Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னமள்ள அள்ளுப்பட்ட அண்டங் காக்கைகளும்..நாகபூசனி அம்மனும்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20120722_092133.jpg

பாவம்..

நயினை அம்மனும்

புத்தரின் ஆக்கிரமிப்பில்

ஆக்கினைகள் முத்த

உயிர் தப்பவோ என்னவோ...

ஓடி வந்து

அசைலம் அடிக்க..

பாவத்துக்கு இரங்கி

இங்கிலாந்தின்

மகாராணியும் அளித்தா

ஓரிடம்...

அது தான் லண்டனில்... என்வீல்ட்...!

நாளை அங்கும்...

கருடனும் பாம்பும்

கடல் கடந்து வந்ததாய்

கதையளக்க

எங்களில் பலர் உளர்..!

இருந்தும்

அசைலம் ரெக்கோட்

சொல்லும் உண்மைகள் பல...!

ஆண்டு தோறும்

அங்கு நடக்குது

கூச்சலும் கொண்டாட்டமும்.

அக்கம் பக்கம்

எப்படித் தான் வாழுதோ

யார் அறிவார்..??!

மாலையானதும்

பஜனை என்று

சிங்காரக் குமரன்களும் குமரிகளும்

கழுத்தை அறுக்கிறார்..

காலை ஆனதும்

சோறை ஆக்கிப்போட்டு

இரண்டு வேளைகள்..

குழையலாகவும்

படையலாகவும்

அள்ளி வழங்குகிறார்..!

ஆன்ரிகளும்

ஒன்றுக்கு இரண்டென்று

சீப்பான கோப்பைகளில்

அள்ளிக் கொண்டே

ஓடுகிறார்...

ஓசியில் கிடைப்பதை

விடுவாரா என்ன..??!

ஒரு கார் கூட

ஓட முடியா வீதி எங்கும்

மூன்று தேர் ஓட்டுகிறார்...

ஒரு முளம் கட்டுத் துணிக்கு

ஏங்கும் நிலையில்..

ஊரில் மக்கள்..!

இவர்களோ

ஒரு முளம்

கொண்டை மாலைக்கு

கியூவில் கிடக்கிறார்..!

பால் நிறமறியா

பாலகர்கள்

உலகெங்கும்

பசியால் வாடி வீழ..

கான் (Can) கானா

பால் ஊற்றி

பாற்குடம் தாங்குகிறார்..!

பின்னர் வெட்டியாய்

அதை

சிலை நடுவே கொட்டியும் தீர்க்கிறார்..!

பாவ.. விமோசனமாம் அது...

ஆயிரம் ஆயிரமாம்

பட்டுப் புழுக்களின்

உயிர் கொன்று

ஆக்கிய பட்டுடுத்து

தேடுகிறார் விமோசனம்...!!

பணமோ..

நீராய் இறைய....

பூவோ

மொட்டொடு இதழாய்

பாதைகள் நிரப்ப..

அழகு குமரிகள்

வரிசை கட்டி வருகிறார்

பல வகை காளையரும் அங்கு

"பிகர்" பிடிக்க வருகிறார்..!

அவரிடையே

மோதலுக்கும் குறைச்சலில்லை

காங் (Gang) சண்டை என்று

அதில்

கதை முடிச்சு

ஊர் விடுப்பளக்க ஒரு கூட்டம்..!

இடையிடையே

காட்டு மிராண்டிகள் போல்

செடில் குத்தி

காவடி என்று

மனிதரை வதைக்கிறார்..!

சரி எனக்கென்ன வேலை

ஊர் கூடும் இடத்தில்..

உளவு தேடி அல்ல

ஊர் விடுப்புப் பார்க்க..

சும்மா இல்ல

அம்மனின் பெயரால்

ஒரு நன்கொடைக்காக

தொண்டு செய்தன்..

அது மானிடம் சேருமோ

மாக்களிடம் சேருமோ..

அம்மா தாயே

நாகபூசனி

நீதான் அதை

சேர்ப்பார் இடம் சேர்க்க

வேண்டும்..!

பசியது போக்கி

ஒரு குழந்தையேனும்

வயிறது நிறைத்த

ஏவறை தர வேண்டும்..!

:):icon_idea:

(எழுத்தும் நானே படமும் நானே.)

