Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரைகட்டி வாழ்வாரே வாழ்வார்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வேலை செய்கிற இடத்தில ரை கட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை, கட்டினால் அடக்க ஒடுக்கமாக கோட்டுக்க நிக்க வேண்டுமாம்-ரை மூலம் கிருமி தோற்று எற்படும் எண்டு...ஆனால் என்னிடம் அந்தகாலத்து ரவுண்டு கலர் பனியன் இருக்கு அது போடுவது என்றால் ரை கட்ட்டத்தன் வேண்டும்.. :)

இங்கயும் டாக்குத்தர்மார் நோமலாய் ரை கட்டுவினம். ஆனால் அனேகமா "smart casual" தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த இணைப்பில் போய் பார்த்தேன் . அந்தப் பதிவு கலைஜன் எனபவரால் 2007 ம் ஆண்டு போடப்பட்டுள்ளது . அந்த இணைப்பை நீங்கள் இங்கு இணைக்கின்றீர்கள் . நீங்களும் கலைஜனும் ஒன்றா ? விளக்கம் தரமுடியுமா ?

மச்சான் கரும்பு Jul 17 2010 03:33 PM மாப்பிள்ளை மச்சான் Oct 28 2009 03:51 AM முரளி மாப்பிள்ளை Feb 26 2009 07:23 PM

கூல் கோம்ஸ் அண்ணா. கலைஜன், மச்சான்/முரளி/கரும்பு/மாப்பிளை எல்லாரும் "ஒன்று விட்ட" அண்ணன் தம்பிகள். அவர் உங்களை அவமானப்படுத்தொனும் எண்டு நினைச்சும் இருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இரண்டு ரூபாவுக்கு ரை வாங்கிக் கட்ட சாரி.. குத்த முடியாமல்.. (ரையில சேவ்ரி பின் தான் வைக்கிறவை) இருந்த எத்தனையோ மாணவர்கள் வகுப்புக்கு வெளில நின்ற நிலையை கண்டிருக்கிறேன். அப்போ எல்லாம் எதற்கு இந்த ரை என்று ஆதங்கப்பட்டிருக்கிறேன். இன்று அந்த நிலை முன்னேறி உள்ளது. இப்ப யாழ் இந்துவிலும் ரை கட்டினமா.. இல்ல குத்தினமா..??! அநேக பெண்கள் பாடசாலைகளில் ரை கட்டாயம். எல்லாமே குத்திற ரை தான். கட்டிறதில்ல..! ஆனால் இங்கிலாந்தில்.. கட்டிறது தான் அதிகம்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சீமைக்குப் போகப்போகின்றாய்.. "ரை" கட்டத் தெரியாவிடாவிட்டால் சீத்துவக்கேடாகப் போய்விடும் என்று மாமா ஒருத்தர் double knot/single knot முறைகளை சொல்லித்தந்தார். கற்பூரம் மாதிரி "கப்"பென்று பிடித்துவிட்டதால் ஒருபோதும் பிறரை "ரை" கட்ட நாடியதில்லை, ஆனால் பலருக்கு "ரை" கட்டியிருக்கின்றேன்..

அத்துடன் வேட்டி (நாலு/எட்டு முழம்), சால்வை கட்டுவதுகூடச் சிறு வயதில் இருந்து அத்துப்படி!

  • தொடங்கியவர்

எனக்கு சின்ன வயசில அப்பாதான் டபிள் நொப் கட்ட பழக்கிவிட்டவர் . இங்கை என்னோடை இருந்தவைக்கு நான் தான் ரை மாஸ்ரர் . எல்லாருக்கும் கொஞ்சம் எழுப்பப் பிறியம் விட்டுத்தான் கட்டிவிடுறனான் . ஆனால் இப்ப எனக்கும் ரையுக்கும் சரிப்பட்டுவராது .

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

576706_369289373138522_696736118_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது நாலு முழவேட்டி.. எட்டுமுழ வேட்டிக்கு, குறிப்பாக பட்டுவேட்டிக்கு, இன்னும் சில படிமுறைகள் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரை கட்ட எல்லாம் கஸ்ரப் படுறேல்லை சும்மா உதறி தோள்ளை போட்டுக்கொண்டு போயிடுவன்.

