Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நோக்கம் அதுவல்லவே!

சபேசன் உங்களுடைய அதிஉன்னத நோக்கம் என்ன?எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து பதில் எழுதுங்கோ....இன்றைய சூழலில் ஒன்றுபட்ட சிறிலங்காவில் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் நேசக்கரம் நீட்டி ஒற்றுமையாகவும் ,தமிழர்களும் சிங்களவருக்கு நேசக்கரம் நீட்டி ஒற்றுமையாகவும் வாழலாம் தானே? சிங்களவருக்கு எதிராக நாம் முஸ்லிம்களுடன் சேர்ந்து ஏன் போராட வேண்டும்?

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புத்தன்!

தற்போது உள்ள நிலையில் நாம் எல்லோருக்கும் நேசக்கரம் நீட்டலாம். ஆனால் நாம் எதை நோக்கிப் போகிறோம் என்பதைப் பொறுத்து எமது உறவுகள் தீர்மானிக்கப்படும்.

வடக்கு தனிமாகாணம் ஆகவும், கிழக்கு தனி மாகாணம் ஆகவும் தொடர்ந்து இருக்கலாம் என்றால், நாம் சிங்களவர்களையும் முஸ்லீம்களையும் ஒரே தூரத்தில் வைத்திருக்கலாம்.

ஆனால் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணமோ, தனிநாடோ வேண்டும் என்றால் முஸ்லீம்களின் ஒத்துழைப்பு அவசியமானது. அதை எப்படிப் பெறுவது என்பது பற்றி எமது நிகழ்ச்சி நிரல் அமைய வேண்டும்.

முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ளே இருந்து வரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

ஒரு தமிழனாக இருந்து கொண்டு முஸ்லீம்கள் செய்த தவறுகளை விமர்சித்துக் கொண்டிருந்தால், அது தற்போது சீர்கெட்டுப் போயிருக்கும் உறவிற்கான காரணமாகவும், அதை நியாயப்படுத்துவதற்கான விளக்கமாகவும்தான் இருக்கும்.

என்னுடைய நோக்கம் அதுவல்லவே!

விடுதலைப் புலிகள் செய்த தவறுகளை விமர்சிப்பவர்கள் உண்மையான விடுதலைப் புலிகளின் உள்ளே இருந்து வரவேண்டும் என்றும் விரும்புங்கள்.றோட்டல போனவனும் இணையத்தில பேப்பரில ஆஞ்சவையும் வேண்டாம்.

Edited by Donkey

arujn . இந்தமாதிரி வெட்டி கதை அளக்காமல் எங்களுடைய பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை சொல்லும்

, இதை விட்டிட்டு சும்மா விமர்சனம் செய்யவேண்டாம். கைகட்டி பார்த்திராமல் காலத்தில போராடின போராளிகளை, விமர்சிக்கும் அல்லது பேசும் உரிமை உமக்கில்லை .

சுயநலம் பாராது போராட்டத்தை ஆரம்பித்து உலக நாடுகளை நடுங்க வைத்தவர் எங்கட தேசியத்தலைவர் .

அவரினை இவர்கள் நேரடியாக மோதி வெல்ல முடியாமல் சதியால தானே போராட்டத்தை தொடர முடியாமல்

செய்தார்கள் .

இந்த விளக்கமே உமக்கு போதும். மூடிட்டு இரும் .

  • தொடங்கியவர்

யஸ்ரின்,

முஸ்லீம்களும் தமிழர்களில் யாரும் தமக்காகப் பேசுவது இல்லை என்றுதான் நினைக்கிறார்கள். சிறிலங்காப் படையின் கட்டளையின் கீழ் செயற்படும் முஸ்லீம் துணைப்படையினர் தமிழர்களை கொலை செய்ததை கண்டித்த முஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள்.

இரு தரப்பிலும் இரண்டு இனங்களின் ஒற்றுமை பற்றி சிந்திக்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள். இனவாதம் பிடித்த மற்றவர்களால் அவர்களின் குரல்கள் அமுக்கப்படுகின்றன. வெறுப்பு மிக்க குரல்களே உரத்து ஒலிக்கின்றன.

டொங்கி,

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் ஒன்றே என்று கோசம் போட்டவர்கள் நாங்கள். விடுதலைப் புலிகளின் வெற்றிகளுக்கு அனைத்து தமிழர்களுக்கும் எப்படி பங்கு இருக்கிறதோ, அப்படியே தோல்வியிலும் பொறுப்பு இருக்கிறது.

