Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சிங்களவர்கள் விரட்டியடிப்பு! : திருச்சி காட்டூரில் பரபரப்பு

Featured Replies

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த இலங்கை சிங்கள மக்கள் பயணித்த பஸ் மீது செருப்படி மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது:

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு எதிராக மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை சுமார் 5 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது.

அதைத் தாண்டி பேருந்து இன்று மதியம் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் அருகே, சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி ஆகியவை உடைக்கப்பட்டன.

எனவே, சிங்களவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பிறகு நிலைமை சற்று சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

http://thaaitamil.com/?p=31199

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்களுக்கு இருக்கும் துணிவு ஈழத் தமிழர்களுக்கு இல்லை. லண்டனுக்குச் சென்றபோது அங்கே சொந்தமாகக் கடை வைத்திருக்கும் பல தமிழர்கள் சிங்களவர்களை வேலைக்கு வைத்துள்ளனர் எனத் தெரிய வந்தது. எத்தனை இழப்புக்கள் வந்தாலும் ஈழத்தமிழர் சுயநலம் மிக்கவர்களாகவே இருக்கின்றனர்.

லண்டனில் மட்டுமல்ல. மனிதத்துவம், நாகரீகம் பொங்கி பிரவாக்கிக்கிறது சில சுய நல செயல்களில். பல இடங்களில் தமிழர் வேலையற்று இருக்கிறார்கள். (மேலை நாட்டு சட்டங்கள் அது வென்றால் சிங்களவரின் நிலையங்களில் தொழில் செய்யும் தமிழர்களை தெரியவரவில்லை)

எதோ பகிஸ்கரி இலங்கையும் உயிர் வாழ்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்களுக்கு இருக்கும் துணிவு ஈழத் தமிழர்களுக்கு இல்லை. லண்டனுக்குச் சென்றபோது அங்கே சொந்தமாகக் கடை வைத்திருக்கும் பல தமிழர்கள் சிங்களவர்களை வேலைக்கு வைத்துள்ளனர் எனத் தெரிய வந்தது. எத்தனை இழப்புக்கள் வந்தாலும் ஈழத்தமிழர் சுயநலம் மிக்கவர்களாகவே இருக்கின்றனர்.

ஈழத்தமிழர் சர்வதேச அரசியல் படித்தவர்கள்.

விட்டுகொடுப்பு அரசியலில் விடுதலை பெற்றவர்கள்.

தமிழ்நாட்டு தமிழருக்கு அந்த அனுபவம் இல்லை.

உண்மைதான் இன்னும் சுவிசில் கூட கிரிகெட் கழகங்களில் சிங்களவரையும் தமிழர் இணைத்து வைத்து தான் விளையாடுவார்கள். ஏன் என்றால் தங்கள் கழகம் ஜெயிக்கணுமாம் என்ன செய்வது? எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா எத்தனை பெரிய மனம் உனக்கு என்ற பாடல் வரிகள் தான் நினைவு வரும் எனக்கு..

வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் இது.

புலிகளையும், தமிழர்களின் போராட்டங்களையும் புரிந்து கொண்ட எவரும் இப்படியான ஈனச்செயலை செய்யமாட்டார்கள். புலிகள் என்றும் தம் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதை வலியுறுத்தி வந்தார்கள். யுத்தம் நடக்கும் வேளைகளில் கூட மடு தேவாலயம் போன்ற இடங்களுக்கு சிங்கள மக்கள் செல்வதற்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி வந்து இருந்தார்கள். சிங்கள அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னாந்து பிள்ளை கூட மடு தேவாலயத்துக்கு சென்று வழிபட்டு இருந்தார்.

புலிகள் இல்லாமல் போனபின் அவர்களின் கொள்கை மட்டும் எதற்கு என்று நினைத்து விட்டார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வசனங்கள் வேண்டாமே நிழலி... இந்த 3 வருடங்களின் போர் முடிந்த வலிகள் தீரமுன்னரே கனடாவில் இருந்து பல தமிழர்கள் சுற்றுலாப் பிரயாணம் செய்கின்றார்கள். ஆனால் சம்பந்தமே இல்லாத தமிழக மக்கள் தங்களின் உணர்வுகளையும், வலிகளையும் வெளிப்படுத்தும் விதத்தை நீங்கள் கொச்சைப்படுத்துவது தான் ஈனத்தனமாக இருக்கின்றது.

