Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொளுத்தும் வெயிலில் சிங்களத்து சிங்காரிகளின் விளம்பரக் காட்சிகள் (படம்)

Featured Replies

தமிழீழ தேசம் எங்கும் சிங்களமயமாக்கல் தொடரும் இன் நிலையில், பொருளாதார ரீதியிலும் வணிக ரீதியிலும் சிங்கள ஆதிக்கத்தை செலுத்திய வண்ணம் உள்ளனர் . இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக கொளுத்தும் வெயிலில் சிங்களத்து சிங்காரிகள் குமாரிக்கா சோப் விளம்பரக் காட்சிகள் வைத்து விளம்பரம் செய்து வருகின்றார்கள் . தமிழனின் பொருளாதாரம் எல்லா வழிகளிலும் சிங்களவர்கள் கவர்ந்து செல்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

1111.jpg

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/

இந்த நிலை தொடராமல் இருக்க வேணும் என்றால் எமக்கென்று மீண்டும் ஒரு கட்டமைப்பு தேவை ......

அதை அரசியல் வழியாகவோ .............ஆயுத...............எதோ ஒரு வகையில் அமைக்கும் வரை இவற்றை ,இந்தக்கன்றாவிகளை

எல்லாம் சகிக்கத்தான் வேணும்.....

அது சரி குமரிக்கா சோப் எப்படிங்க இருக்கும்...... :D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி குமரிக்கா சோப் எப்படிங்க இருக்கும்...... :D

:lol:

நன்றி த.சிறி அண்ண...............ஆனால் நீங்கள் படம் இணைத்துள்ளீர்கள் போல் தெரிகிறது .........இந்த கோதாரி கணனியில்

பார்க்க முடியவில்லை ....வீடு சென்று பார்க்கிறேன் ............

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

தோழர்...இவா எனக்கு குளிக்கும் போது சோப்பு போட்டு அழுக்கு எல்லாம் போகுதா என்று பார்த்த பிறகுதான் வாங்குவன்... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

1111.jpg

பாவங்கள் .. கலைச்சேவைக்கும் வந்திருப்பார்கள்? ... நம்மவர்களிடம் புலத்து நோட்டெல்லாம் கட்டுக்கட்டாக இருக்கிறது! ... <_<

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால், இதுவரை காலமும் யாழ் மக்கள் சிவநெறிச்செம்மலின் மில்க்வைற் சவர்க்காரம் பாவித்து உடலைக்கழுவியது போல் அல்லவா செய்தியில் கூறப்படுகிறது? இதுவரை காலமும் உடலுக்கு பயன்படுத்தக்கூடிய தமிழரின் ஏதாவது சவர்க்கார நிறுவனம் பற்றி அறிந்தால் யாராவது கூறுங்கள். இந்த நிறுவனத்தில் தமிழர் எவரும் வேலை செய்யவில்லை என்று உங்களுக்குத்தெரியுமா? இதில் படத்தில் நிற்பவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்று எழுதி ஒட்டியுள்ளதா? தென்பகுதியில் தமிழரும் வியாபாரம் செய்கின்றார்கள். மறுக்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்?

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

தோழர்...இவா எனக்கு குளிக்கும் போது சோப்பு போட்டு அழுக்கு எல்லாம் போகுதா என்று பார்த்த பிறகுதான் வாங்குவன்... :) :)

தோழர் உங்களது நியாயமான ஆசையை புரிந்து கொள்கிறேன்......... :D :D :icon_idea:

இங்கு மேலுள்ள படத்தில் தமிழ்ப்பிள்ளைகளும் வேலை செய்யலாம் (காணப்படலாம்). இப்படியான செய்திகளுக்கு கிளுகிளுப்பாக கருத்துக்கள் எழுதி என்னத்தை காண்கிறீர்களோ தெரியாது. நாடு கடந்த அரசின் லக்ஸ், பிரிட்டிஷ் தமிழ் போரத்தின் ரெக்சோனா, உலகத்தமிழரின் ராணி இவை எல்லாவற்றிக்கும் போட்டியாக அவற்றை அடித்துவிழுத்திவிட்டு ஏதோ புதிய சவர்க்காரம் வந்த கணக்கில் கருத்துக்கள் பதிகின்றீர்கள்.

