Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    88827
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3127
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39346
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46979
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/01/25 in Posts

  1. ஐபிஎல் 2025 இன் 13வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், நிக்கொலஸ் பூரனையும் அயூஷ் படோனியையும் தவிர எவரும் 40 க்கு மேல் ஓட்டங்கள் எடுக்காததாலும், 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது. பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது. இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள். பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள். http www. Lusan .com.
  3. "புதிய ஆரம்பம்" யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர். அப்படியான சூழல் காலம் செல்லச் செல்ல மாற்றம் அடைந்து கொண்டு வந்தது. என்றாலும் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளைச் செய்வதும் தொடர்கிறது. இந்த யாழ்ப்பாண சூழலில் தான், நெல் வயல்களின் அமைதிக்கும் பனை மரங்களின் ஓசைகளுக்கும் மத்தியில் காவியா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த காவியாவின் நாட்கள், வாழ்வதற்கான போராட்டத்தால் நிரம்பி நிறைந்தது. அவளது பெற்றோர் முழு நேரம் வயல்களில் உழைத்தும் சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டினார்கள், அதே சமயம் காவியா தங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னேற்ற வாழ்க்கையைக் கனவு கண்டாள். அது தனக்கும் தன் சமூகத்துக்கும் ஒரு 'புதிய ஆரம்பம்' தரும் என்று திடமாக நம்பினாள். பாகுபாடு மற்றும் கஷ்டங்களை தன் சமூகமும், தன் குடும்பமும் எதிர்கொண்ட போதிலும், காவியா அந்த தலைவிதியை மாற்றுவதற்கான கடுமையான உறுதியுடன் இருந்தாள். அதற்கு கல்வியே அவளுடைய நம்பிக்கையின் விளக்காக இருந்தது. "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கல்வியின் முன்னுரிமை பற்றி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 'நான்கு பிரிவுகளில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்' என்ற பொன்னான வாசகம் அவள் மனதில் ஒரு தெம்பைக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, "மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு" என்ற திருவள்ளுவரின் 'உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்கா விட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்ற வரை விட ஒருபடி தாழ்வே' என்ற அறிவுரை அவளை மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும், அவள் தனது கிராம பள்ளியை அடைய தூசி நிறைந்த மண் பாதைகளில் வெறுங்காலுடன் நடந்தாள். அவளுடைய அறிவுப் பசி மற்றும் அவளுடைய அர்ப்பணிப்பு இவைகளைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தனக்கு கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தாள். அவள் மனதில் பதிந்த, எப்படியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற அவா, அவளுக்குள் ஏற்படுத்திய தைரியம், வெற்றியின் கதைகளை திறந்து அவளது அபிலாஷைகளைத் தூண்டத் துணையாகத் நின்றது. "காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” 2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறிய 'சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம்' பொதுவுடமைக் கருத்தை அவள் முணுமுணுக்காத நாள் ஒன்றும் இல்லை. ஒரு நாள், காவியாவின் திறனை உணர்ந்த, ஒரு நல்ல உள்ளம் கொண்ட அவளின் வகுப்பு ஆசிரியை, அவள் மேல் விசேட கவனம் செலுத்த தொடங்கினார். இந்த ஆசிரியையின் வழிகாட்டலாலும் அவர் கொடுத்த ஊக்கத்தாலும், காவியா தனது படிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மிகவும் சிறந்து விளங்கினாள். அதனால் அவளது கல்வித் திறமை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பயணச் சீட்டாக அமைந்தது. தளராத உறுதியுடன் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, காவியா கொழும்பில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவுக்கு, முழு உதவித்தொகையைப் பெற்று படிக்கச் சென்றாள். தன் கிராமத்தையும், தன் வீட்டின் பரிச்சயத்தையும் விட்டுவிட்டு, இந்தப் புதிய அத்தியாயத்தை கொஞ்சம் நடுக்கத்துடனும், ஆனால் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொண்டாள். பல்கலைக்கழக வாழ்க்கையில் பல சவால்கள் அங்கும் சந்திக்க நேரிட்டாலும் காவியா, அவ்வற்றை எல்லாம் தாண்டி, அவள் இதயத்தில், நெடுஞ்செழியன், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் விதைத்த விதைகளின் வேர்களில் இருந்து வலிமையைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் விரைவில் அவளது பேராசிரியர்கள் மற்றும் சகாக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. "புதிய ஆரம்பம்" ஒன்று அவளைக் மறைத்துக் கொண்டு இருந்த சாதி என்ற முகில்களைக் கிழித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தது. என்றாலும் பொன்னம்பலம் இராமநாதன், செல்லப்பா சுந்தரலிங்கம் போன்ற படித்த தலைவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களை அவள் மறக்கவில்லை. எனவே தனது புதிய ஆரம்பத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக தந்திரமாக எடுத்து வைத்தாள். ஆகவே தன்னைத் திடப்படுத்தவும், தன்னை சூழ்ந்து இருப்பவர்களை தயார் படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், காவியா சமூக செயல்பாட்டின் மீதான தனது ஆர்வத்தை தனக்குள் பெருக்கினாள். எனவே ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். இது இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு வரை சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளின் தடைகளைத் தாண்டிப் பரவி, பலரைத் அது தூண்டியது. உயர்தரத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, காவியா ஒரு புதிய நோக்கத்துடன் தனது யாழ்ப்பாணத்துக்கு திரும்பினாள். அவள் தனது கடமை நேரம் தவிர, நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு பயிற்சி கல்லூரி நிறுவி, அந்த குழந்தைகளுக்கு மேல் அதிகமான கற்றலுக்கான உதவி வழங்கி, அவர்களின் அறியாமையின் சங்கிலிகளை உடைத்து அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோலை வழங்கும் 'புதிய ஆரம்பத்தை' ஏற்படுத்தினாள். இது, இந்த அவளுடைய கதை யாழ்ப்பாணத்தின் குடாநாட்டில் மட்டும் இன்றி, இலங்கை முழுவதும் எதிரொலித்து, எண்ணற்ற இளம் உள்ளங்களின் இதயங்களில் நம்பிக்கையின் தீப்பொறிகளைப் பற்றவைத்தது. காவியாவின் விடாமுயற்சி மற்றும் வெற்றியின் கதை சமூக மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாறி, "புதிய ஆரம்பம்" இலங்கையில், குறிப்பாக தமிழர் சமூகத்தில் தோன்றியது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது "புதிய ஆரம்பம்" மட்டுமே!. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. 🤣............... எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கேள்வி மனதுக்குள் இருந்தது, அண்ணா............ அதை எப்படி வெளியால் கேட்பது என்று கொஞ்சம் சங்கோஜமாகவும் இருந்தது............. கோஷான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன் என்றும் சொல்லியிருந்தார்.............🤣.
