Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி இங்கே சிலர் முஸ்லீம்களைப் பற்றி சொல்வது போன்றுதான் சொல்கின்றனர்.

"இடையிலே இந்தியாவில் இருந்து வந்தவர்கள், இவர்களை விரட்டி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும், தமிழர்கள் கொழும்பில் அதிகமாக வாழ்கின்றனர்;, அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை...." இப்படி நிறைய சொல்வார்கள்.

அட அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா? நீங்களும் நம்புறியள் போலிருக்கு.

இடையில் வந்தது சிங்களவர்களா? தமிழர்களா? இது உங்களுக்கே இன்னும் தெரியவில்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறீர்களா?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி" தமிழர் குடி.

இங்கு இடையில் வந்தது சிங்களவர்களே அன்றி தமிழர்கள் அல்ல. அவர்கள் வணங்கும் புத்தர் கூட சைவ சமயத்திலிருந்து பௌத்த சமயத்தை தழுவிக்கொண்ட சித்தார்த்தர் தான்.

Edited by காதல்

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேசம், தேசியம், தேசிய இனம், சிறுபான்மை இனம் என்பதெல்லாம் இலகுவாக வரைவிலக்கணம் செய்யமுடியாது. தமிழர்களைத் தமிழர்கள் தேசிய இனமாகச் சொல்லிக்கொண்டு வருகின்றோம். ஆனால் சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதில்லை.. அதுபோலத்தான் முஸ்லிம்களையும் சிங்களவரும் தமிழர்களும் தங்களது சொந்த அரசியல் தேவைகளுக்காக தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஒரு பெரிய தாக்கம் வரும்போது அதைத் தங்கள் மீதான தாக்கமாக நினைத்து உணர்வு ரீதியாக எதிர்த்து நின்று போராடுகின்றார்களை தனித்துவமான இனமாகக் கொள்ளலாம்.

தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக சாதி, பிரதேச, மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாகப் போராடியவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் வருவார்கள். அந்த இலட்சியத்தை வரித்துக்கொள்ளாத முஸ்லிம்களை தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கமுடியாது! சிலர் முஸ்லிம்கள் இயக்கத்தில் இருந்தார்கள் என்ற தரவுகளோடு வந்தாலும் உணர்வு ரீதியாக பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழர்களின் போராட்டத்திலிருந்து அந்நியப்பட்டே நின்றார்கள். அனுதாபம் காட்டியோர் எத்தனை வீதம் என்பதும் சரியாகத் தெரியாது!

தொடர்புபட்ட அலசல்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=67438

முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்

இங்க சைவ சமயத்தவரை விட்டிட்டியளே. நாங்கள் எங்க போவம்? :lol:

கடைசியில் முஸ்லிம்களுக்கு தனியலகு கேட்க போய் மதப்பிரச்சினையை ஆரம்பித்து வைத்த பாவம் உங்களுக்கு வேண்டாம் சபேசன் அண்ணா. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாத்திகன் எந்த மதமும் இல்லை எனக்கு ஏதாவது இடம் பிரிச்சு தாங்கோப்பா?? அதுவும் வடக்கிலை வேணும் தருவாங்களா??

நான் நாத்திகன் எந்த மதமும் இல்லை எனக்கு ஏதாவது இடம் பிரிச்சு தாங்கோப்பா?? அதுவும் வடக்கிலை வேணும் தருவாங்களா??

சண்டிலிப்பாய் மாசிப்பிட்டிச் சந்திக்கருகில், 'மலரகம்' எனும் தனியலகு உங்களுக்காகத் தரப்படும்.

நான் நாத்திகன் எந்த மதமும் இல்லை எனக்கு ஏதாவது இடம் பிரிச்சு தாங்கோப்பா?? அதுவும் வடக்கிலை வேணும் தருவாங்களா??

:lol: :lol: சாத்திரி அண்ணா கமலகாசனின் point ஐ பிடிச்சிட்டார். :lol::icon_idea:

சண்டிலிப்பாய் மாசிப்பிட்டிச் சந்திக்கருகில், 'மலரகம்' எனும் தனியலகு உங்களுக்காகத் தரப்படும்.

