Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

Featured Replies

இங்கு கருத்து எழுதினயவர்கள் ....திருமணமாகி புலத்தில் வாழ்ந்தால் தங்களுக்கு எத்தனை பிள்ளை என்று முதலில் சொல்லுங்...கோ....பிறகு ஏன் அடுத்த பிள்ளை பெறவில்லை என்பதயும் சொல்லுங்கோ....பிள்ளைகள் இல்லாவிடில் பந்தியாக எழுதி மற்றவனை பிள்ளை பெறு என்று சொல்லக்கூடாது அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை....

திருமணமாகாதவர்களும் கருத்து தெரிவிக்கலாம் தானே? கருத்து எழுதியவர்களில் யாராருக்கு பிள்ளை இருக்கு, எத்தனை அல்லது யாராருக்கு பிள்ளை இல்லை என்றெல்லாம் எனக்கு தெரியாது.

ஆனால் இத்திரியில் தாயகத்திலுள்ளவர்களை தான் பிள்ளை பெற சொல்லியிருக்கு.

புலம்பெயர்ந்தவர்கள் பகலிரவு வேலைக்கு சென்றால் பிள்ளைகளை கவனிப்பது கடினம், பாடசாலைக்கு கூட்டி சென்று வருவது கடினம். தாயகத்தில் பெற்றோர் வேலைக்கு சென்றாலும் மாலை வீடு திரும்புவார்கள். பிரச்சினைகள் மத்தியிலும் பிள்ளைகள் தனியாக பாடசாலை சென்று வருகிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தையும் தாயகத்தையும் ஒப்பிட முடியாது.

தாயகத்திலுள்ளவர்களில் ஒருபகுதியினராவது தமிழினத்தின் தேவை அறிந்து நடப்பார்கள். (இந்த திரியை பார்த்த பிறகாவது) அவர்களை குழந்தை பெற கூடாது என்று சொல்ல உங்களுக்கும் எந்த தகுதியும் இல்லை. அதற்கு ஆதரவாக கதைப்பவர்களை கதைக்க வேண்டாம் என்று சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை.

இந்த திரியில் தாயகத்திலுள்ளவர்கள் பிள்ளை பெறுவதை ஊக்குவிக்க தான் சொல்லியிருக்கு. கட்டாயப்படுத்த சொல்லேல்லை.

  • Replies 145
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் பகலிரவு வேலைக்கு சென்றால் பிள்ளைகளை கவனிப்பது கடினம், பாடசாலைக்கு கூட்டி சென்று வருவது கடினம். தாயகத்தில் பெற்றோர் வேலைக்கு சென்றாலும் மாலை வீடு திரும்புவார்கள். பிரச்சினைகள் மத்தியிலும் பிள்ளைகள் தனியாக பாடசாலை சென்று வருகிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தையும் தாயகத்தையும் ஒப்பிட முடியாது.

புலம்பெயர் தமிழரில் எத்தனை வீதம் இருவரும் வேலை செய்கிறார்கள்?

புலம் பெயர் தேசத்தில் பாடசாலைக்கு கூட்டிப்போய் வருவதில் என்ன இடர்பாடு?

இங்கு இருவரும் வேலை செய்தால் அதற்கான ஒழுங்குகளை அரசே செய்கிறது

வேலை செய்த பெண் பிள்ளை காரணமாக வீட்டில் நின்று பிள்ளையைப்பார்ப்பது என்றாலும் அவரது வருமானத்தை குறையாமல் கவனித்துக்கொள்கிறது

மருத்துவ வசதிகள் இலவசம்

பிள்ளையின் பருவ வயது வரும்வரை ஒரு தொகைப்பணம்

போக்குவரத்திலிருந்து பாடசாலை மற்றும் புத்தகங்கள்வரை இலவசம்

எனவேவ புலம் பெயர் தேசத்தவர் பிள்ளை பெறாமைக்கு வேறு காரணங்களே இருருக்கமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலுள்ளவர்களில் ஒருபகுதியினராவது தமிழினத்தின் தேவை அறிந்து நடப்பார்கள். (இந்த திரியை பார்த்த பிறகாவது) அவர்களை குழந்தை பெற கூடாது என்று சொல்ல உங்களுக்கும் எந்த தகுதியும் இல்லை. அதற்கு ஆதரவாக கதைப்பவர்களை கதைக்க வேண்டாம் என்று சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை.

இந்த திரியில் தாயகத்திலுள்ளவர்கள் பிள்ளை பெறுவதை ஊக்குவிக்க தான் சொல்லியிருக்கு. கட்டாயப்படுத்த சொல்லேல்லை.

புத்தன்

எமது மிகப்பழைய உறுப்பினர்.

அப்படி ஒருவருக்கு இது போன்ற வார்த்தைகளை பாவிக்காதீர்கள் கா...

கருருத்துச்சொல்லுலும் உரிமை எல்லோருக்குகம் உண்டு. அதில் வயதோ உறுப்பனரின் கால எல்லைகளோ தலையிட முடியாது. ஆனால் தமிழரின் பண்பு என்ற ஒன்று உண்டல்லவா..