  5. ஆறு நாம் லண்டன் வந்து ஒரு வாரம் வரையில் அவர்கள் வீட்டில் இருக்க வரவில்லை. அவர்களைக் கூட்டிவந்தவரிடம் கேட்டால் அவர்கள் சுண்ணாகத்தில் சகோதரி வீட்டில் இருந்தார்களாம். அடுத்த கிழமை வருவார்கள் என்கிறார். வீட்டில் ஆட்கள் இருக்கவேண்டும் என்றுதானே வாடகைக்குக் குடுத்தது. இதென்னடா இவர்கள் என்கிறேன். எல்லாத்துக்கும் நுணுக்கம் பாக்காதை. அவர்கள் வருவார்கள்தானே என்று மனிசன் வக்காலத்து வாங்குகிறார். இரண்டு வாரங்கள் செல்ல எல்லோரும் பொருட்களையும் லாண்ட் மாஸ்டரில் கொண்டுவந்து வந்து இறங்குகிறார்கள். ஒரு ஓட்டோவும் நிற்க உங்கள் கணவர் ஓட்டோ ஓடுபவரோ என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, இல்லை. எமது தேவைக்காக வைத்திருக்கிறோம் என்கிறார். அதன்பின் ஒரு மாதம் எந்தப் பிரச்சனையும் இன்றிப் போகிறது. அதன்பின் ஒருவாரம் மீண்டும் ஒருவரையும் காணவில்லை. தொலைபேசியில் மகளை அழைத்தால் வெப்பம் காரணமாக விடுமுறையில் கண்டி, நுவரெலியா சென்றிருக்கிறார்களாம். நீ வாடகைக்குக் கொடுத்தால் அவர்கள் ஒரு இடமும் போகக் கூடாதா என்கிறார் கணவர். தாய் சுண்ணாகத்தில் ஒரு கடையில் வேலை செய்வதாகவும் மகளும் கணவனும் இல்லாதபடியால் இங்கு தனிய இருக்கப் பயந்து மீண்டும் தமக்கை வீட்டில் போய் இருக்கிறாராம். மகளும் கணவனும் வந்தபின் மீண்டும் என் வீட்டில் வந்து இருப்பார் என்கிறார் அவர்களை அழைத்து வந்தவர். மீண்டும் இரு வாரங்களில் வீட்டில் நடமாட்டம் தெரிகிறது. பின் ஒரு மாதத்தின் பின்னர் தாயும் மகனும் மட்டும் இருக்க மகளையும் கணவரையும் ஓட்டோவையும் காணவில்லை. மக்களுக்குப் போன் செய்தால் போன் போகவில்லை. அவர் என் இலக்கத்தை புளொக் செய்துவிட்டாரோ என எண்ணி அவரின் தொலைபேசி இலக்கத்தை மச்சாளிடம் கொடுத்து போன் செய்து பார்க்கும்படி சொல்கிறேன். அவர்கள் சிம்மை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் மச்சாள். அவர்களைக் கூட்டி வந்தவருக்கு போன் செய்து தாயின் தொலைபேசி இலக்கத்தை வாங்கித் தரும்படி கேட்க அவவுக்கு தொலைபேசி இல்லையாம் என்கிறார். இரண்டு வாரங்களில் தாயையும் சின்ன மகனையும் கூடக் காணவில்லை. மீண்டும் கூட்டி வந்தவருக்கே போன் செய்து என்ன பிரச்சனை என்கிறேன். மருமகன் மகளுக்கு அடித்ததில் மாமியார் ஏசிவிட்டாராம். மருமகன் கோபித்துக்கொண்டு மனைவியைக் கூட்டிக்கொண்டு வேறு வீடு சென்றுவிட்டாராம் என்று கூற, என்னடா தலைவலி மீண்டும் என்று யோசனை அதிகரிக்கிறது. கடைசி வீடும் வளவும் மிச்சம் இருக்கும்தானே. கவலைப்படாதை என்று சிரிக்கிறார் மனிசன். ஊரிலிருந்து வந்து இப்ப நான்கு மாதங்கள்தான். உடனே திரும்ப போவது செலவு. நடப்பது நடக்கட்டும். கமராவைப் பார்க்காமல் இரு என்று கணவர் சொல்ல பல்லைக் கடித்துக்கொண்டு இரு வாரங்கள் இருக்கிறேன். சரி இன்று ஒருக்காப் பார்ப்போம் என்று போனில் கமராவைப் பார்த்தால் வீட்டின் முற்றத்தில் ஆறேழுபேர் நிற்கின்றனர். ஒரு ஓட்டோ, ஒரு சயிக்கிள், இரு ஸ்கூட்டிகள் என்பன நிற்கின்றன. என்னடா இது என்று கணவருக்கு போன் செய்தால் தான் பிசி. இப்ப கமராவைப் பார்க்க முடியாது என்கிறார். வீட்டின் கதவுகள் எல்லாம் திறந்திருக்கு. ஒரு ஓட்டோவும் நிக்குது. இருவர் ஆறேழு பலாப் பழங்களைக் கொண்டுவந்து ஓட்டோவில் வைக்கிறார். இன்னொருவர் இரண்டு உரைப் பைகளில் உரித்த தேங்காய்களைக் கொண்டுவந்து ஏற்றுகிறார். இருந்தாற்போல் தொலைபேசி அழைப்புக் கேட்க, வந்தவர்கள் யாரினதோ போன் என நான் நினைக்க, அம்மா உங்களுக்கு போன் என்று