Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?

Featured Replies

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?

June 19, 20120

madhangi_arulprakasam_001-460x250.jpg

லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது.

இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு.

இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வேற்று மொழி பாடல்களில் ஒன்று இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் தமிழ்க் கலைஞர் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பிரபலமான “பேப்பர் ப்ளேன்ஸ்” (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல், 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட அவரது இரண்டாவது ஆல்பமான “கலா” என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த தகவல் குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாகக் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆஸ்கார் விருது பெற்ற “ஸ்லம் டாக் மில்லியனேர்” போன்ற படங்களை இயக்கிய டேனி பாய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்.

அவரது மேற்பார்வையில், சுமார் 27 மில்லியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் தமிழ்த் திரை இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய “நான்தான் ஒங்கப்பண்டா” என்ற பாடலும் இடம் பெறுவதாக தகவல் கூறுகின்றன.

கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான ‘ராம் லக்ஷ்மண்’ என்ற படத்தில் வரும் பாடல் இது.

தற்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் நாளிதழ்களில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.

http://asrilanka.com/2012/06/19/3297

  • கருத்துக்கள உறவுகள்

அது எமது தேசத்துக்கு பெருமை தரும் :icon_idea:

[size=4]எமது மக்களின் தொடரும் இனவழிப்பையும் நடந்த இனப்படுகொலைகளையும் பற்றி நிச்சயம் பாடுவார்/சொல்வார்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மட்டும் இலங்கை தமிழிச்சி.. வன்னில சாகடிக்கேக்க.. அது பறத் தெமுலு..! தமிழீழ தமிழிச்சின்னு எழுதுங்களோய்..! :icon_idea::(

... அண்மையில் கூட, ஐரோப்பிய நாடொன்றில் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியில் கிடைத்த ஊதியம் முழுவதையும், ஓர் முக்கிய எம்மவர்களின் மனித உரிமைகள் அமைப்பிற்கு அன்பளிப்பாக ... இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் என்பார்கள், இப்படிப்பல நீண்ட காலமாக ... நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய தமிழிச்சிதான்!

இதுக்கு மட்டும் இலங்கை தமிழிச்சி.. வன்னில சாகடிக்கேக்க.. அது பறத் தெமுலு..! தமிழீழ தமிழிச்சின்னு எழுதுங்களோய்..! :icon_idea::(

நான் அதை ஆமோதிக்கிறேன் ............ :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தலையில் கை வைக்கப்போகின்றான்

அண்மைக்காலமாக பிரித்தானியர்களின் சில நடவடிக்கைகள்

இலங்கை அரசிற்கு எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளன.

ஈழத்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

இவராலை எங்கடை மானம் பேச்சே மரியாதை பேச்சே பரம்பரியம் பேச்சே கலாச்சாரம் போச்சே ... சத்தியமா இதை நான் சொல்லவிலை..லை..லை..

  • கருத்துக்கள உறவுகள்

இனி சிங்களவன் ஒலிம்பிக்குக்குள்ளும் புலிகள் என்று கத்தப்போறாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவராலை எங்கடை மானம் பேச்சே மரியாதை பேச்சே பரம்பரியம் பேச்சே கலாச்சாரம் போச்சே ... சத்தியமா இதை நான் சொல்லவிலை..லை..லை..

http://www.youtube.com/watch?v=W-uu_pFJMBY

  • கருத்துக்கள உறவுகள்

மியா மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் இளைய சமூத்தில் எல்லோரும் இவரின் இசைக்கு அடிமை என்றும் இல்லை. அவர்களிடமும் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. இவரின் இசைப் பிரியர்களாகவும் பலர் உளர்.

தன் மீதான விமர்சனங்களை மியா தட்டிக்கழிப்பவர் அல்ல. அதன் மூலம் தன்னை மாற்றிக் கொள்ள பலப்படுத்திக் கொள்ளக் கூடியவர். மக்கள் மனம் நோக நடக்கக் கூடியவர் அல்ல என்பதையும் அவர் நிரூபித்து நிற்கிறார்.

மேலும் மியா.. இங்கு சிலர் போல.. முள்ளிவாய்க்காலுக்கு முன் ஒரு குணம்.. பின் ஒரு குணம் என்று நிற்கவில்லை. அவர் பெரும்பாலும் நிலை தளராமல் இருப்பதை காண முடிகிறது..!

