Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19122
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/22/25 in all areas

  1. அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்! Jan 21, 2025 ப.திருமாவேலன் கொழுப்பெடுத்த கூமுட்டை ஒன்று, தான் பிரபாகரனைச் சந்திப்பதற்கு முன்பு ‘திராவிடம்’ பேசியதாகவும், பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார் என்றும் உளறித் திரிகிறது. அதைக் கேட்ட போது ‘ஆமைக் கறி’ நாற்றத்தை விடக் கேவலமாக இருந்தது. அவர்களே ‘திராவிட’ புலிகள் என்பது இந்த குணக்கேடனுக்குத் தெரியாது. ‘தமிழர்கள்'( திராவிடர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1978 ஆம் ஆண்டு கியூபாவில் உலகம் முழுக்க இருக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகள் கலந்து கொண்ட மாநாட்டில் புலிகள் பங்கெடுத்தார்கள். 11TH WORLD FESTIVAL YOUTH AND STUDENTS – IN CUBA – 1978 என்று அந்த மாநாட்டுக்குப் பெயர். We “LIBERATION TIGERS OF THAMIL EALAM” என்ற அறிமுகத்துடன் நான்கு பக்க அறிக்கையை அப்போது புலிகள் அங்கு தாக்கல் செய்தார்கள். அந்த அறிக்கையில் WHO ARE THAMILS ( DRAVIDIANS) என்ற தலைப்பில் இரண்டாவது பாரா உள்ளது. அதில், ”The Thamils have ancient culture and speak Thamil language which is one of the oldest languages of India that formed the Dravidian family spoken today in Thamil Nadu of india, Thamil Ealam of Ceylon, Singapore, Malaysia, Fiji Islands, South Africa and in other countries by more than 65 million people. In Ceylon Thamils are 3 million in number” – என்று குறிப்பிட்டுள்ளார்கள். ( அந்த அறிக்கையில் TAMILS என்பதில் ‘H’ இடம்பெற்றுள்ளது) புலிச்சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? 1976 ஆம் ஆண்டு புலிச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிச்சின்னம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் 1991 பங்குனி மாதம் வெளியாகி உள்ளது. ”புலிச்சின்னத்தை தமிழீழத்தின் தேசியச் சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும் தேசிய எழுச்சியையும் சித்தரிக்கும் ஒரு குறியீடு” ( பக்கம் 3) என்று அறிவிக்கப்பட்டது. தனது போராட்டத்துக்கு அடித்தளம் தமிழார்வம் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. “அறிவுசார் மானிடத்தின் பொதுமூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோள்களின் படி தமிழார்வம் முகிழ்ந்துள்ளது. எமது விடுதலைப் போரும் தமிழார்வத்துக்கு இன்னுமோர் காரணமாகலாம்” ( விடுதலைப்புலிகள், 2007 பங்குனி சித்திரை) என்று அதிகாரப்பூர்வமான அமைப்பின் இதழ் எழுதியது. திராவிடத் தமிழ் இராச்சியங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் அறிஞரான அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அதில் திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் என்றே முந்தைய இலங்கையைக் குறிப்பிடுகிறார். ”இலங்கைத் தீவானது தொன்மை வாய்ந்த இரு நாகரிகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பர்யங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகிறது. இத்தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம் வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத்தீவை வந்தடைந்த போது – தொன்மை வாய்ந்த திராவிட ( தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில் நாகர், இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன… இத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு( பக்கம் 14) என்று குறிப்பிடுகிறார் அன்ரன் பாலசிங்கம். பூர்வீகக் குடிகளான திராவிடத் தமிழர்களின் திராவிடத் தமிழ் இராச்சியங்களை சிங்களவர்களிடம் இருந்து மீட்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எடுத்தார்கள். இவர்களை திராவிடத் தமிழர்கள் என்று தான் பாலசிங்கம் அழைக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முழு வரலாற்றுப் புத்தகத்திலேயே இது இருக்கிறது. சின்னத்தில் ‘கருப்பு’ ஏன்? விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் சின்னமாக மஞ்சள், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமது வழிவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மஞ்சளும், சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு புரட்சிகரப் போராட்டத்தின் நிறமாக சிவப்பும், மக்களின் மன உறுதியைக் குறிக்க கருப்பும் தேர்வு செய்ததாக தலைமை அறிவித்தது. ( விடுதலைப் புலிகள் 1990 வைகாசி) சோசலிசப் பாதையே தனது அரசியல் பாதையாக பிரபாகரன் அறிவித்தார். ( 1986 இந்து இதழுக்கு அளித்த பேட்டி.) புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதை தமது விடுதலை இயக்கத்தின் இலட்சியமாகச் சொன்னார். வர்க்கம், சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்( விடுதலைப்புலிகள் 1986 நவம்பர்) என்று சொன்னார். மனுவை எதிர்த்த பிரபாகரன் ”பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது, வேதாந்தங்களையும் மத சித்தாந்தங்களையும் மனுநீதி சாஸ்திரங்களையும் அந்தக் காலங்கொண்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்கு முறையானது பெண்ணினத்தின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது” என்று உலக மகளிர் தினச் செய்தியாக பிரபாகரன் வெளியிட்டார்.( விடுதலைப்புலிகள் 1991 பங்குனி) ”பெண்ணடிமை வாதம் என்பது மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம். கருத்துலகம். பழமைவாதக் கருத்துகள் பெண்மையின் தன்மை பற்றிய பொய்மையை புனைந்து விட்டுள்ளது. தலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் பழைமை என்றும் பண்பாட்டுக் கோலமென்று காலங்காலமாக மறைமுக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்” ( விடுதலைப்புலிகள் 1992 பங்குனி) என்றும் பிரபாகரன் எழுதி இருக்கிறார். பிரபாகரன் தனது இறுதி மாவீரர் உரையில், ” சுதந்திரமும் சமத்துவமும் கூடிக் குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டு கொண்டான். சாதி,சமய, பேதங்கள் ஒழிந்த – அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற – சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய ஓர் உன்னத வாழ்வை கற்பிதம் செய்தான்” ( விடுதலைப்புலிகள் ஐப்பசி,கார்த்திகை) என்றே தனது கனவுகளை அறிவித்தார். மதச்சார்புக் கொள்கை ”தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்றது. தமிழ் இன ஒருமைப்பாட்டையும் தேசிய சுதந்திரத்தையும் லட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் மதச்சார்புடைய கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இனஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். வழிபடுவதும் வழிபடாமல் விடுவதும் அவரவர்க்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். வழிபாட்டு உரிமையானது, மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் சார்ந்தது. இதை எமது இயக்கம் தடுக்காது” ( விடுதலைப்புலிகள் 1992 ஆடி,ஆவணி) என்று தமது இயக்கத்தின் கொள்கைத் திட்டமாக அறிவித்திருந்தார் பிரபாகரன். பிரபாகரன் கண்டித்த பார்ப்பனீயம் 1983 திம்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசு சொல்வதை பிரபாகரன் ஏற்க வேண்டும் என்று ரா உளவுப் பிரிவு அதிகாரியான சுந்தரம் கடுமையாக நிர்பந்தம் செய்தார். அதனை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்த சுந்தரம், ஒரு பார்ப்பனர். இது தொடர்பாக கொளத்தூர் மணியிடம் பேசிய பிரபாகரன், ”திராவிட இயக்கத்தின் பிராமண எதிர்ப்பை நமது முகாம்களில் சில புலிகள் கிண்டல் செய்வது உண்டு. திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை ஏன் இப்படி தீவிரமாக எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு இருந்தது. இந்த சுந்தரம் போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் எனக்குப் புரிகிறது. திராவிட இயக்கத்தவர்களின் பிராமண எதிர்ப்பில் நியாயம் புரிகிறது” ( பக்கம் 578, வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை) என்று சொல்லி இருக்கிறார். ‘ஆரிய’ ஜெயவர்த்தனாவும் ‘திராவிட’ பிரபாகரனும் ஈழத்தமிழர்களை 1980 களின் தொடக்கத்தில் படுகொலை செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தன்னை ஆரியராகவே சொல்லிக் கொண்டார். தமிழர்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த அமிர்தபஜார் இதழில் நிருபர் அதிபர் ஜெயவர்த்தனாவை பேட்டி காணச் சென்றார். அவரிடம் ஜெயவர்த்தனா சொன்னார். ”நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியில் இருந்து வந்திருக்கிறீர்கள். எனவே சிங்களவர்களுக்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள சிறுபான்மையினர் (தமிழர்கள்) திராவிட இனத் தொடர்பு உள்ளவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்றார் ஜெயவர்த்தனா. இதை குறிப்பிட்டு ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அன்றைய இந்தியத் தூதர் எஸ்.