கத்தியபடி பொடியன் தாயிடம் போனைக் கொண்டுவந்து கொடுக்கிறார். கொஞ்சம் வயசானவர் போலிருந்த ஒருவர் “இந்த நல்ல வீட்டில இருக்க உங்களுக்கு வருத்துது” என்று கூறுகிறார். நல்ல கறிவேப்பிலை என்று மரத்தை மேலால் முறித்துக்கொண்டு ஒருவர் வர மற்றவர் ஒரு கட்டு வேப்பிலையை வெட்டிக்கொண்டு வந்து தன் மோட்டார் சயிக்கிளில் வைத்துக்கட்ட வீட்டின் மற்றப் பக்கத்தில் ஒரு ஐம்பது தேங்காய்களாவது உரித்த தென்னம் பொச்சுகள் குவிக்கப்பட்டிருக்கு. உடனே நான் வீடு எடுத்துத் தந்தவருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி அவர்களை இனி இருக்கவிட முடியாது. அவர்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லச் சொல்லுங்கள் என்கிறேன். ஒரு வாரத்தில் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல, கொஞ்சம் தள்ளி இருக்கும் ரதி அக்கா என்று சொன்னேன் தானே. அவர் போன் செய்கிறார். “என்ன நிவேதா உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எழும்பிவிட்டார்கள் போலிருக்கே” “எப்பிடித் தெரியும் அக்கா” “நான் உங்கள் வீட்டடியால் போகேக்குள்ள லாண்ட் மாஸ்டரில் சாமான்கள் ஏத்தினபடி போச்சினம்” “ஓமக்கா அது பெரிய பிரச்சனை. வீட்டில இருக்காமல் தேங்காய் பிலாக்காய் மட்டும் ஆய்ந்தால் .......... “அப்ப இனி ஆரை இருத்தப்போறியள்” “அதுதான் அக்கா என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இரண்டு பேரிட்டைச் சொல்லியிருக்கிறன். நீங்களும் ஆரன் இருந்தால் சொல்லுங்கோ” “நான் ஆரையன் கேட்டுப் பாக்கிறன். திறப்பு இப்ப ஆரிட்டை இருக்கு? “அந்தச் சனத்தைக் கூட்டிவந்த எங்கடை ஊர் பெடியன் தான் மச்சாளிட்டைக் குடுத்துவிட்டிருக்கு” “நீங்கள் எப்ப வாறியள்? “இப்ப உடனே வேலையில லீவு சொல்லிவிட்டு வரமுடியாதக்கா. ஐந்து மாதத்துக்கு முன்னம்தானே வந்தது” “ஒரு இரண்டு மாதம் வேணுமென்டால் நான் அப்பப்ப எட்டிப் பாக்கிறன்.அதுக்குள்ள நீங்கள் வரப்பாருக்கோ. ஆரன் நல்லவை அம்பிட்டால் உங்களுக்குச் சொல்லுறன்” “மிக்க நன்றி அக்கா. அப்ப அந்தத் தம்பியை திறப்பைக் கொண்டுவந்து உங்களிடம் கொடுக்கச் சொல்லுறன்” எனக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி. தானே உதவுவதாகக் கூறுகிறார் என்கிறேன் மனிசனிடம். ஆரும் சும்மா வந்து மற்றவைக்கு உதவ முன்வரமாட்டினம். அதுவும் சிலோனில. ஏதோ திட்டத்தோடதான் ரதி அக்கா தான் பாக்கிறன் எண்டு சொல்லுறா என்கிறார் மனிசன். உங்களுக்கு எப்பவும் சந்தேகம்தான். யேர்மனியில இருக்கிற அவவின் சொந்தக்காரர் எல்லாம் நல்ல சனங்கள் தானே. அவ என்ன காணியைத் தன்ர பெயரில மாத்தி எழுதவா போறா? சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிக்கொண்டு. எங்களுக்கு வேறை வழி இல்லை இப்ப. பேசாமல் இருங்கோ என்கிறேன். ஏதோ நீயும் அவையும் பட்டபாடு என்று சொன்னதோடு அவர் எதுவும் கதைக்கவில்லை. அந்த எலெக்ரீசியன் தம்பியை திறப்பை மச்சாளிடம் வாங்கிவந்து கொடுக்கமுடியுமா என்று கேட்க, சம்மதிக்கிறார். மச்சாளிடம் ஒரு வெளிக் கதவுச் சாவியும் பட அறைச் சாவியையும் மட்டும் கொடுக்கும்படி கூறுகிறேன். அதன்பின் கமராவில் அப்பப்ப பார்ப்பதும் அக்காவுடன் வைபரில் கதைப்பதுவுமாகப் போகிறது. ஒருநாள் அக்காவின் கணவர் சென்று பார்த்துவிட்டு எல்லாக் கன்றுகளுக்கும் தண்ணீர் போகவில்லை என்கிறார். அடுத்த நாளே சொட்டுநீர் பாசனம் செய்தவருக்கு போன் செய்ய, தான் நாளை சென்று பார்க்கிறன் என்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு என்னக்கா இது