:lol: :lol:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்துப்படி லண்டன் பாரிஸ் சூரிச் போன்ற இடங்களில்

குறிப்பாக பாரிஸ் 10 இல் உங்களுக்கான அலகுகளைக் கேட்டு

வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி வரும் என நினைத்தே ஜேர்மன்காரன் தமிழரை அங்கை அங்கை

தனித் தனியாகப் பிரித்து மேய்ந்தவன்

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிலிப்பாய் மாசிப்பிட்டிச் சந்திக்கருகில், 'மலரகம்' எனும் தனியலகு உங்களுக்காகத் தரப்படும்.

மாசியபிட்டி சந்தியா அங்கை வேண்டாம் மாரி காலத்திலை சரியான வெள்ளம் நிக்கும் தவக்கையளின்ரை தொல்லை தாங்க ஏலாது அப்பிடியே கொஞ்சம் தள்ளி தொட்டிலடி சங்கானை பக்கமா தந்தா நல்லது :(

சபேசனின் கருத்துப்படி லண்டன் பாரிஸ் சூரிச் போன்ற இடங்களில்

குறிப்பாக பாரிஸ் 10 இல் உங்களுக்கான அலகுகளைக் கேட்டு

வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி வரும் என நினைத்தே ஜேர்மன்காரன் தமிழரை அங்கை அங்கை

தனித் தனியாகப் பிரித்து மேய்ந்தவன்

பாரிஸ் 10 லை பத்து வருசமா அலகு குத்திக்கொண்டிருக்கிறம் விரைவில் அலகு கேட்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாசியபிட்டி சந்தியா அங்கை வேண்டாம் மாரி காலத்திலை சரியான வெள்ளம் நிக்கும் தவக்கையளின்ரை தொல்லை தாங்க ஏலாது அப்பிடியே கொஞ்சம் தள்ளி தொட்டிலடி சங்கானை பக்கமா தந்தா நல்லது :(

பாரிஸ் 10 லை பத்து வருசமா அலகு குத்திக்கொண்டிருக்கிறம் விரைவில் அலகு கேட்பம்.

:lol::lol::lol:

கனடாவில் மார்க்கம், ஸ்காபுரோ பக்கமும் எங்களுக்குத் தானாம்

  • தொடங்கியவர்

இங்கே எழுதப்பட்டவைகளை முழுவதுமாக வாசித்திருந்தால் சில கேள்விகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.

ஒரு தனியான மதமாக இருப்பதனாலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்து இருப்பதனாலேயோ, அனைவருக்கும் தனியான அதிகார அலகு கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.

"எங்க ஏரியா, உள்ள வராத" பிரச்சனை எல்லா இடங்களிலும் இருக்கும். அதற்காக தனி அலகு கொடுப்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். (ஆனால் "குழு ஜனநாயகம்" என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு தெருவும் தன்னைத்தானே நிர்வாகிக்கலாம் என்கின்ற யோசினையை சில அரசியல் அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அது தனியான ஒரு விடயம்)

நாத்திகனான சாத்திரி தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக வெளிப்படுத்துகின்றார். தீவாராகிய விசுகுவும் தன்னை தமிழனாக, தமிழ் தேசியவாதியாக உணருகின்றார். இங்கே கருத்துச் சொன்ன மற்றைய சைவத் தமிழர்களும் அப்படியே உணர்கின்றார்கள். கிறிஸ்தவத் தமிழர்களும் தமிழ்த் தேசியத்தில் நிற்கின்றார்கள்.

இங்கே எதற்கு தனி அலகு?

  • தொடங்கியவர்

முஸ்லீம்களுக்கு இரண்டு இனங்களாலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு தம்மை பாதுகாக்கின்ற உரிமை இருக்கின்றது.

காதல்!

உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை என்று நினைக்கிறேன். சிங்களவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் நான் சொன்னேன். அவைகள் சரி என்று சொல்லவில்லை.

எப்படி சிங்களவர்கள் எங்களைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்களோ, அப்படியே நாமும் முஸ்லீம்களை பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றோம் என்று சொல்கின்றேன்.