தமிழர்கள் தரப்பில் போராடியவர்கள் செய்தவைகளுக்கு ஒட்டு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். புலிகள்தான் செய்தார்கள், அவர்கள்தான் பேச வேண்டும் நாம் எமது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி சபேசன்.

என்னுடைய கொள்கைகளுக்கு சாதகமாக பேசும் இன்னொருவரை காண்பது மிகவும் மகிழ்ச்சிதருகிறது.

இதற்க்காக தசாப்தக்காலம் காத்திருந்திருக்கிறேன்.

இன்று நிலமை முன்னேறியுள்ளது. ஒரு தசாப்தங்களுக்குமேலாக இதே கருத்துக்களைச் சொல்லி நிறைய கலெறி பட்டவன் நான். ஒருமுறை மட்டக்களப்பில் என்னை மண்வெட்டியோடு கிரான் சுடலைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்பு இக்கருத்துக்களை யாழில் எழுதும்போது எதிர்ப்பு மிக மோசமாக இருக்கும். சபேசன் என்ற பெயரில்கூட ஒருவர் என்னை விமர்சித்தது ஞாபகம். உங்களைப்போல பலர் தமிழரின் மனச்சாட்ச்சியாகவும் முன்னணி ஆய்வாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் முன்னிலைப் படவேண்டுமென்று நினைத்தேன். என் கனவுகள் வீண்போகாது என்பதை உணர்கிறேன். இன்னும் போதிய நேரமின்மை விரிவான பதிலை தாமதமாக்குது. - வ.ஐ.ச.ஜெயபாலன்

கவிஞரே, உங்கள் கொள்கை, சரியானதோ அல்லது பிழையானதோ என்பதற்கு வரலாறு பதில் கூறட்டும்!

ஆனால், உங்கள் கொள்கை, எனக்குத் தெரிந்த காலத்திலிருந்து எந்த விதத்திலும், மாறியதில்லை! நீங்கள் மனிதர்களை, மனிதர்களாகப் பார்க்க முயற்சிக்கின்றீர்கள்!

அதனால் தான், ஒரு சிங்களவன் இறக்கும் போதும், அல்லது ஒரு தமிழன் இறக்கும் போதும், அல்லது ஒரு முஸ்லிம் இறக்கும்போதும், உங்களால் ஒரே மாதிரியாக அழ முடிகின்றது!

இங்கே விவாதிக்கப் படும் பிரச்சனை, மனிதாபிமானம் பற்றியதல்ல!

ஒரு இனம், இன்னொரு இனத்தை அடக்கி, ஒடுக்கி ஒரு மனித அவலத்தையே நடத்தி முடித்துள்ளது! இவ்விடத்தில் மனிதாபிமானம் செத்துப் போய் நீண்ட நாட்களாகி விட்டது!

உங்கள் மனிதாபிமானம், இன்னொரு இனத்தின் அழிவுக்குத் துணை போகுமெனில், அந்த மனிதாபிமானத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதே, எனது கருத்தாகும்!

தமிழனின் அழிவுக்காகத், தமிழனைத் தவிர யாருமே அழுததில்லை! இந்தத் தனித்துவம் மிக்க, சமூகம், எரிகிற வீட்டில் தடி புடுங்கியதே தவிர, வேறு எதுவும் செய்ததில்லை! யாராவது உங்களைப் போல, ஒன்றிரண்டு பேர் அழுதிருக்கலாம்!

தமிழர்கள் தரப்பில் போராடியவர்கள் செய்தவைகளுக்கு ஒட்டு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். புலிகள்தான் செய்தார்கள், அவர்கள்தான் பேச வேண்டும் நாம் எமது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.

அத்துடன், முஸ்லீம் மதப்பிரிவினர் செய்தவைகளுக்கும், செய்பவைகளுக்கும், செய்யப்போபவைகளுக்கும் ஒட்டு மொத்த தமிழர்களே பொறுப்பேற்கவேண்டும்? ஐயோ ஆனால் பெளத்தர்கள் பாவமே, உங்களுக்கு புத்தபெருமான் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை? பெளத்தர்கள் செய்தவைகளுக்கும், செய்பவைகளுக்கும், செய்யப்போபவைகளுக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையே பொறுப்பேற்கச்சொல்லி கேட்கலாமே!