(இது அண்ணனாக மட்டும்)

திரியுடன் சம்பந்தப்படும் கருத்து என்பதால் அதற்கு பதில் எழுதினேன்.

புலம்பெயர் தமிழரில் எத்தனை வீதம் இருவரும் வேலை செய்கிறார்கள்?

புலம் பெயர் தேசத்தில் பாடசாலைக்கு கூட்டிப்போய் வருவதில் என்ன இடர்பாடு?

இங்கு இருவரும் வேலை செய்தால் அதற்கான ஒழுங்குகளை அரசே செய்கிறது

வேலை செய்த பெண் பிள்ளை காரணமாக வீட்டில் நின்று பிள்ளையைப்பார்ப்பது என்றாலும் அவரது வருமானத்தை குறையாமல் கவனித்துக்கொள்கிறது

மருத்துவ வசதிகள் இலவசம்

பிள்ளையின் பருவ வயது வரும்வரை ஒரு தொகைப்பணம்

போக்குவரத்திலிருந்து பாடசாலை மற்றும் புத்தகங்கள்வரை இலவசம்

எனவேபுலம் பெயர் தேசத்தவர் பிள்ளை பெறாமைக்கு வேறு காரணங்களே இருருக்கமுடியும்..

ஆம் அண்ணா,

ஆனால் புத்தன் அண்ணா பிள்ளைகளை கவனிக்க முடியாது என்பதற்கு அவற்றை காரணமாக நினைத்து சொல்லியிருப்பார் என்று நினைத்து சொன்னனான். :)

புத்தன்

எமது மிகப்பழைய உறுப்பினர்.

அப்படி ஒருவருக்கு இது போன்ற வார்த்தைகளை பாவிக்காதீர்கள் கா...

கருருத்துச்சொல்லுலும் உரிமை எல்லோருக்குகம் உண்டு. அதில் வயதோ உறுப்பனரின் கால எல்லைகளோ தலையிட முடியாது. ஆனால் தமிழரின் பண்பு என்ற ஒன்று உண்டல்லவா..

(இது அண்ணனாக மட்டும்)

நன்றி. இனிமேல் பாவிக்கவில்லை. :) அவர் மற்றவர்களுக்கு(புலம்பெயர் தேசத்தில் பிள்ளை பெறாதவர்கள்/ குறைந்த பிள்ளைகளை பெற்றவர்கள்) கருத்து சொல்ல தகுதியில்லை என்று சொன்னதால் தான் நானும் அப்படி சொன்னனான். ஒரு வார்த்தை பிரயோகம் அவர்களை தாக்கும் போது தான் அதன் வலி அவர்களுக்கு தெரியும். (அதற்காக கேவலமாக கதைக்கும் வார்த்தைகளை அவர்களுக்கெதிராக மீண்டும் நான் பாவிக்க மாட்டன். :))

இனி இதையும் தவிர்க்கிறன். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. :)

புத்தன் அண்ணா,

நீங்கள் அந்த வார்த்தையை பிரயோகித்ததால் தான் நானும் பிரயோகித்தன். நான் இப்பிடி சொல்லிப்போட்டன் என்றதுக்காக நீங்கள் நிறுத்த வேணுமெண்டும் இல்லை. :D

என்றாலும் அது பிழை தான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ. :) கருத்து எழுதும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தாயகத்திலுள்ளவர்களில் ஒருபகுதியினராவது தமிழினத்தின் தேவை அறிந்து நடப்பார்கள். (இந்த திரியை பார்த்த பிறகாவது) அவர்களை குழந்தை பெற கூடாது என்று சொல்ல உங்களுக்கும் எந்த தகுதியும் இல்லை. அதற்கு ஆதரவாக கதைப்பவர்களை கதைக்க வேண்டாம் என்று சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை.

பிள்ளை பெறுவது என்பது இருவர் சம்பந்தப்பட்ட விடயம்.ஒருவருக்கு பிள்ளை பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் மற்றவருக்கு விருப்பமில்லாமல் இருக்கும் .இதற்கு பல காரணங்கள் உண்டு.புலத்தில் பல வசதிகள் இருந்தும் அநேகர் இரு குழந்தைக்கு அதிகமாக பெறுவதில்லை .இரு குழந்தைகளும் ஆண் குழந்தையாக இருந்தால் வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வேணும் என நினைத்து அடுத்த குழந்தையை பெறுவதில்லை..நாம்.....இந்த நிலையில் இனத்துகாக 5 பெறுவார்களா?பொருளாதரத்தில் வசதி படைத்த தாயகத்தவரும் இரண்டு குழைந்தைக்கு அதிகமாக பெறுவதில்லை...புலத்தில் பணம் கொடுத்து பிள்ளை பெறு என்றாலும் பெறாத நாம் தாயக மக்களுக்கு எப்படி அறிவுரை சொல்ல முடியும்?

