Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது ஈழத்துப் பயணம் தொடர்கிறது - இன்று தந்தையர் நாள்

Featured Replies

இன்றைக்கு தந்தையர் நாள் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதிலே இருந்து என்னுடைய ஈழப் பயணக் கட்டுரையை தொடர்கிறேன். பல குழப்பங்களுக்கு மத்தியிலும் நான் ஊருக்குப் போவதற்கு முடிவெடுத்ததற்கு என்னுடைய தாயும் தந்தையும் முக்கிய காரணம்.

என்னுடைய தாய் ஜேர்மனிக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போய் விட்டார். ஆயினும் அவருக்கு வேறு ஒரு கவலை. அவரை பல விதமான நோய்கள் ஆட்கொண்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பேயே அவர் இறந்து விடுவார் என்று வேறு அவரிடம் ஒரு சோதிடன் சொல்லியிருந்தான்.

இரண்டு மகன்களும் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், இருவருமே இதுவரை தாயகத்திற்கு வந்து போகாத நிலையில், அதற்கான வசதிகள் இல்லாத நிலையில், தனக்கு ஒன்று என்றால் யார் எல்லாவற்றையும் செய்வார்கள் என்கின்ற கவலை அவரை வாட்டி வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவருடைய சிறிய தாயார் இறந்த பொழுது, அவருடைய இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் இருந்த நிகழ்வை பார்த்திருந்தார். இது ஈழத்தில் பல தாய்மார்களின் பெரும் துயரமாக இருக்கிறது.

„நீ கூப்பிட்டால் நான் ஓடி வருவேன் அம்மா' என்று சொல்ல வேண்டும். இது பயணத்திற்கான ஒரு காரணம். நான் போய் வந்ததனால் வந்த தெம்பில் இன்றைக்கு என் தாயின் மருத்துவச் செலவு குறைந்திருக்கிறது.

...............

என் தந்தையோ வெளிநாட்டிற்கு வந்ததில் இருந்த இதுவரை எங்களை மீண்டும் நேரில் பார்த்தது இல்லை. அவரையும் நான் பார்க்க வேண்டும். அதை விட உயிர்ப்பான ஒன்றை அவரிடம் கொடுக்க வேண்டும்.

முன்பு எனக்கும் என் தம்பிக்கும் ஒரு தங்கை இருந்தார். எங்களுடைய குடும்பத்தில் எல்லோரும் அவரை தங்கச்சி என்றுதான் அழைப்பாhகள்.

நான் என்னுடைய தம்பியுடன் விளையாடியதை விட தங்கச்சியுடன் விளையாடியதுதான் அதிகம். ஏனக்கு அவர் மீதுதான் அன்பு அதிகம். எனக்கு மட்டும் அல்ல என்னுடைய தந்தைக்கும் எங்கள் இருவரிலும் பார்க்க தங்கச்சியின் மீதுதான் அன்பு அதிகம்.

எனககு ஒரு முன்றரை வயது இருந்த பொழுது, தங்கச்சிக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று என் பெற்றோர்கள் அவரை மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். எல்லோருக்கும் „டாட்டா' காட்டி விட்டு சாதரணமாகத்தான் தங்கச்சியும் போனாள்.

சில மணித்தியாலங்கள் கழித்து தங்கச்சியை தூக்கிக் கொண்டு பெரும் குரலெடுத்து கதறியபடி என் பெற்றோர்கள் ஓடி வந்தார்கள். திரும்பி வருகின்ற வழியில் பேருந்துலேயே தங்கச்சி இறந்து விட்டாளாம்.

எனக்கு அப்பொழுது இறப்புப் பற்றி சரியாக தெரியாது. வீட்டில் நிறையப் பேர். எல்லோரும் அழுதார்கள். என்னுடைய அப்பாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய தலையை சுவரில் மோதி மோதி அழுதார்.

எனக்கு சரியாக விளங்காத அந்த வயதில் ஓரிரு நாள் கழித்து விளையாடுவதற்கு தங்கச்சியை தேடினேன் „தங்கச்சி செத்துப் போனா, அவவை தாட்டுப் போட்டோம்' என்று அம்மம்மா சொன்னது நினைவில் இருக்கிறது. தங்கச்சி இல்லாமல் போனது பற்றி எனக்கு விளங்கிய வகையில் என்னை பாதித்தது.

