Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாண ...மண்வாசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1966 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் நான் முதல் காலடி எடுத்து வைத்தேன்.எனது ஆரம்ப கல்வியை அந்த கிராமப்பாடசாலையில்தான் ஆரம்பித்தேன். தற்பொழுது அது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அன்று மகாவித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்பொழுது பல்கலைகழகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது நாலு சிறிய கட்டிடம்தான் இருத்தது.எனது தந்தையார் அரச திணைக்களத்தில் தொழில் புரிந்தார்.அந்த கிராமத்தில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வேறு அரச சார்பு திணைக்களமும் இருந்தன.அநேகமான அரச உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர்.இது சில ஊர்வாசிகளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். முக்கியமாக படித்த சமுகத்தினரிடையே, எங்களுடைய வேலைஎல்லாம் வெளிமாவட்டத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் இருந்தபடியால் அவர்கள் தங்களது வெறுப்பை ஒரு விதத்தில் காட்டினார்கள்.வியாபார சமூகமும் ஒரளவு இதால் பாதிக்க பட்டிருக்கும்.யாழ்ப்பாண வியாபாரிகளும் இங்கு கடைகள் போட்டு இருந்தார்கள்.அந்த காலகட்டத்தில் எதிர்ப்பை வன்முறையால் காட்டவில்லை.யாழ்ப்பாணி, பனங்கொட்டை என அழைப்பதன் மூலம் தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பெரிதாக இதை கண்டுகொள்ளவில்லை காரணம் அவர்கள் கூலி வேலை செய்தால்தான் அன்றைய உணவு கிடைக்கும் யாழ்ப்பாணத்தான் அந்த மாகாணத்தை தெரிவு செய்தமைக்கு முக்கிய காரணம் மொழி தான். தனது கடமைகளை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கும் என்பதால் தெரிவு செய்திருந்தார்கள்.

அரச உத்தியோகத்தில் இருந்தோரின் பிள்ளைகளும் நானும் நண்பர்கள் ஆனோம்.தராதரம் எங்களை நண்பர்கள் ஆக்கிவிட்டது."டேய் பனங்கொட்டை" நான் திரும்பி பார்க்கவில்லை" ஏய் யாழ்ப்பாணி" என்றவுடன் திரும்பி பார்த்தேன் அவன் சிரித்தான்.ஆரம்பத்தில் எனக்கு ஒன்று புரியவில்லை காலப்போக்கில் அந்த பெயரால் பலர் அழைக்க தொடங்கினார்கள்.

தொடர்ந்து என்னை இப்படி அழைப்பதால் பெற்றோரிடம் சொன்னேன்.

"நான் முதலே சொன்னேன் உந்த மட்டக்களப்பில் இருந்து பிள்ளையை படிப்பிக்க ஏலாது ,நான் ஊரில் இருக்கிறேன் நீங்கள் மட்டும் இங்க வந்து வேலையை பாருங்கோ என்று,என்ட சொல்லைக் கேட்டால் தானே..."அமமா புலம்பத்தொடங்கிவிட்டார்.

அப்பா கண்டு கொள்ளவில்லை"அவன் யாழ்ப்பாணி என்று சொன்னால் நீ மட்டக்களப்பான் எனறு சொல்லுறதுதானே

ஆரம்பள்ளியை முடிச்சுப்போட்டு உயர்கல்வி படிக்க தொடங்க அவனை ஊருக்கு அனுப்பி படிப்பிப்போம் இப்ப அவன் இங்க படிக்கட்டும்" என அம்மாவை சமாதானப்படுத்தினார்.

காலப்போக்கில் எல்லாம் பழகிபோய்விட்டது அவன் யாழ்ப்பாணி என்றால் நான் மட்டக்களப்பான் என்று சொல்லுவேன். சில நேரம் ஆசிரியரிடம் கோல் மூட்டிவிடுவேன்.ஆசிரியரும் சிரித்து சமாளித்துவிடுவார்.அவரும்திருமணமாகாத இளம்வயதினர். ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் சிலருக்கு அந்த காலத்திலயே யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு இருந்தது.சாதாரண தொழிலாளிகள் இதுகளைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.மட்டக்களப்பில் உள்ள கல்வி சமூகத்திற்க்கு யாழ்ப்பாணி தங்களது அரச தொழில் வாய்ப்புக்களை எடுத்து கொள்கிறார்கள் என்ற ஆதங்கம்.