காலம், காலமாக நம்மவர்கள் ராணி, லக்ஸ், ரெக்சோசானா, லைவ்பாய் என அடிமையாக உள்ளார்கள், அவர்களுக்கு வேறு வழி இல்லை. இங்கு வெளிநாடுகளிலும் நம்மவர்கள் இந்த சவர்க்காரங்களைக் கைவிடுவதாய் இல்லை. தமிழ்க்கடைகளில் அமோகமாக விற்பனையாகின்றது.

சவர்க்கார விற்பனையில் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முன்பு ஏதோ கொடிகட்டிப்பறந்ததாகவும், சிங்களவர்கள் இப்போது சந்தையைப்பிடித்துவிட்டதுபோலவும் செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலே படத்தில் உள்ளவர்கள் சிங்களவர்கள் என்றால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாடத்தெரியுமா? தமிழ் தெரியாமல் எப்படி விளம்பரம் செய்கின்றார்கள்?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட கருத்தும் மாபிளையோட கருத்து தான் கொழும்புல தமிழர்கள் கடை வைச்சு சிங்களவரோட வியாபாரம் பண்ணும் போது அவங்க பண்ணினா தப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால், இதுவரை காலமும் யாழ் மக்கள் சிவநெறிச்செம்மலின் மில்க்வைற் சவர்க்காரம் பாவித்து உடலைக்கழுவியது போல் அல்லவா செய்தியில் கூறப்படுகிறது? இதுவரை காலமும் உடலுக்கு பயன்படுத்தக்கூடிய தமிழரின் ஏதாவது சவர்க்கார நிறுவனம் பற்றி அறிந்தால் யாராவது கூறுங்கள். இந்த நிறுவனத்தில் தமிழர் எவரும் வேலை செய்யவில்லை என்று உங்களுக்குத்தெரியுமா? இதில் படத்தில் நிற்பவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்று எழுதி ஒட்டியுள்ளதா? தென்பகுதியில் தமிழரும் வியாபாரம் செய்கின்றார்கள். மறுக்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்?

கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.

சரியாக சொன்னீர்கள் அண்ணா. எங்களிடம் துறை சார் நிபுணத்துவமும் தொழில் நுட்பமும் பல துறைகளில் இல்லை. அண்மையில் நடந்த ஒரு சம்பவம். கனடாவில் இருக்கும் எனது மிக நெருங்கிய பாடசாலை நண்பன் ஒருத்தன் இரு மாத விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தான். முன்பிருந்தே அவர்கள் பலவகையான வியாபாரங்களில் கைதேந்தவர்களாய் இருந்தார்கள். இவன் ஊருக்குப் போனபோது நெல்லியடியில இருந்த அவர்களது இரண்டு கடைகளை புனருத்தாரணம் செய்து நவீனமயமாக்க ஆசைப் பட்டு உதயனிலே கேள்விப்பத்திரம் கேட்டிருந்தான். அவனுக்கு வந்த பதில்களிலே இரண்டு யாழ்மாவட்டவர்கள் தவிர மற்றைய அனைவரும் தென் பகுதியினர். முடிவிலே யாழிலிருந்து விண்ணப்பித்த இருவருக்கும் அவன் கேட்பது போல் வடடிவமைக்க முடியவில்லை. கடைசியில் தென் பகுதியில் இருந்து வந்தவர்களே வேலையே செய்து முடித்ததாக சொன்னான்.

