Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38770
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20019
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/20/25 in all areas

  1. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இயங்கிவந்த வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இவனாலும், கருணாவினாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டோ அல்லது கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலைசெய்யப்பட்டும் வந்தனர். பத்திரிக்கையாளர் நடேசனை இவனும் கருணாவும் கொன்றதன் ஒரே காரணம் அவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தை நத்தார் திருப்பலியில், ஆலயத்திற்குள் இருந்து சுட்டுப்படுகொலை செய்தது அவர் கருணாவின் பிரதேசவாதத்தினை எதிர்த்து, அவன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கூட வடபகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தான். பின்னாட்களில் வடபகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பீடாதிபதியாக வருவதை சகித்துக்கொள்ள முடியாத கருணாவும், பிள்ளையானும் அவரை கொழும்பில் வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தனர். தற்போது பிள்ளையான் எனும் பெயரில் பவனி வந்த மனிதகுலத்திற்கெதிரான இந்த மிருகம் செய்த பாதகச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. 1. கிழக்கில் பணியாற்றிய வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான கப்பம் அறவிடல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள். 2. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தித் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த, வடபகுதியைச் சேர்ந்த பிரேமினி எனும் பெண்மீது பிள்ளையானும் பிரதேசவாத வெறிபிடித்த, அவனுடைய இன்னும் ஏழு ஏவல் நாய்களும் இணைந்து நடத்திய கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அதன்பின்னர் அப்பெண்ணை துண்டங்களாக வெட்டி காட்டிற்குள் வீசியெறிந்தமையும். 3. பிரேமினியோடு இவனால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் ஆறு வடபகுதியைச் சேர்ந்த புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான புதைகுழிகளை அவர்களே வெட்டும்படி வற்புருத்தப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டு அக்குழிகளுக்குள்ளேயே புதைக்கப்பட்டமை. 4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரவீந்திரநாத்தை கொழும்பிலிருந்து கடத்திவந்து கிழக்கின் காடுகளுக்குள் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை. இவரது படுகொலைக்கான காரணம் இவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, பிள்ளையானினாலும், கருணாவினாலும் வடபகுதி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும், விசாரணைகளைக் கோரியும் வந்தமைதான் என்று சொல்லப்படுகிறது. 5. கடற்படைக் கொலைக்குழுவுடன் இணைந்து பிள்ளையான் நடத்திவந்த கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அருகில்ச் சென்று சுட்டுக் கொன்றமை. 6. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கோத்தாவினால் மிக் வானூர்திகள் கொள்வனவில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து தொடர்ந்தும் பேசிவந்ததனால் அவரைக் கொல்வதற்கு இவனுக்கும் கருணாவிற்கும் கொடுக்கப்பட்ட பணத்தொகை 50 மில்லியன் என்பது குறிப்பிடத் தக்கது. 7. இவனது மாபாதகச் செயல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல அமைந்தது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவன் தலைமையில் இலங்கையில் பலவிடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆலய மற்றும் விடுதிப் படுகொலைகள். மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் நேரடியாகப் பங்காற்றியமைக்காக இவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கோத்தபாயவின் மீள்வருகைக்கான தாக்குதல் ஒன்றிற்குத் தயார்ப்படுத்தி, சிறைக்குள் இருந்தவாறே அத்தாக்குதல்களை நெறிப்படுத்தி , கோத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினான். இதற்காக இவனுக்கும் இவனது கொலைக்குழுவிற்கும் வழங்கப்பட்ட பணம் 65 மில்லியன் ரூபாய்கள். திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷா எனப்படும் சிறுமியைக் கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைசெய்து சாக்கினுள் அடைத்து வீதியில் வீசிச்சென்றது. பின்னர் இதில் ஈடுபட்டவர்களை பொலீசார் கைதுசெய்தபோது, தனது பெயர் வெளியே வந்துவிடும் என்பதற்காக பொலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து வாகனத்தில் பயணிக்கும்போதே சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பில் இன்னொரு பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, கிடைக்காது போகவே, அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலைசெய்து கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது. வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டியது. ஆரம்பத்தில் உஇதனை மாணவர்கள் கண்டுகொள்ளாதுவிடவே பிள்ளையானும் அவனது அடியாட்களும் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்து மூன்று வடபகுதியைச் சேர்ந்த மாணவிகளைக் கடத்திச் சென்று கூடுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி ஏனைய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அச்சுருத்தல் விடுத்தது. இவற்றினை விடவும் இவனாலும், இவனது கொலைக்குழுவான ட்ரிபோலிப் பிளட்டூனினானும் நடத்தப்பட்ட கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் நூற்றுக்கணக்கானவை. புலிகளியகத்திலிருந்து பிரிந்து பிரதேசவாத வெறியும், பணத்தாசையும் கொண்டு இவன் புரிந்துவந்த மனிதகுலத்திற்கெதிரான செயல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில பிரபல பெயர்களையும், சம்பவங்களையும் தவிர பெயர் தெரியாத பல தமிழர்களை இவன் கொன்றிருக்கிறான். ஆனாலும், வடபகுதித் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து , கிழக்கு மாகாணத் தமிழர்களை தலை நிமிரச் செய்து, கிழக்கின் விடிவெள்ளியாக இவன் இருப்பதாக நினைத்த கிழக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இவன் சிறையில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஐம்பதினாயிரம் வாக்குகளுக்கு மேலாக வாரி வழங்கி, இவனைத் தமது தமது வரலாற்று நாயகனான முடிசூடி அழகுபார்த்தார்கள். பிரதேசவாதம் கண்களை மறைக்க, அதனை அபிவிருத்தி எனும் வெற்றுக்கோசத்திற்குள் மறைத்து மனிதவுருவில் வலம்வந்த நச்சுப்பாம்பைத் தமது தலைமகனாக ஏற்றி அகமகிழ்ந்தார்கள். தாம் மகுடம் சூட்டி, அழகுபார்த்து, உச்சிமோர்ந்து, பரவசமடைந்து, பல்லக்குத் தூக்கிய இந்த மிருகத்தின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன இப்போது. இனியாவது இவனும் இவனது சகாவான கருணாவும் பேசிவந்த பிரதேசவாதம் என்பது போலியானது என்பதை இவர்கள் உணர்வார்களா? https://www.youtube.com/watch?v=hQk-7Hp5EFM https://www.youtube.com/watch?v=p0cZ33gAi4c
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் எவரும் நிலைத்து ஆடாததாலும், பின்னைய ஓவர்களில் எதிரணியின் இறுக்கமான பந்து வீச்சாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான தேவ்தத் படிக்கலின் 61 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலியின் ஆட்டத்தாலும் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விரைவில் பவிலியனுக்குத் திரும்ப 17 வயதில் முதலாவது ஐபிஎல் போட்டியில் நுழைந்த ஆயுஷ் மாத்ரே மின்னல் வேகத்தில் 32 ஓட்டங்களை எடுத்தார். வேகமாக அடித்தாடி அரைச் சதங்கள் பெற்ற ரவீந்திரா ஜடேஜாவினதும், ஷிவம் டுபேயின் ஆட்டங்களால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடன் 15.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களையே எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தக்கவைத்துள்ளார். இறுதி இடத்தில் இருந்த @goshan_che மூன்று பேரைக் கீழே தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார். கடைசிப் படியில் நிற்க பலர் முண்டியடிக்கின்றனர்!
  3. ரம்பா, விஜய், பிரியங்கா… என்று, எமக்கு ஏகப்பட்ட சம்பந்திகள்.
  4. நலங்கிள்ளி என்று ஒரு மன்னன்..... 😂சங்க காலத்து மன்னன்..... கோவூர் கிழார் என்ற புலவர்😂 அவனை மட்டுமே பின்தொடர்ந்து..... அவன் புகழ் பாடி வந்தார்..... ஒருமுறை மந்திரி ஒருவர் கேட்ட கேள்விக்கு..... கிழார் , நான் நலங்கிள்ளி கூட்டத்துக் கலைஞன்....... பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன்........... அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று மட்டுமே பதில் கூறினார் அது போல இங்கே எங்கள் புலவர் முதல்வர் நந்தனாரையே பின்தொடர்வது அவருடைய புகழ் பாட என்பதே அன்றி வேறொன்றுமல்ல😇 வாழ்க முதல்வர் புகழ்
  5. GMT நேரப்படி நாளை திங்கள் 21 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் செம்பாட்டான் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. உங்கட சங்கதியே வேற. இப்பிடிச் செய்தால் நாம என்ன பண்ண. எனக்கு இரண்டும் புஷ்வானம். இரண்டுபேரும் வீட்டில சாப்பிடாம போற போற இடமெல்லாம் தின்டுகொண்டு. இவங்கள எப்பிடி நம்பி ஒரு விளையாட்ட விளையாடுறது. இது அடுத்த கட்ட வேலை. போட்டுப் பிளந்து விட்டுக்கிருக்கு. சென்னையின் கதி அதோ கதிதான். அடுத்த அடுத்த வருசம் பார்ப்பம். சென்னையைத் தெரிவுசெய்த எல்லாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
  7. வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான் 19 Apr 2025, 8:33 AM மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள். இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது. நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/
  8. ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற இடம் பெற்றன .4 ஆம்மாடியின் இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது . 1970களின்முற்பகுதியில் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக எழுந்த தெற்கு வடக்கு இளைஞர்களின் கதை வதைகளின் கதைகளான காலமது. பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் பல தசாப்தங்கள் கடந்து 1970களின் அனுபவத்தை புதிய புலம் பெயர் மற்றும் சமூக அனுபவ வெளிச்சத்தில் அகாலம் என்ற தலைப்பில் எழுதினார். பிரான்சின் ஈழ முற்போக்கு அணியின் பெண் ஆளுமை அவர். தமிழ் சிங்கள ஆளும் வர்க்க மன நிலை இந்த புத்தகத்தின் ஊடாக உணர்த்தப்படுகிறது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூக பிரக்ஞையுடன் முன்னெடுத்த இளைஞர் இயக்க வரலாற்றில் மறைந்த புஷ்பராஜா அவரது சகோதரிபுஸ்பராணி அவர்களின் பங்களிப்பு குறித்துரைக்கப்பட வேண்டியது இவர்கள் ஈழப் போராட்ட இளைஞர் இயக்க வரலாற்றின் முன்னோடிகள் சின்னங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். மூலம் – Sritharan Thirunavukarsu – Varathar Rajan Perumal https://globaltamilnews.net/2025/214472/
  9. பாக்கு நீரிணை ஒற்றைக் காலுடன் நீந்திக்கடந்து சாதனை படைத்த இந்தியப் பெண் Vhg ஏப்ரல் 19, 2025 பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர். அனுமதி கிடைத்த நிலையில், நேற்று (18-04-2025) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர். மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி. இவர் முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார். அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் போலீசார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார். மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து இன்று (19-04-2025) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார். ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/04/blog-post_229.html
  10. முதல்வர் @நந்தன் வாழ்த்துக்கள்.