இரு மாவட்டதிலும் உயர்தர படிப்புக்கு மேல் படித்த மேதாவிகள்தான் இந்த பிரதேச விடயத்தை பெரிதாக கணக்கில் எடுப்பார்கள்."காக்கா இல்லாத ஊருமில்லை யாழ்ப்பாணி போகாத ஊருமில்லை" என்பது அந்த மாவட்டத்தில் ஒரு பேச்சு வழக்கா இருந்தது.

மட்டக்களப்பு பேச்சு முறை உச்சரிப்பு கொஞ்சம் வரத்தொடங்க அம்மா கடுப்பாகி உவனை இங்கு வைத்திருந்தால் மட்டக்களப்பார் மாதிரி கதைக்க போறான் விரைவில் ஊர்பாடசாலைக்கு மாற்ற வேண்டும் என அடம்பிடித்து யாழ்ப்பாண பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து முடித்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆறாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தேன்.அங்கு ஆசிரியர்

"எங்க முதல் படித்தாய் "

" செங்கலடியில் சேர்" .

பலருக்கு புரியவில்லை அது எங்கே இருக்கு என பலர் வினாவத்தொடாங்கினார்கள் .உடனே ஆசிரியர் எல்லோரையும் சத்தம் போடாதயுங்கோடா ,அது மட்டக்களப்பில் இருக்கு .அன்றிலிருந்து நான் மட்டக்களப்பான் ஆனேன்.ஆசிரியரும் சில நேரங்களில் டேய் மட்டக்களப்பு நீ சொல்லு என கேட்பதுண்டு.

நான் உயர்தரம்படிக்கும் பொழுது பலர் மட்டக்களப்பிலிருந்து எமது பாடசாலைக்கு படிக்க வந்தார்கள் (79, 80களில்) இதில் பல முஸ்லிம்களும் அடக்கம்..இங்கு படித்துவிட்டு மட்டக்களப்புக்கு சென்று உயர்தர பரீட்சை எடுப்பார்கள்.இதன் மூலம் குறைவாக புள்ளிகள் எடுத்தாலும் பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.இப்படி பலர் மருத்துவபீடம்,பொறியியல்பீடம் மற்றும் பீடங்களுக்கும் தெரிவிசெய்யப்பட்டார்கள்.

வேலைவாய்ப்புக்காக கொழும்பு சென்றேன்.இராணுவ சோதனைச்சாவடியில் அடையாள அட்டையை பரிசோதகர் கேட்க கொடுத்தேன் .

அதில் ஊரின் பெயர் இருந்தும் அந்த சிப்பாய்

"கம கோய்த"

தயக்கத்துடன் "யவ்னா"

"யாப்பானயத, பாக் பொட்டாக் அறின்ட"

சுட்கேஸ்ஸை திறந்து காட்டினேன் கிளறி பார்த்துவிட்டு .

"யன்ட"

தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு போட்டு சுட்கேஸ்சை பூட்டிப்போட்டு இடத்தைவிட்டு உடனடியாக நகர்ந்தேன். இதன் பின்பு இராணுவ சாவடிகளில் ஐ.டி. கேட்டு கம கோயத எண்டா யாப்பனய என்று சொல்லுவேன் .சில இராணுவத்தினர் சிரிப்பார்கள் ,சிலர் முறைத்துப்பார்ப்பார்கள்.எனது சிங்கள உச்சரிப்பை பார்த்துதான் அவர்கள் சிரித்திருபார்கள் என நினைக்கிறேன்.

கொழும்பில் இரண்டு இடத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.நேர்முக தேர்வுக்கு அழைத்திருந்தார்கள் . ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.தட்டுதடுமாறி பதில் சொன்னேன்.

“Are you from Jaffna”

“yes”

நிமிர்ந்து என்னை பார்த்தார்

..dangerous place

மேலும் சில கேள்விகள் பின்பு

.........................................

