Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டின் இருப்பும் உங்கள் மகிழ்ச்சியும்.. ஜப்பானியர் கற்றுத்தரும் பாடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

home1.jpg

ஜப்பானியர்கள் தங்கள் இல்லங்களை பிரத்தியேக வடிவங்களில் அமைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவற்றின் கூரையின்.. சுவரின்.. தளத்தின்.. நிறங்களை வரவேற்பறை.. ஓய்வு அறை.. படுக்கை அறை.. உணவு அருந்தும் அறை என்று தனித்துவமாக அமைப்பார்களாம். அதற்கு காரணம்.. நிறங்கள் எம் மனதில் செய்யும் ஆதிக்கம் தானாம்.

Japanese-house-concept-wood-in-japanese-house-concept.jpg

அதுமட்டுமன்றி இல்லத்தில் வரவேற்பறையில் அதிக பொருட்களை அடுக்கி வைக்கமாட்டார்களாம். அதிலும் மரத்திலான இயற்கையிலான பொருட்களையே அதிகம் பாவிப்பார்களாம். மேலும்.. கூடிய சுவாத்தியமாக நல்ல காற்றோட்ட வசதிவிட்டு வீட்டை சுத்தம் சுகாதாரமாகப் பேணிக் கொள்வார்களாம்.

Modern-Japanese-House-Dining-Room-View-by-David-Jay-Weiner.jpg

Japanese-interior.jpg

மேலும்.. வரவேற்பறைகள் தனித்துவமான அமைப்புக்களோடு இருக்குமாம். அதேபோல்.. உணவருந்தும் அறைகளும். அவற்றின் நிறங்களும்.. அமைப்புமே.. உணவு அருந்தும் மன நிலையையும்.. அளவையும்.. மகிழ்ச்சியையும்... தீர்மானிப்பதாக ஜப்பானியர்கள் நம்புகின்றனராம்.

Japanese-house-concept-ornaments-in-japanese-house-concept.jpg

பிரகாசமான இல்ல விளக்குகளை பாவிப்பதை தவிர்த்து.. கூடிய அளவு மனதிற்கு இதமான அளவில்.. மங்களான.. கண்ணைப் பாதிக்காத நிறங்களில்... மனதைக் கவரக் கூடிய மன அமைதியை தரக் கூடிய.. நிறங்களில்... மின் விளக்குகளைப் பொருத்தி வைப்பார்களாம்.

kidosaki_190909_02.jpg

அதுமட்டுமன்றி வீட்டுத்தோட்டம்.. வீட்டுச் சுற்றயலை மிகவும் மன ரம்மியமாகப் பேணிக் கொள்வார்களாம். ஓய்வுநேரத்தை அந்த ரம்மியமான சூழலோடு இயற்கையோடு ஒட்டிக் கழிப்பார்களாம். இதுவே அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஜப்பானின் புகழ்பூத்த ஒரு எழுத்தாளர் தனது நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Japanese-zen-garden-decoration.jpg

அந்த நாவலின் சுருக்கத்தினை சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஞாபகம். அதன் இரத்தினச் சுருக்கமே இது. அதன் அடிப்படையில்.. உங்கள் வீட்டை.. வீட்டுத் தோட்டத்தை எப்படி.. வைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிறைவளிக்கும் என்பதற்கான ஒரு வழிகாட்டலுக்காக.. இப்பதிவை எதிர்காலத்தில் பயன்படுத்த இருக்கிறோம். இதில் உங்கள் கருத்துக்களையும் படங்களையும் ஆக்கங்களையும் நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்...!

Japanese-Garden.jpg

Edited by nedukkalapoovan

எமது வாழ்வில் அரைவாசிக்கும் மேலான பங்கை எனது வீடுகளிலேயே செலவழிக்கின்றோம்.

வேலையால் மற்றும் மேற்குலக வாழ்க்கை முறைகளால் வரும் மன அழுத்தத்தை குறைக்கவும் உற்சாகமாக இருக்கவும் மனையின் (வீட்டின்) அழகும் வடிவமைப்பும் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்துடன் மேலே கூறப்பட்டவாறு நல்ல காற்றோட்டமும் நிறங்களும் முக்கியமாகின்றன.