அதுமட்டுமன்றி அவர் தான் சார்ந்த சமூகத்தின் தேவை என்ன என்பதை உணர்ந்திருக்கக் கூடிய ஒருவராக தன்னை வெளிக்காட்டி வருவதில்.. அவர் மீது தனி மரியாதையை வளர்த்தெடுத்திருப்பது அவரை மதிக்கச் செய்கிறது..! இதை எவர் செய்தாலும் அவர்கள் மீது மதிப்பு உயரும். அதைவிட்டு காலத்திற்கு கோலம் மாறும் பச்சோந்திகளை எவரும்.. உயர்த்திப் பிடிக்கமாட்டார்கள்..!! அது மியாவாக இருந்தாலும் நடந்தே தான் ஆகும். அப்படி ஒரு நிலைக்கு மியா தன்னைக் கொண்டு செல்லமாட்டார் என்ற நம்பிக்கையையும் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார்.. கடந்த சில ஆண்டுகளில்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

மேலும் மியா.. இங்கு சிலர் போல.. முள்ளிவாய்க்காலுக்கு முன் ஒரு குணம்.. பின் ஒரு குணம் என்று நிற்கவில்லை. அவர் பெரும்பாலும் நிலை தளராமல் இருப்பதை காண முடிகிறது..!

அதுமட்டுமன்றி அவர் தான் சார்ந்த சமூகத்தின் தேவை என்ன என்பதை உணர்ந்திருக்கக் கூடிய ஒருவராக தன்னை வெளிக்காட்டி வருவதில்.. அவர் மீது தனி மரியாதையை வளர்த்தெடுத்திருப்பது அவரை மதிக்கச் செய்கிறது..! இதை எவர் செய்தாலும் அவர்கள் மீது மதிப்பு உயரும்.

----

மிகச் சரியான கருத்து நெடுக்ஸ்.

இதனாலேயே... எனக்கு, மியாவின் மேல் முன்பிருந்ததைவிட இப்போது அதிக அபிமானம் கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

இவராலை எங்கடை மானம் பேச்சே மரியாதை பேச்சே பரம்பரியம் பேச்சே கலாச்சாரம் போச்சே ... சத்தியமா இதை நான் சொல்லவிலை..லை..லை..

இங்கு யாழில் தான் கொஞ்சப் பேர் சொன்னவை...சொன்னவையில் சிலருக்கு இப்ப மியா நல்லவவாம் :D ...மியாவின் பாட்டு ஒலிம்பிக் இடம் பெறுவதையிட்டு ஒரு தமிழராய் எனக்கும் பெருமை

  • கருத்துக்கள உறவுகள்

இவராலை எங்கடை மானம் பேச்சே மரியாதை பேச்சே பரம்பரியம் பேச்சே கலாச்சாரம் போச்சே ... சத்தியமா இதை நான் சொல்லவிலை..லை..லை..

பொத்தாம் பொதுவாய்... சொன்னால் எப்பிடி நாம் நம்புவது :rolleyes: .

அதற்குரிய, ஆதாரத்தை சபையோர் முன்... சாத்திரியும், ரதியும் முன்வைக்க வேணும். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மியா எப்பொழதும் தமிழ்சமுகத்தின் முன்னேற்றததில் அக்கறை கொள்பவராக இருந்து வருகிறார்.காற்றடிக்கும் பக்கம் காலத்திற்குக் காலம் சாயாமல் இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்.அவரால் தமிழீழத்திற்குப் பெருமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த சூரியன் கூட பொருளாசை என்ற நோய் கொண்டால் மானம் பிழைதவனுக்கும் பாதபூசை செய்யும் காலம் இது.

வைரமுத்து, வாலி என்னும் பட்டத்து யானைகள் சிறுமதி அரசன் முன் வித்தை காட்டிப் பிழைக்கின்ற; வசதிக்கு தன்மானம் கால்பிடிக்கின்ற இந்தக் காலத்தில்!

பொதுவாழ்கை நோக்கிய தன் சிந்ததனை தன் சொந்த முன்னேற்றத்தின் வசதிக்கு பெரும் தடைக்கல் ஆனபோதும் கொள்கை மாறாமல் தைரியத்தோடு தன் நெஞ்சில் நிலை நிறுத்திய மாயாவின் வெற்றிகள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு தமிழனையும் தன் சொந்த வெற்றிகளாய் எண்ணிக் களிப்படைய வைக்கின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.