Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38770
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/17/25 in all areas

  1. ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 33வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் மெதுவான ஆடுதளத்தில் அடித்தாட சிரமப்பட்டதால் அபிஷேக் சர்மாவின் 40 ஓட்டங்களுடனும், ஹென்றிக் க்ளாசனின் 37 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அதிக ஓட்டங்களை எடுக்காவிட்டாலும் 20கள், 30கள் என அடித்தாடி இறுதியில் 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த @கந்தப்பு க்கு மாத்திரம் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. சிங்கத்துக்கு எண்ணை வைத்து, தலை வாரி விட்ட போது .... 😂
  4. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அரைச் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் வேகமாக அடித்தாடிய அபிஷேக் போரெல், கேஎல் ராஹுல், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், அக்க்ஷர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்புடன் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் காயம் காரணமாக வெளியேறியபோதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா ஆகியோரின் அரைச் சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கிப் முன்னேறியது. எனினும் மிச்சல் ஸ்ராக்கின் இறுக்கமான இறுதி ஓவரில் 9 ஓட்டங்களை எடுக்கவேண்டிய நிலையில் 8 ஓட்டங்களை எடுத்ததால் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்துப் போட்டி சமநிலையில் முடிந்தது. அதன் பின்னர் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. முதலில் ஆடவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 5 பந்துகளின் இரண்டு விக்கெட்டுகளை ரண் அவுட் மூலம் பறிகொடுத்தமையால் 11 ஓட்டங்களுடன் அவர்களின் ஆட்டம் 5 பந்துகளில் முடிந்தது. பதிலுக்கு ஆடவந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலும், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் 4 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்ட உதவினர். முடிவு: போட்டி சமநிலையில் முடிந்திருந்ததால் சுப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் பல நாட்களாக சுமைதாங்கியாக இருந்த @goshan_che இன் வலிக்கு நிவாரணம் வழங்க @சுவைப்பிரியன் இறுதி நிலைக்குச் சென்று எல்லோரையும் தாங்கிப் பிடிக்கின்றார்!
  5. யுவர் ஆனர் உங்கள் மனைவி பிள்ளைகளை மாத்திரமல்ல எங்களையும் தான் மிகமிக டென்சன் ஆக்குகிறீர்கள். சிலவேளைகளில் உங்கள் அணியில் நாங்கள் இல்லை என்றாலும் உங்கள் அணியே வெல்ல வேண்டும் என்ற அளவுக்கு எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள். ஒரேயடியாக கீழே கிடந்து நசிபட்ட கோசானுக்கு கூட புள்ளி கிடைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. தலைவரே காலையிலேயே ஒரே பெண்கள் படங்களாக இணைத்து எல்லோருக்கும் கிளுகிளுப்பை உண்டாக்குகிறீர்கள். காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் சம்பளம் கிடைக்குமா? நடராஜன் பல போட்டிகள் விளையாடவில்லை. எப்படி சம்பளம் கொடுப்பார்கள்?
  6. நான் அறிந்தவரையில் சுமந்திரன் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் நல்லிணக்க அரசுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் வெளியக உதவியுடனான உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு மைத்திரி - ரணில் அரசு ஒத்துக்கொண்டபோது, அதனை சுமந்திரன் ஆதரித்தார் என்று நினைவு. இச்சந்தர்ப்பத்தைத் தவிர அவர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று கோரிவந்தார் என்று நினைக்கிறேன். இனக்கொலை எனும் பதத்தினைப் பாவிப்பதில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நடந்தது இனக்கொலை தான் என்று நாம் நபினாலும் அதனை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரம் இல்லை அல்லது அதனை உறுதிப்படுத்தப் போய் நாம் மேலும் பலவீனமாக்கப்படுவோம் என்பதற்காக தான் அப்பதத்தினைப் பாவிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார் என்று நினைக்கிறேன். சுமந்திரனின் இவ்வாறான கொள்கைகளுக்கான அடிப்படைக் காரணம் அவர் தனிநாடு என்பதனை ஒருபோதும் ஆதரிக்கவில்லை அல்லது அது சாத்தியமில்லை என்று நினைப்பதனாலோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுமந்திரனின் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டிற்கும் அவரின் இக்கொள்கைகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்று நான் நம்பவில்லை. எமது இனத்தின் இருப்பைப் பற்றி நாமே பேசாதுவிட்டால் வேறு எவர்தான் பேசுவார்கள்?