இன்றுவரை எந்த சுயஇலாபமும் இன்றி ஈழத்துக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள்.( அரசியல்வாதிகளை விடுவோம்) அவர்களின் உணர்வுகளைக் கௌரவம் செய்து எழுதப்பழகுங்கள்.

சும்மா எடுத்ததுக்கு எல்லாம் புலிகள் அப்படிச் செய்தார் என்று ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். கடைசிவரை அந்தப் போலித் தோற்றத்தைக் காக்கப் போய்த் தான் மரபுவழி இராணுவம் என்ற பெயரில் அழிந்து போனோம்.சிங்கள அரச பயங்கரவாதம் தமிழ்மக்களைக் கொல்லும்போது, பதிலுக்கு வலியைக் கொடுத்தோம். இதில் ஒரு மறைப்பும் தேவையில்லை. 2008 மாவீரர் தினம் அன்று புலிகளின் குரல் மீது தாக்கி, பல தமிழ்மக்களைச் சிங்கள அரசபயங்கரவாதம் படுகொலை செய்தபோது, பதிலுக்கு சிங்கள நாட்டின் சுதந்திர தினம் அன்று தாக்கப்பட்டது. ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் இப்படி நடத்தப்பட்டது என்று வெளியில் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதுக்காக போலி முகமூடிகள் வேண்டாமே...

தமிழக மக்கள் தங்களின் எதிர்ப்பினையும் நடத்தப்பட்ட படுகொலைகளையும் தங்களால் முடிந்தளவு உலகத்திடம் பதிவு செய்ய முயல்கின்றார்கள். முடிந்தார் உங்களின் போராட்டத்தை நீங்கள் யாழிலோ, பேஸ்புக்கிலோ வெளிப்படுத்துங்கள்... அவர்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!!

வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் இது.

புலிகளையும், தமிழர்களின் போராட்டங்களையும் புரிந்து கொண்ட எவரும் இப்படியான ஈனச்செயலை செய்யமாட்டார்கள். புலிகள் என்றும் தம் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதை வலியுறுத்தி வந்தார்கள். யுத்தம் நடக்கும் வேளைகளில் கூட மடு தேவாலயம் போன்ற இடங்களுக்கு சிங்கள மக்கள் செல்வதற்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி வந்து இருந்தார்கள். சிங்கள அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னாந்து பிள்ளை கூட மடு தேவாலயத்துக்கு சென்று வழிபட்டு இருந்தார்.

புலிகள் இல்லாமல் போனபின் அவர்களின் கொள்கை மட்டும் எதற்கு என்று நினைத்து விட்டார்கள் போல.

உண்மையான யதார்த்தமான கருத்து நிழலி ..........ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் சிங்கள மக்களுக்கு கொடுத்த மாதிப்பையும்,மாண்பையும்,பாதுகாப்பையும் .சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கவில்லை என்ற மனக்குமுறல்தான் என்னால் தமிழகத்தமிழர்கள் செய்த நடவடிக்கை பிழை என்று கூறமுடியவில்லை

உண்மைதான் நிழலி, போர் குற்றம் புரிந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளும், சிங்கள ராணுவத்தினரும் தான் எதிரிகளே தவிர, பாமர சிங்கள மக்கள் அல்லர்.

விடுதலை புலிகளும் தாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரிகள் அல்லர் என்று தான் பலமுறை நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.

இப்படியான செயற்பாடுகள் தமிழர் பற்றி மட்டுமல்ல விடுதலை புலிகள் பற்றிய பிழையான அபிப்பிராயத்தையும் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கும். இது எதிர்கால தமிழ் மக்களின் விடுதலைக்கு பாதகமாகவே அமையும்.

தமிழக மக்களின் உணர்வுகளையும், கோபத்தையும் மதிக்கும் அதே நேரம், உங்கள் கோபத்தை காட்ட வேண்டிய தமிழக தமிழின துரோக அரசியல்வாதிகள் இன்னமும் தமிழகத்தில் உலாவி கொண்டு தானே இருக்கிறார்கள்.

இன்னமும் தமிழக சிறைகளிலும் அகதி முகாம்களிலும் ஈழத்தமிழ் அகதிகள் வாடி கொண்டு தானே இருக்கிறார்கள். உங்கள் உணர்வுகளை அதிலும் கொஞ்சம் காட்டுங்கள்.