யஸ்ரின்,

முஸ்லீம்களும் தமிழர்களில் யாரும் தமக்காகப் பேசுவது இல்லை என்றுதான் நினைக்கிறார்கள். சிறிலங்காப் படையின் கட்டளையின் கீழ் செயற்படும் முஸ்லீம் துணைப்படையினர் தமிழர்களை கொலை செய்ததை கண்டித்த முஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள்.

இரு தரப்பிலும் இரண்டு இனங்களின் ஒற்றுமை பற்றி சிந்திக்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள். இனவாதம் பிடித்த மற்றவர்களால் அவர்களின் குரல்கள் அமுக்கப்படுகின்றன. வெறுப்பு மிக்க குரல்களே உரத்து ஒலிக்கின்றன.

டொங்கி,

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் ஒன்றே என்று கோசம் போட்டவர்கள் நாங்கள். விடுதலைப் புலிகளின் வெற்றிகளுக்கு அனைத்து தமிழர்களுக்கும் எப்படி பங்கு இருக்கிறதோ, அப்படியே தோல்வியிலும் பொறுப்பு இருக்கிறது.

தமிழர்கள் தரப்பில் போராடியவர்கள் செய்தவைகளுக்கு ஒட்டு மொத்த தமிழர்களும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். புலிகள்தான் செய்தார்கள், அவர்கள்தான் பேச வேண்டும் நாம் எமது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.

இந்த திரியில் இப்படி எழுதுங்கோ இன்னொரு திரியில் புலிகள் மக்களுக்கு சொல்லவில்லை என்றும் எழுதுங்கோ.

  • 2 weeks later...

அமைதியா இருக்கிற திரியை திரும்ப கிளறி விடுறன் என்று நினைக்காதையுங்கோ. சபேசன் அண்ணாவும் ஜெயபாலன் ஐயாவும் இதனை வாசிக்க வேண்டும் என்று நினைத்து இங்கு இணைக்கிறேன்.

கூட்டமைப்பின் காணி அபகரிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளவில்லை – முஸ்லிம் காங்கிரஸ்

அரசாங்கம் பலவந்தமாக மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களுக்கு ஆதரளிக்கவில்லை என ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காணி அபகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸூம் இணைந்து கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும்எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்அவற்றுக்கு அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் பசீர்சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

யாழ் அன்பு அண்ணா இணைத்த இந்த திரியின் link.

http://www.yarl.com/...howtopic=104227

கிளிநொச்சியில் இளம் பெண்களிடம் சேஷ்டை புரியும் முஸ்லீம்கள்!

கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார்.

மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களிடம் ஜ.லவ்.யூ என்று நடுவீதியிலேயே கூறி வேடிக்கையாக விளையாடி வருகின்றனர்.

இதனால் யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிப்படையலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

தமிழர்களது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் இவ்வாறு இவர்கள் செயற்படுவது குறித்து பொது மக்கள் மிகவும் கவலை வெளியிட்டதோடு இவற்றை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னவன் அண்ணா இணைத்த இந்த திரியின் link.

http://www.yarl.com/...howtopic=104208

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான முக்கிய விடயங்களில் கட்சியின் அதி உயர் பீடமே தீர்மானம் எடுக்கும்எனவும், அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவம் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் உயர்பீடம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றுதான் கூறியுள்ளார்..! :huh: முடிவு எடுத்தவுடன் முழுவீச்சில் நிலமீட்புப் போராட்டத்தில் முஸ்லிம் சகோதரர்களும் இணைந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது..! :icon_idea:

:lol: :lol:

முன்கூட்டியே இங்கு போட்டு வைத்தால் தானே அவர்கள் முடிவெடுத்து நிலமீட்பு போராட்டத்தில் இணைந்து கொண்ட பின் அதை காட்டி சபேசன் அண்ணாவிடம், ஜெயபாலன் ஐயாவிடம் மன்னிப்பு கேட்கலாம். :icon_idea:

அவர்கள் இதற்கு மட்டும் இப்பொழுதே முடிவெடுத்து விட்டார்கள். :icon_idea:

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்அவற்றுக்கு அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் பசீர்சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

SL minister Badurdeen diverts Indian aid to his supporters in Mannaar

[TamilNet, Saturday, 23 June 2012, 23:29 GMT]

Sri Lankan minister of Industries and Trade, Rishard Badurdeen, a politician behind many controversies in Mannaar, has recently instructed the civil officials in Mannaar to divert the humanitarian aid from India, intended to war-affected fishermen in Mannaar, to his supporters in the district, according to reports from Mannaar fisheries sector sources. Mr Badurdeen has given a new list of 175 names as beneficiaries of the aid. The list prepared by Badurdeen includes only names of 12 Tamils, who are his supporters. Names of genuine fishermen are not included in his list.

