Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது!

Featured Replies

யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது!

Published on March 29, 2012-6:11 pm ·

jaffna-university-150x150.jpgயாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ள ப்பட்ட பகிடிவதையினால் பல்கலைக்கழக முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்குள் வைத்து இந்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாகவும், மாணவனின் செவிப்பறை உடைக்கப்பட்டு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்களும் உடைக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனான 22வயதுடைய தில்லைநாதன் தனராஜ் என்ற மாணவனே படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.thinakkathir.com/?p=33542

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, எதிர்காலக் கனவுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவனுக்கு, பகிடிவதை என்னும் பெயரில்... அவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய... மிருகங்களுக்கு, தகுந்த தண்டனை கொடுக்கப் படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு மோசமான வன்முறை ராக்கிங் எமது இளைஞர்களை யுத்தம் எவ்வளவு பாதிதிருக்கிறது என்பதன் அடையாளம்தான். சண்முகலிங்கண் உபவேந்தராக இருந்தபோது இத்தகைய மட்ட வன்முறைகள் நடந்ததாகத் தெரியவில்லை. கொடூரம், விரக்தி பயம் என பாதிக்கப்பட்டுள்ள நமது சமூகத்துக்கு உளவியல் ஆலோசனையும் ஆதரவும் தேவை. ரக்கிங்கில் வர்க்கம் சாதி பால் என்பவை தொடர்பான வக்கிரம் இருப்பதை எனது பல்கலைக் களகக் காலத்தில் அறிந்து கொண்டேன். 1977 எனக்கு ராக்கிங் செய்யவந்தவர்கள் எல்லை மீறியபோது மோதலாயிற்று. எனது மீசை தாடியை எடுப்பதாக உயர் வகுப்பு மாணவர்கள் சக மாணவீகள் முன்னம் வீராப்பு பேசி இருந்தனர். உயர்வகுப்பு மானவர்களுடன் மோதல் வளர்க்க விருப்பமில்லை. அவர்களும் என் மீசை எடுக்காவிட்டால் தங்களுக்கு மரியாதை இல்லையென்றார்கள். இறுதியில் நாம்ன் ஒரு ஒப்பத்தந்ததுக்கு வந்தோம். என்னை சலூணுக்கு அழைத்துச் சென்று மீசை எடுக்க நான் இணங்குவதாகவும் பதிலுக்கு அவர்கள் எனக்கு விருந்து வைப்பதாகவும் முடிவாயிற்றுது. இறுதியில் ராக்கிங் முடியமுன்னமே நான் மாணவர் தலைவராக தெரிவு செய்யப் பட்டேன். மாணவர் தலைவராகத் தொடர்ந்த இரண்டரை வருடங்களில் அத்துமீறல்களை அடக்கி ராக்கிங்கை நட்பாடல் என்கிற எல்லைக்குள் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றிபெற்றோம்.யாழ் பல்கலைக்களக நிர்வாகம் மட்டுமன்றி மாணவர் சங்கமும் நடந்த நிகழ்வுக்கு பொறுபெடுக்க வேண்டும். மாணவரகள் மாணவர் சங்கம் நிர்வாகம் என்பவை கலந்துரையாடி அறிமுக உறவாடல் மட்டத்துக்கு மேல் எல்லைமீறல்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாக்கப் படவேண்டும் வன்முறை ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்க்கு சிகிச்சைக்கு கட்டாயமாக்கப் படவேண்டும்.

இதை செய்தவர்களை இனம் கண்டு அவர்களுக்கு இருட்டு அடி கொடுப்பதே சரி, அதே காதும் காலும் போகனும். பொலிஸ் மூலம் இதுக்கு பயன் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட மாணவன் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஓட்டுமொத்தமாக பகிடிவதையை கைவிட வேண்டும். அங்கு அமுலில் உள்ள பகிடிவதைக்கு எதிராக சட்டத்திற்கு கட்டுப்பட்டு.. கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கும். :icon_idea:

இவ்வளவு மோசமான வன்முறை ராக்கிங் எமது இளைஞர்களை யுத்தம் எவ்வளவு பாதிதிருக்கிறது என்பதன் அடையாளம்தான். சண்முகலிங்கண் உபவேந்தராக இருந்தபோது இத்தகைய மட்ட வன்முறைகள் நடந்ததாகத் தெரியவில்லை. கொடூரம், விரக்தி பயம் என பாதிக்கப்பட்டுள்ள நமது சமூகத்துக்கு உளவியல் ஆலோசனையும் ஆதரவும் தேவை. ரக்கிங்கில் வர்க்கம் சாதி பால் என்பவை தொடர்பான வக்கிரம் இருப்பதை எனது பல்கலைக் களகக் காலத்தில் அறிந்து கொண்டேன். 1977 எனக்கு ராக்கிங் செய்யவந்தவர்கள் எல்லை மீறியபோது மோதலாயிற்று. எனது மீசை தாடியை எடுப்பதாக உயர் வகுப்பு மாணவர்கள் சக மாணவீகள் முன்னம் வீராப்பு பேசி இருந்தனர். உயர்வகுப்பு மானவர்களுடன் மோதல் வளர்க்க விருப்பமில்லை. அவர்களும் என் மீசை எடுக்காவிட்டால் தங்களுக்கு மரியாதை இல்லையென்றார்கள். இறுதியில் நாம்ன் ஒரு ஒப்பத்தந்ததுக்கு வந்தோம். என்னை சலூணுக்கு அழைத்துச் சென்று மீசை எடுக்க நான் இணங்குவதாகவும் பதிலுக்கு அவர்கள் எனக்கு விருந்து வைப்பதாகவும் முடிவாயிற்றுது. இறுதியில் ராக்கிங் முடியமுன்னமே நான் மாணவர் தலைவராக தெரிவு செய்யப் பட்டேன். மாணவர் தலைவராகத் தொடர்ந்த இரண்டரை வருடங்களில் அத்துமீறல்களை அடக்கி ராக்கிங்கை நட்பாடல் என்கிற எல்லைக்குள் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றிபெற்றோம்.யாழ் பல்கலைக்களக நிர்வாகம் மட்டுமன்றி மாணவர் சங்கமும் நடந்த நிகழ்வுக்கு பொறுபெடுக்க வேண்டும். மாணவரகள் மாணவர் சங்கம் நிர்வாகம் என்பவை கலந்துரையாடி அறிமுக உறவாடல் மட்டத்துக்கு மேல் எல்லைமீறல்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாக்கப் படவேண்டும் வன்முறை ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்க்கு சிகிச்சைக்கு கட்டாயமாக்கப் படவேண்டும்.

எந்தக் குற்றத்திற்கும்.. எம்மில் சிலருக்கு இதே வேலையாப் போச்சு.. ! யுத்தம்.. அல்லது புலிகள் அல்லது இந்த இரண்டையுமே காரணம் காட்டுவது..!

நாங்களும் யுத்த காலத்தில் தான் பல்கலைக்கழகம் போனனாங்கள். பகிடி வதையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் போன வேளையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன. பகிடிவதைக்கு எதிராக. இப்போதும் அவை அமுலில் உள்ளன. அதன் வழி மாணவர்கள் துணிச்சலோடு பகிடிவதைக்கு எதிராகச் செல்ல வேண்டும்..!

விடுதலைப்புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பகிடிவதை வெகுவாகக் குறைந்திருந்ததோடு.. பகிடிவதையில் ஈடுபடக் கூடாது என்ற அறிவிப்பும் இருந்தது. இருந்தும் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் மறைமுகமாக ஈடுபட்டனர். ஆனால் பரவலான பகிடிவதை இருக்கவில்லை.

இதே சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டு வவுனியா கம்பஸ்.. பேராதனை.. மொரட்டுவையில் மிகமோசமான பகிடிவதைகள் இருந்தன. அதில் ஒரு சில மாணவர்கள்/மாணவிகள் உயிரிழந்தும் இருந்தனர்.

இதைவிட மோசமான பகிடிவதைகள் இன்றும் இதர தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் நிகழ்கின்றன.

பேராதனியாவில் (1996/8 காலப்பகுதி என்று நினைக்கிறேன்) ஒரு மாணவனின் உயிரிழப்பை அடுத்து.. பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிரான சட்டம் வலுவாக இயற்றப்பட்டது. இப்போதும் அது அமுலில் இருந்தும்.. அமுல்படுத்துவோரின் மெத்தனப் போக்கால் நிகழ்கின்ற இப்படியான சம்பவங்களுக்கு போர்.. போராட்டம்.. விடுதலைப்புலிகள் என்று குற்றம்சாட்டுவது எவ்வளவு பொருத்தம் என்று தெரியவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை குருட்டுக் கோழி விட்டத்தை பார்த்து பாய்ந்த கணக்கான பாய்ச்சலாகவே நாங்கள் காண்கிறோம்.