  • தொடங்கியவர்

எனது கருத்துக்களை உரிமையுடன் பண்படுத்துகின்ற எனது மூத்த கள உறவுகளுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் . எனது ஒருசில கருத்துக்கள் நண்பர் கலைஜனின் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துமாயின் அதற்கு மிகவும் மனம் வருந்துகின்றேன் .

Edited by கோமகன்

வேலை தொடர்பாக மாத்திரம்தான் இந்த ஒரு நொட்டு / இரண்டு நொட்டு கழுத்துப் பாட்டியை அணிவேன்.

மற்றும்படி இந்த அறுநாக்கொடியில் கட்டும் கோவணமும் இடுப்பில் கட்டும் வேட்டியும்தான் பிடிக்கும்.

நான் போடுவது டபிள் அல்லது வின்சர் தான். கூடுதலாக எனது கழுத்தில கொழுவி அளவெடுத்து விட்டு மனிசியின் கழுத்தில கொளுவித்தான் முடிச்சுப் போடுறது. பாட்டி பங்கசன் வழிய டை கட்டத் தெரியாமல் கனபேர் அந்தரப் படுறதப் பாத்திருக்கிறன். எனக்கு ரை கட்டப் பிடிக்காது ஆனால் அலுவலகம் எண்ட கறுமத்துகாகக் கிழமையில அஞ்சு நாள் கட்டவேண்டி இருக்கு.

முன்பு மனைவி பின்பு மகன் இப்போ முது நிலை பட்டதாரி வேட்டி கட்டுவது கூட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை கன பங்சனிலை பொடியள் என்னைத்தான் நூல்வேட்டி,பட்டுவேட்டி கட்டிவிட கூப்புடுவாங்கள் :) .....அதுக்குள்ளை கொஞ்ச என்னோட்ட வயதாரியளும் எனக்குமுன்னுக்கு வந்து தலையை குத்திக்கொண்டு நிப்பினம் :o ....நானும் பாந்தா காட்டாமல் கட்டி சொருகி விடுவன் :huh: .இவையளுக்கு தலைப்பாகையும் கட்டத்தெரியாது எண்டது இரண்டாம் பட்சம். ஆனால்.....ஆனால்...அதாவது...... சாறிக்கு ஊசி குத்திவிடுற விசயத்திலை நான் கட்டன் ரைற்.....அது இவவுக்கு மட்டும் தான். இருந்தாலும் எனக்கு உதவிமனப்பான்மை எக்கச்சக்கம் ஆரும்....... :wub: :wub: :wub::lol:

எனக்கும் ரை அலுப்பு தருவது என்றபடியால் கொழுவுகின்றது சில வைத்திருக்கின்றேன் .

சீலை அந்த மாதிரி கட்டி விடுவேன் .மீண்டும் கோகிலா கமல் மாதிரி .

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டு வருடம் ஒண்டாரியோ அரசாங்கத்திற்கு டை கட்டி கண்டுபிடித்தது, டை கட்டாத நீல கொல்லர் கிரவுட் தான் உழைக்கிறது.

ஒரு பல்ப் மாத்த எஞ்சிநியரிலும் பார்க்க கூட காசு.

மிகவும் உண்மை..

எனது தற்போதைய மேலாளர் சொன்னது.. அவர் ஒரு மின்துறை பொறியியலாளர்.. இருபது வருடங்களுக்கு முன்பு ஒருநாள் அவரிடம் வேலைசெய்த ஒரு எலெக்ரிஷியன் வந்து புலம்பினாராம். அவருக்கு அந்த வருடம் வருமானம் அடிபட்டுவிட்டது என்று.. :rolleyes:

இவரும்.. சரி எவ்வளவுதான் இந்த வருடம் உழைத்தாய் என்று கேட்டிருக்கிறார். $150,000 என்றாராம். :lol: என்னுடைய மேலாளர் கோபம் தலைக்கேற அவரைத் திட்டி அனுப்பிவிட்டாராம்.. :D பின்னை.. 40,000 வாங்கிக்கொண்டிருந்த இவரிட்டை வந்து புலம்பினால்..??!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்தே எனதும்.