A consignment of fishing boats, each worth about 600,000 rupees, fishing nets and outboard motor engines with 15 horsepower, which have been donated by India to be distributed among 200 fishermen in Mannaar.

About two hundred beneficiaries are recommended by more than forty Fisheries Co-operative Societies in the district and approved by the Indian High Commission in Colombo as beneficiaries of the aid.

However, these materials are stored in the office of the Musali DS office and District Fisheries Department office.

The SL minister functions as the top most colonial agent in Mannaar in implementing its colonial strategy of divide and rule, which had been stalemated by the Eezham Tamils armed struggle throughout the past three decades.

Recently, Rishard Badurdeen issued veiled threats, during a speech in SL parliament, against Rt. Rev. Dr. Rayappu Joseph, the Catholic Bishop of Mannaar, evoking strong protests from Catholics as well as Muslims in the district to humanitarian activists around the globe.

Badurdeen, who broke away from the Sri Lanka Muslim Congress and joined the SLFP of Mahinda Rajapaksa, is behind creating ethnic tensions by disturbing the resettlement pattern not only in Mannaar, but also in the entire Vanni region, cooperating with the military governor of colonial Colombo in North, Maj Gen (retd) GA Chandrasiri, according to civil officials.

Several tractors from a consignment donated by the Government of India last year to farmers in Ki'linochchi and Mullaith-theevu had been diverted to Sinhala farmers in the Anuradhapura District.

http://tamilnet.com/art.html?catid=13&artid=35320

.

-Sorry.

** Reason for Edit: Extreme Racism.

.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி real time இல நிக்க வைச்சுக் கேள்வி கேட்டா உடனே ஒழிஞ்சு கொள்ளுவார்கள். செய்தி பழசான பிறகு "இதுக்கு ஆதாரம் இருக்கா?" எண்டு கேட்டுக் கொண்டு திரும்ப வருவார்கள்.

மீண்டும் அழைக்கிறோம்

சபேசன்! சபேசன்!! சபேசன்!!

பொயற்! பொயற்!! பொயற்!!! :lol:

அரசியல் என்றால் என்ன?

சிங்களவர் ,தமிழர்,முஸ்லிம்கள் எல்லோரும் அவர் அவர் தமக்கு தெரிந்த தமக்கு சாதகமான அரசியலை தான் செய்ய முனைகின்றார்கள் ,செய்கின்றார்கள்.

அவ்வபோது நடைபெறும் சில சம்பவங்களை வைத்து ஒரு இனத்தையே தூற்றுவதும் அப்பவே சொன்னேன் பார்த்தியா என பின்னூட்டம் விட்டு தாங்கள் சொல்வது சரி என நிரூபிக்க நினைப்பது அரசியல் அறியாமையே.

இப்படி நாலு சம்பவங்களின் அடிப்படையில் ஒரு இனத்தை எடை போடுவோமாயின் புலம் பெயர்ந்த எந்த நாட்டிலும் தமிழனுக்கு நிரந்தர வசிப்பிடம் கொடுத்திருக்கமட்டார்கள்.

அரசுகளுடன் நின்று தமக்கு வேண்டியதை சாதிப்பதும், தீர்வு என்று வரும் போது தங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்கும் நிலையில் தான் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் ,ஏனெனில் அவர்கள் சிங்கள ,தமிழ் தலைவர்களுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கு.

