Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரியவில்லை..........

Featured Replies

பார்வைகள் பார்க்கின்றேன்

தொலைதூர இருள் வானில் .

சிலசமயம் ,

சுவர்களையும் சுவாரசியமாய்

ஊடுருவிக் காண்கின்றேன்.

என் கையின் ரேகைகள்

ஏனோ இன்னும் புரியவில்லை ...........

ஆண்கள் பெண்களை

காவல் புரிவதால் ,

பெண்மை தாழ்ந்தது இல்லை .

வன்மை இரும்புப்பெட்டி

மென்மை தங்கத்தை ,

என்றும் காப்பாற்றுகிறது.

தங்கம் தாழ்ந்ததென

கருதுகிறதா உலகம் ????????

புரியவில்லை இன்னும்

ஏனோ புரியவில்லை..........

****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

Edited by கோமகன்

  • Replies 55
  • Views 5.8k
  • Created
  • Last Reply

ஆண்கள் பெண்களை

காவல் புரிவதால் ,

பெண்மை தாழ்ந்தது இல்லை .

வன்மை இரும்புப்பெட்டி

மென்மை தங்கத்தை ,

என்றும் காப்பாற்றுகிறது.

தங்கம் தாழ்ந்ததென

கருதுகிறதா உலகம் ????????

மொட்டந்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுறிங்களே கோமகன்அண்ணன் .

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சொப்னா . மீண்டும் ஒருமுறை உன்னிப்பாக வாசித்துப்பாருங்கள் , முடிச்சு சரியாக இருக்கும் . சொல்லிய செய்தியின் அர்த்தம் உங்களுக்கு விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை அழகாய் வர்ணிக்க பட்டு இருக்கிறது பாராட்டுக்கள்

கோ... ஆண்கள் பெண்களை கட்டியாள்வதை தப்பில்லை என்கின்றீர்கள்.

மனிஷிமாருக்கு இதெல்லாம் புரியாதுபோல. அதுமாதிரித்தான் சொப்னா அக்காவும் கேட்டிருக்கிறா...!!! :lol: :rolleyes: :lol:

ஆண்கள் தங்களை கட்டியாள நினைப்பதை அடிமைப்படுத்துவதாக தப்பாக நினைக்கும் பெண்களுக்கு... ஆண்கள் குடும்பத்தைக் கட்டியாளுவதிலும், கொண்டு நடத்துவதிலும் உள்ள கஷ்டங்கள் தெரிவதில்லை. :unsure:

எது என்னவோ... விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கை என்னவென்று புரியும்! :wub::)

கவிதை நல்லாயிருக்கு... பாராட்டுக்கள்.

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கவிதை அருமை அழகாய் வர்ணிக்க பட்டு இருக்கிறது பாராட்டுக்கள்

மிக்க நன்றிகள் உங்கள் கருத்திற்கு நிலாமதியக்கா .

கோ... ஆண்கள் பெண்களை கட்டியாள்வதை தப்பில்லை என்கின்றீர்கள்.

மனிஷிமாருக்கு இதெல்லாம் புரியாதுபோல. அதுமாதிரித்தான் சொப்னா அக்காவும் கேட்டிருக்கிறா...!!! :lol: :rolleyes: :lol:

ஆண்கள் தங்களை கட்டியாள நினைப்பதை அடிமைப்படுத்துவதாக தப்பாக நினைக்கும் பெண்களுக்கு... ஆண்கள் குடும்பத்தைக் கட்டியாளுவதிலும், கொண்டு நடத்துவதிலும் உள்ள கஷ்டங்கள் தெரிவதில்லை. :unsure:

எது என்னவோ... விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கை என்னவென்று புரியும்! :wub::)

கவிதை நல்லாயிருக்கு... பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்கள் சிந்திக்கவைத்தாலும் , அம்மணிகள் புரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இல்லாமல் போய்விடுமே கவிதை .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, கோமகன்!

