Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

சிறிலங்காவின் இனப்பிரச்சினை மூன்று இனங்களையும் மூன்று துருவங்களாக்கியுள்ளது.

ஆனாலும் இந்த மூன்று இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை தந்த அனுபவங்கள் பல. இவற்றுள் சில மிகவும் கசப்பானவை இன்னும் சில மிகவும் நெகிழ்ச்சியானவை.

ஏங்கள் வீட்டில் வேலை செய்து எங்கள் அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு எங்களில் ஒருவனாகப் பழகிய சிங்கள இனவெறியனே எங்கள் வீட்டைத் தீயிட்ட கசப்பான கடந்த கால நினைவும் என் மனதை விட்டு அகலவில்லை.

கொடும் புற்றுநோயினால் எனது தாய்க்கு தினமும் இரத்தம் மாற்ற வேண்டிய தேவையுடன் நான் இருப்பதை அறிந்து எனக்குக் கூடத் தெரியாமல் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் என் அம்மாவிற்குக் குருதி தந்த எனது அலுவலகத்தில் வேலை செய்த சிங்களச் சகோதரியின் இரக்ககுணமும் என் மனதில் நிலைத்துள்ளது.

இது போன்ற பல அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்வதற்கே இந்தத் தலைப்பு.

பின்னர் தொடர்கிறேன்.

Edited by Manivasahan

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply

உங்கள் மீள்வருகை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது மணிவாசன் . உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பாரக்கின்றேன் .

  • தொடங்கியவர்

நன்றி கோமகன்.

நேரங்கிடைக்கும் போது தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் மணிவாசகன்

எழுதுங்கள்

நாம் கனக்க பேசணும்

எழுதணும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மணிவாசன்.மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள்.. உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை வர‌வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் :)

  • தொடங்கியவர்

பதிவிட முன்னரே வாழ்த்துக்களும் வரவேற்பும் தந்த விசுகு, நுணாவிலான், இசைக்கலைஞன், ரதி ஆகியோருக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மிகவும் நல்லவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் சிங்களம் என வரும்போது மட்டும் அவர்கள் தமிழுக்கு எதிரியாகி விடுகின்றனர்.

அந்தளவிற்கு சிங்களத் தலைமைகள் அவர்களை வைத்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இரத்ததானம் வழங்கிய சிங்களச் சகோதரியும் மகிந்த, ரணில், விமல் அல்லது சம்பிக்க இவர்களில் ஒருவருக்குத்தான் வாக்களித்திருப்பார்.. :rolleyes: இங்கேதான் பிரச்சினை தங்கியிருக்கிறது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மீள்வருகைக்கு நன்றிகள் தொடருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பாஅது நம்ம மணியா??? :unsure: வாங்கப்பு கண்ணும் சரியா தெரியேல்லை <_< வயசாயிட்டுது .. இப்பிடி எப்பவாவது வந்தால் இப்பிடித்தான் ஞபக மறதியாயிடும். :lol:

  • தொடங்கியவர்

யாரப்பாஅது     நம்ம மணியா???   :unsure: வாங்கப்பு    கண்ணும் சரியா தெரியேல்லை   <_<  வயசாயிட்டுது ..   இப்பிடி   எப்பவாவது வந்தால்   இப்பிடித்தான் ஞபக மறதியாயிடும். :lol:

அதே மணிதான் சாத்திரி. சந்தேகம் வேண்டாம். அதுசரி யாருக்கு வயது போனது? மணிக்கா சாத்திரிக்கா :D

  • தொடங்கியவர்

சிங்களவர்கள் மிகவும் நல்லவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் சிங்களம் என வரும்போது மட்டும் அவர்கள் தமிழுக்கு எதிரியாகி விடுகின்றனர்.