சில லைனை கழற்றி வீட்டிருக்கு. சிலதை பூட்டி வீட்டிருக்கு. ஆரும் சின்னப் பெடியள் வீட்டில இருந்தவையோ என்று கேட்கிறார். நான் ஓம் என்கிறேன். அவர்தான் கழட்டிப் பூட்டி விளையாடியிருக்கிறார். மீண்டும் அவர் இரண்டு மணிநேரம் நின்று எல்லாவற்றையும் சரி செய்கிறார். ஒரு வாரம் செல்ல ரதி அக்கா போன் செய்கிறார். “நிவேதா ஒரு எனக்குத் தெரிந்த பெடியன் இருக்கிறார். அவரைக் கேட்டனான். அவர் வீடு வந்து பாக்கிறன் எண்டவர்” “தனிப் பெடியன் எண்டா பிரச்சனை அக்கா. அந்தப் பெடியன் வேலைக்குப் போறவரோ” “ஓம் ஒரு பால் கொம்பனியில வேலை செய்யிறவர்” “அவருக்கு வீடு வாசல் இல்லையோ” “சிறிய தாயோடைதான் இருக்கிறார், மற்றச் சகோதரங்களோட பிரச்சனை. அதுதான் உங்கட வீட்டை இருக்க ஓம் என்டிறார். நீங்கள் பயப்பிடாதைங்கோ. நான் பாத்துக்கொள்ளுறன். ஆள் முதல் வந்து இருக்கட்டும். நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு ஓகே எண்டால் தொடர்ந்து இருக்கட்டும்” “அவரின் போன் நம்பரை போட்டுவிடுங்கோ அக்கா” “அவருக்கு ஸ்மாட் போன் இல்லை. மற்ற போன் தான் இருக்கு” இந்தக் காலத்தில ஸ்மாட் போன் இல்லாத பெடியனா? நம்பவே முடியேல்லை அக்கா” “நீங்கள் வரேக்கை ஒண்டைக் கொண்டுவந்து குடுங்கோவன்” “உதெல்லாம் சரிவராதக்கா” நானே ஐந்து ஆண்டுகளா ஒரு போனை வச்சிருக்கிறன்” “சரி நீங்கள் முதல் வாங்கோவன்” சரி அக்கா என்கிறன். இரண்டு வாரங்கள் அந்தப் பெடி ஸ்கூட்டியில் வருவதும் போவதுமாக இருக்க, ஒருநாள் பார்த்தால் நான் வாங்கி வைத்த 25 மீட்டர் கோஸ் பைப்பை எடுத்து வீட்டு கேற்றடியில் கன்றுகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, அவரின் இலக்கத்துக்கு போன் செய்தால் போன் றிங் போனாலும் அவர் எடுக்கவில்லை. பின்னர் ரதி அக்காவுக்கு போன் செய்து சொட்டுநீர் பாசனம் செய்திருக்கு. பிறகு எதுக்கு உந்தப் பெடியன் பைப்பைப் பிடித்துத் தண்ணீர் விடுகிறார் என்று கேட்க, தான் அவனுக்குச் சொல்லுறன் என்கிறா அக்கா. இனிமேல் பைப் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கோ என்கிறேன். அடுத்த வாரம் பார்த்தால் எம் வளவில் இரண்டு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க, பார்த்த எனக்குப் பகீர் என்கிறது. உடனே ரதி அக்காவுக்குப் போன் செய்ய, அவர் இரண்டு மாடுகள் வளர்க்கிறார். அதுதான் கொண்டுவந்து கட்டியிருக்கிறார் என்கிறா. அக்கா என்னைக் கேட்காமல் எதுக்கு வளவிலை மாடுகளைக் காட்டச் சொன்னீர்கள்? எனக்கு கன்றுகள் முக்கியம். பார்த்துப் பார்த்துக் கன்றுகளை நட்டிருக்கிறன். உடனடியா மாடுகளை வெளியேற்றச் சொல்லுங்கோ என்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ மாடுகளை எங்கள் வளவில கொண்டுவந்து கட்டச் சொல்லுறன் என்கிறா. அடுத்த நாளில் இருந்து மாடுகளைக் காணவில்லை ஆயினும் உவர் என் வளவுக்கு ஏற்ற ஆள் இல்லை என்று மனம் அடித்துக் கூற, வேறு வழியில்லை. நாம் ஊருக்குப் போகத்தான் வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன்பின் அந்தப் பெடியன் வீட்டில் வந்து தங்கி இருக்க ஆரம்பிக்கிறார். இரவில் ஒன்பது மணிவரை லைட் எரிகிறது. சிலவேளைகளில் இன்னொரு பெடியும் வந்திருந்து கதைத்துவிட்டு போகிறது. நீ கமறாவைப் பார்க்காமல் இரு என்கிறார் கணவர். வேலை செய்யும் இடத்திலும் எனக்குப் பதிலாக வேலை செய்ய ஒருவரும் இல்லை என்று முதலாளி மறுக்க வேறு வழியின்றி யோசனையுடன் இரண்டு மாதங்கள் ஓடிப்போக, இனி நீர் விடுமுறையில் செல்வதனால் செல்லலாம் என்கிறார் முதலாளி.