Edited by பகலவன்

தமிழக போராடும் மக்களின் ஆற்றாமையின் வெளிப்பாடு தான் இது.மக்களின் ஜன நாயகக் குரல்கள் செவிமடுக்கப் படாதவிடத்து, இவ்வாறான சம்பவங்கள் நிகழும்.இதற்கான முழுப் பொறுப்பும் இந்திய மத்திய அரசையே சாரும்.அவர்கள் தேர்தலில் திமுக காங்கிரசை தோற்கடித்தனர் எதுவும் நடக்கவில்லை.உண்ணாவிரதம் இருந்தனர் எதுவும் நடக்கவில்லை.மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்தினர் எதுவும் நடக்கவிலை.தம்மையே எரித்தனர் அப்போதும் எதுவும் நடக்கவில்லை.

அவர்கள் வேறு எப்படித் தான் போராடுவது?

மட்டிறுத்தினராக இருந்துகொண்டு நிழலி பொலிசுக்கும் பொதுமகனுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மறக்க முடியாது. புலிகள் தாம் செய்தவற்றை தாம் வடக்கு-கிழக்கில் அரசபரிபாலனத்தை கையில் எடுத்தவர்கள் என்றமுறையில் செய்ய வேண்டியவர்களாக இருந்தார்கள். இதனாலேயே புலிகள் போர்க்காலத்திலும் சர்வதேச தராதரத்தை கடைபிடிக்கவில்லை என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இதை செய்தவர்கள் தமிழருக்காக கிந்திய,சிங்கள அரசை எதிர்த்து போராடுபவர்கள். அண்மையில் முன்னேஸ்வரத்து வேள்வி, செல்வசந்நிதி கோவிலில் கரகாட்டம் போன்றவற்றில் செய்தவையை வைத்துதான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புத்தரின் எச்சங்களின் இ்ங்கையில் இருப்பதால் தமிழரின் மதத்திற்கு தடை போட்டவர்கள்.

வெளிநாடுகளில் எழுச்சியியும், உணர்வும் வரவேற்பும் எப்படி இருந்தாலும் மகிந்தா திரும்ப திரும்ப அங்கே சென்று தனது அதிகாரத்திமிரை நிரூபித்திருக்கிறார். இதனால் மகிந்த ராசபக்காசவை தமிழருக்கு அடித்ததினால் அதிகப்படியான வாக்களினால் தெரிவு செய்யும் சிங்களவரின் அதிகாரத்திமிர் தமிழ்நாட்டு மக்களால் உணரப்பட்டிருந்தது. (அதற்கு முதல் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளினால் தெரியப்பட்டவர், அதில் தமிழர் வாக்களிக்க வில்லை. ஆனால் தமிழர் எதிர்த்துவாக்கள்த்த பின்னர் சிங்களவர்களால் அதிகப்படியான வாக்குகளினால் தெரியப்பட்டவர்) கருணாநிதி முத்துகுமாருவின் பிரேத ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழ் மக்களின் உணர்வுகளை ஏறி மிதித்து இன்று இப்படி வெளிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளி வைத்திருக்கிறார். ஜெயலலிதா மன்மோகன் சிங்கிடம் இலங்கையின் விஜயங்களை தனக்கு அறிவிக்கும் படி கேட்டு அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் இப்படியெல்லம் அவரை ஒரு முதல் அமைச்சர் தரத்தில் வைக்காமல் மத்தியினர் ஏமாற்றுகிறார்கள். 180 பயணிகளுக்கு வீசாககொடுக்கும் போது நிச்சயம் இது தமிழ் நாட்டில் இவர்களின் வரவு தெருவில் தெரியவரும் என்று தெரிந்து வைத்துதாம் வீசா கொடுக்கும் அதிகாரி வீசா கொடுக்க முடியும்.

அண்மையில் அம்பாறை சிங்கள மக்கள் புத்தரின் எச்சங்களை பார்க்க அங்கே எடுத்துசெல்லப்படாது என்று மத்திய அரசு கட்டளை இட்டிருந்தது. அதை தமிழ் மக்களின் உணர்வுகளை மிதிக்க தக்கதாக நடப்பதை மத்திய அரசே தவிர்த்திருந்தது. இதை இனி தமிழ் மக்களில் உணர்வுகள் மிதிக்கப்படும் மற்றைய இடங்களிலும் நடைமுறப்படுத்துவர்களாக.

Edited by மல்லையூரான்

  1. இந்திய அரசு சிறிலங்கா மீது சில நடவடிக்கைகளை எடுப்பதற்கான தாயாரிப்பாகக் கூட இந்த நிகழ்வு இருக்கலாம்.அனேகமாக இராணுவப் பயிற்சிகளை நப்பாட்டுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் இது.

