Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பிக்கு,

Featured Replies

அன்புள்ள நண்பிக்கு,

ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது.

stock-photo-romantic-couple-2554961.jpg

ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்:

1 .விளையாட்டுக்களில்,பொது விடயங்களில் ஆர்வம்.

உனக்கு விளையாட்டு பிடிக்கவில்லையா?பரவாயில்லை.யாருக்கு தேவை!நீ தினசரி உன் வாழ்வில் நடப்பவற்றை உன் கணவன்/காதலனோடு பகிர்ந்துக்க ஆசைப்படுகிறாய் அல்லவா,அதே போலத்தான் விளையாட்டு அவர்களுக்கு.முழுமையான விளையாட்டு அறிவு இல்லாவிட்டாலும் கூட,ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திரு.அதை போல தான் பொது விடயங்களும்.ஆணின் எதிர்பார்ப்புக்கு இல்லாவிட்டாலும் கூட உன்னை அறிவுடையவளாக,பலதும் தெரிந்தவளாக வைத்திரு.

2 .காதலனின் நண்பர்களை வெறுக்காதே.

ஒரு ஆணை பொறுத்த வரையில் அவனது நண்பர்களை அவன் பெரிதாக கொண்டாடுவான்.எடுத்த எடுப்பிலேயே அவன் நண்பர்களை வெறுத்து பேசுவதை தவிர்த்துவிடு.ஆரம்பத்தில் நண்பர்களை பற்றி நன்றாக பேசு உன் கணவன்/காதலனிடம்.சிறிது காலம் செல்கையில் கணவன் உன்னை சுற்றி வர ஆரம்பிப்பான்.கணவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்க சொல்லுவார்கள்?அது உந்தன் திறமை.கணவனுக்கு எது அதிகம் பிடிக்கிறதென்பதை அறிந்து அதற்க்கேற்ப்ப அவனை திருப்திப்படுத்தி உன்னை சுற்றி வர வை.அப்புறமாக மெது மெதுவாக தீய நண்பர்களின் சகவாசம் பற்றி எடுத்துக்கூறு.உன்னை தன் வாழ்க்கையில் பெறுமதிமிக்கவளாக கருதும் எந்த ஒரு ஆணும் உன் பேச்சை கேட்பான்.

romantic-couple.jpg

3 .அவனது நகைச்சுவையை ரசிக்க பழகு.

உனக்கு நகைச்சுவை பிடிக்காதா?பரவாயில்லை..உன் கணவன்/காதலன் பீட்சா சாப்பிடுகையில் முழுவதையும் உண்ண நினைப்பானா?இல்லை ஆனால் நாம் நினைக்கிறோம் அல்லவா? அதை போல தான்.பொய்கள் பெண்களுக்கு பிடிக்காது.ஆனால் அவன் சொல்லும் சில ஜோக்ஸ்'க்கு சிரிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது தானே!நீ நினைப்பவை உன் ஆணிடம் இருந்து கிடைப்பது அவசியம் என்றால் இந்த வகையான வேலைகள் நீ செய்து தான் ஆகவேண்டும்.

4 .காதல்,ரொமான்ஸ்,செக்ஸ்

முக்கியமாக நீ பெற்றோர்கள் பேசிவைத்த ஆணை திருமணம் செய்கிறாய் என்றால்,மேல்கூறிய மூன்று விடயங்களிலும் கொஞ்சமாவது பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்.முக்கியமான பரீட்சை ஒன்றுக்கு எதுவித தயார்ப்படுத்தல்களும் இன்றி செல்ல முடியுமா?நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு தயார்ப்படுத்தல் இல்லாமல் முகம்கொடுக்க முடியுமா?இல்லை அல்லவா?அதே போல தான் வாழ்க்கையும்.குறித்த வயதுகளில் அறியவேண்டியவற்றை அறிந்து வைத்திருப்பது உன் பொறுப்பு ஆகிறது.இந்த விடயத்தில் ஆண்களின் பார்வைகள் வேறுபாடும்.உனது ஆண் எந்த வகையறா என்று தெரியும் முன்னர் நீ தெரியவேண்டியத்தை தெரிந்து வைத்திருந்தால் உனது பக்கம் இருக்கின்ற ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

romantic-couple.jpg

5 .உடனடி முடிவுகள் எடுத்தல்.

