Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஏற்கனவே காதலன் / காதலி இருந்தால் தாயகத்திற்குப் போய்க் கட்டலாம். எத்தனை வயதில் புலத்திற்கு வந்தார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. வளர்ந்த வயதில் புலத்திற்கு வந்தவர்கள் அங்குள்ளவர்களை மணம் முடிக்கும் பொழுது பிரச்சனைகள் வரச் சாத்தியம் குறைவு. புலத்தில் பிறந்து அல்லது புலத்திற்கு சிறு வயதில் வந்தவர்கள், தாயகத்திலிருந்து துணையை முடிப்பது பெரும்பாலும் சிக்கலில்தான் வந்து முடியும்.

இதைவிட தாயகத்தில் துணையைத் தேடும் பொழுது பொருளாதாரச் சிக்கல்கள் எழும். பொதுவாக வாழும் இடத்தில் துணையைத் தேடுவது நல்லது.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தப்பிலி . காதலித்தவர்களையே இந்தப் புலத்து வாழ்க்கை ஆட்டம் காண வைக்கின்றது இல்லையா :( ? பலவருடங்களாக காதலித்தவள் காதலனை விட்டு இங்கு வந்து , பின்பு புலத்து அற்பவாழ்வில் மூழ்கி காதலனை கேவலமாகப் பார்க்கும் காதலிகளையும் பார்க்கின்றோம் தானே :D ?

  • Replies 143
  • Views 11.1k
  • Created
  • Last Reply

தமிழர்களிடம் உள்ள கெட்ட ஜீன்களை எல்லாம் அவ்வளவு இலகுவாக மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது.

1. நீரிழிவு போன்ற உண்மையான பிரச்சனைகள்.

2. படிப்பு.. பட்டம்.. பதவி.. பணத்தை வைச்சு வெட்டிப் பெருமை கொள்ளுற குணம்...!

வெள்ளைத் தோலைக் கண்டால் மிரண்டு போற தமிழர்கள்... வெள்ளையை சப்பையை ஏற்றுக் கொண்டாலும்.. தமக்குள் சாதியை கைவிடுவினமோ என்றது கேள்விக் குறிதான். அதுவும் கனடா.. லண்டனில.....???! :lol::icon_idea:

[size=4]இதே பிரச்சனைகள் மற்றைய சமூகங்களிலும் இருக்கலாம். அவர்களும் எமது இனத்தில் திருமணம் செய்வதை விரும்பாது விடலாம் :rolleyes: [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரிலும் ஒரே பிரச்சனை என்று சொல்ல முடியாது. எங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது.. gene pool சுருங்கி இருக்க வகை செய்யலாம்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.

ஏறி இறங்குவது சாதனை.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?

யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.

ஊரில் இருந்து...

இங்கு இருந்து...

இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.

இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....

இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.

எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

அழகான கருத்து...

நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ பெண்கள் ஆண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி ஆண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

Edited by சுபேஸ்

எல்லோரிலும் ஒரே பிரச்சனை என்று சொல்ல முடியாது. எங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது.. gene pool சுருங்கி இருக்க வகை செய்யலாம்..! :icon_idea::)

- இப்பொழுது கரு உருவான பின்னர், சிசு வளர்ச்சி குன்றியதா இல்லையா என வீதம் சரியாக பார்க்கும் வசதி உள்ளது

- மரபு ரீதியாக சிறுநீரக பிரச்சனையுள்ளவர்கள் அண்மையில் மரபணு பரிசோதனை மூலம் வீதம் அந்த பிரச்சனை இல்லாமல் பிள்ளையை பெற்றனர்.

- நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

பிச்சனைகள் எங்கும் உண்டு. அதற்கு மருந்தை தேடுவதே சிறப்பு.

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

நெடுக்கரைத் தவிர :icon_mrgreen::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் பொண்ணுங்களா கட்டினா புருஷன் மார் பிள்ளைய தூக்கி வைச்சிட்டு வெளில நிக்க மனைவி மார் theatre ல இருந்து படம் பாக்க தான் சரி

புலத்தில அதானே நடக்குது என்ன நெடுக்க்ஸ் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

- இப்பொழுது கரு உருவான பின்னர், சிசு வளர்ச்சி குன்றியதா இல்லையா என வீதம் சரியாக பார்க்கும் வசதி உள்ளது

- மரபு ரீதியாக சிறுநீரக பிரச்சனையுள்ளவர்கள் அண்மையில் மரபணு பரிசோதனை மூலம் வீதம் அந்த பிரச்சனை இல்லாமல் பிள்ளையை பெற்றனர்.

- நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

பிச்சனைகள் எங்கும் உண்டு. அதற்கு மருந்தை தேடுவதே சிறப்பு.

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

மரபணுப் பிரச்சனைகளுக்கு இன்னும் பூரணத்துவமான அறிவியல் விடை கிடைக்கவில்லை. மேலும் குறைபாடுள்ள குழந்தைகளை அநேகம் கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கப்படும் நிலையே தொடர்கிறது. மேலும் சமூகம் சார்ந்த குறைபாட்டு பிரச்சனைகளுக்கு மருத்துவக் கண்காணிப்பு மட்டும் தீர்வைத் தேடித் தராது.

பிரச்சனை எங்கும் உள்ளது ஆனால் பிரச்சனைக்கான வாய்ப்பு எங்கு அதிகமோ அங்கிருந்து விலகி இருப்பது நன்று தானே..!

தமிழர்கள் தமிழர்களுக்குள் திருமணம் செய்வதால்.. தமிழர்களாகவே இருப்பர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழை மறந்த தமிழர்களாகவே புலம்பெயர் மேட்டுக் குடியினர் இன்று தம்மை இனங்காட்ட விரும்புகின்றனர். இதிலும்.. தமிழ் மறக்காத தமிழ் + வெள்ளை சிறப்பு..! :lol::icon_idea:

எங்கட தமிழ் பொண்ணுங்களா கட்டினா புருஷன் மார் பிள்ளைய தூக்கி வைச்சிட்டு வெளில நிக்க மனைவி மார் theatre ல இருந்து படம் பாக்க தான் சரி

புலத்தில அதானே நடக்குது என்ன நெடுக்க்ஸ் அண்ணா

இன்னொரு முக்கிய வேலையை விட்டிட்டீங்க.. பிள்ளைகள காரில் இருத்திற சீற் கட்டிவிடுறது.. பிள்ளையை வைச்சு.. பெலிட் போடுறது... மனைவி கூட போகும் போது மட்டும்.. புஸ் செயார் தள்ளுறது...!

இதெல்லாம் இப்ப தமிழ் புருச லச்சணமாம் எல்லோ. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருக்கேன்னா monday to Friday work அப்புறம் வீகேண்ட்ஸ் பிள்ளையள பக்கத்து வீடு காரனோட போட்டிக்கு 108 கிளாஸ் அதுவும் புருஷன் காரன் தான் கூட்டிட்டு போகணும் அப்புறம் வந்து வீட்ட புல்லு வெட்டுறது...

அதுக்குள்ள கிட்சென்ல இருந்து ஒரு குரல் வரும்

அப்பா நீங்கள் ஒரு வெங்காயம்

இவர்: என்னாது?

அவா: இல்லையப்பா நீங்க ஒரு வெங்காயம் பச்சை மிளகாயாவது வெட்டி தாரநீன்க்களே

Appuram இவர் போய் ஒட்டு மொத்த சமையலும்

Ayoo ayoo

ஏம்பா சுண்டல்

உங்களைப் போட்டு, பொண்ணுங்க சரியா கஷ்டப்படுத்தியிருக்காங்க போல கிடக்கு.

இன்னொரு முக்கிய வேலையை விட்டிட்டீங்க.. பிள்ளைகள காரில் இருத்திற சீற் கட்டிவிடுறது.. பிள்ளையை வைச்சு.. பெலிட் போடுறது... மனைவி கூட போகும் போது மட்டும்.. புஸ் செயார் தள்ளுறது...!