புலிகளையும், தமிழர்களின் போராட்டங்களையும் புரிந்து கொண்ட எவரும் இப்படியான ஈனச்செயலை செய்யமாட்டார்கள். புலிகள் என்றும் தம் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்பதை வலியுறுத்தி வந்தார்கள். யுத்தம் நடக்கும் வேளைகளில் கூட மடு தேவாலயம் போன்ற இடங்களுக்கு சிங்கள மக்கள் செல்வதற்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி வந்து இருந்தார்கள். சிங்கள அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னாந்து பிள்ளை கூட மடு தேவாலயத்துக்கு சென்று வழிபட்டு இருந்தார்.

புலிகள் இல்லாமல் போனபின் அவர்களின் கொள்கை மட்டும் எதற்கு என்று நினைத்து விட்டார்கள் போல.

இப்படி எழுதத்தான் எனக்கும் ஆசை நிழலி

ஆனால் அந்தக்கொள்கையுடைய புலிகள் வென்றிருக்கணும்.

சிங்கள மக்களால் விரும்பப்பட்டிருக்கணும்.

ஆகக்குறைந்தது சர்வதேசங்களில் தடை செய்யப்படாமலாவது இருந்திருக்கணும்.

எதுவும் இல்லையே.

அதுவும் இல்லாவிட்டால்

பூச்சி புழுக்களைப்போல் தமிழரை முள்ளிவாய்க்காலில் கொன்று எரித்த போது ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும்.

இன்னும் இவர்களுக்கு நல்லது எடுபடும் என்ற வீம்பு வேண்டாம் தமிழர்க்கு.

சாத்திய வழிகள் செவிமடுக்கப்படாமையால் தீயை தம்மேல் ஏற்றியும் திரும்பிப்பார்க்காததால் தடி எடுத்துள்ளனர் தமிழக உறவுகள்.

சரியென்றே படுகிறது. காரணம் இனியும் தாமதமாகினால் தமிழர் இருந்த தடையமே தாயகத்தில் இராது. போய் வருபவர் சொல்லும் சேதியிது.

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிக்கு வந்தால் கூட அடிப்பன் நானு.. எனக்கு சிங்களன பார்த்தாலே புடிக்காது.. தெளிவாக ஒரு முடிவுக்கு வரணும்.. அடிக்கலாம் என்கிறீர்களா..? வேண்டாம் என்கிறீர்களா..? ரெல் ரெல் மீ...

:( :(

இது கேள்வி

ஆனால் அடிக்க முடிவெடுத்தா கேட்டுக்கொண்டிருக்கமாட்டார் என்பது வரலாறு. :(

  • கருத்துக்கள உறவுகள்

இது கேள்வி

ஆனால் அடிக்க முடிவெடுத்தா கேட்டுக்கொண்டிருக்கமாட்டார் என்பது வரலாறு. :(

தோழர்

நான் இங்கிட்டு களத்தில் நடக்குற பைட்டுக்காக பதில் எழுதினேன்.. நீங்க சிங்களவன் செஞ்சி கோட்டைய சுற்றி பார்க்க் வருகிற தகவல் தெரிஞ்சால் எனக்கு சொல்லுங்க.. பிளீஸ் ..

ஐ வில் டூ மை லெவல் பெஸ்ட்..

தமிழ் நாட்டில் இருப்பே இல்லாத சில கட்சி தலைவர்கள் செய்யும் ஈனச் செயல் இது .

பொதுமக்கள் செய்வதென்பது ஒன்றுமில்லை .இதெல்லாம் எதற்கு அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் அல்லது கருணாநிதியிடம் இரண்டு சீட் கூடுதலாக கேட்க .

தமிழ் நாட்டில் இருந்து இப்படியான செயல்களை செய்பவர்களை மன்னிக்கலாம் அவர்களுக்கு தெரிந்தது முடிந்தது அவ்வளவுதான் .

புலம் பெயர்ந்தும் இன்னமும் அந்த மன நிலையில் பலர் இருப்பதுதான் மனவருத்ததிற்குரியது .கடைசி பிள்ளைகளைப் பார்த்தாவது கொஞ்சம் அறிவை வளர்க்கலாம் . .