  • தொடங்கியவர்

ஜப்பானியர்கள் கடின உழைப்பாளிகள் என்பதால்.. நிறைவான மன ஓய்வுக்கு வீடுகளை சரியாக அமைக்கவும் பராமரிக்கவும் செய்கின்றனர் போல..!

நன்றி அகூதா. உங்கள் கருத்தையும் இங்கு பதிவு செய்தமைக்கு..! :)

உண்மை தான் நெடுக்ஸ்... நானும் இங்கு சில ஜப்பானியர்களின் வீடுகளைப் பார்த்துள்ளேன், வீடு நல்ல வடிவாய் குறைந்த அளவிலான தளபாடங்களைக் கொண்டதாக வரவேற்பறை இருக்கும்.. ஆனால் சாப்பாடு மணம் கொஞ்சம் முகத்தைச் சுளிக்க வைக்கக்கூடியது, வரவேற்பறையும் குளிராக இருக்கும்...

DSC06968.JPG

ஜப்பனியர்களில் பெரும்பாலானோர் உயரம் குறைவு, அதனால் அவர்கள் அவர்கள் துள்ளி இருந்து எழும்புவார்கள்... எங்கடையாக்களுக்கு ஒருநாளுக்கு இதில இருத்தி சாப்பாடு குடுத்திட்டு அதில இருந்தது எழும்புற வடிவைப் பார்க்கவேணும் போல் உள்ளது... ^_^:lol:

நன்றி குட்டி. உங்கள் அனுபவப் பகிர்வு இவ்வாக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கிறது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

களைத்து விழுந்து வீட்டிற்கு வரும்போது மன அமைதி கிடைக்க வேண்டும்.. (கல்யாணம் கட்டிப்போட்டு இது எப்பிடி எண்டு கேக்கிறது விளங்குது.. :lol: )

வீடுகளுக்குள் கன பொருட்களை வைத்திருப்பது எனக்குப் பிடிக்காது.. எப்படியாவது வெளியே தள்ளிவிடுவேன்.. பழைய உடற்பயிற்சி சாதனம் ஒன்றை இப்போதுதான் வெளியே தள்ளிவிட்டேன்.. :D

வரவேற்பறையில் அதிக பொருட்கள் இருப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை.. :rolleyes:

...

அதுமட்டுமன்றி வீட்டுத்தோட்டம்.. வீட்டுச் சுற்றயலை மிகவும் மன ரம்மியமாகப் பேணிக் கொள்வார்களாம். ஓய்வுநேரத்தை அந்த ரம்மியமான சூழலோடு இயற்கையோடு ஒட்டிக் கழிப்பார்களாம். இதுவே அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஜப்பானின் புகழ்பூத்த ஒரு எழுத்தாளர் தனது நாவல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Japanese-zen-garden-decoration.jpg

அந்த நாவலின் சுருக்கத்தினை சில ஆண்டுகளுக்கு முன் படித்த ஞாபகம். அதன் இரத்தினச் சுருக்கமே இது. அதன் அடிப்படையில்.. உங்கள் வீட்டை.. வீட்டுத் தோட்டத்தை எப்படி.. வைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நிறைவளிக்கும் என்பதற்கான ஒரு வழிகாட்டலுக்காக.. இப்பதிவை எதிர்காலத்தில் பயன்படுத்த இருக்கிறோம். இதில் உங்கள் கருத்துக்களையும் படங்களையும் ஆக்கங்களையும் நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்...!

Japanese-Garden.jpg

ஜப்பானியர்களின் தோட்டங்களில் பல வித நிறங்களைக் கொண்ட மரங்கள், பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். சிலதும் இங்கே வளரக் கூடியது.. அதில் பல நிறங்களில் உள்ள Japanese Acer/ Japanese Maple எனப்படும் மரமும், bamboo தடிகளும்/ மரங்களும், orchids போன்றவைகளும் வெப்பம் கூடிய பகுதியில் (வெளித் தோட்டத்தில் அல்லது அறையில்) வைத்தால் செழிப்பாக வளரும்..

lucky+bamboo.jpg bunches-miltonia-orchid-plant.jpg

Bonsai எனப்படும் தாவரமும் பல விதமானவை, அவற்றை (பொறுமையுள்ளவர்கள்) நீண்ட காலம் வளர்க்க முடியும்..

http://www.japanesem...ing-techniques/

Kew Gardens-ல் இருக்கும் ஜப்பானியத் (theme) தோட்டமும் அழகாக இருக்கும்... மற்றைய இடங்களில் பார்வையிட்ட நேரத்தைவிட ஜப்பானியர்களின் தோட்டத்தில் அதிக நேரம் மெய்மறந்து இருக்க முடிந்தது!