[size=4]அடிப்படையில் 'எந்த உற்பத்தியையும்' சிங்களம் தமிழர் தாயக பகுதிகளில் ஊக்குவிக்க விரும்புவதில்லை. முடிந்தளவுக்கு ஒரு நுகர்வோர் சமூகமாக தமிழர் சமூகத்தை மாற்றுவது அது நீண்டகாலமாக முன்னெடுத்துவருகின்றது. [/size]

[size=1]

[size=4]இது சவற்காரத்தில் இருந்து வெங்காயம் தொடக்கம் உந்துருளி வரை பொருந்தும். [/size][/size]

[size=4]அடிப்படையில் 'எந்த உற்பத்தியையும்' சிங்களம் தமிழர் தாயக பகுதிகளில் ஊக்குவிக்க விரும்புவதில்லை. முடிந்தளவுக்கு ஒரு நுகர்வோர் சமூகமாக தமிழர் சமூகத்தை மாற்றுவது அது நீண்டகாலமாக முன்னெடுத்துவருகின்றது. [/size]

[size=1][size=4]இது சவற்காரத்தில் இருந்து வெங்காயம் தொடக்கம் உந்துருளி வரை பொருந்தும். [/size][/size]

[size=1]

[size=4]ஒப்பீட்டளவில் சவற்காரம் செய்வது இலகுவானது. ஆனால் எந்த ஆலைத்தொழிலுக்கும் மின்சாரம், சந்தை வாய்ப்பு, எரிபொருள் வசதி, பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர் என பல காரணிகள் முக்கியமானவை. [/size][/size]

[size=4]தாயகத்தில் ஒரு காலத்தில் மில்க் வைட் மற்றும் லாலா சவற்காரங்கள் இருந்தன, இன்று இல்லை. [/size]

[size=1]

[size=4]சிங்களத்தின் திட்டமிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடிந்தளவுக்கு எமது மக்கள் மத்தியில் பொருளாதார விழிப்புணர்வு முக்கியம்:[/size][/size][size=1]

[size=4]- எமது பணத்தை எமது மண்ணில் முதலிடவேண்டும்[/size][/size][size=1]

[size=4]- எமது மக்களுக்கு தொழில்வாய்ப்பை எமது பணம் பெற்றுத்தர வேண்டும் [/size][/size][size=1]

[size=4]- எமது முதலாளிகள் தரமான பொருட்களை உற்பத்திசெய்யவேண்டும் [/size][/size][size=1]

[size=4]- இலாபம் பெறும் முதலாளிகள் எமது மாணவர்கள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு முதலிடவேண்டும்[/size][/size]

[size=1]

[size=4]மறு பக்கத்தில் சிங்களம் இந்த அறுபத்தி நான்கு வருட சுதந்திர காலத்தில் எந்தப்பாரிய தொழில்வல்லமையையும் பெறவில்லை. இன்றும் சவற்காரத்தை யாழில் விளம்பரம் செய்யும் அதேவேளை அதன் அந்நியநாட்டு செலாவாணியை வெள்ளைக்காரன் காட்டித்தந்த தேயிலையும் இறப்பரும் அவனே வந்து செலவழிக்கும் உல்லாச பிரயாணத்துறையும் அவர்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வரிச்சலுகை பெற்ற ஆடை உற்பத்தி துறையும் உள்ளன. அதைவிட மத்தியகிழக்கு தென்கொரிய நாடுகளுக்கான ஆட்கள் ஏற்றுமதியும் இலாபம் தருவன.[/size][/size]

[size=1]

[size=4]சிங்களத்திடம் ஒரு வலுவான அரசியல் தலைமையும் பொருளாதார திட்டமிடலும் இல்லை. இதை சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூ அவர்களின் குறிப்பின் மூலம் உணரலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர் பகுதியில் தொழிற்சாலை திறந்தால்....

ஒட்டுக்குழுவும், இராணுவமும் அந்த தொழிலதிபரை கடத்தி கப்பம் கேட்பதை யார் தடுக்க முடியும்.

இதனாலேயே... பலர் தொழில் செய்யக்கூடிய வசதி இருந்தும், சிவனே... என்று இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மக்களிடம் அதிக பணம் புளக்கத்தில் உள்ளதால் சிங்களவர்கள் தமது பொருட்களை விற்க முண்டியடித்துக்கொண்டு வருகிறார்கள்.

இராணுவம் தமிழர் நிலத்தை மட்டுமல்ல கடலை கூட தொழில் செய்ய விடாமல் ஆக்கிரமித்து உள்ளார்கள்.கொழும்பில் வியாபாரம் செய்யும் அல்லது தொழில் செய்யும் தமிழர்கள் சிங்கள மண்ணையோ, கடலையோ ஆக்கிரமிக்கவோ சூறையாடவோ இல்லையே!!!!