பார்த்தசாரதி, ”சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழர் சிங்களவர் போராட்டத்தை ஆரிய – திராவிட போராட்டமாகவே கூறுகிறார்கள்” என்று எழுதினார். ( 31.8.1983 இந்து) இதற்கு பதிலளித்து ‘விடுதலை’ எழுதி தலையங்கம், ‘இது ஒரு ஆரிய திராவிடப் போர்’ என்று தலைப்பிட்டது.( விடுதலை 14.9.1983) இதே கருத்தை மையமாக வைத்து புலிகளின் அதிகாரப்பூர்வமான ‘புலிகளின் குரல்’ வானொலியில் ‘இலங்கை மண்’ என்ற தொடரை கலை இலக்கியவாதியும் பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி தயாரித்து ஒலிபரப்பினார். இதற்கு எதிர்ப்பு வந்தபோது, இந்த நாடகத்தை இரண்டாவது முறையும் ஒலிபரப்பச் சொன்னார் பிரபாகரன். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபாகரன் எழுதுகிறார்: “மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்த்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது. தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கிவைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் என்று போதனை வேறு செய்தான். கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான். இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது. இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரியில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது” என்றார் பிரபாகரன். இவை எதுவும் இன்றைய கூமுட்டைகளுக்குத் தெரியாது. திராவிடம் வளர்த்ததே ஈழம் தான்! தந்தை பெரியார் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அவருக்கு இருபது வயது இருக்கும் போதே ஈழத்தில் ‘திராவிடக் குரல்’ எழுந்துவிட்டது. 1899 ஆம் ஆண்டு சபாபதி நாவலர் தனது மொழியியல் நூலுக்கு ‘ திராவிடப் பிரகாசிகை’ என்று பெயர் சூட்டினார். 1903 ஆம் ஆண்டு இலங்கைச் சரித்திர சூசனம் என்ற நூலை ஆ.முத்துத்தம்பி பிள்ளை எழுதினார். இலங்கையை திராவிட நாட்டார் (அதாவது தமிழ்நாட்டவர்) சிங்களத் தீவு என்று அழைத்ததாகத் தான் அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார். திராவிட மொழித் தொடர்புகள் குறித்து வி.கனகசபை ( 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) விரிவாக எழுதி இருக்கிறார். இலங்கையின் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் கல்வெட்டில் பெருமகன், வேலு,மருமகன், ஆசிரியன், வணிகன், திராவிடன் ஆகிய சொற்கள் இருப்பதாக இலங்கை நான்காவது உலகத் தமிழ்மாநாட்டு மலர் (1970) கூறுகிறது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளர்ச்சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவில் (1951) பேசிய தனிநாயகம் அடிகள், ‘இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என்று மொழிவதெல்லாம் திராவிடப் பண்பு, திராவிடநாகரிகம், திராவிட கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே’ என்று பேசினார். (உலகத்தமிழாய்வில் தனிநாயகம்) இந்த நோக்கத்துக்காகத் தான் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை அவர் தொடக்கினார். இதுவே உலகத் தமிழ் மாநாடு நடத்தத் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ்மாநாட்டில் பச்சைப் படுகொலைகளை அரங்கேற்றியது சிங்களம். அதைப் பார்த்து கொந்தளித்தே புலிகள் உள்ளிட்ட போராளிகள் ஆயுதம் தூக்கத் தொடங்கினார்கள். குருமூர்த்தியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இதனை அறிய மாட்டார்கள். நன்றி: முரசொலி கட்டுரையாளர் குறிப்பு: ப.திருமாவேலன் மூத்த பத்திரிகையாளர், கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘ https://minnambalam.com/featured-article/dravidian-tigers-velupillai-prabakaran-and-dravidam/
  2. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 அதிகபட்ச புள்ளிகள் 100 குழு நிலைப் போட்டிகளில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: ஆப்கானிஸ்தான் (AFG) அவுஸ்திரேலியா (AUS) பங்களாதேஷ் (BAN) இங்கிலாந்து (ENG) இந்தியா (IND) நியூஸிலாந்து (NZ) பாகிஸ்தான் (PAK) தென்னாபிரிக்கா (SA) போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  3. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ BAN 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK NZ Select NZ NZ BAN Select BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG Select AFG Select AFG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) AFG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mitchell Starc 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) David Miller 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  4. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 100 போட்டி முடிவு திகதி ஞாயிறு 16 பெப் 2025 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1Rce_f8BLYqqz6IXE5VMYBoNb9zklFymMYdlDoQ1u-cg/edit?usp=sharing ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள். குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) #A2 - ? (2 புள்ளிகள்) 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) #B2 - ? (2 புள்ளிகள்) 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  5. பிள்ளை பிறந்தால் பிள்ளையின் பலனே வேலை செய்யும் ..இது சாஸ்திரம் ...அப்ப அனுரவின் பலன்தான்..வேலை செய்யிது..
  6. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Steven Smith 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Yashasvi Jaiswal 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  7. இனி நாங்களும் புது கட செட் தானேவா🤣 லாபாய்…லாபாய்…தாயட்ட ஹத்தராய்…🤣 இது சீனவின் சதி என நினைக்கிறேன்🤣
  8. அதெல்லாம் முடியாது… நீங்கள் நேசமணி பொன்னையா என எழுதினாலும்…நாங்கள் ஜனகராஜ் போல… நாசமாய் நீ போனியா எண்டுதான் வாசிப்பம்🤣
  9. ஒரு காலத்தில் மிக சொற்பமானவர்கள் இந்த தேவையான யுத்தத்தை யாழில் நடத்தினோம். சீமானுக்கு ஆதரவாக ஒரு பெரும் இராணுவமே தீயாய் வேலை செய்தது. எம்மை போட்டு வாங்கினார்கள். ஆனாலும் சலியாமல் செக்ஸ் சைக்கோ சீமானின் முகமூடியை கிழித்தோம். இப்போ ஒவ்வொருவாக கழண்டு விட(ழ)…. ஒரு சிலர் மட்டுமே எஞ்சியுளார்கள். இதில் நம்மை விட அதிகம் எமது பக்கத்துக்கு உழைத்தவர்…. சாட்சாத் சீமானேதான்🤣. பிகு இவர்களும் கழண்டு விழுவார்கள்.
  10. சைவ குருமார்களின் போராட்டம் சரியா??? வெற்றி பெறுமா ?? அர்ச்சுனா. விரித்த வலையில் மாட்டிகிட்டார்கள். இப்போதுகூட அர்ச்சுனா தேர்தல் பிரசாரம் தான் செய்கிறார். இப்படி வலைகளை விரிந்து வைத்து விட்டால் ஒரு மாதம் இழு படும் கடைசியில் வென்றும். விடுகிறான் மக்கள் ஆதரவும் கூடுகிறது அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ??? 😁
  11. மூன்று பேர் வேகமாக போட்டியில் குதித்திருக்கினம்😀. மற்றையவர்களும் விரைவில் பதில்களைத் தந்தால் போட்டியை நடாத்த உதவியாக இருக்கும்!
  12. அதுவும் அனுர சகோதரயாவின் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்குமா? நாய் எப்படித்தான் வேஷம் போட்டாலும், அதனால் குரைக்காமல் விட முடியாது. இனவாத ஜேவிபி, எத்தனை பெயர்கள் மாற்றி, முகமூடிகள் அணிந்து வந்தாலும், அதன் இனவாத நடவடிக்கைகளை கைவிட மாட்டாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை, அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று கூறியமையுடன் சேர்ந்து இதுவும் ஒன்று.
  13. அந்த வீடியோவை நானும் பார்த்தேன். தேவையற்ற கதை தான். ஆனால் வழக்கு போட்டு எல்லாம் வெல்ல முடியாது. ஏனெனில் பொதுவாக தான் சொல்கிறார். யாரையும் தனிப்பட சுட்டிக் காட்டவில்லை.
  14. 🤣. இந்தியாவில் உள்ள கடவுளும் இலங்கையில் உள்ள கடவுளும் வேறுபடுகிறதா. ??? அல்லது ஒன்றா ???