  7. அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ சான்விச் மசாச் என்றால் தம்பிக்கு ரொம்ப சுகமாக இருக்கும்.
  8. நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣
  9. ஒரு மாதிரி மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு தண்ணியைக் காட்டி விட்டு படைத்தளபதி நந்தனார் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாரா ...... 😂 அல்லது மன்னர் தனது பதவியைக் காப்பாற்ற....... பலமுறை படைத் தளபதியை ஒற்றனாக எதிரிகளிடம் அனுப்ப.... எதிரிகள் படைத்தளபதிக்கு ஆசை காட்டி..... மன்னருக்கு மோசம் செய்ய வைத்து விட்டார்களா.... 🤣 என்ற சந்தேகம் படை வீரர்கள்களிடம் காணப்படுகின்றது விரைவில் தனது படையணியைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற மன்னர் கங்கணம் கட்டி ஒற்றைக் காலில் நிற்பதாக ஒரு செய்தி கூறுகின்றது 😅
  10. GMT நேரப்படி நாளை வெள்ளி 18 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  11. நானும் அடிச்சு விடப்போகிறேன். 64 வது போட்டியில் (மே 13) பெங்களூரு மைதானத்தில் 286 ஒட்டங்களுக்கு மேல் SRH அடிக்கும். 😀 கிளாசனை நம்பினால் கைவிட மாட்டார்
  12. அதேதான். இப்போ expert என்றால், ஏதாவது சொல்லவேணும் என்று அடிச்சு விடுறது. வந்தா மலை. போனா.....
  13. இதைப் பார்த்ததும், Seinfeld நகைச்சுவைத் தொடரில் ஜேசன் அலெக்சாண்டரின் பகிடி நினைவுக்கு வந்தது! பார்த்து ரசியுங்கள்😂!
  14. சும்மா போங்க. கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு.
  15. சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ.
  16. காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால் காயப்பட்டால் அதற்கு அந்த வருடத்தில் பேசிய பணம் முழுதுமாக வழங்கப்படும். ஆனால் முதலாவது போட்டி துவங்க முதல் வேறு போட்டிகளில் காயப்பட்டு அவ்வருடம் ஐபிஎல் விளையாட மாட்டார் என அணியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவருக்கு சம்பளம் இல்லை. சென்னை ருத்துராஜ் , SRH அடம் சாம்பா போன்றவர்களுக்கு பேசிய முழுப்பணமும் வழங்கப்படும். தனிப்பட்ட ரீதியாக சில போட்டிகளில் விளையாடாவிட்டால் ( உ+ ம் ரபாடா தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்) அந்த விளையாட்டு வீரர் விளையாடாமல் சென்ற போட்டிகளின் எண்ணிக்கை விகிதத்தை கழித்து விட்டு மிகுதி சம்பளத்தை வழங்குவார்கள்.
  17. எரிகிற நெருப்பில் பிடுங்கியது லாபம். கோவிட் நேரமும் கோவிட்டை தொடக்கி வைத்தும் விட்டு கையுறை முகக்கவசம் என்று கோடீகோடியாக சம்பாதித்தார்கள்.
  18. நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? . வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.