பெரும்பாலனா ஜப்பானியப் பூமரங்கள்/ தாவரங்கள் garden சென்டரில் வாங்கலாம், இங்கே The Columbia Rd Flower Market என்ற ஒரு பிரபல்யமான இடம் உள்ளது, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை எல்லாவிதமான சிறிய/ பெரிய பூமரங்கள்/ மரங்கள் விற்பனை செய்வார்கள்.. இங்கே தொலைக்காட்சி (தோட்டம் சம்பந்தமான) நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் இங்கே வந்து வாங்கிச் செல்வார்கள்.

(பின் குறிப்பு: பூக்கள் தாவரங்களினால் அலர்ஜி உள்ளவர்கள் இங்கே செல்வதைத் தவிர்ப்பது நல்லது...) :)

நமக்கு வீடென்றால் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். நிறைய பொருட்கள் இருப்பது பிடிக்காது. புத்தகங்கள் வாசிப்பதால் குளியலறை வாசிகசாலை மாதிரி சுத்தமாக இருக்க வேண்டுமென்று விரும்புவேன். வார விடுமுறைகளில் சமையல் செய்ய விருப்பமாதலால் சமையல் அறையும் சுத்தமாக இருக்க விரும்புவேன். வரவேற்பு அறையில் இருந்து தொலைகாட்சி பார்க்கும் பழக்கம் எனக்கில்லை. அதைவிட தோட்டத்தை வேலை செய்வது அதிகம்.

Japanese-Garden.jpg

நீங்கள் இணைத்த படத்தில் 'கொய்' மீன்கள் துள்ளி விளையாடுவது நன்றாக உள்ளது.

ஆ...ஆ.... படுக்கையறை மறந்து விட்டது. தலைவரின் பாட்டைக் கேட்டு இரசியுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டிலும் அதிக தளபாடங்கள் இல்லை...

வருவோர் போவோர் ஏன் வோல் யுனிட் வாங்கவில்லையா? டைனிங் யுனிட் வாங்கவில்லையா இப்படி பலவிதமாக கேட்பார்கள். சிரித்து மழுப்பிவிடுவேன். அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது என்வீட்டில் பிள்ளைகளும் செல்லப்பிராணியும் குதூகலமாக ஓடிவிளையாடுவது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானியர்களின் தோட்டங்களில் பல வித நிறங்களைக் கொண்ட மரங்கள், பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். சிலதும் இங்கே வளரக் கூடியது.. அதில் பல நிறங்களில் உள்ள Japanese Acer/ Japanese Maple எனப்படும் மரமும், bamboo தடிகளும்/ மரங்களும், orchids போன்றவைகளும் வெப்பம் கூடிய பகுதியில் (வெளித் தோட்டத்தில் அல்லது அறையில்) வைத்தால் செழிப்பாக வளரும்..

lucky+bamboo.jpg bunches-miltonia-orchid-plant.jpg

Bonsai எனப்படும் தாவரமும் பல விதமானவை, அவற்றை (பொறுமையுள்ளவர்கள்) நீண்ட காலம் வளர்க்க முடியும்..

http://www.japanesem...ing-techniques/

Kew Gardens-ல் இருக்கும் ஜப்பானியத் (theme) தோட்டமும் அழகாக இருக்கும்... மற்றைய இடங்களில் பார்வையிட்ட நேரத்தைவிட ஜப்பானியர்களின் தோட்டத்தில் அதிக நேரம் மெய்மறந்து இருக்க முடிந்தது!