கைவிலங்கு என்று வரும்போது, அது தங்கத்தில் இருந்தாலென்ன அல்லது வைரைத்தில் இருந்தாலென்ன?

விலங்கு, விலங்கு தானே!

தங்கக் கூட்டினுள் கிளியை அடைத்து வைத்தால் மட்டும், அது வித்தியாசமான சிறையாகி விடுமா?

புங்கையூரான் உங்கள் கருத்தே எனதும். கோமகன் விலங்கென்று வந்த பின் அது எந்த உலோகமானால் தான் என்ன ? சாதுரியமாய் தங்களை நியாயப்படுத்த பாவிக்கும் சொல்லே தங்கமும் வைரமும் இதர உயர் ரகங்களும்.

ஆண்கள் குடும்பத்தைக் கட்டியாளுவதிலும், கொண்டு நடத்துவதிலும் உள்ள கஷ்டங்கள் தெரிவதில்லை. :unsure:

குடும்பத்தின் கடிய சுமைகள் யாவையும் பெண்ணின் தலையில் சுமத்தவிட்டு கட்டியாளும் ஆட்சிப் பொறுப்பை மட்டுமே ஆண்கள் சுமப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ்..

இரும்புப் பெட்டியில் வைத்து தங்கத்தைப் பூட்டுவது சரி.. ஏனென்றால் அது உயிரில்லாதது.. ஆனால் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் பெண்களைக் கட்டுப்படுத்துதல் சரியா? :rolleyes: அவ்வாறு செய்வது பெண்கள் சுயசிந்தனை அற்றவர்கள் என்று சொல்வதுபோல் ஆகாதா? :unsure:

கவிதை புனையப்பட்ட விதம் அழகு.

ஆனாலும் எனக்கும் உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட முடியவில்லை.

(ஆனா போற போக்கிலை ஆண்களை வைச்சுப் பூட்டாமல் இருந்தால் அதுவே பெரிய விசயம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் எழுதப்பட்ட பெண்வீரம் நிகரற்றது

அடிமை வாழ்வில் சொர்க்கம் கிடைப்பதைவிட

நரக வாழ்வில் சுதந்திரத்தை விரும்பும் அவாவே

உண்மை மனிதரின் வாழ்வு

  • தொடங்கியவர்

பெண்களை தங்கம் என்று அதாவது உயரிய பெண்மை என்று புரிந்து நீங்கள் எழுதிய கவிதை புரிகிறது . நல்லதொரு கவிதைக்கு நன்றிகள் கோமகன்..

ஓ............. நீங்கள் இப்படிப்பார்க்கின்றீர்கள் மிக்கநன்றிகள் கல்கி உங்கள் கருத்துக்களுக்கு .

நல்ல கவிதை, கோமகன்!

கைவிலங்கு என்று வரும்போது, அது தங்கத்தில் இருந்தாலென்ன அல்லது வைரைத்தில் இருந்தாலென்ன?

விலங்கு, விலங்கு தானே!

தங்கக் கூட்டினுள் கிளியை அடைத்து வைத்தால் மட்டும், அது வித்தியாசமான சிறையாகி விடுமா?

வன்மை இரும்புப்பெட்டி

மென்மை தங்கத்தை ,

என்றும் காப்பாற்றுகிறது.

தங்கம் தாழ்ந்ததென

கருதுகிறதா உலகம் ????????

புரியவில்லை இன்னும்

ஏனோ புரியவில்லை..........

இங்குதான் எனது முரண் இலைமறை காயாக ஒழிந்து கிடக்கின்றது புங்கை . நேரத்தைச் செலவளித்த உங்களுக்கு மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஈழத்தில் எழுதப்பட்ட பெண்வீரம் நிகரற்றது

அடிமை வாழ்வில் சொர்க்கம் கிடைப்பதைவிட

நரக வாழ்வில் சுதந்திரத்தை விரும்பும் அவாவே

உண்மை மனிதரின் வாழ்வு

உங்கள் கோணமும் யோசிக்க வைக்கின்றது லியோ ( சிங்கம் !!!!!!!!!!! ?????????? ) . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

கோ... ஆண்கள் பெண்களை கட்டியாள்வதை தப்பில்லை என்கின்றீர்கள்.

