Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2954
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/21/25 in all areas

  1. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இயங்கிவந்த வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இவனாலும், கருணாவினாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டோ அல்லது கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலைசெய்யப்பட்டும் வந்தனர். பத்திரிக்கையாளர் நடேசனை இவனும் கருணாவும் கொன்றதன் ஒரே காரணம் அவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தை நத்தார் திருப்பலியில், ஆலயத்திற்குள் இருந்து சுட்டுப்படுகொலை செய்தது அவர் கருணாவின் பிரதேசவாதத்தினை எதிர்த்து, அவன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கூட வடபகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தான். பின்னாட்களில் வடபகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பீடாதிபதியாக வருவதை சகித்துக்கொள்ள முடியாத கருணாவும், பிள்ளையானும் அவரை கொழும்பில் வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தனர். தற்போது பிள்ளையான் எனும் பெயரில் பவனி வந்த மனிதகுலத்திற்கெதிரான இந்த மிருகம் செய்த பாதகச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. 1. கிழக்கில் பணியாற்றிய வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான கப்பம் அறவிடல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள். 2. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தித் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த, வடபகுதியைச் சேர்ந்த பிரேமினி எனும் பெண்மீது பிள்ளையானும் பிரதேசவாத வெறிபிடித்த, அவனுடைய இன்னும் ஏழு ஏவல் நாய்களும் இணைந்து நடத்திய கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அதன்பின்னர் அப்பெண்ணை துண்டங்களாக வெட்டி காட்டிற்குள் வீசியெறிந்தமையும். 3. பிரேமினியோடு இவனால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் ஆறு வடபகுதியைச் சேர்ந்த புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான புதைகுழிகளை அவர்களே வெட்டும்படி வற்புருத்தப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டு அக்குழிகளுக்குள்ளேயே புதைக்கப்பட்டமை. 4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரவீந்திரநாத்தை கொழும்பிலிருந்து கடத்திவந்து கிழக்கின் காடுகளுக்குள் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை. இவரது படுகொலைக்கான காரணம் இவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, பிள்ளையானினாலும், கருணாவினாலும் வடபகுதி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும், விசாரணைகளைக் கோரியும் வந்தமைதான் என்று சொல்லப்படுகிறது. 5. கடற்படைக் கொலைக்குழுவுடன் இணைந்து பிள்ளையான் நடத்திவந்த கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அருகில்ச் சென்று சுட்டுக் கொன்றமை. 6. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கோத்தாவினால் மிக் வானூர்திகள் கொள்வனவில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து தொடர்ந்தும் பேசிவந்ததனால் அவரைக் கொல்வதற்கு இவனுக்கும் கருணாவிற்கும் கொடுக்கப்பட்ட பணத்தொகை 50 மில்லியன் என்பது குறிப்பிடத் தக்கது. 7. இவனது மாபாதகச் செயல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல அமைந்தது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவன் தலைமையில் இலங்கையில் பலவிடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆலய மற்றும் விடுதிப் படுகொலைகள். மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் நேரடியாகப் பங்காற்றியமைக்காக இவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கோத்தபாயவின் மீள்வருகைக்கான தாக்குதல் ஒன்றிற்குத் தயார்ப்படுத்தி, சிறைக்குள் இருந்தவாறே அத்தாக்குதல்களை நெறிப்படுத்தி , கோத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினான். இதற்காக இவனுக்கும் இவனது கொலைக்குழுவிற்கும் வழங்கப்பட்ட பணம் 65 மில்லியன் ரூபாய்கள். திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷா எனப்படும் சிறுமியைக் கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைசெய்து சாக்கினுள் அடைத்து வீதியில் வீசிச்சென்றது. பின்னர் இதில் ஈடுபட்டவர்களை பொலீசார் கைதுசெய்தபோது, தனது பெயர் வெளியே வந்துவிடும் என்பதற்காக பொலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து வாகனத்தில் பயணிக்கும்போதே சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பில் இன்னொரு பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, கிடைக்காது போகவே, அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலைசெய்து கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது. வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டியது. ஆரம்பத்தில் உஇதனை மாணவர்கள் கண்டுகொள்ளாதுவிடவே பிள்ளையானும் அவனது அடியாட்களும் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்து மூன்று வடபகுதியைச் சேர்ந்த மாணவிகளைக் கடத்திச் சென்று கூடுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி ஏனைய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அச்சுருத்தல் விடுத்தது. இவற்றினை விடவும் இவனாலும், இவனது கொலைக்குழுவான ட்ரிபோலிப் பிளட்டூனினானும் நடத்தப்பட்ட கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் நூற்றுக்கணக்கானவை. புலிகளியகத்திலிருந்து பிரிந்து பிரதேசவாத வெறியும், பணத்தாசையும் கொண்டு இவன் புரிந்துவந்த மனிதகுலத்திற்கெதிரான செயல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில பிரபல பெயர்களையும், சம்பவங்களையும் தவிர பெயர் தெரியாத பல தமிழர்களை இவன் கொன்றிருக்கிறான். ஆனாலும், வடபகுதித் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து , கிழக்கு மாகாணத் தமிழர்களை தலை நிமிரச் செய்து, கிழக்கின் விடிவெள்ளியாக இவன் இருப்பதாக நினைத்த கிழக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இவன் சிறையில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஐம்பதினாயிரம் வாக்குகளுக்கு மேலாக வாரி வழங்கி, இவனைத் தமது தமது வரலாற்று நாயகனான முடிசூடி அழகுபார்த்தார்கள். பிரதேசவாதம் கண்களை மறைக்க, அதனை அபிவிருத்தி எனும் வெற்றுக்கோசத்திற்குள் மறைத்து மனிதவுருவில் வலம்வந்த நச்சுப்பாம்பைத் தமது தலைமகனாக ஏற்றி அகமகிழ்ந்தார்கள். தாம் மகுடம் சூட்டி, அழகுபார்த்து, உச்சிமோர்ந்து, பரவசமடைந்து, பல்லக்குத் தூக்கிய இந்த மிருகத்தின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன இப்போது. இனியாவது இவனும் இவனது சகாவான கருணாவும் பேசிவந்த பிரதேசவாதம் என்பது போலியானது என்பதை இவர்கள் உணர்வார்களா? https://www.youtube.com/watch?v=hQk-7Hp5EFM https://www.youtube.com/watch?v=p0cZ33gAi4c
  2. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள், சுப்மன் கில்லின் 90 ஓட்டங்கள், ஜொஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் என வேகமாக அடித்தாடியதால் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களில் அங்கியா ரகானேயின் 50 ஓட்டங்களைத் தவிர பிற வீரர்கள் ஓட்டங்களை எடுக்கத் திணறியதால் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எல்லன் சாங் பதவி, பிபிசி உலக சேவை 18 ஏப்ரல் 2025, 01:12 GMT மாபெரும் மேதைகள்கூட சாதாரண மனிதர்கள்தான். சார்பியல் கோட்பாட்டின் தந்தையாக, ஈர்ப்பு விசை மற்றும் ஒளியை ஆராய்ந்து விளக்கிய இயற்பியலாளராக ஐன்ஸ்டீன் இருக்கலாம். ஆனால் மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட சில நேரங்களில் தனது சொந்தக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். தன் மீதான இந்த 'சுய சந்தேகம்', அவர் சில தவறுகளைச் செய்யவும் வழிவகுத்தது. 'மிகப் பெரிய தவறு' பொது சார்பியல் கோட்பாட்டு (General relativity) குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தை சுருங்கச் செய்யும் அல்லது விரிவடையச் செய்யும் என ஐன்ஸ்டீனின் கணக்கீடுகள் சுட்டிக்காட்டின. ஆனால் அந்தக் காலகட்டத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே, 1917ஆம் ஆண்டு வெளியான பொது சார்பியல் பற்றிய தனது ஆய்வறிக்கையில், ஈர்ப்பு விசையின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த ஐன்ஸ்டீன் "அண்டவியல் மாறிலி" (cosmological constant) என்ற ஒன்றைத் தனது சமன்பாடுகளில் சேர்த்தார். இதன் மூலம் பிரபஞ்சம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று பரவலாக இருந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது அல்ல என்பதற்கான புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர். உண்மையில், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருந்தது. பின்னர், இயற்பியலாளர் ஜார்ஜ் காமோவ் 'My World Line: An Informal Autobiography' என்ற தனது நூலில் "அண்டவியல் மாறிலியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் செய்த பெருந்தவறு" என்று ஐன்ஸ்டீன் குறித்து எழுதினார். பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA/J MERTEN/D COE படக்குறிப்பு,அந்தக் காலத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது ஆனால், இதற்கு இன்னொரு சுவாரஸ்யமான திருப்புமுனையும் உள்ளது. ஒரு மர்மமான "இருண்ட ஆற்றலின்" காரணமாக பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகப்படுத்தப்படுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஈர்ப்பு விசையைச் சமன்படுத்துவதற்காகத் தனது சமன்பாடுகளில் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய "அண்டவியல் மாறிலி" தான், உண்மையில் இந்த இருண்ட ஆற்றலுக்குச் சிறந்த விளக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. எனவே, அது தவறு அல்ல என்று சிலர் கருதுகிறார்கள். தொலைதூர விண்மீன் குழுக்களின் அறிமுகம் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மற்றொரு நிகழ்வையும் கணித்தது. நட்சத்திரம் போன்ற ஒரு மிகப்பெரிய பொருளின் ஈர்ப்பு புலம், அதன் பின்னால் உள்ள தொலைதூர பொருளில் இருந்து வரும் ஒளியை வளைத்துவிடும். இதன் மூலம் அந்தப் பெரிய பொருள் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடி போல (பெரிதாகக் காட்டும் கண்ணாடி - magnifying lens) செயல்படுகிறது. 