  11. இது பம்பலுக்கு செய்திருக்கிறார். நண்பர்கள் குசும்பு. அடுத்த நொடி சிரேயாஸிற்ற நடந்து போய் சிரிச்சுக் கதைத்தார். நந்தனின் நர்த்தனம் தொடர்கிறது. இனி அவர் ஆட்சிதான். புலவரும், எங்கிருந்தோ வந்தான் எனக்காக யார் என்றான். இரண்டாம் இடத்தை நான் பெறவே என்ன தவம் செய்தனை. அவருக்கு இப்ப தலைகால் புரியாதே.
  12. கடைசியில் இந்த கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதியின் தமிழ் தேசியம் என்பது பொலிடோல் குடிச்சிட்டு பாடையில் போ படு என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.
  13. ஆனால் இன்று தமிழும் இலங்கையில் ஒரு உத்தியோகபூர்வ ஆட்சி மொழி. இதை கொண்டு வந்தது தமிழ் தேசியவாதிகளால் இன்றும் நிராகரிக்கப்படும் இந்திய இலங்கை ஒப்பந்தம். 49 வீத சனத்தொகை அதிகரிப்புக்கு சிறு இனக்கலவரம் மூலம் மலையக மக்கள் வடமாகாணத்தில் குடியேறியது காரணம் என்பது தவறான தகவல். அவ்வளவு பெரிய ஜனக்கூட்டம் வடமாகாணம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் அதை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்தாலும் அதன் மூலம் தமிழரின் ஜனத்தொகை வட பகுதியில் அதிகரிக்க தமிழ் தேசியத்தின் பலம் அதிகரிக்க சிங்களவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றே கூறவேண்டும். ஆனால் அதன் பின்னர் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் தமிழரின் ஜனதொகை குறைய காரணமானது.1950 ல் இலங்கை சுதந்திர மடைந்த காலப்பகுதில் மொத்த சனத்தொகை 78 லட்சம் மட்டுமே. இன்று இரண்டு கோடிக்கு மேல். கிட்ட தட்ட மூன்று மடங்கு. வட கிழக்கு தமிழரின் எண்ணிகை மேலும் தேய்வடைந்து செல்வது தமிழ் தேசிய இருப்புக்கு துணை புரியாது. சர்வதேசத்திடம் நீதி கேட்கும் போது அவர்களும் இதை ஏற்கப்போவதில்லை. இந்த தாயகம் தேசியம் எல்லாம் எமக்குள் மட்டும் அரசியல் சுய நலத்திற்காக பேசிக்கொள்ளும் அளவுக்கு சுருங்கிவிட்டது.இன்றும் கூட ஒற்றுமையாக நடை முறை சாத்தியமான ஒரு தீர்வை பெற்று தமிழரை அரசியல், கல்வி பொருளாதார ரீதியில் பலப்படுத்துவோம் என்ற பொறுப்புணர்வு தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர்ந்து தேசிய வேட தாரிகளுக்கும் அறவே இல்லை. எப்படியோ யுத்தம் முடிந்தது நல்லதே. இல்லையெனில் தமிழ் தேசியத்திற்கான விலை என்று கூறி இருப்பவர்களையும் கடந்த 15 வருடங்களில் காவு கொடுத்திருப்பார்கள். ஒட்டு மொத்தமாக தமிழ் தேசியவாதிகளின் அரசியல் என்பது தமிழருக்கு கொடுத்தது அழிவுகளையும் தமிழ் தேசியத்தை மேலும் சிதைத்ததை மட்டுமே என்பது தான் உண்மை. வாயால் மட்டுமே தமிழ் தேசியம் கதைப்பார்கள். அதுவும் தமது சுய நலத்திற்காக. இன்று மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு காரணமே தமிழ் தேசிய வாதிகளின் அழிவு அரசியலை புரிந்திருப்பதாலேயே.
  14. நான் எப்போது அடிமையாயிருந்தேன்! September 3, 2009 நேர்காணல்: புஷ்பராணி ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஷ்பராணி. தலைமறைவுப் போராளிகளுக்குச் சோறிட்டு வீட்டுக்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியல் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி. தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஷ்பராணி 1986ல் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார். ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராணியைச் சந்தித்து எதுவரை இதழுக்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது. சந்திப்பு: ஷோபாசக்தி நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. வசதியான குடும்பம் இல்லையென்றாலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம் எங்களது. எங்களது கிராமத்தில் கரையார்களே ஆதிக்கசாதியினர். அவர்கள் மத்தியில் நாங்கள் ஒரேயொரு தலித் குடும்பம். என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. சமூகத்திலிருந்து நாங்கள் புறமாக வைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு நாங்களே துணைவர்கள், தோழர்கள். குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் போத்தலில் தேநீர் குடிக்கவோ, கோயிலுக்கு வெளியில் நின்று சாமி கும்பிடவோ நாங்கள் தயாரில்லை. புறக்கணிப்புக்கு புறக்கணிப்பையே நாங்கள் பதிலாகக் கொடுத்தோம். எங்கள் காலத்தில் எங்கள் குடும்பம் சாதித் தொழிலிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனது தந்தையாரும் மூத்த சகோதரர்கள் இருவரும் புகையிரதத் திணைக்களத்தில் வேலை பார்த்தார்கள். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். ஒரு ஆடு போய் அடுத்த வீட்டு இலையைக் கடித்தால் போதும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். சண்டையின் முதலாவது கேள்வியே ‘எடியே உங்களுக்கு கரையார மாப்பிள்ளை கேக்குதோ” என்பதாகத்தானிருக்கும். ஆட்டுக்கும் கரையார மாப்பிள்ளைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் பதிலுக்கு எங்களைக் கலியாணம் கட்டத் தகுதியுள்ள கரையான் இங்கே இருக்கிறானா? எனத் திருப்பிக் கேட்போம். எங்கள் கிராமத்தில் நான் அறியாத காலத்தில் எங்களைத் தவிர வேறு சில தலித் குடும்பங்கள் இருந்தனவாம். அவர்கள் எல்லோரும் பிழைப்புக்காகவும் வேறுகாரணங்களிற்காவும் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்பும் கூட எனது தந்தையார் அங்கிருந்து போக விரும்பவில்லை. எங்கள் அய்யா எங்களை ராங்கியாகத்தான் வளர்த்தார். சாவது ஒருமுறைதான் எதுவந்தாலும் எதிர்ந்து நில்லுங்கள் என்று சொல்லிச் சொல்லித்தான் எங்களை வளர்த்தார். நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம். வாயால் பேச வேண்டிய இடங்களில் வாயாலும் கையால் பேச வேண்டிய இடங்களில் கைகளாலும் பேசினோம். எங்கள் குடும்பமே ஒரு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போலத்தான் இயங்கி வந்தது. நான் பத்தாவது வரைக்கும் மயிலிட்டி கன்னியர் மடத்தில் படித்தேன். பொதுவாக இந்துக்கள் கன்னியர் மடங்களில் படிப்பதற்கு வருவதில்லை. இந்துப் பாடசாலைகளிலோ அப்போது தலித்துகள் வேண்டாப் பிள்ளைகளாக நடத்தப்பட்டார்கள். கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரிகள் பணக்காரர்களுக்குப் பல்லிளித்து ஏழை மாணவிகளைத் துரும்பாக மதித்தார்கள். நான் படிப்பில் கெட்டிக்காரியாயிருந்த போதும், உயர்கல்வியைத் தொடர இளவாலை கன்னியர் மடத்தில் எனக்கு இடம் கிடைத்தபோதிலும் குடும்பச் சூழ்நிலையால் என்னால் பத்தாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை. அப்போது கிராமங்கள் தோறும் பெண்களிற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வண்ணம் மாதர் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. எங்கள் கிராமத்திலும் அவ்வாறான ஒரு மாதர் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென எனக்கு ஆர்வமிருந்தபோதிலும் ஆதிக்க சாதிப் பெண்கள் என்னுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால் அந்த எண்ணம் நிறைவேறவேயில்லை. நான் ‘தமிழரசுக் கட்சி’யில் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அறுபதுகளில் தலித் மக்கள் மத்தியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள்தான் செல்வாக்கோடு திகழ்ந்தன. நீங்கள் எப்படித் ‘தமிழரசுக் கட்சி’யிடம் ஈர்க்கப்பட்டீர்கள்? எங்களது தந்தையார் நீண்டகாலமாகவே தமிழரசுக் கட்சியின் ஆதராவாளராயிருந்தார் என்பது ஒரு காரணமாயிருந்தாலும் அன்றைய காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிமாவின் கூட்டரசாங்கத்தில் சேர்ந்திருந்ததாலும் அந்தக் கட்சிகளின் தலைமையில் சிங்களவர்களே இருந்ததாலும் எனக்குக் கொம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதுவித ஈர்ப்புமிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களைப் பார்க்கப் போவது என்றளவில்தான் முதலில் என்னுடைய அரசியல் ஈடுபாடு இருந்தது. எழுபதுகளின் தொடக்கத்தில் புஸ்பராஜா யாழ்ப்பாணத்திற்குப் படிக்கச் சென்றபோது அவருக்கு பத்மநாபா, வரதராஜப் பெருமாள், பிரான்ஸிஸ் (கி.பி.அரவிந்தன்) போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இளைஞர்கள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தனிநாடு குறித்து இவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டுமிருப்பார்கள். ‘தமிழர் கூட்டணி’யினரின் செயலற்ற தன்மையில் அதிருப்தியடைந்த இவர்களைப் போன்ற இளைஞர்கள் இணைந்து 1973ல் புஸ்பராஜாவின் தலைமையில் ‘தமிழ் இளைஞர் பேரவை’யை உருவாக்கினார்கள். தவராஜா, சரவணபவன், வரதராஜப்பெருமாள், பத்மநாபா, பிரான்ஸிஸ் (கி.பி. அரவிந்தன்) போன்றவர்கள் இளைஞர் பேரவையைத் தொடக்கியதில் முக்கியமானவர்கள். புஸ்பராஜாவை என்னுடைய தம்பி என்பதை விட என்னுடைய அரசியல் தோழர் என்று சொல்வதே பொருந்தும். ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்தாலோ ஒரு நாவலை வாசித்தாலோ அவர் என்னோடு அதுகுறித்துத் தீவிரமாக உரையாடுவார். அதுபோலவே அரசியல் குறித்தும் என்னோடு ஆழமாக விவாதிப்பார். புஸ்பராஜாவின் வழியாகத் தமிழ் இளைஞர் பேரவையில் நானும் இயங்கத் தொடங்கினேன். தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற நாற்காலி அரசியலுக்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் பேரவையின் அரசியல் திட்டங்களும்கூட கூட்டணியை அடியொற்றிய வெறும் தேசியவாதமாகத்தானேயிருந்தது. சாதியம், யாழ்மையவாதம் போன்ற உள்முரண்களை அவர்களும் கண்டுகொள்ளவில்லையே? இப்போது அந்தத் தவறை நான் உணர்கிறேன. ஆனால் அப்போது எங்களுக்குத் தமிழர்கள் என்ற ஒற்றையடையாளமும் தனிநாடு என்ற இலட்சியமுமே முக்கியமானதாகப்பட்டது. அந்த இலட்சியத்தை அடைந்துவிட்டால் மற்றைய முரண்களைத் தீர்த்துவிடலாம் என்றே கருதினோம். நாங்கள் அமைக்கப்போகும் தமிழீழம் சாதிமத பேதமற்ற நாடாகவிருக்கும் என நம்பினோம். இன முரண்பாடுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். அப்போது நீங்கள் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து ஒருபோதும் இந்த நாட்டில் வாழ முடியாது என்பதில் உறுதியாயிருந்தீர்களா? ஆம் மிகவும் உறுதியாயிருந்தேன். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்தான் அரசின் சேவைத்துறைகளில் நிறைந்திருந்தார்கள் என்றொரு பேச்சு உண்டு. உண்மையில் காலனிய காலத்தில்தான் அரச சேவைத் துறைகளுக்குள் தமிழர்கள் நிறைந்திருந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு சிங்களத் தேசியவாதம் வீரியத்துடன் உருவாகி வந்தபோது தமிழர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். இராணுவத்திலும் பொலிஸ்துறையிலும் தமிழர்கள் அரிதாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். நடந்த இனக் கலவரங்களும் இத்தகைய புறக்கணிப்புகளும் முக்கியமாகத் தரப்படுத்தல் முறையும் எங்களை அந்த முடிவை நோக்கித் தள்ளின. தரப்படுத்தல் திட்டம் ஒரு இனவாதத் திட்டம் என இப்போதும் கருதுகிறீர்களா? இல்லை. பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை என்றவாறு தரப்படுத்தல் திட்டம் சீரமைக்கப்பட்டபோது இலங்கையின் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு முன்னுரிமைகள் கிடைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் முன்னுரிமையும் நன்மையும் பெற்றிருக்கின்றன. ஆனால் அதையும் யாழ்ப்பாணத்தான் இயன்றளவு தட்டிப்பறிக்க முயன்றதுதான் சோகம். யாழ்ப்பாணத்து மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களில் பதிவுசெய்து அங்கிருந்து பல்கலைக் கழக அனுமதியைக் குறுக்கு வழியில் பெற்றுக்கொண்டதும் நடந்தது. ஆனால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்த போரால் யாழ் மாவட்டம் வெகுவாகப் பாதிப்புற்றிருக்கிறது. சகல உள்கட்டுமானங்களும் நொறுங்கியுள்ளன. எனவே இப்போது யாழ் மாவட்டத்தையும் பின்தங்கிய பகுதியாக அறிவித்துக் கல்வியில் முன்னுரிமை வழங்குவது அவசியமானது. வெறுமனே கல்வியில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள், நாடாளுமன்ற உறுப்புரிமை போன்ற சகல துறைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் பின்தங்கியவர்களிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் இளைஞர் பேரவை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பதில் உறுதியாயிருந்தா? ஆம். அது மேலுக்கு உண்ணாவிரதம், பேரணிகள் என்று அறப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடக்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது. ஆனால் அதற்கான நிதிவசதி அதனிடமில்லை. யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு இடம் பெறுவதிலிருந்து தபாற் செலவுகள், பயணச் செலவுகள் போன்றவற்றிற்கும் அது தமிழர் கூட்டணியையே நம்பியிருந்தது. தமிழர் கூட்டணியோ இந்தத் துடிப்பான இளைஞர்களை தங்களது பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த முயன்றுகொண்டிருந்தது. புஸ்பராஜா, பத்மநாபா, தங்கமகேந்திரன் போன்ற இளைஞர்கள் கைகளில் துருப் பிடித்த துப்பாக்கியும் ஈழக் கனவுமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள். ஒருசில இளைஞர்களையும் துருப்பிடித்த துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது கொடுத்தது? அது அரசியல் சித்தந்தப் பலமற்ற ஒரு வீரதீர மனநிலையும் பொறுப்பற்ற முட்டாள்தனமும் என்பதை நான் இப்போது ஒப்புக்கொள்வேன். ஆனால் அன்றைய நிலையில் வெகு சுலபமாகத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் தமிழர்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். 1975ல் நான் ஹட்டன் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது எப்போது தமிழீழத்தை அடைவீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ‘இன்னும் அய்ந்து வருடங்களில் நாங்கள் ஈழத்தை வென்று விடுவோம்’ எனப் பதில் கூறினேன். அது உண்மையென்றும் நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் என்னிடம் இன்னொரு கேள்வியும் கூட்டணியின் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சியாலும் பின்பு தமிழர் கூட்டணியாலும் வளர்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டணியினருக்கு எதிராகவே திரும்புவது என்ன நியாயம் எனக் கேட்டார்கள். ‘நல்லாசிரியன் எல்லாக்காலமும் தவறிழையான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போது கூட்டணியினர் பாராளுமன்றப் பதவிகளிற்காகத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்றேன் நான். இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டணியினர் தமது அப்புக்காத்து மேட்டுக்குடிக் குணங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தார்களில்லை. கூட்டணித் தலைவர்களில் பலர் மேட்டுக்குடிச் செருக்கும் திமிரும் கொண்டவர்கள் என்பதே எனது அனுபவம். ஆனால் தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் ஒரு பிரிவுபோல, அடியாட்கள் போல செயற்பட்டதாக ஒரு கருத்துள்ளதே? இல்லை. அது தவறான கருத்து. தமிழ் இளைஞர் பேரவை எக்காலத்திலும் கூட்டணிக்குக் கட்டுப்பட்டதாக இருக்கவில்லை. இந்த உண்மையை புஸ்பராஜா தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். சொல்லப்போனால் மாணவர்களினதும் இளைஞர்களினதும் தன்னெழுச்சியானதும் அமைப்புரீதியானதுமான போராட்டங்களின் முன்பு கூட்டணிதான் தனது செல்வாக்கை மக்களிடம் மெதுமெதுவாக இழந்துகொண்டிருந்தது. இளைஞர்களின் நிழல்களில் நின்றுதான் கூட்டணி அதற்குப் பின்பு தனது அரசியலைத் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் அய்ம்பது இடங்களில் நடத்திய தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களில் கூட்டணியினர் தங்களை வலியப் புகுத்த வேண்டியிருந்தது. நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அனர்த்தங்களின்போது நீங்கள் அங்கிருந்தீர்களா? ஆம். நான் அங்குதானிருந்தேன். மேடையில் நயினார் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ‘உலகத் தமிழர் இளைஞர் பேரவை’த் தலைவர் இரா. ஜனார்த்தனன் மேடையில் தோன்றி மக்களைப் பார்த்துக் கையசைத்தார். அப்போது, பொலிசார் மாநாட்டைக் குழப்பினார்கள். துப்பாக்கிச் சூடுகளும் கண்ணீர்புகை வீச்சுகளும் நடந்தன. மக்கள் கலைந்து ஓடத்தொடங்கினார்கள். துப்பாக்கிச் சூட்டால் மின்சாரக் கம்பிகள் அறுந்து சனங்கள்மீது விழுந்தன. அன்று ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே துப்பாக்கி வெடிச்சத்தமும் ஓலக்குரல்களுமாய் தமிழராய்ச்சி மாநாடு சீர்குலைந்தது. அப்போது பொன். சிவக்குமாரன் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொண்டர்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த அனர்த்தம் எங்கள் எல்லோரையும் விட சிவக்குமாரனைத்தான் அதிகம் பாதித்திருந்தது. அவருடைய போராட்ட முனைப்புகள் அதிதீவிரம் பெற்றன. ஆறு மாதங்களிற்குள்ளாகவே, தோல்வியில் முடிந்த கோப்பாய் வங்கிக் கொள்ளையின்போது தப்பிக்க முடியாமல் எப்போதும் சிரித்த முகத்தோடும் எள்ளளவும் சுயநலமுமில்லாத உள்ளத்தோடும் இயங்கிய சிவக்குமாரன் சயனைட் அருந்தி இறந்துபோனார். அரசியற் பிரச்சினைகளைத் தனிநபர்களை அழித்தொழிப்பு செய்வதன் மூலம் அணுகும் கொலைக் கலாச்சாரத்தை சிவக்குமாரன் தொடக்க முயன்றாலும் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்ததன் மூலம் பிரபாகரன் தொடக்கி வைத்தார். துரையப்பாவின் கொலையை நீங்கள் எவ்விதமாகப் பார்த்தீர்கள்? நாங்கள் அந்தக் கொலைச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ந்தோம். நான் குலமக்கா வீட்டுக்குச் சென்றபோது எனது சக இயக்கத்தோழி கல்யாணி என்னைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துரையப்பா ஒன்றும் இலேசுப்பட்ட ஆளல்ல. தமிழர் கூட்டணியின் ஆதரவாளர்களைத் தேடித் தேடித் தனது நகரபிதா பதவியின் முலம் அவர் தொல்லைகள் கொடுத்தார். குலமக்காவின் வீட்டு மதிற்சுவர் கூட துரையப்பாவின் உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டது. ஆனால் இன்று சிந்திக்கும்போது அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்க்கும் அந்தக் கலாச்சாரம் இன்று தனது சொந்த இனத்துக்குள்ளேயே துரையப்பாவில் தொடங்கி சபாலிங்கம் வரைக்கும் ஆயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டதையும் என்னால் உணர முடிகிறது. இந்தப் பதற்றமான காலகட்டத்தில் உங்களின் அரசியற் செயற்பாடுகள் எதுவாயிருந்தன? துரையப்பா கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தமிழ் இளைஞர் பேரவை பிளவுபட்டுப் போயிற்று. அப்போது மக்கள் மத்தியில் வேகமாகச் செல்வாக்குப் பெற்றுவந்த இளைஞர் பேரவையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூட்டணியினர் முயன்றனர். மங்கையயற்கரசி அமிர்தலிங்கம் மேடைக்கு மேடை இது மாவை சோனாதிராசாவால் தொடங்கப்பட்ட அமைப்பு என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் உண்மையில் மாவை சேனாதிராசா தமிழ் இளைஞர் பேரவையில் இருக்கவேயில்லை. இளைஞர் பேரவைக்குள்ளும் கனக மனோகரன், மண்டூர் மகேந்திரன், மதிமுகராஜா, மன்னார் ஜெயராஜா போன்ற கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பங்களைத் தொடங்கினர். இறுதியில் இளைஞர் பேரவை பிளவுற்று தங்கமகேந்திரன், சந்திரமோகன், புஸ்பராஜா, பிரான்ஸிஸ், வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தைத் (T.L.O) தொடங்கினார்கள். துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து புஸ்பராஜா உட்பட பெரும்பாலான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். புலோலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து நானும் கைதுசெய்யப்பட்டேன். புலோலி வங்கிக் கொள்ளையில் உங்கள் பங்கு என்ன? இயக்கம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தீர்களா? இயக்கத்தை வளர்ப்பதற்கான நிதியாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கொள்ளைகள் அவசியம் என்றுதான் நான் கருதினேன். தங்கமகேந்திரன், சந்திரமோகன், வே. பாலகுமாரன் (முன்னைய ஈரோஸ் தலைவர்), கோவை நந்தன் போன்றவர்களின் திட்டமிடலிற்தான் புலோலி வங்கி கொள்ளையிடப்பட்டது. கொள்ளைப் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இரகசியமாக் கடத்திச் செல்வதற்கு அவர்களிற்கு நானும் கல்யாணியும் உதவி செய்தோம். வங்கிக் கொள்ளையைத் துப்புத் துலக்கிக்கொண்டிருந்த பொலிஸாருக்கு பிரதீபன் என்றொருவர் துப்புகளை வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். பிரதீபன் அப்போது இயக்க ஆதரவாளராக நடித்து தங்கமகேந்திரனின் நட்பைப் பெற்றிருந்தார். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் துரையப்பா கொலையைத் தொடர்ந்து சிறைப்பட்டிருந்த நிலையில் தங்கமகேந்திரனும் சந்திரமோகனும்தான் இயக்கத்தை தலைமைதாங்கி வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த உளவாளி பிரதீபன் தன்னை தங்கமகேந்திரனின் நண்பர் என்று அறிமுகப்டுத்திக்கொண்டு என்னிடம் வந்தார். தங்கமகேந்திரனும் அவர் தனது நண்பரென்றும் இயக்க ஆதரவாளரென்றும் என்னிடம் உறுதிப்படுத்தினார். முடிவில் அந்த உளவாளி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்தபோது நான் வீட்டின் பின்புறத்தால் ஓடித் தப்பித்துக்கொண்டேன். பொலிஸார் எனது பெற்றோர்களையும் எனது தம்பி, தங்கைகளையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். எனது பெற்றோர்களும் சகோதரனும் சகோதரிகளும் பொலிஸ்நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எனது தம்பி வரதன் அனுராதபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டார். தங்கை ஜீவரட்ணராணி வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்க நான் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்ற தலைமைத் தோழர்களைத் தேடிப் போனேன். அவர்கள் குருநகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார்கள். பொலிஸார் என்னை வேறுகாரணங்களிற்காகத் தேடியிருக்கலாம் எனவும் வங்கிக் கொள்ளை குறித்துப் பொலிஸாருக்குத் துப்புத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் கூறி அந்த அதிபுத்திசாலித் தோழர்கள் என்னைப் பொலிஸாரிடம் சரணடையுமாறு சொன்னார்கள். நான் ஒரு வழக்கறிஞர் மூலம் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன். நான் பொலிஸ் நிலையத்திற்குள் கால் வைத்ததுமே பொலிஸார் கேட்ட கேள்விகளிலிருந்து புலோலி வங்கிக்கொள்ளை குறித்து எல்லாத் தகவல்களையும் பொலிஸார் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். நான் எனது வழக்கறிஞரிடம் இரகசியமாகச் சொன்னேன்: “தங்கமகேந்திரனிடம் போய்ச் சொல்லுங்கள், அவர்கள் என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள்” . விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது. குறிப்பாக எங்கள் இயக்கத்தோடு தொடர்புடைய பெண்கள் குறித்தே என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். வங்கிக்கொள்ளை குறித்த தகவல்கள் எதுவும் அவர்களிற்குத் தேவையாயிருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை எனது தோழர்கள் முன்னமே படம் போட்டுப் பொலிஸாருக்கு விபரித்திருந்தார்கள். உங்கள்மீதான விசாரணைக்குப் பொறுப்பாயிருந்தவர் சித்திரவதைகளிற்கு பேர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்று அப்போது செய்திகள் வந்தன. அவர்தானா உங்களை விசாரணை செய்தார்? இல்லை. என்னை இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையிலான குழுவே விசாரணை செய்தது. அந்த பஸ்தியாம்பிள்ளையும் இந்தப் பத்மநாதனும் பின்னர் புலிகளால் கொலைசெய்யப்பட்டனர். என்னை சித்தரவதை செய்ததில் சண்முகநாதன், கருணாநிதி, ஜெயக்குமார் போன்ற அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கிருந்தது. இவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் கொல்லப்பட்டனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் விசாரணை அதிகாரிகள் எல்லோரும் வெள்ளாளர்களாகவேயிருந்தனர். அவர்களிடம் சிக்கிய நானும் கல்யாணியும் தலித்துகளாகயிருந்தோம். நாங்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பள்ளி, நளத்தி என்று எங்கள் சாதிப்பெயர்களால் இழிவு செய்யப்பட்டே தாக்கப்பட்டோம். பத்மநாதனைப் பொறுத்தவரை இந்த வழக்கை முடித்துவைத்து பதவி உயர்வு பெறவேண்டும் என்ற அதீத துடிப்பு அவரிடம் காணப்பட்டது. ஆனாலும் நானும் கல்யாணியும் பெண்கள் என்ற வகையில் அவர் எங்களை ஓரளவு கண்ணியமாகவே நடத்தினார். மற்றைய பொலிஸாரிடமிருந்து பாலியல்ரீதியான தொந்தரவுகள் வந்தபோது அவரே எங்களை அவற்றிலிருந்து காப்பாற்றினார். ஆனால் சித்திரவதைகளில் அவர் குறை வைக்கவில்லை. என்னைக் குப்புறப்படுக்கப் போட்டுவிட்டு அவர்கள் பொல்லுகளால் என்னைத் தாக்கியபோது நான் ‘அடியுங்கடா என்னை! கொல்லுங்கடா என்னை” என்று அலறினேன். அந்தச் சத்தம் முழு யாழ்ப்பாணத்திற்கும் கேட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வரத்தினம் என்ற பொலிஸ்காரர் கண்ணீர்விட்டு அழுததை என்னால் மறக்க முடியாது. செல்வரத்தினம் இப்போது பிரான்ஸில்தான் வாழ்கிறார். எனது போராட்ட அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் நான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். எனது நூலை செல்வரத்தினத்தைக் கொண்டுதான் நான் வெளியிடுவேன். எப்போது வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்? யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு முதலில் யாழ் கோட்டைக்குள்ளிருந்த கிங் ஹவுஸில் அடைத்து வைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களில் அங்கிருந்து வெலிகடைச் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். வெலிகடைச் சிறையில்தான் நான் ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்டு தெனியாயச் சண்டையில் தலைமை வகித்துப் போராடிய தோழிகளான புத்த கோறளையையும் சந்திரா பெரேராவையும் சந்தித்தேன். அவர்களுக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படியிருந்தன? அவர்கள் அற்புதமான தோழிகள். அவர்கள் எங்களிடம் தமிழ் படித்தார்கள். நான் அவர்களிடம் சிங்களம் படித்தேன். நாங்கள் அரசியல் விவாதங்களையும் உரையாடல்களையும் மனம்விட்டுச் செய்தோம். அந்தச் சிங்களத் தோழிகள் என்னையும் கல்யாணியையும் சிறைக்குள் தாய் மாதிரிப் பாதுகாத்தார்கள். அப்போது சிறைக் கண்காணிப்பளாராயிருந்த சைமன் சில்வாவும் அருமையான மனிதர். அவரின் நற்பண்புகள் குறித்து அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசி. ஆனந்தன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். எனவே சிறை வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. நான் சிறையிலிருந்த காலங்களில் நிறையவே வாசித்தேன். சிறை நூலகத்திலிருந்து புத்தகங்கள் கிடைக்கும். அந்த நூல்கள் ஆண்கள் சிறையிலிருந்த எங்களது இயக்கத் தோழர்களுடன் நாங்கள் இரகசியமாகத் தகவல்களைப் பரிமாறவும் எங்களுக்கு உதவின. நாங்கள் நூலகத்திற்குத் திருப்பியனுப்பும் புத்தகங்களை அவர்களும் அவர்கள் அனுப்பும் புத்தகங்களை நாங்களும் பெற்றுக்கொள்வோம். புத்தகங்களின் பக்கங்களில் மெல்லிய கோடுகளிட்டும் ஓரங்களில் எழுதியும் சங்கேதங்களாய் நாங்கள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். புகழ்பெற்ற வழக்கறிஞர்களால் நிரம்பியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களின் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்ததா? அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த என். நவரத்தினம் நாடாளுமன்றத்தில் நான் கைது செய்யப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பியிருந்தார். அப்போது பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் “நீங்களும் ஒரு பெண். அந்தத் தாயுள்ளத்துடன் நீங்கள் புஷ்பராணியை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கேட்டபோது சிறிமாவோ “நான் பெண் என்பதிலும்விட நான் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு முக்கியமானது” என்றார். ஆறுமாதச் சிறைவாசத்திற்குப் பின்பு நான் விடுதலையானேன். வழக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 1980ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, கோவை நந்தன், நல்லையா ஆகியோருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நான் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே நந்தனும் நல்லையாவும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த தங்கமகேந்திரனும் ஜெயக்கொடியும் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் சென்றார்கள். அதற்குப் பின்னான உங்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறிருந்தன? சிறையிலிருந்து வெளியில் வரும்போதே நான் இயக்கத்தின்மீது வெறுப்புற்றுத்தான் வெளியே வந்தேன். ஈழவிடுதலைக்காக உயிரையும் தருவார்கள், பொலிஸில் அகப்படும் நிலைவரின் சயனைட் தின்று வீரச்சாவடைவார்கள் என நான் நம்பியிருந்த தோழர்கள் என் கண்முன்னாலேயே பொலிசாரின் முன் மண்டியிட்டு அழுததையும் என்னைக் காட்டிக்கொடுத்ததையும் என்னால் சீரணிக்க முடியவில்லை. தம்மைச் சுற்றி வீரதீரப் படிமங்களைக் கட்டியெழுப்பி வைத்திருந்தவர்கள் அந்தப் படிமங்கள் சிதறிவிழ எதிராளியிடம் மண்டியிட்டார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் இந்த அவலம் திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நமது விடுதலை இயக்கங்களின் ஆரம்பநிலைகளிலேயே இளைஞர்களிடையே அதிகார விருப்பும் பதவிப் போட்டிகளும் தோன்றிவிட்டதையும் நான் கவனித்து வெறுப்புற்றிருந்தேன். இயக்கத்தில் என்னுடன் கல்யாணி, டொறத்தி, பத்மினி போன்றவர்கள் தீவிரமாக இயங்கினாலும் பெண்கள் என்றரீதியல் நாங்கள் இயக்கத்திற்குள் இளைஞர்களால் அலட்சியமாகவே நடத்தப்பட்டதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். சிறையிலிருந்து வெளிவந்த என்னைச் சமூகமும் கொடூரமாகத்தான் எதிர்கொண்டது. பொலிஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவள் என நான் ஒதுக்கப்படலானேன். அப்போது இயக்கம், விடுதலைப் போராட்டம் பற்றியெல்லாம் பொதுப்புத்தி மட்டத்தில் எந்த அறிவுமிருக்கவில்லை. எனக்கு கொள்ளைக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டது. அப்போது இருபத்தாறு வயதேயான இளம்பெண்ணாயிருந்த நான் மனதால் உடைந்துபோனேன். விடுதலை அரசியலில் எனக்கு ஈடுபாடு இருந்தபோதிலும் அந்த ஈடுபாடு இன்றுவரை தொடரும்போதும் நான் இயக்கத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் என்னை இயக்க அரசியலுக்கு அழைத்தபோதும், தோழர் பத்மநாபா போன்றவர்கள் என்னை இயக்க அரசியலுக்குத் தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தபோதும் நான் இயக்க அரசியலில் ஈடுபட மறுத்துவிட்டேன். எப்போது பிரான்சுக்கு வந்தீர்கள்? 1986ல் வந்தேன். இடையில் 1981ல் எனக்குக் கல்யாணம் நடந்தது. நான் மணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. சிறையில் இருந்தவள், கொள்ளைக்காரி என்று எனக்குக் குத்தப்பட்ட முத்திரையால் எனது முப்பத்தொரு வயது வரையிலும் எனக்குத் திருமணம் அமையவில்லை. கடைசியில் புஸ்பராஜாவின் நண்பர் ஒருவருடன் எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்குத் திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தபோதும் இந்தச் சமூகத்தில் திருமணமாகாத ஒரு பெண்ணாய் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளாலும் என் பெற்றோரின் விருப்பத்திற்காவும் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன். அந்தச் சம்மதம் என் வாழ்க்கையைத் துன்பத்திற்குள் தள்ளியது. என் திருமண வாழ்வு மகிழ்ச்சியாய் அமையவில்லை. பிரான்ஸ் வந்ததன் பின்பாக நான் விவாகரத்துச் செய்துகொண்டேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு வாழ்ந்துவருகிறேன். பிரான்சுக்கு வந்ததன் பின்னாகப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் தொடர்ச்சியாக் கலந்து வருகிறேன். இங்கேயும் பல்வேறு தமிழ் அரசியல் இயக்கங்கள் இயங்கிவந்த போதிலும் எவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் இயக்க வேலைகளில் நான் என்னை ஈடுபடுத்தவில்லை. தனிப்பட்ட பல தோழர்கள் மீது எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருந்தபோதும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் வேலைத்திட்டங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேராதவளாயிருந்போதிலும் மறைந்த தோழர் பத்மாநாபாவின் மீது எனக்கு அளப்பெரிய தோழமை உணர்வும் மரியாதையும் உள்ளது என்பதை இந்த நேர்காணலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் ஒரு தீவிரமான இலக்கிய வாசகி என்பது எனக்குத் தெரியும், அது குறித்து? மிகச் சிறிய வயதிலேயே நான் வாசிப்புக்கு அடிமையாகிவிட்டேன். இன்றுவரை ஏதாவது ஒன்றைப் படிக்காமல் நான் உறங்கச் செல்வது கிடையாது. எனது சிறுவயதில்; ‘படிக்கிற பிள்ளை கதைப் புத்தகம் வாசிக்கக் கூடாது” என வீட்டில் கண்டிப்பு இருந்தது. நான் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப் புத்தகம் படிப்பேன். துப்பறியும் கதைகள், சாண்டில்யன், அகிலன் என வாசிப்புத் தொடங்கியது. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை வாசித்து அரவிந்தன் இறந்தபோது இரவிரவாகக் தனிமையிலிருந்து கண்ணீர் வடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் ஜெயகாந்தனால் முற்றாக ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அந்தக் காலத்தில்தான் எழுதவும் தொடங்கினேன். இலங்கை வானொலியிலும் ‘லண்டன் முரசு’ என்ற பத்திரிகைக்காவும் நிறைய எழுதினேன். அப்பொழுது சதானந்தனை ஆசிரியராகக்கொண்டு லண்டனிலிருந்து அந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. நான் இலங்கையிலிருந்து அந்தப் பத்திரிகைக்கு சம்பளமில்லாத நிருபராக வேலைபார்த்தேன். அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த கி. பி. அரவிந்தன் எங்களுடைய வீட்டில் ஏறக்குறைய ஒரு வருடமளவில் தலைமறைவாக ஒளிந்திருந்தார். நாங்கள் கவிதைகள் குறித்து விவாதிப்போம், பேசுவோம். நானும் அவரும் இணைந்து புஸ்பமனோ என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறோம். அரவிந்தனிற்கு மனோகரன் என்ற பெயருமுண்டு. என் திருமண வாழ்க்கையும் அதனால் எற்பட்ட மனச்சிதைவுகளும் என்னை எழுதுவதைக் கைவிட வைத்தன. ஆனால் இன்றுவரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். வார இதழ்களிலிருந்து நவீன இலக்கியம்வரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறேன். பிரபஞ்சனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் என்னை மிகவும் ஈர்த்த இலக்கிய ஆளுமைகளாகயிருக்கிறார்கள். புஸ்பராஜாவின் ஈழப் போராடத்தில் எனது சாட்சியம் நூல் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் மறுப்புகளையும் உருவாக்கியிருந்தது. அந்த நூல் குறித்து உங்களின் பார்வை என்ன? புஸ்பராஜா இலங்கையிலிருந்தபோதும் சரி, பிரான்ஸிலிருந்தபோதும் சரி எப்போதும் என்னோடு தொடர்ச்சியான அரசியல் உரையாடல்களை நடத்திக்கொண்டேயிருந்தார். அவரின் தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, போராட்ட வாழ்வானாலும் சரி நான் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை மிக நேர்மையாக புஸ்பராஜா தனது சாட்சியத்தைப் பதிவு செய்திருக்கிறார். புஸ்பராஜா ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மகாணசபை ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்பும் அந்த இயக்கத்திற்காக வேலை செய்தது எனக்கு பிடிக்கவில்லையென்றபோதும் அந்த அனுபவங்களையும் பாரபட்சமில்லாமல் தனது நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றே கருதுகிறேன். அந்த நூலில் புஸ்பராஜா அளவுக்கு அதிகமாகத் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்றொரு விமர்சனத்தைக் கூட நீங்கள் ‘சத்தியக்கடதாசி’ இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். ஆனால் உண்மையிலேயே புஸ்பராஜா எல்லா விசயங்களிலும் முன்னுக்குப் போகிற ஆளாகவும் விறைப்பான ஆளாகவுமேயிருந்தார். அதுதான் நூலிலும் பதிவாகியிருக்கிறது. சோதிலிங்கம், வசீகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்களின் போராட்டத்திற்கான பங்களிப்புகள் நூலில் போதியளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதிவாகவில்லை என்றொரு குறை எனக்கிருக்கிறது. என்நூலில் அவர்கள் குறித்து விரிவாக எழுதுவேன். குறிப்பாக பேபி சுப்பிரமணியம் தினந்தோறும் எங்கள் மயிலிட்டி வீட்டுக்கு வருவார். மிகுந்த அமைதியான குணமும் அன்புள்ளமும் கொண்ட அவர் எப்படி இவ்வளவு காலமாகப் புலிகள் இயக்கத்திலிருக்கிறார் என்பதுதான் எனக்கு விளங்கவேயில்லை. வெளிநாட்டு வாழ்வை எப்படி உணர்கிறீர்கள்? குறிப்பாக ஆணாதிக்கம், சாதியம் போன்ற அடிமைத்தளைகளிலிருந்து ஓரளவாவது விடுதலையை இந்தச் சூழல் உங்களிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என நினைக்கிறீர்களா? நான் எப்போது அடிமையாயிருந்தேன் இப்போது விடுதலை பெறுவதற்கு! சமூகத் தளைகளை எதிர்கொண்டபோது எந்த இடத்திலும் நான் பணிந்துபோனதில்லை. உறுதியாக எதிர்த்தே நின்றிருக்கிறேன். எதிர்ப்பு என்பதே என்னைப் பொறுத்தளவில் விடுதலைதான். புகலிடத்திலும் நான் சார்ந்த தலித் சமூகம் ஆதிக்கசாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனது மகள் இரவு பன்னிரெண்டுமணிக்கும் தனியாக வீடுவரும் போது நமது தமிழர்களால் ‘கறுவல்கள்’ எனப் பழிக்கப்படும் ஆபிரிக்கர்களோ ‘அடையார்’ எனப் பழிக்கப்படும் அரபுக்களோ என் மகளைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் என் மகளால் தனியாக லா சப்பல் (பாரிஸில் ஈழத் தமிழர்களின் கடைத்தெரு) போக முடியாமலிருக்கிறது. அவளை ஒரு கும்பல் தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்து ‘எடியே நீ தமிழாடி? நில்லடி!” எனச் சேட்டை செய்கிறார்கள். மோசமான கெட்டவார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பண்பாடு என்றெல்லாம் எழுபதுகளில் மேடைமேடையாய் நான் தொண்டைத்தண்ணி வற்றக் கத்தியதை நினைத்தால் இப்போது சிரிப்பாயிருக்கிறது. சிரிப்புக்குப் பின்னால் விரக்தியிருக்கிறது. தமிழீழப் போராட்டம் தோல்வியைத் தழுவியதற்கு முதன்மையான காரணம் எதுவென நினைக்கறீர்கள்? முதன்மையான காரணமும் கடைசிக் காரணமும் விடுதலை இயக்கங்களின் அராஜகங்கள்தான். எதிரியைக் கொல்கிறோம் எனப் புறப்பட்டவர்கள் எமது சமூகத்தின் போராளிகளையும் அறிவுஜீவிகளையும் ஒழித்துக்கட்டினார்கள். முஸ்லீம் மக்களை விரட்டியது, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற தலைவர்களைக் கொன்றது, பத்மநாபா போன்ற நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றது என எத்தனை அராஜகங்கள். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தப் புகலிடத் தேசங்களிலும் இன்று ஒவ்வொரு தமிழனும் வாயைத் திறக்கவே பயப்படுகிறான். அங்கே ஆரம்பிக்கிறது தமிழீழப் போராட்டத்தின் தோல்வி. https://www.shobasakthi.com/shobasakthi/2009/09/03/நான்-எப்போது-அடிமையாயிரு/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR4ehBKeFAWjafNGE3fCXpXSN8VUuogY59wi8GkZz5lsKkCF2-6agZjZAPJbPw_aem_5a_csAzdwS3IqgTWA6hGWA
  15. கல்யாண மண்டப அலப்பறைகள்! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை. திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் இப்போ பாக்கப் போறோம். ( நம்மளை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன் போல ) . 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி. 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும்.அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா. 3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இ. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டிருப்பாரு. 4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது, இறங்குறதுன்னு ரொம்ப ஆக்டிவா, ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்.அவன்தான் மாப்ளையோட தம்பி.ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான். 5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான்.அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். ( அவன் தான் உலகத்தின் பாவப்பட்ட ஜீவன்) 6. கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, “இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பார்.அவரை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவரை உள்ள கூப்டாங்கன்னா அவர் தான் மாப்ளையோட தாய் மாமன்.( பல நேரங்களில் அவர் நாய் மாமன் ) பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு.ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம்தான் நடக்கணும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவரைப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும். 7. கூட்டத்துல உட்ககார்ந்திருக்க எல்லாரும் “எப்பப்பா… கல்யாணம் முடியும்..எப்பப்பா சோறு போடுவாங்க” ன்னு ஒரே ஆவலோட உட்கார்ந்திருக்கும்போது,ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.அப்டி இருந்தா.அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம். 8. மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உட்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க.. சாப்ட்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா. 9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா,ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும்.அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாக நகையப் போட்டுட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாங்களோங்குற பீதியிலயே இருக்கும். 10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யாணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும்.அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரங்க. 11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க.அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ, இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வராங்கன்னு அர்த்தம். 12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிக்கிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.அவனும் வேற யாரும் இல்லை.மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கவன். 13. கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது,பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான்பாருங்க. அவர்தான் நம்ம மாப்ள்ளை.