மனிஷிமாருக்கு இதெல்லாம் புரியாதுபோல. அதுமாதிரித்தான் சொப்னா அக்காவும் கேட்டிருக்கிறா...!!! :lol: :rolleyes: :lol:

ஆண்கள் தங்களை கட்டியாள நினைப்பதை அடிமைப்படுத்துவதாக தப்பாக நினைக்கும் பெண்களுக்கு... ஆண்கள் குடும்பத்தைக் கட்டியாளுவதிலும், கொண்டு நடத்துவதிலும் உள்ள கஷ்டங்கள் தெரிவதில்லை. :unsure:

எது என்னவோ... விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கை என்னவென்று புரியும்! :wub::)

கவிதை நல்லாயிருக்கு... பாராட்டுக்கள்.

நான் சில கவிதை தலைப்புக்களுக்குள் வருவதில்லை..ஆனால் சிலருடை விமர்சனங்கள் வர வைத்து விடுகிறது அந்தவகையில் கேக்கிறன் ஆண்கள் தங்கள் சுய விருப்பின் பேரில் தானே பெண்களை கட்டியாள்வதை செய்கிறார்கள்..எத்தனை வீதமான ஆண்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளும் ஒரு உணர்வுள்ள ஜீவன் தான் என்பதை உணர்ந்து நடந்து இருக்கிறீங்கள்......அதை முதலில் சொல்லுங்கள்..மிஞ்சிப்,மிஞ்சிப் போனால் கதைக்காமலே அவளை அவோயிட் பண்ணுவீர்கள்...பெண் ஆகப்பட்பட்டவள் தன் உணர்வுகளை எல்லாரிடமும் சொல்லமுடியாதவள்..தனக்கு சுதந்திரம் எங்கே கிடைக்கும் என்று எண்ணிக் கொள்கிறாளோ அங்கே தான் சொல்ல முடியும்..ஆனால் சுய விருப்பின் பேரில் உணர்வுகளை கொட்டிக் கொள்ளும் இடமும் தவறாகி போகும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்..உங்கள் நியாயம் தான் நியாயம் மற்றர்வகளுக்கு ஒன்றுமே தெரியாது, விளங்காது என்று கருதிக்கொள்ளாதீர்கள்.

Edited by யாயினி

யாயினி... !

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியுது. :)

ஆனா ஒரு 20 வருசத்துக்கு முன்ன..ர் எமது சமுதாயத்தில் ஆண்களால் பெண்கள் அடக்கியாளப்பட்டார்கள் என்று சொன்னால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நிலைமை இப்பொழுது அப்படியல்ல.

ஆண்,பெண் என்ற பேதங்கள் இல்லாத சமநிலைத் தன்மையொன்று உருவாகியுள்ளது.

சொல்லப்போனால் பெண்கள்தான் ஆண்களை அடக்கியாள்கிறார்கள் போல இருக்கு நிலைமை. :unsure: :lol:

(யாழில உள்ள குடும்பஸ்தர்களைக் கேட்டால் தெரியும்.... :rolleyes: )

பெண் எதிர்பார்க்கும் சுதந்திரத்தின் அளவு எது என்று கேட்டால் பதில் கிடைக்காது.

ஏனெனில்... சாதரணமாக ஆண்கள் தமக்கென எதிர்பார்க்கும் அதிகபட்ச சுதந்திரங்களையும் தாண்டியது.

"பெண்மையின் மென்மையும் பண்பும் மாறதவரைக்குந்தான் அவள் பெண்"

நான் இப்பிடிச் சொன்னால்.... இதைச் சொல்லிச் சொல்லியே...

