Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். [/size]

[size=4]2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது

. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.[/size]

[size=4]இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. [/size]

[size=4]தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். [/size]

[size=4]அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:[/size]

[size=4]"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். [/size]

[size=4]எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். [/size]

[size=4]நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, “இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும், சி.பி.எம். கட்சி ஆண்டாலும், இக்கட்சிகள் இந்தியம் என்ற கருத்தியல் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள். எனவே, இந்தியம் நம்மை இந்தியராக ஏற்காத போது, நாம் ஏன் “இந்தியன்” என்று இந்தியத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? நாம் ஏன் இந்தியத்தை ஏற்க வேண்டும்? நாம் இந்தியத்தை ஏற்க வேண்டியதில்லை” என பேசினார். கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். [/size]

[size=4]த.தே.பொ.க செய்திப் பிரிவு. (படங்கள்:கோபிநாத்)[/size]

நன்றி: http://www.nakkheera...ws.aspx?N=78822

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். ஆனாலும் நாங்கள் பகமையை தாண்டி முன்செல்ல வேண்டும்.

எங்களை ஆதரிக்கும் நீங்களே இப்படி எம்மை முன் நகரவிடாமல் பகைமையை நோக்கிப் நம் வரலாற்றை பின்னுக்கு தள்ளினால் சர்வதேச அரசியலிலும் நாம் பேரழிவைத்தான் எதிர்நோக்க நேரிடும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]......[/size][size=4]நூலாசிரியர் [/size][size=4]முனைவர் த.செயராமன்[/size][size=4] ஏற்புரை வழங்[/size]கிய[size=4] போது, “இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும், சி.பி.எம். கட்சி ஆண்டாலும், இக்கட்சிகள் [/size][size=4]இந்தியம்[/size][size=4] என்ற கருத்தியல் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள். எனவே, இந்தியம் நம்மை இந்தியராக ஏற்காத போது, நாம் ஏன் “இந்தியன்” என்று இந்தியத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? நாம் ஏன் இந்தியத்தை ஏற்க வேண்டும்? நாம் இந்தியத்தை ஏற்க வேண்டியதில்லை” என பேசினார். [/size]

நன்றி: http://www.nakkheera...ws.aspx?N=78822

சரியான கருத்து தான்.

தமிழனை ஏற்காத, மதியாத, எந்த வளங்களையும் பகிர தயாராக இல்லாத, இரண்டாம்பட்ச குடிமகனாக அடுதத நாட்டுக்காரனிடம் பலிகடாக்களாக மாற்றும் போது, அந்த இந்தியம் தேவை இல்லை என்ற நிலை சரியானதே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உள்ளதுபோன்ற பன்முகத்தன்மையைக் கைக்கொள்ள வேண்டியது மிக அவசியம். :rolleyes: இந்தியம் என்கிற ஒற்றைப் பாதைக்குள் வீழ்ந்துவிடக் கூடாது. :unsure:

தாயகக் கட்சிகள்: இந்திய/ மேற்குலக நிலைப்பாடு

புலம்பெயர் மக்கள் / அமைப்புகள் : மேற்குலக நிலைப்பாடு

தமிழகக் கட்சிகள்: காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடு

????: சீன ஆதரவு நிலைப்பாடு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய 'தேவை' உள்ளது, என்பது உண்மை!

ஆனால், இந்தியர்களிடம் இருந்து, அதற்குத் தேவையான, தலைமைத்துவமோ, அல்லது ஆழுமையோ, இதுவரை வெளிப்படவில்லை!

இந்தியாவுக்கு நல்ல ஒரு தலைவர் தேவை!

OB-TR437_itime_DV_20120709013851.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர்களே உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். ஆனாலும் நாங்கள் பகமையை தாண்டி முன்செல்ல வேண்டும்.

எங்களை ஆதரிக்கும் நீங்களே இப்படி எம்மை முன் நகரவிடாமல் பகைமையை நோக்கிப் நம் வரலாற்றை பின்னுக்கு தள்ளினால் சர்வதேச அரசியலிலும் நாம் பேரழிவைத்தான் எதிர்நோக்க நேரிடும்

கேடு கெட்டவனின் நட்பை விட, நல்லவனின் பகைமை மேலானது!

கேடு கெட்டவர்களின் கை ஆகிய இந்தியக் கட்டமைப்பு தன் மக்களின் மனசாட்சிக்கு கூட துரோகியாய் நிற்கும் போது அது எங்கள் மனசாட்சிக்கு நல்லது ஆகும் என்ற கனவு தேவைதானா?