என்னுடைய தந்தை நீண்ட காலம் தங்கச்சியி;ன் இழப்பில் இருந்து விடுபடவில்லை. அடிக்கடி தங்கச்சியைப் பற்றிப் பேசுவார்.

தங்கச்சியி;ன் இழப்பை ஈடுசெய்ய ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க என் தந்தை விரும்பினார். ஆனால் என் தாய் கடுமையாக மறுத்து விட்டார். என் தந்தை சில நாட்கள் வாதாடிப் பார்த்தார். தன்னால் தங்கச்சியின் இடத்தில் இன்னொரு பெண் குழந்தையை தன்னால் பார்க்க முடியாது என்று என் தாய் சொல்லி விட்டார்.

பெருத்த ஏமாற்றத்தோடு என் தந்தையும் பேசாது இருந்து விட்டார். அவர் பெண் குழந்தைகளை பார்க்கின்ற பொழுது மிகவும் அன்பாக பேசுவார். தூக்கி கொஞ்சி மகிழ்வார் தங்கச்சி பற்றிய ஏக்கம் அவர் கண்களில் தெரியும்.

காலம் ஓடி விட்டது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். பார்ப்பதற்கு தங்கச்சி மாதிரியே இருப்பார்கள். „இதோ, ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தங்கச்சிகள்' என்று என் குழந்தைகளை தூக்கி அவர் கைகளில் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

ஊருக்குப் போய் என் தந்தையிடம் என் குழந்தைகளை கொடுத்தேன். அள்ளி அணைத்துக் கொண்டார். என்னோடு நேரம் செலவிட்டதை விட, அவர் தன் பேத்திகளோடுதான் அதிக நேரம் செலவிட்டார்.

தன்னுடைய மோட்டர்சைக்கிளில் இருவரையும் ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் ஊரை சுற்றி வந்தார். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

என் தந்தையின் நீண்ட கால ஏக்கத்தை தீர்த்து வைத்த மகிழ்ச்சி எனக்கு

...............

ஈழத்துப் பயணம் மேற்கொண்டதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் என்னுடைய அழகிய கிராமம். குரும்பசிட்டி என்கின்ற அந்தக் கிராமம் வடக்கே யாழ்குடாவில் பலாலி விமானத் தளத்திற்கு அருகில் இருக்கின்றது. உயரமான மரத்தில் ஏறி நின்று பார்த்தால் படைத்தளம் தெரியும்.

ஈழப் போரில் பல இழப்புக்களை குரும்பசிட்டி சந்தித்திருக்கிறது. விடுதலை இயக்கங்களால் தனியார் வீட்டில் நடத்தப்பட்ட முதலாவது கொள்ளை குரும்பசிட்டியில்தான் நடத்தப்பட்டது.

வன்னியசிங்கம் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட அந்தக் கொள்ளைக்கு ரெலோ இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. வன்னியசிங்கம் வீட்டில் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதாக ரெலோ இயக்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இயக்கங்கள் பற்றி சரியாகத் தெரியாத அன்று குரும்பசிட்டி இளைஞர்கள் பலர் கொள்ளையர்கள் வந்து விட்டார்கள் என்று ஆயுதங்களோடு வந்தவர்கள் மீது கற்களை எறிந்தாhகள். பதிலுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டார்கள்.

இப்படி ஆரம்பித்த குரும்பசிட்டியின் இழப்பு பின்பு நிறையச் செல்வீச்சுக்கள், குண்டு வீச்சுக்கள், இராணுவத்தின் கொலை வெறியாட்டங்கள் என்று போய் கடைசயில் முழுக் கிராமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் அந்தக் கிராமத்தை பார்க்க முடியவில்லை. தற்பொழுதுதான் ஒரு சிறிய பகுதியை மீளக் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள்.

அந்த இடங்களையாவது பார்த்து வருவோம் என்று வவுனியாவில் இருந்து குரும்பசிட்டியை நோக்கிப் பயணமானேன்.

ஓமந்தையில் எங்களின் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய படையினர் வாகனத்தை சோதனையிடுகிறார்கள். ஒரு படையினன் நான் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்

தொடரும்.....