  15. பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர் Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இராமகிருஷ்ணன் கண்டனம்! இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், ”பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார். தபெதிகவினர் போராட்டம் – கைது! அதன்படி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை முயன்றனர். ஆனால் 200 அடிக்கு முன்னதாகவே அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தொடர்ந்து சீமானுக்கு எதிராக முழக்கமிட்டு அங்கு போராட்டம் நடத்திய தபெதிகவினர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் போராட்டம் நடத்தி வருகிறனர். https://minnambalam.com/political-news/defamatory-remarks-about-periyar-tabethikas-who-tried-to-blockade-seemans-house-arrested/
  16. சிறு விளக்கம் தந்து விடை பெறுகிறேன். மட்டுக்கள் சிலர் நடுநிலை இல்லை என்று வெளிப்படையாக உணர வைத்த காரணத்தால் கழண்டு கொண்டோமே அன்றி, வேறெதுவும் இல்லை. புகுந்து விளையாடுங்கள். உங்கள் களம். 🤗 நன்றி!😎😜
  17. ஐந்து பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டிகளும் ...... தாமரை செவ்வந்தி மல்லிகை (கா) முல்லை ரோசா ராஜபக்சன் 😄 பெயர் சூட்டு விழாவுக்கு எனக்கு "ஸ்பெஷல் அழைப்பு " விடவும்.
  18. கனதியான, அறிந்திடாத பல விடயங்களை உள்ளடக்கிய நல்லதொரு கட்டுரை. தலைவரின், புலிகளின் அறிக்கைகளில் இருக்கும் தெளிவு, பெண்ணியம் தொடர்பானபுரிதல், மூட நம்பிக்கைகள் மீதான விமர்சனம், மதசார்பின்மையின் அவசியம் என்பனவற்றை மீண்டும் அறியும் போது, எத்தனை தெளிவாக தம் கோட்பாடுகளில் இருந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது. தாயகத்தின் இன்றைய நிலவரமும், போக்கும் புலிகளின் கொள்கைகளில் இருந்து முற்றாக விலகி ஓடுகின்றது.. மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டனர்
  19. அவர்கள் இதைக் கடந்துபோய்த் தத்தமது கணக்குகளை நிரப்பிக்கொள்வார்கள். ஏமாற்றிவிட்டு மக்களிடம் போவது குறித்து எந்த வெட்கமோ சூடுசுரணையோ அற்றவர்களான அரசியல்வா(வியா)திகளுக்கு இதெல்லாம் தூசு. ஆனால் மக்களின் நிலை எப்போதும் மண்குதிரையில் ஏறிய நிலையே. மாற்றங்கள் வாக்குறுதிகளில் அல்ல மனங்களில் வரவேண்டும். இந்தியா போய் வந்தபின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிப்பது குறித்துத் தொடர்ந்து பேசுகிறது, விளக்குகிறது அனுர அரசு. தமிழினம் கொஞ்சம் சுதந்திரமாக ஒன்றுகூடுவதும், நினைவேந்துவதும் இந்தியாவுக்கு எரிச்சலாக இருக்கிறது. எங்கே முழுமையாக வடக்குப் பறிபோய்விடுமோ என்று தமிழீழத்தவரைவிட இந்தியாவே அதிகம் அஞ்சுகிறதுபோல் இருக்கிறது. சிங்கள அரசும், தமிழரும் சுமுகமாகி ஒரு அச்சில் ஓடத்தொடங்கினால் இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையே. அதனால், சிங்களமே முன்வந்தாலும் இந்தியா தமிழருக்கு எந்த நல்லதையும் செய்யவிடாது. தமிழ்ச் சிங்கள முரணே தனக்கான சுரண்டலுக்கு வாய்ப்பான வழி. எனவே வழியை மூடக்கூடிய எந்தச் சூழலையும் தடுக்கும். சிங்களத் தலைமைகள் தமிழர் தரப்பைச் சமதரப்பாக ஏற்று ஒரு புதிய அரசியல் பண்பினை துணிவோடு முன்னெடுக்க வேண்டும். அப்போது எல்லாவற்றிற்கும் உலகிடம் கையேந்தும் நிலை மாறும். வளமான நாடு என்பது அர்த்தமுள்ளதாகும். அடுத்த நினைவேந்தல் நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் என்றே நினைக்கின்றேன். தமிழர் தரப்பின் பிரிவுநிலையும், பணத்திற்காக விலைபோகும் தன்மையும், நாம் இனவழிப்புக்குள்ளாகிறோம் என்ற சிந்தனையற்ற போக்கும், எமது 100 ஆண்டுகாலத் துயரத்துக்கான கரணியத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமையின் விளைவுகளே இன்றைய மேலதிக அரசியல் துயரங்களை பிரசவித்து வருகின்றன. இந்த மெய்நிலையை சரியாக மதிப்பீடு செய்யவோ அவை குறித்து ஆரோக்கியமான விவாதங்களை நடாத்தித் தன்முனைப்புநிலைப் போக்கைக் கைவிட்டு ஒன்றுதிரளும் தன்மையது இல்லாத சூழல் தொடருமானால் அநுர மட்டுமல்ல, அனுர தோற்று நாமல் வந்தால்கூட அதனை வரவேற்றுக் காணொளி போட ஒரு கூட்டமும், கைதட்ட ஒரு கூட்டமும் எம்மிடையே தோன்றிக்கொண்டே இருக்கும். அரசியலரங்கில் தமிழினம் தன்னைப் பலப்படுத்தி ஒருநிலை எடுக்கும்வரை இந்த மாயமான்கள் ஊடறுத்து ஓடி விளையாடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே! இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர் தற்போது போலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிஸ்ரா மோனாலிசாவை அவரது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கும்பமேளா விழாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்கும் 16 வயதான மோனாலிசாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர், இணைய நட்சத்திரமாக அவரது பயணம் தொடங்கியது. அவரது தனித்துவமான வசீகரிக்கும் கண்கள் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ விரைவில் வைரலானது. இவரது அழகை வர்ணித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பலர் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற கலைப்படைப்பான மொனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டும் பதிவிட்டுள்ளனர். தற்சமயம் அவர் பிரபலமான நிலையில் கும்பமேளாவிற்கு சென்ற பலரும் மோனாலிசாவை தேடியுள்ளனர். அவரை கண்டதும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றதால் மோனாலிசா மிகவும் சிரமத்திற்கு ஆளானார். இணையத்தில் வெளியான ஒரு வீடியோ, அவர் பல ஆண்களால் துன்புறுத்தப்படுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில் அவள் சிவப்பு நிற சல்வார் உடையணிந்து, தன்னை நெருங்கும் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது. அவளுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அவளை பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார், இன்னும் சிலர் அவளுடன் நெருங்கி பழகவும் அவளைப் புகைப்படம் எடுக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவள் கீழே அமர்ந்து துப்பட்டாவினால் முகத்தை மறைப்பதுடன் குறித்த வீடியோ முடிகிறது. ஃப்ரீ பிரஸ் ஜர்னல் (FPJ) தகவலின்படி, அவரது அதிகரித்து வரும் புகழ் அவரது வணிகத்தில் விற்பனையை குறைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மோனாலிசா தொடர்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்படுகின்றன. அவள் மாலைகளை விற்பது முதல் அவரது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடுவது வரை பேட்டி கொடுப்பது வரை பல காட்சிகள் உள்ளன. https://athavannews.com/2025/1417690
  21. பெரியாரின் துயரம் பெரியாரிஸ்டுகள்தான். கேள்வி கேள், அறிவை பயன்படுத்து என்று சொன்ன பெரியாரின் இஸ்டுகள் அறிவை பயன்படுத்தும் லட்சனம் இதுதான்.… சீமான் அவமானப்படுத்தினதால இவங்க பெரியார பெருமைப்படுத்திருக்கிறாங்களாம்… 😌 பெரியாரை அரசியல் மயப்படுத்துவதாக சொல்லும் திமுக பெரியாருக்கு செய்வது இதைவிட கொடுமை..