ஏன் இடையில பெலிட்டு போடுறதுக்கு முதல் 'நப்பி' மாத்திரத ஏன் விட்டயல் காணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் சுண்டலும் நெடுக்சும் கொஞ்சம் ஓய்வெடுங்கப்பா.... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரையும் கலியாணம் கட்டவிமாட்டாங்க போல இருக்கே :icon_mrgreen:

  • தொடங்கியவர்

[size=4]இதனை ஏற்கமுடியவில்லை.[/size]

[size=4]இவ்வாறு தேர்ச்சிபெற்றவர்கள் பொதுவாக அங்கோ இல்லை வேறு நாடுகளுக்கோ புலமைப்பரிசில் பெறக்கூடியவர்கள். இவர்கள் இவ்வாறு வருவார்களா?[/size]

[size=4]அப்படித்தான் வந்தாலும் இத்தனை வருடங்களில் அப்படி எத்தனைபேர் வந்தனர் என ஏதாவது ஆதாரம் உள்ளதா?[/size]

என்னிடம் விரல் நுனியில் புள்ளி விபரங்களுடன் ஆதாரங்கள் இல்லை . ஆனால் சில சம்பவங்களை என்னால் சொல்லமுடியும் . எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் ஓல் ஐலண்டில எடுபட்டு பாஸ் பண்ணிப்போட்டு லங்காபெல் இல் பொறிஇயலாளராக பல்கலைகளகத்தில் படிக்கும் போதே தெரிவு செய்யப்பட்டார் . அவரை ஒரு புலத்து அம்மணி கலியாணம் கட்டினா . அவா நாலைஞ்சு ஆம்பிள்ளையழுக்கு ஒரு தங்கைச்சி :) . கொழுத்த சீதனத்தோடை பெடியன் இங்கு வந்தார் :lol: . இப்ப அழுது கொண்டு இருக்கிறார் . தான் லங்கா பெல் இலையே வேலை செய்து கொண்டிருக்கலாம் எண்டு :( . கேட்டால் அம்மணி தனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பொஸ் பண்ணிறாவாம் :D . இதை என்னெண்டு சொல்லுறது :icon_idea: .

என்னிடம் விரல் நுனியில் புள்ளி விபரங்களுடன் ஆதாரங்கள் இல்லை . ஆனால் சில சம்பவங்களை என்னால் சொல்லமுடியும் . எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் ஓல் ஐலண்டில எடுபட்டு பாஸ் பண்ணிப்போட்டு லங்காபெல் இல் பொறிஇயலாளராக பல்கலைகளகத்தில் படிக்கும் போதே தெரிவு செய்யப்பட்டார் . அவரை ஒரு புலத்து அம்மணி கலியாணம் கட்டினா . அவா நாலைஞ்சு ஆம்பிள்ளையழுக்கு ஒரு தங்கைச்சி :) . கொழுத்த சீதனத்தோடை பெடியன் இங்கு வந்தார் :lol: . இப்ப அழுது கொண்டு இருக்கிறார் . தான் லங்கா பெல் இலையே வேலை செய்து கொண்டிருக்கலாம் எண்டு :( . கேட்டால் அம்மணி தனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பொஸ் பண்ணிறாவாம் :D . இதை என்னெண்டு சொல்லுறது :icon_idea: .

[size=4]இது பேராசை (சீதனத்துக்கான) என்று சொல்லலாம். இப்படியானவர்கள் பல தரத்திலும் சமூகத்திலும் உள்ளனர். [/size]

[size=4]கூழும் மீசையும் தேவை என வாழ்ந்தால் ... நரகமே. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் அப்புறம் பாஸ் பண்ணுறதோட நிறுத்திகிட்டா பருவால்ல....

1008 பேருக்கு போன் போடுறது போட்டு கதைச்சிட்டு அவர் வேலையால எப்படா வருவார்னு பாத்திட்டு நிக்குறது வந்த உடன

அப்பா அப்பா கதைய கேட்டிங்களே

இவர்: ம்ம் சொல்லு

அவா: இவள் சுமதி இருக்காள் எல்லே சுமதி

அவர்: ம்ம் இருக்காள் யாரோடையும் ஓடிட்டாலே?

அவா: seriousa பேசேக்க ஜோக் அடிச்சிட்டு..

அவளோட புருஷன் வருஷத்துக்கு 70 k எடுக்கிறாராம்

சரி அதுகென்ன?