அந்தளவிற்கு சிங்களத் தலைமைகள் அவர்களை வைத்திருக்கின்றது

வணக்கம் வாத்தியார்உண்மைதான்.மக்களைத் தூண்டிவிட தம் பக்கம் வைத்திருக்க இனவெறியைத் தூண்டி விடுவதில் அரசியல் வாதிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பிலிப் குணவர்த்தனா, பண்டாரநாயக்காவில் தொடங்கி இன்றைய சம்பிக, வீரவன்ச வரையில் அனைவரும் இனவாதத்தைக் கையில் வைத்தே தம் அரசியல் இருப்பைத் தக்க வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே ஒருசில யதார்த்த வாத அரசியல் வாதிகளுமு; சிங்கள மக்கள் மத்தியில் தோன்றாமலில்லை. சரத் முத்தவேட்டுகம, விக்கிரமபாகு கருணாரட்ண என இந்தத் தலைவர்களால் சிங்கள இனவாதத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமலில்லை. இது போன்ற எமக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள அரசியல்வாதிகளை அணைத்துக் கொள்ள தமிழ் காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைமைகள் கூடத் தவறியது சோகமான வரலாறு. (இறுதியில் மனோ கணேசன் மட்டுமே விக்கிரமபாகு கருணாரட்ணவை இணைத்து அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார்)

இரத்ததானம் வழங்கிய சிங்களச் சகோதரியும் மகிந்த, ரணில், விமல் அல்லது சம்பிக்க இவர்களில் ஒருவருக்குத்தான் வாக்களித்திருப்பார்.. :rolleyes:  இங்கேதான் பிரச்சினை தங்கியிருக்கிறது.. :D

சிங்கள இனவாத அரசியல் மக்களிடம் இனவாதத்தை ஊட்டியதன் விளைவு யதார்த்த அரசியல் செய்யும் அரசியல் தலைமைகள் சிங்கள தேசத்தில் வேரூன்ற முடியவில்லை என்பது உண்மைதான்.

மீள்வருகைக்கு நன்றிகள் தொடருங்கள்.....

வரவேற்புக்கு நன்றி புத்தா!

  • தொடங்கியவர்

தமிழன் சிங்களவன் முஸ்லிம் ( நான் கண்ட முதல் இனக்கலவரம்)

எங்களுடைய அல்லது என்னுடைய மூளை விசித்திரமானது. நேற்று அல்லது கடந்த வாரம் நடந்த பல சம்பவங்கள் அப்படியே மறந்து போய்விடுகின்றன.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் கண்டு கதைத்த ஒரு சிலருடைய முகங்கள் கூட மறந்து போகின்றன.

ஒருவர் அருகில் வந்து நட்புடன் எனது பெயர் சொல்லி அழைத்து உரையாடும் போது அவரது பெயர் நினைவுக்கு வராமல் சங்கடப்பட்ட அனுபவங்கள் ஏராளம்.

ஆனாலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய 4இ 5இ 6 வயதுகளில் நடந்த சம்பவங்கள் பல இன்னமும் ஒரு நிழற்பதிவாக என்மூளையின் ஒரு மூலையில் நிரந்தரமாகவே தங;கி இருக்கின்றது.

நான் பாடசாலைக்குப் போன முதல் நாள்இ பூட்டோ தூக்கிலிடப்பட்டார். சொந்த ஊரில் நல்லடக்கம் என அவரது பெரிய படத்துடடன் தினபதி பத்திரிகையில் வந்த செய்தி என பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

அந்த வகையில் நான் கண்ட முதல் இனக்கலவரமும் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.

சம்பவங்களின் கோர்வையாக அந்தச் சம்பவம் ஞாபகம் இல்லாவிட்டாலும் நாங்கள் வீட்டிற்குள் கதவுகளைச் சாத்திவிட்டு யன்னலூடாகப் பார்த்துக் கொண்டிருக்கு பெரும் ஆராவாரங்களுடன் பலர் கத்திகள் வாள்கள் பொல்லுகள் என்பவற்றுடன் வீதியால் போனது ஞாபகம் இருக்கிறது.

பின்னர் காலஓட்டத்தில் அந்தச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் கிடைத்தன.

சம்பவம் இதுதான். 1976ம் ஆண்டின் ஒருநாள்.

வழமைபோலவே முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பிரதான வீதி மூடப்பட்டுத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழியால் வாகனத்தில் வந்த பொலிசார் அருகே பல வழிகளால் செல்லக் கூடியதாயிருந்த போதிலும் குறிப்பிட்ட வீதித் தடைகளை அகற்றிவிட்டு பெரும் சத்தத்துடன் ஹோர்ன் அடித்தபடி அந்த வீதியால் பயணித்திருக்கிறார்கள்.