புத்தன் அண்ணா,

நீங்கள் அந்த வார்த்தையை பிரயோகித்ததால் தான் நானும் பிரயோகித்தன். நான் இப்பிடி சொல்லிப்போட்டன் என்றதுக்காக நீங்கள் நிறுத்த வேணுமெண்டும் இல்லை. :D

என்றாலும் அது பிழை தான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ. :) கருத்து எழுதும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. :)

நன்றிகள் காதல் கருத்தாடலில் இது எல்லாம் சகஜம்...மன்னிப்போம் மறப்போம்

புத்தன்

எமது மிகப்பழைய உறுப்பினர்.

அப்படி ஒருவருக்கு இது போன்ற வார்த்தைகளை பாவிக்காதீர்கள் கா...

கருருத்துச்சொல்லுலும் உரிமை எல்லோருக்குகம் உண்டு. அதில் வயதோ உறுப்பனரின் கால எல்லைகளோ தலையிட முடியாது. ஆனால் தமிழரின் பண்பு என்ற ஒன்று உண்டல்லவா..

(இது அண்ணனாக மட்டும்)

நன்றிகள் விசுகு ...நானும் தப்பாக எழுதிபோட்டன் போல கிடக்கு....மீண்டும் நன்றிகள்

Edited by putthan

நன்றிகள் காதல் கருத்தாடலில் இது எல்லாம் சகஜம்...மன்னிப்போம் மறப்போம்

நன்றி புத்தன் அண்ணா. :) :) :)

  • தொடங்கியவர்

போனவருட கணக்கெடுப்பின்படி அவுஸில் 51,000 தமிழர்களாம். கப்பலில் வந்துசேர்பவர்களையும் சேர்க்க இன்னும் சில ஆயிரம் கூடும்.

ஒரு பிள்ளை பெற்றால் அரசாங்கம் 6,000 டொலர்களைக்கொடுக்கும். 7 இலட்சம் இலங்கைக் காசு. (ஒவ்வொரு பிள்ளைக்கும்)

[size=4]ஏன் இந்த அரசு இவ்வாறு பணம் கொடுக்கின்றது என்பதை எழுத முடியுமா?[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலும் பிள்ளை ஊக்கிவிப்பு பணம் கொடுக்கிறார்கள். :D

[size=4]ஏன் இந்த அரசு இவ்வாறு பணம் கொடுக்கின்றது என்பதை எழுத முடியுமா?[/size]

இலங்கையை விட 120 மடங்கு பெரிய நாடு. இலங்கையின் சனத்தொகை.

பிள்ளையை பெத்துதள்ளுங்கோ என்று சொல்லி Baby Bonus கொடுக்கிறார்கள். :D

அதோட சன‌த்தொகையில் கணிசமான பங்கு வயதாகிக் கொண்டு போகிறது. சனத்தொகை பெருகும் விகிதமும் குறைவு.

  • தொடங்கியவர்

[size=4]கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்ட்டாரியோ மாநிலத்தில் ஊக்குவிப்பு பணம் கொடுப்பதில்லை. ஆனால் பிள்ளை ஒன்றிற்கு வரிச்சலுகையாக, அதாவது நீங்கள் செலுத்திய வரியின் ஒரு பகுதியை மீளப்பெறுதல், 7000 டாலர்கள் வரை பயன்படுத்தலாம். அதாவது உதாரணத்திற்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் நீங்கள் செலுத்திய வரியில் 14000 டாலர்களுக்கு ஒருபகுதி மீளத்தரப்படும்.[/size]

[size=1]

[size=4]கனடாவின் க்யூபெக் மாநிலத்தில் பிள்ளைகளை பெற்றோர் விட்டு விட்டு வேலைக்கு செல்லும்பொழுது அவர்கள் செலுத்தவேண்டிய பணம் கிட்டத்தட்ட எட்டு டாலர்கள் கிழமைக்கு. ஒண்டாரியோ மாநிலத்தில் ~ 200 டாலர்கள் கிழமைக்கு. [/size][/size]

[size=4]கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்ட்டாரியோ மாநிலத்தில் ஊக்குவிப்பு பணம் கொடுப்பதில்லை. ஆனால் பிள்ளை ஒன்றிற்கு வரிச்சலுகையாக, அதாவது நீங்கள் செலுத்திய வரியின் ஒரு பகுதியை மீளப்பெறுதல், 7000 டாலர்கள் வரை பயன்படுத்தலாம். அதாவது உதாரணத்திற்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் நீங்கள் செலுத்திய வரியில் 14000 டாலர்களுக்கு ஒருபகுதி மீளத்தரப்படும்.[/size]

[size=1][size=4]கனடாவின் க்யூபெக் மாநிலத்தில் பிள்ளைகளை பெற்றோர் விட்டு விட்டு வேலைக்கு செல்லும்பொழுது அவர்கள் செலுத்தவேண்டிய பணம் கிட்டத்தட்ட எட்டு டாலர்கள் கிழமைக்கு. ஒண்டாரியோ மாநிலத்தில் ~ 200 டாலர்கள் கிழமைக்கு. [/size][/size]

இது நல்லா இருக்கே. எத்தனை வருடங்கள் இப்படி Tax Rebate எடுக்கலாம் ?