  22. உண்மை, என்னை போல் இங்கு பலர் நெஞ்சில் அண்ணன் சைமன் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஆனால் வெளியில் சொன்னால் தாங்கள் ******** அறியப்படுவோமென அமைதியாய் இருக்கிறோம்
  23. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
  24. சார்வாள்...... ஒருகாலத்தில் நீங்க கொண்டுவந்து இங்கே ஒட்டிய ஈழத்து தமிழ்த்தேசிய கூத்தமைப்பு ரீலாலே கூட ஒருஹைகோர்ட்டும் புடுங்க முடியவில்லை. துடைத்து தூரப்போட்டா விட்டீர்கள் அண்ணன் சீமானுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத ராஜபக்ஷே 'A ' டீம் வெத்துவாய் வாய்ச்சவடால் சாணக்கியனிடம் கொடுத்தாவது ஒக்சிசன் ஏத்தலாமா என்று அரண்டு கொண்டு திரியலை ...? தமிழ்த்தேசியம் ஈழத்தில் சிதைந்து அதன் கூடாரமே காலி. இந்தியாவில் காப்பாற்ற கிளம்பிவிட்டீர்கள் போல கவலைப்படாதீங்கள் தமிழ்நாட்டுகாரர்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் போல முட்டை போண்டாக்கள் இல்லை. ஒன்று சீமானின் ஆதரவாளர்களை விட சீமானின் எதிர்ப்பாளர்கள் தான் சீமானிடம் ரொம்பவும் எதிர்பார்க்கினம். வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
  25. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) NZ #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) NZ 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tabraiz Shamsi, 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG
  26. கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..
  27. சொந்த வீட்டு மலசல கூடத்தை துப்பரவு செய்தாலே கெளரவ பிரச்சனையாக நினைப்பவர்கள் ...அதுவும் ஆண் பிள்ளைகளை எட்டியும் பார்க்கவிடமாட்டார்கள்..அம்மாமார்..🤣
  28. தாயகததில் நிகழும் முக்கியமான‌ செய்திகளை மடை மாற்றம் செய்ய இப்படியான செய்திகள் தேவைப்ப்டுகின்றதோ? எல்லாம் அவன் செயல் .
  29. ஓபாமாவின் பின்னர் ஒரு மாற்றம் திடீரென்று வந்தது, பூமியில் ஒரு ice age வந்தது போல............... இது அமெரிக்காவிற்கு மட்டும் இல்லை............ ட்ரம்ப், கோதபாய, மோடி, போரிஸ் ஜான்சன், இன்னும் பலர் என்று ஒரு விதமான தீவிர மற்றும் வெளிப்படையான பிரிவினைகளைத் தூண்டி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் குழுக்கள் உலகெங்கும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு காரணங்களால் இவை வலுப்பெற்றன. இதை ஏற்க மறுத்தவர்கள் ஒதுங்கினர் அல்லது தலைவர்களாக அந்த அந்தக் கட்சிகளிலேயே மேலே வர முடியவில்லை என்று நினைக்கின்றேன். இப்படித்தான் எதிர்காலத் தலைவர்களை இழந்தோம் என்று நினைக்கின்றேன். சில மாதங்களின் முன், ஏதோ ஒரு திரியில் மனிதர்களின் நாகரீக முன்னேற்றம் என்பது ஒரு நீர்க்குமிழியோ என்று ஐயம் வருகின்றது என்று இதையே எழுதியிருந்தேன். மிக இலகுவாக, முன்னே போய்க் கொண்டிருக்கும் நாங்கள் சில தலைமுறைகள் பின்னே போய்விட்டோம். அமெரிக்காவில் மிகச் சாதாரண மனிதர்களிலேயே மிகவும் அற்புதமானவர்கள் இருக்கின்றனர். தலைவர்களாகும் தகுதி கொண்டவர்களும் நிச்சயம் இருப்பார்கள். இங்கிருக்கும் கல்விமுறையும் ஓரளவிற்கு சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கின்றது. ஆனாலும் மக்கள் ஒரு உணர்ச்சிப் பெருக்கில் சிக்கி நிற்கின்றனர், ஒரு போராட்ட காலம் போல, காட்டாற்றில் பலதும் மூழ்குவது போல சில மூழ்கி விட்டன................. மீண்டு வந்து விடுவார்கள் என்பதே என் நம்பிக்கை.
  30. நாம் ஈழதமிழர் என்பதால் அர்ச்சுனாவின் பந்தா கூத்துக்களை நியாயபடுத்த வேண்டியது இல்லை.
  31. இப்படியான கெட்ட யோசனைகள் வரும்போது, கண்ணை மூடி தியானம் செய்தால் அவை அகன்று விடும். ம்ம்ம்….கேஸ் பாரம்🤣. வெட்டி ஒட்டியதாக சொல்லும் ஆள் கைவசம் இன்னும் ஹெவியான ஆதாரம் இருக்கும் போல அதுதான் செக்ஸ் சைக்கோ சீமான் பம்முகிறார்🤣
  32. இந்திய இரசிகர்களால் கிரிக்கெட்டின் தெய்வம் என கொண்டாடும் சச்சினின் எதிர்கால மருமகன் எனும் ஒரு கருத்தும் நிலவுகிறது, கவலையே வேண்டாம் கண்டிப்பாக அணியில் இடம் பிடிப்பார்.
  33. 2009 இல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், கலைஞர், சீமான் உட்பட, எதுவுமே செய்யமுடியாமல் கையாலாகாதவர்களாகத்தான் இருந்தார்கள். ஏனெனில் புலிகளை முழுவதுமாக அழித்தொழிக்க இந்திய மத்திய அரசு இணைத்தலைமை நாடுகளுடன் சேர்ந்து எடுத்த முடிவை மாற்ற ஒருவராலும் முடிந்திருக்கவில்லை. ஆனால் சீமானைப் போல ஒருவரும் தங்களை விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி என இலச்சினையையும், கொடியையும் உல்டா பண்ணி அரசியல் செய்யவில்லை.
  34. பையன் சார், என்னுடைய கருத்துகள் எல்லாம் ஒன்றுமேயில்லை. நான் வெறுமனே பொழுதுபோக்காக எனக்குத் தோன்றுவதை எழுதுகின்றேன். என் கருத்துகளை விட, இங்கிருக்கும் கள நட்புகள் எனக்குப் பெரியது. உங்களின் நட்பும் அதைவிடவும் பெரியது..............❤️. இங்கு எழுதும் பலர் அவர்களின் நிலைப்பாட்டில், கொள்கைகளில் எவ்வளவு உறுதியானவர்கள் என்று அறிந்துள்ளேன். அவர்களின் வாழ்க்கைப் பாதைகளும், அனுபவங்களும், நோக்கங்களும் அப்படியே அமைந்துள்ளன என்று நினைக்கின்றேன். உங்கள் எல்லோரின் மேலேயும் மிக்க மதிப்பும் உள்ளது. நீங்கள் பலர் எழுதும் கருத்துகளை வாசித்து, நீங்கள் சொல்பவைகள் சரியாக இருக்குமோ என்ற யோசனைகள் வருவதும் உண்டு. எவர் மேலும் மனஸ்தாபம் வரப் போவதில்லை...................👍.
  35. நாம் தமிழர் என்பதை தமக்கு சாதகமாக அவர்கள் பாவிக்கின்றார்கள். போர்க்காலத்தில் தெருவில் நிற்கும் களுசடைகள் எல்லாம் வழியில் செல்லும் தமிழரை ஐசி கேட்டு மிரட்டுவதும், வீட்டினுள் நுழைந்து சோதனை இடுவதும் என பல அடாவடிகளில் ஈடுபட்டார்கள். இப்போதும் பொலிஸ் கிளியரண்ஸ் என்றால் தமிழருக்கு வரக்கூடிய இயல்பான பயத்தை பயன்படுத்தி போலிசார் காசு அடிக்கின்றார்கள். என்னதான் நடந்தாலும் சிங்களம் சிங்களம் தான். அது தமிழரிடம் இறங்கி வராது. அவரவர் உங்கள் திறமையை பாவித்து உடுத்த கோவணத்தை உருவாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  36. இல்லை விளங்க நினைப்பவன், நான் தனியார் நிறுவனங்களில் தான் எப்போதும் வேலை. ஆனால் 'அரசவேலை' போல வேலை செய்யச் சொல்லும் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவையை வழங்குவதாக முடிவெடுத்து போய்க் கொண்டிருப்பதால், நான் இன்று வேலையில் இருக்கின்றேனோ அல்லது இல்லையோ என்ற சந்தேகம் இடைக்கிடை வரும்...............🤣. ஒரு பாகைமானியில் எலான் மஸ்க், விவேக் போன்றோர் ஒரு நுனியிலும், சிலர் அதற்கு நேர் எதிரான நுனியிலும், ஆனால் தனியார் நிறுவனங்களிலேயே இருக்கின்றார்கள். இங்கும் அரசவேலை பள்ளிக்கூடத்திற்கு போவது போலவே............. படிக்கத் தேவையில்லை, படிப்பிக்கவும் மாட்டார்கள், ஆனால் மணி அடிக்க உள்ளே இருக்க வேண்டும், கடைசி மணி அடிக்க வீட்டுக்கு கிளம்பவேண்டும். தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் நேரக் கட்டுப்பாடு பொதுவாகக் கிடையாது, அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக சம்பளம், போனஸ், நிறுவனப் பங்குகள், 401கே முதலீடுகள் என்று கிடைக்கும். நிறுவனங்களின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து இவை அமையும். இங்கு அதிபராக ட்ரம்ப் வந்தவுடன், பங்குச்சந்தை ஏறி, இன்று பலர் புதிய 401கே கோடீஸ்வரர்கள்........ லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பு போல இடைக்கிடை தனியார் நிறுவனங்களில் எரிந்து சாம்பலாவதும் உண்டு......🤣. மகளுக்கு முதல் வேலை தனியார் நிறுவனத்திலும், அரசாங்கத்திலும் கிடைத்தது. 'முதல் வேலையே அரசில் வேண்டாம், அம்மா................ வாழ்க்கையில் சில வருடங்களாவது வேலை செய்வது நல்ல அனுபவம். அரசில் பின்னர் சேரலாம். ஆனாலும் உன் இஷ்டம், பிள்ளை...................' என்ற பொறுப்பான ஒரு ஆலோசனையின் பின், மகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.............😜.