“we will inform you later”

கொழும்பில் வேலை செய்ய கொஞ்சம் பயமாக இருந்தது.இடம் எமக்கு சரிவராது எண்டு போட்டு இந்தியாவுக்கு போனேன்.அங்கு தமிழர்கள் அன்பாக பழகினார்கள். எனது தமிழின் உச்சரிப்பின் மூலம் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "நீங்க சிலோன் தமிழா"

"ஒம்"

உடனே அவர்களும் என்னை மாதிரி யாழப்பாணத் தமிழில் பேசுவதாக பேசினார்கள் .சகிக்க முடியாமல் இருந்தது .அந்த காலகட்டத்தில் மனோகராமா படத்தில் யாழ்ப்பாண தமிழில் பேசி நடித்திருந்தவ அதன் பாதிப்பு அந்த மக்களிடம் காணக்கூடியதாக இருந்தது.

மூன்று வருடங்கள் இந்தியாவில் மட்டை அடித்துவிட்டு.மீண்டும் கொழும்புக்கு வந்தேன் வேலைக்கு விண்ணப்பங்கள் போட்டேன் .பெயரை பார்த்து சிலர் அழைக்கவில்லை .ஒரு கொம்பனி மட்டும் அழைத்திருந்தார்கள்.

அதே கேள்விகள்.இதில் நான் சென்னையில் படித்த சான்றிதலும் இருந்த படியால் “you studied and worked in dangerous places” .........”we will inform later”

மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என பத்திரிகையில் பார்த்தவுடன் விண்ணப்பித்தேன்.சான்றிதழ்களுடன் சமூகமளிக்கும்படி கடிதம் அனுப்பியிருந்தார்கள் அவர்க.ள் பெயர் ஊர் ஒன்றும் பார்க்கவில்லை காரணம் அங்கு மனிதவளம் தான் தொழில் செய்ய தேவைப்பட்டிருக்கவேண்டும்.

சவுதி செல்ல தெரிவு செய்யப்பட்டேன்.மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு விசாவும் கைக்கு எட்டியது .விமான நிலையத்தில் ஒரே கூட்டம் அநேகர் மத்திய கிழக்கு செல்வதற்காக நின்றிருந்தார்கள். குடிவரவு திணைக்களதின் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் உள் சென்றேன்.விமானத்தில் அநேகர் முஸ்லிகளாக இருந்தார்கள்.முஸ்லிம்கள் எல்லோரும் தொப்பி போட்டிருந்தார்கள் .எனையோரில் அநேகர் சிங்களவர் .தமிழர்கள் நாலு ஜந்து இருந்திருப்போம்.

சவுதியில் டகரான் விமானநிலையத்தில் இறங்கியவுடன் அனல் காற்று முகத்தில் வீசியது.கொம்பனியின் முகவர் எங்களை இரண்டு பஸ்களில் ஏற்றினார். மந்தைகளை போல் அடிபட்டு ஏறினோம் .பஸ் வண்டி பாலைவனத்தில் ஒடி ஒருமணித்தியாலத்தின் பின்பு ஒர் முகாமில் எங்களை இறக்கி விட்டது.அங்கு மேற்பார்வையாளர் ஒரு சிங்களவர் உதவியாளராக ஒரு முஸ்லிமும் இருந்தார்.(இதைப்பற்றி கிறுக்குவது என்றால் பல விடயம் கிறுக்கலாம் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்) எல்லோருக்கும் படுக்கை விரிப்புக்கள் ,கோப்பை மற்றும் சில பொருட்களை கொடுத்து எமது தங்கும் இடத்தையும் காட்டினார்கள். அங்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

மேற்பார்வையாளர் சில கேள்விகளை கேட்டார் சிறிலங்காவில் எந்த இடம் .

நான் வழமையான பதில் யாழ்ப்பாணம் என்றேன்.

"கொட்டித"

சிரித்துவிட்டு....நீ ஜெ .வி.பி யோ எண்டு கேட்க வேணும் போல இருந்தது.ஆனால் கேட்கவில்லை. முதல் நாளே ஏன் வீண்வம்பு என தவிர்த்து கொண்டேன்.