இங்கேயும் 50% child care refund claim எடுக்கலாம்.

இங்கிலாந்தில் இந்த பிள்ளை ஊக்குவிப்புப் பணம் கொடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இந்த பிள்ளை ஊக்குவிப்புப் பணம் கொடுப்பதில்லை.

அதுசரி.. :D அங்கை உள்ள சனத்தொகைக்கு ஊக்குவிப்பு வேறை தேவையா??!! :lol:

  • தொடங்கியவர்

இது நல்லா இருக்கே. எத்தனை வருடங்கள் இப்படி Tax Rebate எடுக்கலாம் ?

இங்கேயும் 50% child care refund claim எடுக்கலாம்.

[size=4]14 வயது வரை என நினைக்கிறேன்.[/size]

[size=4]இதை விட என்பதும் உண்டு. அதாவது குறிப்பிட்ட வருமானத்திற்கு குறைவாக எடுப்பவர்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் குறிப்பிட்ட பணத்தை அரசு தரும்.[/size]

இங்கிலாந்தில் இந்த பிள்ளை ஊக்குவிப்புப் பணம் கொடுப்பதில்லை.

ஊக்கிவிப்பும் குடுத்தா 10 வருசத்தில இங்கிலாந்து, பாக்கிலாந்து என்டு பெயர மாத்த வேண்டியது தான்.

திருமணமாகாதவர்களும் கருத்து தெரிவிக்கலாம் தானே? கருத்து எழுதியவர்களில் யாராருக்கு பிள்ளை இருக்கு, எத்தனை அல்லது யாராருக்கு பிள்ளை இல்லை என்றெல்லாம் எனக்கு தெரியாது.

ஆனால் இத்திரியில் தாயகத்திலுள்ளவர்களை தான் பிள்ளை பெற சொல்லியிருக்கு.

புலம்பெயர்ந்தவர்கள் பகலிரவு வேலைக்கு சென்றால் பிள்ளைகளை கவனிப்பது கடினம், பாடசாலைக்கு கூட்டி சென்று வருவது கடினம். தாயகத்தில் பெற்றோர் வேலைக்கு சென்றாலும் மாலை வீடு திரும்புவார்கள். பிரச்சினைகள் மத்தியிலும் பிள்ளைகள் தனியாக பாடசாலை சென்று வருகிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தையும் தாயகத்தையும் ஒப்பிட முடியாது.

தாயகத்திலுள்ளவர்களில் ஒருபகுதியினராவது தமிழினத்தின் தேவை அறிந்து நடப்பார்கள். (இந்த திரியை பார்த்த பிறகாவது) அவர்களை குழந்தை பெற கூடாது என்று சொல்ல உங்களுக்கும் எந்த தகுதியும் இல்லை. அதற்கு ஆதரவாக கதைப்பவர்களை கதைக்க வேண்டாம் என்று சொல்லவும் உங்களுக்கு தகுதி இல்லை.

இந்த திரியில் தாயகத்திலுள்ளவர்கள் பிள்ளை பெறுவதை ஊக்குவிக்க தான் சொல்லியிருக்கு. கட்டாயப்படுத்த சொல்லேல்லை.

ஒரு கருத்தை வெளிவிடும் முன் நீங்கள் செய்து பார்க்க வேண்டிய "அசிட்" சோதனை அந்தக் கருத்து ஜனநாயக இயல்பானதா இல்லை விரோதியானதா என்பதுவே. அதை நடை முறைபடுத்துவதில் உடல் ரீதியான வலோற்காரம் சம்பந்தபடுகிறதா இல்லையா என்பது சேர்க்கப் படுவதில்லை. அநாவசிய குற்ற உணர்வை விதைப்பதால் பல வலோற்காரங்கள் இடம்பெறவது இயல்பு. தனிமனித வாழ்க்கையை வைத்து சொல்ல்ப்படும் கருத்துக்கள் நாளடைவில் வலோற்காரத்தை வளர்க்கும். அவற்றை முளையிலேயே கிள்ள வேண்டும். சிலகருத்துகள் மக்களால் தேவையில்லாத உணர்சி பூர்வமாக மதிக்கப்பட்டு உள்குரோதங்களை விளைவிக்கும். இப்படியான கருத்துக்கள் வேளியே எக்காரணம் கொண்டும் விடத்தகாதவை. முஸ்லீம் தீவிரவாதிகள் முகத்தை மூடிமறைக்க மறுக்கும் பெண்களை இலகுவில், தாய், தந்தை அண்ணன் அக்கா தங்கை எல்லோரை பாவித்தே தண்டிக்க முடிகிறது. இந்த வலோற்கார சுதந்திர மறுப்பு நடத்தையை சமுதாய மக்கள் தங்கள் சுதந்திரம் எது என்பதை அறியாத நிலையிலிருந்து ஒருவர்மீது ஒருவர் அப்பாவித்தனமாக பிர்யோகித்து கொள்கிறார்கள். இவை ஒரு காலத்தில் கோணல் புத்தி படைத்த தொலை நோக்கற்ற அறிஞர்களால் வேறு ஒரு பிர்ச்சனைக்கு விடைகளாக சமுதாயத்தின் முன் வைக்கப்படவைதாம்.