டக்கிளஸ் சிறு கைத்தொழில் அமைசராக இருந்தும் எவ்வளவோ சிறுகைத்தொழில்களை உருவாக்கி இருக்க முடியும்.சீவல் தொழிலாளர்களின் வாக்கை பெற அவர்களுக்கு சில உதவிகளை சுயநல நோக்கில் செய்கிறார்.கூட்டமைப்பு இப்படி ஏதாவது சிறு கைத்தொழில்களை உருவாக்க அரசிடம் உதவி கேட்டால் அரசு நிச்சயமாக புறக்கணிக்கும்.ஏனெனில் மக்களின் வாக்குகள் கூட்டமைப்புக்கு போகாமல் பார்க்க வேண்டும்.அத்தோடு தமிழர்கள் அரசின் கையை ஏந்த வேண்டும் என்று நினைத்து தான் சிங்கள அரசுகள் செயற்படுகின்றன.இதற்கு சிங்கள அரசுகளின் செயற்பாடுகளே சான்று பகிரும்.

மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.

முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.

கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Superb மாப்பு எல்லாரையும் இனவாதிகள் நிற வெறியர்கள் என்று சொல்லி இப்ப நாங்க தான் இன வெறியர்களாக வந்திட்டு இருக்குறம் இதுக்குள்ள பக்கம் பக்கமா நியாTயபடுதல்கள்வேற....

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர் பகுதியில் தொழிற்சாலை திறந்தால்....

ஒட்டுக்குழுவும், இராணுவமும் அந்த தொழிலதிபரை கடத்தி கப்பம் கேட்பதை யார் தடுக்க முடியும்.

இதனாலேயே... பலர் தொழில் செய்யக்கூடிய வசதி இருந்தும், சிவனே... என்று இருக்கிறார்கள்.

[size=4]இந்த செய்தியின் மூலக்கூறு இதுதான். [/size]

சரியாக சொன்னீர்கள் அண்ணா. எங்களிடம் துறை சார் நிபுணத்துவமும் தொழில் நுட்பமும் பல துறைகளில் இல்லை. அண்மையில் நடந்த ஒரு சம்பவம். கனடாவில் இருக்கும் எனது மிக நெருங்கிய பாடசாலை நண்பன் ஒருத்தன் இரு மாத விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தான். முன்பிருந்தே அவர்கள் பலவகையான வியாபாரங்களில் கைதேந்தவர்களாய் இருந்தார்கள். இவன் ஊருக்குப் போனபோது நெல்லியடியில இருந்த அவர்களது இரண்டு கடைகளை புனருத்தாரணம் செய்து நவீனமயமாக்க ஆசைப் பட்டு உதயனிலே கேள்விப்பத்திரம் கேட்டிருந்தான். அவனுக்கு வந்த பதில்களிலே இரண்டு யாழ்மாவட்டவர்கள் தவிர மற்றைய அனைவரும் தென் பகுதியினர். முடிவிலே யாழிலிருந்து விண்ணப்பித்த இருவருக்கும் அவன் கேட்பது போல் வடடிவமைக்க முடியவில்லை. கடைசியில் தென் பகுதியில் இருந்து வந்தவர்களே வேலையே செய்து முடித்ததாக சொன்னான்.

[size=1]

