Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் மாப்பிள்ளைகள் அன்றும் இன்றும்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் இலங்கையில் மிகவும் பிரபலமான விடயங்களில் இதுவும் ஒன்று.

வானொலிகள் நாடகங்கள் தனியார்நகைச்சுவைகள் ஏன் பாட்டிலும் கூட அது முதலிடம் பிடித்திருந்தது.

"லண்டனிலே மாப்பிள்ளையாம் பொண்ணு கேட்கிறாங்க" மிகவும் பிரபலமானது.

கிட்டத்தட்ட இது ஒரு போலி நாடகம். இதில் பலர் சிக்கி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் படிப்பு படித்தோரே அதிகளவில் இதற்குள் புகுந்து ஏமாற்றப்பட்டது பழைய கதை.

இனி தற்பொழுது...........

எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்களை,

தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை கொண்டுள்ளதை கண்டுள்ளேன்.

அதை இங்கு எழுதுவதன் நோக்கம் பெண்களே, பெற்றோரே, சகோதர சகோதரிகளே ,.............கவனம் என்பது மட்டுமே.

அவர்களது வயதை மறைப்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. எனக்குத்தெரிந்த மூவர் அவர்களைவிட 12 வயது அதிகமுள்ள ஆண்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நன்றி.

Edited by விசுகு

  • Replies 62
  • Views 6.5k
  • Created
  • Last Reply

எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்கள் ( ஆண்கள் )

தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக பல பெண்களை இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை கொண்டுள்ளதை கண்டுள்ளேன்.

மாத்தி விடுங்கோ விசுகு.

இதுதான் இப்ப மார்க்கற்றில நிக்குது . சனம் திருந்திறபாடாய் தெரியேல . புலத்திலையே ஆள் ஆளுக்கு ஆப்படிக்கினம் . வாழ்துக்கள் விசுகர் .

Edited by கோமகன்

ஏற்கனவே கலியாணம் முடித்த இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான கனடா வாழ் தமிழ் கட்டளழகனுக்கு மார்கட்டில் இப்ப என்ன ரேட்?

ஏற்கனவே கலியாணம் முடித்த இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான கனடா வாழ் தமிழ் கட்டளழகனுக்கு மார்கட்டில் இப்ப என்ன ரேட்?

இறுக்கி பிடிச்சால் கொழும்பில வீடு 50 பவுனில நகை , வேலைவெட்டியை பொறுத்து எழுபது லச்சம் . கட்டழகன் எண்டதை ஆதாரங்களோடை நிரூபிக்கவேணும் :lol: :lol: :D :D .

ஒரு வீடும் அம்பதினாயிரம் பவுன்ஸ் உம் அதில ஒரு சூடுமாம்.

நிழலி தயாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கலியாணம் முடித்த இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான கனடா வாழ் தமிழ் கட்டளழகனுக்கு மார்கட்டில் இப்ப என்ன ரேட்?

free transfer rate!

திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்ற பின்பு வாழ்க்கை அலுத்துப் போனவர்களின் புரோபைல்கள்தான் இப்போது வரன்கள் தேடும் பக்கங்களை நிரப்புகின்றன. அதுவும் திருமணமாகாதவர்கள் என்ற வகையறாக்குள். இன்ரநெட் மூலம் வரன்கள் தேடுபவர்கள் மிகவும் அவதானமாக இருங்கள். எதையும் நேரடியாகத் தீர விசாரித்த பின்பே முடிவெடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் application போடுற நேரம் பாத்து இதை போட்டது ரொம்ப ரொம்ப தப்பு என்னோட புளைப்புல மண்ணை அள்ளி போட்ட விசு அண்ணாவை வன்மையா கண்ணடிக்கிறன். :D

சரி சரி விசு அண்ணா சொல்லி இருக்கிறது London மாப்ஸ் பற்றி நான் Aussie எண்டதால ஓகே :D

அவுஸ் கங்காறு சாணகம் நாத்தம் தாங்கேலாதே சுண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சின்னப் பொடியன் எல்லாரும் சேர்ந்து பயப்படுத்தாதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் கங்காறு சாணகம் நாத்தம் தாங்கேலாதே சுண்டு .

கங்கரூ ஓட சாணகத்த நீங்க என் போய் மணந்து பாக்கிறிங்கள்? உங்களுக்கு மணந்து பாகிறதே வேலையா போச்சு....:D

கங்கரூ ஓட சாணகத்த நீங்க என் போய் மணந்து பாக்கிறிங்கள்? உங்களுக்கு மணந்து பாகிறதே வேலையா போச்சு.... :D

சரி .............. நோ ரென்சன் :lol: .வாழ்கை உண்டு :D . நல்ல படமாய் போடும் சொல்லிப்போட்டன் :D .