அடித்தால் என்ன எல்லாம் நடக்கும்:

பதிலுக்கு மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்

இதன் பின் தமிழ்நாட்டில் சில சிங்கள மாணவர்கள் தாக்கப்படுவார்கள்

வெறிபிடித்த சிங்களவர்கள் மலையகத் தமிழர்களை தாக்குவார்கள், சிலர் கொல்லப்படுவார்கள்

தமிழ்நாட்டில் தமிழ் தீவிரவாத அமைப்புக்களும் பதில் தாக்குதல்களை செய்யும்

தமிழ்நாட்டில் இருந்து வியாபாரம் மற்றும் வேறு வேலைகள் நிமித்தம் வருபவர்கள் தாக்கப்படுவார்கள், சிலர் கொல்லப்படுவார்கள்.

நிலைமை மோசம் ஆகும். சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும். ஈழத் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறும்.

இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம். அல்லது தன்னுடைய வழமையான ஆரிய பார்ப்பனியக் கண்ணோட்டத்தோடு தமிழ் நாட்டு தமிழர்களின் போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்க முனையலாம்

அலோ நீங்கள் வந்து பார்த்தீர்களா..? விளக்கு பிடித்தீர்களா..? கட்சிகாரந்தான் செய்யுறான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..?ஈழதமிழர்களுக்கான போராட்டம்(அடி/தடி) என்றால் கட்சிகாரந்தான் வருவான் என ரூல்ஸ் இருக்கா..? எல்லோரும் வேலை வெட்டி இல்லாம புல் ரைம் பால்டிக்ஸில் இறங்கிட்டாணு நீங்க நினைக்கிறீங்களா..? இது ஒரு புரொபொசன்ல் ..?அவன் நியுஸில் போட்டான் என்றால் அப்புடியே நம்பிடறதா.. ம்ம்ம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அடித்தால் என்ன எல்லாம் நடக்கும்:

பதிலுக்கு மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்

இதன் பின் தமிழ்நாட்டில் சில சிங்கள மாணவர்கள் தாக்கப்படுவார்கள்

வெறிபிடித்த சிங்களவர்கள் மலையகத் தமிழர்களை தாக்குவார்கள், சிலர் கொல்லப்படுவார்கள்

தமிழ்நாட்டில் தமிழ் தீவிரவாத அமைப்புக்களும் பதில் தாக்குதல்களை செய்யும்

தமிழ்நாட்டில் இருந்து வியாபாரம் மற்றும் வேறு வேலைகள் நிமித்தம் வருபவர்கள் தாக்கப்படுவார்கள், சிலர் கொல்லப்படுவார்கள்.

நிலைமை மோசம் ஆகும். சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும். ஈழத் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறும்.

இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம். அல்லது தன்னுடைய வழமையான ஆரிய பார்ப்பனியக் கண்ணோட்டத்தோடு தமிழ் நாட்டு தமிழர்களின் போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்க முனையலாம்

நன்றி

தங்களது இராணுவ வியூக கட்டுரைக்கு........... :icon_idea:

தமிழ் நாட்டில் இருப்பே இல்லாத சில கட்சி தலைவர்கள் செய்யும் ஈனச் செயல் இது .

பொதுமக்கள் செய்வதென்பது ஒன்றுமில்லை .இதெல்லாம் எதற்கு அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் அல்லது கருணாநிதியிடம் இரண்டு சீட் கூடுதலாக கேட்க .

தமிழ் நாட்டில் இருந்து இப்படியான செயல்களை செய்பவர்களை மன்னிக்கலாம் அவர்களுக்கு தெரிந்தது முடிந்தது அவ்வளவுதான் .

புலம் பெயர்ந்தும் இன்னமும் அந்த மன நிலையில் பலர் இருப்பதுதான் மனவருத்ததிற்குரியது .கடைசி பிள்ளைகளைப் பார்த்தாவது கொஞ்சம் அறிவை வளர்க்கலாம் . .

எனக்கு ஒரு சந்தேகம்

அன்றிலிருந்து இன்றுவரை

சிங்களவனை அடித்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது??????????????.

அவனை அடிப்பவனை ஏன் நீங்கள் வெறுக்கின்றீர்கள்????????????????? :(

அண்ணா ஓ.....இதுதான் அந்தக்கட்டுரை என்பதா..................எனக்கு இப்பதான் தெரியுது.......நன்றி . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்களது இராணுவ வியூக கட்டுரைக்கு........... :icon_idea:

அதெல்லாம் நிகழ்காலத்தில் நடந்திட்டுத்தான் இருக்கு.. அவனவன் துபாய் கத்தார் என்று மீன் பிடிக்க கிளம்பிட்டான்.. அங்கையும் உள்ளடி போடுகிறார்கள்... யாருக்கும் சொந்த ஊரில் இருக்கும் ஏரி குளம் குட்டை ஆறு ஆகியவற்றின் மேல் நம்பிக்கை இல்லை..!