  6. இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி. 1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை. எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார். 2)இருவரும் இளமையான டாக்ரர்கள். படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை. ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது. நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும். இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே. தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும். இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்? 3)வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும். இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது. மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும். என்ன கொடுமை சரவணா? இப்படி பல சைக்கோ. சுத்தம் என்ற பெயரில் கணவன் மனைவியை கொடுமைப் படுத்துவதும் மனைவி கணவனை கொடுமைப் படுத்துவதும் கெளரவமாக நடக்கிறது. இதற்குள் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். முறைப்பாடுகளை செய்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்.
  7. இந்த திரியில் பல சாத்தான்கள் வேதம் ஓதி இருக்கின்றன .... இங்கு யாழ்களத்தில் கருத்து எழுதும் சக கருத்தாளர்களை மிக கேவலமான முறையில் வசைபாடியும் தாங்கள் அறிவு மிகுந்தவர்கள் மற்றவர்கள் யாபேரும் அறிவற்றவர்கள் என்ற தொனியிலும் ஒரு ஆதிக்க வெறியில் மிதந்தவர்கள் ....... யாழ் பல்கலைகழகத்தில் தங்கள் சகோதரனுக்கு புத்தி கூறுகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். ஆதிக்க வெறி என்பதோ .... ஆதிக்க சிந்தனை என்பதோ ... அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் அடிப்படை எண்ணமோ திடீரெனெ யாருக்கும் வருவதில்லை. அவை எல்லாம் உள்ளேயே இருக்கும் இப்படி சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது தலை கவசத்தை தூக்கி சொந்த முகத்தை காட்டி விடுகிறார்கள் அவ்வளவுதான். அவ்வளவு நாகரீமான பண்பான சமூக யாழ்பாணத்து மக்கள் இருந்து இருப்பின் அவ்வளவு சாதி கொடுமைகளும் எப்படி அரங்கேறின? இதே யாழ் பல்கலைக்கு பல தடைகளை தாண்டி தகுதி பெற்று வந்த கீழ்சாதி மாணவர்கள் (குறிப்பாக மாணவிகள்) வாடகைக்கு வாசித்த வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு ... சக மாணவர்களின் சொல்லாடல்கள் மன அழுத்தம் கொண்டு இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு சென்று இருகிறார்கள். இன்றுகாலைதான் "புதிய ஆரம்பம்" என்று கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்கள் எழுதி இந்த யாழ்களத்தில் பதிந்த கதையை வாசித்தேன். பல நினைவுகள் எனக்கு அதை வாசிக்கும்போது வந்து சென்றது அந்த கதையின் கீழ் ஒரு நிகழ்வை எழுதவேண்டும் என்று இருந்தேன் ... இப்போ இந்த திரி கண்ணில் பட்ட்து. குதிரை வேகத்தில் வந்திறங்கிய சாத்தான்களை பார்த்ததும் எனக்கு எந்த வியப்பும் இல்லை அவர்கள் ஆதி முதல் அந்தம் வரை என்னால் புரிய முடியும் என்பதால். இதை பல்கலைக்கழகத்தில் சரி செய்தால் பகிடிவத்தைத்தான் முடியும். அது ஒரு தீர்வாகி விடும் என்று இங்கு பலரும் எண்ணுகிறார்கள். அனால் இந்த பகிடிவதையோ ஆதிக்க எண்ணமோ முடியபோவிதில்லை.... அது வேலை தளம் வரை நீளும் இவர்களே பின்பு ஆசிரியர்கள் மருத்துவர்கள் கிராம அபிவிருத்தி அதிகாரிகளாக வருவார்கள் இப்போ இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தலைக்கவசம் கம்பு தடிகள்தான் ... பின்பு அதிகாரம் பதவி போன்ற பெரும் ஆயுதங்கள் சிக்கிக்கொள்ளும். அப்போது இவர்களிடம் சிக்கிப்போகும் சக பணியாளர்கள் மக்கள் நோயாளிகள் பற்றி கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்? நிறைய எழுதலாம் .......... இவை எல்லாம் யாழ் களத்தில் தங்குமா என்று தெரியவில்லை. குறித்த நிர்வாகத்தினர் கண்ணில் பட்ட்தும் நீக்கப்பட்டு விடும் என்றே எண்ணுகிறேன். இவற்றை நாம் எழுதமுடியாது ... சமரசம் பற்றி வேதம் பற்றி எழுதுவது என்றாலும் அது சாத்தான்களுக்கான உரிமையே!