(படம்: யாழ் காப்புரிமைக்கு உட்பட்டது. 22-07-2012 பிடிக்கப்பட்டது.)

(சோத்து ஆன்ரிங்களை சோத்து ஆன்ரிங்க என்று சொல்வது பிடிக்கல்லையாம் என்று கனக்க பேர் ரிப்போட் பண்ணி இருக்கிறதா நிர்வாகம் வருத்தப்படுகுது.. சனத்தொகையில அவைட தொகைதான் கூடப் போல.. அதனால் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இனங்க தலைப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு அங்க நின்று சோத்துக்கு அடிபட்ட ஆக்களைப் பார்க்கேக்க.. ஊரில புரட்டாதிச் சனிக்கு சாப்பாடு வைக்க.. அண்டங் காக்கைகள் அடிப்பட்டு சாப்பிடுறது தான்... ஞாபகம் வைத்திச்சுது. அதுதான் தலைப்ப இப்படி மாத்தி இருக்கிறன். இதுவும் பிடிக்கல்லை என்றால் ஆக்கத்தை அகற்றுங்கோ. பிரசுரிக்கிற வடிவில.. பிரசுரிக்க எத்தனையோ வழி இருக்குது. நிச்சயம் இதை சோத்து ஆன்ரிங்க வாசிக்க செய்வம்...! இதை யாழில் இருந்து அகற்றினாலும்.. அது மட்டும் நடக்கும்..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilmurasuaustralia.com/2012/07/blog-post_9344.html#more

சிட்னி முருகன் அருள் நெடுக்ஸ்க்கு கிடைக்கட்டும்

நன்றிகள் ட‌மிழ்முரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்து.

20120722_083900.jpg

இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கு வந்தும்.. மனிதன் தன்னைத் தானே கடவுளின் பெயரால் வதைக்கும்.. இப்படியான செயல்கள் கலாசாரம்.. பண்பாடு என்று கட்டிக்காக்(ட்)க(ட)ப்படத் தான் வேண்டுமா..???! ஏன் இவற்றை தொன்மை இழக்காது மனிதருக்கு துன்பம் இழைக்காத வகைக்கு மறுசீரமைக்கக் கூடாது..???!

(படம்: நான். யாழ் காப்புரிமைக்கு உட்பட்டது.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஒளிச்சு நிண்டு பின்பக்கம் மட்டும் படம் எடுத்து இருக்கிங்க நெடுக்க்ஸ் அண்ணா? பய் தி வே எதாச்சும் மாட்டிசான்னா?

.

லன்டனில அரிசி மலிவா நெடுக்ஸ் ?

இங்க 5 கிலோ பாஸ்மதி 13 - ‍ 16 டொலர் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெடுக்ஸ் அண்ணாவை தமிழ் கடையில அருசி வாங்கினத புல நாய் பாத்திட்டு சுண்டல்ட்ட வந்து சொல்லிச்சு அப்ப நெடுக்க்ஸ் அண்ணா உங்க வீட்டையும் சோரா? அப்ப நீங்க சோத்தன்னா

  • கருத்துக்கள உறவுகள்

செதில் அல்ல.... செடில்,அல்லது செடுல் என்ற சொற்பதத்தைத் தான் அனேகமானவர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறன் புறோ..

.

லன்டனில அரிசி மலிவா நெடுக்ஸ் ?

இங்க 5 கிலோ பாஸ்மதி 13 - ‍ 16 டொலர் போகும்.

இங்கு பாஸ்மதி அரிசி விலை 10 கிலோ 15 பவுண்ட்கள். ஆனால் சுப்பர் மார்க்கெட், அடிக்கடி ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று மலிவு விலையில் விற்பார்கள். அதில் நிறைய வாங்கிச் சேகரிப்பவர்கள் அதிகம். அவர்களே கவிதையின் கருப்பொருளுக்கு வலிமை சேர்த்துள்ளார்கள். :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பூவும் பொட்டுமாய்ப் பெண்கள் மங்கலகரமாக ஆண்டவனைத் தரிசிக்கும் கண்கொள்ளாக்

காட்சியைப் படம்பிடித்துப் பகிர்ந்து கொண்ட நெடுக்க்ஸிற்கு நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

உவர்கள்... யகோவா, அல்லிலூயா என்று மதம் மாறுவதை விட....