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கின்றார்கள் என்று தாய்க்குலங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால்...... அதுதான் உண்மை. அதை மாற்றாத அளவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தின் எல்லைக்கோடுகள் அமைந்தால் அதுவே நன்று. :)

ஆமாம் பாவங்கள் ......நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் என்பதும் புரிகிறது..பெண்ணாக இருந்தால் வாயே திறக்காதே அடங்கி இரு..ஆணின் விருப்புக்கு விட்டுக் குடுத்துட்டு உன்பாட்டுக்கு இரு,அல்லது விலகி விடு. அல்லது நாங்கள் சென்று விடுவோம் என்பது போல் தான் யோசிக்கத் தோன்றுகிறது..இது ஒன்றும் புதிது இல்லையே..எல்லா இடங்களிலும் பெண்கள்,ஆண்களை அடக்கி ஆழுகிறார்கள் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.ஆண்களுக்கு சமனாய் பெண்களை வேலைக்கு அனுப்பினால்,வாகனம் ஓட அனுமதித்தால் அது மட்டும் தான் அவர்களுடைய சுதந்திரம் என்று சொல்ல முடியாது..வந்து இருபத்து ஐந்து வருசத்துக்கு இன்றும் வங்கி மெசினில் காசு எடுக்கத் தெரியாத பெண்களும் இருக்கிறார்கள்..அந்தளவில் தான் ஆண்கள் கொடுக்கும் சுதந்திரம் இருக்கிறது..அல்லது பெண்கள் எதிர்பார்ப்பவற்றை ஆண்கள் காது கொடுத்து கேட்டால் தானே.முகமன் பார்ப்பது என்று சொல்வார்களே அது இங்கு விதி விலக்கல்ல....பொறுமைக்கு நிலம்,பசு போன்றவற்றை உதாரணம் காட்டுவார்கள்..அதே போன்று தான் பெண்களும் இருக்க வேணும் என்று ஆண்கள் நினைக்கிறார்கள்..அந்த நிலை தவறும் பட்சத்தில் மாற்றி அமைச்சுட்டு இல்லாதவற்றை சுமத்திட்டு போய் விடுவார்கள்..இது தான் உண்மை.ஆமாம்.....பெண்மையையும்,மென்மையும் பண்பும் மாறாவரைக்கும் தான் பெண்ணை ஆண்கள் பெண்ணாக பாக்கிறார்கள்,சற்றேனும் வாய் திறந்துட்டால் வேறை பெயர் வைச்சுடுவார்கள்..இது இன்று நேற்றா நடக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் ஆணும் சரி, பெண்ணும் சரி சுயசார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்..! குறிப்பாகப் பெண்கள்.. கணவனுக்கு ஏதாவது நடந்துவிட்டால் இவர்கள் வேறு யாரையும் சார்ந்திருக்கவேண்டிய நிலை தோன்றிவிடும்.. அண்மையில் ஒரு குடும்பத்தில் நிகழ்ந்ததை அவதானித்ததால் இந்தக் கருத்து.. :unsure:

பெண்கள் சுயசார்பு உள்ளவர்களாக மாறும்போது ஆண்களின் பாரமும் கணிசமான அளவு குறையும்.. :rolleyes:

பெண்கள் சுயசார்பின்மைக்கு குடும்பத்தலைவர்களே பெரும்பாலும் காரணியாக இருப்பதை அவதானித்திருக்கிறேன்.. உனக்குத் தெரியாது; பிழையாக படிவத்தை நிரப்பிவிடுவாய், காரை இடித்துப் போடுவாய் என்று வெருட்டி வைத்துவிடுவார்கள்.. தன்னம்பிக்கையை சீர்குலைவதால் பெண்களும் வேலையின் செக் கவரை கணவரிடம் கொடுத்துவிட்டு, சமைத்து வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்..