ஒரு படையினன் நான் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் .

உதெல்லாம் தேவையோ ? கொழும்பிலை இறங்கினாலே உந்த நசலுகளை எல்லாம் கழட்டி வைச்சுப்போட்டு , சாறத்தை இழுத்து சண்டிக்கட்டுக் கட்டிக்கொண்டு, பாட்டா சிலிப்பறோட சீ ரீ பி பஸ்சில( 600 ரூபாய் ரிக்கற் ) சனத்தோடை சனமாய் பம்மினால் ஏன் நாயே எண்டும் கேக்கமாட்டாங்கள் . இது என்ரை அனுபவம் சபேசன் அண்ணோய்........ இந்த தொடராவது நிக்காமல் , ஒழுங்காய் இதே விறு விறுப்போடை கொண்டு போகவேணும் சொல்லிப்போட்டன் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வது சரிதான். பஸ்ஸில் போவது மிகவும் மலிவானது. ஆனால் நான் ஊர் முழுவதும் வான் பிடித்துத்தான் சுற்றி வந்தேன். கடைசியில் கணக்குப் பார்த்த பொழுது தலை சுற்றியது. அடுத்த முறை போனால் பஸ்தான்.

கட்டாயம் தொடரை எழுதி முடிப்பேன்.

தொடருங்கள் உங்கள் பயணக் கதையை .

குரும்பசிட்டி முதலாளி வன்னியசிங்கம் வீட்டில் குட்டி மணி தலைமையில் கொள்ளை அடித்தார்கள் .டெலோ என்ற பெயர் ,அறிக்கை விடுவதேல்லாம் எல்லாம் அந்த நேரத்தில் இல்லையென நினைக்கின்றேன்.

நான் உதைப்பந்து விளையாடும் போது எனது இடது கை இரு எலும்புகளும் முறிந்ததால் யாழ்பாண ஆஸ்பத்திரியில் இருந்தேன் அப்போதுதான் காலில் சூடு வாங்கிய வன்னியசிங்கத்தின் மகன் உட்பட இன்னும் சிலரை கொண்டுவந்தார்கள் .சில நாட்களில் அவர்களுடன் கதைத்து பழக சந்தர்ப்பம் கிடைத்தது.குட்டிமணியை அவர்களுக்கு நன்குதேரியும் .வன்னியசிங்கத்துடன் சேர்ந்து தொழில் செய்தவராம் .

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

நான் நினைக்கிறேன் உங்களுக்கு இனி MRI எடுக்க ஏலாது என்று..(??) MRI என்பது

காந்த புலத்தினால்/கதிர்களினால் உடலின் பகுதிகளை படம் பிடிக்கும் முறை. தசை, இழைய அமைப்புகளை பார்ப்பதர்ற்கு CT ஸ்கேன் விட துல்லியமானது. MRI எடுக்க முன்பு ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும், அதில் கேட்பார்கள், இப்படியான உலோக பாகங்கள் உடலில் உண்டா என. இப்படி சிறிய ஸ்க்றேவ் போன்றவற்றை ஏதேனும் முறைகளால் கவர் பண்ணி MRI எடுக்கலாமோ தெரியவில்லை...

மற்றது யார் அந்த பிரபலம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் உங்களுக்கு இனி MRI எடுக்க ஏலாது என்று..(??) MRI என்பது

காந்த புலத்தினால்/கதிர்களினால் உடலின் பகுதிகளை படம் பிடிக்கும் முறை. தசை, இழைய அமைப்புகளை பார்ப்பதர்ற்கு CT ஸ்கேன் விட துல்லியமானது. MRI எடுக்க முன்பு ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும், அதில் கேட்பார்கள், இப்படியான உலோக பாகங்கள் உடலில் உண்டா என. இப்படி சிறிய ஸ்க்றேவ் போன்றவற்றை ஏதேனும் முறைகளால் கவர் பண்ணி MRI எடுக்கலாமோ தெரியவில்லை...

மற்றது யார் அந்த பிரபலம்?

இதைத்தான் லொள்ளு எண்டுறதோ??

  • தொடங்கியவர்

ஊரில் பெரியவர்களைக் கெட்ட பொழுது ரெலோ இயக்கம் அதற்கு உத்தியோகபூர்வமாக உரிமை கோரியதாகத்தான் சொன்னார்கள். குட்டிமணியும் அதில் பங்கேற்றிருந்தார்.