  16. சாதாரணமாய் தென்னையை பார்த்துவிட்டு கடந்து போயிருப்போம் ........இந்தக் கோணத்தில் பார்த்திருக்கிறீர்களா .............! 👍
  17. நீங்கள் யாழ். களத்தில் மைத்திரிக்கு... நாலு உதை கொடுக்க வேண்டும் என்று எழுதியதை... மைத்திரி வாசித்து விட்டார் போலுள்ளது. அதுதான் உதைக்குப் பயந்து உண்மையை... உடனே சொல்லியுள்ளார். 😂 மைத்திரியும்... யாழ்.களம் வாசிப்பது எமக்கெல்லாம் பெருமை தானே.. 🤣
  18. சீமான் அரசியலுக்கு வந்த நாள் தொடக்கம் படபடத்துக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய......சீமானின் வளர்ச்சியை ஒரு வீதமேனும் தடுக்க முடியவில்லை. 😂 வெற்றிலை பாக்கு புகையிலை சுண்ணாம்பு தடவி மெல்லுவதை போல் மெல்லுகிறார்கள்.🤣
  19. அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன் இப்போ தான் அழுத பிள்ளை பாராட்டுப் பெறுவதைப் பார்க்கிறேன். புகைப்பட கலைஞர் சுவிக்கு பாராட்டுக்கள். கந்தப்பு இன்றைய போட்டியின் போது தல ஓய்வை அறிவிக்கப் போகிறாரா?
  20. இது நானா அமைத்த கூட்டமல்ல தானா சேர்ந்த கூட்டமுங்கோ. இதைத் தான் இன்னமும் யோசிக்கிறேன். 100 வீதம் இவர்கள் வெல்லுவார்கள் என்று மும் மூர்த்திகளுக்கும் நாமம் வேறு போட்டாபிறகு கடைசி பந்து வீச்சில் தோற்கிறார்களே. நானும் தான் கந்தப்பு. இவர்களை நம்பி பெரிய முதலை விட்டுட்டேன்.
  21. இன்றைய போட்டியில் மும்பாய் வெல்லும் என எழுதியிருந்தாலும் நான் சென்னை அணிக்கே இன்று ஆதரவு
  22. கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார். அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார். ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣. எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார். சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார். அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.
  23. 6 வருடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த விசாரணையில் முன்னேற்றம் - CID அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க ஜனாதிபதியால் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல்! Vaanam.lk
  24. கட்சிக்கு இல்லை வேட்பாளர்களுக்கு கட்சி அவர் இருக்கும் வரை இருக்கும் சீமான் தமிழ் ஈழம் பெற்று தருவார் எனறு நம்பும் இலங்கை தமிழர்கள் இருக்கும் வரை கட்சி இருக்கும் இந்த உலகில் இருந்து கஸடப்பட விரும்பாத தமிழர். சீமான் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போடடி இட்டால் .எப்படியும் தோற்ப்பார்கள். அவர்களை பாடையில் கட்டி மாலை போட்டு சகல இராணுவ மரியாதையுடன் அனுப்பி வைப்பார் இந்த வேலைக்கு உலகத்தில் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் ஆகும் ஒரே தலைவரும் சீமான் ஆகும் 🤣😂
  25. இப்போ, மீண்டும் தான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளார். எல்லோரும் சேர்ந்து ஆடிய ஊழிக்கூத்துதான் இது. அவர்கள் பயன்படுத்திய பகடைக்காய் பிடிபட்டுள்ளார். யாரும் இப்படியொரு கட்சி அரசமைக்கும் என்று நினைக்கவில்லை. அதனால் எல்லோரும் தைரியமாக இருந்தார்கள், திரிந்தார்கள். அரசுமாற்றம் வந்தவுடனேயே எல்லோருக்கும் புரிந்து விட்டது. இதுவும் சிங்களகட்சிதான், காட்சிகள் வேறாக இருந்தாலும் முடிகள் ஒன்றாகத்தானிருக்கும். தங்களுக்கு வரக்கூடிய சவால்களை தடுக்கவும் மல்க்கம் ஆண்டகை கொடுக்கும் தொந்தரவு, விடுக்கும் எச்சரிக்கை, தேர்தல் கலக்கம் அவர்களையும் ஏதோ செய்யத் தூண்டியுள்ளது. ஒருவேளை அனுரா ஆட்சி கவிழ்ந்தால்; உடனடியாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். போரை தானே நிறைவுக்கு கொண்டுவந்தேன் என்று அறைகூவியவயவர், விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்று, தமக்கு உதவியதாலேயே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது எனக்கூறியும், எதிர்த்து சிவநேசதுரை சந்திரகாந்தன், வி. முரளிதரன் போரின் நிறைவுக்கு செய்த பங்களிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள, பாராட்ட தயாரில்லை. இப்போ இராணுவத்தை தம் பக்கம் இழுக்கவும், அனுராவின் செயற்பாடுகளை சிங்களவரை தூண்டி தடுக்கசெய்யவுமே கம்மன்பில அவசரம் காட்டுகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எத்தனையோ பேர் கைதுசெய்யப்பட்டனர், இன்னும் சிலர் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆஜராகாத இவர்கள் ஏன் இந்த சந்திரகாந்தன் கைதுசெய்யப்படவுடன் முண்டியடிக்க வேண்டும்?
  26. எப்பிடீங்க ராஜஸ்தான் தோத்தாங்கள். ஒன்று மட்டும் உண்மை. நமக்கு முட்டை தாறதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ. செய்தாச்சு. இன்று முழுதும் ஒன்றுமே பார்க்க முடியவில்லை. என்ன நடந்தது என்று ஒன்றுமே தெரியாது. நீங்க வேற. நம்மோட ராசி நல்ல ராசி. ஏன் இதுக்க சேர்ந்தீங்க
  27. ரணில் நல்ல பிள்ளை மாதிரி நடித்து ஆடிய நாடகமெல்லாம் வெளியில் வரப்போகிறது என்கிற பயமவருக்கு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை சர்வதேசம் விசாரிக்கக்கூடாதாம். ஏனென்றால், அதை தொடர்ந்து யுத்த போர்க்குற்றத்தையும் ஆராய்வார்களாம். அப்போ.. ஒரு விசாரணை வேறொரு இடத்திற்கு இட்டுச்செல்லும் என்பது யாவருமறிந்ததே. போர்க்குற்ற விசாரணை சர்வதேசம் செய்யக்கூடாதென தற்போதைய அரசாங்கம் கூறினாலும், பட்டலந்த குற்றம் பற்றி சர்வதேசம் விசாரிக்க வேண்டுமாம். இந்த கோரிக்கை கூட நாளை மாறலாம். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் கட்சி பேதமின்றி உறுதியாக இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் எல்லோரும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து வருந்த நேரிடும். எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையை புதைக்கிறோமோ, அவ்வளவு அது வீரியம் கொண்டெழும். அது எழும்ப முடியாமல் தடுப்பது, இழப்புகளை சந்தித்த இனமே அது மேலெழும்புவதை விரும்பவில்லை. சுயநலம்.
  28. அதனால தான் ரணில் முந்திரி கொட்டை மாதிரி முந்திக் கொண்டு ஓடினார்.
  29. சந்திரகாந்தனின் கைதால் பலர் வெலவெலத்து, பரபரப்படைந்து உளறுகிறார்கள். கைதி எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் தருணமிது, அவர்களுக்கு தெரியும்; விசாரணை முறை, அறிக்கை தயாரிக்கும் முறை எப்படியானது, யார் யார் எல்லாம் சிக்குவார்கள் அல்லது சிக்க வைக்கப்படுவார்கள் என்பது. சம்பந்தப்பட்ட எல்லோருமே முடிவை நெருங்கிக்கொண்டு, வாசலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏதாவது வழியில் கைதியை போட்டுத்தள்ளி உண்மையை மறைக்க முயன்றாலும் அதற்கு வழியில்லை. கோத்தா போல் தப்பியோடவும் முடியாது. ஆகவே குற்றவாளிகளில் யாராவது ஒருவர் தான் தப்பிக்கொள்வதற்காக ஒப்புதல் வாக்குமூலமளித்து தன்னை காப்பாற்ற முயற்சிப்பார். இதில் சுரேஷ் சாலே அல்லது சொனிக் சொனிக் யாராவது இருக்கலாம்.