இப்பிடியாவது, பக்தியுடன் இருக்கிறார்களே... என்று பாராட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் தலைப்பும் ஒன்றுசேரவில்லை.

இருந்தும் ஆன்மீகம் என்பது அவர் அவரது சொந்த விடயம்.

ஒரு சிலர் விடும் சில பிழைகளுக்காக ஒட்டுமொத்தமாக சமுதாயத்தைச் சாடுவதும் அழகல்ல.

கவிதைநயம் நன்று. சில சொற்பதங்களைத் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20120722_092133.jpg

(எழுத்தும் நானே படமும் நானே.)

(படம்: யாழ் காப்புரிமைக்கு உட்பட்டது. 22-07-2012 பிடிக்கப்பட்டது.)

அவளவைக்கு பின்னாலை நிண்டு...மல்லிகைப்பூவாசத்தோடை பின்னழகையும் பாத்து வீணீர் வடிச்சுப்போட்டு.......இஞ்சை வந்து சமூகசீர்திருத்த கவிதை வேறை...இரண்டு நாளாய் ஆளை காணேல்லை எண்டேக்கையே யோசிச்சனான்.......சிங்கன் எங்கையோ வேர்க்கவிறுவிறுக்க ஏரியா செய்யிறார் எண்டு.....அட இதுவே விசயம் :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கோயிலுக்குக் குளிச்சு முழுகி தோய்த்துலர்ந்த வஸ்திரம் அணிந்து கையில் ஒரு கமராவோடு போய் ஓசியிலை புளியோதரை சாப்பிட்டுவிட்டு குமரிகளை விட்டுவிட்டு மாமிமாரை படம்பிடித்தான் இப்படித்தான் கவிதை வரும் நெடுக்ஸிற்கு. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சீ எங்கட நெடுக்க்ஸ் அண்ணன்ட taste அ இப்பிடிலாம் சொல்லி அவர கேவலபடுத்த கூட அவரும் மனுஷன் தானேய் அவருக்கும் உணர்சிகள் இருக்கும் தானேய்? அவர் என்ன விஞ்யான கூடத்தில இருக்குற எலியா அவரோட உணர்சிகள குளுசை போட்டு கட்டுபடுத்தி வைக்க? இது எந்த கட்டுக்கும் அடங்காத காளை காளை.

அவளவைக்கு பின்னாலை நிண்டு...மல்லிகைப்பூவாசத்தோடை பின்னழகையும் பாத்து வீணீர் வடிச்சுப்போட்டு.......இஞ்சை வந்து சமூகசீர்திருத்த கவிதை வேறை...இரண்டு நாளாய் ஆளை காணேல்லை எண்டேக்கையே யோசிச்சனான்.......சிங்கன் எங்கையோ வேர்க்கவிறுவிறுக்க ஏரியா செய்யிறார் எண்டு.....அட இதுவே விசயம் :lol::D:icon_idea:

:lol:

[size=5]சில பெடியளுக்குப் பழசுகளைத் தான் பிடிக்கும் ஏன் என்று புரியவில்லை![/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளவைக்கு பின்னாலை நிண்டு...மல்லிகைப்பூவாசத்தோடை பின்னழகையும் பாத்து வீணீர் வடிச்சுப்போட்டு.......இஞ்சை வந்து சமூகசீர்திருத்த கவிதை வேறை...இரண்டு நாளாய் ஆளை காணேல்லை எண்டேக்கையே யோசிச்சனான்.......சிங்கன் எங்கையோ வேர்க்கவிறுவிறுக்க ஏரியா செய்யிறார் எண்டு.....அட இதுவே விசயம் :lol::D:icon_idea:

---.. முன்னழகு.. பின்னழகு.. கண்டுபிடிச்சு வீணீர் வடிக்க முடியும்.. என்றால் அது.. உங்களாலும்.... உங்க பதிவுக்கு லைக் இட்டவையாலையும் மட்டும் தான் முடியும்..! :lol::D