'ஈர்ப்புப் புல ஒளிவிலகல் - Gravitational lensing' (ஒரு பொருளிலிருந்து வரும் ஒளி, ஒரு பெரிய பொருளின் அருகே செல்லும்போது, அந்தப் பொருளின் ஈர்ப்புப் புலம் ஒளியின் பாதையை வளைத்து, பார்வையாளருக்கு அது வேறு இடத்தில் இருந்து வருவது போலத் தோற்றமளிக்கும்) எனப்படும் விளைவு, பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் என்று ஐன்ஸ்டீன் நினைத்தார். அதனால், அவர் தனது கணக்கீடுகளை வெளியிடவே விரும்பவில்லை. ஆனால் செக் குடியரசைச் சேர்ந்த பொறியாளரான ஆர்.டபிள்யூ. மாண்டல் அதை வெளியிடுமாறு ஐன்ஸ்டீனை வற்புறுத்தினார். பின்னர் 1936ஆம் ஆண்டு சயின்ஸ் இதழில் வெளியான தனது சொந்த கட்டுரையை மேற்கோளிட்டு, "மாண்டல் என்னை வற்புறுத்தி வெளியிட வைத்த இந்தச் சிறிய கட்டுரையை, நீங்கள் வெளியிட உதவியதற்கு நன்றி கூற விரும்புகிறேன். இது பெரிதாக மதிக்கத்தக்கது அல்ல, ஆனால் இந்த ஏழைக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என ஐன்ஸ்டீன் அதன் பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கட்டுரையில் உள்ள கண்டுபிடிப்பின் மதிப்பு வானியலுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஹப்பிள் தொலைநோக்கிக்கு, பூமிக்குக் அருகிலுள்ள பெரிய விண்மீன் குழுக்கள் மூலம் பெரிதாக்கப்பட்ட, தொலைதூர விண்மீன் குழுக்களின் விவரங்களைத் திரட்ட உதவுகிறது. குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?17 ஏப்ரல் 2025 கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA படக்குறிப்பு,ஈர்ப்புப்புல ஒளிவிலகல், ஹப்பிள் டெலஸ்கோப்புக்கு 'ப்ளூ ஹார்ஸ்ஷு' விண்மீன் குழுவை படம்பிடிக்க உதவியுள்ளது 'குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது' அலைகளும் துகள்களும் என ஒளியை விவரிக்கும் ஐன்ஸ்டீனின் 1905ஆம் ஆண்டின் கட்டுரை உள்பட, அவரது பணி இயற்பியலின் வளர்ந்து வரும் அந்தத் துறைக்கு அடித்தளம் அமைக்க உதவியது. குவாண்டம் இயக்கவியல், மிகச் சிறிய துகள்கள், அதாவது (அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்கள்) போன்றவற்றின் விசித்திரமான உலகத்தை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குவாண்டம் பொருளால் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் ('சூப்பர்பொசிஷனில்'). அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். ஆனால் நாம் அதை அளவிடும்போது, அது ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (நிலைக்கு) கொண்டு வரப்படுகிறது. இதற்கான பிரபலமான விளக்கம் இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரால் அளிக்கப்பட்டுள்ளது. 'ஒரு பெட்டியில் உள்ள பூனையை யாரோ ஒருவர் அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்து சரிபார்க்கும் வரை ஒரே நேரத்தில் அது உயிருடனும் இருப்பதாகவும், இறந்து விட்டதாகவும் கருதப்படலாம்' என்பதுதான் அந்த விளக்கம். மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எர்வின் ஷ்ரோடிங்கரின் முரண்பாடு ஒரு பெட்டியில் பூனை என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. ஆனால் குவாண்டம் இயக்கவியலின் நிச்சயமற்ற தன்மையை ஐன்ஸ்டீன் நிராகரித்தார். 1926இல், அவர் இயற்பியலாளர் மாக்ஸ் பார்னுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் "குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது (God does not play dice)" என்று கூறித் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். விஞ்ஞானிகளான போரிஸ் பொடோல்ஸ்கி மற்றும் நேதன் ரோசனுடன் இணைந்து ஐன்ஸ்டீன் 1935ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், சூப்பர் பொசிஷனில் உள்ள இரண்டு பொருள்கள் ஏதேனும் ஒரு வகையில் இணைக்கப்பட்டு, பின்னர் பிரிக்கப்பட்டால், ஒருவர் முதல் பொருளைக் கவனித்து அதற்கு மதிப்பை அளிக்கும்போது, இரண்டாவது பொருளைக் கவனிக்காமலே, அதன் மதிப்பு உடனடியாக நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்த யோசனை, குவாண்டம் சூப்பர்பொசிஷனுக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது பல ஆண்டுகளுக்குப் பிறகு குவாண்டம் இயக்கவியலில் ஒரு முக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வித்திட்டது. அதை நாம் இப்போது குவாண்டம் பின்னல் (Entanglement) என்று அழைக்கிறோம். இது, இரண்டு பொருள்கள் வெகுவாக தொலைவில் இருந்தாலும் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் எனக் கூறுகிறது. இதன் மூலம், ஐன்ஸ்டீன் புத்திசாலித்தனமாகத் தனது கோட்பாடுகளை விளக்கியுள்ளதையும், சில நேரங்களில் அவர் தவறு செய்திருந்தாலும், அந்தத் தவறுகளும் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவியுள்ளன, நவீன உலகில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqvl2ng1z1o
  5. @ஏராளன் உங்கள் அதிர்ச்சி புரிகிறது, ஆனால் உள்ளக நேர்மை- integrity இன்னும் பெருமளவானோரில் எஞ்சியிருக்கும் துறையாக விஞ்ஞானத் துறை விளங்குகிறது. அண்மைக்காலத்தில் தனது விஞ்ஞானத் திரிப்பினால் உலகின் கவனத்தை ஈர்த்த ஒருவர் - துரதிர்ஷ்டவசமாக- ஒரு சிறிலங்கன் அமெரிக்கர். https://www.wsj.com/science/university-rochester-ranga-dias-superconductor-misconduct-aa2f9fd4 மிகைக் கடத்திகள் (super conductors) எனப்படும் மின்சாரக் கடத்திகள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்சாரத்தைக் கடத்துவன. இதனாலேயே சாதாரண பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் இருக்கின்றன. ரங்கா டயஸ் என்ற இந்த பௌதீகவியலாளர், அறை வெப்ப நிலையில் வேலை செய்யும் மிகைக் கடத்தியை தாம் கண்டு பிடித்துள்ளதாக அறிவித்து, விருதுகள் சில பெற்றார். இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து ரங்கா டயஸ் செய்த "விஞ்ஞானத் திரிப்பு" சில மாதங்களிலேயே நியூசாகி, ஒரு வருடம் விசாரணையில் இருந்து, இப்போது முழுவதும் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இவர் போன்றோரால், அல்லும் பகலும் உழைக்கும் பௌதீகவியலாளர்கள், விஞ்ஞானிகளுக்கும் அவமானம் நேர்ந்திருக்கிறது.
  6. சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன். துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்? வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார். கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார். 2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ? கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர். ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார். அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான் இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரம‌சிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.
  7. விரிவான கட்டுரைக்கு நன்றி ரஞ்சித். பிள்ளையான் மிக மோசமான மனிதகுல எதிரி என்பதுடன் இவன் போன்ற படுகொலையாளர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கே அழிவுகளை கொண்டு வரக்கூடிய சமூக துரோகிகள். இவ்வாறான பேர்வழிகளை ஜனநாயகத்தின் பேரால் தம் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் அவலமான செயற்பாடுகளை செய்தவர்கள்/ செய்கின்றவர்கள் கிழக்கு வாழ் தமிழர்கள் மட்டுமல்ல. வடப்குதி தமிழர்களும் தான். இந்திய இராணுவத்துடன் தோளோடு தோள் நின்று, பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞ, இளைஞிகளை படுகொலை செய்தும், பல தமிழ் பெண்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றும், தமிழர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றும் அடாவடித்தனங்கள் புரிந்த அமைப்பின் தலைவர்களாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், 2009 வரைக்கும் துணை இராணுவக் குழுவாக இயங்கிய ஈபிடிபியின் தலைவர் டக்கிளஸையும் தேர்தல்களில் வெல்ல வைத்த / வைக்கின்றவர்களாக வட பகுதித் தமிழர்களும் உள்ளனர். ஒரு முறை சரிநிகர் பத்திரிகை சுரேஸ் பிரேமச்சந்திரனை செய்தி அல்லது பேட்டி ஒன்றுக்காக 90 களில் தொடர்பு கொள்ள, கொழும்பில் உள்ள காரியாலயத்துக்கு தொலைபேசியில் அழைக்கும் போது, அங்கிருந்தவர்கள் சுரேஸ் மட்டக்களப்புக்கு சென்று விட்டார் என்றும், அங்கு அவரை தொடர்பு கொள்ள ஒரு தொலைபே இலக்கத்தை தந்தனர். அந்த இலக்கம், ராசிக் குழுவின் முகாமினது தொலைபேசி இலக்கம். அதாவது சுரேஸ் மட்டக்களப்புக்கு செல்லும் போதெல்லாம், ராசிக் குழுவின் முகாமில் தான் தங்குகின்றவர். இப்படியானவர்களைத் தான் வடக்கு கிழக்கு தமிழர்கள் தேர்தல்களில் வெல்லவைக்க முயல்கின்றனர்.
  8. ஆட்டைய போடுறதில நீங்க நம்மாள்.
  9. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ஆர் . சி .பி யின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறதைப் பார்த்தால் புரியும் ........ ! 😍
  10. எமது தேசிய வீரர்கள்.... பிள்ளையான். -சரத் வீரசேகர.-
  11. அது என்ன மாயமோ தெரியவில்லை.நான் எந்த குழிவைத் தெரிவு செய்கிறோனோ நந்தனும் வந்து கும்மி அடிக்கிறார்.
  12. அது வசியின் தமையனின் கொம்பனி . வசிக்கும் குடும்பம் ஒன்று இருந்து டைவேர்ஸ் ஆகி விட்டது .இதற்க்கு மேல் இங்கு வேணாம் .
  13. மொழி பெயர்ப்பு - தம்பி வாடா சேர்ந்து விளாடலாம். ப்ளீஸ்டா தம்பி🤣 ஆரம்பத்தில் விஜைக்கு தூது விட்டார். விஜை பெரியாரை தூக்கி கொண்டாடியவுடன் கோபத்தின் உச்சிக்கே போய் லாரில அடிபட்டு செத்துருவேன்னு சாபம் எல்லாம் விட்டார். இப்போ மறுபடியும் தூதுப்படலம். நேற்று இது. இன்று - இந்திய, திராவிட கட்சி தவிர வேறு எல்லாரிடமும் கூட்டணி வைப்பாராம். விஜை அதிமுகவையே 90 சீட் கேட்டு அலற விட்டதாக சொல்கிறார்கள். சீமானை🤣
  14. துருப்புச் சீட்டாவது விளையாடி சந்தோசமாக இருக்கலாம்..😀
  15. நாங்கள் தெரிவு செய்யாத அணி தோக்குமென்டுதானே நாங்கள் சொல்ல வேணும் இல்லையா. அதுதானே உலக நியதி. அப்படித்தானே லோகமும் இந்தக் களமும் ஓடிக் கொண்டிருக்கு.😁 கேட்கும் போது நன்றாக இருக்கிறது. நீங்களும் எல்லாத்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறீங்கள் போல. ஒருத்தரையும் விடக்கூடாது. எல்லாரையும் ஓடவிடுவோம்.