கரும்பு/கலைஞன் பழைய திரியை இங்கு இணைத்தததற்கு ஏன் இந்தளளவு கோபப்படுகிறீர்கள். பொதுவாக ஒரே விடயம் சம்பந்தமான திரிகள் முன்னர் இணைக்கப்படிருந்தால் அந்த திரியின் இணைப்பை புதிய திரியில் வழங்குவது கள உறவுகளின் வழக்கம். அதை தான் கருப்பும் செய்தார். அவர் உங்கள் திரி பற்றி குறை எதுவும் சொல்லவில்லையே. :unsure:

கருப்புக்கு நீங்கள் தலைப்பிட்ட விதத்தில் விமர்சனம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு

[size=3]"அவளைக்" கரெக்ட் பண்ண அவிழாமல் ரைகட்டுவது எப்படி... " [/size]

என்ற தலைப்பை பார்க்க மித்திரன் பத்திரிக்கை கவர்ச்சிக்கு தலைப்பிடுவது போல இருந்தது. நீங்கள் வேறு ஒரு சிலருக்கு அவர்கள் இடும் தலைப்புக்கள் பற்றி விமர்சித்து விட்டு நீங்களும் அதேபோல தான் செயற்படுகிறீர்கள் என தலைப்பை வாசித்தவுடன் யோசித்தேன். ஆனால் அதைபற்றி சொல்லவிரும்பவில்லை.

நான் சொல்லியது தவறாக பட்டால் குறை நினைக்காதீர்கள்.

கலைஞன், மாப்பிள்ளை,மச்சான் ,முரளி, கரும்பு

எல்லாம் ஒருவர் என்பது சரியென்றாலும்

இந்தக் கருப்பு என்பவர் வேறு ஒருவர் அல்லவா? :D:rolleyes:

  • தொடங்கியவர்

கலைஞன், மாப்பிள்ளை,மச்சான் ,முரளி, கரும்பு

எல்லாம் ஒருவர் என்பது சரியென்றாலும்

இந்தக் கருப்பு என்பவர் வேறு ஒருவர் அல்லவா? :D:rolleyes:

சரி ................ ஒரு " ம் " ன்னாவாலை ரூட் மாறீட்டுது . இதெல்லாம் ஒரு பிழையா ?

  • தொடங்கியவர்

உங்கை கன பங்சனிலை பொடியள் என்னைத்தான் நூல்வேட்டி,பட்டுவேட்டி கட்டிவிட கூப்புடுவாங்கள் :) .....அதுக்குள்ளை கொஞ்ச என்னோட்ட வயதாரியளும் எனக்குமுன்னுக்கு வந்து தலையை குத்திக்கொண்டு நிப்பினம் :o ....நானும் பாந்தா காட்டாமல் கட்டி சொருகி விடுவன் :huh: .இவையளுக்கு தலைப்பாகையும் கட்டத்தெரியாது எண்டது இரண்டாம் பட்சம். ஆனால்.....ஆனால்...அதாவது...... சாறிக்கு ஊசி குத்திவிடுற விசயத்திலை நான் கட்டன் ரைற்.....அது இவவுக்கு மட்டும் தான். இருந்தாலும் எனக்கு உதவிமனப்பான்மை எக்கச்சக்கம் ஆரும்....... :wub: :wub: :wub::lol:

பரிமளக்கா.... பரிமளக்கோய்........ என்ன கோமாவலியே கிடக்கிறியள் ???? சிங்கமல்லோ கெம்புது .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கருத்துக்களையும் , அனுபவங்களையும் பகிர்ந்த அனைத்து கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் .

கலைஞன், மாப்பிள்ளை,மச்சான் ,முரளி, கரும்பு

எல்லாம் ஒருவர் என்பது சரியென்றாலும்

இந்தக் கருப்பு என்பவர் வேறு ஒருவர் அல்லவா? :D:rolleyes:

:D தவறை சுட்டி கட்டியதற்கு நன்றி. திருத்தியுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.