ஒரு ஜனநாயக அரசாங்கம் தனது மக்களின் குடிப்பரம்பலை கொடுப்பவனவுகளின் மூலம் மாற்ற விரும்புவதை தனிமனித வாழ்கை பற்றிய கருத்துக்களுடன் சேர்த்துக்குழம்பக் கூடாது. இப்படியான கருத்துக்கள் அரசியல் வங்குறொத்துக்களை காட்டுவதாக நினைத்து தட்டிக்கழித்து விடமுடியாது. இவை மிக ஆபத்தான தொடக்கம். இவையின் மறுவளம் சமுதாயத்தின் நாகரிக இயல்பாகிய பெண் சுதந்திரத்தை மறுப்பதாகும். பெண் சுதந்திரம் மறுக்க பட்டிருக்கும் (அறியாமையால் அல்லது அடக்குமுறையால்) சமுதாயங்களில்த்தான் தமது சந்தோஷ வாழ்கையை கெடுத்து கொள்ளத்தக்கதாக பிள்ளைகள் பெற்றுகொள்ள வேண்டி வருகிறது என்பது பிள்ளி விபரங்களால் நிரூபிக்கபட்ட உண்மை.

சிங்களர் எங்களை விட கூடவா குறையாவா என்பதை வைத்து நாம் எமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க தேவை இல்லை. நாம் சிறுபான்மை என்பதுதான் பிர்ச்சனை. ஆனால் அதை பிழையான திசையில் விளங்கி கொள்ளக்கூடாது.

அதுசரி.. :D அங்கை உள்ள சனத்தொகைக்கு ஊக்குவிப்பு வேறை தேவையா??!! :lol:

இல்ல...... ஊக்குவிப்புத் தொகை தந்தால் நாங்களும் கொஞ்சம் உற்சாகமாகச் செயற்படலாம் என்ற நப்பாசைதான். :D

மற்றும்படி இங்க நிலககீளூர்ந்தில்( tube ) இல் பயணிக்கும் பொழுது கை எங்க கிடக்கு, கால் எங்க இருக்கு என்று தேட வேண்டியுள்ளது. :lol:

ஊக்கிவிப்பும் குடுத்தா 10 வருசத்தில இங்கிலாந்து, பாக்கிலாந்து என்டு பெயர மாத்த வேண்டியது தான்.

கொடுக்காவிட்டாலும் இன்னும் இருபது, முப்பது வருடங்களில் 'பாக்கிலாந்து' ஆகிவிடும்.

ஒரு கருத்தை வெளிவிடும் முன் நீங்கள் செய்து பார்க்க வேண்டிய "அசிட்" சோதனை அந்தக் கருத்து ஜனநாயக இயல்பானதா இல்லை விரோதியானதா என்பதுவே. அதை நடை முறைபடுத்துவதில் உடல் ரீதியான வலோற்காரம் சம்பந்தபடுகிறதா இல்லையா என்பது சேர்க்கப் படுவதில்லை. அநாவசிய குற்ற உணர்வை விதைப்பதால் பல வலோற்காரங்கள் இடம்பெறவது இயல்பு. தனிமனித வாழ்க்கையை வைத்து சொல்ல்ப்படும் கருத்துக்கள் நாளடைவில் வலோற்காரத்தை வளர்க்கும். அவற்றை முளையிலேயே கிள்ள வேண்டும். சிலகருத்துகள் மக்களால் தேவையில்லாத உணர்சி பூர்வமாக மதிக்கப்பட்டு உள்குரோதங்களை விளைவிக்கும். இப்படியான கருத்துக்கள் வேளியே எக்காரணம் கொண்டும் விடத்தகாதவை.

"இந்த திரியில் தாயகத்திலுள்ளவர்கள் பிள்ளை பெறுவதை ஊக்குவிக்க தான் சொல்லியிருக்கு. கட்டாயப்படுத்த சொல்லேல்லை." என்ற வரிகளில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. பின்னொரு நாளில் தென்பட்டால் நிச்சயம் தவிர்ப்பேன்.

முஸ்லீம் தீவிரவாதிகள் முகத்தை மூடிமறைக்க மறுக்கும் பெண்களை இலகுவில், தாய், தந்தை அண்ணன் அக்கா தங்கை எல்லோரை பாவித்தே தண்டிக்க முடிகிறது. இந்த வலோற்கார சுதந்திர மறுப்பு நடத்தையை சமுதாய மக்கள் தங்கள் சுதந்திரம் எது என்பதை அறியாத நிலையிலிருந்து ஒருவர்மீது ஒருவர் அப்பாவித்தனமாக பிர்யோகித்து கொள்கிறார்கள். இவை ஒரு காலத்தில் கோணல் புத்தி படைத்த தொலை நோக்கற்ற அறிஞர்களால் வேறு ஒரு பிர்ச்சனைக்கு விடைகளாக சமுதாயத்தின் முன் வைக்கப்படவைதாம்.