  16. தேங்காய் சீனிவாசன் ஏழெட்டு திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். சில படங்களில் வில்லனாகவும் வந்து போயிருக்கிறார். ஆனாலும் அவரது நகைச்சுவை நடிப்பு எனக்குப் பிடிக்கும். ‘மஞ்சள் பூசி தஞ்சம் பொண்ணட ராமா..’ என்ற இந்தப் பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. கோவை சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வர பாடியிருப்பார்கள்.
  17. GMT நேரப்படி நாளை செவ்வாய் 22 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 19 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  18. போற போக்கில அணி ஒன்றுமே இருக்காது போல. அடுத்த மினி ஏலத்தில பார்ப்போம்
  19. அது ராஜாவாக இருக்க விடவே மாட்டீர்களா?
  20. சிங்கம் மனிசனாக மாற வெளிக்கிட்டு அசிங்கமாய் இருக்கு . ...... ! 😂
  21. ஐன்ஸ்ரினின் சிந்தனைச் சோதனைகளைப் பற்றி அறியும் போது வியப்பே மிஞ்சுகிறது. இன்றைய கால விஞ்ஞானத்தில், ஒரு அறையில் அமர்ந்து பேப்பரும் பென்சிலுமாக யோசிக்கும் சிந்தனை முறைமை மிகவும் அருகியிருக்கிறது. காலக் கட்டுப்பாடுகள், பிரசுரிக்க வேண்டுமென்பதற்காக அரைகுறையாக செய்யப் பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், பதவியுயர்வுக்காக திரிக்கப் பட்ட ஆய்வுகளைப் பிரசுரித்தல் என விஞ்ஞான முறைமையும் பெரும்பாலும் மாறி விட்டது. மிக அடிப்படையான விடயங்களை விஞ்ஞானிகள் கண்டறியும் போது, அந்த அறிவை உடனடியாக வருமானம் தரும் ஒரு பொருளாக மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அந்த அறிவிற்கு அரச மானியமும் கிடைக்காத நிலை இருக்கிறது. National Science Foundation -NSF என்ற அடிப்படை விஞ்ஞானத்தை ஆதரிக்கும் நிறுவனத்திற்கான நிதியை, விஞ்ஞானம் புரியாத ஈலோன் மஸ்க்கின் வாலுகள் அண்மையில் நிறுத்தியது இந்த "இலாபம் தரும் விஞ்ஞானம்" என்ற கோசத்தினால் தான்!
  22. இப்ப, வடிவா... இருக்கா பிரண்ட்ஸ். 😂 @ஏராளன் , @suvy , @உடையார், @goshan_che , @S. Karunanandarajah , @ஈழப்பிரியன் ,
  23. பூமியில் பிரான்சிஸ் கடைசியாக சந்தித்த பிரபலம் "சாத்தானின் தூதுவர்" ! இந்த நல்ல ஆன்மாவுக்கு இப்படியொரு பிரியாவிடை! AP NewsVance meets Pope Francis on Easter Sunday after tangle ov...U.S. Vice President JD Vance has met briefly with Pope Francis on Easter Sunday as the pontiff recovers from pneumonia.
  24. பாரதிராஜா அறிமுகப்படுத்தியதால் பழைய நினைவுகள் இப்போதும் உள்ளது. நான்கு சுவர்களுக்குள் தயாரித்த படங்களை கிராமங்களில் மக்களுடன் மக்களாக படம் எடுத்த பெருமை பாரதிராஜாவையே சேரும். சரி சரி வயது அப்படி.
  25. ஆமாம் இவை கலை உலகம்,......அரசியலிலும் நல்லுர். எம் பி சிவசிதம்பரத்தின். மகள் ளும். ஈழப்பிரியனின். மகளும். 🤣🙏ஆ. இல்லை இல்லை ஈழவேந்தனின். மகளும். திருமணம். செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு மூன்று துணை நடிகர்கள் இலங்கையை சேந்தவர்களுண்டு பெயர் மறந்து விட்டேன் மற்றும் நடிகர் கருணாஸ். இலங்கையா. ?? எப்படி தெரியும் ??? 🤣 சும்மா வதந்தியைப் பரப்பக்கூடாது நான் பெண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை 🤣. சில பெண்கள் நிலத்தை பார்த்து நடப்பார்கள். அப்படி
  26. பயில்வான் ரங்கநாதனும், அவர்களைப் பற்றி நிறைய சொன்னார். 😂 ஒரு காதால் கேட்டு, மறு காதால்... வெளியே விட்டு விட்டேன். 🤣
  27. இன்னும் அவ கனவுக்கன்னியாக இருப்பதால் பிரியன் அவரை மறக்கவில்லை . .......... ! 😂
  28. விஜய் சங்கர் திருநெல்வேலிகாரர். ஆண்ட்ரே சித்தார்த்தும் தமிழ் நாட்டுக்காரர். சென்னை, கொல்கத்தா என்று தெரிவு செய்திருக்கிறீர்கள். SRH இனை தெரிவு செய்து மோசம் போனேன் 😄
  29. அடியேனும் அதில் ஒருவன்.சென்னையின் திறமைக்காக தெரிவு செய்யவில்லை.சென்னை அணி நம்ம தமிழ்நாட்டு அணி என்ற பாசம் தான்.ஆனால் சென்னை அணியில் அஸ்வினைத் தவிர வேறு தமிழக வீரர்கள் இல்லை.சென்னை அணியை முற்றாக மாற்றவேண்டும் .குறிப்பாக தோனியைத் துரத்த வேண்டும்.சென்னை ரசிகர்களுக்கு வெற்றி முக்கியமல்ல.தோனி வந்து 4 சிக்ஸர் விளாசவேண்டும்.இது கிரிக்கட் சூதாட்டம் போல் இருக்கிறது.அவருக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற மாதிரி இலகுவான பந்துகளைப் போடுகிறாரகள்.இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ரிக்கற் வாங்கி வந்து மைதானத்தில் விளையாட்டைப் பார்க்க வேண்டும்.அதற்கு தோனி வேண்டும்.தமிழக முட்டாள் ரசிகர்களும் வேண்டும்.
  30. சபாஸ்... சரியான கேள்வி. விடக்கூடாது. பிடிக்கிறம் சீக்கிரம்.
  31. மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஏப்ரல் 2025, 01:50 GMT மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தை ரோஹித் விளாச, டி20 ஸ்பெஷலிஸ்டான சூர்யகுமாரும் வழக்கமான அதிரடியைக் காட்டியதால் மும்பை அணி சிரமமின்றி வெற்றி இலக்கை எட்டியது. நட்சத்திரங்கள் சரியான நேரத்தில் எழுச்சி பெற்றுள்ளதால், ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. அறிமுக வீரர் களத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட பெரிய நட்சத்திரங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிஎஸ்கே அணியின் சோகம். சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி என்ன சொன்னார்? சிஎஸ்கே மந்தமான தொடக்கம் சிஎஸ்கே அணி வீரர் டேவான் கான்வேயின் தந்தை காலமாகிவிட்டதால் நேற்று சிஎஸ்கே வீரர்கள் கையில் கறுப்புபட்டை அணிந்து விளையாடினர். கான்வே இல்லாத நிலையில் ரவீந்திரா, ஷேக் ரஸீத் களமிறங்கினர். அஸ்வனிகுமார் ஓவரில் ரவீந்திரா விரைவிலேயே விக்கெட்டை இழந்தார். 3.1 ஓவர்களி்ல் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டை இழக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தது. அனுபவம் இல்லாத தொடக்க வீரர்களால் மும்பையின் பும்ரா, போல்ட் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது. 17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி, அதிரடியாக பேட் செய்தார். ஆயுஷ் மாத்ரே களத்துக்கு வந்தபின்புதான் சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தன. அதன் பின்னரே சிஎஸ்கே ஸ்கோர்போர்டில் ரன்கள் ஓடின. பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 48 ரன்களைச் சேர்த்தது சிஎஸ்கே அணி. ஆயுஷ்மாத்ரே, 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் தீபக் சஹர் ஓவரில் சான்ட்னரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஷேக் ரசீத் 12 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. இயேசு உண்மையில் குட்டையாக, கருப்பு நிறத்தில் இருந்தவரா? ஒரு வரலாற்றுப் பார்வை20 ஏப்ரல் 2025 இயேசு பார்க்க எப்படி இருந்தார்? அவரை சிலுவையில் அறைந்த நாளை 'புனித வெள்ளி' என்று அழைப்பது ஏன்?19 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். சிஎஸ்கேவை மீட்ட ஜடேஜா, துபே கூட்டணி 4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே இருவரும் ஜோடி சேர்ந்து சிஎஸ்கே அணியை மெல்ல சரிவிலிருந்து மீட்டனர். சான்ட்னர் பந்துவீச்சை அதி எச்சரிக்கையாக கையாண்ட துபே பெரிய ஷாட்களுக்கு செல்லவில்லை. இதனால் சான்ட்னர் 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். துபேயும், ஜடேஜாவும் நீண்டநேரம் பெரிய ஷாட்களுக்குச் செல்லாமல் இருந்தனர். 7வது ஓவர் முதல் 12வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை டிரன்ட் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை குறிவைத்து ஜடேஜாவும், துபேயும் ஆடத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். துபே 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பும்ரா ஸ்லோவர் பால் பந்துவீச்சில் துபே 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய தோனி 4 ரன்னில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். டெத் ஓவர்களை பும்ரா, சான்ட்னர் வீசி சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். சான்ட்னர் 18வது ஓவரை வீசி ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. ஜடேஜா 34 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன? ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் 'ராஜா ரோஹித்' தி மும்பை சா ராஜா என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா இந்த ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தை நேற்று விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் தீர்க்கமாக, பொறுமையாக, எந்த தவறையும் பேட்டிங்கில் செய்யாமல் அற்புதமாக பேட் செய்தார். இதபோன்று ரோஹித் நிதானமாகத் தொடங்கி, அதிரடியாக ஆடியது அரிதானது. கலீல் அகமது பந்துவீச்சில் ரோஹித் லெக்சைடில் அடித்த இரு "பிக்அப் ஷாட்" சிக்ஸர்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியது. பதிராணா பந்துவீச்சை ரோஹித் கசக்கிப் பிழிந்துவிட்டார். நூர் அகமது ஓவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிஎஸ்கே இளம் வீரர்கள் நேற்று உணர்ந்திருப்பர். ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது. ஆனால் நேற்று பிரமிப்பூட்டும் ஷாட்களை அடித்த ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதம் விளாசி, 45 பந்துகளில் 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் கணக்கில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அடித்த 9-வது அரைசதமாகும். ஒட்டுமொத்தத்தில் 44வது ஐபிஎல் அரைசதமாகும். ரோஹித்துக்கு துணையாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, 30 பந்துகளில் 68 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பரவியது எப்போது? வரலாற்றைப் புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா கடந்த 6 போட்டிகளாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை, மொத்தமே 82 ரன்கள்தான் சேர்த்திருந்தார் என்ற விமர்சிக்கப்பட்டது சென்னையை வதம் செய்த மும்பை இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிஎஸ்கே அணியை முற்றிலுமாக ஆதிக்கம் செய்தது என்று கூற வேண்டும். பந்துவீச்சில் போல்ட், அஸ்வனி குமார் ஓவர்களை மட்டுமே துபே, ஜடேஜா அடித்தனர். பும்ரா, சான்ட்னர் ஓவர்கள் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தன. மும்பை வான்கடே மைதானத்தில் இதுபோன்ற 176 ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர் கிடையாது. இன்னும் கூடுதலாக 30 ரன்களை சிஎஸ்கே சேர்த்திருந்தால் சற்று போராடியிருக்கலாம். ஆனால், இந்த ஸ்கோரை வைத்து வலிமையான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் மும்பை அணியை சுருட்டுவது சாத்தியமில்லை. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை தெறித்து ஓடவிட்டனர். அதிலும் ரோஹித் சர்மா லெக் சைடில் அடித்த சில ஷாட்கள் மின்னல் வேக ஃபேவரேட் சிக்ஸர்களாக இருந்தன. கலீல் அகமது ஓவரில் விளாசிய இரு சிக்ஸர்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. இருவரையும் பிரிக்க தோனியும் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும், கடைசி வரை பலனில்லை. பதிரணா, நூர் அகமது இருவரையும் வைத்துதான் நடுப்பகுதி ஓவர்களை சிஎஸ்கே சமாளித்து வந்தது. ஆனால், நேற்று இருவரின் பந்துவீச்சையும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் விளாசித் தள்ளினர். அதிலும் ஜடேஜா மீது சூர்யகுமாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ஜடேஜா ஓவரை குறிவைத்து சூர்யகுமார் ஸ்வீப் ஷாட், காலை மடக்கிக்கொண்டு லெக் சைடில் சிக்ஸர், பவுண்டரி என துவைத்து எடுத்துவிட்டார். பதிராணா 2 ஓவர்கள் வீசிய நிலையில், 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 34 ரன்களை ரோஹித், சூர்யா விளாசித் தள்ளினா். ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கே அணியை மும்பை அணி தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் ஆதிக்கம் செய்தது என்றுதான் கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் சர்மா, சூர்யகுமார் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை ஓடவிட்டனர். சிஎஸ்கேயின் ஆறுதல் இவர்கள்தான் சிஎஸ்கே அணியின் ஆறுதலாக நேற்று இருவர் மட்டுமே இருந்தனர். ஒன்று இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின். சிஎஸ்கே அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து விளாசிய ரோஹித், சூர்யாவால் அஸ்வின் பந்துவீச்சை பெரிதாக அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 ரன்ரேட்டில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். 2வது நபர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயின் அதிரடியான பேட்டிங். இவர் போன்ற இளம் வீரரை ஏன் சிஎஸ்கே பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது. அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார், ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை பிடித்து பவுண்டரி கோட்டில் கால் சென்றுவிடும் சூழலில் பந்தை தடுத்து தட்டிவிட்டு சிக்ஸர் செல்வதைத் தடுத்தார். பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ஆயுஷ் மாத்ரே ஆறுதல். இருவரைத் தவிர சிஎஸ்கே அணி வேறு எதிலும் ஆறுதல் பட முடியாது. சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மாத்ரே, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஒரு கேட்சைப் பிடித்தார் சிஎஸ்கே மோசமான செயல்பாடு பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. நடுப்பகுதி ஓவர்களில் பதிராணா, நூர்முகமது இருவரையும் வைத்து எதிரணிகளை மிரட்டிய நிலையில் இருவரின் பந்துவீச்சையும் ரோஹித், ஸ்கை நொறுக்கினர். மும்பை அணியின் ஒரு விக்கெட்டைத் தவிர்த்து அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத நிலையில்தான் பந்துவீச்சு பலவீனமாக இருந்துள்ளது. ரோஹித், சூர்யா இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் தோனி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும், இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க சிறிதுகூட இடம் அளிக்கவில்லை. ஜடேஜா, பதிராணா, நூர் முகமது, கலீல் அகமது, ஓவர்டன் பந்துவீச்சில் ரோஹித், ஸ்கை இருவரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். ஜடேஜா பந்துவீச்சில் இதற்கு முன் 4 முறை ஆட்டமிழந்துள்ள சூர்யகுமார் யாதவ் நேற்று ஜடேஜா ஓவரை குறிவைத்து அடித்தார். ஜடேஜா ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, ஸ்வீப்ஸில் சிக்ஸர் அடித்து, ஜடேஜா ஓவரில் முதல்முறையாக ஸ்கை சிக்ஸர் விளாசினார். சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் மட்டும் நேற்று 35 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே சிஎஸ்கே அணி சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது சிஎஸ்கேவை ஆளும் மும்பை கடந்த 2022ம் ஆண்டுக்குப்பின் வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணியை முதல்முறையாக வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை. அப்போது நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லை. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3வது முறையாக மும்பை அணிவீழ்த்தியது. இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி, 2020-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை நசுக்கியது. இப்போது 3வது முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வாகை சூடியுள்ளது. சிஎஸ்கே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் 3 முறை வீழ்த்திய ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான் வேறு எந்த அணியும் இல்லை. சிஎஸ்கே அணி நிர்ணயித்த ஸ்கோரை 100 பந்துகளுக்குள் சேஸ் செய்து வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தொடர் 3வது வெற்றியாகும். இதன் மூலம் மும்பை அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், நிகரரன்ரேட்டில் ஆர்சிபிக்கு இணையாக 0.483 என இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை அணி பெற்றால் நிகர ரன் ரேட்டில் 2வது இடம் அல்லது 3வது இடத்துக்கு முன்னேறிவிடும். அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இதற்கு முன் 2008 ஐபிஎல் சீசனில் இதே வான்ஹடே மைதானத்தில் சிஎஸ்கேவை 9 விக்கெட்டில் பந்தாடியது மும்பை அணி சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி கூறியது என்ன? சிஎஸ்கே கேப்டன் தோனி தோல்விக்குப் பின் கூறுகையில் " நாங்கள் டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோரையே சேர்த்தோம். 2வது பாதியில் பனியின் தாக்கம் இருந்ததும் பந்துவீச்சில் தொய்வடைய காரணம். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளர் பும்ரா, டெத்பந்துவீச்சை மும்பை அணி தொடக்கத்திலேயே கொண்டு வந்தால் எங்களால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் அதிக ரன்களும் அடிக்க முடியவில்லை. ஆயுஷ் மாத்ரே சிறப்பாக பேட் செய்தார். மும்பை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர். நாங்கள் இந்தத் தோல்வியை உணர்ந்து ஆலோசிக்க வேண்டும். இந்த தொடரில் வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் நாங்கள் நல்ல கிரி்க்கெட்டை விளையாடினோம், உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் சரியான ஃபார்மில் கிரிக்கெட் விளையாடுகிறோமா அல்லது சரியான ஃபார்மில் இருக்கிறோமா என்பது அவசியம் ஆய்வுசெய்யப்பட வேண்டியது, இன்னும் அதிகமான ரன்கள் சேர்க்க வேண்டியது அவசியம். சில கேட்சுகள்தான் ஆட்டத்தை மாற்றும், பீல்டிங்கில் உள்ள குறைகளையும் களைய வேண்டும். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் சரியான வீரர்கள் கலவையுடன் அடுத்த சீசனில் சந்திக்கலாம்" எனத் தெரிவித்தார். வெளியேறுகிறதா சிஎஸ்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரபூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும். அதேசமயம், சிஎஸ்கே அணி சந்தித்த 6வது தோல்வியாகும். 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே 2 வெற்றி, 6 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.392 என இருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு மீதமிருக்கும் நிலையில் அனைத்திலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஒருவேளை 16 புள்ளிகளை சிஎஸ்கே அணி பெற்றாலும் அது ப்ளே ஆஃப் செல்ல தகுதியாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான். இன்னும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. ஆனால், இன்னும் ஒரு தோல்வி அந்த அணியை முழுமையாக வெளியேற்றிவிடும். இன்றைய ஆட்டம் கொல்கத்தா vs குஜராத் இடம்: கொல்கத்தா நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் நாள் - ஏப்ரல் 23 இடம் – ஹைதராபாத் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-368 ரன்கள்(8 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-365 ரன்கள்(7 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை) 333 ரன்கள்(8 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 14 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39j4kx2xkwo
  32. சென்னை என்ற பெயரக்கேட்டாலே சும்மா அதிருமில்ல. நம்ம பாசம் அப்பிடி. ஆனா, இப்போ இங்கே சொல்லப்படும் விடயங்களைக் கேட்டால்! இதுதான் அணி என்று தெரிந்துகொண்டு தெரிவு செய்யவில்லை போல்தான் தெரியுது. அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம் எடுக்கிறம். பிறகு.... பொட்டு வைச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் நாங்க தொட்டுத்தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்கரதம் அட நீ தங்கக்கட்டி சிங்கக்குட்டி
  33. பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும். வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை. தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது. பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள். மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள். சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம். இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம். இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும். ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.