பகிடிவதையை தனியாகவோ.. குழுவாகவோ.. மாணவர்கள் நிராகரிக்க முடியும். அப்படி நிராகரித்து பகிடிவதை இன்றி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்களில் நானும் ஒருவன்.

பகிடிவதையை ஏற்காமல் விடுவது மட்டுமன்றி பகிடிவதையில் ஈடுபவர்களை இனங்கண்டால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறியத் தாருங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிறீலங்கா காவல்துறை தான் இன்று அங்குள்ளது அதனிடம் குறிப்பிட்ட சட்டம் அமுலில் உள்ளதை சுட்டிக்காட்டி.. குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். அதுமட்டுமன்றி பகிடிவதையில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்களின் விபரம் அறிந்து அவர்களின் பெற்றோருக்கும் இந்தத் தகவல்களை பரவ விடுங்கள். ஊடகங்களில் அவர்களின் விபரங்களையும் வெளியிடலாம். இதன் மூலம் பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தம்மை கட்டுப்படுத்த வாய்ப்புப் பிறக்கும்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற கலாசாரமே கிடையாது. இருந்தாலும் ஓர் சில இடங்களில் தனிப்பட ஒரு சிலர் செய்கின்றனர். பொதுவாக அவ்வறான செயற்பாடுகள் இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கவிஞரின் வாதம் விதண்டாவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய நெடுக்கால போவானுக்கு,

யாழ்பல்களைக் களக பகிடிவதைதொடர்பாக புலிகளின் கடும்போக்கு இருந்தது உண்மைதான் ஆனாலும் இத்தகைய வெளியார் தலையீடுகளை ஊக்குவிக்க முடியாது. அதனால் நன்மையைவிட தீமையே அதிகம் ஏற்ப்படும். உதாரணத்துக்கு தலைவர் ஒருவர் தன் காதலியை ராக்பண்ணியவர்களுள் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு மருத்துவமாணவனைகடத்திச் சித்திரவதை செய்து படுகொலை செய்ததுபோன்ற மோசமான சம்பவங்களும் இடம் பெற்றதைக் குறிப்பிடலாம்.

மாணவர்கள் பிரச்சினயை மாணவர்களும் பல்கலைக் களக நிர்வாகமுமே தீர்க்கவேண்டும். ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பாக தமிழக பல்கலைகளகங்கள் கல்லூரிகள் பின்பற்றும் கடுமையான விதிகளையும் சட்ட நடைமுறைகளையும் பின்பற்றலாம்,

Edited by poet

மாணவர்கள் பிரச்சினயை மாணவர்களும் பல்கலைக் களக நிர்வாகமுமே

தீர்க்கவேண்டும். ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பாக தமிழக பல்கலைகழகங்கள் கல்லூரிகள் பின்பற்றும் கடுமையான விதிகளையும் சட்ட நடைமுறைகளையும் பின்பற்றலாம்,

உங்களின் பதப் பிரயோகங்கள் சில தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை.

பகிடிவதை தொடர்பில் அதற்கு எதிராக விடுதலைப்புலிகளிடம் நியாயமான கொள்கை இருந்ததே தவிரே கடும்போக்கு என்று நீங்கள் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி என்றால் மென்போக்கோடு பகிடிவதையை அனுமதிக்கலாம் என்றீங்களா..??!

பகிடிவதை எந்த வடிவதிலும் நிகழக் கூடாது. அது கல்விச் சூழலில் மாணவர்களுக்கு தேவையற்ற ஒன்றும் கூட..!

மேலும்.. நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆதாரங்களும் உங்களால் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அதை நம்புவது கடினமாக உள்ளது.