  8. சித்தசுவாதீனம் இழப்பவர்கள் தங்களின் பின்பக்க சட்டையை தாங்களே கிழிப்பார்கள், முன்பக்க சட்டை முழுதாக இருக்கும்.............. அதனால் முன்னால் மட்டும் பார்க்கும் மற்றவர்களுக்கு பிரச்சனையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்........ முதன்முதலாக முன்பக்கத்தையும், பின்பக்கத்தையும் கிழித்துக் கொண்டு தெளிவாக நிற்கின்றார் ஒருவர்.........🫣.
  9. நீங்கள் சொன்னதற்குத்தான் நானும் சொல்லிப் பார்த்தன். சும்மா முசுப்பாத்திக்காக. விளையாட்டில் உள்ள விருப்பமே அந்த தெரிவு செய்ய முடியாமை (unpredictability). நாம சுற்றிச் சுழன்டு எங்கட புலைமையை வீரத்த காட்டலாம் (சும்மா கம்பு சுத்துற என்டு இந்தியாவில சொல்லுவினம்). உண்மையிலேயே அவ்வளவுதான் நம்மால முடியும். நாம் வழமை போல குப்பையைக் கொட்டுவம். ஜபில தன்பாட்டில நடக்கும். இப்போதும் நானும் நீங்களும்தான் குப்பை கொட்டுறதில முதல்வரும் துணை முதல்வரும். வேறு ஒருவரும் கிட்டக்கூட இல்லை. குப்பைக் கணக்கு கீழே:
  10. கிறிக்கட் போட்டிக்கு போக வெளிக்கிடுகிறேன் மோட்டார் சைக்கிள் கொஞ்சம் தாமதப்படுத்த நீங்கள் முந்திச்செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என நண்பர்களிடம் சொல்லிவிட அவர்கள் மைதானத்திற்கு செல்கிறார்கள். நானும் சைக்கிளை சரிபண்ணி எடுத்து அந்த ஊருக்கு செல்ல சைக்கிள் மீண்டும் பழுதடைகிறது என்னடா திரும்ப சைக்கிள் பழுதாகிறதே! என இறங்கி சைக்கிளை தள்ளி ஒரு திருகாணி இருந்தால் சரி பண்ணி விடலாம் என நினைக்க. ஒரு பெரிய பங்களா போல வீடு எதிரே இருக்க அங்கே ஒரு பெண்மணி ஒரு பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டு நிற்கிறார் அவவோ என்ன ஏதேனும் உத‌விகள் வேண்டுமா? என எனைக்கேட்க ஓம் என நான் சொல்ல உள்ள வந்து நிறைய சாவிகள் இருக்கிறது எடுத்துப்போங்கள் என சொல்கிறார். நானும் உள்ளே சென்று சாவியை எடுக்கும் போது அங்கே சில பெண்களின் அழுகுரல் கேட்கிறது யார் அங்கே அழுவது? என நான் கேட்க அவாவோ அங்கு ஒருவரும் இல்லை என சொல்கிறார் நானும் சாவியை எடுத்து வாசலுக்கு வர 3 பெண்கள் அழுது கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள் வந்து என்னை பிடிக்க நானும் அவர்களை பிடிக்க ................சோறு கொடுத்த பெண்மணி பேய் போல வந்து என்னையும் இழுத்துக்கொண்டு போகிறாள். நானும் ஒரு மாதிரியாக கைகளை உதறினாலும் அவா விடுவதாக இல்லை என்னை இழுத்துக்கொண்டு ஒரு இருட்டு அறைக்கு உள்ளே தள்ளி கதவை பூட்டுகிறாள். அப்போது காப்பாற்ற சொல்லி ஓடிவந்த பெண்களும் சேர்ந்து சிரிப்பது என் காதில் கேட்கிறது. ஐயோ தெரியாத்தன‌மாக இந்த இடத்தில் மாட்டிக்கொண்டேனே என அந்த அறையை பார்க்க அது ஒரு சித்திரை வதை கூடம் போல தென்பட்டது அறை முழுவதும் இரத்தக்கறைகளாக இருந்தது அதிலே இரத்தத்தால் நீங்களே இன்றைய உணவு தயாராக இருங்கள் என எழுதி இருந்தது ஒரு சிலுவையின் கீழ். ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! ஐயோ இந்த நரகத்தில் நான் வந்து விழுந்து விட்டேனே! என அலறி கத்தி கட்டிலால் உருண்டு விழுகிறேன் நேரமோ ஏழரை. மனிசி வந்து கட்டிலால விழுந்துவிட்டு நரகத்தில் விழுந்து விட்டாராம் என முறைத்து பார்த்து இது நரக‌மா என கேட்டு விட்டு போகிறாள் அநேகமாக கொஞ்ச நாளைக்கு இந்த வாசகம் எனக்கு ஓடும் என நினைக்கிறன் ஏழரைக்கனவு பொல்லாதது போல.😆😆
  11. வாழ்த்துக்கள் குமாரசாமி
  12. அது தானே? அதுவும் எங்கள் குருஜி நித்தியானந்தாவுக்கு....??? ஒரு வேளை எதை எடுப்பது என்பது கடினமாக இருக்க வாய்ப்புண்டு...
  13. நான், சற்று முன்... ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, நித்தியானந்தாவின் உடல் நலத்தை கேட்ட போது.... அது வசந்தி என்றும், இன்று காலை கூட... இரண்டு இட்லியும், ஒரு ஓட்டை வடையும் சாப்பிட்டதாக கூறினார். 😂
  14. கடவுளுக்கு நன்றி சொல்வோம், இப்படியான ஒரு தாரத்தைத் தராமைக்கு.