  34. கர்மா சாத்திரம் போன்றவற்றை நம்புவதில்லை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்ப தோனுது.
  35. சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... ஒரு வித்தியாசம் பிள்ளையான் செயலில் இறங்கினார் ...மற்றவர்கள் கருத்துக்களை எழுதினார்கள் ... மகிந்தா குழுவினர்,மற்றும் அண்மையில் ரில்வின் சில்வா சொன்னதும் இதே கருத்து ...தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை ...அதுவும் ஒர் பகுதியினரின் கையில் பொருளாதாரம் சென்றுள்ளது மேட்டுக்குடியினரின் கையில்
  36. ஒரு சொல் வாழ்க்கையை மாற்றும் .......... மாற்றியது . .......... ! 👍
  37. இவ்வளவு தானா???? இல்லையே,......நானும் இந்த திருமண சங்கத்தில். பதிவு செய்யலாம் என்று இருந்தேன் நீங்கள் என்னை பற்றி இப்படி எழுதி எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் 😀
  38. உண்மைதான் விசுகர்! சீமானின் அரசியல் மேடைகளை தவிர..... அவர் பங்குகொள்ளும் பொது மேடைகளில் அரசியல் சலசலப்பு இல்லாத யதார்த்த பேச்சுக்களால் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல்கள் வானை பிளக்கின்றது. இதனால் தான் அவர்கள் பதட்டப்படுகின்றார்கள்.
  39. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் எவரும் நிலைத்து ஆடாததாலும், பின்னைய ஓவர்களில் எதிரணியின் இறுக்கமான பந்து வீச்சாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான தேவ்தத் படிக்கலின் 61 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலியின் ஆட்டத்தாலும் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விரைவில் பவிலியனுக்குத் திரும்ப 17 வயதில் முதலாவது ஐபிஎல் போட்டியில் நுழைந்த ஆயுஷ் மாத்ரே மின்னல் வேகத்தில் 32 ஓட்டங்களை எடுத்தார். வேகமாக அடித்தாடி அரைச் சதங்கள் பெற்ற ரவீந்திரா ஜடேஜாவினதும், ஷிவம் டுபேயின் ஆட்டங்களால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடன் 15.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களையே எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தக்கவைத்துள்ளார். இறுதி இடத்தில் இருந்த @goshan_che மூன்று பேரைக் கீழே தள்ளி முன்னுக்கு வந்துவிட்டார். கடைசிப் படியில் நிற்க பலர் முண்டியடிக்கின்றனர்!
  40. இன்றுதான் பார்த்தேன் சிறீ..🤔 தகவலுக்கு நன்றி🙏 பரிமளம் அவதாரங்கள் எல்லோர் வீட்டிலும் அப்பப்போ உண்டு. 🤗சிலவற்றை வெளியே சொல்ல ஏலாது..😔🤣
  41. ஊழல் ஒழிப்பு அணி வன்னி பிரபாகரன் ஊழல் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கினார்! -முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா புகழாரம் பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் அவரை கிளிநொச்சிக்கு அழைத்த போது அவர் கொன்றுவிடுவார் என்று தப்பி ஓடிய நபர்தான் இந்த கருணா. விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இருந்தார், அவர் கருணாவை விட திறமையானவர், அவருடன் நாம் கிழக்கில் போரிட்டோம். பலகல்ல என்ற எமது இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திரிக்காவுக்குத் தெரியாமல் கருணாவை கொண்டு வந்து கொழும்பில் ஒளித்து வைத்தார், அதனால் அரசு அவரை பணி நீக்கம் செய்தது. இதேவேளை பிள்ளையான் 150 பேருடன் சுங்காவில் பகுதியில் முகாமொன்றில் இருந் தார்.நாங்கள் அவர்களை எம்மிடம் சரண டையுமாறு கோரினோம். அவ்வாறு சரண டைந்தவர்களில் 80 பேர் வரையிலானோர் 13 வயதுக்கும் குறைவானவர்களாகவே இருந் தனர்.அவர்கள் ஐசிஆர்சியிடம் ஒப்படைத் தோம். எஞ்சியவர்களை நாங்கள் பாதுகாப்பு வழங்கி பார்த்துக்கொண்டோம். ஆனால் பிள்ளையான் யுத்தம் செய்யவில்லை, ஆட்கடத்தல்கள் செய்துள்ளார். ராஜ பக்ஷ காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம். இப்போது இவர்களை வீரர்கள் என்று கம்மன்பில போன்றோர் கூறுகின்றனர். கம்மன்பில எதுவும் தெரியாதவர். யுத்த காலத் தில் எங்கேயே இருந்தவர் இப்போது வந்து ஏதோ கூறுகின்றார். பிள்ளையான்தான் யுத்தத்தில் உத்தரவுகளை வழங்கினாரா? இப்படியான ஒருவரை வீரர் என்று கம்மன்பில போன்றவர்கள் கூறுவது தெற்கில் உள்ளவர்களுக்கே வெட்கமானது. பிள்ளையானிடம் எவ்வளவுசரி பரித்துக் கொள்வதற்காக நீங்கள் வீரர் என்றும்,உங்களின் சட்டத்தரணி என்றும் கதைக்கின்றனர். இவர்கள் சேட் அணிந்திருந்தாலும் கீழே அணிந்துகொண்டுதான் இவ்வாறு கூறுகின்றனரா? என்று கேட்கவேண்டியுள்ளது பிள்ளையான் , கருணா இருவரும் ஊழல் செய்துவிட்டு புலிகளுக்கு பயத்தில் அங்கிருந்து ஓடி வந்தவர்கள், இவர்கள் வீரர்கள் இல்லை. என்று சரத் பொன்சேகா கடந்த கிழமை சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
  42. பேசாமல் வா என் பக்கம் நெருங்கு ........... ! 😍 தேங்காய் சீனிவாசன் காதல் பாட்டு . ........ நல்லா இருக்கு கொஞ்சம் கேட்டு பார்த்து ரசியுங்கள் .......... !
  43. ஷோபா சக்தியைச் சூழும் கேன்சல் கலாச்சாரவாதிகள் - ஆர். அபிலாஷ் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களுமாகக் கையெழுத்திட்டு வெளியிட்ட ஷோபாசக்திக்கு எதிரான "குற்ற அறிக்கையை" அது வெளியான சமயத்தில்உடனடியாகப் படித்தேன். நான் அடிப்படையில் ஒழுக்கவாதியோநியாயவாதியோ அல்லன். அதேநேரம் எனக்குள் அபத்தமானநீதியுணர்வு உண்டு, அதை மீறும் விழைவும் உண்டு. இந்த இரண்டுஎதிர்விசைகளுக்கு நடுவே நிற்கும் எழுத்தாளர் நான். என் இடத்தில்இருந்து பார்க்கையில் அமைப்பின்மைவாதிகள் மீது தோன்றும்திகைப்பும் பயமுமே அறிக்கையில் தோன்றும் ஷோபா சக்தியின்சித்திரத்தைப் படிக்கையில் ஏற்பட்டது. அவர் கெட்டவரா எனும்அதிர்ச்சியல்ல, அது வேறொன்று - அதை இங்கு அபுனைவில்விளக்க முடியாது. (புனைவில் மட்டுமே இயலும்.) ஷோபாவின் எதிர்வினையையும் அது வந்த உடனே படித்தேன்: அதுசற்று பலவீனமானது - ஏனென்றால் ஒழுக்கமீறல், துரோகம் போன்றமிக அந்தரங்கமான குற்றச்சாட்டுகளை ஏற்று பின்னர்நியாயப்படுத்த முடியாது. ஒன்று, நமது கட்டுரை வடிவம்அடிப்படையில் அறம் எனும் கட்டமைப்பினுள் எழுப்பப்பட்டது. புத்தொளிக் காலத்தில் மதக்கருத்துக்களை மறுத்து தோன்றியபுரட்சிகர சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தனிமனிதவாதத்தைமுன்னெடுக்கவும் தோன்றிய வடிவமே கட்டுரை வடிவம். அதுகுற்றங்களுக்கு கடவுளிடம் அல்ல தனிமனிதனின் நடத்தையிலும்மனசாட்சியிலும் பதிலைக் கோரும் வடிவம். அதற்குள் நீங்கள் மனிதநடத்தையின் குழப்பமான நிழலான பகுதிகளை விவரிக்கவோ நம்பவைக்கவோ முடியாது. அடுத்து, நம் சமூகம் மிகவும்கட்டுப்பெட்டியானது. ஆணோ பெண்ணோ பாலியல் மீறலை அதுமன்னிக்காது (ஆனால் தினம் தினம் அதில் ஈடுபட்டவாறும்இருக்கும்). இம்மாதிரிக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் ஏற்கனவே என் நூலில்விரிவாக என் கருத்துக்களைப் பதிவு செயதிருக்கிறேன். நான் இந்தwoke பண்பாட்டை, அதன் அம்பலப்படுத்து, சமூகவிலக்கம் செய்என முழங்கும் cancel cultureஐ ஏற்கவில்லை. அது முற்றதிகாரத்தைநோக்கி உலகைக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பே என்றுமுன்பு எழுதியிருக்கிறேன் - இப்போது பாருங்கள் அமெரிக்காவில்டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு அடிகோலியதே woke பண்பாட்டுக்குஎதிரான வெறுப்பும், அவநம்பிக்கையும்தான். மேலும் இதுஉருவாக்கும் கும்பல் மனப்பான்மை, ஒற்றை உணர்வின் கீழ்மக்களை டிஜிட்டல் ஊடகத்தில் திரட்டும் முறைமை ஆபத்தானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஏனென்றால் அது நீதியின்பெயரிலான அவநம்பிக்கையில் பிறக்கிறது, ஆனால் வினோதமாகநீதியைக் கோரவோ, பெறவோ செய்யாமலே மனதளவில்முற்றுமுழுமையான அமைதியை நாடுகிறது. அதற்காக குற்றம்சாட்டப்பட்டவரை மிகப்பெரிதாகப் பெருக்கி அவரை ஒற்றைத்தீமையாக