கோமகன்!

நிச்சயமாக பயணக் கட்டுரையை தொடர்வேன். வடக்கின் குரும்பசிட்டியில் இருந்து கிழக்கின் குமுனை வரை பயணித்த அனுபவத்தை நான் சொல்லுவேன்.

முஸ்லீம் பிரிவினர் நழுவல் அரசியல் செய்பவர்கள். சபேசன் ஏன் இங்கு விளக்குப்பிடிக்க நிற்கின்றார் என்று தெரியவில்லை. முஸ்லீம் மதப்பிரிவினருக்கு இலங்கையில் தனி அலகு கொடுப்பது மத ரீதியாக இலங்கையை பிரிவினைப்படுத்துவதாக முடியும். அத்துடன், அது சாத்தியமும் இல்லை. இதற்கு சிங்களமும் இடம் கொடுக்காது. ஆனால், தமிழர் பிரச்சனை மத ரீதியானது அல்ல.

தமிழர் தனி நிர்வாக அலகினுள் முஸ்லீம்கள் பாதுகாப்பாக வாழமுடியும். ஏன் என்றால் அதில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என பல மதத்தினரும் இலகுவாக உள்ளெடுக்கப்படமுடியும். ஆனால், முஸ்லீம் நிர்வாக அலகினுள் தமிழர்கள் வாழமுடியுமா? அடிப்படையிலேயே இஸ்லாம் மதப்பிரிவினரின் மதத்தை முன்னெடுக்கும் ஓர் அலகினுள் எவ்வாறு பல்வேறு மதங்களை சேர்ந்த தமிழர்கள் உள்ளெடுக்கப்படமுடியும்?

எவ்வாறு முஸ்லீம்களுக்கு அவர்களை பாதுக்காக்க உரிமை உள்ளதோ இவ்வாறே ஏனைய மதத்தினை சேர்ந்தவர்களுக்கும் தம்மை பாதுகாக்க உரிமை உள்ளது. எவ்வாறு முஸ்லீம்களுக்கு பெளத்த மதத்தினரால் பல பிரச்சனைகள் உள்ளனவோ அவ்வாறே இந்து, கத்தோலிக்க/கிறீஸ்தவ மதத்தினருக்கும் பெளத்த மதத்தினரால் பல பிரச்சனைகள் உள்ளன. அத்துடன், முஸ்லீம் மதத்தினராலும் மற்றைய மதத்தினருக்கு பல பிரச்சனைகள் உள்ளன.

ஒருவரை ஒருவர் வெறுப்பதால் பயனில்லை. அதேசமயம் இணக்கப்பாட்டு/நல்லெண்ண அரசியல் செய்கின்றோம் என ஒரு மதத்தினர் பல மதங்கள் உள்ள தனித்துவமான மொழி பேசும் சமூகத்தை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்படி சிங்களவர்கள் எங்களைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்களோ, அப்படியே நாமும் முஸ்லீம்களை பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றோம் என்று சொல்கின்றேன்.
நீங்கள் வைக்கும் குற்றசாட்டுகள் நிரூபிக்க பட்டவையா?

1.சூடானில் இருந்து தென்சூடான் பிரிந்து போனதற்கு முக்கிய காரணம்(முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை அடக்கியாளவேண்டும் என்ற நிலைபாடு கொண்ட) மதம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்

.

2.முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்

1.இங்கே தெளிவாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். ஒரு மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்படுதாகவும், தமது உரிமைகள் பறிபோவதாகும், பாதுகாப்பு அற்ற சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் உணர்கின்ற நிலை வருகின்ற போது(எப்போது வந்தது - அரை வேக்காட தமிழீழ போராட்டத்தை கொண்டுவராதீர்கள். போராட்டகாலத்தில் இயல்பான மேலாதிக்கம் இருக்க முடியாது. இது அவரகால நிலைமை. சில சிங்கள கிராமங்களையும் தாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கும் தனி அலகு தேவைக்கும் தொடர்பில்லை ), அந்த மக்கள் கூட்டத்திற்கு தன்னை பாதுகாப்பதற்கான அலகுகளை (தனி நாடு, தனி மாகாணம், தனி அலகு) உருவாக்கும் தேவை உருவாகும்.