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க என்று வாறதுகள் படிக்குதுகள்.. படிப்பைச் சாட்டி வாறதுகள்.. அசைலக் கேசுகள் போலத் தான்.. இரண்டும் பொய் பித்தலாட்டம் செய்து வாழப் பார்க்குதுகள்.. இதில் யார் உசத்தி என்று பார்ப்பது..???!

ஏன் விசுகு அண்ணா.. 50 வயது தமிழ் பெண்மணி 23 வயது வெளிநாட்டுப் பையனை காதலித்து திருமணம் செய்யும் நிலை இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில்... 10.. 12 வயசுக்காரங்க.. திருமணம் செய்வது தப்பா..???! அதுவும் கொழும்பில நடந்திருக்குது..!!!

10.. 12 வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்தால்... அவருக்கு 70 வயசா இருக்கேக்க.. அவாக்கு.. 60.. 58 வயசு..! இதில.. தப்பு....??! இல்ல தெரியாமல் தான் கேக்கிறன்.. நாங்களே எங்களுக்க ஒரு விதி சமைச்சு வைச்சு.. காதலின்னு காதலிக்கிறது.. காதலா வியாபாரமா..????!

சம வயதில் அல்லது.. 2.. 3 வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்தவை எல்லாம் நல்ல சந்தோசமா இருக்கினம் என்பதை எப்படி உறுதி செய்து கொள்ளுறீங்க. குறிப்பாக வயதான நிலையில்.. ஆளை ஆள் கவனிக்க முடியாமல்.. 3 ம் தரப்பை நம்பி வாழ்க்கையை ஓட்டும் தம்பதிகள் பலர்.

இப்போது வெளிநாடுகளில் கூட நடுத்தர வயதுப் பெண்கள்.. 20 பதுகளில் உள்ள ஆண்களை மணம் முடிக்கிறாங்க..! நாங்க தான்.. இன்னும்.. கட்டுப்பெட்டிக் கலியாணம் செய்துக்கிட்டு போலியா ஒரு வாழ்க்கை வாழிறம். 10.. 12 டோ.. ஒருவரை ஒருவர் உண்மையாகவே விரும்பினா அவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் என்ன தப்பு. அப்படிச் செய்யக் கூடாது என்று ஒரு சட்டம் உலகில் எங்கும் இல்லையே..! ஏன் நாங்களா எங்களுக்க.. அப்படி ஒரு விதி சமைக்கனும்..!

ஏமாத்தி திருமணம் செய்வது தவறு. ஆனால்.. ஒருவரை ஒருவர் வயதைக் கடந்து காதலித்து நிஜமாவே மனம் ஒருமித்து.. திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது..?????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இணையத்தில் சோடி தேடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பலரும் ஏமாற்றுவதாக கேள்விப்பட்டேன்.

லண்டன் வாழ் மாப்பிள்ளைகளுக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் என்ன, பல கோடி தங்கப் பவுண்டுகளாக கொட்டிக் கொடுத்தாலும் தகும். ஒவ்வொருவரும் வைரங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் விடயத்தில் எமது சமூகம் மிகப் பிந்தங்கிய நிலையில்.. அதை ஒரு சமூக வியாபாரமாகவே செய்து வருகிறது. காதல் என்பதும் கூட வியாபாரமாகி உள்ள ஒரு கேடு கெட்ட சமூகம் எமது சமூகம். இந்த நிலையில் இருந்து மாற.. நாங்க பலவற்றை திறந்த மனதோடு பேச வேண்டிய நிலையில் இருக்கிறம்..! மேற்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்தும்.. நாம் இன்னும்.. பிற்போக்கான.. உருப்படியான சிந்தனைகள் அற்றவர்களாய்..???! அதுவே ஏமாற்றுபவர்களையும் ஏமாறுபவர்களையும் எம் மத்தியில் அதிகம் பிரசவிக்கிறது..! இது இவ்விடயத்தில் என் பார்வை மட்டுமே..! :):icon_idea:

ஒரு வார்த்தை சொன்னாலும் அது வைரம் :lol:

இணையத்தில் சோடி தேடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பலரும் ஏமாற்றுவதாக கேள்விப்பட்டேன்.