ஆத்திரமடைந்த ஒருவர் அந்த பொலிஸ் வாகனம் திரும்பி வரும்போது துப்பாக்கியால் சுட்டதாகவும் இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்குள் புகுந்த பொலிசார் நடத்திய கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூட்டில் 8 முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதால் 'எங்கள் நாட்டில்' நீங்கள் ஆர்பாட்டம் செய்வதா என்ற சிங்கள இனவெறி மேலாதிக்கத்தின் வெளிப்பாடே இந்த இனக்கலவரம்.

புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு வந்து புத்தளம் பஸ் டிப்போவில் இறங்கி வந்த  சிங்களக் காடையர்கள; எங்கள் வீதியால் கத்திக் கொண்டு சென்று (என்ன கோசம் போட்டார்கள் என்று நினைவில்லை ஆனால் சிங்களயன்ரை ஜெயவேவா என்று கத்தியிருக்கலாம்) சந்தியிலிருந்த முஸ்லிம் கடைகளை எல்லாம் அடித்து நொறுக்கி கொள்ளையிட்டிருந்தார்கள்.

இந்தச் சம்பவத்தில் எனது வீட்டிற்கு அருகில் வசித்த சிங்களவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் ஆனால் உடைக்கப்பட்ட கடைகளில் எஞ்சியிருந்த பொருட்களை மாலை வரை பொறுக்கிக் கொண்டிருந்ததார்கள் என்றும் இவ்வாறு சாமான் பொறுக்கியவர்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயம் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடும் பின்வீட்டு ரீச்சர் ஆச்சியும் அடக்கம் என்றும் அம்மா பின்னாளில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்னர் அதே போன்று கூட்டம் கூடி வந்த  கும்பல் எனது வீடு உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட தமிழ் வீடுகளை கொள்ளையடித்து  தீயிட்டு வெறித் தாண்டவம் ஆடியது.

அதைப்பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மீழ் வருகையிட்டு மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள் உங்கள் அனுபவங்களை.

  • தொடங்கியவர்

நன்றி சஜீவன்

பழைய நண்பர்களை மீளவும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை வர‌வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் :)

வணக்கம்! நானும் மகிழ்ச்சியடைகிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மணிவாசகன்...உங்கள் அனுபவங்களை நாங்களும் அசைபோட்டுப் பார்ப்போம்...

  • தொடங்கியவர்

அசைபோடுவது மட்டுமன்றி இன முரண்பாடு அல்லது இன ஒற்றுமை குறித்த உங்கள் பதிவுகளையும் இணைக்கலாம் சுபேஸ்.

  • தொடங்கியவர்

இந்தத் தொடரை கால ஒட்டத்தினடிப்படையிலோ அல்லது ஏதாவது ஒரு ஒழுங்கு வரிசையிலோ எழுத வேண்டும் என முதலில் நினைத்திருந்தாலும் நேர நெருக்கடி இதனை மனதில் எட்டிப் பார்க்கும் விடயத்தை உடனே எழுதி விடுவது என முடிவெடுத்திருக்கிறேன். எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இது இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அத்தோடு நேரடியாகவே தட்டச்சுகிறேன். எனவே வசனங்களில் சில வேளைகளில் கோர்வை இருக்காது. இலக்கணப் பிழைகள் ஏராளமிருக்கும். கண்டுகொள்ள மாட்டீர்கள் தானே!

சிங்களவனுக்குச் சிங்களவன் கொடுத்த அடி!

சோமசிங்க. என்னுடன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்த இரத்தினபுரியைச் சேர்ந்த மனிதர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தமிழைச் சரளமாகப் பேசுவார். நன்றாகத்தமிழ் பேசுகின்றீர்களே.. என்று கேட்டால் நீங்கள் எல்லாம் எவ்வளவு சரளமாகச் சிங்களம் பேசுகின்றீர்கள். சிங்களப் பத்திரிகையை வாசிக்கின்றீர்கள். ஆனால் நாங்கள் அதைப்பார்த்துப் பிரமித்து அட நீங்கள் அழகாகச் சிங்களம் பேசுகின்றீர்களே என்று கேட்பதில்லையே. ஏன் எங்களிடம் மட்டும் கேட்கின்றீர்கள். இது இரண்டு மொழி பேசுவோரின் நாடு. நாம் இரண்டு மொழிகளையும் கற்றிருக்க வேண்டியது எம் கடமை அப்போது தானே அனைவருடனும் சகஜமாகப் பழக முடியும் என்று பதிலளிப்பார்.