அனேக பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சனை இது.ஒன்றையும் ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக ஒரு முடிவு எடுத்து அதன் பால் இயங்குவது.இது பல சமயம் பிரச்சனைகளில் தான் முற்றுப்பெறுகிறது.ஒரு பத்திரிகை/இணைய செய்தியின் தலைப்பை பார்த்து செய்தியை ஊகித்தல் போன்றது இது.தலைப்பு உன்னை திசைதிருப்பலாம்.உள்கிடக்கை வேறாக இருக்கலாம்.உடனே தவறான முடிவெடுப்பதை விடுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் பெண்கள் ஆண்களை கவருகிறார்கள்.

6 .மேக் அப்,அலங்காரங்கள்

பெரும்பாலான ஆண்கள் அதிகப்படியான மேக் அப் பண்ணும்,அலங்காரம் பண்ணும் பெண்களை வெறுக்கிறான்.தனக்கு எது அழகாய் இருக்கும் என்று உனக்கு நன்றாக தெரிய வேண்டும்.மேக் அப் ரசனை இல்லாத பல பெண்கள் இலகுவாக ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.அளவான,எளிமையான அழகூட்டல் பெரும்பாலான ஆண்களை கவருகிறது.

7 .உறவுகள்,அயலவர்கள் பற்றி எப்போதும் கதைக்காதே

பெரும்பாலான தொலைகாட்சி நாடகங்கள் பார்த்தோ,அல்லது இயல்பாகவோ,இந்த குணம் பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது.எப்போதும் பிறரை பற்றி குறை பேசும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது.அதுவும் இன்று போன்ற மிகவும் பிசி'யான காலங்களில் இத்தகைய "பெறுமதி சேர்க்காத கதைகள்"ஐ ஆண் வெறுக்கிறான்.அதே போல் அதிகமான அலட்டல் கதைகளும் ஒரு ஆண் உன்னை வெறுப்பதற்கு காரணமாகலாம்.

8 .தனிப்பட்ட உறவுகளை ஆயுதமாக்காதே.

பெரும்பாலான திருமணம் முடித்த பெண்கள் பற்றி அதிக நகைச்சுவை துணுக்குகள் வாசித்திருப்பாய்.தினசரிநடக்கும் சம்பவங்களை வைத்து இரவில் பெண்கள் பழிவாங்குவார்கள். இது போன்ற உத்திகள் சிறிது நாட்கள் உபயோகப்பட கூடும்.பின்னர் அதுவே உன் மீதான ஈர்ப்பை கொலை செய்துவிடவும் கூடும்.

9.ரூல்ஸ் பேசுவது கூடாது

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதிவேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி ரூல்ஸ் பேசுவது எந்த ஆணுக்குமே பிடிக்காதது.கறாராக சொல்லுவதை விடுத்து அன்பாக உங்கள் கணவன் கேட்கும் வகையில் உக்திகளை பாவித்து வேலை வாங்கலாம். ஆணவத்தின் நீலாம்பரி கேரக்டரை விட அன்பான கேரக்டர் தான் அடிபணியச் செய்யும் என்பதை உணர்ந்துகொள்.

dep_3291439-Modern-romantic-couple-preparing-a-meal.jpg

10.பொய்சொல்லவைக்காதே

ஆண்கள் உண்மைகளை மறைப்பதால் தான் பெண்கள் கேள்விகேட்கிறார்கள்..அல்லது பெண்கள் கேள்வி கேட்பதால் தான் ஆண்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்று இருபக்கமாகவும் விவாதிக்கலாம்.ஆனால் அனுமதிக்ககூடிய உண்மை இருந்தும் உன் கேள்வியால் ஆண் பொய் சொல்கிரானாயின் அது ஆபத்திலே முடியும்.புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடு.

இவையனைத்தும் உன்வாழ்வை பிரகாசமாக்கவே அன்றி வேறெதுக்குமல்ல.கருத்தில்கொள்வதும் கொள்ளாமல் விடுவதும் உன்னுடைய இஷ்டம்

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிற கதையா பேசுங்க சார்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆகாத ஆண்களின் மனதில் உள்ள எண்ணங்கள் பல இதில் அடங்கி இருக்குது. ஆனால்.. பெண்கள் இப்படியான எழுத்துக்களை எல்லாம் வாசிச்சு.. மனதளவில்.. மூளையளவில் யோசிச்சு.. தங்களை மாத்திக்குவாங்க என்று நினைக்கிறீங்க..! ஐயோ ஐயோ..! :lol::D

நன்றி அபராஜிதன்.. இவ்வாக்கத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

பொழுது சாய்ந்து இரவின் மடியில் நனைந்து கணவன் மனைவி

அதிகாலையில் கண்விழிக்கும் வரை எப்படி அன்புடனும் அராவணைப்புடனும்

இருக்கின்றார்களோ அப்படியே அடுத்த நாளும் அவர்களுக்கு அமையும்.