முதலில் எங்கள் நிலைப்பாடு என்ன என்று நாட்டில் இருக்கும்,புலம் பெயர்ந்த எமது தலைவர்களை கேட்டுசொல்லுங்கள்.சம்பந்தன் சிங்க கொடி ஏற்றுகின்றார்.கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம்? என்கின்றார் ,புலம் பெயர்ந்தவன் ஆளுக்கு ஒரு அமைப்பு வைத்து அவனன் விரும்பியபடி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் தலைவர் கூட முஸ்லிம்களை வெளியேற்றி விட்டு பின் கக்கீமை கூப்பிட்டு கதைத்தவர் ,பத்மநாபாவை கொலை செய்துவிட்டு இந்தியன் ஆமியுடன் நின்று முழுக்கொலை செய்த மண்டையன் சுரேசை கூட்டமைப்பில் சேர அனுமதித்தவர் .இதுதான் அரசியல் .

இதைத்தான் முஸ்லிம்களும் செய்கின்றார்கள் ,தாங்கள் என்ன செய்யப்போகின்றோம் அவர்கள் எவருக்கும் சொல்ல தேவையில்லை.அதை செய்துகொண்டிருப்பார்கள்.

அண்ணே, இது "உலகம் அடிபட்ட" உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேல்லையா? :D

அண்ணே, இது "உலகம் அடிபட்ட" உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேல்லையா? :D

மற்றவர்கள் தமிழருக்கு இழைக்கும் கொடுமைகள் தினம் தினம் வந்தாலும் அர்ஜுன் அண்ணா அவ்வப்போது தான் வாசிக்கிறாராக்கும்.

இதுவே தமிழர்கள் மற்றவர்களுக்கு ஏதும் செய்ததாக தலைப்பை கண்டால் தூங்காமல் இருந்து வாசித்து முடிப்பார். :)

Edited by காதல்

காதல் உங்கள் சிந்தனை நிலை அப்படி.எமது கலாசாரமும் அப்படிதான் எம்மை வளர்த்து விட்டிருக்கு.

தன் பிள்ளை எத்தனை பிழை செய்தாலும் அதை ஏற்காமல்,சேர கூடாதவனுடன் சேர்ந்ததால் தான் என்று நண்பர்களை திட்டுவதுதான் எமது பெற்றோரின் மனப்பாங்கு.

சர்வதேசத்தில் எமக்கான நண்பர்களை ஒரு முறை திரும்பி பாருங்கள்.

1.இலங்கையில் சிங்களவன்,முஸ்லிம் ,மலையக தமிழர்கள்.

2.தமிழ் நாட்டில் தி.மு.க,அ.தி.மு. - இந்தியா

3. ஐரோப்பிய யூனியன்,இணைத்தலைமைகள் நாடுகள்,கனடா ,அமெரிக்கா ஏன் முழு சர்வதேசமும்.

இவர்கள் எல்லோருமே பிழையானவர்கள்,கூடாதவர்கள் .நாங்கள் எப்போதுமே சரியானவர்கள் நல்லவர்கள்.

இப்படியே மாரி தவக்ககைகள் மாதிரி எமது ஊடங்களில் மட்டும் கத்திவிட்டு உயிரை விடுவோம் .

காதல் கோவிக்க வேண்டாம் முடிந்தால் ஒரு எமது அரசியல் தெரிந்த பிறநாட்டு அரசியல்வாதியை அல்லது ஊடகவியலாளரை சந்தித்து எமது அரசியலை கதைத்துப்பார்க்கவும் சிறிதாவது உண்மைகள் விளங்கும்.

இதற்கு நல்ல உதாரணம் மகிசா வெளியேற்றப்பட்டதற்கு இப்ப எங்கட ஆட்கள் ஜட்சை பிழை பிடிக்க தொடங்குகின்றோம்.கிடைத்தது காணும் என்று அந்த பிள்ளையை வாழ்த்தி வரவேற்பதைவிட்டு மனோவை போட்டாத்தான் சரி என்று தொடங்கினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

Edited by arjun

காதல் உங்கள் சிந்தனை நிலை அப்படி.எமது கலாசாரமும் அப்படிதான் எம்மை வளர்த்து விட்டிருக்கு.

தன் பிள்ளை எத்தனை பிழை செய்தாலும் அதை ஏற்காமல்,சேர கூடாதவனுடன் சேர்ந்ததால் தான் என்று நண்பர்களை திட்டுவதுதான் எமது பெற்றோரின் மனப்பாங்கு.

சர்வதேசத்தில் எமக்கான நண்பர்களை ஒரு முறை திரும்பி பாருங்கள்.