அவரது நெற்றியிலே ஒரு பெரிய தழும்பு இருந்தது. பல நாள் பழக்கத்தின் பின்னர் ஒரு நாள் இதபற்றி அவரிடம் கேட்டேன். இது சிறிலங்காவைக் காப்பாற்ற நான் வாங்கிய தழும்பு எனச் சொன்னார்.

1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மூன்று சிங்களவர்கள் இணைந்து ஒரு தமிழரைத் தாறுமாறாகத் தாக்கிக் கொண்டிருந்தாகவும் தான் இடையில் புகுந்து அந்தத் தமிழரைக் காப்பாற்றப் போராடிய போது நீயும் புலிக்கு உடந்தையா எனக் கேட்டுத் தன்னையும் தாக்கியதாகவும் தான் நினைவிழந்து போனதாகவும் அதன் பின்னர் என்ன நடந்ததென்று தனக்குத் தெரியாது என்றும் சொன்னார். தன்னால் அந்ததத் தமிழ் உயிரைக் காப்பர்ற முடியாமல் போய்விட்டது என்று வேதனையுடன் கூறினார். அது வெறும் வாய்களில் இருந்து வந்த வார்த்தை அல்ல. இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் என்பது அவரது முகத்திலேயிருந்து தெரிந்தது.

இந்த இடத்திலே என் மனதிலே ஒரு கேள்வி. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இது போல ஒரு இனக்கலவரம் ஏற்பட்டு ஒரு சிங்களவரை தமிழ்க் குழுவொன்று தாக்கிக் கொண்டிருந்தால் நம்மில் எத்தனை பேர் இடையில் புகுந்து அந்த உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருப்போம்..........

இவ்வாறு இனவாதத்தை வெறுத்த அனைவரையுமே மனிதர்களாகப் பார்த்த அந்தச் சகோதரர் தனது மகனுடன் தனியார் பேருந்து ஒன்றில் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரத மகன் கொல்லப்பட அவர் தனது பழைய நினைவுகளை எல்லாம் மறந்தவராக படுக்கையாகிப் போனார். யாரையும் அடையாளம் காண முடியாத நிலையில் அவர் படுக்கையில் கிடந்ததைப் போய் பார்த்ததும் என் மனதில் ஏற்பட்ட சோகம் வார்த்தைகளில் அளவிட முடியாதது.

நல்லிதயம் படைத்த அந்த மனிதனுக்கு நடந்த இந்தக் கதியும் கடவுள் என்பது வெறும் கற்பனையே என என் மனம் தீர்மானிக்கக் காரணிகளான ஆயிரம் விடயங்களில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் இன்னொரு இனத்தைத் தாக்கிக் கலகம் உண்டாக்கின சம்பவம் எது? :rolleyes: அப்படி நடந்திருந்தால் காப்பாற்றுவதுபற்றி யோசிக்கலாம்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நீங்கள் சொல்வதுபோல் சிங்களவன் நல்லவனாக இருந்தாலும் முள்ளிவாக்காலில் எமது சொந்தங்கள் கொல்லப்பட்டபோது ஏன் அந்த நல்ல சிங்களவர்கள் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிக்கவில்லை ? சமாதானகாலத்தில் இரத்தினபுரியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிங்களவனுக்கு உதவிபொருட்களை லொறிகளில் அனுப்பி வைத்தது கிளிநொச்சியில் இருந்து அன்று இயங்கிய தமிழ் ஈழ அரசு இதற்க்கு தமிழ்மக்களின் பங்களிப்பும் இருந்தது ஏன் இந்த சிங்களவர்கள் வன்னியில் பட்டினியில் வாடிய தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை அதற்காக ஒரு சிறிய போராட்டம்கூட நடத்தவில்லை இப்படி பல கேள்விகள் என்னுள்ளே உள்ளது நாங்கள் எப்போது மற்றவர்களுக்கு உதவுவதில் பின் நிற்பதில்லை ஆனால் சிங்களவன் எமது சொந்த நிலத்தில் நாம் நின்மதியாக வாழ அனுமதித்ததில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.