அந்த தங்குமிடத்தில் 500 பேர் வரை தங்கமுடியும் .யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் அறிவுரை சொன்னார் யாரும் எந்த இடம் என்று கேட்டால் யாழ்ப்பாணம் என சொல்லவேண்டாம் கொழும்பு என சொல்லசொல்லி .ஆனால் நான் யார் கேட்டாலும் யாழ்ப்பாணம் என்றுதான் சொன்னனான்..

ஒரு நாள் பத்திரிகையை பார்த்தேன் அதில்

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிறிலங்கா இராணுவ தளபதி அதன் பெயரை "யாப்பாபட்டுவ"என மாற்றி ஜனாதிபதியிடம் ஒலைச்சுவடியை(????)கொடுத்து பெயரும் பட்டமும்(ஜெனரல்) பெற்றுக்கொண்டார்.இதை மத்திய கிழக்கில் உள்ள பத்திரிகைகள் படத்துடன் பிரசுரித்திருந்தன.பார்த்தவுடன் மனசு கஸ்டமாக இருத்தது .

இப்படி மத்திய கிழக்கு வாழ்க்கை முடித்து அவுஸ்ரேலியா வந்தன் .பல தடவை கொழும்புக்கு போய்வந்த பின்பு கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள எனது தாய் மாமனார் சுகவீனமுற்றிருந்தார். அவரை பார்ப்பதற்கு இந்தியா செல்வதற்கு விசா அனுமதிக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.இந்தியா தூதரகம் இரண்டு நாள் கழித்து வரும் படி சொல்லியிருந்தார்கள் .அவசரமாக செல்ல வேண்டும் உடனே தரமுடியுமா என கேட்டேன், இல்லை நீங்கள் பிறந்த இடம் யாழ்ப்பாணம் உங்களது விண்ணப்பத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி பின் இந்தியாவுக்கும் அனுப்பி கிலியரன்ஸ் எடுத்த பின்பு தான் தரமுடியும்,சில நேரம் மூன்று கிழமைக்கு மேல் எடுக்கும்... என்றார்கள்...40நாட்களின் பின்பு விசா வந்திருக்கு வந்து எடுக்கும் படி அழைத்தார்கள்...அதன்பின்பு நான் இந்தியாவுக்கு போகவில்லை.

அண்மையில் எனது. உறவுக்காரார் குடும்பத்துடன் சீனா போவதற்க்கு விண்ணப்பித்திருந்தார் .அவருக்கும் பிள்ளைக்கும் விசா உடனே கொடுத்திருந்தார்கள் ஆனால் அவரது மனைவிக்கு கொடுக்கவில்லை காரணம் அவர் பிறந்த இடம் யாழ்ப்பாணம்... இரண்டு நாட்களின் பின்புதான் கொடுத்தார்கள்.

புத்தன் அண்ணா, நீங்கள் 1960/1961 இல் பிறந்திருப்பியள் என்று நினைக்கிறன். :o கிட்டத்தட்ட என் அம்மாவின் வயசு. :o ஆனாலும் அண்ணா என்றே கூப்பிடுறன். :D

யாழ்ப்பாணம் என்ற ஒரு காரணத்தால் நீங்களும் கஸ்ரப்பட்டுட்டியள். :( யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களுக்கு நாட்டிலும் பிரச்சினை வெளிநாட்டிலும் பிரச்சினை தான். :(

நன்றி எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு. எழுத நினைக்கிறதெல்லாம் தொடர்ந்து யாழில் எழுதுங்கோ. :) மனசில் உள்ள பாரங்களை எல்லாம் கொட்டி தீருங்கோ. :) உங்கள் வேதனைகளில் நாமும் பங்கு கொள்ளுறம். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பகிர்வு [/size]

[size=5]http://leo-malar.blogspot.no/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மண்ணுக்கு உள்ள சிறப்பை?? அனுபவ ரீதியாக பகிர்ந்து கொண்ட புத்தனுக்கு நன்றிகள்.