பெரும்பாலனா ஜப்பானியப் பூமரங்கள்/ தாவரங்கள் garden சென்டரில் வாங்கலாம், இங்கே The Columbia Rd Flower Market என்ற ஒரு பிரபல்யமான இடம் உள்ளது, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை எல்லாவிதமான சிறிய/ பெரிய பூமரங்கள்/ மரங்கள் விற்பனை செய்வார்கள்.. இங்கே தொலைக்காட்சி (தோட்டம் சம்பந்தமான) நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும் இங்கே வந்து வாங்கிச் செல்வார்கள்.

(பின் குறிப்பு: பூக்கள் தாவரங்களினால் அலர்ஜி உள்ளவர்கள் இங்கே செல்வதைத் தவிர்ப்பது நல்லது...) :)

japanese-house-garden-philadelphia-587.jpg

குட்டியர் நீங்கள் சொல்வது உண்மை தான். ஜப்பானியர்கள் அநேக பூக்கண்டுகளை வளர்க்கக் கண்டிருக்கிறேன். மேலே உள்ள படம் இதற்குச் சாட்சி.

மேலும்.. குறிப்பாக இலங்கையில் மலையகப்பகுதியில் கக்கெல (Hagkala) என்ற உயர்ந்த இடத்தில் உள்ள ஜப்பானிய தாவரவியல் பூங்காவில் நிறைய ஜப்பானிய பூமரங்கள் உள்ளதைக் கண்டுள்ளேன். அங்கே தாவரவியல் ஆய்வுக்காக சில காலம் சென்ற போது இவற்றைக் கண்டு மெய்மறந்து நின்றிருக்கிறேன்..! :)

2101378.jpg

கக்கெல தாவரவியல் பூங்காவில் உள்ள ஜப்பானிய வகை தாரவங்கள்..! :)

Edited by nedukkalapoovan

நீங்கள் இணைத்த படங்கள் அழகாக உள்ளன! :)

போர் நிறுத்தம் நடைபெற்ற காலத்தில் நானும் பெற்றோர், சகோதர்களுடன் ஒரு தரம் மலை நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காவிற்குப் போயுள்ளேன், அது இதுவா என்று சரியாகத் தெரியாது.. (அதுவும் அழகான பெரிய பூங்கா... ஹிஹி... அது தான் முதல் தரம் மலை நாட்டிற்குப் போனது.. :icon_mrgreen:) இலங்கைத்தீவின் வரைபடம் போல் சுற்றிவரத் தண்ணீரில் சிறிய தாவரங்கள் வைத்து செய்து இருந்தார்கள்.. மிகப் பழமை வாய்ந்த ஒரு பெரிய மரமும் அங்கு நின்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது வாழ்வில் அரைவாசிக்கும் மேலான பங்கை எனது வீடுகளிலேயே செலவழிக்கின்றோம்.

வேலையால் மற்றும் மேற்குலக வாழ்க்கை முறைகளால் வரும் மன அழுத்தத்தை குறைக்கவும் உற்சாகமாக இருக்கவும் மனையின் (வீட்டின்) அழகும் வடிவமைப்பும் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்துடன் மேலே கூறப்பட்டவாறு நல்ல காற்றோட்டமும் நிறங்களும் முக்கியமாகின்றன.

உண்மைதான் அகூதா!ஒரு மனிதன் எவ்வளவுதான் கஸ்ரப்பட்டு வேலை செய்துவிட்டு வந்தாலும்......வீடுதான் அவனுக்கு மீண்டும் புத்துணர்வை கொடுக்கின்றது.

அழகான திரி...எழில் கொஞ்சும் படங்கள்

இங்கு கனடாவில் உள்ள மொன்றியல் நகரிலும் ஒரு தாவரவியல்பூங்கா உள்ளது. மிக அழகாக ஒவ்வொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தாவரங்களையும் பூமரங்களையும் நட்டு வைத்துள்ளார்கள். கனடாவில் வசிப்பவர்கள் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. கடந்த வருடம் போயிருந்தேன்

உண்மைதான் அகூதா!ஒரு மனிதன் எவ்வளவுதான் கஸ்ரப்பட்டு வேலை செய்துவிட்டு வந்தாலும்......வீடுதான் அவனுக்கு மீண்டும் புத்துணர்வை கொடுக்கின்றது.