  37. Ramanathan Archchun 56m · திட்டமிட்ட ரீதியில் அனுராதபுரத்தில் வழி மறிக்கப்பட்டு வழக்கு போடப்பட்டிருக்கிறது! முதலில் சொன்னார்கள் சீட் பெல் போடவில்லை என்று... போட்டிருப்பதை காட்டினேன்.. அதன் பிறகு சொன்னார்கள் விஐபி லைட்டு எரிகிறது என்று.. நான் சொன்னேன் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று.. அதன் பின்பு வீடியோ எடுக்க தொடங்கினார்கள். சாதாரணமாக போலீசார் வீடியோ எடுப்பதில்லை.. திட்டமிட்டு வழிமறிக்கப்பட்டு தான்.. இந்த வழக்கும் போடப்பட்டிருக்கிறது.. அரசாங்கம் அவர்களுடையது.. போலீசாரும் அவர்களுடையவர்கள்.. காலம் காலமாக ஆட்சிக்கு வருபவர்கள் செய்யும் கூத்தே இது.. இங்கே தமிழர்களாக எமது வகிபாகம் என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. அனுரவிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்தவன் என்ற அடிப்படையிலும், அதன் பின்பு DCC மீட்டிங்களிலும் அபிவிருத்தி தொடர்பாக என் பி பி யின் நடவடிக்கைகளுடன் முரண்பட்டுக்கொண்டபோது முதலாவதாக மெல்லியதாக இந்த தீப்பொறி ஆரம்பித்தது.. யாழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்ற அடிப்படையில் எதற்காக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு இனவாத அரசாங்கத்திற்கு தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம் என்ற கேள்விகளின் அடிப்படையிலும் கருத்துக்கள் பரப்பப்பட்டாலும் நம்பிக்கையின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று நானும் கருதியிருந்தேன். ஆனால், வல்வேட்டி துறையில் நடந்த வாழ்வெட்டுகளின் பின்பும், பருத்தித் துறையில் நடக்கும் தேசிய அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளின் பின்பும் சாவகச்சேரியில் கல்லுப்பிடித்து மூக்குடை பட்டுக்கொண்டதன் பின்பும், பனை டோலர் ஒருவரை நியமித்து பனை அபிவிருத்தி அதிகார சபையை தான்றோண்டித்தனமாக நிர்வகித்ததில் இருந்தும் இவர்களின் அரசியல் சில்லறைத்தனங்கள் என் மனதை வெகுவாக நெரடிக்கொண்டே இருந்தது.. ஆனால், உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் இவர்களின் வெற்றிக்காக போலீசாரின் துணையுடன் இவ்வாறு சில்லறைத்தனமான வழக்குகளை போட்டுக் கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர்களை இரும்புக்கரம் கொண்டு சிதைத்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு மிக நல்ல உதாரணம் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை நடந்த சுதந்திரத்திற்கான போராட்டம்! நிற்க, பழையவற்றை மறந்தவர்களாக ஒரு சமூக ஒற்றுமையுடன் ஒன்றாக வாழலாம் என்று நினைக்கும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் ஒரு வரலாற்றை சொல்லிக் கொண்டே செல்கிறது.. மைத்திரியில் இருந்து அனுரா வரைக்கும் வரலாறுகள் கறை படிந்த கருப்பு காகிதங்களாகவே இருக்கிறது.. வேலை கேட்டுப் போராடிய பட்டதாரிகளை போலீசாரின் அடாவடித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் மூலம் அனுர அரசாங்கம் அவர்களின் உண்மையான முகங்களை காட்டிக்கொண்டே இருக்கிறது.. மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட ரீதியில் மீண்டும் ஒரு குழப்பகரமான நிலைமை இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்கான அனுராவின் ஒரு நடவடிக்கையே ஆகும்.. மன்னார் போலீசாரின் ஒரு சிலர் அது தவிர விமானப்படை கடற்படை தரைப்படை உறுப்பினர்கள் மற்றும் சிஐடி உறுப்பினர்கள் ஒரு சிலர் கூலிப்படைகளாக இயங்கி வருவது தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தும் தெற்கில் ஒவ்வொரு கூலிப்படைகளையும் இரும்பு கரம் கொண்டு சுட்டு நொறுக்கும் அரசாங்கம் வடக்கில் மட்டும் என் பாராமுகமாக இருக்கிறது என்பதற்கான தெளிவான பதில் தமிழ் மக்களை ஒரு பீதியில் வைத்திருக்க வேண்டிய தேவை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்பதே ஆகும்.. இதன் ஒரு தெளிவான பதில் தான் தமிழ் மக்களின் அரசியல் குரல்களை வழக்குகளைக் கொண்டு நெரிப்பது.. மன்னாறில் இருந்து நான் பயணப்பட்டு கொண்டபோது தெளிவாக ரம்பா வில் மறித்து ஒரு லைற் இட் காக திட்டமிட்ட ரீதியில் வழக்கினை போட்டிருக்கிறார்கள்.. இங்கே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் லைட் பூட்டியபடி வாகனம் செலுத்தியது தான் குற்றம் என்றால் அதை அவர்கள் தெளிவாக சொல்லி குற்றமாக எழுதி இருக்கலாம்.. ஆனால் மணித்தியால கணக்கில் எனது வாகனத்தை மறித்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவமதித்து அதனை வீடியோ எடுத்து வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.. 25ஆவது வழக்காக இதனை நான் கருதவில்லை.. 2500 வழக்குகளை போட்டுக் கொண்டாலும்.. என் கல்லறைகளில் இருந்தும் என் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனாலும், அரசியல் பழிவாங்கல் என்பது சாதாரண விடயம் அல்ல.. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கத்தில் கூட என்னை பல தடவை சிறையில் அடைத்து குடல் வளையை முடியும் வரை நெரித்துப் பார்த்தது அரசாங்கம்.. அங்கேதான் நான் ஒரு விடயத்தை சொல்கிறேன்.. நான் வென்று கனக காலம்.. இவற்றையும் கடந்து ஒரு சாதாரண நாளாக காலை வணக்கம் இந்த முகப்புத்தகத்திலிருந்து உங்களுக்கு வரும்.. இவற்றிற்கெல்லாம் பயந்து ஓடுவதற்கு நான் உயிருக்கு பயந்தவனோ அல்லது கோழையோ அல்ல.. அவனைத் திட்டமிட்ட ரீதியில் கொன்று இருக்கிறார்கள் என்று செய்திகளை சில வேளைகளில் நீங்கள் கேட்கலாம்.. ஆனால் அவன் தோற்று விட்டான்.. அடுத்த காலை பின் வைத்து விட்டு விட்டான் என்ற வரலாறு.. இராமநாதன் அர்ச்சுனாவின் அகராதியில் இருக்காது! ஏனெனில் இந்த அகராதி மனதின் வலிமை கரங்களால் எப்பொழுது எழுதப்பட்டு விட்டது! ஒன்றல்ல 25 அல்ல ஆயிரம் வழக்குகளை போட்டுக் கொண்டாலும் என்னோடு என் உறவுகள் நிற்கும் என்ற நம்பிக்கையில் என் பாதையில் நான் இருப்பேன்.. தோற்ற இனம் அல்ல என் இனம்.. வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட இனமே தமிழீழத் தமிழரின் இனம்! என் தலைவன் தோற்கவில்லை.. உலக நாடுகளே அவனை வஞ்சித்து வஞ்சகத்தால் தோற்றுக் கொண்டது.. என் தலைவனை காற்று உட்கொண்டிருக்கலாம்.. ஆனால் தோற்ற உங்களின் எக்காளச் சிரிப்பு.. இடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு கருணாவின் பெயரோடு எழுதப்பட்டு கொண்டே இருக்கும்.. நீ எதிரியாக இருந்தாலும்.. என் தலைவனின் பெயரை சொல்லிப்பார்.. அப்போது தெரியும் தமிழன் யார் என்று.. நான் மீண்டும் வருவேன்.. அதுவரை காத்திருங்கள்!
