ஏற்றும் இரண்டு இளம் பெண்கள் பசுமையான பகுதியில் மலர்களால் சூழப்பட்டுள்ளனர். அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற பச்சைப் புல், காட்டுப் பூக்கள் மற்றும் அமைதி மட்டும் இந்தப் புகைப்படத்தில் இல்லை. மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 டஹிடி தீவில் ஒலிம்பிக் சர்ஃபிங் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்பாராத விதமாக, மதீனாவின் புகைப்படம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்த ஒன்றாக மாறியது. ஜூலை 29 அன்று பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள டஹிடி தீவில் பிரேசிலியன் கேப்ரியல் மதீனா என்பவர் ஒரு பெரிய அலையில் சர்ஃபிங் செய்த பிறகு உயர எழும்பி வானத்தில் மிதப்பது போன்று செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் உடனடியாக வைரலானது. சர்ஃபிங் செய்யும் போது கேப்ரியல் மதீனா சிரமமின்றி காற்றில் மிதப்பது போன்று செய்தது மேற்கத்திய கலை வரலாற்றின் முக்கியமான பல மத கலைப் படைப்புகளை நினைவுபடுத்துகிறது. ஜியோட்டோ, ரெம்ப்ராண்ட், இல் கரோஃபாலோ மற்றும் சால்வடார் டாலி போன்ற கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும். அவரது வலது கை மற்றும் ஆள்காட்டி விரல், மதீனாவின் தடகள செயல் திறனுக்கும் மத நம்பிக்கை பற்றிய பார்வைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பைப் படம் பிடிக்கிறது. அவர் வானத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது, அவரது உடல் மற்றும் ஆவி இரண்டையும் மேல்நோக்கி வழிநடத்துவது போலத் தோன்றுகிறது. பசையை மென்று சாப்பிட்டு ஆதிகால மனிதன் கண்டுபிடித்தது என்ன?24 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 ஸ்பெயினைத் தாக்கிய டானா புயல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, நவம்பரில் டானா புயல் ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் எண்ணற்ற அழிவையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 30ஆம் தேதியன்று கடுமையான மழை காரணமாக வலென்சியா நகரம் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தது. ஒரு பெண் தனது பால்கனியில் இருந்து கீழே தெரிந்த காட்சியைப் பார்த்தார். அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிடந்தன. தெருக்களில் காணப்படும் காளைகளின் நெரிசலைப் போன்று அக்காட்சி தோற்றமளித்தது. புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. அக்டோபர் 30 அன்று, வெறும் எட்டு மணி நேரத்தில் 500 மிமீ மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான நிகழ்வுகளை உற்றுநோக்கும் பெண்ணின் இக்காட்சி, இத்தாலிய கியூபிஸ்ட் ஓவியரான கார்லோ காராவின், 1912ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓவியமான லா டோனா அல் பால்கோனின் சைமெல்டனெய்தா என்ற ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பில்லி எலிஷின் தோற்றம், நியூயார்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில்லி எலிஷ் நியூயார்க்கில் ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட் எனும் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். நியூயார்க்கில் இந்த ஆண்டின் மே மாதத்தில், தனது புதிய ஆல்பமான "ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட்" ஆல்பத்தை பில்லி எலிஷ் வெளியிட்டார். அந்த விழாவில், எடுக்கப்பட்ட பில்லி எலிஷின் புகைப்படம், ஒளி மற்றும் புகையால் சூழப்பட்டு, கனவில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரது உடல் மங்கலாகி, ஏறக்குறைய, கண்ணுக்குத் தெரியாத நிழற்படத்தை உருவாக்கியது. இந்தப் புகைப்படம், ஜே.எம்.டபிள்யூவின் புகழ்பெற்ற லைட் அண்ட் கலர் - தி மார்னிங் ஆஃப்டர் தி டெலுஜ் என்ற ஓவியத்தை நினைவூட்டுகிறது. சிரியாவில் நடந்த சிலை உடைப்புச் சம்பவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 9 2024 அன்று, சிரியாவில் முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை ஒரு பிரிவினர் காலால் உதைத்தனர். டிசம்பர் 9 2024 அன்று, முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை காலால் உதைத்து ஒரு பிரிவினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிரியாவில் பஷார் அல்-அசத் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த பஷர் அல்-அசத்தின் தந்தையான ஹஃபீஸ் அல்-அசத்தின் சிலைகள் வீழ்த்தப்பட்டன. அதிகாரத்தை இழந்துவிட்ட ஆட்சியாளர்களின் சிலைகளைக் கவிழ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒரு வகையான வகுப்புவாத உணர்வு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 டான்சர்ஸ் மீட்டிங், நியூயார்க் பட மூலாதாரம்,BESS ADLER படக்குறிப்பு, நியூயார்க்கில் 350 நடனக் கலைஞர்கள் இணைந்து கின்னஸ் சாதனை படைத்தனர். நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 350க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் போஸ் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர். பங்கேற்பாளர்களில் பலர் போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் நேர்த்தியையும் ஆற்றலையும் படம் பிடித்தது. எட்கர் டெகாஸ் எனும் பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் கலைஞர், பல இளம் பெண்கள் நடனமாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருப்பார். திறமையான நடனக் கலைஞர்களைப் பார்த்து மகிழ்ந்தது மட்டுமின்றி, அவர்கள் நடனமாடும் போது அவர்களின் மூட்டுகள் "உராய்வதால்" ஏற்படும் ஒலிகளிலும் அவர் ஒரு விசித்திரமான ஆர்வம் காட்டினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 சியோல் தேசிய சட்டமன்றத்தில் காவலர்களை எதிர்கொண்ட பெண் பட மூலாதாரம்,OHMYTV VIA AP படக்குறிப்பு, அஹ்ன் க்வி-ரியோங் தென் கொரிய காவலர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். தென் கொரிய பெண்ணான 35 வயது, அஹ்ன் க்வி-ரியோங், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். அஹ்ன் க்வி-ரியோங், சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்த ஒரு வீரரின் துப்பாக்கியை தைரியமாகப் பிடித்தார். அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தடுக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து அஹ்ன் க்வி-ரியோங் அவர்களுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது. "எனது ஒரே எண்ணம் நான் அவர்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான்" என அங்கு நடந்த மோதலைப் பற்றி அஹ்ன் பின்னர் கூறினார். "நான் அவர்களைத் தள்ளிவிட்டு, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்" என்றும் அவர் கூறினார். அஹ்ன் க்வி-ரியோங்கின் அசைக்க முடியாத உறுதியும், அவரது ஆடைகளின் பிரகாச ஒளியும் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் கில்பர்ட்டின், ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் வாட்டர் கலர் ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dqlnyy48eo1 point- 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்
எப்படி இந்த பிபிசி கணக்கெடுத்தது. குளிரிலும்,இஸ்ரேலின் குண்டிலும் மடியும் இதுபோன்ற குழந்தைகளை உலகுக்குத் தெரியவில்லையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், யாழ்ப்பாணிகள் தமது குடிப்பரம்பலை வன்னி நோக்கி நகர்த்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் காணி விலை, கொழும்பை விட அதிகமாக உள்ளது. குடிசன அடர்த்தி (/km2) யாழ்ப்பாணம் 629, முல்லைத்தீவு 38, மன்னார் 53, கிளிநொச்சி 94, வவுனியா 92.1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி. மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்? நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நீரை வழங்கமுடியும்? ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும். மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது? முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது, நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும். மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம். எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது, புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
எங்கே யார் யார் பக்கம் என்பதல்ல முக்கியம் யாழ் மாவட்டத்திற்கு தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும் அளவுக்கு இரணைமடு குளத்தில் தண்ணீர் உள்ளதா என்பதே முக்கியம். அது இல்லையென்றால் இது எமக்குள் பகை வளர்க்கும் நரித்தனம் மட்டுமே. (நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன். எனவே குடிதண்ணீர் எங்கிருந்து எனது ஊருக்கு வந்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.)1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
தமிழருக்குள் கொம்புசீவுவதில் வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointநகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.