  19. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁
  20. அப்பிடியெண்டுநீங்களா கற்பனை பண்ணுங்கோ. சுமந்திரன் எப்பவாவது சர்வதேச விசாரணை தேவை என்பதுபற்றிக் கதைச்சவரா?இப்ப தேர்தலில்நிறைய அடி விழப்போகுது என்பதால் கதைக்கிறார் அதைத்தான் சொன்னேன்
  21. உங்கள் சிறுவயதில் மச்சம் படைத்திருக்கலாம்! ☺️
  22. பிள்ளையான் ராக்கெட். 😂
  23. ராஜஸ்தானுக்கு பயம் காட்டிய ஸ்டார்க் - த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 16) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடந்த 4 ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் சூப்பர் ஓவர் இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ரன்அவுட் ஆகவே 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 11 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக சந்தீப் சர்மா பந்து வீசினார். கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி உள்பட 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கவே டெல்லி அணிக்கு மீதமிருந்த 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மிட் விக்கெட்டில் சிக்ஸர் விளாசவே 4வது பந்திலேயே டெல்லி இலக்கை அடைந்து வென்றது. டெல்லி அணி தோற்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்ற மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 இந்த சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் குழந்தையை மோசமாக பாதிக்கலாம் என்பது தெரியுமா?16 ஏப்ரல் 2025 பேட்டர்களின் மெத்தனம் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. களத்தில் இருந்த பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயலவில்லை, கைவசம் 5 விக்கெட்டுகள் வரை இருக்கும் நிலையில் டெத் ஓவர்களில் நிதானமாக ஆடியது ராஜஸ்தானை தோல்விக்கு இட்டுச் சென்றது. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் பேட்டிலிருந்து பெரிய ஷாட் வந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்க வாய்பில்லை. இருபதாவது ஓவரை ஸ்டார்க் வீசும்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஸ்டார்க் துல்லியமாக 5 யார்கர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் ஓட முயன்ற துருவ் ஜூரெல் ரன் அவுட் ஆகவே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. டெல்லி அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஆபத்பாந்தவனாக ஸ்டார்க் நேற்று திகழ்ந்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 ஸ்டெப்ஸ், அக்ஸர் அபாரம் டெல்லி அணிக்கு 6வது போட்டியாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரேசர் மெக்ருக் சிறப்பான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றி 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கருண் நாயர் இந்த முறை டக்-அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். 34 ரன்களுக்கு டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பவர்ப்ளேவில் டெல்லி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்து 17 பந்துகளில் 18 ரன்கள் என மெதுவாக ஆடினார். நீண்ட நேரம் நிலைக்காத ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அரைசதம் நோக்கி நகர்ந்த அபிஷேக் போரெல் 49 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அருமையான கேமியோ ஆடிய அக்ஸர் படேல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 34 ரன்கள் சேர்த்து தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த டெல்லி அணி, அக்ஸரின் அதிரடியாக அடுத்த 2 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது, அக்ஸரும் 34 ரன்களில் வெளியேறினார். அஷுதோஷ் சர்மா, ஸ்டெப்ஸ் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். 20வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 4 வைடுகள், ஒரு நோ பால் என 11 பந்துகளை வீசி பவுண்டரி, சிக்ஸர் என 19 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிகமான பந்துகளை வீசிய பெருமையை சந்தீப் பெற்றார். 19 பந்துகளில் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 34 ரன்களுடனும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 10 நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி: ஆன்லைன் செயலிகளால் மளிகைக் கடைகள் காலியாகிறதா?15 ஏப்ரல் 2025 மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 கடைசி ஓவரில் சொதப்பிய சந்தீப் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் 20வது ஓவரில் 4 வைடுகள், ஒரு நோபால் ஒரு சிக்ஸர், பவுண்டரி எனத் தேவையின்றி 11 பந்துகளை வீசி 19 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரை சந்தீப் சர்மா வழக்கம்போல் வீசியிருந்தாலே ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தான் அணி வென்றிருக்கும். அப்படியில்லாமல் அவர் 19 ரன்களை சந்தீப் வழங்கியது ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பிவிட்டது. சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் ராஜஸ்தான் அணியும் 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அதிரடியாகத் தொடங்கியது. சாம்ஸன், ஜெய்ஸ்வால் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். முகேஷ், மோகித் சர்மா, விப்ராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என சாம்ஸன் வெளுத்தார். இதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால், சிறப்பாக பேட் செய்து வந்த சாம்ஸனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு வந்த ராணா, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தி மெல்ல அணியை வெற்றிக்கு