  38. வைப்பு தொடர்ந்த வழக்கில் இருந்து தப்புவதற்க்காக வைவ்வை (wife) பொலிஸ் நிலைய படி ஏற வைத்த மானஸ்தந்தான் செக்ஸ் சைக்கோ சீமான்🤣.
  39. காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு வாறேன் மச்சாள் உன் கைக்கு மருதாணி பூச மறக்காமல் அது கூட வேண்டி வாறேன் முத்து வைத்த மூக்குத்தி உனக்காய் மறக்காமல் மச்சாள் வேண்டி வாறேன் பார்த்திருப்பேன் உன்னை படலையில் மச்சான் பார்த்து பத்திரமாக வந்து நீ சேரு ஆசையாய் நீ உண்ண அலுவா அரைக் கிலோ நேசமாய் உனக்காய் வேண்டி நான் வாறேன் அளவாக சக்கரை போட்டு நான் மச்சான் ஆடிக் கூழ் உனக்காய் காச்சி வைப்பேன் ஊரிலே எல்லோரும் சுகமாடி பிள்ளை உனக்காக நான் வச்ச மாமரம் பூக்குதா காச்சுக் குலுங்குது என்னைப் போல் மச்சான் கறுத்தக் கொழும்பான் உனக்காக இருக்கு நேசமாய் நீ வந்து பாசமாய் உண்ண பழுத்துக் கிடக்குது மாங்கனி மச்சான் பார்த்திருப்பேன் உன்னை பகல் இரவாக காத்திருப்பேன் மச்சான் கண்ணும் உறங்காமல் அம்மன் திருவிழா தேருக்கு வா மச்சான் ஆசையாய் இருவரும் சேர்ந்தே போவோம் அட மச்சான் ஆடி ஆடி வரும் அம்மன் அழகை கூடி கூடி நின்று நாம் பாடி ரசிப்போம் பா.உதயன் ✍️
  40. ஒலியும் ஒளியும்….. முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம். எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயுதம், மோதிரம் எல்லாத்தையும் சேத்து nanogramஐ மில்லிகிராமாக்கி மொத்தமா நிறுத்து வித்துக் குடுக்க அப்பா வெளீல இருந்து வாற ஒரு ஆளைப்பிடிச்சு duty free இல இருந்து ஒரு மாதிரி கலர் ரீவீ ஒண்டை வாங்கித் தந்தார். கொழும்பில இருந்து வந்த பெட்டியை ராகு காலம் தவித்து நல்ல நேரத்தில உடைப்பம் எண்டு வெளிக்கிட “பெட்டியும் உள்ள இருக்கிற ரெஜிபோமும் கவனம்” எண்டு அம்மா தீரக்கதரிசனமாச் சொன்னது பிறகு இடம் பெயரேக்க உதவிச்சுது. கால நேரம் பாத்து பெட்டியை உடைச்சாலும் டிவி ஓடினதிலும் பாக்க பெட்டீக்க இருந்த நாள்த் தான் கூட. “ Sony trinitron ” பெட்டியை உடைச்சு puzzle மாதிரிப் பாத்து பாத்துப் பொருத்தீட்டு போட வெளிக்கிட “கரண்ட் அடிக்கும் கவனம்” எண்டு அம்மம்மா சொன்னதால செருப்பையும் போட்டுக்கொண்டு on பண்ண “ஸ்ஸ்ஸ்” எண்ட சத்தத்தோட கோடுகோடா கலர் மழை பெஞ்சுது. VHF , UHF அதோட இருக்கிற எல்லா நம்பரையும் மாறி மாறி அமத்த தொடர்ந்து மழை மட்டும் பெய்ய முகம் தொங்கிச்சுது. அன்ரனாக் கம்பியை இழுத்து விரிச்சு திருப்ப ஒரு மாதிரி உருவம் வரத் தொடங்கிச்சுது. வந்த உருவம் நிக்காமல் கடகடவெண்டு மேல கீழ ஓடிக் கொண்டிருந்தச்சுது. முன்னால இருந்த லாச்சி மாதிரி இருந்த பெட்டியைத் துறந்து இருந்த நாலு உருட்டிற switch ஐயும் உருட்டிப் பழகி, பிறகு ஒருமாதிரி மேல கீழ ஓடிறதை நிப்பாட்டி, பிறகு ஒவ்வொண்டாப் பாத்து, ஒண்டு வெளிச்சம் கூட்டிக் குறைக்க மற்றது contrast எண்டு கண்டு பிடிச்சம். என்னடா இன்னும் கிளீயர் இல்லை எண்டு ஏங்க அன்ரெனாவை உயத்திக் கட்டினாத்தான் வடிவா எல்லா channelம் இழுக்கும் எண்டு சொல்ல அடுத்த budget ஓட அப்பா வரும் மட்டும் வெறும் மழையையும் இடைக்கிடை வாற நிழலையும் பாத்துக்கொண்டிருந்தம். ஒரு மாதிரி அப்பா ஓமெண்ட எங்கயோ ஒரு hardware கடைக்காரன் அன்ரெனா குழாய் விக்கிறதைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட வந்தவன் ஒரு குழாய் காணாது கிளீயரா வழாது எண்டு ரெண்டைப் போட்டு உயரத்தையும் விலையையும் கூட்டினான். கம்பிக்கு மேல கம்பி வைச்சுக்கட்டி அதில மேல பெரிய VHFஅன்ரெனாவைப் பூட்டி, கீழ குறுக்கா சின்ன UHF அன்ரெனாவையும் கட்டி, இடி விழாம இருக்க மண்ணுக்கு பெரிய இரும்புக்குழாயைப் புதைச்சு அதுக்குள்ள இந்தக் குழாயை இறக்கி அது ஆடாம இருக்க ஒரு ஆணியைப் பூட்டி, உயத்தின குழாயில இருந்து மூண்டு கம்பியை இழுத்து, தென்னையில ஒண்டு, பின் பத்தி தீராந்தீல ஒண்டு, முன் முகட்டில ஒண்டு எண்டு கட்டினம். உருட்டிப் பிரட்டி ஒவ்வொரு channel ஆ வரத் தொடங்க அண்டைக்கு முழுக்க பிறவிப் பெரும்பயனை அடைஞ்ச மாதிரி முழு நாளும் ரீவி மட்டும் பாத்துக் கொண்டிருந்தம். காலமை நிகழ்ச்சி தொடங்க முதல் கலர் கலரா வாற வட்டத்தைப் போட்டு “கூ” எண்ட சத்தம் வர போடிற TV பத்துமணிக்கு நமோ நமோ தாயே எண்டு முடியும் வரை on இல தான் இருந்திச்சுது . விளங்காத பாசையிலும் advertisement ஐக்கூட ஆவெண்டு பாத்தம்; Pears குளுகுளு baby, இவர்கள் சகோதரிகளா இல்லை தாயும் மகளும் எண்டு வந்த Rexona soap , இலங்கையில எல்லா வாகனமும் இங்க தான் விக்கிறது எண்டு நம்பின இந்திரா டிரேடர்ஸ், இடைக்கிடை தமிழில வாற அல்லி நூடில்ஷ்ஷும் பப்படமும், நந்தன விந்தன, திமுது முத்து எண்டு விளங்காதை எல்லாத்தையும் பாடமாக்கினம். கதைக்காத Tom& Jerryம், கூவிற woody wood peckerம், நாய் வளக்காத குறைக்கு “ லசியும்” பின்னேரம் விளையாட முதல் பாத்திட்டு. பிறகு 7.30க்குப் புட்டுப் பிளேட்டோட வந்திருக்க, knight rider, Battlestar galactica, Blake seven, Big foot and wild boy, Geminan, Automanம் இரவில பத்து மணிக்கு A- team, Strasky and Hutchம் இடேக்க ஓடிற Different strokes எண்டும் கொஞ்ச நாளா ஒடி ஓடிப் பாத்தம். அடிபாடு தொடங்க, முதலில கட்டி ஒளிச்சு வைக்கிறது ரீவீயுத் தான். ஒவ்வொரு முறையும் இடம் பெயரேக்க மட்டுமில்லை , பள்ளிக்கூடச் சோதினை எண்டாலும் அம்மா அதை மூடிக்கட்டி வைக்கிறதில குறியா இருந்தா. அம்மாக்குப் பிறகு அவவின்டை சீலையைக் கட்டினது எங்கடை ரீவீயும் settyயும் தான். அப்பிடிச் சோதினை முடிஞ்சு இப்ப holiday தானே எண்டு கடவுள் இறங்கி வந்தாலும் “கரண்ட்” எண்ட பூசாரி அடிக்கடி வரத்தைத் தடுத்திடுவார். அப்ப எங்கடை வாழ்க்கையில ரீவீயிலேம் தூரதரிசனமா இந்தியா மெல்ல உள்ள வந்திச்சுது. “ வாசிங் பௌடர் நிர்மா” வில வாற வெள்ளைச்சட்டைப் பிள்ளையும், “வாய்மணக்க, தாம்பூலம் சிறக்க” வந்த நிஜாம் பாக்கும் , வயலும் வாழ்வும் எண்டு எங்கடை வீடுகளுக்கு வந்த