நம் முன் நிறுத்துகிறது, அவரைப் போன்றவர்களையும்பட்டியலில் சேர்த்து அவரை மட்டுமே அந்நேரத்தில் நம்கண்முன்னால் பெருக்கிக் கொண்டே போகிறது. அவர் சமூகத்தீமைக்கு மொத்தமான உருவகமாகிறார். அதன்பின்னர் அதுதிருப்தியாகி நின்றுகொள்கிறது. அவரைக் காம வேட்டையாடி, வேட்டை மிருகம் என்று திரும்பத்திரும்பச் சொல்லும்போதே குற்றம்ஏன், எப்படி, எதனால் நடந்தது, அது குற்றம் தானா என்றெல்லாம்விசாரிக்கக் கூடாது என்கிறது. அதற்கான நியாயப்பாடுகளையும்அது சொல்கிறது. இது சமூகக்கூச்சம், பாதிக்கப்பட்டவருக்கானபாதிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல என நினைக்கிறேன். மாறாக கவனம் முழுக்க ஒற்றை நபர் மீது வைப்பதற்கான உத்திஇது. அவரை "வெற்றுக் குறிப்பான்" ஆக்குவதே நோக்கம். அவர்அதன்பிறகு ஒரு பேயாக மாறுகிறார், எல்லாரும் அவரைப் பற்றிமுணுமுணுப்பார்கள், ஆனால் அவரது வாழ்க்கை சட்டென நமக்குஉடலற்றதாக, மர்மமாக மாறுகிறது, அது தன் பொருண்மையை, அர்த்தத்தை இழக்கிறது, யாரும் அதை நாட மறுப்பார்கள். அதைத்தேடாதிருப்பதே அவருக்கான தண்டனை ஆகிறது. இம்மாதிரிகேன்சல் கலாச்சாரத்தில் "விசாரணையும் தண்டனையும்" இந்தநடைமுறையைக் கொண்டிருப்பதைத் திரும்பத்திரும்பப்பார்க்கிறேன். வெற்றுக்குறிப்பான் ஆக்கப்பட்டவர் அதன்பிறகுநம்மிடையே பேயாக மட்டுமே உலவ முடியும். அவரைஆதரிப்பவர்களுக்கும் இதுவே நடக்கும். முற்றதிகார வலதுசாரி அரசியலும் இதே நடைமுறையையேபின்பற்றுகிறது. நமக்குத் தோன்றலாம் அவர்களின் இலக்கும், கொள்கையும் வேறுவேறு என்று. ஆனால் முற்போக்கு தாராளவாதசிந்தனையின், பண்பாட்டின் முற்றதிகாரச் சார்பு, வலதுசாரிமுற்றதிகாரத்துடன் தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்கைகுலுக்கும் சந்தி (intersection) இது. அதனாலே இந்த woke பண்பாட்டைத் தொடர்ந்து வலதுசாரி அரசியல் பெரும் எழுச்சிபெறுகிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இது நடக்கிறது. முந்தைய நடுநிலை முற்போக்காளர்கள் இப்படியான அரசியலைவரிக்க மாட்டார்கள். அவர்கள் சமநிலையான நிலைப்பாட்டைஏற்பார்கள். அதை இந்த தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்ஏற்பதில்லை. ஒரு கட்டத்தில் முன்னவரை ஒழித்து woke அரசியல்செயல்பாட்டாளர்கள் மேடையை ஆக்கிரமித்துக் கொள்வார்கள், அவர்கள் அப்படியே அம்மேடையை அரசியல் மேடையாக்கிமுற்றதிகாரிகளுக்கு கைமாற்றி விடுவார்கள். இந்தியாவில் இது2013இல் காங்கிரஸின் கடைசி கட்டத்தில் நிர்பயா விசயத்தில்நடந்தது. நிர்பயா விவகாரத்தில் மக்களிடம் பரவலாக ஏற்பட்டஅவநம்பிக்கை நீதிமன்றம், காவல்துறை, சிவில் சமூகத்தால்பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாது, ஜனநாயகம்தோற்றுவிட்டது என்பதே. அதன்பிறகு மோடி வந்து இந்தநிறுவனங்களை ஒவ்வொன்றாக ஒழித்தார். நிக்கோலே மாட்டேச்சி தன் இத்தாலிய தகவல் களஞ்சியம்டிரெக்கானிய நூலில் சொல்வதைப் பாருங்கள். முற்றதிகாரம்ஜனநாயக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை உருவாக்கிதனக்கான சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்வைக் காணக்கோருகிறது எனும் அந்த விளக்கம் அப்படியே இந்த கேன்சல்பண்பாட்டுக்கும் பொருந்துகிறது: "In totalitarian regimes we have a charismatic bureaucracy alongside a terror-mongering secret police: the moment of legality and predictability is lost, as the enemy is not only the real one because it is possible to invent a target enemy, chosen by whomever has the sovereign power to interpret the ideology.” எட்கர் மோரின் தனது “For a Crisiology” நூலில்முற்றதிகார அரசுகள் பொதுவாக மற்றமைகளைத் தாக்கும்போதுஅவர்களுடைய நோக்கம் அச்சத்தை விளைவித்து எல்லாவிதமானஎதிர்ப்புகளை ஒடுக்குவதாக இருக்கும் என்கிறார். அதாவது ஒழுக்கமீறலுக்கு சமூகத்தில் எப்போதுமே இடமிருக்கிறது. நேரடிவன்முறையை சமூகம் அனுமதிக்காது என்றாலும் அது அராஜகமானதனிமனிதர்களையும், அவர்களுடைய உறவுகளையும்ஒடுக்குவதில்லை. அவர்கள் - ஆணோ பெண்ணோ - ஒன்றுக்குமேலான உறவுகளில் இருப்பார்கள், ஒரேசமயத்தில் கூடஇருப்பார்கள், சரி-தவறு எனும் இருமைக்கு அப்பால் காதலிக்கமுயல்வார்கள், பரஸ்பரம் மனதைக் காயப்படுத்துவார்கள், துரோகம்இழைப்பார்கள், அதை நியாயம் என நினைக்கவும் செய்வார்கள். ஆனால் அதுவும் சேர்ந்ததுதான் ஜனநாயக சமூகம். இவர்களைஒழித்து பரிசுத்தமான sterile சமூகத்தை உருவாக்க முயலும்போதுஅது ஒழுக்கமீறல் குறித்த அபரிதமான பயத்தை சமூகத்தில்விதைக்கிறது, இது பின்னர் அரசதிகாரத்தை எதிர்ப்பதற்கானபயமாக உருவெடுக்கிறது. அப்கானிஸ்தானில் ஹசாராஇனக்குழுவினர் சிறுபான்மையினர். அவர்கள் ஷியா இஸ்லாமியர்எனினும் அப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலைகள்அவர்களுக்கு கடந்த கால பெருமையின் சின்னமாக (வெற்றுக்குறிப்பானாக) இருந்தன. தாலிபான்கள் அவற்றை தகர்த்தபின்னர்ஏற்பட்ட வெற்றிடத்தில் ஹாசார மக்களால் எதையும் வைக்கமுடியவில்லை. அவர்கள் தலைகுனிந்து தாலிபான்களை(இன்னொரு வெற்றுக்குறிப்பான்) ஏற்றுக்கொண்டு சமரசம்பண்ணிக்கொண்டனர். இந்தியாவில் இப்போது அது இஸ்லாமியமத நிர்வாகத்தில் குறுக்கிடுவதன் வழியாக நடக்கிறது. பண்பாட்டளவில் கேன்சல் பண்பாட்டினர் ஆண்களில் சிலரைக்குறிவைத்து இதைச் செய்கிறார்கள். அவர்கள் தம்மைப்பாதிக்கப்பட்டவர்களாக முன்வைப்பதால் அவர்களுடைய செயலின்தாக்கம் நமக்கு உடனே விளங்காது - ஆனால் மறைமுகமாகஅவர்களும் சமூகத்திற்கு நீதி பரிபாலனம் மீதுள்ள, தீவிரகண்காணிப்பு இன்றி வாழ்வதில் உள நம்பிக்கையைக் குலைக்கஉதவுகிறார்கள். அதாவது நம்மால் கண்ணால் பார்க்க முடியாத சமூகஅரசியல் பாதிப்புகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஸ்டீவன்கிரீன்ஹட் தன் கட்டுரையில் இதை ஒரு எதேச்சதிகாரப் போக்கு எனஅழைப்பது இதனால்தான். அவர் இப்போக்கு முன்பு ரஷ்யாவில்ஸ்டாலினிய குலாக்குகளின்போது தேசத்தை விமர்சிப்போரைஅம்பலப்படுத்துவது எனும் நடைமுறையாக இருந்தது என்கிறார். ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் தனது கட்டுரையில் முற்றதிகாரம் ஒழிந்தாலும்அதன் தன்மைகள் சமூகத்தில் நீடிக்கும், சாதாரணர்களே அந்தபோக்குகளை முன்னெடுப்பார்கள் என்று ஹானா ஆரெண்ட்சொன்னதைக் குறிப்பிட்டு இன்றுள்ள கேன்சல் கலாச்சாரம் அதன்நீட்சியே என்கிறார். ஏனென்றால் உண்மைக்கும் கற்பனைக்கும்இடையிலான எல்லைக்கோட்டை முழுக்க ஒரு நொடியில்அழித்துவிட்டு, தம்மால் சொல்ல்படுவன எல்லாமே பரிசீலனைக்குஅப்பாலான நிஜங்கள் என நம்பும்படி அவை கோருகின்றன. இதுசமூகத்தை முற்றதிகாரத்துக்குப் பழக்குகிறது. ("For Arendt, a key feature of totalitarianism - in contrast to other forms of tyranny or dictatorship – is the toying with truth, deliberate confusion of fiction and reality, and incessant use of mass media to manipulate the way millions of people experience the world. In our era of fake news, targeted messaging and ‘cancel culture’, there is still something profound in this warning. Arendt is alerting us to the use of propaganda and conspiracy to change the perceived structure of reality on a whim.”) லெய்டில் மற்றும் தாரியா தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கேன்சல்கலாச்சாரம் பெரும்பான்மைக்காக சிறுபான்மையை வாய்மூடவைக்கும் கருத்துச் சுதந்திர, ஜனநாயக ஒழிப்புச் செயல்பாடு எனும்பார்வையை வைக்கிறார்கள். “A distinctive feature of the new information culture is thepredominating discourse of the majority group, where the minority, under the threat of pressure, will strive not to express their opinion at all, since their views have