அப்பொழுது குட்டிமணியோடு இருந்த பிரபாகரனும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாக ஓரிருவர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது சரியான முறையில் உறுதிப்படுத்தவில்லை.

முன்பு வெளிநாடுகளில் ரெலோ இயக்கத்தினர் நிதி சேகரித்த பொழுது, பெரும்பாலான குரும்பசிட்டி மக்கள் அவர்களுக்கு நிதி வழங்கவில்லை. நீங்கள் எங்கள் ஊரில் கொள்ளையடித்தீர்கள், இரண்டு பேரை சுட்டுக் கொன்றீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அதற்கு ரெலோ இயக்கத்திற்காக நிதி சேகரித்தவர்கள் "ஏன், பிரபாகரனும்தான் அங்கே நின்றார், அப்படியென்றால் நீங்கள் புலிகளுக்கும்தான் கொடுக்கக்கூடாது" என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

ஆனால் போராட்டத்தின் ஆரம்பகால சம்பவங்கள் பற்றி எழுதியவர்கள் இந்தக் கொள்ளையில் தேசியத் தலைவரின் நேரடிப் பங்களிப்பு இருந்ததாக எழுதியிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னொரு காலத்தில் சபேசனை நான்கும் நன்கறிந்தவர் என நினைத்தேன்.அவரின் தற்போதைய எழுத்து நடைகள் எனக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது.இவரைப்போன்றவர்கள்

திரும்பத்திரும்ப பழைய புராணத்திலேயே நின்று பொழுதை கழிக்கின்றார்கள்.

இன்றைய காலகட்டத்திற்கு வெளிநாட்டு தமிழர்கள் எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும்...முதலில் அதை சொல்லுங்கள்.

வடையுடன் தேனீர் அருந்திய கதைகள் இனியும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்திற்கு வெளிநாட்டு தமிழர்கள் எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும்...முதலில் அதை சொல்லுங்கள்.

வடையுடன் தேனீர் அருந்திய கதைகள் இனியும் வேண்டாம்.

சபேசன்;

வாசகர்கள் விபரமானவர்கள்...பாணும் சம்பலும் சாப்பிட்ட கதை வேண்டாம்-- டிரைவ் துறுவில கோபி குடித்துவிட்டு வேலைக்கு போற காலம்- நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ...

சாத்திரி தெரியாமல்தான் கேட்டேன்-பல்பு எரியுற மாதிரி சிமிலி போடத்தெரியாது -:)

எனக்கும் ஊருக்கு போய் வந்து ஒரு பயணக்கட்டுரை எழுத வேணும் எண்ட ஆர்வம் இருக்கு... ஒருவேளை போய் வந்தால் கட்டாயம் எழுதுவன்...

அர்ச்சுண் அண்ணாவுக்கு தெரியாத விசயம் எண்டு ஒண்டும் இல்லாததால அவரை கேட்டு சில புனைவுகளையும் சேர்க்கலாம் எண்டு இருக்கிறன்... சபேசன் கவனிக்கவும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் பயணக் கதையை .

குரும்பசிட்டி முதலாளி வன்னியசிங்கம் வீட்டில் குட்டி மணி தலைமையில் கொள்ளை அடித்தார்கள் .டெலோ என்ற பெயர் ,அறிக்கை விடுவதேல்லாம் எல்லாம் அந்த நேரத்தில் இல்லையென நினைக்கின்றேன்.

நான் உதைப்பந்து விளையாடும் போது எனது இடது கை இரு எலும்புகளும் முறிந்ததால் யாழ்பாண ஆஸ்பத்திரியில் இருந்தேன் அப்போதுதான் காலில் சூடு வாங்கிய வன்னியசிங்கத்தின் மகன் உட்பட இன்னும் சிலரை கொண்டுவந்தார்கள் .சில நாட்களில் அவர்களுடன் கதைத்து பழக சந்தர்ப்பம் கிடைத்தது.குட்டிமணியை அவர்களுக்கு நன்குதேரியும் .வன்னியசிங்கத்துடன் சேர்ந்து தொழில் செய்தவராம் .