இப்போ எதிர்காலத்தை பற்றி யோசிக்கணும்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழ் நாட்டில் இருப்பே இல்லாத சில கட்சி தலைவர்கள் செய்யும் ஈனச் செயல் இது .

பொதுமக்கள் செய்வதென்பது ஒன்றுமில்லை .இதெல்லாம் எதற்கு அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் அல்லது கருணாநிதியிடம் இரண்டு சீட் கூடுதலாக கேட்க .

தமிழ் நாட்டில் இருந்து இப்படியான செயல்களை செய்பவர்களை மன்னிக்கலாம் அவர்களுக்கு தெரிந்தது முடிந்தது அவ்வளவுதான் .

புலம் பெயர்ந்தும் இன்னமும் அந்த மன நிலையில் பலர் இருப்பதுதான் மனவருத்ததிற்குரியது .கடைசி பிள்ளைகளைப் பார்த்தாவது கொஞ்சம் அறிவை வளர்க்கலாம் . .

எழுதும் வகையை பார்த்தால் அர்சுன் நீங்களும் பூநூல் போடிருக்கிறார்களா? சுப்பிரமணிய சுவாமி அண்ணன் தம்பி உறவா? :icon_idea::lol:. அவர் மட்டும்தான் மக்களின் வெறுப்பால் வரும் சிலவற்றை தாங்கிக் கொண்டு, மக்கள் வெறுக்கும் பலவற்றை தொடர்ந்து கொண்டு, ஒரு தொகுதில் கூட வெல்லமுடியாத வெறுப்புகளை வாங்கிக்கட்டிகொண்டு இந்தியா முழுவதையும் தான் தான் பிரதிநிதிப்படுத்திகொண்டு பேசுவது போல் ஜனநாயகம் பேசுவது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/aV8I20yqYvw

தமிழ் நாட்டின் தமிழ் உணர்விற்கு நான் தலை வணங்குகிறேன். ஈழத்தமிழனின் பிரச்சனை தீர்க்காதவரை சிங்களவ எங்கும் நின்மதியா இருக்க முடியாது. உலகம் இதை புரிந்து கொண்டு உரிய தீர்வை இலங்கை அரசு தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும். சும்மா கருணா டக்லஸ் பிள்ளையான் போன்ற ஈனப்பிறப்புகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டு உரிய தமிழ்த் தலைவர்களிடம் பேசி உரிமையை கையளிக்கவேண்டும்.

புரட்சிகர தமிழ் தேசிகனின் இன பற்றுக்கு வாழ்த்துக்கள்.

ஹிந்திய பார்ப்பனிய சுப்பிரமணிய சுவாமி திருந்தினாலும் எங்கள் அர்ஜுன் அண்ணா திருந்த மாட்டார் என்கிற சேதி அடிக்கடி நிருபிக்க படுகிறது.

அந்த ஒளிப் பதிவுக் காட்சியில் சிங்கள அம்மணி தாங்கள் உணகளுக்கு என்ன செய்தோம் என்று கேட்கிறா? இலங்கையில் தமிழன் என்ற காரணத்திட்க்காக குழந்தைகள் முதல் முதியோர் வரை வகை தொகை இன்றி கொல்லப் பட்டார்களே அப்பொழுது நீங்கள் ஒரு சிறிய ஜனநாயகப் போராட்டம் செய்து அந்த அப்பாவி தமிழரை ஒன்றும் செய்யாதிர்கள் அவர்களை கொள்வதை நிறுத்துங்கள் என்று சிங்கள அரசிட்கேதிராய் எந்த சிங்களவனாவது சொன்னிர்களா?

புலிகள் கடைசி கட்டத்தில் கூட சிங்கள பொதுமக்கள் மீது ஒரு தாக்குதலும் செய்யாமல் இருந்தார்களே ஏன்? மக்கள் தங்கள் இலக்கு இல்லை என்று தானே ஆனா உங்கள் சிங்கள அரசு என்ன செய்தது? இண்டைக்காவது நீங்கள் உணர்கிறீர்களா? எங்களுக்கும் ஆசை தான் எல்லோரோடும் ஒற்றுமையா இருக்க ஆனா நீங்க விடவில்லை.

395205_265274350258496_719741434_n.jpg

என் இனத்தின் கோலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.