2.நாமும் வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுடன் நெருக்கத்தைப் பேணி அரச உத்தியோகங்களைப் பெற்று எம்மை தக்க வைத்தபடி வளர்த்துக் கொண்டோம். ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருக்கும் சூட்சுமத்தை முஸ்லீம்கள் எங்களிடம் இருந்துதான் கற்றிருப்பார்கள்

.

கற்றுகொண்டபின் எப்போ எங்கிருந்து மேலாதிக்கத்தை உணரும் மனப்பாண்மை தீடீரென புகுந்தது. எம்மிடம் இருந்து கற்றதினால் நாம் பெரிதாக இருக்கலாம் என்று உணருகிறார்கள்?

முஸ்லீம்கள் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கொண்டிருந்த அதிகாரத்தை தணிக்கத்தான் இராமநாதன் இங்கிலாந்து போனார்.

இனம் என்பதை உலகம் இப்படி பொதுவாக வரையறுக்கிறது: ஒரு தனித்துவமான மொழியை பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட, தனித்துவமான ஒரு மக்கள் கூட்டத்தை "இனம்" என்று சொல்கின்றது.

ஏன் இந்த வளவள? இதில் எது முஸ்லீம்கள்மீது தமிழர்கள் மேலாதிக்கம் செலுத்துவதற்கு ஆதாரமாகத்திகழ்ந்து மேலாண்மை இருப்பதை நிரூபிக்கிறது?

எப்போது எந்த பகுதியில் தமிழர்கள் பூரண ஆட்சியை வைத்திருந்து ஆதிக்க மேளாணமை நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றி அவற்றிலிருந்து தம்மை விடுவிக்க முஸ்லீம்கள் போராடங்களை நடத்தினார்கள்? இலங்கையில் எந்த ஒரு கிராமத்தில் தன்னும் தமிழ் மேலாதிக்க உபசட்டம் இருப்பதை இங்கே இணைக்க முடியுமா? மேலாண்மை என்பதில் மனத்தில் இருக்கும் ஒரு பயம் (paranoia) அல்ல. அது மேலாதிக்க ஆட்சி செய்யத்தக்க சூழ்நிலை.

தமிழ் மேலாதிக்கம் இருப்பதால் தனி அலகு கேட்கிறார்களா முஸ்லீம்கள் அல்லது அது தமது சமயத்தை பாதுகாக்க(உதாரணமாக ஷரியா சட்டங்களை தமது கிராமகளில் நடைமுறைப்படுத்தவும், பெண்களை முக்காடுமட்டும் போட்டு தெருவில் செல்ல வைக்கவும், பெண்கல்வி ஏற்புடையது அல்ல என்று அவர்கள் கருதுவதால் அதை தடுத்து நிறுத்துவதற்கும்) என்பதற்காக கேட்கிறர்களா? மேலாண்மை என்பது மேற்கு நாடுகளின் ஜனநாயகொள்கைகளுக்கு எதிரானது. அதாவது ஆண்கள் மேலாண்மையை நிலை நிறுத்தும் முஸ்லீம்கள், ஜனநாயக மேற்குநாடுகள் பெண்கள் மீது கட்டுப்பாடு விதிக்க மறுப்பதால், ஜனநாய நாடுகள் தம்மீது மேலாண்மை செய்வதாக குற்றம் சாட்டி புரட்சிகளும் குண்டு வெடிப்புகளும் நடத்துகிறார்கள். ஆனால் இதுவரையில் இவர்கள் மீது மேலாண்மை இருப்பது நிரூபிக்கப்படவில்லை. ஜனாநாயத்திற்கு மேலே போவது சர்வதேச மனித உரிமைகள். இவை முஸ்லீம் நாடுகளில் மறுக்கபட்டு ஐ.நா வால் தொடர்ந்து இந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கபடுகிறதே. இதில் முஸ்லீம்கள் ஐ.நா முடிவுகளுக்கு எதிராக ஏன் செயல்படுகிறார்கள்?