ஒரு ஜனநாயக அரசாங்கம் தனது மக்களின் குடிப்பரம்பலை கொடுப்பவனவுகளின் மூலம் மாற்ற விரும்புவதை தனிமனித வாழ்கை பற்றிய கருத்துக்களுடன் சேர்த்துக்குழம்பக் கூடாது. இப்படியான கருத்துக்கள் அரசியல் வங்குறொத்துக்களை காட்டுவதாக நினைத்து தட்டிக்கழித்து விடமுடியாது. இவை மிக ஆபத்தான தொடக்கம். இவையின் மறுவளம் சமுதாயத்தின் நாகரிக இயல்பாகிய பெண் சுதந்திரத்தை மறுப்பதாகும்.

பெண் சுதந்திரம் மறுக்க பட்டிருக்கும் (அறியாமையால் அல்லது அடக்குமுறையால்) சமுதாயங்களில்த்தான் தமது சந்தோஷ வாழ்கையை கெடுத்து கொள்ளத்தக்கதாக பிள்ளைகள் பெற்றுகொள்ள வேண்டி வருகிறது என்பது பிள்ளி விபரங்களால் நிரூபிக்கபட்ட உண்மை.

இதில் உண்மை இருக்கிறது. ஏற்றுக்கொள்கிறேன். அதையும் கருத்தில் கொண்டு தான் நான் கட்டாயப்படுத்த சொல்லேல்லை என்ற சொல்லை சேர்த்திருந்தேன்.

ஆனால் எம் நாட்டில் எத்தனை வீதமானோருக்கு அப்படி நடக்கிறது? இதனால் தனது சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று நினைக்காதவர்களால் ஏன் முடியாது?

பலர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் பொருளாதார வசதி இல்லை என்று நினைத்து தவிர்ப்பவர்களும் உண்டு. (பொருளாதார வசதியை இங்கு இழுப்பதற்கு மன்னிக்கவும்) அப்படியானவர்களும் உள்ளார்கள்.

அதே போல் கட்டாயப்படுத்தி கருத்தடை செய்விக்கப்படுவோர்களும் உண்டு. அப்படியானவர்களில் சிலரையாவது இந்த திரி இதிலுள்ள கருத்துகள் மாற்றாதா? இதனையே பல இணையங்கள் பத்திரிகைகளில் போட்டால், மக்களுக்கு பல கருத்தரங்குகளை நிகழ்த்தி அவர்களுக்கு புரிய வைத்தால் அவர்களில் ஒரு பகுதியினர் மாறலாம்.

சிங்களர் எங்களை விட கூடவா குறையாவா என்பதை வைத்து நாம் எமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க தேவை இல்லை. நாம் சிறுபான்மை என்பதுதான் பிர்ச்சனை. ஆனால் அதை பிழையான திசையில் விளங்கி கொள்ளக்கூடாது.

சிங்களர் எங்களை விட கூடவா குறையவா என்பதை வைத்து நாம் எமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க தேவை இல்லை தான். ஆனால் சிங்களவர்கள் எம்மை விட கூடவாக இருப்பதனால் சிங்கள குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் நிகழ்த்துகின்றனர்.

இதன் மூலம் வருங்காலத்தில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் வீதம் குறைந்து செல்வதற்கு தான் வாய்ப்பு உள்ளது. இந்த நிலை வரும் போது காலப்போக்கில் நாம் சிறுபான்மை என்பதை விட வடக்கு கிழக்கில் சிங்களவர்களுடனான எம் இன விகிதாசாரம் குறைந்து செல்லும். அதை காரணமாக வைத்து தனி சிங்கள சட்டம் கொண்டுவரப்படும். அது எம் இன அழிவிற்கு துணை போகும்.

இதை இன்றே தவிர்க்க முடியாது. ஆனால் அதிக குழந்தைகளை பெற விரும்புபவர்கள், தம் சுதந்திரம் மறுக்கப்படுவதாக கருதாதவர்கள், தமிழீழத்திற்காக அல்லது எம் இனத்திற்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள் இன்றிலிருந்து இதனை கருத்தில் கொண்டு நடந்தால் குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தை பெறலாம் என்பது என் கருத்து.