ceased to fit into the dominant culture [Noelle-Neumann 1974].) அவர்கள் ரஷ்யாஉக்ரேனில் படையெடுத்ததை ஒட்டி ஐரோப்பா முழுக்க ரஷ்யகலைஞர்களும் சினிமாவும் எழுத்தாளர்களும் “கேன்சல்” செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களிடத்தில் உக்ரேனியஜனாதிபதிக்கு மேடைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுஎன்கிறார் (ஆனால் இப்போது அவரும் பின்னுக்குப் போய்விட்டார்). இந்த கலைஞர்கள் ரஷ்ய அரசின் நடவடிக்கைகளுக்கு ஏன்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனக் கேட்க இயலாது. அதன்பெயர் தான் கேன்சலேஷன். கேன்சல் கலாச்சாரம் கீழிருந்துகுரலற்றவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான கருவி அல்ல, அதுஅயலுறவு விவகாரங்களில் முற்றதிகாரத் தலைவர்களின்கருவியாகவும் மாறுகிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனாலே - நான் ஏற்கனவே ஒருமுறைக் குறிப்பிட்டதைப் போல - இந்தியாவிலும் உற்பத்தி சாதனங்களை, முதலீட்டைக் கையில்வைத்திருப்போர் மீது கேன்சல் பிரச்சாரம்முன்னெடுக்கப்படுவதில்லை - முதல்வர், கட்சித் தலைவர், மதத்தலைவர், பெருமுதலாளிகள் எப்போதும் பாதுகாப்பாகஇருப்பார்கள். உதாரணமாக ஜக்கியின் இஷா ஆசிரமத்தில்நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்கவும் அந்தஅறக்கட்டளையை தடைசெய்யும்படி ஏன் பெண்ணிய கேன்சல்கலாச்சாரக் குழுமங்கள் கோருவதில்லை? ஏன் தேவாலயமதகுருமார்கள் மிது அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை? அவர்கள்பண்ணாத அட்டகாசமா? பல ஆயிரம் பெண்களும் இளைஞர்களும்புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் கேன்சல்கலாச்சாரவாதிகள் அவர்களுடன் நிற்க மாட்டார்கள். மோடி மீதுகுஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் தொந்தரவுசெய்ததாக, விசாரணை அமைப்புகளை அப்பெண்ணைஉளவுசெய்ய அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தபோது ஏன் அவரைகேன்சல் செய்ய யாரும் கோரவில்லை? ஏனென்றால் கேன்சல்பிரச்சாரகர்களும் தேசத்தின் கருவிகளே. அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பெருமுதலாளிகளுக்கு அப்பால் பிரபலங்களைஎடுத்துக் கொண்டால்கூட அவர்கள் தம் மீது வைக்கப்படும் கேன்சல்கலாச்சாரப் பிரச்சாரத்தை தூசைப் போல தட்டிவிட்டுக் கொண்டுநகர்ந்து விடுகிறார்கள். ஏனென்றால் சமூக அவமதிப்பை மீறிச்செயல்படும் செல்வமும் அதிகாரமும் கட்டமைப்பும் அவர்களுக்குஉண்டு. உ.தா., ஆயிரம் கோடிக்கு லாபமீட்டும் படமெடுக்கும் நடிகர்மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்தால் அவர் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. அவரால் நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குஎதிராக தடையுத்தரவு வாங்க முடியும். அவர்களுடையஆதரவாளர்கள் பெரும் தடையரணாக எழுந்து அவர்களைப்பாதுகாப்பார்கள். உ.தா., ஒருவேளை உதயநிதி மீது மீடூ எழுந்தால்(எழ வேண்டுமென நான் கூறவில்லை) பல லட்சம் பேர்கள் அவரைஆதரித்து எழுதுவார்கள், ஊடகங்களில் பலர் கருத்துதெரிவிக்கையில் இதை அரசியல் சதி என்பார்கள். ஆனால் எளியமத்திய வர்க்க ஊழியர்களில் இருந்து தம் அதிகாரத்தைஇழந்துவரும் சோபையிழந்த பிரபலங்கள் வரை சுலபத்தில்இரையாகிவிடுவார்கள். அவர்களே கேன்சல் கலாச்சாரத்தின்உண்மையான இலக்கு, அதிகாரவர்க்கம் அல்லர், கேன்சல்கலாச்சாரம் அதிகாரத்துக்கு எதிரான குரலற்றவர்களின் எழுச்சிஅல்ல, அது குரலற்றவர்களை மேலும் ஊமையாக்கும் முயற்சியே எனசெயித் ஜிலானி சொல்கிறார். எனக்கு இது முற்றதிகாரச்சமூகங்களில் உள்ள “சுயதணிக்கை, சுயகண்காணிப்புக் கருவி” எனவும் தோன்றுகிறது - 2020இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டகருத்துக்கணிப்பில் 60%க்கு மேலான மக்கள் தனக்கு அன்றாடவாழ்வில் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க பயமாகஉள்ளதாகத் தெரிவித்தார்கள். டைம்ஸ் இதழ் நடத்தியகருத்துக்கணிப்பில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இந்தகேன்சல் கலாச்சாரத்தை அஞ்சுவதாகத் தெரிய வந்தது (சாதி, மதம், இனம், பாலினம் என எதைப் பற்றியாவது தப்பாகப்பேசிவிடுவோமோ, அதனால் வேலை போய்விடுமோ, சமூக ஒதுக்கம்நடக்குமோ எனும் அச்சம்.). டுரோல்கள் பொதுவாக ஈடுபடுவதும்கேன்சல் கலாச்சாரத்திலே - இம்மாதிரி கேன்சல் டுரோக்களால்பாதிக்கப்பட்டு ஒரு பெண் எழுத்தாளர் ஓராண்டுக்கு மேலாக எழுதமுடியாமல் போய் உளவியல் சிகிச்சை எடுக்க நேர்ந்ததாக என்னிடம்சொன்னார். அதனாலே இதை வலதுசாரி கேன்சல் கலாச்சாரம் என்று இன்றுஅழைக்கிறார்கள் (conservative cancel culture). அமெரிக்காவில்ஆரம்பத்தில் இடதுசாரிகளே கேன்சல் கலாச்சாரத்தைஊக்கப்படுத்துவதாக வலதுசாரிகள் கூறி வந்தனர், ஆனால்அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தமக்கு எதிரான அரசியல்சக்திகளை ஒடுக்குவதற்கும், சிறுபான்மை இனத்தவர்களின், பாலினத்தின் உரிமையை மறுப்பதற்கு, நிதியை ரத்துசெய்வதற்குமிகப்பெரிய அளவில் வலது கேன்சல் கலாச்சாரவாதிகளை அரசுபயன்படுத்துகிறது என வில்டெல் பிலார் சொல்கிறார். இந்தியாவில்கேன்சல் கலாச்சாரத்தின் இன்னொரு முகமாக உயர்கல்விநிறுவனங்களில் நூல்களைத் தடைசெய்வது, எதிர்ப்பாளர்களைவாயை மூடவைப்பது பரவலாக நடக்கிறது. இரண்டு கேன்சல்கலாச்சாரங்கள் இருவேறு இலக்குகளைக் கொண்டிருப்பதாகத்தோன்றினாலும் ஒன்று மற்றொன்றை தன் முறைமையால்ஆதரிக்கிறது என்பதே உண்மை. டேவிட் பிரென்ச் சொல்வதைப்பாருங்கள்: There’s no question that the Left leads the way in academic cancel culture. Most attempted cancellations have come from the Left — a statistic that makes sense when one considers that the American academy is an overwhelmingly left-wing institution. But while fewer come from the Right, they are responsible for most of the cancellation attempts that included violent threats. அதாவதுமுற்போக்கு கேன்சல்வாதிகள் மூட்டும் நெருப்பை உலகம் முழுக்கப்பரப்பில் பெரும் அழிவாக மாற்றுவது வலது கேன்சல்வாதிகளே. முக்கியமாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவோர்முற்போக்காளர்களே என்று செபாஸ்டியன் மில்பேங்க் சொல்கிறார் - ஏனென்றால் முற்போக்காளர்கள் கேன்சல் செய்ய அதிகமாகமுயல்வது ஒழுங்குக்குள் வராத தமது சகபாடிகளையே. கத்தி ஒன்றுதான் - ஆனால் இன்று எல்லாருமே குத்துப்படுகிறார்கள். அதனாலே பாலியல் குற்றவிசாரணைகளை இம்மாதிரி ஊடகஅம்பலப்படுத்தலாக, சமூக ஒதுக்கமாக, ரத்து செய்வதாகமுன்னெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நியாயத்துக்காகபேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பெண்ணியவாதிகளில்சிலர் வேறுவிதங்களில் அதிகமாக குரலற்ற மக்களை அழிக்கப்பயன்படுத்தப்படுகிற ஆயுதத்துக்கு தகுதியாக்கலை (validation) அளிக்கிறார்கள். நாம் ஷோபா சக்திக்குத் திரும்ப வருவோம் - இந்த அறிக்கையைஎழுதியோரும் அதில் குறிப்பிட்டப்படுவோரும் ஏன் மர்மமாகஇருக்கிறார்கள் என அவர் கேட்கும் கேள்வி முக்கியமானது. அவர்களில் சிலர் ஏன் தன்னுடன் உறவு முறிந்தபின்னரும்நல்லுறவில் தொடர்ந்தார்கள் என்று கேட்கிறார். அவர்கள் தம்மைப்இருட்டில் வைத்திருக்க விரும்புவதில் நியாயமிருக்கலாம் - ஆனால்அறிக்கையின் எழுத்தாளர்கள் விசயத்தில் ஏன்வெளிப்படைத்தன்மை இல்லை? இதுவும் கேன்சல் கலாச்சாரத்தின்இயல்பே - வெளிப்படைத்தன்மையைக் கோருவதே தண்டனைதான்எனக் கூறி எல்லாரையும் அச்சுறுத்துவார்கள். வெளிப்பட்டால் அதுஒரு சிலரின் பிரச்சினை, வெளிப்படாதபோது அது எண்ணற்றபெரும் தொகையொன்றின் பிரச்சினை. அது பூதாகாரமாகிவிடும். சரி ஏன் வெளிப்பட முடியாதெனில் அவர்களுக்கு அந்தரங்கவாழ்க்கை உள்ளது, அதைக் கெடுக்க