1.இலங்கையில் சிங்களவன்,முஸ்லிம் ,மலையக தமிழர்கள்.

2.தமிழ் நாட்டில் தி.மு.க,அ.தி.மு. - இந்தியா

3. ஐரோப்பிய யூனியன்,இணைத்தலைமைகள் நாடுகள்,கனடா ,அமெரிக்கா ஏன் முழு சர்வதேசமும்.

இவர்கள் எல்லோருமே பிழையானவர்கள்,கூடாதவர்கள் .நாங்கள் எப்போதுமே சரியானவர்கள் நல்லவர்கள்.

இப்படியே மாரி தவக்ககைகள் மாதிரி எமது ஊடங்களில் மட்டும் கத்திவிட்டு உயிரை விடுவோம் .

காதல் கோவிக்க வேண்டாம் முடிந்தால் ஒரு எமது அரசியல் தெரிந்த பிறநாட்டு அரசியல்வாதியை அல்லது ஊடகவியலாளரை சந்தித்து எமது அரசியலை கதைத்துப்பார்க்கவும் சிறிதாவது உண்மைகள் விளங்கும்.

அர்ஜுன் அண்ணா, நாங்கள் எப்போதும் சரியானவர்கள் என்று நான் சொல்லவில்லை.

தமிழர்கள் சில பிழைகள் விட்டவர்கள் என்பதற்காக மற்றவர்கள் விடும் பிழைகளை பிழை இல்லை சரி என்று சொல்ல முடியாது. நீங்கள் கூறிய எவரும் எமது நாடு, எமது மக்கள் விடயமாக தவறு விடவில்லை என்று உங்களால் கூற முடியுமா?

எப்பொழுதும் சரியாக நடக்கும் ஒருவன் தான் மற்றவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்ட முடியும் என்று நீங்கள் நினைத்தால் உலகத்தில் எவருக்கும் அந்த தகுதி இருக்காது.

இங்கு எந்த ஒரு நாடு எமது இன அழிப்பில் பங்கு கொண்டதோ அந்த நாட்டு அரசியல்வாதிகள் முடிந்தவரை தம்மில் பழி வராமல் தமது நாட்டை நியாயப்படுத்தி எம்மை பழிசுமத்தியும் தான் கருத்து கூறுவார்கள்.

முடிந்தால் நீங்கள் switzerland அரசியல்வாதியிடம் எமது நாட்டு நிலைமை பற்றி கேட்டுப்பாருங்கள். அவர்கள் வெளியில் எதுவும் சொல்வதில்லையே தவிர எமது பிரச்சினை தெரிந்தவர்கள், எம்மக்களுக்கு ஆதரவு தருபவர்கள்.

இதற்கு நல்ல உதாரணம் மகிசா வெளியேற்றப்பட்டதற்கு இப்ப எங்கட ஆட்கள் ஜட்சை பிழை பிடிக்க தொடங்குகின்றோம்.கிடைத்தது காணும் என்று அந்த பிள்ளையை வாழ்த்தி வரவேற்பதைவிட்டு மனோவை போட்டாத்தான் சரி என்று தொடங்கினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

இது விடயத்தில் மற்றவர்கள் எதை வைத்து பிழை பிடித்தார்களோ தெரியாது. ஆனால் நான் ஜட்சில் பிழை பிடித்ததன் காரணம் அவர்கள் ஜட்ச் பண்ண வந்த பின்னர் மருத்துவ காரணங்களை ஒரு காரணமாக வைத்து உரியவர் மேல் இரக்கப்பட்டு அவருக்கு சலுகை அளித்ததன் காரணமாக.

அன்று அந்த சிறுவனுக்கு பாட முடியாமல் இருந்ததற்கு இவர்கள் இரக்கப்பட்டால் அன்று எவரையும் வெளியேற்றாமல் இன்னொருநாள் மீண்டும் போட்டியை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த சிறுவன் மேல் கொண்ட இரக்கத்தால் மகிஷாவை வெளியேற்றினார்கள்.

இத்தவறு இங்கு மட்டுமல்ல. jodi no 1 season 4 இலும் நிகழ்ந்தது. எவ்வளவோ நாள் மற்றவர்களை விட நன்றாக நடனம் ஆடியும் பிரேம்கோபால் பிரேமினிக்கு பரிசு கொடுக்காமல் விட்டவர்கள் பிரேமினி accident பட்டு இருந்த பொழுது ஆட முடியாமல் கஷ்டப்பட்டு ஆடிய பொழுது அவர்களை விட வேறு சிலர் அன்று நன்றாக நடனம் ஆடியும் பரிசு பிரேம்கோபால் பிரேமினிக்கு கொடுக்கப்பட்டது.