என்னப்பா simplea இப்பிடி கேக்குறிங்கள் அவன் இலைங்கையில டிகிரி முடிச்சவன் நீங்கள் இங்க முடிச்சனிங்கள் ஒரு 90 k எண்டாலும் எடுக்க வேண்டாமே? என்ன செய்வின்களோ ஏது செய்வின்களோ இந்த வேலைய விட்டுட்டு வேற வேலை மாறுங்கோ நு குடைச்சல் குடுத்து குடுத்து புருஷன் மாற நிம்மதி இல்லாமல் பண்றது..

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

happy0007.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா சுண்டல்

உங்களைப் போட்டு, பொண்ணுங்க சரியா கஷ்டப்படுத்தியிருக்காங்க போல கிடக்கு.

ஏன் இடையில பெலிட்டு போடுறதுக்கு முதல் 'நப்பி' மாத்திரத ஏன் விட்டயல் காணும். :D

பொண்ணுங்க கிட்ட அடிமையா போற வர்க்கம் இல்லை நானும் நெடுக்க்ஸ் அண்ணாவும்.

கல்யாணம் கட்டினா கூட எல்லாம் எழுதில ஒப்பந்தம் போட்டு தான் கட்டுவம்

மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.

ஏறி இறங்குவது சாதனை.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?

யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.

ஊரில் இருந்து...

இங்கு இருந்து...

இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.

இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....

இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.

எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

உண்மைதான். முதலில் எம்மை நாம் விளங்கிக் கொண்ட பின்பு அல்லது வரையறுத்த பின்பு அதற்கேற்ற துணையைத் தேடினால் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். பலருக்கு அவர்களுடைய விருப்பு வெறுப்புகளே தெரிவதில்லை. பிறகெப்படி மற்றவர்களைப் பற்றி விளங்கிக் கொள்ள முடியும்?

நெடுக்கு குறிப்பிட்டதுபோல, கனடாவில் இந்தச் சாதி, சீதனப் பிரச்சனைகள் எல்லாம் ஊரைப் போலவே அதிகமாகத்தான் இருக்கிறது. சின்ன வகுப்புகளில் படிக்கும்போது, எமது பிள்ளைகளுக்கு பல இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். பெரிய பாடசாலைக்குப் போன பின்பு தமிழர்கள் நண்பர்களாக இருப்பார்கள். யூனிவர்சிட்டிக்குச் சென்ற பின்பு அவர்களது சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஊரைச் சேர்ந்தவர்கள் அதிகமான நண்பர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தார் புலத்திலும், ஊரார் ஊரிலும் கட்டுவது தான் சிறப்பு. எனக்கு இரண்டு எதிர்மறையான உதாரணங்கள் தெரியும்.

முதலாவது, எங்களது தூரத்து சொந்தக்காரப் பெடியன் ஒருத்தன் சுவிசிலிருந்து வந்த ஒரு புலத்து பெண்ணை நல்ல சீதனம் வாங்கிக் கட்டினார் (சீதனக் காசின் ஒரு பகுதி முட்டுமே குடுத்தார்கள்). கலியாணம் முடிஞ்சு சுவிஸ் போனவள், போனது தான். கூப்பிடுறன், கூப்பிடுறன் எண்டு சொல்லி கடைசியிலே தொடர்பே துண்டித்து விட்டா. பெடியன் கொழும்பு, ஊர் எண்டு மாறி மாறி அலைஞ்சது தான் மிச்சம். போன முறை ஊர் போயிருந்தபோது கண்டேன். என்னைக் கண்டுவிட்டு காணாத மாதிரி மண்டி மண்டிக்கொண்டு போனார். கூப்பிட்டு வச்சு கதைத்தேன். "அண்ணா சுவிஸ் போகப் போறீங்கள் எண்டு கேள்விப்பட்டன்......" "தம்பி அந்த வே**** பற்றி கதையாதை, *********" தான் டிவோஸ் எடுக்க கேட்டதாகவும், சீதனக் காசைத் திருப்பித் தந்தாத் தான் டிவோஸ் தருவம் எண்டு பொம்பிளைப் பகுதி சொல்லுவதாகவும் சொன்னார். ஆளின் வாழ்க்கை அநியாயமாய் நாசமாய்ப் போய்விட்டது.