எதற்காக சிங்கள சட்டங்கள் இயற்றும் பாரளுமன்றத்திடம் காணத மேலாண்மை ஆதிக்கத்தை தமிழரின் சட்டங்கள் மூலம் முஸ்லீம்கள் உணருகிறார்கள். உண்மையில் இலங்கையில் தமிழர் மீதான நேரடி முதல் மேலாண்மை சட்டமான கல்வியில் கொண்டுவந்த தரப்படுத்தலை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் முஸ்லீம்களே. இது முஸ்லீம்களால் வரையப்பட்டு சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று அமூலாக்பட்ட சட்டம்.என்பதை மறந்து விடாதீரகள்.

Edited by மல்லையூரான்

தமிழர்களின் தனி அலகு கோரிக்கையை/போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டதாகவே முஸ்லீம் மதப்பிரிவினரின் தனி அலகு சிந்தனையை பார்க்கமுடியுமே தவிர, முஸ்லீம் மதப்பிரிவினரின் தனியலகு சிந்தனைக்கு நியாயமான வேறு காரணங்கள் ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

தமிழர்களின் தரப்பில் முஸ்லிம் களுக்கு ஆதரவாகவும்'அனுதாபமாகவும் நிறையக் கருத்துகளும் கண்ணீரும் சிந்தியாகிவிட்டது.யாழ் வெளியேற்றமும் தவறு என மன்னிப்பும் கேட்டாயிற்று.தமிழினத்தின் தலைவர்களும்'தலைவர்கள் எனக் சொல்லிக் கொள்பவர்களும் மற்றும்பல கவிஞர்களும் முஸ்லிம்களுக்காக அழுத கண்ணீர்த்துளிகள் சிறுசிறு குட்டைகளாக தேங்கிக்கிடக்கின்றன.

ஆனால்முஸ்லிம் தரப்பிலிருந்து தமிழ்மக்கள் மேல் தொடுக்கப்பட்ட படு மோசமான தாக்குதல்களுக்கோ'பெண்கள் மீதான வன்முறைகளுக்கோ எந்தொரு முஸ்லிம் தலைவர்களோ 'அல்லது தனிமனிதர்களோ மன்னிப்புக்கேட்டார்களா?அல்லது கண்டனம் தெரிவித்தார்களா?

கிழக்கு மாகாணத்தின் ஓவ்வொரு குடிமகனிடமும் கேளுங்கள்.முஸ்லிம்களால் தமிழர்களின் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளை கூறுவார்கள்.யாழில் ஐந்துஇலட்சம் முஸ்லிம்கள் இருந்து இருபதாயிரம் தமிழர்கள் இருந்திருந்தால் பத்திரமாக அனுப்பிவைக்கப்டட்டு இருப்பார்களா?உனது மொழியை என் வாயிலிருந்து துப்புவதால் தானே என்னை தமிழன் என்கிறாய்.எனக்கூறும் முஸ்லிம்களின் புத்திசாலிகளே'உங்களுக்கான மொழியை நீங்கள் தேர்வு செய்ய யாரேனும் இங்கு தடை போட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற பதிவுகளைப் பார்க்கும் போது, ஊர்ப் பக்கங்களில் கூறப்படும் ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது!

திருவன் என்பவனது மனைவி இறந்து கிடக்கிறாள்.

எல்லோரும் செத்த வீட்டிற்கு வந்து அழுகின்றார்கள்!

அவர்கள் அழும்போது, தங்கள் வீட்டில் இறந்தவர்களை நினைத்து, அழுகிறார்கள்!

வெறுப்படைந்து போன திருவன் கூறுகின்றான்!

'வருவார் போவார் எல்லாம் அழுகின்றார்கள்!

திருவன் பெண்டிலுக்கு, அழுவாரில்லை!

இதைப் போலத்தான் இதுவும்!

எங்கள் செத்த வீட்டில் தான் அழுகின்றார்கள்!

ஆனால், எங்களுக்காக, இவர்கள் அழுவதில்லை!

ஆனால் திருவனின் சுருட்டும், வெத்திலையும் மட்டும், இவர்களுக்கு வேண்டும்!