வீடுகளுக்குள் கன பொருட்களை வைத்திருப்பது எனக்குப் பிடிக்காது.. எப்படியாவது வெளியே தள்ளிவிடுவேன்.. பழைய உடற்பயிற்சி சாதனம் ஒன்றை இப்போதுதான் வெளியே தள்ளிவிட்டேன்.. :D

வரவேற்பறையில் அதிக பொருட்கள் இருப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை.. :rolleyes:

இருக்கும் தளபாடங்களின் வடிவமைப்பை மாற்றி வைப்பது இலகுவான செலவுகுறைந்த புத்துணர்வை ஊட்டும் முறை

  • கருத்துக்கள உறவுகள்

San Francisco's five acre Japanese tea garden at Golden Gate Park is the oldest public Japanese garden in the United States. Golden Gate Park is a large urban park consisting of over 1,000 acres is 20% larger than Central Park in New York, to which it is often compared. With 13 million visitors annually, Golden Gate is the third most visited city park in the United States.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா இருப்பது சான் ஃபிரான்சிஸ்கோவில்.. ஹிஹி.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த படங்கள் அழகாக உள்ளன! :)

போர் நிறுத்தம் நடைபெற்ற காலத்தில் நானும் பெற்றோர், சகோதர்களுடன் ஒரு தரம் மலை நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காவிற்குப் போயுள்ளேன், அது இதுவா என்று சரியாகத் தெரியாது.. (அதுவும் அழகான பெரிய பூங்கா... ஹிஹி... அது தான் முதல் தரம் மலை நாட்டிற்குப் போனது.. :icon_mrgreen:) இலங்கைத்தீவின் வரைபடம் போல் சுற்றிவரத் தண்ணீரில் சிறிய தாவரங்கள் வைத்து செய்து இருந்தார்கள்.. மிகப் பழமை வாய்ந்த ஒரு பெரிய மரமும் அங்கு நின்றது..

பொதுவாக கண்டியில் உள்ள பேராதனை தாவரவியல் பூங்காவிற்குத்தான் அநேகர் செல்வதுண்டு. இது நுவரெலியாப் பகுதியில் உள்ளது. சீதாஎலிய என்ற சீதை அம்மன் ஆலயம்( சீதைக்கு இங்கு தான் இராவணன் தஞ்சம் வழங்கி இருந்ததாக அந்த எழில் கொஞ்சும் இடத்தைச் சொல்கிறார்கள்.. அதை வட இந்தியர்கள் சிறை என்று சொல்கிறார்கள்.. தமிழ் மன்னனான இராவணனின் அழகுணர்ச்சியை நினைத்து பூரிக்கவே முடியும்..!) இதனை அண்டித்தான் உள்ளது..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனி கொஞ்சம் பொதுவான வீட்டுத்தோட்ட வடிவமைப்புக்களைப் பார்ப்போம்.. வீட்டுத்தோட்டத்தின் இருப்பும் அமைப்பும் பசுமையும் எம் மன ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமானவை..!

modern+garden+landscaping+ideas+(2).jpg

பாம் மரங்களை (palm tree) நாட்டும் போது நெருக்கமாக நாட்டாதீர்கள். இவ்வாறு இடவெளிவிட்டு நாட்டுவதோ அல்லது ஓரளவு பெரிய பூச்சாடியில் வளர்க்கக் கூடியவற்றை அவற்றில் நாட்டி வளர்ப்பதோ நல்லது. பூச்சாடியில் நாட்டுவதால் அவற்றை இலகுவாக தேவைக்கு ஏற்ப நகர்த்திக் கொள்ள முடியும்..!

3599707622_b02c4c19e7.jpg

கோடைகால பூக்கும் தாரவங்களை இப்படி வரிசைக்கு வரிசை வகைவகையாக நாட்டுதல்.. அழகுக்கு அழகு சேர்க்கும்..!

Hope-Begins-5.jpg

வீட்டுத் தோட்டம் செய்ய போதிய விசாலமான இடமில்லாதவர்கள் இவ்வாறு அமைந்த மரப்பெட்டிகளில் அவற்றை நாட்டலாம்..! இதன் மூலம் பல வகை தாவரங்களையும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் காணச் செய்யலாம்.