இரண்டாவது எனது பள்ளி நண்பன் ஒருவன் ஒரு வருடத்துக்கு முன்னர் நோர்வேயிலிருந்த தனது சொந்த மச்சாள் ஒருத்தியை கட்டி போனான். இன்றுவரை பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறான். புலத்து ஆண்கள் ஊர்ப் பெண்களைக் கட்டும் போது நிலைமை பரவாயில்லை, ஆனால் புலத்து பெண்கள் ஊர் ஆண்களை கட்டுவது அவளவு நல்லதல்ல. இங்குவரும் ஆண்கள், வந்த புதிதில் பாசைப் பிரச்சனை, வேலைப் பிரச்சனை போன்ற பல காரணிகளால் மனிசி மாரில் தங்கியிருக்க வேண்டி வருகிறது. இதன் போது வரும் ஈகோ காரணமாகத்தான் அரைவாசிப் பிரச்சனைகளும் வருகிறது.

[size=1]

[size=4]எனக்குத்தெரிந்த ஒரு பெண் ஊர் சென்று ஒரு முன்னாள் போராளியை, முன்னைய பயணத்தில் கண்டவர், திருமணம் செய்து நாட்டை விட்டு வெளியே கொண்டுவந்துள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]இன்னொரு பெண் ஒரு வைத்தியரை மணந்து அவருக்காக வேறு நாட்டில் இருக்கின்றார். தனது வேலையை, சொத்துக்களை துறந்திருக்கின்றார். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவர் ஒரு கல்யாணத்த கட்டி பொண்டாட்டிய கூப்பிட்டார் பொண்டாட்டி வேலைக்கு போன இடத்தில வெள்ளை ஓட ஓடிட்டார் இதான் தமிழ் பொண்ணுங்க style

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று சொல்லாம், இது அவர் அவர் வாழ்கையை வாழ விரும்புகிற விதத்தில் இருக்கு. இது திருமணத்தில், குடும்ப வாழ்வில் மட்டும் அல்ல, எல்லவற்றிலும் இருக்கு. உதாரனத்திற்க்கு மழையிலும் பனியிலும் பஸ் பாஸ் எடுத்து போகிறதா அல்லது கடன் வாங்கி கார் எடுத்து ஒடுவதிலா என்பதில் தொடங்கி முடிவில்லாத எல்லை வரை செல்லும். ஆனால் ஒவ்வொன்ன்றினதும் முடிவும் நாங்கள் திட்டமிட்டது போல, விரும்பியது போல வரும் என்று நினைக்க கூடாது.

அண்மையில் ஒரு வெள்ளையினதவரை சந்தித்தேன், ஒரு கௌரவமான ஒரு அரச உந்த்தியோத்தில் இருந்தவர் 51 வயது, வட அமெரிக்காவில் வேலை செய்தவர், வேலை செய்த இடத்தில ஐரோப்பிய நாட்டு பெண் ஒருவரை சந்தித்து மணம் புரிந்து ஐரோப்பிய நாட்டிற்கு சென்றார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கலன் பியர் குடித்தாராம், மற்றைய போதைவஸ்த்து பாவனைகளும் இருந்ததாம். 3 பிள்ளைகள், முதலாவது இங்கே பிறந்தவர் ஏனையோர் ஐரோப்பாவில் பிறந்தவர்கள். ஒரு கட்டத்தில் மனைவி ஏனையோரின் விருபத்திக்கு இணக்க, குடியை குறைத்தார். ஆனால் அது அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்களை ஏறபடுத்த தொடங்கிறது. காலப்போக்கில் இவர் அறிந்தது அந்த மனைவி இன்னும் ஒருவர் உடன்

உறவில இருபதாக அவரோ ஆண்கள் செய்யும் கருத்தடை sikichchai செய்தவர், அவரது மனைவி கற்பமாக வந்தார், அவவினுடைய 40 களில் ( இருவருக்கும் 2 வயதுதான் வித்தியாசம்) ; அதுவும் அவர்களுடைய மகளின் முந்தைய காதலனால்-, மனைவியாய விவாக ரத்து seithu விட்டு வட அமெரிக்க வந்து விட்டார்.