அவனது இழப்பைப் பற்றி, இவர்களுக்குக் கவலையில்லை!

காதல்!

உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை என்று நினைக்கிறேன். சிங்களவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் நான் சொன்னேன். அவைகள் சரி என்று சொல்லவில்லை.

எப்படி சிங்களவர்கள் எங்களைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்களோ, அப்படியே நாமும் முஸ்லீம்களை பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றோம் என்று சொல்கின்றேன்.

நான் கூறவந்தது தமிழர்கள் முஸ்லிம்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை. ஆனால் சிங்களவர்கள் தமிழர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்.

முஸ்லிம்கள் பற்றிய எம் உண்மை கருத்துக்கு தமிழர்கள் பற்றிய சிங்களவர்களின் பொய் கருத்தை கொண்டு வந்து நீங்கள் நுழைத்ததால் தான் உங்களை அப்படி கேள்வி கேட்டேன்.

இங்கு புரிந்து கொள்ளாதது நான் அல்ல.

உண்மைக்கு ஆதாரமாக பொய்யை கூறினால் ஒன்றில் கூறுபவர் அந்த பொய்யையும் உண்மை என்று நம்புகிறார். அல்லது எம் உண்மையை பொய் என்று கருதுகிறார் இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்தும் உண்மையை பொய் என்று வாதாடுகிறார் என்று அர்த்தம்.

இங்கு முதலாவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது உங்களுக்கு தெரியாததல்ல. எனவே உங்கள் முடிவு மூன்றாவதை தழுவி உள்ளது.

உங்களுக்கான பதிலை மிகச்சரியான விதத்தில் புங்கையூரான் அண்ணா தந்திருக்கிறார். அவற்றை வாசித்தாவது புரிந்து கொள்ளுங்கள்.

Edited by காதல்

முஸ்லீம்களுக்கு இரண்டு இனங்களாலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு தம்மை பாதுகாக்கின்ற உரிமை இருக்கின்றது.

காதல்!

உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை என்று நினைக்கிறேன். சிங்களவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் நான் சொன்னேன். அவைகள் சரி என்று சொல்லவில்லை.

எப்படி சிங்களவர்கள் எங்களைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்களோ, அப்படியே நாமும் முஸ்லீம்களை பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றோம் என்று சொல்கின்றேன்.

கோமகன்!

நிச்சயமாக பயணக் கட்டுரையை தொடர்வேன். வடக்கின் குரும்பசிட்டியில் இருந்து கிழக்கின் குமுனை வரை பயணித்த அனுபவத்தை நான் சொல்லுவேன்.

சொன்ன சொல்லைக் காப்பாத்துங்கோ சபேசன் பாத்துக்கொண்டிருப்பன் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் விமான சேவையில் ஏறி சிறி லங்கா போனபோது "சில கதவுகளைத் திறக்க முடிவு செய்திருப்பதாக" சபேசன் சொன்னார். "சும்மா திறப்பதற்காகவெல்லாம் திறக்க முடியாது, காரணங்கள் வேணும்" என்று கிருபன் சொன்ன பிறகு சிறி லங்காப் பயணம் தொடர்பான சபேசனின் அரசியல் கட்டுரை அப்படியே தேனீர்க் கடையுடன் நின்று விட்டது. சபேசன் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்த இடைவேளையில் சட்டியைச் சூடாக வைத்திருக்க இப்படி ஏதாவது எழுதுவார். ஒரு தவறும் இல்லை, எழுதட்டும். ஆனால் மிகக் குறைந்த தரவுகளை வைத்துக் கொண்டு பந்தி பந்தியாக எழுதுவது சபேசனின் தனித்திறமை.