சேராத வேளாண்மையும் பொறுமையைச் சோதிக்க, வெள்ளிக்கிழமை ஓளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை படமும் படிப்பு டைம்டேபிளிலையே சேந்து இருந்திச்சுது. கடவுளையே கிட்டப்பாக்க காசுகேக்கிற ஊரில இது மட்டும், பேருக்கேத்த மாதிரி தூரத்தில இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் இலவச தரிசனம் இடைக்கிடை கிடைச்சுது. ரேடியோவில வரதாச்சாரியாரின் வர்ணனை மட்டும் கேட்டே matchஐ ரசிச்ச எங்களுக்கு ரீவீல match அதுகும் 83 World Cup வர சிறீக்காந்தும் , கப்பில்தேவும் இந்தியாவும் favorite ஆ மாறத் தொடங்கிச்சுது. வாய்கெட்டினது வயித்துக்கு எட்டாத மாதிரி, மண்டைதீவில அடி விழ உருவம் அருவமாகி பிறகு கொக்காவிலும் போக ஒன்றாய் தெரிஞ்சது பலவாய் மாறித் தெரிஞ்சு, கடைசீல சோதியாவே போட்டுது. அதோட பாதையிருந்தும் பயணத்தடைகள் கூடி, தியட்டர் இருந்தும் இல்லாமல் போக ஊர் உலகம் உய்ய எண்டு தான் பாத்த படத்தை அக்கம் பக்கச் சனமும் பாக்க எண்டு தொடங்கிச்சுது Local ஓளிபரப்பு. கொய்யாத்தோட்டத்தில றீகல், கச்சேரியடி செல்வாஸ், கோண்டாவில் expo, எண்டு ஊருக்கு ஒரு கோயில் மாதிரி ஒளிபரப்புக்களும் தொடங்கிச்சுது. சும்மா தொடங்கினவங்கள் அன்ரனா இருந்த வீடு வழிய போய் வசூலிக்கத் தொடங்கினாங்கள். காசு வாங்கிற கதை தம்பியவைக்குத் தெரிய வரக் கட்டணமும் கூடிக் படங்களில கட்டுப்பாடும் வரத் தொடங்கிச்சுது . கொஞ்சம் கொஞ்சமா கோட்டைக்குள்ள விழீற அடி கூடத் தொடங்க அங்க இருந்து திரும்பி வாற கீழ்வீச்சுச் செல்லடியோட மேல்வீச்சு பொம்மரடியும் சேர அம்மம்மா அடம் பிடிச்சா அன்ரனாக் குழாயை மேல இருந்து பாத்தா காம்ப் எண்டு அடிச்சுப் போடுவாங்கள் இறக்குவம் எண்டு. நல்ல வேளை நாங்க குழாயை இறக்க முதல் பக்கத்து நாட்டில இருந்து வந்த நிவாரணப் பொதிகள் இறங்க, குழாயை இறக்காமல் தப்பிச்சம். ஏங்கின நிவாரணங்களும் கிடைக்காம உள்ளூர் அகதியாய் திரிஞ்சிட்டு திருப்பி வீட்டைவர, இல்லாமல் இருந்த கரண்டும் திரும்பி வர, பனிக்கு மட்டும் இழுத்த தூர தர்சன் தொடந்து வடிவா , கிளீயரா இழுக்க அதுக்குப் பிறகு ராமாயணமும் மகாபாரத்துக் கதாவும், எங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. Term test க்கே TV ஐ மூடி வைக்கிற அம்மா அண்ணான்டை A/Lக்கு ஒரேடியா அந்த வருசம் மூடிக் கட்டி வைச்சதைப் பிறகு துறந்தா TV மட்டும் இருந்திச்சுது வேலை செய்யுதா எண்டு பாக்க கரண்டும் இல்லை இழுக்கக்கூடிய channelம் இருக்கேல்லை. அதுக்குப் பிறகு வேற ஒண்டும் கிடைக்காமல் ஓமர் முக்தாவும் ஒளிவீச்சும் சிறீதர் தியட்டரில பாக்கத் தொடங்க மூடிக்கட்டின TV மூலைக்குள்ளயே இருந்திச்சுது. படத்தை பாக்க ஒரு மாதிரி வந்த புதுத்தணிக்கை குழுவின் அனுமதி வர, வாடைக்கு Water pump generator,deck , cassette எல்லாம் வாடைக்கு குடுக்கிறது பிஸ்னஸா மாறிச்சுது. மூண்டு மணித்தியாலப் படத்தை தணிக்கை எண்டு வெட்டிக் கொத்தி ரெண்டு மணித்தியாலமாத்தர, அந்த ஒலியும் ஒளியும் இல்லாத படங்களை பாக்கத் தொடங்கினம். வருசத்துக்கு ஒருக்கா ரெண்டு தரம் கஸ்டப்பட்டு காசு சேத்துப் படம் பாக்கிறது பொங்கல் வருசப்பிறப்பு மாதிரித் தான் எங்களுக்கு ஒரு entertainment. மச்சான் என்ன மாதிரி இந்தமுறை விடுதலைக்க படம் பாப்பம் எண்டு தயாளன் சொல்ல முதலே காங்கேயன், பாஸ்கரன், எண்டு ஒழுங்கேக்க இருந்தவன், வந்தவன், எல்லாம் என்னைக் கழட்டிப் போட்டு அண்ணரோட கூட்டுச் சேந்தாங்கள் எப்பிடியும் ரெண்டு ரஜனி படம் போடோணும் எண்டு. ஒருமாதிரி பொருள், இடம், காலம் எண்டு எல்லாம் சரிவந்து படம் பாக்கவெண்டு வெளிக்கிட்டம். “படம் பாக்க அவங்கட்டை permission வேணுமாம், இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்களாம் எண்டு தொடங்கேக்கயே ஒண்டு வெருட்ட இஞ்சினை சாக்காலை மூடிச் சத்தம் கேக்காமப் பண்ணீட்டு வந்திருந்தம். “ தூளியிலே ஆட வந்த “ குஷ்புவைப் பாப்பம் எண்டு ஆவலா இருக்க ஓடின water pump திடீரெண்டு நிண்டிட்டு. தெரிஞ்ச அறிவில பிளக்கை கழட்டித் துப்பரவாக்கி போட இன்னும் கொஞ்சம் ஓடீட்டு திருப்பியும் நிக்க, வாடைக்கு தந்தவனை தேடிப் பிடிச்சு கொண்டு வந்தம். சாக்கால மூடின எப்பிடி காத்து வரும் புகையும் போகும் எண்டு பேசீட்டு , “சோக்கை இழுக்காதேங்கோ, காபிரேட்டரை கூட்டாதேங்கோ, எண்ணையை மட்டும் விடுங்கோ” எண்டு instructions குடுத்திட்டுப் போனான். சிவராத்திரி மாரி விடிய விடிய இருந்தும், படுத்தும், உருண்டும் குடுத்த காசுக்கு ஐஞ்சாறு படம் பாத்தம். ஒவ்வொருக்காலும் படராத்திரி முடிஞ்சாப்பறகு கொஞ்ச நாளைக்கு விகடன் விமர்சனக்குழுவுக்கும் மேலால விவாதங்களும் வியாக்கியானங்கள் நடக்கும். இதில சிலர் இன்னும் இளையராஜா, பாரதிராஜா எண்டு what’s appஇல பழைய விவாதங்களை தொடருராங்கள். 95 இல இடம்பெயர இதெல்லாம் காணாமல் போய் திரும்பி வந்து காணாமல் போனோர் பட்டியலில ஆக்களைத் தேடின கூட்டத்தில அம்மா ரீவீயையும் சேத்துக் கனகாலம் தேடித் திரிஞ்சவ. குஷ்பு மெலிஞ்சு போய், ரஜனி ரோபோவாகி, சுமனும் மோகனும் வில்லனாகி, அம்பிகாவும் ராதாவும் குண்டாகி, குள்ளக்கமல் கிழவனாகிப் போனதாலயோ இல்லாட்டி இப்பத்தை ட்ரெண்ட்க்கு நான் இன்னும் மாறாததாலையோ தெரியேல்லை, பெரிய ரீவீயும், எல்லாச் சனலும் இருந்தாலும் ஏனோ ஒளியும் ஒலியும் இல்லாமப் படம் பாத்த மாதிரி சந்தோசமான படம் ஒண்டையோ , படம் முடிய நல்ல வியாக்கியானங்களையோ ரசிக்கக் கிடைக்கேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  41. அண்ணன் சீமானுக்கு இப்போது தான் ஈ.வே.ராவை பற்றிய உண்மைகள் தெரியவந்திருக்கிறது. 60 வயதானாலும் அவர் குழந்தைப் போல் ஒவ்வொன்றாக கற்று தெளிந்து வருகிறார். 80 வயதிற்குள் அண்ணாமலை கூட்டாளிகளிடம் மிச்சத்தையும் கற்று சனாதானமே தமிழினத்தை மீட்கும் கோட்பாடாக ஏற்று நம்மினத்தை மீட்பார்!!! மீட்பர் வருகைக்காக ஆமை கறியோடும் 50 கிலோ பன்றியோடும் காத்திருப்போம் செம்மறி ஆடுகளாய்!!!