விதி தொடர்ந்து விளையாடியது, "ingrowing nail " ஒரு வித நகம் சம்பந்தபட்ட வருத்தம்,- அதும் கால் நகம்- அவருக்கு பெரியளவில் வலி கொடுத்தது, கத்தியை அடுத்து அந்த நகத்தை வெட்டி எடுத்தார். அது கிருமி தொற்றுக்கு உள்ளாகி, செப்டிசெமியா அக மாறி, இதய வல்வுகில் வரும், endocarditis என்கிற வருத்தம் வந்து, அதில் இருந்தது vegitation எனப்படுகிற ""கிருமி கட்டி???" வந்தது-இதய வால்வில்-. அது தொடர்ந்து இரண்டோ மூன்று முறை, அதில் -இதய வால்வில்- இருந்து கழன்று மூளையத் தாக்கினது. அதனால் இரண்டோ மூன்று முறை பாரிச வாதம் வந்து, இப்போது, ஒரு கை, ஒரு கால் இயங்காது.

நான்கோ 5 வருட உடற் பயிச்சிக்கு பிறகு அவரால் ஊன்று கோல் பிடித்து நடக்க முடியும், ஒரு கையால் கிட்டதட்ட எல்லாம் செய்வார். ஒரு பல்கலையில் சேர்ந்து ஒரு முதுமாணி பட்டமும் எடுத்து விட்டார். வாழவில் ஒரு வெறி உடன் செயற்படுகிறார். நான் இப்படி ஒருவரை சந்திக்கவில்லை எனது அனுபத்தில்.

அவர் மருத்துவ மனைக்கு வந்தது; " ஏதாவது சந்தர்பம் இருக்கா, தனது முந்தைய ஆண் கருத்தடை சத்திர சிகிச்சையை மாத்துவதர்ற்கு?" எனது மேலாளர் சொன்னது, மிகக் குறைந்த அளவு சத்தற்பன்களே- வெற்றியாக வருவதர்ற்கு ஏனெனில் அவரது முந்தைய சந்திர சிகிச்சை 10 வருடங்களுக்கு முன்பு செய்தாதால்; ஆனால் 5 வருடத்திர்ற்குள் என்றால் குறைந்தளவு சந்தர்பங்கள் உள்ளது என்று சொன்னார். ஏனெனில் அவர் இப்போது ஒரு பெண்ணுடன் uravil இருப்பதாகவும் அந்த உறவின் முலம் ஒரு குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார்.

தான் குடியை நிறுத்தினது தனது வாழ்க்கை பயணத்தையே, நோக்கத்தையே மாற்றியதாக சொன்னார்.

அவர் போகும் போது என்னப்பார்த்து சொன்ன வார்த்தை, "Be careful what you wish for because it might come true"

நானும் ஒரு ஊரில் படித்து விட்டு இங்கே வந்து குடியேறிய முதல் தலைமுறை அரைக்கிழவன்; எனக்கும் சில பிரச்சனைகள் இருந்தது, இப்ப யோசித்தால் அதுகள் பிரச்சனை என்றே சொல்ல முடியாது. இப்ப ஒருவர் சொந்த செலவில், திறமையில் வந்தால், அவருக்கு வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் தெரியும், ஆனால் சில வேளைகளில் "சீதன மாப்பிள்ளையாக" வந்தால் "கனடா" "வெளிநாடு " என்று முதல் தலைமுறை "வாயை பிளந்து" செய்கிற வேலைகள் செய்ய முடியாமல் போகும். நல்ல உதாரணம் நான் கார் பழகினது; எனக்கு கார் பழக்கினது பெரியளவில் எனது மனைவி- அவாவிற்கு விருப்பமில்லை பழக்குகிரவர்களிடம் விட; முக்கியமாக பணத்தட்டுபாட்டால். எனக்கு ஒரு ??? ஈகோ பிரச்சனை, இலங்கையில் ஓடின அதும் கியர் கார் ஓடின ஆளுக்கு இவ என்ன பழக்குகிறது என்று. நான் நினைக்கிறன் வந்து 3 மாதர்ற்குள் ட்ரெயில் காட்ட வேணும் என்று; இல்லாவிடால் தொடந்து ஓட முடியாது- இரண்டாம் நாளே மிச்சகவில் ஓட தொடங்கி விட்டேன் - அது மட்டும் இலங்கை லைசென்ஸ் உடன் ஓட முடியம்; ஆனால் அவாவினுடைய பயம் பெயில் விட்டால் இரண்டாம் தரம் காசு காட்ட வேண்டும் என்று. கடைசில் 2 மணித்தியாலம் தெரிந்த ஒரு கார் பழக்கிறவரிடம் பழகி ட்ரெயில் காட்டினது. ஆனால் இப்ப யோசித்தால் சிரிப்பாக இருக்கு.