முன்பு என்னுடன் வேலை செய்த அமெரிக்கருக்கும் எனக்கும் சிறிது வாக்கு வாதம் ஏற்பட்டு விட்டது.என்னை எந்த நாட்டவர் என தெரியும் என்பதால் அவர் என்னை புலி என கூறி ஒரு நக்கல் சிரிப்போடு என்னையும் பார்த்து எல்லோரையும் பார்த்தார்.உடனே ஒரு நொடியையும் வீணாக்கவில்லை. நீங்கள் அமெரிக்கர் தானே என்றேன்.அப்போ நீங்கள் கே.கே.கே (http://en.wikipedia.org/wiki/Ku_Klux_Klan) தானே என்றேன்.எல்லோரும் சிரித்தே விட்டார்கள்.குறிப்பாக இரண்டு கறுப்பர்கள் வேண்டுமென்றே பலமாக சிரித்து விட்டார்கள்.அசடு வழிய அவர் சென்று விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான அனுபவப் பகிர்வு, புத்தன்!

மட்டக்களப்பின் வளங்களையும், அவர்களது குணங்களையும் பார்த்த பிறகு, எனக்கு மட்டக்களப்பில் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் உண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான அனுபவப் பகிர்வு, புத்தனண்ணா.. :)

அன்றையிலிருந்து இன்றை வரைக்கும் இந்த நிலை மாறவேயில்லை.. :( அதே கேள்வி அதே பதில்..

அதுசரி.. நீங்கள் அசைலியோ? ஸ்டூடன்ட் விசாவோ?? இல்லை வேலை விசாவோ??? :rolleyes::lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் என்ன கிறுக்குவதாக சொன்னாலும்

அதை ஓடிவந்து பார்ப்பது வழமை

இதிலும் எமது தாயக வழமையை ஒரு பிடி பிடித்துள்ளார்

எனக்கும் இதே நிலை படிக்கும்போ இருந்தத. அதை இங்கு ஏற்கனவே பதிந்துள்ளேன்.

எல்லாவற்றை சாதகமாக பார்க்கணும்

இல்லை சாதகமாக ஆக்கிக்கொள்ளணும்.

அதையே புத்தனும்இங்கு சொல்லி நிற்கிறார்.

நன்றி

அனுபவப்பதிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலம்பெயர்ந்த ஆரம்ப நாட்களில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஊரில் எந்த இடம் என்று கேட்டபோது, எப்போதும் ஊர் என்றால் யாழ்ப்பாணம் என்று எல்லோரும் நினைத்துக்கொள்வதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நான் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் "வடமராட்சி" என்று சொன்னேன். கேட்டதும்தான் தாமதம், எந்தவூர் என்று கேள்வி கேட்டவர் "உங்களாடலதானடா இவ்வளவு சீரழிவும்" என்று கையை ஓங்கிக் கத்தியபடி பாய்ந்து வந்தார்.. நல்லகாலம் அடி விழ முதல் மற்றவர்கள் தடுத்துவிட்டார்கள்! பின்னர் விசாரித்தபோது அவர் கிழக்கில் காரைதீவைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொண்டேன். காலப்போக்கில் நண்பர் ஆகிவிட்டார்!

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் "ஊரில் எவ்விடம்" என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்லுவதில்லை. சொன்னாலும் வடமராட்சி என்று சொல்லுவதில்லை!

அதுசரி.. நீங்கள் அசைலியோ? ஸ்டூடன்ட் விசாவோ?? இல்லை வேலை விசாவோ??? :rolleyes::lol: :lol: :icon_idea:

மத்தியகிழக்கு நாட்டுக்கு வேலைவிசாவில் தான் போயிருக்கிறார். ஆனால் அவுஸ்திரேலியாவில் என்ன விசாவில் இருக்கிறார் என்று தெரியாது.

மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என பத்திரிகையில் பார்த்தவுடன் விண்ணப்பித்தேன்.சான்றிதழ்களுடன் சமூகமளிக்கும்படி கடிதம் அனுப்பியிருந்தார்கள் அவர்க.ள் பெயர் ஊர் ஒன்றும் பார்க்கவில்லை காரணம் அங்கு மனிதவளம் தான் தொழில் செய்ய தேவைப்பட்டிருக்கவேண்டும்.