நகர்த்தினர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் பந்துவீச்சில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் 51 ரன்னில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னை16 ஏப்ரல் 2025 டைப்-5 நீரிழிவு: இந்தியாவில் இளம் வயதினரையும் பாதிக்கும் புதிய வகை நீரிழிவு யாருக்கெல்லாம் வரும்?16 ஏப்ரல் 2025 ராணா அதிரடி பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த சிறிது நேரத்தில், ராணாவும் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ராணா தப்பிவிட்டார். அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது, அக்ஸர் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை ஸ்டெப்ஸ் தவறவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராணா அடுத்த 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து, 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா களத்தில் இருந்த வரை ராஜஸ்தான் அணி வென்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ராணா 51 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். வாய்பைத் தவறவிட்ட ஹெட்மெயர், ஜூரெல் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 23 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க 14 ரன்கள் சேர்த்தனர். ஹெட்மெயர் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். ஆனால், நேற்று அவரது பேட்டில் எதிர்பார்த்த ஷாட் சிக்கவில்லை. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹெட்மெயர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜூரெலிடம் கொடுத்தார். அதன் பிறகு ஸ்டார்க் 5 பந்துகளையும் யார்க்கர்களாகவும், அவுட்சைட் யார்க்கர்களாகவும் வீசவே ஒரு ரன், 2 ரன்கள் என சேர்க்க முடிந்தது. கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரெல் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடி, 2வது ரன்னுக்கு முயலும்போது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 சூப்பர் ஓவர் பட மூலாதாரம்,GETTY IMAGES சூப்பர் ஓவரில் ஹெட்மெயர், ரியான் பராக் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் சேர்க்காத ஹெட்மெயர் 2வது பந்தில் பவுண்டரியும், அடுத்து ஒரு ரன்னும் எடுத்தார். நான்காவது பந்தை சந்தித்த ரியான் பராக் பவுண்டரி விளாசவே அந்த பந்து நோ பாலாக மாறியது. 4வது பந்தில் ரியான் பராக் ரன்அவுட் ஆனார். 5வது பந்தில் ஹெட்மெயர் ரன் அவுட் ஆகவே 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டெப்ஸ், ராகுல் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல் பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் பவுண்டரி விளாசி, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டெப்ஸ் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடித் தந்தார். ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்த ஸ்டார்க் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், "நான் பேட் செய்யும் சூழலில் இல்லை, அதனால்தான் மீண்டும் வரவில்லை. என் உடல்நிலை குறித்து நாளை தெரியும். நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம். எங்களின் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் நன்றாகச் செயல்பட்டதால்தான் குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது. டெல்லிஅணியின் ஸ்கோர் இந்த மைதானத்தில் சேஸ் செய்யக் கூடியதுதான். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தைத் திருப்பியது. 20வது ஓவரில்தான் டெல்லி அணிக்கு ஸ்டார்க் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். எங்களின் வெற்றியை ஸ்டார்க் எடுத்துச் சென்றார்," என்று தெரிவித்தார். மேலும், "கடந்த சில சீசன்களாகவே சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதால் சந்தீப் சர்மாவை சூப்பர் ஓவரில் பயன்படுத்தினோம். நான் களத்தில் இல்லாதது துரதிர்ஷ்டம். ஜோப்ரா ஆர்ச்சர் இழந்த ஃபார்மை மீட்டது அற்புதம்," என்றும் குறிப்பிட்டார். அடுத்த முக்கிய ஆட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: மும்பை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) - 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) - 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpq034q00o
  24. https://www.facebook.com/reel/645568558281083
  25. இப்படி நடக்க சாத்தியமே இல்லை. தெலுங்குப் படத்திலும்…. இப்படித்தான் சில காட்சிகளை எடுப்பார்கள்.
  26. ஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக‌,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக‌ ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சன‌த்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .
  27. இதை நான் சிறு வயதில் கண்டுள்ளேன் அதாவது மடை படைத்தலில் மாமிசம்,மச்சம் படைப்பு நடை பெற்றது ..கட்டுரையாளர் படைப்பு நடக்கவில்ல என சொல்லுகிறார்🤔
  28. உங்களுக்கில்லாததா. எடுத்துக்கங்க. மண்ணைப் பத்திக் கதைச்சாலே இப்போ திக் என்டுது. அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ. 😃
  29. இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா
  30. இன்று முதல்தடவையாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். நீண்டநாள் சுமைதாங்கியாக இருந்த @goshan_che சற்று மூச்சுவிட கூடியதாக உள்ளது.
  31. சாத்திரம். பொய் அதுவும் இந்த சாத்திரி சொல்வது 100 % பொய் நம்பாதீங்கள். 🤣🤣
  32. சிங்கள தேசியவாதிகள் 70 வருடங்களாக இனவாதம் பேசி,இனவழிப்பு செய்து ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது தமிழர் என்ற இனமில்லை என சொல்லும் ஜெ.வி...பி...யை விட தமிழ் தேசியம் பேசுவது சிறப்பு ...