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சி தேவையா ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு கொப்பியை உங்கள் நண்பிகள் எல்லாருக்கும் அனுப்பிவிடுங்கப்பா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது எல்லாம் ஒரளவுக்கு பரவாயில்லை ஆனால் இதில் 3 வதாக சொல்லப்பட்டு இருக்கே அவனுடைய நகைச்சுவை ரசிக்கப் பழகு ...அவன் சொல்கின்ற மொக்கை ஜோக்சுக்கு எல்லாம் சிரிக்கோணுமாம் முடியல :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

....அவன் சொல்கின்ற மொக்கை ஜோக்சுக்கு எல்லாம் சிரிக்கோணுமாம்.. முடியல!

:icon_mrgreen::lol::D

  • தொடங்கியவர்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றிகள்

இந்தக்கால இளைஞர்களின் மன கிடக்கையை

70% ஆவது இக்கட்டுரை சொல்லி இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆண்கள் மனம் கோணாமல் நடக்கிறது தான் பெண்களின் பிறவிப் பயனோ? :lol: இது கொஞ்சம் "டீசன்டான" நவீன பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிக்கிற மாதிரி இருக்கு! பெண்ணோ ஆணோ தன்னை மாற்றிக் கொள்ளாமல் சுயமாகவே இருப்பது தான் நேர்மையும் அழகும். சமுகத்திற்கு ஒவ்வாத பழக்கங்களை ஆணோ பெண்ணோ மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால், புரியாத பகிடிக்குச் சிரிக்கிறது, ஆர்வம் இல்லாத ஒரு விடயத்தில் ஆர்வம் இருக்கிற மாதிரிக் காட்டிக் கொள்ளுறது, இதெல்லால் அரிதாரம் பூசின நடிப்பு. எந்த உறவையும் நடிப்புப் பலப் படுத்தாது என்பது என் தாழ்மையான கருத்து!

தமிழ் சீரியல் பார்த்த மாதிரி இருக்கு .நல்லவேளை காலை தொட்டு வணங்க சொல்லவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நண்பிகள் என்பதை விட தலைப்பையே கொஞ்சம் இருபாலாருக்கும் சமமாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....இளைஞர்களுக்கு மட்டும் தான் மனக்கிடக்கை இருக்கு மற்றவர்களுக்கு இல்லை என்று எடுத்து விட முடியாது தானே.எப்போதும் ஆண் இதய சுத்தியோடு ஆணாகவும்,பெண்,பெண்ணாகவும் இருந்தாலே போதுமானது..மனசு சுத்தமாக இருக்கனும்.அய்யோ திருமணம் என்றால் ஓடனும் போல் இருக்கு ,திருமணம் என்ற ஒன்று வேணுமா என்று நினைக்கத் தோணுது..

என்று கேட்டு பழகி இப்படி எல்லாம் சினிமா காட்டி விட்டு.பெண்களைப் பற்றி முழுவதும் அறிந்துட்டு விட்டுட்டு துண்டைக் காணம் துணியைக் காணம் என்று ஓடுற ஆண்களும் இன்னும் இருக்கீனம்.....ஏதோ பழகியவர்களின் கண்ணில் தொடர்ந்து பட்டால் கூடாது என்றது போல் தற்போதைய நடைமுறைகள்..

ஓடனும் போல் இருந்தால் அதைக் கூட நாகரீகமாக நடந்து கொண்டால் யாருக்கும் தாக்கம் ஏற்படாது...எதுவாக இருந்தாலும் சொல்லப் போனால் சட்டை மாற்றுவது போல் தான் நடந்து கொள்கிறார்கள்..நடக்கிற திருகு தாளங்களை இப்படிப் பக்கம்,பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்....

அர்ஜன் அண்ணா சொல்லி இருப்பது போல் வாழ்க்கையை மெகா சிரியலில் நடிப்பதைப் போல் நினைத்து விடாதீர்கள்,ஆக்கி விடாதீர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.