சவுதி செல்ல தெரிவு செய்யப்பட்டேன்.மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு விசாவும் கைக்கு எட்டியது .விமான நிலையத்தில் ஒரே கூட்டம் அநேகர் மத்திய கிழக்கு செல்வதற்காக நின்றிருந்தார்கள். குடிவரவு திணைக்களதின் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் உள் சென்றேன்.விமானத்தில் அநேகர் முஸ்லிகளாக இருந்தார்கள்.முஸ்லிம்கள் எல்லோரும் தொப்பி போட்டிருந்தார்கள் .எனையோரில் அநேகர் சிங்களவர் .தமிழர்கள் நாலு ஜந்து இருந்திருப்போம்.

-----------

-----------

-----------

இப்படி மத்திய கிழக்கு வாழ்க்கை முடித்து அவுஸ்ரேலியா வந்தன் .

[size=5]இப்பிடி கேள்விகளை ஒருவரிடமும் கேட்காமல் தவிருங்கோ. பிறகு உங்களுக்கு பதில் சொல்லப்போய் அவர்களும் நெடுக்ஸ் அண்ணாவிடம் பேச்சுவாங்க வேண்டியிருக்கும். :lol:[/size][size=5] [/size] :lol::icon_idea:

[size=5] [/size]

[size=5] [/size]

சிறிய வயதில் நிறையக் கஷ்டப்பட்டுள்ளீர்கள் போல இருக்கு புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வு புத்தன்

பலருக்கும்... இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

அதனை, விபரித்த விதம் அழகாக இருந்தது :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]இப்பிடி கேள்விகளை ஒருவரிடமும் கேட்காமல் தவிருங்கோ. பிறகு உங்களுக்கு பதில் சொல்லப்போய் அவர்களும் நெடுக்ஸ் அண்ணாவிடம் பேச்சுவாங்க வேண்டியிருக்கும். :lol:[/size] :lol::icon_idea:

இத்தால் தெரிவது யாதெனில்.. உங்களுக்கும் உள்குத்து அரசியலுக்கும் வெகுதூரம். :rolleyes:

நிறைய புரிந்துணர்வு வேண்டி இருக்கு.. :rolleyes::lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி புத்தன்...நானும் மட்டக்களப்பில் தான் படிச்சேன் அங்கு எனக்கு பிடிச்சதே எனது பாடசாலையும்,கடற்கரையும் தான்[அதை விட முக்கியமாய் அங்குள்ள மீன் சாப்பிடப் பிடிக்கும் :lol: ]...உங்கள் காலம் மாதிரி பாணி என்று கூப்பிடுகிறதோ,நக்கல் அடிக்கிறதோ எனக்கு நடக்கவில்லை... அதற்கு முக்கிய காரணம் கால மாற்றம்,யாழ்ப்பாணதார் அதிகளவு அங்கு குடியேறி இருந்தார்கள்,நகரத்தில் அமைந்த பாடசாலையாக இருந்தது போன்றனவாய் இருக்கும் என நினைக்கிறேன்

இத்தால் தெரிவது யாதெனில்.. உங்களுக்கும் உள்குத்து அரசியலுக்கும் வெகுதூரம். :rolleyes:

நிறைய புரிந்துணர்வு வேண்டி இருக்கு.. :rolleyes::lol::icon_idea:

அண்ணா இதற்கு ஏன் அப்படி சொல்கிறீர்கள்? :wub: நானும் நெடுக்ஸ் அண்ணாவை பற்றி ஜோக்காக சொன்னனான். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கிண்டவன் எல்லாம் தங்களின் படைப்புக்களை புத்தகமாக வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். புத்தன், நீங்கள் கட்டாயம் உங்களின் படைப்புக்களை புத்தகமாக வெளியிடவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா, நீங்கள் 1960/1961 இல் பிறந்திருப்பியள் என்று நினைக்கிறன். :o கிட்டத்தட்ட என் அம்மாவின் வயசு. :o ஆனாலும் அண்ணா என்றே கூப்பிடுறன். :D

யாழ்ப்பாணம் என்ற ஒரு காரணத்தால் நீங்களும் கஸ்ரப்பட்டுட்டியள். :( யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களுக்கு நாட்டிலும் பிரச்சினை வெளிநாட்டிலும் பிரச்சினை தான். :(