  33. நீங்கள் பத்திரிகை பேட்டியில் மட்டுமே செய்து செய்து வருகின்றீர்கள்🤣 கண் முன்னே எவ்வளவோ சாட்சிகள் இருந்தும் தீர்வோ அல்லது நீதியோ வழங்கப்படவில்லை ...ஐயா...
  34. GMT நேரப்படி நாளை வியாழன் 17 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 22 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் கந்தப்பு இப்போட்டியில் போட்டியில் 22 பேருக்கு முட்டைகளா அல்லது @கந்தப்பு க்கு மாத்திரம் முட்டைகளா?
  35. உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.
  36. அதே. அதுவும் அந்த 20வது பரிமாற்றம். விக்கட் பக்கமா வந்தாலும் சரி விக்கட்டுக்கு மேலால வந்தாலும் சரி, யோக்கர் பந்தாப் போட்டார். ஒரே ஒரு பந்து கொஞ்சம் பிசகி வந்தது. ஆனால் சிம்ரனால் அடிக்க முடியவில்லை. அழுத்தம் அப்பிடி. அனுபவம் பேசும் என்பது எவ்வளவு உண்மை.
  37. சிங்கம், புலிக்கு கிட்டப் போய்... எண்ணை வைக்க ஒருவருக்கும் "தில்" இல்லை. கிட்டப் போனால், கடித்து குதறி விடும் என்பதே உண்மை. அப்பாவி பிராணிகளின் மீதுதான், இவர்களின் சம்பிரதாயம் எல்லாம்.
  38. ஏன் புலி, சிங்கங்களுக்கு எண்ணை வைக்கவில்லை இவர்கள் என கூற அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.
  39. இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு கியூபாவிலா விசாரணை நடக்கும் என்று நக்கலாகச் சொன்னவர் சுமத்திரன்.மக்கள் எல்லோரும் மறதியானவர்கள் என்ற நினைப்பில் எழுதக்கூடாது.அதற்கும் ஒருபடி மேலே போய் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று சொன்னவரும் இதே சுமத்திரன்தான்.
  40. ஆமை, யானைக்கு எல்லாம் எண்ணை பூசியவர்கள், ஏன்... சிங்கம், புலி, கரடி, முதலைக்கு எல்லாம் எண்ணை பூசவில்லை. 😂 முக்கியமாக.... சிங்கத்தின் வம்சத்தில் வந்த சிங்களவர், சிங்கத்தை மறந்தது மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. 🤣
  41. எப்போதும் சீமானின் தம்பி தான் - தூஷண துரை. அதான் நேற்றே எழுதிவிட்டேனே இது தூஷண. துரையும் சீமானும் சேர்ந்து ஆடும் நாடகம் என. இனி சாட்டை யூடியூப்பில் பாஜக-அதிமுக கூட்டணியின் கொபசெ . மேடையில் நாதக கொபசெ🤣. மீசையை வச்சா இந்திரன், எடுத்தா சந்திரன்🤣. இதைத்தான் பிஜேபி பி டீம் என்பார்கள்.
  42. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள். அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.
  43. என்ன ஒரு நேர்த்தி, பாதணியால் உரசுவதுபோல் இருக்கு ......... ஆனால் எளிமையாயும் இருக்கு .......... !
  44. பாராட்டுக்கள் தர்ஷ்விகா, இவரின் IQ மிகவும் சிறந்தது, நல்ல வழிகாட்டலிருந்தால் நல்ல நிலைக்கு வரலாம்
  45. வெளிநாடு என்ற உடன கேட்பது கிடைக்கும் என எண்ணியிருக்கலாம். உதவி கேட்கும்போது எவ்வளவு காலத்திற்கு என்பதும் என்ன மாதிரியான உதவி எனவும் அறிந்து செய்யவேண்டும் அண்ணை. கல்வி கற்பதற்கான(சூம்) ஸ்மார்ட் போன்கள் 50-60 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்கலாம், ஆனால் ஐபோன் புதிது புதிய மொடல் எனில் அவர்கள் உழைத்துத் தான் வாங்கவேண்டும் என கறாராக சொல்லவேணும்.
  46. புத்தன், எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது. இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது. இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது. அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.