அம்மன் கோயிலுக்குக் குளிச்சு முழுகி தோய்த்துலர்ந்த வஸ்திரம் அணிந்து கையில் ஒரு கமராவோடு போய் ஓசியிலை புளியோதரை சாப்பிட்டுவிட்டு குமரிகளை விட்டுவிட்டு மாமிமாரை படம்பிடித்தான் இப்படித்தான் கவிதை வரும் நெடுக்ஸிற்கு. :icon_mrgreen:

குமரிகளைப் படம் பிடிச்சு.. உங்களட்ட காட்டவோ செய்வம்.. அதெல்லாம் படம் பிடிச்ச எங்கட கமராக் கண்களுக்கு மட்டும் தான் சொந்தம். :)

இதெல்லாம் யாரும் பார்க்கக் கூடிய... பேரிளம் பெண்கள்.. என்பதால்.. போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்குது... (இருந்தாலும் ஒன்ரிரண்டு பிகருங்கள்.. மாட்டுப்பட்டிருக்குது.. ஆனாலும் நீங்க அதை எல்லாம் கண்டுக்க மாட்டிங்கன்னு.. நமக்குத் தெரியும்.) அதையே தாங்கள் கண்டு ரசிச்சுக் கொண்டிருக்கிறீர்கள்..! :lol::D

Edited by நிழலி
ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெடுக்ஸ் அண்ணாவை தமிழ் கடையில அருசி வாங்கினத புல நாய் பாத்திட்டு சுண்டல்ட்ட வந்து சொல்லிச்சு அப்ப நெடுக்க்ஸ் அண்ணா உங்க வீட்டையும் சோரா? அப்ப நீங்க சோத்தன்னா

புலனாய் எல்லாம்.. அனுப்பி.. இவ்வளவு கஸ்டப்படுறீங்க.. ஏன்... நீங்க சாட் பண்ணுற பிகர் எல்லாம் சோறு போல..! :lol::D

செதில் அல்ல.... செடில்,அல்லது செடுல் என்ற சொற்பதத்தைத் தான் அனேகமானவர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறன் புறோ..

செடில் தான் சரி போலத் தென்படுகுது... திருத்தி விட்டிருக்கிறேன்.

நன்றி தங்கச்சி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில அரிசி மலிவா நெடுக்ஸ் ?

இங்க 5 கிலோ பாஸ்மதி 13 - ‍ 16 டொலர் போகும்.

ஒப்பீட்டளவில்.. மானியம் எல்லாம் கொடுக்கிறதைப் பார்த்தா.. விலை குறைவு தான்.. போல..! நாங்க பெரும்பாலும்.. இங்கு அரிசி.. வாங்குவதில்லை..! நிறுத்தி ஆண்டுகளாகி விட்டது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் PIZZA burger சாபிட்டாலும் சுண்டலுக்கு சோறு சாப்பிட்ட தான் சாப்பிட்ட திருப்திஏய் வருதுங்கன்னா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் PIZZA burger சாபிட்டாலும் சுண்டலுக்கு சோறு சாப்பிட்ட தான் சாப்பிட்ட திருப்தியே வருதுங்கன்னா.

நீங்க.. சொல்லாமலே இது விளங்குது சுண்டல்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன மாதிரி? ஒன்லி pizza burger தானோ? இல்லை இடைக்கிட சப்பாதியுமா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன மாதிரி? ஒன்லி pizza burger தானோ? இல்லை இடைக்கிட சப்பாதியுமா? :D

இதெல்லாம் அதிகம் கொழுப்பு...! நாங்க வெறும் காத்து தான்...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யு மீன் air ? அந்த பாக்கிண்ட கடையில தானை வாங்குரநிங்க :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் யாரும் பார்க்கக் கூடிய... பேரிளம் பெண்கள்.. என்பதால்.. போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்குது... (இருந்தாலும் ஒன்ரிரண்டு பிகருங்கள்.. மாட்டுப்பட்டிருக்குது.. ஆனாலும் நீங்க அதை எல்லாம் கண்டுக்க மாட்டிங்கன்னு.. நமக்குத் தெரியும்.) அதையே தாங்கள் கண்டு ரசிச்சுக் கொண்டிருக்கிறீர்கள்..

https://www.facebook.com/nagapooshaniambaaltemple/photos

https://www.facebook.com/nagapooshaniambaaltemple/photos

  • 3 weeks later...

இது எப்பிடி இருக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.