  15. நாளை தொடக்கம் நாங்கள் இரண்டு பேரும்.. சத்தான சாப்பாடு சாப்பிடுறம்... ஒரு மணித்தியாலம் சுவிம் பண்ணுறம்... இரண்டு மணித்தியாலம் காடு,கரம்பை எல்லாம் ஓடுறம்.. தண்ணி அடிக்கிறத நிப்பாட்டுறம்... வாற வருசம் இந்த ரைம் கையில குவா...குவா
  16. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  17. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025
  18. தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம் 28 MAR, 2025 | 10:25 AM சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன். கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது. https://www.virakesari.lk/article/210411
  19. நித்தியானந்தா இறந்துவிட்டார்? சகோதரி மகன் பகீர் தகவல் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார். சகோதரி மகன் தகவல் அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறிது அமைதியாக இருந்த நித்தியானந்தா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் சில நாட்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamilnadu.com/article/nithyananda-died-his-sister-son-announces-1743488615
  20. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]
  21. நான் அறிந்தது சிறைச்சாலையில் சிங்கல சிறை கைதிகள் தமிழ் சிறை கைதிகளை படு கொலை செய்தனர் சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது படுகொலைகள் தமிழர்கள் வீடு எரித்தல் நடத்தி இருக்கின்றார்கள் படிக்க வந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்து இன்பம் அடையும் யாழ்பாணத்து பல்கலைகழக மாணவ காட்டுமிராண்டிகள் அவர்களைவிட ஒன்றும் மேலனவர்கள் இல்லை. இந்த மாணவ காட்டுமிராண்டிகளிடம் பெரும்பான்மை அல்லது அதிகாரம் இருந்தால் சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த அதே கொடுமைகளை தான் செய்வார்கள்
  22. நாளைக்கு பங்களூரை பங்களூரிலேயே வைத்து தூக்கிறம்............🤣. இன்றைக்கு சிம்ரனை வைத்து லக்னோவைத் தூக்கியது போல, நாளைக்கு ஷாருக்கானை வைத்து பங்களூரை முடிக்கின்றோம்...............😜. வாஷிங்டன் சுந்தரையும் இறக்குவம் தேவைப்பட்டால்..........🤣
  23. உலகம் பிறந்தது எனக்காக .......! 😍
  24. ஒரு கூட்டு கிளியா இருந்த‌ எம்மை ப‌ஞ்சாப் பிரித்து விட்ட‌து இனி ஒன்னா மீண்டும் சேர‌ மாட்டோம் என‌ ந‌ம்புகிறேன்👍.................................
  25. 3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப் மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் : 3ஆவது முறையாக ஜனாதிபதியாக வர வேண்டும் என்று நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது. இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2ஆவது ஜனாதிபதி பதவிக் காலம் மீது வைத்துள்ளேன். என்று கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=318632
  26. மனிசி நிக்கிற நேரம் பாத்து டெலிவரிக்காறன் வந்தால்… ஒரு மாசத்துக்கு வீட்ட போகேலா…😭 பக்கத்து கடையில சொல்லிவிடுங்கோ.. நானே போய் எடுக்கிறன்..😁🍻
  27. ஆனந்தாவுக்கு ஆனந்தமே ஆனந்திகளுடன் ஆனந்தப்படுவது. ஆனந்திகள் உள்ளவரை ஆனந்தாவும் உள்ளவரே.
  28. கந்தர்மட மக்கள் நுளம்புக் கடியை தாங்க மாட்டார்கள். மின்விசிறியும், கொசுவத்தி சுருளும் கொடுத்தால்... இன்னும் நல்லாய் இருக்கும்.
  29. புங்கை இது பரவாயில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தால் சிலர் இதை வைத்தே மனைவியை அடிமையாக வைத்திருக்கிறார்கள். விருந்தினர்களுக்கு தனி கோப்பை கிளாஸ் கப்.அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் எமக்கு வராமல் இருக்க வேண்டும். இன்னொருதன் உறவினர்கள் வந்து இருந்த கதிரை கவர் எல்லாம் கழட்டி தோய்ப்பாராம். உண்மையிலேயே இப்படி நடக்கிறதா? அல்லது நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்களா? சிறி இதில் மூன்றாவது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே சிகிச்சை கொடுக்க வேண்டும். எதிர் தரப்பில் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளது. ஒரு பெண் ஐயோ கணவன் வரும் நேரமாச்சே என்ன குறைகுற்றம் கண்டு பிடிக்கப் போகிறாரோ என்று பயந்தபடியே இருப்பதாக சொல்கிறார். மனைவி எனக்கு பேச்சு.ஏதாவது நல்ல நிகழ்ச்சியை பார்ப்பம் என்று இல்லை.உதவாக்கரை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருங்கோ என்று நடக்குது.
  30. கன நேரம் பிடித்துக் கொண்டு நின்றால்... கை நோகும். இரண்டு, மூன்று பனங்குத்தி எடுத்து... முட்டுக் கொடுத்து விடுங்கோ.
  31. தம்பி @செம்பாட்டான் அடுத்த ஐபிஎல் போட்டியில் உங்களையே பார்த்து எழுத வேண்டுமென்று பலர் இப்போதே திட்டம் போட்டுள்ளனர்.