இது விடயத்தில் சிறீலங்காவில் தமிழகத்தை விட நல்ல சட்டங்கள் உள்ளன. அமுலாக்கமே முக்கியமானது. பல்கலைகழக நிர்வாகமும் சிறீலங்கா காவல்துறையுமே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பெற்றோரினதும்.. சமூகத்தினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம். தமிழகத்தில் இங்குள்ளதை விட மோசமான நிலையில் பகிடிவதைகள் நிகழ்கின்றன. அவை சினிமா மூலம் நேரடியாகவும் மறைமுகமாவும்.. காவப்படவும் செய்கின்றன. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்திற்கு முன்னரே பகிடி வதையினால் ஒரு மாணவி மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியாதா? எதற்கெடுத்தாலும் புலிகளை இழுக்காமல் கவிஞரும் அர்சுனும் எழுதுவது புலிகள் மீதான காழ்ப்ப்புணர்வையே காட்டுகின்றது.இதுபோன்ற புலிச்செருகலால் சிலவேளைகளில் தரமான கருத்து எழுதினால் கூட அது வாசகர்களைச் சென்றடையாது போகின்றது.இவர்கள் என்ன வழக்கம் போல புலி எதிர்ப்புப் புராணம் பாடப் போகிறார்கள் என்று வாசிக்காமலே போய்விடுவார்கள்.இவர்களுக்கு படுக்கையிலும் புலிக்காய்ச்சல்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதப்பிரயோகங்கள் கடுமையாக இருப்பின் மன்னிக்கவும். நான் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையானவை.வன்முறைச் சம்பவங்கள் நிகழாத வரைக்கும் வெளியார் தலையீட்டை நான் ஆதரிக்க மாட்டேன். மாணவர் தலைமை பல்கலைக் களக நிர்வாகத்துக்கும் உறுதியாக இருந்தால் ராக்கிங்கை வரவேற்ப்பு மட்டத்தில் கட்டுபடுத்த முடியும். எனக்கு அந்த அனுபவம் உள்ளது. வன்முறைக்கெதிராக பல்கலைக் களக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதாகும்.

இப்படியான செயல்கள் வருத்தப்பட வைக்கின்றது. யுத்தம் நடந்து இருக்கின்ற காலகட்டத்தில் நாமும் எம் இளையவர்களும் இன்னமும் கரிசனமாக (compassionate) இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

அன்புகுரிய நெடுக்கால போவானுக்கு,

யாழ்பல்களைக் களக பகிடிவதைதொடர்பாக புலிகளின் கடும்போக்கு இருந்தது உண்மைதான் ஆனாலும் இத்தகைய வெளியார் தலையீடுகளை ஊக்குவிக்க முடியாது. அதனால் நன்மையைவிட தீமையே அதிகம் ஏற்ப்படும். உதாரணத்துக்கு தலைவர் ஒருவர் தன் காதலியை ராக்பண்ணியவர்களுள் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு மருத்துவமாணவனைகடத்திச் சித்திரவதை செய்து படுகொலை செய்ததுபோன்ற மோசமான சம்பவங்களும் இடம் பெற்றதைக் குறிப்பிடலாம்.

மாணவர்கள் பிரச்சினயை மாணவர்களும் பல்கலைக் களக நிர்வாகமுமே தீர்க்கவேண்டும். ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பாக தமிழக பல்கலைகளகங்கள் கல்லூரிகள் பின்பற்றும் கடுமையான விதிகளையும் சட்ட நடைமுறைகளையும் பின்பற்றலாம்,

உங்கள் கருத்துக்கு தவறுதலாக சிகப்பு புள்ளிகொடுத்துவிட்டேன், அதுக்காக பச்சை புள்ளியும் கொடுக்கவிரும்பவில்லை.

சிகப்பு புள்ளிக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாராவதுக்கு சிவப்பு குத்த வேணும் போல இருக்கு ....யாருக்கு குத்தலாம்?

எனக்கும் யாராவதுக்கு சிவப்பு குத்த வேணும் போல இருக்கு ....யாருக்கு குத்தலாம்?

ப்ளீஸ் எனக்கு குத்தவும். :lol::D:icon_idea:

யுத்த காலத்திற்கு முன்னரே பகிடி வதையினால் ஒரு மாணவி மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியாதா? எதற்கெடுத்தாலும் புலிகளை இழுக்காமல் கவிஞரும் அர்சுனும் எழுதுவது புலிகள் மீதான காழ்ப்ப்புணர்வையே காட்டுகின்றது.இதுபோன்ற புலிச்செருகலால் சிலவேளைகளில் தரமான கருத்து எழுதினால் கூட அது வாசகர்களைச் சென்றடையாது போகின்றது.இவர்கள் என்ன வழக்கம் போல புலி எதிர்ப்புப் புராணம் பாடப் போகிறார்கள் என்று வாசிக்காமலே போய்விடுவார்கள்.இவர்களுக்கு படுக்கையிலும் புலிக்காய்ச்சல்தான் இருக்கும்.