லண்டன் வாழ் மாப்பிள்ளைகளுக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் என்ன, பல கோடி தங்கப் பவுண்டுகளாக கொட்டிக் கொடுத்தாலும் தகும். ஒவ்வொருவரும் வைரங்கள். :D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் விடயத்தில் எமது சமூகம் மிகப் பிந்தங்கிய நிலையில்.. அதை ஒரு சமூக வியாபாரமாகவே செய்து வருகிறது. காதல் என்பதும் கூட வியாபாரமாகி உள்ள ஒரு கேடு கெட்ட சமூகம் எமது சமூகம். இந்த நிலையில் இருந்து மாற.. நாங்க பலவற்றை திறந்த மனதோடு பேச வேண்டிய நிலையில் இருக்கிறம்..! மேற்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்தும்.. நாம் இன்னும்.. பிற்போக்கான.. உருப்படியான சிந்தனைகள் அற்றவர்களாய்..???! அதுவே ஏமாற்றுபவர்களையும் ஏமாறுபவர்களையும் எம் மத்தியில் அதிகம் பிரசவிக்கிறது..! இது இவ்விடயத்தில் என் பார்வை மட்டுமே..! :):icon_idea:

ஒரு £50000 பவுன்ஸ் நட்டம் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு £50000 பவுன்ஸ் நட்டம் :(

50,000 பவுண்ஸிற்கு ஆயுள் கூலியாக இருக்க இன்றைய உலகில் எருமை மாடு கூட விரும்பாது..!

ஒழுங்கா வேலை செய்தால்.. 50,000 அரையாண்டு அல்லது ஓராண்டுச் சம்பளம்..! :lol::icon_idea:

Biomedical scientist : Salary and conditions

  • Salary scales are based on the Agenda for Change pay scale . Trainee biomedical scientists (prior to registration) start at Band 5: £21,176 - £27,625 and move to Band 6: £25,528 - £34,189 after registration.

  • The range of typical salaries at senior level/with experience, e.g. for a team manager or advanced practitioner (Band 7) is £30,460 - £40,157. Higher salaries may be available after this with further progression.

http://www.prospects.ac.uk/biomedical_scientist_salary.htm

இது ஆரம்ப நிலை.. இப்ப 60, 70K கிடைக்கிறது..!

இதை வைச்சு வாழ்க்கையை என்ஜோய் பண்ணாம.. 50,000 பவுனுக்கு எவனாவது ஆயுள் கூலியாவானா..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நெடுக்ஸ் அண்ணா அப்பிடி தான் சொல்லுவார் பொண்ணுங்களா பட் விருப்பம் ஏன்டா என்னட்ட ஒரு 50000 பவுண்ட்ஸ் வெட்டுங்க நெடுக்ஸ் அண்ணாவா எப்பிடி ஒபேனா பேசி கரெக்ட் பண்ணுற வித்தையா நான் சொல்லி தரும்.... அதுக்கு நீங்க பைசா தரும்....நெடுக்ஸ் அண்ணா உங்களுக்கு வாழ்க்கை தரும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணங்கள் இப்போது நெற்றில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.

வயது வித்தியாசம் என்பது ஒரு பிரச்சனை அல்ல

மேற்குலக மக்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.

மேற்குலகப் பாணியில் வரன் தேடுபவர்கள் அதனால் வரும் விளைவுகளையும்

ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நெடுக்ஸ் அண்ணா அப்பிடி தான் சொல்லுவார் பொண்ணுங்களா பட் விருப்பம் ஏன்டா என்னட்ட ஒரு 50000 பவுண்ட்ஸ் வெட்டுங்க நெடுக்ஸ் அண்ணாவா எப்பிடி ஒபேனா பேசி கரெக்ட் பண்ணுற வித்தையா நான் சொல்லி தரும்.... அதுக்கு நீங்க பைசா தரும்....நெடுக்ஸ் அண்ணா உங்களுக்கு வாழ்க்கை தரும்... :D

வேணாம் ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாட விருப்பமில்லை :lol::D

திருமணங்கள் இப்போது நெற்றில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.

இன்று

'திருமணங்கள் லண்டனில் நிச்சயிக்கப்படுகிறன' :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நெடுக்ஸ் அண்ணா அப்பிடி தான் சொல்லுவார் பொண்ணுங்களா பட் விருப்பம் ஏன்டா என்னட்ட ஒரு 50000 பவுண்ட்ஸ் வெட்டுங்க நெடுக்ஸ் அண்ணாவா எப்பிடி ஒபேனா பேசி கரெக்ட் பண்ணுற வித்தையா நான் சொல்லி தரும்.... அதுக்கு நீங்க பைசா தரும்....நெடுக்ஸ் அண்ணா உங்களுக்கு வாழ்க்கை தரும்... :D

சுண்டு.. 50,000 பவுனுக்கு.. ஒரு பி எச் டியும் படிச்சு... நல்ல வீடும் வாங்கி.. காரும் வாங்கி ஓடலாம்..! இப்படி வீணடிக்கிறதிலும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு அதெல்லாம் வேண்டாமாம் நெடுக்ஸ் அண்ணா தான் வேணுமாம்.... எனக்கு தாற 50000 பற்றி கவலை இல்லையாம் நீங்க research ல இருக்கிறதால அதெல்லாம் உங்க கிட்ட இருந்தே கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிகளாமம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.