தமிழகத் தமிழர்கள் செய்ய வேண்டியது பணத்துக்காகவும் பதவிக்காகவும், பரிசுக்காகவும் கொள்கை இல்லாத எசமானின் எச்சில் இலைக்காக சோனியாவின் வளர்ப்பு நாய் ஒற்றுமை பேசும் கருணாநிதியை மண் கவ்வ வைக்க வேண்டும். கருணாநிதி ஈழத்தமிழருக்காக பதவி இழந்ததாகக் கூறுகிறார்; அது பொய். அவர் ஊழலுக்காகத்தான் பதவி இழந்தவர். ஆனால் அவரை பதிவியிலிருந்து தூக்கி எறிந்த செயலை செய்தது அவரின் நட்புக்கட்சி காங்கிரசே. காங்கிரசின் செய்தி "நீ களவு செயலாம். ஆனால் எனது பங்கை கொடு அப்போது இருவரும் பகமைதாண்டி முன் சென்று களவுகள் செய்து கொள்ளாம்" என்றதே. இதை சரியாக விளங்கிக் கொண்டு நட்புப்பற்றிப் பாடம் சொல்லித்தருபவர்தாம் கருணாநிதி. அதனால் தான் அவர் காங்கிரசுடன் சேர்ந்து இந்த முறை ஊழல் செய்தவர். ஆனால் இந்த முறை அவரின் நட்பு அல்ல அவரைத்தூக்கி எறிந்தது. மக்கள்தான் தூக்கி எறிந்தார்கள். கருணாநிதி படிக்க வேண்டியது நட்புப்பாடம் அல்ல. ஊழல் செய்யாமலிருக்கத்தான் பாடம் கற்க வேண்டும். இதுதான் பதவியை தக்கவைக்கும்.

கேடுகெட்டநட்புடன், சுயநலத்துக்கு ஒற்றுமை பேசும் கேடுகெட்ட தலைவர்கள் போனால் மட்டுமே சுயமாக சிந்திக்க முடியும். ஈழத்துக்காந்தி என்ற செல்வா சிங்களவனுடன் போராடித்தான் உரிமைகளை பெறமுடியும் என்று கண்டார். ஆனால் அவருக்குகே தெரிந்துவிட்டது தான் அதைக்கண்டு கொள்ளும் போது காலம் தாழ்ந்துவிட்டதென்றும், உள்ளே இருக்கும் துரோகிகளை எதிர்த்துப் போராடுவது கடினம் என்றும். இதானால் கடவுள்தான் ஈழத்து தமிழனை காக்க வேண்டுமென்றார். அந்த காலம் போல ஒரு வரும்வரையும் தமிழகத்தமிழர்கள் பொறுத்திருக்காதீர்கள்.

தீர்க்கதரிசனம் இல்லாத தலைவர்கள் போய்ச்சேர வேண்டும். காந்தி கோளைத்தனத்திற்கும், வன்முறைக்குமிடையில் மட்டும் ஒரு தெரிவு வருமானால் தான் வன்முறையைததான் தெரிவேன் என்றார். சத்தியாகிரகத்தின் தந்தையான திருநாவுக்கரசர் தனக்கு உருவான எதிரியிடம் மன்னிப்போ தயவோ கேடகப் போகவில்லை. "ஏம்மாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் என்றார்" கிந்தியனின் பகமை நீங்கள் கேட்டுப்பெற்றது அல்ல. அடக்கி ஆள வருபவன் தன் பலத்தை தெரிந்து கொண்டவன். விதியிடமிருந்து நீங்கள் தப்பியோடமுடியாது. மதியை உபயோகித்து பகைவனை வெல்ல வேண்டும். சிங்களவனிடமிருந்து தந்தை செல்வாவால் தப்பியோடமுடியவில்லை.

Edited by மல்லையூரான்

உதுகள் ஒருகாலமும் உணரபோவதில்லை, எனவே தமிழிழம் சாத்தியமில்லை என்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பொறுத்தளவில் ஈழ தமிழர்களிற்கு எப்போதும் பிரச்சனை இருக்கவேண்டும் அதை தமது நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும் என்ற நிலையே நிரந்தர கொள்கையாகும், இந்தியாவின் இந்த கபடநோக்கத்தை உணராதவரைக்கும் ஈழ தமிழனுக்கு விடிவே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அருமையான ஆக்கம்.. அனைத்தும் உண்மையான கருத்துக்கள்... இதை இணைத்த தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு நன்றிகள் :) :)

இந்தியாவிலிருந்து தனித்தியங்கும் சக்தி தமிழகத்திற்கு இன்னும் வந்துவிடவில்லை. எனவே இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை. ஆனால் அந்த ஆதரவை இந்தியா எமக்கு வழங்குவதற்கு தமிழகத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

அதற்கு தமிழக அரசியல்வாதிகள் தம் அரசியலுக்காக தமிழனுக்கு குரல் கொடுக்காமல் உண்மை நிலையை உணர்ந்து தமிழனுக்காக குரல்கொடுக்க வேண்டும். அத்துடன் தமிழக மக்களுக்கு எமது பிரச்சினையை விளங்கப்படுத்த வேண்டும். அங்குள்ள பலருக்கு எம் நாட்டில் நடந்த இனப்படுகொலை இன்னும் தெரியாது.