Small-Home-Garden.jpg

Small-Home-Garden-Design-Ideas.gif

சிறிய வீட்டுத்தோட்டம் உள்ளவர்களும் பலவகை கண்கவர் தாவரங்களை வளர்க்க முடியும்..!

Beautiful-Garden-Design-Side-View.jpg

சுவர்களைப் பாதிக்காத ஆனால் சுவர்களில்..பெரிய மரங்களில் படர்ந்து வளரக்கூடிய தாவரங்கள்.. பூந்தோட்டத்திற்கு அழகிற்கு அழகு சேர்க்கும். பசுமைக்கு பசுமை சேர்க்கும்..!

vegetable_garden_tomato.jpg

வீட்டுத்தோட்டம் என்றால் வெறுமனவே பூமரங்கள் தான் நாட்ட வேண்டும் என்றில்லை. பயனுள்ள மரக்கறி வகைகளையும் நாட்டி.. பயனும் அழகும் சேர்க்கலாம்..!

2009-10-Unique-Architecture-Home-Garden-Ark.jpg

உங்களின் தோட்ட வீட்டையும் அழகாகப் பராமரியுங்கள். அது உங்கள் வீட்டுத்தோட்டத்தின் அழகை அதிகரிக்கும்..! உங்களுக்கு மன நிறைவான ஓய்வுக்கு அது உதவும்..!

little-tikes-home-garden-playhouse-discontinued-1262-p.jpg

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள்.. பறவைகள் வந்துபோக உணவருந்த வசதி செய்யுங்கள்..அதேபோல்.. உங்கள் செல்லக் குழந்தைகள்.. தமது விருப்பத்திற்கு இல்லம் அமைக்க.. பூமரங்களை நாட்டவும் வசதி செய்து கொடுங்கள். அவர்கள் விருப்பமும் உங்கள் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை என்பதால்.. இதில் அவர்களின் விருப்புக்கும் இடமளியுங்கள். அதுவே அவர்களின் மன மகிழ்ச்சிக்கு அவசியம்..!

residential_home_garden.jpg

விசாலமான வீட்டுத்தோட்டம் கொண்டவர்கள்.. இப்படி விசாலமான புற்தரைகளை பேணிக்கொள்வது அழகு...!

various%2Bborder%2Bscenes%2B2%2B021.jpg

சிறிய ஆனால் பன்முகத் தன்மை கொண்ட ஒரு வீட்டுத்தோட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

zoo-garden.jpg

home-garden.jpg

விசாலமான வீட்டுத்தோட்டம் உள்ளவர்கள்.. பயன் தரு தாவரங்களை இப்படி வகைக்கு வகை பாத்திகளில் நாட்டுவது பராமரிப்புக்கும் சுலபம். அழகும் சேர்க்கும்..!

Beautiful-Garden-Design-By-EGA-1-550x329.jpg

அதிக தாவரங்கள் இல்லாமல் அமைக்கப்படும் கண்கவர் வீட்டுத்தோட்டம்.

Home-Garden-Decoration-Pictures3.jpg

வீட்டுத்தோட்டத்தில் குட்டைகள்.. நீரோடைகள் வைத்திருப்போர் அவற்றை அழகாகவும் மாசுபடாமலும் பராமரிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

Beautiful-Garden-Design-with-Seating-Area.jpg

என்றும் பசுமை விரும்புவர்கள்.. அவ்வாறான தாவரங்களையும் புற்களையும் கொண்டு இவ்வாறான தோட்டங்கள் அமைக்கலாம்.

jg2002ab03.jpg

garden.rose_.jpg

வீட்டுத்தோட்டத்தில் பந்தல் போடும் முறைகள்..!

home-garden-2.jpg

home-garden-3.jpg

விசாலமான வீடு மற்றும் வீட்டுத்தோட்டம் வைத்துள்ளோருக்கான ஒரு பசுமை இல்லம் பேணும் முறை. தாவரங்களையும் அழகுற வெட்டி.. பராமரிக்கலாம்.

home-garden-1.jpg

வகை வகையான தாவரங்களை வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசையா.. இங்கு போய் படியுங்கள் அல்லது.. உங்கள் வீட்டுத்தோட்ட பராமரிப்பு பொருட்கள் விற்கும் இடங்களில் அதற்கென நூல்கள் விற்கிறார்கள்.. வாங்கிப் படியுங்கள்..!