அதேபோல ஒற்றைகாலில் நின்று டிம்ஹோட்டன், வேலைக்கு போய் 2 கிழமையில் ஓடி வந்தது.

வெளிநாட்டில் இருந்து வரும் போது, அதும் "படித்த" என்ற கோதாவில் வரும் போது, இங்கே இருக்கிற எல்லோரும் விசுக்கோத்து மாதிரி தெரிவார்கள்; யாரையும் மதிக்க தோன்றாது..அதுவே பெரியவிளான பிரச்சனைகளுக்கு காரணம். மற்றும் படி வாழ்வின் வெற்றி என்பது -அப்படி ஒன்று இருந்தால்-அது உங்களுடைய/ எங்களுடைய அடையக்கூடிய இலக்கை எங்களுடைய விம்பம் போல் அடைய வேண்டும். முயற்றி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்காக வாழ்நாள் பூராக முயற்சி செய்யக்கூடாது, அதேநேரம் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படகூடாது என்று சொல்லிப்போட்டு சிவனே என்று படுத்தும் இருக்க கூடாது. இரண்டுக்கும் இடையில் இருந்தால் சரி.

வெளிநாட்டுக்கு வராது; ஏன் வாறது என்கிறதை பொறுத்து இருக்கு, எனக்கு சரி வந்திருக்கு, என்ற படியால் உங்களுக்கும் சரி வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம். தாயகத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு பணத்தில் படிக்கவோ.. பல்கலைக்கழகம் போக வேண்டிய ஒரு தேவையும் இல்லை. அங்கு எல்லாமே இலவசம். அதற்கு மேலதிகமாக.. புலமைப்பரிசிலும் உண்டு..! எனவே உங்களின் மேற்படி குற்றச்சாட்டு எல்லோருக்கும் பொருந்தாது. அதுமட்டுமன்றி உள்ளூர் வருமானத்திலேயே நல்ல அடிப்படைவசதிகளோடு வாழும் பல குடும்பங்களும் உள்ளன. எல்லோரும் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்ப்பதில்லை..!

மேலும்.. பாவித்தது.. பாவிக்கப்படுவது.. பாவிப்பது.. இரு பாலாரிலும் உண்டு.

எனவே ஆணாதிக்க வாய்ச்சவடால் என்பது அர்த்தமற்ற ஒன்று இன்றைய உலகில். ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள உலகில் வாழ்ந்து கொண்டு.. ஆணாதிக்கம் என்று இன்னும் பழமை வாதம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சிறீலங்காவிலும் பெண்களின் தொகை தான் அதிகம். பிரிட்டனிலும் அதே தான் நிலை. வீடுகளை அதிகம் ஆதிக்கம் செய்பவர்களாக நீண்ட ஆயுளோடு.. பெண்கள் உள்ள நிலையில்... ஆணாதிக்க கூச்சல்கள் அர்த்தமற்றவை.. இந்த 21ம் நூற்றாண்டில். நீங்கள் உட்பட பலர் இவற்றில் இருந்து வெளிவந்து.. யதார்த்த உலகிற்கும் அடிக்கடி வர வேண்டும்..! :):icon_idea:

நான் பெண்களுக்கு நட் சான்றிதழ் கொடுக்க வரவில்லை...........

நீங்கள் கூறிய யதார்த்த உலகை புரிந்துகொள்வதால்தான் அதை எழுத நேர்ந்த்தது.

திருமனத்திற்கு முன்பும் பின்பும் எத்தனையோ ஆண்கள் பலருடனும் உறவு கொள்கிறார்கள்.