  32. 2024ஆம் ஆண்டிலிருந்து T20ல் மிகப்பெரிய துடுப்பர். அவரின் ஆறுகள் எல்லாம் பார்த்தா, நாமளும் அடிக்கலாம் போல தோனும். அப்பிடி ஒரு அழகு. முயற்சி இல்லாமல் அடிப்பதில் மன்னன். நிக்கோலஷ் பூரான்.
  33. காலைச் சாப்பாட்டுக்குதான் ஒரு வடை. மதியம், இரவு சாப்பாடு என்று நிறைய சாப்பிட வேண்டி வரும்.
  34. புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!
  35. நம்ப வேண்டாம். வீரசிங்கம் மண்டபத்தை நான் தாங்கி பிடித்துள்ளேன்….
  36. மறுத்து அளிப்பார்கள் என்று பார்த்தால் இவரும் நந்தி உடன் சேர்ந்து ஒத்து. பாடுகிறார் பழைய கார். அது தான் எரித்து. விட்டார்கள்
  37. எமது அப்பாத்தா காலங்களில் நாற்பதாச்சு தள்ளிப்படுங்கோ என்ற கதையும் இல்லை....அந்த சிந்தனைகளும் இல்லை. கச்சிதமாக கதையை முடிப்பார்கள். மூன்று நான்கு மாதங்களின் பின்னரே அன்று செய்த தப்புகள் வெளி வரும்.😀
  38. ஒரு கொடியில் பல மலர்கள் பூத்து குலுங்குகின்றன.....😂
  39. ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ... 1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று) இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...
  40. ஐபிஎல் 2025 இன் 12வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுடன் சுருண்டது. அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ரியான் ரிக்கெல்ரனின் அதிரடியான ஆட்டமிழக்காது எடுத்த 62 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களிலேயே இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  41. ஒருவேளை அறுவை அறுக்கிறதுக்கு x - ray எடுத்ததை தப்பாகப் புரிந்து விட்டார்களோ ...........! 😂
  42. 43 வயதில்… ஒரு லட்சம் படங்களை எடுத்துள்ளார். இவர் வைத்தியருக்கு படித்த நேரம் புகைப்பட பிடிப்பாளராக வந்திருக்கலாம்.
  43. யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால் , குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர். பயணிகள் உள்ளே வருவதற்கும் , வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம். விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும். இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என மேலும் தெரிவித்தார். யாழ். விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம் - சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் | Virakesari.lk
  44. ஐயோ, இங்கேயும் அரசியலா? ஒருவரையும் நல்லது செய்ய விடாதேங்கோ. உடனடியாக அரசியலுக்குள் பிடிச்சு போடுங்கோ. அதோடு அவர்களுக்கு வேறு வேலை வந்துவிடும், இதற்கான குரல் முடங்கிப்போய்விடும். விடுங்கோ அவரை, ஏனைய நாடுகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்துமளவுக்கென்றாலும் .
  45. பல ஆதாரங்கள் தரலாம்: முதலாவது வி. நவரத்தினம் அவர்கள் எழுதிய "The Fall And Rise Of The Tamil Nation" (1995) என்ற புத்தகத்திலேயே உள்ளது, முதன் முதலில் தமிழீழத்தைக் கோரியவர் செ. சுந்தரலிங்கம் என்று... அலகு 2 ஐ வாசிக்கவும். இரண்டாவது வி. நவரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட "Eylom: Beginning of the Freedom Struggle" (1962) என்ற புத்தகத்தில தந்தை செல்வாவை சாடியுள்ளார்; சமஸ்டியை தூக்கிப் பிடிப்பதற்கு. (pg 72-73) மூன்றாவது இன்னொரு கடிதத்தில் (1960களில் எழுதப்பட்டது), தந்தை செல்வாவை ஏன் நாடாளுமன்றத்தில் சமஸ்டி தான் வேண்டும்... ஏன் தனிநாட்டை முன்வைக்கவில்லை என்பதான தொனிப்பட்ட/ சூழமைவு கொண்ட கடிந்த கடிதம் ஒன்றை தந்தை செல்வாவாவிற்கு எழுதினார் என்று Sangam.org வாசித்தேன். C Suntheralingham in an open letter dated July 28, 1957, addressed to S J V Chelvanayakam, wrote, “Into what a sorry pass have you led the Tamils? “I differed from your party in this regard [establishment of one or more linguistic states] to the extent that I wanted an autonomous Tamil state which would constitute a Commonwealth of Dominion of Tamil Ilankai as set out in terms of a motion I moved in Parliament by way of amendment to the Throne speech of 1956. I was all-in-all with your party in regard to the ‘Autonomous Tamil Linguistic State’. I repeat, while your party wanted federation, I wanted separation, because I am convinced since 1955, that no Tamil should trust a Sinhalese politician and certainly not Prime Minister Bandaranaike, to protect Tamil interests.” https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-16/
  46. சரி ஏன் உங்கடை ஆசையை கெடுப்பான்! சீமான் மைண்ட் வாய்ஸ் - இந்த செக்ஸ் சைக்கோ ஈவேரா சொன்ன ஒரு சிந்தனையை செய்துபார்த்த எனக்கே இந்த நிலமையென்றால் அவர் கொள்கைகளையே தெய்வவாக்காக நினைத்து வாழும் உபிஸ் DMKகாரரின் நிலைமைகள் என்னாகப்போகிதோ??🤣 ஏன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஈவேராவா?
  47. தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.