இதோ... http://sundaygardene...ur_own_veg.html

http://www.gardendesignonline.com/gardendesignonline/books/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இதுகளே முக்கியம்.பக்கத்து வீட்டுக்காரன் என்ன எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறானோ.அவளவும் எங்களிட்டடை இருந்தால் கானும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிகவும் நன்றிகள்....பாக்கிறதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு.:)

Edited by யாயினி

தோட்டங்கள் அழகாக இருக்கின்றன. தோட்டம் செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை மாத்திரமல்ல, மனத்திற்கும் புத்துணர்வையும் கொடுக்கும்.

- ஜப்பானிய மக்கள் உலகிலேயே நீண்ட காலம் உயிர்வாழும் மக்கள். அதற்கு இவ்வாறான வீட்டு வடிவமைப்பும் காரணமாக இருக்கலாம்

- ஜப்பான் ஒரு காலத்தில் இல்லாமலேயே போய்விடும் என்கிறார்கள், காரணம் நிலநடுக்கம் :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நெடுக்ஸ்... நானும் இங்கு சில ஜப்பானியர்களின் வீடுகளைப் பார்த்துள்ளேன், வீடு நல்ல வடிவாய் குறைந்த அளவிலான தளபாடங்களைக் கொண்டதாக வரவேற்பறை இருக்கும்.. ஆனால் சாப்பாடு மணம் கொஞ்சம் முகத்தைச் சுளிக்க வைக்கக்கூடியது, வரவேற்பறையும் குளிராக இருக்கும்...

DSC06968.JPG

ஜப்பனியர்களில் பெரும்பாலானோர் உயரம் குறைவு, அதனால் அவர்கள் அவர்கள் துள்ளி இருந்து எழும்புவார்கள்... எங்கடையாக்களுக்கு ஒருநாளுக்கு இதில இருத்தி சாப்பாடு குடுத்திட்டு அதில இருந்தது எழும்புற வடிவைப் பார்க்கவேணும் போல் உள்ளது... ^_^:lol:

ஏன் அப்படி தாழ்வாகவே பார்க்கிறீர்கள்? ஊரில் எந்த சபையிலும் தரையில் பாய் விரித்து உட்கார்ந்து வாழையிலையைத் தரையில் வைத்து பரிமாறி உண்ட எங்களுக்கு இதில் என்ன கடினம் இருக்கென்பது புரியவில்லை.... :rolleyes:

வீடுகளின் அமைவு இடத்துக்கு இடம், காலநிலைகளுக்கு ஏற்வ வடிவமைக்க படும். ஊரில் அநேகமான வீடுகளை சுற்றி மரங்கள் நட்டு சோலை போல இருக்கும். வீட்டு வளவுக்குள் ஒரு கதிரை போட்டு இருப்பதோ...இல்லை மரநிழலில் சாக்கு கட்டிலில் குட்டி தூக்கம் போடுவதில் இருக்கும் சுகங்களோ யப்பானியர்களின் வீடுகளில் இருக்குமோ தெரியவில்லை.

புலம் பெயர் நாடுகளில், சனத்தொகை கூடிய பெரிய நகரங்களில் இருந்து கொண்டு அப்படி வடிவமைக்க முடியாது....

எனது மருமகன் வேலை விடயமாக அடிக்கடி யப்பான் போய் வருபவர்.ஆக கூடிய வாடகையும் புறாக்கூடு மாதிரி இருப்பிடமும் தான் டோக்கியோவில் என்று சொல்வார் . ஆனால் சிட்டியிலும் பூங்காக்கள் நிறைய இருக்கின்றதாம். கிராமங்கள் எப்படியோ தெரியாது .

சைனாவில் விடிய எழும்ப பொலுசனால் ஒரே புகைமண்டலமாக இருக்குமாம்.

390688_10150452041428612_578183611_8819647_1120433860_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.