முடியாதுதானே, டுரோல்களிடம் சிக்கி அழிய முடியாதுதானே எனக் கூறலாம். சரி, அவர்களே சொல்லுவதுபடி பார்த்தால் பாலியல் வன்முறையோதாக்குதலோ நடக்கவில்லை. அப்பெண்களும் பால்புதுமையினரும்மாற்று உறவுக்குள் செல்லும்போது ஷோபா சக்தி அவர்களைவிட்டுவிட மறுத்தார் என்பதும், அவர்களுடன் இருக்கையில் அவர்வேறு நபர்களுடன் உறவில் இருந்தார் என்பதுமே மீளமீள வரும்குற்றச்சாட்டு. இது சம்மந்தப்பட்ட நபர்கள் தமக்குள் பேசி ஏற்படுத்தவேண்டிய எல்லையல்லவா? திறந்தநிலை உறவில் வேறெப்படிஇருப்பார்கள், இருக்க முடியும்? அவர்கள் விட்டுத் தொலைக்கவும்சுதந்திரமாக இருக்கவும் கட்டுப்படுத்தவும் உடைமையாகவும்தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள். இதைக் குற்றமாக பொதுச்சமூகத்தில் எடுத்து வரக்கூடாது. இன்னொரு குற்றச்சாட்டு ஷோபாசக்தி இப்பெண்களுக்கு துரோகம் இழைத்தார் என்பது - அதுதான்அவ்வுறவின் தாத்பரியம். ஆனால் உறவில் இருக்கும்போது ‘நீதான்என் உலகம், நீதான் எனக்கு காலமெல்லாம் உயிராக இருப்பாய்’ எனச் சொல்பவர்களும் இருப்பார்கள். ஷோபாவால் பாதிக்கப்பட்டவர்களாக முன்வந்துள்ளவர்களுக்குஉள்ள மற்றொரு முக்கியமான புகார் அவர் அவர்களைஅடிப்படையான மரியாதையின்றி நடத்தி அதைக் குறித்தகுற்றவுணர்ச்சி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே. இதுஆணின் அடிப்படையான பலவீனம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்- குற்றவுணர்வில் தள்ளாடுவது, பாவ மன்னிப்பு கோரி தெருவில்நின்று அழுவது, தண்டனையைக் கேட்டுப் பெறுவது ஆணைபலவீனமாக்கும். ஆண்கள் இதை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். சுதந்திரவாதியான, அரசின்மைவாதியான ஷோபாசக்தியின் கதைகளில் மேற்சொன்ன பலவீனமான மனதுக்குள்குமுறிக்கொண்டே தம்மை அழித்துக்கொள்ள விழையும் ஆண்கள், மன்னிப்புக் கோரும் ஆண்கள் வரலாம். அது அவரது சுயமுரண். இயல்பில் ஒருவேளை அவரால் அது இயலாது போவதில்ஆச்சரியமில்லை. இயன்றால் அவர் அரசின்மைவாதியே அல்ல, அவர்ஒரு ரஸ்கோல்நிக்கோவ் மட்டுமே. ஷோபா சக்தி எதிர்காலத்தில் தன்கதைகளில் இந்த எதிர்-ரஸ்கோல்நிக்கோவ் மனநிலையைக்கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்விவகாரத்தில், விஸா வாங்கித் தருவதாகச் சொல்லிஏமாற்றியதாகச் சொல்லுவது மட்டுமே குற்றமாக எனக்குத்தோன்றுகிறது. அதை ஆதாரத்துடன் சுலபத்தில் முன்வைத்துவிவாதிக்க முடியும். சரி, ஒரு ஆண் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அவன்ஒழுக்கவிதியை மீறும்போது ஆதிக்கத்தை பெண் மீதுசுமத்துவதில்லையா? இக்கேள்வியையே பெண்ணியவாதிகள்பொதுவாக எழுப்புகிறார்கள். பெண் துரோகம் செய்தால் அதுதுரோகம், ஆண் செய்தால் அது மேலாதிக்கம், சுரண்டல் எனவகைப்படுத்துகிறார்கள். அதிகாரம் என்பது ஒரு செயலுக்கு புதியபரிமாணத்தை அளிக்கும், அதிகாரத்தில் இருப்போர் அதிகநீதியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால்ஆண் எல்லா தளங்களிலும் சமயங்களிலும் அதிகாரத்துடன்இருப்பதில்லை. ஏனென்றால் ஆணாதிக்கம் (patriarchy) ஒருபண்பாட்டுக் குறியீடு (ஆணாதிக்கம் எனும் சொல்லேபாசிசத்தன்மை கொண்டதே என்பது தனிப்பிரச்சினை.). அதற்குப்பல உடல்கள். எப்போதும் ஆணுடலை அது தரிப்பதில்லை. அக்கருத்து பெண்ணியத்தின் இரண்டாம் அலையுடன்வழக்கொழிந்து விட்டது. குறிப்பாக, உறவுக்குள் சிலநேரங்களில்ஆண் கவனத்திற்காக மன்றாடும் அதிகாரமற்றவனாகவும், குரலற்றவனாகவும் மாறுகிறான். வேறு சமயங்களில் அவன் கைஓங்குகிறது. பணம், சமூக அடையாளம், ஆரோக்கியம், சாதி, மதம், அமைப்புகளின் ஆதரவு என பல விசயங்கள் ஆணாதிக்கத்தைசாத்தியமாக்குகிறது. ஆணை நிரந்தரமாக அதிகாரத்தின்முகமாகவும் பெண்ணை நிரந்தர பாதிக்கப்பட்டவராகவும் பார்ப்பதுகண்மூடித்தனமான மனநிலையே. உறவுக்குள் பல முடிவுகளும்செயல்களும் அதிகாரத்தின் சஞ்சலம் மிக்கவையாக உள்ளன, நியாய தர்மத்துக்கு வெளியே இருக்கின்றன, சுயநலத்தால்நடத்தப்படுகின்றன எனும்போது அந்த பழுப்பான பகுதிக்குள்வெளியாள் நுழைந்து மேலாதிக்கவாதி யார் எனச் சொல்ல முடியாது. மேலும், அது பெண்ணிற்கு அதிகாரம் பெறும் வாய்ப்பைமுழுமையாக ரத்து செய்யவும் செய்கிறது. “குற்றப்பத்திரிகையில்” வரும் வேறு பிரச்சினைகளைப்படிக்கையில் சிமன் டி பூவரின் The Woman Destroyed நாவல்நினைவுக்கு வந்தது - அதில் பூவர் தான் ஏன் தனக்குப்போட்டியாளராக வரப்போகும் இளம்பெண்ணை உறவுக்குள் தானேகொண்டு வந்தோம் என விசாரிப்பார். திறந்தநிலை உறவுகளில்எல்லாம் அனுமதிக்கப்படும் அனுமதிக்கபடாமலும் இருக்கும், அதைக் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் வருந்தவும் செய்வார்கள். இந்த பழுப்பான பக்கங்களை அவர்களேதாம் கையாண்டுநியதிகளை உருவாக்க வேண்டும். பின்குறிப்பு: 1) ஷோபா சக்தி என் நண்பரல்லர். நான் அவரது வாசகன், சக-எழுத்தாளன் எனும் கணக்கில் உரையாடி இருக்கிறேன். ஆனால்இவ்விசயத்தில் தன்னைப் பற்றி எழுத அவர் கேட்கவும் இல்லை. எனக்கு அவரைக் காபபற்றும் உத்தேசமில்லை. என் நோக்கம் இந்தகத்திக்குத்து கந்தன் நடைமுறையை, அதன்முற்றதிகாரத்தன்மையை எதிர்ப்பதே. இது சக்தி ஷோபாவாகஇருந்தாலும் நான் இதையே எழுதுவேன். 2)இந்த கேன்சல் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெண்களுக்குஎதிராகத் திரும்பும் என நினைக்கிறேன் - பாலியல் ஒழிக்கம்மிகத்தீவிரமாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு அவர்களில் சிலர்தேர்ந்தெடுக்கப்பட்டு பூதாகாரமாகப் பெருக்கப்படுவார்கள். இதேமாதிரி ஆனால் வேறு விழுமியங்களின் அடிப்படையில்(பரத்தை, துரோகி, திருமண அமைப்பிற்கு வெளியே நிற்கும்சூழ்ச்சிக்காரி) குற்ற அறிக்கைகள் வாசிக்கப்படும். நாம் அப்படியேநூறாண்டுகள் பின்னுக்குச் செல்வோம். இன்றுள்ள அடிப்படையானசுதந்திரம் பறிபோகும். நம்பிக்கை இல்லாவிட்டால் நான் கீழேதந்துள்ள தொடுவழிகளில் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள். https://www.wbur.org/onpoint/2022/04/26/women-fascists-democracy-backslides-abortion-rights https://philosophynow.org/issues/148/The_Origins_of_Totalitarianism_by_Hannah_Arendt https://www.researchgate.net/publication/372100356_Cancel_culture_towards_Russia_and_how_to_deal_with_it [accessed Apr 17 2025]. https://www.persuasion.community/p/the-powerless-are-hurt-most-by-cancel https://sapirjournal.org/cancellation/2022/when-right-cancels-right/ https://www.usnews.com/opinion/articles/2024-07-24/even-while-railing-against-it-the-republican-party-has-become-a-champion-of-cancel-culture https://www.city-journal.org/article/cancel-culture-conservatives-social- https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_17.html
  44. கொத்துக் கொத்தாக கொலைகளை செய்து விட்டு, திருநீறும், சந்தனப் பொட்டும், வெள்ளை வேட்டியும் கட்டிக்கொண்டு ஊருக்குள்ளை நல்லவன் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்திருக்கிறான். இவனை "என்கவுன்ட்டர்" போட்டு... பிடித்த இடத்திலேயே சுட்டுக் கொன்று இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்தி.. வழக்கு விசாரணை என்று போக... அடுத்த இருபத்தைந்து வருடம் ஆகிவிடும். அப்படியான நிலையில்தான்... நம்மூர் நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வளவு காலமும் பிள்ளையானை உயிர் வாழ விட்டதே மிக, மிக அதிகம். விளக்கமறியலில் வைத்தாவது இந்த 🐕‍🦺யை போட்டுத்தள்ளுங்க.
  45. கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ? இனிய பள்ளி நினைவுகளை மீட்பதில் ஒரு சுகம்.
  46. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள். அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.