நன்றி எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு. எழுத நினைக்கிறதெல்லாம் தொடர்ந்து யாழில் எழுதுங்கோ. :) மனசில் உள்ள பாரங்களை எல்லாம் கொட்டி தீருங்கோ. :) உங்கள் வேதனைகளில் நாமும் பங்கு கொள்ளுறம். :rolleyes:

நன்றிகள் துளசி....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ...ஆண்டை எழுதி எனது வயசை காட்டி போட்டேன்....கி.கி

[size=5]நல்ல பகிர்வு [/size]

[size=5]http://leo-malar.blogspot.no/[/size]

நன்றிகள் லியோ வருகைக்கும் பகிர்வுக்கும்

<p>

யாழ்ப்பாண மண்ணுக்கு உள்ள சிறப்பை?? அனுபவ ரீதியாக பகிர்ந்து கொண்ட புத்தனுக்கு நன்றிகள்.

முன்பு என்னுடன் வேலை செய்த அமெரிக்கருக்கும் எனக்கும் சிறிது வாக்கு வாதம் ஏற்பட்டு விட்டது.என்னை எந்த நாட்டவர் என தெரியும் என்பதால் அவர் என்னை புலி என கூறி ஒரு நக்கல் சிரிப்போடு என்னையும் பார்த்து எல்லோரையும் பார்த்தார்.உடனே ஒரு நொடியையும் வீணாக்கவில்லை. நீங்கள் அமெரிக்கர் தானே என்றேன்.அப்போ நீங்கள் கே.கே.கே (http://en.wikipedia....ki/Ku_Klux_Klan) தானே என்றேன்.எல்லோரும் சிரித்தே விட்டார்கள்.குறிப்பாக இரண்டு கறுப்பர்கள் வேண்டுமென்றே பலமாக சிரித்து விட்டார்கள்.அசடு வழிய அவர் சென்று விட்டார்.

வருகைக்கும் இணைப்புக்கும் நன்றிகள் நுணா...

அருமையான அனுபவப் பகிர்வு, புத்தன்!

மட்டக்களப்பின் வளங்களையும், அவர்களது குணங்களையும் பார்த்த பிறகு, எனக்கு மட்டக்களப்பில் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் உண்டு!

நன்றிகள் புங்கையூரன்...அடுத்த பிறவி மட்டக்களப்பில் பிறக்க ஆசிர்வாதங்கள் கி..கி..

அருமையான அனுபவப் பகிர்வு, புத்தன்!

மட்டக்களப்பின் வளங்களையும், அவர்களது குணங்களையும் பார்த்த பிறகு, எனக்கு மட்டக்களப்பில் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் உண்டு!

நன்றிகள் புங்கையூரன்...அடுத்த பிறவி மட்டக்களப்பில் பிறக்க ஆசிர்வாதங்கள் கி..கி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் புலம்பெயர்ந்த ஆரம்ப நாட்களில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஊரில் எந்த இடம் என்று கேட்டபோது, எப்போதும் ஊர் என்றால் யாழ்ப்பாணம் என்று எல்லோரும் நினைத்துக்கொள்வதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நான் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் "வடமராட்சி" என்று சொன்னேன். கேட்டதும்தான் தாமதம், எந்தவூர் என்று கேள்வி கேட்டவர் "உங்களாடலதானடா இவ்வளவு சீரழிவும்" என்று கையை ஓங்கிக் கத்தியபடி பாய்ந்து வந்தார்.. நல்லகாலம் அடி விழ முதல் மற்றவர்கள் தடுத்துவிட்டார்கள்! பின்னர் விசாரித்தபோது அவர் கிழக்கில் காரைதீவைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொண்டேன். காலப்போக்கில் நண்பர் ஆகிவிட்டார்!

அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் "ஊரில் எவ்விடம்" என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்லுவதில்லை. சொன்னாலும் வடமராட்சி என்று சொல்லுவதில்லை!

நன்றிகள் கிருபன்...எல்லோருக்கும் ஒரு ஆத்திரம் இருக்கத்தான் செய்யுது...

அருமையான அனுபவப் பகிர்வு, புத்தனண்ணா.. :)

அன்றையிலிருந்து இன்றை வரைக்கும் இந்த நிலை மாறவேயில்லை.. :( அதே கேள்வி அதே பதில்..