  30. இதற்கெல்லாம் ஆதாரம் இருக்குதா என்று கேட்கப் போகிறார்கள். நன்றி ரஞ்சித்.
  31. 1958,77 இனக்கலவரங்களினால் பலர் வடக்கு மாகாணத்துக்கு வந்து குடியேறினர்,அத்துடன் பல மலையக பகுதிகளில் சிறு சிறு இனக்கலவரங்களை ஏறபடுத்தினார்கள் இதனாலும் மலையக தமிழர்கள் வன்னி நிலப்பரப்பில் குடியேறினார்கள் ....இதனால் அந்த கால கட்டத்தில் சனத்தொகை அதிகரித்திருந்தமை ஒர் காரணம்...
  32. மலிவான தொழிலாளர் சம்பளத்தால் தான் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளுக்கு தமது தயாரிப்புகளை செய்வதற்கு அனுப்பினார்கள். திருப்பி அவற்றை அமெரிகாவில் தயாரிக்க அவற்றை தயாரிக்க அதிக செலவாகும். இப்பொருட் களின் விலை சந்தையில் அதிகரிக்கும் என்பது வெள்ளிடைமலை.
  33. தருவார்கள் நீங்கள் உங்கள் மத மொழி அடையாளங்களை இழந்து சிறிலங்கன் என்ற தேசியத்தினுள் இரண்டர கலந்த பின்பு நிச்சயமாக உரிமைகள் வழங்கப்படும் ... நீர்கொழும்பு தமிழன் இப்பொழுது சிறிலங்க தேசியவாதி ...பெர்னாடோ புள்ளே... சந்திர சேகரம்,அ. சாமுவேல்,சா. போல்ராஜ் போல இரண்டர கலந்து உங்கள் அடையாளங்களை இழந்து தமிழ் பேச தடுமாறும் பொழுது உங்களுக்கு சம உரிமை கிடைக்கும்...தேசிய கட்சியில் இருந்து கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டிருக்க வேணும்... பிள்ளையான்,புளோட் மோகன் போன்றவர்கள் இன்று சிறிலங்கா தேசிய வீரர்களாக கொண்டாடப்டுகிறார்கள் ...
  34. சொர்க்கம்தான் சுகம் தரும் . ......... ! 😍
  35. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  36. சதுரங்க வேட்டை.....
  37. சிமான் கட்சியே எப்படியும் தோற்கத்தானே போகிறது. அப்ப கட்சியையே பாடையில் ஏற்றி மாலை போடுவாரா? 😂😂😂😂
  38. தாக்குதலில் கொல்லப்பட்ட் காயமடைந்த வர்களுக்கு உதவுவதற்காக வத்திக்கான் பாப்பாண்டவரால் மல்கம் ஆண்டகைக்கு அனுப்பப்படட பெருந்தொகை பணம் அரச நிர்வாகத்துக்கூடாக வர வேண்டுமென்று அவர்களிடம் கொடுத்து விடடார். அவர்கள் சரிவர கொடுக்கவேயில்லையென ஒரு தகவல் உலாவியது .
  39. தண்டனையே குற்றம் “மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார். இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்னொரு பரியாரியார், “நான் அவங்களைக் கலைச்சு விட்டிட்டன் , உவங்கள் சரிவரமாட்டாங்கள், எங்களை மாதிரி இப்பத்தைகள் இல்லை” எண்டு மருத்துவத்தையும் பாடமாக்கித் தள்ளீடுவம் எண்டு நம்பி வந்த பெடிபெட்டைகளை பேசிக்கொண்டு வந்தார். இதுகள் படிச்ச பள்ளிக்கூடம் தான் பிழை எண்டு முடிவுக்கு வந்தவர் அதிலேம் வாத்திமார் அடிச்சுத் திருத்தாததால தான் எல்லாம் இப்பிடித் திரியுது எண்ட புறுபுறுத்தபடி போனார். இதையும் கடந்து கிளினிக்குக்குப் போக அங்க ஒரு அம்மா மகனோட உள்ள வந்தா. அவன் தான் வீட்டுக்கு காவலோ தெரியேல்லை கூட்டுக்க நிக்கறதுக்களுக்கு கழுத்தில கட்டிறதை காதில இருந்து கால் வரை தொங்க விட்டபடி பெடியன் வந்திருந்தான். வந்தவனுக்கு ஏதும் வருத்தமோ தெரியாது பாவம் தலை மயிரெல்லாம் கறள் கட்டினமாதிரிக் கலரில இருந்துச்சுது. பதினைஞ்சு வயசு பள்ளிக்கூடத்துக்கு போறேல்லையாம் , ஆனால் பக்கத்தில எங்கயோ “ கூடப் போனதில” அடி வாங்கீட்டானாம் எண்டு உடைஞ்ச கையோட வந்தவனைப் பாக்க விளங்கிச்சுது உடைஞ்சது கை மட்டுமில்லை கன பிணைப்புக்கள் எண்டு. “ ஏன்டா பள்ளிக்கூடம் போறேல்லை ” எண்டு கேக்க அம்மா “அவன் குளப்படி எண்டு சேர் அடிச்சதாலை நிண்டிட்டான்” எண்டு பெருமைப்பட்டுச் சொன்னா. அடிச்ச அடிவாங்கின கதையெல்லாம் கேட்டு முடிய மணி ரெண்டாக, மனிசி மத்தியானம் பள்ளிக்கூடம் முடிய ஏத்த வரச் சொன்னது ஞாபகம் வர ,நேரம் போட்டுது எண்டு போட்டு அவசரமாக் காரை எடுத்துக் கொண்டுபோய் சிக்னலில நிக்க பின்னால வந்து நிண்ட மூண்டு சில்லும் , கொக்கு மாதிரி எப்பவுமே ஒண்டைத் தூக்கிக் கொண்டு நிக்கிற ரெண்டு சில்லும் “கோன் அடிச்சுது “, தான் இதுக்கெல்லாம் நிக்கேலாதாம் “என்னை விடு போப்போறன்” எண்ட மாதிரி . இவனுக்காக எப்பிடிக் காரைத்தூக்கிக் கொஞ்சம் அரக்கிப் ரோட்டுக் கரையில நிப்பாட்டிற எண்டு யோசிக்கப் பச்சை விழுந்திச்சுது. முன்னுக்கு நிண்ட நான் டக்கெண்டு எடுக்க ரெண்டு பக்கத்தாலேம் பாதுகாப்புக்கு போற பொலிஸ்காரன் மாதிரி வந்த ரெண்டு சில்லுக்காரன் நான் slowவாய்ப் போறனாம் எண்டு முறாய்ப்பா முறுக்கிக் கொண்டு போக அதைக் கவனிக்காத மாதிரி நான் ஓடிக்கொண்டு போனன். போற வழியில பிரபல பாடசாலையில படிக்கிறது, படிப்பிக்க விட்டது எல்லாம் பள்ளிக்கூடம் விட்டோன்ன தமன்னாவைப் பாக்கப் போன கூட்டம் மாதிரி பாஞ்சு வந்து நாலைஞ்செண்டு நடு ரோட்டால அணிவகுத்துப் போக ரோட்டின்டை கரைப் பக்கமா மண்ணுக்கால காரை விட்டன். ஒரு மாதிரி கஸ்டப்பட்டு நேரம் போகுதெண்டு அரக்கப் பறக்க வந்தா, அண்டைக்கெண்டு பாத்து போக்குவரத்தை சீராக்கிறம் எண்டு வந்து நிண்ட சீருடைக்காரார் எல்லாச் சந்தீலேம் நான் கிட்ட வரவும் என்னை மறிச்சிட்டு மற்றவயை விடவும் சரியா இருந்திச்சுது. எங்க காணேல்லை எண்டு Mrs அடிச்ச கோலை, வேணும் எண்டு “ miss” பண்ணீட்டு ஒரு மாதிரிப் போய்ப் பள்ளிக்கூட வாசலில நிக்க, வந்து ஏறினவை எல்லாரும் கதவைச் சாத்தின சாத்து காரோட சேத்து எனக்குத் தான் எண்டு விளங்கிச்சுது. ஏறின உடனயே என்னை ஒண்டும் கேக்காம பின்னால திரும்பி, “எத்தினை marks, எத்தினை மணிக்குக் கிளாஸ், எங்க தொப்பியைக் காணேல்லை” எண்ட வழமையான கேள்வி-நேரம் நடக்க “ரோட்டை” மட்டும் பாத்தபடி காரை ஓடிக்கொண்டு போனன். ஆளை விட்டாக் காணும் எண்டு பின்னுக்கு பாஞ்சு ஏறினதுகளை பாத்து மனிசி, “இதுகளை ஒண்டும் செய்யேலாது, இங்கபார் சாப்பாடு அப்பிடியே இருக்கு, அப்போத வெறும் socks ஓடித் திரியுது, சட்டையில மை , home work செய்யேல்லையாம் எண்டு complain , நாங்கள் எல்லாம் எங்கடை அம்மா சொன்னா எல்லாம் உடன செய்வம், எண்டு பஞ்ச புராணத்தைத் தொடங்க , “சரிசரி, விடும் பாவம்” எண்டு நான் சொல்ல, “கடைசியா நீங்களும் ஒண்டும் சொல்லாதேங்கோ நான் தான் எல்லாம் பாக்கோணும்” எண்டு புறுபுறுத்தபடி மனிசி வீடு வர வீட்டுக்குள்ள போக, நான் எங்க சோத்துக்கரண்டியைக் காணேல்லை சாப்பாட்டு மேசையில தேடிக்கொண்டிருந்தன். பின்னேரம் patient பாத்துக் கொண்டிருக்க உள்ள வந்த ஒருத்தர் மகனை இருத்தி வைச்சிட்டு “ அவனுக்கு கையில நோகுதாம், எழுதவே ஏலாது எண்டு சொல்லிறான்” எண்டு தொடங்கினார். நானும் அங்க நோகுதா இங்க நோகுதா எண்டு கேக்க அவன் அப்பாவைப் பாக்க அவர் தலையும் இவன்டை தலையும் ஒண்டா ஆடிச்சுது ஓமெண்டு . என்னடா இண்டைக்கு வந்த முதலாவது patientஏ இப்பிடி இருக்கு, ஒரு பிரச்சினையேம் காணேல்லை எண்டு போட்டு , ஒண்டுமில்லை சும்மா நோ தான் எண்டு சொல்ல முதல், “எனக்கு X-ray எடுக்கோணும்” எண்டு அப்பா ஓடர் போட நான் தேவேல்லை எண்ட, “இல்லை வாத்தியார் அடிச்சிட்டார் என்டை மகனுக்கு , அவருக்கு நான் ஆரெண்டு காட்டிறன், எல்லா இடமும் கடிதம் போட்டிருக்கிறன், உங்கடை report ஒண்டும் வேணும்” எண்டு என்னையும் சட்டத்தில சாட்சியா சேக்கப் பாத்தார். என்னத்தை எழுதிறது எண்டு தெரியாம எதையோ கிறிக்கிக் குடுக்க, வெளீல போய் உந்த டாக்குத்தர் சரியில்லை நான் கொழும்பில போய்க் காட்டப்போறன் எண்டிட்டுப் போனார். ஒரு நாள் இரவு திடீரெண்டு நட்பின் அழைப்பொண்டு “ உடன வந்தா எங்க patient பாப்பீங்களா, மகனுக்கு முதுகில அடிச்சிட்டார் மாஸ்டர், அவன் நோகுதெண்டு இப்ப அழுறான்”எண்டு சொல்லத்தொடங்கி பிறகு நோவை விட்டிட்டு , “என்டை பிள்ளையை எப்பிடி அடிப்பார், நான் உடனயே principalக்கும் சொல்லீட்டன்” எண்டு கதை சொல்லி முடிக்க பிள்ளை நோ மறந்து நித்திரையாகீட்டுது எண்டு நெக்கிறன். இவதான் வழக்காம வேற ஆராவது சொல்லேக்க அடிச்சது சரியெண்டு வக்காளத்துவாங்கிறவ , ஆனாலும் தன்டை மோனுக்கு எண்டோன்ன வாத்திபிழை அவன் நல்லபெடியன் சரியான அமைதி எண்டு அவனைப் பத்தின பட்டோலையை நீட்டியே வாசிச்சா. 