பிறகு ஒரு வங்கிக்குச் சென்று வருவதற்கே சேவல் பின்னால் போன கோழியும், குஞ்சுகளும் மாதிரி சென்று வருவார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் குறை கண்டு பிடிப்பது என் நோக்கம் அல்ல...நான் அப்படிப் பட்டவளும் இல்லை..சில,சில இடங்களில் பிரச்சனைகள் வருவது உண்டு,போவதும் உண்டு..எல்லாத்துக்கும் நாங்கள் தலையைப் போட்டு பிச்சுக்கு கொண்டு குற்றம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது புரிந்து கொள்கிறேன்..ஒரு வசனம் பிசகினாலும் மற்றவர்களின் மனங்களில் எத்தனையோ விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறன்..என்னைப் பொறுத்த மட்டில் வெறும் கருத்துக்களால் மட்டுமே மோதிக் கொள்கிறோம்..

எழுத வேண்டியது எல்லாம் எழுதி விட்டு .....பெண்மையின் மென்மையும் பண்பும் மாறாத வரைக்கும் தான் அவள் பெண் என்று மேலே ஒரு வசனம் இருக்கு பாருங்கள்..அதற்காகத் தான் இவ்வளவும் எழுத வேண்டி வந்தது..யாரும் நினைத்து விட முடியாது தங்கள்,தங்களுக்கு வரும் பெண்கள் தான் சரியானவர்கள் மற்ற பெண்கள் எல்லாம் மென்மை இல்லாதவர்கள் பண்பு இல்லாதவர்கள் என்று.ஒரு சொல் பிழைச்சாலும் ஓராயிரம் அர்த்தங்களை போதிக்கும்..

இத்தோடு இந்தக் கருத்தில் இருந்து விடுபட்டுக் கொள்கிறேன்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

புங்கையூரான் உங்கள் கருத்தே எனதும். கோமகன் விலங்கென்று வந்த பின் அது எந்த உலோகமானால் தான் என்ன ? சாதுரியமாய் தங்களை நியாயப்படுத்த பாவிக்கும் சொல்லே தங்கமும் வைரமும் இதர உயர் ரகங்களும்.

குடும்பத்தின் கடிய சுமைகள் யாவையும் பெண்ணின் தலையில் சுமத்தவிட்டு கட்டியாளும் ஆட்சிப் பொறுப்பை மட்டுமே ஆண்கள் சுமப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். :mellow:

புங்கைக்கு நான் கொடுத்த விளக்கமே உங்களுக்கும் சாந்தி . உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள் . மற்றையவர்களின் கருத்துகளைக் கண்டு எனது பக்கத்தை எழுதுகின்றேன் .

யாரையும் குறை கண்டு பிடிப்பது என் நோக்கம் அல்ல...நான் அப்படிப் பட்டவளும் இல்லை..சில,சில இடங்களில் பிரச்சனைகள் வருவது உண்டு,போவதும் உண்டு..எல்லாத்துக்கும் நாங்கள் தலையைப் போட்டு பிச்சுக்கு கொண்டு குற்றம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது புரிந்து கொள்கிறேன்..ஒரு வசனம் பிசகினாலும் மற்றவர்களின் மனங்களில் எத்தனையோ விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறன்..என்னைப் பொறுத்த மட்டில் வெறும் கருத்துக்களால் மட்டுமே மோதிக் கொள்கிறோம்..

எழுத வேண்டியது எல்லாம் எழுதி விட்டு .....பெண்மையின் மென்மையும் பண்பும் மாறாத வரைக்கும் தான் அவள் பெண் என்று மேலே ஒரு வசனம் இருக்கு பாருங்கள்..அதற்காகத் தான் இவ்வளவும் எழுத வேண்டி வந்தது..யாரும் நினைத்து விட முடியாது தங்கள்,தங்களுக்கு வரும் பெண்கள் தான் சரியானவர்கள் மற்ற பெண்கள் எல்லாம் மென்மை இல்லாதவர்கள் பண்பு இல்லாதவர்கள் என்று.ஒரு சொல் பிழைச்சாலும் ஓராயிரம் அர்த்தங்களை போதிக்கும்..