என்னுடைய கருத்து என்னவென்றால் "முஸ்லிம் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்று சபேசன் மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர்கள் யாழில் இருந்து வெளியேற்றப் பட முன்னரே தங்களுக்கு என்ன தேவை என்று தீர்மானித்து தொடர்ந்து செயலிலும் காட்டி வந்திருக்கிறார்கள். புலனாய்வுப் போரில் இலங்கை முஸ்லிம்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசியலில், உயர் மட்டத்தில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்கள் தமிழர்கள் மீதான 30 வருடகால தீவிர இன அழிப்பைத் தட்டிக் கேட்கக் கூட இல்லை. 2 ஆண்டுகள் முன்பு கொழும்பில் காசுக்காகத் தமிழர்கள் கடத்தப் பட்ட போது முஸ்லிம் வர்த்தகர்களின் கூட்டத்தைக் கூட்டிய அலவி மௌலானா "உங்கள் வதிவிடங்களுக்கு வீடியோ கமராக்கள் பொருத்தி உங்களப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்றார். சில நாட்களின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட போது "கடத்தப் பட்டவர்கள் எனப்படுவோர் உண்மையில் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள், கடத்தல்கள் இல்லை" என்றார். இப்ப கூட ஜெனீவா போன முஸ்லிம் தலைவர் ஹக்கீம் அரசின் இன அழிப்பை நியாயப் படுத்தினார். ஹக்கீம் நீதி அமைச்சர்-நீதி அமைச்சின் கீழ் தான் சிறைச்சாலைகள். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை ஹக்கீமின் இறப்பர் முத்திரை தான் "no date" அடித்து பல்லாண்டுகளாகச் சிறையில் வைத்திருக்கிறது.

சபேசன்: நீங்கள் மாறுங்கள் "வளருங்கள்", ஆனால் வளர்ச்சியின் முக்கியமான பகுதி வரலாற்றப் புரிந்து கொள்வதாகும். கலைக்களஞ்சிய வரைவிலக்கணங்களை அப்படியே மனனம் செய்து வாந்தி எடுப்பதல்ல!

சபேசன் அண்ணா,

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர வேண்டும் என்று முஸ்லிம்களின் இணையதளம் ஒன்றில் எழுதி பாருங்கள். உங்களுக்கு நல்ல மரியாதை தந்து அனுப்புவார்கள். :lol: வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்ற மிகப்பெரும் மரியாதை அதுவாக தான் இருக்கும். :D

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா

அண்ணமார்களே நீங்க இப்ப இலங்கையில் இல்ல என்கிறது மட்டும் தெளிவா தெரியுது :rolleyes: :rolleyes: :rolleyes:

நீங்க அவங்களுக்கு தனி அலகு குடுக்கிறதோ..நல்லாயிருக்கே கதை

அவங்க நல்ல புளுத்திட்டாங்கோ இப்ப நீங்க தேர்ட் மஜோரிட்டி (theird majority)

உங்களுக்கு அலகு அவங்க தான் தரனும்.... :lol: :lol: :lol:

முஸ்லிம் மாக்கனுகள் பாதுகாப்பாய் உணரவில்லையோ ...!

சிங்களவன் கைவைக்கும் போதே தெரியலை நாம இனி டம்மி பீசு

அவனுகள் டக்கர் பீசுன்னு ...

ஏன் அரசாங்கமே சனத்தொகை கணக்கை வெளியில விட பின்னடிக்குது ...மேட்டர் அங்க தான் இருக்கு

விட்டு பாருங்கோ ஒரு 5 years

சிங்களவனுக்கே கண்ணக்கட்டும்...

சிறிலங்காவை முஸ்லங்கா ஆக்கி விடுவானுகள் :wub: :wub:

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலில் நான் தமிழர்களின் வாக்குமூலத்தைத்தான் கேட்பேன். சிங்கள அரசு சொல்வதை அல்ல. அதே போன்று காத்தான்குடியில் என்ன நடந்தது என்று முஸ்லீம்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.

அது பொய், இது உண்மை என்று தாக்குதல் நடத்தியவன் சொல்வதை விட, தாக்கப்பட்டவன் என்ன சொல்கின்றான் என்பது முக்கியமானது.

இந்த விவாதம் தனி அலகு பற்றி சுழல்வதை நான் அவ்வளவாக விரும்பவில்லை. தமிழீழம் என்கின்ற ஒன்று அமையுமாக இருந்தால் முஸ்லீம்களுக்கு தனி அலகு அவசியம் என்பதை மட்டுமே நான் சொன்னது. தமிழீழம் அமைவதற்கான சாத்தியங்கள் மிகத் தொலைவிற்கு சென்று விட்ட நிலையில், தனி அலகு பற்றி தொடர்ந்து பேச வேண்டி வந்தது நான் எதிர்பாராத ஒன்று.