அதுசரி.. நீங்கள் அசைலியோ? ஸ்டூடன்ட் விசாவோ?? இல்லை வேலை விசாவோ??? :rolleyes::lol: :lol: :icon_idea:

கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் இருந்தாலும் சொல்லுகிறேன்...மனிசி விசா(spouse visa)

<p>

புத்தன் என்ன கிறுக்குவதாக சொன்னாலும்

அதை ஓடிவந்து பார்ப்பது வழமை

இதிலும் எமது தாயக வழமையை ஒரு பிடி பிடித்துள்ளார்

எனக்கும் இதே நிலை படிக்கும்போ இருந்தத. அதை இங்கு ஏற்கனவே பதிந்துள்ளேன்.

எல்லாவற்றை சாதகமாக பார்க்கணும்

இல்லை சாதகமாக ஆக்கிக்கொள்ளணும்.

அதையே புத்தனும்இங்கு சொல்லி நிற்கிறார்.

நன்றி

அனுபவப்பதிவுக்கு.

நன்றிகள் விசுகு ..தொடர்ந்து எனது ஆக்கத்துக்கு ஊக்கம் தாரதற்கு....

சிறிய வயதில் நிறையக் கஷ்டப்பட்டுள்ளீர்கள் போல இருக்கு புத்தன்.

கஷ்டங்களை ஒருமாதிரி சுழிச்சு கொன்டு வந்திட்டம்..நன்றிகள் தப்பிலி

நல்ல பகிர்வு புத்தன்

பலருக்கும்... இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

அதனை, விபரித்த விதம் அழகாக இருந்தது :) .

நன்றிகள் தமிழ்சிறி தொடர்ந்து எனக்கு ஊக்கம் தாரதற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி புத்தன்...நானும் மட்டக்களப்பில் தான் படிச்சேன் அங்கு எனக்கு பிடிச்சதே எனது பாடசாலையும்,கடற்கரையும் தான்[அதை விட முக்கியமாய் அங்குள்ள மீன் சாப்பிடப் பிடிக்கும் :lol: ]...உங்கள் காலம் மாதிரி பாணி என்று கூப்பிடுகிறதோ,நக்கல் அடிக்கிறதோ எனக்கு நடக்கவில்லை... அதற்கு முக்கிய காரணம் கால மாற்றம்,யாழ்ப்பாணதார் அதிகளவு அங்கு குடியேறி இருந்தார்கள்,நகரத்தில் அமைந்த பாடசாலையாக இருந்தது போன்றனவாய் இருக்கும் என நினைக்கிறேன்

உண்மையிலயே அந்த மீன் நல்ல ருசிதான்...ஒரு ரூபாவுக்கு பை நிறைய சுடைமீன் ,கீரிமீன் எல்லாம் வாங்கலாம் ..அந்தகாலத்தில்...நன்றிகள் ரதி...தொடர்ந்து எனது ஆக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு தாரமைக்கு

கண்ட கிண்டவன் எல்லாம் தங்களின் படைப்புக்களை புத்தகமாக வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். புத்தன், நீங்கள் கட்டாயம் உங்களின் படைப்புக்களை புத்தகமாக வெளியிடவேண்டும்.

நன்றிகள் கந்தப்பு ..அப்படி ஒரு ஐடியா இருக்கு தான் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன்! நீங்கள் ஒரு பேய்க்காய்clap2.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்! நீங்கள் ஒரு பேய்க்காய்clap2.gif

நன்றிகள் குசா....இப்படித்தான் பலர் சொல்லியினம்.....ki.ki...

  • கருத்துக்கள உறவுகள்

புத்ஸ் அண்ணா நல்ல இருக்கு எனக்கு யாழ் பாணத்தில பிறந்தது எண்டு சொல்ல நிறைய பெருமை நான் யார் கேடாளும் யாழ் தமிழன் என்டு பெருமையா சொல்லுவன் அத யாரு பிரதேச வாதம்ணு சொன்னாலும் நேக்கு கவலை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புத்தன்,

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் சுணடல்

பகிர்வுக்கு நன்றி புத்தன்,

நன்றிகள் உடையார் வாசித்தமைக்கு என்ன அதிகம் யாழ் பக்கம் காணகிடைக்குதில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.