இத்தோடு இந்தக் கருத்தில் இருந்து விடுபட்டுக் கொள்கிறேன்.

யாயினி... இது கருத்துக்களம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை கருத்துக்களால் சந்திப்பதே என் வழக்கமும் பழக்கமும்... தங்களைப்போலவே.

நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தைச் சொன்னீர்கள். அவ்வளவுதான்.இதில் மனஸ்தாபப்பட ஒன்றும் இல்லை. :)

ஆனால், நான் அப்படி எழுதிய அந்த வசனத்தின் உள்ளார்ந்த அர்த்தம் வேறு.

அதாவது... பொதுவாக, பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் ஒரு ஆணிடம் எப்படி இருக்கும்... என்ற கோணத்தில் எழுதப்பட்டதுதான்.

நான் மென்மை என்று குறிப்பிட்டது அழகையோ... அல்லது உடலையோ அல்ல, அவர்களது பரிவான குணத்தினையும் ஏனைய நற்குண இயல்புகளையும். பண்பு என்று குறிப்பிட்டது நெறி தவறாத ஒழுக்கத்தை.

ஆணோ பெண்ணோ ஒழுக்கம் என்பது மிக அவசியம்.

ஒரு பெண் ஒரு ஆணால்தான் பூரணமடைகிறாள். அதைப்போல... ஒரு ஆணும் ஒரு பெண்ணால்தான் பூரணமடைகின்றான்.

ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பாள்.

அதேமாதிரியான வசனத்தை ஆணுக்கும் கூறலாம்.

ஆண்மையின் ஆளுமையும், பெண்மையை மதிக்கும் பண்பும் மாறாதவரைக்கும்தான் அவன் ஆண்.

ஆணா..?. பெண்ணா...? என்பது பிரச்சினையில்லை.

நீயா? நானா? என்று ஆணும் பெண்ணும் சண்டைக்கு வெளிக்கிட்டால்தான் பிரச்சினையே! :o

ஏதாவது தவறிருந்தால்... தாய்க்குலங்கள் என்னை மன்னித்தருள்க! :)

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி

யாயினி

யாயினி............

ஓடி விட்டீர்களா?

நல்லது அப்படியே இருங்கள்

உங்களைக்காக்க எவரும் வரப்போவதில்லை.

நீங்கள்தான் உங்களுக்காக போராடவேண்டும்

ஒரு சிறு அறிவுரை

ஆண்களைத்திருத்த முயலாதீர்கள்

கல்லில் நாருரிப்பதைவிட கடினம்(என்னையும் சேர்த்துத்தான்)

இந்தக்கவிதையின் உள்ப்பொருள் அதுதான்

உங்களை மாற்றுங்கள்

நீங்கள் பெரிய கோடுகளாக மாறுங்கள்

எல்லாம் சுபம் பெறும்.......

ஒரு கேள்வி

வெளிநாடுகளில் தங்களை உயர்த்திக்கொள்வதிலும் உங்களுக்காக நீங்கள் போராடுவதிலும் தங்களுக்கு என்ன சிக்கல்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி... இது கருத்துக்களம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை கருத்துக்களால் சந்திப்பதே என் வழக்கமும் பழக்கமும்... தங்களைப்போலவே.

நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன். நீங்கள் உங்களுடைய கருத்தைச் சொன்னீர்கள். அவ்வளவுதான்.இதில் மனஸ்தாபப்பட ஒன்றும் இல்லை. :)

ஆனால், நான் அப்படி எழுதிய அந்த வசனத்தின் உள்ளார்ந்த அர்த்தம் வேறு.

அதாவது... பொதுவாக, பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் ஒரு ஆணிடம் எப்படி இருக்கும்... என்ற கோணத்தில் எழுதப்பட்டதுதான்.