விவச்சாரத்தை எடுத்தால்...

எண்ணிக்கைக்குள்தான் விபச்சாரிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போகும் ஆண்களின் கணக்கு எண்ணில் அடங்கா.

இந்த ஆண்கள் எல்லாம் எமது சமூகத்திட்குள்தான் இருக்கிறார்கள்.

ஆனால் தட்டியோ தவறியோ ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பழக நேர்ந்தால்.

நீங்கள் இணைத்த திசுக்களை இணைத்து கற்பை உருவாக்க வேண்டிய தேவை எங்கிருந்து எழுகிறது?

ஏன் இந்த பெண்களை அவாறே ஏற்றுகொள்ள ஆண்களால் முடியவில்லை? அவளவு ராமர்கள் இந்த உலகத்தில் வாழ்கிறார்களா?

ஆம் என்று நீங்கள் எழுதினால்.............

அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆண்களை பற்றி பெருமித படுவதை தவிர மேற்கொண்டு எழுத ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவர் ஒரு கல்யாணத்த கட்டி பொண்டாட்டிய கூப்பிட்டார் பொண்டாட்டி வேலைக்கு போன இடத்தில வெள்ளை ஓட ஓடிட்டார் இதான் தமிழ் பொண்ணுங்க style

:D

இவரிடம் இல்லாத ஒன்று வெள்ளையிடம் இருந்திருக்கிறது........

அது அன்பு ஆக கூட இருக்கலாம்.

ஓடினத்தட்கான காரணத்தை அந்த பெண் கூறிய பின்புதான். நாம் சரியா? தவறா? என்ற வாத்தத்தை தொடங்கலாம்.

  • தொடங்கியவர்

இந்த விடயம் இன்று நேற்றல்ல முந்திக் காலந்தொடக்கம் நடக்குது. என்ன ஆண்கள் ஊரில போய் கட்டிக்கிட்டு வாறது ஒப்பீட்டளவில் அதிகம் என்பதால் இது மறைந்து கிடந்தது. இப்போ இதுவும் அதிகரித்து வருவதால் வெளித் தெரிகிறது. ஊரில மணமகன் எடுக்கிற பெண்கள் எல்லோரும் திருமண வாழ்வில் சச்சரவுப் படுகினம் என்று சொல்ல ஏலாது. சிலர் சச்சரவுகளை சந்திக்கினம்.

புகலிடத்தில் உள்ள ஆண்களின் பலம்.. பலவீனத்தை புகலிடப் பெண்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுபோல் மறுதலையும் உண்மை. அந்த வகையில் இரு தரப்பும் தாயகத்தை நாட விளையினம். ஆனால் தாயகமோ.. அடுத்த கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

அங்கு ஏலவே பாவிக்கப்பட்ட பாவித்த சரக்குகளை எல்லாம் புதுச் சரக்கென்று இவர்களின் தலையில் கட்டிவிடும் வேலையும் நடக்குது. இரு பாலாரிலும் இது நடக்குது.

எனவே குற்றமோ குறையோ வாழும் சூழலுக்கு அதிகம் ஒத்துவரக் கூடிய ஒன்றை தெரிவு செய்வதே.. அதிக பிரச்சனைகள் இன்றிய வாழ்க்கைக்கு உதவும் என்று நினைக்கவே முடிகிறது.. இன்றைய நிலையில்..! :):icon_idea:

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் நெடுக்கர் . நாங்கள் இருவரும் சந்திப்பது குறைவு :) . காரணம் எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வுகளே :) . மேலும் நீங்கள் சொன்ன இரண்டாவது விடையம் , இருபாலாரும் தாயகத்தில் பாவித்த பாவிக்கப்பட்ட சரக்குகள் என்று ஒட்டுமொத்தமாக சொல்வதை ஏற்கமுடியவில்லை . புலத்துப் பாதிப்பால் ஒன்றிரண்டு விதிவிலக்களை கேள்விப்பட்டிருக்கின்றேன் . அதற்காக தாயகத்தில் உள்ளவர்களை ஒரே பார்வையில் பார்ப்பது பிழை . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று நீங்கள் சொல்லாம் . அதுவும் ஒரு பிழையான சொல்லாடலே :) .

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.