  42. 🤣 பிற்போக்குத்தனத்தை கண்டதும் உனக்கு ஜிவ்வென்று ஏறுகிறதா? நீயும் என் நண்பனே🤣 - தோழர் மஸ்கு - ——— எனக்கு அண்ணாமலை திமுக சிலீப்பர் செல் அல்ல சுவிசைட் ஸ்குவாட் என்ற சந்தேகம் உள்ளது. எப்ப சீமான் வாயை திறந்தாலும்…. அண்ணாமலை பின்னாலயே வந்து “நானும்தான், எனக்கும்தான்” என கூறி…சீமான் ஆர் எஸ் எஸ் கூலி என்பதை போட்டுடைக்கிறார்🤣.
  43. பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு, கொந்தளித்த தி.க.வினர் - பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு பட மூலாதாரம்,@NAAMTAMILARORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரின் சர்ச்சை கருத்து குறித்து வியாழக்கிழமை அன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சீமான். பெண்களை அவமதிக்கும் வகையில் பெரியார் பேசினார் என்று கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேள்வி எழுப்பியபோது, "அரசு மற்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது போன்று பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரங்கள்," என்று குறிப்பிட்டார். சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? பெரியார் தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பல கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டி பேசிய சீமான், "பெரியார் தமிழ் மொழியை இப்படிப் பேசிவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தியலை இதே மொழியில்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்," என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேற்கொண்டு பேசிய அவர், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பிறகு அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாகப் பேசுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். முன்பு பெரியாரை தன்னுடைய தாத்தா என்று கூறியது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, "முன்பு பெரியார் பற்றிய தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தற்போது தொடர்ச்சியாகப் படித்து வரும்போது எனக்கு அந்தத் தெளிவு கிடைத்துள்ளது" என்றும் கூறியுள்ளார் சீமான். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 மணி நேரங்களுக்கு முன்னர் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை (ஜனவரி 9), தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கூட்டமாக வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடியைப் பறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூறியதாக பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பியதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். சென்னை மட்டுமின்றி, தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 'சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, விஜய் கட்சி தொடங்கிய பிறகு, சீமானின் பேச்சுகள் அதிதீவிரமாக இருப்பதை உணர முடிவதாக சுபகுணராஜன் தெரிவித்தார் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திராவிடர் கழக வட்டாரங்கள், "சீமானின் கருத்து குறித்து அதிகம் விவாதிக்க ஒன்றும் இல்லை. அவரின் பேச்சுகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்ளட்டும்," என்றும் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், "தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்பு திராவிடம் குறித்து அதிகமாக அவர் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் அவரின் சமீபத்திய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கின்றன," என்றார். ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர், தங்களால் இயன்ற அளவு பெரியாருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்ற காரணத்தால் தற்போது சீமானை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், "விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகமான பிறகு, சீமானின் ஆதரவும், வாக்கு வங்கியில் சரிவும் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால், இங்கு அரசியல்மயமாக்கப்படாத வாக்காளர்களைத் தன்னுடைய கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்," என்று கூறினார். "சீமானின் கருத்துகள் அனைத்தும், சமூகத்திற்கு எதிரானது. அவருடைய பாணியில் அவருக்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் இதற்கு சட்டரீதியாக நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றும் சுபகுணராஜன் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சீமானின் பேச்சுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதியன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பேசாத ஒன்றைப் பேசியதாக சீமான் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீமான் அவர்கள் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "பொதுவெளியில் பேசும்போது சிந்தித்துப் பேசுங்கள். வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதத்தில் சீமான் பேசிய பேச்சு அநாகரிகமானது. முகம் சுளிக்கும் வகையில் பேசி இருப்பது வேதனையளிக்கிறது," என்று லயோலா மணி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ygy52n899o
  44. அடுத்ததாக Elon Musk செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தருவார்😂 அண்ணாமலை இனித்தான் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கப்போகின்றார்! அதுவும் நல்லதுதான்🤣
  45. சீமானின் கருத்து சரி.. பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன்.. சீனுக்குள் வந்த அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Thursday, January 9, 2025, 16:33 [IST] சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரியார் எந்த புத்தகத்தில் அப்படியொரு கருத்தை கூறியுள்ளார் என்பதை வெளியிடுவேன் என்று கூறிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Also Read முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து, யார் அந்த சார் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கான ஆதாரம் எதிர்க்கட்சிகளிடம் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கலாம். அதேபோல் மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர், திமுக உறுப்பினர் அல்ல. அவர் ஒரு திமுக ஆதரவாளர் தான். அதனை நாங்கள் மறுக்கவில்லை என்று தெரிவித்தார். 1950ஐ விட மோசமான நிலைக்கு சென்ற India! | Oneindia Tamil இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள், ஞானசேகரன் யார் என்றே தெரியாது. அவர் திமுகவில் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனால் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அனுதாபி என்று ஒரு வார்த்தையை கூறியுள்ளார். இதனால் முதல்வரின் இந்த செயல்பாடு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இறங்கி இருப்பதாக பார்க்கிறேன். திரும்ப திரும்ப கேட்பது என்னவென்றால், காவல் ஆணையர், அமைச்சர் ரகுபதி மற்றும் முதல்வர் என்று அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள் என்பது தான் என்று தெரிவித்தார். Recommended For You தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பொறுத்தவரை, மத்திய அரசு அங்கு சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், அது மாநில அரசின் பொறுப்பில் உள்ளது. அதனால் மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்பந்திக்க போவதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் மதுரையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் பேரணியை பார்க்கிறோம். அவர் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததன் விளைவு பேரணி நடந்துள்ளது. இனியாவது முதல்வர் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் கூறிய சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு, பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை கூறியுள்ளார்.. எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவறுப்பு வந்துவிடும். சீமான் அண்ணனை தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/bjp-state-president-annamalai-supports-naam-tamilar-party-head-seeman-for-the-controversial-comment-669835.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel டிஸ்கி B to A, A to B… BABA that’s what we say…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.