[size=1]

[size=4]இந்தியம் தன்னை தானே அழித்துக்கொள்ளும்![/size][/size]

[size=4]இந்தியம் என்பதற்கு பல எதிரிகள், பல பலம் வாய்ந்த எதிரிகள் உள்ளனர்.சீனா, பாகிஸ்தான் என்பன வெளிச்சக்திகளும் பல உள்சக்திகளும் உள்ளன. இதில் தமிழக தமிழீழ பங்கு என்பன சிறியன. [/size]

[size=1]

[size=4]இந்த இந்தியத்திற்கு எதிரான சக்திகளை இந்திய தலைமைகள் சரியாக இனம்கண்டாலும் ஒழுங்கான தலைமைகள் இல்லாமை குறுகிய அரசியல் இலாபம் கொண்ட அணுகுமுறைகளால் இந்தியம் தன்னை தானே அழித்துக்கொள்ளும். [/size][/size]

யாரையும் பகைக்காமல், நீரிற்குள்ளாள நெருப்பைக் கொண்டு கரை சேர்க்க வேண்டும்.

விழுந்த இடத்தில் மீண்டும் விழுவது மடமை.

  • கருத்துக்கள உறவுகள்

Parliament-House-Or-Sansad-Bhawan-Delhi-Picture-2.jpg

குத்து மதிப்பாக கணக்கு வைத்து கொள்ளுவம்..

1970 களில் தந்தை செல்வா போராட்டத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்

இப்போ 2012..

2012

1970 (-)

------

42

--------

சோ இந்த 42 வருடத்தில் கிந்தியத்தின் ஊடாக சாதித்தது என்ன..?

கொலை.. கொள்ளை .. உள்ளடி .. உள்குத்து.. பிளவுகள்...சாவு.. பட்டினி.. பஞ்சம்.. பரதேசி(இடபெயர்வு) வேற ஏதாவது புதுசா இருக்கா ...? ரெல் ரெல் மீ

<_< <_<

டிஸ்கி:

தமிழின எதிர்ப்பு அவர்களின்ட ரத்தத்தில் ஊறிபோன ஒன்று..

அதெல்லாம் மாத்துறது கஸ்ரம்.. அவனவனுக்கு பாமாயில் பினாயில் யாரு சீப்பக கொடுப்பர்கள் லாட்டரி அடிக்கிறான் இதில மத்தவங்க கிட்ட(மற்ற மாநிலங்கள்) விழிப்புணர்வு என்றால் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நான் அவர்களுக்கா தருகிறன் என்று சொல்லுவான்.. அவன் எல்லாம் ரத்த சொந்தமே கிடையாது எப்படி துடிப்பான் உங்களுக்கு.. ??

போகட்டும்...

அப்படியே உங்களுக்காக 40/40 எம்பி சீட்டை தமிழக மக்கள்....உங்களுக்காக

வாரி வழங்கினாலும் ஏதும் ஆகபோவதில்லை.. அங்கிட்டு ரெல்லியில் 500+ எம்பி சீட்டு.. மற்ற ஸ்ரேட்டுக்காரனை காசால அடிப்பார்கள்..இங்கிட்டு நடப்பது என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை.. தமிழ்நாடு ஏரியாவிற்குள் நடப்பதை ஏதோ சிங்களன் மினிஸ்டர் வாறான் போறான்.. அவர்கள் மேல பாய்றது.. அங்கிட்டு ஏதாவது என்றால் இங்கிட்டு ஆர்பாட்டம் நடத்த வேண்டியது.. உங்களுக்கு புரியவில்லை இது ஒரு மாநிலத்திற்குள்ளாக அவர்கள் சக்திக்கு உட்பட்டு நடப்பது அதை வைத்து ஓவர் பில்டப்பு எக்ஸ்ரா பிட்டிங்கு நீங்களே போட்டுக்க கூடாது

வேற நல்ல வெளிநாடுகளை போக்ஸ் பண்னுங்கப்பா.. தோழர் தப்பிலி சொன்னது போல ஏன் ம்றுபடி மறுபடி இதுக்குள்ளே வந்து விழனும்...?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உதுகள் ஒருகாலமும் உணரபோவதில்லை

இது உங்களுடய தீர்க்க தரசனம்.

எனவே தமிழிழம் சாத்தியமில்லை என்கின்றாரா?
அப்போ இது உங்களுடய விருப்பமா இது?

இது கருணாநிதி காலத்திற்கும் ஜெயா காலத்திற்குமிடையில் நடந்திருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிடிவாத மனத்தால் வருவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.