வேறு நாட்களில் கிடைத்திருந்தால் அவர்கள் நடனத்திற்கு கிடைத்த பரிசாக நினைத்து அவர்களும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

அதே நிகழ்ச்சியில் வேறு சிலருக்கும் அப்படி நடந்தது. இதைவிட வேறு உதாரணம் உங்களுக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். காணொளி தேவை என்றால் கூறுங்கள். இங்கு இணைக்கிறேன்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் காய்ச்சலின்ர குணங்குறி அர்ஜூனுக்கு மற்ற இடங்களிலும் வருகுது "மனோவைப் போட்டுத் தள்ளினால்..." எண்டு எழுதினது இவர். நடுவர்களின் முடிவை ஆட்சேபித்த யாரும் இப்படி நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இதுவும் இப்ப ஒரு பெஷன் போல. ஒருவன் சாதாரணமாகக் குறை சொன்னால் உடனே ஒரு பூதக் கண்ணாடி கொண்டு வந்து பெருப்பித்துக் காட்டுறது. எனக்கு அடிக்கடி சந்தேகம் வருகுது இங்க யார் இன்னும் வடலிக்க stuck ஆகி இருக்கிறது எண்டு!

  • தொடங்கியவர்

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

எதற்கும் இந்த இணைப்பையும் படியுங்கள். யாருமே கருத்து எழுதாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

http://www.yarl.com/...howtopic=103575

  • தொடங்கியவர்

முஸ்லீம் காங்கிரஸ் தமிழ்க் கட்சிகள் நடத்துகின்ற நிலவுரிமைப் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது பற்றி நான் ஆச்சரியப்படவில்லை.

அரசில் உள்ள தமிழ் கட்சிகள் எப்படி இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றவில்லையோ, அப்படியே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பங்குபற்றவில்லை.

எப்படித் தமிழர்கள் தங்களை நேரடியாகப் பாதிக்காத போராட்டங்களில் பங்கு கொள்வதில்லையோ அப்படியே முஸ்லீம் மக்களும் பங்கு கொள்ளவில்லை. உ+ம்: தம்புள்ள பள்ளிவாசல் போராட்டத்திற்கு வன்னியிலோ, யாழிலோ யாரும் போராடவில்லை.

மலையகத் தமிழர்கள் ஒரு பிரச்சனை என்று போராடினாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்கள் அதற்காக போராடுவது இல்லை.

இங்கே முஸ்லீம்களை மட்டும் குறை சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படித் தமிழர்கள் தங்களை நேரடியாகப் பாதிக்காத போராட்டங்களில் பங்கு கொள்வதில்லையோ அப்படியே முஸ்லீம் மக்களும் பங்கு கொள்ளவில்லை. உ+ம்: தம்புள்ள பள்ளிவாசல் போராட்டத்திற்கு வன்னியிலோ, யாழிலோ யாரும் போராடவில்லை.

இப்படி டக்கு டக்கென்று பாயிண்ட் கொண்டுவாறதுக்கு நீங்கள் ஒரு சிங்கன்தான். வருத்தில இருந்தாலும் அப்டேட்டதான் இருந்திருன்கின்ரீர்கள்-

நானும் இவங்கள், உலமாகரன் பேய்கதை கதைக்கிறான் என்றால் - அது உண்மையிலேயே பேய்கதைதான்- ஆனால் நீங்கள் சொல்லுகிற ஞாயம் ஓகே...

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தமிழர்கள் தங்களை நேரடியாகப் பாதிக்காத போராட்டங்களில் பங்கு கொள்வதில்லையோ அப்படியே முஸ்லீம் மக்களும் பங்கு கொள்ளவில்லை. உ+ம்: தம்புள்ள பள்ளிவாசல் போராட்டத்திற்கு வன்னியிலோ, யாழிலோ யாரும் போராடவில்லை.

இதிலிருந்து தெரிவது யாதெனில், தமிழர்களும், தமிழ்பேசும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட முடியாது என்பதுவாகும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.