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

எட்டு ஸ்குருவிலை இரண்டை கழட்டி விடவும். பின்பு என்ன நடக்கும் என்று அறிய ஆவல். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் 80களில் அதிக ஆசிரியர்கள் உள்ள ஊர்களில் அளவெட்டியையும் குரும்பசிட்டியையும் சொல்லுவார்கள். புகழ்பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் மகாதேவா குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். அண்மையில் காலமான நடராஜா ஆசிரியர், காளிதாசன், மணியம் மாஸ்டர் உட்பட புகழ்பெற்ற ஆசிரியர்கள் பிறந்த கிராமம் குரும்பசிட்டி.

அத்துடன் புகழ்பெற்ற ஈழத்து நாடக்கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துறை அவர்களும் குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்.

முதலாம் ஈழப்போரில் 86ல் சனவரி மாதம் மூன்று முறை பலாலியில் இருந்து புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், குரும்பசிட்டி ஊடாக இராணுவம் வெளியேற முயற்சித்து விடுதலைப்புலிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். விடுதலைப்புலிகளினால் குரும்பசிட்டியில் இருந்த மினிமுகாம் 87ல் தாக்கப்பட்டது. ஆனால் அத்தாக்குதல் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்திய இராணுவ வருகையின் பிறகு மீண்டும் மக்கள் குரும்பசிட்டிக்கு திரும்பினார்கள். 2ம் ஈழப்போரின் ஆரம்பிக்க மக்கள் குரும்பசிட்டியை வெடிக்க வெளியேறி இடம் பெயர்ந்தார்கள். என்னுடைய நண்பர் கிருஸ்ணகுமார் குரும்பசிட்டியைச் சேர்ந்த மாவீரர்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அருமையாகப் போகின்றது, சபேசன்! தொடருங்கள்!

எனது வாழ்க்கையை, இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கின்றேன்!

ஊருக்குப் போய், பெற்றோருடனும், சகோதரர்களுடனும், அவர்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும், அந்த நாளைய வாழ்வை திரும்ப வாழ்ந்து பாரப்பது ! (இதை எனக்காக வாழ்வதாகக் கருதுகின்றேன்)!

மற்றது புலத்தில் வாழ்வது! (இதை என்மீது, நானே வலிந்து திணித்துக்கொண்ட வாழ்க்கை! ( இதை பணத்துக்காக வாழ்வதாகக் கருதுகின்றேன்!)

எனக்காக வாழும் வாழ்வில், வாழ்ந்த காலங்கள் மிகவும் குறைவு எனினும், அது அள்ளித் தந்த மகிழ்ச்சியும், திருப்தியும் அளவில்லாதவை! பெறுமதி வாய்ந்தவை!

பணத்துக்காக வாழும் வாழ்வில், மற்றவர்களுக்கு நன்றாக இருக்கிறேன் போல் தெரிகின்றது! ஒரு விலாசத்தைத் தருகின்றது! அவ்வளவு தான்!

  • தொடங்கியவர்

ஆம் புங்கையூரான், என்னுடைய மண்ணில் நிற்கும் போதோ நான் முழுமையாக உணர்கின்றேன். விரைவில் வீடு திரும்ப வேண்டும்.

குமாரசாமி மற்றும் வொல்கானோ,

தாயகத்தில் சில இடங்களுக்கு போனது பற்றி எழுதுகின்ற பொழுது, அந்த இடங்களில் நடந்த சில முக்கிய சம்பவங்களை எழுதுவது இயல்பானது. ஆனால் கட்டாயமாக என்ன செய்ய வேண்டும் என்பதை, எனக்கு சரி என்று படுவதை எழுதுவேன். தொடரில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமும் வரும்.

சபேசன்,

குத்திகாட்டுவதற்காக கூறவில்லை, இரண்டு விடயங்கள், ஒன்று-

நீங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்து சென்றதாகவும் அதை இராணு சிப்பாய் வைத்த கண் வாங்காமல் பார்த்ததாகவும் எழுதினீர்கள். நீங்கள் படித்தவர், விடயங்களை பகுத்தாராயத்தெரிந்தவர். தாயகத்தை தரிசிப்பதற்கு நீங்களே இப்படிச்சென்றால் சாதாரண பொதுமக்கள் எப்படிச்செல்வார்கள்? ஆபத்துக்கள் எங்கிருந்தும் வரலாம், அவ்வாறான சூழ்நிலையில் விலையுயர்ந்த பொருட்களைக்கொண்டுசெல்வது தேவைதானா?