பள்ளிக் கூட பக்கமே போகாதவன் எல்லாம் பல்கலைக்கழகம் பற்றி முடிவெடுத்தால் எப்படி இருக்கும்?

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, எதிர்காலக் கனவுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவனுக்கு, பகிடிவதை என்னும் பெயரில்... அவனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய... மிருகங்களுக்கு, தகுந்த தண்டனை கொடுக்கப் படல் வேண்டும்.

மன்னிக்கவும் இங்கே பதில் எழுதினவர்களில் உங்கள் கருத்துத்தான் என் கேள்வியைக் கிளப்பியது. இதில் நீங்கள் கடினப்பட்டு படிச்சு எதிகால கவனவு எண்டெல்லாம் எழுதி இருக்கிறீர்கள்.

அனால் கடினப்பட்டு கொப்பியடிச்சதுகளைப் பற்றி சொல்லவே இல்லை.

இக்க்கேல்லாம் ஒரு தனி குழாம் இல்லை ஒரு சமூகமே பொறுப்பெடுக்க வேண்டும்.

முதலாளித்துவம் போல இதுவும் சமூகத்தின் ஒரு கொரூரப் பக்கம்தான்.

.

இத்தகைய வெளியார் தலையீடுகளை ஊக்குவிக்க முடியாது.

வெளியார் தலையீடு என்றால் என்ன? யார் யார் வெளியார்?

-----------

இது மாணவர்களின் கீழான மனநிலையைக் காட்டுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறைந்தது 3 வருடங்களுக்கு இடை நிறுத்துவது பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை இழுக்காமல் கவிஞரும் அர்சுனும் எழுதுவது புலிகள் மீதான காழ்ப்ப்புணர்வையே காட்டுகின்றது.-புலவர்,

புலிகலைப் பற்றி நான் பேசவில்லை. உங்கள் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரியவில்லை. புலிகளுக்காக நான் எடுத்த risk அளவுக்கு நீங்கள் எடுத்தீங்களா இல்லையா என தெரியாது.எனக்கு புலிகள் தொடர்பாக காழ்ப்புணர்வு இருப்பதாக எப்படிச் சொல்லிறீங்க. விமர்சனம் வேறு காழ்ப்புணர்வு வேறு புலவரே.

இது ராகிங் பிரச்சினையால நடந்த சம்பவம் இல்லை பல்கலை கழகத்துக்கு வெளில நடந்த சம்பவம் UNIOR , சீனியர், பிரச்சினை ஆக இருக்கலாம் என்று அங்கு படிக்கும் எனது நண்பி சொன்னாள் ராகிங் PERIOD முடிஞ்சுது எண்டும் சொன்னாள்” - அபராஜிதன்

அபராஜிதன் சொல்வது உண்மையானால் இந்த விவாதத்தின் அடிப்படையே தவறாகிவிட்டது

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூட பக்கமே போகாதவன் எல்லாம் பல்கலைக்கழகம் பற்றி முடிவெடுத்தால் எப்படி இருக்கும்?

அர்ஜீன் உங்களுக்கு ஒரு சிவப்பு. இது புலவர் மீதான தனி மனித தாக்குதலாகவே எனக்குத் தெரிகிறது. ஒருவர் தலைப்புக்கு ஏற்ப கருத்தெழுத பல்கலைக்கழகம் போனவராகவோ.. பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் யாழ் களத்தில் இல்லை. குறித்த சமூகத்தில் அவதானித்ததை.. அனுபவத்தை,, ஏன் இன்று அவர்களின் எண்ணத்தில் உதிப்பதைக் கூடச் சொல்லலாம்..! அந்த வகையில்.. இது புலவர் மீதான அப்பட்டமான தனிமனித தாக்குதல்.அதுமட்டுமன்றி அவரின் கருத்துரிமையை நீங்கள் தன்னிச்சையாக தீர்மானிப்பதை செய்கிறீர்கள். இது மிகவும் அடாத்தான செயல்..!

அதைவிட இந்த தலைப்புக்கு ஏற்ப உங்கள் கருத்தை நீங்கள் சொல்லவே இல்லை..????! அதில் நீங்கள் கவனம் செலுத்தவும் இல்லை.. ஏன்...???!