மக்கள் பெருக்க வீழ்ச்சி வீதத்தை விட மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் தான் தமிழர்களுக்கு அவசியம்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெறுதல் என்பது எந்த வகையிலும் எம்மால் எமது தாயகப்பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தக்க வைக்கவேண்டும் என்ற உந்துதலினால் வெளிப்பட்டிருக்கும் கருத்தாகும். அரசியல் தீர்வுகள் கிடைக்காது என்ற நிலையில் தமிழ் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அந்த மண்ணில் வாழக்கூடியவர்கள் இத்தகைய கருத்தைச் சொல்வதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் இன்னும் இருபது வருடங்கள் கழித்து எமது நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டுவிடுமா, அல்லது பெற்று வளர்க்கப்படும் பிள்ளைகள் குடும்பங்கள் இராணுவ ஒடுக்குமுறை காரணமாக தாயகப்பகுதியை விட்டு புலம் பெயர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆக பிள்ளைகள் பெறுவதால் உண்மையான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. தமிழர்களுக்கு வேண்டியது தம்முடைய நிலப்பகுதியில் தாம் அடிமைத்தனப்படுத்தப்படாமல் சுதந்திரமாக தன்னிறைவுடன் வாழும் சூழலே....அச்சூழல் பிள்ளைகள் அதிகம் பெறுவதால் கிடைக்கப்போவதில்லை. அங்குள்ளவர்களின் இக்கூற்றானது மிகப்பெரிய இயலாமையின் வெளிப்பாடே.... அந்த இயலாமையில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வழிகளைச் சமைப்பதன் மூலமே.... நாங்கள் நிமிர முடியும். இனஒடுக்குமுறையின் வெளிப்பாடான இராணுவ வன்முறையில் பல லட்சக்கணக்கான உயிர்களை இழந்து விட்ட நிலையில் இனப் பெருக்கம் முக்கியம் என்று நினைப்பது தவறல்ல...இருப்பினும் இப்போதே வாழ்விற்காக, ஒரு வேளை கஞ்சிக்காக எத்தனை பிரச்சனைகளை இராணுவ சூழலுக்குள் அங்கிருப்பவர்கள் கடக்க வேண்டியுள்ளது. முற்று முழுதாக ஆயுத முனையில் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய இடத்தில் புதிய வரவுகள் என்பது பருத்துவிடக்கூடிய வாய்ப்புகள் அரிது. இன்றிலும் பார்க்கக் குறைவான விகிதத்திலேயே இனிவரும் காலங்களில் பிள்ளைபேறுகள் இருக்கும். ஒரு சனநாயக வாழ்வு முறை அமையாமல் தமிழர் பகுதிகளை பாதுகாக்க முடியாது. அதற்கு அரசியல் தீர்வு என்பது மிக அவசியம். நீண்ட காலத்திற்கு அரசியல் தீர்வுகளும் எட்டாமல் போகுமானால் தமிழர் தாயகம் என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றுக் கூச்சல்களாக மாறிவிடக்கூடும்... புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து ஒரு அரசியல் தீர்வை உருவாக்க முடியாத நாங்கள் அங்குள்ளவர்கள் பிள்ளை பெறவேண்டும் என்று நினைப்பது நகைப்பிற்குரியது. தாயகம் சம்பந்தமான அனைத்து விடயங்களிலும் அங்கு வாழும் மக்களைப் போன்று புலம் பெயர்ந்த மக்களுக்கும் சம அளவு பங்குண்டு. அந்த சம அளவு பங்கை நாம் எந்தளவுக்கு செய்து முடித்திருக்கிறோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகள் பெற்றுகொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து உலகின் தலை சிறந்த அறிவார்ந்த சமுகமாக உருவாவதும் முக்கியம். தமிழன் தோற்றது காட்டிகொடுப்பும் துரோகம் நரித்தனமும் சுயநலமும் காரணம் என்றாலும் முக்கியமான கரணம் அறிவியல் வளர்ச்சி. அதற்குதான் நம்மால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டது. ஒரு சில கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றிவிட கூடியது. நாம் ஜெய்பது முக்கியம். இன அழிப்புகள் தொடர்ந்தாள் எதனை பிள்ளை பெற்றாலும் நம் நிலை மாறாது. வாய்ப்பு உள்ளவர்கள் அந்தந்த துறைகளில் முயலலாம் ஒரு குழுவாக கூட முயலாம்.

  • தொடங்கியவர்

[size=4] சாதாரணமாக எல்லா பெற்றோரும் தமது பிள்ளைகள் நல்ல சுகாதார வசதிகள் பெறவும், கல்வி + வேலைவாப்புக்கள் கிடைக்கவேண்டும் எனவும் விரும்புவார்கள்.தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் இந்த அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டதால் தான் ஆயுதப்போராட்டம் வரை சென்றனர். பலரும் புலம்பெயர்ந்து சென்றனர். [/size]

[size=4]ஒரு அரசியல் தீர்வு மூலம் இந்த உரிமைகள் கிடைத்தால் மட்டுமே அங்குள்ள தமிழர்கள் எதையும் செய்யலாம், சாதிக்கலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இந்த பிள்ளை ஊக்குவிப்புப் பணம் கொடுப்பதில்லை.

இங்கிலாந்தில் பிள்ளை பிறந்ததும் கொடுக்கினம் தானே.

இங்கிலாந்து உள்ளதுகளுக்கே வீடு காணாது.. இடம் காணாது என்று நிற்குது. அதிலும் முஸ்லீம்கள்.. குட்டி குட்டியா போட்டிட்டு.. வெள்ளையளின்ர வரிப்பணத்தில சொகுசா வாழினம். இதில.. காப்புலிகளும்.. தமிழர்களும்.. குறைவில்ல. தமிழர்கள் சராசரிக்கு 3 குட்டியாவது போடினம் (பொதுவா குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையை வைச்சுப் பார்க்கிறப்போ..) வெள்ளையள்.. ஒன்று அல்லது இரண்டு தான்.