நான் மென்மை என்று குறிப்பிட்டது அழகையோ... அல்லது உடலையோ அல்ல, அவர்களது பரிவான குணத்தினையும் ஏனைய நற்குண இயல்புகளையும். பண்பு என்று குறிப்பிட்டது நெறி தவறாத ஒழுக்கத்தை.

ஆணோ பெண்ணோ ஒழுக்கம் என்பது மிக அவசியம்.

ஒரு பெண் ஒரு ஆணால்தான் பூரணமடைகிறாள். அதைப்போல... ஒரு ஆணும் ஒரு பெண்ணால்தான் பூரணமடைகின்றான்.

ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பாள்.

அதேமாதிரியான வசனத்தை ஆணுக்கும் கூறலாம்.

ஆணா..?. பெண்ணா...? என்பது பிரச்சினையில்லை.

நீயா? நானா? என்று ஆணும் பெண்ணும் சண்டைக்கு வெளிக்கிட்டால்தான் பிரச்சினையே! :o

ஏதாவது தவறிருந்தால்... தாய்க்குலங்கள் என்னை மன்னித்தருள்க! :)

மன்னிப்பு எல்லாம் வேண்டாம் கவிதை அண்ணா.....அப்படி எல்லாம் யாரையும் கேக்க வைக்கனும் என்பதும் என் நோக்கம் இல்லை..நீங்கள் உங்கள் அறிவுக்கு எட்டிய மாதிரி புரிந்துணர்வோடு எழுதினீர்கள்..நான் என் அறிவுக்கு எட்டிய மாதிரி எழுதினேன் அவ்வளவு தான்..மற்றப்படி உங்களைத் திருத்த வேணும் என்றோ இல்லை மற்றவர்களைத் திருத்த வேணும் என்பதோ என் நோக்கமும் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் பல குடும்பப் பெண்கள் ஆண்களில்

தங்கியிருப்பதற்கு அவர்களே பல விடயங்களில் காரணமாக இருக்கின்றனர்.

அசட்டையீனம் என்பது நான் கண்ட கரணங்களில் ஒன்று.

அடுத்தது மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தவிர்ந்த மொழிகளில்.

புரியவில்லை கவிதையை இன்னும் புரியும்படி எழுதியிருக்கலாம்

கோமகன்.

  • தொடங்கியவர்

கோம்ஸ்..

இரும்புப் பெட்டியில் வைத்து தங்கத்தைப் பூட்டுவது சரி.. ஏனென்றால் அது உயிரில்லாதது.. ஆனால் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் பெண்களைக் கட்டுப்படுத்துதல் சரியா? :rolleyes: அவ்வாறு செய்வது பெண்கள் சுயசிந்தனை அற்றவர்கள் என்று சொல்வதுபோல் ஆகாதா? :unsure:

ஏன் கலியாணம் செய்கின்றோம் ???? உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் இசை .

  • கருத்துக்கள உறவுகள்

பார்வைகள் பார்க்கின்றேன்

தொலைதூர இருள் வானில் .

சிலசமயம் ,

சுவர்களையும் சுவாரசியமாய்

ஊடுருவிக் காண்கின்றேன்.

என் கையின் ரேகைகள்

ஏனோ இன்னும் புரியவில்லை ...........

ஆண்கள் பெண்களை

காவல் புரிவதால் ,

பெண்மை தாழ்ந்தது இல்லை .

வன்மை இரும்புப்பெட்டி

மென்மை தங்கத்தை ,

என்றும் காப்பாற்றுகிறது.

தங்கம் தாழ்ந்ததென

கருதுகிறதா உலகம் ????????

புரியவில்லை இன்னும்

ஏனோ புரியவில்லை..........

****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

என்ன கோம்ஸ் அண்ணா, கவிதை முழுக்க ஒரே பீலிங்கா இருக்கு? என்ன எண்டாலும் நாங்கள் ஆம்பிளையள் பாவம் தான். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.