[size=4]புலம்பெயர்ந்து அதிகளவில் வாழும் கனடா நாடில் பல தமிழர்கள் தொழிலதிபர்களாக முன்னேறியுள்ளனர். சிலர் கனேடிய தொழில்களிலேயே முன்னேறியும் உள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]கட்டிடத்தொழில் என்று பார்க்கும்பொழுது இது மிகவும் போட்டியான துறை. இருந்தும் பலவேறு வகையான நிலங்களை போடும் பல தமிழர் நிறுவனங்கள் உள்ளன. இதில் இந்த நிறுவனம் http://www.idealtileandflooring.com/ இன்று பல கிளைகளை கொண்டு வளர்ந்து இப்பொழுது பல மாடி அடுக்குகளை கொண்ட கட்டிடத்தை (condo development) கட்ட ஆரம்பித்துள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]புலம்பெயர் தேசத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறு முன்னேறலாம் என்றால் ஏன் தாயகத்தில் எம்மால் முடியவில்லை என்ற கேள்விக்கு பதிலை தேடுவதுடன் தடைகளை தாண்டும் வழிகளுக்கு உதவவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பெரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி பலர் பயனடைய அனைத்தும் இருந்தும் அவற்றைச் செய்ய முடியவில்லை. ஏன்? எப்போதுமே நுகர்வோர் சமூகமாக தமிழர்களை வைத்திருப்பதில் யாருக்கு எத்தகைய இலாபம்? சிங்களக் குடியேற்றம்போன்று இதுவும் ஒரு திட்டமிட்ட செயற்பாடு இராணுவ ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் தொழில் ரீதியாகக்கூட வாழ்வை முன்னேற்ற முடியாமல் முடக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். மாற்றத்திற்கான முனை எங்கிருக்கிறது என்று அறிந்து அதனைப்பற்ற வேண்டும். ஐயய்யோ அவர்கள் எங்கள் பகுதியில் வந்து தங்கள் வியாபாரங்களைப் பெருக்குகிறார்கள் என்று அலைப்பாரிப்பதால் எந்த விதமான முன்னேற்றமும் வந்துவிடப்போவதில்லை. அவர்கள் எங்கள் பகுதியில் அத்தகைய வியாபாரங்களை செய்வதை ஊக்குவிப்பதையும் பராக்குப் பார்ப்பதை விட்டுவிட்டு முடிந்தவரைக்கும் நமக்குள் அவற்றை வளர்க்க முயற்சிக்கவேண்டும். அதற்கான வாழ்வியல் நிலையை முதலில் தோற்றுவிக்கவேண்டும். அத்தகைய நிலையை தோற்றுவிக்க நாம் எப்படி செயற்படவேண்டும் என்பதை நாம் முதலில் உணரவேண்டும். குண்டுச்சட்டிக்குள்தான் குதிரையை ஓட்டுவோம் வெளியே வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியலில் உள்ளவர்கள் அதனைவிட்டு வெளியே வரவேண்டும். ராசதந்திர வகையில் நாங்கள் செயலாற்றுவோம் என்று விட்டு தலைவாசல் நிலைப்படி நிமிர்ந்து நடக்கும்போது தலையில் இடிக்கும் என்று தெரிந்தும் சமயோகிதமாக தவிர்க்காமல் நான் நிமிர்ந்தே நடப்பேன் என்னும் ஆணவப் போக்கை கைவிடவேண்டும். உதாரணத்திற்கு ஒரு மல்யுத்தக் களத்தில் நடக்கும் பலப்பரீட்சையில் நிமிர்ந்து நிற்பவன் வெற்றியாளனாக வருவதைக்காட்டிலும் மிக மிக தாக்கத்திற்குள்ளானவனாக மாறும் வாய்ப்பே அதிகம். தற்காப்பு தெரியாதவன் வெற்றியடைந்ததாக சரித்திரம் இல்லை. பலவீனமானவனுக்கு முதலில் தேவை தற்காப்பு. தற்காப்புக்காக ஒருவன் குனிந்தால் அது அவனின் வீரத்திற்கு இழுக்கு என்று நினைத்துவிடக்கூடாது. இன்றைய காலத்தில் வீரத்தைக்காட்டிலும் விவேகமே அதிகமாகத் தேவைப்படுகிறது. எங்கள் சமூகத்தில் உணர்ச்சிக்குள் அலைமோதும் தன்மைகள் அதிகமாக இருக்கிறது. அதனாலேயே 2009 இற்கு பின்னாக இதுவரைக்கும் எங்களால் தற்காப்பு நிலையைக்கூட தோற்றுவிக்க முடியவில்லை. நான் இங்கு பதிவிட்ட விடயம் இந்த இடத்திற்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ...பொதுவாக அனைத்துவகையான தாயகப்பிரச்சனைகளுக்கும் உரியதாக இருக்கும். அந்த நம்பிக்கையிலேயே இவ்விடத்தில் இதனைப்பதிவிடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சோப்பு முன்பும் வாங்கி பாவித்திருக்கின்றார்கள் பரவாயில்லை காரணம் ஈழத்தில் என்னும் சோப்பு தயாரிக்கவில்லை அதுவரைக்கும் சோப்பு போடாமலா இருக்கமுடியும் ? ஆனால் சோப்பு விற்க வரும் சிங்கள பெண்களை சோப்பு உங்களுக்கு போட அனுமதிப்பதுதான் தவறு .. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப் பகுதியில் மூலதனமிட்டு தொழில் ரீதியாக முன்னேற வேண்டுமென்றால் இலங்கை அரசினது அனுசரணை கட்டாயம் தேவை. இலங்கை அரசில் உள்ளவர்களையும், அதனது ஆதரவாளர்களையும் தாண்டி தொழில்ரீதியாக முதலீடு செய்வது தற்போதைக்குச் சரிவராது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். மேலும் சுயமாகத் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் கப்பம் கொடுக்காவிட்டால் உயிராபத்து உள்ளது. இதனால்தான் வட கிழக்குத் தவிர்ந்த பிறபகுதிகளில் பல்வேறு தொழில்துறைகளில் முன்னேறியுள்ள தமிழர்கள் ஏன் வீண் வம்பை விலக்கு வாங்கவேண்டும் என்று தாயகப் பகுதியில் முதலீடு செய்வதில்லை.