இனங்கள், தேசியங்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதை விளக்கி அதன் அப்படையில் முஸ்லீம்களும் அதற்கான தகமைகளை கொண்ருக்கிறாகள் என்பதை விளக்குவதே என் நோக்கம்

புதிதாக ஒரு சிறிய மடிக்கணணியில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதில் எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது. சற்றுப் பொறுங்கள். மீண்டும் தொடர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கோமகன் கேட்ட திரியை முடியுங்கள்

பாவம்

அவர் இனி அழுதிடுவார் போலுள்ளது.. :D

நன்றி.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இன்றைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. தமிழர் முஸ்லீம் விரோதத்தின் காரணமாக இந்தப் பிரிவு நிரந்தரம் ஆகி விட்டது.

இன்றைக்கு வடக்குக்கு உரிமைகள் வழங்குவது பற்றி மெது மெதுவாக பேச்சுக் கிளம்புகிறது. தமிழீழப் போராட்டத்திற்கு பெரும் உயிர்க்கொடைகளை தந்த கிழக்கு வாழ் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி பெரும் கவலை கொள்கிறேன்.

பிள்ளையானுக்கு கிழக்கின் முதலாவதும் கடைசியுமான தமிழ் முதலமைச்சர் என்கின்ற பெருமை கிடைத்தாலும் கிடைக்கும

எமக்கு கிழக்கு வேண்டும் என்றால், முஸ்லீம்களோடு இணைந்து போவதுதான் ஒரே வழி. இணைவதற்கு தேவையானது இரண்டு சமூகங்களும் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றின் உரிமையை மற்றைய சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

கவுசல்யன்கள் தேவையான நேரத்தில் கருணாக்கள் நிறைந்திருப்பது கவலை அளிக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாவது சரியான பாதையில் சென்று இரண்டு இனங்களையும் ஒற்றுமைப்படுத்தும் என்று நம்புவோம்.

Edited by சபேசன்

தேசிய தலைவர் சொன்னது போல் தமிழ பேசும் அனைவருக்கும் உரிய தேசம் தமிழீழம். அங்கே யாரும் வாழலாம், சாதி,மதம் அப்பாற்பட்டது. மொழிக்கு தான் முன்னுரிமை. தமிழ் மொழி பேசுபவர்கள் சேர்ந்து வாழ முடியாவிட்டால் அல்லது விருப்பம் இல்லை என்றால் சிங்கள தேசத்தில் வாழலாம்.

இது இந்து, கிறிஸ்தவம் ,இஸ்லாம் எல்லாருக்கும் பொருந்தும்.

வடக்கு ,கிழக்கு தமிழர் தேசம் முஸ்லீம்களும் தமிழரே அவர்களும் தமிழராக தான் கணிக்கப்படுவார்கள் .தாய் மொழி எது என்றால் தமிழ் தான், சிங்கள முஸ்லீம்கள் கிடையாது.

எனவே தீர்வின் போது ஒன்றாகதான் சேர்ந்து நிற்கனும்.

எரித்திரியா பிரிந்த போது, முழு எரித்திரியர்களும் எரித்திரியாவுக்குள் வந்து விடவில்லை ,எரித்திரிய்ர்கள் பலர் எத்தியோப்பியாவில் தங்கி விட்டார்கள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று. பிற்பாடு எத்தோப்பிய அரசால் அவர்களது சொத்துகள் எல்லாம் பறிக்க பட்டு எரித்திரியாவுக்கு கலைக்க பட்டார்கள்.. இது எரித்திரியாவுக்கு போகாமல் எத்தியோப்பியாவில் இருந்து எல்லாவற்றையும் இழந்து அகதியாக நோர்வே வந்த எனது எரித்திரிய நண்பியின் வாக்கு மூலம்.

அவரவர் எங்கு இருப்பது என்று விரும்பிய படி முடிவு எடுக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.