உங்களை சோத்துப் பாசல் என்று சொல்லிறதாக சிலர் விழுந்து விழுந்து அனுதாபக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செய்யும் பல தனிமனித தாக்குதல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தப் பக்கச்சார்ப்பானவர்களின் கருத்துக்களை காணும் போது வெறுப்பே மிஞ்சுகிறது. :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

ராக்கி வாங்க வேண்டியவர்களிடம் வாங்கினல் அதில ஒரு சுகம் இருக்கும் & சமத்துவமும் வரும். இதெல்லாம் அனுபவிக்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதப்பிரயோகங்கள் கடுமையாக இருப்பின் மன்னிக்கவும். நான் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையானவை.வன்முறைச் சம்பவங்கள் நிகழாத வரைக்கும் வெளியார் தலையீட்டை நான் ஆதரிக்க மாட்டேன். மாணவர் தலைமை பல்கலைக் களக நிர்வாகத்துக்கும் உறுதியாக இருந்தால் ராக்கிங்கை வரவேற்ப்பு மட்டத்தில் கட்டுபடுத்த முடியும். எனக்கு அந்த அனுபவம் உள்ளது. வன்முறைக்கெதிராக பல்கலைக் களக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதாகும்.

சட்டங்களும் விதிகளும் நடக்க இருக்கும் தீங்குகளை தடுப்பவையாக இருக்க வேண்டும். நடந்த பின்னர் யாரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதால் பாதிக்கப் பட்டவனுக்குப் பயன் இல்லை. இதுவே புலிகள் யாழ் பல்கலையில் செய்தது. இப்படியான சட்டத் தலையீடுகள் இல்லாததால் வரபிரகாஷ் என்ற பேராதனைப் பல்கலை மாணவன் அநியாயமாக உயிரிழக்க வேண்டி வந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன். வரப்பிரகாஷின் மரணத்திற்குக் காரணமான முதல் சந்தேக நபர் இப்ப கனடாவில் ஜாலியாக இருக்கிறார். வன்முறை நடந்தால் மட்டும் தலையிடுவோம் என்ற கொள்கையின் மிகப் பெரிய குறைபாடு இது தான்! :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை இழுக்காமல் கவிஞரும் அர்சுனும் எழுதுவது புலிகள் மீதான காழ்ப்ப்புணர்வையே காட்டுகின்றது.-புலவர்,

புலிகலைப் பற்றி நான் பேசவில்லை. உங்கள் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரியவில்லை. புலிகளுக்காக நான் எடுத்த risk அளவுக்கு நீங்கள் எடுத்தீங்களா இல்லையா என தெரியாது.எனக்கு புலிகள் தொடர்பாக காழ்ப்புணர்வு இருப்பதாக எப்படிச் சொல்லிறீங்க. விமர்சனம் வேறு காழ்ப்புணர்வு வேறு புலவரே.

இது ராகிங் பிரச்சினையால நடந்த சம்பவம் இல்லை பல்கலை கழகத்துக்கு வெளில நடந்த சம்பவம் UNIOR , சீனியர், பிரச்சினை ஆக இருக்கலாம் என்று அங்கு படிக்கும் எனது நண்பி சொன்னாள் ராகிங் PERIOD முடிஞ்சுது எண்டும் சொன்னாள்” - அபராஜிதன்

அபராஜிதன் சொல்வது உண்மையானால் இந்த விவாதத்தின் அடிப்படையே தவறாகிவிட்டது

எவ்வளவு பெரிய ஆய்வாளர் நீங்கள்! அபராஜிதன் தன் நண்பி சொன்னார் என்று ஆதாரமில்லாத ஒன்றை எழுதி விட்டு, இப்ப கருத்தை அழித்தும் விட்டார். யூனியர் சீனியர் பிரச்சினை ராக்கிங் காலத்திற்குள் நடந்தாலும் நடக்கா விட்டாலும் அது ராக்கிங்கின் நீட்சியாகத்தான் பார்க்கப் படும். இல்லா விட்டால் யூனியருக்கும் சீனியருக்கும் வேறென்ன பிரச்சினை வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரியான நிகழ்வுகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தனி ஒருவர் தனது சுதந்திரம் என்று கருதும் விடயம், மற்றவரின் சுதந்திரத்தை பறிப்பதாக அமையக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு பல்கலைகழகங்களில் இந்த ராக்கிங் இல்லைதானே? எல்லாவற்றையும் கொப்பி அடிக்கும் எம்மவர்கள் இந்த ராக்கிங்கை மட்டும் இன்னும் கை விடாமல் தொடர்ந்து செய்வதற்கு என்ன காரணம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.