மேலும் தமிழர்களிடம் அதிக பணம் புழங்குவதால், இலாப நோக்கில் இயங்கும் வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் தாயகப் பகுதிகளுக்குப் படையெடுப்பது உண்மைதான். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் இலங்கையில் உள்ள சகல வங்கிகளினது கிளைகள் இருப்பதும், அதிகம் (தமிழரல்லாத) பிச்சைக்காரர்களை காணக்கிடைப்பதும் தமிழர்களிடம் நல்ல பணப்புழக்கம் இருப்பதனால்தான். அது தற்போதைய போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் வடகிழக்குப் பகுதிகளுக்கும் பரவியுள்ளதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இதன்மூலம் தமிழர்களுக்கு ஒரு குறித்த வீத வேலை வாய்ப்புக் கிட்டும்போது அவர்கள் புலம்பெயர் தமிழர்களில் தங்கியுள்ள நிலையும் குறைந்து செல்லும் என்பதையும் கவனிக்கவேண்டும்..

இவற்றை எல்லாம் சீரியசாக எடுக்க கூடாது .இது ஒரு வகை மன உளைச்சல் .எவர் எதை செய்தாலும் புலம் பெயர்ந்த தேசியவாதிகளுக்கு புலம்புவதே தொழிலாகிவிட்டது ,இணையம் ,வானொலி ,பத்திரிக்கை எங்கும் இதே ஒப்பாரிதான் .இவர்கள் நினைத்தது எதுவும் நிறைவேறவில்லை அதனால் ஏற்பட்ட ஒருவித தாக்கம் தான் இது .

நாட்டில் அரசியல் பிரச்சனை தீராத ஒரு பிரச்சனையாகிவிட்டது உண்மை ,

ஆனால் அங்கு தமிழனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதெல்லாம் உண்மையல்ல . பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்த காலத்திலேயே கொழும்பில் அப்பாட்மேண்ட்ஸ் கட்டி விற்றவர்கள் பலர் தமிழர்கள்.இப்போது பல விதமான முதலீடுகளிலும் தமிழர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனது நண்பர் கொன்கிரிட் செய்யும் தொழிற்சாலை போட்டிருக்கின்றார் .

இந்த கூக்குரல் இடுபவர்களை கணக்கில் எடுக்காமல் காலம் எங்கோ நகர்ந்து போய்விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

கூக்குரல் போடுவோர் போடட்டும்

கூட்டுத்தாபனம் நடத்துவோர் நடத்தட்டும்

கூட்டமைப்பு அரசியல் செய்யட்டும்

தமிழன் உரிமையுடன் அங்கு வாழட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.