============================பொதுவாக கருத்து ===============================

தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் குட்டி போட்டு.. தாயகத்தில உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வும் வரப்போறதில்ல. அப்படின்னா தமிழகத்தில் சிங்களவனை விட 5 மடங்கு தமிழர்கள் வாழ்ந்தும்.. ஒரு பெரும் இன அழிப்பை... வெறும் 30 கிலோமீற்றர்கள் தொலைவில் நடந்த இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியல்ல..! இந்த இலட்சணத்தில்.. புலம்பெயர் தேசங்களில் இருந்து... ஊருக்கு போக எண்ணம் கொள்ளாத ஒரு சமூகம் குட்டி போட்டு என்னத்தை சாதிக்கப் போயினம். எதுவும் இல்ல. இது புலம்பெயர் மண்ணில் அளவுக்கு அதிகமாக பிள்ளையைப் பெற்று அவற்றை பராமரிக்கச் சிரமப்பட்டு.. இறுதியில்... அவை.. தவறான வழியில் செல்லவே அனுமதிக்கும்.

ஏலவே காப்பிலிக்கு அடுத்ததா காங் வைச்சிருக்கிறது தமிழர்கள் தான் அதிகம். பெற்று.. காங்குகளை உருவாக்கி தமிழனுக்கு உள்ள கொஞ்ச நெஞ்ச மரியாதையும் நாசமாக்காம.. படிப்பறிவுள்ள.. பகுத்தறிவுள்ள ஜீவன்களாக செயற்பட்டு.. வீட்டுக்கு ஒன்றோ இரண்டோ பெத்து.. அதுகளை நாட்டிற்கும்.. உலகிற்கும் நல்ல பிரஜைகளா வளர்க்கிறதே நல்ல செயல்..! முதலில் அதைச் செய்யுங்கள்..! :)

பெறுறதுகள.. ஒன்றிரண்டையாவது... உருப்படியா.. தாயகப் பற்றோடு.. தமிழ் பற்றோடு வளர்க்கப் பாருங்க. சும்மா சங்கீதமும்.. பரதநாட்டியமும்.. மிருதங்கமும்.. வயலினும்.. பழகி.. சேலையும்.. வேட்டியும்..கட்டினாப் போல.. கோயிலுக்குப் போனாப் போல...தமிழ் பள்ளிக்குப் போனாப் போல.. அது தமிழ்.. தாயகப் பற்று என்றாகிடாது. அது மனதளவில்.. உணர்வளவில் கட்டி எழுப்பப்பட வேண்டிய ஒன்று. அதை இன்று எத்தனை பேர் செய்யினம் என்பதே கேள்விக்குறி..??! இதில் அடுத்த தலைமுறையில் எத்தனை அதைத் தொடரும் என்பதும் இன்னும் பெரிய கேள்விக்குறி..???1

இதில்.. குட்டி குட்டியா போடு என்பது சரியான அறிவுறுத்தலாக இருக்க முடியாது.

தாயக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழிடம் இன்றி.. வருமானம் இன்றி.. வறுமையில் கிடக்கும் இவ்வேளையில் குட்டி போடு என்று சொல்வது.. அது சுலபம். ஆனால்.. பெறுபவற்றை பராமரித்து.... உருப்படியா வளர்க்க வேண்டுமே..???! புலம்பெயர் மண்ணில் இருந்து தொடர் உதவி போகும் என்பது வெறும் கனவே அன்றி.. நடைமுறை யதார்த்தத்திற்கு அது உதவாது..! இன்று.. எத்தனையோ தாயக மக்கள் வறுமையில் வாட அவைக்கு உதவ முன்வராத புலம்பெயர் தமிழர் கூட்டம்.. நாளை பிள்ளை பெற்று அது வளர உதவப் போயினமாக்கும். உள்ளதைக் காப்பாற்ற முடியல்ல.. இல்லாததை காப்பாற்றப் போயினமாக்கும்..???! சும்மா வெட்டிக்கு அளந்து கட்டாம.. நடக்கிறதா.. தமிழர்களால் முடியக் கூடியதா... கதையுங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

அது சரி, கட்டை பிரம்மச்சாரிகளுக்கு சம்சாரிகளின் இடத்தில் என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, கட்டை பிரம்மச்சாரிகளுக்கு சம்சாரிகளின் இடத்தில் என்ன வேலை?

தமிழ்..சம்சாரிகளுக்கும்.. சோத்து ஆன்ரிகளுக்கும்.. இது ஆகப் போற விசயமில்ல என்பதால.. ஏதாவது குளோனிங்.. கிளோனிங் சாத்தியப்படுமோ என்று அலசி ஆராயத்தானே வேணும்..! அது தான். :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.