இரண்டு-

இதற்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சம்மந்தப்படுத்தாமல் தர்க்கரீதியாக பதில் தாருங்கள். அதாவது, அண்மைக்காலங்களில் உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தினீர்கள். இலங்கை சென்றது பற்றி கடந்தவருடம் என்று நினைக்கின்றேன் ஓர் பதிவை வழங்கினீர்கள். அதில் அந்த மாற்றம்பற்றி கூறப்பட்டது.

உங்கள் இந்த மாற்றங்களிற்கான காரணம் யதார்த்த சூழ்நிலைகள், தனிப்பட்ட பாதுகாப்பின் அடிப்படையில் (அழுத்தங்கள்) தோன்றியவைதானே? இப்படியான யதார்த்தம் ஒன்றை முள்ளிவாய்க்கால் அவலத்தின் முன்பு புரிந்துகொள்வதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லையா? உங்கள் பெற்றோரை சந்திப்பதற்கு ஏன் முன்னைய காலங்களில் முயற்சிக்கவில்லை? அதற்கு தனிப்பட்ட பாதுகாப்பே தடங்கலாக அமைந்ததா? தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த பயத்தின், பீதி காரணமாகவே பல்வேறு விடயங்கள்பற்றி பேசாமெளனிகளாக உள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கைக் கடிகாரம் பற்றி நான் உண்மையில் சிந்திக்கவில்லை.இங்கே அணிவது போன்று தாயகத்திலும் அணிந்திருந்தேன். இதைப் பற்றி தொடர்ந்து இன்று எழுதுகின்றேன்

கடந்த ஆண்டு ஆரம்பித்ததன் தொடர்ச்சிதான் இது. ஒவ்வொரு தொடரையும் தனித் தலைப்பாக எழுதலாம் என்று நினைக்கிறேன். சமரச அரசியல் பற்றி தாயகப் பயணம் ஏற்படுத்திய சிந்தனைகள் பற்றியும் தொடரில் இடையிடை சொல்லிக் கொண்டு போவேன்.

கரும்பு சொல்வது சரிதான். சமரசம் என்பதே விருப்பம் இன்றி தமது பாதுகாப்பின் பொருட்டும், தொடர்ச்சியான இருப்பின் பொருட்டும் செய்வதுதான். எமது கோரிக்கைக்கு எதிராக அகபுறச் சூழ்நிலைகள் விளங்குகின்ற பொழுது, அந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, செய்வதுதான் சமரசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கைக் கடிகாரம் பற்றி நான் உண்மையில் சிந்திக்கவில்லை.இங்கே அணிவது போன்று தாயகத்திலும் அணிந்திருந்தேன்.

உண்மைதான்

இப்ப பலரும் இப்படித்தான் மற்றவரது அனுபவங்களை பாடமாக எடுப்பதை விட்டு

பட்டுத்தான் தீருவோம் என அடம்பிடிக்கின்றனர்

காலம் போனானும் முடிவு ஒன்றுதான்.

பட்டு வருக..

:lol::D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]எனக்கும் ஊர் போக ஆசையாயிருக்கு என்ன செய்யுறது [/size][size=1]

மனச்சாட்சி விடுகுதில்லை எங்கட வகுப்பிலை முப்பது [/size][size=1]

பேர் இருந்திருப்பம் ஆனால் ஒருத்தன் மாவீரன் இன்னொருத்தனுக்கு [/size][size=1]

என்ன நடந்ததோ தெரியாது மிச்சப்பேர் ஒருத்தரும் போராட்டத்திட்குப்போகவில்லை [/size][size=1]

போராட்டத்திற்கு எப்பவுமே ஆளணிதான் பிரச்சனை.எனக்கு [/size][size=1]

வீட்டுப்பிரச்சனை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் [/size][size=1]

சொல்லுவம் மாவீரர் கல்லறை இருந்தாலும் அதற்கு [/size][size=1]

மரியாதை செலுத்தப்போகலாம்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.