88 எண்டு நெக்கிறன் சுண்டுக்குளிச் சந்தீல இந்தியன் ஆமி எங்கடை பள்ளிக்கூட Principalஇலும் பாக்க strict ஆ இருந்த காலம். நாங்கள் கொஞ்சப் பேர் பள்ளிக்கூடத்துக்கு வேளைக்கு வந்து மூலை வகுப்பில நிண்டு “ Recky” எடுக்கிறனாங்கள்; அவங்களை இல்லை சுண்டுக்குளிப் பெட்டைகளை. ஒரு பக்கம் prefects க்கும், ஒரு பக்கம் வாத்திமாருக்கும் sentry போட்டுத்தான் Recky எடுக்கிறது. எல்லாரும் வரிசையா வாங்கில ஏறி நிண்டு பாக்கிறது. அவங்கடை புண்ணியத்தில சுண்டுக்குளிச் சந்தீல எல்லாப் பெட்டைகளும் இறங்கி வரிசையா நடந்தும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் போறதால கனநேரம் கண்ணுக்கு குளிரச்சி . பூக்களை ரசிக்கேக்க குளவிக் கூட்டுக்க கல் எறிஞ்ச மாதிரி ஆரோ ஒருத்தன் எறிஞ்ச கல்லு பொம்பிளை ஆமிக்கோ இல்லை ரீச்சருக்குப் பட்டிச்சோ தெரியேல்லை அடுத்த நாள் வகுப்பு முழுப்பேரையும் கூப்பிட்டு “ ஆர் செய்தது எண்டு சொல்லித் தாங்கோ எண்டு ஒரு கருணா இருக்க மாட்டானா எண்டு தனத்தார் தேட, கடைசிவரை முள்ளிவாய்க்காலில ஒண்டா ஒருந்த மாதிரி நாங்க நிக்க, காட்டிக்குடுக்காட்டிப் பிரச்சினை வரும் எண்ட தனத்தாரின்டை வெருட்டு எடுபடாமப் போக, நாலு பிரம்பு முறிஞ்சும் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு வகுப்புக்கு வந்தம். அடுத்த பாடம் இங்கலீஸ் படிப்பிக்க வந்த Alex Master , நடந்ததை கேட்க சரி இந்தாளும் வெளுக்கப் போகுதாக்கும் எண்டு நெக்க “ , I like you spirit “ எண்டு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. வாத்தி அடிச்சது “செய் குளப்படீக்காய்” இருந்த காலம். போன முறை செய்யாத குளப்படிக்கு அடிவாங்கினவன் இந்தமுறை தன்டை குளப்படிக்கு வேறொருத்தன் அடிவாங்க விளங்கினான் வாத்தி அடிக்கிறது ஆளுக்கில்லை சிவபருமானுக்கு பாண்டியன் குடுத்த மாதிரித் தான் இந்த அடியும் முழு வகுப்புக்குத்தான் எண்டு. Friend க்காய் வாங்கின அடி ஒரு கடி மாங்காயில் அடங்கிப் போக வாத்தீன்டை பிரம்படி இனிப்பாய் மாறிச்சுது. அதோட அடிச்ச வாத்தி அண்டே மறந்தாலும் அதைக் கேள்விப்பட்டா அம்மா அந்தக்கிழமை முழுக்க கலைச்சுக் கலைச்சு இன்னும் வெழுப்பா எண்டதால கன அடிகள் வீட்டுக்குப் போகாமல் வகுப்புக்குள்ளயே சமரசப்பட்டிச்சுது. அடிச்சவாத்தி அடுத்தநாளும் முன்னுக்குக் கூப்பிட சரி இண்டைக்கும் அடிதான் எண்டு வாத்தியையும் திட்டிக் கொண்டு கையைத் தடவித்தடவிப் போக , “புத்தகத்தை எடுத்து அடுத்த பாடத்தை வாசி” எண்டு சொல்லி முன்னால நிக்கவிட நான் சிறுக்க வாத்தியார் உயர்ந்து நிண்டார். இப்ப அடிக்கடி நடக்கிற “ மீண்டும் பள்ளிக்கூடம் போறம்” எண்ட நிகழ்வெல்லாத்திலேம் படிச்சதோ படிப்பிச்சதோ ஒருத்தருக்கும் ஞாபகமிருக்காது ஆனால் அடி வாங்கினவனுக்கும் அடிச்ச வாத்திக்குத்தன் தான் ஞாபகமும் கூட, demandம் கூட. வீடோ, பள்ளியோ கண்டிப்பும் தண்டிப்பும் மாணவருக்கு காவலாய் இருந்த காலம் அது. இப்ப என்னெண்டாத் தண்டனைகள் கண்டிக்கபட்டு, பெற்றவர் இன்று பொலிசாகி, சமூக வலைத்தளங்கள் நீதிபதியாகிப் போய், கடைசியில் தண்டனைகள் குற்றங்களாக்கப் பட்டு நிக்கிற காலம் இது. அடிச்துக்கெல்லாம் காரணம் சரியா இல்லாட்டியும் அடி வாங்கின நான் சரியாகீட்டன் ஏனெண்டால் அடி கூட தடுப்பூசி மாதிரித்தான் வருத்தம் வர முதலே போட்டால் தான் நல்லம், வருத்தம் வராது வந்தாப்பிறகு ஊசி போட்டுப் பிரியோசனமிருக்காது. இவை யாவும் நிஜமே Dr. T. Gobyshanger யாழ்ப்பாணம்
  40. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎂🎊🎈 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் யாயினி
  41. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் யாயினி மற்றும் நிலாமதி அக்காமார். அல்லது தங்கைமாருக்கு 🤝🥰🙏
  42. ஷோபாசக்தி பற்றி கண்டண அறிக்கையை முன்னின்று தயாரித்தவர் அவருடன் உறவில் இருந்த பெண்ணியவாதி லீனா மணிமேகலை என்றுதான் தெரிகின்றது. சீமான் மீது விஜயலட்சுமி வழக்குப் போட்டதுபோல் ஏன் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் வழக்கைப் போடமுயலவில்லை? கேஸ் நிற்காது என்பதனால்தான் இருக்கும்😜 கையெழுத்து வைத்தவர்கள் கேட்டவரின் “ முகத்திற்காக” வைத்திருக்கலாம்! ஷோபாசக்திக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!
  43. ஐசே நேத்து பூரா சக்தி டீ வீ பர்த்துகொண்டிருந்தன் வா. சிங்களவன் / தமிழன் ஆண் பெண் எல்லோரும் ஒன்றாக அப்படி கிளுப்பு..கிளுப்புவா... அஜல்... குஜால் வா... ஐசே தலவாணி அடி போட்டியில.... தமிழன் தலவாணி வச்சி தூக்கி... தூக்கி... அடிக்கிறாவா.. கீழ இருந்து சிங்கள குட்டிகள் கத்துராள்வள் வா.. சுந்தரலிங்கம் ஒந்தட காஹன்ட... உஸ்ஸ உஸ்ஸ‌ காஹன்டா.. வெடுனத் அபி அல்லனவா.....🤣 ஐசே கயிரு இழுக்கிறான்கள்வா...தமிழ் / சிங்கள..ஆம்பள பொம்பள எல்லாரும் ஒரசி... ஒரசிவா... ........ rubbing shoulder இல்லவா இது rubbing with boobs. அம்மட சிரி ...அப்பிடி ஜொலி வா.. சொல்லி வேல இல்லவா... குளிர்ல வெரச்சி வெரச்சி இருக்கமா இங்க வாங்கா கோசன் தொர...😍 ஒரு தமிழன் கேற்கிறான் வா.. ஒர் அ ழகான சிங்கள குட்டிகிட்ட? "ஒயா காவா ஒந்த கொகிஸ் அச்சுவாக் தியனவா நேதா"? அவள் சொல்லினிறாள் "மகே கொகிஸ் அச்சு சம‌னல வகே என்று".....சிரிப்பு வா..😝 மார சூன் வா... இங்க கொக்கீஸ் அச்சு தேடுகின்றேம் வா நாங்கள்... இவன் இப்படி வீடியோ போடுரான்..... சாதரண ஒரு இந்திய வம்சாவளி தமிழரை, இந்த அரசாங்கம் யாழில் அமைச்சராக நியமித்ததையே ஏற்றுக்கொள்ளத / சக தமிழ் பேசும் மக்களை மதிக்காத இந்த யாழ் மையவாதம் எப்படி சிங்களவன்களை இனதுவேசம் பிடித்தவன் என கூறலாம்? "The pot calling the kettle black" வீடியோவில் இவர் அப்பாவிகள் கொல்லப்படவில்லை என்கிறார்? அப்போ மத்திய வங்கி குண்டு வெடிப்பில் எத்தனை அப்பாவிகள் இறந்தார்கள்?
  44. ஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.